3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்' என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்' என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்' என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.
எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60
3327. 'சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பெளர்ணமி இரவில் (ஒளிவீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களின் மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்க வாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களின் தந்தை ஆதம்(அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60
3328. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
உம்மு சுலைம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவளின் மீது குளிப்பு கடமையாகும்)' என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தேன். 'பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பின் குழந்தை (தோற்றத்தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.
Book :60
3329. அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்' என்று கூறினார்கள். பிறகு, '1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடைளாயம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது' என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகனும் ஆவார்; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், அனுபவமும் விவரமும் மிக்கவரின் மகனும் ஆவார்' என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!' என்று கூறினார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.
Book :60
3330. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60
3331. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களின் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில், பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். மேலும், விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகக் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியேவிட்டுவிட்டால் அது கோணலாகவே இருக்கும். எனவே, பெண்களின் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60
3332. உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாள்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாள்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர் பாராத விதமாக) விதி அவளை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book :60
3333. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திண்ணமாக, அல்லாஹ் (தாயின்) கருவறையில் வானவர் ஒருவரைப் பொறுப்பாளராக நியமிக்கிறான். அவர், 'இறைவா! (இது ஒரு துளி) விந்து இறைவா! இது, பற்றித் தொங்கும் கரு. இறைவா! இது (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத் துண்டு' என்று கூறிக் கொண்டிருப்பார். அதைப் படைத்(து உயிர் தந்)திட அல்லாஹ் நாடும்போது, 'இறைவா! இது ஆணா அல்லது பெண்ணா? நற்பாக்கியம் பெற்றதா? துர்பாக்கியம் உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?' என்று கேட்பார். (அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :60
3334. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், 'பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், 'ஆம்' என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், 'நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை - எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை' என்று கூறுவான்.
என அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
Book :60
3335. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
(உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book :60
பாடம் : 2 உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும்.
3336. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இது மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 60
பாடம் : 3 திண்ணமாக, நாம் நூஹை10 அவருடைய சமுதாயத்தாரிடம் தூதராக அனுப்பினோம் என்னும் (11:25)இறை வசனம். நாம் நூஹை, உங்களுடைய சமுதாயத்திற்கு வேதனை வருவதற்கு முன்பாகவே அவர்களை எச்சரிக்கை செய்வீராக! என்ற செய்தியுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம் என்னும் (71:1)வசனம் முதல் அத்தியாயத்தின் இறுதி (71:28) வரை. மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தன் சமுதாயத்தினரை நோக்கிக் கூறினார்: என் சமுதாயத்தாரே, நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப் போது) எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை யென்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன்.... (10:71,72) என்னும் இறை வசனம்.
3337. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள். அப்போது, 'நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை. நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு (அவனைக் குறித்து) எச்சரித்திருக்கிறார்கள். ஆனால், நான் அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தன் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்' என்று கூறினார்கள்.
Book : 60
3338. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60
3339. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமையில் நூஹ் அவர்களும் அவர்களின் சமுதாயத்தினரும் வருவார்கள். அப்போது அல்லாஹ் (நூஹ் - அலை - அவர்களை நோக்கி), '(என்னுடைய செய்தியை நீங்கள் உங்கள் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்து விட்டீர்களா?' என்று கேட்பான். அதற்கு நூஹ் அவர்கள், 'ஆம், என் இறைவா! (எடுத்துரைத்து விட்டேன்)' என்று பதிலளிப்பார்கள். பிறகு, அல்லாஹ் நூஹ் அவர்களின் சமுதாயத்தினரிடம், 'இவர் உங்களுக்கு (என் செய்தியை) எடுத்துரைத்துவிட்டாரா?' என்று கேட்பான். அதற்கு அவர்கள், 'இல்லை. எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை' என்று பதில் கூறுவார்கள். உடனே, அல்லாஹ் நூஹ் அவர்களிடம் 'உங்களுக்காக சாட்சியம் சொல்பவர் யார்?' என்று கேட்பான். நூஹ் அவர்கள், 'முஹம்மத்(ஸல்) அவர்களும், அவர்களின் சமுதாயத்தினரும் (எனக்காக சாட்சியம் சொல்வார்கள்)' என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே நாம் நூஹ் அவர்கள் (இறைச் செய்தியைத் தம் சமுதாயத்தாருக்கு) எடுத்துரைத்துவிட்டார்கள் என்று சாட்சியம் சொல்வோம். 'அவ்வாறே உங்களை மக்களுக்கு சாட்சியம் சொல்வதற்காக நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம்' என்னும் புகழுயர்ந்த இறைவனின் (திருக்குர்ஆன் 02:143) வசனம் இதைத் தான் குறிக்கிறது.
'நடுநிலையான' என்னும் சொல்லின் கருத்து 'நீதியான' என்பதாகும்.
என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :60
3340. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன், ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது (வைக்கப்பட்ட) புஜம் (முன்னங்கால்) ஒன்று நபி(ஸல்) அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்கள் (அதைத் தம்) வாயாலேயே (பற்களில்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு, 'நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), 'நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதையும் உங்களுக்கு உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், 'உங்கள் தந்தை ஆதம்(அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)' என்று கூறுவார்கள். எனவே, மக்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று, 'ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கி) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்) கோபமுற்றான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபித்ததில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (எனவே!) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். உடனே, மக்கள் நூஹ்(அலை) அவர்களிடம் சென்று, 'நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பட்ட) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ், 'நன்றி செலுத்தும் அடியார்' என்று குறிப்பிட்டுள்ளான். நாங்கள் (சிக்கி) இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள (இந்தத் துன்ப) நிலையை நீங்கள் காணவில்லையா?எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், 'என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபமுற்றுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபித்ததில்லை. இதற்குப் பிறகும் இதைப்போல் கோபம் கொள்ள மாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார். மக்கள் என்னிடம் வருவார்கள். நான் இறை சிம்மாசனத்திற்குக் கீழே சஜ்தா செய்வேன். அப்போது 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு உபைத்(ரஹ்), 'இந்த ஹதீஸ் முழுமையாக எனக்கு நினைவில்லை' என்று கூறுகிறார்கள்.
Book :60
3341. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபஹல் மின்(ம்) முத்தகிர் - அறிவுரை பெறுபவர் எவராவது இருக்கிறாரா?' என்னும் (திருக்குர்ஆனின் 54வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறை வசனத்தைப் பொதுவாக மக்கள் ஓதும் பிரபலமான முறைப்படியே 'ஃபஹல் மின்(ம்) முத்தகிர்' என்று ஓதினார்கள். (வெகு சிலர் ஓதுவதைப் போல் 'முஸ்தகிர்' என்று பிரித்தோ, வேறொரு முறைப்படி 'முஸ்ஸக்கிர்' என்றோ ஓதவில்லை)
Book :60
பாடம் : 4 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், திண்ணமாக இல்யாஸும் இறைத் தூதர்களில் ஒருவராயிருந்தார். அவர் தம் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறிய சந்தர்ப்பத்தை நினைத்துப்பாருங்கள்: நீங்கள் அஞ்சுவதில்லையா? பஅல் என்னும் (கற்பனைத்) தெய்வத்தை நீங்கள் அழைக் கிறீர்கள். படைப்பாளர்களிலெல்லாம் மிகச் சிறந்தவனை விட்டு விடுகிறீர்களே- (அதாவது,) உங்கள் அதிபதியும், உங்களுக்கு முன் சென்ற வர்களின் அதிபதியுமான அல்லாஹ்வை (விட்டுவிடுகிறீர்களே)! ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். ஆகையால், திண்ணமாக அவர்கள் (இப்போது தண்டனைக்காகக்) கொண்டுவரப்படுபவர்களாய் உள்ளனர். ஆனால், வாய்மையாளர்களாய் ஆக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. மேலும், பின் தோன்றிய தலை முறைகளில் இல்யாஸ் மீது (நற்புகழை) நிலைப்படுத்தினோம். (37:123-129) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது (ஓர் அறிவிப்பில்), இல்யாஸ் (அலை) அவர்கள் (பிற்காலத் தலைமுறையினரால்) நல்ல விதமாகப் புகழ்ந்து பேசப்படுவார்கள் என்பது இதன் பொருளாகும் எனக் கூறியுள்ளார்கள். மேலும், அல்லாஹ் கூறுகிறான்: சாந்தி உண்டாகட்டும், இல்யாஸ் மீது! நன்மை செய்வோருக்கு நாம் இத்தகைய பிரதி பலனையே வழங்குகின்றோம். உண்மையில் நம்மீது நம்பிக்கை கொண்ட அடியார்களுள் ஒருவராய் அவர் திகழ்ந்தார். (37:130-132) இல்யாஸ் (அலை) அவர்கள் தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள் ஆவார் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்டுகிறது.15 பாடம் : 5 இத்ரீஸ் (அலை) அவர்கள் பற்றிய குறிப்பு இத்ரீஸ் (அலை) அவர்கள் நூஹ் (அலை) அவர்களுடைய தந்தையின் (முப்)பாட்டனார் ஆவார். இவர்கள் நூஹ் (அலை) அவர் களுடைய பாட்டனார் என்றும் சொல்லப்படுகின்றது. மேலும், அல்லாஹ் கூறுகிறான்: நாம் அவரை (இத்ரீஸை) உயர்ந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டோம்.16 (19:57)
3342. அபூ தர்(ரலி) அறிவித்து வந்ததாக அனஸ்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை (முகடு) பிளக்கப்பட்டது. (அங்கிருந்து வானவர்) ஜிப்ரீல் அவர்கள் இறங்கி (வந்து) என் நெஞ்சைப் பிளந்தார்கள். பிறகு அதை, 'ஸம்ஸம்' தண்ணீரால் கழுவினார்கள். பிறகு, நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தட்டு ஒன்றைக்கொண்டு வந்து என் நெஞ்சில் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு, என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறினார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்கு வந்தபோது வானத்தின் காவலரிடம், 'திறங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'யார் அது?' என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், 'இதோ ஜிப்ரீல்' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?' என்று கேட்டார். அவர்கள், 'என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், '(அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?' என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், 'ஆம், திறவுங்கள்' என்று கூறினார்கள். (முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) 'நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!' என்று கேட்டேன். அவர், 'இவர் ஆதம்(அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள். எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உரயத்திற்கு) ஏறிச் சென்றார்கள். பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்' என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் வாயிலைத்) திறந்தார்.
அனஸ்(ரலி) தொடர்ந்து கூறினார்கள்:
'நபி(ஸல்) அவர்கள், வானங்களில் இத்ரீஸ்(அலை), ஈசா(அலை) இப்ராஹீம்(அலை) ஆகியோரைக் கண்டதாகக் கூறினார்களே தவிர அவர்களின் இருப்பிடங்கள் எங்கிருந்தன என்று அவர்கள் எனக்குக் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்கள் ஆதம்(அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம்(அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே கூறினார்கள்' என்று அபூ தர்(ரலி) கூறினார்.
அனஸ்(ரலி) மேலும் கூறினார்கள்:
'ஜிப்ரீல்(அலை) அவர்கள் இத்ரீஸ்(அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, 'நல்ல இறைத் தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், 'இவர் இத்ரீஸ் என்று கூறினார்கள். பிறகு மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அவர்கள், 'இவர் மூஸா' என்று கூறினார்கள். பிறகு நான், ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!' என்று கூறினார்கள். பிறகு நான் ஈசா அவர்களைக் கடந்து சென்றேன். அவர்களும், 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே, வருக!' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் அவர்கள், '(இவர்) ஈசா' என்று பதிலளித்தார்கள். பிறகு நான் இப்ராஹீம் அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், 'நல்ல நபியே, வருக! நல்ல மகனே, வருக!' என்று கூறினார்கள். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு, 'இவர் இப்ராஹீம்' என்று ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி), அபூ ஹய்யா(ரலி) ஆகிய இருவரும் அறிவித்ததாக இப்னு ஹஸ்கி(ரலி) கூறினார்
' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்தபோது அங்கு நான் (வானவர்கள் விதிகளை எழுதிக் கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்கி(ரஹ்) அவர்களும் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்போது அல்லாஹ் என்மீது (என் சமுதாய்யத்தாருக்காக) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப்பெற்றுக் கொண்டு நான் திரும்பியபோது மூஸா அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது மூஸா அவர்கள், 'உங்கள் சமுதாயத்தவர் மீது என்ன கடமையாக்கப்பட்டது' என்று கேட்டார்கள். நான், 'அவர்களின் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன' என்று பதிலளித்தேன். அவர்கள், 'அப்படியானால் உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று (சற்று குறைத்துக் கடமையாக்கும்படி) கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது' என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி) கேட்டேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூஸா அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறி முன்பு போல் ('உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது') என்று கூறினார்கள். (நான் அவ்வாறே திரும்ப இறைவனிடம் சென்று இன்னும் குறைக்கும்படி கோர) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா அவர்களிடம் மீண்டும் கூறியபோது, 'உங்களுடைய இறைவனிடம் திரும்பச் சென்று இன்னும் குறைத்துக் கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்' என்று கூற, நான் திரும்பிச் சென்று, என் இறைவனிடம் (இன்னும் சற்று குறைக்கும்படி) கேட்டேன். அதற்கு அவன், 'அவை ஐந்து (வேளைத் தொழுகைகள்) ஆகும். அவையே (பிரதிபலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். (ஒரு முறை சொல்லப்பட்ட சொல் என்னிடம் மாற்றப்படுவதில்லை' என்று கூறினான். உடனே, நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், 'உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்' என்று கூறினார்கள். நான், 'என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்' என்று பதிலளித்தேன். பிறகு ஜிப்ரீல் அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு (வானுலகின் எல்லையான) 'சித்ரத்துல முன்தஹா'வுக்குச் சென்றார்கள். அப்போது அவையென்னவென்று நான் அறிய முடியாத படி பல வண்ணங்கள் அதைச் சூழ்ந்து மூடியிருந்தன. பிறகு நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன். அப்போது அங்கே முத்தாலான கூடாரங்களைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் வீசும்) கஸ்தூரியாக இருந்தது.
Book : 60
பாடம் : 6 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், ஆத் சமுதாயத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர், என் சமுதாயத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை என்று கூறினார்.18 (11 : 50) மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூது நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்: அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத் தாருக்கு,நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிக பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகிறேன் என்று எச்சரிக்கை செய்திருந்தார்-எச்சரிக்கை செய்ப வர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக் கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள்-அப்போது அவர்கள், எங்களை எங்கள் கடவுளை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி-நீர் உண்மையாளர் எனில், எஙகளை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டி ருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும் என்று கூறினார்கள். அவர், இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக் கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால், (அறியாமையில்) மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கின்றேன் என்று சொன்னார். பின்னர் அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண் டிருப்பதை அவர்கள் கண்ட போது, இது, நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும் என்று கூறலாயினர். இல்லை. மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது தான் இது, இது புயல் காற்று. இதில் துன்புறுத்தும் வேதனை வந்து கொண்டிருக்கின்றது. தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்து விடும். இறுதியில் (அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில்,) அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே குற்றம் புரியும் மக்களுக்கு நாம் தண்டனை கொடுக்கின்றோம். (46:21-25) இதைக்குறித்து அதாஉ(ரஹ்) அவர்ளும் சுலைமான் (ரஹ்) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்துஆயிஷா (ரலி)அவர்கள் வழியாக அறிவிக்கிறார்கள். மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ஆத் சமுதாயத்தினர் மிகப் பெரிய கடும் சூறாவளிக் காற்றினால் அழிக்கப்பட்டனர். அல்லாஹ் அந்தக் காற்றினை அவர்கள் மீது ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து ஏவினான். (நபியே! நீங்கள் அங்கு இருந்திருந்தால்) இற்றுப் போன ஈச்ச மரத்தண்டுகளைப் போன்று அவர்கள் அங்கு முகங்குப்புற வீழ்ந்து கிடந்ததைப் பார்த்திருப்பீர்கள். இப்போது அவர்களில் எவரேனும் எஞ்சியிருப்பதாக உங்களுக்குத் தெரியவருகிறதா என்ன? (69:6-8)
3343. நபி(ஸல்) அவர்கள் கூறினார்
நான் (அகழ்ப்போரின்போது) கீழைக் காற்றினால் ('ஸபா') வெற்றியளிக்கப்பட்டேன். 'அத்' சமுதாயத்தார் மேலைக் காற்றினால் ('தபூர்') அழிக்கப்பட்டனர்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 60
3344. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, 'நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டுவிடுகிறாரே' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்' என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றியோரங்கள் உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் முன் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நானே (அல்லாஹ்விற்கு) மாறு செய்தால் வேறெவர்தான் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்களின் விஷயத்தில் அல்லாஹ் என் மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என் மீது நம்பிக்கை வைக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அப்போது வேறொருமனிதர் இப்படி (குறை சொன்னவரைக் கொல்வதற்கு அனுமதி கேட்டார். அனுமதி கேட்ட அவர் காலித் இப்னு வலீத்(ரலி) தாம் என்று நினைக்கிறேன் அவரை நபி(ஸல்) அவர்கள் (இதைச் சொன்னவரைக் கொல்ல வேண்டாமென்று) தடுத்துவிட்டார்கள். (குறை சொன்ன) அந்த ஆள் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், 'இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து .. அல்லது இவரின் பின்னே - ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகையவர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அவர்கள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்தப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களைவிட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆத்' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்து விடுவேன்' என்று கூறினார்கள்.
Book :60
3345. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் 'ஃப ஹல் மின்(ம்) முத்த(க்)ம்ர் அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?' என்னும் (திருக்குர்ஆனின் 54-வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதுவதை செவியுற்றேன்.
Book :60