பாடம் : 1 மக்கா, மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் களில் தொழுவதன் சிறப்பு.
1188. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (1197வது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க)
Book : 20
1189. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :20
1190. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :20
பாடம் : 2 குபா பள்ளிவாசல்.
1191. நாஃபிவு அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) இரண்டு நாள்கள் தவிர வேறு நாள்களில் லுஹாத் தொழ மாட்டார்கள். மக்காவுக்கு அவர்கள் வரக்வடிய நாளில் லுஹா நேரத்தில் வந்து கஅபாவைத் வலம்வந்து மக்காமே இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். குபாப் பள்ளிக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சென்று பள்ளிக்குள் நுழைந்ததும் தொழாமல் வெளியே வர மாட்டார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் குபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வரும் வழக்கம் உடையவராக இருந்தனர்' என்றும் கூறினார்கள்.
Book : 20
1192. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நான் என்னுடைய தோழர்கள் செய்தது போன்றே செய்கிறேன். இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் தொழுபவரை தடுக்க மாட்டேன். ஆயினும் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள்.
Book :20
பாடம் : 3 ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்குச் செல்வது.
1193. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) ஒவ்வொரு சனிக்கிழமையும் குபாப் பள்ளிக்கு வருவார்கள் 'நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நடந்தும் வாகனத்திலும் குபாப் பள்ளிக்கு வருவார்கள்' என்று அறிவித்தார்கள்.
Book : 20
பாடம் : 4 குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் செல்வது.
1194. நபி(ஸல்) அவர்கள் குபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள். மற்றோர் அறிவிப்பில் அங்கே இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள் என்று உள்ளது.
Book : 20
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு.
1195. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.'
என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
Book : 20
1196. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :20
பாடம் : 6 பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல்.
1197. அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களைக் கூறினார்கள்.
1. இரண்டு நாள்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ, மணம் முடிக்கத்தகாத ஆண் உறவினரோ துணையாக இல்லாமல் பயணம் செய்யக்கூடாது.
2. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது.
3. ஸுப்ஹுத் தொழுதததிலிருந்து சூரியன் உதிக்கும் வரையும் அஸர் தொழுததிலிருந்து சூரியன் மறையும் வரையும் தொழக்கூடாது.
4. மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன்னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர் பார்த்து) பயணம் மேற்கொள்ளக்கூடாது.
Book : 20

பாடம் : 1 தொழுகையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கைகளைப் பயன்படுத்தலாம். ஒருவர் தொழும் போது தமது உடலில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தொழும் போது தமது தொப்பியைக் கழற்றியும் மாட்டியும் இருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் தொழும் போது தமது மேனியில் சொரிந்துகொள்ளும் நேரம் அல்லது தமது ஆடையைச் சரி செய்துகொள்ளும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தமது கையை இடக்கை மணிக்கட்டில் வைத்திருப்பார்கள்.
1198. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என் சிறிய தாயார் மைமூனா(ரலி)யின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலப்பகுதியில் படுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவி (மைமூனா)வும் அந்தத் தலையணையின் நீளப்பகுதியில் படுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தம் கையால் தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை விலக்கிவிட்டு 'ஆல இம்ரான்' அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்க விடப்பட்ட தோல் பாத்திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் உளூச் செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போன்றே செய்து, அவர்களின் (இடது) விலாப் புறத்தில் நின்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலது கரத்தை என் தலைமீது வைத்து என்னுடைய வலது காதைப் பிடித்து (வலது புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள் மேலும் இரண்டு ரக்அத்கள் இன்னும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வித்ரு தொழுதுவிட்டுப்படுத்தார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து சிறிய அளவில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிக்குப்) புறப்பட்டு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள்.
Book : 21
பாடம் : 2 தொழுகையில் பேசக்கூடாது
1199. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸினியாவின் மன்னர்) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். எங்களுக்கு ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) 'நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன' என்று கூறினார்கள்.
Book : 21
1200. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் 'தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்' என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.
Book :21
பாடம் : 3 தொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்) என்று ஆண்கள் கூறலாம்.
1201. ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
அம்ர் இப்னு அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'நபி(ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?' என்று கேட்டார். 'நீர் விரும்பினால் செய்கிறேன்' என அபூ பக்ர்(ரலி) கூறினார். பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் கூறியதும் அபூ பக்ர்(ரலி) முன்னே சென்று தொழுகை நடத்த ஆரம்பித்தார். சற்று நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார். மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது அபூ பக்ர்(ரலி) திரும்பிப் பார்த்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார். 'அங்கேயே நிற்பீராக' என்று நபி(ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள்.
Book : 21
பாடம் : 4 தொழும் போது அறியாத நிலையில் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு அல்லது அவரை நோக்கி சலாம் கூறுதல்.
1202. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அத்தஹிய்யாத் ஓதும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒருவரின் மீது மற்றவர் ஸலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் 'சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். முஹம்மத்(ஸல்), அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்' என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியவர்களாவீர்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.
Book : 21
பாடம் : 5 பெண்கள் (தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) கைதட்டுதல்
1203. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்.'
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்.
Book : 21
1204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்..
கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.
ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.
Book :21
பாடம் : 6 தொழுபவர் ஏதேனும் பிரச்சனைகளுக்காகப் பின்புறமாகவோ முன்புறமாகவோ நகருதல் இதுபற்றிய நபிவழியை சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
1205. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
திங்கட்கிழமை பஜ்ரு தொழுகை தொழுது கொண்டிருந்தனர். அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். (மரணத் தருவாயிலிருந்த) நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)யின் அறையிலுள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே புன்கைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூ பக்ர்(ரலி) திரும்பாமல் பின்புறமாக விலகலானார். நபி(ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியின் காரணமாக மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் தொழுது முடியுங்கள்' என்று தம் கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினம் மரணித்துவிட்டார்கள்.
Book : 21
பாடம் : 7 தொழுது கொண்டிருக்கும் தம் பிள்ளையைத் தாய் அழைத்தால்...?
1206. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முற்காலத்தில்) ஒரு பெண் வழிபாட்டு அறையிலிருந்த தம் மகனை 'ஜுரைஜ்' என்று அழைத்தார்! 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் 'ஜுரைஜ்' என்று அப்பெண் அழைத்தபோது. 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் அன்னை அழைக்கிறாரே!' என்று ஜுரைஜ் (மனத்திற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் 'ஜுரைஜ்' என்று அழைத்தபோது 'இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே' என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் 'இறைவா! விபச்சாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் மரணிக்கக் கூடாது' என்று பிரார்த்தித்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப்பட்டபோது 'ஜுரைஜுக்குதான்; அவர் தம் ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்துவிட்டார்' என்று அவள் கூறினாள். 'தன்னுடைய குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?' என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி 'சிறுவனே! உன் தந்தை யார்?' எனக் கேட்டதற்கு அக்குழந்தை 'ஆடுமேய்க்கும் இன்னார்' என விடையளித்தது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 21
பாடம் : 8 தொழும் போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல்
1207. முஐகீப்(ரலி) அறிவித்தார்.
ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 21