டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 15. ஸூரத்துல் ஹிஜ்ர்(மலைப்பாறை)
மக்கீ, வசனங்கள்: 99
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
15:1 الۤرٰ تِلْكَ اٰيٰتُ الْـكِتٰبِ وَقُرْاٰنٍ مُّبِيْنٍ
الۤرٰ அலிஃப்; லாம்; றா تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْـكِتٰبِ வேதங்களின் وَقُرْاٰنٍ இன்னும் குர்ஆனின் مُّبِيْنٍ தெளிவான(து)
15:1. அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபி வ குர்ஆ-னிம் முBபீன்
15:1. அலிஃப், லாம், றா. (நபியே!) இவை வேதத்தினுடைய - இன்னும், தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும்.
15:2 رُبَمَا يَوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ كَانُوْا مُسْلِمِيْنَ
رُبَمَا يَوَدُّ பெரிதும் விரும்புவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَوْ كَانُوْا தாங்கள் இருந்திருக்க வேண்டுமே! مُسْلِمِيْنَ முஸ்லிம்களாக
15:2. ருBபமா யவத்துல் லதீன கFபரூ லவ் கானூ முஸ்லிமீன்
15:2. தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே என்று நிராகரித்தவர்கள் சில நேரங்களில் ஆசைப்படுவார்கள்.
15:3 ذَرْهُمْ يَاْكُلُوْا وَيَتَمَتَّعُوْا وَيُلْهِهِمُ الْاَمَلُ فَسَوْفَ يَعْلَمُوْنَ
ذَرْهُمْ விடுவீராக/அவர்களை يَاْكُلُوْا அவர்கள் புசிக்கட்டும் وَيَتَمَتَّعُوْا இன்னும் அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும் وَيُلْهِهِمُ இன்னும் மறக்கடிக்கட்டும்/அவர்களை الْاَمَلُ ஆசை فَسَوْفَ يَعْلَمُوْنَ (பின்னர்) அறிவார்கள்
15:3. தர்ஹும் யாகுலூ வ யதமத்த'ஊ வ யுல்ஹிஹிமுல் அமலு Fபஸவ்Fப யஃலமூன்
15:3. (இம்மையில் தம் விருப்பம்போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக்கொண்டும் இருக்க அவர்களை விட்டுவிடுவீராக! அவர்களுடைய வீணான ஆசை (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கிவிட்டது; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
15:4 وَمَاۤ اَهْلَـكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُوْمٌ
وَمَاۤ اَهْلَـكْنَا நாம் அழிக்கவில்லை مِنْ قَرْيَةٍ எவ்வூரையும் اِلَّا தவிர وَلَهَا அதற்கு كِتَابٌ தவணை مَّعْلُوْمٌ குறிப்பிட்ட
15:4. வ மா அஹ்லக்னா மின் கர்யதின் இல்லா வ லஹா கிதாBபும் மஃலூம்
15:4. எந்த ஊரையும் அதற்குக் குறிப்பிட்ட காலத்தவணையில் அன்றி நாம் அழிக்கவில்லை.
15:5 مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَاْخِرُوْنَ
مَا تَسْبِقُ முந்த மாட்டா(ர்க)ள் مِنْ اُمَّةٍ எந்த சமுதாயமும் اَجَلَهَا தங்கள் தவணையை وَمَا يَسْتَاْخِرُوْنَ இன்னும் பிந்தமாட்டார்கள்
15:5. மா தஸ்Bபிகு மின் உம்மதின் அஜலஹா வமா யஸ்தாகிரூன்
15:5. எந்த ஒரு கூட்டத்தாரும் தமக்குரிய தவணைக்கு முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
15:6 وَ قَالُوْا يٰۤاَيُّهَا الَّذِىْ نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌؕ
وَ قَالُوْا கூறுகின்றனர் يٰۤاَيُّهَا ஓ! الَّذِىْ எவர் نُزِّلَ இறக்கப்பட்டது عَلَيْهِ அவர்மீது الذِّكْرُ அறிவுரை اِنَّكَ நிச்சயமாக நீர் لَمَجْنُوْنٌؕ பைத்தியக்காரர்தான்
15:6. வ காலூ யா அய்யுஹல் லதீ னுZஜ்Zஜில 'அலய்ஹித் திக்ரு இன்னக லமஜ்னூன்
15:6. "(நினைவூட்டும்) வேதம் அருளப்பட்ட(தாகக் கூறுபவரே)! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்" என்றும் கூறுகின்றனர்.
15:7 لَوْ مَا تَاْتِيْنَا بِالْمَلٰۤٮِٕكَةِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
لَوْ مَا تَاْتِيْنَا நீர்வரலாமே/நம்மிடம் بِالْمَلٰۤٮِٕكَةِ வானவர்களைக் கொண்டு اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
15:7. லவ் மா தாதீனா Bபில் மலா'இகதி இன் குன்த மினஸ் ஸாதிகீன்
15:7. "நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் வானவர்களைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.)
15:8 مَا نُنَزِّلُ الْمَلٰۤٮِٕكَةَ اِلَّا بِالْحَـقِّ وَمَا كَانُوْۤا اِذًا مُّنْظَرِيْنَ
مَا نُنَزِّلُ இறக்கமாட்டோம் الْمَلٰۤٮِٕكَةَ வானவர்களை اِلَّا தவிர بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டே وَمَا كَانُوْۤا இருக்கமாட்டார்கள் اِذًا அப்போது مُّنْظَرِيْنَ அவகாசமளிக்கப்படுபவர்களாக
15:8. மா னுனZஜ்Zஜிலுல் மலா'இ கத இல்லா Bபில்ஹக்கி வமா கானூ இதம் முன்ளரீன்
15:8. நாம் வானவர்களை உண்மையைக் கொண்டே அல்லாமல் இறக்குவதில்லை; அப்படி இறக்கப்படும் போது அந்நிராகரிப்பவர்கள் அவகாசம் கொடுக்கப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.
15:9 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نَزَّلْنَا இறக்கினோம் الذِّكْرَ அறிவுரையை وَ இன்னும் اِنَّا நிச்சயமாக நாம் لَهٗ அதை لَحٰـفِظُوْنَ பாதுகாப்பவர்கள்
15:9. இன்னா னஹ்னு னZஜல்னத் திக்ர வ இன்னா லஹூ லஹா Fபிளூன்
15:9. நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ் வேதத்தை (உம்மீது) இறக்கிவைத்தோம்; நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம்.
15:10 وَلَـقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِىْ شِيَعِ الْاَوَّلِيْنَ
وَلَـقَدْ اَرْسَلْنَا திட்டமாக அனுப்பினோம் مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فِىْ شِيَعِ பிரிவுகளில் الْاَوَّلِيْنَ முன்னோர்களின்
15:10. வ லகத் அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ ஷிய'இல் அவ்வலீன்
15:10. (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் முந்திய பல கூட்டத்தாரிலும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்.
15:11 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَمَا வருவதில்லை يَاْتِيْهِمْ அவர்களிடம் مِّنْ رَّسُوْلٍ எந்த ஒரு தூதரும் اِلَّا தவிர كَانُوْا இருந்தனர் بِهٖ அவரை يَسْتَهْزِءُوْنَ பரிகசிப்பார்கள்
15:11. வமா யாதீஹிம் மிர் ரஸூலின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
15:11. எனினும், அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தாலும், அவரை அவர்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை.
15:12 كَذٰلِكَ نَسْلُكُهٗ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَۙ
كَذٰلِكَ அவ்வாறே نَسْلُكُهٗ புகுத்துகிறோம்/அதை فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الْمُجْرِمِيْنَۙ குற்றவாளிகள்
15:12. கதாலிக னஸ்லுகுஹூ Fபீ குலூBபில் முஜ்ரிமீன்
15:12. இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்திவிடுகிறோம்.
15:13 لَا يُؤْمِنُوْنَ بِهٖۚ وَقَدْ خَلَتْ سُنَّةُ الْاَوَّلِيْنَ
لَا يُؤْمِنُوْنَ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِهٖۚ இவரை وَقَدْ خَلَتْ சென்றுவிட்டது سُنَّةُ வழிமுறை الْاَوَّلِيْنَ முன்னோரின்
15:13. லா யு'மினூன Bபிஹீ வ கத் கலத் ஸுன்னதுல் அவ்வலீன்
15:13. அவர்கள் (வேதமான) இதன் மீது நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்; அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நடைமுறை (இறுதியில் அவர்கள் அழிவும்) திட்டமாகச் சென்றேவிட்டது.
15:14 وَلَوْ فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوْا فِيْهِ يَعْرُجُوْنَۙ
وَلَوْ فَتَحْنَا நாம் திறந்தால் عَلَيْهِمْ அவர்கள் மீது بَابًا ஒரு வாசலை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் فَظَلُّوْا பகலில் அவர்கள் ஆகினர் فِيْهِ அதில் يَعْرُجُوْنَۙ ஏறுபவர்களாக
15:14. வ லவ் Fபதஹ்னா 'அலய்ஹிம் BபாBபம் மினஸ் ஸமா'இ Fபளலூ Fபீஹி யஃருஜூன்
15:14. இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்துவிட்டு, அவர்கள் அதில் (நாள் முழுவதும் தொடர்ந்து) ஏறிக்கொண்டிருந்தாலும் (அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்).
15:15 لَـقَالُوْۤا اِنَّمَا سُكِّرَتْ اَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُوْرُوْنَ
لَـقَالُوْۤا நிச்சயம் அவர்கள் கூறுவர் اِنَّمَا سُكِّرَتْ மயக்கப்பட்டு விட்டன اَبْصَارُنَا எங்கள் கண்கள் بَلْ இல்லை نَحْنُ நாங்கள் قَوْمٌ மக்கள் مَّسْحُوْرُوْنَ சூனியம் செய்யப்பட்டவர்கள்
15:15. லகாலூ இன்னமா ஸுக்கிரத் அBப்ஸாருனா Bபல் னஹ்னு கவ்மும் மஸ்ஹூரூன்
15:15. (பார்க்க முடியாது, தடுக்கப்பட்டு) "மயக்கப்பட்டதெல்லாம் எங்களுடைய பார்வைகள்தான்; (அது மட்டும்) அல்ல, நாங்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு கூட்டமாகிவிட்டோம்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
15:16 وَلَـقَدْ جَعَلْنَا فِى السَّمَآءِ بُرُوْجًا وَّزَيَّـنّٰهَا لِلنّٰظِرِيْنَۙ
وَلَـقَدْ திட்டவட்டமாக جَعَلْنَا அமைத்தோம் فِى السَّمَآءِ بُرُوْجًا வானத்தில்/பெரிய நட்சத்திரங்களை وَّزَيَّـنّٰهَا இன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றை لِلنّٰظِرِيْنَۙ பார்ப்பவர்களுக்கு
15:16. வ லகத் ஜ'அல்னா Fபிஸ்ஸமா'இ Bபுரூஜ(ன்)வ் வ Zஜய்யன்னாஹா லின்னாளிரீன்
15:16. வானத்தில் கிரகங்களை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.
15:17 وَحَفِظْنٰهَا مِنْ كُلِّ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ
وَحَفِظْنٰهَا இன்னும் பாதுகாத்தோம்/அதை مِنْ எல்லாம் كُلِّ விட்டு شَيْطٰنٍ ஷைத்தான் رَّجِيْمٍۙ விரட்டப்பட்டவன்
15:17. வ ஹFபிள்னாஹா மின் குல்லி ஷய்தானிர் ரஜீம்
15:17. விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் நாம் அவற்றைப் பாதுகாத்தோம்.
15:18 اِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَاَ تْبَعَهٗ شِهَابٌ مُّبِيْنٌ
اِلَّا எனினும் مَنِ எவன் اسْتَرَقَ السَّمْعَ ஒட்டுக் கேட்பான் فَاَ تْبَعَهٗ பின்தொடர்ந்தது / அவனை شِهَابٌ ஓர் எரி நட்சத்திரம் مُّبِيْنٌ தெளிவானது
15:18. இல்லா மனிஸ் தரகஸ் ஸம்'அ Fப அத்Bப'அஹூ ஷிஹாBபும் முBபீன்
15:18. திருட்டுத்தனமாக (ஒட்டுக்) கேட்கும் ஷைத்தானைத் தவிர; (அப்போது) பிரகாசமான தீப்பந்தம் அவனை (விரட்டி)ப் பின்தொடரும்.
15:19 وَالْاَرْضَ مَدَدْنٰهَا وَاَلْقَيْنَا فِيْهَا رَوَاسِىَ وَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ شَىْءٍ مَّوْزُوْنٍ
وَالْاَرْضَ இன்னும் பூமி مَدَدْنٰهَا விரித்தோம்/அதை وَاَلْقَيْنَا இன்னும் நிறுவினோம் فِيْهَا அதில் رَوَاسِىَ அசையாத மலைகளை وَاَنْۢبَتْنَا இன்னும் முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் مِنْ كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் مَّوْزُوْنٍ நிறுக்கப்படும்
15:19. வல் அர்ள மதத்னாஹா வ அல்கய்னா Fபீஹா ரவாஸிய வ அம்Bபத்னா Fபீஹா மின் குல்லி ஷய்'இம் மவ்Zஜூன்
15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான (அசையா) மலைகளை நிலைப்படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.
15:20 وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ وَمَنْ لَّسْتُمْ لَهٗ بِرٰزِقِيْنَ
وَجَعَلْنَا அமைத்தோம் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் مَعَايِشَ வாழ்வாதாரங்களை وَمَنْ இன்னும் எவர் لَّسْتُمْ நீங்கள் இல்லை لَهٗ அவருக்கு بِرٰزِقِيْنَ உணவளிப்பவர்களாக
15:20. வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ வ மல் லஸ்தும் லஹூ BபிராZஜிகீன்
15:20. நாம் அதில் உங்களுக்கும், நீங்கள் எவருக்கு உணவளிக்கிறவர்களாக இல்லையோ அவர்களுக்கும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஆக்கியுள்ளோம்.
15:21 وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا عِنْدَنَا خَزَآٮِٕنُهٗ وَمَا نُنَزِّلُهٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعْلُوْمٍ
وَاِنْ مِّنْ شَىْءٍ எப்பொருளும்/இல்லை اِلَّا தவிர عِنْدَنَا நம்மிடம் خَزَآٮِٕنُهٗ பொக்கிஷங்கள்/அதன் وَمَا இன்னும் இறக்க மாட்டோம் نُنَزِّلُهٗۤ அதை اِلَّا தவிர بِقَدَرٍ ஓர் அளவில் مَّعْلُوْمٍ குறிப்பிடப்பட்ட
15:21. வ இம் மின் ஷய்'இன் இல்லா 'இன்தனா கZஜா 'இனுஹூ வமா னுனZஜ்Zஜிலுஹூ இல்லா Bபிகதரிம் மஃலூம்
15:21. எந்தப் பொருளும் அதனுடைய கருவூலங்கள் நம்மிடமிருந்தே தவிர (வேறு எவரிடமும்) இல்லை; அவற்றை நாம் ஒரு குறிப்பிட்ட அளவுப்படி அல்லாமல் இறக்கி வைப்பதில்லை.
15:22 وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ
وَاَرْسَلْنَا இன்னும் அனுப்புகிறோம் الرِّيٰحَ காற்றுகளை لَوَاقِحَ கருக்கொள்ள வைக்கக் கூடியதாக فَاَنْزَلْنَا இறக்குகிறோம் مِنَ السَّمَآءِ மேகத்திலிருந்து مَآءً மழை நீரை فَاَسْقَيْنٰكُمُوْهُۚ புகட்டுகிறோம்/உங்களுக்கு/அதை وَمَاۤ இல்லை اَنْتُمْ நீங்கள் لَهٗ அதை بِخٰزِنِيْنَ சேகரிப்பவர்களாக
15:22. வ அர்ஸல்னர் ரியாஹ ல வாகிஹ Fப அன்Zஜல்னா மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஸ்கய் னாகுமூஹு வ மா அன்தும் லஹூ BபிகாZஜினீன்
15:22. இன்னும், காற்றுகளைச் சூல்கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர், வானத்திலிருந்து நாம் மழைபொழிவித்து அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்; நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.
15:23 وَ اِنَّا لَــنَحْنُ نُحْىٖ وَنُمِيْتُ وَنَحْنُ الْوٰرِثُوْنَ
وَ اِنَّا لَــنَحْنُ நிச்சயமாக நாம்தான் نُحْىٖ உயிர் கொடுக்கிறோம் وَنُمِيْتُ இன்னும் மரணிக்க வைக்கிறோம் وَنَحْنُ நாம் الْوٰرِثُوْنَ அனந்தரக்காரர்கள்
15:23. வ இன்ன்னா ல னஹ்னு னுஹ்யீ வ னுமீது வ னஹ்னுல் வாரிதூன்
15:23. நிச்சயமாக நாமே உயிர்ப்பிக்கிறோம்; நாமே மரணிக்கச் செய்கிறோம்; மேலும், (எல்லாவற்றிற்கும்) உரிமையாளர்களாகவும் நாமே இருக்கின்றோம்.
15:24 وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِيْنَ مِنْكُمْ وَلَـقَدْ عَلِمْنَا الْمُسْتَـاْخِرِيْنَ
وَلَـقَدْ திட்டவட்டமாக عَلِمْنَا அறிந்தோம் الْمُسْتَقْدِمِيْنَ முன் சென்றவர்களை مِنْكُمْ உங்களில் وَلَـقَدْ திட்டவட்டமாக عَلِمْنَا அறிந்தோம் الْمُسْتَـاْخِرِيْنَ பின் வருபவர்களை
15:24. வ ல கத் 'அலிம்னல் முஸ்தக்திமீன மின்கும் வ லகத் 'அலிம்னல் முஸ்தாகிரீன்
15:24. உங்களில் முந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்; பிந்தியவர்களையும் நாம் நிச்சயமாக அறிவோம்.
15:25 وَاِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ
وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் يَحْشُرُ ஒன்று திரட்டுவான் هُمْؕ இவர்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் حَكِيْمٌ மகா ஞானவான் عَلِيْمٌ நன்கறிந்தவன்
15:25. வ இன்ன ரBப்Bபக ஹுவ யஹ்ஷுருஹும்; இன்னஹூ ஹகீமுன் 'அலீம்
15:25. நிச்சயமாக உம்முடைய இறைவன் (இறுதிநாளில்) அவர்களை ஒன்று திரட்டுவான்; நிச்சயமாக அவன் ஞானம்மிக்கவன்; யாவற்றையும் நன்கறிபவன்.
15:26 وَلَـقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍۚ
وَلَـقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை مِنْ இருந்து صَلْصَالٍ ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது مِّنْ இருந்து حَمَاٍ களிமண் مَّسْنُوْنٍۚ பிசுபிசுப்பானது
15:26. வ லகத் கலக்னல் இன்ஸான மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
15:26. ஓசை தரக்கூடிய, மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணால் மனிதனை நிச்சயமாக நாம் படைத்தோம்.
15:27 وَالْجَـآنَّ خَلَقْنٰهُ مِنْ قَبْلُ مِنْ نَّارِ السَّمُوْمِ
وَالْجَـآنَّ ஜின்னை خَلَقْنٰهُ படைத்தோம்/அதை مِنْ قَبْلُ முன்பே مِنْ இருந்து نَّارِ நெருப்பு السَّمُوْمِ கொடிய உஷ்ணமுள்ளது
15:27. வல்ஜான்ன கலக்னாஹு மின் கBப்லு மின் னாரிஸ் ஸமூம்
15:27. (அதற்கு) முன்னர், ஜின்னை - கடும் சூடுள்ள நெருப்பிலிருந்து அதனை நாம் படைத்தோம்.
15:28 وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰۤٮِٕكَةِ اِنِّىْ خَالـِقٌۢ بَشَرًا مِّنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை رَبُّكَ உம் இறைவன் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اِنِّىْ நிச்சயமாக நான் خَالـِقٌۢ படைக்கப்போகிறேன் بَشَرًا ஒரு மனிதனை مِّنْ صَلْصَالٍ ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது مِّنْ இருந்து حَمَاٍ களிமண் مَّسْنُوْنٍ பிசுபிசுப்பானது
15:28. வ இத் கால ரBப்Bபுக லில்மலா' இகதி இன்னீ காலிகும் Bபஷரம் மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
15:28. (நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், "ஓசைதரும், மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்று கூறிய சமயத்தை (நீர் நினைவுகூர்வீராக)!
15:29 فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ
فَاِذَا سَوَّيْتُهٗ அவரை நான் செம்மை செய்துவிட்டால் وَنَفَخْتُ இன்னும் ஊதினேன் فِيْهِ அவரில் مِنْ رُّوْحِىْ என் உயிரிலிருந்து فَقَعُوْا விழுங்கள் لَهٗ அவருக்கு முன் سٰجِدِيْنَ சிரம்பணிந்தவர்களாக
15:29. Fப இதா ஸவ்வய்துஹூ வ னFபக்து Fபீஹி மிர் ரூஹீ Fபக'ஊ லஹூ ஸாஜிதீன்
15:29. "அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆன்மாவிலிருந்து ஊதியதும், 'அவருக்குப் பணிந்துவிடுங்கள்' (என்றும் கூறியதை நினைவுகூர்வீராக)!"
15:30 فَسَجَدَ الْمَلٰۤٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ
فَسَجَدَ சிரம் பணிந்தார்(கள்) الْمَلٰۤٮِٕكَةُ வானவர்கள் كُلُّهُمْ அவர்கள் எல்லோரும் اَجْمَعُوْنَۙ அனைவரும்
15:30. Fபஸஜதல் மலா'இகது குல்லுஹும் அஜ்ம'ஊன்
15:30. அவ்வாறே வானவர்கள் - அவர்கள் எல்லோரும் பணிந்தார்கள்.
15:31 اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰٓى اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ
اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اَبٰٓى மறுத்து விட்டான் اَنْ يَّكُوْنَ مَعَ ஆகுவதற்கு/உடன் السّٰجِدِيْنَ சிரம் பணிந்தவர்கள்
15:31. இல்லா இBப்லீஸ அBபா அய் யகூன ம'அஸ் ஸாஜிதீன்
15:31. இப்லீஸைத் தவிர: அவன் பணிந்தவர்களுடன் சேர்ந்திட மறுத்துவிட்டான்.
15:32 قَالَ يٰۤاِبْلِيْسُ مَا لَـكَ اَلَّا تَكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ
قَالَ கூறினான் يٰۤاِبْلِيْسُ இப்லீஸே! مَا لَـكَ உனக்கென்ன நேர்ந்தது? اَلَّا تَكُوْنَ நீ ஆகாதிருக்க مَعَ உடன் السّٰجِدِيْنَ சிரம் பணிந்தவர்கள்
15:32. கால யா இBப்லீஸு மா லக அல்லா தகூன ம'அஸ் ஸாஜிதீன்
15:32. "இப்லீஸே! பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
15:33 قَالَ لَمْ اَكُنْ لِّاَسْجُدَ لِبَشَرٍ خَلَقْتَهٗ مِنْ صَلْصَالٍ مِّنْ حَمَاٍ مَّسْنُوْنٍ
قَالَ கூறினான் لَمْ اَكُنْ நான் இல்லை لِّاَسْجُدَ சிரம் பணிபவனாக لِبَشَرٍ ஒரு மனிதனுக்கு خَلَقْتَهٗ படைத்தாய்/அவனை مِنْ இருந்து صَلْصَالٍ ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடியது مِّنْ இருந்து حَمَاٍ களிமண் مَّسْنُوْنٍ பிசுபிசுப்பானது
15:33. கால லம் அகுல் லி அஸ்ஜுத லிBபஷரின் கலக்தஹூ மின் ஸல்ஸாலிம் மின் ஹம இம் மஸ்னூன்
15:33. அதற்கு இப்லீஸ், "ஓசை தரும், மாற்றமடைந்த கறுப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
15:34 قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌۙ
قَالَ கூறினான் فَاخْرُجْ வெளியேறு مِنْهَا இதிலிருந்து فَاِنَّكَ நிச்சயமாக நீ رَجِيْمٌۙ விரட்டப்பட்டவன்
15:34. கால Fபக்ருஜ் மின்ஹா Fப இன்னக ரஜீம்
15:34. "நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்" என்று அவன் கூறினான்.
15:35 وَّاِنَّ عَلَيْكَ اللَّعْنَةَ اِلٰى يَوْمِ الدِّيْنِ
وَّاِنَّ இன்னும் நிச்சயமாக عَلَيْكَ உம்மீது اللَّعْنَةَ சாபம் اِلٰى يَوْمِ الدِّيْنِ கூலி நாள் வரை
15:35. வ இன்ன 'அலய்கல் லஃனத இலா யவ்மித் தீன்
15:35. மேலும், "நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" (என்றும் கூறினான்).
15:36 قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
قَالَ கூறினான் رَبِّ என் இறைவா فَاَنْظِرْ அவகாசமளி نِىْۤ எனக்கு اِلٰى வரை يَوْمِ நாள் يُبْعَثُوْنَ எழுப்பப்படுவார்கள்
15:36. கால ரBப்Bபி Fப அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
15:36. "என்னுடைய இறைவனே! (இறந்தவர்களான) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று (இப்லீஸ்) கூறினான்.
15:37 قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ
قَالَ கூறினான் فَاِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الْمُنْظَرِيْنَۙ அவகாசமளிக்கப்பட்டவர்களில்
15:37. கால Fப இன்னக மினல் முன்ளரீன்
15:37. "நிச்சயமாக நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்" என்று கூறினான்.
15:38 اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ
اِلٰى வரை يَوْمِ நாள் الْوَقْتِ நேரத்தின் الْمَعْلُوْمِ குறிப்பிடப்பட்டது
15:38. இலா யவ்மில் வக்தில் மஃலூம்
15:38. குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்" (என்றும் கூறினான்).
15:39 قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ
قَالَ கூறினான் رَبِّ என் இறைவா بِمَاۤ நீ வழி கெடுத்ததன் காரணமாக اَغْوَيْتَنِىْ என்னை لَاُزَيِّنَنَّ நிச்சயமாக அலங்கரிப்பேன் لَهُمْ அவர்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَلَاُغْوِيَـنَّهُمْ இன்னும் நிச்சயமாக வழிகெடுப்பேன்/அவர்களை اَجْمَعِيْنَۙ அனைவரையும்
15:39. கால ரBப்Bபி Bபிமா அக்வய்தனீ ல உZஜய்யின் அன்ன லஹும் Fபில் அர்ளி வ ல உக்வியன் னஹும் அஜ்ம'ஈன்
15:39. "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் பூமியில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்" என்று கூறினான்.
15:40 اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ
اِلَّا தவிர عِبَادَكَ உன் அடியார்களை مِنْهُمُ அவர்களில் الْمُخْلَصِيْنَ பரிசுத்தமானவர்கள்
15:40. இல்லா 'இBபாதக மின்ஹுமுல் முக்லஸீன்
15:40. "அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர" (என்றும் கூறினான்).
15:41 قَالَ هٰذَا صِرَاطٌ عَلَىَّ مُسْتَقِيْمٌ
قَالَ கூறினான் هٰذَا இது صِرَاطٌ வழி عَلَىَّ என் பக்கம் مُسْتَقِيْمٌ நேரானது
15:41. கால ஹாத ஸிராதுன் 'அலய்ய முஸ்தகீம்
15:41. "இதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்" என்று (அல்லாஹ்) கூறினான்.
15:42 اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ اِلَّا مَنِ اتَّبَـعَكَ مِنَ الْغٰوِيْنَ
اِنَّ நிச்சயமாக عِبَادِىْ என் அடியார்கள் لَـيْسَ இல்லை لَكَ உனக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது سُلْطٰنٌ அதிகாரம் اِلَّا தவிர مَنِ எவர்(கள்) اتَّبَـعَكَ பின்பற்றுகின்றார்(கள்)/ உன்னை مِنَ الْغٰوِيْنَ வழிகெட்டவர்கள்
15:42. இன்ன 'இBபாதீ லய்ஸ லக 'அலய்ஹிம் ஸுல்தானுன் இல்லா மனித்தBப'அக மினல் காவீன்
15:42. நிச்சயமாக என் அடியார்கள்மீது உனக்கு எவ்வித அதிகாரமுமில்லை; வழிகெட்டவர்களிலிருந்து உன்னைப் பின்பற்றியவர்களைத் தவிர" (என்று கூறினான்).
15:43 وَاِنَّ جَهَـنَّمَ لَمَوْعِدُهُمْ اَجْمَعِيْنَۙ
وَاِنَّ நிச்சயமாக جَهَـنَّمَ நரகம் لَمَوْعِدُهُمْ வாக்களிக்கப்பட்ட இடம்/அவர்கள் اَجْمَعِيْنَۙ அனைவரின்
15:43. வ இன்ன ஜஹன்னம லமவ்'இதுஹும் அஜ்ம'ஈன்
15:43. நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
15:44 لَهَا سَبْعَةُ اَبْوَابٍؕ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُوْمٌ
لَهَا அதற்கு سَبْعَةُ ஏழு اَبْوَابٍؕ வாசல்கள் لِكُلِّ ஒவ்வொரு بَابٍ வாசலுக்கும் مِّنْهُمْ அவர்களில் جُزْءٌ ஒரு பிரிவினர் مَّقْسُوْمٌ பிரிக்கப்பட்ட
15:44. லஹா ஸBப்'அது அBப்வாBப்; லிகுல்லி BபாBபிம் மின்ஹும் ஜுZஜ்'உம் மக்ஸூம்
15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களிலிருந்து பங்கிடப்பட்ட ஒரு தொகையினர் உள்ளனர்.
15:45 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍؕ
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ அஞ்சியவா்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍؕ இன்னும் நீரருவிகளில்
15:45. இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ 'உயூன்
15:45. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சுவர்க்கபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.
15:46 اُدْخُلُوْهَا بِسَلٰمٍ اٰمِنِيْنَ
اُدْخُلُوْ நுழையுங்கள் هَا அதில் بِسَلٰمٍ ஸலாம் உடன் اٰمِنِيْنَ அச்சமற்றவர்களாக
15:46. உத்குலூஹா Bபிஸலாமின் ஆமினீன்
15:46. (அவர்களை நோக்கி) "சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்" (என்று கூறப்படும்).
15:47 وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ
وَنَزَعْنَا நீக்கிவிடுவோம் مَا எதை فِىْ நெஞ்சங்களில் صُدُوْرِهِمْ அவர்களுடைய مِّنْ غِلٍّ குரோதத்தை اِخْوَانًا சகோதரர்களாக عَلٰى سُرُرٍ கட்டில்கள் மீது مُّتَقٰبِلِيْنَ ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக
15:47. வ னZஜஃனா ம Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் இக்வானன் 'அலா ஸுருரிம் முதகாBபிலீன்
15:47. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி கட்டில்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
15:48 لَا يَمَسُّهُمْ فِيْهَا نَـصَبٌ وَّمَا هُمْ مِّنْهَا بِمُخْرَجِيْنَ
لَا يَمَسُّهُمْ ஏற்படாது / அவர்களுக்கு فِيْهَا அதில் نَـصَبٌ சிரமம் وَّمَا இன்னும் இல்லை هُمْ அவர்கள் مِّنْهَا அதிலிருந்து بِمُخْرَجِيْنَ வெளியேற்றப்படுபவர்களாக
15:48. லா யமஸ் ஸுஹும் Fபீஹா னஸBபு(ன்)வ் வமா ஹும் மின்ஹா Bபிமுக்ரஜீன்
15:48. அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களும் அல்லர்.
15:49 نَبِّئْ عِبَادِىْۤ اَنِّىْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ
نَبِّئْ அறிவிப்பீராக عِبَادِىْۤ என் அடியார்களுக்கு اَنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُۙ மகா கருணையாளன்
15:49. னBப்Bபி' 'இBபாதீ அன்ன்னீ அனல் கFபூருர் ரஹீம்
15:49. (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக! "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்."
15:50 وَاَنَّ عَذَابِىْ هُوَ الْعَذَابُ الْاَلِيْمُ
وَاَنَّ இன்னும் நிச்சயமாக عَذَابِىْ هُوَ என் வேதனைதான் الْعَذَابُ வேதனை الْاَلِيْمُ துன்புறுத்தக்கூடியது
15:50. வ அன்ன 'அதாBபீ ஹுவல் 'அதாBபுல் அலீம்
15:50. (ஆயினும்,) "நிச்சயமாக என்னுடைய வேதனை - அதுதான் நோவினைத் தரும் வேதனையாகும்" (என்றும் சொல்லும்).
15:51 وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَۘ
وَنَبِّئْهُمْ அறிவிப்பீராக/அவர்களுக்கு عَنْ ضَيْفِ விருந்தாளிகள் பற்றி اِبْرٰهِيْمَۘ இப்றாஹீமுடைய
15:51. வ னBப்Bபி'ஹும் 'அன் ளய்Fபி இBப்ராஹீம்
15:51. இன்னும், இப்ராஹீமின் விருந்தினர்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிப்பீராக!
15:52 اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًاؕ قَالَ اِنَّا مِنْكُمْ وَجِلُوْنَ
اِذْ دَخَلُوْا அவர்கள் நுழைந்த போது عَلَيْهِ அவரிடம் فَقَالُوْا கூறினர் سَلٰمًاؕ ஸலாம் قَالَ கூறினார் اِنَّا நிச்சயமாக நாங்கள் مِنْكُمْ உங்களைப் பற்றி وَجِلُوْنَ பயமுள்ளவர்கள்
15:52. இத் தகலூ 'அலய்ஹி Fபகாலூ ஸலாமன் கால இன்னா மின்கும் வஜிலூன்
15:52. அவர்கள் அவரிடம் வந்து, "உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக!" என்று சொன்னபோது அவர், "நாம் உங்களைப் பற்றி பயப்படுகிறோம்" என்று கூறினார்.
15:53 قَالُوْا لَا تَوْجَلْ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَلِيْمٍ
قَالُوْا கூறினார்கள் لَا تَوْجَلْ பயப்படாதீர் اِنَّا நிச்சயமாக நாம் نُبَشِّرُ நற்செய்திகூறுகிறோம் كَ உமக்கு بِغُلٰمٍ ஒரு மகனைக் கொண்டு عَلِيْمٍ அறிஞர்
15:53. காலூ ல தவ்ஜல் இன்னா னுBபஷ்ஷிருக Bபிகுலாமின் 'அலீம்
15:53. அதற்கு அவர்கள், "பயப்படாதீர்! நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறு(வதற்காகவே வந்திருக்)கின்றோம்" என்று கூறினார்கள்.
15:54 قَالَ اَبَشَّرْتُمُوْنِىْ عَلٰٓى اَنْ مَّسَّنِىَ الْكِبَرُ فَبِمَ تُبَشِّرُوْنَ
قَالَ கூறினார் اَبَشَّرْتُمُوْنِىْ எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? عَلٰٓى اَنْ مَّسَّنِىَ எனக்கு ஏற்பட்டிருக்க الْكِبَرُ முதுமை فَبِمَ எதைக் கொண்டு? تُبَشِّرُوْنَ நற்செய்தி கூறுகிறீர்கள்
15:54. கால அBபஷ்ஷர்துமூனீ 'அலா அம் மஸ்ஸனியல் கிBபரு FபBபிம துBபஷ்ஷிரூன்
15:54. அதற்கவர், "என்னை முதுமை வந்தடைந்திருக்கும் போதா எனக்கு நன்மாராயம் கூறுகிறீர்கள்? எதைக் கொண்டு நீங்கள் நன்மாராயம் கூறுகிறீர்கள்?" எனக் கேட்டார்.
15:55 قَالُوْا بَشَّرْنٰكَ بِالْحَـقِّ فَلَا تَكُنْ مِّنَ الْقٰنِطِيْنَ
قَالُوْا கூறினார்கள் بَشَّرْنٰكَ நற்செய்தி கூறினோம்/உமக்கு بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு فَلَا تَكُنْ ஆகவே ஆகிவிடாதீர் مِّنَ الْقٰنِطِيْنَ அவநம்பிக்கையாளர்களில்
15:55. காலூ Bபஷ்ஷர்னாக Bபில்ஹக்கி Fபலா தகும் மினல் கானிதீன்
15:55. அதற்கவர்கள், "உண்மையைக் கொண்டே நாங்கள் உமக்கு நன்மாராயம் கூறினோம்; ஆகவே, நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்" என்று கூறினார்கள்.
15:56 قَالَ وَمَنْ يَّقْنَطُ مِنْ رَّحْمَةِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوْنَ
قَالَ கூறினார் وَمَنْ யார்? يَّقْنَطُ அவநம்பிக்கை கொள்வார் مِنْ رَّحْمَةِ அருளில் இருந்து رَبِّهٖۤ தன் இறைவனின் اِلَّا தவிர الضَّآلُّوْنَ வழிகெட்டவர்கள்
15:56. கால வ மய் யக்னது மிர் ரஹ்மதி ரBப்Bபிஹீ இல்லள் ளாலூன்
15:56. "வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப் பற்றி நிராசை கொள்வார்?" என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார்.
15:57 قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ
قَالَ கூறினார் فَمَا என்ன? خَطْبُكُمْ உங்கள் காரியம் اَيُّهَا الْمُرْسَلُوْنَ தூதர்களே!
15:57. கால Fபமா கத்Bபுகும் அய்யுஹல் முர்ஸலூன்
15:57. "(அல்லாஹ்வின்) தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று (இப்ராஹீம்) கேட்டார்.
15:58 قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ
قَالُـوْۤا கூறினார்கள் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டோம் اِلٰى பக்கம் قَوْمٍ மக்களின் مُّجْرِمِيْنَۙ குற்றம் புரிகின்றவர்கள்
15:58. காலூ இன்னா உர்ஸில்னா இலா கவ்மிம் முஜ்ரிமீன்
15:58. அதற்கவர்கள், "குற்றவாளிகளான ஒரு கூட்டத்தாரிடம் நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
15:59 اِلَّاۤ اٰلَ لُوْطٍؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ
اِلَّاۤ தவிர اٰلَ குடும்பத்தார் لُوْطٍؕ லூத்துடைய اِنَّا நிச்சயமாக நாங்கள் لَمُنَجُّوْ பாதுகாப்பவர்கள்தான் هُمْ அவர்களை اَجْمَعِيْنَۙ அனைவரையும்
15:59. இல்லா ஆல லூத்; இன்னா லமுனஜ்ஜூஹும் அஜ்ம'ஈன்
15:59. "லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்."
15:60 اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ
اِلَّا தவிர امْرَاَتَهٗ அவருடைய மனைவி قَدَّرْنَاۤ ۙ முடிவு செய்தோம் اِنَّهَا நிச்சயமாக அவள் لَمِنَ الْغٰبِرِيْنَ தங்கிவிடுபவர்களில்தான்
15:60. இல்லம் ர அதஹூ கத்தர்னா இன்னஹா லமினல் காBபிரீன்
15:60. "ஆனால், அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர; நிச்சயமாக அவள் பின்தங்கியவர்களில் உள்ளவள் என்று நாம் நிர்ணயித்துவிட்டோம்" (என்று வானவர்கள் கூறினார்கள்).
15:61 فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ۨالْمُرْسَلُوْنَۙ
فَلَمَّا جَآءَ வந்த போது اٰلَ குடும்பத்தார் لُوْطِ லூத்துடைய ۨالْمُرْسَلُوْنَۙ தூதர்கள்
15:61. Fபலம்ம ஜா'அ ஆல லூதினில் முர்ஸலூன்
15:61. (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது.
15:62 قَالَ اِنَّـكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ
قَالَ கூறினார் اِنَّـكُمْ நிச்சயமாக நீங்கள் قَوْمٌ கூட்டம் مُّنْكَرُوْنَ அறியப்படாதவர்கள்
15:62. கால இன்னகும் கவ்மும் முன்கரூன்
15:62. (அவர்களை நோக்கி எனக்கு) "அறிமுகமில்லாத கூட்டத்தினராக நீங்கள் இருக்கிறீர்கள்" என்று அவர் (லூத்) சொன்னார்.
15:63 قَالُوْا بَلْ جِئْنٰكَ بِمَا كَانُوْا فِيْهِ يَمْتَرُوْنَ
قَالُوْا கூறினர் بَلْ மாறாக جِئْنٰكَ வந்துள்ளோம்/உம்மிடம் بِمَا எதைக் கொண்டு كَانُوْا இருந்தனர் فِيْهِ அதில் يَمْتَرُوْنَ சந்தேகிக்கின்றனர்
15:63. காலூ Bபல் ஜி'னாக Bபிமா கானூ Fபீஹி யம்தரூன்
15:63. (அதற்கு அவர்கள்) "அல்ல! (உம் கூட்டத்தாராகிய) இவர்கள் எதைச் சந்தேகித்தார்களோ, அதை நாம் உம்மிடம் கொண்டு வந்திருக்கிறோம்" என்று கூறினார்கள்.
15:64 وَ اَتَيْنٰكَ بِالْحَـقِّ وَاِنَّا لَصٰدِقُوْنَ
وَ اَتَيْنٰكَ இன்னும் வந்துள்ளோம் / உம்மிடம் بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு وَاِنَّا நிச்சயமாக நாம் لَصٰدِقُوْنَ உண்மையாளர்கள்தான்
15:64. வ அதய்னாக Bபில்ஹக்கி வ இன்னா லஸாதிகூன்
15:64. (உறுதியான நிகழவிருக்கும்) உண்மையையே உம்மிடம் நாங்கள் கொண்டுவந்திருக்கின்றோம்; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களாகவே இருக்கிறோம்.
15:65 فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَاتَّبِعْ اَدْبَارَهُمْ وَلَا يَلْـتَفِتْ مِنْكُمْ اَحَدٌ وَّامْضُوْا حَيْثُ تُؤْمَرُوْنَ
فَاَسْرِ ஆகவே, செல்வீராக بِاَهْلِكَ உமது குடும்பத்தினருடன் بِقِطْعٍ ஒரு பகுதியில் مِّنَ الَّيْلِ இரவின் وَاتَّبِعْ இன்னும் பின்பற்றுவீராக اَدْبَارَهُمْ அவர்களுக்குப் பின்னால் وَلَا يَلْـتَفِتْ திரும்பிப் பார்க்கவேண்டாம் مِنْكُمْ உங்களில் اَحَدٌ ஒருவரும் وَّامْضُوْا இன்னும் செல்லுங்கள் حَيْثُ இடத்திற்கு تُؤْمَرُوْنَ ஏவப்பட்டீர்கள்
15:65. Fப அஸ்ரி Bபி அஹ்லிக Bபிகித்'இம் மினல் லய்லி வத்தBபிஃ அத்Bபாரஹும் வலா யல்தFபித் மின்கும் அஹது(ன்)வ் வம்ளூ ஹய்து து'மரூன்
15:65. "ஆகவே, இரவின் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் சென்றுவிடும்; அன்றியும், (அவர்களை முன்னால் செல்லவிட்டு) அவர்கள் பின்னே, நீர் தொடர்ந்து செல்லும்; உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; நீங்கள் ஏவப்படும் இடத்திற்குச் சென்றுவிடுங்கள்" (என்று அத்தூதுவர்கள் கூறினார்கள்.)
15:66 وَقَضَيْنَاۤ اِلَيْهِ ذٰ لِكَ الْاَمْرَ اَنَّ دَابِرَ هٰٓؤُلَاۤءِ مَقْطُوْعٌ مُّصْبِحِيْنَ
وَقَضَيْنَاۤ முடிவு செய்தோம் اِلَيْهِ அவருக்கு ذٰ لِكَ அது الْاَمْرَ காரியம் اَنَّ دَابِرَ நிச்சயமாக வேர் هٰٓؤُلَاۤءِ இவர்களின் مَقْطُوْعٌ துண்டிக்கப்படும் مُّصْبِحِيْنَ விடிந்தவர்களாக
15:66. வ களய்னா இலய்ஹி தாலிகல் அம்ர அன்ன தாBபிர ஹா'உலா'இ மக்தூ'உம் முஸ்Bபிஹீன்
15:66. மேலும், இவர்கள் யாவரும் அதிகாலையிலேயே நிச்சயமாக வேரறுக்கப்பட்டுவிடுவார்கள் என்னும் அக்காரியத்தையும், நாம் முடிவாக அவருக்கு அறிவித்தோம்.
15:67 وَجَآءَ اَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَـبْشِرُوْنَ
وَجَآءَ வந்தார்(கள்) اَهْلُ الْمَدِيْنَةِ அந்நகரவாசிகள் يَسْتَـبْشِرُوْنَ மகிழ்ச்சியடைந்தவர்களாக
15:67. வ ஜா'அ அஹ்லுல் மதீனதி யஸ்தBப்ஷிரூன்
15:67. (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதை அறிந்து) அந்நகரவாசிகள் மிக்க மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்தனர்.
15:68 قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ
قَالَ கூறினார் اِنَّ هٰٓؤُلَاۤءِ நிச்சயமாக இவர்கள் ضَيْفِىْ என் விருந்தினர் فَلَا تَفْضَحُوْنِۙ ஆகவே அவமானப் படுத்தாதீர்கள் / என்னை
15:68. கால இன்ன ஹா'உலா'இ ளய்Fபீ Fபலா தFப்ளஹூன்
15:68. (லூத் வந்தவர்களை நோக்கி:) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள்; ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்திவிடாதீர்கள்" என்று கூறினார்.
15:69 وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ
وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُخْزُوْنِ இன்னும் இழிவு படுத்தாதீர்கள் / என்னை
15:69. வத்தகுல் லாஹ வலா துக்Zஜூன்
15:69. "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைக் கேவலப்படுத்திவிடாதீர்கள்" (என்றும் கூறினார்).
15:70 قَالُـوْۤا اَوَلَمْ نَـنْهَكَ عَنِ الْعٰلَمِيْنَ
قَالُـوْۤا கூறினர் اَوَلَمْ நாம் தடுக்கவில்லையா? نَـنْهَكَ உம்மை عَنِ الْعٰلَمِيْنَ உலகமக்களை விட்டு
15:70. காலூ அவலம் னன்ஹக 'அனில் 'ஆலமீன்
15:70. அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதைவிட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
15:71 قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْۤ اِنْ كُنْـتُمْ فٰعِلِيْنَؕ
قَالَ கூறினார் هٰٓؤُلَاۤءِ இவர்கள் بَنٰتِىْۤ என் பெண் மக்கள் اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் فٰعِلِيْنَؕ செய்பவர்களாக
15:71. கால ஹா'உலா'இ Bபனாதீ இன் குன்தும் Fபா'இலீன்
15:71. அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள்; நீங்கள் (ஏதும்) செய்பவர்களாக இருந்தால் (இவர்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்)" என்று கூறினார்.
15:72 لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِىْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ
لَعَمْرُكَ உம்வாழ்வின்சத்தியம் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் لَفِىْ سَكْرَتِهِمْ தங்கள் மயக்கத்தில் يَعْمَهُوْنَ தடுமாறுகின்றனர்
15:72. ல'அம்ருக இன்னஹும் லFபீ ஸக்ரதிஹிம் யஃமஹூன்
15:72. (நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
15:73 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ
فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الصَّيْحَةُ சப்தம்,இடிமுழக்கம் مُشْرِقِيْنَۙ வெளிச்சமடைந்தவர்களாக
15:73. Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஷ்ரிகீன்
15:73. ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில் அவர்களைப் பேரிடிமுழக்கம் பிடித்துக்கொண்டது.
15:74 فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ
فَجَعَلْنَا ஆக்கினோம் عَالِيـَهَا அதன் மேல் புறத்தை سَافِلَهَا அதன் கீழ்ப்புறமாக وَ اَمْطَرْنَا இன்னும் பொழிந்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது حِجَارَةً கல்லை مِّنْ سِجِّيْلٍؕ களிமண்ணின்
15:74. Fபஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹிம் ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீல்
15:74. பின்பு, (அவர்களுடைய ஊரை) அதன் மேற்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக நாம் ஆக்கிவிட்டோம்; இன்னும், அவர்கள் மீது சுடப்பட்ட (களிமண்ணாலான) கற்களைப் பொழியச் செய்தோம்.
15:75 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـلْمُتَوَسِّمِيْنَ
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لِّـلْمُتَوَسِّمِيْنَ நுண்ணறி வாளர்களுக்கு
15:75. இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லில்முதவஸ்ஸிமீன்
15:75. நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
15:76 وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ
وَاِنَّهَا நிச்சயமாக அது لَبِسَبِيْلٍ பாதையில் مُّقِيْمٍ நிலையான, தெளிவான
15:76. வ இன்னஹா லBபி ஸBபீலிம் முகீம்
15:76. நிச்சயமாக அது (அவ்வூர் நீங்கள் பயணத்தில் வரப்போகும்) நேரான வழியில்தான் இருக்கிறது.
15:77 اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيَةً لِّـلْمُؤْمِنِيْنَؕ
اِنَّ فِىْ ذٰلِكَ நிச்சயமாக/அதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّـلْمُؤْمِنِيْنَؕ நம்பிக்கையாளர்களுக்கு
15:77. இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லில்மு'மினீன்
15:77. நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.
15:78 وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ
وَاِنْ كَانَ நிச்சயமாக இருந்தார்(கள்) اَصْحٰبُ الْاَيْكَةِ தோப்புடையவர்கள் لَظٰلِمِيْنَۙ அநியாயக்காரர்களாகவே
15:78. வ இன் கான அஸ்ஹாBபுல் அய்கதி லளாலிமீன்
15:78. இன்னும், (ஷுஐபுடைய சமூகத்தாராகிய) அடர்ந்த சோலைவாசிகளும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.
15:79 فَانْتَقَمْنَا مِنْهُمْۘ وَاِنَّهُمَا لَبِاِمَامٍ مُّبِيْنٍؕ
فَانْتَقَمْنَا ஆகவே பழிவாங்கினோம் مِنْهُمْۘ அவர்களை وَاِنَّهُمَا நிச்சயமாக அவ்விரண்டும் لَبِاِمَامٍ வழியில்தான் مُّبِيْنٍؕ தெளிவானது
15:79. Fபன்தகம்னா மின்ஹும் வ இன்னஹுமா லBபி இமாமிம் முBபீன்
15:79. எனவே, அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம்: (அழிந்த) இவ்விரண்டு (ஊர்களும்) பகிரங்கமான (போக்குவரத்து) வழியில்தான் இருக்கின்றன.
15:80 وَلَـقَدْ كَذَّبَ اَصْحٰبُ الْحِجْرِ الْمُرْسَلِيْنَۙ
وَلَـقَدْ திட்டவட்டமாக كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) اَصْحٰبُ الْحِجْرِ ஹிஜ்ர் வாசிகள் الْمُرْسَلِيْنَۙ தூதர்களை
15:80. வ லகத் கத்தBப அஸ்ஹாBபுல் ஹிஜ்ரில் முர்ஸலீன்
15:80. (இவ்வாறே 'ஸமூது' சமூகத்தாரான) ஹிஜ்ர்வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினர்.
15:81 وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ
وَاٰتَيْنٰهُمْ கொடுத்தோம்/அவர்களுக்கு اٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை فَكَانُوْا இருந்தனர் عَنْهَا அவற்றை مُعْرِضِيْنَۙ புறக்கணித்தவர்களாக
15:81. வ ஆதய்னாஹும் ஆயாதினா Fபகானூ 'அன்ஹா முஃரிளீன்
15:81. அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.
15:82 وَكَانُوْا يَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا اٰمِنِيْنَ
وَكَانُوْا இன்னும் இருந்தனர் يَنْحِتُوْنَ குடைகின்றனர் مِنَ الْجِبَالِ بُيُوْتًا மலைகளில்/வீடுகளை اٰمِنِيْنَ அச்சமற்றவர்களாக
15:82. வ கானூ யன்ஹிதூன மினல் ஜிBபாலி Bபுயூதன் ஆமினீன்
15:82. அவர்கள் மலைகளிலிருந்து வீடுகளைக் குடைந்து (அவற்றில்) அச்சமின்றி இருந்தனர்.
15:83 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ
فَاَخَذَتْهُمُ அவர்களைப் பிடித்தது الصَّيْحَةُ சப்தம் مُصْبِحِيْنَۙ பொழுது விடிந்தவர்களாக இருக்க
15:83. Fப அகதத் ஹுமுஸ் ஸய்ஹது முஸ்Bபிஹீன்
15:83. ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக்கொண்டது.
15:84 فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَؕ
فَمَاۤ اَغْنٰى தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டும் مَّا எவை كَانُوْا இருந்தனர் يَكْسِبُوْنَؕ செய்வார்கள்
15:84. Fபமா அக்னா 'அன்ஹும் மா கானூ யக்ஸிBபூன்
15:84. அப்போது, அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) சம்பாதித்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்கவில்லை.
15:85 وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَـقِّ ؕ وَاِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيْلَ
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை وَمَا بَيْنَهُمَاۤ இன்னும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவை اِلَّا بِالْحَـقِّ ؕ உண்மையான நோக்கத்திற்கே தவிர وَاِنَّ நிச்சயம் السَّاعَةَ மறுமை لَاٰتِيَةٌ வரக்கூடியதே فَاصْفَحِ ஆகவே புறக்கணிப்பீராக الصَّفْحَ புறக்கணிப்பாக الْجَمِيْلَ அழகியது
15:85. வமா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில்ஹக்க்; வ இன்னஸ் ஸா'அத ல ஆதியதுன் Fபஸ்Fபஹிஸ் ஸFப்ஹல் ஜமீல்
15:85. நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை; (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய காலமான) மறுமை நாள் நிச்சயமாக வருவதாகவே உள்ளது. ஆதலால், (இவர்களின் தவறுகளை) அழகிய முறையில் புறக்கணித்துவிடும்.
15:86 اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ
اِنَّ رَبَّكَ هُوَ நிச்சயமாக/உம் இறைவன்தான் الْخَـلّٰقُ மகா படைப்பாளன் الْعَلِيْمُ நன்கறிந்தவன்
15:86. இன்ன ரBப்Bபக ஹுவல் கல்லாகுல் 'அலீம்
15:86. நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், (அனைத்தையும்) அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
15:87 وَلَـقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَـثَانِىْ وَالْـقُرْاٰنَ الْعَظِيْمَ
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنٰكَ கொடுத்தோம்/உமக்கு سَبْعًا ஏழு வசனங்களை مِّنَ الْمَـثَانِىْ மீண்டும் மீண்டும் ஓதப்படுகின்ற வசனங்களில் وَالْـقُرْاٰنَ இன்னும் குர்ஆனை الْعَظِيْمَ மகத்துவமிக்கது
15:87. வ லகத் ஆதய்னாக ஸBப்'அம் மினல் மதானீ வல் குர்ஆனல் 'அளீம்
15:87. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத்திரும்ப ஓதக்கூடிய (ஸூரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்தக்) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
15:88 لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِيْنَ
لَا تَمُدَّنَّ கண்டிப்பாக நீட்டாதீர் عَيْنَيْكَ உம் இரு கண்களை اِلٰى பக்கம் مَا எதை مَتَّعْنَا சுகமளித்தோம் بِهٖۤ அதைக் கொண்டு اَزْوَاجًا சில வகையினர்களுக்கு مِّنْهُمْ இவர்களில் وَلَا تَحْزَنْ இன்னும் கவலைப்படாதீர் عَلَيْهِمْ அவர்கள் மீது وَاخْفِضْ இன்னும் தாழ்த்துவீராக جَنَاحَكَ உமது புஜத்தை لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு
15:88. லா தமுத்தன்ன 'அய்னய்க இலா மா மத்தஃனா Bபிஹீ அZஜ்வாஜம் மின்ஹும் வலா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வக்Fபிள் ஜனாஹக லில்மு 'மினீன்
15:88. அவர்களிலிருந்து சில வகுப்பினரை இவ்வுலகில், எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின்பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால், நம்பிக்கையாளர்களுக்காக உம் (அன்பென்னும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!
15:89 وَقُلْ اِنِّىْۤ اَنَا النَّذِيْرُ الْمُبِيْنُۚ
وَقُلْ கூறுவீராக اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் النَّذِيْرُ எச்சரிப்பாளன் الْمُبِيْنُۚ தெளிவானவன்
15:89. வ குல் இன்னீ அனன் னதீருல் முBபீன்
15:89. "பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்" என்று நீர் கூறுவீராக!
15:90 كَمَاۤ اَنْزَلْنَا عَلَى الْمُقْتَسِمِيْنَۙ
كَمَاۤ اَنْزَلْنَا நாம் இறக்கியது போன்றே عَلَى மீது الْمُقْتَسِمِيْنَۙ பிரித்தவர்கள்
15:90. கமா அன்Zஜல்னா 'அலல் முக்தஸிமீன்
15:90. (நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது, முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே-
15:91 الَّذِيْنَ جَعَلُوا الْـقُرْاٰنَ عِضِيْنَ
الَّذِيْنَ எவர்கள் جَعَلُوا ஆக்கினார்கள் الْـقُرْاٰنَ குர்ஆனை عِضِيْنَ பல வகைகளாக
15:91. அல்லதீன ஜ'அலுல் குர்'ஆன'இளீன்
15:91. இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கிவைப்போம்).
15:92 فَوَرَبِّكَ لَـنَسْـٴَــلَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ
فَوَرَبِّكَ உம் இறைவன் மீது சத்தியமாக لَـنَسْـٴَــلَـنَّهُمْ நிச்சயமாக அவர்களை விசாரிப்போம் اَجْمَعِيْنَۙ அனைவரையும்
15:92. Fபவ ரBப்Bபிக லனஸ்'அ லன்னஹும் அஜ்ம'ஈன்
15:92. உம் இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்கள் அனைவரையும் விசாரிப்போம்.
15:93 عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ
عَمَّا பற்றி كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்கின்றனர்
15:93. 'அம்மா கானூ யஃமலூன்
15:93. அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றைப் பற்றியும் (நாம் விசாரிப்போம்).
15:94 فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَ اَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ
فَاصْدَعْ ஆகவே தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக بِمَا எதை تُؤْمَرُ நீர் ஏவப்படுகிறீர் وَ اَعْرِضْ இன்னும் புறக்கணிப்பீராக عَنِ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களை
15:94. Fபஸ்தஃ Bபிமா து'மரு வ அஃரிள் அனில் முஷ்ரிகீன்
15:94. ஆதலால், உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக! இணைவைப்பவர்களைப் புறக்கணித்துவிடுவீராக!
15:95 اِنَّا كَفَيْنٰكَ الْمُسْتَهْزِءِيْنَۙ
اِنَّا நிச்சயமாக நாம் كَفَيْنٰكَ பாதுகாத்தோம்/ உம்மை الْمُسْتَهْزِءِيْنَۙ பரிகசிப்பவர்களிடமிருந்து
15:95. இன்னா கFபய்னாகல் முஸ்தஹ்Zஜி'ஈன்
15:95. (உம்மை) ஏளனம் செய்பவர்கள் சம்பந்தமாக நாமே உமக்குப் போதுமாக இருக்கின்றோம்.
15:96 الَّذِيْنَ يَجْعَلُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۚ فَسَوْفَ يَعْلَمُوْنَ
الَّذِيْنَ எவர்கள் يَجْعَلُوْنَ ஆக்குகிறார்கள் مَعَ உடன் اللّٰهِ அல்லாஹ் اِلٰهًا வணங்கப்படும் தெய்வத்தை اٰخَرَۚ மற்றொரு فَسَوْفَ يَعْلَمُوْنَ விரைவில்அறிவார்கள்
15:96. அல்லதீன யஜ்'அலூன ம'அல் லாஹி இலாஹன் ஆகர்; Fபஸவ்Fப யஃலமூன்
15:96. இவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தையும் (இணை) ஆக்கிக்கொள்கிறார்கள்; (இதன் பலனை இவர்கள்) பின்னர் அறிந்துகொள்வார்கள்.
15:97 وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّكَ يَضِيْقُ صَدْرُكَ بِمَا يَقُوْلُوْنَۙ
وَلَـقَدْ திட்டவட்டமாக نَـعْلَمُ அறிவோம் اَنَّكَ நிச்சயமாக நீர் يَضِيْقُ நெருக்கடிக்குள்ளாகிறது صَدْرُكَ உம் நெஞ்சு بِمَا يَقُوْلُوْنَۙ அவர்கள் கூறுவதால்
15:97. வ லகத் னஃலமு அன்னக யளீகு ஸத்ருக Bபிமா யகூலூன்
15:97. (நபியே!) அவர்கள் பேசுவதின் காரணமாக உமது நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை நாம் அறிவோம்.
15:98 فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّٰجِدِيْنَۙ
فَسَبِّحْ ஆகவே துதிப்பீராக بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உம் இறைவனை وَكُنْ இன்னும் ஆகிவிடுவீராக مِّنَ السّٰجِدِيْنَۙ சிரம் பணிபவர்களில்
15:98. FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வ கும் மினஸ் ஸாஜிதீன்
15:98. நீர் (அப்பேச்சைப் பொருட்படுத்தாது) உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! ஸஜ்தா செய்வோர்களில் நீரும் ஆகிவிடுவீராக!
15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ
وَاعْبُدْ வணங்குவீராக رَبَّكَ உம் இறைவனை حَتّٰى يَاْتِيَكَ வரை/வரும்/உமக்கு الْيَـقِيْنُ யகீன்
15:99. வஃBபுத் ரBப்Bபக ஹத்தா யாதியகல் யகீன்
15:99. உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!