டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 16. ஸூரத்துந் நஹ்ல் (தேனி)
மக்கீ-மதனீ, வசனங்கள்: 128
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
16:1 اَتٰۤى اَمْرُ اللّٰهِ فَلَا تَسْتَعْجِلُوْهُ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
اَتٰۤى வந்தது (வந்தே தீரும்) اَمْرُ கட்டளை اللّٰهِ அல்லாஹ்வுடைய فَلَا تَسْتَعْجِلُوْهُ ؕ அவசரமாக தேடாதீர்கள்/அதை سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் முற்றிலும் உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ அவர்கள் இணைவைப்பதை விட்டு
16:1. அதா அம்ருல்லாஹி Fபலா தஸ்தஃஜிலூஹ்; ஸுBப்ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
16:1. அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது; அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக மேலானவன்.
16:2 يُنَزِّلُ الْمَلٰۤٮِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اَنْ اَنْذِرُوْۤا اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوْنِ
يُنَزِّلُ இறக்குகிறான் الْمَلٰۤٮِٕكَةَ வானவர்களை بِالرُّوْحِ உயிருடன் مِنْ اَمْرِهٖ தன் கட்டளைப்படி عَلٰى மீது مَنْ எவர் يَّشَآءُ நாடுகின்றான் مِنْ عِبَادِهٖۤ தன் அடியார்களில் اَنْ என்று اَنْذِرُوْۤا எச்சரியுங்கள் اَنَّهٗ நிச்சயமாக செய்தி لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اَنَا என்னை فَاتَّقُوْنِ ஆகவே, அஞ்சுங்கள்
16:2. யுனZஜ்Zஜிலுல் மலா 'இகத Bபிர்ரூஹி மின் அம்ரிஹீ 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ அன் அன்திரூ அன்னஹூ லா இலாஹ இல்லா அன Fபத்தகூன்
16:2. அவன், தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் கட்டளையிலிருந்து "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) இறைவன், என்னைத் தவிர வேறு யாருமில்லை; ஆகையால், நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற வஹீயைக் கொண்டு மலக்குகளை இறக்கி வைக்கிறான்.
16:3 خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّؕ تَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை بِالْحَـقِّؕ உண்மையான நோக்கத்திற்கே تَعٰلٰى முற்றிலும் உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ அவர்கள் இணைவைப்பதை விட்டு
16:3. கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
16:3. அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன்.
16:4 خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّـطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ
خَلَقَ படைத்தான் الْاِنْسَانَ மனிதனை مِنْ இருந்து نُّـطْفَةٍ இந்திரியம் فَاِذَا هُوَ அவனோ خَصِيْمٌ வாதி, எதிரி مُّبِيْنٌ பகிரங்கமான
16:4. கலகல் இன்ஸான மின் னுத்Fபதின் Fப இதா ஹுவ கஸீமும் முBபீன்
16:4. அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் அவன் பகிரங்கமான தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்.
16:5 وَالْاَنْعَامَ خَلَقَهَا ۚ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ
وَالْاَنْعَامَ இன்னும் கால்நடைகளை خَلَقَهَا படைத்தான் / அவற்றை لَـكُمْ உங்களுக்காக فِيْهَا அவற்றில் دِفْ ٴٌ ஆடை وَّمَنَافِعُ இன்னும் பலன்கள் وَمِنْهَا இன்னும் அவற்றிலிருந்து تَاْكُلُوْنَ புசிக்கின்றீர்கள்
16:5. வல் அன் 'அமா கலகஹா; லகும் Fபீஹா திFப்'உ(ன்)வ் வ மனாFபி'உ வ மின்ஹா தாகுலூன்
16:5. கால்நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கதகதப்பு(ள்ள ஆடையணிகளும்) இன்னும், (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள்.
16:6 وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرَحُوْنَ
وَلَكُمْ இன்னும் உங்களுக்கு فِيْهَا அவற்றில் جَمَالٌ அழகு حِيْنَ நேரத்தில் تُرِيْحُوْنَ மாலையில் ஓட்டி வருகிறீர்கள் وَحِيْنَ இன்னும் நேரத்தில் تَسْرَحُوْنَ மேய்க்க ஓட்டிச் செல்கிறீர்கள்
16:6. வ லகும் Fபீஹா ஜமாலுன் ஹீன துரீஹூன வ ஹீன தஸ்ரஹூன்
16:6. அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டிவரும்போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும்போதும் அவற்றில் உங்களுக்கு அழகு இருக்கிறது.
16:7 وَتَحْمِلُ اَثْقَالَـكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِؕ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ
وَتَحْمِلُ அவை சுமக்கின்றன اَثْقَالَـكُمْ சுமைகளை/உங்கள் اِلٰى بَلَدٍ ஊருக்கு لَّمْ تَكُوْنُوْا நீங்கள் இல்லை بٰلِغِيْهِ அடைபவர்களாக/அதை اِلَّا தவிர بِشِقِّ الْاَنْفُسِؕ மிகுந்த சிரமத்துடன் اِنَّ நிச்சயமாக رَبَّكُمْ உங்கள் இறைவன் لَرَءُوْفٌ மகா இரக்கமுள்ளவன் رَّحِيْمٌۙ மகா கருணையாளன்
16:7. வ தஹ்மிலு அத்காலகும் இலா Bபலதில் லம் தகூனூ Bபாலிகீஹி இல்லா Bபிஷிக்கில் அன்Fபுஸ்; இன்ன ரBப்Bபகும் ல ர'ஊFபுர் ரஹீம்
16:7. மேலும், மிக்க கஷ்டத்துடன் அன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன; நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்.
16:8 وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةً ؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ
وَّالْخَـيْلَ இன்னும் குதிரைகளை وَالْبِغَالَ இன்னும் கோவேறு கழுதைகளை وَالْحَمِيْرَ இன்னும் கழுதைகளை لِتَرْكَبُوْهَا நீங்கள் ஏறிசெல்வதற்க்காக /அவற்றில் وَزِيْنَةً ؕ அலங்காரத்திற்காக وَيَخْلُقُ இன்னும் படைப்புகள் مَا எவற்றை لَا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
16:8. வல்கய்ல வல் Bபிகால வல் ஹமீர லிதர்கBபூஹா வ Zஜீனஹ்; வ யக்லுகு மா லா தஃலமூன்
16:8. இன்னும் குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும், அலங்காரமாகவும் (அவனே படைத்துள்ளான்); இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.
16:9 وَعَلَى اللّٰهِ قَصْدُ السَّبِيْلِ وَمِنْهَا جَآٮِٕرٌؕ وَلَوْ شَآءَ لَهَدٰٮكُمْ اَجْمَعِيْنَ
وَعَلَى اللّٰهِ அல்லாஹ்வின் பொறுப்பு قَصْدُ நேர் السَّبِيْلِ வழி وَمِنْهَا இன்னும் அவற்றில் جَآٮِٕرٌؕ கோணலானது وَلَوْ شَآءَ அவன் நாடினால் لَهَدٰٮكُمْ நேர்வழி நடத்தி இருப்பான்/உங்களை اَجْمَعِيْنَ அனைவரையும்
16:9. வ 'அலல் லாஹி கஸ்துஸ் ஸBபீலி வ மின்ஹா ஜா'இர்; வ லவ் ஷா'அ லஹதாகும் அஜ்ம'ஈன்
16:9. இன்னும், நேர்வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது: (அவனருளை அடைய முடியாது) அதில் கோணல் வழியும் உண்டு; மேலும், அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிடுவான்.
16:10 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً لَّـكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِيْهِ تُسِيْمُوْنَ
هُوَ அவன் الَّذِىْۤ எத்தகையவன் اَنْزَلَ இறக்கினான் مِنَ السَّمَآءِ மேகத்திலிருந்து مَآءً மழை நீரை لَّـكُمْ உங்களுக்கு مِّنْهُ அதில் شَرَابٌ குடிநீர் وَّمِنْهُ இன்னும் அதிலிருந்து شَجَرٌ மரங்கள் فِيْهِ அவற்றில் تُسِيْمُوْنَ மேய்க்கிறீர்கள்
16:10. ஹுவல் லதீ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அல் லகும் மின்ஹு ஷராBபு(ன்)வ் வ மின்ஹு ஷஜருன் Fபீஹி துஸீமூன்
16:10. அவனே வானத்திலிருந்து நீரைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (வளர்ந்த) மரங்களும் உள்ளன; அதில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்.
16:11 يُنْۢبِتُ لَـكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُوْنَ وَالنَّخِيْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
يُنْۢبِتُ முளைக்கவைக்கிறான் لَـكُمْ உங்களுக்கு بِهِ அதைக் கொண்டு الزَّرْعَ பயிர்களை وَالزَّيْتُوْنَ இன்னும் ஜைதூனை وَالنَّخِيْلَ இன்னும் பேரீச்ச மரத்தை وَالْاَعْنَابَ இன்னும் திராட்சைகளை وَمِنْ இன்னும் இருந்து كُلِّ எல்லா الثَّمَرٰتِؕ கனிவர்க்கங்கள் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இவற்றில் لَاٰيَةً அத்தாட்சி لِّـقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ சிந்திக்கின்றார்கள்
16:11. யும்Bபிது லகும் BபிஹிZஜ் Zஜர்'அ வZஜ்Zஜய்தூன வன்ன கீல வல்-அஃனாBப வ மின் குல்லித் தமராத், இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
16:11. அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவ (ஜைத்தூன்) மரத்தையும், பேரீச்ச மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லா வகைக் கனிகளிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கின்றான்; நிச்சயமாக இதில் சிந்திக்கும் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
16:12 وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَؕ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌۢ بِاَمْرِهٖؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَۙ
وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الَّيْلَ இரவை وَالنَّهَارَۙ இன்னும் பகலை وَالشَّمْسَ இன்னும் சூரியனை وَالْقَمَرَؕ இன்னும் சந்திரனை وَالنُّجُوْمُ இன்னும் நட்சத்திரங்கள் مُسَخَّرٰتٌۢ வசப்படுத்தப்பட்டவை بِاَمْرِهٖؕ அவனுடைய கட்டளையைக் கொண்டு اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இவற்றில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَۙ சிந்தித்து புரிகின்றனர்
16:12. வ ஸக்க்கர லகுமுல் லய்ல வன்னஹார வஷ் ஷம்ஸ வல்கமர வன்னுஜூமு முஸக்கராதும் Bபி அம்ரிஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
16:12. இன்னும், அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும், உங்கள் நலன்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தப்பட்டுள்ளன; நிச்சயமாக இதிலும் விளங்கும் கூட்டத்தாருக்குத் தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:13 وَمَا ذَرَاَ لَـكُمْ فِى الْاَرْضِ مُخْتَلِفًا اَلْوَانُهٗ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لّـِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ
وَمَا இன்னும் எது? ذَرَاَ படைத்தான் لَـكُمْ உங்களுக்காக فِى الْاَرْضِ பூமியில் مُخْتَلِفًا மாறுபட்டது اَلْوَانُهٗ ؕ அதன் நிறங்கள் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لّـِقَوْمٍ மக்களுக்கு يَّذَّكَّرُوْنَ நல்லுபதேசம் பெறுகின்றனர்
16:13. வமா தர அ லகும் Fபில் அர்ளி முக்தலிFபன் அல்வானுஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யதக்கரூன்
16:13. இன்னும், பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவை - அதன் நிறங்கள் மாறுபட்டவைகளாக இருக்கின்றன; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருட்கொடைகளை நன்றியுடன்) படிப்பினை பெறும் கூட்டத்தாருக்கு அத்தாட்சி உள்ளது.
16:14 وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَاۚ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
وَهُوَ الَّذِىْ அவன்தான் سَخَّرَ வசப்படுத்தினான் الْبَحْرَ கடலை لِتَاْكُلُوْا நீங்கள் புசிப்பதற்காக مِنْهُ அதிலிருந்து لَحْمًا ஒரு மாமிசத்தை طَرِيًّا பசுமையானது, மென்மையானது, புதியது, சதையுடையது وَّتَسْتَخْرِجُوْا இன்னும் வெளியெடுப்பதற்காக مِنْهُ அதிலிருந்து حِلْيَةً ஆபரணங்களை تَلْبَسُوْنَهَاۚ அணிகிறீர்கள் / அவற்றை وَتَرَى இன்னும் பார்க்கிறீர் الْـفُلْكَ கப்பல்களை مَوَاخِرَ பிளந்து செல்பவையாக فِيْهِ அதில் وَلِتَبْتَغُوْا இன்னும் நீ தேடுவதற்காக مِنْ فَضْلِهٖ அவனுடைய அருளை وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
16:14. வ ஹுவல் லதீ ஸக்கரல் Bபஹ்ர லிதாகுலூ மின்ஹு லஹ்மன் தரிய்ய(ன்)வ் வ தஸ்தக்ரிஜூ மின்ஹு ஹில்யதன் தல்Bபஸூனஹா வ தரல் Fபுல்க மவாகிர Fபீஹி வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
16:14. இன்னும், கடலை - அதிலிருந்து (மீன் போன்ற) பசுமையான மாமிசத்தைப் புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்துகொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் - அவன்தான் வசப்படுத்தித்தந்தான்; இன்னும், அதில் தண்ணீரைப் பிளந்துகொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காண்கிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றிசெலுத்தும் பொருட்டும் (அதை இவ்வாறு வசப்படுத்திக்கொடுத்தான்).
16:15 وَاَلْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَاَنْهٰرًا وَّسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ
وَاَلْقٰى அவன் அமைத்தான் فِى الْاَرْضِ பூமியில் رَوَاسِىَ மலைகளை اَنْ تَمِيْدَ அசையாதிருப்பதற்காக بِكُمْ உங்களைக் கொண்டு وَاَنْهٰرًا இன்னும் நதிகளை وَّسُبُلًا இன்னும் பாதைகளை لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ நீங்கள் வழி பெறுவதற்காக
16:15. வ அல்கா Fபில் அர்ளி ரவாஸிய அன் தமீத Bபிகும் வ அன்ஹார(ன்)வ் வ ஸுBப்லுலல் ல 'அல்லகும் தஹ்ததூன்
16:15. பூமியின் மீது - அது உங்களைக் கொண்டு அசையாதிருப்பதற்காக அவன் உறுதியான மலைகளை அமைத்தான்; இன்னும், நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
16:16 وَعَلٰمٰتٍؕ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ
وَعَلٰمٰتٍؕ இன்னும் பல அடையாளங்களை وَبِالنَّجْمِ இன்னும் நட்சத்திரங்களைக் கொண்டு هُمْ அவர்கள் يَهْتَدُوْنَ வழி பெறுகின்றனர்
16:16. வ 'அலாமாத்; வ Bபின் னஜ்மி ஹும் யஃததூன்
16:16. (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழிகாட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்துகொள்கிறார்கள்.
16:17 اَفَمَنْ يَّخْلُقُ كَمَنْ لَّا يَخْلُقُؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
اَفَمَنْ ஆவானா?/எவன் يَّخْلُقُ படைப்பான் كَمَنْ எவனைப் போல் لَّا يَخْلُقُؕ படைக்கமாட்டான் اَفَلَا تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?
16:17. அFபம(ன்)ய் யக்லுகு கமல்லா யக்லுக்; அFபலா ததக் கரூன்
16:17. (அனைத்தையும்) படைத்திருக்கின்றானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குபவை) போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா?
16:18 وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
وَاِنْ تَعُدُّوْا நீங்கள் எண்ணினால் نِعْمَةَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் لَا நீங்கள் எண்ணி முடிக்கமாட்டீர்கள் تُحْصُوْهَاؕ அதை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
16:18. வ இன் த'உத்தூ னிஃமதல் லாஹி லா துஹ்ஸூஹா; இன்னல் லாஹ ல கFபூருர் ரஹீம்
16:18. இன்னும், அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணிமுடியாது; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
16:19 وَاللّٰهُ يَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَ مَا تُعْلِنُوْنَ
وَاللّٰهُ يَعْلَمُ அல்லாஹ் நன்கறிவான் مَا எதை تُسِرُّوْنَ மறைக்கிறீர்கள் وَ مَا تُعْلِنُوْنَ எதை/வெளிப்படுத்துகிறீர்கள்
16:19. வல்லாஹு யஃலமு மா துஸிர்ரூன வமா துஃலினூன்
16:19. அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான்.
16:20 وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَؕ
وَالَّذِيْنَ எவர்கள் يَدْعُوْنَ அழைக்கிறார்கள் مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் لَا يَخْلُقُوْنَ படைக்க மாட்டார்கள் شَيْــٴًــا எதையும் وَّهُمْ அவர்களோ يُخْلَقُوْنَؕ படைக்கப்படுகிறார்கள்
16:20. வல்லதீன யத்'ஊன மின் தூனில் லாஹி லா யக்லுகூன ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன்
16:20. அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; அவர்களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
16:21 اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ ۚ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ
اَمْوَاتٌ இறந்தவர்கள் غَيْرُ அல்லர் اَحْيَآءٍ ۚ உயிருள்ளவர்கள் وَمَا يَشْعُرُوْنَ இன்னும் அறியமாட்டார்கள் اَيَّانَ எப்போது يُبْعَثُوْنَ எழுப்பப்படுவார்கள்
16:21. அம்வாதுன் கய்ரு அஹ்யா'இ(ன்)வ் வமா யஷ்'உரூன அய்யான யுBப்'அதூன்
16:21. அவர்கள் இறந்தவர்களே - உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.
16:22 اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ قُلُوْبُهُمْ مُّنْكِرَةٌ وَّهُمْ مُّسْتَكْبِرُوْنَ
اِلٰهُكُمْ (வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் اِلٰهٌ இறைவன் وَّاحِدٌ ۚ ஒரே ஒருவன் فَالَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய مُّنْكِرَةٌ நிராகரிக்கின்றன وَّهُمْ இன்னும் அவர்கள் مُّسْتَكْبِرُوْنَ பெருமையடிக்கிறார்கள்
16:22. இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபல்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி குலூBபுஹும் முன்கிரது(ன்)வ் வ ஹும் முஸ்தக்Bபிரூன்
16:22. உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன; மேலும், அவர்கள் (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
16:23 لَا جَرَمَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِيْنَ
لَا جَرَمَ சந்தேகமே இல்லை اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَعْلَمُ அறிவான் مَا எதை يُسِرُّوْنَ மறைக்கிறார்கள் وَمَا இன்னும் எதை يُعْلِنُوْنَؕ வெளிப் படுத்துகிறார்கள் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُسْتَكْبِرِيْنَ பெருமையடிப்ப வர்களை
16:23. லா ஜரம அன்னல் லாஹ யஃலமு மா யுஸிர்ரூன வ ம யுஃலினூன்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்தக்Bபிரீன்
16:23. சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக அறிவான்; (ஆணவம் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
16:24 وَاِذَا قِيْلَ لَهُمْ مَّاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْۙ قَالُـوْۤا اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَۙ
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களிடம் مَّاذَاۤ என்ன اَنْزَلَ இறக்கினான் رَبُّكُمْۙ உங்கள் இறைவன் قَالُـوْۤا கூறினர் اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَۙ முன்னோரின்
16:24. வ இதா கீல லஹும் மாதா அன்Zஜல ரBப்Bபுகும் காலூ அஸாதீருல் அவ்வலீன்
16:24. "உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனைக் குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.
16:25 لِيَحْمِلُوْۤا اَوْزَارَهُمْ كَامِلَةً يَّوْمَ الْقِيٰمَةِۙ وَمِنْ اَوْزَارِ الَّذِيْنَ يُضِلُّوْنَهُمْ بِغَيْرِ عِلْمٍؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ
لِيَحْمِلُوْۤا இவர்கள்சுமப்பதற்காக اَوْزَارَهُمْ தங்கள் (பாவச்)சுமைகளை كَامِلَةً முழுமையாக يَّوْمَ الْقِيٰمَةِۙ மறுமை நாளில் وَمِنْ இன்னும் இருந்து اَوْزَارِ சுமைகள் الَّذِيْنَ எவர்கள் يُضِلُّوْنَهُمْ வழிகெடுக்கின்றனர்/அவர்களை بِغَيْرِ இன்றி عِلْمٍؕ கல்வி اَلَا அறிந்துகொள்ளுங்கள்! سَآءَ மிகக் கெட்டது مَا எது يَزِرُوْنَ சுமப்பார்கள்
16:25. லியஹ்மிலூ அவ்Zஜாரஹும் காமிலத(ன்)ய் யவ்மல் கியாமதி வ மின் அவ்Zஜாரில் லதீன யுளில்லூனஹும் Bபிகய்ரி 'இல்ம்; அலா ஸா'அ மா யZஜிரூன்
16:25. மறுமை நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாகச் சுமக்கட்டும்; மேலும், அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழிகெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்): அறிந்து கொள்ளுங்கள்! இவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.
16:26 قَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتَى اللّٰهُ بُنْيَانَهُمْ مِّنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَاَتٰٮهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ
قَدْ திட்டமாக مَكَرَ சூழ்ச்சி செய்தனர் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ அவர்களுக்கு முன்னர் فَاَتَى ஆகவே வந்தான் اللّٰهُ அல்லாஹ் بُنْيَانَهُمْ கட்டடத்திற்கு/அவர்களின் مِّنَ இருந்து الْقَوَاعِدِ அடித்தளங்கள் فَخَرَّ விழுந்தது عَلَيْهِمُ அவர்கள் மீது السَّقْفُ முகடு مِنْ இருந்து فَوْقِهِمْ அவர்களுக்கு மேல் وَاَتٰٮهُمُ இன்னும் வந்தது/அவர்களுக்கு الْعَذَابُ வேதனை مِنْ حَيْثُ விதத்தில் لَا يَشْعُرُوْنَ அறிய (உணர) மாட்டார்கள்
16:26. கத் மகரல் லதீன மின் கBப்லிஹிம் Fப அதல் லாஹு Bபுன்யா னஹும் மினல் கவா'இதி Fபகர்ர 'அலய்ஹிமுஸ் ஸக்Fபு மின் Fபவ்கிஹிம் வ அதாஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
16:26. நிச்சயமாக இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டடத்தை அடிப்படையோடு பெயர்த்துவிட்டான்; ஆகவே, அவர்களுக்கு மேலே இருந்து 'முகடு' அவர்கள் மீது விழுந்தது; அவர்கள் அறிந்துகொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.
16:27 ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يُخْزِيْهِمْ وَيَقُوْلُ اَيْنَ شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تُشَآقُّوْنَ فِيْهِمْؕ قَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْىَ الْيَوْمَ وَالسُّوْۤءَ عَلَى الْكٰفِرِيْنَۙ
ثُمَّ பிறகு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் يُخْزِيْهِمْ இழிவு படுத்துவான்/அவர்களை وَيَقُوْلُ கூறுவான் اَيْنَ எங்கே? شُرَكَآءِىَ என் இணைகள் الَّذِيْنَ எவர்கள் كُنْتُمْ இருந்தீர்கள் تُشَآقُّوْنَ தர்க்கிப்பீர்கள் فِيْهِمْؕ அவர்கள் விஷயத்தில் قَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டனர் الْعِلْمَ கல்வி اِنَّ நிச்சயமாக الْخِزْىَ இழிவு الْيَوْمَ இன்று وَالسُّوْۤءَ இன்னும் தண்டனை عَلَى الْكٰفِرِيْنَۙ நிராகரிப்பவர்கள் மீது
16:27. தும்ம யவ்மல் கியாமதி யுக்Zஜீஹிம் வ யகூலு அய்ன ஷுரகா'இயல் லதீன குன்தும் துஷாக்கூன Fபீஹிம்; காலல் லதீன ஊதுல் 'இல்ம இன்னல் கிZஜ்யல் யவ்ம வஸ்ஸூ'அ 'அலல் காFபிரீன்
16:27. பின்னர், மறுமைநாளில் அவன் அவர்களை இழிவுபடுத்துவான்: "எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப் பற்றி (நம்பிக்கையாளர்களிடம்) தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்கு அறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள் "நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் நிராகரிப்போரின் மீதுதான்" என்று கூறுவார்கள்.
16:28 الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ فَاَلْقَوُا السَّلَمَ مَا كُنَّا نَـعْمَلُ مِنْ سُوْۤءٍؕ بَلٰٓى اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
الَّذِيْنَ எவர்கள் تَتَوَفّٰٮهُمُ உயிர் கைப்பற்றுகின்றனர்/அவர்களை الْمَلٰۤٮِٕكَةُ வானவர்கள் ظَالِمِىْۤ தீங்கிழைத்தவர்களாக اَنْفُسِهِمْ தங்களுக்குத் தாமே فَاَلْقَوُا السَّلَمَ பணிந்து விட்டார்கள் مَا كُنَّا நாங்கள் இருக்கவில்லை نَـعْمَلُ செய்வோம் مِنْ سُوْۤءٍؕ ஒரு தீமையையும் بَلٰٓى அவ்வாறல்ல اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِمَا எவற்றை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ செய்வீர்கள்
16:28. அல்லதீன ததவFப் Fபாஹு முல் மலா'இகது ளாலிமீ அன்Fபுஸிஹிம் Fப அல்கவுஸ் ஸலம மா குன்னா னஃமலு மின் ஸூ'; Bபலா இன்னல் லாஹ 'அலீமும் Bபிமா குன்தும் தஃமலூன்
16:28. அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றுவார்கள்: அப்போது அவர்கள், "நாங்கள் எந்த விதமான தீமையும் செய்யவில்லையே!" என்று (கீழ்ப்படிந்தவர்களாக வானவர்களிடம்) சமாதானம் கோருவார்கள்; "அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்" (என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்).
16:29 فَادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاؕ فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ
فَادْخُلُوْۤا ஆகவே நுழையுங்கள் اَبْوَابَ வாசல்களில் جَهَنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَاؕ அதில் فَلَبِئْسَ கெட்டுவிட்டது مَثْوَى தங்குமிடம் الْمُتَكَبِّرِيْنَ பெருமையடிப்பவர்களின்
16:29. Fபத்குலூ அBப்வாBப ஜஹன்னம காலிதீன Fபீஹா FபலBபி'ஸ மத்வல் முதகBப் Bபிரீன்
16:29. ஆகவே, "நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அதில் என்றென்றும் தங்கியிருங்கள்" (என்று வானவர்கள் கூறுவார்கள்; ஆணவம் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
16:30 وَقِيْلَ لِلَّذِيْنَ اتَّقَوْا مَاذَاۤ اَنْزَلَ رَبُّكُمْؕ قَالُوْا خَيْرًاؕ لِّـلَّذِيْنَ اَحْسَنُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةٌ ؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ ؕ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِيْنَۙ
وَقِيْلَ இன்னும் கூறப்பட்டது لِلَّذِيْنَ எவர்களுக்கு اتَّقَوْا அஞ்சினார்கள் مَاذَاۤ என்ன? اَنْزَلَ இறக்கினான் رَبُّكُمْؕ உங்கள் இறைவன் قَالُوْا கூறினார்கள் خَيْرًاؕ நன்மையை لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اَحْسَنُوْا நல்லறம் புரிந்தனர் فِىْ هٰذِهِ இந்த الدُّنْيَا உலகில் حَسَنَةٌ ؕ நன்மை وَلَدَارُ வீடுதான் الْاٰخِرَةِ மறுமையின் خَيْرٌ ؕ மிக மேலானது وَلَنِعْمَ மிகச் சிறந்தது دَارُ வீடு الْمُتَّقِيْنَۙ அஞ்சுபவர்களின்
16:30. வ கீல லில்லதீனத் தகவ் மாதா அன்Zஜல ரBப்Bபுகும்; காலூ கய்ரா; லில்லதீன அஹ்ஸனூ Fபீ ஹாதிஹித் துன்யா ஹஸனஹ்; வ ல தாருல் ஆகிரதி கய்ர்; வ லனிஃம தாருல் முத்தகீன்
16:30. இறையச்சமுடையவர்களிடம், "உங்களுடைய இறைவன் எதை இறக்கிவைத்தான்?" என்று (குர்ஆனைக் குறிப்பிட்டு) கேட்கப்படும்; (அப்போது) "நன்மையையே (அருளினான்)" என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள்; எவர்கள் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமைவீடானது, (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும்; இறையச்சமுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது.
16:31 جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ لَهُمْ فِيْهَا مَا يَشَآءُوْنَؕ كَذٰلِكَ يَجْزِى اللّٰهُ الْمُتَّقِيْنَۙ
جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் يَّدْخُلُوْنَهَا அவர்கள் நுழைவார்கள்/அவற்றில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் مَا எதை يَشَآءُوْنَؕ நாடுவார்கள் كَذٰلِكَ இவ்வாறுதான் يَجْزِى கூலி கொடுக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الْمُتَّقِيْنَۙ அஞ்சுபவர்களுக்கு
16:31. ஜன்னாது 'அத்னி(ன்)ய் யத்குலூனஹா தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு லஹும் Fபீஹா மா யஷா'ஊன்; கதாலிக யஜ்Zஜில் லாஹுல் முத்தகீன்
16:31. என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும்; இவ்வாறே (தன்னை) அஞ்சுவோருக்கு அல்லாஹ் (நற்)கூலியளிக்கின்றான்.
16:32 الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ طَيِّبِيْنَ ۙ يَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَيْكُمُۙ ادْخُلُوا الْجَـنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ எவர்கள்/உயிர்கைப்பற்றுகின்றனர்/அவர்களை الْمَلٰۤٮِٕكَةُ வானவர்கள் طَيِّبِيْنَ ۙ நல்லவர்களாக يَقُوْلُوْنَ கூறுவார்கள் سَلٰمٌ ஸலாம் (ஈடேற்றம்) عَلَيْكُمُۙ உங்களுக்கு ادْخُلُوا நுழையுங்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் بِمَا كُنْتُمْ நீங்கள் இருந்ததின் காரணமாக تَعْمَلُوْنَ செய்வீர்கள்
16:32. அல்லதீன ததவFப் Fபாஹுமுல் மலா'இகது தய்யிBபீன யகூலூன ஸலாமுன் 'அலய் குமுத் குலுல் ஜன்னத Bபிமா குன்தும் தஃமலூன்
16:32. (நிராகரிப்பை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றுவார்கள்; அவர்களிடம்: "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!); நீங்கள் செய்துகொண்டிருந்த (நற்) செயல்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அவர்கள் (அம்மலக்குகள்) சொல்வார்கள்.
16:33 هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمُ الْمَلٰۤٮِٕكَةُ اَوْ يَاْتِىَ اَمْرُ رَبِّكَؕ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
هَلْ يَنْظُرُوْنَ எதிர்பார்க்கிறார்களா? اِلَّاۤ தவிர اَنْ تَاْتِيَهُمُ வருவதை / தங்களிடம் الْمَلٰۤٮِٕكَةُ வானவர்கள் اَوْ يَاْتِىَ அவர்கள் வருவது اَمْرُ கட்டளை رَبِّكَؕ உம் இறைவனின் كَذٰلِكَ فَعَلَ இவ்வாறே செய்தனர் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْؕ அவர்களுக்கு முன்னர் وَمَا தீங்கிழைக்கவில்லை ظَلَمَهُمُ அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ தீங்கிழைப்பவர்களாக
16:33. ஹல் யன்ளுரூன இல்லா அன் தாதியஹுமுல் மலா'இகது அவ் யாதிய அம்ரு ரBப்Bபிக்; கதாலிக Fப'அலல் லதீன மின் கBப்லிஹிம்; வமா ளலமஹுமுல் லாஹு வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
16:33. (ஆனால் அக்கிரமக்காரர்களோ,) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனைதரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை; ஆனால், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
16:34 فَاَصَابَهُمْ سَيِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
فَاَصَابَهُمْ ஆகவே அடைந்தன/அவர்களை سَيِّاٰتُ தீமைகள், தண்டனைகள் مَا عَمِلُوْا அவர்கள் செய்தவற்றின் وَحَاقَ இன்னும் சூழ்ந்தது بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதைக் கொண்டு يَسْتَهْزِءُوْنَ பரிகசிக்கின்றனர்
16:34. Fப அஸாBபஹும் ஸய்யி ஆது மா 'அமிலூ வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
16:34. எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன; அன்றியும், எதை அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
16:35 وَقَالَ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَا عَبَدْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍ نَّحْنُ وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُوْنِهٖ مِنْ شَىْءٍؕ كَذٰلِكَ فَعَلَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۚ فَهَلْ عَلَى الرُّسُلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ
وَقَالَ கூறினர்(கள்) الَّذِيْنَ எவர்கள் اَشْرَكُوْا இணைவைத்தனர் لَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا عَبَدْنَا வணங்கியிருக்க மாட்டோம் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ شَىْءٍ எதையும் نَّحْنُ நாங்களும் اٰبَآؤُنَا எங்கள் وَلَا حَرَّمْنَا இன்னும் தடுத்திருக்க மாட்டோம் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ شَىْءٍؕ எதையும் كَذٰلِكَ இவ்வாறே فَعَلَ செய்தார்(கள்) الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۚ இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் فَهَلْ عَلَ ?/மீது الرُّسُلِ தூதர்கள் اِلَّا தவிர الْبَلٰغُ எடுத்துரைப்பது الْمُبِيْنُ தெளிவாக
16:35. வ காலல் லதீன அஷ்ரகூ லவ் ஷா'அல் லாஹு ம 'அBபத்னா மின் தூனிஹீ மின் ஷய்'இன் னஹ்னு வ லா ஆBபா'உனா வலா ஹர்ரம்னா மின் தூனிஹீ மின் ஷய்'; கதாலிக Fப'அலல் லதீன மின் கBப்லிஹிம் Fபஹல் 'அலர் ருஸுலி இல்லல் Bபலாகுல் முBபீன்
16:35. "அல்லாஹ் நாடியிருந்தால், அவனையன்றி வேறு எந்தப் பொருளையும் நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும், அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவையென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்" என்று இணைவைப்போர் கூறுகின்றனர்; இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே, (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுத்துவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது (பொறுப்பு) உண்டா? (இல்லை!)
16:36 وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ ؕ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
وَلَـقَدْ திட்டவட்டமாக بَعَثْنَا அனுப்பினோம் فِىْ كُلِّ اُمَّةٍ எல்லாசமுதாயங்களில் رَّسُوْلًا ஒரு தூதரை اَنِ என்று اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاجْتَنِبُوا இன்னும் விலகுங்கள், தூரமாகுங்கள் الطَّاغُوْتَۚ ஷைத்தானை விட்டு فَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் هَدَى நேர்வழி காட்டினான் اللّٰهُ அல்லாஹ் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் حَقَّتْ உறுதியாகி விட்டது عَلَيْهِ அவர் மீது الضَّلٰلَةُ ؕ வழிகேடு فَسِيْرُوْا ஆகவே சுற்றுங்கள் فِىْ الْاَرْضِ பூமியில் فَانْظُرُوْا இன்னும் பாருங்கள் كَيْفَ எவ்வாறு كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُكَذِّبِيْنَ பொய்ப்பிப்பவர்களின்
16:36. வ லகத் Bப'அத்னா Fபீ குல்லி உம்மதிர் ரஸூலன் அனிஃBபுதுல் லாஹ வஜ்தனிBபுத் தாகூத Fபமின்ஹும் மன் ஹதல் லாஹு வ மின்ஹும் மன் ஹக்கத் 'அலய்ஹிள் ளலாலஹ்; Fபஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முகத்திBபீன்
16:36. மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களைவிட்டும் நீங்கள் விலகிச்செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதரை அனுப்பிவைத்தோம்; எனவே, அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழிகாட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று? என்பதைக் கவனியுங்கள்.
16:37 اِنْ تَحْرِصْ عَلٰى هُدٰٮهُمْ فَاِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ يُّضِلُّ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ
اِنْ تَحْرِصْ நீர் பேராசைப்பட்டால் عَلٰى மீது هُدٰٮهُمْ அவர்கள் நேர்வழி காட்டப்படுவது فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِىْ நேர்வழி செலுத்த மாட்டான் مَنْ எவரை يُّضِلُّ வழிகெடுப்பார் وَمَا இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنْ نّٰصِرِيْنَ உதவியாளர்களில் எவரும்
16:37. இன் தஹ்ரிஸ் 'அலா ஹுதாஹும் Fப இன்னல் லாஹ லா யஹ்தீ மய் யுளில்லு வமா லஹும் மின் னாஸிரீன்
16:37. (நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிட வேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்கமாட்டான்; இன்னும், அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.
16:38 وَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ لَا يَبْعَثُ اللّٰهُ مَنْ يَّمُوْتُؕ بَلٰى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ
وَ اَقْسَمُوْا சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ் மீது جَهْدَ اَيْمَانِهِمْۙ அவர்கள் மிக உறுதியாக சத்தியமிடுதல் لَا يَبْعَثُ எழுப்ப மாட்டான் اللّٰهُ அல்லாஹ் مَنْ எவர் يَّمُوْتُؕ இறக்கின்றார் بَلٰى அவ்வாறன்று وَعْدًا வாக்கு عَلَيْهِ அவன் மீது حَقًّا கடமையானது وَّلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَۙ அறியமாட்டார்கள்
16:38. வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் லா யBப்'அதுல் லாஹு மய் யமூத்; Bபலா வஃதன் 'அலய்ஹி ஹக்க(ன்)வ் வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
16:38. இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கிறார்கள்: அப்படியல்ல! அவனது (உயிர்கொடுத்து எழுப்புவதான) வாக்கு மிக உறுதியானதாகும்; எனினும், மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.
16:39 لِيُبَيِّنَ لَهُمُ الَّذِىْ يَخْتَلِفُوْنَ فِيْهِ وَ لِيَـعْلَمَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ كَانُوْا كٰذِبِيْنَ
لِيُبَيِّنَ தெளிவுபடுத்துவதற்காக لَهُمُ அவர்களுக்கு الَّذِىْ எதை يَخْتَلِفُوْنَ முரண்படுகின்றனர் فِيْهِ அதில் وَ لِيَـعْلَمَ இன்னும் அறிவதற்காக الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் كٰذِبِيْنَ பொய்யர்களாக
16:39. லியுBபய்யின லஹுமுல் லதீ யக்தலிFபூன Fபீஹி வ லியஃலமல் லதீன கFபரூ அன்னஹும் கானூ காதிBபீன்
16:39. (இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், நிராகரித்தவர்கள்தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).
16:40 اِنَّمَا قَوْلُـنَا لِشَىْءٍ اِذَاۤ اَرَدْنٰهُ اَنْ نَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ
اِنَّمَا قَوْلُـنَا நம் கூற்றெல்லாம் لِشَىْءٍ ஒரு பொருளுக்கு اِذَاۤ நாம் நாடினால் اَرَدْنٰهُ அதை اَنْ نَّقُوْلَ நாம் கூறுவது لَهٗ அதற்கு كُنْ ஆகு فَيَكُوْنُ ஆகிவிடும்
16:40. இன்னமா கவ்லுனா லிஷய்'இன் இதா அரத்னாஹு அன் னகூல லஹூ குன் Fப யகூன்
16:40. ஏனெனில், நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டுபண்ண) நாடினால், அதற்காக நாம் கூறுவது 'உண்டாகுக!' என்பதுதான்; உடனே, அது உண்டாகிவிடும்.
16:41 وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَـنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً ؕ وَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ
وَالَّذِيْنَ எவர்கள் هَاجَرُوْا நாடு துறந்தார்கள் فِى اللّٰهِ அல்லாஹ்விற்காக مِنْۢ بَعْدِ பின்பு مَا ظُلِمُوْا அவர்கள் அநீதியிழைக்கப்படுதல் لَـنُبَوِّئَنَّهُمْ நிச்சயமாக அமைப்போம்/அவர்களுக்கு فِى الدُّنْيَا இவ்வுலகில் حَسَنَةً ؕ அழகியதை وَلَاَجْرُ கூலிதான் الْاٰخِرَةِ மறுமையின் اَكْبَرُۘ மிகப் பெரியது لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
16:41. வல்லதீன ஹாஜரூ Fபில் லாஹி மிம் Bபஃதி மா ளுலிமூ லனுBபவ்வி' அன்னஹும் Fபித்துன்யா ஹஸனத(ன்)வ் வ ல அஜ்ருல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
16:41. கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக ஹிஜ்ரத் செய்தார்களோ, அவர்களுக்கு நாம் நிச்சயமாக அழகான தங்கும் இடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம்; இன்னும், அவர்கள் அறிந்துகொண்டார்களேயானால், மறுமையிலுள்ள (நற்)கூலி (இதைவிட) மிகவும் பெரிது.
16:42 الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ
الَّذِيْنَ صَبَرُوْا பொறுத்தவர்கள் وَعَلٰى மீதே رَبِّهِمْ தங்கள் இறைவன் يَتَوَكَّلُوْنَ நம்பிக்கை வைப்பார்கள்
16:42. அல்லதீன ஸBபரூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக் கலூன்
16:42. இவர்கள்தாம் (உலக வாழ்வில்) பொறுமையை மேற்கொண்டார்கள்; இன்னும், தங்கள் இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
16:43 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் اِلَّا தவிர رِجَالًا ஆடவர்களை نُّوْحِىْۤ வஹீ அறிவிப்போம் اِلَيْهِمْ அவர்களுக்கு فَسْــٴَــلُوْۤا ஆகவே கேளுங்கள் اَهْلَ الذِّكْرِ ஞானமுடையவர்களை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் لَا تَعْلَمُوْنَۙ அறியாதவர்களாக
16:43. வ மா அர்ஸல்னா மின் கBப்லிக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம்; Fபஸ்'அலூ அஹ்லத் திக்ரி இன் குன்தும் லா தஃலமூன்
16:43. (நபியே!) இன்னும், உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பிவைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே, (அவர்களை நோக்கி): "நீங்கள் (இதனை) அறிந்துகொள்ளாமலிருந்தால் (வேதத்தை) அறிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக)!
16:44 بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِؕ وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளைக் கொண்டு وَالزُّبُرِؕ இன்னும் வேதங்கள் وَاَنْزَلْنَاۤ இன்னும் இறக்கினோம் اِلَيْكَ உமக்கு الذِّكْرَ ஞானத்தை لِتُبَيِّنَ (ஏ) தெளிவுபடுத்துவீர் لِلنَّاسِ அம்மக்களுக்காக مَا எது نُزِّلَ இறக்கப்பட்டது اِلَيْهِمْ அவர்களுக்கு وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ இன்னும் அவர்கள் சிந்திக்க வேண்டும்
16:44. Bபில்Bபய்யினாதி வZஜ் ZஜுBபுர்; வ அன்Zஜல்னா இலய்கத் திக்ர லிதுBபய்யின லின்னாஸி மா னுZஜ்Zஜில இலய்ஹிம் வ ல'அல்லஹும் யதFபக்கரூன்
16:44. தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும்) கொடுத்தனுப்பினோம். (நபியே!) மனிதர்களுக்கு அவர்கள்பால் அருளப்பட்டதை அவர்களுக்குத் தெளிவுப்படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
16:45 اَفَاَمِنَ الَّذِيْنَ مَكَرُوا السَّيِّاٰتِ اَنْ يَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ يَاْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَۙ
اَفَاَمِنَ அச்சமற்றுவிட்ட(ன)ரா? الَّذِيْنَ எவர்கள் مَكَرُوا சூழ்ச்சி செய்தனர் السَّيِّاٰتِ தீமைகளை اَنْ يَّخْسِفَ சொருகிக் கொள்வான் اللّٰهُ அல்லாஹ் بِهِمُ தங்களை الْاَرْضَ பூமியில் اَوْ அல்லது يَاْتِيَهُمُ வரும்/தங்களுக்கு الْعَذَابُ வேதனை مِنْ حَيْثُ விதத்தில் لَا يَشْعُرُوْنَۙ உணர மாட்டார்கள்
16:45. அFப அமினல் லதீன மகருஸ் ஸய்யி ஆதி அய் யக்ஸிFபல் லாஹு Bபிஹிமுல் அர்ள அவ் யா தியஹுமுல் 'அதாBபு மின் ஹய்து லா யஷ்'உரூன்
16:45. தீமைகளைச் (செய்திட) சூழ்ச்சி செய்கிறவர்கள் - அல்லாஹ் அவர்களைக் கொண்டே பூமியை விழுங்கும்படி செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சம் தீர்ந்து இருக்கின்றார்களா?
16:46 اَوْ يَاْخُذَهُمْ فِىْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِيْنَۙ
اَوْ يَاْخُذَهُمْ அல்லது/அவன்பிடித்துவிடுவதை/அவர்களை فِىْ تَقَلُّبِهِمْ பயணத்தில் / அவர்களுடைய فَمَا هُمْ அவர்கள் இல்லை بِمُعْجِزِيْنَۙ பலவீனப்படுத்துபவர்களாக
16:46. அவ் யாகுதஹும் Fபீ தகல்லுBபிஹிம் Fபமா ஹும் Bபி முஃஜிZஜீன்
16:46. அல்லது, அவர்களின் போக்குவரத்தின் போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் என்றும் (அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ், அவ்வாறு செய்தால் அவனை) அப்பொழுது அவர்கள் இயலாமலாக்க முடியாது.
16:47 اَوْ يَاْخُذَهُمْ عَلٰى تَخَوُّفٍؕ فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ
اَوْ அல்லது يَاْخُذَهُمْ அவன் பிடித்துவிடுவதை/அவர்களை عَلٰى تَخَوُّفٍؕ கொஞ்சம் குறைத்து فَاِنَّ நிச்சயமாக رَبَّكُمْ உங்கள் இறைவன் لَرَءُوْفٌ மகா இரக்கமானவன் رَّحِيْمٌ மிகக் கருணையாளன்
16:47. அவ் யாகுதஹும் 'அலா தகவ்வுFப்; Fப இன்ன ரBப்Bபகும் ல ர'ஊFபுர் ரஹீம்
16:47. அல்லது, அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் என்றும் (அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?); நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன், பெருங்கிருபையுடையவன்.
16:48 اَوَلَمْ يَرَوْا اِلٰى مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَىْءٍ يَّتَفَيَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْيَمِيْنِ وَالشَّمَآٮِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دٰخِرُوْنَ
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اِلٰى مَا எதன் பக்கம் خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் مِنْ شَىْءٍ ஒருபொருளையேனும் يَّتَفَيَّؤُا சாய்கின்றன ظِلٰلُهٗ அவற்றின் நிழல்கள் عَنِ الْيَمِيْنِ வலப்புறமாக وَالشَّمَآٮِٕلِ இன்னும் இடப்புறமாக سُجَّدًا சிரம் பணிந்தவையாக لِّلّٰهِ அல்லாஹ்விற்கு وَهُمْ அவை دٰخِرُوْنَ மிகப்பணிந்தவை
16:48. அவ லம் யரவ் இலா மா கலகல் லாஹு மின் ஷய்'இ(ன்)ய்-யதFபய்ய'உ ளிலாலுஹூ 'அனில் யமீனி வஷ்ஷமா' இலி ஸுஜ்ஜதல் லில்லாஹி வ ஹும் தாகிரூன்
16:48. அல்லாஹ் படைத்தவற்றிலுள்ள எப்பொருளும் அதனுடைய நிழல்கள், தாழ்வானவையாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு ஸுஜூது (சாஷ்டாங்கம்) செய்தவையாக வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்கின்றன என்பதை இவர்கள் (உற்றுப்) பார்க்கவில்லையா?
16:49 وَلِلّٰهِ يَسْجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مِنْ دَآبَّةٍ وَّالْمَلٰۤٮِٕكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு يَسْجُدُ சிரம் பணிகிறார்(கள்) مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ இன்னும் பூமியில்உள்ளவை مِنْ دَآبَّةٍ எல்லா உயிரினங்கள் وَّالْمَلٰۤٮِٕكَةُ இன்னும் வானவர்கள் وَهُمْ இன்னும் அவர்கள் لَا يَسْتَكْبِرُوْنَ பெருமையடிப்பதில்லை
16:49. வ லில்லாஹி யஸ்ஜுது மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மின் தாBப்Bபதி(ன்)வ் வல்ம லா'இகது வ ஹும் லா யஸ்தக்Bபிரூன்
16:49. ஜீவராசிகளில் வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது (சாஷ்டாங்கம்) செய்கின்றன; இன்னும், வானவர்களும் (அவ்வாறே சாஷ்டாங்கம் செய்கின்றனர்); அவர்களோ (ஆணவங்கொண்டு) பெருமையடிப்பதில்லை.
16:50 يَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ ۩
يَخَافُوْنَ பயப்படுகின்றனர் رَبَّهُمْ தங்கள் இறைவனை مِّنْ فَوْقِهِمْ தங்களுக்கு மேலுள்ள وَيَفْعَلُوْنَ இன்னும் செய்கின்றனர் مَا எதை يُؤْمَرُوْنَ ۩ ஏவபடுகின்றனர்
16:50. யகாFபூன ரBப்Bபஹும் மின் Fபவ்கிஹிம் வ யFப்'அலூன மா யு'மரூன்
16:50. அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனைப் பயப்படுகிறார்கள்; இன்னும், தாங்கள் ஏவப்படுவதை அவர்கள் அப்படியே செய்கிறார்கள்.
16:51 وَقَالَ اللّٰهُ لَا تَـتَّخِذُوْۤا اِلٰهَيْنِ اثْنَيْنِۚ اِنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ ۚ فَاِيَّاىَ فَارْهَبُوْنِ
وَقَالَ கூறுகிறான் اللّٰهُ அல்லாஹ் لَا تَـتَّخِذُوْۤا எடுத்துக் கொள்ளாதீர்கள் اِلٰهَيْنِ இரு கடவுள்களை اثْنَيْنِۚ இரண்டு اِنَّمَا هُوَ அவனெல்லாம் اِلٰـهٌ கடவுள் وَّاحِدٌ ۚ ஒருவன்தான் فَاِيَّاىَ ஆகவே எனக்கு فَارْهَبُوْنِ பயப்படுங்கள்/என்னை
16:51. வ காலல் லாஹு லா தத்த கிதூ இலாஹய்னித் னய்னி இன்னமா ஹுவ இலாஹு(ன்)வ் வாஹித்; Fப இய்யாய Fபர்ஹBபூன்
16:51. இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்: "இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் ஒரே ஒரு இறைவன்தான்; எனவே, என்னையே நீங்கள் அஞ்சுங்கள்."
16:52 وَلَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَلَهُ الدِّيْنُ وَاصِبًا ؕ اَفَغَيْرَ اللّٰهِ تَـتَّـقُوْنَ
وَلَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَ الْاَرْضِ இன்னும் பூமியில் وَلَهُ இன்னும் அவனுக்கே الدِّيْنُ وَاصِبًا ؕ கீழ்ப்படிதல்/ என்றென்றும் اَفَغَيْرَ அல்லாததையா? اللّٰهِ அல்லாஹ் تَـتَّـقُوْنَ அஞ்சுகிறீர்கள்
16:52. வ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லஹுத் தீனு வாஸிBபா; அFபகய்ரல் லாஹி தத்தகூன்
16:52. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (எல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை); அவனுக்கே என்றென்றும் வழிபாடு உரியதாக இருக்கின்றது; (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?
16:53 وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْئَرُوْنَۚ
وَمَا எது بِكُمْ உங்களிடம் مِّنْ نّـِعْمَةٍ அருட்கொடையில் فَمِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து ثُمَّ பிறகு اِذَا مَسَّكُمُ உங்களுக்கு ஏற்பட்டால் الضُّرُّ துன்பம், தீங்கு فَاِلَيْهِ அவனிடமே تَجْئَرُوْنَۚ கதறுகிறீர்கள்
16:53. வமா Bபிகும் மின்னிஃமதின் Fபமினல் லாஹி தும்ம இதா மஸ்ஸகுமுள் ளுர்ரு Fப இலய்ஹி தஜ்'அரூன்
16:53. மேலும், எந்த அருட்கொடை (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர், ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டுவிட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.
16:54 ثُمَّ اِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ اِذَا فَرِيْقٌ مِّنْكُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ
ثُمَّ اِذَا كَشَفَ பிறகு/நீக்கினால் الضُّرَّ துன்பத்தை عَنْكُمْ உங்களை விட்டு اِذَا அப்போது فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْكُمْ உங்களில் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு يُشْرِكُوْنَۙ இணைவைக்கின்றனர்
16:54. தும்மா இதா கஷFபள் ளுர்ர 'அன்கும் இதா Fபரீகும் மின்கும் Bபி ரBப்Bபிஹிம் யுஷ்ரிகூன்
16:54. பின்னர், அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணைவைக்கின்றனர்.
16:55 لِيَكْفُرُوْا بِمَاۤ اٰتَيْنٰهُمْؕ فَتَمَتَّعُوْا فَسَوْفَ تَعْلَمُوْنَ
لِيَكْفُرُوْا அவர்கள் நிராகரிப்பதற்காக بِمَاۤ اٰتَيْنٰهُمْؕ நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை فَتَمَتَّعُوْا ஆகவே சுகமனுபவியுங்கள் فَسَوْفَ تَعْلَمُوْنَ நீங்கள் அறிவீர்கள்
16:55. லியக்Fபுரூ Bபிமா ஆதய்னாஹும்; Fபதமத்த'ஊ, Fபஸவ்Fப தஃலமூன்
16:55. நாம் அவர்களுக்கு அளித்துள்ளதை (நன்றியில்லாது) நிராகரிக்கும் வகையில்; ஆகவே, (இம்மையில் சிலகாலம்) சுகித்திருங்கள்; பின்னர், (விரைவிலேயே உங்கள் தவற்றை) அறிந்து கொள்வீர்கள்.
16:56 وَيَجْعَلُوْنَ لِمَا لَا يَعْلَمُوْنَ نَصِيْبًا مِّمَّا رَزَقْنٰهُمْؕ تَاللّٰهِ لَـتُسْـٴَــلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُوْنَ
وَيَجْعَلُوْنَ இன்னும் ஆக்குகின்றனர் لِمَا لَا يَعْلَمُوْنَ அவர்கள் அறியாதவற்றுக்கு نَصِيْبًا ஒரு பாகத்தை مِّمَّا இருந்து رَزَقْنٰهُمْؕ கொடுத்தோம்/அவர்களுக்கு تَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக لَـتُسْـٴَــلُنَّ நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள் عَمَّا பற்றி كُنْتُمْ இருந்தீர்கள் تَفْتَرُوْنَ இட்டுக்கட்டுகிறீர்கள்
16:56. வ யஜ்'அலூன லிமா லா யஃலமூன னஸீBபம் மிம்மா ரZஜக்ன்னாஹும்; தல்லாஹி லதுஸ்'அலுன்னா 'அம்மா குன்தும் தFப்தரூன்
16:56. இன்னும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றில் ஒரு பாகத்தைத் தாம் அறியாதவைகளுக்காக (பொய்த் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவைப் பற்றி நிச்சயமாகக் கேட்கப்படுவீர்கள்.
16:57 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ
وَيَجْعَلُوْنَ இன்னும் ஆக்குகின்றனர் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு الْبَـنٰتِ பெண் பிள்ளைகளை سُبْحٰنَهٗۙ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَلَهُمْ தங்களுக்கு مَّا எதை يَشْتَهُوْنَ விரும்புகின்றனர்
16:57. வ யஜ்'அலூன லில்லாஹில் Bபனாதி ஸுBப்ஹானஹூ வ லஹும் மா யஷ்தஹூன்
16:57. மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன்; ஆனால், அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்).
16:58 وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌۚ
وَاِذَا بُشِّرَ நற்செய்தி கூறப்பட்டால் اَحَدُهُمْ அவர்களில் ஒருவனுக்கு بِالْاُنْثٰى பெண் குழந்தையைக் கொண்டு ظَلَّ ஆகிவிட்டது وَجْهُهٗ அவனுடைய முகம் مُسْوَدًّا கருத்ததாக وَّهُوَ இன்னும் அவன் كَظِيْمٌۚ துக்கப்படுகிறான்
16:58. வ இதா Bபுஷ்ஷிர அஹதுஹும் Bபில் உன்தா ளல்ல வஜ்ஹுஹூ முஸ்வத்த(ன்)வ் வ ஹுவ களீம்
16:58. அவர்களில் ஒருவனுக்குப் பெண்குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்துவிடுகிறது; அவன் கோபமுடையவனாகிறான்.
16:59 يَتَوَارٰى مِنَ الْقَوْمِ مِنْ سُوْۤءِ مَا بُشِّرَ بِهٖ ؕ اَيُمْسِكُهٗ عَلٰى هُوْنٍ اَمْ يَدُسُّهٗ فِى التُّـرَابِ ؕ اَلَا سَآءَ مَا يَحْكُمُوْنَ
يَتَوَارٰى மறைந்து கொள்கிறான் مِنَ الْقَوْمِ மக்களை விட்டு مِنْ سُوْۤءِ தீமையினால் مَا بُشِّرَ بِهٖ ؕ நற்செய்தி கூறப்பட்டது/தனக்கு اَيُمْسِكُهٗ வைத்திருப்பதா?/அதை عَلٰى هُوْنٍ கேவலத்துடன் اَمْ அல்லது يَدُسُّهٗ புதைப்பான்/அதை فِى التُّـرَابِ ؕ மண்ணில் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! سَآءَ கெட்டு விட்டது مَا يَحْكُمُوْنَ அவர்கள் தீர்ப்பளிப்பது
16:59. யதவாரா மினல் கவ்மிமின் ஸூ'இ மா Bபுஷ்ஷிர Bபிஹ்; அ-யும்ஸிகுஹூ 'அலா ஹூனின் அம் யதுஸ்ஸுஹூ Fபித் துராBப்; அலா ஸா'அ மா யஹ்குமூன்
16:59. எதைக்கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரைவிட்டும் ஒளிந்துகொள்கிறான்: அதை இழிவோடு வைத்துக்கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்துவிடுவதா? (என்று குழம்புகிறான்); அறிந்துகொள்ளுங்கள்! அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டது.
16:60 لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ مَثَلُ السَّوْءِۚ وَلِلّٰهِ الْمَثَلُ الْاَعْلٰى ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
لِلَّذِيْنَ எவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை مَثَلُ தன்மை السَّوْءِۚ கெட்டது وَلِلّٰهِ இன்னும் அல்லாஹ்விற்கே الْمَثَلُ தன்மை الْاَعْلٰى ؕ மிக உயர்ந்தது وَهُوَ அவன் الْعَزِيْزُ மகா மிகைத்தவன் الْحَكِيْمُ மகா ஞானவான்
16:60. லில்லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி மதலுஸ் ஸவ்'இ வ லில்லாஹில் மதலுல் அஃலா; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
16:60. எவர்கள் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது; அல்லாஹ்வுக்கோ மிகவும் உயர்ந்த தன்மை இருக்கின்றது; மேலும், அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
16:61 وَلَوْ يُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَّا تَرَكَ عَلَيْهَا مِنْ دَآبَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَـاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
وَلَوْ يُؤَاخِذُ தண்டித்தால் اللّٰهُ அல்லாஹ் النَّاسَ மக்களை بِظُلْمِهِمْ குற்றத்தின் காரணமாக/அவர்களுடைய مَّا تَرَكَ விட்டிருக்க மாட்டான் عَلَيْهَا அதன் மீது مِنْ دَآبَّةٍ ஓர் உயிரினத்தை وَّلٰـكِنْ எனினும் يُّؤَخِّرُ பிற்படுத்துகிறான் هُمْ அவர்களை اِلٰٓى வரை اَجَلٍ ஒரு தவணை مُّسَمًّىۚ குறிப்பிடப்பட்டது فَاِذَا جَآءَ வந்தால் اَجَلُهُمْ தவணை/அவர்களுடைய لَا يَسْتَـاْخِرُوْنَ பிந்த மாட்டார்கள் سَاعَةً ஒரு விநாடி وَّلَا يَسْتَقْدِمُوْنَ இன்னும் முந்த மாட்டார்கள்
16:61. வ லவ் யு'ஆகிதுல் லாஹுன் னாஸ Bபிளுல்மின்ஹிம் மா தரக 'அலய்ஹா மின் தாBப்Bபதி(ன்)வ் வ லாகி(ன்)ய் யு'அக்கிருஹும் இலா அஜலிம் முஸம்மன் Fப இதா ஜா'அ அஜலுஹும் லா யஸ்தாகிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
16:61. மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிரினங்களில் ஒன்றையுமே (பூமியாகிய) இதில் விட்டுவைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
16:62 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ مَا يَكْرَهُوْنَ وَتَصِفُ اَلْسِنَـتُهُمُ الْـكَذِبَ اَنَّ لَهُمُ الْحُسْنٰىؕ لَا جَرَمَ اَنَّ لَهُمُ النَّارَ وَ اَنَّهُمْ مُّفْرَطُوْنَ
وَيَجْعَلُوْنَ இன்னும் ஆக்குகின்றனர் لِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا எதை يَكْرَهُوْنَ வெறுக்கின்றனர் وَتَصِفُ இன்னும் வர்ணிக்கின்றன اَلْسِنَـتُهُمُ நாவுகள்/அவர்களின் الْـكَذِبَ பொய்யை اَنَّ நிச்சயமாக لَهُمُ தங்களுக்கு الْحُسْنٰىؕ சொர்க்கம், மிக அழகியது لَا جَرَمَ கண்டிப்பாக اَنَّ நிச்சயம் لَهُمُ இவர்களுக்கு النَّارَ நரகம்தான் وَ اَنَّهُمْ இன்னும் நிச்சயம் இவர்கள் مُّفْرَطُوْنَ விடப்படுபவர்கள்
16:62. வ யஜ்'அலூன லில்லாஹி மா யக்ரஹூன வ தஸிFபு அல்ஸினதுஹுமுல் கதிBப அன்ன லஹுமுல் ஹுஸ்னா லா ஜரம அன்ன லஹுமுன் னார வ அன்னஹும் முFப்ரதூன்
16:62. இன்னும், தாங்கள் விரும்பாதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள்; நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றன; நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புதான் இருக்கிறது; இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
16:63 تَاللّٰهِ لَـقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَهُوَ وَلِيُّهُمُ الْيَوْمَ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
تَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக لَـقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَاۤ அனுப்பினோம் اِلٰٓى اُمَمٍ சமுதாயங்களுக்கு مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَزَيَّنَ அழகாக்கினான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களை فَهُوَ ஆகவே அவன் وَلِيُّهُمُ அவர்களுக்குநண்பன் الْيَوْمَ இன்று وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌ துன்புறுத்தக் கூடியது
16:63. தல்லாஹி லகத் அர்ஸல்னா இலா உமமிம் மின் கBப்லிக FபZஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் Fபஹுவ வலிய்யுஹுமுல் யவ்ம வ லஹும் 'அதாBபுன் அலீம்
16:63. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த வகுப்பாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்; ஆனால், ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கிவைத்தான்; ஆகவே, இன்றையதினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான்; இதனால், அவர்களுக்கு நோவினைசெய்யும் வேதனையுண்டு.
16:64 وَمَاۤ اَنْزَلْنَا عَلَيْكَ الْـكِتٰبَ اِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِى اخْتَلَـفُوْا فِيْهِۙ وَهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ
وَمَاۤ اَنْزَلْنَا நாம் இறக்கவில்லை عَلَيْكَ உம்மீது الْـكِتٰبَ இவ்வேதத்தை اِلَّا தவிர لِتُبَيِّنَ நீர் தெளிவு படுத்துவதற்காக لَهُمُ இவர்களுக்கு الَّذِى எது اخْتَلَـفُوْا தர்க்கித்தார்கள் فِيْهِۙ அதில் وَهُدًى இன்னும் நேர்வழி وَّرَحْمَةً இன்னும் அருளாக لِّـقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள்
16:64. வ மா அன்Zஜல்னா 'அலய்கல் கிதாBப இல்லா லிதுBபய்யின லஹுமுல் லதிக் தலFபூ Fபீஹி வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
16:64. (நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ்விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் அவர்களுக்குத் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு இது நேரான வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
16:65 وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ
وَاللّٰهُ அல்லாஹ் اَنْزَلَ இறக்குகின்றான் مِنَ இருந்து السَّمَآءِ மேகம் مَآءً மழையை فَاَحْيَا இன்னும் உயிர்ப்பிக்கின்றான் بِهِ அதன் மூலம் الْاَرْضَ பூமியை بَعْدَ مَوْتِهَاؕ அது இறந்த பின்னர் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّقَوْمٍ மக்களுக்கு يَّسْمَعُوْنَ செவி சாய்க்கின்றார்கள்
16:65. வல்லாஹு அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அஹ்யா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ் மி(ன்)ய் யஸ்ம'ஊன்
16:65. இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழியவைத்து அதைக்கொண்டு உயிரிழந்த பூமியை - அது செத்தபின் உயிர்பெறச் செய்கின்றான்; நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது.
16:66 وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً ؕ نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْۢ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ
وَاِنَّ நிச்சயமாக لَـكُمْ உங்களுக்கு فِىْ الْاَنْعَامِ கால்நடைகளில் لَعِبْرَةً ؕ ஒரு படிப்பினை نُّسْقِيْكُمْ புகட்டுகிறோம்/உங்களுக்கு مِّمَّا எதிலிருந்து فِىْ بُطُوْنِهٖ அதன் வயிறுகளில் مِنْۢ بَيْنِ இடையில் فَرْثٍ சானம் وَّدَمٍ இன்னும் இரத்தம் لَّبَنًا பாலை خَالِصًا கலப்பற்றது سَآٮِٕغًا மதுரமானது, இலகுவாக இறங்கக்கூடியது لِّلشّٰرِبِيْنَ அருந்துபவர்களுக்கு
16:66. வ இன்ன லகும் Fபில் அன்'ஆமி ல'இBப்ரஹ்; னுஸ்கீகும் மிம்ம்மா Fபீ Bபுதூனிஹீ மிம் Bபய்னி Fபர்தி(ன்)வ் வ தமில் லBபனன்ன் காலிஸன் ஸா'இகல்லிஷ் ஷாரிBபீன்
16:66. நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கிறது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக இருக்க, நாம் உங்களுக்கு (தாராளமாக)ப் புகட்டுகிறோம்.
16:67 وَمِنْ ثَمَرٰتِ النَّخِيْلِ وَالْاَعْنَابِ تَتَّخِذُوْنَ مِنْهُ سَكَرًا وَّرِزْقًا حَسَنًا ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ
وَمِنْ ثَمَرٰتِ கனிகளிலிருந்து النَّخِيْلِ பேரீச்சை மரத்தின் وَالْاَعْنَابِ இன்னும் திராட்சைகள் تَتَّخِذُوْنَ செய்கிறீர்கள் مِنْهُ அதிலிருந்து سَكَرًا போதையூட்டக் கூடியது وَّرِزْقًا இன்னும் உணவு حَسَنًا ؕ நல்லது اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ சிந்தித்து புரிகின்றார்கள்
16:67. வ மின் தமராதின் னகீலி வல் அ'ன்னாBபி தத்தகிதூன மின்ஹு ஸகர(ன்)வ் வ ரிZஜ்கன்ன் ஹஸனா; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
16:67. பேரீச்சை, திராட்சைப் பழங்களிலிருந்து மதுவையும், அழகான உணவையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
16:68 وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ
وَاَوْحٰى செய்தியளித்தான் رَبُّكَ உம் இறைவன் اِلَى النَّحْلِ தேனீக்கு اَنِ என்று اتَّخِذِىْ அமைத்துக்கொள் مِنَ الْجِبَالِ மலைகளில் بُيُوْتًا வீடுகளை وَّمِنَ الشَّجَرِ இன்னும் மரங்களில் وَمِمَّا يَعْرِشُوْنَۙ இன்னும் அவர்கள் கட்டுகிறவற்றில்
16:68. வ அவ்ஹா ரBப்Bபுக இலன்-னஹ்லி அனித் தகிதீ மினல் ஜிBபாலி Bபுயூத(ன்)வ் வ மினஷ் ஷஜரி வ மிம்மா யஃரிஷூன்
16:68. உம் இறைவன் தேனீக்களுக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான்: "நீ மலைகளிலும், மரங்களிலும், (மனிதர்களாகிய) அவர்கள் கட்டுபவைகளிலும் கூடுகளை அமைத்துக்கொள்" (என்றும்).
16:69 ثُمَّ كُلِىْ مِنْ كُلِّ الثَّمَرٰتِ فَاسْلُكِىْ سُبُلَ رَبِّكِ ذُلُلًا ؕ يَخْرُجُ مِنْۢ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
ثُمَّ பிறகு كُلِىْ புசி مِنْ இருந்து كُلِّ ஒவ்வொரு الثَّمَرٰتِ பூக்கள் فَاسْلُكِىْ இன்னும் செல் سُبُلَ வழிகளில் رَبِّكِ உனது இறைவனின் ذُلُلًا ؕ சுலபமாக يَخْرُجُ வெளியேறுகிறது مِنْۢ இருந்து بُطُوْنِهَا அதன் வயிறுகள் شَرَابٌ ஒரு பானம் مُّخْتَلِفٌ மாறுபட்டது اَلْوَانُهٗ அதன் நிறங்கள் فِيْهِ அதில் شِفَآءٌ நிவாரணம் لِّلنَّاسِؕ மக்களுக்கு اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ சிந்திக்கின்றார்கள்
16:69. தும்ம்ம குலீ மின் குல்லித் தமராதி Fபஸ்லுகீ ஸுBபுல ரBப்Bபிகி துலுலா; யக்ருஜு மிம் Bபுதூனிஹா ஷராBபும் முக் தலிFபுன் அல்வானுஹூ Fபீஹி ஷிFபா'உல் லின்னாஸ், இன்ன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
16:69. "பின், நீ எல்லாவிதமான கனி (களின் மலர்) களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித்தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச்செல்" (என்றும் உள்ளுணர்ச்சியை உண்டாக்கினான்); அதன் வயிறுகளிலிருந்து பலவித நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில், மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) நோய் நிவாரணி உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
16:70 وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰٮكُمْۙ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْــٴًــاؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ
وَاللّٰهُ அல்லாஹ் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் ثُمَّ يَتَوَفّٰٮكُمْۙ பிறகு/உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை وَمِنْكُمْ இன்னும் உங்களில் مَّنْ எவர் يُّرَدُّ திருப்பப்படுபவர் اِلٰٓى வரை اَرْذَلِ அற்பமானது الْعُمُرِ வயது لِكَىْ ஆவதற்காக لَا يَعْلَمَ அறியமாட்டான் بَعْدَ பின்பு عِلْمٍ அறிதல் شَيْــٴًــاؕ ஒன்றை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
16:70. வல்லாஹு கலககும் தும்ம யதவFப்Fபாகும்; வ மின்கும் ம(ன்)ய்-யு ரத்து இலா அர்தலில் 'உமுரி லிகய் லா யஃலம Bபஃத 'இல்மின் ஷய்'ஆ; இன்னல் லாஹ 'அலீமுன் கதீர்
16:70. இன்னும், அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின்னர், அவனே உங்களை மரணிக்கச் செய்கின்றான்; அறிந்தபின் எதுவுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய, மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.
16:71 وَاللّٰهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ فِى الرِّزْقِۚ فَمَا الَّذِيْنَ فُضِّلُوْا بِرَآدِّىْ رِزْقِهِمْ عَلٰى مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَهُمْ فِيْهِ سَوَآءٌ ؕ اَفَبِنِعْمَةِ اللّٰهِ يَجْحَدُوْنَ
وَاللّٰهُ அல்லாஹ் فَضَّلَ மேன்மையாக்கினான் بَعْضَكُمْ உங்களில் சிலரை عَلٰى بَعْضٍ சிலரை விட فِى الرِّزْقِۚ வாழ்வாதாரத்தில் فَمَا இல்லை الَّذِيْنَ எவர்கள் فُضِّلُوْا மேன்மையாக்கப்பட்டார்கள் بِرَآدِّىْ திருப்பக் கூடியவர்களாக رِزْقِهِمْ வாழ்வாதாரத்தை/தங்கள் عَلٰى மீது مَا எவர்கள் مَلَـكَتْ சொந்தமாக்கின اَيْمَانُهُمْ வலக்கரங்கள்/தங்கள் فَهُمْ அவர்கள் فِيْهِ அதில் سَوَآءٌ ؕ சமமானவர்கள் اَفَبِنِعْمَةِ அருளையா? اللّٰهِ அல்லாஹ்வின் يَجْحَدُوْنَ நிராகரிக்கின்றனர்
16:71. வல்லாஹு Fபள்ளல Bபஃளகும் 'அலா Bபஃளின் Fபிர் ரிZஜ்க்; Fபமல் லதீன Fபுள்ளிலூ Bபிராத்தீ ரிZஜ்கிஹிம் 'அலா மா மலகத் அய்மானுஹும் Fபஹும் Fபீஹி ஸவா'; அFபBபினிஃமதில் லாஹி யஜ்ஹதூன்
16:71. அல்லாஹ் உங்களில் சிலரை, சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கின்றான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள் தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு (த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் - அவர்களும் அதில் சமமானவர்களாக இருக்க - கொடுத்துவிடுபவர்களாக இல்லை; (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் மறுக்கின்றனர்?
16:72 وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ جَعَلَ لَـكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ بَنِيْنَ وَحَفَدَةً وَّرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِؕ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَتِ اللّٰهِ هُمْ يَكْفُرُوْنَۙ
وَاللّٰهُ அல்லாஹ் جَعَلَ படைத்தான் لَـكُمْ உங்களுக்காக مِّنْ இருந்து اَنْفُسِكُمْ உங்களில் اَزْوَاجًا மனைவிகளை وَّ جَعَلَ இன்னும் படைத்தான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ இருந்து اَزْوَاجِكُمْ உங்கள் மனைவிகள் بَنِيْنَ ஆண் பிள்ளைகளை وَحَفَدَةً இன்னும் பேரன்களை وَّرَزَقَكُمْ இன்னும் உணவளித்தான்/உங்களுக்கு مِّنَ الطَّيِّبٰتِؕ நல்லவற்றிலிருந்து اَفَبِالْبَاطِلِ ?/பொய்யை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள் وَبِنِعْمَتِ இன்னும் அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வின் هُمْ يَكْفُرُوْنَۙ அவர்கள் நிராகரிக்கின்றனர்
16:72. வல்லாஹு ஜ'அல லகும் மின் அன்Fபுஸிகும் அZஜ்வாஜ(ன்)வ் வ ஜ'அல லகும் மின் அZஜ்வாஜிகும் Bபனீன வ ஹFபதத(ன்)வ் வ ரZஜககும் மினத் தய்யிBபாத்; அFபBபில் Bபாதிலி யு'மினூன வ Bபினிஃமதில் லாஹி ஹும் யக்க்Fபுரூன்
16:72. இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்துகொண்ட) பொய்யானதின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா?
16:73 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ شَيْــٴًــا وَّلَا يَسْتَطِيْعُوْنَۚ
وَيَعْبُدُوْنَ இன்னும் வணங்குகின்றனர் مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் مَا لَا يَمْلِكُ எதை/உரிமை பெறாது لَهُمْ இவர்களுக்கு رِزْقًا உணவளிப்பது مِّنَ இருந்து السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி شَيْــٴًــا ஒன்றை وَّلَا يَسْتَطِيْعُوْنَۚ இன்னும் ஆற்றல் பெற மாட்டார்கள்
16:73. வ யஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யம்லிகு லஹும் ரிZஜ்கம் மினஸ் ஸமாவாதி வல் அர்ளி ஷய்'அ(ன்)வ் வலா யஸ்ததீ'ஊன்
16:73. வானங்களிலோ, பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும், (அதற்கு) சக்தி பெறாதவைகளையும் - அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள்.
16:74 فَلَا تَضْرِبُوْا لِلّٰهِ الْاَمْثَالَؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
فَلَا تَضْرِبُوْا விவரிக்காதீர்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு الْاَمْثَالَؕ உதாரணங்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُ அறிவான் وَاَنْـتُمْ நீங்கள் لَا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
16:74. Fபலா தள்ரிBபூ லில்லாஹில் அம்தால்; இன்னல் லாஹ யஃலமு வ அன்தும் லா தஃலமூன்
16:74. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால், நீங்கள் அறியமாட்டீர்கள்.
16:75 ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًاؕ هَلْ يَسْتَوٗنَؕ اَ لْحَمْدُ لِلّٰهِؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ
ضَرَبَ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணத்தை عَبْدًا ஓர் அடிமை مَّمْلُوْكًا சொந்தமானவர் لَّا يَقْدِرُ ஆற்றல் பெற மாட்டார் عَلٰى شَىْءٍ ஒன்றுக்கும் وَّمَنْ இன்னும் ஒருவர் رَّزَقْنٰهُ வழங்கினோம்/ அவருக்கு مِنَّا நம் புறத்திலிருந்து رِزْقًا வாழ்வாதாரத்தை حَسَنًا அழகியது فَهُوَ ஆகவே அவர் يُنْفِقُ தர்மம் புரிகிறார் مِنْهُ அதிலிருந்து سِرًّا இரகசியமாக وَّجَهْرًاؕ இன்னும் வெளிப்படையாக هَلْ يَسْتَوٗنَؕ சமமாவார்களா? اَ لْحَمْدُ புகழ் لِلّٰهِؕ அல்லாஹ்விற்கே بَلْ اَكْثَرُهُمْ எனினும்/அதிகமானவர்(கள்)/அவர்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
16:75. ளரBபல் லாஹு மதலன் 'அBப்தம் மம்ம்லூகல் லா யக்திரு 'அலா ஷய்'இ(ன்)வ் வ மர்ரZஜக்னாஹும் மின்னா ரிZஜ்கன் ஹஸனன் Fபஹுவ யுன்Fபிகு மின்ஹு ஸிர்ர(ன்)வ் வ ஜஹ்ர; ஹல் யஸ்த-வூன்; அல்ஹம்துலில்லாஹ்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
16:75. அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடைமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களும் கொடுத்திருக்கிறோம்; அவனும், அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கின்றான்; இவர்கள் (இருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; என்றாலும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை.
16:76 وَضَرَبَ اللّٰهُ مَثَلاً رَّجُلَيْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰٮهُۙ اَيْنَمَا يُوَجِّهْهُّ لَا يَاْتِ بِخَيْرٍؕ هَلْ يَسْتَوِىْ هُوَۙ وَمَنْ يَّاْمُرُ بِالْعَدْلِۙ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
وَضَرَبَ இன்னும் விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَثَلاً ஓர் உதாரணத்தை رَّجُلَيْنِ இரு ஆடவர்கள் اَحَدُهُمَاۤ அவ்விருவரில் ஒருவர் اَبْكَمُ ஊமை لَا يَقْدِرُ சக்தி பெறமாட்டார் عَلٰى شَىْءٍ எதையும் (செய்ய) وَّهُوَ كَلٌّ அவர் சுமையாக عَلٰى மீது مَوْلٰٮهُۙ தன் எஜமானர் اَيْنَمَا அவர் எங்கு அனுப்பினாலும் يُوَجِّهْهُّ அவரை لَا يَاْتِ بِخَيْرٍؕ நன்மையை செய்யமாட்டார் هَلْ يَسْتَوِىْ சமமாவார்(களா)? هُوَۙ இவரும் وَمَنْ இன்னும் எவர் يَّاْمُرُ ஏவுகின்றார் بِالْعَدْلِۙ நீதத்தைக் கொண்டு وَهُوَ இன்னும் அவர் عَلٰى صِرَاطٍ வழியில் مُّسْتَقِيْمٍ நேரான(து)
16:76. வ ளரBபல் லாஹு மதலர் ரஜுலய்னி அஹதுஹுமா அBப்கமு லா யக்திரு 'அலா ஷய்'இ(ன்)வ் வ ஹுவ கல்லுன் 'அலா மவ்லாஹு அய்னமா யுவஜ்ஜிஹ்ஹு லா யாதி Bபிகய்ரின் ஹல் யஸ்தவீ ஹுவ வ ம(ன்)ய்-யாமுரு Bபில்'அத்லி வ ஹுவ 'அலா ஸிராதிம் முஸ்தகீம்
16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீதும் சக்தியற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; அவனை எங்கு அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டுவரமாட்டான்; அவனும், தான் நேரான வழியில் இருந்து கொண்டு (பிறருக்கு) நீதியையே ஏவிக்கொண்டிருப்பவனும் சமமாவார்களா?
16:77 وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ وَمَاۤ اَمْرُ السَّاعَةِ اِلَّا كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கே غَيْبُ மறைவானவை السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِؕ இன்னும் பூமியில் وَمَاۤ இன்னும் இல்லை اَمْرُ நிலை السَّاعَةِ (மறுமை நிகழும்) நேரம் اِلَّا தவிர كَلَمْحِ சிமிட்டுவதைப் போல் الْبَصَرِ பார்வை اَوْ அல்லது هُوَ அது اَقْرَبُؕ மிக நெருக்கமானது اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
16:77. வ லில்லாஹி கய்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ மா அம்ருஸ் ஸா'அதி இல்லா கலம்ஹில் Bபஸரி அவ் ஹுவ அக்ரBப்; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
16:77. மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) மறுமையின் விஷயம் இமை கொட்டி விழிப்பதுபோல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
16:78 وَاللّٰهُ اَخْرَجَكُمْ مِّنْۢ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ لَا تَعْلَمُوْنَ شَيْئًا ۙ وَّ جَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصٰرَ وَالْاَفْـِٕدَةَ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
وَاللّٰهُ அல்லாஹ் اَخْرَجَكُمْ வெளிப்படுத்தினான்/உங்களை مِّنْۢ بُطُوْنِ வயிறுகளில் இருந்து اُمَّهٰتِكُمْ தாய்மார்கள்/உங்கள் لَا تَعْلَمُوْنَ அறியாதவர்களாக (அறிய மாட்டீர்கள்) شَيْئًا ۙ ஒன்றையும் وَّ جَعَلَ இன்னும் படைத்தான் لَـكُمُ உங்களுக்கு السَّمْعَ செவிகளை وَالْاَبْصٰرَ இன்னும் பார்வைகளை وَالْاَفْـِٕدَةَ ۙ இன்னும் உள்ளங்களை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
16:78. வல்லாஹு அக்ரஜகும் மிம் Bபுதூனி உம்மஹாதிகும் லா தஃலமூன ஷய்'அ(ன்)வ் வ ஜ'அல லகுமுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வல் அFப்'இதத ல'அல்லகும் தஷ்குரூன்
16:78. உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்களை அல்லாஹ்தான் வெளிப்படுத்தினான்; அன்றியும், உங்களுக்குச் செவிப் புலனையும் பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்.
16:79 اَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ مُسَخَّرٰتٍ فِىْ جَوِّ السَّمَآءِ ؕ مَا يُمْسِكُهُنَّ اِلَّا اللّٰهُؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
اَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اِلَى الطَّيْرِ பறவைகளை مُسَخَّرٰتٍ வசப்படுத்தப்பட்டவையாக فِىْ جَوِّ ஆகாயத்தில் السَّمَآءِ ؕ வானம் مَا தடுக்கவில்லை يُمْسِكُهُنَّ அவற்றை اِلَّا தவிர اللّٰهُؕ அல்லாஹ் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ (பல) அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
16:79. அலம் யரவ் இலத் தய்ரி முஸக்கராதின் Fபீ ஜவ்விஸ் ஸமா'இ மா யும்ஸிகுஹுன்ன இல்லல் லாஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
16:79. வான் (மண்டலத்தின் காற்று) வெளியில் (இறைக் கட்டளைக்குக்) கட்டுப்பட்டவையாக (பறந்து செல்லும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரும்) தடுத்து நிறுத்தவில்லை; நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:80 وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّنْۢ بُيُوْتِكُمْ سَكَنًا وَّجَعَلَ لَـكُمْ مِّنْ جُلُوْدِ الْاَنْعَامِ بُيُوْتًا تَسْتَخِفُّوْنَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ اِقَامَتِكُمْۙ وَمِنْ اَصْوَافِهَا وَاَوْبَارِهَا وَاَشْعَارِهَاۤ اَثَاثًا وَّمَتَاعًا اِلٰى حِيْنٍ
وَاللّٰهُ அல்லாஹ் جَعَلَ படைத்தான், அமைத்தான் لَـكُمْ உங்களுக்கு مِّنْۢ بُيُوْتِكُمْ உங்கள் வீடுகளில் سَكَنًا தங்குவதை وَّجَعَلَ இன்னும் அமைத்தான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ இருந்து جُلُوْدِ தோல்கள் الْاَنْعَامِ கால்நடைகளின் بُيُوْتًا கூடாரங்களை تَسْتَخِفُّوْنَهَا எளிதாக்கிக் கொள்கிறீர்கள்/அவற்றை يَوْمَ நாள் ظَعْنِكُمْ நீங்கள் பயணிப்பது وَيَوْمَ இன்னும் நாள் اِقَامَتِكُمْۙ நீங்கள் தங்குகின்ற وَمِنْ اَصْوَافِهَا இன்னும் கம்பளிகள் / அவற்றில் وَاَوْبَارِهَا இன்னும் உரோமங்கள்/அவற்றின் وَاَشْعَارِهَاۤ இன்னும் முடிகள்/அவற்றின் اَثَاثًا செல்வம், பொருள் وَّمَتَاعًا இன்னும் சுகமானபயன்பாட்டை اِلٰى வரை حِيْنٍ ஒரு காலம்
16:80. வல்லாஹு ஜ'அல லகும் மிம் Bபுயூதிகும் ஸகன(ன்)வ் வ ஜ'அல லகும் மின் ஜுலூதில் அன்'ஆமி Bபுயூதன் தஸ்தகிFப் Fபூனஹா யவ்ம ளஃனிகும் வ யவ்ம இகாமதிகும் வ மின் அஸ்வாFபிஹா வ அவ்Bபாரிஹா வ அஷ்'ஆரிஹா அதாத(ன்)வ் வ மதா'அன் இலா ஹீன்
16:80. அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித் தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பயண நாளிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான்; வெள்ளாட்டின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் (அமைத்துத் தந்திருக்கிறான்).
16:81 وَاللّٰهُ جَعَلَ لَـكُمْ مِّمَّا خَلَقَ ظِلٰلًا وَّجَعَلَ لَـكُمْ مِّنَ الْجِبَالِ اَكْنَانًا وَّجَعَلَ لَـكُمْ سَرَابِيْلَ تَقِيْكُمُ الْحَـرَّ وَسَرَابِيْلَ تَقِيْكُمْ بَاْسَكُمْؕ كَذٰلِكَ يُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ
وَاللّٰهُ அல்லாஹ் جَعَلَ அமைத்தான் لَـكُمْ உங்களுக்கு مِّمَّا خَلَقَ தான் படைத்திருப்பவற்றில் ظِلٰلًا நிழல்களை وَّجَعَلَ இன்னும் அமைத்தான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ الْجِبَالِ மலைகளில் اَكْنَانًا குகைகளை وَّجَعَلَ இன்னும் அமைத்தான் لَـكُمْ உங்களுக்கு سَرَابِيْلَ சட்டைகளை تَقِيْكُمُ காக்கின்றன/உங்களை الْحَـرَّ வெப்பத்தை விட்டு وَسَرَابِيْلَ இன்னும் சட்டைகளை تَقِيْكُمْ காக்கின்றன/ உங்களை بَاْسَكُمْؕ உங்கள் பலமான தாக்குதல் كَذٰلِكَ இவ்வாறுதான் يُتِمُّ முழுமையாக்குகிறான் نِعْمَتَهٗ தன் அருளை عَلَيْكُمْ உங்கள் மீது لَعَلَّكُمْ تُسْلِمُوْنَ நீங்கள் முற்றிலும் பணிந்து நடப்பதற்காக
16:81. வல்லாஹு ஜ'அல லகும் மிம்மா கலக ளிலால(ன்)வ் வ ஜ'அல லகும் மினல் ஜிBபாலி அக்னான(ன்)வ் வ ஜ'அல லகும் ஸராBபீல தகீகுமுல் ஹர்ர வ ஸராBபீல தகீகும் Bபா'ஸகும்; கதாலிக யுதிம்மு னிஃமதஹூ அலய்கும் ல'அல்லகும் துஸ்லிமூன்
16:81. இன்னும், அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான்; இன்னும், மலைகளிலிருந்து உங்களுக்கு(த் தங்குமிடங்களாக) குகைகளையும் ஏற்படுத்தினான்; இன்னும், வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடிய சட்டைகளையும், உங்களுடைய போரில் உங்களைப் பாதுகாக்கக்கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்; நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதற்காக இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்குகின்றான்.
16:82 فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ الْمُبِيْنُ
فَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَاِنَّمَا عَلَيْكَ உம்மீது எல்லாம் الْبَلٰغُ எடுத்துரைப்பதுதான் الْمُبِيْنُ தெளிவாக
16:82. Fப இன் தவல்லவ் Fப இன்னமா 'அலய்கல் Bபலாகுல் முBபீன்
16:82. எனினும், இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின் (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்,) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறைக் கட்டளைகளை அவர்களுக்கு)த் தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான்.
16:83 يَعْرِفُوْنَ نِعْمَتَ اللّٰهِ ثُمَّ يُنْكِرُوْنَهَا وَاَكْثَرُهُمُ الْكٰفِرُوْنَ
يَعْرِفُوْنَ அறிகிறார்கள் نِعْمَتَ அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ பிறகு يُنْكِرُوْنَهَا அதை நிராகரிக்கின்றனர் وَاَكْثَرُ இன்னும் அதிகமானவர்(கள்) هُمُ அவர்களில் الْكٰفِرُوْنَ நன்றி கெட்டவர்கள்
16:83. யஃரிFபூன னிஃமதல் லாஹி தும்ம யுன்கிரூனஹா வ அக்தருஹுமுல் காFபிரூன்
16:83. அல்லாஹ்வின் அருட்கொடையை அவர்கள் நன்றாக அறிகிறார்கள்; பின்னர், அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் நிராகரிப்பவர் (நன்றிகெட்டவர்)களாகவே இருக்கின்றனர்.
16:84 وَيَوْمَ نَـبْعَثُ مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِيْنَ كَفَرُوْا وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ
وَيَوْمَ நாளில் نَـبْعَثُ எழுப்புவோம் مِنْ இருந்து كُلِّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயம் شَهِيْدًا ஒரு சாட்சியாளரை ثُمَّ பிறகு لَا يُؤْذَنُ அனுமதிக்கப்படாது لِلَّذِيْنَ எவர்களுக்கு كَفَرُوْا நிராகரித்தனர் وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ இன்னும் அவர்கள் காரணம் கேட்கப் பட மாட்டார்கள்
16:84. வ யவ்ம னBப்'அது மின் குல்லி உம்மதின் ஷஹீதன் தும்ம லா யு'தனு லில்லதீன கFபரூ வலா ஹும் யுஸ்தஃதBபூன்
16:84. ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக! அந்) நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகல் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது; இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளவும்) இடங்கொடுக்கப்படமாட்டார்கள்.
16:85 وَاِذَا رَاَ الَّذِيْنَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنْظَرُوْنَ
وَاِذَا رَاَ கண்டால் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوا தீங்கிழைத்தனர் الْعَذَابَ வேதனையை فَلَا يُخَفَّفُ இலகுவாக்கப்படாது عَنْهُمْ அவர்களை விட்டு وَلَا هُمْ يُنْظَرُوْنَ இன்னும் அவர்கள்அவகாசம் அளிக்கப் பட மாட்டார்கள்
16:85. வ இதா ர அல் லதீன ளலமுல் 'அதாBப Fபலா யுகFப் FபFபு 'அன்ஹும் வலா ஹும் யுன்ளரூன்
16:85. அக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்கூடாக)ப் பார்க்கும்போது, (தம் வேதனையைக் குறைக்குமாறு எவ்வளவு வேண்டினாலும்) அவர்களுக்கு (வேதனை) இலேசாக்கப்படவும் மாட்டாது; அன்றியும், (அவ்வேதனை பெறுவதில்) அவர்கள் தாமதப்படுத்தப்படவும் மாட்டார்கள்.
16:86 وَ اِذَا رَاَ الَّذِيْنَ اَشْرَكُوْا شُرَكَآءَهُمْ قَالُوْا رَبَّنَا هٰٓؤُلَاۤءِ شُرَكَآؤُنَا الَّذِيْنَ كُنَّا نَدْعُوْا مِنْ دُوْنِكَۚ فَاَلْقَوْا اِلَيْهِمُ الْقَوْلَ اِنَّكُمْ لَـكٰذِبُوْنَۚ
وَ اِذَا رَاَ கண்டால் الَّذِيْنَ எவர்கள் اَشْرَكُوْا இணைவைத்தனர் شُرَكَآءَ இணை தெய்வங்களை هُمْ தங்கள் قَالُوْا கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா هٰٓؤُلَاۤءِ இவை شُرَكَآؤُنَا எங்கள் தெய்வங்கள் الَّذِيْنَ எவர்கள் كُنَّا இருந்தோம் نَدْعُوْا அழைப்போம் مِنْ دُوْنِكَۚ உன்னையன்றி فَاَلْقَوْا اِلَيْهِمُ الْقَوْلَ அதற்கு அவை கூறிவிடுவர்/ இவர்களை நோக்கி اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـكٰذِبُوْنَۚ பொய்யர்கள்தான்
16:86. வ இதா ர அல் லதீன அஷ்ரகூ ஷுரகா'அஹும் காலூ ரBப்Bபன ஹா'உலா'இ ஷுரகா'உனல் லதீன குன்னா னத்'ஊ மின் தூனிக Fப அல்கவ் இலய்ஹிமுல் கவ்ல இன்னகும் லகாதிBபூன்
16:86. இன்னும், இணைவைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமைநாளில்) பார்க்கும் பொழுது, (அல்லாஹ்விடம்) "எங்கள் இறைவனே! உன்னையன்றி நாங்கள் அழைத்து (வணங்கிக்) கொண்டிருந்தோமே அத்தகைய எங்களுடைய இணையாளர்கள் இவைகள்தாம்;" என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு (அந்தத் தெய்வங்கள், நாங்கள் தெய்வங்களல்ல!) "நிச்சயமாக நீங்கள் பொய்யர்களே!" என்னும் சொல்லை அவர்கள் மீது அவைகள் வீசும்.
16:87 وَاَلْقَوْا اِلَى اللّٰهِ يَوْمَٮِٕذٍ ۨالسَّلَمَ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
وَاَلْقَوْا அவர்கள் விடுவார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَوْمَٮِٕذٍ அந்நாளில் ۨالسَّلَمَ பணிந்து وَضَلَّ மறைந்தன عَنْهُمْ இவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுவார்கள்
16:87. வ அல்கவ் இலல் லாஹி யவ்ம'இதினிஸ் ஸலம வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
16:87. இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்துவிடுவதை எடுத்துவைப்பார்கள்; பின்னர், இவர்கள் இட்டுக்கட்டியவையெல்லாம் இவர்களைவிட்டும் மறைந்துவிடும்.
16:88 اَ لَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ زِدْنٰهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوْا يُفْسِدُوْنَ
اَ لَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் وَصَدُّوْا இன்னும் தடுத்தனர் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வுடைய زِدْنٰهُمْ அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு عَذَابًا வேதனையை فَوْقَ மேல் الْعَذَابِ வேதனைக்கு بِمَا இருந்தனர் كَانُوْا காரணத்தால் يُفْسِدُوْنَ விஷமம்செய்வார்கள்
16:88. அல்லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி Zஜித்னாஹும் 'அதாBபன் Fபவ்கல் 'அதாBபி Bபிமா கானூ யுFப்ஸிதூன்
16:88. எவர்கள் நிராகரித்துக்கொண்டும், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் தடுத்துக்கொண்டும் இருந்தார்களோ, அவர்களுக்கு (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக, நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம்.
16:89 وَيَوْمَ نَـبْعَثُ فِىْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا عَلَيْهِمْ مِّنْ اَنْفُسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيْدًا عَلٰى هٰٓؤُلَاۤءِ ؕ وَنَزَّلْنَا عَلَيْكَ الْـكِتٰبَ تِبْيَانًا لِّـكُلِّ شَىْءٍ وَّ هُدًى وَّرَحْمَةً وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ
وَيَوْمَ நாளில் نَـبْعَثُ நாம் எழுப்புவோம் فِىْ كُلِّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயம் شَهِيْدًا ஒரு சாட்சியாளரை عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக مِّنْ இருந்தே اَنْفُسِهِمْ அவர்களில் وَجِئْنَا இன்னும் வருவோம் بِكَ உம்மைக் கொண்டு شَهِيْدًا சாட்சியாளராக عَلٰى எதிரான هٰٓؤُلَاۤءِ ؕ இவர்களுக்கு وَنَزَّلْنَا இறக்கினோம் عَلَيْكَ உம்மீது الْـكِتٰبَ வேதத்தை تِبْيَانًا மிக தெளிவுபடுத்தக்கூடியதாக لِّـكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّ هُدًى இன்னும் நேர்வழிகாட்டியாக وَّرَحْمَةً இன்னும் அருளாக وَّبُشْرٰى இன்னும் நற்செய்தியாக لِلْمُسْلِمِيْنَ முஸ்லிம்களுக்கு
16:89. வ யவ்ம னBப்'அது Fபீ குல்லி உம்ம்மதின் ஷஹீதன் 'அலய்ஹிம் மின் அன்Fபுஸிஹிம் வ ஜி'னா Bபிக ஷஹீதன் 'அலா ஹா'உலா'; வ னZஜ்Zஜல்னா 'அலய்கல் கிதாBப திBப்யானல் லிகுல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மத(ன்)வ் வ Bபுஷ்ரா லில்முஸ்லிமீன்
16:89. இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக சாட்சியை எழுப்பும் நாளில், உம்மை இம்மக்களுக்கு எதிராக சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கிவைத்திருக்கிறோம்.
16:90 اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَاْمُرُ ஏவுகிறான் بِالْعَدْلِ நீதம் செலுத்துவதற்கு وَالْاِحْسَانِ இன்னும் நல்லறம் புரிதல் وَاِيْتَآىِٕ இன்னும் கொடுப்பதற்கு ذِى الْقُرْبٰى உறவினர்களுக்கு وَيَنْهٰى இன்னும் அவன் தடுக்கிறான் عَنِ الْفَحْشَآءِ மானக்கேடானவற்றை விட்டு وَالْمُنْكَرِ இன்னும் பாவம் وَالْبَغْىِۚ இன்னும் அநியாயம் يَعِظُكُمْ உங்களுக்கு உபதேசிக்கிறான் لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ நீங்கள் ஞானம் பெறுவதற்காக
16:90. இன்னல் லாஹ ய'முரு Bபில் 'அத்லி வல் இஹ்ஸானி வ ஈதா'இ தில் குர்Bபா வ யன்ஹா 'அனில் Fபஹ்ஷா'இ வல் முன்கரி வல்Bபக்-இ' ய'இளுகும் ல'அல்லகும் ததக்கரூன்
16:90. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுப்பதைக் கொண்டும் (உங்களை) ஏவுகிறான்; அன்றியும் மானக்கேடான காரியங்கள், தீமை, வரம்பு மீறுதல் ஆகியவற்றைவிட்டும் (உங்களைத்) தடுக்கின்றான்; நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வதற்காக அவன் உங்களுக்கு உபதேசம் செய்கின்றான்.
16:91 وَ اَوْفُوْا بِعَهْدِ اللّٰهِ اِذَا عَاهَدْتُّمْ وَلَا تَنْقُضُوا الْاَيْمَانَ بَعْدَ تَوْكِيْدِهَا وَقَدْ جَعَلْتُمُ اللّٰهَ عَلَيْكُمْ كَفِيْلًا ؕ اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا تَفْعَلُوْنَ
وَ اَوْفُوْا முழுமையாக நிறைவேற்றுங்கள் بِعَهْدِ ஒப்பந்தத்தை اللّٰهِ அல்லாஹ்வின் اِذَا عَاهَدْتُّمْ நீங்கள்ஒப்பந்தம்செய்தால் وَلَا تَنْقُضُوا முறிக்காதீர்கள் الْاَيْمَانَ சத்தியங்களை بَعْدَ பின்பு تَوْكِيْدِهَا அவற்றை உறுதிபடுத்துவது وَقَدْ جَعَلْتُمُ ஆக்கிவிட்டீர்கள் اللّٰهَ அல்லாஹ்வை عَلَيْكُمْ உங்கள் மீது كَفِيْلًا ؕ பொறுப்பாளனாக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَعْلَمُ அறிவான் مَا எதை تَفْعَلُوْنَ செய்வீர்கள்
16:91. வ அவ்Fபூ Bபி அஹ்தில் லாஹி இதா 'ஆஹத்தும் வலா தன்குளுல் அய்மான Bபஃத தவ்கீதிஹா வ கத் ஜ'அல்துமுல் லாஹ 'அலய்கும் கFபீலா; இன்னல் லாஹ யஃலமு மா தFப்'அலூன்
16:91. இன்னும், (உங்களுக்கு மத்தியில்) உடன்படிக்கை செய்தால் நீங்கள் அல்லாஹ்வின் (பெயரால் செய்யும்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை உங்களுக்குச் சாட்சியாக நீங்கள் ஆக்கிய நிலையில் அவற்றை உறுதிப்படுத்திய பின்னர், அச்சத்தியங்களை நீங்கள் முறிக்காதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
16:92 وَلَا تَكُوْنُوْا كَالَّتِىْ نَقَضَتْ غَزْلَهَا مِنْۢ بَعْدِ قُوَّةٍ اَنْكَاثًا ؕ تَتَّخِذُوْنَ اَيْمَانَكُمْ دَخَلًاۢ بَيْنَكُمْ اَنْ تَكُوْنَ اُمَّةٌ هِىَ اَرْبٰى مِنْ اُمَّةٍ ؕ اِنَّمَا يَبْلُوْكُمُ اللّٰهُ بِهٖ ؕ وَلَيُبَيِّنَنَّ لَـكُمْ يَوْمَ الْقِيٰمَةِ مَا كُنْـتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّتِىْ எவள்/போன்று نَقَضَتْ பிரித்தாள் غَزْلَهَا தான் நெய்த நூலை مِنْۢ بَعْدِ قُوَّةٍ பின்பு/உறுதி பெறுதல் اَنْكَاثًا ؕ திரிகளாக تَتَّخِذُوْنَ ஆக்கிக்கொள்கிறீர்களா? اَيْمَانَكُمْ உங்கள் சத்தியங்களை دَخَلًاۢ ஏமாற்றமாக, வஞ்சகமாக بَيْنَكُمْ உங்களுக்கிடையில் اَنْ تَكُوْنَ இருப்பதற்காக اُمَّةٌ ஒரு சமுதாயம் هِىَ அது اَرْبٰى பலம்வாய்ந்தவர்களாக مِنْ விட اُمَّةٍ ؕ ஒரு சமுதாயத்தை اِنَّمَا يَبْلُوْكُمُ நிச்சயமாக சோதிக்கிறான் / உங்களை اللّٰهُ அல்லாஹ் بِهٖ ؕ இதன் மூலம் وَلَيُبَيِّنَنَّ நிச்சயம் தெளிவுபடுத்துவான் لَـكُمْ உங்களுக்கு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் مَا எதை كُنْـتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَ தர்க்கிப்பீர்கள்
16:92. வ லா தகூனூ கல்லதீ னகளத் கZஜ்லஹா மிம் Bபஃதி குவ்வதின் அன்காதா; தத்தகிதூன அய்மானகும் தகலம் Bபய்னகும் அன் தகூன உம்மதுன் ஹிய அர்Bபா மின் உம்மஹ்; இன்ன்னமா யBப்லூகுமுல் லாஹு Bபிஹ்; வ ல யுBபய்யினன்ன லகும் யவ்மல் கியாமதி மா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
16:92. நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில்) உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டுதுண்டாக ஆக்கியவளைப் போல் ஆகிவிடாதீர்கள்: ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைவிட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்குச் சாதனங்களாக்கிக் கொள்கிறீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான்; இன்னும், நீங்கள் எ(வ்விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ (அதனை) அவன் உங்களுக்கு மறுமைநாளில் தெளிவாக்குவான்.
16:93 وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ يُّضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ؕ وَلَـتُسْــٴَــلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُوْنَ
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَجَـعَلَكُمْ உங்களை ஆக்கியிருப்பான் اُمَّةً ஒரு சமுதாயமாக وَّاحِدَةً ஒரே وَّلٰـكِنْ எனினும் يُّضِلُّ வழிகெடுக்கின்றான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகின்றான் وَيَهْدِىْ இன்னும் நேர்வழி செலுத்துகின்றான் مَنْ يَّشَآءُ ؕ எவரை/நாடுகின்றான் وَلَـتُسْــٴَــلُنَّ நிச்சயம் விசாரிக்கப்படுவீர்கள் عَمَّا எதைப்பற்றி كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ செய்வீர்கள்
16:93. வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலகும் உம்ம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ லாகி(ன்)ய் யுளில்லு ம(ன்)ய்-யஷா'உ வ யஹ்தீ ம(ன்)ய்-யஷா'; வ லதுஸ்'அலுன்ன 'அம்மா குன்தும் தஃமலூன்
16:93. மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும், தான் நாடியவர்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்கிறான்; இன்னும், தான் நாடியவர்களை நேர்வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவைப்பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
16:94 وَلَا تَتَّخِذُوْۤا اَيْمَانَكُمْ دَخَلًاۢ بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوْتِهَا وَتَذُوْقُوا السُّوْۤءَ بِمَا صَدَدْتُّمْ عَنْ سَبِيْلِ اللّٰهِۚ وَ لَـكُمْ عَذَابٌ عَظِيْمٌ
وَلَا تَتَّخِذُوْۤا ஆக்கிக் கொள்ளாதீர்கள் اَيْمَانَكُمْ உங்கள் சத்தியங்களை دَخَلًاۢ ஏமாற்றமாக بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் فَتَزِلَّ சருகிவிடும் قَدَمٌۢ ஒரு பாதம் بَعْدَ பின்பு ثُبُوْتِهَا அது நிலைபெறுதல் وَتَذُوْقُوا இன்னும் அனுபவிப்பீர்கள் السُّوْۤءَ துன்பத்தை بِمَا صَدَدْتُّمْ நீங்கள் தடுத்த காரணத்தால் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِۚ அல்லாஹ்வின் وَ لَـكُمْ இன்னும் உங்களுக்கு عَذَابٌ ஒரு வேதனை عَظِيْمٌ மகத்தானது
16:94. வ லா தத்தகிதூ அய்மானகும் தகலம் Bபய்னகும் FபதZஜில்ல கதமும் Bபஃத துBபூதிஹா வ ததூகுஸ் ஸூ'அ Bபிம ஸதத்தும் 'அன் ஸBபீலில் லாஹி வ லகும் 'அதாBபுன் 'அளீம்
16:94. நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் மோசடியாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்தால்) நிலைபெற்ற (உங்களுடைய) பாதம் சறுகிவிடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையில்) உங்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
16:95 وَلَا تَشْتَرُوْا بِعَهْدِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا ؕ اِنَّمَا عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
وَلَا تَشْتَرُوْا வாங்காதீர்கள் بِعَهْدِ ஒப்பந்தத்திற்கு பகரமாக اللّٰهِ அல்லாஹ்வின் ثَمَنًا ஒரு விலையை قَلِيْلًا ؕ சொற்பமானது اِنَّمَا நிச்சயமாக/எது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடத்தில் هُوَ அது خَيْرٌ மிக மேலானது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ அறிவீர்கள்
16:95. வ லா தஷ்தரூ Bபி 'அஹ்தில் லாஹி தமனன் கலீலா; இன்னமா 'இன்தல் லாஹி ஹுவ கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
16:95. இன்னும், அல்லாஹ்விடம் செய்துகொண்ட வாக்குறுதியை அற்பவிலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும்.
16:96 مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللّٰهِ بَاقٍؕ وَلَـنَجْزِيَنَّ الَّذِيْنَ صَبَرُوْۤا اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
مَا எது عِنْدَكُمْ உங்களிடம் يَنْفَدُ தீர்ந்துவிடும் وَمَا இன்னும் எது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் بَاقٍؕ நிரந்தரமானவை وَلَـنَجْزِيَنَّ நிச்சயமாக கூலி கொடுப்போம் الَّذِيْنَ எவர்கள் صَبَرُوْۤا பொறுத்தனர் اَجْرَهُمْ அவர்களின் கூலியை بِاَحْسَنِ மிக அழகிய முறையில் مَا எவை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்வார்கள்
16:96. மா 'இன்தகும் யன்Fபது வமா 'இன்தல் லாஹி Bபாக்; வ லனஜ்Zஜியன்னல் லதீன ஸBபரூ அஜ்ஜ்ரஹும் Bபி அஹ்ஸனி மா கானூ யஃமலூன்
16:96. உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்து விடும்; அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும்; பொறுமையைக் கடைப்பிடித்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
16:97 مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً ۚ وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
مَنْ எவர்கள் عَمِلَ செய்தார்(கள்) صَالِحًـا நல்லதை مِّنْ இருந்து ذَكَرٍ ஆண்கள் اَوْ அல்லது اُنْثٰى பெண்கள் وَهُوَ அவர்(கள்) مُؤْمِنٌ நம்பிக்கை கொண்டவர்(களாக) فَلَـنُحْيِيَنَّهٗ நிச்சயம் வாழச்செய்வோம்/அவர்களை حَيٰوةً வாழ்க்கை طَيِّبَةً ۚ நல்ல(து) وَلَـنَجْزِيَـنَّهُمْ நிச்சயம் கொடுப்போம்/அவர்களுக்கு اَجْرَهُمْ அவர்களின் கூலியை بِاَحْسَنِ மிக அழகிய முறையில் مَا எவை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்வார்கள்
16:97. மன் 'அமில ஸாலிஹம் மின் தகரின் அவ் உன்தா வ ஹுவ மு'மினுன் Fபலனுஹ்யியன்னஹூ ஹயாதன் தய்இயிBபத(ன்)வ் வ லனஜ்Zஜி யன்ன்னஹும் அஜ்ரஹும் Bபி அஹ்ஸனி மா கானூ யஃமலூன்
16:97. ஆணாயினும், பெண்ணாயினும் அவர் நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும், (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
16:98 فَاِذَا قَرَاْتَ الْقُرْاٰنَ فَاسْتَعِذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ
فَاِذَا قَرَاْتَ நீர் ஓதினால் الْقُرْاٰنَ குர்ஆனை فَاسْتَعِذْ பாதுகாவல் கோருங்கள் بِاللّٰهِ அல்லாஹ்விடம் مِنَ விட்டு الشَّيْطٰنِ ஷைத்தானை الرَّجِيْمِ விரட்டப்பட்டவன்
16:98. Fப இதா கர தல் குர்'ஆன Fபஸ்த'இத் Bபில்லாஹி மினஷ்ஹ் ஷய் தானிர் ரஜீம்
16:98. மேலும், (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்வீராக!
16:99 اِنَّهٗ لَـيْسَ لَهٗ سُلْطٰنٌ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ
اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـيْسَ இல்லை لَهٗ அவனுக்கு سُلْطٰنٌ அதிகாரம் عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَلٰى இன்னும் மீது رَبِّهِمْ தங்கள் இறைவன் يَتَوَكَّلُوْنَ நம்பிக்கை வைப்பார்கள்
16:99. இன்னஹூ லய்ஸ லஹூ ஸுல்தானுன் 'அலல் லதீன ஆமனூ வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
16:99. எவர்கள் நம்பிக்கை கொண்டு இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள்மீது நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
16:100 اِنَّمَا سُلْطٰنُهٗ عَلَى الَّذِيْنَ يَتَوَلَّوْنَهٗ وَالَّذِيْنَ هُمْ بِهٖ مُشْرِكُوْنَ
اِنَّمَا سُلْطٰنُهٗ அவனுடைய அதிகாரமெல்லாம் عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் يَتَوَلَّوْنَهٗ நட்புவைப்பார்கள்/ அவனுடன் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِهٖ அவனுக்கு مُشْرِكُوْنَ இணைவைப்பவர்கள்
16:100. இன்ன்னமா ஸுல்தானுஹூ 'அலல் லதீன யதவல்லவ்னஹூ வல்லதீன ஹும் Bபிஹீ முஷ்ரிகூன்
16:100. திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்).
16:101 وَاِذَا بَدَّلْنَاۤ اٰيَةً مَّكَانَ اٰيَةٍۙ وَّ اللّٰهُ اَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مُفْتَرٍؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ
وَاِذَا بَدَّلْنَاۤ நாம் மாற்றினால் اٰيَةً ஒரு வசனத்தை مَّكَانَ இடத்தில் اٰيَةٍۙ மற்றொரு வசனத்தின் وَّ اللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا يُنَزِّلُ தான் இறக்குவதை قَالُوْۤا கூறுகின்றனர் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مُفْتَرٍؕ இட்டுக்கட்டுபவர் بَلْ மாறாக اَكْثَرُهُمْ அதிகமானவர்(கள்)/ இவர்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
16:101. வ இதா Bபத்தல்னா ஆயதம் மகான ஆயதி(ன்)வ் வல் லாஹு அஃலமு Bபிமா யுனZஜ்Zஜிலு காலூ இன்னமா அன்த முFப்தர்; Bபல் அக்தருஹும் லா யஃலமூன்
16:101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை, மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எந்த நேரத்தில், எதை இறக்கவேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறியமாட்டார்கள்.
16:102 قُلْ نَزَّلَهٗ رُوْحُ الْقُدُسِ مِنْ رَّبِّكَ بِالْحَـقِّ لِيُثَبِّتَ الَّذِيْنَ اٰمَنُوْا وَهُدًى وَّبُشْرٰى لِلْمُسْلِمِيْنَ
قُلْ கூறுவீராக نَزَّلَهٗ இறக்கினார்/இதை رُوْحُ الْقُدُسِ ரூஹூல் குதுஸ் مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு لِيُثَبِّتَ உறுதிப்படுத்துவதற்காக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَهُدًى இன்னும் நேர்வழியாக وَّبُشْرٰى இன்னும் நற்செய்தியாக لِلْمُسْلِمِيْنَ முஸ்லிம்களுக்கு
16:102. குல் னZஜ்Zஜலஹூ ரூஹுல் குதுஸி மிர் ரBப்Bபிக Bபில்ஹக்கி லியுதBப்Bபிதல் லதீன ஆமனூ வ ஹுத(ன்)வ் வ Bபுஷ்ரா லில்முஸ்லிமீன்
16:102. (நபியே!) "நம்பிக்கை கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும், உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு 'ரூஹுல் குதுஸ்' (எனும் ஜிப்ரீல்) இதை இறக்கிவைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக!
16:103 وَلَـقَدْ نَـعْلَمُ اَنَّهُمْ يَقُوْلُوْنَ اِنَّمَا يُعَلِّمُهٗ بَشَرٌؕ لِسَانُ الَّذِىْ يُلْحِدُوْنَ اِلَيْهِ اَعْجَمِىٌّ وَّهٰذَا لِسَانٌ عَرَبِىٌّ مُّبِيْنٌ
وَلَـقَدْ திட்டவட்டமாக نَـعْلَمُ அறிவோம் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يَقُوْلُوْنَ கூறுவர் اِنَّمَا கற்றுக் கொடுப்பதெல்லாம் يُعَلِّمُهٗ அவருக்கு بَشَرٌؕ மனிதர்தான் لِسَانُ மொழி الَّذِىْ எவருடைய يُلْحِدُوْنَ சேர்க்கிறார்கள் اِلَيْهِ அவர் பக்கம் اَعْجَمِىٌّ அரபியல்லாதவர் وَّهٰذَا இதுவோ لِسَانٌ மொழி عَرَبِىٌّ அரபி مُّبِيْنٌ தெளிவானது
16:103. வ லகத் னஃலமு அன்னஹும் யகூலூன இன்னமா யு'அல்லிமுஹூ Bபஷர்; லிஸானுல் லதீ யுல்ஹிதூன இலய்ஹி அஃஜ மிய்யு(ன்)வ் வ ஹாத லிஸானுன் 'அரBபிய்யும் முBபீன்
16:103. "நிச்சயமாக அவருக்குக் கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லாது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.
16:104 اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِۙ لَا يَهْدِيْهِمُ اللّٰهُ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِۙ அல்லாஹ்வுடைய لَا நேர்வழி செலுத்த மாட்டான் يَهْدِيْهِمُ அவர்களை اللّٰهُ அல்லாஹ் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌ துன்புறுத்தக் கூடியது
16:104. இன்னல் லதீன லா யு'மினூன Bபி ஆயாதில் லாஹி லா யஹ்தீஹிமுல் லாஹு வ லஹும் 'அதாBபுன் அலீம்
16:104. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும், அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
16:105 اِنَّمَا يَفْتَرِى الْـكَذِبَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِاٰيٰتِ اللّٰهِۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْكٰذِبُوْنَ
اِنَّمَا يَفْتَرِى இட்டுக்கட்டுவ தெல்லாம் الْـكَذِبَ பொய்யை الَّذِيْنَ எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِۚ அல்லாஹ்வின் وَاُولٰۤٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْكٰذِبُوْنَ பொய்யர்கள்
16:105. இன்னமா யFப்தரில் கதிBபல் லதீன லா யு'மினூன Bபி ஆயாதில் லாஹி வ உலா'இக ஹுமுல் காதிBபூன்
16:105. நிச்சயமாகப் பொய்யை இட்டுக்கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம்; இன்னும், அவர்கள்தாம் பொய்யர்கள்.
16:106 مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْۢ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّۢ بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ
مَنْ எவர் كَفَرَ நிராகரித்தார் بِاللّٰهِ அல்லாஹ்வை مِنْۢ بَعْدِ பின்னர் اِيْمَانِهٖۤ அவர் நம்பிக்கை கொண்ட اِلَّا தவிர مَنْ எவர் اُكْرِهَ தான் நிர்பந்திக்கப்பட்டார் وَقَلْبُهٗ தனது உள்ளமோ مُطْمَٮِٕنٌّۢ திருப்தியடைந்தது بِالْاِيْمَانِ நம்பிக்கையில் وَلٰـكِنْ எனினும் مَّنْ எவர் شَرَحَ திறந்தான், விவரித்தான், விரும்பினான் بِالْكُفْرِ நிராகரிப்பை صَدْرًا நெஞ்சத்தால் فَعَلَيْهِمْ அவர்கள் மீது غَضَبٌ கோபம் مِّنَ اللّٰهِۚ அல்லாஹ்வுடைய وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை عَظِيْمٌ கடுமையானது
16:106. மன் கFபர Bபில்லாஹி மிம் Bபஃதி ஈமானிஹீ இல்லா மன் உக்ரிஹ வ கல்Bபுஹூ முத்ம்ம'இன்னும் Bபில் ஈமானி வ லாகிம் மன் ஷரஹ Bபில்குFப்ரி ஸத்ரன் Fப'அலய்ஹிம் களBபும் மினல் லாஹி வ லஹும் 'அதாBபுன் 'அளீம்
16:106. எவர் தாம் நம்பிக்கை கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ (அவர்மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது; ஆனால்), எவருடைய உள்ளம் நம்பிக்கையைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவரைத் தவிர; (எனவே, அவர்மீது குற்றமில்லை;) ஆனால், (நிர்ப்பந்தம் ஏதும் இல்லாமல்) எவர் (தம்) நெஞ்சத்தை நிராகரிப்பைக் கொண்டு விரிவடையச் செய்கிறாரோ - அவர்கள் மீது அல்லாஹ்விடமிருந்துள்ள கோபம் உண்டாகும்; இன்னும், அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
16:107 ذٰ لِكَ بِاَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَيٰوةَ الدُّنْيَا عَلَى الْاٰخِرَةِ ۙ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ
ذٰ لِكَ அது بِاَنَّهُمُ காரணம்/நிச்சயமாகஅவர்கள் اسْتَحَبُّوا விரும்பினார்கள் الْحَيٰوةَ வாழ்வை الدُّنْيَا உலகம் عَلَى الْاٰخِرَةِ ۙ மறுமையை விட وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الْكٰفِرِيْنَ நிராகரிக்கின்றவர்கள்
16:107. தாலிக Bபி அன்னஹுமுஸ் தஹBப்Bபுல் ஹயாதத் துன்யா 'அலல் ஆகிரதி வ அன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
16:107. அது (ஏனென்றால்), நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசித்தார்கள் என்ற காரணத்தினாலும் - மேலும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான் என்ற காரணத்தினாலும் ஆகும்.
16:108 اُولٰۤٮِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْۚ وَاُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
اُولٰۤٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் طَبَعَ முத்திரையிட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது وَسَمْعِهِمْ இன்னும் செவிகள்/ அவர்களின் وَاَبْصَارِ இன்னும் பார்வைகள் هِمْۚ அவர்களின் وَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْغٰفِلُوْنَ உணராதவர்கள், கவனமற்றவர்கள்
16:108. உலா'இகல் லதீன தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் வ ஸம்'இஹிம் வ அBப்ஸாரிஹிம் வ உலா'இக ஹுமுல் காFபிலூன்
16:108. அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான்; இவர்கள்தாம் (தம் இறுதி பற்றி) அலட்சியமாக இருப்பவர்கள்.
16:109 لَا جَرَمَ اَنَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْخٰسِرُوْنَ
لَا جَرَمَ சந்தேகமின்றி اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِى الْاٰخِرَةِ மறுமையில் هُمُ الْخٰسِرُوْنَ நஷ்டவாளிகள்தான்
16:109. லா ஜரம அன்ன்னஹும் Fபில் ஆகிரதி ஹுமுல் காஸிரூன்
16:109. இவர்கள்தாம் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
16:110 ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ هَاجَرُوْا مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا ثُمَّ جٰهَدُوْا وَصَبَرُوْۤا ۙ اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ
ثُمَّ பிறகு اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لِلَّذِيْنَ எவர்களுக்கு هَاجَرُوْا நாடு துறந்தார்கள் مِنْۢ بَعْدِ مَا فُتِنُوْا அவர்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு ثُمَّ பிறகு جٰهَدُوْا போர் புரிந்தனர் وَصَبَرُوْۤا ۙ இன்னும் சகித்தனர் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் مِنْۢ بَعْدِ பின்பு هَا இவற்றுக்கு لَغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மிகக் கருணையாளன்
16:110. தும்ம இன்ன ரBப்Bபக லில்லதீன ஹாஜரூ மிம் Bபஃதிமா Fபுதினூ தும்ம்ம ஜாஹதூ வ ஸBபரூ இன்ன ரBப்Bபக மிம் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
16:110. இன்னும், எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கு(ம்) உட்படுத்தப்பட்ட பின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ) பின்பு, அறப்போர் புரிந்தார்களோ, இன்னும் - பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
16:111 يَوْمَ تَاْتِىْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ
يَوْمَ நாளில் تَاْتِىْ வரும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா تُجَادِلُ தர்க்கித்ததாக عَنْ نَّفْسِهَا தன்னைப் பற்றி وَتُوَفّٰى இன்னும் முழு கூலி கொடுக்கப்படும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா مَّا எதற்கு عَمِلَتْ செய்தது وَهُمْ لَا يُظْلَمُوْنَ இன்னும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்
16:111. யவ்ம தாதீ குல்லு னFப்ஸின் துஜாதிலு 'அன் னFப்ஸிஹா வ துவFப்Fபா குல்லு னFப்ஸிம் மா 'அமிலத் வ ஹும் லா யுள்லமூன்
16:111. ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும்; அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
16:112 وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَٮِٕنَّةً يَّاْتِيْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُـوْعِ وَالْخَـوْفِ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ
وَضَرَبَ விவரிக்கிறான், கூறுகிறான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا உதாரணமாக قَرْيَةً ஓர் ஊரை كَانَتْ இருந்தது اٰمِنَةً அச்சமற்றதாக مُّطْمَٮِٕنَّةً நிம்மதி பெற்றதாக يَّاْتِيْهَا வந்தது/அதற்கு رِزْقُهَا வாழ்வாதாரம் رَغَدًا தாராளமாக مِّنْ இருந்து كُلِّ எல்லாம் مَكَانٍ இடம் فَكَفَرَتْ ஆகஅதுநிராகரித்தது بِاَنْعُمِ அருட்கொடைகளை اللّٰهِ அல்லாஹ்வுடைய فَاَذَاقَهَا சுவைக்கச் செய்தான்/அதற்கு اللّٰهُ அல்லாஹ் لِبَاسَ ஆடையை الْجُـوْعِ பசியின் وَالْخَـوْفِ இன்னும் பயம் بِمَا كَانُوْا அவர்கள் இருந்ததின்காரணமாக يَصْنَعُوْنَ செய்வார்கள்
16:112. வ ளரBபல் லாஹு மதலன் கர்யதன் கானத் ஆமினதம் முத்ம'இன்னத(ன்)ய் யாதீஹா ரிZஜ்குஹா ரகதம் மின் குல்லி மகானின் FபகFபரத் Bபி அன்'உமில் லாஹி Fப அதாகஹல் லாஹு லிBபாஸல் ஜூ'இ வல்கவ்Fபி Bபிமா கானூ யஸ்ன'ஊன்
16:112. மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது; அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கைப் பொருட்கள் யாவும்) ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்துகொண்டிருந்தன; ஆனால், அது (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு (நன்றிசெலுத்தாமல்) மாறு செய்தது; ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த (தீச்)செயல்களின் காரணமாக, பசி மற்றும் பயம் என்னும் ஆடையை அல்லாஹ் அதற்கு (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.
16:113 وَلَـقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ
وَلَـقَدْ திட்டவட்டமாக جَآءَ வந்தார் هُمْ அவர்களிடம் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْهُمْ அவர்களிலிருந்தே فَكَذَّبُوْهُ அவர்கள் பொய்ப்பித்தனர்/அவரை فَاَخَذَ பிடித்தது هُمُ அவர்களை الْعَذَابُ வேதனை وَهُمْ அவர்கள் இருக்கின்ற நிலையில் ظٰلِمُوْنَ அநியாயக்காரர்களாக
16:113. வ லகத் ஜா'அஹும் ரஸூலும் மின்ஹும் Fபகத்தBபூஹு Fப அகதஹுமுல் 'அதாBபு வ ஹும் ளாலிமூன்
16:113. இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறைத்) தூதர் வந்தார்; ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செய்தவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது.
16:114 فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْـتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ
فَكُلُوْا புசியுங்கள் مِمَّا எவற்றிலிருந்து رَزَقَكُمُ அளித்தான்/ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் حَلٰلًا ஆகுமானதை طَيِّبًا நல்லதை وَّاشْكُرُوْا இன்னும் நன்றி செலுத்துங்கள் نِعْمَتَ அருட் கொடைகளுக்கு اللّٰهِ அல்லாஹ்வின் اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் اِيَّاهُ அவனையே تَعْبُدُوْنَ வணங்குவீர்கள்
16:114. Fபகுலூ மிம்மா ரZஜக குமுல் லாஹு ஹலாலன் தய்யிBப(ன்)வ் வஷ்குரூ னிஃமதல் லாஹி இன் குன்தும் இய்யாஹு தஃBபுதூன்
16:114. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஆகுமான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்.
16:115 اِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَ الدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
اِنَّمَا حَرَّمَ அவன் தடுத்ததெல்லாம் عَلَيْكُمُ உங்கள் மீது الْمَيْتَةَ செத்ததை وَ الدَّمَ இன்னும் இரத்தம் وَلَحْمَ இன்னும் மாமிசம் الْخِنْزِيْرِ பன்றியின் وَمَاۤ اُهِلَّ இன்னும் பெயர் கூறப்பட்டவை لِغَيْرِ அல்லாதவற்றின் اللّٰهِ அல்லாஹ் بِهٖۚ அதை فَمَنِ எவர் اضْطُرَّ நிர்பந்தத்திற்குள்ளானார் غَيْرَ بَاغٍ நாடியவராக அல்லாமல் وَّلَا عَادٍ மீறியவராகஅல்லாமல் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மிகக் கருணையாளன்
16:115. இன்னமா ஹரம 'அலய் குமுல் மய்தத வத்தம வ லஹ்மல் கின்Zஜீரி வ மா உஹில்ல லிகய்ரில் லாஹி Bபிஹீ Fபமனிள் துர்ர கய்ர Bபாகி(ன்)வ் வலா 'ஆதின் Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
16:115. (நீங்கள் புசிக்கக் கூடாது என்று) உங்களுக்கு அவன் தடுத்திருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும், எதன்மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதோ அதுவுமேயாகும்; ஆனால், எவரேனும் வரம்பைமீறவேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம்செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
16:116 وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَـتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّـتَفْتَرُوْا عَلَى اللّٰهِ الْكَذِبَؕ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ
وَلَا تَقُوْلُوْا கூறாதீர்கள் لِمَا எதற்கு تَصِفُ வருணிக்கும் اَلْسِنَـتُكُمُ உங்கள் நாவுகள் الْكَذِبَ பொய்யை هٰذَا இது حَلٰلٌ (ஹலால்) ஆகுமானது وَّهٰذَا இன்னும் இது حَرَامٌ (ஹராம்) ஆகாதது لِّـتَفْتَرُوْا நீங்கள் இட்டுக்கட்டுவதற்காக عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் الْكَذِبَؕ பொய்யை اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுகிறார்கள் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய்யை لَا يُفْلِحُوْنَؕ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்
16:116. வ லா தகூலூ லிமா தஸிFபு அல்ஸினதுகுமுல் கதிBப ஹாத ஹலாலு(ன்)வ் வ ஹாதா ஹராமுல் லிதFப்தரூ 'அலல் லாஹில் கதிBப்; இன்னல் லதீன யFப்தரூன 'அலல் லாஹில் கதிBப லா யுFப்லிஹூன்
16:116. அல்லாஹ்வின் மீது பொய்யை நீங்கள் கற்பனைச் செய்வதற்காக உங்களுடைய நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை "இது அனுமதிக்கப்பட்டது (ஹலால்), இது தடுக்கப்பட்டது (ஹராம்)" என்பதாக நீங்கள் கூறவேண்டாம்; நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடையமாட்டார்கள்.
16:117 مَتَاعٌ قَلِيْلٌ وَّلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
مَتَاعٌ சுகம் قَلِيْلٌ சொற்பமானது وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌ துன்புறுத்தக் கூடியது
16:117. மதா'உன் கலீலு(ன்)வ் வ லஹும் 'அதாBபுன் அலீம்
16:117. (இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம்தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
16:118 وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِنْ قَبْلُۚ وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
وَعَلَى الَّذِيْنَ هَادُوْا மீது / யூதர்களாக இருப்பவர்கள் حَرَّمْنَا தடுத்தோம் مَا எவற்றை قَصَصْنَا விவரித்தோம் عَلَيْكَ உமக்கு مِنْ قَبْلُۚ (இதற்கு) முன்னர் وَمَا நாம் தீங்கிழைக்கவில்லை ظَلَمْنٰهُمْ அவர்களுக்கு وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ தீங்கிழைப்பவர்களாக
16:118. வ 'அலல் லதீன ஹாதூ ஹர்ரம்னா ம கஸஸ்னா 'அலய்க மின் கBப்லு வமா ளலமனாஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
16:118. இன்னும், இதற்கு முன்னர் நாம் உங்களுக்கு விவரித்தவைகளை யூதர்களுக்குத் தடுத்து விட்டோம்: (எனினும்,) நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை; ஆனால், அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
16:119 ثُمَّ اِنَّ رَبَّكَ لِلَّذِيْنَ عَمِلُوا السُّوْۤءَ بِجَهَالَةٍ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰ لِكَ وَاَصْلَحُوْۤا ۙ اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ
ثُمَّ பிறகு اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لِلَّذِيْنَ எவர்களுக்கு عَمِلُوا செய்தனர் السُّوْۤءَ கெட்டதை بِجَهَالَةٍ அறியாமையின் காரணமாக ثُمَّ பிறகு تَابُوْا திருந்தி விலகி மன்னிப்புக் கேட்டனர் مِنْۢ بَعْدِ ذٰ لِكَ அதற்கு பின்னர் وَاَصْلَحُوْۤا ۙ இன்னும் சீர்படுத்தினார்கள் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் مِنْۢ بَعْدِهَا அதற்குப் பின்பு لَغَفُوْرٌ மகா மன்னிப்பாளன்தான் رَّحِيْمٌ மிகக் கருணையாளன்
16:119. தும்ம்ம இன்ன ரBப்Bபக லில்லதீன 'அமிலுஸ் ஸூ'அ Bபிஜஹாலதின் தும்ம தாBபூ மிம் Bபஃதி தாலிக வ அஸ்லஹூ இன்ன ரBப்Bபக மிம் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
16:119. பிறகு, நிச்சயமாக உம் இறைவன், எவர்கள் அறியாமையினால் தீமைசெய்து, அதற்குப் பின்னர் (அவற்றிலிருந்து விலகி) பாவமன்னிப்புக்கோரி, தங்களை சீர்திருத்திக்கொள்கிறார்களோ அவர்களுக்(கு மன்னிப்பதற்)காகவே இருக்கிறான்; நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
16:120 اِنَّ اِبْرٰهِيْمَ كَانَ اُمَّةً قَانِتًا لِّلّٰهِ حَنِيْفًاؕ وَلَمْ يَكُ مِنَ الْمُشْرِكِيْنَۙ
اِنَّ اِبْرٰهِيْمَ நிச்சயமாக இப்றாஹீம் كَانَ இருந்தார் اُمَّةً நன்மையை போதிப்பவராக قَانِتًا மிக பணிந்தவராக لِّلّٰهِ அல்லாஹ்வுக்கு حَنِيْفًاؕ கொள்கை உறுதியுடையவராக وَلَمْ يَكُ அவர் இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَۙ இணைவைப்பவர்களில்
16:120. இன்ன இBப்ராஹீம கான உம்மதன் கானிதல் லில்லாஹி ஹனீFப(ன்)வ் வ லம் யகுமினல் முஷ்ரிகீன்
16:120. நிச்சயமாக இப்ராஹீம் ஒரு தலைவராகவும், அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும், சத்திய வழியைச் சார்ந்தவராகவும் இருந்தார். மேலும், அவர் இணைவைப்போரில் ஒருவராக இருக்கவில்லை.
16:121 شَاكِرًا لِّاَنْعُمِهِؕ اِجْتَبٰٮهُ وَهَدٰٮهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
شَاكِرًا நன்றிசெலுத்துபவராக لِّاَنْعُمِهِؕ அவனுடைய அருட்கொடைகளுக்கு اِجْتَبٰٮهُ தேர்ந்தெடுத்தான்/அவரை وَهَدٰٮهُ இன்னும் நேர்வழி செலுத்தினான்/அவரை اِلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍ நேரான
16:121. ஷாகிரல் லி அன்'உமிஹ்; இஜ்தBபாஹு வ ஹதாஹு இலா ஸிராதிம் முஸ்தகீம்
16:121. (அன்றியும்,) அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அவன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும், அவரை நேரான பாதையில் செலுத்தினான்.
16:122 وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً ؕ وَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَؕ
وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் فِى الدُّنْيَا இவ்வுலகில் حَسَنَةً ؕ உயர்வை وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் لَمِنَ الصّٰلِحِيْنَؕ நல்லவர்களில்
16:122. வ ஆதய்னாஹு Fபித் துன்யா ஹஸனஹ்; வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
16:122. மேலும், நாம் அவருக்கு இவ்வுலகத்தில் நன்மையானதையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் நல்லவர்களில் ஒருவராக இருப்பார்.
16:123 ثُمَّ اَوْحَيْنَاۤ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ
ثُمَّ பிறகு اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு اَنِ என்று اتَّبِعْ பின்பற்று مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் حَنِيْفًا ؕ கொள்கை உறுதியுடையவராக وَمَا كَانَ (அவர்) இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில்
16:123. தும்ம்ம அவ்ஹய்னா இலய்க அனித் தBபிஃ மில்லத இBப்ராஹீம ஹனீFபா; வமா கான மினல் முஷ்ரிகீன்
16:123. (நபியே!) பின்னர், "சத்திய வழியைச் சார்ந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு 'வஹீ' அறிவித்தோம்; அவர் இணைவைப்போரில் ஒருவராக இருந்ததில்லை.
16:124 اِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَى الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْهِؕ وَاِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ
اِنَّمَا جُعِلَ ஆக்கப்பட்டதெல்லாம் السَّبْتُ சனிக்கிழமை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் اخْتَلَفُوْا முரண்பட்டனர் (தர்க்கித்தனர்) فِيْهِؕ அதில் وَاِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لَيَحْكُمُ திட்டமாக தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கிடையில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فِيْمَا எதில் كَانُوْا இருந்தனர் فِيْهِ அதில் يَخْتَلِفُوْنَ முரண்படுவார்கள்
16:124. இன்ன்னமா ஜு'இலஸ் ஸBப்து 'அலல் லதீனக்தலFபூ Fபீஹ்; வ இன்ன ரBப்Bபக ல யஹ்குமு Bபய்னஹும் யவ்மல் கியாமதி Fபீமா கானூ Fபீஹி யக்தலிFபூன்
16:124. சனிக்கிழமை (ஓய்வுநாள்) என்று ஏற்படுத்தப்பட்டதெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான்; நிச்சயமாக உம் இறைவன் மறுமைநாளில், அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவைபற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.
16:125 اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
اُدْعُ அழைப்பீராக اِلٰى பக்கம் سَبِيْلِ பாதை رَبِّكَ உம் இறைவனுடைய بِالْحِكْمَةِ ஞானத்தைக்கொண்டு وَالْمَوْعِظَةِ இன்னும் உபதேசம் الْحَسَنَةِ அழகியது وَجَادِلْهُمْ இன்னும் தர்க்கிப்பீராக/அவர்களிடம் بِالَّتِىْ எதைக் கொண்டு هِىَ அது اَحْسَنُؕ மிக அழகியது اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَنْ எவரை ضَلَّ வழிதவறினார் عَنْ سَبِيْلِهٖ அவனுடைய பாதையிலிருந்து وَهُوَ இன்னும் அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ நேர்வழி செல்வோரை
16:125. உத்'உ இலா ஸBபீலி ரBப்Bபிக Bபில்ஹிக்மதி வல்மவ் 'இளதில் ஹஸனதி வ ஜாதில்ஹும் Bபில்லதீ ஹிய அஹ்ஸன்; இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
16:125. (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களை நன்கு அறிந்தவன்; இன்னும், அவன் நேர்வழி பெற்றவர்களையும் நன்கறிந்தவன்.
16:126 وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖۚ وَلَٮِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ
وَاِنْ عَاقَبْتُمْ நீங்கள் தண்டித்தால் فَعَاقِبُوْا தண்டியுங்கள் بِمِثْلِ போன்று مَا عُوْقِبْتُمْ நீங்கள் தண்டிக்கப்பட்டது بِهٖۚ அதில் وَلَٮِٕنْ صَبَرْتُمْ திட்டமாக நீங்கள் பொறுத்தால் لَهُوَ அதுதான் خَيْرٌ மிக நல்லது لِّلصّٰبِرِيْنَ பொறுமையாளர் களுக்கு
16:126. வ இன் 'ஆகBப்தும் Fப'ஆகிBபூ Bபிமித்லி மா 'ஊகிBப்தும் Bபிஹீ வ ல'இன் ஸBபர்தும் லஹுவ கய்ருல் லிஸ்ஸாBபிரீன்
16:126. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால், எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ, அதுபோன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள்; நீங்கள் பொறுத்துக்கொண்டால் நிச்சயமாக அதுவே பொறுமையாளர்களுக்கு மிக்க மேன்மையானதாகும்.
16:127 وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِىْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ
وَاصْبِرْ பொறுப்பீராக وَمَا இல்லை صَبْرُكَ உம் பொறுமை اِلَّا தவிர بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டே وَلَا تَحْزَنْ இன்னும் கவலைப்படாதீர் عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا تَكُ இன்னும் ஆகாதீர் فِىْ ضَيْقٍ நெருக்கடியில் مِّمَّا எதைப் பற்றி يَمْكُرُوْنَ சூழ்ச்சி செய்வார்கள்
16:127. வஸ்Bபிர் வமா ஸBப்ருக இல்லா Bபில்லாஹ்; வலா தஹ்Zஜன் 'அலய்ஹிம் வலா தகு Fபீ ளய்கிம் மிம்மா யம்குரூன்
16:127. (நபியே!) இன்னும், நீர் பொறுமையுடன் இருப்பீராக! எனினும், நீர் பொறுமையுடன் இருப்பது அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை; அவர்களுக்காக நீர் கவலைப்படவும் வேண்டாம்; அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீர் (மன)நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.
16:128 اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَعَ உடன் الَّذِيْنَ எவர்கள் اتَّقَوْا அஞ்சினார்கள் وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் مُّحْسِنُوْنَ நல்லறம் புரிபவர்கள்
16:128. இன்னல் லாஹ ம'அல் லதீனத் தகவ் வல் லதீன ஹும் முஹ்ஸினூன்
16:128. நிச்சயமாக எவர்கள் இறையச்சமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கின்றான்.