டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 5. ஸூரத்துல் மாயிதா(ஆகாரம்) (உணவு மரவை)
மதனீ, வசனங்கள்: 120
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
5:1 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَوْفُوْا بِالْعُقُوْدِ ؕ اُحِلَّتْ لَـكُمْ بَهِيْمَةُ الْاَنْعَامِ اِلَّا مَا يُتْلٰى عَلَيْكُمْ غَيْرَ مُحِلِّى الصَّيْدِ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ اِنَّ اللّٰهَ يَحْكُمُ مَا يُرِيْدُ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَوْفُوْا நிறைவேற்றுங்கள் بِالْعُقُوْدِ ؕ உடன்படிக்கைகளை اُحِلَّتْ ஆகுமாக்கப்பட்டன لَـكُمْ உங்களுக்கு بَهِيْمَةُ الْاَنْعَامِ கால்நடைகள் اِلَّا தவிர مَا எவை يُتْلٰى ஓதிக்காட்டப்படுகிறது عَلَيْكُمْ உங்கள் மீது غَيْرَ مُحِلِّى ஆகுமாக்காதீர்கள் الصَّيْدِ வேட்டையாடுவதை وَاَنْـتُمْ நீங்கள் حُرُمٌ ؕ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَحْكُمُ சட்டமாக்குகிறான் مَا எதை يُرِيْدُ நாடுகிறான்
5:1. யா அய்யுஹல் லதீன ஆமனூ அவ்Fபூ Bபில்'உகூத்; உஹில்லத் லகும் Bபஹீமதுல் அன்'ஆமி இல்லா மா யுத்லா 'அலய்கும் கய்ர முஹில்லிஸ் ஸய்தி வ அன்தும் ஹுரும்; இன்னல் லாஹ யஹ்குமு மா யுரீத்
5:1. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் செய்துகொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள்மீது ஓதிக்காட்டப்படுகின்றவற்றைத் தவிர (மற்ற ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப்பட்டுள்ளன; ஆனால், நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவதை ஆகுமாக்கிக் கொள்ளாதவர்களாக (இருக்கவேண்டும்); நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.
5:2 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآٮِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَـرَامَ وَلَا الْهَدْىَ وَلَا الْقَلَٓاٮِٕدَ وَلَاۤ آٰمِّيْنَ الْبَيْتَ الْحَـرَامَ يَبْـتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تُحِلُّوْا ஆகுமாக்காதீர்கள் شَعَآٮِٕرَ அடையாளங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا الشَّهْرَ இன்னும் மாதத்தை الْحَـرَامَ புனிதமானது وَلَا الْهَدْىَ இன்னும் குர்பானியை وَلَا الْقَلَٓاٮِٕدَ இன்னும் மாலையிடப்பட்ட குர்பானிகளை وَلَاۤ آٰمِّيْنَ இன்னும் நாடுபவர்களை الْبَيْتَ (கஅபா)ஆலயத்தை الْحَـرَامَ புனிதமானது يَبْـتَغُوْنَ தேடியவர்களாக فَضْلًا அருளை مِّنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து وَرِضْوَانًا ؕ இன்னும் பொருத்தத்தை وَاِذَا حَلَلْتُمْ நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் فَاصْطَادُوْا ؕ வேட்டையாடுங்கள் وَلَا يَجْرِمَنَّكُمْ உங்களை தூண்ட வேண்டாம் شَنَاٰنُ துவேஷம் قَوْمٍ சமுதாயத்தின் اَنْ صَدُّو அவர்களை தடுத்த காரணத்தால் كُمْ உங்களை عَنِ الْمَسْجِدِ மஸ்ஜிதை விட்டு الْحَـرَامِ புனிதமானது اَنْ تَعْتَدُوْا ۘ நீங்கள் வரம்புமீறுவது وَتَعَاوَنُوْا ஒருவருக்கொருவர் உதவுங்கள் عَلَى الْبِرِّ நன்மைக்கு وَالتَّقْوٰى இன்னும் இறையச்சம் وَلَا تَعَاوَنُوْا ஒருவருக்கொருவர் உதவாதீர்கள் عَلَى الْاِثْمِ பாவத்திற்கு وَالْعُدْوَانِ இன்னும் அநியாயம் وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ தண்டனை
5:2. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹில்லூ ஷ'ஆ 'இரல் லாஹி வ லஷ் ஷஹ்ரல் ஹராம வ லல் ஹத்ய வ லல் கலா'இத வலா ஆம்மீனல் Bபய்தல் ஹராம யBப்தகூன Fபள்லம் மிர் ரBப்Bபிஹிம் வ ரிள்வானா; வ இதா ஹலல்தும் Fபஸ்தாதூ; வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் அன் ஸத்தூகும் 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி அன் தஃததூ; வ த'ஆவனூ 'அலல்Bபிர்ரி வத்தக்வா; வலா த'ஆவனூ 'அலல் இத்மி வல்'உத்வான்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
5:2. நம்பிக்கையாளர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் (மார்க்க) அடையாளங்களையும், புனிதமான (எந்த) மாதத்தையும், பலிப்பிராணியையும், (அதற்காக கழுத்தில்) அடையாளம் கட்டப்பட்டவற்றையும் தங்களுடைய இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் நாடி (கஃபா எனும்) புனிதமிக்க (அவனுடைய) ஆலயத்தை நாடிச்செல்வோரையும் (-தாக்குவதையோ, அவமதிப்பதையோ) நீங்கள் ஆகுமாக்கிக்கொள்ளாதீர்கள்; நீங்கள் இஹ்ராமைக் களைந்துவிட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம்; மேலும், (கஃபா எனும்) மஸ்ஜிதுல் ஹராமைவிட்டும் உங்களைத்தடுத்த கூட்டத்தினர் மீதுள்ள பகைமையானது, நீங்கள் வரம்புமீறுமாறு உங்களைத் தூண்டிவிடவேண்டாம்; இன்னும், நன்மையிலும், இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளவேண்டாம்; அல்லாஹ்வை நீங்கள் பயந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்.
5:3 حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيْرِ وَمَاۤ اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوْذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيْحَةُ وَمَاۤ اَكَلَ السَّبُعُ اِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُ بِحَ عَلَى النُّصُبِ وَاَنْ تَسْتَقْسِمُوْا بِالْاَزْلَامِ ؕ ذٰ لِكُمْ فِسْقٌ ؕ اَلْيَوْمَ يَٮِٕسَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ دِيْـنِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ؕ اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا ؕ فَمَنِ اضْطُرَّ فِىْ مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّاِثْمٍۙ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
حُرِّمَتْ விலக்கப்பட்டன عَلَيْكُمُ உங்களுக்கு الْمَيْتَةُ செத்தது وَالدَّمُ இன்னும் இரத்தம் وَلَحْمُ இன்னும் இறைச்சி الْخِنْزِيْرِ பன்றி وَمَاۤ இன்னும் எது اُهِلَّ பெயர் கூறப்பட்டது لِغَيْرِ அல்லாதவற்றிற்காக اللّٰهِ அல்லாஹ் بِهٖ அதை وَالْمُنْخَنِقَةُ இன்னும் கழுத்து நெருக்கிச் செத்தது وَالْمَوْقُوْذَةُ இன்னும் அடிப்பட்டுச் செத்தது وَالْمُتَرَدِّيَةُ இன்னும் விழுந்து செத்தது وَالنَّطِيْحَةُ இன்னும் கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது وَمَاۤ இன்னும் எதை اَكَلَ தின்றது السَّبُعُ மிருகங்கள் اِلَّا தவிர مَا எதை ذَكَّيْتُمْ அறுத்தீர்கள் وَمَا ذُ بِحَ இன்னும் எது/அறுக்கப்பட்டது عَلَى மீது النُّصُبِ நடப்பட்டவை, சிலைகள் وَاَنْ تَسْتَقْسِمُوْا இன்னும் பாகம் பிரித்துக் கொள்வது بِالْاَزْلَامِ ؕ அம்புகளைக்கொண்டு ذٰ لِكُمْ இவை فِسْقٌ ؕ اَلْيَوْمَ பாவம்/இன்று يَٮِٕسَ நம்பிக்கை இழந்தனர் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْ விட்டு دِيْـنِكُمْ உங்கள் மார்க்கம் فَلَا تَخْشَو ஆகவே பயப்படாதீர்கள் هُمْ அவர்களை وَاخْشَوْنِ ؕ என்னை பயப்படுங்கள் اَ لْيَوْمَ இன்று اَكْمَلْتُ முழுமையாக்கினேன் لَـكُمْ உங்களுக்கு دِيْنَكُمْ உங்கள் மார்க்கத்தை وَاَ تْمَمْتُ இன்னும் முழுமையாக்கினேன் عَلَيْكُمْ உங்கள் மீது نِعْمَتِىْ என் அருளை وَرَضِيْتُ இன்னும் திருப்தியடைந்தேன் لَـكُمُ உங்களுக்கு الْاِسْلَامَ இஸ்லாமை دِيْنًا ؕ மார்க்கமாக فَمَنِ ஆகவே எவர் اضْطُرَّ நிர்ப்பந்திக்கப்பட்டார் فِىْ مَخْمَصَةٍ கடுமையான பசியில் غَيْرَ مُتَجَانِفٍ சாயாதவராக لِّاِثْمٍۙ பாவத்தின் பக்கம் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ மகா கருணையாளன்
5:3. ஹுர்ரிமத் 'அலய்குமுல் மய்தது வத்தமு வ லஹ்முல் கின்Zஜீரி வ மா உஹில்ல லிகிரில் லாஹி Bபிஹீ வல்முன் கனி கது வல் மவ்கூதது வல் முதரத் தியது வன்ன தீஹது வ மா அகலஸ் ஸBபு'உ இல்லா மா தக்கய்தும் வமா துBபிஹ 'அலன் னுஸுBபி வ அன் தஸ்தக்ஸிமூ Bபில் அZஜ்லாம்; தாலிகும் Fபிஸ்க்; அல்யவ்ம ய'இஸல் லதீன கFபரூ மின் தீனிகும் Fபலா தக்-ஷவ்ஹும் வக் ஷவ்ன்; அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து 'அலய்கும் னிஃமதீ வ ரளீது லகுமுல் இஸ்லாம தீனா; Fபமனிள்துர்ர Fபீ மக்மஸதின் கய்ர முதஜானிFபில் லி இத்மின் Fப இன்னல்லாஹ கFபூருர் ரஹீம்
5:3. (தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்டதும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழேவிழுந்து செத்ததும், கொம்பால் முட்டப்பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள்மீது விலக்கப்பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து முறைப்படி) அறுத்தீர்களோ அதைத்தவிர; (அதை உண்ணலாம்; அன்றியும், பிற வணக்கம் செய்வதற்காக) சின்னங்கள் வைக்கப்பட்ட இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன); - இவையாவும் (பெரும்) பாவமாகும்; இன்றைய தினம் நிராகரிப்போர் உங்களுடைய மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றி நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்; எனவே, நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; என்னையே அஞ்சுங்கள்; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டேன்; மேலும், உங்கள்மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாமை மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்; ஆனால், உங்களில் எவரேனும் பாவம்செய்யும் நாட்டமின்றி, பசிக்கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட, விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது); நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.
5:4 يَسْأَلُوْنَكَ مَاذَاۤ اُحِلَّ لَهُمْؕ قُلْ اُحِلَّ لَـكُمُ الطَّيِّبٰتُ ۙ وَمَا عَلَّمْتُمْ مِّنَ الْجَـوَارِحِ مُكَلِّبِيْنَ تُعَلِّمُوْنَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللّٰهُ فَكُلُوْا مِمَّاۤ اَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللّٰهِ عَلَيْهِ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ
يَسْأَلُوْنَكَ கேட்கின்றனர்/உம்மிடம் مَاذَاۤ எவை اُحِلَّ ஆகுமாக்கப்பட்டன لَهُمْؕ அவர்களுக்கு قُلْ கூறுவீராக اُحِلَّ ஆகுமாக்கப்பட்டன لَـكُمُ உங்களுக்கு الطَّيِّبٰتُ ۙ நல்லவை وَمَا இன்னும் எவை عَلَّمْتُمْ கற்றுக் கொடுத்தீர்கள் مِّنَ الْجَـوَارِحِ மிருகங்களில் مُكَلِّبِيْنَ வேட்டையாட பயிற்சி அளியுங்கள் تُعَلِّمُوْنَهُنَّ கற்று கொடுங்கள்/அவற்றுக்கு مِمَّا எவற்றிலிருந்து عَلَّمَكُمُ கற்பித்தான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் فَكُلُوْا ஆகவே புசியுங்கள் مِمَّاۤ எவற்றிலிருந்து اَمْسَكْنَ அவை தடுத்தன عَلَيْكُمْ உங்களுக்காக وَاذْكُرُوا இன்னும் கூறுங்கள் اسْمَ பெயரை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْهِ அவற்றின் மீது وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ தீவிரமானவன் الْحِسَابِ கணக்கிடுவதில்
5:4. யஸ்'அலூனக மாதா உஹில்ல லஹும்; குல் உஹில்ல லகுமுத்தய்யிBபாது வ மா'அல்லம்தும் மினல் ஜவாரிஹி முகல்லிBபீன து'அல்லிமூனஹுன்னமிம்மா 'அல்லமகுமுல் லாஹு Fபகுலூ மிம்மா அம்ஸக்ன 'அலய்கும் வத்குருஸ் மல் லாஹி 'அலய்ஹ்; வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
5:4. (நபியே!) அவர்கள் (உண்பதற்குத்) தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவை எவை? என்று உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: நல்லவைகள் - அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து (வேட்டைப் பிராணிகளாகிய) அவற்றிற்கு நீங்கள் கற்றுக்கொடுத்துப் பயிற்றுவித்தவர்களாக இருக்கும் நிலையில், வேட்டைப்பிராணிகளில் நீங்கள் பழக்கப்படுத்தியவை (வேட்டையாடியவை)யும் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன; அவை (தாம் தின்னாமல்) தடுத்துக்கொண்டவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள்; எனினும், நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறிவிடுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.
5:5 اَلْيَوْمَ اُحِلَّ لَـكُمُ الطَّيِّبٰتُ ؕ وَطَعَامُ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ حِلٌّ لَّـکُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ وَالْمُحْصَنٰتُ مِنَ الْمُؤْمِنٰتِ وَالْمُحْصَنٰتُ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْـكِتٰبَ مِنْ قَبْلِكُمْ اِذَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ مُحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ وَلَا مُتَّخِذِىْۤ اَخْدَانٍؕ وَمَنْ يَّكْفُرْ بِالْاِيْمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهٗ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ
اَلْيَوْمَ இன்று اُحِلَّ ஆகுமாக்கப்பட்டன لَـكُمُ உங்களுக்கு الطَّيِّبٰتُ ؕ நல்லவை وَطَعَامُ இன்னும் உணவும் الَّذِيْنَ எவர்களின் اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் حِلٌّ ஆகுமானது لَّـکُمْ உங்களுக்கு وَطَعَامُكُمْ இன்னும் உங்கள் உணவு حِلٌّ ஆகுமானது لَّهُمْ அவர்களுக்கு وَالْمُحْصَنٰتُ கற்புள்ள பெண்கள் مِنَ இருந்து الْمُؤْمِنٰتِ ஈமான் கொண்ட பெண்கள் وَالْمُحْصَنٰتُ இன்னும் கற்புள்ள பெண்கள் مِنَ الَّذِيْنَ எவர்களில் اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْـكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ உங்களுக்குமுன்னர் اِذَاۤ اٰتَيْتُمُو நீங்கள்கொடுத்தால் هُنَّ அவர்களுக்கு اُجُوْر மணக்கொடைகளை هُنَّ அவர்களுடைய مُحْصِنِيْنَ கற்புள்ளவர்களாக غَيْرَ அன்றி مُسَافِحِيْنَ விபச்சாரர்களாக وَلَا مُتَّخِذِىْۤ இன்னும் ஆக்காதவர்களாக اَخْدَانٍؕ இரகசிய தோழிகளை وَمَنْ எவர் يَّكْفُرْ மறுக்கிறார் بِالْاِيْمَانِ நம்பிக்கை கொள்ள فَقَدْ திட்டமாக حَبِطَ அழிந்து விடும் عَمَلُهٗ அவருடைய செயல் وَهُوَ அவர் فِى الْاٰخِرَةِ மறுமையில் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
5:5. அல்யவ்ம உஹில்ல லகுமுத் தய்யிBபாது வ த'ஆமுல் லதீன ஊதுல் கிதாBப ஹில்லுல் லகும் வ த'ஆமுகும் ஹில்லுல் லஹும் வல் முஹ்ஸனாது மினல் மு'மினாதி வல்முஹ்ஸனாது மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் இதா ஆதய்துமூஹுன்ன உஜூரஹுன்ன முஹ்ஸினீன கய்ர முஸாFபிஹீன வலா முத்தகிதீ அக்தான்; வ மய் யக்Fபுர் Bபில் ஈமானி Fபகத் ஹBபித 'அமலுஹூ வ ஹுவ Fபில் ஆகிரதி மினல் காஸிரீன்
5:5. இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) நல்லவைகள் ஆகுமாக்கப்பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஆகுமானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே; நம்பிக்கை கொண்ட கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் (அப்பெண்களை நீங்கள்) திருமணம் செய்துகொள்பவர்களாக இருக்கும் நிலையில், விபசாரம் புரியாதவர்களாகவும், தவறான தொடர்பை ஆக்கிக்கொள்ளாதவர்களாகவும் அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் (அவர்களை மணமுடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது); மேலும், எவர் நம்பிக்கைகொண்ட பின்னர் நிராகரிக்கிறாரோ, அவருடைய செயல் அழிந்துபோகும்; மேலும், அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக இருப்பார்.
5:6 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا قُمْتُمْ நீங்கள் நின்றால் اِلَى الصَّلٰوةِ தொழுகைக்கு فَاغْسِلُوْا கழுகுங்கள் وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை وَاَيْدِيَكُمْ இன்னும் கைகளை/உங்கள் اِلَى வரை الْمَرَافِقِ முழங்கைகள் وَامْسَحُوْا இன்னும் தடவுங்கள் بِرُءُوْسِكُمْ உங்கள் தலைகளில் وَاَرْجُلَكُمْ இன்னும் உங்கள் கால்களை اِلَى வரை الْـكَعْبَيْنِ ؕ இரு கணுக்கால்கள் وَاِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் جُنُبًا முழுக்காளிகளாக فَاطَّهَّرُوْا ؕ நன்கு சுத்தமாகுங்கள் وَاِنْ كُنْتُمْ இன்னும் நீங்கள் இருந்தால் مَّرْضَىٰۤ நோயாளிகளாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் اَوْ அல்லது جَآءَ வந்தார் اَحَدٌ ஒருவர் مِّنْكُمْ உங்களில் مِّنَ இருந்து الْغَآٮِٕطِ மலஜல பாதை اَوْ அல்லது لٰمَسْتُمُ உறவு கொண்டீர்கள் النِّسَآءَ பெண்களுடன் فَلَمْ تَجِدُوْا பெறவில்லை مَآءً தண்ணீரை فَتَيَمَّمُوْا நாடுங்கள் صَعِيْدًا மண்ணை طَيِّبًا சுத்தமானது فَامْسَحُوْا இன்னும் தடவுங்கள் بِوُجُوْهِكُمْ முகங்களை/உங்கள் وَاَيْدِيْكُمْ இன்னும் கைகளை/உங்கள் مِّنْهُ ؕ அதில் مَا يُرِيْدُ நாடமாட்டான் اللّٰهُ அல்லாஹ் لِيَجْعَلَ ஆக்குவதற்கு عَلَيْكُمْ உங்கள் மீது مِّنْ حَرَجٍ சிரமத்தை وَّلٰـكِنْ எனினும் يُّرِيْدُ நாடுகிறான் لِيُطَهِّرَكُمْ உங்களைபரிசுத்தமாக்க وَ لِيُتِمَّ இன்னும் முழுமையாக்க نِعْمَتَهٗ தன் அருளை عَلَيْكُمْ உங்கள் மீது لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
5:6. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கும்தும் இலஸ் ஸலாதி Fபக்ஸிலூ வுஜூஹகும் வ அய்தியகும் இலல் மராFபிகி வம்ஸஹூ Bபிரு'ஊஸிகும் வ அர்ஜுலகும் இலல் கஃBபய்ன்; வ இன் குன்தும் ஜுனுBபன் Fபத்தஹ்ஹரூ; வ இன் குன்தும் மர்ளா அவ்'அலா ஸFபரின் அவ் ஜா'அ அஹதும் மின்கும் மினல் கா'இதி அவ் லாமஸ்துமுன்னிஸா'அ Fபலம் தஜிதூ மா'அன் Fபதயம்மமூ ஸ'ஈதன் தய்யிBபன் Fபம்ஸஹூ Bபிவுஜூஹிகும் வ அய்தீகும் மின்ஹ்; ம யுரீதுல் லாஹு லியஜ்'அல 'அலய்கும் மின் ஹரஜி(ன்)வ் வலாகி(ன்)ய் யுரீது லியுதஹ்ஹிரகும் வ லியுதிம்ம னிஃமதஹூ 'அலய்கும் ல'அல்லகும் தஷ்குரூன்
5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்); நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்க கடமைப்பட்டோராக) இருந்தால் (குளித்து) தூய்மையாக்கிக்கொள்ளுங்கள்; தவிர, நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்துவந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவுகொண்டு) இருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ள) நீங்கள் தண்ணீரைப் பெறாவிட்டால், சுத்தமான மண்ணை நீங்கள் நாடி (இரு கைகளால் அடித்து) அதிலிருந்து உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை; ஆனால், அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும்; இன்னும், நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள்மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.
5:7 وَاذْکُرُوْ انِعْمَةَ اللهِ عَلَیْکُمْ وَمِیْثَاقَهُ الَّذِیْ وَاثَقَکُمْ بِهۤ ۙ اِذْقُلْتُمْ سَمِعْنَا وَاَطَعْنَا وَاتَّقُوا اللهَ ؕ اِنَّ اللهَ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ
وَاذْکُرُوْ நினைவு கூறுங்கள் انِعْمَةَ அருளை اللهِ அல்லாஹ்வின் عَلَیْکُمْ உங்கள் மீது وَمِیْثَاقَهُ இன்னும் அவனுடைய உறுதிமொழியை الَّذِیْ وَاثَقَکُمْ எது/உங்களிடம் உறுதி மொழி வாங்கினான் بِهۤ ۙ அதை اِذْ போது قُلْتُمْ கூறினீர்கள் سَمِعْنَا செவிமடுத்தோம் وَاَطَعْنَا இன்னும் கீழ்ப்படிந்தோம் وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللهَ அல்லாஹ் عَلِیْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ உள்ளவற்றை الصُّدُوْرِ நெஞ்சங்களில்
5:7. வத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் வ மீதாகஹுல் லதீ வாதககும் Bபிஹீ இத் குல்தும் ஸமிஃனா வ அதஃனா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
5:7. மேலும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும், "நாங்கள் செவிமடுத்தோம், நாங்கள் (உனக்கு) வழிப்பட்டோம்" என்று நீங்கள் கூறியபொழுது - எதனைக்கொண்டு உங்களிடம் வாக்குறுதி வாங்கினானோ அத்தகைய வாக்குறுதியையும் நீங்கள் நினைவுகூருங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
5:8 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே كُوْنُوْا இருங்கள் قَوَّا امِيْنَ நிலைநின்றவர்களாக لِلّٰهِ அல்லாஹ்வுக்காக شُهَدَآءَ சாட்சி கூறுபவர்களாக بِالْقِسْطِ நீதிக்கு وَلَا يَجْرِمَنَّكُمْ உங்களை தூண்ட வேண்டாம் شَنَاٰنُ துவேஷம் قَوْمٍ ஒரு சமுதாயத்தின் عَلٰٓى மீது اَ لَّا تَعْدِلُوْا ؕ நீங்கள் நீதமாக நடக்காதிருக்க اِعْدِلُوْا நீதமாக இருங்கள் هُوَ அது اَقْرَبُ மிக நெருக்கமானது لِلتَّقْوٰى இறையச்சத்திற்கு وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிந்தவன் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
5:8. யா அய்யுஹல் லதீன ஆமானூ கூனூ கவ்வா மீன லில்லாஹி ஷுஹதா'அ Bபில்கிஸ்த், வலா யஜ்ரிமன்னகும் ஷன ஆனு கவ்மின் 'அலா அல்லா தஃதிலூ; இஃதிலூ; ஹுவ அக்ரBபு லித்தக்வா வத்தகுல் லாஹ்; இன்னல் லாஹ கBபீரும் Bபிமா தஃமலூன்
5:8. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காக நீதியைக் கொண்டு சாட்சி கூறுகிறவர்களாக (உண்மையின் மீது) நிலைத்தவர்களாக ஆகிவிடுங்கள்: ஒரு கூட்டத்தார் மீது (நீங்கள் கொண்டு)ள்ள பகைமை, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம்; நீதி செலுத்துங்கள்; இதுவே, இறையச்சத்திற்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
5:9 وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ عَظِيْمٌ
وَعَدَ வாக்களித்தான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ ۙ நற்செயல்களை لَهُمْ அவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு وَّاَجْرٌ இன்னும் கூலி عَظِيْمٌ மகத்தானது
5:9. வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் 'அளீம்
5:9. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு மன்னிப்பையும், மகத்தான (நற்) கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
5:10 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَاۤ நம் வசனங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ வாசிகள் الْجَحِيْمِ நரக
5:10. வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
5:10. எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களையும் பொய்யாக்கினார்களோ அத்தகையோர் - அவர்களே நரகவாசிகள் ஆவார்கள்.
5:11 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ يَّبْسُطُوْۤا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ فَكَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْۚ وَاتَّقُوا اللّٰهَ ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ போது هَمَّ நாடினர் قَوْمٌ ஒரு சமுதாயம் اَنْ يَّبْسُطُوْۤا அவர்கள் நீட்டுவதற்கு اِلَيْكُمْ உங்கள் பக்கம் اَيْدِيَهُمْ தங்கள் கரங்களை فَكَفَّ தடுத்தான் اَيْدِيَهُمْ அவர்களுடைய கரங்களை عَنْكُمْۚ உங்களை விட்டு وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்வை وَعَلَى اللّٰهِ அல்லாஹ் மீது فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கட்டும் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள்
5:11. யா அய்யுஹல் லதீன ஆமனுத் குரூ னிஃமதல்லாஹி 'அலய்கும் இத் ஹம்ம கவ்முன் அய் யBப்ஸுதூ இலய்கும் அய்தியஹும் FபகFப்Fப அய்தியஹும் 'அன்கும் வத்தகுல்லாஹ்; வ'அலல் லாஹி Fபல் யதவகலில் மு'மினூன்
5:11. நம்பிக்கை கொண்டோரே! ஒரு கூட்டத்தார் தம் கைகளை உங்களிடம் நீட்டி உங்களைக் கொன்றுவிடத் தீர்மானித்தபோது, அவர்கள் கைகளை உங்களைவிட்டுத் தடுத்து, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருளை நினைவு கூருங்கள்; ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், இன்னும், விசுவாசிகள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்.
5:12 وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ بَنِىْۤ اِسْرآءِيْلَۚ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَىْ عَشَرَ نَقِيْبًا ؕ وَقَالَ اللّٰهُ اِنِّىْ مَعَكُمْؕ لَٮِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَيْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِىْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَلَاُدْخِلَـنَّكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُۚ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ
وَلَقَدْ திட்டமாக اَخَذَ வாங்கினான் اللّٰهُ அல்லாஹ் مِيْثَاقَ உறுதிமொழி بَنِىْۤ اِسْرآءِيْلَۚ இஸ்ரவேலர்களின் وَبَعَثْنَا இன்னும் அனுப்பினோம் مِنْهُمُ அவர்களிலிருந்து اثْنَىْ عَشَرَ பன்னிரெண்டு نَقِيْبًا ؕ தலைவரை وَقَالَ இன்னும் கூறினான் اللّٰهُ அல்லாஹ் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْؕ உங்களுடன் لَٮِٕنْ اَقَمْتُمُ நீங்கள் நிலைநிறுத்தினால் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتَيْتُمُ இன்னும் நீங்கள் கொடுத்தீர்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَاٰمَنْتُمْ இன்னும் நம்பிக்கை கொண்டீர்கள் بِرُسُلِىْ என் தூதர்களை وَعَزَّرْتُمُوْهُمْ இன்னும் அவர்களுக்கு உதவிபுரிந்தீர்கள் وَاَقْرَضْتُمُ இன்னும் நீங்கள் கடன் கொடுத்தால் اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا கடன் حَسَنًا அழகியது لَّاُكَفِّرَنَّ நிச்சயமாக அகற்றிடுவேன் عَنْكُمْ உங்களைவிட்டு سَيِّاٰتِكُمْ உங்கள் பாவங்களை وَلَاُدْخِلَـنَّكُمْ இன்னும் நிச்சயமாக நுழைப்பேன்/உங்களை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அதன் கீழே الْاَنْهٰرُۚ நதிகள் فَمَنْ எவர் كَفَرَ நிராகரிப்பார் بَعْدَ பின்னர் ذٰ لِكَ இதற்கு مِنْكُمْ உங்களில் فَقَدْ திட்டமாக ضَلَّ வழி தவறிவிட்டார் سَوَآءَ நடு (நேரான) السَّبِيْلِ வழி
5:12. வ லகத் அகதல் லாஹு மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ Bப'அத்னா மின்ஹுமுத் னய் 'அஷர னகீBப(ன்)வ் வ காலல் லாஹு இன்னீ ம'அகும் ல'இன் அகம்துமுஸ் ஸலாத வ ஆதய்துமுZஜ் Zஜகாத வ ஆமன்தும் Bபி ருஸுலீ வ'அZஜ்Zஜர்துமூஹும் வ அக்ரள்துமுல் லாஹ கர்ளன் ஹஸனல் ல உகFப்Fபிரன்ன 'அன்கும் ஸய்யிஆதிகும் வ ல உத்கிலன் னகும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; Fபமன் கFபர Bபஃத தாலிக மின்கும் Fபகத் ளல்ல ஸவா'அஸ் ஸBபீல்
5:12. நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயிலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினான், மேலும், அவர்களிலிருந்து பன்னிரண்டு பொறுப்பாளர்களை நாம் அனுப்பியுள்ளோம்; இன்னும், (உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: "நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கிறேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் தீமைகளை உங்களைவிட்டும் நீக்கி வைத்து, சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; எனவே, இதற்குப் பின்னரும் உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின், நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்."
5:13 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِيَةً ۚ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَآٮِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
فَبِمَا نَقْضِهِمْ ஆகவே அவர்கள் முறித்த காரணத்தால் مِّيْثَاقَهُمْ உறுதி மொழியை/தங்கள் لَعَنّٰهُمْ சபித்தோம்/அவர்களை وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் قُلُوْبَهُمْ உள்ளங்களை/அவர்களுடைய قٰسِيَةً ۚ இறுக்கமானதாக يُحَرِّفُوْنَ புரட்டுகிறார்கள் الْـكَلِمَ வசனங்களை عَنْ இருந்து مَّوَاضِعِهٖۙ அதன் இடங்கள் وَنَسُوْا இன்னும் மறந்தார்கள் حَظًّا ஒரு பாகத்தை مِّمَّا எதிலிருந்து ذُكِّرُوْا உபதேசிக்கப்பட்டார்கள் بِهٖۚ அதை وَلَا تَزَالُ تَطَّلِعُ கண்டுகொண்டே இருப்பீர் عَلٰى خَآٮِٕنَةٍ மோசடியை مِّنْهُمْ அவர்களிடமிருந்து اِلَّا தவிர قَلِيْلًا சிலரை مِّنْهُمْ அவர்களில் فَاعْفُ ஆகவே மன்னிப்பீராக عَنْهُمْ அவர்களை وَاصْفَحْ ؕ இன்னும் புறக்கணிப்பீராக اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ நற்பண்பாளர்களை
5:13. FபBபிமா னக்ளிஹிம் மீதா கஹும் ல'அன்னாஹும் வ ஜ'அல்னா குலூBபஹும் காஸியதய் யுஹர்ரிFபூனல் கலிம 'அம்மவாளி'இஹீ வ னஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹ்; வலா தZஜாலு தத்தலி'உ 'அலா கா'இனதிம் மின்ஹும் இல்லா கலீலம் மின்ஹும் FபஃFபு 'அன்ஹும் வஸ்Fபஹ்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இதயங்களை இறுக்கமாக்கினோம்; (வேத) வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள்; எதனைக்கொண்டு அவர்கள் உபதேசிக்கப்பட்டனரோ, அதிலிருந்து (பெரும்) பகுதியை மறந்துவிட்டார்கள்; ஆகவே, அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டுகொண்டே இருப்பீர்; எனவே, நீர் அவர்களை மன்னித்து, புறக்கணித்து விடுவீராக! நிச்சயமாக நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
5:14 وَمِنَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰٓى اَخَذْنَا مِيْثَاقَهُمْ فَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ فَاَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ؕ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللّٰهُ بِمَا كَانُوْا يَصْنَعُوْنَ
وَمِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் نَصٰرٰٓى கிறிஸ்த்தவர்கள் اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَهُمْ அவர்களுடைய உறுதிமொழியை فَنَسُوْا மறந்தார்கள் حَظًّا ஒரு பகுதியை مِّمَّا எதிலிருந்து ذُكِّرُوْا உபதேசிக்கப்பட்டார்கள் بِهٖ அதைக் கொண்டு فَاَغْرَيْنَا ஆகவே மூட்டினோம் بَيْنَهُمُ அவர்களுக்கு மத்தியில் الْعَدَاوَةَ பகைமையை وَالْبَغْضَآءَ இன்னும் வெறுப்பை اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ؕ வரை/மறுமை நாள் وَسَوْفَ يُنَبِّئُهُمُ அவர்களுக்கு அறிவிப்பான் اللّٰهُ அல்லாஹ் بِمَا எதை كَانُوْا இருந்தார்கள் يَصْنَعُوْنَ செய்கிறார்கள்
5:14. வ மினல் லதீன காலூ இன்னா னஸாரா அகத்னா மீதாகஹும் Fபனஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹீ Fப அக்ரய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல்Bபக்ளா'அ இலா யவ்மில் கியாமஹ்; வ ஸவ்Fப யுனBப்Bபி'உஹுமுல் லாஹு Bபிமா கானூ யஸ்ன'ஊன்
5:14. அன்றியும், எவர்கள் தங்களை, "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால், அவர்களும் எதனைக்கொண்டு அவர்கள் உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பகுதியை மறந்துவிட்டார்கள்; ஆகவே, மறுமைநாள் வரை அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் நிலைக்கச்செய்தோம்; இன்னும், அவர்கள் செய்துகொண்டிருந்தவைபற்றி அல்லாஹ் அவர்களுக்கு அறிவிப்பான்.
5:15 يٰۤـاَهْلَ الْكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ كَثِيْرًا مِّمَّا كُنْتُمْ تُخْفُوْنَ مِنَ الْكِتٰبِ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ ؕ قَدْ جَآءَكُمْ مِّنَ اللّٰهِ نُوْرٌ وَّكِتٰبٌ مُّبِيْنٌ ۙ
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே قَدْ جَآءَ திட்டமாக வந்து விட்டார் كُمْ உங்களிடம் رَسُوْلُـنَا நம் தூதர் يُبَيِّنُ தெளிவுபடுத்துவார் لَـكُمْ உங்களுக்கு كَثِيْرًا பலவற்றை مِّمَّا எதிலிருந்து كُنْتُمْ இருந்தீர்கள் تُخْفُوْنَ மறைக்கிறீர்கள் مِنَ الْكِتٰبِ வேதத்தில் وَيَعْفُوْا இன்னும் விட்டுவிடுவார் عَنْ كَثِيْرٍ ؕ பலவற்றை قَدْ திட்டமாக வந்து விட்டது جَآءَكُمْ உங்களிடம் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து نُوْرٌ ஓர் ஒளி وَّكِتٰبٌ இன்னும் ஒரு வேதம் مُّبِيْنٌ ۙ தெளிவானது
5:15. யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் கதீரம் மிம்ம்மா குன்தும் துக்Fபூன மினல் கிதாBபி வ யஃFபூ 'அன் கதீர்; கத் ஜா'அகும் மினல் லாஹி னூரு(ன்)வ் வ கிதாBபும் முBபீன்
5:15. வேதமுடையவர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக்கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக்காட்டுவார்; இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார்; நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து ஒளியும், தெளிவுமுள்ள (குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
5:16 يَّهْدِىْ بِهِ اللّٰهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهٗ سُبُلَ السَّلٰمِ وَيُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ بِاِذْنِهٖ وَيَهْدِيْهِمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
يَّهْدِىْ நேர்வழி காட்டுகிறான் بِهِ அதன் மூலமாக اللّٰهُ அல்லாஹ் مَنِ எவர்கள் اتَّبَعَ பின்பற்றினார்(கள்) رِضْوَانَهٗ அவனின் பொருத்தத்தை سُبُلَ பாதைகளை السَّلٰمِ ஈடேற்றத்தின் وَيُخْرِجُهُمْ இன்னும் வெளியேற்றுகிறான்/அவர்களை مِّنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى பக்கம் النُّوْرِ ஒளி بِاِذْنِهٖ தன் கட்டளைப்படி وَيَهْدِيْهِمْ இன்னும் அவர்களுக்கு நேர்வழிகாட்டுகிறான் اِلٰى பக்கம் صِرَاطٍ வழி مُّسْتَقِيْمٍ நேர்
5:16. யஹ்தீ Bபிஹில் லாஹு மனித் தBப'அ ரிள்வானஹூ ஸுBபுலஸ் ஸலாமி வ யுக்ரிஜுஹும் மினள் ளுலுமாதி இலன் னூரி Bபி இத்னிஹீ வ யஹ்தீஹிம் இலா ஸிராதிம் முஸ்தகீம்
5:16. அல்லாஹ், இதைக் கொண்டு அவனது பொருத்தத்தைப் பின்பற்றக்கூடியவர்களுக்கு சமாதானத்திற்குரிய வழிகளைக் காட்டுகின்றான்; இன்னும், அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும், அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
5:17 لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَؕ قُلْ فَمَنْ يَّمْلِكُ مِنَ اللّٰهِ شَيْـٴًـــــا اِنْ اَرَادَ اَنْ يُّهْلِكَ الْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
لَـقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தனர் الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினர் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் هُوَ அவன் الْمَسِيْحُ மஸீஹ்தான் ابْنُ மகன் مَرْيَمَؕ மர்யமுடைய قُلْ கூறுவீராக فَمَنْ யார் يَّمْلِكُ சக்தி பெறுவான் مِنَ இடம் اللّٰهِ அல்லாஹ் شَيْـٴًـــــا ஒரு சிறிதும் اِنْ اَرَادَ நாடினால் اَنْ يُّهْلِكَ அவன் அழிப்பதை الْمَسِيْحَ மஸீஹை ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய وَاُمَّهٗ இன்னும் அவருடைய தாயை وَمَنْ யார் فِى الْاَرْضِ பூமியில் جَمِيْعًا ؕ அனைவரையும் وَلِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا ؕ இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் يَخْلُقُ படைக்கிறான் مَا يَشَآءُ ؕ எதை/நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:17. லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம்; குல் Fபம(ன்)ய்-யம்லிகு மினல் லாஹி ஷய்'அன் இன் அராத அய் யுஹ்லிகல் மஸீஹBப் ன மர்யம வ உம்மஹூ வ மன் Fபில் அர்ளி ஜமீ'ஆ, வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; யக்லுகு மா யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
5:17. எவர்கள் நிச்சயமாக மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா)தான் 'அல்லாஹ்' என்று கூறுகிறார்களோ, அத்தகையோர் திட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்துவிட்டனர்; (ஆகவே, நபியே!) "மர்யமுடைய குமாரர் மஸீஹையும், அவருடைய தாயாரையும் இன்னும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால் (அதிலிருந்து அவர்களைக் காக்க) சிறிதளவேனும் சக்திபெற்றவர் யார்?" என்று நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனை)த்தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
5:18 وَقَالَتِ الْيَهُوْدُ وَالنَّصٰرٰى نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُهٗ ؕ قُلْ فَلِمَ يُعَذِّبُكُمْ بِذُنُوْبِكُمْؕ بَلْ اَنْـتُمْ بَشَرٌ مِّمَّنْ خَلَقَ ؕ يَغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَآءُ ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَاِلَيْهِ الْمَصِيْرُ
وَقَالَتِ கூறினர் الْيَهُوْدُ யூதர்கள் وَالنَّصٰرٰى இன்னும் கிறித்தவர்கள் نَحْنُ நாங்கள் اَبْنٰٓؤُا பிள்ளைகள் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَاَحِبَّآؤُهٗ ؕ இன்னும் அவனுடைய நேசர்கள் قُلْ கூறுவீராக فَلِمَ يُعَذِّبُكُمْ அவ்வாறாயின் ஏன்/வேதனை செய்கிறான்/உங்களை بِذُنُوْبِكُمْؕ உங்கள் குற்றங்களுக்காக بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் بَشَرٌ மனிதர்கள் مِّمَّنْ எவர்களில் خَلَقَ ؕ படைத்தான் يَغْفِرُ மன்னிக்கிறான் لِمَنْ எவர்களை يَّشَآءُ நாடுகிறான் وَيُعَذِّبُ இன்னும் வேதனை செய்கிறான் مَنْ يَّشَآءُ ؕ எவர்களை/நாடுகிறான் وَلِلّٰهِ அல்லாஹ்விற்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் وَاِلَيْهِ அவனளவில்தான் الْمَصِيْرُ மீளுமிடம்
5:18. வ காலதில் யஹூது வன் னஸாரா னஹ்னு அBப்னா'உல் லாஹி வ அஹிBப்Bபா'உஹ்; குல் Fபலிம யு'அத்திBபுகும் BபிதுனூBபிகும் Bபல் அன்தும் Bபஷரும் மிம்மன் கலக்; யக்Fபிரு லிமய் யஷா'உ வ யு'அத்திBபு மய் யஷா'; வ லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ இலய்ஹில் மஸீர்
5:18. யூதர்களும், கிறிஸ்தவர்களும், "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள்; அவனுடைய நேசர்கள்" என்று கூறுகிறார்கள்; அப்படியாயின், உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனை செய்கிறான்? அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்!" என்று (நபியே!) நீர் கூறும்; தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கின்றான்; இன்னும், வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.
5:19 يٰۤـاَهْلَ الْـكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ عَلٰى فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْۢ بَشِيْرٍ وَّلَا نَذِيْرٍ فَقَدْ جَآءَكُمْ بَشِيْرٌ وَّنَذِيْرٌؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே قَدْ جَآءَ வந்துவிட்டார் كُمْ உங்களிடம் رَسُوْلُـنَا நம் தூதர் يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறார் لَـكُمْ உங்களிடம் عَلٰى فَتْرَةٍ இடைவெளியில் مِّنَ الرُّسُلِ தூதர்களின் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறாதிருக்க مَا جَآءَ வரவில்லை نَا எங்களுக்கு مِنْۢ எவரும் بَشِيْرٍ நற்செய்தி கூறுபவர் وَّلَا இன்னும் இல்லை نَذِيْرٍ எச்சரிப்பவர் فَقَدْ உறுதியாக جَآءَ வந்துவிட்டார் كُمْ உங்களிடம் بَشِيْرٌ நற்செய்தி கூறுபவர் وَّنَذِيْرٌؕ இன்னும் எச்சரிப்பவர் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:19. யா அஹ்லல் கிதாBபி கத் ஜா'அகும் ரஸூலுனா யுBபய்யினு லகும் 'அலா Fபத்ரதிம் மினர் ருஸுலி அன் தகூலூ மா ஜா'அனா மிம் Bபஷீரி(ன்)வ் வலா னதீரின் Fபகத் ஜா'அகும் Bபஷீரு(ன்)வ் வ னதீர்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப் பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், "நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவேயில்லையே" என நீங்கள் கூறாதிருக்கும்பொருட்டு இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக் கூற, நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே, நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்துவிட்டார்; இன்னும், அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
5:20 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ جَعَلَ فِيْكُمْ اَنْۢـبِيَآءَ وَجَعَلَـكُمْ مُّلُوْكًا ۖ وَّاٰتٰٮكُمْ مَّا لَمْ يُؤْتِ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை... مُوْسٰى மூஸா لِقَوْمِهٖ தன் சமுதாயத்திற்கு يٰقَوْمِ என் சமுதாயமே اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَةَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ அந்நேரத்தில் جَعَلَ ஆக்கினான் فِيْكُمْ உங்களில் اَنْۢـبِيَآءَ நபிமார்களை وَجَعَلَـكُمْ ஆக்கினான்/உங்களை مُّلُوْكًا அரசர்களாக ۖ وَّاٰتٰٮكُمْ இன்னும் கொடுத்தான்/உங்களுக்கு مَّا எவற்றை لَمْ يُؤْتِ கொடுக்கவில்லை اَحَدًا ஒருவருக்கும் مِّنَ الْعٰلَمِيْنَ உலகத்தாரில்
5:20. வ இத் கால மூஸா லிகவ்மிஹீ யா கவ்மித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் ஜ'அல Fபீகும் அம்Bபியா'அ வ ஜ'அலகும் முலூக(ன்)வ் வ ஆதாகும் மா லம் யு'தி அஹதம் மினல் 'ஆலமீன்
5:20. அன்றி மூஸா தம் சமூகத்தாரை நோக்கி, "என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்; அவன் உங்களிடையே நபிமார்களை ஏற்படுத்தி உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்; உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவுகூரும்.
5:21 يٰقَوْمِ ادْخُلُوا الْاَرْضَ الْمُقَدَّسَةَ الَّتِىْ كَتَبَ اللّٰهُ لَـكُمْ وَلَا تَرْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ
يٰقَوْمِ என் சமுதாயமே ادْخُلُوا நுழையுங்கள் الْاَرْضَ பூமியில் الْمُقَدَّسَةَ பரிசுத்தமானது الَّتِىْ எது كَتَبَ விதித்தான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு وَلَا تَرْتَدُّوْا இன்னும் திரும்பிவிடாதீர்கள் عَلٰٓى اَدْبَارِ பின் புறங்களில் كُمْ உங்கள் فَتَـنْقَلِبُوْا திரும்புவீர்கள் خٰسِرِيْنَ நஷ்டவாளிகளாக
5:21. யா கவ்மித் குலுல் அர்ளல் முகத்தஸதல் லதீ கதBபல் லாஹு லகும் வலா தர்தத்தூ 'அலா அத்Bபாரிகும் Fபதன்கலிBபூ காஸிரீன்ன்
5:21. (தவிர அவர்) "என் சமூகத்தாரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள தூய்மையான பூமியில் நுழையுங்கள்; இன்னும், நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பிவிடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" (என்றும் கூறினார்).
5:22 قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّ فِيْهَا قَوْمًا جَبَّارِيْنَ ۖ وَاِنَّا لَنْ نَّدْخُلَهَا حَتّٰى يَخْرُجُوْا مِنْهَا ۚ فَاِنْ يَّخْرُجُوْا مِنْهَا فَاِنَّا دَاخِلُوْنَ
قَالُوْا கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّ நிச்சயமாக فِيْهَا அதில் قَوْمًا ஒரு சமுதாயம் جَبَّارِيْنَ ۖ பலசாலிகளான وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَنْ மாட்டோம் نَّدْخُلَهَا அதில் நுழைய حَتّٰى வரை يَخْرُجُوْا வெளியேறுவார்கள் مِنْهَا ۚ அதிலிருந்து فَاِنْ يَّخْرُجُوْا அவர்கள் வெளியேறினால் مِنْهَا அதிலிரு ந்து فَاِنَّا நிச்சயமாக நாங்கள் دَاخِلُوْنَ நுழைவோம்
5:22. காலூ யா மூஸா இன்னா Fபீஹா கவ்மன் ஜBப்Bபாரீன வ இன்னா லன் னத்குலஹா ஹத்தா யக்ருஜூ மின்ஹா Fப-இ(ன்)ய் யக்ருஜூ மின்ஹா Fப இன்னா தாகிலூன்
5:22. அதற்கு அவர்கள் "மூஸாவே! நிச்சயமாக அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள்; எனவே, அவர்கள் அதைவிட்டு வெளியேறும் வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம்; அவர்கள் அதை விட்டு வெளியேறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.
5:23 قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمَا ادْخُلُوْا عَلَيْهِمُ الْبَابَۚ فَاِذَا دَخَلْتُمُوْهُ فَاِنَّكُمْ غٰلِبُوْنَ ۚ وَعَلَى اللّٰهِ فَتَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
قَالَ கூறினார்(கள்) رَجُلٰنِ இருவர் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் يَخَافُوْنَ பயப்படுகிறார்கள் اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمَا அவ்விருவர் மீதும் ادْخُلُوْا நுழையுங்கள் عَلَيْهِمُ அவர்களைஎதிர்த்து الْبَابَۚ வாசலில் فَاِذَا دَخَلْتُمُوْهُ அதில் நீங்கள் நுழைந்தால் فَاِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் غٰلِبُوْنَ ۚ வெற்றி பெறுவீர்கள் وَعَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே فَتَوَكَّلُوْۤا நம்பிக்கை வையுங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:23. கால ரஜுலானி மினல் லதீன யகாFபூன அன்'அமல் லாஹு 'அலய்ஹிமத் குலூ 'அலய்ஹிமுல் BபாBப், Fப இதா தகல்துமூஹு Fப இன்னகும் காலிBபூன்; வ 'அலல் லாஹி Fபதவக்கலூ இன் குன்தும் மு'மினீன்
5:23. (அல்லாஹ்வை) பயந்துகொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் - அவ்விருவரின் மீது அல்லாஹ் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள் (மற்றவர்களை நோக்கி): "அவர்களை எதிர்த்து வாயில்வரை நுழையுங்கள்; அதுவரை நீங்கள் நுழைந்துவிட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருங்கள்" என்று கூறினர்.
5:24 قَالُوْا يٰمُوْسٰٓى اِنَّا لَنْ نَّدْخُلَهَاۤ اَبَدًا مَّا دَامُوْا فِيْهَا فَاذْهَبْ اَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَاۤ اِنَّا هٰهُنَا قَاعِدُوْنَ
قَالُوْا கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّا நிச்சயமாக நாங்கள் لَنْ மாட்டோம் نَّدْخُلَهَاۤ அதில் நுழைய اَبَدًا அறவே مَّا دَامُوْا அவர்கள் இருக்கும் காலமெல்லாம் فِيْهَا அதில் فَاذْهَبْ ஆகவே செல் اَنْتَ நீ وَرَبُّكَ இன்னும் உன் இறைவன் فَقَاتِلَاۤ இருவரும் போரிடுங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் هٰهُنَا இங்கேதான் قَاعِدُوْنَ உட்கார்ந்திருப்போம்
5:24. காலூ யா மூஸா இன்னா லன் னத்குலஹா அBபதம் மா தாமூ Fபீஹா Fபத்ஹBப் அன்த வ ரBப்Bபுக Fபகாதிலா இன்னா ஹாஹுனா கா'இதூன்
5:24. அதற்கவர்கள், "மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும்வரை நாங்கள் ஒருபோதும் அதில் நுழையவேமாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் சென்று இருவருமே போர்செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
5:25 قَالَ رَبِّ اِنِّىْ لَاۤ اَمْلِكُ اِلَّا نَفْسِىْ وَاَخِىْ فَافْرُقْ بَيْنَـنَا وَبَيْنَ الْقَوْمِ الْفٰسِقِيْنَ
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنِّىْ நிச்சயமாக நான் لَاۤ اَمْلِكُ அதிகாரம் பெற மாட்டேன் اِلَّا தவிர نَفْسِىْ எனக்கு وَاَخِىْ இன்னும் என் சகோதரர் فَافْرُقْ ஆகவே பிரித்திடு بَيْنَـنَا எங்களுக்கு மத்தியில் وَبَيْنَ இன்னும் மத்தியில் الْقَوْمِ சமுதாயம் الْفٰسِقِيْنَ பாவிகளான
5:25. கால ரBப்Bபி இன்னீ லா அம்லிகு இல்லா னFப்ஸீ வ அகீ FபFப்ருக் Bபய்னனா வ Bபய்னல் கவ்மில் Fபாஸிகீன்
5:25. "என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் தவிர (வேறெவரையும்) நான் கட்டுப்படுத்த முடியாது; எனவே, எங்களுக்கும் குற்றம் புரிந்த இந்த சமுதாயத்திற்கும் மத்தியில், நீ தீர்ப்பளிப்பாயாக!" என்று அவர் (மூஸா) கூறினார்.
5:26 قَالَ فَاِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ اَرْبَعِيْنَ سَنَةً ۚ يَتِيْهُوْنَ فِى الْاَرْضِ ؕ فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْفٰسِقِيْنَ
قَالَ கூறினான் فَاِنَّهَا ஆகவே நிச்சயமாக அது مُحَرَّمَةٌ தடுக்கப்பட்டதாகும் عَلَيْهِمْ அவர்கள் மீது اَرْبَعِيْنَ நாற்பது سَنَةً ۚ ஆண்டு(கள்) يَتِيْهُوْنَ திக்கற்றலைவார்கள் فِى الْاَرْضِ ؕ பூமியில் فَلَا تَاْسَ ஆகவே கவலைப்படாதீர் عَلَى الْقَوْمِ சமுதாயத்தின் மீது الْفٰسِقِيْنَ பாவிகளான
5:26. கால Fப இன்னஹா முஹர் ரமதுன் 'அலய்ஹிம் அர்Bப'ஈன ஸனஹ்; யதீஹூன Fபில் அர்ள்; Fபலா தாஸ 'அலல் கவ்மில் Fபாஸிகீன்
5:26. (அதற்கு அல்லாஹ்) "அவ்வாறாயின் அது நாற்பது ஆண்டுகள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டுவிட்டது; (அது வரை) அவர்கள் பூமியில் (சீர்கெட்டு) திரிவார்கள்; ஆகவே, நீர் இத்தீய கூட்டத்தாரைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்" என்று கூறினான்.
5:27 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ ابْنَىْ اٰدَمَ بِالْحَـقِّۘ اِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ اَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْاٰخَرِؕ قَالَ لَاَقْتُلَـنَّكَؕ قَالَ اِنَّمَا يَتَقَبَّلُ اللّٰهُ مِنَ الْمُتَّقِيْنَ
وَاتْلُ ஓதுவீராக عَلَيْهِمْ அவர்கள் முன் نَبَاَ செய்தியை ابْنَىْ இரு மகன்களின் اٰدَمَ ஆதமுடைய بِالْحَـقِّۘ உண்மையில் اِذْ போது قَرَّبَا குர்பானி கொடுத்தனர் قُرْبَانًا ஒரு குர்பானியை فَتُقُبِّلَ ஏற்றுக் கொள்ளப்பட்டது مِنْ இருந்து اَحَدِهِمَا அவ்விருவரில் ஒருவர் وَلَمْ يُتَقَبَّلْ ஏற்கப்படவில்லை مِنَ இருந்து الْاٰخَرِؕ மற்றவர் قَالَ என்றார் لَاَقْتُلَـنَّكَؕ நிச்சயமாக உன்னைக்கொல்வேன் قَالَ கூறினார் اِنَّمَا يَتَقَبَّلُ ஏற்பதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் مِنَ الْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்
5:27. வத்லு 'அலய்ஹிம் னBப அBப்னய் ஆதம Bபில்ஹக்க்; இத் கர்ரBபா குர்Bபானன் FபதுகுBப்Bபில மின் அஹதிஹிமா வ லம் யுதகBப்Bபல் மினல் ஆகரி கால ல அக்துலன்ன்னக கால இன்னமா யதகBப்Bபலுல் லாஹு மினல் முத்தகீன்
5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் ஒரு பலியை நெருக்கமாக்கி வைத்தபோது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது; மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (பின்னவர்) "நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்துவிடுவேன்" என்று கூறினார்; அதற்கு (முன்னவர்) "மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக்கொள்வதெல்லாம் (தன்னை) அஞ்சுபவர்களிடமிருந்துதான்" என்று கூறினார்.
5:28 لَٮِٕنْۢ بَسَطْتَّ اِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِىْ مَاۤ اَنَا بِبَاسِطٍ يَّدِىَ اِلَيْكَ لِاَقْتُلَكَ ۚ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ
لَٮِٕنْۢ بَسَطْتَّ நீங்கள் நீட்டினால் اِلَىَّ என்னளவில் يَدَكَ உன் கரத்தை لِتَقْتُلَنِىْ நீ என்னைக் கொல்வ தற்காக مَاۤ اَنَا நான் இல்லை بِبَاسِطٍ நீட்டுபவனாக يَّدِىَ என் கரத்தை اِلَيْكَ உன்னளவில் لِاَقْتُلَكَ ۚ நான் கொல்வதற்காக / உன்னை اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ அகிலத்தாரின்
5:28. ல'இம் Bபஸத்த இலய்ய யதக லிதக்துலனீ மா அன BபிBபாஸிதி(ன்)ய் யதிய இலய்க லி அக்துலக இன்னீ அகாFபுல் லாஹ ரBப்Bபல் 'ஆலமீன்
5:28. அன்றியும், "நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டுவாயானால், நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டமாட்டேன்; ஏனெனில், நான் நிச்சயமாக அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்!" (என்றும் கூறினார்).
5:29 اِنِّىْۤ اُرِيْدُ اَنْ تَبُوْٓءَا۟بِاِثْمِىْ وَ اِثْمِكَ فَتَكُوْنَ مِنْ اَصْحٰبِ النَّارِۚ وَذٰ لِكَ جَزٰٓؤُا الظّٰلِمِيْنَۚ
اِنِّىْۤ நிச்சயமாக நான் اُرِيْدُ நாடுகிறேன் اَنْ تَبُوْٓءَا நீ திரும்புவதை بِاِثْمِىْ என் பாவத்துடன் وَ اِثْمِكَ உன் பாவம் فَتَكُوْنَ ஆகிவிடுவாய் مِنْ இருந்து اَصْحٰبِ வாசிகள் النَّارِۚ நரகம் وَذٰ لِكَ இது جَزٰٓؤُا கூலி الظّٰلِمِيْنَۚ அநியாயக்காரர்களின்
5:29. இன்னீ உரீது அன் தBபூ'அ Bபி இத்மீ வ இத்மிக Fபதகூன மின் அஸ்-ஹாBபின் னார்; வ தாலிக ஜZஜா'உள் ளாலிமீன்
5:29. "என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்துகொண்டு (அல்லாஹ்விடம்) வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகிவிடுவாய்; இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்" (என்றும் கூறினார்).
5:30 فَطَوَّعَتْ لَهٗ نَفْسُهٗ قَـتْلَ اَخِيْهِ فَقَتَلَهٗ فَاَصْبَحَ مِنَ الْخٰسِرِيْنَ
فَطَوَّعَتْ தூண்டியது لَهٗ அவரை نَفْسُهٗ அவருடைய மனம் قَـتْلَ கொல்வதற்கு اَخِيْهِ தன் சகோதரரை فَقَتَلَهٗ ஆகவே அவரைக் கொன்றார் فَاَصْبَحَ ஆகவே ஆகினார் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
5:30. Fபதவ்வ'அத் லஹூ னFப்ஸு ஹூ கத்ல அகீஹி Fபகதலஹூ Fப அஸ்Bபஹ மினல் காஸிரீன்
5:30. (இதன் பின்னரும்,) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே, அவர் (தம்) சகோதரரைக் கொலைசெய்துவிட்டார்; அதனால், அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகிவிட்டார்.
5:31 فَبَـعَثَ اللّٰهُ غُرَابًا يَّبْحَثُ فِىْ الْاَرْضِ لِيُرِيَهٗ كَيْفَ يُوَارِىْ سَوْءَةَ اَخِيْهِؕ قَالَ يَاوَيْلَتٰٓى اَعَجَزْتُ اَنْ اَكُوْنَ مِثْلَ هٰذَا الْغُرَابِ فَاُوَارِىَ سَوْءَةَ اَخِىْۚ فَاَصْبَحَ مِنَ النّٰدِمِيْنَۛ ۚ ۙ
فَبَـعَثَ ஆகவே அனுப்பினான் اللّٰهُ அல்லாஹ் غُرَابًا ஒரு காகத்தை يَّبْحَثُ தோண்டுகிறது فِىْ الْاَرْضِ பூமியில் لِيُرِيَهٗ காட்டுவதற்காக/ அவனுக்கு كَيْفَ எவ்வாறு يُوَارِىْ மறைப்பான் سَوْءَةَ சடலத்தை اَخِيْهِؕ தன் சகோதரனின் قَالَ கூறினான் يَاوَيْلَتٰٓى என் நாசமே اَعَجَزْتُ இயலாமலாகி விட்டேனா? اَنْ اَكُوْنَ நான் ஆக مِثْلَ போன்று هٰذَا இந்த الْغُرَابِ காகம் فَاُوَارِىَ மறைத்திருப்பேனே سَوْءَةَ சடலத்தை اَخِىْۚ என் சகோதரனின் فَاَصْبَحَ ஆகிவிட்டான் مِنَ النّٰدِمِيْنَۛ ۚ ۙ துக்கப்படுபவர்களில்
5:31. FபBப'அதல் லாஹு குராBபய் யBப்ஹது Fபில் அர்ளி லியுரியஹூ கய்Fப யுவாரீ ஸவ்'அத அகீஹ்; கால யா வய்லதா அ'அஜZஜ்து அன் அகூன மித்ல ஹாதல் குராBபி Fப உவாரிய ஸவ் அத அகீ Fப அஸ்Bபஹ மினன் னாதிமீன்
5:31. பின்னர், தம் சகோதரரின் பிரேதத்தை அவர் எவ்வாறு மறைக்கவேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக, அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியைத் தோண்டிற்று; (இதைப் பார்த்த) அவர் "அந்தோ! நான் இந்தக் காகத்தைப் போல் ஆவதற்குக்கூட இயலாதவனாக நான் ஆகிவிட்டேனா? அப்படியிருந்தால், என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!" என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார்.
5:32 مِنْ اَجْلِ ذٰ لِكَ ۛ ؔ ۚ كَتَبْنَا عَلٰى بَنِىْۤ اِسْرَآءِيْلَ اَنَّهٗ مَنْ قَتَلَ نَفْسًۢا بِغَيْرِ نَفْسٍ اَوْ فَسَادٍ فِى الْاَرْضِ فَكَاَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيْعًا ؕ وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ؕ وَلَـقَدْ جَآءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنٰتِ ثُمَّ اِنَّ كَثِيْرًا مِّنْهُمْ بَعْدَ ذٰ لِكَ فِى الْاَرْضِ لَمُسْرِفُوْنَ
مِنْ اَجْلِ காரணமாக ذٰ لِكَ ۛ ؔ ۚ அதன் كَتَبْنَا விதித்தோம் عَلٰى மீது بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்கள் اَنَّهٗ நிச்சயமாக مَنْ எவன் قَتَلَ கொன்றார் نَفْسًۢا ஓர் உயிரை بِغَيْرِ نَفْسٍ ஓர் உயிரைக் கொலை செய்ததற்கு அல்லாமல் اَوْ அல்லது فَسَادٍ விஷமம் செய்தல் فِى الْاَرْضِ பூமியில் فَكَاَنَّمَا போலாவான் قَتَلَ கொன்றான் النَّاسَ மக்கள் جَمِيْعًا ؕ அனைவரையும் وَمَنْ எவர் اَحْيَاهَا வாழவைத்தார்/அதை فَكَاَنَّمَاۤ போலாவார் اَحْيَا வாழவைத்தார் النَّاسَ மக்கள் جَمِيْعًا ؕ அனைவரையும் وَلَـقَدْ திட்டமாக جَآءَتْهُمْ வந்தார்கள்/அவர்களிடம் رُسُلُنَا நம் தூதர்கள் بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளுடன் ثُمَّ பிறகு اِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர்கள் مِّنْهُمْ அவர்களில் بَعْدَ ذٰ لِكَ அதன் பின்னர் فِى الْاَرْضِ பூமியில் لَمُسْرِفُوْنَ வரம்புமீறுகிறார்கள்
5:32. மின் அஜ்லி தாலிக கதBப்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல அன்னஹூ மன் கதல னFப்ஸம் Bபிகய்ரி னFப்ஸின் அவ் Fபஸாதின் Fபில் அர்ளி Fபக அன்னம்மா கதலன் னாஸ ஜமீ'அ(ன்)வ் வ மன் அஹ்யாஹா Fபக அன்னமா அஹ்யன் னாஸ ஜமீ'ஆ; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுனா Bபில்Bபய்யினாதி தும்ம இன்ன கதீரம் மின்ஹும் Bபஃத தாலிக Fபில் அர்ளி லமுஸ்ரிFபூன்
5:32. இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவரொருவர் கொலைக்குப் பதிலாகவோ, அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் (தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறாரோ அவர் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவர் போலாவார்; மேலும், எவரொருவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழவைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைத்தோரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு நாம் விதித்தோம்; மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுவந்தார்கள்; இதன் பின்னரும், அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்புமீறியவர்களாகவே இருக்கின்றனர்.
5:33 اِنَّمَا جَزٰٓؤُا الَّذِيْنَ يُحَارِبُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا اَنْ يُّقَتَّلُوْۤا اَوْ يُصَلَّبُوْۤا اَوْ تُقَطَّعَ اَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ مِّنْ خِلَافٍ اَوْ يُنْفَوْا مِنَ الْاَرْضِؕ ذٰ لِكَ لَهُمْ خِزْىٌ فِى الدُّنْيَا وَ لَهُمْ فِى الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ ۙ
اِنَّمَا جَزٰٓؤُا தண்டனையெல்லாம் الَّذِيْنَ எவர்கள் يُحَارِبُوْنَ போரிடுவார்கள் اللّٰهَ அல்லாஹ்விடம் وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதர் وَيَسْعَوْنَ இன்னும் முயற்சிக்கின்றனர் فِى الْاَرْضِ பூமியில் فَسَادًا குழப்பம் செய்ய اَنْ يُّقَتَّلُوْۤا அவர்கள் கொல்லப்படுவது اَوْ அல்லது يُصَلَّبُوْۤا அவர்கள் சிலுவையில் அறையப்படுவது اَوْ அல்லது تُقَطَّعَ வெட்டப்படுவது اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் وَاَرْجُلُهُمْ இன்னும் அவர்களின் கால்கள் مِّنْ خِلَافٍ மாற்றமாக اَوْ அல்லது يُنْفَوْا அவர்கள் கடத்தப்படுவது مِنَ இருந்து الْاَرْضِؕ நாடு ذٰ لِكَ இது لَهُمْ அவர்களுக்கு خِزْىٌ இழிவு فِى الدُّنْيَا இவ்வுலகத்தில் وَ لَهُمْ இன்னும் அவர்களுக்கு فِى الْاٰخِرَةِ மறுமையில் عَذَابٌ வேதனை عَظِيْمٌ ۙ பெரியது
5:33. இன்னமா ஜZஜா'உல் லதீன யுஹாரிBபூனல் லாஹ வ ரஸூலஹூ வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதன் அய் யுகத்தலூ அவ் யுஸல்லBபூ அவ் துகத்த'அ அய்தீஹிம் வ அர்ஜுலுஹும் மின் கிலாFபின் அவ் யுன்Fபவ் மினலர்ள்; தாலிக லஹும் கிZஜ்யுன் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் 'அளீம்
5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்துகொண்டு திரிபவர்களுக்குரிய தண்டனையாவது - அவர்கள் கொல்லப்படுதல், அல்லது சிலுவையில் அறையப்படுதல், அல்லது மாறுகைகள், மாறுகால்கள் வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது, அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
5:34 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ قَبْلِ اَنْ تَقْدِرُوْا عَلَيْهِمْۚ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا (மன்னிப்புக் கோரி) திருந்தி திரும்பினார்கள் مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَقْدِرُوْا நீங்கள் ஆற்றல்பெறுவது عَلَيْهِمْۚ அவர்கள் மீது فَاعْلَمُوْۤا ஆகவே அறிந்துகொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
5:34. இல்லல் லதீன தாBபூ மின் கBப்லி அன் தக்திரூ 'அலய்ஹிம் Fபஃலமூ அன்ன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
5:34. (எனினும்,) அவர்களின் மீது நீங்கள் அதிகாரம் செலுத்தும் முன்பே (தங்களின் தவறுக்கு) பாவமன்னிப்புத் தேடிக்கொண்டவர்களைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கருணையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
5:35 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْۤا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِىْ سَبِيْلِهٖ لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே! اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَابْتَغُوْۤا இன்னும் தேடுங்கள் اِلَيْهِ அவனளவில் الْوَسِيْلَةَ நன்மையை وَجَاهِدُوْا இன்னும் போரிடுங்கள் فِىْ سَبِيْلِهٖ அவனுடைய பாதையில் لَعَلَّـكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றியடைவதற்காக
5:35. யா அய்யுஹல் லதீன ஆமனுத் தகுல் லாஹ வBப்தகூ இலய்ஹில் வஸீலத வ ஜாஹிதூ Fபீ ஸBபீலிஹீ ல'அல்லகும் துFப்லிஹூன்
5:35. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வணக்கங்களின் மூலம்) தேடிக்கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர் புரியுங்கள்; அப்போது நீங்கள் வெற்றி பெறலாம்.
5:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ اَنَّ لَهُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لِيَـفْتَدُوْا بِهٖ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيٰمَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் لَوْ اَنَّ لَهُمْ நிச்சயமாக அவர்களுக்கு இருந்தால் مَّا எவை فِى الْاَرْضِ இப்பூமியில் جَمِيْعًا அனைத்தும் وَّمِثْلَهٗ இன்னும் அவை போன்றது مَعَهٗ அத்துடன் لِيَـفْتَدُوْا அவர்கள் பினை கொடுப்பதற்காக بِهٖ அதைக் கொண்டு مِنْ இருந்து عَذَابِ வேதனை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளின் مَا تُقُبِّلَ அங்கீகரிக்கப்படாது مِنْهُمْۚ அவர்களிடமிருந்து وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தக் கூடியது
5:36. இன்னல் லதீன கFபரூ லவ் அன்ன லஹும் மா Fபில் அர்ளி ஜமீ'அ(ன்)வ் வ மித்லஹூ ம'அஹூ லியFப்ததூ Bபிஹீ மின் 'அதாBபி யவ்மில் கியாமதி மா துகுBப்Bபில மின்ஹும் வ லஹும் அதாBபுன் அலீம்
5:36. நிச்சயமாக நிராகரிப்போர் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை மறுமைநாளின் வேதனைக்குப் பகரமாக - அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா; மேலும், அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
5:37 يُرِيْدُوْنَ اَنْ يَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنْهَا وَلَهُمْ عَذَابٌ مُّقِيْمٌ
يُرِيْدُوْنَ நாடுவார்கள் اَنْ يَّخْرُجُوْا அவர்கள் வெளியேற مِنَ இருந்து النَّارِ நரகம் وَمَا இல்லை هُمْ அவர்கள் بِخَارِجِيْنَ வெளியேறுபவர்களாக مِنْهَا அதிலிருந்து وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابٌ வேதனை مُّقِيْمٌ நிலையானது
5:37. யுரீதூன அய் யக்ருஜூ மினன் னாரி வமா ஹும் Bபிகாரி ஜீன மின்ஹா வ லஹும் 'அதாBபும் முகீம்
5:37. அவர்கள் (நரகு) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள்; ஆனால், அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை; அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு.
5:38 وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ
وَالسَّارِقُ திருடன் وَالسَّارِقَةُ இன்னும் திருடி فَاقْطَعُوْۤا வெட்டுங்கள் اَيْدِيَهُمَا அவ்விருவரின் கரங்களை جَزَآءًۢ கூலியாக بِمَا كَسَبَا அவ்விருவர் செய்ததன் காரணமாக نَـكَالًا தண்டனையாக مِّنَ اللّٰهِ ؕ அல்லாஹ்விடமிருந்து وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ மகா ஞானவான்
5:38. வஸ்ஸாரிகு வஸ்ஸாரிகது Fபக்த'ஊ அய்தியஹுமா ஜZஜா'அம் Bபிமா கஸBபா னகாலம் மினல் லாஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
5:38. திருடனும், திருடியும் - அவ்விருவரும் சம்பாதித்ததற்குக் கூலியாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக - அவர்களின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள்; அல்லாஹ் மிகைத்தவனும் ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
5:39 فَمَنْ تَابَ مِنْۢ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ يَتُوْبُ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
فَمَنْ எவர் تَابَ திருந்தி திரும்பினார் مِنْۢ بَعْدِ பின்னர் ظُلْمِهٖ தன் தீமை وَاَصْلَحَ இன்னும் திருத்திக் கொண்டார் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَتُوْبُ பிழை பொறுப்பான் عَلَيْهِؕ அவர் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
5:39. Fபமன் தாBப மிம் Bபஃதி ளுல்மிஹீ வ அஸ்லஹ Fப இன்னல் லாஹ யதூBபு 'அலய்ஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
5:39. எவரேனும், தம் அநீதத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புத் தேடி (தம்மைச்) சீர்திருத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவ மன்னிப்புத் தேடுதலை ஏற்றுக்கொள்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
5:40 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ يُعَذِّبُ مَنْ يَّشَآءُ وَيَغْفِرُ لِمَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
اَلَمْ تَعْلَمْ நீர் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَهٗ அவனுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِؕ இன்னும் பூமியின் يُعَذِّبُ வேதனை செய்வான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் وَيَغْفِرُ இன்னும் மன்னிப்பான் لِمَنْ எவரை يَّشَآءُ ؕ நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:40. அலம் தஃலம் அன்னல் லாஹ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி யு'அத் திBபு ம(ன்)ய்-யஷா'உ வ யக்Fபிரு லிம(ன்)ய்-யஷா'; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
5:40. நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா? தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும், தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உடையவன்.
5:41 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ لَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ مِنَ الَّذِيْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَ فْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ وَمِنَ الَّذِيْنَ هَادُوْا ۛۚ سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِيْنَۙ لَمْ يَاْتُوْكَؕ يُحَرِّفُوْنَ الْـكَلِمَ مِنْۢ بَعْدِ مَوَاضِعِهٖۚ يَقُوْلُوْنَ اِنْ اُوْتِيْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ وَمَنْ يُّرِدِ اللّٰهُ فِتْنَـتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيْــٴًـــاؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَمْ يُرِدِ اللّٰهُ اَنْ يُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ لَهُمْ فِىْ الدُّنْيَا خِزْىٌ ۚۖ وَّلَهُمْ فِىْ الْاٰخِرَةِ عَذَابٌ عَظِيْمٌ
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ தூதரே لَا يَحْزُنْكَ உமக்குக் கவலையூட்ட வேண்டாம் الَّذِيْنَ எவர்கள் يُسَارِعُوْنَ தீவிரம்காட்டுகிறார்கள் فِى الْكُفْرِ நிராகரிப்பில் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاَ فْوَاهِهِمْ தங்கள் வாய்களால் وَلَمْ تُؤْمِنْ இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை قُلُوْبُهُمْ ۛۚ அவர்களுடைய உள்ளங்கள் وَمِنَ இன்னும் இருந்து الَّذِيْنَ எவர்கள் هَادُوْا ۛۚ யூதராகி விட்டார்கள் سَمّٰعُوْنَ அதிகம் செவிமடுக்கிறார்கள் لِلْكَذِبِ பொய்யை سَمّٰعُوْنَ அதிகம் செவிமடுக்கிறார்கள் لِقَوْمٍ கூட்டத்திற்காக اٰخَرِيْنَۙ மற்றொரு لَمْ يَاْتُوْكَؕ அவர்கள் வரவில்லை / உம்மிடம் يُحَرِّفُوْنَ மாற்றுகின்றனர் الْـكَلِمَ வசனங்களை مِنْۢ بَعْدِ இருந்து مَوَاضِعِهٖۚ அவற்றின் இடங்கள் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் اِنْ اُوْتِيْتُمْ நீங்கள் கொடுக்கப்பட்டால் هٰذَا இதை فَخُذُوْهُ அதை எடுங்கள் وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ நீங்கள் கொடுக்கப்படவில்லையெனில்/அதை فَاحْذَرُوْا ؕ எச்சரிக்கையாக இருங்கள் وَمَنْ எவர் يُّرِدِ நாடினான் اللّٰهُ அல்லாஹ் فِتْنَـتَهٗ சோதிக்க/அவரை فَلَنْ تَمْلِكَ உரிமை பெறமாட்டீர் لَهٗ அவருக்காக مِنَ விடம் اللّٰهِ அல்லாஹ் شَيْــٴًـــاؕ எதையும் اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَمْ يُرِدِ நாடவில்லை اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّطَهِّرَ அவன்பரிசுத்தமாக்க قُلُوْبَهُمْ ؕ உள்ளங்களை / அவர்களுடைய لَهُمْ அவர்களுக்கு فِىْ الدُّنْيَا இம்மையில் خِزْىٌ ۚۖ இழிவு وَّ இன்னும் لَهُمْ அவர்களுக்கு فِىْ الْاٰخِرَةِ மறுமையில் عَذَابٌ வேதனை عَظِيْمٌ பெரிய
5:41. யா அய்யுஹர் ரஸூலு லா யஹ்Zஜுன்கல் லதீன யுஸா ரி'ஊன Fபில் குFப்ரி மினல் லதீன காலூ ஆமன்னா Bபி அFப்வாஹிஹிம் வ லம் து'மின் குலூBபுஹும்; வ மினல் லதீன ஹாதூ ஸம்மா'ஊன லில்கதிBபி ஸம்மா'ஊன லிகவ்மின் ஆகரீன லம் ய'தூக யுஹர்ரிFபூனல் கலிம மிம் Bபஃதி மவாளி'இஹீ யகூலூன இன் ஊதீதும் ஹாதா Fபகுதூஹு வ இல் லம் து'தவ்ஹு Fபஹ்தரூ; வ ம(ன்)ய்-யுரிதில் லாஹு Fபித்னதஹூ Fபலன் தம்லிக லஹூ மினல் லாஹி ஷய்'ஆ; உலா 'இகல் லதீன லம் யுரிதில் லாஹு அ(ன்)ய்-யுதஹ்ஹிர குலூBபஹும்; லஹும் Fபித் துன்யா கிZஜ்யு(ன்)வ் வ லஹும் Fபில் ஆகிரதி'அதாBபுன் 'அளீம்
5:41. (நம்முடைய) தூதரே! அவர்களது இதயங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க, தங்களது வாய்களினால், 'நம்பிக்கை கொண்டோம்!' என்று கூறியோர் குறித்தும், இன்னும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறித்தும் நீர் கவலை கொள்ளவேண்டாம்; அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றவர்கள்; உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றவர்கள்; மேலும், அவர்கள் (வேத)வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி "இ(ன்ன)து உங்களுக்குக் கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; அது உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் (அதை) தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்கள்; மேலும், அல்லாஹ் எவரை வழிகேட்டிலாக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒருபோதும் சக்திபெறமாட்டீர்; இத்தகையோருடைய இதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை; இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
5:42 سَمّٰعُوْنَ لِلْكَذِبِ اَ كّٰلُوْنَ لِلسُّحْتِؕ فَاِنْ جَآءُوْكَ فَاحْكُمْ بَيْنَهُمْ اَوْ اَعْرِضْ عَنْهُمْ ۚ وَاِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَّضُرُّوْكَ شَيْــٴًـــا ؕ وَاِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
سَمّٰعُوْنَ அதிகம் செவிமடுக்கிறார்கள் لِلْكَذِبِ பொய்யை اَ كّٰلُوْنَ அதிகம் விழுங்குகிறார்கள் لِلسُّحْتِؕ ஆகாத செல்வத்தை فَاِنْ جَآءُوْكَ இவர்கள் உம்மிடம் வந்தால் فَاحْكُمْ தீர்ப்பளிப்பீராக بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் اَوْ அல்லது اَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْهُمْ ۚ அவர்களை وَاِنْ تُعْرِضْ நீர் புறக்கணித்தால் عَنْهُمْ அவர்களை فَلَنْ ஒருபோதும் முடியாது يَّضُرُّوْكَ அவர்கள் உமக்கு கெடுதி செய்ய شَيْــٴًـــا ؕ கொஞ்சமும் وَاِنْ حَكَمْتَ நீர் தீர்ப்பளித்தால் فَاحْكُمْ தீர்ப்பளிப்பீராக بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْقِسْطِ ؕ நீதமாக اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُقْسِطِيْنَ நீதவான்களை
5:42. ஸம்மா'ஊன லில்கதிBபி அக்காலூன லிஸ்ஸுஹ்த்; Fப இன் ஜா'ஊக Fபஹ்கும் Bபய்னஹும் அவ் அஃரிள் அன்ஹும் வ இன் துஃரிள் 'அன்ஹும் Fபல(ன்)ய்-யளுர்ரூக ஷய்'அ(ன்)வ் வ இன் ஹகம்த Fபஹ்கும் Bபய்னஹும் Bபில்கிஸ்த்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்பவர்கள்; விலக்கப்பட்டதையே அதிகமாக உண்பவர்கள்: (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால் இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது, இவர்களைப் புறக்கணித்துவிடும்; அப்படி இவர்களை நீர் புறக்கணித்துவிடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின் நீதியைக்கொண்டு அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக! ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.
5:43 وَكَيْفَ يُحَكِّمُوْنَكَ وَعِنْدَهُمُ التَّوْرٰٮةُ فِيْهَا حُكْمُ اللّٰهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ
وَكَيْفَ எவ்வாறு يُحَكِّمُوْنَكَ தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்/உம்மை وَعِنْدَ இருக்க / இடம் هُمُ அவர்கள் التَّوْرٰٮةُ தவ்றாத் فِيْهَا அதில் حُكْمُ சட்டம் اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ பிறகு يَتَوَلَّوْنَ திரும்புகின்றனர் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰ لِكَ ؕ அதற்கு وَمَاۤ இல்லை اُولٰٓٮِٕكَ இவர்கள் بِالْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:43. வ கய்Fப யுஹக்கிமூனக வ 'இன்தஹுமுத் தவ்ராது Fபீஹா ஹுக்முல் லாஹி தும்ம யதவல்லவ்ன மிம் Bபஃதி தாலிக்; வ மா உலா'இக Bபில்மு'மினீன்
5:43. எனினும், இவர்கள் உம்மைத் தீர்ப்பு அளிப்பவராக எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இவர்களிடத்திலோ தவ்ராத் (வேதம்) உள்ளது; அதில் அல்லாஹ்வின் கட்டளையும் உள்ளது; எனினும், அதைப் பின்னர் புறக்கணித்து விடுகிறார்கள்; இவர்கள் நம்பிக்கை கொள்கிறவர்கள் அல்லர்.
5:44 اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰٮةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌ ۚ يَحْكُمُ بِهَا النَّبِيُّوْنَ الَّذِيْنَ اَسْلَمُوْا لِلَّذِيْنَ هَادُوْا وَ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَآءَ ۚ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنَا இறக்கினோம் التَّوْرٰٮةَ தவ்றாத்தை فِيْهَا அதிலே هُدًى நேர்வழி وَّنُوْرٌ ۚ இன்னும் ஒளி يَحْكُمُ தீர்ப்பளிப்பார்(கள்) بِهَا அதைக் கொண்டே النَّبِيُّوْنَ நபிமார்கள் الَّذِيْنَ எவர்கள் اَسْلَمُوْا முற்றிலும் பணிந்தனர் لِلَّذِيْنَ எவர்களுக்கு هَادُوْا யூதராகி விட்டனர் وَ الرَّبَّانِيُّوْنَ இன்னும் குருமார்கள் وَالْاَحْبَارُ இன்னும் பண்டிதர்கள் بِمَا எதன் காரணமாக اسْتُحْفِظُوْا காக்கும்படி கோரப்பட்டார்கள் مِنْ كِتٰبِ வேதத்தை اللّٰهِ அல்லாஹ்வின் وَكَانُوْا இன்னும் இருந்தார்கள் عَلَيْهِ அதன் மீது شُهَدَآءَ ۚ சாட்சியாளர்களாக فَلَا تَخْشَوُا ஆகவே அஞ்சாதீர்கள் النَّاسَ மக்களுக்கு وَاخْشَوْنِ எனக்கு அஞ்சுங்கள் وَلَا تَشْتَرُوْا வாங்காதீர்கள் بِاٰيٰتِىْ என் வசனங்களுக்குப் பகரமாக ثَمَنًا கிரயத்தை قَلِيْلًا ؕ சொற்பமானது وَمَنْ எவர் لَّمْ يَحْكُمْ தீர்ப்பளிக்கவில்லை بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக்கொண்டு اللّٰهُ அல்லாஹ் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْكٰفِرُوْنَ நிராகரிப்பவர்கள்
5:44. இன்னா அன்Zஜல்னத் தவ்ராத Fபீஹா ஹுத(ன்)வ் வ னூர்; யஹ்குமு Bபிஹன் னBபிய்யூனல் லதீன அஸ்லமூ லில்லதீன ஹாதூ வர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு Bபிமஸ் துஹ்Fபிளூ மின் கிதாBபில் லாஹி வ கானூ 'அலய்ஹி ஷுஹதா'; Fபலா தக்-ஷவுன் னாஸ வக்-ஷவ்னி வலா தஷ்தரூ Bபி ஆயாதீ தமனன் கலீலா; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் காFபிரூன்
5:44. நிச்சயமாக நாம்தாம் தவ்ராத்தை இறக்கிவைத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன; (அல்லாஹ்வுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும் இன்னும், அதற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதாலும் அதனைக்கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளித்துவந்தார்கள்; எனவே, நம்பிக்கையாளர்களே! நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்தாம் நிராகரிப்பவர்கள்.
5:45 وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيْهَاۤ اَنَّ النَّفْسَ بِالنَّفْسِۙ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْاَنْفَ بِالْاَنْفِ وَالْاُذُنَ بِالْاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّۙ وَالْجُرُوْحَ قِصَاصٌؕ فَمَنْ تَصَدَّقَ بِهٖ فَهُوَ كَفَّارَةٌ لَّهٗ ؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
وَكَتَبْنَا இன்னும் விதித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது فِيْهَاۤ அதில் اَنَّ நிச்சயமாக النَّفْسَ உயிர் بِالنَّفْسِۙ உயிருக்குப் பதிலாக وَالْعَيْنَ இன்னும் கண் بِالْعَيْنِ கண்ணுக்குப் பதிலாக وَالْاَنْفَ இன்னும் மூக்கு بِالْاَنْفِ மூக்குக்குப் பதிலாக وَالْاُذُنَ இன்னும் காது بِالْاُذُنِ காதுக்குப் பதிலாக وَالسِّنَّ இன்னும் பல் بِالسِّنِّۙ பல்லுக்குப் பதிலாக وَالْجُرُوْحَ இன்னும் காயங்கள் قِصَاصٌؕ பழிவாங்கப்படும் فَمَنْ எவர் تَصَدَّقَ மன்னிப்பார் بِهٖ அதை فَهُوَ அது كَفَّارَةٌ பரிகாரமாகும் لَّهٗ ؕ அவருக்கு وَمَنْ எவர்கள் لَّمْ يَحْكُمْ தீர்ப்பளிக்கவில்லை بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக்கொண்டு اللّٰهُ அல்லாஹ் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள்
5:45. வ கதBப்னா 'அலய்ஹிம் Fபீஹா அன்னன் னFப்ஸ Bபின்னFப்ஸி வல்'அய்ன Bபில்'அய்னி வல் அன்Fப Bபிலன்Fபி வல் உதுன Bபில் உதுனி வஸ்ஸின்ன Bபிஸ்ஸின்னி வல்ஜுரூஹ கிஸாஸ்; Fபமன் தஸத்தக Bபிஹீ Fபஹுவ கFப்Fபாரதுல் லஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுள் ளாலிமூன்
5:45. அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) பழிவாங்கப்படும்" என்று விதித்திருந்தோம்; எனினும், ஒருவர் இதனை (பழி வாங்குவதை மன்னித்து) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரு(டைய பாவங்களு)க்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ - நிச்சயமாக அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.
5:46 وَقَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌ ۙ وَّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّـلْمُتَّقِيْنَ ؕ
وَقَفَّيْنَا தொடரச்செய்தோம் عَلٰٓى اٰثَارِهِمْ அவர்களுடைய அடிச்சுவடுகளில் بِعِيْسَى ஈஸாவை ابْنِ மகன் مَرْيَمَ மர்யமுடைய مُصَدِّقًا உண்மைப்படுத்துபவராக لِّمَا எதை بَيْنَ يَدَيْهِ தனக்கு முன் مِنَ இருந்து التَّوْرٰٮةِ தவ்றாத் وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் الْاِنْجِيْلَ இன்ஜீலை فِيْهِ அதில் هُدًى நேர்வழி وَّنُوْرٌ ۙ இன்னும் ஒளி وَّ مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியது لِّمَا بَيْنَ يَدَيْهِ எதை/தனக்கு முன் مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்திலிருந்து وَهُدًى நேர்வழியாக وَّمَوْعِظَةً இன்னும் ஓர் உபதேசமாக لِّـلْمُتَّقِيْنَ ؕ அஞ்சுபவர்களுக்கு
5:46. வ கFப்Fபய்னா 'அலா ஆதாரிஹிம் Bபி 'ஈஸBப் னி மர்யம முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஆதய்னாஹுல் இன்ஜீல Fபீஹி ஹுத(ன்)வ் வ னூரு(ன்)வ் வ முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி மினத் தவ்ராதி வ ஹுத(ன்)வ் வ மவ்'இளதல் லில்முத்தகீன்
5:46. இன்னும் (முன்சென்ற தூதர்களான) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்குமுன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச்செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியாகவும் உபதேசமாகவும் இருந்தது.
5:47 وَلْيَحْكُمْ اَهْلُ الْاِنْجِيْلِ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فِيْهِؕ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
وَلْيَحْكُمْ தீர்ப்பளிக்கவும் اَهْلُ الْاِنْجِيْلِ இன்ஜீலுடையவர்கள் بِمَاۤ இறக்கியதைக்கொண்டு اَنْزَلَ اللّٰهُ அல்லாஹ் فِيْهِؕ அதில் وَمَنْ எவர்கள் لَّمْ يَحْكُمْ தீர்ப்பளிக்கவில்லை بِمَاۤ எதைக் கொண்டு اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ பாவிகள்
5:47. வல்யஹ்கும் அஹ்லுல் இன்ஜீலி Bபிமா அன்Zஜலல் லாஹு Fபீஹ்; வ மல் லம் யஹ்கும் Bபிமா அன்Zஜலல் லாஹு Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
5:47. இன்னும், (உண்மையான) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள்தான் பாவிகளாவார்கள்.
5:48 وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتٰبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ عَمَّا جَآءَكَ مِنَ الْحَـقِّؕ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَّمِنْهَاجًا ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَـعَلَـكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰـكِنْ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ فَاسْتَبِقُوا الْخَـيْـرٰتِؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَۙ
وَاَنْزَلْنَاۤ இன்னும் இறக்கினோம் اِلَيْكَ உமக்கு الْكِتٰبَ இவ்வேதத்தை بِالْحَـقِّ உண்மையுடன் கூடிய مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னுள்ளதை مِنَ இருந்து الْكِتٰبِ வேதம் وَمُهَيْمِنًا இன்னும் பாதுகாக்கக் கூடியதாக عَلَيْهِ அதை فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக் கொண்டே اللّٰهُ அல்லாஹ் وَلَا تَتَّبِعْ பின்பற்றாதீர் اَهْوَآء விருப்பங்களை هُمْ அவர்களுடைய عَمَّا எதைவிட்டு جَآءَكَ வந்தது/உமக்கு مِنَ الْحَـقِّؕ உண்மையிலிருந்து لِكُلٍّ ஒவ்வொருவருக்கும் جَعَلْنَا ஏற்படுத்தினோம் مِنْكُمْ உங்களில் شِرْعَةً ஒரு மார்க்கத்தை وَّمِنْهَاجًا ؕ இன்னும் ஒரு வழியை وَلَوْ شَآءَ நாடி இருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَجَـعَلَـكُمْ உங்களை ஆக்கியிருப்பான் اُمَّةً ஒரு சமுதாயமாக وَّاحِدَةً ஒரே وَّلٰـكِنْ எனினும் لِّيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக فِىْ مَاۤ اٰتٰٮكُمْ உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் فَاسْتَبِقُوا ஆகவே முந்துங்கள் الْخَـيْـرٰتِؕ நன்மைகளில் اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் جَمِيْعًا அனைவரும் فَيُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَۙ முரண்படுகிறீர்கள்
5:48. வ அன்Zஜல்னா இலய்கல் கிதாBப Bபில்ஹக்கி முஸத்திகல்லிமா Bபய்ன யதய்ஹி மினல் கிதாBபி வ முஹய்மினன் 'அலய்ஹி Fபஹ்கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் 'அம்மா ஜா'அக மினல் ஹக்க்; லிகுல்லின் ஜ'அல்னா மின்கும் ஷிர்'அத(ன்)வ் வ மின்ஹாஜா; வ லவ் ஷா'அல் லாஹு லஜ'அலகும் உம்மத(ன்)வ் வாஹிதத(ன்)வ் வ லாகில் லியBப்லுவகும் Fபீ மா ஆதாகும் Fபஸ்தBபிகுல் கய்ராத்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப் Bபி'உகும் Bபிமா குன்தும் Fபீஹி தக்தலிFபூன்
5:48. மேலும், (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; இது, தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தை(யும்) மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது; எனவே, அல்லாஹ் இறக்கிவைத்த (வேதத்)தைக்கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச்செய்வீராக! உமக்கு வந்த உண்மையைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றவேண்டாம்; உங்களில் ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்: அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே, நன்மையானவற்றின் பால் முந்திக்கொள்ளுங்கள், நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே மீளவேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டுக் கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
5:49 وَاَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ وَاحْذَرْهُمْ اَنْ يَّفْتِنُوْكَ عَنْۢ بَعْضِ مَاۤ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكَؕ فَاِنْ تَوَلَّوْا فَاعْلَمْ اَنَّمَا يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّصِيْبَهُمْ بِبَـعْضِ ذُنُوْبِهِمْؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوْنَ
وَاَنِ احْكُمْ தீர்ப்பளிப்பீராக بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதைக்கொண்டு اللّٰهُ அல்லாஹ் وَلَا تَتَّبِعْ பின்பற்றாதீர் اَهْوَآءَهُمْ அவர்களின் விருப்பங்களை وَاحْذَرْهُمْ அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக اَنْ يَّفْتِنُوْكَ உம்மை அவர்கள் திருப்பிவிடுவது عَنْۢ بَعْضِ சிலவற்றிலிருந்து مَاۤ எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் اِلَيْكَؕ உமக்கு فَاِنْ تَوَلَّوْا அவர்கள் திரும்பினால் فَاعْلَمْ அறிந்து கொள்வீராக اَنَّمَا எல்லாம் يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّصِيْبَهُمْ அவர்களை சோதிப்பதைத்தான் بِبَـعْضِ சிலவற்றின் ذُنُوْبِهِمْؕ அவர்களுடைய பாவங்கள் وَاِنَّ كَثِيْرًا நிச்சயமாக அதிகமானோர் مِّنَ النَّاسِ மனிதர்களில் لَفٰسِقُوْنَ பாவிகள்தான்
5:49. வ அனிஹ் கும் Bபய்னஹும் Bபிமா அன்Zஜலல் லாஹு வலா தத்தBபிஃ அஹ்வா'அஹும் வஹ்தர்ஹும் அய் யFப்தினூக 'அம் Bபஃளி மா அன்Zஜலல் லாஹு இலய்க Fப இன் தவல்லவ் Fபஃலம் அன்னமா யுரீதுல் லாஹு அய் யுஸீBபஹும் BபிBபஃளி துனூBபிஹிம்; வ இன்ன கதீரம் மினன் னாஸி லFபாஸிகூன்
5:49. இன்னும், அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக! அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றைவிட்டும், அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால் சில பாவங்களின் காரணமாக, அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்துகொள்வீராக! மேலும், நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
5:50 اَفَحُكْمَ الْجَـاهِلِيَّةِ يَـبْغُوْنَؕ وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ حُكْمًا لِّـقَوْمٍ يُّوْقِنُوْنَ
اَفَحُكْمَ சட்டத்தையா? الْجَـاهِلِيَّةِ அறியாமைக்காலத்தின் يَـبْغُوْنَؕ தேடுகின்றனர் وَمَنْ யார் اَحْسَنُ மிக அழகானவன் مِنَ விட اللّٰهِ அல்லாஹ்வை حُكْمًا சட்டத்தால் لِّـقَوْمٍ சமுதாயத்திற்கு يُّوْقِنُوْنَ உறுதி கொள்கின்றனர்
5:50. அFபஹுக்மல் ஜாஹிலிய்யதி யBப்கூன்; வ மன் அஹ்ஸனு மினல் லாஹி ஹுக்மல் லிகவ்மி(ன்)ய் யூகினூன்
5:50. அறியாமைக் காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிடத் தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?
5:51 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْيَهُوْدَ وَالنَّصٰرٰۤى اَوْلِيَآءَ ؔۘ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍؕ وَمَنْ يَّتَوَلَّهُمْ مِّنْكُمْ فَاِنَّهٗ مِنْهُمْؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّخِذُوا ஆக்காதீர்கள் الْيَهُوْدَ யூதர்களை وَالنَّصٰرٰۤى இன்னும் கிறித்தவர்களை اَوْلِيَآءَ நண்பர்களாக بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ நண்பர்கள் بَعْضٍؕ சிலரின் وَمَنْ எவர் يَّتَوَلَّهُمْ நட்புகொள்வார்/அவர்களுடன் مِّنْكُمْ உங்களில் فَاِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْهُمْؕ அவர்களைச் சார்ந்தவர் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
5:51. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் யஹூத வன் னஸாரா அவ்லியா'; Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வ மய் யதவல்லஹும் மின்கும் Fப இன்னஹூ மின்ஹும்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
5:51. நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5:52 فَتَـرَى الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يُّسَارِعُوْنَ فِيْهِمْ يَقُوْلُوْنَ نَخْشٰٓى اَنْ تُصِيْبَـنَا دَآٮِٕرَةٌ ؕ فَعَسَى اللّٰهُ اَنْ يَّاْتِىَ بِالْفَتْحِ اَوْ اَمْرٍ مِّنْ عِنْدِهٖ فَيُصْبِحُوْا عَلٰى مَاۤ اَسَرُّوْا فِىْۤ اَنْفُسِهِمْ نٰدِمِيْنَ ؕ
فَتَـرَى காண்பீர் الَّذِيْنَ எவர்களை فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் يُّسَارِعُوْنَ விரைபவர்களாக فِيْهِمْ அவர்களில் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் نَخْشٰٓى பயப்படுகிறோம் اَنْ تُصِيْبَـنَا எங்களைஅடைவதை دَآٮِٕرَةٌ ؕ ஆபத்து فَعَسَى ஆகலாம் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّاْتِىَ வருவது بِالْفَتْحِ வெற்றியைக் கொண்டு اَوْ அல்லது اَمْرٍ ஒரு காரியம் مِّنْ இருந்து عِنْدِهٖ தன்னிடம் فَيُصْبِحُوْا ஆகிவிடுவார்கள் عَلٰى மீது مَاۤ எது اَسَرُّوْا மறைத்தார்கள் فِىْۤ اَنْفُسِهِمْ தங்கள் உள்ளங்களில் نٰدِمِيْنَ ؕ துக்கப்பட்டவர்களாக
5:52. Fபதரல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)ய் யுஸாரி'ஊன Fபீஹிம் யகூலூன னக்-ஷா அன் துஸீBபனா தா'இரஹ்; Fப'அஸல்லாஹு அய் யாதிய Bபில்Fபத்ஹி அவ் அம்ரிம் மின் 'இன்திஹீ Fப யுஸ்Bபிஹூ 'அலா மா அஸர்ரூ Fபீ அன்Fபுஸிஹிம் னாதிமீன்
5:52. எனவே, (நபியே!) எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதோ அத்தகையவர்தாம் - அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்; (அவர்களைப் பகைத்துக்கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சூழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்)காரியத்தையோ கொடுத்து விடலாம்; அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்துவைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.
5:53 وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ اِنَّهُمْ لَمَعَكُمْ ؕ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِيْنَ
وَيَقُوْلُ இன்னும் கூறுவார்(கள்) الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்கள் اَهٰٓؤُلَاۤءِ இவர்கள்தானா الَّذِيْنَ எவர்கள் اَقْسَمُوْا சத்தியம்செய்தார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது جَهْدَ உறுதியாக اَيْمَانِهِمْۙ தங்கள் சத்தியங்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَمَعَكُمْ ؕ உங்களுடன்தான் حَبِطَتْ அழிந்து விட்டன اَعْمَالُهُمْ அவர்களுடைய (நல்ல)செயல்கள் فَاَصْبَحُوْا ஆகவே ஆகிவிட்டனர் خٰسِرِيْنَ நஷ்டவாளிகளாக
5:53. வ யகூலுல் லதீன ஆமனூ அஹா'உலா'இல் லதீன அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் இன்னஹும் லம'அகும்; ஹBபிதத் அஃமாலுஹும் Fப அஸ்Bபஹூ காஸிரீன்
5:53. (மறுமையில் இவர்களைச் சுட்டிக்காண்பித்து) "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருப்பதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தாமா?" என்று நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்; இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும், இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.
5:54 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ ؕ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே مَنْ எவரும் يَّرْتَدَّ மாறுவார் مِنْكُمْ உங்களிலிருந்து عَنْ விட்டு دِيْـنِهٖ தன் மார்க்கம் فَسَوْفَ يَاْتِى கொண்டு வருவான் اللّٰهُ அல்லாஹ் بِقَوْمٍ ஒரு சமுதாயத்தை يُّحِبُّهُمْ நேசிப்பான்/அவர்களை وَيُحِبُّوْنَهٗۤ ۙ இன்னும் நேசிப்பார்கள் / அவனை اَذِلَّةٍ பணிவானவர்கள் عَلَى இடம் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் اَعِزَّةٍ கண்டிப்பானவர்கள் عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களிடம் يُجَاهِدُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا يَخَافُوْنَ பயப்பட மாட்டார்கள் لَوْمَةَ பழிப்பை لَاۤٮِٕمٍ ؕ பழிப்பவனின் ذٰ لِكَ இது فَضْلُ அருள் اللّٰهِ அல்லாஹ்வின் يُؤْتِيْهِ அதை கொடுக்கின்றான் مَنْ يَّشَآءُ ؕ எவருக்கு/நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ நன்கறிந்தவன்
5:54. யா அய்யுஹல் லதீன ஆமனூ மய் யர்தத்த மின்கும் 'அன் தீனிஹீ Fபஸவ்Fப ய'தில்லாஹு Bபிகவ்மி(ன்)ய் யுஹிBப்Bபுஹும் வ யுஹிBப்Bபூனஹூ அதில்லதின் 'அலல் மு'மினீன அ'இZஜ்Zஜதின் 'அலல் காFபிரீன யுஜாஹிதூன Fபீ ஸBபீலில் லாஹி வலா யகாFபூன லவ்மத லா'இம்; தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி மய் யஷா'; வல்லாஹு வாஸி'உன் 'அலீம்
5:54. நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தம் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறொரு கூட்டத்தாரைக் கொண்டுவருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் நம்பிக்கையாளர்களின்மீது இரக்கம் காட்டக்கூடியவர்களாகவும், நிராகரிப்பாளர்களின் மீது கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர்செய்வார்கள்; நிந்தனை செய்பவரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது, அல்லாஹ்வின் அருளாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.
5:55 اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ
اِنَّمَا எல்லாம் وَلِيُّكُمُ உங்கள் நண்பன் اللّٰهُ அல்லாஹ் وَرَسُوْلُهٗ இன்னும் அவனுடைய தூதர் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوا நம்பிக்கை கொண்டார்கள் الَّذِيْنَ எவர்கள் يُقِيْمُوْنَ நிலை நிறுத்துகின்றனர் الصَّلٰوةَ தொழுகையை وَيُؤْتُوْنَ இன்னும் கொடுக்கின்றனர் الزَّكٰوةَ ஸகாத்தை وَهُمْ رَاكِعُوْنَ அவர்கள் தலைகுனிவார்கள்
5:55. இன்னமா வலிய்யுகுமுல் லாஹு வ ரஸூலுஹூ வல் லதீன ஆமனுல் லதீன யுகீமூனஸ் ஸலாத வ யு'தூனZஜ் Zஜகாத வ ஹும் ராகி'ஊன்
5:55. நிச்சயமாக உங்களுடைய உற்ற நண்பனெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும், நம்பிக்கை கொண்டார்களே அவர்களும்தான்; அவர்கள் எத்தகையோரெனில் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிந்தவர்களாக இருக்கும் நிலையில் தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்.
5:56 وَمَنْ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوْلَهٗ وَالَّذِيْنَ اٰمَنُوْا فَاِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْغٰلِبُوْنَ
وَمَنْ எவர் يَّتَوَلَّ நேசிக்கிறார் اللّٰهَ அல்லாஹ்வை وَ رَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதரை وَالَّذِيْنَ اٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை فَاِنَّ நிச்சயமாக حِزْبَ படையினர் اللّٰهِ அல்லாஹ்வின் هُمُ அவர்கள்தான் الْغٰلِبُوْنَ வெற்றியாளர்கள்
5:56. வ மய் யதவல்லல் லாஹ வ ரஸூலஹூ வல்லதீன ஆமனூ Fப இன்ன ஹிZஜ்Bபல் லாஹி ஹுமுல் காலிBபூன்
5:56. அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் யார் நேசர்களாக ஆக்குகின்றார்களோ, அப்பொழுது (அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்); நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினராகிய அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
5:57 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَـتَّخِذُوا الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَكُمْ هُزُوًا وَّلَعِبًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَالْـكُفَّارَ اَوْلِيَآءَ ۚ وَاتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَـتَّخِذُوا எடுத்துக் கொள்ளாதீர்கள் الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا எடுத்துக்கொண்டார்கள் دِيْنَكُمْ உங்கள் மார்க்கத்தை هُزُوًا பரிகாசமாக وَّلَعِبًا இன்னும் விளையாட்டாக مِّنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ உங்களுக்குமுன்னர் وَالْـكُفَّارَ இன்னும் நிராகரிப்பவர்களை اَوْلِيَآءَ ۚ நண்பர்களாக وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:57. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தத்தகிதுல் லதீனத் தகதூ தீனகும் ஹுZஜுவ(ன்)வ் வ ல'இBபம் மினல் லதீன ஊதுல் கிதாBப மின் கBப்லிகும் வல்குFப்Fபார அவ்லியா'; வத்தகுல் லாஹ இன் குன்தும் முஉ'மினீன்
5:57. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்து உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் ஆக்கிக்கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.
5:58 وَ اِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ
وَ اِذَا نَادَيْتُمْ நீங்கள் அழைத்தால் اِلَى الصَّلٰوةِ தொழுகைக்கு اتَّخَذُوْهَا அதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர் هُزُوًا பரிகாசமாக وَّلَعِبًا ؕ இன்னும் விளையாட்டாக ذٰ لِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَوْمٌ மக்கள் لَّا يَعْقِلُوْنَ புரிய மாட்டார்கள்
5:58. வ இதா னாதய்தும் இலஸ் ஸலாதித் தகதூஹா ஹுZஜு வன்'வ் வ ல'இBபா; தாலிக Bபிஅன்ன்னஹும் கவ்முல் லா யஃகிலூன்
5:58. இன்னும், நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; அது (ஏனெனில்) அவர்கள் அறிவில்லாத கூட்டத்தினர் என்பதினால்தான்.
5:59 قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ هَلْ تَـنْقِمُوْنَ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَـيْنَا وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلُ ۙ وَاَنَّ اَكْثَرَكُمْ فٰسِقُوْنَ
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே هَلْ تَـنْقِمُوْنَ நீங்கள் வெறுக்கிறீர்களா? (பழிக்கிறீர்களா?) مِنَّاۤ எங்களை اِلَّاۤ தவிர اَنْ اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை اِلَـيْنَا எங்களுக்கு وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை مِنْ قَبْلُ ۙ முன்னர் وَاَنَّ اَكْثَرَ நிச்சயமாக அதிகமானவர்கள் كُمْ உங்களில் فٰسِقُوْنَ பாவிகள்
5:59. குல் யா அஹ்லல் கிதாBபி ஹல் தன்கிமூன மின்னா இல்லா அன் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வமா உன்Zஜில மின் கBப்லு வ அன்ன்ன அக்தரகும் Fபாஸிகூன்
5:59. "வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதைத் தவிர, வேறு எதற்காகவும் நீங்கள் எங்களைப் பழிக்கவில்லை; நிச்சயமாக, உங்களில் பெரும்பாலோர் பாவிகளாக இருக்கின்றீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
5:60 قُلْ هَلْ اُنَـبِّئُكُمْ بِشَرٍّ مِّنْ ذٰ لِكَ مَثُوْبَةً عِنْدَ اللّٰهِ ؕ مَنْ لَّعَنَهُ اللّٰهُ وَغَضِبَ عَلَيْهِ وَجَعَلَ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَـنَازِيْرَ وَعَبَدَ الطَّاغُوْتَ ؕ اُولٰٓٮِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ عَنْ سَوَآءِ السَّبِيْلِ
قُلْ கூறுவீராக هَلْ اُنَـبِّئُكُمْ நான் உங்களுக்கு அறிவிக்கவா? بِشَرٍّ மிகக் கெட்டவனை مِّنْ விட ذٰ لِكَ இதை مَثُوْبَةً தண்டனையால் عِنْدَ اللّٰهِ ؕ அல்லாஹ்விடம் مَنْ எவர் لَّعَنَهُ சபித்தான்/அவரை اللّٰهُ அல்லாஹ் وَغَضِبَ இன்னும் கோபித்தான் عَلَيْهِ அவர்(கள்) மீது وَجَعَلَ ஆக்கினான் مِنْهُمُ அவர்களில் الْقِرَدَةَ குரங்குகளாக وَالْخَـنَازِيْرَ இன்னும் பன்றிகளாக وَعَبَدَ இன்னும் வணங்கினார்(கள்) الطَّاغُوْتَ ؕ ஷைத்தானை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் شَرٌّ மிகக் கெட்டவர்கள் مَّكَانًا தகுதியால் وَّاَضَلُّ இன்னும் மிகவும் வழிதவறியவர்கள் عَنْ இருந்து سَوَآءِ நேரான (நடு) السَّبِيْلِ பாதை
5:60. குல் ஹல் உனBப்Bபி'உகும் Bபிஷர்ரிம் மின் தாலிக மதூBபதன் 'இன்தல் லாஹ்; மல்ல'அன ஹுல் லாஹு வ களிBப 'அலய்ஹி வ ஜ'அல மின்ஹுமுல் கிரதத வல் கனாZஜீர வ 'அBபதத் தாகூத்; உலா'இக ஷர்ரும் மகான(ன்)வ் வ அளல்லு 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
5:60. "அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதிபலனை அடைந்தவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அல்லாஹ் எவர்களைச் சபித்து இன்னும், அவர்கள் மீது கோபமும் கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானை வணங்கியவர்களும்தான்; அவர்கள்தாம் தீய இடத்திற்குரியவர்கள்; நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
5:61 وَاِذَا جَآءُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا يَكْتُمُوْنَ
وَاِذَا جَآءُوْ அவர்கள் வந்தால் كُمْ உங்களிடம் قَالُوْۤا கூறினர் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் وَقَدْ திட்டமாக دَّخَلُوْا நுழைந்தார்கள் بِالْكُفْرِ நிராகரிப்பைக் கொண்டே وَهُمْ இன்னும் அவர்கள் قَدْ திட்டமாக خَرَجُوْا வெளியேறினார்கள் بِهٖؕ அதனுடன் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை كَانُوْا இருந்தார்கள் يَكْتُمُوْنَ மறைக்கிறார்கள்
5:61. வ இதா ஜா'ஊகும் காலூ ஆமன்னா வ கத் தகலூ Bபில்குFப்ரி வ ஹும் கத் கரஜூ Bபிஹ்; வல்லாஹு அஃலமு Bபிமா கானூ யக்துமூன்
5:61. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் உம்மிடம் வந்தால் "நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்!" என்று கூறுகிறார்கள்; ஆனால், உண்மையிலேயே அவர்கள் நிராகரிப்புடன்தான் வந்தார்கள்; இன்னும், அதனுடனேயே வெளியேறியும் விட்டார்கள்; அவர்கள் மறைத்து வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
5:62 وَتَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يُسَارِعُوْنَ فِى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَ ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَتَرٰى காண்பீர் كَثِيْرًا அதிகமானவர்களை مِّنْهُمْ அவர்களில் يُسَارِعُوْنَ விரைபவர்களாக فِى الْاِثْمِ பாவத்தில் وَالْعُدْوَانِ இன்னும் அநியாயம் وَاَكْلِهِمُ இன்னும் விழுங்குவது السُّحْتَ ؕ ஆகாத செல்வத்தை لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
5:62. வ தரா கதீரம் மின்ஹும் யுஸாரி'ஊன Fபில் இத்மி வல்'உத்வானி வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஃமலூன்
5:62. அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், வரம்பு மீறுவதிலும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதிலும் விரைந்து செல்வதை (நபியே!) நீர் காண்பீர்; அவர்கள் செய்துகொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகும்.
5:63 لَوْلَا يَنْهٰٮهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَؕ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ
لَوْلَا يَنْهٰٮهُمُ அவர்களை தடை செய்ய வேண்டாமா? الرَّبَّانِيُّوْنَ குருமார்கள் وَالْاَحْبَارُ இன்னும் பண்டிதர்கள் عَنْ قَوْلِهِمُ அவர்களுடைய பேச்சிலிருந்து الْاِثْمَ பாவமான وَاَكْلِهِمُ இன்னும் அவர்கள் விழுங்குவது السُّحْتَؕ விலக்கப்பட்டதை لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது كَانُوْا இருந்தார்கள் يَصْنَعُوْنَ செய்கிறார்கள்
5:63. லவ் லா யன்ஹாஹுமுர் ரBப்Bபானிய்யூன வல் அஹ்Bபாரு 'அன் கவ்லிஹிமுல் இத்மா வ அக்லிஹிமுஸ் ஸுஹ்த்; லBபி'ஸ மா கானூ யஸ்ன'ஊன்
5:63. அவர்கள் பாவமானதைக் கூறுவதிலிருந்தும், விலக்கப்பட்டதை அவர்கள் உண்பதிலிருந்தும், வணக்கசாலிகளும், (அவர்களுடைய) மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? இவர்கள் செய்துகொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகும்.
5:64 وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ؕ غُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِ ۙ يُنْفِقُ كَيْفَ يَشَآءُ ؕ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًا ؕ وَاَ لْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ؕ كُلَّمَاۤ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙ وَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًا ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ
وَقَالَتِ கூறினர் الْيَهُوْدُ யூதர்கள் يَدُ கை اللّٰهِ அல்லாஹ்வின் مَغْلُوْلَةٌ ؕ கட்டப்பட்டிருக்கிறது غُلَّتْ கட்டப்பட்டன اَيْدِيْهِمْ அவர்களுடைய கைகள் وَلُعِنُوْا சபிக்கப்பட்டனர் بِمَا எதன் காரணமாக قَالُوْا ۘ கூறினர் بَلْ மாறாக يَدٰهُ அவனுடைய இரு கைகள் مَبْسُوْطَتٰنِ ۙ விரிக்கப்பட்டுள்ளன يُنْفِقُ தர்மம் புரிகிறான் كَيْفَ எவ்வாறு يَشَآءُ ؕ அவன் நாடுகிறான் وَلَيَزِيْدَنَّ நிச்சயமாக அதிகப்படுத்தும் كَثِيْرًا அதிகமானோர் مِّنْهُمْ அவர்களில் مَّاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் طُغْيَانًا வரம்பு மீறுவதை وَّكُفْرًا ؕ இன்னும் நிராகரிப்பை وَاَ لْقَيْنَا ஏற்படுத்தினோம் بَيْنَهُمُ அவர்களுக்கு மத்தியில் الْعَدَاوَةَ பகைமையை وَالْبَغْضَآءَ இன்னும் வெறுப்பை اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ ؕ மறுமை நாள் كُلَّمَاۤ எல்லாம் اَوْقَدُوْا மூட்டினார்கள் نَارًا நெருப்பை لِّلْحَرْبِ போருக்கு اَطْفَاَهَا அணைத்து விட்டான்/அதை اللّٰهُ ۙ அல்லாஹ் وَيَسْعَوْنَ இன்னும் விரைகிறார்கள் فِى الْاَرْضِ பூமியில் فَسَادًا ؕ கலகம் செய்வதற்காக وَاللّٰهُ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُفْسِدِيْنَ கலகம் செய்பவர்களை
5:64. வ காலதில் யஹூது யதுல்லாஹி மக்லூலஹ்; குல்லத் அய்தீஹிம் வ லு'இனூ Bபிமா காலூ; Bபல் யதாஹு மBப்ஸூ ததானி யுன்Fபிகு கய்Fப யஷா'; வ ல யZஜீதன்ன கதீரம்ம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக்யான(ன்)வ் வ குFப்ரா; வ அல்கய்னா Bபய்னஹுமுல் 'அதாவத வல் Bபக்ளா அ' இலா யவ்மில் கியாமஹ்; குல்லமா அவ்கதூ னாரல் லில்ஹர்Bபி அத் Fப-அஹல் லாஹ்; வ யஸ்'அவ்ன Fபில் அர்ளி Fபஸாதா; வல் லாஹு லா யுஹிBப்Bபுல் முFப்ஸிதீன்
5:64. "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள் தாம் கட்டப்பட்டுள்ளன; இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்: உம்மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதமாகிய)து அவர்கள் அநேகரில் வரம்புமீறுதலையும், நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே, அவர்களிடையே பகைமையையும், வெறுப்பையும் மறுமைநாள் வரை நாம் போட்டு விட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும் போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும், அவர்கள் பூமியில் குழப்பம் செய்துகொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
5:65 وَلَوْ اَنَّ اَهْلَ الْـكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَـكَفَّرْنَا عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِيْمِ
وَلَوْ اَنَّ இருந்தால் اَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَاتَّقَوْا இன்னும் அஞ்சினார்கள் لَـكَفَّرْنَا நிச்சயமாக அகற்றிடுவோம் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ பாவங்களை அவர்களுடைய وَلَاَدْخَلْنٰهُمْ இன்னும் நுழைத்திடுவோம்/அவர்களை جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِ இன்பம் நிறைந்த
5:65. வ லவ் அன்ன அஹ்லல் கிதாBபி ஆமனூ வத்தகவ் லகFப்Fபர்னா 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ ல அத்கல்னாஹு ஜன்னாதின் ன'ஈம்
5:65. வேதமுடையவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்கு) அஞ்சினால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை அவர்களைவிட்டும் போக்கி, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழையவைப்போம்.
5:66 وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَ كَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْؕ مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ؕ وَكَثِيْرٌ مِّنْهُمْ سَآءَ مَا يَعْمَلُوْنَ
وَلَوْ اَنَّهُمْ அவர்கள் இருந்தால் اَقَامُوا நிலைநிறுத்தினார்கள் التَّوْرٰٮةَ தவ்றாத்தை وَالْاِنْجِيْلَ இன்னும் இன்ஜீலை وَمَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِمْ அவர்களுக்கு مِّنْ இருந்து رَّبِّهِمْ அவர்களுடைய இறைவன் لَاَ كَلُوْا இன்னும் புசித்திருப்பார்கள் مِنْ இருந்து فَوْقِهِمْ அவர்களுக்கு மேல் وَمِنْ تَحْتِ இன்னும் கீழிருந்து اَرْجُلِهِمْؕ அவர்களுடைய கால்கள் مِنْهُمْ அவர்களில் اُمَّةٌ ஒரு கூட்டம் مُّقْتَصِدَةٌ ؕ நேர்மையானது وَكَثِيْرٌ இன்னும் அதிகமானோர் مِّنْهُمْ அவர்களில் سَآءَ கெட்டு விட்டன مَا எது يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
5:66. வ லவ் அன்னஹும் அகாமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்ஹிம் மிர் ரBப்Bபிஹிம் ல அகலூ மின் Fபவ்கிஹிம் வ மின் தஹ்தி அர்ஜுலிஹிம்; மின்ஹும் உம்மதும் முக்த ஸிதது(ன்)வ் வ கதீரும் மின்ஹும் ஸா'அ மா யஃமலூன்
5:66. இன்னும், அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும் நிலைநாட்டியிருந்தால், அவர்கள் மேலே (வானத்தில்) இருந்தும், தம் கால்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (உணவுகளைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர் (தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர்; இன்னும், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையேயாகும்.
5:67 يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ؕ وَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَـتَهٗ ؕ وَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْـكٰفِرِيْنَ
يٰۤـاَيُّهَا الرَّسُوْلُ தூதரே بَلِّغْ எடுத்துரைப்பீராக مَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ ؕ உம் இறைவன் وَاِنْ لَّمْ تَفْعَلْ நீர் செய்யவில்லையென்றால் فَمَا بَلَّغْتَ நீர் எடுத்துரைக்கவில்லை رِسٰلَـتَهٗ ؕ தூதை/அவனுடைய وَاللّٰهُ அல்லாஹ் يَعْصِمُكَ காப்பாற்றுவான்/உம்மை مِنَ النَّاسِ ؕ மக்களிடமிருந்து اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ சமுதாயத்தை الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்கள்
5:67. யா அய்யுஹர் ரஸூலு Bபல்லிக் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக வ இல் லம் தFப்'அல் Fபமா Bபல்லக்த ரிஸாலதஹ்; வல்லாஹு யஃஸிமுக மினன் னாஸ்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் காFபிரீன்
5:67. தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
5:68 قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ لَسْتُمْ عَلٰى شَىْءٍ حَتّٰى تُقِيْمُوا التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ وَمَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ ؕ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًاۚ فَلَا تَاْسَ عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே لَسْتُمْ நீங்கள் இல்லை عَلٰى شَىْءٍ ஒரு விஷயத்திலும் حَتّٰى வரை تُقِيْمُوا நிலைநிறுத்துவீர்கள் التَّوْرٰٮةَ தவ்றாத்தை وَالْاِنْجِيْلَ இன்ஜீலை وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِمْ உங்களுக்கு مِّنْ இருந்து رَّبِّكُمْ ؕ உங்கள் இறைவன் وَلَيَزِيْدَنَّ நிச்சயமாக அதிகப்படுத்துகிறது كَثِيْرًا அதிகமானவர்களுக்கு مِّنْهُ அவர்களில் مَّاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் طُغْيَانًا வரம்பு மீறுவதை وَّكُفْرًاۚ இன்னும் நிராகரிப்பை فَلَا تَاْسَ ஆகவே கவலைப்படாதீர் عَلَى மீது الْقَوْمِ சமுதாயம் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்கள்
5:68. குல் யா அஹ்லல் கிதாBபி லஸ்தும் 'அலா ஷய்'இன் ஹத்தா துகீமுத் தவ்ராத வல் இன்ஜீல வ மா உன்Zஜில இலய்கும் மிர் ரBப்Bபிகும்; வ லயZஜீதன்ன கதீரம் மின்ஹும் மா உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக துக் யான(ன்)வ் வ குFப்ரன் Fபலா தாஸ 'அலல் கவ்மில் காFபிரீன்
5:68. "வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் நிலைநாட்டும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்; மேலும், உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு வரம்புமீறுதலையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே, நிராகரிக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்படவேண்டாம்.
5:69 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِــٴُــوْنَ وَالنَّصٰرٰى مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هَادُوْا யூதர்கள் وَالصَّابِــٴُــوْنَ இன்னும் சாபியீன்கள் وَالنَّصٰرٰى இன்னும் கிறித்தவர்கள் مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَعَمِلَ இன்னும் செய்தார் صَالِحًـا நன்மையை فَلَا خَوْفٌ ஒரு பயமுமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ இன்னும் அவர்கள் இல்லை يَحْزَنُوْنَ கவலைப்படுவார்கள்
5:69. இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வஸ் ஸாBபி'ஊன வன் னஸாரா மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
5:69. நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், ஸாபீயின்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு எந்தவிதமான பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
5:70 لَقَدْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَاَرْسَلْنَاۤ اِلَيْهِمْ رُسُلًا ؕ كُلَّمَا جَآءَهُمْ رَسُوْلٌ ۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُهُمْۙ فَرِيْقًا كَذَّبُوْا وَفَرِيْقًا يَّقْتُلُوْنَ
لَقَدْ திட்டமாக اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَ உறுதிமொழியை بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களின் وَاَرْسَلْنَاۤ இன்னும் அனுப்பினோம் اِلَيْهِمْ அவர்களிடம் رُسُلًا ؕ தூதர்களை كُلَّمَا جَآءَهُمْ அவர்களிடம் வந்தபோதெல்லாம் رَسُوْلٌ ۢ ஒரு தூதர் بِمَا எதை கொண்டு لَا تَهْوٰٓى விரும்பாது اَنْفُسُهُمْۙ அவர்களுடைய மனங்கள் فَرِيْقًا ஒரு வகுப்பாரை كَذَّبُوْا பொய்ப்பித்தனர் وَفَرِيْقًا இன்னும் ஒரு வகுப்பாரை يَّقْتُلُوْنَ கொல்கின்றனர்
5:70. லகத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல வ அர்ஸல்னா இலய்ஹிம் ருஸுலன் குல்லமா ஜா'அஹும் ரஸூலும் Bபிமா லா தஹ்வா அன்Fபுஸுஹும் Fபரீகன் கத்தBபூ வ Fபரீக(ன்)ய் யக்துலூன்
5:70. திட்டமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் உறுதிமொழி வாங்கினோம்; அவர்களிடம் தூதர்களையும் அனுப்பிவைத்தோம்; எனினும், அவர்கள் மனம் விரும்பாதவற்றை (கட்டளைகளை நம்) தூதர் அவர்களிடம் கொண்டுவந்தபோதெல்லாம், (தூதர்களில்) ஒரு பிரிவினரைப் பொய்ப்பித்தும் இன்னும், ஒரு பிரிவினரைக் கொலை செய்தும் வந்தார்கள்.
5:71 وَحَسِبُوْۤا اَلَّا تَكُوْنَ فِتْنَةٌ فَعَمُوْا وَصَمُّوْا ثُمَّ تَابَ اللّٰهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوْا وَصَمُّوْا كَثِيْرٌ مِّنْهُمْؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ
وَحَسِبُوْۤا இன்னும் எண்ணினர் اَلَّا تَكُوْنَ ஏற்படாது فِتْنَةٌ தண்டனை فَعَمُوْا ஆகவே குருடாகினர் وَصَمُّوْا இன்னும் செவிடாகினர் ثُمَّ பிறகு تَابَ பிழைபொறுத்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது ثُمَّ பிறகும் عَمُوْا குருடாகினர் وَصَمُّوْا இன்னும் செவிடாகினர் كَثِيْرٌ அதிகமானோர் مِّنْهُمْؕ அவர்களில் وَاللّٰهُ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குபவன் بِمَا எதை يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
5:71. வ ஹஸிBபூ அல்லா தகூன Fபித்னதுன் Fப'அமூ வ ஸம்மூ தும்ம தாBபல் லாஹு 'அலய்ஹிம் தும்ம 'அமூ வ ஸம்மூ கதீரும் மின்ஹும்; வல்லாஹு Bபஸீரும் Bபிமா யஃமலூன்
5:71. (இதனால் தங்களுக்கு) எந்தவிதமான வேதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக்கொண்டனர்; ஆகவே, அவர்கள் (உண்மையையுணர முடியாக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள்; பின்னர், அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டான்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும், செவிடர்களாகவுமே ஆகிவிட்டனர்; அல்லாஹ், அவர்கள் செய்பவற்றையெல்லாம் (நன்கு) உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.
5:72 لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ
لَقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தார் الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் هُوَ அவன்தான் الْمَسِيْحُ மஸீஹ்தான் ابْنُ மகன் مَرْيَمَ ؕ மர்யமுடைய وَقَالَ கூறினார் الْمَسِيْحُ மஸீஹ் يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبِّىْ என் இறைவன் وَرَبَّكُمْ ؕ இன்னும் உங்கள் இறைவன் اِنَّهٗ நிச்சயமாக செய்தி مَنْ எவர் يُّشْرِكْ இணைவைக்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு فَقَدْ திட்டமாக حَرَّمَ தடுத்து விடுகிறான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِ அவர் மீது الْجَـنَّةَ சொர்க்கத்தை وَمَاْوٰٮهُ இன்னும் அவருடைய தங்குமிடம் النَّارُ ؕ நரகம்தான் وَمَا இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ உதவியாளர்களில் எவரும்
5:72. லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ ஹுவல் மஸீஹுBப் னு மர்யம வ காலல் மஸீஹு யா Bபனீ இஸ்ரா'ஈல உஃBபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும் இன்ன்னஹூ ம(ன்)ய்-யுஷ்ரிக் Bபில்லாஹி Fபகத் ஹர்ரமல் லாஹு 'அலய்ஹில் ஜன்னத வமா வாஹுன் னாரு வமா லிள்ளாலிமீன மின் அன்ஸார்
5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா)தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் திட்டமாக நிராகரித்துவிட்டனர்; ஆனால், மஸீஹ் கூறினார்: "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!" என்று; எனவே, எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பானோ, அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாகத் தடுத்துவிட்டான்; மேலும், அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும்; அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
5:73 لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ ثَالِثُ ثَلٰثَةٍ ۘ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّاۤ اِلٰـهٌ وَّاحِدٌ ؕ وَاِنْ لَّمْ يَنْتَهُوْا عَمَّا يَقُوْلُوْنَ لَيَمَسَّنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابٌ اَ لِيْمٌ
لَـقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் ثَالِثُ ثَلٰثَةٍ ۘ மூவரில் ஒருவன் وَمَا இல்லை مِنْ இருந்து اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اِلٰـهٌ ஒரு வணக்கத்திற்குரியவன் وَّاحِدٌ ؕ ஒரே وَاِنْ لَّمْ يَنْتَهُوْا அவர்கள் விலகவில்லையெனில் عَمَّا எதிலிருந்து يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் لَيَمَسَّنَّ நிச்சயமாக அடையும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْهُمْ அவர்களில் عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தக்கூடியது
5:73. லகத் கFபரல் லதீன காலூ இன்னல் லாஹ தாலிது தலாதஹ்; வமா மின் இலாஹின் இல்லா இலாஹு(ன்)வ் வாஹித்; வ இல்லம் யன்தஹூ 'அம்மா யகூலூன லயமஸ் ஸன்னல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபுன் அலீம்
5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் நிராகரிப்பவர்களாக ஆகிவிட்டார்கள்; ஏனென்றால், ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால், நிச்சயமாக அவர்களில் நிராகரித்தோருக்கு துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
5:74 اَفَلَا يَتُوْبُوْنَ اِلَى اللّٰهِ وَيَسْتَغْفِرُوْنَهٗؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ
اَفَلَا يَتُوْبُوْنَ திருந்தி திரும்ப மாட்டார்களா? اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் وَيَسْتَغْفِرُوْنَهٗؕ இன்னும் மன்னிப்புக் கோரமாட்டார்களா/அவனிடம் وَ இன்னும் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
5:74. அFபலா யதூBபூன இலல் லாஹி வ யஸ்தக்Fபிரூனஹ்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
5:74. இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி அவனிடம் மன்னிப்புக் கேட்கமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
5:75 مَا الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ اِلَّا رَسُوْلٌ ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُؕ وَاُمُّهٗ صِدِّيْقَةٌ ؕ كَانَا يَاْكُلٰنِ الطَّعَامَؕ اُنْظُرْ كَيْفَ نُبَيِّنُ لَهُمُ الْاٰيٰتِ ثُمَّ انْظُرْ اَ نّٰى يُؤْفَكُوْنَ
مَا الْمَسِيْحُ மஸீஹ் இல்லை ابْنُ மகன் مَرْيَمَ மர்யமுடைய اِلَّا தவிர رَسُوْلٌ ۚ ஒரு தூதரே قَدْ خَلَتْ சென்றுவிட்டனர் مِنْ قَبْلِهِ இவருக்கு முன்னர் الرُّسُلُؕ தூதர்கள் وَاُمُّهٗ இன்னும் அவருடைய தாய் صِدِّيْقَةٌ ؕ ஒரு மகாஉண்மையாளர் كَانَا இருந்தனர் يَاْكُلٰنِ சாப்பிடுவார்கள் الطَّعَامَؕ உணவு اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு نُبَيِّنُ தெளிபடுத்துகிறோம் لَهُمُ அவர்களுக்கு الْاٰيٰتِ அத்தாட்சிகளை ثُمَّ பிறகு انْظُرْ கவனிப்பீராக اَ نّٰى எவ்வாறு يُؤْفَكُوْنَ திருப்பப்படுகின்றனர்
5:75. மல் மஸீஹுBப் னு மர்யம இல்லா ரஸூலுன் கத் கலத் மின் கBப்லிஹிர் ருஸுலு வ உம்முஹூ ஸித்தீகதுன் கானா யா குலானித் த'ஆம்; உன்ளுர் கய்Fப னுBபய்யினு லஹுமுல் ஆயாதி தும்மன் ளுர் அன்னா யு'Fபகூன்
5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் தூதரேயன்றி வேறில்லை; இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் திட்டமாகச் சென்றுவிட்டனர்; இவருடைய தாயார் மிக்க உண்மையானவர்; இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப்போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர்; அவர்களுக்கு (நம்முடைய) அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதை (நபியே!) கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!
5:76 قُلْ اَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا نَفْعًا ؕ وَاللّٰهُ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
قُلْ கூறுவீராக اَ تَعْبُدُوْنَ வணங்குகிறீர்களா? مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் مَا எவை لَا يَمْلِكُ உரிமைபெறாது لَـكُمْ உங்களுக்கு ضَرًّا தீங்களிப்பதற்கு وَّلَا نَفْعًا ؕ இன்னும் பலனளிப்பதற்கு وَاللّٰهُ அல்லாஹ் هُوَ السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ மிக அறிந்தவன்
5:76. குல் அதஃBபுதூன மின் தூனில் லாஹி மா லா யம்லிகு லகும் ளர்ர(ன்)வ் வலா னFப்'ஆ; வல்லாஹு ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
5:76. "அல்லாஹ்வையன்றி, உங்களுக்கு எந்தத் தீங்கையோ, நன்மையோ செய்ய சக்தியில்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று (நபியே!) நீர் கேளும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
5:77 قُلْ يٰۤـاَهْلَ الْـكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ غَيْرَ الْحَـقِّ وَلَا تَتَّبِعُوْۤا اَهْوَآءَ قَوْمٍ قَدْ ضَلُّوْا مِنْ قَبْلُ وَاَضَلُّوْا كَثِيْرًا وَّضَلُّوْا عَنْ سَوَآءِ السَّبِيْلِ
قُلْ கூறுவீராக يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே لَا تَغْلُوْا வரம்பு மீறாதீர்கள் فِىْ دِيْـنِكُمْ உங்கள் மார்க்கத்தில் غَيْرَ முரணாக الْحَـقِّ உண்மைக்கு وَلَا تَتَّبِعُوْۤا இன்னும் பின்பற்றாதீர்கள் اَهْوَآءَ விருப்பங்களை قَوْمٍ சமுதாயத்தின் قَدْ ضَلُّوْا வழிதவறி விட்டனர் مِنْ قَبْلُ முன்பு وَاَضَلُّوْا இன்னும் வழி கெடுத்தனர் كَثِيْرًا பலரை وَّضَلُّوْا இன்னும் வழி தவறினர் عَنْ இருந்து سَوَآءِ நேரான السَّبِيْلِ பாதை
5:77. குல் யா அஹ்லல் கிதாBபி லா தக்லூ Fபீ தீனிகும் கய்ரல் ஹக்கி வலா தத்தBபி'ஊ அஹ்வா'அ கவ்மின் கத் ளல்லூ மின் கBப்லு வ அளல்லூ கதீர(ன்)வ் வ ளல்லூ 'அன் ஸவா'இஸ் ஸBபீல்
5:77. "வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததைக் (கூறுவது) கொண்டு வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழிதவறச் செய்ததுடன், தாங்களும் நேரான வழியை விட்டும் தவறிவிட்டனர்" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
5:78 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ
لُعِنَ சபிக்கப்பட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் عَلٰى لِسَانِ நாவினால் دَاوٗدَ தாவூதுடைய وَعِيْسَى இன்னும் ஈஸாவின் ابْنِ மகன் مَرْيَمَ ؕ மர்யமின் ذٰ لِكَ அது بِمَا எதன் காரணமாக عَصَوْا மாறுசெய்தனர் وَّكَانُوْا இன்னும் இருந்தனர் يَعْتَدُوْنَ மீறுபவர்களாக
5:78. லு'இனல் லதீன கFபரூ மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா லிஸானி தாவூத வ 'ஈஸBப் னி மர்யம்; தாலிக Bபிமா 'அஸவ் வ கானூ யஃததூன்
5:78. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து நிராகரித்து விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகியவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர்; அது ஏனென்றால், அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறுசெய்து வரம்பு மீறிக் கொண்டு இருந்தார்கள் என்பதினாலாகும்.
5:79 كَانُوْا لَا يَتَـنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُ ؕ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
كَانُوْا இருந்தனர் لَا يَتَـنَاهَوْنَ ஒருவர் மற்றவரைத் தடுக்காதவர்களாக عَنْ விட்டு مُّنْكَرٍ தீமை فَعَلُوْهُ ؕ செய்தனர் / அதை لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது كَانُوْا இருந்தனர் يَفْعَلُوْنَ செய்வார்கள்
5:79. கானூ லா யதனாஹவ்ன 'அம் முன்கரின் Fப'அலூஹ்; லBபி'ஸ மா கானூ யFப'லூன்
5:79. இன்னும், தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்துகொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.
5:80 تَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يَتَوَلَّوْنَ الَّذِيْنَ كَفَرُوْاؕ لَبِئْسَ مَا قَدَّمَتْ لَهُمْ اَنْفُسُهُمْ اَنْ سَخِطَ اللّٰهُ عَلَيْهِمْ وَفِى الْعَذَابِ هُمْ خٰلِدُوْنَ
تَرٰى காண்பீர் كَثِيْرًا அதிகாமானோரை مِّنْهُمْ அவர்களில் يَتَوَلَّوْنَ நட்பு வைக்கிறார்கள் الَّذِيْنَ எவர்களிடம் كَفَرُوْاؕ நிராகரித்தார்கள் لَبِئْسَ கெட்டுவிட்டது مَا எது قَدَّمَتْ முற்படுத்தியன لَهُمْ அவர்களுக்கு اَنْفُسُهُمْ அவர்களுடைய ஆன்மாக்கள் اَنْ سَخِطَ கோபிக்கும்படியாக اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது وَفِى الْعَذَابِ இன்னும் வேதனையில்தான் هُمْ அவர்கள் خٰلِدُوْنَ நிரந்தரமாக இருப்பார்கள்
5:80. தரா கதீரம் மின்ஹும் யதவல்லவ்னல் லதீன கFபரூ; லBபி'ஸ மா கத்தமத் லஹும் அன்Fபுஸுஹும் அன் ஸகிதல் லாஹு 'அலய்ஹிம் வ Fபில் 'அதாBபி ஹும் காலிதூன்
5:80. (நபியே!) அவர்களில் அநேகர் நிராகரிப்பாளர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்படுத்தி வைத்தது கெட்டதேயாகும்; ஏனெனில், அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; மேலும், வேதனையில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பார்கள்.
5:81 وَلَوْ كَانُوْا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالنَّبِىِّ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مَا اتَّخَذُوْهُمْ اَوْلِيَآءَ وَلٰـكِنَّ كَثِيْرًا مِّنْهُمْ فٰسِقُوْنَ
وَلَوْ كَانُوْا அவர்கள் இருந்திருந்தால் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்பவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வை وَالنَّبِىِّ இன்னும் நபியை وَمَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْهِ அவருக்கு مَا اتَّخَذُوْ எடுத்திருக்க மாட்டார்கள் هُمْ அவர்களை اَوْلِيَآءَ நண்பர்களாக وَلٰـكِنَّ என்றாலும் كَثِيْرًا அதிகமானோர் مِّنْهُمْ அவர்களில் فٰسِقُوْنَ பாவிகள்
5:81. வ லவ் கானூ யு'மினூன Bபில்லாஹி வன் னBபிய்யி வ மா உன்Zஜில இலய்ஹி மத்தகதூஹும் அவ்லியா'அ வ லாகின்ன கதீரம் மின்ஹும் Fபாஸிகூன்
5:81. அவர்கள் அல்லாஹ்வின் மீதும், நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால், அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
5:82 لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْا ۚ وَلَـتَجِدَنَّ اَ قْرَبَهُمْ مَّوَدَّةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰى ؕ ذٰ لِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ
لَـتَجِدَنَّ (நீர்) காண்பீர் اَشَدَّ கடுமையானவர்களாக النَّاسِ மக்களில் عَدَاوَةً பகைமையினால் لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوا நம்பிக்கை கொண்டார்கள் الْيَهُوْدَ யூதர்களை وَالَّذِيْنَ இன்னும் எவர்களை اَشْرَكُوْا ۚ இணைவைத்தனர் وَلَـتَجِدَنَّ இன்னும் நிச்சயமாக காண்பீர் اَ قْرَبَهُمْ அவர்களில் மிக நெருங்கியவர்களாக مَّوَدَّةً நேசத்தில் لِّـلَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களுக்கு الَّذِيْنَ எவர்களை قَالُوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் نَصٰرٰى ؕ கிறித்தவர்கள் ذٰ لِكَ அது بِاَنَّ காரணம்/நிச்சயமாக مِنْهُمْ அவர்களில் قِسِّيْسِيْنَ குருக்கள் وَرُهْبَانًا இன்னும் துறவிகள் وَّاَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يَسْتَكْبِرُوْنَ பெருமை கொள்ள மாட்டார்கள்
5:82. லதஜிதன்ன அஷத் தன் னாஸி 'அதாவதல் லில்லதீன ஆமனுல் யஹூத வல்லதீன அஷ்ரகூ வ லதஜிதன்ன அக்ரBபஹும் மவத்ததல் லில் லதீன ஆமனுல் லதீன காலூ இன்னா னஸாரா; தாலிக Bபி அன்ன மின்ஹும் கிஸீஸீன வ ருஹ்Bபான(ன்)வ் வ அன்னஹும் லா யஸ்தக்Bபிரூன்
5:82. நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நிச்சயமாக (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்” என்று சொல்பவர்களை, நம்பிக்கையாளர்களுக்கு நேசத்தால் (மனிதர்களாகிய) அவர்களில் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; அது (ஏனென்றால்), அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர்; மேலும், அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை என்பதினாலாகும்.
5:83 وَاِذَا سَمِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَى الرَّسُوْلِ تَرٰٓى اَعْيُنَهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوْا مِنَ الْحَـقِّۚ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ
وَاِذَا سَمِعُوْا அவர்கள் செவியுற்றால் مَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَى பக்கம் الرَّسُوْلِ தூதர் تَرٰٓى காண்பீர் اَعْيُنَهُمْ அவர்களின் கண்களை تَفِيْضُ நிரம்பி வழியக்கூடியதாக مِنَ الدَّمْعِ கண்ணீரால் مِمَّا எதன் காரணமாக عَرَفُوْا அறிந்தனர் مِنَ الْحَـقِّۚ உண்மையை يَقُوْلُوْنَ கூறுகின்றனர் رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاكْتُبْنَا ஆகவே பதிவு செய்/எங்களை مَعَ உடன் الشّٰهِدِيْنَ சாட்சியாளர்கள்
5:83. வ இதா ஸமி'ஊ மா உன்Zஜில இலர் ரஸூலி தரா அஃயுனஹும் தFபீளு மினத் தம்'இ மிம்ம்மா 'அரFபூ மினல்ஹக்க்; யகூலூன ரBப்Bபனா ஆமன்னா Fபக்துBப்னா ம'அஷ் ஷாஹிதீன்
5:83. இன்னும், (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதைச் செவியேற்றால், உண்மையை அவர்கள் அறிந்துகொண்ட (காரணத்)தால் அவர்களுடைய கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர்: "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவுசெய்து கொள்வாயாக!" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
5:84 وَمَا لَـنَا لَا نُؤْمِنُ بِاللّٰهِ وَمَا جَآءَنَا مِنَ الْحَـقِّۙ وَنَطْمَعُ اَنْ يُّدْخِلَـنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصّٰلِحِيْنَ
وَمَا என்ன لَـنَا எங்களுக்கு لَا نُؤْمِنُ நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருக்க بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَا இன்னும் எது جَآءَ வந்தது نَا நமக்கு مِنَ الْحَـقِّۙ சத்தியம் وَنَطْمَعُ நாங்கள் ஆசைப்படாமல் இருக்கவும் اَنْ يُّدْخِلَـنَا எங்களை / அவன் சேர்ப்பதை رَبُّنَا எங்கள் இறைவன் مَعَ உடன் الْقَوْمِ மக்கள் الصّٰلِحِيْنَ நல்லவர்கள்
5:84. வமா லனா லா னு'மினு Bபில்லாஹி வமா ஜா'அனா மினல் ஹக்கி வ னத்ம'உ அய் யுத்கிலனா ரBப்Bபுனா ம'அல் கவ்மிஸ் ஸாலிஹீன்
5:84. மேலும், "அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்" (என்றும் அவர்கள் கூறுவர்).
5:85 فَاَثَابَهُمُ اللّٰهُ بِمَا قَالُوْا جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَذٰ لِكَ جَزَآءُ الْمُحْسِنِيْنَ
فَاَثَابَهُمُ ஆகவே பிரதிபலனாகஅளித்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِمَا எதன் காரணமாக قَالُوْا கூறினார்கள் جَنّٰتٍ சொர்க்கங்களை تَجْرِىْ ஓடுகிறது مِنْ இருந்து تَحْتِهَا அதன் கீழே الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا ؕ அதில் وَذٰ لِكَ இது جَزَآءُ கூலி الْمُحْسِنِيْنَ நல்லறம்புரிபவர்களுடைய
5:85. Fப அதாBபஹுமுல் லாஹு Bபிமா காலூ ஜன்ன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; வ தாலிக ஜZஜா'உல் முஹ்ஸினீன்
5:85. அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, சுவனபதிகளை அல்லாஹ் அவர்களுக்குப் பரிசாகக் கொடுப்பான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் நிரந்தரமாக இருப்பார்கள் - இன்னும், இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய (நற்)கூலியாகும்.
5:86 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَاۤ நம் வசனங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَحِيْمِ நரகவாசிகள்தான்
5:86. வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுல் ஜஹீம்
5:86. ஆனால், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றார்களோ, அ(த்தகைய)வர்கள் நரகவாசிகளேயாவார்கள்.
5:87 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُحَرِّمُوْا طَيِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكُمْ وَلَا تَعْتَدُوْا ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تُحَرِّمُوْا ஆகாதவையாக ஆக்காதீர்கள் طَيِّبٰتِ நல்லவற்றை مَاۤ எவை اَحَلَّ ஆகுமாக்கினான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு وَلَا تَعْتَدُوْا ؕ இன்னும் வரம்புமீறாதீர்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُعْتَدِيْنَ வரம்புமீறிகளை
5:87. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா துஹர்ரிமூ தய்யிBபாதி மா அஹல்லல் லாஹு லகும் வலா தஃததூ; இன்னல் லாஹ லா யுஹிBப்Bபுல் மு'ததீன்
5:87. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கியுள்ள, பரிசுத்தமான பொருட்களை விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும், வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
5:88 وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا وَّ اتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اَنْـتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ
وَكُلُوْا இன்னும் புசியுங்கள் مِمَّا எதிலிருந்து رَزَقَكُمُ வழங்கினான்/ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் حَلٰلًا அனுமதிக்கப்பட்டதை طَيِّبًا நல்லது وَّ اتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اَنْـتُمْ நீங்கள் بِهٖ அவனை مُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறீர்கள்
5:88. வ குலூ மிம்மா ரZஜககுமுல் லாஹு ஹலாலன் தய்யிBபா; வத்தகுல் லாஹல்லதீ அன்தும் Bபிஹீ மு'மினூன்
5:88. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து ஆகுமான நல்லவற்றைப் புசியுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
5:89 لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْۤ اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَ ۚ فَكَفَّارَتُهٗۤ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ ؕ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ؕ ذٰ لِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ؕ وَاحْفَظُوْۤا اَيْمَانَكُمْ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
لَا மாட்டான் يُؤَاخِذُكُمُ உங்களை தண்டிக்க اللّٰهُ அல்லாஹ் بِاللَّغْوِ வீணானதற்காக فِىْۤ இல் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்கள் وَلٰـكِنْ எனினும் يُّؤَاخِذُكُمْ உங்களைத் தண்டிப்பான் بِمَا எதற்காக عَقَّدْتُّمُ உறுதிப்படுத்தினீர்கள் الْاَيْمَانَ ۚ சத்தியங்களை فَكَفَّارَتُهٗۤ அதற்குப் பரிகாரம் اِطْعَامُ உணவளிப்பது عَشَرَةِ பத்து مَسٰكِيْنَ ஏழைகளுக்கு مِنْ இருந்து اَوْسَطِ நடுத்தரமானது مَا எது تُطْعِمُوْنَ உணவளிக்கிறீர்கள் اَهْلِيْكُمْ உங்கள் குடும்பத்திற்கு اَوْ அல்லது كِسْوَتُهُمْ அவர்களுக்கு ஆடையளிப்பது اَوْ அல்லது تَحْرِيْرُ விடுதலையிடுவது رَقَبَةٍ ؕ ஓர் அடிமை فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லையெனில் فَصِيَامُ நோன்பிருத்தல் ثَلٰثَةِ மூன்று اَيَّامٍ ؕ நாட்களுக்கு ذٰ لِكَ இது كَفَّارَةُ பரிகாரம் اَيْمَانِكُمْ உங்கள் சத்தியங்களின் اِذَا حَلَفْتُمْ ؕ நீங்கள் சத்தியம் செய்தால் وَاحْفَظُوْۤا காப்பாற்றுங்கள் اَيْمَانَكُمْ ؕ உங்கள் சத்தியங்களை كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ தன் வசனங்களை لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
5:89. லா யு'ஆகிதுகுமுல் லாஹு Bபில்லக்வி Fபீ அய்மானிகும் வ லாகி(ன்)ய் யு'ஆகிதுகுமுல் Bபிமா 'அக்கத்துமுல் அய்மான அ கFப்Fபார துஹூ இத்'ஆமு 'அஷரதி மஸாகீன மின் அவ்ஸதி மா துத்'இமூன அஹ்லீகும் அவ் கிஸ்வதுஹும் அவ் தஹ்ரீரு ரகBபதின் Fபமல்லம் யஜித் Fப ஸியாமு தலாததி அய்யாம்; தாலிக கFப்Fபாரது அய்மானிகும் இதா ஹலFப்தும்; வஹ்Fபளூ அய்மானகும்; கதாலிக யுBபய்யினுல் லாஹு லகும் ஆயாதிஹீ ல'அல்லகும் தஷ்குரூன்
5:89. உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான்; எனினும், (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே, சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு, பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது, அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்; அல்லது, ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால், (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால் இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, அவன் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.
5:90 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِنَّمَا الْخَمْرُ நிச்சயமாக மது وَالْمَيْسِرُ இன்னும் சூது وَالْاَنْصَابُ இன்னும் சிலைகள் وَالْاَزْلَامُ இன்னும் அம்புகள் رِجْسٌ அருவருக்கத்தக்கவை مِّنْ عَمَلِ செயல்களில் الشَّيْطٰنِ ஷைத்தானின் فَاجْتَنِبُوْهُ ஆகவே, விட்டு விலகுங்கள்/இவற்றை لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
5:90. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்னமல் கம்ரு வல்மய்ஸிரு வல் அன்ஸாBபு வல் அZஜ்லாமு ரிஜ்ஸும் மின் 'அமலிஷ் ஷய்தானி Fபஜ்தனிBபூஹு ல'அல் லகும் துFப்லிஹூன்
5:90. நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக நட்டுவைக்கப்பட்டிருக்கும்) சிலைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் செயலிலுள்ள அருவருக்கத் தக்கவையாகும்; ஆகவே, இவற்றைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் - அதனால், நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91 اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ
اِنَّمَا எல்லாம் يُرِيْدُ நாடுகிறான் الشَّيْطٰنُ ஷைத்தான் اَنْ يُّوْقِعَ அவன் உண்டுபண்ணுவது بَيْنَكُمُ உங்களுக்குமத்தியில் الْعَدَاوَةَ பகைமை وَالْبَغْضَآءَ இன்னும் வெறுப்பை فِى الْخَمْرِ மதுவினால் وَالْمَيْسِرِ இன்னும் சூதாட்டத்தினால் وَيَصُدَّكُمْ இன்னும் அவன் தடுப்பது/உங்களை عَنْ ذِكْرِ ஞாபகத்திலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் وَعَنِ الصَّلٰوةِ ۚ இன்னும் தொழுகையிலிருந்து فَهَلْ ஆகவே ? اَنْـتُمْ நீங்கள் مُّنْتَهُوْنَ விலகுபவர்கள்
5:91. இன்னமா யுரீதுஷ் ஷய்தானு அய் யூகி'அ Bபய்னகுமுல் 'அதாவத வல் Bபக்ளா'அ Fபில் கம்ரி வல் மய்ஸிரி வ யஸுத்தகும் 'அன் திக்ரில் லாஹி வ 'அனிஸ் ஸலாதி Fபஹல் அன்தும் முன்தஹூன்
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டுபண்ணவும், அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடுவதையுமேயாகும்; எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்வீர்களா?
5:92 وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَاحْذَرُوْا ۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ தூதருக்கு وَاحْذَرُوْا ۚ இன்னும் எச்சரிக்கையாக இருங்கள் فَاِنْ تَوَلَّيْتُمْ நீங்கள்திரும்பினால் فَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக عَلٰى رَسُوْلِنَا நம் தூதர் மீது الْبَلٰغُ எடுத்துரைப்பது الْمُبِيْنُ தெளிவாக
5:92. வ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வஹ்தரூ; Fப இன் தவல் லய்தும் Fபஃலமூ அன்னமா 'அலா ரஸூலினல் Bபலாகுல் முBபீன்
5:92. இன்னும், அல்லாஹ்வுக்கும் வழிப்படுங்கள்; (அவன்) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; (இதற்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்து விட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எத்திவைப்பதே நம் தூதர் மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
5:93 لَـيْسَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِيْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
لَـيْسَ இல்லை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை جُنَاحٌ குற்றம் فِيْمَا எதில் طَعِمُوْۤا புசித்தார்கள் اِذَا مَا اتَّقَوا தவிர்ந்து கொண்டால் وَّاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை ثُمَّ பிறகு اتَّقَوا அஞ்சினார்கள் وَّاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் ثُمَّ பிறகு اتَّقَوا அஞ்சினார்கள் وَّاَحْسَنُوْا ؕ இன்னும் நல்லறம் செய்தார்கள் وَاللّٰهُ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கிறான் الْمُحْسِنِيْنَ நல்லறம்புரிவோரை
5:93. லய்ஸ 'அலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் Fபீமா த'இமூ இதா மத் தகவ் வ ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி தும்மத் தகவ் வ ஆமனூ தும்மத் தகவ் வ அஹ்ஸனூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
5:93. நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்தவர்கள் மீது, அவர்கள் அஞ்சி நம்பிக்கை கொண்டு (அதன்மீது நிலைத்திருந்து) நற்செயல்கள் புரிந்து பின்னர், (விலக்கப்பட்டவற்றை) அவர்கள் அஞ்சி, நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அவர்கள் அஞ்சி, (பிறருக்கு) அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால் - (தடுக்கப்பட்டவற்றிலிருந்து முன்னர்) அவர்கள் சாப்பிட்டது குறித்து எவ்வித குற்றமுமில்லை; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
5:94 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَيَبْلُوَنَّكُمُ اللّٰهُ بِشَىْءٍ مِّنَ الصَّيْدِ تَنَالُـهٗۤ اَيْدِيْكُمْ وَ رِمَاحُكُمْ لِيَـعْلَمَ اللّٰهُ مَنْ يَّخَافُهٗ بِالْـغَيْبِ ۚ فَمَنِ اعْتَدٰى بَعْدَ ذٰ لِكَ فَلَهٗ عَذَابٌ اَ لِيْمٌ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَيَبْلُوَنَّكُمُ நிச்சயமாக சோதிப்பான் / உங்களை اللّٰهُ அல்லாஹ் بِشَىْءٍ சிலதைக் கொண்டு مِّنَ الصَّيْدِ வேட்டைகளில் تَنَالُـهٗۤ அடைந்து விடுகின்றன/அதை اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَ رِمَاحُكُمْ இன்னும் ஈட்டிகள் / உங்கள் لِيَـعْلَمَ அறிவதற்காக اللّٰهُ அல்லாஹ் مَنْ எவர் يَّخَافُهٗ பயப்படுகிறார்/தன்னை بِالْـغَيْبِ ۚ மறைவில் فَمَنِ எவர் اعْتَدٰى மீறினார் بَعْدَ ذٰ لِكَ இதற்குப் பின்பு فَلَهٗ அவருக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தக்கூடியது
5:94. யா அய்யுஹல் லதீன ஆமனூ ல யBப்லுவன்ன்னகுமுல் லாஹு Bபிஷய்'இம் மினஸ் ஸய்தி தனாலுஹூ அய்தீகும் வ ரிமாஹுகும் லியஃலமல் லாஹு மய் யகாFபுஹூ Bபில்கய்Bப்; Fபமனிஃ ததா Bபஃத தாலிக Fபலஹூ 'அதாBபுன் அலீம்
5:94. நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக் கூடியதைக் கொண்டு நிச்சயமாக உங்களை அல்லாஹ் சோதிப்பான்; ஏனென்றால், மறைவில் தன்னை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ, அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
5:95 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَقْتُلُوا கொல்லாதீர்கள் الصَّيْدَ வேட்டையை وَاَنْـتُمْ நீங்கள் حُرُمٌ ؕ இஹ்ராமுடையவர்கள் وَمَنْ எவர் قَتَلَهٗ கொன்றார்/அதை مِنْكُمْ உங்களில் مُّتَعَمِّدًا வேண்டுமென்றே (நாடியவராக) فَجَزَآءٌ தண்டனை مِّثْلُ ஒப்பானது مَا எது قَتَلَ கொன்றார் مِنَ இருந்து النَّعَمِ கால்நடைகள் يَحْكُمُ தீர்ப்பளிப்பர் بِهٖ அதற்கு ذَوَا عَدْلٍ நேர்மையான இருவர் مِّنْكُمْ உங்களில் هَدْيًاۢ பலியாக بٰلِغَ அடையக் கூடியது الْـكَعْبَةِ கஅபா اَوْ அல்லது كَفَّارَةٌ பரிகாரம் طَعَامُ உணவளிப்பது مَسٰكِيْنَ ஏழைகள் اَوْ அல்லது عَدْلُ சமமானது ذٰ لِكَ அது صِيَامًا நோன்பால் لِّيَذُوْقَ அவன் அனுபவிப்பதற்காக وَبَالَ கெட்ட முடிவை اَمْرِهٖ ؕ செயல் / தனது عَفَا மன்னித்தான் اللّٰهُ அல்லாஹ் عَمَّا سَلَفَ ؕ முன் நடந்தவற்றை وَمَنْ எவன் عَادَ மீண்டான் فَيَنْتَقِمُ தண்டிப்பான் اللّٰهُ அல்லாஹ் مِنْهُ ؕ அவனை وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُو انْتِقَامٍ தண்டிப்பவன்
5:95. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தக்துலுஸ் ஸய்த வ அன்தும் ஹுரும்; வ மன் கதலஹூ மின்கும் முத்'அம் மிதன் FபஜZஜா'உம் மித்லு மா கதல மினன்ன'அமி யஹ்குமு Bபிஹீ தவா 'அத்லிம் மின்கும் ஹத்யம் Bபாலிகல் கஃBபதி அவ் கFப்Fபாரதுன் த'ஆமு மஸாகீன அவ் 'அத்லு தாலிக ஸியாமல் லியதூக வBபால அம்ரிஹ்; 'அFபல் லாஹு 'அம்மா ஸலFப்; வ மன் 'ஆத Fபயன்த கிமுல் லாஹு மின்ஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் துன்திகாம்
5:95. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராமிலிருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை ஈடாகக் கொடுக்கவேண்டியது (அதற்கான) தண்டனையாகும்; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய பலிப்பிராணியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; அல்லது (பரிகாரம் அளிக்க ஏதும் இல்லையாயின்) தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்கவேண்டும்; முன்னர் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான்; எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரைத் தண்டிப்பான்; அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்.
5:96 اُحِلَّ لَـكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهٗ مَتَاعًا لَّـكُمْ وَلِلسَّيَّارَةِ ۚ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَـرِّ مَا دُمْتُمْ حُرُمًا ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ
اُحِلَّ அனுமதிக்கப்பட்டுள்ளது لَـكُمْ உங்களுக்கு صَيْدُ வேட்டையாடுவது الْبَحْرِ கடலில் وَطَعَامُهٗ இன்னும் அதை புசிப்பது مَتَاعًا பயனளிப்பதற்காக لَّـكُمْ உங்களுக்கு وَلِلسَّيَّارَةِ ۚ இன்னும் பயணிகளுக்கு وَحُرِّمَ விலக்கப்பட்டுள்ளது عَلَيْكُمْ உங்களுக்கு صَيْدُ வேட்டையாடுவது الْبَـرِّ தரையில் مَا دُمْتُمْ இருக்கும்போதெல்லாம் حُرُمًا ؕ இஹ்ராமுடைய வர்களாக وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اِلَيْهِ அவன் பக்கம் تُحْشَرُوْنَ நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
5:96. உஹில்ல லகும் ஸய்துல் Bபஹ்ரி வ த'ஆமுஹூ மதா'அல் லகும் வ லிஸ்ஸய்யாரதி வ ஹுர்ரிம 'அலய்கும் ஸய்துல் Bபர்ரி மா தும்தும் ஹுருமா; வத்தகுல் லாஹல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
5:96. உங்களுக்கும் (இதர) பயணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
5:97 جَعَلَ اللّٰهُ الْـكَعْبَةَ الْبَيْتَ الْحَـرَامَ قِيٰمًا لِّـلنَّاسِ وَالشَّهْرَ الْحَـرَامَ وَالْهَدْىَ وَالْقَلَاۤٮِٕدَ ؕ ذٰ لِكَ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
جَعَلَ ஆக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْـكَعْبَةَ கஅபாவை الْبَيْتَ வீடு الْحَـرَامَ புனிதமானது قِيٰمًا அபயமளிக்கக்கூடியது, لِّـلنَّاسِ மக்களுக்கு وَالشَّهْرَ இன்னும் மாதத்தை الْحَـرَامَ புனிதமானது وَالْهَدْىَ இன்னும் பலியை وَالْقَلَاۤٮِٕدَ ؕ இன்னும் மாலைகளை ذٰ لِكَ அது لِتَعْلَمُوْۤا நீங்கள் அறிந்து கொள்வதற்காக اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَعْلَمُ அறிகிறான் مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَمَا இன்னும் எது فِى الْاَرْضِ பூமியில் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ நன்கறிந்தவன்
5:97. ஜ'அலல் லாஹுல் கஃBபதல் Bபய்தல் ஹராம கியாமல் லின்னாஸி வஷ் ஷஹ்ரல் ஹராம வல்ஹத்ய வல்கலா'இத்; தாலிக லிதஃலமூ அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ அன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
5:97. புனித ஆலயமாகிய கஃபாவையும், சங்கையான மாதத்தையும், பலிப்பிராணிகளையும், அடையாளமிடப்பட்ட (பலிப்)பிராணிகளையும் மனிதர்களுக்கு (மார்க்க நெறிகளுக்கு) நிலைப்பாடானவையாக அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான்; அ(ல்லாஹ் இவ்வாறு செய்த)து, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேதான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன்.
5:98 اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ؕ
اِعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ தண்டனை وَاَنَّ اللّٰهَ இன்னும் நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ ؕ பெரும் கருணையாளன்
5:98. இஃலமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBபி வ அன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
5:98. அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், கருணையாளனுமாவான்.
5:99 مَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ
مَا கடமை இல்லை عَلَى மீது الرَّسُوْلِ தூதர் اِلَّا தவிர الْبَلٰغُ ؕ எடுத்துரைப்பது وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا எதை تُبْدُوْنَ வெளிப்படுத்துகிறீர்கள் وَمَا இன்னும் எதை تَكْتُمُوْنَ மறைக்கிறீர்கள்
5:99. மா 'அலர் ரஸூலி இல்லல் Bபலாக்; வல்லாஹு யஃலமு மா துBப்தூன வமா தக்துமூன்
5:99. (நம் தூதை) எத்திவைப்பதைத் தவிர இத்தூதர் மீது (வேறு கடமை) இல்லை; இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் இன்னும், நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அல்லாஹ் அறிவான்.
5:100 قُلْ لَّا يَسْتَوِى الْخَبِيْثُ وَالطَّيِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيْثِ ۚ فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الْاَ لْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
قُلْ கூறுவீராக لَّا يَسْتَوِى சமமாகாது الْخَبِيْثُ தீயது وَالطَّيِّبُ இன்னும் நல்லது وَلَوْ اَعْجَبَكَ உம்மை ஆச்சரியப்படுத்தினாலும் كَثْرَةُ அதிகமாக இருப்பது الْخَبِيْثِ ۚ فَاتَّقُوا தீயது/ஆகவேஅஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை يٰۤاُولِى الْاَ لْبَابِ அறிவாளிகளே لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
5:100. குல் லா யஸ்தவில் கBபீது வத்தய்யிBபு வ லவ் அஃஜBபக கத்ரதுல் கBபீத்; Fபத்தகுல் லாஹ யா உலில் அல்BபாBபி ல'அல்லகும் துFப்லிஹூன்
5:100. (நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், "தீயதும் நல்லதும் சமமாகா; எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்; அதனால், நீங்கள் வெற்றியடைவீர்கள்" என்று நீர் கூறுவீராக!
5:101 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَسْـٴَــلُوْاعَنْ اَشْيَآءَ اِنْ تُبْدَ لَـكُمْ تَسُؤْكُمْۚ وَاِنْ تَسْـٴَــلُوْاعَنْهَا حِيْنَ يُنَزَّلُ الْقُرْاٰنُ تُبْدَ لَـكُمْ ؕ عَفَا اللّٰهُ عَنْهَا ؕ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَسْـٴَــلُوْا கேள்வி கேட்காதீர்கள் عَنْ اَشْيَآءَ பல விஷயங்கள் பற்றி اِنْ تُبْدَ لَـكُمْ அவை வெளியாக்கப்பட்டால்/உங்களுக்கு تَسُؤْكُمْۚ வருத்தமளிக்கும்/உங்களுக்கு وَاِنْ تَسْـٴَــلُوْا நீங்கள் கேள்வி கேட்டால் عَنْهَا அவற்றைப் பற்றி حِيْ நேரத்தில் يُنَزَّلُ இறக்கப்படும் الْقُرْاٰنُ குர்ஆன் تُبْدَ لَـكُمْ ؕ வெளியாக்கப்படும்/உங்களுக்கு عَفَا மன்னித்தான் اللّٰهُ عَنْهَا ؕ அல்லாஹ்/அவற்றை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் حَلِيْمٌ பெரும் சகிப்பாளன்
5:101. யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தஸ்'அலூ 'அன் அஷ்யா'அ இன் துBப்த லகும் தஸு'கும் வ இன் தஸ்'அலூ 'அன்ஹா ஹீன யுனZஜ்Zஜலுல் குர்'ஆனு துBப்த லகும்; 'அFபல்லாஹு 'அன்ஹா; வல்லாஹு கFபூருன் ஹலீம்
5:101. நம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக்கொண்டிராதீர்கள்: (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) வருத்தம் தரக்கூடும்; மேலும், குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில், அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிடும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்துவிட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், சகிப்புத்தன்மையுடையோனுமாவான்.
5:102 قَدْ سَاَ لَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِيْنَ
قَدْ திட்டமாக سَاَ لَهَا கேட்டார்(கள்) / அவற்றைப் பற்றி قَوْمٌ சில மக்கள் مِّنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்பு ثُمَّ பிறகு اَصْبَحُوْا மாறிவிட்டனர் بِهَا அவற்றை كٰفِرِيْنَ நிராகரிப்பவர்களாக
5:102. கத் ஸ அலஹா கவ்மும் மின் கBப்லிகும் தும்ம அஸ்Bபஹூ Bபிஹா காFபிரீன்
5:102. உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர், அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகிவிட்டார்கள்.
5:103 مَا جَعَلَ اللّٰهُ مِنْۢ بَحِيْرَةٍ وَّلَا سَآٮِٕبَةٍ وَّلَا وَصِيْلَةٍ وَّلَا حَامٍ ۙ وَّلٰـكِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ ؕ وَاَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ
مَا جَعَلَ ஏற்படுத்தவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْۢ எதையும் بَحِيْرَةٍ பஹீரா وَّلَا سَآٮِٕبَةٍ ஸாயிபா وَّلَا وَصِيْلَةٍ வஸீலா وَّلَا حَامٍ ۙ ஹறாம் وَّلٰـكِنَّ எனினும் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் يَفْتَرُوْنَ கற்பனை செய்கின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது الْـكَذِبَ ؕ பொய்யை وَاَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْقِلُوْنَ புரிய மாட்டார்கள்
5:103. மா ஜ'அலல் லாஹு மிம் Bபஹீரதி(ன்)வ் வலா ஸா'இBபதி(ன்)வ் வலா வஸீலதி(ன்)வ் வலா ஹாமி(ன்)வ் வ லாகின்னல் லதீன கFபரூ யFப்தரூன 'அலல்லாஹில் கதிBப்; வ அக்தருஹும் லா யஃகிலூன்
5:103. பஹீரா (காது கிழிக்கப்பட்ட பெண் ஒட்டகம்), ஸாயிபா (சுதந்திரமாக மேய விடப்படும் பெண் ஒட்டகம்), வஸீலா (இரட்டைக் குட்டிகளை ஈன்றதற்காக, சில நிலைகளில் விக்கிரகங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடுகள்), ஹாம் (வேலையெதுவும் வாங்கப்படாமல் சுதந்திரமாக திரியும்படி விடப்படும் ஆண் ஒட்டகம் முதலிய) இவைகளெல்லாம் (மார்க்கச் சின்னங்களாக) அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. ஆனால், நிராகரித்தோர் தாம் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுகின்றனர்; மேலும், அவர்களில் பெரும்பாலோர் விளங்க மாட்டார்கள்.
5:104 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــٴًـــا وَّلَا يَهْتَدُوْنَ
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு تَعَالَوْا வாருங்கள் اِلٰى பக்கம் مَاۤ எது اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் وَاِلَى இன்னும் பக்கம் الرَّسُوْلِ தூதர் قَالُوْا கூறினர் حَسْبُنَا எங்களுக்குப் போதும் مَا எது وَجَدْنَا கண்டோம் عَلَيْهِ அதன் மீது اٰبَآءَنَا ؕ எங்கள் மூதாதைகளை اَوَلَوْ كَانَ இருந்தாலுமா? اٰبَآؤُ மூதாதைகள் هُمْ அவர்களுடைய لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள் شَيْــٴًـــا எதையும் وَّلَا يَهْتَدُوْنَ இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
5:104. வ இதா கீல லஹும் த'ஆலவ் இலா மா அன்Zஜலல்லாஹு வ இலர் ரஸூலி காலூ ஹஸ்Bபுனா மா வஜத்னா 'அலய்ஹி ஆBபா'அனா; அவ லவ் கான ஆBபா'உஹும் லா யஃலமூன ஷய்'அ(ன்)வ் வலா யஹ்ததூன்
5:104. "அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங்கள்!" என அவர்களுக்குக் கூறப்பட்டால், "எங்களுடைய மூதாதையர்களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது" என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்).
5:105 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلَيْكُمْ اَنْفُسَكُمْۚ لَا يَضُرُّكُمْ مَّنْ ضَلَّ اِذَا اهْتَدَيْتُمْ ؕ اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا فَيُـنَـبِّـئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே عَلَيْكُمْ காத்துக்கொள்ளுங்கள் اَنْفُسَكُمْۚ உங்களை لَا மாட்டார் يَضُرُّكُمْ உங்களுக்கு தீங்கிழைக்க مَّنْ எவர் ضَلَّ வழிகெட்டார் اِذَا اهْتَدَيْتُمْ ؕ நீங்கள் நேர்வழி சென்றால் اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் جَمِيْعًا அனைவரும் فَيُـنَـبِّـئُكُمْ ஆகவே அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
5:105. யா அய்யுஹல் லதீன ஆமனூ 'அலய்கும் அன்Fபுஸகும் லா யளுர்ருகும் மன் ளல்ல இதஹ் ததய்தும்; இலல் லாஹி மர்ஜி'உகும் ஜமீ'அன் FபயுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
5:105. நம்பிக்கை கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பெற்று விட்டால் வழிதவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்யமுடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீளவேண்டியிருக்கிறது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
5:106 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْـنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرَانِ مِنْ غَيْـرِكُمْ اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِىْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ۙ وَلَا نَـكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே شَهَادَةُ சாட்சியாக இருக்க வேண்டும் بَيْنِكُمْ உங்கள் மத்தியில் اِذَا حَضَرَ சமீபித்தால் اَحَدَكُمُ உங்களில் ஒருவருக்கு الْمَوْتُ மரணம் حِيْنَ நேரத்தில் الْوَصِيَّةِ மரண சாஸனம் اثْـنٰنِ இருவர் ذَوَا عَدْلٍ நீதமான இருவர் مِّنْكُمْ உங்களில் اَوْ அல்லது اٰخَرَانِ வேறிருவர் مِنْ சேர்ந்த غَيْـرِكُمْ நீங்கள் அல்லாத اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ நீங்கள் பயணித்தால் فِى الْاَرْضِ பூமியில் فَاَصَابَتْكُمْ அடைந்தால்/உங்களை مُّصِيْبَةُ சோதனை الْمَوْتِ ؕ மரணம் تَحْبِسُوْنَهُمَا தடுத்து வையுங்கள்/அவ்விருவரை مِنْۢ بَعْدِ பின்னர் الصَّلٰوةِ தொழுகை فَيُقْسِمٰنِ அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது اِنِ ارْتَبْتُمْ நீங்கள் சந்தேகித்தால் لَا نَشْتَرِىْ வாங்கமாட்டோம் بِهٖ அதற்குப் பகரமாக ثَمَنًا ஓர் ஆதாயத்தை وَّلَوْ كَانَ அவர் இருந்தாலும் ذَا قُرْبٰى ۙ உறவினராக وَلَا نَـكْتُمُ இன்னும் மறைக்க மாட்டோம் شَهَادَةَ ۙ சாட்சி கூறியதில் اللّٰهِ அல்லாஹ்விற்காக اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்போது لَّمِنَ الْاٰثِمِيْنَ பாவிகளில்
5:106. யா அய்யுஹல் லதீன ஆமனூ ஷஹாதது Bபய்னிகும் இதா ஹளர அஹதகுமுல் மவ்து ஹீனல் வஸிய்யதித் னானி தவா 'அத்லிம் மின்கும் அவ் ஆகரானி மின் கய்ரிகும் இன் அன்தும் ளரBப்தும் Fபில் அர்ளி Fப அஸாBபத்கும் முஸீBபதுல் மவ்த்; தஹ்Bபி ஸூனஹுமா மிம் Bபஃதிஸ் ஸலாதி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி இனிர்தBப்தும் லா னஷ்தரீ Bபிஹீ தமன(ன்)வ் வ லவ் கான தா குர்Bபா வலா னக்துமு ஷஹாததல் லாஹி இன்னா இதல் லமினல் ஆதிமீன்
5:106. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து, அவர் மரண சாஸனம் செய்யும் நேரத்தில் உங்களிலிருந்து நீதியுடைய இருவர் உங்களுக்கு மத்தியில் சாட்சியாக இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது மரணத்துன்பம் ஏற்பட்டால் உங்களையல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக்கொள்ளவும்: இவ்விருவரும் அதனை சொற்ப கிரயத்திற்கு நாங்கள் விற்று விடமாட்டோம்! (எவருக்கு சாட்சியம் கூறுகின்றோமோ) அவர்கள், (எங்களுடைய) பந்துக்களாக இருந்த போதிலும், சரியே! இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைக்கவும் மாட்டோம்! (அவ்வாறு செய்திருந்தால்) அப்பொழுது நிச்சயமாக பாவிகளில் உள்ளவர்களாகிவிடுவோம்!" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.
5:107 فَاِنْ عُثِرَ عَلٰٓى اَنَّهُمَا اسْتَحَقَّاۤ اِثْمًا فَاٰخَرٰنِ يَقُوْمٰنِ مَقَامَهُمَا مِنَ الَّذِيْنَ اسْتَحَقَّ عَلَيْهِمُ الْاَوْلَيٰنِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ لَشَهَادَتُنَاۤ اَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا وَ مَا اعْتَدَيْنَاۤ ۖ اِنَّاۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ
فَاِنْ عُثِرَ கண்டுபிடிக்கப்பட்டால் عَلٰٓى மீது اَنَّهُمَا நிச்சயமாக அவ்விருவரும் اسْتَحَقَّاۤ உரியவர்களாகி விட்டனர் اِثْمًا பாவத்திற்கு فَاٰخَرٰنِ வேறு இருவர் يَقُوْمٰنِ நிற்பார்கள் مَقَامَهُمَا அவ்விருவருடைய இடத்தில் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் اسْتَحَقَّ உரிமை ஏற்பட்டது عَلَيْهِمُ அவர்களுக்கு الْاَوْلَيٰنِ நெருங்கிய இரு வாரிசுகள் فَيُقْسِمٰنِ அவ்விருவரும் சத்தியம் செய்யவேண்டும் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது لَشَهَادَتُنَاۤ நிச்சயமாக எங்கள்சாட்சியம் اَحَقُّ மிக உண்மையானது مِنْ شَهَادَتِهِمَا அவ்விருவரின் சாட்சியத்தைவிட وَ مَا اعْتَدَيْنَاۤ ۖ நாங்கள்வரம்புமீறவில்லை اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்போது لَّمِنَ الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களில்தான்
5:107. Fப இன் 'உதிர 'அலா அன்னஹுமஸ் தஹக்கா இத்மன் Fப ஆகரானி யகூமானி மகாமஹுமா மினல் லதீனஸ் தஹக்க 'அலய்ஹிமுல் அவ்லயானி Fப யுக்ஸிமானி Bபில்லாஹி லஷஹாததுனா அஹக்கு மின் ஷஹாததிஹிமா வ ம'ததய்னா இன்னா இதல் லமினள் ளாலிமீன்
5:107. நிச்சயமாக அவ்விருவரும் (பொய்சாட்சிக் கூறி) பாவத்திற்குரியவர்களாகிவிட்டார்கள் என்று கண்டுகொள்ளப்பட்டால், அப்போது எவர்களுக்கு (பொருளின்) உரிமை இருக்கிறதோ அவர்களிலிருந்து, நெருங்கிய உறவினர் இருவர், (மோசம் செய்துவிட்ட) அவ்விருவரின் இடத்தில் நின்று, "அவ்விருவரின் சாட்சியத்தைவிட எங்களின் சாட்சியம் மிக உண்மையானது; நாங்கள் வரம்புமீறவில்லை; (அப்படி மீறியிருந்தால்) நாங்கள் அநியாயக்காரர்களாகிவிடுவோம்!" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவேண்டும்.
5:108 ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يَّاْتُوْا بِالشَّهَادَةِ عَلٰى وَجْهِهَاۤ اَوْ يَخَافُوْۤا اَنْ تُرَدَّ اَيْمَانٌۢ بَعْدَ اَيْمَانِهِمْؕ وَاتَّقُوا اللّٰهَ وَاسْمَعُوْا ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ
ذٰ لِكَ اَدْنٰٓى அது/மிக்கசுலபமானது اَنْ يَّاْتُوْا அவர்கள் வருவதற்கு بِالشَّهَادَةِ சாட்சியத்தைக் கொண்டு عَلٰى وَجْهِهَاۤ அதற்குரிய முறையில் اَوْ அல்லது يَخَافُوْۤا அவர்கள் பயப்படுவது اَنْ تُرَدَّ மறுக்கப்படும் اَيْمَانٌۢ சத்தியங்கள் بَعْدَ பின்னர் اَيْمَانِهِمْؕ அவர்களுடைய சத்தியங்கள் وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاسْمَعُوْا ؕ செவிசாயுங்கள் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ கூட்டத்தை الْفٰسِقِيْنَ பாவிகளான
5:108. தாலிக அத்னா அய் ய'தூ Bபிஷ்ஷஹாததி 'அலா வஜ்ஹிஹா அவ் யகாFபூ அன் துரத்த அய்மானும் Bபஃத அய்மானிஹிம்; வத்தகுல் லாஹ வஸ்ம'ஊ; வல்லாஹு லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
5:108. இவ்வாறு செய்வது அவர்களுடைய சாட்சியத்தை முறைப்படி கொண்டுவருவதற்கும், அல்லது (அவர்களும் பொய்ச் சத்தியம் செய்திருந்தால்) அது மற்றவர்களின் சத்தியத்திற்குப் பின்னர் மறுக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் இது சுலபமான வழியாகும்; மேலும், அல்லாஹ்வை அஞ்சி (அவனது கட்டளைகளுக்குச்) செவிசாயுங்கள்; ஏனெனில், அல்லாஹ் பாவம் செய்யும் மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5:109 يَوْمَ يَجْمَعُ اللّٰهُ الرُّسُلَ فَيَقُوْلُ مَاذَاۤ اُجِبْتُمْ ؕ قَالُوْا لَا عِلْمَ لَـنَا ؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ
يَوْمَ நாளில் يَجْمَعُ ஒன்று சேர்ப்பான் اللّٰهُ அல்லாஹ் الرُّسُلَ தூதர்களை فَيَقُوْلُ கூறுவான் مَاذَاۤ என்ன? اُجِبْتُمْ ؕ பதில் கூறப்பட்டீர்கள் قَالُوْا கூறுவார்கள் لَا عِلْمَ அறவே ஞானமில்லை لَـنَا ؕ எங்களுக்கு اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் عَلَّامُ மிக மிக அறிந்தவன் الْغُيُوْبِ மறைவானவற்றை
5:109. யவ்ம யஜ்ம'உல் லாஹுர் ருஸுல Fப யகூலு மாதா உஜிBப்தும் காலூ லா 'இல்ம லனா இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
5:109. அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் ஒரு நாளில் அவர்களிடம், "நீங்கள் (மனிதர்களுக்கு என் தூதைச் சேர்ப்பித்தபோது) என்ன பதில் அளிக்கப்பட்டீர்கள்?" என்று கேட்பான்; அதற்கு அவர்கள்: "(அதுபற்றி) எங்களுக்கு எந்த அறிவும் இல்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றையெல்லாம் அறிந்தவன்!" என்று கூறுவார்கள்.
5:110 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِىْ عَلَيْكَ وَعَلٰى وَالِدَتِكَ ۘ اِذْ اَيَّدْتُّكَ بِرُوْحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىْ الْمَهْدِ وَكَهْلًا ۚوَاِذْ عَلَّمْتُكَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ ۚ وَاِذْ تَخْلُقُ مِنَ الطِّيْنِ كَهَيْـــٴَــةِ الطَّيْرِ بِاِذْنِىْ فَتَـنْفُخُ فِيْهَا فَتَكُوْنُ طَيْرًۢا بِاِذْنِىْ وَ تُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ بِاِذْنِىْ ۚ وَاِذْ تُخْرِجُ الْمَوْتٰى بِاِذْنِىْ ۚ وَاِذْ كَفَفْتُ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَنْكَ اِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ
اِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய اذْكُرْ நினைவு கூர்வீராக نِعْمَتِىْ என் அருளை عَلَيْكَ உம்மீது وَعَلٰى وَالِدَتِكَ ۘ இன்னும் மீது/உம் தாய் اِذْ சமயம் اَيَّدْتُّكَ பலப்படுத்தினேன்/உம்மை بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ பரிசுத்தமான تُكَلِّمُ பேசுவீர் النَّاسَ மக்களிடம் فِىْ الْمَهْدِ தொட்டிலில் وَكَهْلًا இன்னும் வாலிபராக ۚوَاِذْ இன்னும் சமயம் عَلَّمْتُكَ கற்பித்தேன்/உமக்கு الْـكِتٰبَ எழுதுவதை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَالتَّوْرٰٮةَ இன்னும் தவ்றாத்தை وَالْاِنْجِيْلَ ۚ இன்னும் இன்ஜீலை وَاِذْ இன்னும் சமயம் تَخْلُقُ படைப்பீர் مِنَ இருந்து الطِّيْنِ களிமண் كَهَيْـــٴَــةِ உருவத்தைப் போல் الطَّيْرِ பறவையின் بِاِذْنِىْ என் அனுமதியினால் فَتَـنْفُخُ ஊதுவீர் فِيْهَا அதில் فَتَكُوْنُ அது/ஆகிவிடும் طَيْرًۢا பறவையாக بِاِذْنِىْ என் அனுமதியினால் وَ تُبْرِئُ இன்னும் சுகமளிப்பீர் الْاَكْمَهَ பிறவிக் குருடரை وَالْاَبْرَصَ இன்னும் வெண்குஷ்டரை بِاِذْنِىْ ۚ என் அனுமதியினால் وَاِذْ இன்னும் சமயம் تُخْرِجُ வெளியாக்குவீர் الْمَوْتٰى மரணித்தவர்களை بِاِذْنِىْ ۚ என் அனுமதியினால் وَاِذْ இன்னும் சமயம் كَفَفْتُ தடுத்தேன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களை عَنْكَ உம்மைவிட்டு اِذْ போது جِئْتَهُمْ வந்தீர்/அவர்களிடம் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு فَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْهُمْ அவர்களில் اِنْ இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியம் مُّبِيْنٌ தெளிவானது
5:110. இத் காலல் லாஹு யா 'ஈஸBப்-ன-மர்யமத் குர் னிஃமதீ 'அலய்க வ 'அலா வாலிததிக; இத் அய்யத்துக Bபி ரூஹில் குதுஸி துகல்லிமுன் னாஸ Fபில் மஹ்தி வ கஹ்ல(ன்)வ் வ இத் 'அல்லம்துகல் கிதாBப வல் ஹிக்மத வ தவ்ராத வல் இன்ஜீல வ இத் தக்லுகு மினத் தீனி கஹய் 'அதித் தய்ரி Bபி இத்னீ Fபதன்Fபுகு Fபீஹா Fபதகூனு தய்ரம் Bபி இத்னீ வ துBப்ரி'உல் அக்மஹ வல் அBப்ரஸ Bபி இத்னீ வ இத் துக்ரிஜுல் மவ்தா Bபி இத்னீ வ இத் கFபFப்து Bபனீ இஸ்ரா'ஈல 'அன்க இத் ஜி'தஹும் Bபில் Bபய்யினாதி Fப காலல் லதீன கFபரூ மின்ஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
5:110. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உம்மீதும் உம் தாயார் மீதும் (நான் அருளிய) அருட்கொடையை நினைவு கூரும்! பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உம்மை பலப்படுத்தியபோது நீர் தொட்டிலிலும், வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசியதையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்)! இன்னும், நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போல் உண்டாக்கி அதில் நீர் ஊதியபோது, அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதை; இன்னும், என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண்குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); இறந்தோரை என் உத்தரவுக் கொண்டு (உயிர்ப்பித்து) வெளிப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்!); அன்றியும், (இஸ்ராயீலின் சந்ததியினராகிய) அவர்களிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், 'இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை!' என்று கூறியபோது (அந்த) இஸ்ராயீலின் மக்க(ளின் தீங்குக)ளை உம்மைவிட்டும் நான் தடுத்துவிட்டதையும் நினைத்துப் பாரும்!" என்று (ஈஸாவை அழைத்து) அல்லாஹ் கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக)!"
5:111 وَ اِذْ اَوْحَيْتُ اِلَى الْحَـوَارِيّٖنَ اَنْ اٰمِنُوْا بِىْ وَبِرَسُوْلِىْۚ قَالُوْۤا اٰمَنَّا وَاشْهَدْ بِاَنَّـنَا مُسْلِمُوْنَ
وَ اِذْ சமயத்தை நினைவு கூர்வீராக اَوْحَيْتُ வஹீ அறிவித்தேன் اِلَى பக்கம் الْحَـوَارِيّٖنَ சிஷ்யர்கள் اَنْ اٰمِنُوْا بِىْ நம்பிக்கை கொள்ளுங்கள் என்று/என்னை وَبِرَسُوْلِىْۚ இன்னும் என் தூதரை قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் وَاشْهَدْ இன்னும் சாட்சியளிப்பீராக بِاَنَّـنَا நிச்சயமாக நாங்கள் مُسْلِمُوْنَ முஸ்லிம்கள்
5:111. வ இத் அவ்ஹய்து இலல் ஹவாரிய்யீன அன் ஆமினூ Bபீ வ Bபி ரஸூலீ காலூ ஆமன்னா வஷ்ஹத் Bபி அன்னனா முஸ்லிமூன்
5:111. "என்மீதும், என் தூதர்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என (உமது) சீடர்களுக்கு நான் அறிவித்தபோது அவர்கள், "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்.
5:112 اِذْ قَالَ الْحَـوَارِيُّوْنَ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيْعُ رَبُّكَ اَنْ يُّنَزِّلَ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰهَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
اِذْ قَالَ கூறிய சமயம் الْحَـوَارِيُّوْنَ சிஷ்யர்கள் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய هَلْ يَسْتَطِيْعُ இயலுவானா? رَبُّكَ உம் இறைவன் اَنْ يُّنَزِّلَ அவன் இறக்குவதற்கு عَلَيْنَا எங்கள் மீது مَآٮِٕدَةً ஓர் உணவுத் தட்டை مِّنَ السَّمَآءِ ؕ வானத்திலிருந்து قَالَ கூறினார் اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
5:112. இத் காலல் ஹவாரிய்யூன யா 'ஈஸBப் ன மர்யம ஹல் யஸ்ததீ'உ ரBப்Bபுக அய் யுனZஜ் Zஜில அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ காலத் தகுல் லாஹ இன் குன்தும் மு'மினீன்
5:112. "மர்யமுடைய மகன் ஈஸாவே! உங்கள் இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக, உணவு மரவையை (ஆகாரத்தட்டை) இறக்கிவைக்க முடியுமா?" என்று சீடர்கள் கேட்டபோது அவர், "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
5:113 قَالُوْا نُرِيْدُ اَنْ نَّاْكُلَ مِنْهَا وَتَطْمَٮِٕنَّ قُلُوْبُنَا وَنَـعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَـنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ
قَالُوْا கூறினார்கள் نُرِيْدُ நாடுகிறோம் اَنْ نَّاْكُلَ நாங்கள் புசிப்பதற்கு مِنْهَا அதிலிருந்து وَتَطْمَٮِٕنَّ இன்னும் திருப்தியடைவதற்கு قُلُوْبُنَا எங்கள் உள்ளங்கள் وَنَـعْلَمَ இன்னும் நாங்கள் அறிவதற்கு اَنْ என்று قَدْ உறுதியாக صَدَقْتَـنَا உண்மைகூறினீர்/எங்களிடம் وَنَكُوْنَ நாங்கள் ஆகிவிடுவதற்கு عَلَيْهَا அதன் மீது مِنَ الشّٰهِدِيْنَ சாட்சியாளர்களில்
5:113. காலூ னுரீது அன் னாகுல மின்ஹா வ ததம 'இன்ன குலூ Bபுனா வ னஃலம அன் கத் ஸதக்தன வ னகூன 'அலய்ஹா மினஷ் ஷாஹிதீன்
5:113. அதற்கவர்கள், "நாங்கள் அதிலிருந்து புசித்து எங்கள் இதயங்கள் அமைதி பெறவும், நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு உண்மையையே கூறினீர்கள் என்பதை அறிந்துகொள்ளவும், இன்னும் நாங்கள் அதைப்பற்றி சாட்சி கூறக்கூடியவர்களாகவும் இருக்க விரும்புகின்றோம்" என்று கூறினார்கள்.
5:114 قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ اللّٰهُمَّ رَبَّنَاۤ اَنْزِلْ عَلَيْنَا مَآٮِٕدَةً مِّنَ السَّمَآءِ تَكُوْنُ لَـنَا عِيْدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰيَةً مِّنْكَۚ وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ
قَالَ கூறினார் عِيْسَى ஈஸா ابْنُ மகன் مَرْيَمَ மர்யமுடைய اللّٰهُمَّ அல்லாஹ்வே رَبَّنَاۤ எங்கள் இறைவா اَنْزِلْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது مَآٮِٕدَةً ஓர் உணவுத் தட்டை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் تَكُوْنُ அது இருக்கும் لَـنَا எங்களுக்கு عِيْدًا ஒரு பெருநாளாக لِّاَوَّلِنَا எங்கள் முன் இருப்பவர்களுக்கு وَاٰخِرِنَا இன்னும் எங்களுக்குப் பின் வருபவர்களுக்கு وَاٰيَةً இன்னும் ஓர் அத்தாட்சியாக مِّنْكَۚ உன்னிடமிருந்து وَارْزُقْنَا இன்னும் எங்களுக்கு உணவளி وَاَنْتَ خَيْرُ நீ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ உணவளிப்பவர்களில்
5:114. கால 'ஈஸBப் னு மர்யமல் லாஹும்ம ரBப்Bபனா அன்Zஜில் 'அலய்னா மா'இததம் மினஸ் ஸமா'இ தகூனு லனா 'ஈதல் லி அவ்வலினா வ ஆகிரினா வ ஆயதம் மின்க வர்Zஜுக்னா வ அன்த கய்ருர் ராZஜிகீன்
5:114. மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! வானத்திலிருந்து எங்கள்மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவாயாக! அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களுக்குப்பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்; இன்னும், எங்களுக்கு உணவளிப்பாயாக! நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்!" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
5:115 قَالَ اللّٰهُ اِنِّىْ مُنَزِّلُهَا عَلَيْكُمْۚ فَمَنْ يَّكْفُرْ بَعْدُ مِنْكُمْ فَاِنِّىْۤ اُعَذِّبُهٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُهٗۤ اَحَدًا مِّنَ الْعٰلَمِيْنَ
قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் اِنِّىْ நிச்சயமாக நான் مُنَزِّلُهَا அதை இறக்குவேன் عَلَيْكُمْۚ உங்கள் மீது فَمَنْ ஆகவே எவர் يَّكْفُرْ நிராகரிப்பாரோ بَعْدُ பின்னர் مِنْكُمْ உங்களில் فَاِنِّىْۤ நிச்சயமாக நான் اُعَذِّبُهٗ வேதனை செய்வேன்/ அவருக்கு عَذَابًا வேதனையால் لَّاۤ மாட்டேன் اُعَذِّبُهٗۤ அதைக்கொண்டு தண்டிக்க اَحَدًا ஒருவரையும் مِّنَ الْعٰلَمِيْنَ உலகத்தாரில்
5:115. காலல் லாஹு இன்னீ முனZஜ் Zஜிலுஹா 'அலய்கும் Fபமய் யக்Fபுர் Bபஃது மின்கும் Fப இன்னீ உ'அத்திBபுஹூ 'அதாBபல் லா உ'அத்திBபுஹூ அஹதம் மினல் 'ஆலமீன்
5:115. அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன்; ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், அகிலத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.
5:116 وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِؕ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؕؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗؕ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَؕ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ
وَاِذْ சமயம் قَالَ கூறினான் اللّٰهُ அல்லாஹ் يٰعِيْسَى ஈஸாவே ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய ءَاَنْتَ நீர் قُلْتَ கூறினீர் لِلنَّاسِ மக்களுக்கு اتَّخِذُوْنِىْ எடுத்துக் கொள்ளுங்கள்/என்னை وَاُمِّىَ இன்னும் என் தாயை اِلٰهَيْنِ வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக مِنْ دُوْنِ اللّٰهِؕ அல்லாஹ்வையன்றி قَالَ கூறுவார் سُبْحٰنَكَ நீ மிகப்பரிசுத்தமானவன் مَا يَكُوْنُ ஆகாது لِىْۤ எனக்கு اَنْ اَقُوْلَ நான் கூறுவது مَا எதை لَـيْسَ இல்லை لِىْ எனக்கு بِحَقٍّؕؔ தகுதி اِنْ كُنْتُ நான் இருந்தால் قُلْتُهٗ அதைக் கூறினேன் فَقَدْ عَلِمْتَهٗؕ திட்டமாக நீ அதை அறிந்திருப்பாய் تَعْلَمُ நன்கறிவாய் مَا فِىْ نَفْسِىْ எதை/என் உள்ளத்தில் وَلَاۤ اَعْلَمُ مَا இன்னும் அறிய மாட்டேன்/எதை فِىْ نَفْسِكَؕ உன் உள்ளத்தில் اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் عَلَّامُ மிக மிக அறிந்தவன் الْغُيُوْبِ மறைவானவற்றை
5:116. வ இத் காலல் லாஹு யா 'ஈஸBப் ன மர்யம 'அ-அன்த குல்த லின்னாஸித் தகிதூனீ வ உம்மிய இலாஹய்னி மின் தூனில் லாஹி கால ஸுBப்ஹானக மா யகூனு லீ அன் அகூல மா லய்ஸ லீ Bபிஹக்க்; இன் குன்து குல்துஹூ Fபகத் 'அலிம்தஹ்; தஃலமு மா Fபீ னFப்ஸீ வ லா அ'அலமு மா Fபீ னFப்ஸிக்; இன்னக அன்த 'அல்லாமுல் குயூBப்
5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்" என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் (மறுமைநாளில்) கேட்கும்போது, (அதற்கு) அவர் "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்: என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறியமாட்டேன்: நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று கூறுவார்.
5:117 مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْۚ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْؕ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ
مَا قُلْتُ நான் கூறவில்லை لَهُمْ அவர்களுக்கு اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ தவிர/எதை/நீ ஏவினாய்/எனக்கு بِهٖۤ அதை اَنِ என்பதை اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبِّىْ என் இறைவன் وَرَبَّكُمْۚ இன்னும் உங்கள் இறைவன் وَكُنْتُ இருந்தேன் عَلَيْهِمْ அவர்கள் மீது شَهِيْدًا சாட்சியாளனாக مَّا دُمْتُ நான் இருந்தவரை فِيْهِمْۚ அவர்களுடன் فَلَمَّا போது تَوَفَّيْتَنِىْ நீ என்னை கைப்பற்றிய كُنْتَ இருந்தாய் اَنْتَ நீ الرَّقِيْبَ கண்கானிப்பவனாக عَلَيْهِمْؕ அவர்கள் மீது وَاَنْتَ நீ عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் شَهِيْدٌ சாட்சியாளன்
5:117. மா குல்து லஹும் இல்லா மா அமர்தனீ Bபிஹீ அனி'Bபுதுல் லாஹ ரBப்Bபீ வ ரBப்Bபகும்; வ குன்து 'அலய்ஹிம் ஷஹீதம் மா தும்து Fபீஹிம் Fபலம்மா தவFப்Fபய்தனீ குன்த அன்தர் ரகீBப 'அலய்ஹிம்; வ அன்த 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
5:117. "நீ எனக்கு கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), 'என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!' என்பதைத் தவிர, வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர், நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய்; நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);
5:118 اِنْ تُعَذِّبْهُمْ فَاِنَّهُمْ عِبَادُكَۚ وَاِنْ تَغْفِرْ لَهُمْ فَاِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
اِنْ تُعَذِّبْهُمْ நீ வேதனை செய்தால் / அவர்களை فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عِبَادُكَۚ உன் அடியார்கள் وَاِنْ تَغْفِرْ நீ மன்னித்தால் لَهُمْ அவர்களை فَاِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ ஞானவான்
5:118. இன் து'அத்திBப்ஹும் Fப இன்னஹும் இBபாதுக வ இன் தக்Fபிர் லஹும் Fப இன்னக அன்தல் 'அZஜீZஜுல் ஹகீம்
5:118. "(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்துவிடுவாயானால் நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறுவார்).
5:119 قَالَ اللّٰهُ هٰذَا يَوْمُ يَـنْفَعُ الصّٰدِقِيْنَ صِدْقُهُمْؕ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ
قَالَ கூறுவான் اللّٰهُ அல்லாஹ் هٰذَا இது يَوْمُ நாள் يَـنْفَعُ பலனளிக்கும் الصّٰدِقِيْنَ உண்மையாளர்களுக்கு صِدْقُهُمْؕ அவர்களுடைய உண்மை لَهُمْ அவர்களுக்கு جَنّٰتٌ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ இருந்து تَحْتِهَا அதன் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ اَبَدًا ؕ அதில்/என்றென்றும் رَضِىَ மகிழ்ச்சியடைவான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களைப் பற்றி وَرَضُوْا இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் عَنْهُ ؕ அவனைப் பற்றி ذٰ لِكَ இதுதான் الْـفَوْزُ வெற்றி الْعَظِيْمُ மகத்தான
5:119. காலல் லாஹு ஹாத யவ்மு யன்Fப'உஸ் ஸாதிகீன ஸித்குஹும்; லஹும் ஜன்னாதுன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹ்; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
5:119. அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும்; அவர்களுக்கு சுவனபதிகள் உண்டு - அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள்" என்று கூறுவான்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக்கொண்டார்கள் - இது மகத்தான (பெரும்) வெற்றியாகும்.
5:120 لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا فِيْهِنَّ ؕ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا فِيْهِنَّ ؕ இன்னும் அவற்றிலுள்ளவை وَهُوَ அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது قَدِيْرٌ பேராற்றலுடையவன்
5:120. லில்லாஹி முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Fபீஹின்ன்; வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன்ன் கதீர்
5:120. வானங்கள், பூமி மற்றும் அவற்றில் இருப்பவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றல் உடையோன் ஆவான்.