டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 11. ஸூரத்து ஹூது
மக்கீ, வசனங்கள்: 123
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
11:1 الٓرٰ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ
الٓرٰ அலிஃப்; லாம்; றா. كِتٰبٌ ஒரு வேத நூல் اُحْكِمَتْ உறுதியாக்கப்பட்டன اٰيٰـتُهٗ இதன் வசனங்கள் ثُمَّ பிறகு فُصِّلَتْ தெளிவாக்கப்பட்டன مِنْ இருந்து لَّدُنْ இடம், புறம் حَكِيْمٍ மகா ஞானவான் خَبِيْرٍۙ ஆழ்ந்தறிபவன்
11:1. அலிFப்-லாம்-ரா; கிதாBபுன் உஹ்கிமத் ஆயாதுஹூ தும்ம Fபுஸ்ஸிலத் மில் லதுன் ஹகீமின் கBபீர்
11:1. அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு, பின்னர் இவை நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனிடமிருந்து விவரிக்கப்பட்டுள்ளன.
11:2 اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنَّنِىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ وَّبَشِيْرٌ ۙ
اَلَّا تَعْبُدُوْۤا வணங்காதீர்கள் என்று اِلَّا اللّٰهَ ؕ அல்லாஹ்வைத் தவிர اِنَّنِىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளன் وَّبَشِيْرٌ ۙ இன்னும் நற்செய்தியாளன்
11:2. அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ்; இன்னனீ லகும் மின்ஹு னதீரு(ன்)வ் வ Bபஷீர்
11:2. நீங்கள் அல்லாஹ்வையேயன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்! (என்றும்)
11:3 وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَ يُؤْتِ كُلَّ ذِىْ فَضْلٍ فَضْلَهٗ ؕ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ
وَّاَنِ اسْتَغْفِرُوْا இன்னும் பாவமன்னிப்புக் கோருங்கள் என்று رَبَّكُمْ உங்கள் இறைவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திரும்புங்கள் اِلَيْهِ அவன் பக்கம் يُمَتِّعْكُمْ சுகமளிப்பான்/உங்களை مَّتَاعًا ஒரு சுகம் حَسَنًا அழகியது اِلٰٓى வரை اَجَلٍ ஒரு காலம் مُّسَمًّى குறிப்பிடப்பட்டது وَ يُؤْتِ இன்னும் கொடுப்பான் كُلَّ ஒவ்வொரு ذِىْ فَضْلٍ அதிகமுடையவருக்கு فَضْلَهٗ அவருடைய அதிகத்தை وَاِنْ تَوَلَّوْا நீங்கள் புறக்கணித்தால் فَاِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் كَبِيْرٍ மாபெரும்
11:3. வ அனிஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹி யுமத்திஃகும் மதா'அன் ஹஸனன் இலா அஜலிம் முஸம்ம(ன்)வ் வ யு'தி குல்ல தீ Fபள்லின் Fபள்லஹூ வ இன் தவல்லவ் Fப இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் கBபீர்
11:3. "நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு அழகிய வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், நற்செயல் உடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) அவனுடைய வெகுமதியைக் கொடுப்பான்; ஆனால், நீங்கள் (நம்பிக்கை கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்."
11:4 اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
اِلَى பக்கமே اللّٰهِ அல்லாஹ்வின் مَرْجِعُكُمْۚ உங்கள் மீளுமிடம் وَهُوَ அவன் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
11:4. இலல் லாஹி மர்ஜி'உகும் வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
11:4. "அல்லாஹ்வின் பக்கமே உங்களுடைய மீளுமிடம் இருக்கிறது; அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்" (என்றும் நபியே நீர் கூறுவீராக).
11:5 اَلَاۤ اِنَّهُمْ يَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِيَسْتَخْفُوْا مِنْهُؕ اَلَا حِيْنَ يَسْتَغْشُوْنَ ثِيَابَهُمْۙ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَۚ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
اَلَاۤ அறிவீராக اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் يَثْنُوْنَ திருப்புகின்றனர் صُدُوْرَهُمْ நெஞ்சங்களை/தங்கள் لِيَسْتَخْفُوْا அவர்கள் மறைப்பதற்காக مِنْهُؕ அவனிடமிருந்து اَلَا அறிவீராக حِيْنَ நேரம், சமயம் يَسْتَغْشُوْنَ மறைத்துக் கொள்கிறார்கள் ثِيَابَهُمْۙ தங்கள் ஆடைகளால் يَعْلَمُ அறிகின்றான் مَا எதை يُسِرُّوْنَ மறைக்கிறார்கள் وَمَا இன்னும் எதை يُعْلِنُوْنَۚ பகிரங்கப்படுத்துகிறார்கள் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிபவன் بِذَاتِ الصُّدُوْرِ நெஞ்சங்களில் உள்ளவற்றை
11:5. அலா இன்னஹும் யத்னூன ஸுதூரஹும் லியஸ்தக்Fபூ மின்ஹ்; அலா ஹீன யஸ்தக்ஷூன தியாBபஹும் யஃலமு மா யுஸிர்ரூன வமா யுஃலினூன்; இன்னஹூ 'அலீமுன் Bபிதாதிஸ் ஸுதூர்
11:5. அறிந்துகொள்ளுங்கள்! "அவர்கள் தங்களை (அல்லாஹ்வாகிய) அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தங்களுடைய நெஞ்சங்களை (மறைத்து) மூடுகிறார்கள். அறிந்துகொள்ளுங்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மை) மூடிக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் மறைத்துவைப்பதையும், பகிரங்கமாக்குவதையும் அவன் அறிகிறான்; ஏனெனில், நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான் (என்பதை அறிந்துகொள்வீர்களாக)!"
11:6 وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَاؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
وَمَا இல்லை مِنْ دَآ بَّةٍ எந்த/ஓர் உயிரினம் فِى الْاَرْضِ பூமியில் اِلَّا தவிர عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் رِزْقُهَا அதற்கு உணவளிப்பது وَ يَعْلَمُ இன்னும் அறிகின்றான் مُسْتَقَرَّهَا அவற்றின் தங்குமிடத்தை وَمُسْتَوْدَعَهَاؕ இன்னும் அவற்றின் அடங்குமிடத்தை كُلٌّ எல்லாம் فِىْ كِتٰبٍ பதிவேட்டில் مُّبِيْنٍ தெளிவான(து)
11:6. வமா மின் தாBப்Bபதின் Fபில் அர்ளி இல்லா 'அலல் லாஹி ரிZஜ்குஹா வ யஃலமு முஸ்தகர்ரஹா வ முஸ்தவ்த'அஹா; குல்லுன் Fபீ கிதாBபிம் முBபீன்
11:6. இன்னும், எந்த உயிரினமும் - அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தேதவிர பூமியில் இல்லை; மேலும், அவை தங்கும் இடத்தையும் அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்; இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
11:7 وَ هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَ يَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَآءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَٮِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
وَ هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை فِىْ இல் سِتَّةِ ஆறு اَ يَّامٍ நாள்கள் وَّكَانَ இன்னும் இருந்தது عَرْشُهٗ அவனுடைய அர்ஷு عَلَى மீது الْمَآءِ நீர் لِيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக اَيُّكُمْ உங்களில் யார் اَحْسَنُ மிக அழகியவர் عَمَلًا ؕ செயலால் وَلَٮِٕنْ قُلْتَ நீர் கூறினால் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مَّبْعُوْثُوْنَ எழுப்பப்படுவீர்கள் مِنْۢ بَعْدِ பின்னர் الْمَوْتِ இறப்பு لَيَـقُوْلَنَّ நிச்சயம் கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِنْ இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியமே مُّبِيْنٌ பகிரங்கமான(து)
11:7. வ ஹுவல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமி(ன்)வ் வ கான 'அர்ஷுஹூ அலல் மா'இ லியBப்லுவகும் அய்யுகும் அஹ்ஸனு 'அமலா; வ ல'இன் குல்த இன்னகும் மBப்'ஊதூன மின் Bபஃதில் மவ்தி ல யகூலன்னல் லதீன கFபரூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; அவனுடைய 'அர்ஷ்' (அரியாசனம்) நீரின் மேல் இருந்தது; உங்களில் யார் செயலால் அழகானவர்? என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும், நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால் (அதற்கு) நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
11:8 وَلَٮِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰٓى اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّيَـقُوْلُنَّ مَا يَحْبِسُهٗؕ اَلَا يَوْمَ يَاْتِيْهِمْ لَـيْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَلَٮِٕنْ اَخَّرْنَا நாம் பிற்படுத்தினால் عَنْهُمُ அவர்களை விட்டு الْعَذَابَ வேதனையை اِلٰٓى வரை اُمَّةٍ ஒரு காலம் مَّعْدُوْدَةٍ எண்ணப்பட்டது لَّيَـقُوْلُنَّ நிச்சயம் கூறுவார்கள் مَا எது? يَحْبِسُهٗؕ தடுக்கின்றது/அதை اَلَا அறிந்துகொள்ளுங்கள்! يَوْمَ நாளில் يَاْتِيْهِمْ அது வரும்/அவர்களிடம் لَـيْسَ مَصْرُوْفًا அறவே திருப்பப்படாது عَنْهُمْ அவர்களை விட்டு وَحَاقَ இன்னும் சூழும் بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ பரிகாசம்செய்கின்றனர்
11:8. வல'இன் அகர்னா 'அன்ஹுமுல் 'அதாBப இலா உம்மதிம் மஃதூததில் ல யகூலுன்ன மா யஹ்Bபிஸுஹ்; அலா யவ்ம ய'தீஹிம் லய்ஸ மஸ்ரூFபன் 'அன்ஹும் வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
11:8. (நிராகரிப்பின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்களைவிட்டும் வேதனையை நாம் பிற்படுத்தினால் "அதைத் தடுத்தது யாது?" என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்கு அ(வ் வேதனையான)து வரும் நாளில் அவர்களை விட்டும், அது தடுக்கப்படுவதாக இல்லை; இன்னும், எதை அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
11:9 وَلَٮِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُۚ اِنَّهٗ لَيَــــٴُـوْسٌ كَفُوْرٌ
وَلَٮِٕنْ اَذَقْنَا நாம் சுவைக்க வைத்தால் الْاِنْسَانَ மனிதனுக்கு مِنَّا நம்மிடமிருந்து رَحْمَةً ஓர் அருளை ثُمَّ பிறகு نَزَعْنٰهَا நீக்கினோம்/அதை مِنْهُۚ அவனிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் لَيَــــٴُـوْسٌ நிராசையாளனாக كَفُوْرٌ நன்றி கெட்டவனாக
11:9. வ ல'இன் அதக்னல் இன்ஸான மின்னா ரஹ்மதன் தும்ம னZஜ'னாஹா மின்ஹு, இன்னஹூ லய'ஊஸுன் கFபூர்
11:9. நாம் நம்மிடமிருந்து ஓர் அருளை மனிதனுக்குச் சுவைக்கச் செய்து, பின்பு அவனிடமிருந்து அதனை நாம் நீக்கிவிட்டால், நிச்சயமாக அவன் நிராசையடைந்தவனாகவும், நன்றிகெட்டவனாகவும் ஆகிவிடுகின்றான்.
11:10 وَلَٮِٕنْ اَذَقْنٰهُ نَـعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَـقُوْلَنَّ ذَهَبَ السَّيِّاٰتُ عَنِّىْ ؕ اِنَّهٗ لَـفَرِحٌ فَخُوْرٌۙ
وَلَٮِٕنْ اَذَقْنٰهُ நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் نَـعْمَآءَ இன்பத்தை بَعْدَ பின்னர் ضَرَّآءَ துன்பம் مَسَّتْهُ அவனுக்கு ஏற்பட்ட(து) لَيَـقُوْلَنَّ நிச்சயம் கூறுவான் ذَهَبَ சென்றன السَّيِّاٰتُ தீமைகள் عَنِّىْ ؕ என்னை விட்டு اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـفَرِحٌ மகிழ்பவனாக فَخُوْرٌۙ தற்பெருமையாளனாக
11:10. வல'இன் அதக்னாஹு னஃமா'அ Bபஃத ளர்ரா'அ மஸ்ஸத் ஹு ல யகூலன்ன தஹBபஸ் ஸய்யிஆது 'அன்னீ; இன்னஹூ லFபரிஹுன் Fபகூர்
11:10. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவனுக்குச் சுவைக்கச் செய்தால், "என்னைவிட்டுத் தீங்குகளெல்லாம் போய்விட்டன" என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
11:11 اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் صَبَرُوْا சகித்தார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِؕ நன்மைகளை اُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு وَّاَجْرٌ இன்னும் கூலி كَبِيْرٌ பெரிய(து)
11:11. இல்லல் லதீன ஸBபரூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி உலா'இக லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
11:11. (ஆனால், துன்பங்கள் ஏற்படும் நேரத்தில்) எவர்கள் பொறுமையாய் இருந்து நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களைத் தவிர; அத்தகையோர் - அவர்களுக்கு மன்னிப்பும், மாபெரும் (நற்) கூலியும் உண்டு.
11:12 فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوْحٰٓى اِلَيْكَ وَضَآٮِٕقٌ ۢ بِهٖ صَدْرُكَ اَنْ يَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ ؕ اِنَّمَاۤ اَنْتَ نَذِيْرٌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ ؕ
فَلَعَلَّكَ நீர் ஆகலாம் تَارِكٌۢ விட்டுவிடக்கூடிய வராக بَعْضَ சிலவற்றை مَا எவை يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَيْكَ உமக்கு وَضَآٮِٕقٌ ۢ இன்னும் நெருக்கடியாக بِهٖ அதன் மூலம் صَدْرُكَ நெஞ்சம்/உம் اَنْ يَّقُوْلُوْا அவர்கள் கூறுவது لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْهِ அவருக்கு كَنْزٌ ஒரு பொக்கிஷம் اَوْ அல்லது جَآءَ வரவேண்டாமா مَعَهٗ அவருடன் مَلَكٌ ؕ ஒரு வானவர் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் نَذِيْرٌ ؕ ஓர் எச்சரிப்பாளர்தான் وَاللّٰهُ அல்லாஹ்தான் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் وَّكِيْلٌ ؕ பொறுப்பாளன்
11:12. Fபல'அல்லக தாரிகும் Bபஃள மா யூஹா இலய்க வ ளா'இகும் Bபிஹீ ஸத்ருக அய் யகூலூ லவ் லா உன்Zஜில 'அலய்ஹி கன்Zஜுன் அவ் ஜா'அ ம'அஹூ மலக்; இன்னமா அன்த னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இ(ன்)வ் வகீல்
11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சலித்து) 'வஹீ' மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலவற்றை விட்டுவிடுபவராய் நீர் ஆகிவிடுவீர் போலும்! "அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?" என்று அவர்கள் கூறுவதினால் உம்முடைய நெஞ்சம் அது பற்றி நெருக்கடியானதாக ஆகிவிடக்கூடும்: நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே! அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
11:13 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ ؕ قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَيٰتٍ وَّ ادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
اَمْ அல்லது يَقُوْلُوْنَ அவர்கள் கூறுகிறார்கள் افْتَـرٰٮهُ அவர் புனைந்தார்/இதை قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِعَشْرِ கொண்டு/பத்து سُوَرٍ அத்தியாயங்கள் مِّثْلِهٖ இது போன்ற مُفْتَرَيٰتٍ புனையப்பட்டவை وَّ ادْعُوْا இன்னும் நீங்கள் அழையுங்கள் مَنِ எவர் اسْتَطَعْتُمْ சாத்தியப்பட்டீர்கள் مِّنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
11:13. அம் யகூலூனFப் தராஹு குல் Fபாதூ Bபி'அஷ்ரி ஸுவரிம் மித்லிஹீ முFப்தரயாதி(ன்)வ் வத்'ஊ மனிஸ் ததஃதும் மின் தூனில் லாஹி இன் குன்தும் ஸாதிகீன்
11:13. அல்லது "இ(வ்வேதத்)தை அவர் (பொய்யாக) கற்பனை செய்துகொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "(அப்படியானால்,) நீங்களும் இதைப்போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களைக் கொண்டுவாருங்கள்: நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர்த்து, உங்களுக்குச் சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணைசெய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
11:14 فَاِلَّمْ يَسْتَجِيْبُوْا لَـكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ
فَاِلَّمْ يَسْتَجِيْبُوْا அவர்கள் பதில் அளிக்கவில்லையெனில் لَـكُمْ உங்களுக்கு فَاعْلَمُوْۤا அறியுங்கள் اَنَّمَاۤ எல்லாம் اُنْزِلَ இறக்கப்பட்டது بِعِلْمِ அறிவைக் கொண்டே اللّٰهِ அல்லாஹ்வின் وَاَنْ لَّاۤ இன்னும் நிச்சயமாக இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَۚ அவன் فَهَلْ ஆகவே اَنْتُمْ مُّسْلِمُوْنَ நீங்கள் முஸ்லிம்கள்
11:14. Fப இல் லம் யஸ்தஜீBபூ லகும் Fபஃலமூ அன்னமா உன்Zஜில்ல Bபி'இல்மில் லாஹி வ அல் லா இலாஹ இல்லா ஹுவ Fபஹல் அன்தும் முஸ்லிமூன்
11:14. அவர்கள் உங்களுக்கு பதிலளிக்காவிட்டால்: "அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக்கொண்டே அருளப்பட்டது; இன்னும், (வணக்கத்திற்குரியவன்) அவனைத்தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை; இனியேனும், நீங்கள் (அல்லாஹ்விற்கு) கட்டுப்படுவீர்களா?" (என்று கேளுங்கள்.)
11:15 مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَ زِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ
مَنْ எவர்(கள்) كَانَ இருந்தார்(கள்) يُرِيْدُ நாடுவார்(கள்) الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا உலக(ம்) وَ زِيْنَتَهَا இன்னும் அதன் அலங்காரத்தை نُوَفِّ முழுமையாக கூலி தருவோம் اِلَيْهِمْ அவர்களுக்கு اَعْمَالَهُمْ அவர்களின் செயல்களை فِيْهَا அதில் وَهُمْ அவர்கள் فِيْهَا அதில் لَا يُبْخَسُوْنَ குறைக்கப்பட மாட்டார்கள்
11:15. மன் கான யுரீதுல் ஹயாதத் துன்யா வ Zஜீனதஹா னுவFப்Fபி இலய்ஹிம் அ'மா லஹும் Fபீஹா வ ஹும் Fபீஹா லா யுBப்கஸூன்
11:15. எவரேனும், இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடுபவராக இருப்பாரானால், இதிலேயே அவர்களுடைய செயல்களுக்குரிய பலன்களை அவர்களுக்கு நாம் நிறைவாக்குவோம்; அவர்கள் அதில் குறைவு செய்யப்படமாட்டார்கள்.
11:16 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَـيْسَ لَهُمْ فِىْ الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖ وَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَـيْسَ இல்லை لَهُمْ அவர்களுக்கு فِىْ الْاٰخِرَةِ மறுமையில் اِلَّا النَّارُ ۖ தவிர/நெருப்பு وَحَبِطَ இன்னும் அழிந்தன مَا எவை صَنَعُوْا அவர்கள் செய்தனர் فِيْهَا அதில் وَبٰطِلٌ இன்னும் வீணானவையே مَّا எவை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்வார்கள்
11:16. உலா'இகல் லதீன லய்ஸ லஹும் Fபில் ஆகிரதி இல்லன் னாரு வ ஹBபித மா ஸன'ஊ Fபீஹா வ Bபாதிலும் மா கானூ யஃமலூன்
11:16. இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை; இதில் (உலக வாழ்வில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன; அவர்கள் செய்துகொண்டிருப்பவையும் வீணானவையே!
11:17 اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَيَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ يَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّنْهُ اِنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ
اَفَمَنْ எவர்(கள்)? كَانَ இருக்கின்றார்(கள்) عَلٰى மீது بَيِّنَةٍ தெளிவான அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّهٖ தன் இறைவன் وَيَتْلُوْهُ இன்னும் ஓதுகிறார்/அதை شَاهِدٌ சாட்சியாளர் مِّنْهُ அவன் புறத்திலிருந்து وَمِنْ قَبْلِهٖ இன்னும் அதற்கு முன்னர் كِتٰبُ வேதம் مُوْسٰٓى மூஸாவின் اِمَامًا வழிகாட்டியாக وَّرَحْمَةً ؕ இன்னும் அருளாக اُولٰٓٮِٕكَ அவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِهٖ ؕ இதை وَمَنْ எவர் يَّكْفُرْ நிராகரிப்பார் بِهٖ இதை مِنَ الْاَحْزَابِ கூட்டங்களில் فَالنَّارُ நரகம் مَوْعِدُهٗ ۚ அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும் فَلَا تَكُ இருக்காதீர் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில் مِّنْهُ இதில் اِنَّهُ நிச்சயமாக இது الْحَـقُّ உண்மைதான் مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ பலர் النَّاسِ மக்களில் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
11:17. அFபமன் கான 'அல Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ வ யத்லூஹு ஷாஹிதும் மின்ஹு வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ் வ ரஹ்மஹ்; உலா 'இக யு'மினூன Bபிஹ்; வ மய் யக்Fபுர் Bபிஹீ மினல் அஹ்ZஜாBபி Fபன் னாரு மவ்'இதுஹ்; Fபலா தகு Fபீ மிர்யதிம் மின்ஹ்; இன்னஹுல் ஹக்கு மிர் ரBப்Bபிக வ லாகின்ன அக்தரன் னாஸி லா யு'மினூன்
11:17. தன்னுடைய இறைவனிடமிருந்துள்ள (குர்ஆன் எனும்) தெளிவான ஆதாரத்தின்மீது இருந்து, அவனிலிருந்து (-இறைவனிடமிருந்து அதனை மெய்ப்பிக்கும்) சாட்சியும் அதனைத் தொடர, இன்னும், (குர்ஆனாகிய) அதற்கு முன்னால் உள்ள மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும், அருளாகவும் கிடைக்கப் பெற்றிருக்கும் ஒருவரா (இவை கிடைக்கப் பெறாதவருக்குச் சமமாவார்? 'இல்லை'); அவர்கள்தான் இதனை நம்புவார்கள்: ஆனால், (இக்)கூட்டத்தார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (நரக)நெருப்பேயாகும்; ஆதலால், (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்கவேண்டாம்; இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
11:18 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا ؕ اُولٰٓٮِٕكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَ يَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْ ۚ اَلَا لَـعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَۙ
وَمَنْ யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنِ எவரைவிட افْتَـرٰى புனைந்தார் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا ؕ பொய்யை اُولٰٓٮِٕكَ அவர்கள் يُعْرَضُوْنَ அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள் عَلٰى முன் رَبِّهِمْ தங்கள் இறைவன் وَ يَقُوْلُ கூறுவார்(கள்) الْاَشْهَادُ சாட்சியாளர்கள் هٰٓؤُلَاۤءِ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَذَبُوْا பொய்யுரைத்தார்கள் عَلٰى மீது رَبِّهِمْ ۚ தங்கள் இறைவன் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! لَـعْنَةُ சாபம் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَى மீது الظّٰلِمِيْنَۙ அநியாயக்காரர்கள்
11:18. வ மன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபா; உலா'இக யுஃரளூன 'அலா ரBப்Bபிஹிம் வ யகூலுல் அஷ்ஹா துஹா'உலா'இல் லதீன கதBபூ 'அலா ரBப்Bபிஹிம்; அலா லஃனதுல் லாஹி அலள் ளாலிமீன்
11:18. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள்: "இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்" என்று 'சாட்சிகள்' சொல்வார்கள்; அறிந்துகொள்ளுங்கள்! இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.
11:19 الَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًا ؕ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ
الَّذِيْنَ எவர்கள் يَصُدُّوْنَ தடுப்பார்கள் عَنْ விட்டு سَبِيْلِ பாதை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَبْغُوْنَهَا இன்னும் தேடுவார்கள்/அதில் عِوَجًا ؕ கோணலை وَهُمْ அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ அவர்கள் كٰفِرُوْنَ நிராகரிப்பவர்கள்
11:19. அல்லதீன யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வ யBப்கூனஹா 'இவஜ(ன்)வ் வ ஹும் Bபில் ஆகிரதிஹும் காFபிரூன்
11:19. அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையைவிட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும், அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள்; இவர்கள்தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
11:20 اُولٰٓٮِٕكَ لَمْ يَكُوْنُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَآءَ ۘ يُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ؕ مَا كَانُوْا يَسْتَطِيْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا يُبْصِرُوْنَ
اُولٰٓٮِٕكَ அவர்கள் لَمْ يَكُوْنُوْا அவர்கள் இருக்கவில்லை مُعْجِزِيْنَ பலவீனப்படுத்து பவர்களாக فِى الْاَرْضِ பூமியில் وَمَا كَانَ இன்னும் இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ اَوْلِيَآءَ ۘ உதவியாளர்கள்எவரும் يُضٰعَفُ பன்மடங்காக்கப்படும் لَهُمُ அவர்களுக்கு الْعَذَابُ ؕ வேதனை مَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை يَسْتَطِيْعُوْنَ சக்தி பெறுகிறார்கள் السَّمْعَ செவியேற்க وَمَا كَانُوْا இன்னும் அவர்கள் இருக்கவில்லை يُبْصِرُوْنَ பார்ப்பவர்களாக
11:20. உலா'இக லம் யகூனூ முஃஜிZஜீன Fபில் அர்ளி வமா கான லஹும் மின் தூனில் லாஹி மின் அவ்லியா'; யுளா'அFபு லஹுமுல் 'அதாBப்; மா கானூ யஸ்ததீ'ஊனஸ் ஸம்'அ வமா கானூ யுBப்ஸிரூன்
11:20. இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்துவிடமுடியாது; அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இவர்கள் (நல்லவற்றைச்) செவியேற்கச் சக்தியுடையோராக இருக்கவில்லை; இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.
11:21 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் خَسِرُوْۤا நட்டமடைந்தார்கள் اَنْفُسَهُمْ தமக்குத் தாமே وَضَلَّ இன்னும் மறைந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ அவர்கள் புனைவார்கள்
11:21. உலா'இகல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
11:21. இவர்கள்தாம், தங்களுக்குத் தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்துகொண்டிருந்தவையாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களைவிட்டு மறைந்துவிடும்.
11:22 لَا جَرَمَ اَ نَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ
لَا جَرَمَ சந்தேகமின்றி اَ نَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِى الْاٰخِرَةِ மறுமையில் هُمُ الْاَخْسَرُوْنَ மகா நஷ்டவாளிகள்
11:22. லா ஜரம அன்னஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் அக்ஸரூன்
11:22. நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை.
11:23 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَـتُوْۤا اِلٰى رَبِّهِمْۙ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை وَاَخْبَـتُوْۤا இன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள் اِلٰى பக்கம் رَبِّهِمْۙ தங்கள் இறைவனின் اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِؕ சொர்க்கவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ நிரந்தரமானவர்கள்
11:23. இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ அக்Bபதூ இலா ரBப்Bபிஹிம் உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
11:23. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, இன்னும் தங்கள் இறைவனுக்கு (முற்றிலும்) அடிபணிந்தார்களோ அவர்களே சுவர்க்கபதிக்குரியவர்கள்; அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
11:24 مَثَلُ الْفَرِيْقَيْنِ كَالْاَعْمٰى وَالْاَصَمِّ وَالْبَـصِيْرِ وَالسَّمِيْعِ ؕ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
مَثَلُ உதாரணம் الْفَرِيْقَيْنِ இரு பிரிவினரின் كَالْاَعْمٰى குருடனைப் போன்று وَالْاَصَمِّ இன்னும் செவிடன் وَالْبَـصِيْرِ இன்னும் பார்ப்பவன் وَالسَّمِيْعِ ؕ இன்னும் கேட்பவன் هَلْ يَسْتَوِيٰنِ இருவரும் சமமாவார்களா? مَثَلًا ؕ உதாரணத்தால் اَفَلَا تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
11:24. மதலுல் Fபரீகய்னி கல் அஃமா வல் அஸம்மி வல்Bபஸீரி வஸ்ஸமீ'; ஹல் யஸ்தவியானி மதலா; அFபலா ததக்கரூன்
11:24. இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடனையும், செவிடனையும் (போலிருக்கின்றனர்; மற்றொரு பிரிவினர்) பார்வையுடையோனையும் செவியுடையோனையும் ஒத்திருக்கின்றனர்; இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்கவேண்டாமா?
11:25 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ நூஹை/அவருடைய மக்களிடம் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளன் مُّبِيْنٌۙ பகிரங்கமான
11:25. வ லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ இன்னீ லகும் னதீரும் முBபீன்
11:25. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பிவைத்தோம்; (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்."
11:26 اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ
اَنْ لَّا تَعْبُدُوْۤا நீங்கள் வணங்காதீர்கள் اِلَّا தவிர اللّٰهَؕ அல்லாஹ் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ நாளின் اَلِيْمٍ துன்புறுத்தக் கூடியது
11:26. அல் லா தஃBபுதூ இல்லல் லாஹ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் அலீம்
11:26. "நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள்; நிச்சயமாக நான் நோவினைதரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்" (என்று கூறினார்).
11:27 فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ
فَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் مَا நாம் பார்க்கவில்லை نَرٰٮكَ உம்மை اِلَّا தவிர بَشَرًا ஒரு மனிதராக مِّثْلَنَا எங்களைப் போன்ற وَمَا நாம் பார்க்கவில்லை نَرٰٮكَ உம்மை اتَّبَعَكَ பின்பற்றினார்/உம்மை اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் اَرَاذِلُــنَا எங்களில் மிக இழிவானவர்கள் بَادِىَ الرَّاْىِۚ வெளிப் பார்வையில் وَمَا نَرٰى நாங்கள்பார்க்கவில்லை لَـكُمْ உங்களுக்கு عَلَيْنَا எங்களைவிட مِنْ فَضْلٍۢ எந்த ஒரு மேன்மையையும் بَلْ نَظُنُّكُمْ மாறாக/கருதுகிறோம்/உங்களை كٰذِبِيْنَ பொய்யர்களாக
11:27. Fபகாலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ம னராக இல்லா Bபஷரம் மித்லனா வமா னராகத் தBப'அக இல்லல் லதீன ஹும் அராதிலுனா Bபாதியர் ராயி வமா னரா லகும் 'அலய்னா மின் Fபள்லின் Bபல் னளுன்னுகும் காதிBபீன்
11:27. அவருடைய சமூகத்தாரிலிருந்து நிராகரித்த தலைவர்கள் (அவரை நோக்கி), "நாம் உம்மை எங்களைப்போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானவர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றியதாகவும் நாம் உம்மைக் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்தவிதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை; மாறாக, உங்களை(யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள்.
11:28 قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَاٰتٰٮنِىْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّيَتْ عَلَيْكُمْؕ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْـتُمْ لَـهَا كٰرِهُوْنَ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَءَيْتُمْ நீங்கள் கவனித்தீர்களா? اِنْ كُنْتُ நான் இருந்து عَلٰى மீது بَيِّنَةٍ ஒரு தெளிவான அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّىْ என் இறைவன் وَاٰتٰٮنِىْ இன்னும் அளித்தான் எனக்கு رَحْمَةً அருளை مِّنْ தன்னிடம் عِنْدِهٖ இருந்து فَعُمِّيَتْ அவை மறைக்கப்பட்டன عَلَيْكُمْؕ உங்களுக்கு اَنُلْزِمُكُمُوْهَا நாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றை وَاَنْـتُمْ நீங்களும் لَـهَا அவற்றை كٰرِهُوْنَ வெறுப்பவர்களாக
11:28. கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ஆதானீ ரஹ்மதம் மின் 'இன்திஹீ Fப'உம் மியத் 'அலய்கும் அனுல்Zஜிமுகு மூஹா வ அன்தும் லஹா காரிஹூன்
11:28. (அதற்கு) அவர் (மக்களை நோக்கி), "என் சமூகத்தவர்களே! நீங்கள் எனக்குப் பதில் சொல்லுங்கள். நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து, அவனிடமிருந்து (தூதுத்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்குத் தந்திருந்து, அது உங்களுக்கு (அறிய முடியாமல்) மறைக்கப்பட்டுவிடுமானால், நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும்போது, அதனைப் (பின்பற்றுமாறு) நாங்கள் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?" என்று கூறினார்.
11:29 وَيٰقَوْمِ لَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مَالًا ؕاِنْ اَجْرِىَ اِلَّا عَلَى اللّٰهِ وَمَاۤ اَنَا بِطَارِدِ الَّذِيْنَ اٰمَنُوْا ؕ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰـكِنِّىْۤ اَرٰٮكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ
وَيٰقَوْمِ என் மக்களே لَاۤ நான் கேட்கவில்லை اَسْــٴَــلُكُمْ உங்களிடம் عَلَيْهِ இதன் மீது مَالًا ஒரு செல்வத்தை ؕاِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது وَمَاۤ இல்லை اَنَا நான் بِطَارِدِ விரட்டுபவனாக الَّذِيْنَ எவர்களை اٰمَنُوْا ؕ நம்பிக்கை கொண்டார்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مُّلٰقُوْا சந்திப்பவர்கள் رَبِّهِمْ தங்கள் இறைவனை وَلٰـكِنِّىْۤ என்றாலும் நிச்சயமாக நான் اَرٰٮكُمْ காண்கிறேன்/ உங்களை قَوْمًا மக்களாக تَجْهَلُوْنَ நீங்கள் அறிய மாட்டீர்கள்
11:29. வ யா கவ்மி லா அஸ்'அலுகும் 'அலய்ஹி மாலன் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லாஹ்; வ மா அன Bபிதாரிதில் லதீன ஆமனூ; இன்னஹும் முலாகூ ரBப்Bபிஹிம் வ லாகின்னீ அராகும் கவ்மன் தஜ்ஹலூன்
11:29. "அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே, நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால், உங்களை அறிவில்லாத சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்."
11:30 وَيٰقَوْمِ مَنْ يَّـنْصُرُنِىْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
وَيٰقَوْمِ என் மக்களே مَنْ யார்? يَّـنْصُرُنِىْ உதவுவார்/எனக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடத்தில் اِنْ طَرَدْتُّهُمْؕ நான் அவர்களை விரட்டினால் اَفَلَا تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
11:30. வ யா கவ்மி மய் யன்ஸுருனீ மினல் லாஹி இன் தரத்துஹும்; அFபலா ததக் கரூன்
11:30. "என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால், அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?"
11:31 وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ اِنِّىْ مَلَكٌ وَّلَاۤ اَقُوْلُ لِلَّذِيْنَ تَزْدَرِىْۤ اَعْيُنُكُمْ لَنْ يُّؤْتِيَهُمُ اللّٰهُ خَيْرًا ؕ اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِىْۤ اَنْفُسِهِمْ ۖۚ اِنِّىْۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ
وَلَاۤ اَقُوْلُ நான் கூறமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு عِنْدِىْ என்னிடம் خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَاۤ اَعْلَمُ இன்னும் அறியமாட்டேன் الْغَيْبَ மறைவை وَلَاۤ اَقُوْلُ இன்னும் கூறமாட்டேன் اِنِّىْ நிச்சயமாக நான் مَلَكٌ ஒரு வானவர் وَّلَاۤ اَقُوْلُ இன்னும் கூறமாட்டேன் لِلَّذِيْنَ எங்களுக்கு تَزْدَرِىْۤ இழிவாகக் காண்கிறது اَعْيُنُكُمْ கண்கள்/உங்கள் لَنْ அறவே கொடுக்கவே மாட்டான் يُّؤْتِيَهُمُ அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் خَيْرًا ؕ ஒரு நன்மை اَللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை فِىْۤ உள்ளங்களில் اَنْفُسِهِمْ அவர்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اِذًا அப்போது لَّمِنَ الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களில்தான்
11:31. வ லா அகூலு லகும் 'இன்தீ கZஜா'இனுல் லாஹி வ லா அஃலமுல் கய்Bப வலா அகூலு இன்னீ மலகு(ன்)வ் வ லா அகூலு லில்லதீன தZஜ்தரீ அஃயுனுகும் லய் யு'தியஹுமுல் லாஹு கய்ரன் அல்லாஹு அஃலமு Bபிமா Fபீ அன்Fபுஸிஹிம் இன்னீ இதல் லமினள் ளாலிமீன்
11:31. "அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன்; நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்; (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்,) நிச்சயமாக அப்பொழுது நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிடுவேன்" (என்றும் கூறினார்).
11:32 قَالُوْا يٰـنُوْحُ قَدْ جَادَلْتَـنَا فَاَكْثَرْتَ جِدَالَـنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
قَالُوْا கூறினார்கள் يٰـنُوْحُ நூஹே! قَدْ நீர் தர்க்கித்து விட்டீர் جَادَلْتَـنَا எங்களுடன் فَاَكْثَرْتَ அதிகப்படுத்தினீர் جِدَالَـنَا தர்க்கத்தை/ எங்களுடன் فَاْتِنَا ஆகவே வருவீராக/எங்களிடம் بِمَا تَعِدُنَاۤ எதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்கு اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
11:32. காலூ யா னூஹு கத் ஜாதல்தனா Fப அக்தர்த ஜிதாலனா Fபாதினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
11:32. (அதற்கு) அவர்கள், "நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; நீர் எங்களுடன் தர்க்கம் செய்ததை அதிகமாக்கியும் விட்டீர்; எனவே, நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
11:33 قَالَ اِنَّمَا يَاْتِيْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَآءَ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ
قَالَ கூறினார் اِنَّمَا எல்லாம் يَاْتِيْكُمْ அதைக் கொண்டு வருவான் بِهِ உங்களிடம் اللّٰهُ அல்லாஹ்தான் اِنْ شَآءَ அவன் நாடினால் وَمَاۤ اَنْتُمْ நீங்கள் இல்லை بِمُعْجِزِيْنَ பலவீனப்படுத்துபவர்களாக
11:33. கால இன்னமா யாதீகும் Bபிஹில் லாஹு இன் ஷா'அ வ மா அன்தும் BபிமுஃஜிZஜீன்
11:33. அதற்கு அவர், "நிச்சயமாக அதை உங்களிடம் கொண்டுவருபவன் அல்லாஹ்தான்; அவன் நாடினால் (அது வரும்; அப்பொழுது) நீங்கள் (அவனை) இயலாமலாக்கி விடக்கூடியவர்களும் அல்லர்" என்று கூறினார்.
11:34 وَلَا يَنْفَعُكُمْ نُصْحِىْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْؕ هُوَ رَبُّكُمْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَؕ
وَلَا يَنْفَعُكُمْ உங்களுக்கு பலனலிக்காது نُصْحِىْۤ என் நல்லுபதேசம் اِنْ اَرَدْتُّ நான் நாடினால் اَنْ اَنْصَحَ நான் நல்லுபதேசம்புரிய لَكُمْ உங்களுக்கு اِنْ كَانَ اللّٰهُ இருந்தால்/அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் اَنْ يُّغْوِيَكُمْؕ உங்களை அவன் வழிகெடுக்க هُوَ அவன் رَبُّكُمْ உங்கள் இறைவன் وَاِلَيْهِ அவனிடமே تُرْجَعُوْنَؕ நீங்கள் திருப்பப்படுவீர்கள்
11:34. வ லா யன்Fப'உகும் னுஸ்ஹீ இன் அரத்து அன் அன்ஸஹ லகும் இன் கானல் லாஹு யுரீது அய் யுக்வி யகும்; ஹுவ ரBப்Bபுகும் வ இலய்ஹி துர்ஜ'ஊன்
11:34. "நான் உங்களுக்கு உபதேசம் செய்ய நாடினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய உபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டுவரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்).
11:35 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ ؕ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَعَلَىَّ اِجْرَامِىْ وَاَنَا بَرِىْٓءٌ مِّمَّا تُجْرِمُوْنَ
اَمْ அல்லது يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் افْتَـرٰٮهُ அவர் புனைந்தார் قُلْ கூறுவீராக اِنِ நான் புனைந்திருந்தால் افْتَرَيْتُهٗ அதை فَعَلَىَّ என் மீதே اِجْرَامِىْ என் குற்றம் وَاَنَا இன்னும் நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا تُجْرِمُوْنَ விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்
11:35. அம் யகூலூனFப் தராஹு குல் இனிFப் தரய்துஹூ Fப'அலய்ய இஜ்ராமீ வ அன Bபரீ'உம் மிம்மா துஜ்ரிமூன்
11:35. (நபியே! நீர் இதைக் கூறும்போது,) "இதனை இவர் இட்டுக்கட்டிச் சொல்கிறார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: "நான் இதனை இட்டுக்கட்டிச் சொல்லியிருந்தால், என்மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்."
11:36 وَاُوْحِىَ اِلٰى نُوْحٍ اَنَّهٗ لَنْ يُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَٮِٕسْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ ۖ ۚ
وَاُوْحِىَ இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது اِلٰى نُوْحٍ நூஹுக்கு اَنَّهٗ நிச்சயமாக செய்தி لَنْ يُّؤْمِنَ அறவே நம்பிக்கை கொள்ள மாட்டார் مِنْ قَوْمِكَ உமது மக்களில் اِلَّا தவிர مَنْ قَدْ اٰمَنَ எவர்/நம்பிக்கை கொண்டு விட்டார் فَلَا تَبْتَٮِٕسْ ஆகவே நீர் கவலைப்படாதீர் بِمَا காரணமாக/எவை كَانُوْا இருந்தனர் يَفْعَلُوْنَ ۖ ۚ அவர்கள் செய்வார்கள்
11:36. வ ஊஹிய இலா னூஹின் அன்னஹூ ல(ன்)ய்-யு'மின மின் கவ்மிக இல்லா மன் கத் ஆமன Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யFப்'அலூன்
11:36. மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: "(முன்னர்) திட்டமாக நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால், அவர்கள் செய்வதைப் பற்றி நீர் கவலைப்படாதீர்."
11:37 وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ
وَاصْنَعِ இன்னும் செய்வீராக الْفُلْكَ கப்பலை بِاَعْيُنِنَا நம் கண்கள் முன்பாக وَوَحْيِنَا இன்னும் நம்அறிவிப்புப்படி وَلَا تُخَاطِبْنِىْ என்னிடம் பேசாதீர் فِى الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا ۚ அநியாயம் செய்தார்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مُّغْرَقُوْنَ மூழ்கடிக்கப்படுபவர்கள்
11:37. வஸ்ன'இல் Fபுல்க Bபி-அஃயுனினா வ வஹ்யினா வலா துகா திBப்னீ Fபில் லதீன ளலமூ; இன்னஹும் முக்ரகூன்
11:37. "நம் கண்முன்பாகவே நம் (வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்."
11:38 وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُؕ قَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَؕ
وَيَصْنَعُ அவர் செய்கிறார் الْفُلْكَ கப்பலை وَكُلَّمَا مَرَّ கடந்தபோதெல்லாம் عَلَيْهِ அவருக்கு அருகில் مَلَاٌ முக்கிய பிரமுகர்கள் مِّنْ இருந்து قَوْمِهٖ அவருடைய மக்கள் سَخِرُوْا பரிகசித்தனர் مِنْهُؕ அவரை قَالَ கூறினார் اِنْ تَسْخَرُوْا நீங்கள் பரிகசித்தால் مِنَّا எங்களை فَاِنَّا நிச்சயமாக நாங்கள் نَسْخَرُ பரிகசிப்போம் مِنْكُمْ உங்களை كَمَا تَسْخَرُوْنَؕ நீங்கள் பரிகசிப்பது போன்று
11:38. வ யஸ்ன'உல் Fபுல்க வ குல்லமா மர்ர 'அலய்ஹி மல'உம் மின் கவ்மிஹீ ஸகிரூ மின்ஹ்; கால இன் தஸ்கரூ மின்னா Fப இன்னா னஸ்கரு மின்கும் கமா தஸ்கரூன்
11:38. அவர் கப்பலைக் கட்டிக்கொண்டிருந்தார். அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: "நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நீங்கள் பரிகசிப்பதுபோலவே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்று கூறினார்.
11:39 فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّاْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ
فَسَوْفَ تَعْلَمُوْنَۙ நீங்கள் அறிவீர்கள் مَنْ எவர் يَّاْتِيْهِ அவருக்கு வரும் عَذَابٌ ஒரு வேதனை يُّخْزِيْهِ இழிவுபடுத்தும்/அவரை وَيَحِلُّ இன்னும் இறங்கும் عَلَيْهِ அவர் மீது عَذَابٌ ஒரு வேதனை مُّقِيْمٌ நிலையானது
11:39. Fபஸவ்Fப தஃலமூன மய் ய'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ யஹில்லு 'அலய்ஹி 'அதாBபுன் முகீம்
11:39. "அன்றியும், எவன்மீது அவனை இழிவுபடுத்தும் வேதனை வரும் என்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகுவிரைவில் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்" (என்றும் கூறினார்).
11:40 حَتّٰۤى اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ قُلْنَا احْمِلْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِيْلٌ
حَتّٰۤى இறுதியாக اِذَا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை وَفَارَ இன்னும் பொங்கியது التَّنُّوْرُۙ அடுப்பு قُلْنَا கூறினோம் احْمِلْ ஏற்றுவீராக فِيْهَا அதில் مِنْ இருந்து كُلٍّ எல்லாம் زَوْجَيْنِ இரு ஜோடியை اثْنَيْنِ இரண்டு وَاَهْلَكَ இன்னும் உமது குடும்பத்தை اِلَّا தவிர مَنْ எவர் سَبَقَ முந்தி விட்டது عَلَيْهِ அவர் மீது الْقَوْلُ வாக்கு وَمَنْ இன்னும் எவர் اٰمَنَؕ நம்பிக்கை கொண்டார் وَمَاۤ اٰمَنَ நம்பிக்கை கொள்ளவில்லை مَعَهٗۤ அவருடன் اِلَّا தவிர قَلِيْلٌ குறைவானவர்கள்
11:40. ஹத்தா இதா ஜா'அ அம்ருனா வ Fபாரத் தன்னூரு குல்னஹ் மில் Fபீஹா மின் குல்லின் Zஜவ்ஜய்னித் னய்னி வ அஹ்லக இல்லா மன் ஸBபக 'அலய்ஹில் கவ்லு வ மன் ஆமன்; வ மா ஆமன ம'அஹூ இல்லா கலீல்
11:40. இறுதியாக, நம் உத்தரவு வந்து அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி, 'உயிரினங்களில்) ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண், பெண் கொண்ட) இரண்டு ஜோடியையும், (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று) எவர்களைக் குறித்து (முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர உம் குடும்பத்தாரையும், நம்பிக்கை கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்'' என்று நாம் கூறினோம்; வெகு சொற்பமானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை.
11:41 وَقَالَ ارْكَبُوْا فِيْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٖؔٮھَا وَمُرْسٰٮهَا ؕ اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
وَقَالَ கூறினார் ارْكَبُوْا பயணியுங்கள் فِيْهَا இதில் بِسْمِ பெயர் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் مَجْرٖؔٮھَا அது ஓடும் போது وَمُرْسٰٮهَا ؕ நிறுத்தப்படும் போது اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
11:41. வ காலர் கBபூ Fபீஹா Bபிஸ்மில் லாஹி மஜ்ரய்ஹா வ முர்ஸாஹா; இன்ன ரBப்Bபீ ல கFபூருர் ரஹீம்
11:41. "இதிலே நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள்; இது ஓடுவதும், இது நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன); நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.
11:42 وَهِىَ تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ
وَهِىَ அது (கப்பல்) تَجْرِىْ செல்கிறது بِهِمْ அவர்களைக்கொண்டு فِىْ مَوْجٍ அலையில் كَالْجِبَالِ மலைகளைப் போன்று وَنَادٰى இன்னும் சப்தமிட்டு அழைத்தார் نُوْحُ நூஹ் اۨبْنَهٗ தன் மகனை وَكَانَ இருந்தான் فِىْ مَعْزِلٍ ஒரு விலகுமிடத்தில் يّٰبُنَىَّ என் மகனே! ارْكَبْ பயணி مَّعَنَا எங்களுடன் وَلَا تَكُنْ ஆகிவிடாதே مَّعَ உடன் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்கள்
11:42. வ ஹிய தஜ்ரீ Bபிஹிம் Fபீ மவ்ஜின் கல்ஜிBபாலி வ னாதா னூஹுனிBப் னஹூ வ கான Fபீ மஃZஜிலி(ன்)ய் யா Bபுனய் யர்கம் ம'அனா வலா தகும் ம'அல் காFபிரீன்
11:42. பின்னர், அக்கப்பல் மலைகளைப் போன்ற அலைகளில் அவர்களைச் சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது) நூஹ் (தம்மை விட்டு) விலகி இருந்த தம் மகனை, "என் அருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் நீ இராதே!" என்று அழைத்தார்.
11:43 قَالَ سَاٰوِىْۤ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِىْ مِنَ الْمَآءِؕ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ
قَالَ கூறினான் سَاٰوِىْۤ ஒதுங்குவேன் اِلٰى மேல் جَبَلٍ ஒரு மலை يَّعْصِمُنِىْ காக்கும்/என்னை مِنَ இருந்து الْمَآءِؕ நீர் قَالَ கூறினார் لَا அறவே இல்லை عَاصِمَ பாதுகாப்பவர் الْيَوْمَ இன்று مِنْ இருந்து اَمْرِ கட்டளை اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا தவிர مَنْ எவர் رَّحِمَۚ கருணை காட்டினான் وَحَالَ இன்னும் தடையானது بَيْنَهُمَا அவ்விருவருக்கும் இடையில் الْمَوْجُ அலை فَكَانَ ஆகவே ஆகினான் مِنَ الْمُغْرَقِيْنَ மூழ்கடிக்கப்பட்டவர்களில்
11:43. கால ஸ ஆவீ இலா ஜBபலி(ன்)ய் யஃஸிமுனீ மினல் மா'; கால லா 'ஆஸிமல் யவ்ம மின் அம்ரில் லாஹி இல்லா மர் ரஹிம்; வ ஹால Bபய்னஹுமல் மவ்ஜு Fபகான மினல் முக்ரகீன்
11:43. அதற்கு அவன்: "நான் ஒரு மலையின்பால் ஒதுங்கிக்கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்" என்று கூறினான்; "இன்றைய தினம் அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து அவன் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ, அவரைத்தவிர காப்பாற்றுபவர் எவருமில்லை" என்று கூறினார்; (அச்சமயம்) அவ்விருவருக்குமிடையில் அலை குறுக்கிட்டது; உடனே, அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகிவிட்டான்.
11:44 وَقِيْلَ يٰۤاَرْضُ ابْلَعِىْ مَآءَكِ وَيٰسَمَآءُ اَقْلِعِىْ وَغِيْضَ الْمَآءُ وَقُضِىَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُوْدِىِّ وَقِيْلَ بُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ
وَقِيْلَ கூறப்பட்டது يٰۤاَرْضُ பூமியே ابْلَعِىْ விழுங்கு مَآءَكِ தண்ணீரை/உன் وَيٰسَمَآءُ இன்னும் வானமே اَقْلِعِىْ நிறுத்து وَغِيْضَ இன்னும் வற்றியது الْمَآءُ தண்ணீர் وَقُضِىَ இன்னும் முடிக்கப்பட்டது الْاَمْرُ காரியம் وَاسْتَوَتْ இன்னும் தங்கியது عَلَى الْجُوْدِىِّ ஜூதி மலையில் وَقِيْلَ இன்னும் கூறப்பட்டது بُعْدًا அழிவுதான் لِّـلْقَوْمِ மக்களுக்கு الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
11:44. வ கீல யா அர்ளுBப்ல'ஈ மா'அகி வ யா ஸமா'உ அக்லி'ஈ வ கீளல் மா'உ வ குளியல் அம்ரு வஸ்தவத் 'அலல் ஜூதிய்யி வ கீல Bபுஃதல் லில்கவ்மிள் ளாலிமீன்
11:44. பின்னர், "பூமியே! நீ உன் நீரை விழுங்கிவிடு; வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது: (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியம் முடிக்கப்பட்டது; (கப்பல்) ஜூதி மலை மீது தங்கியது: "அநியாயக்காரர்களான சமுதாயத்திற்கு (இத்தகைய) அழிவுதான்" என்று கூறப்பட்டது.
11:45 وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِىْ مِنْ اَهْلِىْ وَاِنَّ وَعْدَكَ الْحَـقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ
وَنَادٰى அழைத்தார் نُوْحٌ நூஹ் رَّبَّهٗ தன் இறைவனை فَقَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنَّ நிச்சயமாக ابْنِىْ என் மகன் مِنْ اَهْلِىْ என் குடும்பத்திலுள்ளவன் وَاِنَّ நிச்சயமாக وَعْدَكَ உன் வாக்கு الْحَـقُّ உண்மையானது وَاَنْتَ நீ اَحْكَمُ மகா தீர்ப்பாளன் الْحٰكِمِيْنَ தீர்ப்பளிப்பவர்களில்
11:45. வ னாதா னூஹுர் ரBப்Bபஹூ Fபகால ரBப்Bபி இன்னBப்னீ மின் அஹ்லீ வ இன்ன வஃதகல் ஹக்கு வ அன்த அஹ்கமுல் ஹாகிமீன்
11:45. நூஹ் தன் இறைவனை அழைத்தார்; அப்பொழுது அவர், "என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே, உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்" எனக் கூறினார்.
11:46 قَالَ يٰـنُوْحُ اِنَّهٗ لَـيْسَ مِنْ اَهْلِكَ ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ۖ فَلَا تَسْـــٴَـــلْنِ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ ؕ اِنِّىْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ
قَالَ கூறினான் يٰـنُوْحُ நூஹே! اِنَّهٗ அவன் لَـيْسَ இல்லை مِنْ اَهْلِكَ உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் ۚاِنَّهٗ நிச்சயமாக இது عَمَلٌ செயல் غَيْرُ அல்ல صَالِحٍ ۖ நல்ல(து) فَلَا تَسْـــٴَـــلْنِ என்னிடம் கேட்காதே مَا எதை لَـيْسَ இல்லை لَـكَ உமக்கு بِهٖ அதில் عِلْمٌ ؕ ஞானம் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعِظُكَ உபதேசிக்கிறேன்/உமக்கு اَنْ تَكُوْنَ நீர் ஆகுவதை مِنَ الْجٰهِلِيْنَ அறியாதவர்களில்
11:46. கால யா னூஹு இன்னஹூ லய்ஸ மின் அஹ்லிக இன்னஹூ 'அமலுன் கய்ரு ஸாலிஹின் Fபலா தஸ்'அல்னி மா லய்ஸ லக Bபிஹீ 'இல்முன் இன்னீ அ'இளுக அன் தகூன மினல் ஜாஹிலீன்
11:46. அ(தற்கு இறை)வன் கூறினான்: "நூஹே! நிச்சயமாக அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயலுடையவன்; ஆகவே, எதில் உமக்கு அறிவு இல்லையோ அதனை என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்."
11:47 قَالَ رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌؕ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعُوْذُ பாதுகாப்புக் கோருகிறேன் بِكَ உன்னிடம் اَنْ اَسْــٴَــلَكَ நான்கேட்பதைவிட்டு مَا எதை لَـيْسَ இல்லை لِىْ எனக்கு بِهٖ அதில் عِلْمٌؕ ஞானம் وَاِلَّا تَغْفِرْ நீ மன்னிக்க வில்லையெனில் لِىْ என்னை وَتَرْحَمْنِىْۤ கருணை காட்டவில்லையெனில்/எனக்கு اَكُنْ ஆகிவிடுவேன் مِّنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
11:47. கால ரBப்Bபி இன்னீ அ'ஊது Bபிக அன் அஸ்'அலக மா லய்ஸ லீ Bபிஹீ 'இல்மு(ன்)வ் வ இல்லா தக்Fபிர் லீ வ தர்ஹம்னீ அகும் மினல் காஸிரீன்
11:47. "என் இறைவா! எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும், உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்" என்று கூறினார்.
11:48 قِيْلَ يٰـنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَيْكَ وَعَلٰٓى اُمَمٍ مِّمَّنْ مَّعَكَؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ
قِيْلَ கூறப்பட்டது يٰـنُوْحُ நூஹே! اهْبِطْ நீர் இறங்குவீராக بِسَلٰمٍ பாதுகாப்புடன் مِّنَّا நமது وَبَرَكٰتٍ இன்னும் அருள்வளங்கள் عَلَيْكَ உம்மீது وَعَلٰٓى இன்னும் மீது اُمَمٍ உயிரினங்கள் مِّمَّنْ مَّعَكَؕ உம்முடன் இருக்கின்றவர்கள் وَاُمَمٌ இன்னும் சமுதாயங்கள் سَنُمَتِّعُهُمْ சுகமளிப்போம்/அவர்களுக்கு ثُمَّ பிறகு يَمَسُّهُمْ அடையும்/அவர்களை مِّنَّا நம்மிடமிருந்து عَذَابٌ ஒரு வேதனை اَلِيْمٌ துன்புறுத்தக் கூடியது
11:48. கீல யா னூஹுஹ் Bபித் Bபிஸலாமிம் மின்னா வ Bபரகாதின் 'அலய்க வ 'அலா உமமிம் மிம்மம் ம'அக்; வ உமமுன் ஸனுமத்தி'உஹும் தும்ம யமஸ்ஸுஹும் மின்ன 'அதாBபுன் அலீம்
11:48. "நூஹே! உம்மீதும், உம்மோடு இருக்கின்ற சமூகத்தவர்கள் மீதும் நம்முடைய சாந்தியுடனும், பாக்கியங்களுடனும் நீர் இறங்குவீராக! இன்னும், சில சமூகத்தவர்கள் - அவர்களை நாம் சுகம் அனுபவிக்கச் செய்வோம்; பின்னர், நம்மிடமிருந்து நோவினைதரும் வேதனை அவர்களைத் தீண்டும்" என்று கூறப்பட்டது.
11:49 تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَيْبِ نُوْحِيْهَاۤ اِلَيْكَۚ مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ فَاصْبِرْ ۛؕ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ
تِلْكَ مِنْ اَنْۢبَآءِ இவை/சரித்திரங்களில் الْغَيْبِ மறைவான(து) نُوْحِيْهَاۤ வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை اِلَيْكَۚ உமக்கு مَا كُنْتَ நீர் இருக்கவில்லை تَعْلَمُهَاۤ அறிவீர்/இவற்றை اَنْتَ நீரோ وَلَا இன்னும் இல்லை قَوْمُكَ உமது மக்களோ مِنْ قَبْلِ முன்னர் هٰذَا ۛؕ இதற்கு فَاصْبِرْ ۛؕ ஆகவே பொறுப்பீராக اِنَّ الْعَاقِبَةَ நிச்சயமாக முடிவு لِلْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
11:49. தில்க மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹா இலய்க மா குன்த தஃலமுஹா அன்த வலா கவ்முக மின் கBப்லி ஹாதா Fபஸ்Bபிர் இன்னல் 'ஆகிBபத லில்முத்தகீன்
11:49. (நபியே! உமக்கு) இது மறைவான செய்திகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கிறோம்; நீரும் உம்முடைய கூட்டத்தினரும் இதற்குமுன் இதனை அறிந்திருக்கவில்லை; ஆகவே, (உமக்கு ஏற்படும் துன்பங்களில்) பொறுமையுடன் இருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு (நம்மை) அஞ்சுவோருக்கே!
11:50 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ
وَاِلٰى இடம் عَادٍ ஆது اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய هُوْدًا ؕ ஹூதை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ ؕ அவனையன்றி اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர مُفْتَرُوْنَ புனைபவர்களாகவே
11:50. வ இலா 'ஆதின் அகாஹும் ஹூதா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன் அன்தும் இல்லா முFப்தரூன்
11:50. 'ஆது' சமூகத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: "என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனையன்றி (வேறு) எந்தக் கடவுளும் உங்களுக்கு இல்லை; நீங்கள் கற்பனை செய்பவர்களே தவிர வேறில்லை."
11:51 يٰقَوْمِ لَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا ؕ اِنْ اَجْرِىَ اِلَّا عَلَى الَّذِىْ فَطَرَنِىْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
يٰقَوْمِ என் மக்களே لَاۤ நான் கேட்கவில்லை اَسْــٴَــلُكُمْ உங்களிடம் عَلَيْهِ அதற்காக اَجْرًا ؕ ஒரு கூலியை اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلَى மீது الَّذِىْ எத்தகையவன் فَطَرَنِىْ படைத்தான் اَفَلَا تَعْقِلُوْنَ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
11:51. யா கவ்மி லா அஸ்'அலுகும் 'அலய்ஹி அஜ்ரன் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லதீ Fபதரனீ; அFபலா தஃகிலூன்
11:51. "என் சமூகத்தாரே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப் படைத்தவனிடமே இருக்கிறது - நீங்கள் (இதை) விளங்கிக்கொள்ளமாட்டீர்களா?" (என்றும்,)
11:52 وَيٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا وَّيَزِدْكُمْ قُوَّةً اِلٰى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِيْنَ
وَيٰقَوْمِ என் மக்களே اسْتَغْفِرُوْا மன்னிப்புக் கோருங்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ அவன் பக்கம் يُرْسِلِ அனுப்புவான் السَّمَآءَ மழையை عَلَيْكُمْ உங்களுக்கு مِّدْرَارًا தாரை தாரையாக وَّيَزِدْكُمْ இன்னும் அதிகப்படுத்துவான்/உங்களுக்கு قُوَّةً பலத்தை اِلٰى قُوَّتِكُمْ உங்கள் பலத்துடன் وَلَا تَتَوَلَّوْا திரும்பி விடாதீர்கள் مُجْرِمِيْنَ குற்றவாளிகளாக
11:52. வ யா கவ்மிஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹி யுர்ஸிலிஸ் ஸமா'அ 'அலய்கும் மித்ரார(ன்)வ் வ யZஜித்கும் குவ்வதன் இலா குவ்வதிகும் வலா ததவல்லவ் முஜ்ரிமீன்
11:52. 'என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழைபொறுக்கத் தேடுங்கள்; இன்னும், அவன் பக்கமே மீளுங்கள்: அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; இன்னும், உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமையை உங்களுக்கு அதிகரிக்கச் செய்வான்; இன்னும், நீங்கள் குற்றவாளிகளாகி புறக்கணித்துவிடாதீர்கள்' (என்றும் எச்சரித்துக் கூறினார்).
11:53 قَالُوْا يٰهُوْدُ مَا جِئْتَـنَا بِبَيِّنَةٍ وَّمَا نَحْنُ بِتٰـرِكِىْۤ اٰلِهَـتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَـكَ بِمُؤْمِنِيْنَ
قَالُوْا கூறினர் يٰهُوْدُ ஹூதே! مَا جِئْتَـنَا நம்மிடம் நீ வரவில்லை بِبَيِّنَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு وَّمَا இன்னும் இல்லை نَحْنُ நாங்கள் بِتٰـرِكِىْۤ விடுபவர்களாக اٰلِهَـتِنَا தெய்வங்களை/எங்கள் عَنْ قَوْلِكَ உம் சொல்லுக்காக وَمَا இன்னும் இல்லை نَحْنُ நாங்கள் لَـكَ உம்மை بِمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்டவர்களாக
11:53. காலூ யா ஹூது மா ஜி'தனா BபிBபய்யினதி(ன்)வ் வமா னஹ்னு Bபிதாரிகீ ஆலிஹதினா 'அன் கவ்லிக வமா னஹ்னு லக Bபிமு'மினீன்
11:53. (அதற்கு) அவர்கள்: "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டுவரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டுவிடுபவர்களும் அல்லர்; நாங்கள் உம்மீது நம்பிக்கை கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்கள்.
11:54 اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَـرٰٮكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْٓءٍ ؕ قَالَ اِنِّىْۤ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْۤا اَنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۙ
اِنْ نَّقُوْلُ கூறமாட்டோம் اِلَّا தவிர اعْتَـرٰٮكَ بَعْضُ தீண்டி விட்டன/உம்மை/சில اٰلِهَتِنَا எங்கள் தெய்வங்களில் بِسُوْٓءٍ ؕ ஒரு தீமையைக் கொண்டு قَالَ கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اُشْهِدُ சாட்சியாக்குகிறேன் اللّٰهَ அல்லாஹ்வை وَاشْهَدُوْۤا நீங்கள் சாட்சி கூறுங்கள் اَنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا تُشْرِكُوْنَ ۙ நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து
11:54. இன் னகூலு இல்லஃ தராக Bபஃளு ஆலிஹதினா Bபிஸூ'; கால இன்னீ உஷ்ஹிதுல் லாஹ வஷ் ஹதூ அன்னீ Bபரீ'உம் மிம்மா துஷ்ரிகூன்
11:54. "எங்களுடைய தெய்வங்களில் சில, கெடுதியைக் கொண்டும் உம்மைப் பிடித்துக்கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை" (என்றும் கூறினார்கள்; அதற்கு) அவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்: நீங்கள் இணைவைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக்கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்" என்று கூறினார்.
11:55 مِنْ دُوْنِهٖ فَكِيْدُوْنِىْ جَمِيْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ
مِنْ دُوْنِهٖ அவனையன்றி فَكِيْدُوْ ஆகவே, சூழ்ச்சி செய்யுங்கள் نِىْ எனக்கு جَمِيْعًا அனைவரும் ثُمَّ பிறகு لَا அவகாசமளிக்காதீர்கள் تُنْظِرُوْنِ எனக்கு
11:55. மின் தூனிஹீ Fபகீதூனீ ஜமீ'அன் தும்ம லா துன்ளிரூன்
11:55. "(அல்லாஹ்வாகிய) அவனையன்றி (நீங்கள் இணைவைப்பவற்றைவிட்டும் நான் நீங்கிக் கொண்டேன்); எனவே, நீங்கள் அனைவரும் (ஒன்றுசேர்ந்து) எனக்குச் சூழ்ச்சி செய்யுங்கள்; பிறகு, நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்" (என்றும் கூறினார்).
11:56 اِنِّىْ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ رَبِّىْ وَرَبِّكُمْ ؕ مَا مِنْ دَآبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ ۢ بِنَاصِيَتِهَا ؕ اِنَّ رَبِّىْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
اِنِّىْ நிச்சயமாக நான் تَوَكَّلْتُ நம்பிக்கை வைத்து விட்டேன் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது رَبِّىْ என் இறைவன் وَرَبِّكُمْ ؕ இன்னும் உங்கள் இறைவன் مَا இல்லை مِنْ எதுவும் دَآبَّةٍ உயிரினம் اِلَّا தவிர هُوَ அவன் اٰخِذٌ ۢ பிடித்தே بِنَاصِيَتِهَا ؕ அதன் உச்சி முடியை اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் عَلٰى صِرَاطٍ வழியில் مُّسْتَقِيْمٍ நேரானது
11:56. இன்னீ தவக்கல்து 'அலல்லாஹி ரBப்Bபீ வ ரBப்Bபிகும்; மா மின் தாBப்Bபதின் இல்லா ஹுவ ஆகிதும் Bபினாஸியதிஹா; இன்ன ரBப்Bபீ 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
11:56. "நிச்சயமாக நான், என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே சார்ந்துள்ளேன்; எந்த உயிரினமாயினும் அதன் முன்நெற்றி ரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கிறான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்" (என்றும்),
11:57 فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖۤ اِلَيْكُمْ ؕ وَيَسْتَخْلِفُ رَبِّىْ قَوْمًا غَيْرَكُمْۚ وَلَا تَضُرُّوْنَهٗ شَيْئًا ؕ اِنَّ رَبِّىْ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ
فَاِنْ تَوَلَّوْا நீங்கள் விலகினால் فَقَدْ திட்டமாக اَبْلَغْتُكُمْ எடுத்துரைத்து விட்டேன்/உங்களுக்கு مَّاۤ எதை اُرْسِلْتُ அனுப்பப்பட்டேன் بِهٖۤ அதைக் கொண்டு اِلَيْكُمْ ؕ உங்களிடம் وَيَسْتَخْلِفُ இன்னும் தோன்றச் செய்வான் رَبِّىْ என் இறைவன் قَوْمًا மக்களை غَيْرَ அல்லாத(வர்கள்) كُمْۚ நீங்கள் وَلَا நீங்கள் தீங்கிழைக்க முடியாது تَضُرُّوْنَهٗ அவனுக்கு شَيْئًا ؕ எதையும் اِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது حَفِيْظٌ பாதுகாவலன்
11:57. Fப இன் தவல்லவ் Fபகத் அBப்லக்துகும் மா உர்ஸில்து Bபிஹீ இலய்கும்; வ யஸ்தக்லிFபு ரBப்Bபீ கவ்மன் கய்ரகும் வலா தளுர் ரூனஹூ ஷய்'ஆ; இன்ன ரBப்Bபீ 'அலா குல்லி ஷய்'இன் ஹFபீள்
11:57. "நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதைக்கொண்டு நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ, அதனை நிச்சயமாக நான் உங்களிடம் எத்திவைத்துவிட்டேன்; இன்னும், என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) சமூகத்தை உங்களுக்குப் பதிலாக வைத்து விடுவான்: நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்யமுடியாது; நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்" (என்றும் கூறினார்).
11:58 وَ لَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا هُوْدًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَ نَجَّيْنٰهُمْ مِّنْ عَذَابٍ غَلِيْظٍ
وَ لَمَّا جَآءَ வந்த போது اَمْرُنَا நம் உத்தரவு نَجَّيْنَا பாதுகாத்தோம் هُوْدًا ஹூதை وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ مِّنَّا ۚ நமது அருளால் وَ இன்னும் பாதுகாத்தோம் نَجَّيْنٰهُمْ அவர்களை مِّنْ عَذَابٍ வேதனையிலிருந்து غَلِيْظٍ கடுமையானது
11:58. வ லம்மா ஜா'அ அம்ருனா னஜய்னா ஹூத(ன்)வ் வல்லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ னஜய்னாஹும் மின் 'அதாBபின் கலீள்
11:58. நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹுதையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளைக் கொண்டு காப்பாற்றினோம்; இன்னும், கடுமையான வேதனையிலிருந்து அவர்களை ஈடேற்றினோம்.
11:59 وَتِلْكَ عَادٌ جَحَدُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْۤا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيْدٍ
وَتِلْكَ இவர்கள் عَادٌ ஆது جَحَدُوْا மறுத்தனர் بِاٰيٰتِ அத்தாட்சிகளை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَعَصَوْا இன்னும் மாறு செய்தனர் رُسُلَهٗ தூதர்களுக்கு/அவனுடைய وَاتَّبَعُوْۤا இன்னும் பின்பற்றினர் اَمْرَ கட்டளை كُلِّ எல்லோருடைய جَبَّارٍ பிடிவாதக்காரர்கள் عَنِيْدٍ முரடர்கள்
11:59. வ தில்க 'ஆத், ஜஹதூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் வ 'அஸவ் ருஸுலஹூ வத்தBப'ஊ அம்ர குல்லி ஜBப்Bபாரின் 'அனீத்
11:59. (நபியே!) இது 'ஆது' கூட்டத்தினர் (வரலாறு ஆகும்); அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறுசெய்தார்கள்; ஒவ்வொரு பிடிவாதக்கார வம்பனின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.
11:60 وَاُتْبِعُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِؕ اَلَاۤ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْؕ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ
وَاُتْبِعُوْا இன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள் فِىْ هٰذِهِ الدُّنْيَا இந்த உலகத்தில் لَعْنَةً சாபத்தை وَّيَوْمَ الْقِيٰمَةِؕ இன்னும் மறுமையில் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக عَادًا ஆது كَفَرُوْا நிராகரித்தனர் رَبَّهُمْؕ தங்கள் இறைவனுக்கு اَلَا அறிந்துகொள்ளுங்கள்! بُعْدًا கேடுதான் لِّعَادٍ ஆதுக்கு قَوْمِ மக்கள் هُوْدٍ ஹூதுடைய
11:60. வ உத்Bபி'ஊ Fபீ ஹாதிஹித் துன்யா லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமஹ்; அலா இன்ன 'ஆதன் கFபரூ ரBப்Bபஹும்; அலா Bபுஃதல் லி 'ஆதின் கவ்மின் ஹூத்
11:60. எனவே, இவ்வுலகிலும், மறுமைநாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் அவர்கள் தொடரப்பட்டனர்; அறிந்துகொள்வீர்களாக! நிச்சயமாக ஆது கூட்டத்தார் தங்கள் இறைவனை நிராகரித்தார்கள்; அறிந்துகொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான 'ஆது' கூட்டத்தாருக்குக் கேடுதான்.
11:61 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًاۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ ؕ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ
وَاِلٰى இன்னும் இடம் ثَمُوْدَ ஸமூது اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய صٰلِحًاۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ் مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ ؕ அவனையன்றி هُوَ அவனே اَنْشَاَ உருவாக்கினான் كُمْ உங்களை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து وَاسْتَعْمَر வசிக்க வைத்தான் َكُمْ உங்களை فِيْهَا அதில் فَاسْتَغْفِرُوْ ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் هُ அவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ ؕ அவன் பக்கம் اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் قَرِيْبٌ மிகச் சமீபமானவன் مُّجِيْبٌ பதிலளிப்பவன்
11:61. வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹிம் கய்ருஹூ ஹுவ அன்ஷ அகும் மினல் அர்ளி வஸ்தஃ மரகும் Fபீஹா Fபஸ்தக்Fபிரூஹு தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ கரீBபும் முஜீBப்
11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்); அவர் சொன்னார்: "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான்; எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும், அவன் பக்கமே மீளுங்கள்; நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."
11:62 قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ اَتَـنْهٰٮنَاۤ اَنْ نَّـعْبُدَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ
قَالُوْا கூறினர் يٰصٰلِحُ ஸாலிஹே قَدْ كُنْتَ திட்டமாகநீர்இருந்தீர் فِيْنَا எங்களில் مَرْجُوًّا ஆதரவுக்குரியவராக قَبْلَ முன்பு هٰذَآ اَتَـنْهٰٮنَاۤ இது/நீர் தடுக்கிறீரா?/எங்களை اَنْ نَّـعْبُدَ நாங்கள் வணங்குவதை விட்டு مَا يَعْبُدُ எதை வணங்குவார் اٰبَآؤُنَا மூதாதைகள்/எங்கள் وَاِنَّنَا நிச்சயமாக நாங்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّا இருந்து/எவை تَدْعُوْ அழைக்கிறீர் نَاۤ எங்களை اِلَيْهِ எதன் பக்கம் مُرِيْبٍ மிக ஆழமான சந்தேகம்
11:62. காலூ யா ஸாலிஹு கத் குன்த Fபீனா மர்ஜுவ்வன் கBப்ல ஹாதா அதன்ஹானா அன் னஃBபு த மா யஃBபுது ஆBபா'உனா வ இன்னனா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி முரீBப்
11:62. அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? மேலும், நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப் பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள்.
11:63 قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَاٰتٰٮنِىْ مِنْهُ رَحْمَةً فَمَنْ يَّـنْصُرُنِىْ مِنَ اللّٰهِ اِنْ عَصَيْتُهٗ فَمَا تَزِيْدُوْنَنِىْ غَيْرَ تَخْسِيْرٍ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ كُنْتُ நான் இருந்தால் عَلٰى بَيِّنَةٍ ஒரு தெளிவான அத்தாட்சியில் مِّنْ இருந்து رَّبِّىْ என் இறைவன் وَاٰتٰٮنِىْ இன்னும் தந்தான்/எனக்கு مِنْهُ தன்னிடமிருந்து رَحْمَةً அருளை فَمَنْ யார்? يَّـنْصُرُنِىْ உதவுவார்/எனக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடத்தில் اِنْ عَصَيْتُهٗ அவனுக்கு நான் மாறு செய்தால் فَمَا அதிகமாக்க மாட்டீர்கள் تَزِيْدُوْنَنِىْ எனக்கு غَيْرَ அன்றி تَخْسِيْرٍ நஷ்டம் ஏற்படுத்துவது
11:63. கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ஆதானீ மின்ஹு ரஹ்மதன் Fபமய் யன்ஸுருனீ மினல் லாஹி இன் 'அஸய்துஹூ Fபமா தZஜீதூனனீ கய்ர தக்ஸீர்
11:63. "என் சமூகத்தாரே! நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியின் மீதிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு அருளும் வழங்கியிருக்க, நான் அவனுக்கு மாறுசெய்தால், அல்லாஹ்வைவிட்டும் எனக்கு உதவிசெய்பவர் யார்? எனக்குப் பதில் சொல்லுங்கள்; நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கிவிடமாட்டீர்கள்" என்று அவர் கூறினார்.
11:64 وَيٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَـكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِىْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابٌ قَرِيْبٌ
وَيٰقَوْمِ என் மக்களே هٰذِهٖ இது نَاقَةُ பெண் ஒட்டகம் اللّٰهِ அல்லாஹ்வின் لَـكُمْ உங்களுக்கு اٰيَةً அத்தாட்சியான فَذَرُوْهَا ஆகவே, விட்டு விடுங்கள்/அதை تَاْكُلْ அது சாப்பி(டட்)டும் فِىْۤ اَرْضِ பூமியில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا تَمَسُّوْهَا அதற்கு செய்யாதீர்கள் بِسُوْٓءٍ ஒரு கெடுதியையும் فَيَاْخُذَكُمْ பிடிக்கும்/உங்களை عَذَابٌ ஒரு வேதனை قَرِيْبٌ அதிசீக்கிரமானது
11:64. வ யா கவ்மி ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா தாகுல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் அதாBபுன் கரீBப்
11:64. "அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேயவிட்டுவிடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்: (அப்படி நீங்கள் செய்தால்) மிகவும் சமீபத்திய வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்" (என்றும் கூறினார்).
11:65 فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِىْ دَارِكُمْ ثَلٰثَةَ اَ يَّامٍ ؕذٰ لِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوْبٍ
فَعَقَرُوْ வெட்டினார்கள் هَا அதை فَقَالَ ஆகவே, கூறினார் تَمَتَّعُوْا சுகமாக இருங்கள் فِىْ دَارِ இல்லத்தில் كُمْ உங்கள் ثَلٰثَةَ மூன்று اَ يَّامٍ நாள்கள் ؕذٰ لِكَ இது وَعْدٌ ஒரு வாக்கு غَيْرُ مَكْذُوْبٍ பொய்ப்பிக்கபடாத
11:65. Fப 'அகரூஹா Fபகால தமத்த'ஊ Fபீ தாரிகும் தலாதத அய்யாமின் தாலிக வஃதுன் கய்ரு மக்தூBப்
11:65. ஆனால், அவர்கள் அதைக் கொன்று விட்டார்கள்; ஆகவே, அவர் (அம்மக்களிடம்): "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாட்கள் சுகம் அனுபவியுங்கள்; (பின்னர், உங்களுக்கு அழிவு வந்துவிடும்;) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும்" என்று கூறினார்.
11:66 فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًـا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِٮِٕذٍؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ
فَلَمَّا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை نَجَّيْنَا பாதுகாத்தோம் صٰلِحًـا ஸாலிஹை وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ مِّنَّا நமது அருளைக் கொண்டு وَمِنْ இன்னும் இருந்து خِزْىِ இழிவு يَوْمِٮِٕذٍؕ அந்நாளின் اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் الْقَوِىُّ பலமிக்கவன் الْعَزِيْزُ மிகைத்தவன்
11:66. Fபலம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஸாலிஹ(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ மின் கிZஜ்யி யவ்மி'இத் இன்ன ரBப்Bபக ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
11:66. நமது கட்டளை வந்தபோது ஸாலிஹையும் அவரோடு நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம்; மேலும், அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக உமது இறைவன் அவனே வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
11:67 وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ
وَاَخَذَ இன்னும் பிடித்தது الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوا அநீதியிழைத்தனர் الصَّيْحَةُ இடி முழக்கம் فَاَصْبَحُوْا ஆகவே, காலையில் ஆகிவிட்டனர் فِىْ دِيَارِهِمْ தங்கள் இல்லங்களில் جٰثِمِيْنَۙ இறந்தவர்களாக
11:67. வ அகதல் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீனா
11:67. அநியாயம் செய்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக்கொண்டது; அதனால், அவர்கள் தங்கள் வீடுகளில் காலையில் வீழ்ந்து கிடந்தனர்.
11:68 كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ؕ اَلَاۤ اِنَّ ثَمُوْدَا۟ كَفَرُوْا رَبَّهُمْؕ اَلَا بُعْدًا لِّـثَمُوْدَ
كَاَنْ لَّمْ يَغْنَوْا போன்று அவர்கள் வசிக்கவில்லை فِيْهَا ؕ اَلَاۤ அவற்றில்/அறிந்து கொள்ளுங்கள் اِنَّ நிச்சயமாக ثَمُوْدَا۟ ஸமூது كَفَرُوْا நிராகரித்தனர் رَبَّهُمْؕ தங்கள் இறைவனை اَلَا அறிந்து கொள்ளுங்கள் بُعْدًا சாபம் உண்டாகட்டும் لِّـثَمُوْدَ ஸமூதுக்கு
11:68. க அல் லம் யக்னவ் Fபீஹா; அலா இன்ன தமூத கFபரூ ரBப்Bபஹும்; அலா Bபுஃதல் லி தமூத்.
11:68. (அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப்போல் (அழிக்கப்பட்டனர்): "அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக 'ஸமூது' கூட்டத்தினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர்; அறிந்துகொள்வீர்களாக! 'ஸமூது' (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்."
11:69 وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِيْذٍ
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَتْ வந்தனர் رُسُلُنَاۤ நம் தூதர்கள் اِبْرٰهِيْمَ இப்றாஹீமிடம் بِالْبُشْرٰى நற்செய்தியைக் கொண்டு قَالُوْا கூறினர் سَلٰمًا ؕ ஈடேற்றம் உண்டாகுக قَالَ கூறினார் سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகுக فَمَا لَبِثَ அவர் தாமதிக்கவில்லை اَنْ جَآءَ வருவதற்கு بِعِجْلٍ ஒரு கன்றுக் குட்டியைக் கொண்டு حَنِيْذٍ சுடப்பட்டது
11:69. வ லகத் ஜா'அத் ருஸுலுனா இBப்ராஹீம Bபில்Bபுஷ்ரா காலூ ஸலாமன் கால ஸலாமுன் Fபமா லBபித அன் ஜா'அ Bபி'இஜ்லின் ஹனீத்
11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து "சாந்தி உண்டாவதாக!" என்று கூறினார்கள்; (அதற்கு "உங்களின் மீதும்) சாந்தி உண்டாவதாக!" என்று அவர் சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றை (அதன் இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
11:70 فَلَمَّا رَاٰۤ اَيْدِيَهُمْ لَا تَصِلُ اِلَيْهِ نَـكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمِ لُوْطٍ ؕ
فَلَمَّا رَاٰۤ அவர் பார்த்தபோது اَيْدِيَهُمْ அவர்களுடைய கரங்களை لَا تَصِلُ சேராது اِلَيْهِ அதன் பக்கம் نَـكِرَ சந்தேகித்தார் هُمْ அவர்களைப் பற்றி وَاَوْجَسَ இன்னும் அவர் மறைத்தார் مِنْهُمْ அவர்களைப் பற்றி خِيْفَةً ؕ பயத்தை قَالُوْا கூறினார்கள் لَا تَخَفْ பயப்படாதீர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டோம் اِلٰى قَوْمِ மக்களின் பக்கம் لُوْطٍ ؕ லூத்துடைய
11:70. Fபலம்மா ர ஆ அய்தியஹும் லா தஸிலு இலய்ஹி னகிரஹும் வ அவ்ஜஸ மின்ஹும் கீFபஹ்; காலூ லா தகFப் இன்னா உர்ஸில்னா இலா கவ்மி லூத்
11:70. ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு அவர் அவர்களைப்பற்றி ஐயப்பட்டார்; அவர்களைப் பற்றிய பயத்தையும் அவர் (தம்) மனதில் உணர்ந்தார்; (ஆனால்,) அவர்களோ (அவரைப்பார்த்து) "பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
11:71 وَامْرَاَ تُهٗ قَآٮِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ يَعْقُوْبَ
وَامْرَاَ تُهٗ அவருடைய மனைவி قَآٮِٕمَةٌ நின்று கொண்டிருந்தாள் فَضَحِكَتْ சிரித்தாள் فَبَشَّرْنٰهَا நற்செய்தி கூறினோம்/அவளுக்கு بِاِسْحٰقَ ۙ இஸ்ஹாக்கைக் கொண்டு وَمِنْ وَّرَآءِ இன்னும் பின்னால் اِسْحٰقَ இஸ்ஹாக்கிற்கு يَعْقُوْبَ யஃகூப்
11:71. வம்ர அதுஹூ கா'இமதுன் Fபளஹிகத் FபBபஷ்ஷர்னாஹா Bபி இஷ்ஹாக வ மி(ன்)வ் வரா'இ இஷ்ஹாக யஃகூBப்
11:71. அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும், அவர் சிரித்தார்; அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபைப் பற்றியும் நன்மாராயம் கூறினோம்.
11:72 قَالَتْ يٰوَيْلَتٰٓى ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِىْ شَيْخًا ؕ اِنَّ هٰذَا لَشَىْءٌ عَجِيْبٌ
قَالَتْ கூறினாள் يٰوَيْلَتٰٓى என் துக்கமே ءَاَلِدُ பிள்ளைபெறுவேனா وَاَنَا நானுமோ عَجُوْزٌ கிழவியாக وَّهٰذَا இவரோ بَعْلِىْ என் கணவராகிய شَيْخًا ؕ வயோதிகராக اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَشَىْءٌ விஷயம்தான் عَجِيْبٌ வியப்பான(து)
11:72. காலத் யா வய்லதா 'ஆலிது வ அன 'அஜூZஜு(ன்)வ் வ ஹாத Bபஃலீ ஷய்கன் இன்ன ஹாதா லஷய்'உன் 'அஜீBப்
11:72. அதற்கு அவர் கூறினார்: "ஆ, ஐயோ! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!"
11:73 قَالُوْۤا اَتَعْجَبِيْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَيْكُمْ اَهْلَ الْبَيْتِؕ اِنَّهٗ حَمِيْدٌ مَّجِيْدٌ
قَالُوْۤا கூறினார்கள் اَتَعْجَبِيْنَ வியப்படைகிறீரா? مِنْ اَمْرِ கட்டளையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய رَحْمَتُ கருணை اللّٰهِ அல்லாஹ்வின் وَبَرَكٰتُهٗ இன்னும் அவனுடைய அருள்கள் عَلَيْكُمْ உங்கள் மீது اَهْلَ الْبَيْتِؕ வீட்டாரே اِنَّهٗ நிச்சயமாக அவன் حَمِيْدٌ மகா புகழாளன் مَّجِيْدٌ மகா கீர்த்தியாளன்
11:73. காலூ அதஃஜBபீன மின் அம்ரில் லாஹி ரஹ்மதுல் லாஹி வ Bபரகாதுஹூ 'அலய்கும் அஹ்லல் Bபய்த்; இன்னஹூ ஹமீதுன் மஜீத்
11:73. (அதற்கு) அவர்கள், "அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி நீர் ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் அருளும், அவனுடைய பாக்கியங்களும் இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
11:74 فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِيْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰى يُجَادِلُــنَا فِىْ قَوْمِ لُوْطٍؕ
فَلَمَّا ذَهَبَ சென்றபோது عَنْ اِبْرٰهِيْمَ இப்றாஹீமை விட்டு الرَّوْعُ திடுக்கம் وَجَآءَتْهُ இன்னும் வந்தது/அவருக்கு الْبُشْرٰى நற்செய்தி يُجَادِلُــنَا தர்க்கித்தார்/நம்மிடம் فِىْ قَوْمِ மக்கள் விஷயத்தில் لُوْطٍؕ லூத்துடைய
11:74. Fபலம்மா தஹBப அன் இBப்ராஹீமர் ரவ்'உ வ ஜா'அத் ஹுல் Bபுஷ்ரா யுஜாதிலுனா Fபீ கவ்மி லூத்
11:74. (இது கேட்டு) இப்ராஹீமைவிட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
11:75 اِنَّ اِبْرٰهِيْمَ لَحَـلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ
اِنَّ اِبْرٰهِيْمَ நிச்சயமாக இப்றாஹீம் لَحَـلِيْمٌ சகிப்பாளர் اَوَّاهٌ அதிகம் பிரார்த்திப்பவர் مُّنِيْبٌ திரும்பக்கூடியவர்
11:75. இன்ன இBப்ராஹீம ல ஹலீமுன் அவ்வாஹுன் முனீBப்
11:75. நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத்தன்மையுடையவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், (எதற்கும் நம்பால்) திரும்பக்கூடியவராகவும் இருந்தார்.
11:76 يٰۤـاِبْرٰهِيْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ وَاِنَّهُمْ اٰتِيْهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُوْدٍ
يٰۤـاِبْرٰهِيْمُ இப்ராஹீமே اَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْ هٰذَا ۚ இதை விட்டு اِنَّهٗ நிச்சயமாக قَدْ திட்டமாக جَآءَ வந்தது اَمْرُ கட்டளை رَبِّكَ ۚ உம் இறைவனின் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اٰتِيْهِمْ வரும்/அவர்களுக்கு عَذَابٌ வேதனை غَيْرُ مَرْدُوْدٍ தடுக்கபடாதது
11:76. யா இBப்ராஹீமு அஃரிள் 'அன் ஹாதா இன்னஹூ கத் ஜா'அ அம்ரு ரBப்Bபிக வ இன்னஹும் ஆதீஹிம் 'அதாBபுன் கய்ருன் மர்தூத்
11:76. "இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில், உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது; அன்றியும், நிச்சயமாக அவர்கள் - தவிர்க்க முடியாத வேதனை அவர்களை வரக்கூடியதேயாகும்."
11:77 وَلَمَّا جَآءَتْ رُسُلُـنَا لُوْطًا سِىْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا يَوْمٌ عَصِيْبٌ
وَلَمَّا جَآءَتْ வந்த போது رُسُلُـنَا நம் தூதர்கள் لُوْطًا லூத்திடம் سِىْٓءَ சிரமத்திற்குள்ளானார் بِهِمْ அவர்களால் وَضَاقَ இன்னும் சுருங்கினார் بِهِمْ அவர்களால் ذَرْعًا மனம் وَّقَالَ இன்னும் கூறினார் هٰذَا இது يَوْمٌ நாள் عَصِيْبٌ மிகக் கடுமையான(து)
11:77. வ லம்மா ஜா'அத் ருஸுலுனா லூதன் ஸீ'அ Bபிஹிம் வ ளாக Bபிஹிம் தர்'அ(ன்)வ் வ கால ஹாதா யவ்முன் 'அஸீBப்
11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, அவர்களால் அவர் கவலைக்குள்ளாக்கப்பட்டார்; மேலும் (அவர்களைக் காப்பதற்கு தம் சக்தியின்மையால்) அவர்களால் மனசங்கடத்திற்குள்ளானார்; (அப்போது) "இது மிகவும் கடினமான நாள்" என்று கூறினார்.
11:78 وَجَآءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ ؕ قَالَ يٰقَوْمِ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْ هُنَّ اَطْهَرُ لَـكُمْ ۚ فَاتَّقُوْا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِىْ ضَيْفِىْ ؕ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ
وَجَآءَهٗ வந்தார்(கள்)/அவரிடம் قَوْمُهٗ அவருடைய மக்கள் يُهْرَعُوْنَ விரைந்தவர்களாக اِلَيْهِ ؕ அவர் பக்கம் وَمِنْ قَبْلُ இன்னும் இதற்கு முன்னர் كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ அவர்கள் செய்பவர்களாக السَّيِّاٰتِ ؕ தீயவற்றை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே هٰٓؤُلَاۤءِ இவர்களை بَنٰتِىْ என் பெண் பிள்ளைகள் هُنَّ அவர்கள் اَطْهَرُ மிக சுத்தமானவர்(கள்) لَـكُمْ ۚ உங்களுக்கு فَاتَّقُوْا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُخْزُوْنِ என்னை அவமான படுத்தாதீர்கள் فِىْ ضَيْفِىْ ؕ என் விருந்தினர் விஷயத்தில் اَلَيْسَ இல்லையா? مِنْكُمْ உங்களில் رَجُلٌ ஓர் ஆடவர் رَّشِيْدٌ நல்லறிவுள்ளவர்
11:78. வ ஜா'அஹூ கவ்முஹூ யுஹ்ர'ஊன இலய்ஹி வ மின் கBப்லு கானூ யஃமலூனஸ் ஸய்யிஆத்; கால யா கவ்மி ஹா'உலா'இ Bபனாதீ ஹுன்ன அத்ஹரு லகும் Fபத்தகுல் லாஹ வலா துக்Zஜூனி Fபீ ளய்Fபீ அலய்ஸ மின்கும் ரஜுலுர் ரஷீத்
11:78. அவருடைய சமூகத்தார் அவரின்பால் விரைந்தவர்களாக அவரிடம் வந்தார்கள்; இன்னும், முன்னிருந்தே அவர்கள் தீயவற்றையே செய்து கொண்டிருந்தார்கள். (லூத் நபி, அவர்களை நோக்கி) "என் சமூகத்தாரே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். இன்னும், என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப்படுத்தாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர்(கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.
11:79 قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَـنَا فِىْ بَنٰتِكَ مِنْ حَقٍّ ۚ وَاِنَّكَ لَـتَعْلَمُ مَا نُرِيْدُ
قَالُوْا கூறினார்கள் لَقَدْ عَلِمْتَ அறிந்து கொண்டீர் مَا இல்லை لَـنَا எங்களுக்கு فِىْ بَنٰتِكَ இடம்/பெண் பிள்ளைகள்/உம் مِنْ حَقٍّ ۚ ஒரு தேவை وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَـتَعْلَمُ உறுதிபட அறிவீர் مَا எதை نُرِيْدُ நாடுகிறோம்
11:79. காலூ லகத் 'அலிம்த மா லனா Fபீ Bபனாதிக மின் ஹக்க், வ இன்னக லதஃலமு மா னுரீத்
11:79. (அதற்கு) அவர்கள், "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதைத் திட்டமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.
11:80 قَالَ لَوْ اَنَّ لِىْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِىْۤ اِلٰى رُكْنٍ شَدِيْدٍ
قَالَ கூறினார் لَوْ இருக்க வேண்டுமே! اَنَّ நிச்சயமாக لِىْ எனக்கு بِكُمْ உங்களிடம் قُوَّةً பலம் اَوْ அல்லது اٰوِىْۤ ஒதுங்குவேன்! اِلٰى பக்கம் رُكْنٍ ஆதரவாளர் شَدِيْدٍ வலிமையானவர்
11:80. கால லவ் அன்ன லீ Bபிகும் குவ்வதன் அவ் ஆவீ இலா ருக்னின் ஷதீத்
11:80. அதற்கு அவர், "உங்களைத் தடுக்கப் போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்க வேண்டுமே!" என்று கூறினார்.
11:81 قَالُوْا يٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْۤا اِلَيْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَؕ اِنَّهٗ مُصِيْبُهَا مَاۤ اَصَابَهُمْؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُؕ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ
قَالُوْا கூறினர் يٰلُوْطُ லூத்தே! اِنَّا நிச்சயமாக நாங்கள் رُسُلُ தூதர்கள் رَبِّكَ உம் இறைவனின் لَنْ يَّصِلُوْۤا அறவே சேர மாட்டார்கள் اِلَيْكَ உம் பக்கம் فَاَسْرِ ஆகவே, செல்வீராக بِاَهْلِكَ உம் குடும்பத்தைக் கொண்டு بِقِطْعٍ ஒரு பகுதியில் مِّنَ الَّيْلِ இரவின் وَلَا يَلْتَفِتْ திரும்பிப் பார்க்க வேண்டாம் مِنْكُمْ உங்களில் اَحَدٌ ஒருவரும் اِلَّا தவிர امْرَاَتَكَؕ உம் மனைவி اِنَّهٗ நிச்சயமாக/செய்தி مُصِيْبُهَا அடையக்கூடியதே/அவளை مَاۤ اَصَابَهُمْؕ எது/அடைகின்ற(து)/அவர்களை اِنَّ நிச்சயமாக مَوْعِدَهُمُ வாக்களிக்கப்பட்ட நேரம்/இவர்களின் الصُّبْحُؕ விடியற்காலை اَلَيْسَ இல்லையா? الصُّبْحُ விடியற்காலை بِقَرِيْبٍ சமீபமாக
11:81. காலூ யா லூது இன்னா ருஸுலு ரBப்Bபிக லய் யஸிலூ இலய்க Fப அஸ்ரி Bபி அஹ்லிக Bபிகித் 'இம் மினல் லய்லி வலா யல்தFபித் மின்கும் அஹதுன் இல்லம் ர அதக இன்னஹூ முஸீBபுஹா மா அஸாBபஹும்; இன்ன மவ்'இ தஹுமுஸ் ஸுBப்ஹ்; அலய்ஸஸ் ஸுBப்ஹு BபிகரீBப்
11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) "லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே, இரவின் ஒரு பகுதியில் நீர் உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர: உங்களில் யாரும் திரும்பியும் பார்க்கவேண்டாம்; நிச்சயமாக அவர்களை அடையக்கூடிய (ஆபத்)து அவளையும் அடைந்து கொள்ளும்; (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்துவிடவில்லையா?"
11:82 فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍۙ مَّنْضُوْدٍۙ
فَلَمَّا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை جَعَلْنَا ஆக்கினோம் عَالِيَهَا அதன் மேல்புறத்தை سَافِلَهَا அதன் கீழ்ப்புறமாக وَاَمْطَرْنَا இன்னும் மழையாக பொழிந்தோம் عَلَيْهَا அதன் மீது حِجَارَةً கற்களை مِّنْ இருந்து سِجِّيْلٍۙ இறுக்கமாக்கப்பட்டது مَّنْضُوْدٍۙ சுடப்பட்ட களிமண்
11:82. Fபலம்மா ஜா'அ அம்ருனா ஜ'அல்னா 'ஆலியஹா ஸாFபிலஹா வ அம்தர்னா 'அலய்ஹா ஹிஜாரதம் மின் ஸிஜ்ஜீலிம் மன்ளூத்
11:82. எனவே, (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் அதன் (அவ்வூரின்) மேற்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக ஆக்கிவிட்டோம்; இன்னும், அதன்மீது தொடர்ந்து பொழியும்படியான சுடப்பட்ட கற்களை (மழை போல்) பொழியவைத்தோம்.
11:83 مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَؕ وَ مَا هِىَ مِنَ الظّٰلِمِيْنَ بِبَعِيْدٍ
مُّسَوَّمَةً அடையாளமிடப்பட்டிருந்தது عِنْدَ رَبِّكَؕ உங்கள் இறைவனால் وَ مَا இல்லை هِىَ அவை مِنَ இருந்து الظّٰلِمِيْنَ அக்கிரமக்காரர்கள் بِبَعِيْدٍ தூரமாக
11:83. முஸவ்வமதன் 'இன்த ரBப்Bபிக்; வமா ஹிய மினள் ளாலிமீன BபிBப'ஈத்
11:83. (அக்கற்கள்) உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; அ(வ்வூரான) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகுதொலைவிலும் இல்லை.
11:84 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ وَلَا تَـنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ اِنِّىْۤ اَرٰٮكُمْ بِخَيْرٍ وَّاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ
وَاِلٰى مَدْيَنَ ‘மத்யன்’க்கு اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய شُعَيْبًا ؕ ஷுஐபை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ ؕ அவனையன்றி وَلَا تَـنْقُصُوا குறைக்காதீர்கள் الْمِكْيَالَ அளவையில் وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையில் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮكُمْ காண்கிறேன்/ உங்களை بِخَيْرٍ நல்லதொரு வசதியில் وَّاِنِّىْۤ இன்னும் நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் مُّحِيْطٍ சூழக்கூடியது
11:84. வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ வலா தன்குஸுல் மிக்யால வல்மீZஜான்; இன்னீ அராகும் Bபிகய்ரி(ன்)வ் வ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மிம் முஹீத்
11:84. 'மத்யன்' (என்னும் ஊர் வாசிகள்) பால் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் (அவர்களிடம்): "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர, உங்களுக்கு வேறு கடவுள் இல்லை. அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன். ஆனால், (அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு நாளின் வேதனையை உங்கள் மீது நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
11:85 وَيٰقَوْمِ اَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ
وَيٰقَوْمِ என் மக்களே اَوْفُوا முழுமைப்படுத்துங்கள் الْمِكْيَالَ அளவையில் وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையில் بِالْقِسْطِ நீதமாக وَلَا تَبْخَسُوا இன்னும் குறைக்காதீர்கள் النَّاسَ மக்களுக்கு اَشْيَآءَ பொருள்களை هُمْ அவர்களுடைய وَلَا تَعْثَوْا கலகம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ விஷமிகளாக
11:85. வ யா கவ்மி அவ்Fபுல் மிக்யால வல்மீZஜான Bபில்கிஸ்தி வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
11:85. என் சமூகத்தாரே! அளவையும், நிறுவையையும் நீதத்துடன் நீங்கள் பூர்த்திசெய்யுங்கள்; மக்களுக்கு (க் கொடுக்கவேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்துவிடாதீர்கள்; பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்புமீறி) அலையாதீர்கள்.
11:86 بَقِيَّتُ اللّٰهِ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ۚ وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِحَفِيْظٍ
بَقِيَّتُ மீதப்படுத்தியது اللّٰهِ அல்லாஹ் خَيْرٌ மிக மேலானது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்டவர்களாக ۚ وَمَاۤ இல்லை اَنَا நான் عَلَيْكُمْ உங்கள் மீது بِحَفِيْظٍ கண்காணிப்பாளன்
11:86. Bபகிய்யதுல் லாஹி கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்; வமா அன 'அலய்கும் BபிஹFபீள்
11:86. "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ் மீது பொறுப்புச் சுமத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்" (என்று கூறினார்).
11:87 قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ
قَالُوْا கூறினார்கள் يٰشُعَيْبُ ஷுஐபே اَصَلٰوتُكَ உம் தொழுகையா? تَاْمُرُكَ தூண்டுகிறது/உம்மை اَنْ نَّتْرُكَ நாங்கள் விடுவதற்கு مَا எவற்றை يَعْبُدُ வணங்கினார்கள் اٰبَآؤُنَاۤ மூதாதைகள்/எங்கள் اَوْ அல்லது اَنْ نَّـفْعَلَ நாங்கள் செய்வதை فِىْۤ செல்வங்களில் اَمْوَالِنَا எங்கள் مَا نَشٰٓؤُا ؕ நாங்கள் நாடுகின்றபடி اِنَّكَ لَاَنْتَ நிச்சயமாக நீர்தான் الْحَـلِيْمُ மகா சகிப்பாளர் الرَّشِيْدُ நல்லறிவாளர்
11:87. காலூ யா ஷு'அய்Bபு 'அ ஸலாதுக த'முருக அன் னத்ருக மா யஃBபுது ஆBபா'உனா அவ் அன் னFப்'அல Fபீ அம்வாலினா மா னஷா'ஊ இன்னக ல அன்தல் ஹலீமுர் ரஷீத்
11:87. (அதற்கு) அவர்கள், "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கியவற்றையும், அல்லது நாங்கள் எங்கள் செல்வங்களில் நாங்கள் விரும்பியபடி (செலவு) செய்வதையும் விட்டுவிடுமாறு உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் சகிப்புத்தன்மையுடையவரும், நேர்மையானவரும்தான்" என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
11:88 قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَرَزَقَنِىْ مِنْهُ رِزْقًا حَسَنًا ؕ وَمَاۤ اُرِيْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰى مَاۤ اَنْهٰٮكُمْ عَنْهُ ؕ اِنْ اُرِيْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ؕ وَمَا تَوْفِيْقِىْۤ اِلَّا بِاللّٰهِ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ اُنِيْبُ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ كُنْتُ நான் இருப்பதால் عَلٰى بَيِّنَةٍ தெளிவான அத்தாட்சியில் مِّنْ رَّبِّىْ என் இறைவனின் وَرَزَقَنِىْ இன்னும் வழங்கினான்/ எனக்கு مِنْهُ தன்னிடமிருந்து رِزْقًا உணவை حَسَنًا ؕ அழகியது / நல்லது وَمَاۤ اُرِيْدُ நாடமாட்டேன் اَنْ நான் முரண்படுவதற்கு اُخَالِفَكُمْ உங்களுக்கு اِلٰى இல் مَاۤ எவை اَنْهٰٮكُمْ தடுக்கிறேன்/உங்களை عَنْهُ ؕ அவற்றை விட்டு اِنْ اُرِيْدُ நாடமாட்டேன் اِلَّا தவிர الْاِصْلَاحَ சீர்திருத்துவதை مَا اسْتَطَعْتُ ؕ நான் இயன்றவரை وَمَا இல்லை تَوْفِيْقِىْۤ என் நற்பாக்கியம் اِلَّا தவிர بِاللّٰهِ ؕ அல்லாஹ்வைக் கொண்டே عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُ நம்பிக்கை வைத்தேன் وَاِلَيْهِ அவன் பக்கமே اُنِيْبُ திரும்புகிறேன்
11:88. கால யா கவ்மி அர'அய்தும் இன் குன்து 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபீ வ ரZஜகனீ மின்ஹு ரிZஜ்கன் ஹஸனா; வ மா உரீது அன் உகாலிFபகும் இலா மா அன்ஹாகும் 'அன்ஹ்; இன் உரீது இல்லல் இஸ்லாஹ மஸ்ததஃத்; வமா தவ்Fபீகீ இல்லா Bபில்லாஹ்; 'அலய்ஹி தவக்கல்து வ இலய்ஹி உனீBப்
11:88. (அதற்கு) அவர் கூறினார்: "என்னுடைய சமூகத்தாரே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகிய உணவை அளித்து இருப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? (ஆகவே,) நான் எதைவிட்டும் உங்களைத் தடுக்கின்றேனோ, அதன்பால் (தீமையானவற்றைச் செய்துகொண்டு) உங்களுக்கு மாறுசெய்வதை நான் விரும்பவில்லை; என்னால் இயன்றவரையில் (உங்களின்) சீர்திருத்தத்தையே அன்றி, வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவிபெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை; அவனையே நான் சார்ந்துள்ளேன்; இன்னும், அவன்பாலே மீளுகிறேன்."
11:89 وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىْۤ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ
وَيٰقَوْمِ என் மக்களே لَا يَجْرِمَنَّكُمْ நிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம் شِقَاقِىْۤ என்மீதுள்ள விரோதம் اَنْ يُّصِيْبَكُمْ உங்களை அடைவதற்க்கு مِّثْلُ போன்ற مَاۤ எது اَصَابَ அடைந்தது قَوْمَ மக்களை نُوْحٍ நூஹூடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை هُوْدٍ ஹூதுடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை صٰلِحٍؕ ஸாலிஹ்வுடைய وَمَا இல்லை قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய مِّنْكُمْ உங்களுக்கு بِبَعِيْدٍ தூரமாக
11:89. வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
11:89. "என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹுடைய சமூகத்தவரையும், அல்லது ஹூதுடைய சமூகத்தவரையும், அல்லது ஸாலிஹுடைய சமூகத்தவரையும் பிடித்துக்கொண்டது போன்ற (வேதனையான)து, உங்களையும் பிடித்துக்கொள்வதற்கு உங்களைத் திண்ணமாகத் தூண்டவேண்டாம்; லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!"
11:90 وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِؕ اِنَّ رَبِّىْ رَحِيْمٌ وَّدُوْدٌ
وَاسْتَغْفِرُوْا மன்னிப்புக் கோருங்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِؕ அவன் பக்கமே اِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் رَحِيْمٌ பெரும் கருணையாளன் وَّدُوْدٌ மகா நேசன்
11:90. வஸ்தக்Fபிரூ ரBப்Bபகும் தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ ரஹீமு(ன்)வ் வதூத்
11:90. "ஆகவே, உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி, இன்னும் அவன் பக்கமே மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்" (என்று கூறினார்).
11:91 قَالُوْا يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَـنَرٰٮكَ فِيْنَا ضَعِيْفًا ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ وَمَاۤ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ
قَالُوْا கூறினார்கள் يٰشُعَيْبُ ஷுஐபே مَا نَفْقَهُ நாம் விளங்கவில்லை كَثِيْرًا பலவற்றை مِّمَّا تَقُوْلُ நீர் கூறுவதில் وَاِنَّا நிச்சயமாக நாம் لَـنَرٰٮكَ உம்மை காண்கிறோம் فِيْنَا எங்களில் ضَعِيْفًا ۚ பலவீனராக وَلَوْلَا இல்லாவிடில் رَهْطُكَ உம் இனத்தார் لَرَجَمْنٰكَ கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மை وَمَاۤ இல்லை اَنْتَ நீர் عَلَيْنَا நம்மிடம் بِعَزِيْزٍ மதிப்புடையவராக
11:91. காலூ யா ஷு'அய்Bபு மா னFப்கஹு கதீரம் மிம்மா தகூலு வ இன்னா லனராக Fபீனா ள'ஈFப(ன்)வ் வ லவ் லா ரஹ்துக லரஜம்னாக வ மா அன்த 'அலய்னா Bபி'அZஜீZஜ்
11:91. (அதற்கு) அவர்கள், "ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ளமுடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலவீனமானவராகவே நாங்கள் காண்கின்றோம்; உம் குலத்தார் இல்லையென்றால், உம்மை நாங்கள் கல்லால் அடித்து(க் கொன்று) இருப்போம்; நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்" என்று கூறினார்கள்.
11:92 قَالَ يٰقَوْمِ اَرَهْطِىْۤ اَعَزُّ عَلَيْكُمْ مِّنَ اللّٰهِ ؕ وَ اتَّخَذْتُمُوْهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا ؕ اِنَّ رَبِّىْ بِمَا تَعْمَلُوْنَ مُحِيْطٌ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَهْطِىْۤ என் இனத்தாரா? اَعَزُّ அதிகம் மதிப்புடையவர்(கள்) عَلَيْكُمْ உங்களிடம் مِّنَ اللّٰهِ ؕ அல்லாஹ்வை விட وَ اتَّخَذْتُمُوْهُ அவனை நீங்கள் எடுத்து கொண்டீர்கள் وَرَآءَ பின்னால் كُمْ உங்களுக்கு ظِهْرِيًّا ؕ எறியப்பட்டவனாக اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் بِمَا எவற்றை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் مُحِيْطٌ சூழ்ந்திருப்பவன்
11:92. கால யா கவ்மி அரஹ்தீ அ'அZஜ்Zஜு 'அலய்கும் மினல் லாஹி வத்தகத்துமூஹு வரா'அகும் ளிஹ்ரிய்யன் இன்ன ரBப்Bபீ Bபிமா தஃமலூன முஹீத்
11:92. (அதற்கு) அவர் கூறினார்: "(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களா? நீங்கள் அவனை முதுகுக்குப்பின் தள்ளி(ப் புறக்கணித்து)விட்டீர்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்பவற்றை சூழ்ந்து அறிகிறவன்."
11:93 وَيٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّىْ عَامِلٌ ؕ سَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ يَّاْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ ؕ وَارْتَقِبُوْۤا اِنِّىْ مَعَكُمْ رَقِيْبٌ
وَيٰقَوْمِ என் மக்களே اعْمَلُوْا நீங்கள் செயல்படுங்கள் عَلٰى مَكَانَتِكُمْ உங்கள் தகுதிக்கு ஏற்ப اِنِّىْ நிச்சயமாக நான் عَامِلٌ ؕ செயல்படுகிறேன் سَوْفَ تَعْلَمُوْنَ ۙ அறிவீர்கள் مَنْ யாருக்கு? يَّاْتِيْهِ அவருக்கு வரும் عَذَابٌ ஒரு வேதனை يُّخْزِيْهِ இழிவுபடுத்தும்/தன்னை وَمَنْ இன்னும் யார்? هُوَ அவர் كَاذِبٌ ؕ பொய்யர் وَارْتَقِبُوْۤا எதிர் பார்த்திருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் رَقِيْبٌ எதிர்பார்ப்பவன்
11:93. வ யா கவ்மிஃ மலூ 'அலா மகானதிகும் இன்னீ 'ஆமிலுன் ஸவ்Fப தஃலமூன ம(ன்)ய் ய'தீஹி 'அதாBபு(ன்)ய் யுக்Zஜீஹி வ மன் ஹுவ காதிBப்; வர்தகிBபூ இன்ன்னீ ம'அகும் ரகீBப்
11:93. "என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்கள் நிலையிலேயே செயல்படுங்கள்; நானும் செயல்படுகிறேன்; இழிவுதரும் வேதனை யாரை வந்தடையும்? என்பதையும், பொய்யர் யார்? என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்: நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" (என்றும் கூறினார்).
11:94 وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ
وَلَمَّا جَآءَ வந்த போது اَمْرُنَا நம் கட்டளை نَجَّيْنَا பாதுகாத்தோம் شُعَيْبًا ஷுஐபை وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ அருளைக் கொண்டு مِّنَّا ۚ நமது وَاَخَذَتِ இன்னும் பிடித்தது الَّذِيْنَ எவர்களை ظَلَمُوا அநியாயம்செய்தார்கள் الصَّيْحَةُ சப்தம் فَاَصْبَحُوْا காலையில் ஆகிவிட்டனர் فِىْ دِيَارِهِمْ தங்கள் இல்லங்களில் جٰثِمِيْنَۙ இறந்தவர்களாக
11:94. வ லம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஷு'அய்Bப(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ அகததில் லதீன ளலமுஸ் ஸய்ஹது Fப அஸ்Bபஹூ Fபீ தியாரிஹிம் ஜாதிமீன்
11:94. (தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்தபோது, ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளைக்கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களைப் பேரிடிமுழக்கம் பிடித்துக்கொண்டது: அவர்கள் தம் வீடுகளில் குப்புற வீழ்ந்து இறந்துகிடந்தவர்களாய் அதிகாலையில் ஆகிவிட்டார்கள்.
11:95 كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ؕ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ
كَاَنْ لَّمْ يَغْنَوْا அவர்கள் வசிக்காததைப் போல் فِيْهَا ؕ அதில் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! بُعْدًا அழிவு لِّمَدْيَنَ மத்யனுக்கு كَمَا بَعِدَتْ அழிந்தது போன்று ثَمُوْدُ ஸமூத்
11:95. க-அல்-லம் யக்னவ் Fபீஹா; அலா Bபுஃதல் லி மத்யன கமா Bப'இதத் தமூத்
11:95. அதில் அவர்கள் (ஒருகாலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர்; தெரிந்து கொள்ளுங்கள்! 'ஸமூது' (கூட்டத்தார் சாபக் கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்.
11:96 وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مُوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَا நம் வசனங்களுடன் وَسُلْطٰنٍ இன்னும் அத்தாட்சி مُّبِيْنٍۙ தெளிவான(து)
11:96. வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா வ ஸுல்தானிம் முBபீன்
11:96. நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடனும், தெளிவான அத்தாட்சியுடனும் அனுப்பி வைத்தோம்.
11:97 اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ ٮِٕهٖ فَاتَّبَعُوْۤا اَمْرَ فِرْعَوْنَۚ وَمَاۤ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِيْدٍ
اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَ இன்னும் مَلَا۟ ٮِٕهٖ அவனுடைய முக்கிய பிரமுகர்கள் فَاتَّبَعُوْۤا அவர்கள் பின்பற்றினர் اَمْرَ கட்டளையை فِرْعَوْنَۚ ஃபிர்அவ்னின் وَمَاۤ இல்லை اَمْرُ கட்டளை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய بِرَشِيْدٍ நல்லறிவுடையதாக
11:97. இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபத்தBப'ஊ அம்ர Fபிர்'அவ்ன வ மா அம்ரு Fபிர்'அவ்ன Bபிரஷீத்
11:97. (அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்); அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றினார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.
11:98 يَقْدُمُ قَوْمَهٗ يَوْمَ الْقِيٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَؕ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ
يَقْدُمُ முன் செல்வான் قَوْمَهٗ தன் மக்களுக்கு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فَاَوْرَدَهُمُ சேர்ப்பான்/அவர்களை النَّارَؕ நரகத்தில் وَبِئْسَ அது கெட்டது الْوِرْدُ சேருமிடம் الْمَوْرُوْدُ சேரப்படும்
11:98. யக்துமு கவ்மஹூ யவ்மல் கியாமதி Fப அவ்ரத ஹுமுன் னார வ Bபி'ஸல் விர்துல் மவ்ரூத்
11:98. அவன் (ஃபிர்அவ்ன்) மறுமை நாளில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று, அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய் சேர்க்கும் இடம் மிகவும் கெட்டது.
11:99 وَاُتْبِعُوْا فِىْ هٰذِهٖ لَـعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ ؕ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ
وَاُتْبِعُوْا இன்னும் அவர்களை தொடர்ந்தது فِىْ هٰذِهٖ இதில் لَـعْنَةً சாபம் وَّيَوْمَ الْقِيٰمَةِ ؕ இன்னும் மறுமை நாளில் بِئْسَ மிகக் கெட்டது الرِّفْدُ சன்மானம் الْمَرْفُوْدُ சன்மானம் கொடுக்கப்பட்டது
11:99. வ உத்Bபி'ஊ Fபீ ஹாதிஹீ லஃனத(ன்)வ் வ யவ்மல் கியாமஹ்; Bபி'ஸர் ரிFப்துல் மர்Fபூத்
11:99. இவ்வுலகத்திலும், மறுமை நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட (இந்தச்) சன்மானம் மிகவும் கெட்டது.
11:100 ذٰ لِكَ مِنْ اَنْۢبَآءِ الْـقُرٰى نَقُصُّهٗ عَلَيْكَ مِنْهَا قَآٮِٕمٌ وَّحَصِيْدٌ
ذٰ لِكَ இவை مِنْ اَنْۢبَآءِ சரித்திரங்களில் الْـقُرٰى ஊர்கள் نَقُصُّهٗ விவரிக்கிறோம்/ இவற்றை عَلَيْكَ உம்மீது مِنْهَا இவற்றில் قَآٮِٕمٌ நிற்கிறது وَّحَصِيْدٌ இன்னும் அறுக்கப்பட்டது
11:100. தாலிக மின் அம்Bபா'இல் குரா னகுஸ்ஸுஹூ 'அலய்க மின்ஹா கா'இமு(ன்)வ் வ ஹஸீத்
11:100. (நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சில) ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம்; இவற்றில் சில நிலைத்து உள்ளன; (சில அறுவடை செய்யப்பட்டவைப் போல்) அழிந்தும் போயின.
11:101 وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰـكِنْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِىْ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَىْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَؕ وَمَا زَادُوْهُمْ غَيْرَ تَتْبِيْبٍ
وَمَا நாம் அநீதி இழைக்கவில்லை ظَلَمْنٰهُمْ அவர்களுக்கு وَلٰـكِنْ எனினும் ظَلَمُوْۤا அநீதி இழைத்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே فَمَاۤ اَغْنَتْ பலனளிக்கவில்லை عَنْهُ அவர்களுக்கு اٰلِهَتُهُ தெய்வங்கள்/ அவர்களுடைய الَّتِىْ எவை يَدْعُوْنَ அழைக்கின்றார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ شَىْءٍ சிறிதும் لَّمَّا جَآءَ வந்த போது اَمْرُ கட்டளை رَبِّكَؕ உம் இறைவனின் وَمَا زَادُوْ அவை அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு غَيْرَ தவிர تَتْبِيْبٍ அழிவை
11:101. வமா ளலம்னாஹும் வ லாகின் ளலமூ அன்Fபுஸஹும் Fபமா அக்னத் 'அன்ஹும் ஆலிஹதுஹுமுல் லதீ யத்'ஊன மின் தூனில் லாஹி மின் ஷய்'இல் லம்மா ஜா'அ அம்ரு ரBப்Bபிக வமா Zஜாதூஹும் கய்ர தத்BபீBப்
11:101. அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டார்கள்; உம் இறைவனின் கட்டளை வந்தபோது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக்கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை; மேலும், அவை அவர்களுக்கு நஷ்டத்தைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.
11:102 وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰى وَهِىَ ظَالِمَةٌ ؕ اِنَّ اَخْذَهٗۤ اَلِيْمٌ شَدِيْدٌ
وَكَذٰلِكَ இது போன்றுதான் اَخْذُ பிடி رَبِّكَ உம் இறைவனின் اِذَاۤ اَخَذَ அவன் பிடித்தால் الْقُرٰى ஊர்களை وَهِىَ அவையோ ظَالِمَةٌ ؕ அநியாயம் புரிந்தவை اِنَّ நிச்சயமாக اَخْذَهٗۤ அவனுடைய பிடி اَلِيْمٌ துன்புறுத்தக் கூடியது شَدِيْدٌ மிகக் கடுமையானது
11:102. வ கதாலிக அக்து ரBப்Bபிக இதா அகதல் குரா வ ஹிய ளாலிமஹ்; இன்ன அக்தஹூ அலீமுன் ஷதீத்
11:102. சில ஊர்களை - அவை அநியாயம் செய்து கொண்டிருக்க, (வேதனையைக் கொண்டு) அவன் பிடித்தால் - உம்முடைய இறைவனின் பிடி இப்படித்தான் இருக்கும்; நிச்சயமாக அவனுடைய பிடி வேதனைமிக்கதாகவும், மிகக் கடினமானதாகவும் இருக்கும்.
11:103 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ؕ ذٰ لِكَ يَوْمٌ مَّجْمُوْعٌ ۙ لَّهُ النَّاسُ وَذٰ لِكَ يَوْمٌ مَّشْهُوْدٌ
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّمَنْ எவருக்கு خَافَ பயந்தார் عَذَابَ வேதனை الْاٰخِرَةِ ؕ மறுமையின் ذٰ لِكَ அது يَوْمٌ நாள் مَّجْمُوْعٌ ۙ ஒன்று சேர்க்கப்படும் لَّهُ அதில் النَّاسُ மக்கள் وَذٰ لِكَ இன்னும் அது يَوْمٌ நாள் مَّشْهُوْدٌ சமர்ப்பிக்கப்படும்
11:103. இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிமன் காFப 'அதாBபல் ஆகிரஹ்; தாலிக யவ்மும் மஜ்மூ'உல் லஹுன் னாஸு வ தாலிக யவ்மும் மஷ்ஹூத்
11:103. நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும்; அன்றியும், அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.
11:104 وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍؕ
وَمَا நாம் பிற்படுத்த மாட்டோம் نُؤَخِّرُهٗۤ அதை اِلَّا தவிர لِاَجَلٍ ஒரு தவணைக்கே مَّعْدُوْدٍؕ எண்ணப்பட்டது
11:104. வமா னு'அக்கிருஹூ இல்லா லி அஜலிம் மஃதூத்
11:104. குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர, அதனை நாம் பிற்படுத்தவில்லை.
11:105 يَوْمَ يَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖۚ فَمِنْهُمْ شَقِىٌّ وَّسَعِيْدٌ
يَوْمَ நாளில் يَاْتِ அது வரும் لَا تَكَلَّمُ பேசாது نَفْسٌ எந்த ஓர் ஆன்மா اِلَّا தவிர بِاِذْنِهٖۚ அவனுடைய அனுமதி கொண்டே فَمِنْهُمْ அவர்களில் شَقِىٌّ துர்ப்பாக்கியவான் وَّسَعِيْدٌ இன்னும் நற்பாக்கியவான்
11:105. யவ்ம யாதி லா தகல்லமு னFப்ஸுன் இல்லா Bபி இத்னிஹ்; Fபமின்ஹும் ஷகிய்யு(ன்)வ் வ ஸ'ஈத்
11:105. அது வரும் நாளில் அவனுடைய அனுமதி இன்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துர்பாக்கியசாலியும், நற்பாக்கியசாலியும் இருப்பர்.
11:106 فَاَمَّا الَّذِيْنَ شَقُوْا فَفِى النَّارِ لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّشَهِيْقٌ ۙ
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ شَقُوْا துர்ப்பாக்கியமடைந்தவர்கள் فَفِى النَّارِ நரகில் لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் زَفِيْرٌ பெரும் கூச்சல் وَّشَهِيْقٌ ۙ இன்னும் இறைச்சல்
11:106. Fப அம்மல் லதீன ஷகூ FபFபின் னாரி லஹும் Fபீஹா ZஜFபீரு(ன்)வ் வ ஷஹீக்
11:106. துர்பாக்கியம் அடைந்தவர்கள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள்; அதில் அவர்களுக்குப் பெருங்கூச்சலும், முணக்கமும் (தான்) இருக்கும்.
11:107 خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيْدُ
خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமானவர்கள் فِيْهَا அதில் مَا دَامَتِ நிலைத்திருக்கும்வரை السَّمٰوٰتُ வானங்கள் وَالْاَرْضُ இன்னும் பூமி اِلَّا தவிர مَا شَآءَ நாடியதை رَبُّكَ ؕ உம் இறைவன் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் فَعَّالٌ செய்பவன் لِّمَا நாடுவான் يُرِيْدُ எதை
11:107. காலிதீன Fபீஹா மா தாமதிஸ் ஸமாவாது வல் அர்ளு இல்லா மா ஷா'அ ரBப்Bபுக்; இன்ன ரBப்Bபக Fப' 'ஆலுல் லிமா யுரீத்
11:107. உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிரந்தரமாக இருப்பார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
11:108 وَاَمَّا الَّذِيْنَ سُعِدُوْا فَفِى الْجَـنَّةِ خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ عَطَآءً غَيْرَ مَجْذُوْذٍ
وَاَمَّا ஆகவே الَّذِيْنَ سُعِدُوْا நற்பாக்கியமடைந்தவர்கள் فَفِى الْجَـنَّةِ சொர்க்கத்தில் خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள் فِيْهَا அதில் مَا دَامَتِ நிலைத்திருக்கும்வரை السَّمٰوٰتُ வானங்கள் وَالْاَرْضُ இன்னும் பூமி اِلَّا مَا شَآءَ நாடியதைத் தவிர رَبُّكَ ؕ உம் இறைவன் عَطَآءً அருட்கொடையாக غَيْرَ مَجْذُوْذٍ முடிவுறாதது
11:108. வ அம்மல் லதீன ஸு'இதூ FபFபில் ஜன்னதி காலிதீன Fபீஹா மா தாமதிஸ் ஸமாவாது வல் அர்ளு இல்லா மா ஷா'அ ரBப்Bபுக்; அதா'அன் கய்ர மஜ்தூத்
11:108. நற்பாக்கியமடைந்தவர்கள் சுவர்க்கபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அச்சுவர்க்கத்திலேயே நிரந்தரமாக இருப்பார்கள்: (இது) முடிவுறாத அருட்கொடையாக (அவர்களுக்கு வழங்கப்படும்).
11:109 فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هٰٓؤُلَاۤءِ ؕ مَا يَعْبُدُوْنَ اِلَّا كَمَا يَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُؕ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِيْبَهُمْ غَيْرَ مَنْقُوْصٍ
فَلَا تَكُ ஆகிவிடாதீர் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில் مِّمَّا يَعْبُدُ வணங்குபவற்றில் هٰٓؤُلَاۤءِ ؕ இவர்கள் مَا يَعْبُدُوْنَ இவர்கள் வணங்கவில்லை اِلَّا தவிர كَمَا போன்றே يَعْبُدُ வணங்கினார்(கள்) اٰبَآؤُ மூதாதைகள் هُمْ இவர்களுடைய مِّنْ قَبْلُؕ முன்னர் وَاِنَّا நிச்சயமாக நாம் لَمُوَفُّوْهُمْ முழுமையாகக் கொடுப்போம்/இவர்களுக்கு نَصِيْبَهُمْ பாகத்தை/ இவர்களுடைய غَيْرَ مَنْقُوْصٍ குறைக்கப்படாமல்
11:109. Fபலா தகு Fபீ மிர்யதிம் மிம்ம்மா யஃBபுது ஹா'உலா'; மா யஃBபுதூன இல்லா கமா யஃBபுது ஆBபா'உஹும் மின் கBப்ல்; வ இன்னா லமுவFப் Fபூஹும் னஸீBபஹும் கய்ர மன்கூஸ்
11:109. (நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம்: (இவர்களுக்கு) முன்னர் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமேதான் இவர்களும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழுமையாக நாம் இவர்களுக்குக் கொடுக்கக்கூடியவர்கள்.
11:110 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ ؕ وَ لَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவுக்கு الْكِتٰبَ வேதத்தை فَاخْتُلِفَ மாறுபாடு கொள்ளப்பட்டது فِيْهِ ؕ அதில் وَ لَوْلَا இல்லையெனில் كَلِمَةٌ ஒரு வாக்கு سَبَقَتْ முந்தியது مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் لَـقُضِىَ முடிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْ ؕ இவர்களுக்கிடையில் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مِّنْهُ அதில் مُرِيْبٍ மிக ஆழமான (சந்தேகம்)
11:110. வ லகத் ஆதய்னா மூஸல் கிதாBப Fபக்துலிFப Fபீஹ்; வ லவ் லா கலிமதுன் ஸBபகத் மிர் ரBப்Bபிக லகுளிய Bபய்னஹும்; வ இன்னஹும் லFபீ ஷக்கிம் மின்ஹு முரீBப்
11:110. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து வாக்கு முந்தியிருக்காவிட்டால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும்; நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி பெரும் சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
11:111 وَاِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ؕ اِنَّهٗ بِمَا يَعْمَلُوْنَ خَبِيْرٌ
وَاِنَّ நிச்சயமாக كُلًّا எல்லோருக்கும் لَّمَّا நிச்சயமாக முழுமையாகக் கொடுப்பான் لَيُوَفِّيَنَّهُمْ அவர்களுக்கு رَبُّكَ உம் இறைவன் اَعْمَالَهُمْ ؕ அவர்களுடைய செயல்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் بِمَا يَعْمَلُوْنَ அவர்கள் செய்பவற்றை خَبِيْرٌ ஆழ்ந்தறிபவன்
11:111. வ இன்ன குல்லல் லம்மா ல யுவFப்Fபியன்னஹும் ரBப்Bபுக அஃமாலஹும்; இன்னஹூ Bபிமா யஃமலூன கBபீர்
11:111. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்(களுக்குரிய கூலி)களை அவர்களுக்கு முழுமையாகக் கொடுப்பான்; நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.
11:112 فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ؕ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
فَاسْتَقِمْ நிலையாக இருங்கள் كَمَاۤ போன்றே اُمِرْتَ நீர் ஏவப்பட்டீர் وَمَنْ இன்னும் எவர்(கள்) تَابَ திருந்தி திரும்பினார்(கள்) مَعَكَ உம்முடன் وَلَا تَطْغَوْا ؕ வரம்பு மீறாதீர்கள் اِنَّهٗ நிச்சயமாக அவன் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை بَصِيْرٌ உற்று நோக்குபவன்
11:112. Fபஸ்தகிம் கமா உமிர்த வ மன் தாBப ம'அக வலா தத்கவ்; இன்னஹூ Bபிமா தஃமலூன Bபஸீர்
11:112. ஆகவே, (தூதரே!) நீர் ஏவப்பட்டவாறு (நேர் வழியில்) உறுதியாக நிற்பீராக! (அவ்வாறே) பாவமன்னிப்புக் கோரி உம்முடன் இருப்போரும் (நிற்பார்களாக!); வரம்பு மீறிவிடாதீர்கள்; நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதைக் கவனிப்பவனாக இருக்கின்றான்.
11:113 وَلَا تَرْكَنُوْۤا اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُۙ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ
وَلَا تَرْكَنُوْۤا நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநீதி இழைத்தார்கள் فَتَمَسَّكُمُ உங்களை அடைந்து விடும் النَّارُۙ நெருப்பு وَمَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ اَوْلِيَآءَ பாதுகாப்பவர்கள் எவரும் ثُمَّ لَا تُنْصَرُوْنَ பிறகு/உதவி செய்யப்பட மாட்டீர்கள்
11:113. வ லா தர்கனூ இலல் லதீன ளலமூ Fபதமஸ்ஸ குமுன் னாரு வமா லகும் மின் தூனில் லாஹி மின் அவ்லியா'அ தும்ம லா துன்ஸரூன்
11:113. இன்னும், அநியாயம் செய்தவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்துவிடாதீர்கள் - (அப்படிச் செய்தால் (நரக) நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களுக்குப் பாதுகாவலர்கள் எவருமில்லை; மேலும், (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.
11:114 وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَـفًا مِّنَ الَّيْلِ ؕ اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ ؕ ذٰ لِكَ ذِكْرٰى لِلذّٰكِرِيْنَ ۚ
وَاَقِمِ நிலை நிறுத்துவீராக! الصَّلٰوةَ தொழுகையை طَرَفَىِ இரு முனைகளில் النَّهَارِ பகலின் وَزُلَـفًا இன்னும் ஒரு பகுதியில் مِّنَ الَّيْلِ ؕ இரவில் اِنَّ الْحَسَنٰتِ நிச்சயமாகநன்மைகள் يُذْهِبْنَ போக்கி விடுகின்றன السَّيِّاٰتِ ؕ பாவங்களை ذٰ لِكَ ذِكْرٰى இது/ஒருநல்லுபதேசம் لِلذّٰكِرِيْنَ ۚ நினைவு கூருபவர்களுக்கு
11:114. வ அகிமிஸ் ஸலாத தரFபயின் னஹாரி வ ZஜுலFபம் மினல் லய்ல்; இன்னல் ஹஸனாதி யுத்ஹிBப்னஸ் ஸய்யி ஆத்; தாலிக திக்ரா லித் தாகிரீன்
11:114. பகலின் (காலை, மாலை ஆகிய) இரு முனைகளிலும், இரவின் சில பகுதிகளிலும் நீர் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடும்; (இறைவனை) நினைவு கூருவோருக்கு இது உபதேசமாகும்.
11:115 وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ
وَاصْبِرْ பொறுப்பீராக فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُضِيْعُ வீணாக்க மாட்டான் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிபவர்களின்
11:115. வஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
11:115. (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
11:116 فَلَوْ لَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِيَّةٍ يَّـنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِى الْاَرْضِ اِلَّا قَلِيْلًا مِّمَّنْ اَنْجَيْنَا مِنْهُمْ ۚ وَاتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِيْهِ وَكَانُوْا مُجْرِمِيْنَ
فَلَوْ لَا كَانَ இருந்திருக்க வேண்டாமா? مِنَ الْقُرُوْنِ தலை முறையினர்களில் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் اُولُوْا بَقِيَّةٍ சிறந்தோர் يَّـنْهَوْنَ தடுக்கின்றார்கள் عَنِ الْفَسَادِ விஷமத்தை விட்டு فِى الْاَرْضِ பூமியில் اِلَّا எனினும் قَلِيْلًا குறைவானவர்(கள்) مِّمَّنْ இருந்து/எவர்கள் اَنْجَيْنَا நாம் பாதுகாத்தோம் مِنْهُمْ ۚ அவர்களில் وَاتَّبَعَ இன்னும் பின்பற்றினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநியாயம் செய்தனர் مَاۤ எதில் اُتْرِفُوْا இன்பமளிக்கப்பட்டார்கள் فِيْهِ அதில் وَكَانُوْا இன்னும் இருந்தனர் مُجْرِمِيْنَ குற்றவாளிகளாக
11:116. Fபலவ் லா கான மினல் குரூனி மின் கBப்லிகும் ஊலூ Bபகிய்யதி(ன்)ய் யன்ஹவ்ன 'அனில் Fபஸாதி Fபில் அர்ளி இல்லா கலீலம் மிம்மன் அன்ஜய்னா மின்ஹும்; வத்தBப'அல் லதீன ளலமூ மா உத்ரிFபூ Fபீஹி வ கானூ முஜ்ரிமீன்
11:116. உங்களுக்கு முன்னர் இருந்த தலைமுறைகளில் இந்தப் பூமியில் குழப்பம் செய்வதைவிட்டும், தடுக்கக்கூடிய நல்லவர்கள் இருந்திருக்கக் கூடாதா? அவர்களிலிருந்து நாம் யாரைக் காப்பாற்றினோமோ அந்த சொற்ப எண்ணிக்கையினர் தவிர (மற்ற அனைவரும் குழப்பவாதிகளாக இருந்தனர்). ஆனால், அநியாயம் செய்தோர் எதில் சுகம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ அதனையே பின்பற்றினார்கள்; மேலும், அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.
11:117 وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ
وَمَا كَانَ இருக்க வில்லை رَبُّكَ உம் இறைவன் لِيُهْلِكَ அழிப்பவனாக الْقُرٰى ஊர்களை بِظُلْمٍ அநியாயமாக وَّاَهْلُهَا அவற்றில் வசிப்போரோ مُصْلِحُوْنَ சீர்திருத்துபவர்கள்
11:117. வமா கான ரBப்Bபுக லியுஹ்லிகல் குரா Bபிளுல்மி(ன்)வ் வ அஹ்லுஹா முஸ்லிஹூன்
11:117. இன்னும், (நபியே!) ஊர்களை அவ்வூரார் சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிப்பவனாக இல்லை.
11:118 وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَـعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّكَ உம் இறைவன் لَجَـعَلَ ஆக்கியிருப்பான் النَّاسَ மக்களை اُمَّةً وَّاحِدَةً ஒரே வகுப்பினராக وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்
11:118. வ லவ் ஷா'அ ரBப்Bபுக லஜ'அலன்ன்னாஸ உம்மத(ன்)வ் வா ஹிதத(ன்)வ் வலா யZஜாலூன முக்தலிFபீன்
11:118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை;) எனவே, அவர்கள் எப்போதும் மாறுபட்டுக் கொண்டே இருப்பார்கள்.
11:119 اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ ؕ وَلِذٰلِكَ خَلَقَهُمْ ؕ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـئَنَّ جَهَـنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ
اِلَّا தவிர مَنْ எவர் رَّحِمَ அருள் புரிந்தான் رَبُّكَ ؕ உம் இறைவன் وَلِذٰلِكَ இதற்காகத்தான் خَلَقَهُمْ அவன் படைத்தான் وَتَمَّتْ நிறைவேறியது كَلِمَةُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் لَاَمْلَـئَنَّ நிச்சயமாக நான் நிரப்புவேன் جَهَـنَّمَ நரகத்தை مِنَ الْجِنَّةِ ஜின்களில் وَالنَّاسِ இன்னும் மக்கள் اَجْمَعِيْنَ அனைவர்
11:119. இல்லா மர் ரஹிம ரBப்Bபுக்; வ லிதாலிக கலகஹும்; வ தம்மத் கலிமது ரBப்Bபிக ல அம்ல'அன்ன ஜஹன்னம மினல் ஜின்னதி வன்ன்னாஸி அஜ்ம'ஈன்
11:119. (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே (மாறுபடும்) அவர்களைப் படைத்திருக்கிறான்: "நிச்சயமாக நான் (பாவம் செய்த) ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக் கொண்டும் நரகத்தை நிரப்புவேன்" என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிட்டது.
11:120 وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
وَكُلًّا எல்லாவற்றையும் نَّقُصُّ விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு مِنْ இருந்து اَنْۢبَآءِ சரித்திரங்கள் الرُّسُلِ தூதர்களின் مَا எதை نُثَبِّتُ உறுதிப்படுத்துவோம் بِهٖ அதைக் கொண்டு فُؤَادَكَ ۚ உம் உள்ளத்தை وَجَآءَكَ இன்னும் வந்தன/உமக்கு فِىْ هٰذِهِ الْحَـقُّ இவற்றில்/உண்மை وَمَوْعِظَةٌ நல்லுபதேசம் وَّذِكْرٰى அறிவுரை لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு
11:120. வ குல்லன் னகுஸ்ஸு 'அலய்க மின் அம்Bபா'இர் ருஸுலி மா னுதBப்Bபிது Bபிஹீ Fபு'ஆதக்; வ ஜா'அக Fபீ ஹாதிஹில் ஹக்கு வ மவ்'இளது(ன்)வ் வ திக்ரா லில்மு' மினீன்
11:120. (நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து யாவற்றையும் உம் இதயத்தை (நாம்) திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறுகிறோம்; இவற்றில் உமக்குச் சத்தியமும், உபதேசமும், நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
11:121 وَقُلْ لِّـلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْؕ اِنَّا عٰمِلُوْنَۙ
وَقُلْ கூறுவீராக لِّـلَّذِيْنَ எவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் اعْمَلُوْا நீங்கள் செய்யுங்கள் عَلٰى مَكَانَتِكُمْؕ உங்கள் போக்கில் اِنَّا நிச்சயமாக நாங்கள் عٰمِلُوْنَۙ செய்பவர்கள், செய்வோம்
11:121. வ குல் லில்லதீன லா யு'மினூ னஃமலூ 'அலா மகானதிகும் இன்னா 'ஆமிலூன்
11:121. நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக! "நீங்கள் உங்களுடைய நிலையிலேயே செயல்படுங்கள்; நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்."
11:122 وَانْـتَظِرُوْا ۚ اِنَّا مُنْتَظِرُوْنَ
وَانْـتَظِرُوْا ۚ எதிர்பாருங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مُنْتَظِرُوْنَ எதிர்பார்ப்பவர்கள், எதிர்பார்க்கிறோம்
11:122. வன்தளிரூ இன்னா முன் தளிரூன்
11:122. "நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அவ்வாறே) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
11:123 وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَيْهِ يُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கே غَيْبُ மறைவானவை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَاِلَيْهِ அவனிடமே يُرْجَعُ திருப்பப்படும் الْاَمْرُ காரியங்கள் كُلُّهٗ அவை எல்லாம் فَاعْبُدْهُ ஆகவே, அவனை வணங்குவீராக وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَيْهِؕ அவன் மீதே وَمَا இல்லை رَبُّكَ உம் இறைவன் بِغَافِلٍ கண்காணிக்காதவனாக عَمَّا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை
11:123. வ லில்லாஹி கய்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வ இலய்ஹி யுர்ஜ'உல் அம்ரு குல்லுஹூ FபஃBபுத் ஹு வ தவக்கல் 'அலய்ஹ்; வமா ரBப்Bபுக BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
11:123. வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன; அவனிடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்; நீர் அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! ஆகவே, நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.