623. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللهُ عَنْهُ إِلَى الْيَمَنِ...} فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ: {أَنَّ اللهَ قَدِ اِفْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ، تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ، فَتُرَدُّ فِ يفُقَرَائِهِمْ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
623. முஆத்(ரலி) அவர்களை யமன் தேசத்திற்குப் இறைத்தூதர்(ஸல்) அனுப்பினார்கள். (அறிவிப்பாளர் ஹதீஸ் முழுவதையும் கூறினார்) அதில், அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து (குறிப்பிட்ட அளவு) பெற்று தேவையுள்ள (ஏழை) மக்களிடம் திருப்பிவிடும்! அவர்களின் செல்வத்தில் `ஜகாத்'தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
624. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ أَبَا بَكْرٍ اَلصِّدِّيقَ رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ لَه ُ{هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِي فَرَضَهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمُسْلِمِينَ، وَالَّتِيْ أَمَرَ اللهُ بِهَا رَسُولَهُ فِي أَرْبَعٍ وَعِشْرِينَ مِنَ الْإِبِلِ فَمَا دُونَهَا الْغَنَم ُفِي كُلِّ خَمْسٍ شَاةٌ، فَإِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ إِلَى خَمْسٍ وَثَلَاثِينَ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ أُنْثَ ىفَإِنْ لَمْ تَكُنْ فَابْنُ لَبُونٍ ذَكَر ٍفَإِذَا بَلَغَتْ سِتًّا وَثَلَاثِينَ إِلَى خَمْسٍ وَأَرْبَعِينَ فَفِيهَا بِنْتُ لَبُون ٍأُنْثَى، فَإِذَا بَلَغَتْ سِتًّا وَأَرْبَعِينَ إِلَى سِتِّينَ فَفِيهَا حِقَّةٌ طَرُوقَةُ الْجَمَل ِفَإِذَا بَلَغَتْ وَاحِدَةً وَسِتِّينَ إِلَى خَمْسٍ وَسَبْعِينَ فَفِيهَا جَذَعَة ٌفَإِذَا بَلَغَتْ سِتًّا وَسَبْعِينَ إِلَى تِسْعِينَ فَفِيهَا بِنْتَا لَبُونٍ، فَإِذَا بَلَغَتْ إِحْدَى وَتِسْعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْجَمَلِ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ فَفِي كُلِّ أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ، وَفِي كُلِّ خَمْسِينَ حِقَّةٌ، وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ إِلَّا أَرْبَعٌ مِنَ اَلْإِبِلِ فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا. وَفِي صَدَقَةِ اَلْغَنَمِ سَائِمَتِهَا إِذَا كَانَتْ أَرْبَعِينَ إِلَى عِشْرِينَ وَمِائَةِ شَاة ٍشَاةٌ، فَإِذَا زَادَتْ عَلَى عِشْرِينَ وَمِائَةٍ إِلَى مِائَتَيْنِ فَفِيهَا شَاتَانِ، فَإِذَا زَادَتْ عَلَى مِائَتَيْنِ إِلَى ثَلَاثمِائَةٍ فَفِيهَا ثَلَاثُ شِيَاه ٍفَإِذَا زَادَتْ عَلَى ثَلَاثِمِائَةٍ فَفِي كُلِّ مِائَةٍ شَاةٌ، فَإِذَا كَانَتْ سَائِمَةُ الرَّجُلِ نَاقِصَةً مِنْ أَرْبَعِينَ شَاة ٍشَاةً وَاحِدَةً فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ، إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا. وَلَا يُجْمَعُ بَيْنَ مُتَفَرِّقٍ وَلَا يُفَرَّقُ بَيْنَ مُجْتَمِعٍ خَشْيَةَ الصَّدَقَةِ، وَمَا كَانَ مِنْ خَلِيطَيْنِ فَإِنَّهُمَا يَتَرَاجَعَانِ بَيْنَهُمَا بِالسَّوِيَّةِ، وَلَا يُخْرَجُ فِي الصَّدَقَةِ هَرِمَةٌ وَلَا ذَاتُ عَوَارٍ، إِلَّا أَنْ يَشَاءَ الْمُصَّدِّقُ، وَفِي الرِّقَة ِرُبُعُ الْعُشْرِ، فَإِنْ لَمْ تَكُن ْإِلَّا تِسْعِينَ وَمِائَةً فَلَيْسَ فِيهَا صَدَقَةٌ إِلَّا أَنْ يَشَاءَ رَبُّهَا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ مِنَ الْإِبِلِ صَدَقَةُ الْجَذَعَةِ وَلَيْسَتْ عِنْدَهُ جَذَعَةٌ وَعِنْدَهُ حِقَّةٌ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْحِقَّةُ، وَيَجْعَلُ مَعَهَا شَاتَيْنِ إِنِ اِسْتَيْسَرَتَا لَهُ، أَوْ عِشْرِينَ دِرْهَمًا، وَمَنْ بَلَغَتْ عِنْدَهُ صَدَقَةُ الْحِقَّةِ وَلَيْسَتْ عِنْدَهُ الْحِقَّةُ، وَعِنْدَهُ الْجَذَعَةُ، فَإِنَّهَا تُقْبَلُ مِنْهُ الْجَذَعَةُ، وَيُعْطِيهِ الْمُصَّدِّقُ عِشْرِينَ دِرْهَمًا أَوْ شَاتَيْنِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
624. அனஸ்(ரலி) அவர்களுக்கு `ஜகாத்' கடமை குறித்து அபூ பக்ர்(ரலி) ஒரு செய்தி எழுதினார்கள். இது முஸ்லிம்கள் மீது இறைத்தூதர்(ஸல்) கடமையாக்கிய `ஜகாத்' தர்மம் ஆகும். இது தன் நபிக்கு அல்லாஹ் இட்ட கட்டளையாகும்.
``இருபத்தி நான்கு ஒட்டகங்களுக்குள் ஒவ்வோர் ஐந்து ஒட்டகங்களுக்கும் ஓர் ஆடு (`ஜகாத்' ஆகும்). ஒட்டகங்களின் எண்ணிக்கை 25 லிருந்து 35 வரை ஆகிவிட்டால், அவற்றில் ஓர் ஆண்டு பூர்த்தியான பெண் ஒட்டகத்தை `ஜகாத்' கொடுக்க வேண்டும். பெண் ஒட்டகம் இல்லையெனில், இரண்டு ஆண்டுகள் முழுமையான ஆண் ஒட்டகத்i `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 36 லிருந்து 45 வரை ஆகிவிட்டால், இரண்டு ஆண்டுகள் முழுமையான பெண் ஒட்டகத்தை `ஜகாத்'தாகத் தரவேண்டும். அவற்றின் எண்ணிக்கை 46 லிருந்து 60 வரை ஆகிவிட்டால், மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் பெண் ஒட்டகத்தை `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 61 லிருந்து 75 வரை ஆகிவிட்டால், அவற்றிற்கு நான்கு ஆண்டுகள் முழுமையான பெண் ஒட்டகங்களை `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 76 லிருந்து 90 வரை ஆகிவிட்டால், இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்களை `ஜகாத்'தாக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 91 லிருந்து 120 வரை ஆகிவிட்டால், மூன்று ஆண்டுகள் பருவமடைந்த பெண் ஒட்டகங்கள் இரண்டு `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். அவற்றின் எண்ணிக்கை 120க்கு மேல் ஆகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஓட்டகங்களுக்கும் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் ஒன்றும் அல்லது ஒவ்வோர் ஐம்பதுக்கும் மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகங்களை `ஜகாத்'தாகக் கொடுக்க வேண்டும். நான்கு ஒட்டகங்கள் உள்ள யாருக்கும் `ஜகாத்' இல்லை. ஆனால், அதன் உரிமையாளர் விருப்பப்பட்டு கொடுக்கலாம்.
காடுகளில் மேயும் ஆடுகள் 40 முதல் 120 வரை இருக்குமாயின், அவற்றிற்கு ஒர் ஆடு `ஜகாத்' ஆகும். அவை 120 லிருந்து 200 வரை ஆகிவிட்டால், அவற்றிற்கு இரண்டு ஆடுகள் `ஜகாத்' ஆகும். அவற்றின் எண்ணிக்கை 200 லிருந்து 300 வரையாகிவிட்டால், மூன்று ஆடுகள் `ஜகாத்' ஆகும். அவற்றின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு (என்ற விகிதத்தில்) `ஜகாத்' ஆகும். காடுகளில் மேயக் கூடிய ஆடுகள் நாற்பதுக்கு ஒன்று குறைவாய் இருந்தால், அவற்றிற்கு அதன் உரிமையாளர் விரும்பி கொடுத்தால் தவிர `ஜகாத்' இல்லை.
தனித்தனியாய் இருக்கும் பொருட்களை ஜகாத் கொடுப்பதற்கு அஞ்சி ஒன்றுசேர்க்க வேண்டாம். இன்னும், மொத்தமாக இருக்கும் பொருட்களை `ஜகாத்' கொடுப்பதற்கு அஞ்சி பிரித்துக் கொள்ளுதல் வேண்டாம். எந்தச் சொத்து கூட்டு முறையில் உள்ளதோ, அதனுடைய அளவுப்படி அதற்குரிய `ஜகாத்'தை கொடுக்க வேண்டும்.
`ஜகாத்' பொருட்கள் பல் விழுந்து வயது முதிர்ந்ததாகவோ, குறைபாடு உள்ளதாகவோ, ஆண் பிராணியாகவோ இருக்கக்கூடாது. வாங்குபவர் அதனை விரும்பிக் கேட்டால் தவிர.
வெள்ளியில், 190 திர்ஹமில் அதன் உரிமையாளர் விரும்பினால் தவிர `ஜகாத், கடமை இல்லை.
நான்கு ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் `ஜகாத்' கொடுப்பதற்கு இல்லாதவரிடமிருந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகங்களைக் பெற்றுக் கொண்டு, அதனுடன் இரண்டு ஆடுகள் அல்லது இருபது திர்ஹம் சேர்த்து வசூலிக்க வேண்டும்.
அதேபோன்று ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் `ஜகாத்' கடமையாய் இருக்கும் நிலையில், அது அவரிடம் இல்லையெனில், அவரிடம் நான்கு ஆண்டுகள் பூர்த்தியான பெண் ஒட்டகம் இருப்பின் `ஜகாத்' பெறுபவர் அதன் உரிமையாளரிடம் அதனைப் பெற்றுக் கொண்டு, இரண்டு ஆடுகள் அல்லது இருபது `திர்ஹம்' (ஜகாத் அளித்தவருக்கு) கொடுக்க வேண்டும் என்று அபூ பக்ர்(ரலி) `ஜகாத்' கடமை குறித்து தமக்கு செய்தி எழுதினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
625. وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ، فَأَمَرَهُ أَنْ يَأْخُذَ مِنْ كُلِّ ثَلَاثِينَ بَقَرَةً تَبِيعًا أَوْ تَبِيعَةً، وَمِنْ كُلِّ أَرْبَعِينَ مُسِنَّةً، وَمِنْ كُلِّ حَالِمٍ دِينَارًا أَوْ عَدْلَهُ مُعَافِرَ} رَوَاهُ الْخَمْسَةُ، وَاللَّفْظُ لِأَحْمَدَ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ وَأَشَارَ إِلَى اِخْتِلَافٍ فِي وَصْلِهِ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
625. யமன் நாட்டிற்கு இறைத்தூதர்(ஸல்) என்னை (பொறுப்பாளராய் நியமித்து) அனுப்பியபோது, ``ஒவ்வொரு முப்பது மாடுகளுக்கும் அவற்றின் `ஜகாத்'தாக ஓராண்டு முழுமையான காளை அல்லது பசுவை வாங்க வேண்டும். ஒவ்வொரு நாற்பது மாடுகளுக்கும் இரண்டு ஆண்டுகள் முழுமையான பசு மாட்டை `ஜகாத்'தாக வாங்க வேண்டும். வயது வந்த (முடஸ் லிம் அல்லாத) ஒவ்வொருவரிடமிருந்தும் (ஜிஸ் யா வரியாக) ஒரு தீனார் வாங்க வேண்டும் அல்லது அதன் விலை மதிப்பில் உள்ள துணியை வாங்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) எனக்குக் கட்டளையிட்டார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இங்கு அஹ்மதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இது `மவ்ஸூல்' என்பதில் கருத்து வேறுபாடு உள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இமாம் ஹாகிம் மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
626. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ} رَوَاهُ أَحْمَدُ.وَلِأَبِي دَاوُدَ: {وَلَا تُؤْخَذُ صَدَقَاتُهُمْ إِلَّا فِي دُورِهِمْ}.
626. ``ஜகாத்' பெறுவதற்காகச் செல்லும்போது, ஜகாத் வசூலிப்பவர்கள், முஸ்லிம்கள் தங்களின் கால்நடைகளுடன் தங்கி இருக்கும் நீர்த்துறைகளுக்குச் சென்று ஜகாத் வசூலிக்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தையிடமிருந்தும் அவர் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
``அவர்களின் `ஜகாத்'தை அவர்களின் வீடுகளுக்குச் சென்று வசூலிக்க வேண்டும்'' என அபூ தாவூதில் உள்ளது.
627. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ وَلَا فِي فَرَسِهِ صَدَقَةٌ} رَوَاهُ الْبُخَارِيُّ.وَلِمُسْلِمٍ: {لَيْسَ فِي الْعَبْدِ صَدَقَةٌ إِلَّا صَدَقَةُ الْفِطْرِ}.
627. ``எந்த ஒரு முஸ்லிம் மீதும் அவன் (சவாரிக்காக) வைத்திருக்கும் குதிரை மற்றும் அவனுடைய அடிமைக்காக `ஜகாத்' செலுத்துவது கடமை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
``அடிமையின் மீது (நோன்புப் பெருநாளுக்காகச் செலுத்தும்) `ஸதக்கத்துல் ஃபித்ர்' தவிர்த்து எந்த `ஜகாத்'தும் கடமை இல்லை'' என்றும் முஸ்லிமில் பதிவிடப்பட்டுள்ளது.
628. وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {فِي كُلِّ سَائِمَةِ إِبِلٍ: فِي أَرْبَعِينَ بِنْتُ لَبُونٍ، لَا تُفَرَّقُ إِبِلٌ عَنْ حِسَابِهَا، مَنْ أَعْطَاهَا مُؤْتَجِرًا بِهَا فَلَهُ أَجْرُهُ، وَمَنْ مَنَعَهَا فَإِنَّا آخِذُوهَا وَشَطْرَ مَالِهِ، عَزْمَةً مِنْ عَزَمَاتِ رَبِّنَا، لَا يَحِلُّ لِآلِ مُحَمَّدٍ مِنْهَا شَيْءٌ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ، وَعَلَّقَ الشَّافِعِيُّ اَلْقَوْلَ بِهِ عَلَى ثُبُوتِهِ.
628. ``காடுகளில் மேய்ந்து கொள்ளும் ஒட்டகங்களில் ஒவ்வொரு நாற்பதிற்கும் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம் `ஐகாத்' ஆகும். இதனைக் கணக்கிட்டு (`ஜகாத்' கொடுக்காதிருக்க) அவர்கள் அவற்றைப் பிரித்துக் கொள்ளக் கூடாது. `ஜகாத்'தை இறைவனிடம் நற்கூலியை எதிர் பார்த்து கொடுப்பவர் அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்வார். `ஜகாத்' கொடுக்காதவரிடமிருந்து நாம் அதைக் கண்டிப்பாக வாங்குவோம். அத்துடன் அவர் `ஜகாத்'தைத் தர மறுத்ததற்குத் தண்டனையாக அவருடைய சொத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம். இது, நம் இறைவனால் வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் ஒன்றாகும். அதிலிருந்து எதுவுமே முஹம்மதின் குடும்பத்தாருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என பஹஜ் இப்னு ஹகீம் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: முஸ்னத் அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். இமாம் ஷாஃபியீ(ரஹ்) முஅல்லக் எனும் தரத்தில் இதற்குச் சான்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
629. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ -وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ- فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ، وَلَيْسَ عَلَيْكَ شَيْءٌ حَتَّى يَكُونَ لَكَ عِشْرُونَ دِينَارًا، وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ، فَفِيهَا نِصْفُ دِينَارٍ، فَمَا زَادَ فَبِحِسَابِ ذَلِكَ، وَلَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَهُوَ حَسَنٌ، وَقَدِ اِخْتُلِفَ فِي رَفْعِهِ.
629. ``உன்னிடம் இருநூறு திர்ஹம் இருந்து, அவற்றின் மீது ஓராண்டு கழிந்துவிட்டால், அவற்றிலிருந்து ஐந்து திர்ஹம் `ஜகாத்'(கடமை) ஆகும். உன்னிடம் இருபது தீனார்கள் வரும் வரை நீ `ஜகாத்' கொடுக்க வேண்டியதில்லை. இருபது தீனார்கள் மட்டும் இருந்து, அவற்றின் மீது ஓராண் கழிந்துவிட்டால், அரை தீனார் அவற்றிலிருந்து `ஜகாத்' ஆகும். அதற்கு மேல் எவ்வளவு அதிகமானலும் அதைக் கணக்கிட்டு `ஜகாத்' கொடுப்பது கடமையாகும். ஓராண்டு கழியாத எந்த ஒரு சொத்தின் மீதும் `ஜகாத்' கடமை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இது `ஹஸன்' எனும் தரத்தில் உள்ளதாகும். இது ``மர்ஃபூஃ'' எனும் தரத்தைப் பெற்றுள்ளதா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
630. وَلِلتِّرْمِذِيِّ؛ عَنِ ابْنِ عُمَرَ: {مَنِ اِسْتَفَادَ مَالًا، فَلَا زَكَاةَ عَلَيْهِ حَتَّى يَحُولَ الْحَوْلُ} وَالرَّاجِحُ وَقْفُهُ.
630. ``ஒருவர் ஒரு சொத்தைப் பெற்றப் பின்பு அதன் மீது ஓராண்டு கழியாமல் `ஜகாத்' இல்லை'' என இப்னு உமர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் உள்ளது.
இது `மவ்கூஃப்' என்பதே சரியானது.
631. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {لَيْسَ فِي الْبَقَرِ الْعَوَامِلِ صَدَقَةٌ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالدَّارَقُطْنِيُّ، وَالرَّاجِحُ وَقْفُهُ أَيْضًا.
631. ``வேலை வாங்கப்படும் காளை மாடுகளில் மீது `ஜகாத்' கடமை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், தாரகுத்னீ
இது `மவ்கூஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
632. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ؛ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مِنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ، فَلْيَتَّجِرْ لَهُ، وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَالدَّارَقُطْنِيُّ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ. وَلَهُ شَاهِدٌ مُرْسَلٌ عِنْدَ الشَّافِعِيِّ.
632. ``அநாதையின் சொத்துக்கு பொறுப்பேற்றவர் அதனை வியாபாரம் (தொழில்) செய்து (பெருக்கி) கொள்ளட்டும். `ஜகாத்' அதனை விழுங்கும் அளவிற்கு விட்டுவிட வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, தாரகுத்னீ
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது. இதற்குச் சான்றாக இமாம் ஷாஃபியீ(ரஹ்) அவர்களிடம் `முர்ஸல்' தரத்தில் உள்ளது.
633. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَتِهِمْ قَالَ: "اَللَّهُمَّ صَلِّ عَلَيْهِمْ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
633. `ஜகாத்'தை இறைத்தூர்(ஸல்) அவர்களிடம் மக்கள் கொண்டு வந்து கொடுக்கும்போது ``யா அல்லாஹ்! இவர்களுக்கு கருணை புரிவாயாக!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறுவார்கள் (பிரார்த்திப்பார்கள்) என அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
634. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ اَلْعَبَّاسَ رَضِيَ اللهُ عَنْهُ {سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ، فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَالْحَاكِمُ.
634. தம் `ஜகாத்'தை அதன் நேரம் வருவதற்கு முன்பே செலுத்துதல் குறித்து அப்பாஸ்(ரலி) கேட்டார். எனவே, அவ்வாறு செய்வதற்கு அவருக்கு இறைத்தூதர்(ஸல்) அனுமதி வழங்கினார்கள் என்று அலி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, ஹாகிம்
635. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسٍ ذَوْدٍ مِنَ الْإِبِلِ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ} رَوَاهُ مُسْلِمٌ.
635. ``இருநூறு திர்ஹத்திற்கும் குறைவாக வெள்ளி இருப்பின் அதன் மீது `ஜகாத்' இல்லை. ஒட்டகங்கள் ஐந்திற்கும் குறைவாய் இருப்பின், அவற்றின் மீதும் `ஜகாத்' இல்லை. ஐந்து `வஸக்'கிற்குக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தின் மீதும் `ஜகாத்' இல்லை. என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
636. وَلَهُ مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ: {لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسَاقٍ مِنْ تَمْرٍ وَلَا حَبٍّ صَدَقَةٌ}.وَأَصْلُ حَدِيثِ أَبِي سَعِيدٍ مُتَّفَقٌ عَلَيْهِ.
636. முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் அபூ சயீத்(ரலி) வாயிலாக, ``ஐந்து `வஸக்' அளவிற்கும் குறைவாக உள்ள பேரீச்சம் பழம் மற்றும் தானியங்களுக்கு `ஜகாத்' இல்லை'' என உள்ளது.
637. وَعَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ، أَوْ كَانَ عَثَرِيًّا: اَلْعُشْرُ، وَفِيمَا سُقِيَ بِالنَّضْحِ: نِصْفُ الْعُشْرِ.} رَوَاهُ الْبُخَارِيُّ.وَلِأَبِي دَاوُدَ: {أَوْ كَانَ بَعْلًا: اَلْعُشْرُ، وَفِيمَا سُقِيَ بِالسَّوَانِ يأَوِ النَّضْحِ: نِصْفُ الْعُشْرِ}.
637. ``மழைத் தண்ணீர், ஊற்றுத் தண்ணீர் ஆகியவற்றால் பாசனம் செய்யப்படும் நிலம் அல்லது ஈரத் தன்மையுள்ள நிலத்தின் மூலம் செய்யப்படும் வேளாண்மையில் பத்தில் ஒரு பங்கு `ஜகாத்' கடமையாகும். தண்ணீர் இறைத்துப் பாசனம் செய்யப்படும் நிலத்திலிருந்து வரும் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கு `ஜகாத்' (கடமை) ஆகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் தம் தந்தை இப்னு உமர்(ரலி) வாயிலாக அறிவித்தார்.
நூல்: புகாரீ
தானாக விளையும் வேளாண்மைக்குப் பத்தில் ஒரு பங்கும், நீரேற்றம் அல்லது கால்நடைகள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படும் நிலத்தின் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கும் `ஜகாத்' கடமை என அபூ தாவூதில் உள்ளது.
638. وَعَنْ أَبِي مُوسَى اَلْأَشْعَرِيِّ؛ وَمُعَاذٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُمَا: {لَا تَأْخُذَا فِي الصَّدَقَةِ إِلَّا مِنْ هَذِهِ الْأَصْنَافِ الْأَرْبَعَةِ: اَلشَّعِيرِ، وَالْحِنْطَةِ، وَالزَّبِيبِ، وَالتَّمْرِ} رَوَاهُ الطَّبَرَانِيُّ، وَالْحَاكِمُ.
638. ``தானியங்களில் வாற்கோதுமை, கோதுமை, திராட்சை, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்த்து வேறு எந்த வேளாண்மைக்கும் `ஜகாத்' வாங்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) மற்றும் முஆத்(ரலி) அறிவித்துள்ளார்கள்.
நூல்கள்: தப்ரானீ, ஹாகிம்
குறிப்பு: கோதுமையில் மட்டும்தான் ஜகாத் கடமை அரிசியில் இல்லை என இதைக் கருதவேண்டாம். தானிய வகைகள் அனைத்திற்கும் அவை `ஜகாத்'தின் அளவை அடைந்துவிட்டால் `ஜகாத்' செலுத்தவேண்டும்.
639. وَلِلدَّارَقُطْنِيِّ، عَنْ مُعَاذٍ: {فَأَمَّا الْقِثَّاءُ، وَالْبِطِّيخُ، وَالرُّمَّانُ، وَالْقَصَبُ، فَقَدْ عَفَا عَنْهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} وَإِسْنَادُهُ ضَعِيفٌ.
639. வெள்ளரிக்காய், தர்பூசணிப்பழம், மாதுளை மற்றும் `கஸப்' (கரும்பு) ஆகியவற்றிற்கு (ஜகாத் இல்லை) என இறைத்தூதர்(ஸல்) சலுகை அளித்தார்கள் என முஆத்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் `ளயீஃப்' எனும் பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிடப்பட்டுள்ளது.
640. وَعَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: أَمَرَنَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا خَرَصْتُمْ، فَخُذُوا، وَدَعُوا الثُّلُثَ، فَإِنْ لَمْ تَدَعُوا الثُّلُثَ، فَدَعُوا الرُّبُعَ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا اِبْنَ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
640. ``நீங்கள் (வேளாண்மைப் பொருட்களில் `ஜகாத்') மதீப்பிடு செய்தால், (அவற்றில்) மூன்றில் ஒரு பகுதியை விட்டுவிட்டு (மற்றவற்றில் `ஜகாத்'தைப்) பெற்றுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒரு பங்கை விடாவிட்டாலும் நான்கில் ஒரு பங்கையாவது விட்டுவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள் என ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
641. وَعَنْ عَتَّابِ بنِ أُسَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَنْ يُخْرَصَ الْعِنَبُ كَمَا يُخْرَصُ النَّخْلُ، وَتُؤْخَذَ زَكَاتُهُ زَبِيبًا} رَوَاهُ الْخَمْسَةُ، وَفِيهِ اِنْقِطَاعٌ.
641. பேரீச்சம் பழத்தில் `ஜகாத்' மதிப்பீடு செய்து (வசூலிப்பது) போன்றே திராட்சையிலும் `ஜகாத்' மதிப்பீடு செய்து (வசூலித்துக்) கொள்ளுமாறு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள். அப்போது, அதற்குரிய `ஜகாத்' காய்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) ஆக வாங்கப்பட்டது என அத்தாப் இப்னு அஸீத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டுள்ளது.
642. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ؛ {أَنَّ اِمْرَأَةً أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهَا اِبْنَةٌ لَهَا، وَفِي يَدِ اِبْنَتِهَا مِسْكَتَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ لَهَا: "أَتُعْطِينَ زَكَاةَ هَذَا؟" قَالَتْ: لَا. قَالَ: "أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ؟". فَأَلْقَتْهُمَا.} رَوَاهُ الثَّلَاثَةُ، وَإِسْنَادُهُ قَوِيٌّ. وَصَحَّحَهُ الْحَاكِمُ: مِنْ حَدِيثِ عَائِشَةَ.
642. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவரின் கையில் அவரின் மகள் இருந்தாள். அவளின் கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன.
``இதற்கு நீ `ஜகாத்' கொடுத்துவிட்டாயா?'' என அப்பெண்ணிடம் இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
``இல்லை'' என அவர் கூறினார்.
``மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?'' என இறைத்தூதர்(ஸல்) கேட்டார்கள்.
உடனே, அவர் அவற்றை உடனடியாக் கழற்றிக் கொடுத்து விட்டார் என அமீர் இப்னு ஷுஐபு தன் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பின் மூலம், இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.