டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 33. ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்)
மதனீ, வசனங்கள்: 73
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
33:1 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اتَّقِ اللّٰهَ وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا ۙ
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! اتَّقِ பயந்துகொள்ளுங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُطِعِ கீழ்ப்படியாதீர் الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கும் وَالْمُنٰفِقِيْنَ ؕ நயவஞ்சகர்களுக்கும் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا ۙ மகா ஞானவானாக
33:1. யா அய்யுஹன் னBபிய்யுத் தகில் லாஹ வலா துதி'இல் காFபிரீன வல் முனாFபிகீன்; இன்னல் லாஹ கான 'அலீமன் ஹகீமா
33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! நிராகரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானம் மிக்கவன்.
33:2 وَّاتَّبِعْ مَا يُوْحٰٓى اِلَيْكَ مِنْ رَّبِّكَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا ۙ
وَّاتَّبِعْ இன்னும் பின்பற்றுவீராக مَا يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுவதை اِلَيْكَ உமக்கு مِنْ رَّبِّكَ ؕ உமது இறைவனிடமிருந்து اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கின்றான் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை خَبِيْرًا ۙ ஆழ்ந்தறிந்தவனாக
33:2. வத்தBபிஃ மா யூஹா இலய்க மிர் ரBப்Bபிக்; இன்னல் லாஹ கான Bபிமா தஃமலூன கBபீரா
33:2. இன்னும், (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
33:3 وَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا
وَّتَوَكَّلْ இன்னும் சார்ந்திருப்பீராக! عَلَى اللّٰهِ ؕ அல்லாஹ்வை وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا பொறுப்பாளனாக இருக்க
33:3. வ தவக்கல் 'அலல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் சார்ந்திருப்பீராக! அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.
33:4 مَا جَعَلَ اللّٰهُ لِرَجُلٍ مِّنْ قَلْبَيْنِ فِىْ جَوْفِهٖ ۚ وَمَا جَعَلَ اَزْوَاجَكُمُ الّٰٓـئِْ تُظٰهِرُوْنَ مِنْهُنَّ اُمَّهٰتِكُمْ ۚ وَمَا جَعَلَ اَدْعِيَآءَكُمْ اَبْنَآءَكُمْ ؕ ذٰ لِكُمْ قَوْلُـكُمْ بِاَ فْوَاهِكُمْ ؕ وَاللّٰهُ يَقُوْلُ الْحَقَّ وَهُوَ يَهْدِى السَّبِيْلَ
مَا جَعَلَ அமைக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِرَجُلٍ ஒரு மனிதனுக்கு مِّنْ قَلْبَيْنِ இரு உள்ளங்களை فِىْ جَوْفِهٖ ۚ அவனது உடலில் وَمَا جَعَلَ அவன்ஆக்கவில்லை اَزْوَاجَكُمُ உங்கள்மனைவிகளை الّٰٓـئِْ எவர்கள் تُظٰهِرُوْنَ ளிஹார்செய்கின்றீர்கள் مِنْهُنَّ அவர்களில் اُمَّهٰتِكُمْ ۚ உங்கள் தாய்மார்களாக وَمَا جَعَلَ அவன்ஆக்கவில்லை اَدْعِيَآءَ வளர்ப்புபிள்ளைகளை كُمْ உங்கள் اَبْنَآءَكُمْ ؕ உங்கள் பிள்ளைகளாக ذٰ لِكُمْ அது قَوْلُـكُمْ நீங்கள் கூறுவதாகும் بِاَ فْوَاهِكُمْ ؕ உங்கள் வாய்களால் وَاللّٰهُ அல்லாஹ் يَقُوْلُ கூறுகின்றான் الْحَقَّ உண்மையை وَهُوَ அவன்தான் يَهْدِى வழிகாட்டுகின்றான் السَّبِيْلَ நல்ல பாதைக்கு
33:4. மா ஜ'அலல் லாஹு லிரஜுலிம் மின் கல்Bபய்னி Fபீ ஜவ்Fபிஹ்; வமா ஜ'அல அZஜ்வாஜகுமுல் லா'ஈ துளாஹிரூன மின்ஹுன்ன உம்மஹாதிகும்; வமா ஜ'அல அத்'இயா'அகும் அBப்னா'அகும்; தாலிகும் கவ்லுகும் Bபி அFப்வா ஹிகும் வல்லாஹு யகூலுல் ஹக்க வ ஹுவ யஹ்திஸ் ஸBபீல்
33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இதயங்களை உண்டாக்கவில்லை; உங்கள் மனைவியரில் எவரையும் (தன் மனைவியைத் தன் தாய் போன்றவள் என்று கூறி) நீங்கள் உங்களுடைய தாய்மார்களுக்கு ஒப்பாகக் கூறுவதனால் - உங்களுடைய தாய்களாக அவன் ஆக்கவில்லை; (அவ்வாறே) உங்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கவில்லை; இவை யாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தையாகும்; அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும், அவன் நேர்வழியையே காட்டுகிறான்.
33:5 اُدْعُوْهُمْ لِاٰبَآٮِٕهِمْ هُوَ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ ۚ فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا اٰبَآءَهُمْ فَاِخْوَانُكُمْ فِى الدِّيْنِ وَمَوَالِيْكُمْؕ وَ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيْمَاۤ اَخْطَاْ تُمْ بِهٖۙ وَلٰكِنْ مَّا تَعَمَّدَتْ قُلُوْبُكُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
اُدْعُوْ அழையுங்கள்! هُمْ அவர்களை لِاٰبَآٮِٕهِمْ அவர்களது தந்தைகளுடன் (சேர்த்தே) هُوَ அதுதான் اَقْسَطُ மிக நீதமானது عِنْدَ اللّٰهِ ۚ அல்லாஹ்விடம் فَاِنْ لَّمْ تَعْلَمُوْۤا நீங்கள் அறியவில்லை என்றால் اٰبَآءَ தந்தைகளை هُمْ அவர்களின் فَاِخْوَانُكُمْ உங்கள் சகோதரர்கள் فِى الدِّيْنِ மார்க்கத்தில் وَمَوَالِيْكُمْؕ இன்னும் உங்கள் உதவியாளர்கள் وَ لَيْسَ இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது جُنَاحٌ குற்றம் فِيْمَاۤ எதில் اَخْطَاْ تُمْ நீங்கள் தவறு செய்தீர்களோ بِهٖۙ அதில் وَلٰكِنْ என்றாலும் مَّا எதை تَعَمَّدَتْ வேண்டுமென்று செய்தது قُلُوْبُكُمْ ؕ உங்கள் உள்ளங்கள் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا மகா கருணையாளனாக
33:5. உத்'ஊஹும் லி ஆBபா'இஹிம் ஹுவ அக்ஸது 'இன்தல் லாஹ்; Fப இல்லம் தஃலமூ ஆBபா'அஹும் Fப இக்வானுகும் Fபித் தீனி வ மவாலீகும்; வ லய்ஸ 'அலய்கும் ஜுனாஹுன் Fபீமா அக்தாதும் Bபிஹீ வ லாகிம் மா த'அம்மதத் குலூBபுகும்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
33:5. எனவே, நீங்கள் எடுத்து வளர்த்த அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள்: அதுவே, அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்: ஆனால், அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின் அவர்கள் மார்க்கத்தில் உங்களுடைய சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர்: முன்னர் இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள்மீது குற்றமில்லை; ஆனால், உங்களுடைய உள்ளங்கள் வேண்டுமென்றே செய்கின்ற ஒன்றுதான் (உங்கள்மீது குற்றமாகும்); அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
33:6 اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا ؕ كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا
اَلنَّبِىُّ நபிதான் اَوْلٰى மிக உரிமையாளர் بِالْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு مِنْ اَنْفُسِهِمْ அவர்களின் ஆன்மாக்களைவிட وَاَزْوَاجُهٗۤ இன்னும் அவருடைய மனைவிமார்கள் اُمَّهٰتُهُمْ ؕ அவர்களுக்கு தாய்மார்கள் وَاُولُوا الْاَرْحَامِ இன்னும் இரத்தபந்தங்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلٰى உரிமையுள்ளவர்கள் بِبَعْضٍ சிலருக்கு فِىْ كِتٰبِ வேதத்தின் படி اللّٰهِ அல்லாஹ்வின் مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை(யும்) விட وَالْمُهٰجِرِيْنَ முஹாஜிர்களையும் اِلَّاۤ தவிர اَنْ تَفْعَلُوْۤا நீங்கள்ஏதும்செய்தால் اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ உங்கள் பொறுப்பாளர்களுக்கு مَّعْرُوْفًا ؕ ஒரு நன்மையை كَانَ இருக்கின்றது ذٰ لِكَ இது فِى الْكِتٰبِ வேதத்தில் مَسْطُوْرًا எழுதப்பட்டதாக
33:6. அன்-னBபிய்யு அவ்லா Bபில் மு'மினீன மின் அன்Fபுஸிஹிம் வ அZஜ்வாஜுஹூ உம்மஹாதுஹும் வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹி மினல் மு'மீனீன வல் முஹாஜிரீன இல்லா அன் தFப்'அலூ இலா அவ்லியா'இகும் மஃரூFபா; கான தாலிக Fபில் கிதாBபி மஸ்தூரா
33:6. இந்த நபி நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்; (ஒரு விசுவாசியின் சொத்தை அடைவதற்கு) மற்ற நம்பிக்கையாளர்களைவிடவும், (நாடு துறந்த) முஹாஜிர்களைவிடவும் உறவினர்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (உரிமையுடைய) வர்களாவார்கள்; இதுதான் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் தவிர (முறைப்படி செய்யலாம்); இது, வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.
33:7 وَاِذْ اَخَذْنَا مِنَ النَّبِيّٖنَ مِيْثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُّوْحٍ وَّاِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًاغَلِيْظًا ۙ
وَاِذْ اَخَذْنَا நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக مِنَ النَّبِيّٖنَ எல்லா நபிமார்களிடமும் مِيْثَاقَهُمْ அவர்களின் ஒப்பந்தத்தை وَمِنْكَ உம்மிடமும் وَمِنْ نُّوْحٍ இன்னும் நூஹிடம் وَّاِبْرٰهِيْمَ இன்னும் இப்ராஹீம் وَمُوْسٰى இன்னும் மூஸா وَعِيْسَى இன்னும் ஈஸா ابْنِ மகன் مَرْيَمَ மர்யமின் وَاَخَذْنَا இன்னும் நாம் வாங்கினோம் مِنْهُمْ அவர்களிடம் مِّیْثَاقًا ஒப்பந்தத்தை غَلِيْظًا ۙ உறுதியான
33:7. வ இத் அகத்னா மினன் னBபிய்யீன மீதாகஹும் வ மின்க வ மின் னூஹி(ன்)வ் வ இBப்ராஹீம வ மூஸா வ ஈஸBப்-னி-மர்யம வ அகத்னா மின்ஹும் மீதாகன் கலீளா
33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக்கூறுமாறு) நபிமார்கள் (அனைவர்களிடமும்), (சிறப்பாக) உம்மிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் நாம் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.
33:8 لِّيَسْئَلَ الصّٰدِقِيْنَ عَنْ صِدْقِهِمْۚ وَاَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا اَ لِيْمًا
لِّيَسْئَلَ விசாரிப்பதற்காக الصّٰدِقِيْنَ உண்மையாளர்களை عَنْ صِدْقِهِمْۚ அவர்களின் உண்மையைப் பற்றி وَاَعَدَّ ஏற்படுத்திஇருக்கிறான் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابًا தண்டனையை اَ لِيْمًا வலிமிகுந்த(து)
33:8. லியஸ்'அலஸ் ஸாதிகீன 'அன் ஸித்கிஹிம்; வ அ'அத்த லில்கா Fபிரீன 'அதாBபன் அலீமா
33:8. உண்மையாளர்களை அவர்களுடைய உண்மையைப் பற்றி அவன் விசாரிப்பதற்காக (இவ்வாறு வாக்குறுதி வாங்கினான்); மேலும், நிராகரிப்பாளர்களுக்கு நோவினைதரும் வேதனையை அவன் சித்தம் செய்திருக்கின்றான்.
33:9 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَآءَتْكُمْ جُنُوْدٌ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا وَّجُنُوْدًا لَّمْ تَرَوْهَا ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا ۚ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اذْكُرُوْا நினைத்துப் பாருங்கள் نِعْمَةَ அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீதுள்ள اِذْ جَآءَتْكُمْ உங்களிடம்வந்தபோது جُنُوْدٌ பல ராணுவங்கள் فَاَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக رِيْحًا காற்றை(யும்) وَّجُنُوْدًا ராணுவங்களையும் لَّمْ تَرَوْهَا ؕ நீங்கள் பார்க்கவில்லை/ அவர்களை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرًا ۚ உற்று நோக்கியவனாக
33:9. யா அய்யுஹல் லதீன ஆமனுத் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜா'அத்கும் ஜுனூதுன் Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹ(ன்)வ் வ ஜுனூதல் லம் தரவ்ஹா; வ கானல் லாஹு Bபிமா தஃமலூன Bபஸீரா
33:9. நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்: உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்தபோது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்றுநோக்குபவனாக இருக்கிறான்.
33:10 اِذْ جَآءُوْكُمْ مِّنْ فَوْقِكُمْ وَمِنْ اَسْفَلَ مِنْكُمْ وَاِذْ زَاغَتِ الْاَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوْبُ الْحَـنَـاجِرَ وَتَظُنُّوْنَ بِاللّٰهِ الظُّنُوْنَا ؕ
اِذْ جَآءُوْ அவர்கள் வந்த சமயத்தில் كُمْ உங்களிடம் مِّنْ فَوْقِكُمْ உங்களுக்கு மேல் புறத்திலிருந்(தும்) وَمِنْ اَسْفَلَ கீழ்ப்புறத்திலிருந்தும் مِنْكُمْ உங்களுக்கு وَاِذْ இன்னும் சமயத்தில் زَاغَتِ சொருகின الْاَبْصَارُ பார்வைகள் وَبَلَغَتِ இன்னும் எட்டின الْقُلُوْبُ உள்ளங்கள் الْحَـنَـاجِرَ தொண்டைகளுக்கு وَتَظُنُّوْنَ நீங்கள் எண்ணினீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது الظُّنُوْنَا ؕ பல எண்ணங்களை
33:10. இத் ஜா'ஊகும் மின் Fபவ்கிகும் வ மின் அஸ்Fபல மின்கும் வ இத் Zஜாகதில் அBப்ஸாரு வ Bபலகதில் குலூBபுல் ஹனாஜிர வ தளுன்னூன Bபில்லாஹிள் ளுனூனா
33:10. உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்தபோது, (உங்களுடைய) பார்வைகள் சாய்ந்து, (உங்களுடைய) இதயங்கள் தொண்டைக் குழி (முடிச்சு)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறான எண்ணங்களை எண்ணிக்கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையை) நினைவு கூருங்கள்.
33:11 هُنَالِكَ ابْتُلِىَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا
هُنَالِكَ அங்குதான் ابْتُلِىَ சோதிக்கப்பட்டார்கள் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் وَزُلْزِلُوْا زِلْزَالًا இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள் شَدِيْدًا கடுமையாக
33:11. ஹுனாலிகBப் துலியல் மு'மினூன வ Zஜுல்Zஜிலூ Zஜில்Zஜாலன் ஷதீதா
33:11. அவ்விடத்தில் நம்பிக்கையாளர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டார்கள்.
33:12 وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اِلَّا غُرُوْرًا
وَاِذْ يَقُوْلُ இன்னும் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்களும் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் مَّا وَعَدَنَا நமக்கு வாக்களிக்கவில்லை اللّٰهُ அல்லாஹ்(வும்) وَرَسُوْلُهٗۤ அவனது தூதரும் اِلَّا தவிர غُرُوْرًا பொய்யை
33:12. வ இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளும் மா வ'அதனல் லாஹு வ ரஸூலுஹூ இல்லா குரூரா
33:12. மேலும் (அச்சமயம்) நயவஞ்சகர்களும், எவர்களின் இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும் - "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை" என்று கூறிய சமயத்தையும் நினைவுகூருங்கள்.
33:13 وَاِذْ قَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ يٰۤـاَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوْا ۚ وَيَسْتَاْذِنُ فَرِيْقٌ مِّنْهُمُ النَّبِىَّ يَقُوْلُوْنَ اِنَّ بُيُوْتَنَا عَوْرَةٌ ۛؕ وَمَا هِىَ بِعَوْرَةٍ ۛۚ اِنْ يُّرِيْدُوْنَ اِلَّا فِرَارًا
وَاِذْ قَالَتْ கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள் طَّآٮِٕفَةٌ ஒரு சாரார் مِّنْهُمْ அவர்களில் يٰۤـاَهْلَ يَثْرِبَ யஸ்ரிப் வாசிகளே! لَا مُقَامَ தங்குவது அறவே முடியாது لَكُمْ உங்களுக்கு فَارْجِعُوْا ۚ ஆகவே, திரும்பிவிடுங்கள் وَيَسْتَاْذِنُ அனுமதிகேட்கின்றனர் فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمُ அவர்களில் النَّبِىَّ நபியிடம் يَقُوْلُوْنَ கூறியவர்களாக اِنَّ நிச்சயமாக بُيُوْتَنَا எங்கள் இல்லங்கள் عَوْرَةٌ ۛؕ பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன وَمَا ஆனால் இல்லை. هِىَ அவை بِعَوْرَةٍ ۛۚ பாதுகாப்பு அற்றதாக اِنْ يُّرِيْدُوْنَ அவர்கள் நாடவில்லை اِلَّا தவிர فِرَارًا விரண்டோடுவதை
33:13. வ இத் காலத் தா'இFபதும் மின்ஹும் யா அஹ்ல யத்ரிBப லா முகாமா லகும் Fபர்ஜி'ஊ; வ யஸ்தாதினு Fபரீகும் மின்ஹுமுன் னBபிய்ய யகூலூன இன்ன Bபுயூதனா 'அவ்ரஹ்; வமா ஹிய Bபி'அவ்ரதின் இ(ன்)ய் யுரீதூன இல்லா Fபிராரா
33:13. மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் (உறுதியாக) நிற்க முடியாது; ஆதலால், நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்" என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: "நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன" என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி (போர்க் களத்திலிருந்து சென்று விட) நபியிடம் அனுமதி கோரினார்கள்; இவர்கள் (போர்க் களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
33:14 وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِّنْ اَقْطَارِهَا ثُمَّ سُٮِٕلُوا الْفِتْنَةَ لَاٰتَوْهَا وَمَا تَلَبَّثُوْا بِهَاۤ اِلَّا يَسِيْرًا
وَلَوْ دُخِلَتْ நுழைந்தால் عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنْ اَقْطَارِ சுற்றுப் புறங்களில் இருந்து هَا அதன் ثُمَّ பிறகு سُٮِٕلُوا அவர்களிடம் கேட்கப்பட்டால் الْفِتْنَةَ குழப்பத்தை لَاٰتَوْ அவர்கள் செய்திருப்பார்கள் هَا அதை وَمَا تَلَبَّثُوْا அவர்கள் தாமதித்திருக்க மாட்டார்கள் بِهَاۤ அதற்கு اِلَّا يَسِيْرًا கொஞ்சமே தவிர
33:14. வ லவ் துகிலத் 'அலய்ஹிம் மின் அக்தாரிஹா தும்ம ஸு'இலுல் Fபித்னத ல ஆதவ்ஹா வமா தலBப்Bபதூ Bபிஹா இல்லா யஸீரா
33:14. மேலும், அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது (எதிரிப் படைகள்) புகுத்தப்பட்டு, பிறகு குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப்பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்திருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிதுநேரமே தவிர தாமதப்படுத்த மாட்டார்கள்.
33:15 وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّوْنَ الْاَدْبَارَ ؕ وَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْــــٴُـوْلًا
وَلَقَدْ திட்டவட்டமாக كَانُوْا عَاهَدُوا ஒப்பந்தம் செய்திருந்தனர் اللّٰهَ அல்லாஹ்விடம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் لَا يُوَلُّوْنَ ஓடமாட்டார்கள் الْاَدْبَارَ ؕ புறமுதுகிட்டு وَكَانَ இருக்கின்றது عَهْدُ ஒப்பந்தம் اللّٰهِ அல்லாஹ்வின் مَسْــــٴُـوْلًا விசாரிக்கப்படுவதாக
33:15. வ லகத் கானூ 'ஆஹதுல் லாஹ மின் கBப்லு லா யுவல் லூனல் அத்Bபார்; வ கான 'அஹ்துல் லாஹி மஸ்'ஊலா
33:15. எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்வுடைய வாக்குறுதி விசாரிக்கப்படக் கூடியதாகும்.
33:16 قُلْ لَّنْ يَّنْفَعَكُمُ الْفِرَارُ اِنْ فَرَرْتُمْ مِّنَ الْمَوْتِ اَوِ الْقَتْلِ وَاِذًا لَّا تُمَتَّعُوْنَ اِلَّا قَلِيْلًا
قُلْ கூறுவீராக! لَّنْ يَّنْفَعَكُمُ உங்களுக்கு அறவே பலனளிக்காது الْفِرَارُ விரண்டோடுவது اِنْ فَرَرْتُمْ நீங்கள் விரண்டோடினால் مِّنَ الْمَوْتِ மரணத்தைவிட்டு اَوِ الْقَتْلِ அல்லது கொல்லப்படுவதை விட்டு وَاِذًا அப்போதும் لَّا تُمَتَّعُوْنَ சுகமளிக்கப்பட மாட்டீர்கள் اِلَّا قَلِيْلًا கொஞ்சமே தவிர
33:16. குல் ல(ன்)ய் யன்Fப'அகுமுல் Fபிராரு இன் Fபரர்தும் மினல் மவ்தி அவில் கத்லி வ இதல் லா துமத்த'ஊன இல்லா கலீலா
33:16. "மரணத்தைவிட்டோ அல்லது கொல்லப்படுவதைவிட்டோ, நீங்கள் விரண்டு ஓடிவீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது; அப்பொழுதும் நீங்கள் வெகுசொற்பமேயன்றி சுகம் கொடுக்கப்படமாட்டீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
33:17 قُلْ مَنْ ذَا الَّذِىْ يَعْصِمُكُمْ مِّنَ اللّٰهِ اِنْ اَرَادَ بِكُمْ سُوْٓءًا اَوْ اَرَادَ بِكُمْ رَحْمَةً ؕ وَلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا
قُلْ கூறுவீராக! مَنْ யார்? ذَا الَّذِىْ يَعْصِمُكُمْ உங்களைப் பாதுகாக்கின்றவர் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வைவிட்டும் اِنْ اَرَادَ நாடினால் بِكُمْ உங்களுக்கு سُوْٓءًا ஒரு தீங்கை اَوْ அல்லது اَرَادَ அவன் நாடினால் بِكُمْ உங்களுக்கு رَحْمَةً ؕ கருணை புரிய وَلَا يَجِدُوْنَ இன்னும் காணமாட்டார்கள் لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَلِيًّا பொறுப்பாளரையோ وَّلَا نَصِيْرًا உதவியாளரையோ
33:17. குல் மன் தல் லதீ யஃஸிமுகும் மினல் லாஹி இன் அராத Bபிகும் ஸூ'அன் அவ் அராத Bபிகும் ரஹ்மஹ்; வலா யஜிதூன லஹும் மின் தூனில் லாஹி வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
33:17. "அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் உங்களுக்கு அருளை நாடினால், (அதை உங்களுக்குத் தடைசெய்பவர் யார்?): அல்லாஹ்வையன்றி தங்களுக்கு (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
33:18 قَدْ يَعْلَمُ اللّٰهُ الْمُعَوِّقِيْنَ مِنْكُمْ وَالْقَآٮِٕلِيْنَ لِاِخْوَانِهِمْ هَلُمَّ اِلَيْنَا ۚ وَلَا يَاْتُوْنَ الْبَاْسَ اِلَّا قَلِيْلًا ۙ
قَدْ திட்டமாக يَعْلَمُ நன்கறிவான் اللّٰهُ அல்லாஹ் الْمُعَوِّقِيْنَ தடுப்பவர்களை(யும்) مِنْكُمْ உங்களில் وَالْقَآٮِٕلِيْنَ சொல்பவர்களையும் لِاِخْوَانِهِمْ தங்கள் சகோதரர்களுக்கு هَلُمَّ வந்துவிடுங்கள் اِلَيْنَا ۚ எங்களிடம் وَلَا يَاْتُوْنَ இன்னும் வரமாட்டார்கள் الْبَاْسَ போருக்கு اِلَّا قَلِيْلًا ۙ குறைவாகவே தவிர
33:18. கத் யஃலமுல் லாஹுல் மு'அவ்விகீன மின்கும் வல்கா'இலீன லி இக்வானிஹிம் ஹலும்ம இலய்னா, வலா யா'தூனல் Bபாஸ இல்லா கலீலா
33:18. உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும், தம் சகோதரர்களை நோக்கி, "நம்மிடம் வந்துவிடுங்கள்" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான்; அன்றியும், அவர்கள் சொற்பமாகவே போர்புரிய வருகிறார்கள்.
33:19 اَشِحَّةً عَلَيْكُمْ ۖۚ فَاِذَا جَآءَ الْخَوْفُ رَاَيْتَهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ تَدُوْرُ اَعْيُنُهُمْ كَالَّذِىْ يُغْشٰى عَلَيْهِ مِنَ الْمَوْتِ ۚ فَاِذَا ذَهَبَ الْخَـوْفُ سَلَقُوْكُمْ بِاَ لْسِنَةٍ حِدَادٍ اَشِحَّةً عَلَى الْخَيْـرِ ؕ اُولٰٓٮِٕكَ لَمْ يُؤْمِنُوْا فَاَحْبَطَ اللّٰهُ اَعْمَالَهُمْ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا
اَشِحَّةً மிகக் கருமிகளாக இருக்கின்றனர் عَلَيْكُمْ ۖۚ உங்கள் விஷயத்தில் فَاِذَا جَآءَ வந்தால் الْخَوْفُ பயம் رَاَيْتَهُمْ அவர்களை நீர் காண்பீர் يَنْظُرُوْنَ அவர்கள் பார்க்கக் கூடியவர்களாக اِلَيْكَ உம் பக்கம் تَدُوْرُ சுழலக்கூடிய நிலையில் اَعْيُنُهُمْ அவர்களது கண்கள் كَالَّذِىْ يُغْشٰى மயக்கம் அடைகின்றவனைப் போல் عَلَيْهِ அவன் மீது مِنَ الْمَوْتِ ۚ மரணத்தால் فَاِذَا ذَهَبَ சென்றுவிட்டால் الْخَـوْفُ பயம் سَلَقُوْكُمْ உங்களுக்கு தொந்தரவு தருகின்றனர் بِاَ لْسِنَةٍ நாவுகளினால் حِدَادٍ கூர்மையான اَشِحَّةً பேராசையுடையவர்களாக عَلَى الْخَيْـرِ ؕ செல்வத்தின் மீது اُولٰٓٮِٕكَ அவர்கள் لَمْ يُؤْمِنُوْا நம்பிக்கை கொள்ளவில்லை فَاَحْبَطَ ஆகவே, பாழ்ப்படுத்தி விட்டான் اللّٰهُ அல்லாஹ் اَعْمَالَهُمْ ؕ அவர்களின் அமல்களை وَكَانَ இருக்கின்றது ذٰ لِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرًا மிக எளிதாக
33:19. அஷிஹ்ஹதன் 'அலய்கும் Fப-இதா ஜா'அல் கவ்Fபு ர அய்தஹும் யன்ளுரூன இலய்க ததூரு அஃயுனுஹும் கல்லதீ யுக்ஷா 'அலய்ஹி மினல் மவ்தி Fப இதா தஹBபல் கவ்Fபு ஸல்கூகும் Bபி அல்ஸினதின் ஹிதாதின் அஷிஹ்ஹதன் 'அலல் கய்ர்; உலா'இக லம் யு'மினூ Fப அஹ்Bபதல் லாஹு அஃமாலஹும்; வ கான தாலிக 'அலல் லாஹி யஸீரா
33:19. (அவர்கள்) உங்கள்மீது கஞ்சத்தனத்தைக் கைக்கொள்கின்றனர்; ஆனால், (பகைவர்கள் பற்றி) பயம் வந்துவிட்டால், மரணத்தினால் மயக்க நிலை அடைந்தவனைப்போன்று அவர்களுடைய கண்கள் சுழல்கின்ற நிலையில், அவர்கள் உம்மைப் பார்த்துக்கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால், அந்தப் பயம் நீங்கிவிட்டாலோ, (போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற) செல்வப் பொருள்மீது பேராசைகொண்டவர்களாய் கூரிய நாவுக் கொண்டு (கடுஞ் சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்; இத்தகையோர் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளவில்லை; ஆகவே, அவர்களுடைய (நற்)செயல்களையும் அல்லாஹ் பாழாக்கிவிட்டான்; இது, அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்.
33:20 يَحْسَبُوْنَ الْاَحْزَابَ لَمْ يَذْهَبُوْا ۚ وَاِنْ يَّاْتِ الْاَحْزَابُ يَوَدُّوْا لَوْ اَنَّهُمْ بَادُوْنَ فِى الْاَعْرَابِ يَسْـاَ لُوْنَ عَنْ اَنْۢبَآٮِٕكُمْ ؕ وَلَوْ كَانُوْا فِيْكُمْ مَّا قٰتَلُوْۤا اِلَّا قَلِيْلًا
يَحْسَبُوْنَ எண்ணுகின்றனர் الْاَحْزَابَ இராணுவங்கள் لَمْ يَذْهَبُوْا ۚ அவர்கள் செல்லவில்லை وَاِنْ يَّاْتِ வந்தால் الْاَحْزَابُ அந்த இராணுவங்கள் يَوَدُّوْا ஆசைப்படுகின்றனர் لَوْ اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் இருந்திருக்க வேண்டுமே بَادُوْنَ கிராமங்களில் فِى الْاَعْرَابِ தாங்கள் கிராமவாசிகளுடன் يَسْـاَ لُوْنَ அவர்கள் விசாரிக்கின்றனர் عَنْ اَنْۢبَآٮِٕكُمْ ؕ உங்கள் செய்திகளைப் பற்றி وَلَوْ كَانُوْا அவர்கள் இருந்தாலும் فِيْكُمْ உங்களுடன் مَّا قٰتَلُوْۤا அவர்கள் போர் புரிந்திருக்க மாட்டார்கள் اِلَّا قَلِيْلًا மிகக் குறைவாகவே தவிர
33:20. யஹ்ஸBபூனல் அஹ்ZஜாBப லம் யத்ஹBபூ வ இ(ன்)ய் யா'தில் அஹ்ZஜாBபு யவத்தூ லவ் அன்னஹும் Bபாதூன Fபில் அஃராBபி யஸலூன 'அன் அம்Bபா'இகும் வ லவ் கானூ Fபீகும் மா காதலூ இல்லா கலீலா
33:20. அந்த (எதிரி)ப் படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ்வெதிரி)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச்சென்று நாட்டுப்புற அரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருக்க வேண்டுமே என்று தான் விரும்புவார்கள்; ஆயினும், அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தால் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிடமாட்டார்கள்.
33:21 لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கிறது لَكُمْ உங்களுக்கு فِىْ رَسُوْلِ தூதரில் اللّٰهِ அல்லாஹ்வின் اُسْوَةٌ முன்மாதிரி حَسَنَةٌ அழகிய(து) لِّمَنْ كَانَ يَرْجُوا ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு اللّٰهَ அல்லாஹ்வையும் وَالْيَوْمَ الْاٰخِرَ மறுமை நாளையும் وَذَكَرَ இன்னும் அவர் நினைவு கூர்வார் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا ؕ அதிகம்
33:21. லகத் கான லகும் Fபீ ரஸூலில் லாஹி உஸ்வதுன் ஹஸனதுல் லிமன் கான யர்ஜுல் லாஹ வல் யவ்மல் ஆகிர வ தகரல் லாஹ கதீரா
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதிநாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
33:22 وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗ وَ صَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَمَا زَادَهُمْ اِلَّاۤ اِيْمَانًـا وَّتَسْلِيْمًا ؕ
وَلَمَّا رَاَ பார்த்தபோது الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் الْاَحْزَابَ ۙ இராணுவங்களை قَالُوْا கூறினார்கள் هٰذَا இது مَا وَعَدَنَا எங்களுக்கு வாக்களித்ததாகும் اللّٰهُ அல்லாஹ்(வும்) وَرَسُوْلُهٗ அவனது தூதரும் وَ صَدَقَ உண்மை கூறினார்(கள்) اللّٰهُ அல்லாஹ்வும் وَرَسُوْلُهٗ அவனது தூதரும் وَمَا زَادَ அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு اِلَّاۤ தவிர اِيْمَانًـا நம்பிக்கை(யையும்) وَّتَسْلِيْمًا ؕ திருப்தியையும்
33:22. வ லம்மா ர அல் மு'மினூனல் அஹ்ZஜாBப காலூ ஹாதா மா வ'அதனல் லாஹு வ ரஸூலுஹ்; வ ஸதகல் லாஹு வ ரஸூலுஹ்; வமா Zஜாதஹும் இல்லா ஈமான(ன்)வ் வ தஸ்லீமா
33:22. அன்றியும், நம்பிக்கையாளர்கள் (எதிரிகளின்) கூட்டுப் படைகளைக் கண்டபோது, "இதுதான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள்; இன்னும், அது அவர்களுடைய நம்பிக்கையையும் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்படுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.
33:23 مِنَ الْمُؤْمِنِيْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَيْهِۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰى نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ يَّنْتَظِرُ ۖ وَمَا بَدَّلُوْا تَبْدِيْلًا ۙ
مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் رِجَالٌ ஆண்களும் صَدَقُوْا உண்மைப்படுத்தினர் مَا எதை عَاهَدُوا ஒப்பந்தம் செய்தார்களோ اللّٰهَ அல்லாஹ்விடம் عَلَيْهِۚ அதன் மீது فَمِنْهُمْ அவர்களில் مَّنْ قَضٰى நிறைவேற்றியவரும் உண்டு نَحْبَهٗ தனது நேர்ச்சையை وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ يَّنْتَظِرُ ۖ எதிர்பார்ப்பவரும் உண்டு وَمَا بَدَّلُوْا تَبْدِيْلًا ۙ இன்னும் அவர்கள் மாற்றிவிடவில்லை
33:23. மினல் மு'மினீன ரிஜாலுன் ஸதகூ மா 'ஆஹதுல் லாஹ 'அலய்ஹி Fபமின்ஹும் மன் களா னஹ்Bபஹூ வ மின்ஹும் மய் யன்தளிரு வமா Bபத்தலூ தBப்தீலா
33:23. நம்பிக்கையாளர்களில் சில மனிதர்கள் இருக்கின்றனர்; எதன் மீது அவர்கள் அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்களோ அதை அவர்கள் உண்மையாக்கினார்கள்; அவர்களில் சிலர் (வீரமரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; (எந்த நிலையிலும்) அவர்கள் (தங்கள் வாக்குறுதியிலிருந்து) சிறிதும் மாறுபடவில்லை.
33:24 لِّيَجْزِىَ اللّٰهُ الصّٰدِقِيْنَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ اِنْ شَآءَ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۚ
لِّيَجْزِىَ இறுதியாக நற்கூலி தருவான் اللّٰهُ அல்லாஹ் الصّٰدِقِيْنَ உண்மையாளர்களுக்கு بِصِدْقِهِمْ அவர்களின் உண்மைக்கு وَيُعَذِّبَ இன்னும் தண்டிப்பான் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களை اِنْ شَآءَ அவன் நாடினால் اَوْ அல்லது يَتُوْبَ பிழை பொறுப்பான் عَلَيْهِمْ ؕ அவர்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا ۚ மகா கருணையாளனாக
33:24. லி யஜ்Zஜியல் ஆஹுஸ் ஸாதிகீன Bபிஸித்கிஹிம் வ யு'அத்திBபல் முனாFபிகீன இன் ஷா'அ அவ் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கான கFபூரர் ரஹீமா
33:24. உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் நயவஞ்சகர்களை வேதனை செய்வான்; அல்லது அவர்களை மன்னிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
33:25 وَرَدَّ اللّٰهُ الَّذِيْنَ كَفَرُوْا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوْا خَيْرًا ؕ وَكَفَى اللّٰهُ الْمُؤْمِنِيْنَ الْقِتَالَ ؕ وَكَانَ اللّٰهُ قَوِيًّا عَزِيْزًا ۚ
وَرَدَّ திருப்பிவிட்டான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்களை بِغَيْظِهِمْ அவர்களது கோபத்துடன் لَمْ يَنَالُوْا அவர்கள் அடையவில்லை خَيْرًا ؕ எந்த நன்மையையும் وَكَفَى பாதுகாத்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை الْقِتَالَ ؕ போரை விட்டும் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் قَوِيًّا மகா வலிமை மிக்கவனாக عَزِيْزًا ۚ மிகைத்தவனாக
33:25. வ ரத்தல் லாஹுல் லதீன கFபரூ Bபிகய்ளிஹிம் லம் யனாலூ கய்ரா; வ கFபல் லாஹுல் மு'மினீனல் கிதால்; வ கானல் லாஹு கவிய்யன் 'அZஜீZஜா
33:25. நிராகரிப்பவர்களை அவர்களுடைய கோபத்தில் (மூழ்கிக் கிடக்குமாறே) அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால், இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை; மேலும், போரில் நம்பிக்கையாளர்களுக்கு (வெற்றியளிக்க) அல்லாஹ் போதுமானவன்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன், (யாவரையும்) மிகைத்தவன்.
33:26 وَاَنْزَلَ الَّذِيْنَ ظَاهَرُوْهُمْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ مِنْ صَيَاصِيْهِمْ وَقَذَفَ فِىْ قُلُوْبِهِمُ الرُّعْبَ فَرِيْقًا تَقْتُلُوْنَ وَتَاْسِرُوْنَ فَرِيْقًا ۚ
وَاَنْزَلَ இறக்கினான் الَّذِيْنَ ظَاهَرُوْ உதவியவர்களை هُمْ அவர்களுக்கு مِّنْ இருந்து اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் مِنْ صَيَاصِيْهِمْ அவர்களின் கோட்டைகளில் இருந்து وَقَذَفَ இன்னும் போட்டான் فِىْ قُلُوْبِهِمُ அவர்களின் உள்ளங்களில் الرُّعْبَ திகிலை فَرِيْقًا ஒரு பிரிவினரை تَقْتُلُوْنَ கொன்றீர்கள் وَتَاْسِرُوْنَ இன்னும் சிறைப்பிடித்தீர்கள் فَرِيْقًا ۚ ஒரு பிரிவினரை
33:26. வ அன்Zஜலல் லதீன ளாஹ ரூஹும் மின் அஹ்லில் கிதாBபி மின் ஸ யாஸீஹிம் வ கதFப Fபீ குலூBபிஹிம்ம் முர் ருஃBப Fபரீகன் தக்துலூன வ தா'ஸிரூன Fபரீகா
33:26. இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவிபுரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்: (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்; இன்னும், ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
33:27 وَاَوْرَثَكُمْ اَرْضَهُمْ وَدِيَارَهُمْ وَ اَمْوَالَهُمْ وَاَرْضًا لَّمْ تَطَــــٴُـوْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرًا
وَاَوْرَثَكُمْ இன்னும் உங்களுக்கு சொந்தமாக்கினான் اَرْضَهُمْ அவர்களின் பூமியை(யும்) وَدِيَارَ இல்லங்களையும் هُمْ அவர்களின் وَ اَمْوَالَهُمْ அவர்களின் செல்வங்களையும் وَاَرْضًا இன்னும் ஒரு பூமியையும் لَّمْ تَطَــــٴُـوْهَا ؕ நீங்கள் மிதிக்காத وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرًا பேராற்றலுடையவனாக
33:27. வ அவ்ரதகும் அர்ளஹும் வ தியாரஹும் வ அம்வாலஹும் வ அர்ளல் லம் தத'ஊஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீரா
33:27. இன்னும், அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்) நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசுகளாக ஆக்கிவிட்டான்; மேலும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
33:28 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلًا
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! قُلْ சொல்வீராக! لِّاَزْوَاجِكَ உமது மனைவிகளுக்கு اِنْ كُنْتُنَّ நீங்கள் இருந்தால் تُرِدْنَ நீங்கள் விரும்புகிறவர்களாக الْحَيٰوةَ வாழ்க்கையை(யும்) الدُّنْيَا உலக وَزِيْنَتَهَا அதன் அலங்காரத்தையும் فَتَعَالَيْنَ வாருங்கள் اُمَتِّعْكُنَّ உங்களுக்கு செல்வம் தருகின்றேன் وَاُسَرِّحْكُنَّ இன்னும் உங்களை விட்டுவிடுகின்றேன் سَرَاحًا جَمِيْلًا அழகிய முறையில்
33:28. யா அய்யுஹன் னBபிய்யு குல் லி அZஜ்வாஜிக இன் குன்துன்ன துரித்னல் ஹயாதத் துன்யா வ Zஜீனதஹா Fபத'ஆலய்ன உமத்திஃகுன்ன வ உஸர்ரிஹ்குன்ன ஸராஹன் ஜமீலா
33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம் நீர் கூறுவீராக! "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கிறேன்."
33:29 وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِيْمًا
وَاِنْ كُنْتُنَّ நீங்கள் இருந்தால் تُرِدْنَ விரும்புகிறவர்களாக اللّٰهَ அல்லாஹ்வை(யும்) وَرَسُوْلَهٗ அவனது தூதரையும் وَالدَّارَ வீட்டையும் الْاٰخِرَةَ மறுமை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَعَدَّ தயார்படுத்தி வைத்துள்ளான் لِلْمُحْسِنٰتِ நல்லவர்களுக்கு مِنْكُنَّ உங்களில் اَجْرًا கூலியை عَظِيْمًا மகத்தான
33:29. வ இன் குன்துன்ன துரித்னல் லாஹ வ ரஸூலஹூ வத் தாரல் ஆகிரத Fப இன்னல் லாஹ அ'அத்த லில் முஹ்ஸினாதி மின் குன்ன அஜ்ஜ்ரன் 'அளீமா
33:29. "ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமை வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான கூலியை நிச்சயமாகச் சித்தம் செய்திருக்கிறான்."
33:30 يٰنِسَآءَ النَّبِىِّ مَنْ يَّاْتِ مِنْكُنَّ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ يُّضٰعَفْ لَهَا الْعَذَابُ ضِعْفَيْنِ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا
يٰنِسَآءَ மனைவிகளே! النَّبِىِّ நபியின் مَنْ யார் يَّاْتِ செய்வாரோ مِنْكُنَّ உங்களில் بِفَاحِشَةٍ மானக்கேடான செயலை مُّبَيِّنَةٍ தெளிவான يُّضٰعَفْ இரு மடங்காக ஆக்கப்படும் لَهَا அவருக்கு الْعَذَابُ வேதனை ضِعْفَيْنِ ؕ இரு மடங்காக وَكَانَ இருக்கின்றது ذٰ لِكَ அது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرًا இலகுவானதாக
33:30. யா னிஸா'அன் னBபிய்யி மய் யாதி மின்குன்ன BபிFபா ஹிஷதிம் முBபய்யினதி(ன்)ய் யுளா'அFப் லஹல் 'அதாBபு ளிஃFபய்ன் வ கான தாலிக 'அலல் லாஹி யஸீர
33:30. நபியுடைய மனைவியரே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடான காரியத்தைச் செய்வீராயின், அவருக்கு (மறுமையில்) இரு மடங்காக வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமேயாகும்!
33:31 وَمَنْ يَّقْنُتْ مِنْكُنَّ لِلّٰهِ وَرَسُوْلِهٖ وَتَعْمَلْ صَالِحًـا نُّؤْتِهَـآ اَجْرَهَا مَرَّتَيْنِۙ وَاَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيْمًا
وَمَنْ யார் يَّقْنُتْ பணிந்து நடப்பாரோ مِنْكُنَّ உங்களில் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு(ம்) وَرَسُوْلِهٖ அவனது தூதருக்கும் وَتَعْمَلْ இன்னும் செய்வாரோ صَالِحًـا நன்மையை نُّؤْتِهَـآ அவருக்கு நாம் கொடுப்போம் اَجْرَهَا அவரது கூலியை مَرَّتَيْنِۙ இருமுறை وَاَعْتَدْنَا لَهَا இன்னும் அவருக்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் رِزْقًا உணவை كَرِيْمًا கண்ணியமான
33:31. வ மய் யக்னுத் மின்குன்ன லில்லாஹி வ ரஸூலிஹீ வ தஃமல் ஸாலிஹன் னு'திஹா அஜ்ரஹா மர்ரதய்னி வ அஃதத்னா லஹா ரிZஜ்கன் கரீமா
33:31. அன்றியும், உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நற்செயல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும், அவருக்குக் கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
33:32 يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ
يٰنِسَآءَ மனைவிகளே! النَّبِىِّ நபியின் لَسْتُنَّ நீங்கள் இல்லை كَاَحَدٍ ஒருவரைப் போன்று مِّنَ النِّسَآءِ பெண்களில் اِنِ اتَّقَيْتُنَّ நீங்கள் அல்லாஹ்வை பயந்து நடந்தால் فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ ஆகவே, மென்மையாகப் பேசாதீர்கள் فَيَـطْمَعَ தப்பாசைப்படுவான் الَّذِىْ فِىْ قَلْبِهٖ எவன்/ தனது உள்ளத்தில் مَرَضٌ நோய் وَّقُلْنَ இன்னும் பேசுங்கள் قَوْلًا பேச்சை مَّعْرُوْفًا ۚ சரியான
33:32. யா னிஸா'அன் னBபிய்யி லஸ்துன்ன க அஹதிம் மினன் னிஸா'இ இனித் தகய்துன்ன Fபலா தக்ளஃன Bபில்கவ்லி Fப யத்ம'அல் லதீ Fபீ கல்Bபிஹீ மரளு(ன்)வ் வ குல்ன கவ்லம் மஃரூFபா
33:32. நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள்; ஏனென்றால், எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அ(த்தகைய)வன் சபலம் கொள்வான்; இன்னும், நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.
33:33 وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ
وَقَرْنَ தங்கியிருங்கள் فِىْ بُيُوْتِكُنَّ உங்கள் இல்லங்களில் وَلَا تَبَـرَّجْنَ அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள் تَبَرُّجَ அலங்காரங்களை வெளிப்படுத்தியதுபோன்று الْجَاهِلِيَّةِ அறியாமைக்காலத்தில் الْاُوْلٰى முந்திய وَاَقِمْنَ நிலைநிறுத்துங்கள்! الصَّلٰوةَ தொழுகையை وَاٰتِيْنَ கொடுங்கள்! الزَّكٰوةَ ஸகாத்தை وَاَطِعْنَ கீழ்ப்படியுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கும் وَرَسُوْلَهٗ ؕ அவனது தூதருக்கும் اِنَّمَا يُرِيْدُ நாடுவதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் لِيُذْهِبَ போக்குவதற்கும் عَنْكُمُ உங்களை விட்டும் الرِّجْسَ அசுத்தத்தை اَهْلَ الْبَيْتِ வீட்டார்களே! وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ முற்றிலும் உங்களை சுத்தப்படுத்துவதற்கும்தான்
33:33. வ கர்ன Fபீ Bபு யூ திகுன்ன வலா தBபர்ரஜ்ன தBபர்ருஜல் ஜாஹிலிய்யதில் ஊலா வ அகிம்னஸ் ஸலாத வ ஆதீனZஜ் Zஜகாத வ அதிஃனல் லாஹ வ ரஸூலஹ்; இன்னமா யுரீதுல் லாஹு லியுத்ஹிBப 'அன்குமுர் ரிஜ்ஸ அஹ்லல் Bபய்தி வ யுதஹ்ஹிரகும் தத்ஹீரா
33:33. (நபியின் மனைவியரே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் ஒப்பனையையும் ஒய்யாரத்தையும்) வெளிப்படுத்தித் திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் வெளிப்படுத்தித் திரியாதீர்கள்; தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.
33:34 وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِىْ بُيُوْتِكُنَّ مِنْ اٰيٰتِ اللّٰهِ وَالْحِكْمَةِؕ اِنَّ اللّٰهَ كَانَ لَطِيْفًا خَبِيْرًا
وَاذْكُرْنَ இன்னும் மனனம் செய்யுங்கள் مَا يُتْلٰى ஓதப்படுகின்றவற்றையும் فِىْ بُيُوْتِكُنَّ உங்கள் இல்லங்களில் مِنْ اٰيٰتِ அதாவது,வசனங்களில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالْحِكْمَةِؕ இன்னும் ஞானத்தை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் لَطِيْفًا மிக கருணையாளனாக خَبِيْرًا ஆழ்ந்தறிபவனாக
33:34. வத்குர்ன மா யுத்லா Fபீ Bபு யூதிகுன்ன மின் ஆயாதில் லாஹி வல் ஹிக்மஹ்; இன்னல் லாஹ கான லதீFபன் கBபீரா
33:34. மேலும், உங்களுடைய வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி) சூட்சுமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள் பற்றி) நன்கறிந்தவன்.
33:35 اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
اِنَّ الْمُسْلِمِيْنَ நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள் وَالْمُسْلِمٰتِ இன்னும் முஸ்லிமான பெண்கள் وَالْمُؤْمِنِيْنَ இன்னும் முஃமினான ஆண்கள் وَالْمُؤْمِنٰتِ இன்னும் முஃமினான பெண்கள் وَالْقٰنِتِيْنَ இன்னும் பணிவான ஆண்கள் وَالْقٰنِتٰتِ இன்னும் பணிவான பெண்கள் وَالصّٰدِقِيْنَ இன்னும் உண்மையான ஆண்கள் وَالصّٰدِقٰتِ இன்னும் உண்மையான பெண்கள் وَالصّٰبِرِيْنَ இன்னும் பொறுமையான ஆண்கள் وَالصّٰبِرٰتِ இன்னும் பொறுமையான பெண்கள் وَالْخٰشِعِيْنَ இன்னும் உள்ளச்சமுடைய ஆண்கள் وَالْخٰشِعٰتِ இன்னும் உள்ளச்சமுடைய பெண்கள் وَالْمُتَصَدِّقِيْنَ இன்னும் தர்மம் செய்கின்ற ஆண்கள் وَ الْمُتَصَدِّقٰتِ இன்னும் தர்மம் செய்கின்ற பெண்கள் وَالصَّآٮِٕمِيْنَ இன்னும் நோன்பாளியான ஆண்கள் وَالصّٰٓٮِٕمٰتِ இன்னும் நோன்பாளியான பெண்கள் وَالْحٰفِظِيْنَ இன்னும் பேணுகின்ற ஆண்கள் فُرُوْجَهُمْ இன்னும் தங்கள் மறைவிடங்களை وَالْحٰـفِظٰتِ இன்னும் பேணுகின்ற பெண்கள் وَالذّٰكِرِيْنَ இன்னும் நினைவு கூரக்கூடிய ஆண்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகம் وَّ الذّٰكِرٰتِ ۙ இன்னும் நினைவு கூரக்கூடிய பெண்கள் اَعَدَّ ஏற்படுத்தி இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ இவர்களுக்கு مَّغْفِرَةً மன்னிப்பை(யும்) وَّاَجْرًا கூலியையும் عَظِيْمًا மகத்தான
33:35. இன்னல் முஸ்லிமீன வல் முஸ்லிமாதி வல் மு'மினீன வல் மு'மினாதி வல்கானிதீன வல்கானிதாதி வஸ்ஸாதிகீன வஸ்ஸாதிகாதி வஸ்ஸாBபிரீன வஸ்ஸாBபிராதி வல்காஷி'ஈன வல்காஷி'ஆதி வல்முதஸத்திகீன வல்முதஸத்திகாதி வஸ்ஸா'இமீன வஸ்ஸா'இமாதி வல்ஹாFபிளீன Fபுரூஜஹும் வல்ஹாFபிளாதி வத் தாகிரீனல் லாஹ கதீர(ன்)வ் வத் தாகிராதி அ'அத்தல் லாஹு லஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
33:35. நிச்சயமாக முஸ்லிமான ஆண்களும், முஸ்லிமான பெண்களும்; நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) வழிப்படும் ஆண்களும், வழிப்படும் பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், உண்மையே பேசும் பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பொறுமையுள்ள பெண்களும்; (அல்லாஹ்வுக்கு) அஞ்சிய ஆண்களும், அஞ்சிய பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்ளும் ஆண்களும், (கற்பைக்) காத்துக்கொள்ளும் பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமதிகம்) தியானம் செய்யும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கிறான்.
33:36 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا
وَمَا كَانَ ஆகுமானதல்ல لِمُؤْمِنٍ நம்பிக்கையுடைய ஆணுக்கு(ம்) وَّلَا مُؤْمِنَةٍ நம்பிக்கையுடைய பெண்ணுக்கும் اِذَا قَضَى முடிவுசெய்துவிட்டால் اللّٰهُ அல்லாஹ்வும் وَرَسُوْلُهٗۤ அவனது தூதரும் اَمْرًا ஒரு காரியத்தை اَنْ يَّكُوْنَ இருப்பது لَهُمُ அவர்களுக்கு الْخِيَرَةُ ஒரு விருப்பம் مِنْ اَمْرِهِمْ ؕ தங்களது காரியத்தில் وَمَنْ யார் يَّعْصِ மாறு செய்வாரோ اللّٰهَ அல்லாஹ்வுக்கும் وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் فَقَدْ திட்டமாக ضَلَّ ضَلٰلًا வழிகெட்டுவிட்டார் مُّبِيْنًا தெளிவாக
33:36. வமா கான லிமு'மினி(ன்)வ் வலா மு'மினதின் இதா களல் லாஹு வ ரஸூலுஹூ அம்ரன் அய் யகூன லஹுமுல் கியரது மின் அம்ரிஹிம்; வ மய் யஃஸில் லாஹ வ ரஸூலஹூ Fபகத் ளல்ல ளலாலம் முBபீனா
33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு - நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறுசெய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்.
33:37 وَاِذْ تَقُوْلُ لِلَّذِىْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِ وَاَنْعَمْتَ عَلَيْهِ اَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِىْ فِىْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِيْهِ وَتَخْشَى النَّاسَ ۚ وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰٮهُ ؕ فَلَمَّا قَضٰى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَىْ لَا يَكُوْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ حَرَجٌ فِىْۤ اَزْوَاجِ اَدْعِيَآٮِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا
وَاِذْ تَقُوْلُ நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! لِلَّذِىْۤ எவருக்கு اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ்(வும்) عَلَيْهِ அவர் மீது وَاَنْعَمْتَ இன்னும் அருள் புரிந்தீர் عَلَيْهِ அவர் மீது اَمْسِكْ வைத்துக்கொள்! عَلَيْكَ உன்னுடன் زَوْجَكَ உன் மனைவியை وَاتَّقِ இன்னும் அஞ்சிக்கொள் ! اللّٰهَ அல்லாஹ்வை وَتُخْفِىْ நீர் மறைக்கிறீர் فِىْ نَفْسِكَ உமது உள்ளத்தில் مَا ஒன்றை اللّٰهُ அல்லாஹ் مُبْدِيْهِ அதை வெளிப்படுத்தக்கூடியவனாக وَتَخْشَى இன்னும் பயப்படுகின்றீர் النَّاسَ ۚ மக்களை وَاللّٰهُ அல்லாஹ்தான் اَحَقُّ மிகத் தகுதியானவன் اَنْ تَخْشٰٮهُ ؕ அவனை நீர் பயப்படுவதற்கு فَلَمَّا قَضٰى முடித்துவிட்ட போது زَيْدٌ சைது مِّنْهَا அவளிடம் وَطَرًا தேவையை زَوَّجْنٰكَهَا அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம் لِكَىْ لَا يَكُوْنَ இருக்கக்கூடாது என்பதற்காக عَلَى الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு حَرَجٌ சிரமம் فِىْۤ اَزْوَاجِ மனைவிகள் விஷயத்தில் اَدْعِيَآٮِٕهِمْ அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின் اِذَا قَضَوْا அவர்கள் முடித்துவிட்டபோது مِنْهُنَّ அவர்களிடம் وَطَرًا ؕ தேவையை وَكَانَ இருக்கின்றது اَمْرُ காரியம் اللّٰهِ அல்லாஹ்வின் مَفْعُوْلًا நடக்கக்கூடியதாக
33:37. வ இத் தகூலு லில்லதீ அன்'அமல் லாஹு 'அலய்ஹி வ அன்'அம்த 'அலய்ஹி அம்ஸிக் 'அலய்க Zஜவ்ஜக வத்தகில் லாஹ வ துக்Fபீ Fபீ னFப்ஸிக மல் லாஹு முBப்தீஹி வ தக்-ஷன் னாஸ வல்லாஹு அஹக்கு அன் தக்-ஷாஹ்; Fபலம்மா களா Zஜய்தும் மின்ஹா வதரன் Zஜவ்வஜ்னா கஹா லிகய் லா யகூன 'அலல் மு'மினீன ஹரஜுன் Fபீ அZஜ்வாஜி அத்'இயா'இஹிம் இதா களவ் மின்ஹுன்ன வதரா; வ கான அம்ருல் லாஹி மFப்'ஊலா
33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது உபகாரம் செய்தீரோ அவரிடத்தில் நீர்: "உம் மனைவியை (விவாக விலக்குச் செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக்கொள்ளும்; மேலும் அல்லாஹ்வை பயந்து கொள்ளும்" என்று சொன்னபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்துவைத்திருந்தீர்; ஆனால், அல்லாஹ் - அவன்தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே, ஜைது (என்பவர்) அவளிடமிருந்து (விவாகரத்து செய்யவேண்டுமென்ற தம்) விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டபொழுது, உமக்கு நாம் அவளைத் திருமணம் செய்துவைத்தோம்; (ஏனெனில்,) நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவியர்கள் விஷயத்தில், அவர்களிலிருந்து (விவாகரத்து செய்யவேண்டுமென்ற தம்) விருப்பத்தை (வளர்ப்புப் பிள்ளைகளான) இவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்களானால், (அவர்களை மண முடித்துக்கொள்வதில்) எவ்விதக் குற்றமும் ஏற்படாமலிருப்பதற்காக; அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்படக்கூடியதாக உள்ளது.
33:38 مَا كَانَ عَلَى النَّبِىِّ مِنْ حَرَجٍ فِيْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ؕ سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرَا ۙ
مَا كَانَ இருக்கவில்லை عَلَى மீது النَّبِىِّ நபியின் مِنْ حَرَجٍ அறவே குற்றம் فِيْمَا فَرَضَ கடமையாக்கியதை اللّٰهُ அல்லாஹ் لَهٗ ؕ தனக்கு سُنَّةَ வழிமுறையைத்தான் اللّٰهِ அல்லாஹ்வின் فِى الَّذِيْنَ خَلَوْا சென்றவர்களில் مِنْ قَبْلُ ؕ இதற்கு முன்னர் وَكَانَ இருக்கின்றது اَمْرُ செயல் اللّٰهِ அல்லாஹ்வின் قَدَرًا தீர்ப்பாக مَّقْدُوْرَا ۙ நிறைவேற்றப்படுகின்ற
33:38. மா கான 'அலன் னBபிய்ய்யி மின் ஹரஜின் Fபீமா Fபரளல் லாஹு லஹூ ஸுன்னதல் லாஹி Fபில் லதீன கலவ் மின் கBப்ல்; வ கான அம்ருல் லாஹி கதரம் மக்தூரா
33:38. நபியின் மீது - அல்லாஹ் அவருக்கு விதியாக்கியதில் (அதை அவர் நிறைவேற்றுவதில்) எந்தக் குற்றமும் இல்லை; இதற்குமுன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும்; இன்னும், அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாகும்.
33:39 اۨلَّذِيْنَ يُبَـلِّـغُوْنَ رِسٰلٰتِ اللّٰهِ وَيَخْشَوْنَهٗ وَلَا يَخْشَوْنَ اَحَدًا اِلَّا اللّٰهَ ؕ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا
اۨلَّذِيْنَ يُبَـلِّـغُوْنَ அவர்கள் எடுத்துச் சொல்வார்கள் رِسٰلٰتِ தூதுச் செய்திகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَخْشَوْنَهٗ இன்னும் அவனை பயப்படுவார்கள் وَلَا يَخْشَوْنَ இன்னும் பயப்பட மாட்டார்கள் اَحَدًا ஒருவரையும் اِلَّا اللّٰهَ ؕ தவிர/அல்லாஹ்வை وَكَفٰى போதுமான(வன்) بِاللّٰهِ அல்லாஹ்வே حَسِيْبًا விசாரணையாளன்
33:39. அல்லதீன யுBபல்லிகூன ரிஸாலாதில் லாஹி வ யக்-ஷவ் னஹூ வலா யக்க்-ஷவ்ன அஹதன் இல்லல் லாஹ்; வ கFபா Bபில்லாஹி ஹஸீBபா
33:39. (இறைத் தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் தூதுச்செய்திகளை (மக்களுக்கு) எத்திவைப்பார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; இன்னும், அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
33:40 مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
مَا كَانَ இருக்கவில்லை مُحَمَّدٌ முஹம்மது اَبَآ தந்தையாக اَحَدٍ ஒருவருக்கும் مِّنْ رِّجَالِكُمْ உங்கள் ஆண்களில் وَلٰـكِنْ என்றாலும் رَّسُوْلَ தூதராகவும் اللّٰهِ அல்லாஹ்வின் وَخَاتَمَ இறுதி முத்திரையாகவும் النَّبِيّٖنَ ؕ நபிமார்களின் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمًا நன்கறிந்தவனாக
33:40. மா கான முஹம்ம்மதுன் அBபா அஹதிம் மிர் ரிஜாலிகும் வ லாகிர் ரஸூலல் லாஹி வ காதமன் னBபிய்யீன்; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
33:40. முஹம்மது உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை) யாகவும் இருக்கின்றார்; மேலும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
33:41 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًا ۙ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اذْكُرُوْا நினைவு கூறுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை ذِكْرًا كَثِيْرًا ۙ மிக அதிகம்
33:41. யா அய்யுஹல் லதீன ஆமனுத் குருல் லாஹ திக்ரன் கதீரா
33:41. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள்.
33:42 وَّ سَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا
وَّ سَبِّحُوْهُ இன்னும் அவனை துதியுங்கள் بُكْرَةً காலையிலும் وَّاَصِيْلًا மாலையிலும்
33:42. வ ஸBப்Bபிஹூஹு Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
33:42. இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
33:43 هُوَ الَّذِىْ يُصَلِّىْ عَلَيْكُمْ وَمَلٰٓٮِٕكَتُهٗ لِيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ؕ وَكَانَ بِالْمُؤْمِنِيْنَ رَحِيْمًا
هُوَ الَّذِىْ அவன்தான் يُصَلِّىْ அருள் புரிவான் -பிரார்த்திப்பார்(கள்) عَلَيْكُمْ உங்கள் மீது وَمَلٰٓٮِٕكَتُهٗ இன்னும் அவனது வானவர்கள் لِيُخْرِجَكُمْ உங்களை அவன் வெளியேற்றுவதற்காக مِّنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ ؕ வெளிச்சத்தின் பக்கம் وَكَانَ அவன் இருக்கிறான் بِالْمُؤْمِنِيْنَ நம்பிக்கை யாளர்கள் மீது رَحِيْمًا மகா கருணையுள்ளவனாக
33:43. ஹுவல் லதீ யுஸல்லீ 'அலய்கும் வ மலா'இகதுஹூ லியுக்ரிஜகும் மினள்ளுலுமாதி இலன்-னூர் வ கான Bபில்மு'மினீன ரஹீமா
33:43. உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் கொண்டுவருவதற்காக உங்கள்மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும், அவனுடைய வானவர்களும் (அவ்வாறே பிரார்த்திக்கின்றனர்); மேலும், அவன் நம்பிக்கையாளர்களின் மீது இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
33:44 تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهٗ سَلٰمٌ ۖۚ وَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِيْمًا
تَحِيَّتُهُمْ அவர்களது முகமன் يَوْمَ يَلْقَوْنَهٗ அவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில் سَلٰمٌ ۖۚ ஸலாம் وَاَعَدَّ இன்னும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான் لَهُمْ அவர்களுக்கு اَجْرًا கூலியை كَرِيْمًا கண்ணியமான
33:44. தஹிய்யதுஹும் யவ்ம யல்கவ்னஹூ ஸலாமு(ன்)வ் வ அ'அத்த லஹும் அஜ்ரன் கரீமா
33:44. அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் அவர்களுக்குரிய காணிக்கை (உங்களுக்கு) "சாந்தி உண்டாவதாக" என்பதாகும்; மேலும், அவர்களுக்காக கண்ணியமான (நற்)கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
33:45 يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنٰكَ நாம் உம்மை அனுப்பினோம் شَاهِدًا சாட்சியாளராக(வும்) وَّمُبَشِّرًا நற்செய்தி கூறுபவராகவும் وَّنَذِيْرًا ۙ அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
33:45. யா அய்யுஹன் னBபிய்யு இன்னா அர்ஸல்னாக ஷாஹித(ன்)வ் வ முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
33:45. நபியே! நாம் நிச்சயமாக உம்மைச் சாட்சியாளராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
33:46 وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا
وَّدَاعِيًا அழைப்பவராகவும் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் بِاِذْنِهٖ அவனது அனுமதிகொண்டு وَسِرَاجًا விளக்காகவும் مُّنِيْرًا பிரகாசிக்கின்ற
33:46. வ தா'இயன் இலல் லாஹி Bபி இத்னிஹீ வ ஸிராஜம் முனீரா
33:46. இன்னும், அல்லாஹ்வின்பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி அழைப்பவராகவும், பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்).
33:47 وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِيْرًا
وَبَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு بِاَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் فَضْلًا அருள் كَبِيْرًا மிகப் பெரிய
33:47. வ Bபஷ்ஷிரில் மு'மினீன Bபி அன்ன்ன லஹும் மினல் லாஹி Fபள்லன் கBபீரா
33:47. எனவே, நம்பிக்கையாளர்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாகப் பேரருள் இருக்கிறதென நன்மாராயம் கூறுவீராக!
33:48 وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ وَدَعْ اَذٰٮهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا
وَلَا تُطِعِ கீழ்ப்படியாதீர் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு(ம்) وَالْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களுக்கும் وَدَعْ இன்னும் விட்டுவிடுவீராக! اَذٰٮهُمْ அவர்களின் தொந்தரவை وَتَوَكَّلْ இன்னும் சார்ந்து இருப்பீராக! عَلَى اللّٰهِ ؕ அல்லாஹ்வை وَكَفٰى போதுமான(வன்) بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا பொறுப்பாளன்
33:48. வ லா துதி'இல் காFபிரீன வல்முனாFபிகீன வ தஃஅதாஹும் வ தவக்கல் 'அலல்லாஹ்; வ கFபா Bபில்லாஹி வகீலா
33:48. அன்றியும், நிராகரிப்போருக்கும் நயவஞ்சகர்களுக்கும் நீர் கீழ்ப்படியவேண்டாம்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக! அல்லாஹ்வையே சார்ந்து இருப்பீராக! பாதுகாவலனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவனாக இருக்கின்றான்.
33:49 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَـكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِيْلًا
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا نَكَحْتُمُ நீங்கள் திருமணம் முடித்தால் الْمُؤْمِنٰتِ நம்பிக்கைகொண்ட பெண்களை ثُمَّ பிறகு طَلَّقْتُمُوْهُنَّ அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَمَسُّوْ நீங்கள் உறவு வைப்பதற்கு هُنَّ அவர்களுடன் فَمَا لَـكُمْ உங்களுக்கு இல்லை عَلَيْهِنَّ அவர்கள் மீது مِنْ عِدَّةٍ எவ்வித இத்தாவும் تَعْتَدُّوْنَهَا ۚ நீங்கள் அதைக் கணக்கிட வேண்டிய فَمَتِّعُوْ செல்வத்தை கொடுங்கள்! هُنَّ அவர்களுக்கு وَسَرِّحُوْ இன்னும் விடுவித்து விடுங்கள் هُنَّ அவர்களை سَرَاحًا விடுவித்தல் جَمِيْلًا அழகிய முறையில்
33:49. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னகஹ்துமுல் மு'மினாதி தும்ம தல்லக்து மூஹுன்ன மின் கBப்லி அன் தமஸ் ஸூஹுன்ன Fபமா லகும் 'அலய்ஹின்ன மின் 'இத்ததின் தஃதத்தூனஹா Fபமத்தி'ஊஹுன்ன வ ஸர்ரி ஹூஹுன்ன ஸராஹன் ஜமீலா
33:49. நம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்னமேயே அவர்களை விவாகரத்து செய்துவிட்டீர்களேயானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய இத்தா (தவணை) ஒன்றும் உங்களுக்கு இல்லை; ஆகவே, அவர்களுக்கு(த் தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்துவிடுங்கள்.
33:50 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحْلَلْنَا لَـكَ اَزْوَاجَكَ الّٰتِىْۤ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَـكَتْ يَمِيْنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىْ هَاجَرْنَ مَعَكَ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِىِّ اِنْ اَرَادَ النَّبِىُّ اَنْ يَّسْتَـنْكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ ؕ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِىْۤ اَزْوَاجِهِمْ وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! اِنَّاۤ நிச்சயமாக நாம் اَحْلَلْنَا ஆகுமாக்கினோம் لَـكَ உமக்கு اَزْوَاجَكَ உமது மனைவிகளை(யும்) الّٰتِىْۤ எவர்கள் اٰتَيْتَ நீர் கொடுத்தீர் اُجُوْرَ திருமணக் கொடைகளை هُنَّ அவர்களின் وَمَا இன்னும் எவர்கள் مَلَـكَتْ சொந்தமாகிய(து) يَمِيْنُكَ உமது வலக்கரம் مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ அல்லாஹ் போரில் கொடுத்தவர்களிலிருந்து عَلَيْكَ உமக்கு وَبَنٰتِ மகள்களையும் عَمِّكَ உமது சாச்சாவின் وَبَنٰتِ மகள்களையும் عَمّٰتِكَ உமது மாமியின் وَبَنٰتِ மகள்களையும் خَالِكَ உமது தாய் மாமாவின் وَبَنٰتِ மகள்களையும் خٰلٰتِكَ உமது காலாவின் الّٰتِىْ எவர்கள் هَاجَرْنَ ஹிஜ்ரா செய்தனர் مَعَكَ உம்முடன் وَامْرَاَةً இன்னும் ஒரு பெண் مُّؤْمِنَةً முஃமினான اِنْ وَّهَبَتْ அன்பளிப்பு செய்தால் نَفْسَهَا தன்னை لِلنَّبِىِّ நபிக்கு اِنْ اَرَادَ நாடினால் النَّبِىُّ நபி(யும்) اَنْ يَّسْتَـنْكِحَهَا அவளை மணமுடிக்க خَالِصَةً பிரத்தியோகமாகும் لَّـكَ உமக்கு மட்டும் مِنْ دُوْنِ அன்றி الْمُؤْمِنِيْنَ ؕ முஃமின்கள் قَدْ திட்டமாக عَلِمْنَا நாம் அறிவோம் مَا فَرَضْنَا நாம் கடமையாக்கியதை عَلَيْهِمْ அவர்கள் மீது فِىْۤ اَزْوَاجِهِمْ அவர்களின் மனைவிமார்களின் விஷயத்தில் وَمَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் لِكَيْلَا يَكُوْنَ இருக்கக் கூடாது என்பதற்காக عَلَيْكَ உமக்கு حَرَجٌ ؕ சிரமம் وَكَانَ اللّٰهُ அல்லாஹ் இருக்கின்றான் غَفُوْرًا மன்னிப்பாளனாக, رَّحِيْمًا பெரும் கருணையாளனாக
33:50. யா அய்யுஹன் னBபிய்யு இன்னா அஹ்லல்னா லக அZஜ்வா ஜகல் லாதீ ஆதய்ய்த உஜூர ஹுன்ன வமா மலகத் யமீனுக மிம்மா அFபா'அல் லாஹு 'அலய்க வ Bபனாதி 'அம்மிக வ Bபனாதி 'அம்மாதிக வ Bபனாதி காலிக வ Bபனாதி காலா திகல் லாதீ ஹாஜர்ன ம'அக வம்ர' அதன் மு'மினதன் இ(ன்)வ் வஹBபத் னFப்ஸஹா லின் னBபிய்யி இன் அராதன் னBபிய்யு அய் யஸ்தன் கிஹஹா காலிஸதன் லக மின் தூனில் மு'மினீன்; கத் 'அலிம்னா மா Fபரள்னா 'அலய்ஹிம் Fபீ அZஜ்வாஜிஹிம் வமா மலகத் அய்மானுஹும் லி கய்லா யகூன 'அலய்க ஹரஜ்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரைக் கொடுத்துவிட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும், உம்முடன் ஹிஜ்ரத் செய்துவந்தார்களே அத்தகைய உம் தந்தையின் சகோதரருடைய மகள்களையும், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்களையும், உம் தாயின் சகோதரருடைய மகள்களையும், உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் நாம் உமக்கு அனுமதித்துள்ளோம்; அன்றியும், நம்பிக்கைகொண்ட ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்துகொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது, மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்றி உமக்கு (மட்டுமே) பிரத்தியேகமாக உள்ளதாகும்; (மற்ற நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும் அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்: உமக்கு ஏதும் சிரமம் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதிவிலக்களித்தோம்); மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.
33:51 تُرْجِىْ مَنْ تَشَآءُ مِنْهُنَّ وَتُـــْٔوِىْۤ اِلَيْكَ مَنْ تَشَآءُ ؕ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ تَقَرَّ اَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَاۤ اٰتَيْتَهُنَّ كُلُّهُنَّ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِىْ قُلُوْبِكُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَلِيْمًا
تُرْجِىْ தள்ளிவைப்பீராக! مَنْ تَشَآءُ நீர் நாடுகின்றவரை مِنْهُنَّ அவர்களில் وَتُـــْٔوِىْۤ சேர்த்துக்கொள்வீராக! اِلَيْكَ உம் பக்கம் مَنْ تَشَآءُ ؕ நீர் நாடுகின்றவரை وَمَنِ ابْتَغَيْتَ இன்னும் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ مِمَّنْ عَزَلْتَ நீர்நீக்கிவிட்டவர்களில் فَلَا جُنَاحَ குற்றம் இல்லை عَلَيْكَ ؕ உம்மீது ذٰ لِكَ இது اَدْنٰٓى சுலபமானதாகும் اَنْ تَقَرَّ குளிர்ச்சி அடைவதற்கு(ம்) اَعْيُنُهُنَّ அவர்களின் கண்கள் وَلَا يَحْزَنَّ அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் وَيَرْضَيْنَ இன்னும் அவர்கள் திருப்தி அடைவதற்கும் بِمَاۤ اٰتَيْتَهُنَّ நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு كُلُّهُنَّ ؕ அவர்கள் எல்லோரும் وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا فِىْ قُلُوْبِكُمْ ؕ உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَلِيْمًا மகா சகிப்பாளனாக
33:51. துர்ஜீ மன் தஷா'உ மின்ஹுன்ன வ து'வீ இலய்க மன் தஷா'உ வ மனிBப்த கய்த மிம்மன் 'அZஜல்த Fபலா ஜுனாஹ 'அலய்க்; தாலிக அத்னா அன் தகர்ர அஃயுனுஹுன்ன வலா யஹ்Zஜன்ன வ யர்ளய்ன Bபிமா ஆதய்தஹுன்ன குல்லுஹுன்ன்; வல் லாஹு யஃலமு மா Fபீ குலூ Bபிகும்; வ கானல் லாஹு 'அலீமன் ஹலீமா
33:51. அவர்களில் நீர் விரும்பியவரை ஒதுக்கி வைக்கலாம்; நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்; நீர் ஒதுக்கிவைத்தவர்களில் எவரையேனும் நீர் (மீண்டும் சேர்த்துக் கொள்ள) நாடினால் (இதில்) உம்மீது குற்றமில்லை; அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும், அவர்கள் ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக்கொண்டு திருப்தி அடைவதற்காகவும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான்; இன்னும், அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
33:52 لَا يَحِلُّ لَـكَ النِّسَآءُ مِنْۢ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَـكَتْ يَمِيْنُكَؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ رَّقِيْبًا
لَا يَحِلُّ ஆகுமாக மாட்டார்கள் لَـكَ உமக்கு النِّسَآءُ பெண்கள் مِنْۢ بَعْدُ பின்னர் وَلَاۤ اَنْ تَبَدَّلَ இன்னும் நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல بِهِنَّ இவர்களுக்கு பதிலாக مِنْ اَزْوَاجٍ (வேறு) பெண்களை وَّلَوْ اَعْجَبَكَ உம்மைக் கவர்ந்தாலும் சரியே! حُسْنُهُنَّ அவர்களின் அழகு اِلَّا தவிர مَا مَلَـكَتْ சொந்தமாக்கிய பெண்கள் يَمِيْنُكَؕ உமது வலக்கரம் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் رَّقِيْبًا கண்காணிப்பவனாக
33:52. லா யஹில்லு லகன் னிஸா'உ மிம் Bபஃது வ லா அன் தBபத்தல Bபிஹின்ன மின் அZஜ்வாஜி(ன்)வ் வ லவ் அஃஜBபக ஹுஸ்னுஹுன்ன இல்லா மா மலகத் யமீனுக்க்; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இர் ரகீBபா
33:52. இவர்களுக்குப் பின்னால், உம் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஆகுமாகமாட்டார்கள்; இன்னும், இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக்கொள்வதும் உமக்கு (ஆகுமானது) இல்லை; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே! மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன்.
33:53 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتَ النَّبِىِّ اِلَّاۤ اَنْ يُّؤْذَنَ لَـكُمْ اِلٰى طَعَامٍ غَيْرَ نٰظِرِيْنَ اِنٰٮهُ وَلٰـكِنْ اِذَا دُعِيْتُمْ فَادْخُلُوْا فَاِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوْا وَلَا مُسْتَاْنِسِيْنَ لِحَـدِيْثٍ ؕ اِنَّ ذٰلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ فَيَسْتَحْىٖ مِنْكُمْ وَاللّٰهُ لَا يَسْتَحْىٖ مِنَ الْحَـقِّ ؕ وَاِذَا سَاَ لْتُمُوْهُنَّ مَتَاعًا فَسْــٴَــــلُوْهُنَّ مِنْ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمْ اَطْهَرُ لِقُلُوْبِكُمْ وَقُلُوْبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمْ اَنْ تُؤْذُوْا رَسُوْلَ اللّٰهِ وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَدْخُلُوْا நுழையாதீர்கள் بُيُوْتَ வீடுகளுக்குள் النَّبِىِّ நபியின் اِلَّاۤ தவிர اَنْ يُّؤْذَنَ அனுமதி கொடுக்கப்பட்டால் لَـكُمْ உங்களுக்கு اِلٰى طَعَامٍ ஓர் உணவின் பக்கம் غَيْرَ نٰظِرِيْنَ எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும் اِنٰٮهُ அது தயாராவதை وَلٰـكِنْ என்றாலும், اِذَا دُعِيْتُمْ நீங்கள் அழைக்கப்பட்டால் فَادْخُلُوْا நுழையுங்கள் فَاِذَا طَعِمْتُمْ நீங்கள் சாப்பிட்டுவிட்டால் فَانْتَشِرُوْا பிரிந்துவிடுங்கள் وَلَا مُسْتَاْنِسِيْنَ புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும் لِحَـدِيْثٍ ؕ பேச்சை اِنَّ ذٰلِكُمْ நிச்சயமாக இது كَانَ இருக்கின்றது يُؤْذِى தொந்தரவு தரக்கூடியதாக النَّبِىَّ நபிக்கு فَيَسْتَحْىٖ அவர்வெட்கப்படுவார் مِنْكُمْ உங்களிடம் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَسْتَحْىٖ வெட்கப்படமாட்டான் مِنَ الْحَـقِّ ؕ சத்தியத்திற்கு وَاِذَا سَاَ لْتُمُوْ நீங்கள் கேட்டால் هُنَّ அவர்களிடம் مَتَاعًا ஒரு பொருளை فَسْــٴَــــلُوْ கேளுங்கள் هُنَّ அவர்களிடம் مِنْ وَّرَآءِ பின்னால் இருந்து حِجَابٍ ؕ திரைக்கு ذٰ لِكُمْ அதுதான் اَطْهَرُ மிகத் தூய்மையானது لِقُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களுக்கு(ம்) وَقُلُوْبِهِنَّ ؕ அவர்களின் உள்ளங்களுக்கும் وَمَا كَانَ ஆகுமானதல்ல لَـكُمْ உங்களுக்கு اَنْ تُؤْذُوْا நீங்கள் தொந்தரவு தருவது(ம்) رَسُوْلَ தூதருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا நீங்கள் மணமுடிப்பதும் اَزْوَاجَهٗ அவருடைய மனைவிகளை مِنْۢ بَعْدِهٖۤ அவருக்குப் பின்னர் اَبَدًا ؕ எப்போதும் اِنَّ ذٰ لِكُمْ நிச்சயமாக/இவை كَانَ இருக்கின்றது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் عَظِيْمًا பெரிய பாவமாக
33:53. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்குலூ Bபு யூதன் னBபிய்யி இல்லா அய் யு'தன லகும் இலா த'ஆமின் கய்ர னாளிரீன இனாஹு வ லாகின் இதா து'ஈதும் Fபத்குலூ Fப இதா த'இம்தும் Fபன்தஷிரூ வலா முஸ்தானிஸீன லிஹதீத்; இன்ன தாலிகும் கான யு'தின் னBபிய்ய Fப யஸ்தஹ்யீ மின்கும் வல்லாஹு லா யஸ்தஹ்யீ மினல் ஹக்க்; வ இதா ஸ அல்துமூஹுன்ன மதா'அன் Fபஸ்'அலூஹுன்ன மி(ன்)வ் வரா'இ ஹிஜாBப்; தாலிகும் அத்ஹரு லிகுலூBபிகும் வ குலூBபிஹின்ன்; வமா கான லகும் அன் து'தூ ரஸூலல் லாஹி வ லா அன் தன்கிஹூ அZஜ்வாஜஹூ மிம் Bபஃதிஹீ அBபதா; இன்ன தாலிகும் கான 'இன்தல் லாஹி 'அளீமா
33:53. நம்பிக்கை கொண்டோரே! உணவின்பால் (அதை உண்ண) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலன்றி, அது சமையலாவதை எதிர்பார்த்து (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும், நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து போய்விடுங்கள்; பேச்சில் மூழ்கி விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாக இருக்கிறது; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார்; ஆனால், உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; (நபியுடைய மனைவியர்களாகிய) அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டு)க் கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்; அதுவே, உங்களுடைய இதயங்களுக்கும், அவர்களுடைய இதயங்களுக்கும் தூய்மையானதாகும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும், அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் (பாவத்தால்) மகத்தானதாக இருக்கிறது.
33:54 اِنْ تُبْدُوْا شَيْئًا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
اِنْ تُبْدُوْا நீங்கள்வெளிப்படுத்தினால் شَيْئًا ஒரு விஷயத்தை اَوْ அல்லது تُخْفُوْهُ அதை நீங்கள் மறைத்தால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் بِكُلِّ شَىْءٍ எல்லா விஷயங்களையும் عَلِيْمًا நன்கறிந்தவனாக
33:54. இன் துBப்தூ ஷய்'அன் அவ் துக்Fபூஹு Fப இன்னல் லாஹ கான Bபிகுல்லி ஷய்'இன் 'அலீமா
33:54. நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கிறான்.
33:55 لَا جُنَاحَ عَلَيْهِنَّ فِىْۤ اٰبَآٮِٕهِنَّ وَلَاۤ اَبْنَآٮِٕهِنَّ وَلَاۤ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اِخْوَانِهِنَّ وَلَاۤ اَبْنَآءِ اَخَوٰتِهِنَّ وَلَا نِسَآٮِٕهِنَّ وَلَا مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ ۚ وَاتَّقِيْنَ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا
لَا جُنَاحَ குற்றம் இல்லை عَلَيْهِنَّ அவர்கள் மீது فِىْۤ اٰبَآٮِٕهِنَّ தங்கள் தந்தைமார்கள் விஷயத்தில் وَلَاۤ اَبْنَآٮِٕهِنَّ இன்னும் தங்கள் ஆண் பிள்ளைகள் وَلَاۤ اِخْوَانِهِنَّ இன்னும் தங்கள் சகோதரர்கள் وَلَاۤ اَبْنَآءِ இன்னும் ஆண் பிள்ளைகள் اِخْوَانِهِنَّ தங்கள் சகோதரர்களின் وَلَاۤ اَبْنَآءِ இன்னும் ஆண் பிள்ளைகள் اَخَوٰتِهِنَّ தங்கள் சகோதரிகளின் وَلَا نِسَآٮِٕهِنَّ இன்னும் தங்கள் பெண்கள் وَلَا مَا مَلَـكَتْ இன்னும் சொந்தமாக்கியவர்கள் اَيْمَانُهُنَّ ۚ தங்கள் வலக்கரங்கள் وَاتَّقِيْنَ பயந்து கொள்ளுங்கள்! اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கின்றான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் شَهِيْدًا நன்கு பார்த்தவனாக
33:55. லா ஜுனாஹ 'அலய்ஹின்ன Fபீ ஆBபா'இஹின்ன வ லா அBப்னா'இஹின்ன வ லா இக்வானிஹின்ன்ன வ லா அBப்னா'இ இக்வானிஹின்ன வ லா அBப்னா'இ அகவாதிஹின்ன வலா னிஸா'இ ஹின்ன வலா மா மலகத் அய்மானுஹுன்ன்; வத்தகீனல் லாஹ்; இன்னல் லாஹ கான 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீதா
33:55. (நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள் தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள்மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
33:56 اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ்வும் وَمَلٰٓٮِٕكَتَهٗ அவனது மலக்குகளும் يُصَلُّوْنَ வாழ்த்துகின்றனர் عَلَى النَّبِىِّ ؕ நபியை يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே صَلُّوْا நீங்களும் வாழ்த்துங்கள்! عَلَيْهِ அவரை وَسَلِّمُوْا இன்னும் அவருக்கு ஸலாம் கூறுங்கள்! تَسْلِيْمًا முகமன்
33:56. இன்னல் லாஹ வ மலா'இ கதஹூ யுஸல்லூன 'அலன் னBபிய்ய்; யா அய்யுஹல் லதீன ஆமனூ ஸல்லூ 'அலய்ஹி வ ஸல்லிமூ தஸ்லீமா
33:56. நிச்சயமாக இந்த நபியின் மீது அல்லாஹ் அருள்புரிகிறான்; வானவர்களும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்; நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
33:57 اِنَّ الَّذِيْنَ يُؤْذُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ لَعَنَهُمُ اللّٰهُ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَاَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِيْنًا
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُؤْذُوْنَ தொந்தரவு தருபவர்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் لَعَنَهُمُ அவர்களை சபிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் فِى الدُّنْيَا இம்மையிலும் وَالْاٰخِرَةِ மறுமையிலும் وَاَعَدَّ இன்னும் ஏற்படுத்தியிருக்கின்றான் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا இழிவுபடுத்துகின்ற
33:57. இன்னல் லதீன யு'தூனல் லாஹ வ ரஸூலஹூ ல'அனஹுமுல் லாஹு Fபித் துன்யா வல் ஆகிரதி வ அ'அத்த லஹும் 'அதாBபம் முஹீனா
33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
33:58 وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا
وَالَّذِيْنَ يُؤْذُوْنَ தொந்தரவு தருபவர்கள் الْمُؤْمِنِيْنَ முஃமினான ஆண்களுக்கு(ம்) وَالْمُؤْمِنٰتِ முஃமினான பெண்களுக்கும் بِغَيْرِ مَا اكْتَسَبُوْا அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு فَقَدِ திட்டமாக احْتَمَلُوْا சுமந்துகொண்டார்கள் بُهْتَانًا அபாண்டமான பழியை(யும்) وَّاِثْمًا பாவத்தையும் مُّبِيْنًا தெளிவான
33:58. வல்லதீன யு'தூனல் மு'மினீன வல் மு'மினாதி Bபிகய்ரி மக் தஸBபூ Fபகதிஹ் தமலூ Bபுஹ்தான(ன்)வ் வ இத்மம் முBபீனா
33:58. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், நம்பிக்கை கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாதவற்றைக் கொண்டு எவர்கள் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
33:59 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! قُلْ கூறுங்கள்! لِّاَزْوَاجِكَ உமது மனைவிமார்களுக்கு(ம்) وَبَنٰتِكَ உமது பெண் பிள்ளைகளுக்கும் وَنِسَآءِ பெண்களுக்கும் الْمُؤْمِنِيْنَ முஃமின்களின் يُدْنِيْنَ அவர்கள் போர்த்திக்கொள்ளும்படி عَلَيْهِنَّ தங்கள் மீது مِنْ جَلَابِيْبِهِنَّ ؕ தங்கள் பர்தாக்களை ذٰ لِكَ இது اَدْنٰٓى மிக சுலபமானதாகும் اَنْ يُّعْرَفْنَ அவர்கள் அறியப்படுவதற்கு فَلَا يُؤْذَيْنَ ؕ ஆகவே, அவர்கள் தொந்தரவுக்கு ஆளாக மாட்டார்கள் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا பெரும் கருணையாளனாக
33:59. யா அய்யுஹன் னBபிய்யு குல் லி அZஜ்வாஜிக வ Bபனாதிக வ னிஸா'இல் மு'மினீன யுத்னீன 'அலய்ஹின்ன மின் ஜலாBபீ Bபிஹின்ன்; தாலிக அத்னா அய் யுஃரFப்ன Fபலா யு'தய்ன்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தங்கள் மீது தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்!
33:60 لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ الْمُنٰفِقُوْنَ وَ الَّذِيْنَ فِى قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْمُرْجِفُوْنَ فِى الْمَدِيْنَةِ لَـنُغْرِيَـنَّكَ بِهِمْ ثُمَّ لَا يُجَاوِرُوْنَكَ فِيْهَاۤ اِلَّا قَلِيْلًا ۛۚ ۖ
لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ விலகவில்லை என்றால் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்களு(ம்) وَ الَّذِيْنَ எவர்கள் فِى قُلُوْبِهِمْ مَّرَضٌ தங்கள் உள்ளங்களில் நோய் وَّالْمُرْجِفُوْنَ கெட்ட விஷயங்களில் ஈடுபடுபவர்களும் فِى الْمَدِيْنَةِ மதீனாவில் لَـنُغْرِيَـنَّكَ உம்மை தூண்டிவிடுவோம் بِهِمْ அவர்கள் மீது ثُمَّ பிறகு لَا يُجَاوِرُوْنَكَ உம்முடன் வசிக்க மாட்டார்கள் فِيْهَاۤ அதில் اِلَّا தவிர قَلِيْلًا ۛۚ ۖ குறைவாகவே
33:60. ல'இல் லம் யன்தஹில் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)வ் வல்முர் ஜிFபூன Fபில் மதீனதி லனுக்ரி யன்னக Bபிஹிம் தும்ம லா யுஜாவிரூனக Fபீஹா இல்லா கலீலா
33:60. நயவஞ்சகர்களும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச் செயல்களிலிருந்து) விலகிக்கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக நாம் உம்மை நிச்சயமாகச் சாட்டுவோம்; பிறகு, அவர்கள் வெகு சொற்ப (கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக வசித்திருக்கமாட்டார்கள்.
33:61 مَّلْـعُوْنِيْنَ ۛۚ اَيْنَمَا ثُقِفُوْۤا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِيْلًا
مَّلْـعُوْنِيْنَ ۛۚ அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் اَيْنَمَا ثُقِفُوْۤا அவர்கள் எங்கு காணப்பட்டாலும் اُخِذُوْا அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும் وَقُتِّلُوْا تَقْتِيْلًا இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்
33:61. மல்'ஊனீன அய்னமா துகிFபூ உகிதூ வ குத்திலூ தக்தீலா
33:61. அத்தகையதீயவர்கள் சபிக்கப்பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும், கொன்றொழிக்கப்படுவார்கள்.
33:62 سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا
سُنَّةَ நடைமுறைதான் اللّٰهِ அல்லாஹ்வின் فِى الَّذِيْنَ خَلَوْا சென்றவர்களில் مِنْ قَبْلُۚ இதற்கு முன்னர் وَلَنْ تَجِدَ அறவே நீர் காணமாட்டீர் لِسُنَّةِ நடைமுறையில் اللّٰهِ அல்லாஹ்வின் تَبْدِيْلًا எவ்வித மாற்றத்தையும்
33:62. ஸுன்னதல் லாஹி Fபில் லதீன கலவ் மின் கBப்லு வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீலா
33:62. அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்குமுன் சென்றவர்களிலும் இதுவேதான்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
33:63 يَسْــٴَــلُكَ النَّاسُ عَنِ السَّاعَةِؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِؕ وَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ قَرِيْبًا
يَسْــٴَــلُكَ உம்மிடம் கேட்கின்றனர் النَّاسُ மக்கள் عَنِ السَّاعَةِؕ மறுமையைப் பற்றி قُلْ கூறுவீராக! اِنَّمَا عِلْمُهَا அதன் அறிவெல்லாம் عِنْدَ اللّٰهِؕ அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது وَمَا يُدْرِيْكَ உமக்குத் தெரியுமா? لَعَلَّ السَّاعَةَ تَكُوْنُ மறுமை இருக்கக்கூடும் قَرِيْبًا சமீபமாக
33:63. யஸ்'அலுகன் னாஸு 'அனிஸ் ஸா'அதி குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹ்; வமா யுத்ரீக ல'அல்லஸ் ஸா'அத தகூனு கரீBபா
33:63. (நியாயத் தீர்ப்புக்குரிய) மறுமைநாளைப் பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; "அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது" என்று நீர் கூறுவீராக! மறுமைநாள் சமீபத்திலும் வந்துவிடலாம் என உமக்கு எது அறிவித்துக் கொடுக்கும்?
33:64 اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِيْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِيْرًا ۙ
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَعَنَ சபித்தான் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை وَاَعَدَّ ஏற்படுத்தினான் لَهُمْ அவர்களுக்கு سَعِيْرًا ۙ கொழுந்து விட்டெரியும் நரகத்தை
33:64. இன்னல் லாஹ ல'அனல் காFபிரீன வ அ'அத்த லஹும் ஸ'ஈரா
33:64. நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறான்.
33:65 خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ۚ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۚ
خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள் فِيْهَاۤ அதில் اَبَدًا ۚ எப்போதும் لَا يَجِدُوْنَ காணமாட்டார்கள் وَلِيًّا பொறுப்பாளரையோ وَّلَا نَصِيْرًا ۚ உதவியாளரையோ
33:65. காலிதீன Fபீஹா அBபதா, லா யஜிதூன வலிய்ய(ன்)வ் வலா னஸீரா
33:65. அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்குபவர்கள், தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
33:66 يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا
يَوْمَ நாளில் تُقَلَّبُ புரட்டப்படுகின்ற وُجُوْهُهُمْ அவர்களது முகங்கள் فِى النَّارِ நெருப்பில் يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَاَطَعْنَا இன்னும் நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! الرَّسُوْلَا ரசூலுக்கு
33:66. யவ்ம துகல்லBபு வுஜூஹுஹும் Fபின் னாரி யகூலூன யா லய்தனா அதஃனல் லாஹ வ அதஃனர் ரஸூலா
33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
33:67 وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா! اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اَطَعْنَا கீழ்ப்படிந்தோம் سَادَتَنَا எங்கள் தலைவர்களுக்கு(ம்) وَكُبَرَآءَنَا எங்கள் பெரியோருக்கும் فَاَضَلُّوْنَا السَّبِيْلَا அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்
33:67. வ காலூ ரBப்Bபனா இன்னா அதஃனா ஸாததனா வ குBபரா'அனா Fப அளல்லூனஸ் ஸBபீலா
33:67. "எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
33:68 رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا
رَبَّنَاۤ எங்கள் இறைவா! اٰتِهِمْ அவர்களுக்கு கொடு! ضِعْفَيْنِ இரு மடங்கு مِنَ الْعَذَابِ வேதனையை وَالْعَنْهُمْ இன்னும் அவர்களை சபிப்பாயாக! لَعْنًا சாபத்தால் كَبِيْرًا பெரிய
33:68. ரBப்Bபனா ஆதிஹிம் ளிஃFபய் னி மினல் 'அதாBபி வல்'அன்ஹும் லஃ னன் கBபீரா
33:68. "எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக!" (என்பர்).
33:69 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ اٰذَوْا مُوْسٰى فَبَـرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ؕ وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِيْهًا ؕ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَكُوْنُوْا நீங்கள் ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ اٰذَوْا தொந்தரவு தந்தவர்களைப் போன்று مُوْسٰى மூஸாவிற்கு فَبَـرَّاَهُ அவரை நிரபராதியாக்கினான் اللّٰهُ அல்லாஹ் مِمَّا قَالُوْا ؕ அவர்கள் கூறியதிலிருந்து وَكَانَ அவர் இருந்தார் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَجِيْهًا ؕ மிகசிறப்பிற்குரியவராக
33:69. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனூ கல்ல தீன ஆதவ் மூஸா Fப Bபர்ர அஹுல் லாஹு மிம்ம காலூ; வ கான 'இன்தல் லாஹி வஜீஹா
33:69. நம்பிக்கை கொண்டவர்களே! மூஸாவைப் (பற்றி அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; அப்போது, அவர்கள் கூறியதைவிட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமாக்கிவிட்டான்; மேலும், அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவராகவே இருந்தார்.
33:70 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَقُوْلُوْا இன்னும் பேசுங்கள் قَوْلًا பேச்சை سَدِيْدًا ۙ நேர்மையான
33:70. யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வ கூலூ கவ்லன் ஸதீதா
33:70. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
33:71 يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا
يُّصْلِحْ அவன்சீர்படுத்துவான் لَـكُمْ உங்களுக்கு اَعْمَالَـكُمْ உங்கள் அமல்களை وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு ذُنُوْبَكُمْؕ உங்கள் பாவங்களை وَمَنْ யார் يُّطِعِ கீழ்ப்படிகின்றாரோ اللّٰهَ அல்லாஹ்வுக்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் فَقَدْ திட்டமாக فَازَ வெற்றிபெறுவார் فَوْزًا வெற்றி عَظِيْمًا மகத்தான
33:71. யுஸ்லிஹ் லகும் அஃமாலகும் வ யக்Fபிர் லகும் துனூBபகும்; வ மய் யுதி'இல் லாஹ வ ரஸூலஹூ Fபகத் FபாZஜ Fபவ்Zஜன் 'அளீமா
33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கிவைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ, அவர் மகத்தான வெற்றிகொண்டு விட்டார்.
33:72 اِنَّا عَرَضْنَا الْاَمَانَةَ عَلَى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالْجِبَالِ فَاَبَيْنَ اَنْ يَّحْمِلْنَهَا وَاَشْفَقْنَ مِنْهَا وَ حَمَلَهَا الْاِنْسَانُؕ اِنَّهٗ كَانَ ظَلُوْمًا جَهُوْلًا ۙ
اِنَّا நிச்சயமாக நாம் عَرَضْنَا சமர்ப்பித்தோம் الْاَمَانَةَ அமானிதத்தை عَلَى السَّمٰوٰتِ வானங்கள் மீது وَالْاَرْضِ இன்னும் பூமி وَالْجِبَالِ இன்னும் மலைகள் فَاَبَيْنَ அவைமறுத்துவிட்டன اَنْ يَّحْمِلْنَهَا அதை சுமப்பதற்கு وَاَشْفَقْنَ இன்னும் அவை பயந்தன مِنْهَا அதனால் وَ حَمَلَهَا அதை சுமந்து கொண்டான் الْاِنْسَانُؕ மனிதன் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் ظَلُوْمًا அநியாயக்காரனாக جَهُوْلًا ۙ அறியாதவனாக
33:72. இன்னா 'அரள்னல் அமானத 'அலஸ் ஸமாவாதி வல்'அர்ளி வல் ஜிBபாலி Fப அBபய்ன அய் யஹ்மில் னஹா வ அஷ்Fபக்ன மின்ஹா வ ஹமலஹல் இன்ஸானு இன்னஹூ கான ளலூமன் ஜஹூலா
33:72. நிச்சயமாக வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது அமானிதத்தை (சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம்; ஆனால், அதைச் சுமந்துகொள்ள அவை மறுத்தன; அதைப் பற்றி அவை அஞ்சின; ஆனால், மனிதன் அதைச் சுமந்தான்; நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.
33:73 لِّيُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
لِّيُعَذِّبَ வேதனை செய்வதற்காக اللّٰهُ அல்லாஹ் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகமுடைய ஆண்களை(யும்) وَالْمُنٰفِقٰتِ நயவஞ்சகமுடைய பெண்களையும் وَالْمُشْرِكِيْنَ இணைவைக்கின்ற ஆண்களையும் وَالْمُشْرِكٰتِ இணைவைக்கின்ற பெண்களையும் وَيَتُوْبَ மன்னிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் عَلَى الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களை وَالْمُؤْمِنٰتِؕ நம்பிக்கை கொண்ட பெண்களை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا பெரும் கருணையாளனாக
33:73. லியு 'அத்திBபல் லாஹுல் முனாFபிகீன வல் முனாFபிகாதி வல்முஷ்ரிகீன வல் முஷ்ரிகாதி வ யதூBபல் லாஹு 'அலல் மு'மினீன வல்மு'மினாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
33:73. எனவே, (இவ்வமானிதத்திற்கு மாறுசெய்யும்) நயவஞ்சகர்களான ஆண்களையும், நயவஞ்சகர்களான பெண்களையும்; இணைவைப்பவர்களான ஆண்களையும், இணைவைப்பவர்களான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால், இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களான ஆண்களையும், நம்பிக்கையாளர்களான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான்; அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையவன்.