பாடம் : 19 ஒருவர் (தமக்கு இடப் பக்கமுள்ள வயதில்) மூத்தவருக்குப் பருகக் கொடுக்கத் தமது வலப் பக்கம் உள்ள(வயதில் சிறிய)வரிடம் அனுமதி கேட்க வேண்டுமா?
5620. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், '(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான்விட்டுத் தரமாட்டேன்' என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.41
Book : 74
பாடம் : 20 தொட்டியில் வாய் வைத்துப் பருகுவது.
5621. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூ பக்ர்) உடன் அன்சாரி ஒருவரிடம் (அவரின் தோட்டத்திற்குச்) சென்றார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்கள் தம் தோழரும் (அந்த அன்சாரிக்கு) 'சலாம்' (முகமன்) கூறினர். அந்த அன்சாரி பதில் சலாம் சொல்லிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இது வெப்பமான வேளை!' என்றார். அப்போது அவர் தம் தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். நபி(ஸல்) அவர்கள், 'இரவில் தோல் பையில் (ஊற்றி) வைத்த தண்ணீர் உம்மிடம் இருந்தால் (எங்களுக்குத் தாருங்கள்). இல்லாவிட்டால் நாங்கள் (இரைத்து ஊற்றப்பட்டுள்ள இந்த நீரைத் தொட்டியில்) வாய்வைத்துக் குடித்துக்கொள்கிறோம்' என்று கூறினார்கள்.
(தம்) தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அந்த அன்சாரி, 'இறைத்தூதர் அவர்களேஸ இரவில் தோல் பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் என்னிடம் உள்ளது' என்று கூறியபடி பந்தலை நோக்கி நடந்தார். பின்னர் அவர் கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தம் வீட்டு ஆட்டிலிருந்து பால் கறந்து (அதில் கலந்து)விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அதைப்) பரும்னார்கள்.
பிறகு மறுபடியும் அவர் கொண்டு வந்தார். (அதை) நபி(ஸல்) அவர்களுடன் வந்திருந்த மனிதர் பரும்னார்.42
Book : 74
பாடம் : 21 சிறியோர், பெரியோருக்குப் பணிவிடை செய்வது.
5622. அனஸ்(ரலி) கூறினார்
நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங்க காய்களால் ஆன மதுவை ஊற்றிக் கொண்டிருந்தேன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாக இருந்தேன். அப்போது 'மது தடைசெய்யப்பட்டுவிட்டது' என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினர்கள்)' அதைக் கவிழ்த்து (கொட்டி)விடு' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் கவிழ்த்து(க கொட்டி) விட்டோம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அல்பஸரீ(ரஹ்) கூறினார்:
நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அவர்களின் மது எத்தகையது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பேரீச்சச் செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் இப்னு அனஸ்(ரஹ்), '(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது' என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அதை மறுக்கவில்லை.
என் தோழர்களில் ஒருவர் கூறினார்: அனஸ்(ரலி), 'அதுதான் அவர்களின் அன்றைய மதுபானமாக இருந்தது' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.43
Book : 74
பாடம் : 22 பாத்திரத்தை மூடிவைத்தல்
5623. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால்' அல்லது 'அந்திப் பொழுதாம்விட்டால்' உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடிவையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.44
Book : 74
5624. ஜாபிர்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்' என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.
Book :74
பாடம் : 23 தண்ணீர் தோல் பைகளை வெளிப் பக்கமாகச் சுருட்டிவிட்டு அதில் வாய் வைத்து அருந்துவது.45
5625. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை 'இக்தினாஸ்' செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அதாவது அவற்றின் வாய்ப் பகுதியை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீர் பருகுவதைத் தடை செய்தார்கள்.
Book : 74
5626. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை 'இக்தினாஸ்' செய்ய வேண்டாமெனத் தடை விதிப்பதை கேட்டுள்ளேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) கூறினார்.
' 'இக்தினாஸ்' என்றால், தோல் பைகளின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து பருகுவதாகும்' என மஅமர்(ரஹ்) அவர்களோ, மற்றவர்களோ அறிவித்தார்கள்.
Book :74
பாடம் : 24 தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து குடிப்பது.46
5627. அய்யூப்(ரஹ்) கூறினார்
இக்ரிமா(ரஹ்) எங்களிடம் 'அபூ ஹுரைரா(ரலி) அறிவித்த சிறுசிறு விஷயங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' (என்று கேட்டுவிட்டு) 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தோலால் ஆன தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும், ஒருவர் தம் அண்டைவீட்டார் தம் வீட்டுச் சுவரில் (உத்திரம் முதலிய) மரக் கட்டையைப் பதிப்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்' என்று கூறினார்கள்.
Book : 74
5628. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
Book :74
5629. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து (தண்ணீர்) குடிக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
Book :74
பாடம் : 25 (பருகும்) பாத்திரத்தில் மூச்சு விடலாகாது.47
5630. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் (ஏதேனும்) பருகும்போது பாத்திரத்தில் மூச்சு விட வேண்டாம். நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது உங்கள் பிறவி உறுப்பை வலக்கையால் தொடவேண்டாம். நீங்கள் சுத்தம் செய்யும்போது வலக் கையால் சுத்தம் செய்ய வேண்டாம்.
என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.48
Book : 74
பாடம் : 26 இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது.
5631. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்
(என் பாட்டனார்) அனஸ்(ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பரும்) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பரும்) வந்ததாகக் கூறினார்கள்.49
Book : 74
பாடம் : 27 தங்கப் பாத்திரத்தில் பருகுதல்50
5632. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்
ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) (இராக்கில் உள்ள) 'அல்மதாயின்' (தைஃபூன்) நகரத்தில் இருந்தார்கள். அப்போது பருகுவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். உடனே (மஜூலியான) ஊர்த் தலைவர் வெள்ளிப் பாத்திரம் (ஒன்றில் தண்ணீர்) கொண்டு வந்தார். ஹுதைஃபா(ரலி) அதை அவரின் மீது வீசியெறிந்துவிட்டு, (அங்கிருந்தவர்களிடம்) 'நான் இவரை(ப் பலமுறை தடுத்தும் இவர் (வெள்ளிப் பாத்திரத்தைத்) தவிர்த்துக் கொள்ளாததால் தான் நான் இதை அவரின் மீது வீசியெறிந்தேன். நபி(ஸல்) அவர்கள் சாதாரணப் பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியக் கூடாதென்றும் தங்கம் மற்றம் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். மேலும், அவர்கள், 'அவை இம்மையிலும் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறை நம்பிக்கையாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்' என்று கூறினார்கள் எனத் தெரிவித்தார்கள்.51
Book : 74
பாடம் : 28 வெள்ளிப் பாத்திரங்கள்
5633. இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்
நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன் புறப்பட்டோம். அவர்கள், 'தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள். (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கம், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான) உங்களுக்கும் உரியனவாகும்.52 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள்.
Book : 74
5634. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.
இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book :74
5635. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி) எங்களுக்குக் கட்டளையிட்டு ஏழு விஷயங்களை எங்களுக்குத் தடை செய்தார்கள். நோயாளிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லும் படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் -எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்லும்படியும், விருந்து அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படியும், சலாம் எனும் முகமனைப் பரப்பும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
மேலும், (ஆண்கள்) தங்க மோதிரங்களை அணிய வேண்டாமென்றும், (யாரும்) வெள்ளிப் பாத்திரத்தில் நீர் அருந்த வேண்டாமென்றும், மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்தப்பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.53
Book :74
பாடம் : 29 கிண்ணங்களில் அருந்துவது
5636. உம்முல் ஃபள்ல்(ரலி) கூறியாவது:
(ஹஜ்ஜின்போது) நபி(ஸல்) அவர்கள் 'அரஃபா' (துல்ஹஜ்9ஆம்) நாளில் நோன்பு நோற்றிருந்தார்களா என மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே, அவர்களிடம் பால் கிண்ணம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் பரும்னார்கள்.54
Book : 74
பாடம் : 30 நபி (ஸல்) அவர்களின் கிண்ணத்திலும் அவர்களின் பாத்திரங்களிலும் அருந்துவது. அபூபுர்தா ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பருகிய கிண்ணத்தில் உங்களுக்கு நான் பருகத் தரட்டுமா என்று கேட்டார்கள்.55
5637. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பனூ சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். 56
நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று 'பனூ சாஇதா' குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு 'எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்:
ஸஹ்ல்(ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பரும்னோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.
Book : 74
5638. ஆஸிம் அல்அஹ்வல்(ரஹ்) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களின் கிண்ணம் ஒன்றை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கண்டேன். அது பிளந்து விட்டிருந்தது. அதை அவர்கள் வெள்ளியால் ஒட்டவைத்தார்கள். அது ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்ட அகலமான உயர்ரகக் கிண்ணமாகும். அனஸ்(ரலி), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இந்தக் கிண்ணத்தில் இத்தனை இத்தனை முறைகளைவிட அதிகமாகப் பருகக் கொடுத்துள்ளேன்' என்று கூறினார்கள்.57
முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) கூறினார்.
அந்தக் கிண்ணத்தில் இரும்பு வளையம் ஒன்றிருந்தது. அனஸ்(ரலி) அதனிடத்தில் தங்க வளையம் அல்லது வெள்ளி வளையம் ஒன்றை வைக்க விரும்பினார்கள். அப்போது அபூ தல்ஹா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த எதையும் நீங்கள் மாற்றாதீர்கள்' என்று (அனஸ்(ரலி) அவர்களிடம்) கூற, அனஸ்(ரலி) அதை (மாற்றாமல்)விட்டுவிட்டார்கள்.
Book :74
பாடம் : 31 வளம் (பரக்கத்) மிக்கத் தண்ணீரும் அதை அருந்துவதும்.
5639. ஜாபிர்(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது அஸ்ர் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது மிச்சமிருந்த சிறிதுத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. அது ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அதில் தம் கையை நுழைத்துத் தம் விரல்களை விரித்தார்கள். பிறகு அவர்கள், 'அங்கசுத்தி (உளூ) செய்பவர்களே! தண்ணீரிடம் வாருங்கள். இந்த வளம் (பரக்கத்) அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும்' என அழைத்தார்கள். அவர்களின் விரல்களுக்கிடையே இருந்து தண்ணீர் பீறிட்டுப் பாய்வதை கண்டேன் மக்கள் (அதில்) அங்க சத்தி செய்து அதை அருந்தவும் செய்தார்கள். நான் அதை வயிறு நிரம்ப அருந்துவதில் குறை வைக்கவில்லை. ஏனெனில், அது வளம் (பரக்கத்) மிக்கது என நான் அறிந்திருந்தேன்.
அறிவிப்பாளர் சாலிம்(ரஹ்) கூறினார்:
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்?' என்று கேட்க, 'நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்' என்று கூறினார்கள்.
இதே ஹதீஸ் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றில் ஜாபிர்(ரலி), 'நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தோம்' என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
Book : 74