6752. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அடிமையாயிருந்த ஒருவருக்கு) வாரிசாகும் தகுதி (அவரை) விடுதலை செய்தவருக்கே உண்டு.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :86
பாடம் : 20 உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது' என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு (-சாயிபா), வாரிசு யார்?42
6753. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
'உன் மீது யாருக்கும் வாரிசுரிமை கிடையாது' என்ற நிபந்தனையின் பேரில் அடிமைகளை முஸ்லிம்கள் விடுதலை செய்வதில்லை. அறியாமைக் காலத்தவர்தாம் அவ்வாறு விடுதலை செய்துவந்தனர்.
Book : 86
6754. அஸ்வத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்கள் (அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விடுதலை செய்வதற்காக விலைக்கு வாங்க விரும்பினார்கள். பரீராவின் எசமானார்கள் 'பரீராவின் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும்' என நிபந்தனையிட்டார்கள். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! விடுதலை செய்வதற்காக நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமானர்களோ அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடுகிறார்கள்' என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(பரீராவை) விலைக்கு வாங்கி) விடுதலை செய்! ஏனெனில், (பொதுவாக) விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு' அல்லது 'விலையைக் கொடுத்துவிடு' என்றார்கள். எனவே, ஆயிஷா(ரலி) அவர்கள் பரீராவை விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். (தொடர்ந்து கணவர் முஃகீஸுடன் சேர்ந்து வாழ, அல்லது திருமண உறவை முறித்துக்கொள்ள) பரீராவிற்கு விருப்ப உரிமை அளிக்கப்பட்டது. அப்போது பரீரா தன்னுடைய விருப்பத்திற்கேற்ப தனித்து) வாழ்வதையே தேர்ந்தெடுத்துக் கொண்டதுடன், 'இவ்வளவு இவ்வளவு செல்வம்) எனக்குக் கொடுக்கப்பட்டாலும் நான் அவருடன் இருக்கமாட்டேன்' என்று சொல்லிவிட்டார்.
அறிவிப்பாளர் அஸ்வத்(ரஹ்) அவர்கள் 'பரீராவின் கணவர் (முஃகீஸ்) சுதந்திர மனிதராக இருந்தார்' என்றார்கள்.
(அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:) அஸ்வத்(ரஹ்) அவர்களின் இந்த அறிவிப்பு 'முன்கதிஃ' (அறிவிப்பாளர் தொடரில் தொடர்பு அறுந்தது) ஆகும். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் 'முஃகீஸை நான் அடிமையாகவே கண்டேன்' என்று கூறியதே சரியானதாகும்.
Book :86
பாடம் : 21 விடுதலை செய்த எசமானர்களின் உறவிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் அடிமை பாவி ஆவான்.
6755. யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்கள், 'நாங்கள் ஓதி வருகிற அல்லாஹ்வின் வேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை' என்று கூறிவிட்டு, அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள். அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன. மேலும், அதில் (பின்வருமாறு குறிப்பிடப்பட்டு) இருந்தது: மதீனா நகரம் 'அய்ர்' எனும் மலையிலிருந்து 'ஸவ்ர்' மலை வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறானே, (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குகிறவனுக்கு அடைக்கலம் அளிக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமிருந்து ஏற்கப்படாது. தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமை மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப்படாது. முஸ்லிம்களின் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும்.) அவர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் கூட அடைக்கலம் தர முன்வரலாம் ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன் முது அல்லாஹ்வின் சாபமும் வானர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவன் செய்த கடமையான வழிபாடு உபரியான வழிபாடு மற்றும் எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது.43
Book : 86
6756. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள்இ '(முன்னாள் அடிமையின் சொத்திற்கு) வாரிசாகும் உரிமையை விற்கபதற்கும் அதை அன்பளிப்புச் செய்வதற்கும் தடை விதித்தார்கள்.44
Book :86
பாடம் : 22 ஒருவரின் உதவியால் மற்றொருவர் இஸ்லாத்தை ஏற்றால் (இவருக்கு அவர் வாரிசாவாரா?) (இஸ்லாத்தை ஏற்க உதவிய) அவருக்கு வாரிசுரிமை இல்லை என்றே ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருதிவந்தார்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்தில்) வாரிசுரிமை உண்டு என்றுதான் கூறினார்கள்.45 நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாத்தை ஏற்க உதவியாக இருந்த) அவரே இவருடைய வாழ்விலும் சாவிலும் மனிதர்களிலேயே மிகவும் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார். (புகாரியாகிய நான் கூறுகின்றேன்:) இது சரியான ஹதீஸா என்பதில் கருத்துவேறுபாடு காணப்படுகிறது.
6757. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (பரீரா எனும்) ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாதங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். பரீராவின் எசமானர்களோ 'பரீராவின் வாரிசுரிமை எங்களுக்கே வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அவளை நாங்கள் உங்களுக்கு விற்கிறோம்' என்று கூறினார். எனவே,ஆயிஷா(ரலி) அவர்கள் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(அதற்காக) நீ விடுதலை செய்யாமல் இருந்துவிடாதே! விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது' என்றார்கள்.
Book : 86
6758. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். அப்போது பரீராவின் எசமானர்கள் அவளுடைய வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். நான் இது குறித்து நபி(ஸல்) அவர்களிடன் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவளை நீ விடுதலை செய்! ஏனெனில், வெள்ளியைக் கொடுத்(து விலைக்கு வாங்கி விடுதலை செய்)தவருக்கே வாரிசுரிமை உரியது' என்றார்கள். எனவே, நான் பரீராவை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவள் தன்னுடைய கணவரிடமிருந்து (பிரிந்துவிட) விருப்ப உரிமையளித்தார்கள். அப்போது பரீரா, 'அவர் எனக்கு இவ்வளவு இவ்வளவு (செல்வம்) தந்தாலும் நான் அவருடன் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறி தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.
என அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.46
Book :86
பாடம் : 23 (தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.
6759. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(அடிமைப் பெண்ணாயிருந்த) பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா(ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 'பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபத்னையிடுகின்றனர்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள்'அவளை வாங்கி (விடுதலை செய்து) விடு! ஏனென்றால், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது' என்றார்கள்.
Book : 86
6760. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வெள்ளியை(க் கிரயமாக)க் கொடுத்து (விலைக்கு வாங்கி, விடுதலை எனும்) பேருபகாரம் செய்தவருக்கே (அடிமைக்கு) வாரிசாகும் உரிமை உண்டு.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :86
பாடம் : 24 ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!
6761. & 6762. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே' என்றோ, 'இதைப் போன்றோ'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.48
Book : 86
பாடம் : 25 (எதிரிகளால்) சிறை பிடிக்கப்பட்டவரின் வாரிசுரிமை.49 (பிரபல நீதிபதி) ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், எதிரிகளின் கையில் சிறைக் கைதியாய் உள்ளவருக்கு வாரிசுரிமை அளித்துவந்தார்கள். மேலும், (மற்றவர்களை விட) அவருக்குத்தான் அ(ந்தச் சொத்)து மிகவும் தேவை என்று கூறுவார்கள். உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சிறைக் கைதியின் மரண சாசனம், அடிமை விடுதலை, தனது செல்வத்தில் அவன் மேற்கொள்ளும் இதரப் பொருளாதார நடிவடிக்கைகள் ஆகியவற்றை, அவன் மதம் மாறாமல் இருக்கும்வரை அனுமதியுங்கள். ஏனெனில், அது அவனது செல்வம்; அதில் தான் விரும்பியவாறு அவன் செயல்படலாம்.
6763. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தைவிட்டுச்சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மற்றும் மக்களைவிட்டுச்சென்றால் அவர்களைப் பராமரிப்பது (மக்கள் தலைவரான) எம்முடைய பொறுப்பாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.50
Book : 86
பாடம் : 26 ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கோ, ஓர் இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமுக்கோ வாரிசாக மாட்டார்.51 (முஸ்லிமான தந்தை இறந்த போது) இறைமறுப்பாளராக இருந்த ஒருவர் சொத்து பங்கிடுவதற்கு முன்பு முஸ்லிமானாலும் அவருக்கு வாரிசுரிமை கிடையாது.52
6764. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்.
என உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
Book : 86
பாடம் : 27 கிறிஸ்தவ அடிமை மற்றும் பின்விடுதலை அளிக்கப்பட்ட (முகாதப்) கிறிஸ்தவ அடிமை ஆகியோருக்கு வாரிசாகும் உரிமை யாருக்கு உண்டு என்பது பற்றியும், (தமக்குப் பிறந்த குழந்தையை) தம்முடையதல்ல' என்று மறுப்பவருக்குரிய பாவம் பற்றியும்.54 பாடம் : 28 (ஒருவர் மற்றொருவரை) சகோதரன் என்றோ, சகோதரன் மகன் என்றோ வாதிடுவது.
6765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு அபீ வாக்கஸ்(ரலி) அவர்களும் அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்களும் ஒரு சிறுவன் (யாருடைய மகன் என்பது) ஸஅத்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களின் மகன், இவன் தம் மகன் (எனவே இவனைப் பிடித்து வர வேண்டும்) என்று அவர் என்னிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார். இவனுடைய சாயலை (நீங்களே) பாருங்கள்!' என்று கூறினார்கள்.
அப்து இப்னு ஸம்ஆ(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரன், என் தந்தையின் படுக்கையில் அவரின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவன்'எ ன்று சொன்னார்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவனின் சாயலைப் பார்த்தார்கள். உத்பாவின் சாயல் வெளிப்படையாக அமைந்திருககக் கண்டார்கள்.
இருப்பினும், 'அப்து இப்னு ஸம்ஆவே! இவன் உனக்கே உரியவன். ஏனெனில், (சட்டப்படி) தாய் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே குழந்தை உரியதாகும். விபசாரம் செய்தவனுக்கு இழப்பே உரியது' என்று கூறிவிட்டு(த் தம் துணைவியரிடம்), 'சவ்தா பின்த் ஸம்ஆவே! இவனிடமிருந்து உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்!' என்றார்கள்.
அதற்குப் பறிகு அந்த மனிதர் சவ்தா(ரலி) அவர்களை நேரடியாகப் பார்க்கவில்லை.
Book : 86
பாடம் : 29 வேறொருவரை தன் தந்தை என வாதிடு கின்றவன்.56
6766. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
'தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாம் விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்.
Book : 86
6767. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன் என் இதயம் மனனமிட்டுக் கொண்டது' என்றார்கள்.
Book :86
6768. 'உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.57
Book :86
பாடம் : 30 ஒரு பெண் தன் மகன் என (ஒருவனை) வாதிட்டால்...
6769. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(தாவூத்(அலை) அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடன் அவர்களின் புதல்வர்களும் இருந்தனர். (ஒருநாள்) ஓநாய் ஒன்று அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவனைக் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம், 'உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது' என்று கூற, அதற்கு மற்றவள், 'உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது' என்று சொன்னாள். எனவே, இருவரும் தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள். தாவூத்(அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின் மீது கருத்து வேறுபட்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்க) புறப்பட்டுச் சென்றார்கள். அன்னாரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். அப்போது சுலைமான் (அலை) அவர்கள், 'என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்' என்று கூறினார்கள். உடனே இளையவள் 'அவ்வாறு செய்துவிடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்' என்று (பதறிப்போய்) கூறினாள். எனவே, சுலைமான்(அலை) அவர்கள் 'அந்தக் குழந்தை இளையவளுக்கே உரியது' என்று தீர்ப்பளித்தார்கள்.
இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அன்றுதான் (கத்திக்கு) 'சிக்கீன்' எனும் சொல்லை. (நபியவர்களின் வாயிலாக)ச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) 'முத்யா' என்னும் சொல்லைத் தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம்' என்று கூறினார்கள்.58
Book : 86
பாடம் : 31 அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்.
6770. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நெற்றிக் கோடுகள் மின்னும் வண்ணம் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, 'உனக்குத் தெரியுமா? சற்றுமுன (அங்க அடையாளங்களைக் கொண்டு தந்தை - பிள்ளையைக் கண்டறியும்) முஜஸ்ஸிஸ், (என் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸாவையும் (அவரின் புதல்வர்) உஸாமா இப்னு ஸைதையும் (அவர்கள் படுத்திருந்தபோது அவர்களின் பாதங்களைப்) பார்த்துவிட்டு 'இந்தப் பாதங்களில் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானது' என்றார்' என்றார்கள்.59
Book : 86
6771. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் வந்து, 'ஆயிஷா! முஜஸ்ஸிஸ் அல்முத்லிஜீ என்னிடம் வந்தார். அப்போது உசாமாவும் (அவரின் தந்தை) ஜைத்கி ஒரு துணியைப் போர்த்தி(க் கொண்டு படுத்து) இருப்பதைக் கண்டார். அவர்களிருவரும் தம் தலையை மூடியிருந்தனர்; (ஆனால்,) அவர்களின் பாதகங்கள் வெளியே தெரிந்தன. அப்போது முஜஸ்ஸிஸ் 'இந்தப் பாதங்கள் ஒன்று மற்றொன்றிலிருந்து உருவானவை' என்றார்' என்றார்கள்.60
Book :86