பத்ரு
நிராகரிப்போரின் தொல்லைகளை தாங்க முடியாமல் மக்காவிலிருந்து மதினாவிற்க்கு சென்ற முஸ்லீம்களை மதினாவிலும் நிம்மதியாக வாழ மக்காவாசிகள் விடவில்லை. மக்காவிலிருந்து வந்த ஆயுதம் தாங்கிய ஆயிரம் குரைசிப் படையினர் மதினாவிற்க்கு 80 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள இந்த பத்ரு என்ற இடத்திற்க்கு வந்த பொழுது முஸ்லீம்கள் தங்களை தற்காத்து கொள்ளும் சூழ்நிலை ஏற்ப்பட்டது. ஆயுதங்கள் குறைவாக உள்ள 313 ஸஹாபாக்களை மட்டும் கொண்ட முஸ்லீம் படை ஒரே இறைவனிடமும் அவனுடைய தூதரிடமும் அசையா நம்பிக்கை வைத்து நிலை குலையாமல் நின்று அவர்களை எதிர்த்து போர் செய்த பத்ரு களம் இதுதான்.

Badr battle field

இரத்தம் சிந்தி வீரத்தியாகிகள் 13 பேர்களின் அடக்கஸ்தலங்கள் இங்குதான் உள்ளன. அடக்கஸ்தலங்களை கட்டி எழுப்புவதும் அடக்கம் செய்தவர்களை அழைத்து பிரார்த்திப்பதும் இஸ்லாத்தில் மிகக் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.


காபிர்களான குரைசிப் படையினர் முகாமிட்ட இடம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரியான அபூஜஹல், முஆத் மற்றும் முஅவ்வித் இரண்டு அன்சாரி வாலிபர்களால் கொல்லப்பட்ட இடம்.

The place where two youngsters killed Abujahil

அபூஜஹல் கொல்லப்பட்ட இடம்.

அல்லாஹ்வின் கட்டளைப்படி வானிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான வானவர்கள் முஸ்லீம் படையினருடன் இணைந்து போரிட்டனர். இறைவன் உதவியினால் பத்ரில் முஸ்லீம்கள் வெற்றி பெற்றார்கள். மஜ்ஸித் ஹாரிஸ் என்ற இந்த பள்ளி உள்ள இடத்தில் தான் அன்று பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முகாமிட்டு தங்கியிருந்தார்கள்.

Harris Mosque

மஸ்ஜித் ஹாரிஸ்

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. அல்குர்ஆன் 3:13