1425. عَنْ بُرَيْدَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"اَلْقُضَاةُ ثَلَاثَةٌ: اِثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ. رَجُلٌ عَرَفَ الْحَقَّ، فَقَضَى بِهِ، فَهُوَ فِي الْجَنَّةِ. وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ، فَلَمْ يَقْضِ بِهِ، وَجَارَ فِي الْحُكْمِ، فَهُوَ فِي النَّارِ. وَرَجُلٌ لَمْ يَعْرِفِ الْحَقَّ، فَقَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ، فَهُوَ فِي النَّارِ"} رَوَاهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1425. ``நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர். 1. நீதியை அறிந்து அதன் படி செயல்படுபவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார். 2. நீதியை அறிந்தும் அதன் படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார். 3. உண்மையை அறியாமல் தன் அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர் நரகத்தில் புகுவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1426. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {"مَنْ وَلِيَ الْقَضَاءَ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ"} رَوَاهُ الْخَمْسَةُوَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.
1426. ``யாரிடம் தீர்ப்பளிக்கும் பொறுப்பு தரப்பட்டதோ அவர் கத்தி இல்லாமல் அறுக்கப்பட்டவர் போல் ஆகிறார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா
இமாம் இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு: தீர்ப்பு வழங்குவதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து நியாயத்தை மட்டுமே நிலைநிறுத்த வேண்டும் என்பதை அறிக!
1427. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الْإِمَارَةِ، وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ، فَنِعْمَ الْمُرْضِعَةُ، وَبِئْسَتِ الْفَاطِمَةُ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1427. ``நீங்கள் தலைமைப் பதவிக்கு ஆசைப்படவீர்களானால், மறுமையில் அதுவே உங்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும். அது உலக வாழ்வில் இனிமையானது; மறுமையில் கசப்பானது; பாலூட்டுபவை தரும் இன்பங்களிலேயே பதவிப் பாலே இன்பமானது; பாலை மறக்கடிப்பதிலேயே பதவிதான் மோசனமாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1428. وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"إِذَا حَكَمَ الْحَاكِمُ، فَاجْتَهَدَ، ثُمَّ أَصَابَ، فَلَهُ أَجْرَانِ. وَإِذَا حَكَمَ، فَاجْتَهَدَ، ثُمَّ أَخْطَأَ، فَلَهُ أَجْرٌ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1428. ``தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து பின்னர் சரியான முடிவை அடைந்தால், அவருக்கு இரண்டு நன்மைகள் உள்ளன. தீர்ப்பளிப்பவர் நன்கு ஆராய்ந்து தீர்ப்பளித்தும் (அவரையும் அறியாமல்) அதில் தவறு நிகழ்ந்தால், அவருக்கு ஒரு நன்மை உண்டு'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றேன் என அம்ர் இப்னு ஆஸ்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1429. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {" لَا يَحْكُمُ أَحَدٌ بَيْنَ اِثْنَيْنِ، وَهُوَ غَضْبَانُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1429. ``கோபமாய் இருப்பவர், அந்நிலையில் இருவருக்கு மத்தியில் தீர்ப்பளிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1430. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلَانِ، فَلَا تَقْضِ لِلْأَوَّلِ، حَتَّى تَسْمَعَ كَلَامَ الْآخَرِ، فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي". قَالَ. عَلِيٌّ: فَمَا زِلْتُ قَاضِيًا بَعْدُ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَقَوَّاهُ اِبْنُ الْمَدِينِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1430. ``உன்னிடம் யாரேனும் தீர்ப்பு கேட்டு வந்தால் மற்றவரின் (பிரதி வாதியின்) பேச்சைக் கேட்காமல் தீர்ப்பளிக்காதே! (ஏனெனில்) அப்போதுதான் எவ்வாறு தீர்ப்பு அளிப்பது என்பதை நீ அறிவாய்!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள். ``அதற்குப் பின் நான் அவ்வாறே தீர்ப்பளித்து வந்தேன்'' என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இப்னு மதீனீயில் இது `பலமானது' எனக் கூறப்பட்டுள்ளது.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1431. وَلَهُ شَاهِدٌ عِنْدَ الْحَاكِمِ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ.
1431. இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக ஹாகிமில் இதற்குச் சான்றாக ஒர் அறிவிப்பு உள்ளது.
1432. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {" إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ الْحَنَ بِحُجَّتِهِ مِنْ بَعْضٍ، فَأَقْضِيَ لَهُ عَلَى نَحْوٍ مِمَّا أَسْمَعُ، مِنْهُ فَمَنْ قَطَعْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1432. ``நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரைவிட வாக்கு சாதுர்ய மிக்கவராய் இருக்கக் கூடும். எனவே, அவரிடம் கேட்டதை அடிப்படையாக வைத்து, நான் அவருக்கு (சாதகமாக) தீர்ப்பளித்துவிடுகிறேன். ஆகவே, ஒருவருக்கு (உரிமையில்லாத) அவரின் சகோதரனின் உரிமையிலிருந்து சிறிதை (அவருக்குரியது என) நான் தீர்ப்பளித்துவிடுகிறேன். (இவ்வாறு நிகழ்ந்துவிட்டால்) அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத்தான் துண்டித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1433. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {"كَيْفَ تُقَدَّسُ أُمَّةٌ، لَا يُؤْخَذُ مِنْ شَدِيدِهِمْ لِضَعِيفِهِمْ؟"} رَوَاهُ اِبْنُ حِبَّانَ.
1433. ``எந்த சமுதாயத்தின் வலியவர்களிடமிருந்து அதிலுள்ள எளியவர்களுக்கு (அவர்களின்) உரிமை பெற்றுத் தரப்படுவதில்லையோ, அந்த சமுதாயத்தைத் தூய்மையானது என எவ்வாறு சொல்ல முடியும்?'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு ஹிப்பான்
1434. وَلَهُ شَاهِدٌ: مِنْ حَدِيثِ بُرَيْدَةَ، عِنْدَ الْبَزَّارِ.
1434. பஸ்ஸாரில் புரைதா(ரலி) வாயிலாக இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.
1435. وَآخَرُ: مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ عِنْدَ اِبْنِ مَاجَه.
1435. இப்னு மாஜாவில் அபூ ஸயீத்(ரலி) வாயிலாக இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.
1436. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {" يُدْعَى بِالْقَاضِي الْعَادِلِ يَوْمَ الْقِيَامَةِ، فَيَلْقَى مِنْ شِدَّةِ الْحِسَابِ مَا يَتَمَنَّى أَنَّهُ لَمْ يَقْضِ بَيْنَ اِثْنَيْنِ فِي عُمْرِهِ"} رَوَاهُ اِبْنُ حِبَّانَوَأَخْرَجَهُ الْبَيْهَقِيُّ، وَلَفْظُهُ: {فِي تَمْرَةٍ}.
1436. ``மறுமை நாளில் (உலகில்) நீதி செலுத்திய நீதிபதி விசாரணைக்கு அழைக்கப்படுவார். அவரிடம் கடுமையான முறையில் கணக்கு வாங்கப்படும். அப்போது, ``நான் என் வாழ்நாளில் எந்த இருவருக்கு இடையிலும், தீர்ப்பளிக்ககாமல் இருந்ததிருந்தால், நன்றாக இருந்திருக்குமே!'' என அவர் கூறுவார் என்று இறைத்தூதர்(ஸல்) கூற, நான் செவியுற்றுள்ளேன் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: இப்னு ஹிப்பான், பைஹகீ
பைஹகீயில், ``எந்த இருவருக்கு இடையிலும்'' என்பதற்குப் பதிலாக ``ஒரு காய்ந்த பேரீச்சம் பழம் தொடர்பாகவும்'' எனும் வாசகம் உள்ளது.
1437. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ اِمْرَأَةً"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1437. ``பெண்ணிடம் தன் விவகாரங்களை (முழுவதுமாக) ஒப்படைக்கும் சமுதாயம் எப்போதும் உருப்படாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1438. وَعَنْ أَبِي مَرْيَمَ اَلْأَزْدِيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ {قَالَ: "مَنْ وَلَّاهُ اللهُ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ، فَاحْتَجَبَ عَنْ حَاجَتِهِمْ وَفَقِيرِهِم، اِحْتَجَبَ اللهُ دُونَ حَاجَتِهِ"} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ.
1438. ``முஸ்லிம்களின் விவகாரங்களில் சிலவற்றுக்குப் பொறுப்பாளராய் அல்லாஹ் ஒருவரை நியமித்திருக்க, முஸ்லிம்களில் தேவை உள்ளவர்களையும், ஏழை எளிய மக்களையும் அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தடையாக அவர் இருப்பாரானால், அல்லாஹ் அவரின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளவிடாமல் தடுத்துவிடுவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மர்யம் அல் அஸ்தீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ
1439. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَعَنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلرَّاشِيَ وَالْمُرْتَشِيَ فِي الْحُكْمِ} رَوَاهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1439. (மார்க்க மற்றும் நீதிமன்றத்) தீர்ப்புக்காக இலஞ்சம் வாங்குபவரையும், இலஞ்சம் கொடுப்பவரையும் இறைத்தூதர்(ஸல்) சபித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத்
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1440. وَلَهُ شَاهِدٌ: مِنْ حَدِيثِ عَبْدِ اللهِ بنِ عَمْرٍو. عِنْدَ الْأَرْبَعَةِ إِلَّا النَّسَائِيَّ.
1440. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக திர்மிதீ அபூ தாவூத் மற்றும் இப்னு மாஜாவில் இதற்குச் சான்றாக ஹதீஸ் உள்ளது.
1441. وَعَنْ عَبْدِ اللهِ بنِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْخَصْمَيْنِ يَقْعُدَانِ بَيْنَ يَدَيِ الْحَاكِمِ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.بَابُ الشَّهَادَاتِ
1441. நீதிவிசாரணையின்போது வாதியும், பிரதிவாதியும் நீதிபதிக்கு முன்பு (சரிசமமாக) அமர வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1442. عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ اَلْجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ الشُّهَدَاءِ؟ الَّذِيْ يَأْتِي بِشَهَادَتِهِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا"} رَوَاهُ مُسْلِمٌ.
1442. ``சாட்சி அளிப்பவர்களில் சிறந்தவர் யாரென உங்களுக்கு அறிவிக்கட்டுமா? கேட்பதற்கு முன்பே சாட்சி அளிப்பவரே அவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1443. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنَّ خَيْرَكُمْ قَرْنِي، ثُمَّ اَلَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ اَلَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَكُونُ قَوْمٌ يَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلَا يُوفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1443. ``உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையை சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள், பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். அதன் பின்பு ஒரு கூட்டத்தார் வருவார்கள்; அவர்களிடம் சாட்சியம் கேட்காமலேயே சிலர் சாட்சி சொல்வர், அவர்கள் அதில் மோசடி செய்வார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்படாது. (ஏனெனில்) அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அதில் அவர்களின் உண்மை நிலை வெளிப்பட்டுவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1444. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"لَا تَجُوزُ شَهَادَةُ خَائِنٍ، وَلَا خَائِنَةٍ، وَلَا ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ، وَلَا تَجُوزُ شَهَادَةُ الْقَانِعِ لِأَهْلِ الْبَيْتِ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ.
1444. ``மோசக்காரன், மோசக்காரியின் சாட்சியம் செல்லாது. பொறாமைக்காரன் தன் (முஸ்லிம்) சகோதரனுக்கு எதிராகச் சொல்லும் சாட்சியமும் செல்லாது. ஒரு வீட்டாருக்கு ஆதரவாக அவர்களின் பணியாள் (அல்லது ஊழியர்) சொல்லும் சாட்சியமும் செல்லாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
குறிப்பு: முஸ்லிம் அல்லாதவருக்கு எதிராக ஒருவர் சாட்சி அளித்தாலும், கொள்கை தவிர வேறு காரணத்திற்காக இருவரிடையே பகைமை இருக்குமானால், அப்போது அந்த முஸ்லிம் அல்லாதவருக்கு எதிராக அந்த சாட்சியம் ஏற்கப்படாது.