டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 49. ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)
மதனீ, வசனங்கள்: 18
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
49:1 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُقَدِّمُوْا بَيْنَ يَدَىِ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ اتَّقُوا اللّٰهَؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تُقَدِّمُوْا நீங்கள் முந்தாதீர்கள் بَيْنَ يَدَىِ முன்பாக اللّٰهِ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلِهٖ அவனது தூதருக்கும் وَ اتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! اللّٰهَؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ நன்கறிந்தவன்
49:1. யா அய்யுஹல் லதீன ஆமனூ ல துகத்திமூ Bபய்ன யத யில் லாஹி வ ரஸூலிஹீ வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஸமீ'உன் 'அலீம்
49:1. முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள்; அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுபவன்; நன்கறிபவன்.
49:2 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَرْفَعُوْۤا اَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِىِّ وَلَا تَجْهَرُوْا لَهٗ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ اَنْ تَحْبَطَ اَعْمَالُكُمْ وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَرْفَعُوْۤا உயர்த்தாதீர்கள்! اَصْوَاتَكُمْ உங்கள் சப்தங்களை فَوْقَ மேல் صَوْتِ சப்தத்திற்கு النَّبِىِّ நபியின் وَلَا تَجْهَرُوْا இன்னும் உரக்கப் பேசாதீர்கள்! لَهٗ அவருக்கு முன் بِالْقَوْلِ பேசுவதில் كَجَهْرِ உரக்கப் பேசுவதைப் போல் بَعْضِكُمْ உங்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு முன் اَنْ تَحْبَطَ பாழாகிவிடாமல் இருப்பதற்காக اَعْمَالُكُمْ உங்கள் அமல்கள் وَاَنْـتُمْ لَا تَشْعُرُوْنَ நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
49:2. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தர்Fப'ஊ அஸ்வாதகும் Fபவ்க ஸவ்தின் னBபியி வலா தஜ்ஹரூ லஹூ Bபில்கவ்லி கஜஹ்ரி Bபஃளிகும் லிBபஃளின் அன் தஹ்Bபத அஃமாலுகும் வ அன்தும் லா தஷ்'உரூன்
49:2. முஃமின்களே! நீங்கள் நபியின் சப்தத்திற்கு மேலே, உங்கள் சப்தங்களை உயர்த்தாதீர்கள்; மேலும், உங்களுக்குள் ஒருவர் மற்றொருவருடன் இரைந்து பேசுவதைப் போல், அவரிடம் நீங்கள் இரைந்து பேசாதீர்கள், (இவற்றால்) நீங்கள் அறிந்து கொள்ள முடியாத நிலையில் உங்கள் அமல்கள் அழிந்து போகும்.
49:3 اِنَّ الَّذِيْنَ يَغُضُّوْنَ اَصْوَاتَهُمْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ امْتَحَنَ اللّٰهُ قُلُوْبَهُمْ لِلتَّقْوٰىؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يَغُضُّوْنَ தாழ்த்திக் கொள்பவர்கள் اَصْوَاتَهُمْ தங்கள் சப்தங்களை عِنْدَ அருகில் رَسُوْلِ தூதருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ அவர்களைத்தான் امْتَحَنَ சோதித்து தேர்வு செய்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் قُلُوْبَهُمْ அவர்களுடைய உள்ளங்களை لِلتَّقْوٰىؕ இறையச்சத்திற்காக لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّغْفِرَةٌ மன்னிப்பு(ம்) وَّاَجْرٌ عَظِيْمٌ மகத்தான கூலியும்
49:3. இன்னல் லதீன யகுள் ளூன அஸ்வாதஹும் 'இன்த ரஸூலில் லாஹி உலா'இகல் லதீனம் தஹ் அனல் லாஹு குலூBபஹும் லித்தக்வா; லஹும் மக்Fபிரது(ன்)வ் வ'அஜ்ருன் 'அளீம்
49:3. நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அ(த்தகைய)வர்களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக்காகச் சோதனை செய்கிறான் - அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு.
49:4 اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُنَادُوْنَكَ உம்மை சப்தமிட்டு அழைப்பவர்கள் مِنْ وَّرَآءِ பின்னால் இருந்து الْحُجُرٰتِ அறைகளுக்கு اَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْقِلُوْنَ அறியமாட்டார்கள்
49:4. இன்னல் லதீன யுனாதூ னக மி(ன்)வ் வரா'இல் ஹுஜுராதி அக்தருஹும் லா யஃகிலூன்
49:4. (நபியே!) நிச்சயமாக, எவர்கள் (உம்) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை இரைந்து அழைக்கிறார்களோ, அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்ளாதவர்களே!
49:5 وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰى تَخْرُجَ اِلَيْهِمْ لَـكَانَ خَيْرًا لَّهُمْؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால் حَتّٰى வரை تَخْرُجَ நீர் வெளியேறி வருகின்ற اِلَيْهِمْ அவர்களிடம் لَـكَانَ அது இருந்திருக்கும் خَيْرًا நன்றாக لَّهُمْؕ அவர்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
49:5. வ லவ் அன்னஹும் ஸBபரூ ஹத்தா தக்ருஜ இலய்ஹிம் லகான கய்ரல் லஹும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
49:5. நீர் அவர்களிடம் வெளிப்பட்டு வரும் வரையில், அவர்கள் பொறுத்திருந்தார்களானால், அது அவர்களுக்கு நலமாக இருக்கும்; (எனினும்) அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِنْ جَآءَكُمْ உங்களிடம் வந்தால் فَاسِقٌ ۢ பாவியான ஒருவர் بِنَبَاٍ ஒரு செய்தியைக் கொண்டு فَتَبَيَّنُوْۤا நன்கு தெளிவு பெறுங்கள்! اَنْ تُصِيْبُوْا நீங்கள்சேதமேற்படுத்தி விடாமல் இருப்பதற்காக قَوْمًا ۢ ஒரு கூட்டத்திற்கு بِجَهَالَةٍ அறியாமல் فَتُصْبِحُوْا ஆகிவிடுவீர்கள் عَلٰى مَا فَعَلْتُمْ நீங்கள் செய்ததற்காக نٰدِمِيْنَ வருந்தியவர்களாக
49:6. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் ஜா'அகும் Fபாஸிகும் BபினBப இன் FபதBபய்யனூ அன் துஸீBபூ கவ்மம் Bபிஜஹலதின் Fபதுஸ்Bபிஹூ 'அலா மா Fப'அல்தும் னாதிமீன்
49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.
49:7 وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِؕ لَوْ يُطِيْعُكُمْ فِىْ كَثِيْرٍ مِّنَ الْاَمْرِ لَعَنِتُّمْ وَ لٰـكِنَّ اللّٰهَ حَبَّبَ اِلَيْكُمُ الْاِيْمَانَ وَزَيَّنَهٗ فِىْ قُلُوْبِكُمْ وَكَرَّهَ اِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَؕ اُولٰٓٮِٕكَ هُمُ الرّٰشِدُوْنَۙ
وَاعْلَمُوْۤا அறிந்துகொள்ளுங்கள்! اَنَّ நிச்சயமாக فِيْكُمْ உங்களுக்கு மத்தியில் رَسُوْلَ اللّٰهِؕ அல்லாஹ்வின் தூதர் لَوْ يُطِيْعُكُمْ அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் فِىْ كَثِيْرٍ அதிகமானவற்றில் مِّنَ الْاَمْرِ காரியங்களில் لَعَنِتُّمْ நீங்கள் சிரமப்பட்டுவிடுவீர்கள் وَ لٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் حَبَّبَ விருப்பமாக்கினான் اِلَيْكُمُ الْاِيْمَانَ உங்களுக்கு ஈமானை وَزَيَّنَهٗ இன்னும் அதை அலங்கரித்தான் فِىْ قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களில் وَكَرَّهَ இன்னும் வெறுப்பாக்கினான் اِلَيْكُمُ உங்களிடம் الْكُفْرَ இறை நிராகரிப்பை(யும்) وَالْفُسُوْقَ பாவத்தையும் وَالْعِصْيَانَؕ மாறுசெய்வதையும் اُولٰٓٮِٕكَ هُمُ இத்தகையவர்கள்தான் الرّٰشِدُوْنَۙ சத்தியவழி நடப்பவர்கள்
49:7. வஃலமூ அன்ன Fபீகும் ரஸூலல் லாஹ்; லவ் யுதீ'உகும் Fபீ கதீரிம் மினல் அம்ரில'அனித்தும் வ லாகின்னல் லாஹ ஹBப்BபBப இலய்குமுல் ஈமான வ Zஜய்யனஹூ Fபீ குலூBபிகும் வ கர்ரஹ இலய்குமுல் குFப்ர வல்Fபுஸூக வல்'இஸ்யான்; உலாஇக ஹுமுர் ராஷிதூன்
49:7. அறிந்துகொள்ளுங்கள்: நிச்சயமாக உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்; அநேக காரியங்களில் அவர் உங்களுக்கு வழிப்பட்டால், திடமாக நீங்கள் தாம் கஷ்டத்திற்குள்ளாவீர்கள், எனினும் அல்லாஹ் ஈமானை (நம்பிக்கையை) உங்களுக்குப் பிரியமுடையதாக்கி உங்கள் இதயங்களிலும் அதனை அழகாக்கியும் வைத்தான் - அன்றியும் குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும், மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாகவும் ஆக்கினான்; இத்தகையவர்கள் தாம் நேர்வழியில் நடப்பவர்கள்.
49:8 فَضْلًا مِّنَ اللّٰهِ وَنِعْمَةً ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
فَضْلًا அருளாக(வும்) مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து وَنِعْمَةً ؕ கிருபையாகவும் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ மகா ஞானவான்
49:8. Fபள்லம் மினல் லாஹி வ னிஃமஹ்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
49:8. (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள அனுக்கிரமும், அருள்கொடையினாலுமேயாகும், மேலும் அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கோன்.
49:9 وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَاۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
وَاِنْ طَآٮِٕفَتٰنِ இரு பிரிவினர் مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் اقْتَتَلُوْا தங்களுக்குள் சண்டையிட்டால் فَاَصْلِحُوْا சமாதானம் செய்யுங்கள்! بَيْنَهُمَاۚ அவ்விருவருக்கும் மத்தியில் فَاِنْۢ بَغَتْ எல்லை மீறினால் اِحْدٰٮهُمَا அவ்விருவரில் ஒரு பிரிவினர் عَلَى الْاُخْرٰى மற்றொரு பிரிவினர்மீது فَقَاتِلُوا சண்டை செய்யுங்கள் الَّتِىْ تَبْغِىْ எல்லை மீறுகின்றவர்களிடம் حَتّٰى تَفِىْٓءَ அவர்கள் திரும்புகின்றவரை اِلٰٓى اَمْرِ கட்டளையின் பக்கம் اللّٰهِ ۚ அல்லாஹ்வின் فَاِنْ فَآءَتْ அவர்கள் திரும்பிவிட்டால் فَاَصْلِحُوْا சமாதானம் செய்யுங்கள்! بَيْنَهُمَا அவ்விருவருக்கும் மத்தியில் بِالْعَدْلِ நீதமாக وَاَقْسِطُوْا ؕ இன்னும் நேர்மையாக இருங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُحِبُّ நேசிக்கின்றான் الْمُقْسِطِيْنَ நேர்மையாளர்களை
49:9. வ இன் தா'இFபதானி மினல் மு'மினீன னக்ததலூ Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா; Fப-இம் Bபகத் இஹ்தாஹுமா 'அலல் உக்ரா Fபகாதிலுல் லதீ தBப்கீ ஹத்தா தFபீ'அ இலா அம்ரில் லாஹ்; Fப-இன் Fபா'அத் Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா Bபில்'அத்லி வ அக்ஸிதூ, இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
49:10 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَيْنَ اَخَوَيْكُمْوَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் எல்லாம் اِخْوَةٌ சகோதரர்கள் ஆவர் فَاَصْلِحُوْا ஆகவே சமாதானம் செய்யுங்கள்! بَيْنَ மத்தியில் اَخَوَيْكُمْ உங்கள் இரு சகோதரர்களுக்கு وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
49:10. இன்னமல் மு'மினூன இக்வதுன் Fப அஸ்லிஹூ Bபய்ன அகவய்கும் வத்தகுல் லாஹ ல'அல்லகும் துர்ஹமூன்
49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.
49:11 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّۚ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِؕ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ ۚ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا يَسْخَرْ பரிகாசம் செய்ய வேண்டாம் قَوْمٌ ஒரு கூட்டம் مِّنْ قَوْمٍ இன்னொரு கூட்டத்தை عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا அவர்கள் இருக்கலாம் خَيْرًا சிறந்தவர்களாக مِّنْهُمْ இவர்களை விட وَلَا نِسَآءٌ பெண்களும் பரிகாசம் செய்ய வேண்டாம் مِّنْ نِّسَآءٍ பெண்களை عَسٰٓى اَنْ يَّكُنَّ அவர்கள் இருக்கலாம் خَيْرًا சிறந்தவர்களாக مِّنْهُنَّۚ இவர்களை விட وَلَا تَلْمِزُوْۤا இன்னும் குத்திப் பேச வேண்டாம் اَنْفُسَكُمْ உங்களை وَلَا تَنَابَزُوْا பட்டப் பெயர் சூட்டாதீர்கள் بِالْاَلْقَابِؕ தீய பட்டப் பெயர்களைக் கொண்டு بِئْسَ الِاسْمُ பெயர்களில் மிக கெட்டது الْفُسُوْقُ பாவிகள் بَعْدَ பின்னர் الْاِيْمَانِ ۚ நம்பிக்கை கொண்டதன் وَمَنْ لَّمْ يَتُبْ யார் திருந்தி திரும்பவில்லையோ فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள்
49:11. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா யஸ்கர் கவ்மும் மின் கவ்மின் 'அஸா அ(ன்)ய்யகூனூ கய்ரம் மின்ஹும் வலா னிஸா'உம் மின் னிஸா'இன் 'அஸா அய் யகுன்ன கய்ரம் மின்ஹுன்ன வலா தல்மிZஜூ அன்Fபுஸகும் வலா தனாBபZஜூ Bபில் அல்காBப்; Bபி'ஸல் இஸ்முல் Fபுஸூகு Bபஃதல் ஈமான்; வ மல்-லம் யதுBப் Fப-உலா'இக ஹுமுள் ளாலிமூன்
49:11. முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
49:12 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اجْتَنِبُوْا தவிர்த்துவிடுங்கள்! كَثِيْرًا அதிகமானவற்றை مِّنَ الظَّنِّ எண்ணங்களில் اِنَّ بَعْضَ நிச்சயமாக சில الظَّنِّ எண்ணங்களில் اِثْمٌ பாவமாகும் وَّلَا تَجَسَّسُوْا ஆராயாதீர்கள்! وَلَا يَغْتَبْ புறம் பேசவேண்டாம் بَّعْضُكُمْ உங்களில் சிலர் بَعْضًا ؕ சிலரைப் பற்றி اَ يُحِبُّ விரும்புவாரா? اَحَدُكُمْ உங்களில் ஒருவர் اَنْ يَّاْكُلَ சாப்பிட لَحْمَ மாமிசத்தை اَخِيْهِ தன் சகோதரனின் مَيْتًا இறந்த நிலையில் فَكَرِهْتُمُوْهُ ؕ அதை நீங்கள் வெறுப்பீர்களே! وَاتَّقُوا அஞ்சிக்கொள்ளுங்கள்! اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் تَوَّابٌ தவ்பாவை அங்கீகரிப்பவன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
49:12. யா அய்யுஹல் லதீன ஆமனுஜ் தனிBபூ கதீரம் மினள் ளன்னி இன்ன Bபஃளள் ளன்னி இத்மு(ன்)வ் வலா தஜஸ்ஸஸூ வ ல யக்தBப் Bபஃளுகும் Bபஃளா; அ யுஹிBப்Bபு அஹதுகும் அ(ன்)ய் யாகுல லஹ்ம அகீஹி மய்தன் Fபகரிஹ் துமூஹ்; வத்தகுல் லா; இன்னல் லாஹ தவ்வாBபுர் ரஹீம்
49:12. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
49:13 يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ
يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! اِنَّا நிச்சயமாக நாம் خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் مِّنْ ذَكَرٍ ஓர் ஆணிலிருந்து وَّاُنْثٰى இன்னும் ஒரு பெண் وَجَعَلْنٰكُمْ இன்னும் உங்களை நாம் ஆக்கினோம் شُعُوْبًا பல நாட்டவர்களாக(வும்) وَّقَبَآٮِٕلَ பல குலத்தவர்களாகவும் لِتَعَارَفُوْا ؕ நீங்கள் ஒருவர் ஒருவரை அறிவதற்காக اِنَّ நிச்சயமாக اَكْرَمَكُمْ உங்களில் மிக கண்ணியமானவர் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் اَ تْقٰٮكُمْ ؕ உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் خَبِيْرٌ ஆழ்ந்தறிபவன்
49:13. யா அய்யுஹன் னாஸு இன்னா கலக்னாகும் மின் தகரி(ன்)வ் வ உன்தா வ ஜ'அல்னாகும் ஷு'ஊBப(ன்)வ் வ கBபா'இல லித'ஆரFபூ இன்ன அக்ரமகும் 'இன்தல் லாஹி அத்காகும் இன்னல் லாஹ 'அலீமுன் கBபீர்
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
49:14 قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ؕ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰـكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِىْ قُلُوْبِكُمْ ۚ وَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـٴًــــا ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
قَالَتِ கூறுகின்றனர் الْاَعْرَابُ கிராமத்து அரபிகள் اٰمَنَّا ؕ நாங்கள் ஈமான் கொண்டோம் قُلْ நீர் கூறுவீராக! لَّمْ تُؤْمِنُوْا நீங்கள் ஈமான் கொள்ளவில்லை وَلٰـكِنْ என்றாலும் قُوْلُوْۤا கூறுங்கள்! اَسْلَمْنَا நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம் وَلَمَّا يَدْخُلِ நுழையவில்லை الْاِيْمَانُ ஈமான் فِىْ قُلُوْبِكُمْ ۚ உங்கள் உள்ளங்களில் وَاِنْ تُطِيْعُوا நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால் اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் لَا يَلِتْكُمْ உங்களுக்கு குறைக்க மாட்டான் مِّنْ اَعْمَالِكُمْ உங்கள் செயல்களில் شَيْـٴًــــا ؕ எதையும் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
49:14. காலதில்-அஃராBபு ஆமன்னா குல் லம் து'மினூ வ லாகின் கூலூ அஸ்லம்னா வ லம்ம யத்குலில் ஈமானு Fபீ குலூBபிகும் வ இன் துதீ'உல் லாஹ வ ரஸூலஹூ லா யலித்கும் மின் அ'மாலிகும் ஷய்'ஆ; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
49:14. “நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
49:15 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் எல்லாம் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِاللّٰهِ அல்லாஹ்வை(யும்) وَرَسُوْلِهٖ அவனது தூதரையும் ثُمَّ பிறகு لَمْ يَرْتَابُوْا அவர்கள் சந்தேகிக்கவில்லை وَجَاهَدُوْا இன்னும் போரிடுகிறார்கள் بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களாலும் وَاَنْفُسِهِمْ தங்கள் உயிர்களாலும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ ؕ اُولٰٓٮِٕكَ هُمُ அல்லாஹ்வின்/அத்தகையவர்கள்தான் الصّٰدِقُوْنَ உண்மையாளர்கள்
49:15. இன்னமல் முஉ'மினூனல் லதீன ஆமனூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ தும்ம லம் யர்தாBபூ வ ஜாஹதூ Bபிஅம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹ்; உலாஇக ஹுமுஸ் ஸாதிகூன்
49:15. நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.
49:16 قُلْ اَ تُعَلِّمُوْنَ اللّٰهَ بِدِيْـنِكُمْ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
قُلْ கூறுவீராக! اَ تُعَلِّمُوْنَ அறிவிக்கின்றீர்களா? اللّٰهَ அல்லாஹ்விற்கு بِدِيْـنِكُمْ ؕ உங்கள் நம்பிக்கையை وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவற்றை(யும்) وَمَا فِى الْاَرْضِؕ பூமியில் உள்ளவற்றையும் وَاللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ நன்கறிந்தவன்
49:16. குல் அது'அல்லிமூனல் லாஹ Bபிதீனிகும் வல்லாஹு யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ள்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
49:16. “நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
49:17 يَمُنُّوْنَ عَلَيْكَ اَنْ اَسْلَمُوْا ؕ قُلْ لَّا تَمُنُّوْا عَلَىَّ اِسْلَامَكُمْ ۚ بَلِ اللّٰهُ يَمُنُّ عَلَيْكُمْ اَنْ هَدٰٮكُمْ لِلْاِيْمَانِ اِنْ كُنْـتُمْ صٰدِقِيْنَ
يَمُنُّوْنَ உபகாரமாக கூறுகின்றனர் عَلَيْكَ உம்மீது اَنْ اَسْلَمُوْا ؕ தாங்கள் முஸ்லிம்களாக ஆனதை قُلْ நீர் கூறுவீராக! لَّا تَمُنُّوْا உபகாரமாக கூறாதீர்கள் عَلَىَّ என் மீது اِسْلَامَكُمْ ۚ உங்கள் இஸ்லாமை بَلِ மாறாக اللّٰهُ அல்லாஹ்தான் يَمُنُّ உபகாரமாகக் கூறுகின்றான் عَلَيْكُمْ உங்கள் மீது اَنْ هَدٰٮكُمْ அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக لِلْاِيْمَانِ ஈமானின் பக்கம் اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
49:17. யமுன்னூன 'அலய்க அன் அஸ்லமூ குல் லா தமுன்னூ 'அலய்ய இஸ்லாமகும் Bபலில்லாஹு யமுன்னு 'அலய்கும் அன் ஹதாகும் லில் ஈமானி இன் குன்தும் ஸாதிகீன்
49:17. அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
49:18 اِنَّ اللّٰهَ يَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் غَيْبَ மறைவான விஷயங்களை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِؕ இன்னும் பூமியின் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்கின்றவற்றை
49:18. இன்னல் லாஹ யஃலமு கய்Bபஸ் ஸமாவாதி வல் அர்ள்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா தஃமலூன்
49:18. “நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை பார்த்துக் கொண்டிருக்கின்றான்.