இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
இராக்கில் உள்ள அன்நஸிரியா நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பாபிலோனியாவில் உள்ள உர் என்று அழைக்கப்படுகின்ற நகரம் தான் இபுறாகிம் நபி பிறந்த நகரமாகும்.

It is believed to be the house of Prophet Ibrahim

இப்ராஹீம் நபி அவர்களின் வீடு என்று நம்பப்படுகிறது.

Moon temple build by King Namrud

நம்புருது மன்னன் சந்திரனுக்கு கட்டிய கோயில்.

இப்ராஹீம் நபியின் சமுகத்தினர் அவ்வூரை சந்திர தேவன் காத்து வருவதாக நம்பினர். அவ்வூரில் சந்திரனுக்கு ஒரு கோயில் கட்டினான் நம்புருது மன்னன்.

பிற்காலத்தில் அக்கோயிலை மக்கள் புதுபித்தார்கள். சுமார் ஜயாயிரம் தேவர்களையும் தேவிகளையும் சிலை வடிவில் வணங்கிக் கொண்டிருந்த தன் சமுதாயத்தினர், தம் தந்தை மற்றும் நம்ருது மன்னனிடமும் சிலை வணக்கத்தின் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத நிலைகளை எடுத்து கூறினார்.

The basement of King Namrud palace

நம்ருது மன்னனின் அரண்மனையின் அஸ்திவாரம்

சுமார் 38 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமும் உள்ள நம்ருது மன்னனின் அரண்மனையில் ஏறக்குறைய 30 அறைகள் இருந்தன.

சிலைகள் உயிரற்றவை என்பதை நிரூபிப்பதற்க்கு இப்ராஹீம் நபி ஒரு தந்திரம் செய்தார்கள். சிறிய சிலைகள் எல்லாவற்றையும் கோடாரியால் உடைத்துவிட்டு கோடாரியை பெரிய சிலையின் கழுத்தில் தொங்கவிட்டார். இதனால் கோபமுற்ற அவரது சமுதாயத்தினர் அவரை நெருப்பில் தள்ளி கொலை செய்ய முடிவெடுத்தனர். அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்ற உண்மையை கூறிய இப்ராஹீம் நெருப்பு குண்டத்தில் தூக்கியெறியப்பட்டார். ஆனால் எல்லாவற்றையும் எரிக்கும் நெருப்புக்கு அந்த ஆற்றல் இல்லாமல் போகும்படி அல்லாஹ் ஆனையிட்டான்.

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். அல்குர்ஆன் 21:69

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் நாட்டையும் வீட்டையும் விட்டு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாலஸ்தீனத்தை அடைந்தார்.


இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் அடக்கஸ்தலம் ஹெப்ரான் நகரத்தில் உள்ள அல்ஹலீல் என்ற இந்த பள்ளிவாசல் அருகில்தான் உள்ளது.

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறார். அந்த மகனையும் மனைவி ஹாஜராவையும் பாலஸ்தீனத்தில் இருந்து ஏறத்தாழ 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரேபியாவில் ஆள் நடமாட்டமில்லாத மக்காவில் விட்டுவிட்டு திரும்பி வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். வறட்சிமிக்க அரேபியாவின் பள்ளத்தாக்குகளில் அதிர்ச்சியோடு சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் தண்ணீரைத்தேடி இங்கும் அங்கும் ஹாஜரா அழைந்தார். இந்த வரலாற்று உணர்வை நிலை நாட்ட இன்றும் ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் வேகமாக நடந்து வருவார்கள். வறட்சிமிக்க மக்காவில் விடப்பட்ட கைக் குழந்தை தாகத்தால் கால்களை உதைத்து அழுதபோது அவ்விடத்தில் ஜம்ஜம் என்ற நீருற்று பீறிட்டு கிளம்பியது. இந்த நீருற்று நாலாயிரம் வருடங்களுக்கு பிறகும் வற்றாமல் மக்காவாசிகளுக்கும் மக்காவுக்குவரும் ஹாஜிகளுக்கு ஏற்படுத்திய பெரும் அருட்கொடையாகும்.

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலைவனத்தில் விட்டு சென்ற கைக்குழந்தை வளர்ந்து நடக்கும் பருவத்தை அடைந்ததும் அவர்களது கைகளால் அக்குழந்தையை அறுத்து பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டான். இதனை நிறைவேற்றுவதற்க்கு இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து மீண்டும் மக்கா வந்தார். மகனுடன் மினாவிற்க்கு புறப்பட்ட இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் இந்த இடத்திற்க்கு(படம் 5e) வந்து சேர்ந்து வந்தவுடன் ஷைத்தான் அசரிரியாக இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்தான். அந்த அசரிரியின் ஒசை கேட்ட திசை நோக்கி இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் கல்லால் அடித்தார்கள். எம்பெருமானர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் கட்டளைக்கு இணங்க செய்யக்கூடிய ஹஜ்ஜில் அதே இடத்தில் ஹாஜிகள் கல்லால் அடிப்பார்கள். ஷைத்தான் அடிக்கும் கற்கள் இந்த வட்டத்திற்க்குள் விழுந்தால் போதுமானது. அந்த தூணில் படவேண்டிய அவசியமில்லை


படம் 5e

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் மகனை அறுப்பதற்க்காக தரையில் படுக்க வைக்கிறார்கள் அப்பொழுது இறைவன் கூறினான்: வேண்டாம் இப்றாஹீம் நீ என் கட்டளையை நிறைவேற்றிவிட்டாய். உம்மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுப்பாயாக. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்க்காக எதையும் தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை உருவாக்குதுதான் இந்த திருப்பலியின் நோக்கமாகும்

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன் இஸ்மாயில் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் வாலிப வயதை அடைந்ததும் அவர்கள் இருவருக்கும் கஃபாவை அதன் பழமையான அஸ்திவாரத்திலிருந்து எழுப்பும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.

Kaaba

இந்த இறையில்லத்தை 7 முறை இடப்புறமாக சுற்றி வலம்வருவது ஹஜ்ஜிலும் உம்ராவிலும் கடமையான செயலாகும்.