டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 7. ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)
மக்கீ, வசனங்கள்: 206
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
7:1 الۤمّۤصۤ
الۤمّۤصۤ அலிஃப், லாம், மீம், ஸாத்
7:1. அலிFப்-லாம்-மீம்-ஸாத்
7:1. அலிஃப், லாம், மீம், ஸாத்.
7:2 كِتٰبٌ اُنْزِلَ اِلَيْكَ فَلَا يَكُنْ فِىْ صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنْذِرَ بِهٖ وَذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ
كِتٰبٌ ஒரு வேதம் اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உம் மீது فَلَا يَكُنْ இருக்க வேண்டாம் فِىْ صَدْرِكَ உம் இதயத்தில் حَرَجٌ நெருக்கடி مِّنْهُ இதில் لِتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக بِهٖ இதைக் கொண்டு وَذِكْرٰى இன்னும் ஒரு நல்லுபதேசம் لِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு
7:2. கிதாBபுன் உன்Zஜில இலய்க Fபலா யகுன் Fபீ ஸத்ரிக ஹரஜும் மின்ஹு லிதுன்திர Bபிஹீ வ திக்ரா லில்மு'மினீன்
7:2. இது வேதமாகும்; (நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும், நம்பிக்கையாளர்களுக்கு உபதேசமாகவும் உமக்கு இது அருளப்பட்டுள்ளது; எனவே, இதனால் உமது உள்ளத்தில் கலக்கம் ஏற்பட வேண்டாம்.
7:3 اِتَّبِعُوْا مَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ
اِتَّبِعُوْا பின்பற்றுங்கள் مَاۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكُمْ உங்களுக்கு مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَلَا تَتَّبِعُوْا பின்பற்றாதீர்கள் مِنْ دُوْنِهٖۤ அதைத் தவிர اَوْلِيَآءَ ؕ பொறுப்பாளர்களை قَلِيْلًا مَّا மிகக் குறைவாக تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுணர்வு பெறுவது
7:3. இத்தBபி'ஊ மா உன்Zஜில 'இலய்கும் மிர் ரBப்Bபிகும் வலா தத்தBபி'ஊ மின் தூனிஹீ அவ்லியா'அ; கலீலம் மா ததக்கரூன்
7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: நீங்கள் குறைவாகவே உபதேசம் பெறுகிறீர்கள்.
7:4 وَكَمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَـكْنٰهَا فَجَآءَهَا بَاْسُنَا بَيَاتًا اَوْ هُمْ قَآٮِٕلُوْنَ
وَكَمْ مِّنْ قَرْيَةٍ எத்தனையோ நகரங்கள் اَهْلَـكْنٰهَا அழித்தோம்/அவற்றை فَجَآءَ வந்தது هَا அவற்றுக்கு بَاْسُنَا நம் வேதனை بَيَاتًا இரவில் اَوْ அல்லது هُمْ அவர்கள் قَآٮِٕلُوْنَ பகலில் தூங்குபவர்கள்
7:4. வ கம் மின் கர்யதின் அஹ்லக்னாஹா Fபஜா'அஹா Bப'ஸுனா Bபயாதன் அவ் ஹும் கா'இலூன்
7:4. (பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை - அவற்றை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை (திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காக) பகலில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போதோ அவற்றை வந்தடைந்தது.
7:5 فَمَا كَانَ دَعْوٰٮهُمْ اِذْ جَآءَهُمْ بَاْسُنَاۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ
فَمَا كَانَ இருக்கவில்லை دَعْوٰٮهُمْ அவர்களுடைய வாதம் اِذْ جَآءَ வந்த போது هُمْ அவர்களிடம் بَاْسُنَاۤ நம் வேதனை اِلَّاۤ தவிர اَنْ قَالُوْۤا அவர்கள் கூறியது اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் ظٰلِمِيْنَ அநியாயக்காரர்களாக
7:5. Fபமா கான தஃவாஹும் இத் ஜா'அஹும் Bப'ஸுனா இல்லா அன் காலூ இன்னா குன்னா ளாலிமீன்
7:5. நமது வேதனை அவர்களுக்கு வந்தபோது, அவர்கள் "நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று சொன்னதைத் தவிர (வேறொன்றும்) அவர்களுடைய கூப்பாடாக இருக்கவில்லை.
7:6 فَلَنَسْـــٴَـــلَنَّ الَّذِيْنَ اُرْسِلَ اِلَيْهِمْ وَلَـنَسْــٴَــــلَنَّ الْمُرْسَلِيْنَ ۙ
فَلَنَسْـــٴَـــلَنَّ நிச்சயம் விசாரிப்போம் الَّذِيْنَ எவர்களை اُرْسِلَ அனுப்பப்பட்டார்(கள்) اِلَيْهِمْ அவர்களிடம் وَلَـنَسْــٴَــــلَنَّ இன்னும் நிச்சயம் விசாரிப்போம் الْمُرْسَلِيْنَ ۙ தூதர்களை
7:6. Fபலனஸ் 'அலன்னல் லதீன உர்ஸில இலய்ஹிம் வ லனஸ் 'அலன்னல் முர்ஸலீன்
7:6. யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களை நிச்சயமாக விசாரணை செய்வோம்; இன்னும், (நம்) தூதர்களையும் நிச்சயமாக விசாரிப்போம்.
7:7 فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَآٮِٕبِيْنَ
فَلَنَقُصَّنَّ நிச்சயம் விவரிப்போம் عَلَيْهِمْ அவர்களுக்கு بِعِلْمٍ உறுதியான ஞானத்துடன் وَّمَا كُنَّا நாம் இருக்கவில்லை غَآٮِٕبِيْنَ மறைந்தவர்களாக
7:7. Fபலனகுஸ்ஸன்ன 'அலய்ஹிம் Bபி'இல்மி(ன்)வ் வமா குன்னா கா'இBபீன்
7:7. ஆகவே, (நாம் அவர்களின் செயல்களைப் பூரணமாக) அறிந்திருக்கிற காரணத்தால் அவர்களுக்குத் திண்ணமாக நாம் சொல்லிக்காண்பிப்போம்: (அவர்கள் செய்ததைவிட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
7:8 وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ ۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
وَالْوَزْنُ நிறுக்கப்படுதல் يَوْمَٮِٕذِ அன்றைய தினம் اۨلْحَـقُّ ۚ உண்மைதான் فَمَنْ ஆகவே எவர் ثَقُلَتْ கனமானது مَوَازِيْنُهٗ அவருடைய நிறுவைகள் فَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ வெற்றியாளர்கள்
7:8. வல்வZஜ்னு யவ்ம'இதினில் ஹக்க்; Fபமன் தகுலத் மவா Zஜீனுஹூ Fப-உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
7:8. அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உண்மையாகும்; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
7:9 وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ بِمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَظْلِمُوْنَ
وَمَنْ எவர் خَفَّتْ இலேசானது مَوَازِيْنُهٗ அவருடைய நிறுவைகள் فَاُولٰۤٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ خَسِرُوْۤا நஷ்டமிழைத்தவர்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கே بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களுக்கு يَظْلِمُوْنَ அநீதியிழைக்கின்றனர்
7:9. வ மன் கFப்Fபத் மவாZஜீனுஹூ Fப உலா'இகல் லதீன கஸிரூ அன்Fபுஸஹும் Bபிமா கானூ Bபி ஆயாதினா யள்லிமூன்
7:9. யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்குத்தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
7:10 وَلَقَدْ مَكَّـنّٰكُمْ فِى الْاَرْضِ وَجَعَلْنَا لَـكُمْ فِيْهَا مَعَايِشَ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக مَكَّـنّٰكُمْ இடமளித்தோம்/உங்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் مَعَايِشَ ؕ வாழ்வாதாரங்களை قَلِيْلًا مَّا மிகக் குறைவாக تَشْكُرُوْنَ நன்றி செலுத்துகிறீர்கள்
7:10. வ லகத் மக்கன்னாகும் Fபில் அர்ளி வ ஜ'அல்னா லகும் Fபீஹா ம'ஆயிஷ்; கலீலம் மா தஷ்குரூன்
7:10. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களைப் பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம்; எனினும், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
7:11 وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ ۖ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ لَمْ يَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் ثُمَّ பிறகு صَوَّرْنٰكُمْ வடிவமைத்தோம்/உங்களை ثُمَّ பிறகு قُلْنَا கூறினோம் لِلْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا சிரம் பணியுங்கள் لِاٰدَمَ ۖ ஆதமுக்கு فَسَجَدُوْۤا சிரம் பணிந்தனர் اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர لَمْ يَكُنْ அவன் ஆகவில்லை مِّنَ السّٰجِدِيْنَ சிரம் பணிந்தவர்களில்
7:11. வ லகத் கலக்னாகும் தும்ம ஸவ்வர்னாகும் தும்ம குல்னா லில்மலா'இகதிஸ் ஜுதூ லி ஆதம Fப-ஸஜதூ இல்லா இBப்லீஸ லம் யகும் மினஸ் ஸாஜிதீன்
7:11. நிச்சயமாக நாம் உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களை வடிவமைத்தோம்; அதன்பின் "ஆதமுக்குப் பணியுங்கள்" என்று வானவர்களிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற வானவர்கள்) யாவரும் பணிந்தனர்; அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
7:12 قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ
قَالَ கூறினான் مَا எது? مَنَعَكَ உம்மை தடுத்தது اَلَّا تَسْجُدَ நீ சிரம் பணியாதிருக்க اِذْ போது اَمَرْتُكَ ؕ உனக்கு கட்டளையிட்டேன் قَالَ கூறினான் اَنَا நான் خَيْرٌ மேலானவன் مِّنْهُ ۚ அவரைவிட خَلَقْتَنِىْ என்னை படைத்தாய் مِنْ نَّارٍ நெருப்பால் وَّخَلَقْتَهٗ இன்னும் படைத்தாய்/அவரை مِنْ طِيْنٍ களிமண்ணால்
7:12. கால மா மன'அக அல்லா தஸ்ஜுத இத் அமர்துக கால அன கய்ரும் மின்ஹு கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
7:12. "நான் உனக்குக் கட்டளையிட்டபோது, நீ பணியாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று (அல்லாஹ்) கேட்டான்: "நான் அவரை (ஆதமை) விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய்; அவரைக் களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
7:13 قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَـكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ
قَالَ கூறினான் فَاهْبِطْ ஆகவே இறங்கிவிடு مِنْهَا இதிலிருந்து فَمَا يَكُوْنُ அனுமதியில்லை لَـكَ உமக்கு اَنْ تَتَكَبَّرَ நீ பெருமை கொள்வதற்கு فِيْهَا இதில் فَاخْرُجْ வெளியேறி விடு! اِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الصّٰغِرِيْنَ இழிவானவர்களில்
7:13. கால Fபஹ்Bபித் மின்ஹா Fபமா யகூனு லக அன் ததகBப்Bபர Fபீஹா Fபக்ருஜ் இன்னக மினஸ் ஸாகிரீன்
7:13. "இதிலிருந்து நீ இறங்கிவிடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. ஆதலால், (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகிவிட்டாய்" என்று (அல்லாஹ்) கூறினான்.
7:14 قَالَ اَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ
قَالَ கூறினான் اَنْظِرْنِىْۤ அவகாசமளி/எனக்கு اِلٰى வரை يَوْمِ நாள் يُبْعَثُوْنَ எழுப்பப்படுவார்கள்
7:14. கால அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
7:14. "(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
7:15 قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ
قَالَ கூறினான் اِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الْمُنْظَرِيْنَ அவகாசமளிக்கப்பட்டவர்களில்
7:15. கால இன்னக மினல் முன்ளரீன்
7:15. (அதற்கு அல்லாஹ்) "நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்" என்று கூறினான்.
7:16 قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ
قَالَ கூறினான் فَبِمَاۤ காரணமாக اَغْوَيْتَنِىْ நீ வழிகெடுத்தாய்/என்னை لَاَقْعُدَنَّ நிச்சயமாக உட்காருவேன் لَهُمْ அவர்களுக்காக صِرَاطَكَ உன் பாதையில் الْمُسْتَقِيْمَۙ நேரானது
7:16. கால FபBபிமா அக்வய் தனீ ல அக்'உதன்ன லஹும் ஸிராதகல் முஸ்தகீம்
7:16. "நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால் (ஆதமுடைய சந்ததிகள்) உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) அவர்களுக்காக திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான்.
7:17 ثُمَّ لَاَتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْؕ وَلَاٰ تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ
ثُمَّ لَاَتِيَنَّهُمْ பிறகு/நிச்சயம் வருவேன்/அவர்களிடம் مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன் புறத்திலிருந்து وَمِنْ خَلْفِهِمْ இன்னும் அவர்களுக்கு பின் புறத்திலிருந்து وَعَنْ اَيْمَانِهِمْ இன்னும் அவர்களின் வலது புறத்திலிருந்து وَعَنْ شَمَآٮِٕلِهِمْؕ இன்னும் அவர்களின் இடது புறத்திலிருந்து وَلَاٰ تَجِدُ நீ காணமாட்டாய் اَكْثَرَ அதிகமானவர்களை هُمْ அவர்களில் شٰكِرِيْنَ நன்றி செலுத்துபவர்களாக
7:17. தும்ம ல ஆதியன்னஹும் மிம் Bபய்னி அய்தீஹிம் வ மின் கல்Fபிஹிம் வ 'அன் அய்மானிஹிம் வ 'அன் ஷமா'இலிஹிம் வலா தஜிது அக்தரஹும் ஷாகிரீன்
7:17. "பின், நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கங்களிலும், அவர்கள் இடப்பக்கங்களிலும் வந்து (அவர்களை வழிகெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால், நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்" (என்றும் கூறினான்).
7:18 قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَــٴَــنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِيْنَ
قَالَ கூறினான் اخْرُجْ வெளியேறு مِنْهَا இதிலிருந்து مَذْءُوْمًا நீ இகழப்பட்டவனாக مَّدْحُوْرًا ؕ விரட்டப்பட்டவனாக لَمَنْ تَبِعَكَ எவர்/பின்பற்றினார்/உன்னை مِنْهُمْ அவர்களில் لَاَمْلَــٴَــنَّ நிச்சயம் நிரப்புவேன் جَهَنَّمَ நரகத்தை مِنْكُمْ உங்களைக் கொண்டு اَجْمَعِيْنَ அனைவரை
7:18. காலக்ருஜ் மின்ஹா மத்'ஊமம் மத்ஹூரா; லமன் தBபி'அக மின்ஹும் ல அம்ல'அன்ன ஜஹன்னம மின்கும் அஜ்ம'ஈன்
7:18. அதற்கு (இறைவன்) "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறிவிடு; அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்.
7:19 وَيٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ فَـكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ
وَيٰۤاٰدَمُ ஆதமே اسْكُنْ வசித்திரு اَنْتَ நீ وَزَوْجُكَ இன்னும் உம் மனைவி الْجَـنَّةَ சொர்க்கத்தில் فَـكُلَا (இருவரும்)புசியுங்கள் مِنْ حَيْثُ இடத்தில் شِئْتُمَا (இருவரும்)நாடினீர்கள் وَلَا تَقْرَبَا (இருவரும்) நெருங்காதீர்கள் هٰذِهِ الشَّجَرَةَ இந்த மரத்தை فَتَكُوْنَا (இருவரும்) ஆகிவிடுவீர்கள் مِنَ الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களில்
7:19. வ யா ஆதமுஸ் குன் அன்த வ Zஜவ்ஜுகல் ஜன்னத Fபகுலா மின் ஹய்து ஷி'துமா வலா தக்ரBபா ஹாதிஹிஷ் ஷஜரத Fபதகூனா மினள் ளாலிமீன்
7:19. பின்பு, இறைவன் ஆதமை நோக்கி: "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருங்கள்; நீங்கள் இருவரும் நாடிய இடத்திலெல்லாம் புசியுங்கள்; ஆனால், இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்களில் ஆகிவிடுவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).
7:20 فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وٗرِىَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰٮكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَـكَيْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِيْنَ
فَوَسْوَسَ ஊசலாட்டத்தை உண்டாக்கினான் لَهُمَا அவ்விருவருக்கும் الشَّيْطٰنُ ஷைத்தான் لِيُبْدِىَ (அவன்) வெளிப்படுத்துவதற்காக لَهُمَا அவ்விருவருக்கு مَا எது وٗرِىَ மறைக்கப்பட்டது عَنْهُمَا அவ்விருவரை விட்டு مِنْ سَوْاٰتِهِمَا அவ்விருவரின் வெட்கத் தலங்களை وَقَالَ கூறினான் مَا இல்லை نَهٰٮكُمَا அவன் உங்களிருவரை தடுக்க رَبُّكُمَا உங்களிருவரின் இறைவன் عَنْ هٰذِهِ விட்டு الشَّجَرَةِ இம்மரம் اِلَّاۤ தவிர اَنْ تَكُوْنَا நீங்கள் ஆகிவிடுவீர்கள் مَلَـكَيْنِ இரு வானவர்களாக اَوْ அல்லது تَكُوْنَا நீங்கள் ஆகிவிடுவீர்கள் مِنَ الْخٰلِدِيْنَ நிரந்தரமானவர்களில்
7:20. Fபவஸ்வஸ லஹுமஷ் ஷய்தானு லியுBப்திய லஹுமா மா வூரிய 'அன்ஹுமா மின் ஸவ் ஆதிஹிமா வ கால மா னஹாகுமா ரBப்Bபுகுமா 'அன் ஹாதிஹிஷ் ஷஜரதி இல்லா அன் தகூனா மலகய்னி அவ் தகூனா மினல் காலிதீன்
7:20. எனினும், அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த அவ்விருவருடைய வெட்கத்தலங்களை, அவ்விருவருக்கும் வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் ஊசலாட்டத்தை உண்டாக்கினான்: (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகிவிடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி, (வேறெதற்கும்) இந்த மரத்தைவிட்டும் உங்களிருவரையும் உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.
7:21 وَقَاسَمَهُمَاۤ اِنِّىْ لَـكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ
وَقَاسَمَهُمَاۤ சத்தியமிட்டான்/அவ்விருவரிடமும் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمَا உங்கள் இருவருக்கும் لَمِنَ النّٰصِحِيْنَۙ நிச்சயமாக நன்மையை நாடுவோரில்
7:21. வ காஸமஹுமா இன்னீ லகுமா லமினன் னாஸிஹீன்
7:21. "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று சத்தியமும் செய்தான்.
7:22 فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ ؕ وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ
فَدَلّٰٮهُمَا ஆக, தரம் தாழ்த்தினான்/அவ்விருவரை بِغُرُوْرٍ ۚ ஏமாற்றி فَلَمَّا ذَاقَا இருவரும் சுவைத்தபோது الشَّجَرَةَ மரத்தை بَدَتْ தெரிந்தன لَهُمَا அவ்விருவருக்கு سَوْاٰتُهُمَا அவ்விருவரின் வெட்கத்தலங்கள் وَطَفِقَا அவ்விருவரும் முயன்றனர் يَخْصِفٰنِ அவ்விவரும் மூடிக்கொள்கின்றனர் عَلَيْهِمَا தம் இருவர் மீதும் مِنْ وَّرَقِ இலைகளினால் الْجَـنَّةِ ؕ சொர்க்கத்தின் وَنَادٰٮهُمَا அழைத்தான்/அவ்விருவரை رَبُّهُمَاۤ அவ்விருவரின் இறைவன் اَلَمْ اَنْهَكُمَا நான் தடுக்கவில்லையா? / உங்களிருவரை عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ அம்மரத்தை விட்டு وَاَقُلْ இன்னும் நான்கூறவில்லையா? لَّـكُمَاۤ உங்களிருவருக்கு اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் لَـكُمَا உங்களிருவருக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ வெளிப்படையான
7:22. Fபதல்லாஹுமா Bபிகுரூர்; Fபலம்மா தாகஷ் ஷஜரத Bபதத் லஹுமா ஸவ் ஆதுஹுமா வ தFபிகா யக்ஸிFபானி 'அலய்ஹிமா மி(ன்)வ் வரகில் ஜன்னதி வ னாதாஹுமா ரBப்Bபுஹுமா அலம் அன்ஹகுமா 'அன் தில்குமஷ் ஷஜரதி வ அகுல் லகுமா இன்னஷ் ஷய்தான லகுமா 'அதுவ்வும் முBபீன்
7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, (தங்கள் நிலையிலிருந்து) அவர்கள் கீழே இறங்கும்படிச் செய்தான்; அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது, அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக் கொள்ளலாயினர்; (அப்போது) அவ்விருவரின் இறைவன் அவ்விருவரையும் அழைத்து, "உங்களிருவரையும் அம்மரத்தைவிட்டும் நான் தடுக்கவில்லையா? 'நிச்சயமாக ஷைத்தான் உங்களிருவருக்கும் பகிரங்கமான பகைவன்' என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?" (என்று கேட்டான்).
7:23 قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
قَالَا அவ்விருவரும் கூறினர் رَبَّنَا எங்கள் இறைவா ظَلَمْنَاۤ நாங்கள் தீங்கிழைத்தோம் اَنْفُسَنَا ٚ எங்கள் ஆன்மாக்களுக்கு وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا நீ மன்னிக்கவில்லையெனில்/எங்களை وَتَرْحَمْنَا இன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்கு لَـنَكُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடுவோம் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
7:23. காலா ரBப்Bபனா ளலம்னா அன்Fபுஸனா வ இல்லம் தக்Fபிர் லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் காஸிரீன்
7:23. அதற்கு அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம்; நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிடுவோம்" என்று கூறினார்கள்.
7:24 قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَـعْضٍ عَدُوٌّ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ
قَالَ கூறினான் اهْبِطُوْا இறங்கிவிடுங்கள் بَعْضُكُمْ உங்களில் சிலர் لِبَـعْضٍ சிலருக்கு عَدُوٌّ ۚ எதிரி وَلَـكُمْ உங்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் مُسْتَقَرٌّ தங்குமிடம் وَّمَتَاعٌ இன்னும் சுகம் اِلٰى வரை حِيْنٍ ஒரு காலம்
7:24. காலஹ் Bபிதூ Bபஃளுகும் லிBபஃளின் அதுவ் வ லகும் Fபில் அர்ளி முஸ்தகர்ரு(ன்)வ் வ மதா'உன் இலாஹீன்
7:24. (அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள்; உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்குப் பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்.
7:25 قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ
قَالَ கூறினான் فِيْهَا அதில்தான் تَحْيَوْنَ வாழ்வீர்கள் وَفِيْهَا இன்னும் அதில்தான் تَمُوْتُوْنَ இறப்பீர்கள் وَمِنْهَا இன்னும் அதிலிருந்துதான் تُخْرَجُوْنَ எழுப்பப்படுவீர்கள்
7:25. கால Fபீஹா தஹ்யவ்ன வ Fபீஹா தமூதூன வ மின்ஹா துக்ரஜூன்
7:25. "அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அதிலிருந்தே (மீண்டும் உயிர்கொடுத்து) வெளியாக்கப்படுவீர்கள்" என்றும் கூறினான்.
7:26 يٰبَنِىْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُّوَارِىْ سَوْاٰتِكُمْ وَرِيْشًا ؕ وَلِبَاسُ التَّقْوٰى ۙ ذٰ لِكَ خَيْرٌ ؕ ذٰ لِكَ مِنْ اٰيٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ
يٰبَنِىْۤ சந்ததிகளே اٰدَمَ ஆதமின் قَدْ திட்டமாக اَنْزَلْنَا இறக்கினோம் (படைத்தோம்) عَلَيْكُمْ உங்கள் மீது (உங்களுக்கு) لِبَاسًا ஆடையை يُّوَارِىْ மறைக்கின்ற(து) سَوْاٰتِكُمْ உங்கள் வெட்கத்தலங்களை وَرِيْشًا ؕ இன்னும் அலங்காரத்தை وَلِبَاسُ ஆடை التَّقْوٰى ۙ இறையச்சத்தின் ذٰ لِكَ அதுதான் خَيْرٌ ؕ மிகச் சிறந்தது ذٰ لِكَ இவை مِنْ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
7:26. யா Bபனீ ஆதம கத் அன்Zஜல்னா 'அலய்கும் லிBபாஸ(ன்)ய் யுவாரீ ஸவ் ஆதிகும் வ ரீஷ(ன்)வ் வ லிBபாஸுத் தக்வா தாலிக கய்ர்; தாலிக மின் ஆயாதில் லாஹி ல'அல்லஹும் யத் தக்கரூன்
7:26. ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கக்கூடிய ஆடையையும், அலங்காரத்தையும் திட்டமாக நாம் இறக்கியுள்ளோம்; இன்னும், 'இறையச்சம்' எனும் ஆடை - அதுவே மிக மேலானது; இது அல்லாஹ்வுடைய அடையாளங்களில் உள்ளதாகும்; (இதைக் கொண்டு) அவர்கள் நல்லுணர்வு பெறுவார்களாக!
7:27 يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ
يٰبَنِىْۤ சந்ததிகளே اٰدَمَ ஆதமின் لَا வேண்டாம் يَفْتِنَـنَّكُمُ உங்களை ஏமாற்றிவிட الشَّيْطٰنُ ஷைத்தான் كَمَاۤ போன்று اَخْرَجَ வெளியேற்றினான் اَبَوَيْكُمْ உங்கள் தாய் தந்தையை مِّنَ الْجَـنَّةِ சொர்க்கத்திலிருந்து يَنْزِعُ கழட்டுகிறான் عَنْهُمَا அவ்விருவரை விட்டு لِبَاسَهُمَا அவ்விருவரின் ஆடையை لِيُرِيَهُمَا அவன் காண்பிப்பதற்காக/அவ்விருவருக்கு سَوْءاٰتِهِمَا ؕ அவ்விருவருடைய வெட்கத்தலங்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் يَرٰٮكُمْ பார்க்கிறான்/உங்களை هُوَ அவன் وَقَبِيْلُهٗ இன்னும் அவனுடைய இனத்தார் مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ ؕ நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஆக்கினோம் الشَّيٰطِيْنَ ஷைத்தான்களை اَوْلِيَآءَ நண்பர்களாக لِلَّذِيْنَ எவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
7:27. யா Bபனீ ஆதம லா யFப்தினன்ன்னகுமுஷ் ஷய்தானு கமா அக்ரஜ அBபவய்கும் மினல் ஜன்னதி யன்Zஜி'உ 'அன்ஹுமா லிBபாஸஹுமா லியுரியஹுமா ஸவ் ஆதிஹிமா; இன்னஹூ யராகும் ஹுவ வ கBபீலுஹூ மின் ஹய்து லா தரவ்னஹும்; இன்னா ஜ'அல்னஷ் ஷயாதீன அவ்லியா'அ லில்லதீன லா யு'மினூன்
7:27. ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களிருவருடைய வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக அவ்விருவரின் ஆடையை அவ்விருவரை விட்டும் களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியதுபோல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு ஷைத்தான்களை நண்பர்களாக நாம் ஆக்கியுள்ளோம்.
7:28 وَاِذَا فَعَلُوْا فَاحِشَةً قَالُوْا وَجَدْنَا عَلَيْهَاۤ اٰبَآءَنَا وَاللّٰهُ اَمَرَنَا بِهَا ؕ قُلْ اِنَّ اللّٰهَ لَا يَاْمُرُ بِالْفَحْشَآءِ ؕ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
وَاِذَا فَعَلُوْا அவர்கள் செய்தால் فَاحِشَةً ஒரு மானக்கேடானதை قَالُوْا கூறுகின்றனர் وَجَدْنَا கண்டோம் عَلَيْهَاۤ இதன் மீது اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை وَاللّٰهُ அல்லாஹ்வும் اَمَرَنَا ஏவினான்/எங்களுக்கு بِهَا ؕ قُلْ இதை/கூறுவீராக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَاْمُرُ ஏவ மாட்டான் بِالْفَحْشَآءِ ؕ மானக்கேடானதை اَتَقُوْلُوْنَ கூறுகிறீர்களா? عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது مَا எவற்றை لَا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
7:28. வ இதா Fப'அலூ Fபாஹிஷதன் காலூ வஜத்னா 'அலய்ஹா ஆBபா'அன வல்லாஹு அமரனா Bபிஹா; குல் இன்னல் லாஹ லா ய'முரு Bபில்Fபஹ்ஷா'இ அ-தகூலூன 'அலல் லாஹி மா லா தஃலமூன்
7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான (காரியத்)தைச் செய்துவிட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதே நாங்கள் கண்டோம்; இன்னும், அல்லாஹ் எங்களை அதைக் கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள்; "(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடானவற்றை(ச் செய்ய) ஏவமாட்டான்; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக!
7:29 قُلْ اَمَرَ رَبِّىْ بِالْقِسْطِ وَاَقِيْمُوْا وُجُوْهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّادْعُوْهُ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ ؕ كَمَا بَدَاَكُمْ تَعُوْدُوْنَؕ
قُلْ கூறுவீராக اَمَرَ ஏவினான் رَبِّىْ என் இறைவன் بِالْقِسْطِ நீதத்தை وَاَقِيْمُوْا இன்னும் நிலைநிறுத்துங்கள் وُجُوْهَكُمْ உங்கள் முகங்களை عِنْدَ இடம் كُلِّ எல்லாம் مَسْجِدٍ மஸ்ஜிது وَّادْعُوْهُ அழையுங்கள்/அவனை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு الدِّيْنَ ؕ வழிபடுவதை كَمَا بَدَاَكُمْ போன்று/ஆரம்பமாக படைத்தான்/உங்களை تَعُوْدُوْنَؕ திரும்புவீர்கள்
7:29. குல் அமர ரBப்Bபீ Bபில்கிஸ்தி வ அகீமூ வுஜூஹகும் 'இன்த குல்லி மஸ்ஜிதின் வத்'ஊஹு முக்லிஸீன லஹுத் தீன்; கமா Bபத அகும் த'ஊதூன்
7:29. "என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுமிடத்திலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்!" என்று நீர் கூறும்.
7:30 فَرِيْقًا هَدٰى وَ فَرِيْقًا حَقَّ عَلَيْهِمُ الضَّلٰلَةُ ؕ اِنَّهُمُ اتَّخَذُوا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ اللّٰهِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ
فَرِيْقًا ஒரு பிரிவை هَدٰى நேர்வழிப்படுத்தினான் وَ فَرِيْقًا இன்னும் ஒரு பிரிவு حَقَّ உறுதியாகி விட்டது عَلَيْهِمُ அதன் மீது الضَّلٰلَةُ ؕ வழிகேடு اِنَّهُمُ நிச்சயமாக அவர்கள் اتَّخَذُوا எடுத்துக் கொண்டனர் الشَّيٰطِيْنَ ஷைத்தான்களை اَوْلِيَآءَ தோழர்களாக مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَيَحْسَبُوْنَ இன்னும் எண்ணுகின்றனர் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் مُّهْتَدُوْنَ நேர்வழி பெற்றவர்கள்
7:30. Fபரீகன் ஹதா வ Fபரீகன் ஹக்க 'அலய்ஹிமுள் ளலாலஹ்; இன்னஹுமுத் தகதுஷ் ஷயாதீன அவ்லியா'அ மின் தூனில் லாஹி வ யஹ்ஸBபூன அன்னஹும் முஹ்ததூன்
7:30. ஒரு கூட்டத்தாரை அவன் நேர்வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டத்தாருக்கோ வழிகேடு அவர்கள்மீது உறுதியாகிவிட்டது; (ஏனெனில்,) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வைவிட்டு ஷைத்தான்களைப் பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள்; எனினும், தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
7:31 يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ
يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளே خُذُوْا زِيْنَتَكُمْ அலங்கரித்துக் கொள்ளுங்கள் / உங்களை عِنْدَ இடம் كُلِّ எல்லாம் مَسْجِدٍ மஸ்ஜிது وَّكُلُوْا இன்னும் புசியுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் وَلَا تُسْرِفُوْا ۚ விரயம் செய்யாதீர்கள் اِنَّهٗ நிச்சயம் அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُسْرِفِيْنَ விரயம் செய்பவர்களை
7:31. யா Bபனீ அதம குதூ Zஜீனதகும் 'இன்த குல்லி மஸ்ஜிதி(ன்)வ் வ குலூ வஷ்ரBபூ வலா துஸ்ரிFபூ; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஸ்ரிFபீன்
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் (தொழும்காலம் - ஆடை முதலியவற்றைக் கொண்டு) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும், வீண்விரயம் செய்யாதீர்கள்; ஏனெனில், (அல்லாஹ்வாகிய) அவன் வீண்விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:32 قُلْ مَنْ حَرَّمَ زِيْنَةَ اللّٰهِ الَّتِىْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّيِّبٰتِ مِنَ الرِّزْقِؕ قُلْ هِىَ لِلَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا خَالِصَةً يَّوْمَ الْقِيٰمَةِؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
قُلْ கூறுவீராக مَنْ எவன்? حَرَّمَ தடை செய்தான் زِيْنَةَ அலங்காரத்தை اللّٰهِ அல்லாஹ் الَّتِىْۤ எது اَخْرَجَ வெளிப்படுத்தினான் لِعِبَادِهٖ தன் அடியார்களுக்காக وَالطَّيِّبٰتِ இன்னும் நல்லவற்றை مِنَ الرِّزْقِؕ உணவில் قُلْ கூறுவீராக هِىَ அது لِلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا இவ்வுலகம் خَالِصَةً பிரத்தியோகமாக يَّوْمَ الْقِيٰمَةِؕ மறுமை நாளில் كَذٰلِكَ இவ்வாறு نُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ அறிகின்றார்கள்
7:32. குல் மன் ஹர்ரம Zஜீனத் அல்லாஹில் லதீ அக்ரஜ லி'இBபாதிஹீ வத்தய்யிBபாதி மினர் ரிZஜ்க்; குல் ஹிய லில்லதீன ஆமனூ Fபில் ஹயாதித் துன்யா காலிஸத(ன்)ய் யவ்மல் கியாமஹ்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லி கவ்மி(ன்)ய் யஃலமூன்
7:32. (நபியே!) நீர் கேட்பீராக: "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள அலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்: "அவை இவ்வுலக வாழ்க்கையிலும், குறிப்பாக மறுமை நாளிலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு உரியன. இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய சமுதாயத்திற்கு விவரிக்கின்றோம்."
7:33 قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் حَرَّمَ தடைசெய்தான் رَبِّىَ என் இறைவன் الْـفَوَاحِشَ மானக்கேடான காரியங்கள் مَا எது ظَهَرَ வெளிப்படையாக இருக்கிறது مِنْهَا அவற்றில் وَمَا இன்னும் எது بَطَنَ மறைவாகஇருக்கிறது وَ الْاِثْمَ இன்னும் பாவத்தை وَالْبَـغْىَ இன்னும் கொடுமைப்படுத்துவது بِغَيْرِ الْحَـقِّ நியாயமின்றி وَاَنْ تُشْرِكُوْا இன்னும் நீங்கள் இணையாக்குவதை بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு مَا لَمْ يُنَزِّلْ بِهٖ எதை/அவன் இறக்கவில்லை/அதற்கு سُلْطٰنًا ஓர் ஆதாரத்தை وَّاَنْ تَقُوْلُوْا இன்னும் நீங்கள் கூறுவதை عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது مَا எவற்றை لَا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
7:33. குல் இன்னமா ஹர்ரம ரBப்Bபியல் Fபவாஹிஷ மா ளஹர மின்ஹா வமா Bபதன வல் இத்ம வல்Bபக்ய Bபிகய்ரில் ஹக்கி வ அன் துஷ்ரிகூ Bபில்லாஹி மா லம் யுனZஜ்Zஜில் Bபிஹீ ஸுல்தான(ன்)வ் வ அன் தகூலூ 'அலல் லாஹி மா லா தஃலமூன்
7:33. "என் இறைவன் தடுத்திருப்பவையெல்லாம் மானக்கேடானவற்றை - அவற்றில் வெளிப்படையானவற்றையும், அந்தரங்கமானவற்றையும், (இதர) பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், அல்லாஹ்வுக்கு நீங்கள் இணை கற்பிப்பதையும் - அதற்கு எந்த ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க; இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும்தான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!
7:34 وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا يَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ
وَلِكُلِّ எல்லோருக்கும் اُمَّةٍ இனத்தவர் اَجَلٌۚ ஒரு தவணை فَاِذَا جَآءَ வந்தால் اَجَلُهُمْ அவர்களுடைய தவணை لَا يَسْتَاْخِرُوْنَ பிந்த மாட்டார்கள் سَاعَةً ஒரு வினாடி وَّلَا يَسْتَقْدِمُوْنَ இன்னும் முந்த மாட்டார்கள்
7:34. வ லிகுல்லி உம்மதின் அஜலுன் Fப இதா ஜா'அ அஜலுஹும் லா யஸ்த' கிரூன ஸா'அத(ன்)வ் வலா யஸ்தக்திமூன்
7:34. ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலக்கெடு உண்டு; அவர்களுடைய கெடு வந்துவிட்டால், அவர்கள் ஒரு கணப்பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
7:35 يٰبَنِىْۤ اٰدَمَ اِمَّا يَاْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْۙ فَمَنِ اتَّقٰى وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ
يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளே اِمَّا يَاْتِيَنَّكُمْ நிச்சயமாக வந்தால் / உங்களிடம் رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களில் இருந்தே يَقُصُّوْنَ விவரித்தவர்களாக عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِىْۙ என் வசனங்களை فَمَنِ எவர்(கள்) اتَّقٰى அஞ்சினார்(கள்) وَاَصْلَحَ இன்னும் சீர்திருத்தினார்(கள்) فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
7:35. யா Bபனீ ஆதம இம்மா ய'தியன்னகும் ருஸுலும் மின்கும் யகுஸ்ஸூன 'அலய்கும் ஆயாதீ Fபமனித் தகா வ அஸ்லஹ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
7:35. ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே தூதர்கள் வந்து என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் (என்னை) அஞ்சி, (தம்மை) சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
7:36 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰۤٮِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَاسْتَكْبَرُوْا பெருமையடித்து புறக்கணித்தனர் عَنْهَاۤ அவற்றை விட்டு اُولٰۤٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِۚ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ நிரந்தரமானவர்கள்
7:36. வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன் ஹா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
7:36. ஆனால், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து (அவற்றை ஏற்பதை) விட்டும் பெருமையடித்தார்களோ அவர்கள், நரகவாசிகளேயாவார்கள்; அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
7:37 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ
فَمَنْ யார்? اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖ ؕ அவனுடைய வசனங்களை اُولٰۤٮِٕكَ இவர்கள் يَنَالُهُمْ அடையும்/இவர்களை نَصِيْبُهُمْ பாகம்/இவர்களுடைய مِّنَ الْـكِتٰبِؕ விதியில் حَتّٰٓى இறுதியாக اِذَا போது جَآءَتْهُمْ இவர்களிடம் வந்த رُسُلُـنَا நம் தூதர்கள் يَتَوَفَّوْنَهُمْ ۙ உயிர்வாங்குபவர்களாக / இவர்களை قَالُوْۤا கூறுவார்கள் اَيْنَ எங்கே? مَا எவை كُنْتُمْ இருந்தீர்கள் تَدْعُوْنَ பிரார்த்திப்பீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ ؕ அல்லாஹ்வையன்றி قَالُوْا கூறினார்கள் ضَلُّوْا மறைந்தனர் عَنَّا எங்களை விட்டு وَشَهِدُوْا இன்னும் சாட்சியளிப்பார்கள் عَلٰٓى எதிராக اَنْفُسِهِمْ தங்களுக்கு اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் كَانُوْا இருந்தனர் كٰفِرِيْنَ நிராகரிப்பவர்களாக
7:37. Fபமன் அள்லமு மிம்மனிFப் தரா 'அலல் லாஹி கதிBபன் அவ் கத்தBப Bபி ஆயாதிஹ்; உலா'இக யனாலுஹும் னஸீBபுஹும் மினல் கிதாBப்; ஹத்தா இதா ஜா'அத் ஹும் ருஸுலுனா யதவFப் Fபவ்னஹும் காலூ அய்ன மா குன்தும் தத்'ஊனா மின் தூனில் லாஹி காலூ ளல்லூ 'அன்னா வ ஷஹிதூ 'அலா அன்Fபுஸிஹிம் அன்னஹும் கானூ காFபிரீன்
7:37. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தவனைவிட, அல்லது அவனுடைய வசனங்களை நிராகரித்தவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும், அத்தகையவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, செல்வம் முதலிய) வைகளிலிருந்து அவர்களுடைய பங்கு (இவ்வுலகில்) அவர்களுக்குக் கிடைக்கும்: இறுதியில் நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும்போது (அவ்வான தூதர்கள்), "அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைத்துக் கொண்டிருந்தவை எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், "எங்களைவிட்டு அவர்கள் மறைந்துவிட்டார்கள்" என்று கூறி, மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக இருந்ததாக தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
7:38 قَالَ ادْخُلُوْا فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ فِى النَّارِ ؕ كُلَّمَا دَخَلَتْ اُمَّةٌ لَّعَنَتْ اُخْتَهَا ؕ حَتّٰۤى اِذَا ادَّارَكُوْا فِيْهَا جَمِيْعًا ۙ قَالَتْ اُخْرٰٮهُمْ لِاُوْلٰٮهُمْ رَبَّنَا هٰٓؤُلَۤاءِ اَضَلُّوْنَا فَاٰتِهِمْ عَذَابًا ضِعْفًا مِّنَ النَّارِ ؕ قَالَ لِكُلٍّ ضِعْفٌ وَّلٰـكِنْ لَّا تَعْلَمُوْنَ
قَالَ கூறுவான் ادْخُلُوْا நுழையுங்கள் فِىْۤ اُمَمٍ கூட்டங்களில் قَدْ خَلَتْ சென்றுவிட்டன مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ இன்னும் மனிதர்களில் فِى النَّارِ ؕ நரகத்தில் كُلَّمَا எல்லாம் دَخَلَتْ நுழைந்தது اُمَّةٌ ஒரு கூட்டம் لَّعَنَتْ சபிக்கும் اُخْتَهَا ؕ தன் சக கூட்டத்தை حَتّٰۤى இறுதியாக اِذَا ادَّارَكُوْا அவர்கள் ஒன்றுசேர்ந்தால் فِيْهَا அதில் جَمِيْعًا ۙ அனைவரும் قَالَتْ கூறும் اُخْرٰٮهُمْ அவர்களில் பின் வந்த கூட்டம் لِاُوْلٰٮهُمْ தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து رَبَّنَا எங்கள் இறைவா هٰٓؤُلَۤاءِ இவர்கள்தான் اَضَلُّوْنَا வழி கெடுத்தனர்/எங்களை فَاٰتِهِمْ எனவே கொடு/அவர்களுக்கு عَذَابًا வேதனையை ضِعْفًا இரு மடங்கு مِّنَ النَّارِ ؕ நரகில் قَالَ கூறுவான் لِكُلٍّ எல்லோருக்கும் ضِعْفٌ இரு மடங்கு وَّلٰـكِنْ எனினும் لَّا تَعْلَمُوْنَ அறியமாட்டீர்கள்
7:38. காலத் குலூ Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிகும் மினல் ஜின்னி வல் இன்ஸி Fபின் னாரி குல்லமா தகலத் உம்மதுல் ல'அனத் உக்தஹா ஹத்தா இதத் தாரகூ Fபீஹா ஜமீ'அன் காலத் உக்ராஹும் லி ஊலாஹும் ரBப்Bபனா ஹா உ'லா'இ அளல்லூனா Fப ஆதிஹிம் 'அதாBபன் ளிஃFபம் மினன் னாரி கால லிகுல்லின் ளிஃFபு(ன்)வ் வ லாகில் லா தஃலமூன்
7:38. (அல்லாஹ்) கூறுவான்: ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் உங்களுக்குமுன் சென்றுவிட்ட கூட்டத்தார்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்; ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்குமுன் அங்கு வந்துள்ள) தம்முடைய சக கூட்டத்தினரைச் சபிப்பார்கள்; முடிவாக, அவர்கள் யாவரும் அ(ந்நரகத்)தில் சேர்ந்துவிட்டபொழுது அவர்களில் பிந்தியவர்கள், முந்தியவர்களைப் பற்றி, "எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழிகெடுத்தார்கள்; ஆதலால், இவர்களுக்கு நரகத்தில் இருமடங்கு வேதனையைக் கொடு" என்று சொல்வார்கள்; அவன் கூறுவான்: "உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு; ஆனால், நீங்கள் அதை அறியமாட்டீர்கள்."
7:39 وَقَالَتْ اُوْلٰٮهُمْ لِاُخْرٰٮهُمْ فَمَا كَانَ لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ
وَقَالَتْ இன்னும் கூறும் اُوْلٰٮهُمْ அவர்களில் முன்சென்ற கூட்டம் لِاُخْرٰٮهُمْ அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு فَمَا كَانَ لَـكُمْ உங்களுக்கு இல்லை عَلَيْنَا எங்களை விட مِنْ فَضْلٍ ஒரு மேன்மை فَذُوْقُوا ஆகவே சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا எதன் காரணமாக كُنْتُمْ இருந்தீர்கள் تَكْسِبُوْنَ செய்வீர்கள்
7:39. வ காலத் ஊலாஹும் லி உக்ராஹும் Fபமா கான லகும் 'அலய்னா மின் Fபள்லின் Fபதூகுல் அதாBப Bபிமா குன்தும் தக்ஸிBபூன்
7:39. அவர்களில் முந்தியவர்கள், அவர்களில் பிந்தியவர்களிடம், "எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது; ஆதலால், நீங்கள் சம்பாதித்துக்கொண்ட (தீ)வினையின் காரணமாக, நீங்களும் (இருமடங்கு) வேதனையைச் சுவையுங்கள்" என்று கூறுவார்கள்.
7:40 اِنَّ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ اَبْوَابُ السَّمَآءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَـنَّةَ حَتّٰى يَلِجَ الْجَمَلُ فِىْ سَمِّ الْخِيَاطِ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُجْرِمِيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ كَذَّبُوْا பொய்ப்பித்தவர்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَاسْتَكْبَرُوْا இன்னும் பெருமையடித்து புறக்கணித்தனர் عَنْهَا அவற்றை விட்டு لَا تُفَتَّحُ திறக்கப்படாது لَهُمْ அவர்களுக்கு اَبْوَابُ வாசல்கள் السَّمَآءِ வானத்தின் وَلَا يَدْخُلُوْنَ இன்னும் நுழைய மாட்டார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் حَتّٰى يَلِجَ நுழையும் வரை الْجَمَلُ ஒட்டகம் فِىْ سَمِّ காதில் الْخِيَاطِ ؕ ஊசியின் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலி கொடுப்போம் الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளுக்கு
7:40. இன்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வஸ்தக்Bபரூ 'அன்ஹா லா துFபத்தஹு லஹும் அBப்வாBபுஸ் ஸமா'இ வலா யத்குலூனல் ஜன்னத ஹத்தா யலிஜல் ஜமலு Fபீ ஸம்மில் கியாத்; வ கதாலிக னஜ்Zஜில் முஜ்ரிமீன்
7:40. எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்து, இன்னும் அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா; மேலும், ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில், அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்குக் கூலி கொடுப்போம்.
7:41 لَهُمْ مِّنْ جَهَـنَّمَ مِهَادٌ وَّمِنْ فَوْقِهِمْ غَوَاشٍ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ
لَهُمْ அவர்களுக்கு مِّنْ جَهَـنَّمَ நரகத்தில் مِهَادٌ ஒரு விரிப்பு وَّمِنْ فَوْقِهِمْ இன்னும் அவர்களுக்கு மேல் غَوَاشٍ ؕ போர்வைகள் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலி கொடுப்போம் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு
7:41. லஹும் மின் ஜஹன்னம மிஹாது(ன்)வ் வ மின் Fபவ்கிஹிம் கவாஷ்; வ கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
7:41. அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலிருந்து நெருப்புப் போர்வைகளும் உண்டு; இன்னும், இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
7:42 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَاۤ اُولٰۤٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை لَا نُـكَلِّفُ சிரமப்படுத்த மாட்டோம் نَفْسًا ஓர் ஆன்மாவை اِلَّا தவிர وُسْعَهَاۤ அதன் சக்திக்குத் தக்கவாறே اُولٰۤٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِۚ சொர்க்கவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ நிரந்தரமானவர்கள்
7:42. வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லா னுகல்லிFபு னFப்ஸன் இல்லா வுஸ்'அஹா உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
7:42. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம் - அவர்கள்தான் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அதிலேயே நிரந்தரமாக (தங்கி) இருப்பார்கள்.
7:43 وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُۚ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ ۚ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ ؕ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
وَنَزَعْنَا நீக்கி விடுவோம் مَا فِىْ صُدُوْرِهِمْ எதை/அவர்களுடைய நெஞ்சங்களில் مِّنْ غِلٍّ குரோதத்தை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهِمُ அவர்களுக்குக் கீழ் الْاَنْهٰرُۚ நதிகள் وَقَالُوا இன்னும் கூறுவார்கள் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا எவன்/ நேர்வழிபடுத்தினான்/எங்களை/இதற்கு وَمَا كُنَّا لِنَهْتَدِىَ நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம் لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا நேர்வழி செலுத்தி இருக்கவில்லையென்றால் /எங்களை اللّٰهُ ۚ அல்லாஹ் لَقَدْ திட்டமாக جَآءَتْ வந்தா(ர்க)ள் رُسُلُ தூதர்கள் رَبِّنَا எங்கள் இறைவனின் بِالْحَـقِّ ؕ உண்மையைக் கொண்டு وَنُوْدُوْۤا இன்னும் அழைக்கப்படுவார்கள் اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ இந்த சொர்க்கம் اُوْرِثْتُمُوْهَا இதற்கு வாரிசாக்கப்பட்டீர்கள் بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ நீங்கள் செய்து கொண்டிருந்ததனால்
7:43. வ னZஜஃனா மா Fபீ ஸுதூரிஹிம் மின் கில்லின் தஜ்ரீ மின் தஹ்திஹிமுல் அன்ஹாரு வ காலுல் ஹம்து லில்லாஹில் லதீ ஹதானா லிஹாத வமா குன்ன லினஹ்ததிய லவ் லா அன்ன் ஹதானல் லாஹு லகத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; வ னூதூ அன் தில்குமுல் ஜன்ன்னது ஊரித்துமூஹா Bபிமா குன்தும் தஃமலூன்
7:43. மேலும், (உலகில் அவர்களுக்கு மத்தியில்) அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்த குரோதத்தையும் நாம் நீக்கிவிடுவோம்; அவர்களுக்குக் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்: இன்னும், அவர்கள் கூறுவார்கள்: "இ(ந்தப் பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்; எங்கள் இறைவனுடைய தூதர்கள் சத்தியத்தையே நிச்சயமாகக் கொண்டுவந்தார்கள்:" (அப்பொழுது) "இந்தச் சொர்க்கம் - (உலகில்) நீங்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.
7:44 وَنَادٰٓى اَصْحٰبُ الْجَـنَّةِ اَصْحٰبَ النَّارِ اَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ؕ قَالُوْا نَـعَمْ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌۢ بَيْنَهُمْ اَنْ لَّـعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَۙ
وَنَادٰٓى அழைப்பார்(கள்) اَصْحٰبُ الْجَـنَّةِ சொர்க்கவாசிகள் اَصْحٰبَ النَّارِ நரகவாசிகளை اَنْ قَدْ وَجَدْنَا என்று/பெற்றுக் கொண்டோம் مَا وَعَدَنَا எதை/வாக்களித்தான்/எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் حَقًّا உண்மையில் فَهَلْ وَجَدْتُّمْ பெற்றீர்களா? مَّا எதை وَعَدَ வாக்களித்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் حَقًّا ؕ உண்மையில் قَالُوْا கூறுவார்கள் نَـعَمْ ۚ ஆம்! فَاَذَّنَ ஆகவே அறிவிப்பார் مُؤَذِّنٌۢ ஓர் அறிவிப்பாளர் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் اَنْ لَّـعْنَةُ நிச்சயமாக சாபம் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَى الظّٰلِمِيْنَۙ அநியாயக்காரர்கள் மீது
7:44. வ னாதா அஸ்ஹாBபுல் ஜன்னதி அஸ்ஹாBபன் னாரி அன் கத் வஜத்னா மா வ'அதன்னா ரBப்Bபுனா ஹக்கன் Fபஹல் வஜத்தும் மா வ'அத ரBப்Bபுகும் ஹக்கன் காலூ ன'அம்; Fப அத்தன மு'அத்தினும் Bபய்னஹும் அல் லஃனதுல் லாஹி 'அலள் ளாலிமீன்
7:44. சுவர்க்கவாசிகள், நரகவாசிகளை அழைத்து, "எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாக நாங்கள் பெற்றுக்கொண்டோம்; நீங்களும் உங்களுடைய இறைவன் வாக்களித்ததை உண்மையானதாகப் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள்; அதற்கு அவர்கள், "ஆம் (பெற்றுக்கொண்டோம்)" என்பார்கள்; அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்.
7:45 الَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَـبْـغُوْنَهَا عِوَجًا ۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَۘ
الَّذِيْنَ எவர்கள் يَصُدُّوْنَ தடுத்தனர் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَيَـبْـغُوْنَهَا இன்னும் அதில்தேடுகிறார்கள் عِوَجًا ۚ கோணலை وَهُمْ அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை كٰفِرُوْنَۘ நிராகரிப்பவர்கள்
7:45. அல்லதீன யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி வ யBப்கூ னஹா 'இவஜ(ன்)வ் வ ஹும் Bபில் ஆகிரதி காFபிரூன்
7:45. (அநியாயக்காரர்களான) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டு (மனிதர்களைத்) தடுக்கின்றனர்; இன்னும், (அந்தப் பாதையில் யாரும் செல்லாதிருக்க) அதைக் கோணலாக்கவும் தேடினர்; மேலும், அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்.
7:46 وَبَيْنَهُمَا حِجَابٌۚ وَعَلَى الْاَعْرَافِ رِجَالٌ يَّعْرِفُوْنَ كُلًّاۢ بِسِيْمٰٮهُمْ ۚ وَنَادَوْا اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ سَلٰمٌ عَلَيْكُمْ لَمْ يَدْخُلُوْهَا وَهُمْ يَطْمَعُوْنَ
وَبَيْنَهُمَا அவ்விருவருக்குமிடையில் حِجَابٌۚ ஒரு மதில் وَعَلَى மீது الْاَعْرَافِ சிகரங்கள் رِجَالٌ (சில) மனிதர்கள் يَّعْرِفُوْنَ அறிவார்கள் كُلًّاۢ ஒவ்வொருவரையும் بِسِيْمٰٮهُمْ ۚ அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு وَنَادَوْا இன்னும் அழைப்பார்கள் اَصْحٰبَ الْجَـنَّةِ சொர்க்கவாசிகளை اَنْ என்று سَلٰمٌ ஈடேற்றம் عَلَيْكُمْ உங்கள் மீது لَمْ இல்லை يَدْخُلُوْهَا அதில் அவர்கள் நுழைய وَهُمْ يَطْمَعُوْنَ அவர்கள் ஆசைப்படுவார்கள்
7:46. வ Bபய்னஹுமா ஹிஜாBப்; வ 'அலல் அஃராFபி ரிஜாலு(ன்)ய் யஃரிFபூன குல்லம் Bபிஸீமாஹும்; வ னாதவ் அஸ்ஹாBபல் ஜன்னதி அன் ஸலாமுன் 'அலய்கும்; லம் யத்குலூஹா வ ஹும் யத்ம'ஊன்
7:46. (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; (அதன்) சிகரங்களில் சில மனிதர்கள் இருப்பார்கள்; (நரகவாசிகள், சுவர்க்கவாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளத்தைக்கொண்டு அவர்கள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் சுவர்க்கவாசிகளை அழைத்து "உங்கள் மீது சாந்தி உண்டாகுக!" என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் அதில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
7:47 وَاِذَا صُرِفَتْ اَبْصَارُهُمْ تِلْقَآءَ اَصْحٰبِ النَّارِۙ قَالُوْا رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
وَاِذَا صُرِفَتْ திருப்பப்பட்டால் اَبْصَارُ பார்வைகள் هُمْ இவர்களின் تِلْقَآءَ பக்கம் اَصْحٰبِ வாசிகளின் النَّارِۙ நரக(ம்) قَالُوْا கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே مَعَ الْقَوْمِ மக்களுடன் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
7:47. வ இதா ஸுரிFபத் அBப்ஸாருஹும் தில்கா'அ அஸ்ஹாBபின் னாரி காலூ ரBப்Bபனா லா தஜ்'அல்னா ம'அல் கவ்மிள் ளாலிமீன்
7:47. அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால் அவர்கள், "எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்கார சமுதாயத்தினருடன் ஆக்கிவிடாதே" என்று கூறுவார்கள்.
7:48 وَنَادٰٓى اَصْحٰبُ الْاَعْرَافِ رِجَالًا يَّعْرِفُوْنَهُمْ بِسِيْمٰٮهُمْ قَالُوْا مَاۤ اَغْنٰى عَنْكُمْ جَمْعُكُمْ وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ
وَنَادٰٓى அழைப்பார்(கள்) اَصْحٰبُ الْاَعْرَافِ சிகரவாசிகள் رِجَالًا சில மனிதர்களை يَّعْرِفُوْنَهُمْ அறிவார்கள் அவர்களை بِسِيْمٰٮهُمْ முகஅடையாளத்தைக் கொண்டு/அவர்களின் قَالُوْا கூறுவார்கள் مَاۤ اَغْنٰى பலனளிக்கவில்லை عَنْكُمْ உங்களுக்கு جَمْعُكُمْ உங்கள் சேமிப்பு وَمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும்
7:48. வ னாதா அஸ்ஹாBபுல் அஃராFபி ரிஜால(ன்)ய் யஃரிFபூனஹும் Bபிஸீமாஹும் காலூ மா அக்னா 'அன்கும் ஜம்'உகும் வமா குன்தும் தஸ்தக்Bபிரூன்
7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை அவர்களின் அடையாளத்தைக் கொண்டு, அவர்களை அறிந்துகொண்டு அழைத்துக் கூறுவார்கள்: "நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!"
7:49 اَهٰٓؤُلَۤاءِ الَّذِيْنَ اَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ اللّٰهُ بِرَحْمَةٍ ؕ اُدْخُلُوا الْجَـنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ
اَهٰٓؤُلَۤاءِ இவர்கள்தானா? الَّذِيْنَ எவர்கள் اَقْسَمْتُمْ சத்தியம் செய்தீர்கள் لَا மாட்டான் يَنَالُهُمُ அவர்களை அடைய اللّٰهُ அல்லாஹ் بِرَحْمَةٍ ؕ கருணையைக் கொண்டு اُدْخُلُوا நுழையுங்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் لَا خَوْفٌ பயமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்
7:49. அ ஹா'உலா'இல் லதீன அக்ஸம்தும் லா யனாலுஹுமுல் லாஹு Bபி ரஹ்மஹ்; உத்குலுல் ஜன்னத லா கவ்Fபுன் 'அலய்கும் வ லா அன்தும் தஹ்Zஜனூன்
7:49. "அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரியமாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்துக் கூறுவார்கள்); "நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" (என்று இறைவன் கூறுவான்)."
7:50 وَنَادٰٓى اَصْحٰبُ النَّارِ اَصْحٰبَ الْجَـنَّةِ اَنْ اَفِيْضُوْا عَلَيْنَا مِنَ الْمَآءِ اَوْ مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ؕ قَالُـوْۤا اِنَّ اللّٰهَ حَرَّمَهُمَا عَلَى الْـكٰفِرِيْنَ ۙ
وَنَادٰٓى அழைப்பார் اَصْحٰبُ النَّارِ நரகவாசிகள் اَصْحٰبَ الْجَـنَّةِ சொர்க்கவாசிகளை اَنْ اَفِيْضُوْا ஊற்றுங்கள் என்று عَلَيْنَا எங்கள் மீது مِنَ الْمَآءِ நீரிலிருந்து اَوْ அல்லது مِمَّا எதிலிருந்து رَزَقَكُمُ உணவளித்தான்/உங்களுக்கு اللّٰهُ ؕ அல்லாஹ் قَالُـوْۤا கூறுவார்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் حَرَّمَهُمَا தடைசெய்தான்/அவ்விரண்டையும் عَلَى الْـكٰفِرِيْنَ நிராகரிப்பவர்கள் மீது
7:50. வ னாதா அஸ்ஹாBபுன் னாரி அஸ்ஹாBபல் ஜன்னதி அன் அFபீளூ 'அலய்னா மினல் மா'இ அவ் மிம்ம ரZஜககுமுல் லாஹ்; காலூ இன்னல் லாஹ ஹர்ரம ஹுமா 'அலல் காFபிரீன்
7:50. நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்கள் மீது ஊற்றுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் நிராகரிப்பவர்கள் மீது தடுத்து விட்டான்" என்று கூறுவார்கள்.
7:51 الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَهْوًا وَّلَعِبًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا ۚ فَالْيَوْمَ نَنْسٰٮهُمْ كَمَا نَسُوْا لِقَآءَ يَوْمِهِمْ هٰذَا ۙ وَمَا كَانُوْا بِاٰيٰتِنَا يَجْحَدُوْنَ
الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் دِيْنَهُمْ தங்கள் மார்க்கத்தை لَهْوًا கேளிக்கையாக وَّلَعِبًا இன்னும் விளையாட்டாக وَّغَرَّتْهُمُ இன்னும் மயக்கியது/அவர்களை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَا ۚ உலகம் فَالْيَوْمَ இன்று نَنْسٰٮهُمْ மறப்போம்/அவர்களை كَمَا نَسُوْا அவர்கள் மறந்ததினால் لِقَآءَ சந்திப்பை يَوْمِهِمْ هٰذَا ۙ அவர்களுடைய இந்நாளின் وَمَا كَانُوْا இன்னும் அவர்கள் இருந்த காரணத்தால் بِاٰيٰتِنَا நம் வசனங்களை يَجْحَدُوْنَ மறுப்பார்கள்
7:51. அல்லதீனத் தகதூ தீனஹும் லஹ்வ(ன்)வ் வ ல'இ-Bப(ன்)வ் வ கர்ரத் ஹுமுல் ஹயாதுத் துன்யா; Fபல் யவ்ம னன்ன்ஸாஹும் கமா னஸூ லிகா'அ யவ்மிஹிம் ஹாதா வமா கானூ Bபி ஆயாதினா யஜ்ஹதூன்
7:51. (ஏனெனில்,) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொண்டார்கள்; இன்னும், அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கிவிட்டது; எனவே, அவர்களுடைய இந்த நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம்முடைய வசனங்களையும் அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததைப்போல், நாமும் இன்றையதினம் அவர்களை மறந்துவிடுவோம்.
7:52 وَلَقَدْ جِئْنٰهُمْ بِكِتٰبٍ فَصَّلْنٰهُ عَلٰى عِلْمٍ هُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ
وَلَقَدْ جِئْنٰهُمْ திட்டவட்டமாக/வந்தோம்/அவர்களிடம் بِكِتٰبٍ ஒரு வேதத்தைக் கொண்டு فَصَّلْنٰهُ விவரித்தோம்/அதை عَلٰى عِلْمٍ அறிந்து هُدًى நேர்வழியாக وَّرَحْمَةً இன்னும் கருணையாக لِّـقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
7:52. வ லகத் ஜி'னாஹும் Bபி கிதாBபின் Fபஸ்ஸல்னாஹு 'அலா 'இல்மின் ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய்-யு'மினூன்
7:52. நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு வேதத்தைக் கொண்டு வந்தோம். அதை நாம் (பூரண) ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
7:53 هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّۚ فَهَلْ لَّـنَا مِنْ شُفَعَآءَ فَيَشْفَعُوْا لَـنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِىْ كُنَّا نَـعْمَلُؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ
هَلْ يَنْظُرُوْنَ எதிர்பார்க்கின்றனரா? اِلَّا தவிர تَاْوِيْلَهٗؕ அதன் முடிவை يَوْمَ நாள் يَاْتِىْ வரும் تَاْوِيْلُهٗ அதன் முடிவு يَقُوْلُ கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் نَسُوْهُ மறந்தனர்/அதை مِنْ قَبْلُ முன்னர் قَدْ جَآءَتْ வந்தா(ர்க)ள் رُسُلُ தூதர்கள் رَبِّنَا எங்கள் இறைவனின் بِالْحَـقِّۚ உண்மையைக் கொண்டு فَهَلْ لَّـنَا எங்களுக்கு உண்டா? مِنْ شُفَعَآءَ சிபாரிசு செய்பவர்களில் فَيَشْفَعُوْا சிபாரிசு செய்வார்கள் لَـنَاۤ எங்களுக்கு اَوْ அல்லது نُرَدُّ நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் فَنَعْمَلَ செய்வோமே غَيْرَ الَّذِىْ அல்லாததை كُنَّا இருந்தோம் نَـعْمَلُؕ செய்வோம் قَدْ خَسِرُوْۤا நஷ்டமிழைத்துக் கொண்டனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே وَضَلَّ இன்னும் மறைந்துவிட்டன عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுவார்கள்
7:53. ஹல் யன்ளுரூன இல்லா த'வீலஹ்; யவ்ம ய'தீ த'வீலுஹூ யகூலுல் லதீன னஸூஹு மின் கBப்லு கத் ஜா'அத் ருஸுலு ரBப்Bபினா Bபில்ஹக்க்; Fபஹல் லனா மின் ஷுFப'ஆ'அ Fப யஷ்Fப'ஊ லனா அவ் னுரத்து Fபனஃமல கய்ரல் லதீ குன்னா னஃமல்; கத் கஸிரூ அன்Fபுஸஹும் வ ளல்ல 'அன்ஹும் மா கானூ யFப்தரூன்
7:53. இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) அதன் முடிவைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? அதன் முடிவு (வெளிப்பட்டு) வரும் நாளில், இதற்கு முன் அதனை (முற்றிலும்) மறந்திருந்தவர்கள், "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்தியத்தையே கொண்டு வந்தனர்: எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின், அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் (முன்) செய்து கொண்டிருந்தோமே அது அல்லாத (நன்மையான)தைச் செய்வோம்!" என்று கூறுவார்கள். நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்: அவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்தவையும் அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
7:54 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ يَطْلُبُهٗ حَثِيْثًا ۙ وَّالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُوْمَ مُسَخَّرٰتٍۢ بِاَمْرِهٖ ؕ اَلَا لَـهُ الْخَـلْقُ وَالْاَمْرُ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ
اِنَّ நிச்சயமாக رَبَّكُمُ உங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ خَلَقَ எவன் படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَ الْاَرْضَ இன்னும் பூமியை فِىْ سِتَّةِ اَيَّامٍ ஆறு நாட்களில் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى الْعَرْشِ அர்ஷின் மீது يُغْشِى மூடுகிறான் الَّيْلَ இரவால் النَّهَارَ பகலை يَطْلُبُهٗ தேடுகிறது/அதை حَثِيْثًا ۙ தீவிரமாக وَّالشَّمْسَ இன்னும் சூரியனை وَالْقَمَرَ இன்னும் சந்திரனை وَالنُّجُوْمَ இன்னும் நட்சத்திரங்களை مُسَخَّرٰتٍۢ வசப்படுத்தப்பட்டவையாக بِاَمْرِهٖ ؕ தனது கட்டளைக் கொண்டு اَلَا அறிந்துகொள்ளுங்கள்! لَـهُ அவனுக்கே الْخَـلْقُ படைத்தல் وَالْاَمْرُ ؕ இன்னும் அதிகாரம் تَبٰرَكَ அருள் வளமிக்கவன் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவன் الْعٰلَمِيْنَ அகிலங்களின்
7:54. இன்ன ரBப்Bபகுமுல் லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Fபீ ஸித்ததி அய்யாமின் தும்மஸ் தவா 'அலல் 'அர்ஷி யுக்ஷில் லய்லன் னஹார யத்லு Bபுஹூ ஹதீத(ன்)வ் வஷ்ஷம்ஸ வல்கமர வன்னுஜூம முஸகராதிம் Bபி அம்ரிஹ்; அலா லஹுல் கல்கு வல்-அம்ர்; தBபாரகல் லாஹு ரBப்Bபுல் 'ஆலமீன்
7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது அவன் நிலையானான்; அவன் இரவைக்கொண்டு பகலை மூடுகிறான்; அது வெகுவிரைவாக அதனைப் பின்தொடர்கின்றது; இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்குக் கட்டுப்பட்டவையாக(ப் படைத்தான்); அறிந்துகொள்ளுங்கள்! படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே சொந்தம்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ் மிகவும் பாக்கியமுடையவன்.
7:55 اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ ۚ
اُدْعُوْا அழையுங்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனை تَضَرُّعًا தாழ்மையாக وَّخُفْيَةً ؕ இன்னும் மறைவாக اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُعْتَدِيْنَ ۚ வரம்பு மீறுபவர்களை
7:55. உத்'ஊ ரBப்Bபகும் தளர்ரு'அ(ன்)வ் வ குFப்யஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் முஃததீன்
7:55. (ஆகவே நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்; வரம்பு மீறுபவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
7:56 وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا ؕ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ
وَلَا تُفْسِدُوْا கலகம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் بَعْدَ பின்னர் اِصْلَاحِهَا அது சீர்திருத்தப்பட்ட وَادْعُوْهُ அழையுங்கள்/அவனை خَوْفًا பயத்துடன் وَّطَمَعًا ؕ இன்னும் ஆசையுடன் اِنَّ رَحْمَتَ நிச்சயமாக கருணை اللّٰهِ அல்லாஹ்வின் قَرِيْبٌ சமீபமானது مِّنَ الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிவோருக்கு
7:56. வ லா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா வத்'ஊஹு கவ்Fப(ன்)வ் வ தம'ஆ; இன்ன ரஹ்மதல் லாஹி கரீBபும் மினல் முஹ்ஸினீன்
7:56. மேலும், பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர், நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள்; அச்சத்தோடும், ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் அருள், நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
7:57 وَهُوَ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ ؕ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
وَهُوَ அவன் الَّذِىْ எவன் يُرْسِلُ அனுப்புகிறான் الرِّيٰحَ காற்றுகளை بُشْرًۢا நற்செய்தியாக بَيْنَ يَدَىْ முன்னர் رَحْمَتِهٖ ؕ தனது கருணைக்கு حَتّٰۤى இறுதியாக اِذَاۤ اَقَلَّتْ அது சுமந்தால் سَحَابًا மேகத்தை ثِقَالًا கன(மான) سُقْنٰهُ ஓட்டுகிறோம்/அதை لِبَلَدٍ பூமியின் பக்கம் مَّيِّتٍ இறந்தது فَاَنْزَلْنَا இன்னும் இறக்குகிறோம் بِهِ அதிலிருந்து الْمَآءَ மழையை فَاَخْرَجْنَا இன்னும் வெளியாக்குகிறோம் بِهٖ அதன் மூலம் مِنْ இருந்து كُلِّ எல்லாம் الثَّمَرٰتِؕ கனிகள் كَذٰلِكَ இவ்வாறே نُخْرِجُ வெளியாக்குவோம் الْمَوْتٰى மரணித்தவர்களை لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
7:57. வ ஹுவல் லதீ யுர்ஸிலுர் ரியாஹ Bபுஷ்ரம் Bபய்ன யதய் ரஹ்மதிஹீ ஹத்தா இதா அகல்லத் ஸஹாBபன் திகாலன் ஸுக்னாஹு லிBபலதிம் மய்யிதின் Fப அன்ன்Zஜல்னா Bபிஹில் மா'அ Fப அக்ரஜ்னா Bபிஹீ மின்ன் குல்லிஸ் தமராத்; கதாலிக னுக்ரிஜுல் மவ்தா ல'அல்லகும் ததக்கரூன்
7:57. அவன்தான், (மழை என்னும்) தன்னுடைய அருளுக்குமுன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்புகிறான்: அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்துகிடக்கும் (வறண்ட) ஊரின் பக்கம் ஒட்டிச்சென்று, அதன் மூலம் நாம் தண்ணீரை இறக்கி வைக்கிறோம்; பின்னர், அதைக்கொண்டு எல்லா விதமான கனி(விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம்: இவ்வாறே நாம் இறந்தவர்களையும் (உயிர் கொடுத்து) வெளிப்படுத்துவோம்; (எனவே, இவற்றையெல்லாம் சிந்தித்து) நீங்கள் படிப்பினைப் பெறுவீர்களாக!
7:58 وَالْبَلَدُ الطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهٗ بِاِذْنِ رَبِّهٖ ۚ وَالَّذِىْ خَبُثَ لَا يَخْرُجُ اِلَّا نَكِدًا ؕ كَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّشْكُرُوْنَ
وَالْبَلَدُ பூமி الطَّيِّبُ நல்லது يَخْرُجُ வெளியாகிறது نَبَاتُهٗ அதன் தாவரம் بِاِذْنِ அனுமதி கொண்டு رَبِّهٖ ۚ தன் இறைவனின் وَالَّذِىْ எது خَبُثَ கெட்டுவிட்டது لَا يَخْرُجُ வெளியாகாது اِلَّا தவிர نَكِدًا ؕ வெகு சொற்பமாக كَذٰلِكَ இவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّشْكُرُوْنَ நன்றி செலுத்துகிறார்கள்
7:58. வல்Bபலதுத் தய்யிBபு யக்ருஜு னBபாதுஹூ Bபி-இத்னி ரBப்Bபிஹீ வல்லதீ கBபுத லா யக்ருஜு இல்லா னகிதா; கதாலிக னுஸர்ரிFபுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஷ்குரூன்
7:58. வளமான பூமி - அதனுடைய தாவரம் தன் இறைவனின் கட்டளையைக் கொண்டு (செழிப்பும், பயனுமுடையதாய்) வெளியாகிறது; ஆனால், கெட்ட (பூமியி)ல் அற்பமானதைத் தவிர (வேறெதுவும்) வெளிப்படாது; நன்றி செலுத்தும் சமுதாயத்திற்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.
7:59 لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ
لَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖ அவருடைய சமுதாயத்திற்கு فَقَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுளும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ عَظِيْمٍ மகத்தான நாளின்
7:59. லகத் அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ Fபகால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தோம்: அவர் (தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்: உங்களுக்கு அவனன்றி வேறு கடவுள் இல்லை: நிச்சயமாக நான் உங்களின் மீது (வர இருக்கும்) மகத்தான வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்" என்று கூறினார்.
7:60 قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَـنَرٰٮكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
قَالَ கூறினர் الْمَلَاُ தலைவர்கள் (முக்கியஸ்தர்கள்) مِنْ قَوْمِهٖۤ இருந்து/சமுதாயம்/அவருடைய اِنَّا நிச்சயமாக நாம் لَـنَرٰٮكَ உம்மை காண்கிறோம் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ தெளிவானது
7:60. காலல் மல-உ மின் கவ் மிஹீ இன்னா லனராக Fபீ ளலாலிம் முBபீன்
7:60. அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள் "மெய்யாகவே, நாங்கள் உம்மைப் பகிரங்கமான வழிகேட்டில்தான் பார்க்கிறோம்" என்று கூறினார்கள்.
7:61 قَالَ يٰقَوْمِ لَـيْسَ بِىْ ضَلٰلَةٌ وَّلٰـكِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَـيْسَ இல்லை بِىْ என்னிடம் ضَلٰلَةٌ வழிகேடு وَّلٰـكِنِّىْ எனினும் நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَ அகிலங்களின்
7:61. கால யா கவ்மி லய்ஸ Bபீ ளலாலது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
7:61. அதற்கு (நூஹ்), "என் கூட்டத்தாரே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக, அகிலத்தாரின் இறைவனுடைய தூதராகவே இருக்கிறேன்" என்று கூறினார்.
7:62 اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَاَنْصَحُ لَـكُمْ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
اُبَلِّغُكُمْ எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு رِسٰلٰتِ தூது(செய்தி)களை رَبِّىْ என் இறைவனின் وَاَنْصَحُ இன்னும் உபதேசிக்கிறேன் لَـكُمْ உங்களுக்கு وَاَعْلَمُ இன்னும் அறிகிறேன் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَا تَعْلَمُوْنَ எவற்றை/அறியமாட்டீர்கள்
7:62. உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன்ஸஹு லகும் வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
7:62. "நான் என் இறைவனுடைய தூது(ச் செய்தி)களையே உங்களுக்கு எத்திவைக்கிறேன்; இன்னும், உங்களுக்கு நான் உபதேசமும் செய்கிறேன்; மேலும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்" (என்றும் கூறினார்).
7:63 اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ وَلِتَـتَّقُوْا وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
اَوَعَجِبْتُمْ வியக்கிறீர்களா? اَنْ جَآءَ வந்ததைப் பற்றி كُمْ உங்களுக்கு ذِكْرٌ நல்லுபதேசம் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து عَلٰى رَجُلٍ ஒரு மனிதர் மீது مِّنْكُمْ உங்களிலுள்ள لِيُنْذِرَكُمْ அவர் எச்சரிப்பதற்காக/உங்களை وَلِتَـتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சுவதற்காக وَلَعَلَّكُمْ تُرْحَمُوْنَ இன்னும் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
7:63. அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும் வ லிதத்தகூ வ ல'அல்லகும் துர்ஹமூன்
7:63. உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும், உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து (நற்)போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
7:64 فَكَذَّبُوْهُ فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ فِى الْفُلْكِ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا عَمِيْنَ
فَكَذَّبُوْهُ பொய்ப்பித்தனர்/அவரை فَاَنْجَيْنٰهُ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مَعَهٗ அவருடன் فِى الْفُلْكِ கப்பலில் وَاَغْرَقْنَا இன்னும் மூழ்கடித்தோம் الَّذِيْنَ எவர்களை كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا ؕ நம் வசனங்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمًا சமுதாயமாக عَمِيْنَ குருடானவர்கள்
7:64. Fபகத்தBபூஹு Fப அன்ஜய் னாஹு வல்லதீன ம'அஹூ Fபில் Fபுல்கி வ அக்ரக்னல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; இன்னஹும் கானூ கவ்மன் 'அமீன்
7:64. அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும், நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மையைக் காணமுடியாக்) குருட்டுக் கூட்டத்தாராகவே இருந்தனர்.
7:65 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ
وَاِلٰى عَادٍ اَخَا ‘ஆது’க்கு/சகோதரர் هُمْ அவர்களுடைய هُوْدًا ؕ ஹூதை قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே! اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுளும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اَفَلَا تَتَّقُوْنَ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
7:65. வ இலா 'ஆதின் அகாஹும் ஹூதா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹ்; அFபலா தத்தகூன்
7:65. இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பிவைத்தோம்); அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" என்று கேட்டார்.
7:66 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖۤ اِنَّا لَــنَرٰٮكَ فِىْ سَفَاهَةٍ وَّاِنَّا لَــنَظُنُّكَ مِنَ الْـكٰذِبِيْنَ
قَالَ கூறினர் الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ இருந்து قَوْمِهٖۤ அவரின் சமுதாயம் اِنَّا நிச்சயமாக நாம் لَــنَرٰٮكَ உம்மை காண்கிறோம் فِىْ سَفَاهَةٍ மடமையில் وَّاِنَّا நிச்சயமாக நாம் لَــنَظُنُّكَ உம்மை எண்ணுகிறோம் مِنَ الْـكٰذِبِيْنَ பொய்யர்களில்
7:66. காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ இன்னா லனராக Fபீ ஸFபாஹதி(ன்)வ் வ இன்னா ல னளுன்னுக மினல் காதிBபீன்
7:66. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்த தலைவர்கள், "(அவரை நோக்கி) நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும், நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.
7:67 قَالَ يٰقَوْمِ لَـيْسَ بِىْ سَفَاهَةٌ وَّلٰـكِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ
قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَـيْسَ இல்லை بِىْ என்னிடம் سَفَاهَةٌ மடமை وَّلٰـكِنِّىْ எனினும் நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَ அகிலங்களின்
7:67. கால யா கவ்மி லய்ஸ Bபீ ஸFபாஹது(ன்)வ் வ லாகின்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
7:67. அதற்கு அவர், "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை; மாறாக, நான் அகிலத்தாரின் இறைவனுடைய தூதன் ஆவேன்" என்று கூறினார்.
7:68 اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَاَنَا لَـكُمْ نَاصِحٌ اَمِيْنٌ
اُبَلِّغُكُمْ எடுத்துரைக்கிறேன்/உங்களுக்கு رِسٰلٰتِ தூதுகளை رَبِّىْ என் இறைவனின் وَاَنَا நான் لَـكُمْ உங்களுக்கு نَاصِحٌ உபதேசி(ப்பவன்) اَمِيْنٌ நம்பிக்கைக்குரிய
7:68. உBபல்லிகுகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ அன லகும் னாஸிஹுன் அமீன்
7:68. நான் என் இறைவனுடைய தூது(ச் செய்தி)களையே உங்களுக்கு எத்திவைக்கின்றேன்; மேலும், நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்" (என்றும் கூறினார்).
7:69 اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ ۚ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِى الْخَـلْقِ بَصْۜطَةً فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
اَوَعَجِبْتُمْ நீங்கள் வியக்கிறீர்களா? اَنْ جَآءَ வந்ததைப் பற்றி كُمْ உங்களுக்கு ذِكْرٌ நல்லுபதேசம் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து عَلٰى رَجُلٍ ஒரு மனிதர் மீது مِّنْكُمْ உங்களில் لِيُنْذِرَكُمْ ؕ உங்களை எச்சரிப்பதற்காக وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ சமயம் جَعَلَـكُمْ ஆக்கினான் ۚ خُلَفَآءَ பிரதிநிதிகளாக مِنْۢ بَعْدِ பின்னர் قَوْمِ சமுதாயத்திற்கு نُوْحٍ நூஹூடைய وَّزَادَ இன்னும் அதிகப்படுத்தினான் كُمْ உங்களுக்கு فِى الْخَـلْقِ படைப்பில் بَصْۜطَةً விரிவை فَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اٰ لَۤاءَ அருட்கொடைகளை اللّٰهِ அல்லாஹ்வின் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
7:69. அவ 'அஜிBப்தும் அன் ஜா'அகும் திக்ரும் மிர் ரBப்Bபிகும் 'அலா ரஜுலிம் மின்கும் லியுன்திரகும்; வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி கவ்மி னூஹி(ன்)வ் வ Zஜாதகும் Fபில்கல்கி Bபஸ்ததன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி ல'அல்லகும் துFப்லிஹூன்
7:69. "உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து (நற்)போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர், அவன் உங்களை (பூமியில்) பின்தோன்றல்களாக்கி வைத்து, (உங்கள்) உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவுகூருங்கள்; எனவே, அல்லாஹ்வின் அருட்கொடைகளை (எல்லாம்) நினைத்துப்பாருங்கள்; நீங்கள் வெற்றிபெறுவீர்கள்" (என்றும் கூறினார்).
7:70 قَالُـوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ اٰبَآؤُنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
قَالُـوْۤا கூறினர் اَجِئْتَنَا எங்களிடம் வந்தீரா? لِنَعْبُدَ நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக اللّٰهَ அல்லாஹ்வை وَحْدَهٗ அவன் ஒருவனை மட்டும் وَنَذَرَ இன்னும் நாங்கள் விட்டுவிட்டு مَا எவற்றை كَانَ இருந்தார்(கள்) يَعْبُدُ வணங்குவார்(கள்) اٰبَآؤُنَا ۚ எங்கள் மூதாதைகள் فَاْتِنَا வருவீராக/எங்களிடம் بِمَا எதைக் கொண்டு تَعِدُنَاۤ எச்சரிக்கிறீர்/எங்களை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
7:70. காலூ அஜி'தனா லினஃBபுதல் லாஹ வஹ்தஹூ வ னதர மா கான யஃBபுது ஆBபா'உனா Fப'தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
7:70. அதற்கு அவர்கள், "எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களிப்பதை எங்களிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
7:71 قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌؕ اَتُجَادِلُوْنَنِىْ فِىْۤ اَسْمَآءٍ سَمَّيْتُمُوْهَاۤ اَنْـتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍؕ فَانْتَظِرُوْۤا اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ
قَالَ கூறினார் قَدْ وَقَعَ நிகழ்ந்து விட்டது عَلَيْكُمْ உங்கள் மீது مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து رِجْسٌ வேதனை وَّغَضَبٌؕ இன்னும் கோபம் اَتُجَادِلُوْنَنِىْ தர்க்கிக்கிறீர்களா?/என்னுடன் فِىْۤ اَسْمَآءٍ பெயர்களில் سَمَّيْتُمُوْهَاۤ பெயர் வைத்தீர்கள்/அவற்றை اَنْـتُمْ நீங்களும் وَاٰبَآؤ இன்னும் மூதாதைகள் كُمْ உங்கள் مَّا نَزَّلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் بِهَا அதற்கு مِنْ سُلْطٰنٍؕ ஓர் ஆதாரத்தை فَانْتَظِرُوْۤا ஆகவே, எதிர்பாருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُنْتَظِرِيْنَ எதிர்பார்ப்பவர்களில்
7:71. கால கத் வக'அ அலய்கும் மிர் ரBப்Bபிகும் ரிஜ்ஸு(ன்)வ் வ களBப், அதுஜாதிலூனனீ Fபீ அஸ்மா'இன் ஸம்மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா னZஜ்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; Fபன்தளிரூ இன்னீ ம'அகும் மினல் முன்தளிரீன்
7:71. அதற்கு அவர், "உங்களுடைய இறைவனிடமிருந்து கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது; அல்லாஹ் எந்த ஓர் ஆதாரத்தையும் இறக்கிவைக்காத நிலையில் நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக்கொண்டீர்களே அந்தப் பெயர்கள் விஷயத்திலேயா, என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்? (எனவே, உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்" என்று கூறினார்.
7:72 فَاَنْجَيْنٰهُ وَالَّذِيْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَ قَطَعْنَا دَابِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِيْنَ
فَاَنْجَيْنٰهُ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ கருணையினால் مِّنَّا நமது وَ قَطَعْنَا இன்னும் அறுத்தோம் دَابِرَ வேரை الَّذِيْنَ எவர்களின் كَذَّبُوْا பொய்ப்பித்த بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَمَا كَانُوْا இன்னும் அவர்கள் இருக்கவில்லை مُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களாக
7:72. Fப அன்ஜய்னாஹு வல்லதீன ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ கதஃனா தாBபிரல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வமா கானூ மு'மினீன்
7:72. ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் நம்முடைய அருளைக் கொண்டு காப்பாற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்துவிட்டோம்.
7:73 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوْا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَـكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِىْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابٌ اَ لِيْمٌ
وَاِلٰى ثَمُوْدَ ‘ஸமூது’க்கு اَخَاهُمْ அவர்களுடைய சகோதரர் صٰلِحًا ۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوْا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுள் غَيْرُهٗ ؕ அவனையன்றி قَدْ நிச்சயமாக جَآءَتْكُمْ உங்களிடம் வந்துவிட்டது بَيِّنَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ ؕ உங்கள் இறைவன் هٰذِهٖ இது نَاقَةُ ஒட்டகம் اللّٰهِ அல்லாஹ்வுடைய لَـكُمْ உங்களுக்கு اٰيَةً ஓர் அத்தாட்சியாக فَذَرُوْهَا ஆகவே, விட்டு விடுங்கள்/அதை تَاْكُلْ அது மேயும் فِىْۤ اَرْضِ பூமியில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَلَا تَمَسُّوْهَا அதை தொடாதீர்கள் بِسُوْٓءٍ தீமையைக் கொண்டு فَيَاْخُذَكُمْ பிடிக்கும்/உங்களை عَذَابٌ வேதனை اَ لِيْمٌ துன்புறுத்தும்
7:73. வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்ம்ஃ' Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா த'குல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப ய'குதகும் 'அதாBபுன் அலீம்
7:73. 'ஸமூது' கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர், (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; (இதற்காக) நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; இது அல்லாஹ்வின் ஒட்டகமாகும்; உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (இது வந்துள்ளது); எனவே, இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விட்டுவிடுங்கள்; அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள்; (அப்படிச் செய்தால்) அப்போது உங்களை நோவினை செய்யும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.
7:74 وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَـتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَـنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ
وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ جَعَلَـكُمْ சமயம்/ஆக்கினான்/உங்களை خُلَفَآءَ பிரதிநிதிகளாக مِنْۢ بَعْدِ பின்னர் عَادٍ ‘ஆது’க்கு وَّبَوَّاَكُمْ இன்னும் தங்கவைத்தான்/உங்களை فِى الْاَرْضِ பூமியில் تَـتَّخِذُوْنَ ஆக்கிகொள்கிறீர்கள் مِنْ سُهُوْلِهَا அதன் சமவெளிகளில் قُصُوْرًا மாளிகைகளை وَّتَـنْحِتُوْنَ இன்னும் குடைந்து கொள்கிறீர்கள் الْجِبَالَ மலைகளில் بُيُوْتًا ۚ வீடுகளை فَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اٰ لَۤاءَ அருட்கொடைகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا تَعْثَوْا அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ விஷமிகளாக
7:74. வத்குரூ இத் ஜ'அலகும் குலFபா'அ மிம் Bபஃதி 'ஆதி(ன்)வ் வ Bபவ்வ அகும் Fபில் அர்ளி தத்தகிதூன மின் ஸுஹூலிஹா குஸூர(ன்)வ் வ தன்ஹிதூனல் ஜிBபால Bபுயூதன் Fபத்குரூ ஆலா'அல் லாஹி வலா தஃதவ் Fபில் அர்ளி முFப்ஸிதீன்
7:74. இன்னும், நினைவுகூருங்கள்: 'ஆத்' கூட்டத்தாருக்குப் பின் அவன் உங்களைப் (பூமியில்) பின்தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான்; அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடைகளை நினைவுகூருங்கள்; பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்" (என்றும் கூறினார்).
7:75 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖؕ قَالُـوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْا பெருமையடித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لِلَّذِيْنَ எவர்களுக்கு اسْتُضْعِفُوْا பலவீனர்களாக கருதப்பட்டனர் لِمَنْ எவருக்கு اٰمَنَ நம்பிக்கை கொண்டார் مِنْهُمْ அவர்களில் اَتَعْلَمُوْنَ அறிவீர்களா? اَنَّ صٰلِحًا நிச்சயமாக ஸாலிஹ் مُّرْسَلٌ அனுப்பப்பட்டவர் مِّنْ رَّبِّهٖؕ தன் இறைவனிடமிருந்து قَالُـوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ எதைக் கொண்டு اُرْسِلَ அனுப்பப்பட்டார் بِهٖ அதைக் கொண்டு مُؤْمِنُوْنَ நம்பிக்கை கொண்டவர்கள்
7:75. காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லில்லதீனஸ் துள்'இFபூ லிமன் ஆமன மின்ஹும் அதஃலமூன அன்ன ஸாலிஹம் முர்ஸலும் மிர் ரBப்Bபிஹ்; காலூ இன்னா Bபிமா உர்ஸில Bபிஹீ மு'மினூன்
7:75. அவருடைய சமூகத்தாரிலிருந்து (நம்பிக்கை கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்ட அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நிச்சயமாக 'ஸாலிஹ்' அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதர் என நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் - எதைக்கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அ(ந்தத் தூ)தை நம்புகிறவர்களே!" என்று (பதில்) கூறினார்கள்.
7:76 قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِىْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ
قَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْۤا பெருமையடித்தனர் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِالَّذِىْۤ எதைக்கொண்டு اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِهٖ அதைக் கொண்டு كٰفِرُوْنَ நிராகரிப்பவர்கள்
7:76. காலல் லதீனஸ் தக்Bபரூ இன்னா Bபில்லதீ ஆமன்ன்தும் Bபிஹீ காFபிரூன்
7:76. அதற்குப் பெருமையடித்தவர்கள்: "எதனை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களோ அதனை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்களே!" என்று கூறினார்கள்.
7:77 فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَ قَالُوْا يٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِيْنَ
فَعَقَرُوا ஆகவே அறுத்தனர் النَّاقَةَ பெண் ஒட்டகத்தை وَعَتَوْا இன்னும் மீறினர் عَنْ اَمْرِ கட்டளையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَ قَالُوْا இன்னும் கூறினர் يٰصٰلِحُ ஸாலிஹே ائْتِنَا வருவீராக/எங்களிடம் بِمَا எதைக் கொண்டு تَعِدُنَاۤ அச்சுறுத்துகிறீர்/எங்களை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الْمُرْسَلِيْنَ தூதர்களில்
7:77. Fப'அகருன் னாகத வ'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் வ காலூ யா ஸாலிஹு' தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினல் முர்ஸலீன்
7:77. பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள், (ஸாலிஹை நோக்கி): "ஸாலிஹே! நீர் (இறைவனின்) தூதரில் (உள்ளவராக) இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களித்த (வேதனையான)தை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
7:78 فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ
فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الرَّجْفَةُ பயங்கர சப்தம் فَاَصْبَحُوْا காலையை அடைந்தனர் فِىْ دَارِهِمْ தங்கள் பூமியில் جٰثِمِيْنَ இறந்தவர்களாக
7:78. Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
7:78. எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களைப் பூகம்பம் பிடித்துக்கொண்டது; அதனால், அவர்கள் காலையில் தம் வீடுகளில் குப்புற வீழ்ந்துகிடந்தனர்.
7:79 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ وَلٰـكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِيْنَ
فَتَوَلّٰى திரும்பினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ اَبْلَغْتُكُمْ திட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்கு رِسَالَةَ தூதை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ உபதேசித்தேன் لَـكُمْ உங்களுக்கு وَلٰـكِنْ எனினும் لَّا تُحِبُّوْنَ நீங்கள் நேசிப்பதில்லை النّٰصِحِيْنَ உபதேசிப்பவர்களை
7:79. Fப தவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலத ரBப்Bபீ வ னஸஹ்து லகும் வ லாகில் லா துஹிBப்Bபூனன் னாஸிஹீன்
7:79. அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எத்திவைத்து, உங்களுக்கு (நற்)போதனையும் செய்தேன்; ஆனால், நீங்கள் (நற்)போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார்.
7:80 وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ
وَلُوْطًا இன்னும் லூத்தை اِذْ சமயம் قَالَ கூறினார் لِقَوْمِهٖۤ தம் சமுதாயத்திற்கு اَتَاْتُوْنَ வருகிறீர்களா? الْفَاحِشَةَ மானக்கேடானதிற்கு مَا இல்லை سَبَقَكُمْ உங்களை முந்த بِهَا இதற்கு مِنْ اَحَدٍ ஒருவருமே مِّنَ الْعٰلَمِيْنَ உலகத்தாரில்
7:80. வ லூதன் இத் கால லிகவ்மிஹீ அத'தூனல் Fபாஹிஷத மா ஸBபககும் Bபிஹா மின் அஹதிம் மினல் 'ஆலமீன்
7:80. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்). அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: "உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான (காரியத்)தையா செய்கிறீர்கள்?"
7:81 اِنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ
اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـتَاْتُوْنَ வருகிறீர்கள் الرِّجَالَ ஆண்களிடம் شَهْوَةً காமத்திற்கு مِّنْ دُوْنِ அன்றி النِّسَآءِ ؕ பெண்கள் بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் مُّسْرِفُوْنَ வரம்பு மீறியவர்கள்
7:81. இன்னகும் லத'தூனர் ரிஜால ஷஹ்வதம் மின் தூனின் னிஸா'; Bபல் அன்தும்கவ்மும் முஸ்ரிFபூன்
7:81. "மெய்யாக, நீங்கள் பெண்களை விட்டுவிட்டு, ஆண்களிடம் இச்சைக்காக (அதைத் தணித்துக்கொள்ள) வருகிறீர்கள்; நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."
7:82 وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْيَتِكُمْ ۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ
وَمَا كَانَ இருக்கவில்லை جَوَابَ பதிலாக قَوْمِهٖۤ அவருடைய சமுதாயத்தினரின் اِلَّاۤ தவிர اَنْ قَالُـوْۤا என்று அவர்கள் கூறியது اَخْرِجُوْهُمْ வெளியேற்றுங்கள் مِّنْ இவர்களை قَرْيَتِكُمْ ۚ உங்கள் ஊரிலிருந்து اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் اُنَاسٌ மனிதர்கள் يَّتَطَهَّرُوْنَ சுத்தமானவர்கள்
7:82. வமா கான ஜவாBப கவ்மிஹீ இல்லா அன் காலூ அக்ரிஜூஹும் மின் கர்யதிகும் இன்னஹும் உனாஸு(ன்)ய் யததஹ்ஹரூன்
7:82. "நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள்; இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றிவிடுங்கள்" என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருக்கவில்லை.
7:83 فَاَنْجَيْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ۖ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ
فَاَنْجَيْنٰهُ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை وَاَهْلَهٗۤ இன்னும் அவருடைய குடும்பத்தை اِلَّا தவிர امْرَاَتَهٗ ۖ அவருடைய மனைவியை كَانَتْ அவள் ஆகினாள் مِنَ الْغٰبِرِيْنَ தங்கியவர்களில்
7:83. Fப அன்ஜய்னாஹு வ அஹ்லஹூ இல்லம் ர அதஹூ கானத் மினல் காBபிரீன்
7:83. எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம்; அவள் (அழிந்துபோவோரில் ஒருத்தியாக) பின் தங்கியவர்களில் இருந்துவிட்டாள்.
7:84 وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا ؕ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِيْنَ
وَاَمْطَرْنَا பொழிவித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّطَرًا ؕ மழையை فَانْظُرْ ஆகவே கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு كَانَ ஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளின்
7:84. வ 'அம்தர்னா 'அலய்ஹிம் மதரன் Fபன்ளுர் கய்Fப கான ஆகிBபதுல் முஜ்ரிமீன்
7:84. இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மழையைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம்; ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக!
7:85 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ۚ
وَاِلٰى مَدْيَنَ ‘மத்யன்’க்கு اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய شُعَيْبًا ؕ ‘ஷுஐப்’ஐ قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுள் غَيْرُهٗ ؕ அவனையன்றி قَدْ நிச்சயமாக جَآءَتْكُمْ உங்களுக்கு வந்துவிட்டது بَيِّنَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் فَاَوْفُوا ஆகவே முழுமையாக்குங்கள் الْكَيْلَ அளவை وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையை وَلَا تَبْخَسُوا குறைக்காதீர்கள் النَّاسَ மக்களுக்கு اَشْيَآءَ பொருள்களில் هُمْ அவர்களுடைய وَلَا تُفْسِدُوْا கலகம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் بَعْدَ பின்னர் اِصْلَاحِهَا ؕ அது சீர்திருத்தப்பட்ட ذٰ لِكُمْ இவை خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ ۚ நம்பிக்கை கொள்பவர்களாக
7:85. வ இலா மத்யன அகாஹும் ஷு'அய்Bபா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் Fப அவ்Fபுல் கய்ல வல்மீZஜான வலா தBப்கஸுன் னாஸ அஷ்யா'அஹும் வலா துFப்ஸிதூ Fபில் அர்ளி Bபஃத இஸ்லாஹிஹா; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் மு'மினீன்
7:85. மத்யன் (நகர) வாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி): "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்: அவனன்றி உங்களுக்கு வேறு கடவுளில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சி வந்துள்ளது: அளவையும், எடையையும் நிறைவாக்குங்கள்: மனிதர்களுக்கு அவர்களுடைய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்: பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர் குழப்பம் உண்டாக்காதீர்கள்; நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்" என்று கூறினார்.
7:86 وَلَا تَقْعُدُوْا بِكُلِّ صِرَاطٍ تُوْعِدُوْنَ وَتَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ بِهٖ وَتَبْغُوْنَهَا عِوَجًا ۚ وَاذْكُرُوْۤا اِذْ كُنْتُمْ قَلِيْلًا فَكَثَّرَكُمْوَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ
وَلَا تَقْعُدُوْا அமராதீர்கள் بِكُلِّ صِرَاطٍ எல்லாப் பாதையிலும் تُوْعِدُوْنَ அச்சுறுத்தியவர்களாக وَتَصُدُّوْنَ இன்னும் தடுப்பவர்களாக عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் مَنْ எவரை اٰمَنَ நம்பிக்கைகொண்டார் بِهٖ அவனை وَتَبْغُوْنَهَا இன்னும் அதில் தேடியவர்களாக عِوَجًا ۚ கோணலை وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ சமயம் كُنْتُمْ இருந்தீர்கள் قَلِيْلًا குறைவாக فَكَثَّرَ அதிகமாக்கினான் كُمْ உங்களை وَانْظُرُوْا இன்னும் கவனியுங்கள் كَيْفَ எவ்வாறு كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُفْسِدِيْنَ கலகம் செய்பவர்களின்
7:86. வ லா தக்'உதூ Bபிகுல்லி ஸிராதின் தூ'இதூன வ தஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹி மன் ஆமன Bபிஹீ வ தBப்கூனஹா 'இவஜா; வத் குரூ இத் குன்தும் கலீலன் Fபகத்தரகும் வன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
7:86. மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் (வழிப்போக்கர்களை) பயமுறுத்துகிறவர்களாகவும், அல்லாஹ்வின் பாதையைவிட்டும் - அவன் மீது நம்பிக்கை கொண்டோரைத் தடுப்பவர்களாகவும் அதில் (அல்லாஹ்வின் பாதையில்) கோணலைத் தேடக்கூடியவர்களாகவும் உட்காராதீர்கள்; குறைவானவர்களாக நீங்கள் இருந்தபோது அவன் உங்களை அதிகமாக ஆக்கிவைத்ததையும் நினைவு கூருங்கள்; குழப்பம் செய்துகொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக! (என்றும் கூறினார்.)
7:87 وَاِنْ كَانَ طَآٮِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِىْۤ اُرْسِلْتُ بِهٖ وَطَآٮِٕفَةٌ لَّمْ يُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللّٰهُ بَيْنَنَا ۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ
وَاِنْ كَانَ இருந்தால் طَآٮِٕفَةٌ ஒரு பிரிவினர் مِّنْكُمْ உங்களில் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களாக بِالَّذِىْۤ எதைக்கொண்டு اُرْسِلْتُ அனுப்பப்பட்டேன் بِهٖ அதைக் கொண்டு وَطَآٮِٕفَةٌ இன்னும் ஒரு பிரிவினர் لَّمْ يُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாக فَاصْبِرُوْا பொறுங்கள் حَتّٰى வரை يَحْكُمَ தீர்ப்பளிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بَيْنَنَا ۚ நமக்கு மத்தியில் وَهُوَ அவன் خَيْرُ மிகச் சிறந்தவன் الْحٰكِمِيْنَ தீர்ப்பளிப்பவர்களில்
7:87. வ இன் கான தா'இFபதும் மின்கும் ஆமனூ Bபில்லதீ உர்ஸில்து Bபிஹீ வ தா'இFபதுல் லம் யு'மினூ Fபஸ்Bபிரூ ஹத்தா யஹ்குமல் லாஹு Bபய்னனா; வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
7:87. உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறவர்களாகவும், இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பாதவர்களாகவும் இருந்தால் - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள்: அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" (என்றும் கூறினார்).
7:88 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَـنُخْرِجَنَّكَ يٰشُعَيْبُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْيَتِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ ۚ
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْا பெருமையடித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لَـنُخْرِجَنَّكَ நிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மை يٰشُعَيْبُ ஷுஐபே وَالَّذِيْنَ اٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை مَعَكَ உம்முடன் مِنْ இருந்து قَرْيَتِنَاۤ எங்கள் ஊர் اَوْ அல்லது لَـتَعُوْدُنَّ நிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும் فِىْ مِلَّتِنَا ؕ எங்கள் கொள்கைக்கு قَالَ கூறினார் اَوَلَوْ كُنَّا நாங்கள் இருந்தாலுமா? كَارِهِيْنَ ۚ வெறுப்பவர்களாக
7:88. காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லனுக்ரிஜன்னக யா ஷு'அய்Bபு வல்லதீன ஆமனூ ம'அக மின் கர்யதினா அவ் லத'ஊ துன்ன Fபீ மில்லதினா; கால அவ லவ் குன்னா காரிஹீன்
7:88. அவருடைய சமூகத்தினரிலிருந்து பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), "ஷுஐபே! உம்மையும், உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரை விட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்" என்று கூறினார்கள்; அதற்கவர், "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?" என்று கேட்டார்.
7:89 قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِىْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰٮنَا اللّٰهُ مِنْهَا ؕ وَمَا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّعُوْدَ فِيْهَاۤ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّنَا ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًاؕ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا ؕ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَـقِّ وَاَنْتَ خَيْرُ الْفٰتِحِيْنَ
قَدِ افْتَرَيْنَا நாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اِنْ عُدْنَا நாங்கள் திரும்பினால் فِىْ مِلَّتِكُمْ உங்கள் கொள்கைக்கு بَعْدَ பின்னர் اِذْ போது نَجّٰٮنَا பாதுகாத்தான்/ எங்களை اللّٰهُ அல்லாஹ் مِنْهَا ؕ அதிலிருந்து وَمَا يَكُوْنُ لَـنَاۤ ஆகாது/எங்களுக்கு اَنْ نَّعُوْدَ நாங்கள் திரும்புவது فِيْهَاۤ அதில் اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடியே اللّٰهُ அல்லாஹ் رَبُّنَا ؕ எங்கள் இறைவனாகிய وَسِعَ விசாலமானவன் رَبُّنَا எங்கள் இறைவன் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும்விட عِلْمًاؕ ஞானத்தால் عَلَى மீதே اللّٰهِ அல்லாஹ்வின் تَوَكَّلْنَا ؕ நம்பிக்கைவைத்தோம் رَبَّنَا எங்கள் இறைவா افْتَحْ தீர்ப்பளி(முடிவுசெய்) بَيْنَنَا எங்களுக்கிடையில் وَبَيْنَ இன்னும் இடையில் قَوْمِنَا எங்கள் சமுதாயத்திற்கு بِالْحَـقِّ நியாயமாக وَاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الْفٰتِحِيْنَ தீர்ப்பளிப்பவர்களில்
7:89. கதிFப் தரய்னா 'அலல் லாஹி கதிBபன் இன் 'உத்னா Fபீ மில்லதிகும் Bபஃத இத் னஜ்ஜானல் லாஹு மின்ஹா; வமா யகூனு லனா அன் ன'ஊத Fபீஹா இல்லா அய் யஷா'அல் லாஹு ரBப்Bபுனா; வஸி'அ ரBப்Bபுனா குல்ல ஷய்'இன் 'இல்மா; 'அலல் லாஹி தவக்கல்னா; ரBப்BபனFப் தஹ் Bபய்னனா வ Bபய்ன கவ்மினா Bபில்ஹக்கி வ அன்த கய்ருல் Fபாதிஹீன்
7:89. உங்கள் மார்க்கத்திற்கு - அதிலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றிவிட்டபின் - நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தவர்களாகிவிடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதில் திரும்புவதற்கு எங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; அல்லாஹ்வையே நாங்கள் சார்ந்திருக்கின்றோம்; "எங்கள் இறைவா! எங்களுக்கும் எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக! தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்!" (என்றும் பிரார்த்தித்தார்).
7:90 وَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَٮِٕنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ
وَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لَٮِٕنِ اتَّبَعْتُمْ நீங்கள் பின்பற்றினால் شُعَيْبًا ஷுஐபை اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது لَّخٰسِرُوْنَ நஷ்டவாளிகள்தான்
7:90. வ காலல் மல உல் லதீன கFபரூ மின் கவ்மிஹீ ல'இனித் தBபஃதும் ஷு'அய்Bபன் இன்னகும் இதல் லகாஸிரூன்
7:90. அவருடைய சமூகத்தாரிலிருந்து நிராகரித்த தலைவர்கள், (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் ஷுஐபை பின்பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகளாவீர்கள்" என்று கூறினார்கள்.
7:91 فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِىْ دَارِهِمْ جٰثِمِيْنَ ۛۙ ۚ ۖ
فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الرَّجْفَةُ நிலநடுக்கம் فَاَصْبَحُوْا காலையை அடைந்தனர் فِىْ دَارِهِمْ தங்கள் பூமியில் جٰثِمِيْنَ ۛۙ ۚ ۖ இறந்தவர்களாக
7:91. Fப அகதத் ஹுமுர் ரஜ்Fபது Fப அஸ்Bபஹூ Fபீ தாரிஹிம் ஜாதிமீன்
7:91. ஆகவே, அவர்களைப் பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால், அவர்கள் தம் வீடுகளில் குப்புற வீழ்ந்து கிடந்தனர்.
7:92 الَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۛۚ اَ لَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِيْنَ
الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் شُعَيْبًا ஷுஐபை كَاَنْ لَّمْ يَغْنَوْا வசிக்காதவர்கள் போல் فِيْهَا ۛۚ அதில் اَ لَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் شُعَيْبًا ஷுஐபை كَانُوْا ஆகிவிட்டார்கள் هُمُ அவர்கள்தான் الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளாக
7:92. அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் க அல் லம் யக்னவ் Fபீஹா; அல்லதீன கத்தBபூ ஷு'அய்Bபன் கானூ ஹுமுல் காஸிரீன்
7:92. ஷுஐபை பொய்யாக்கியவர்கள் - அவற்றில் (தம் வீடுகளில்) ஒருபோதும் வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர்; ஷுஐபை பொய்யாக்கியவர்கள் - அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்களாகிவிட்டார்கள்.
7:93 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْۚ فَكَيْفَ اٰسٰی عَلٰى قَوْمٍ كٰفِرِيْنَ
فَتَوَلّٰى ஆகவே விலகினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ திட்டமாக اَبْلَغْتُكُمْ உங்களுக்கு எடுத்துரைத்தேன் رِسٰلٰتِ தூதுகளை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ இன்னும் உபதேசித்தேன் لَـكُمْۚ உங்களுக்கு فَكَيْفَ ஆகவே எவ்வாறு اٰسٰی துயர்கொள்வேன் عَلٰى மீது قَوْمٍ சமுதாயத்தின் كٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களான
7:93. Fபதவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலாதி ரBப்Bபீ வ னஸஹ்து லகும் Fபகய்Fப ஆஸா'அலா கவ்மின் காFபிரீன்
7:93. இதனால் (ஷுஐபு), அவர்களை விட்டு விலகிக் கொண்டார்; மேலும், "என் சமூகத்தார்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூது(ச்செய்தி)களையும் எத்திவைத்து விட்டேன்; உங்களுக்கு (நற்)போதனையும் செய்து விட்டேன்; ஆகவே, நிராகரிக்கும் சமூகத்தாருக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்?" என்று அவர் கூறினார்.
7:94 وَمَاۤ اَرْسَلْنَا فِىْ قَرْيَةٍ مِّنْ نَّبِىٍّ اِلَّاۤ اَخَذْنَاۤ اَهْلَهَا بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை فِىْ قَرْيَةٍ ஓர் ஊரில் مِّنْ نَّبِىٍّ எந்த ஒரு நபியையும் اِلَّاۤ தவிர اَخَذْنَاۤ பிடித்தோம் اَهْلَهَا அதில் வசிப்பவர்களை بِالْبَاْسَآءِ வறுமையைக் கொண்டு وَالضَّرَّآءِ இன்னும் நோயைக் கொண்டு لَعَلَّهُمْ يَضَّرَّعُوْنَ அவர்கள் பணிவதற்காக
7:94. வ மா அர்ஸல்னா Fபீ கர்யதிம் மின் னBபிய்யின் இல்லா அகத்னா அஹ்லஹா Bபில் Bப'ஸா'இ வள்ளர்ரா'இ ல'அல்லஹும் யள்ளர்ர'ஊன்
7:94. மேலும், எந்த ஊரிலும் அதிலுள்ளவர்களை, அவர்கள் பணிய வேண்டும் என்பதற்காக வறுமையாலும், நோயாலும் நாம் பிடித்தே தவிர எந்த நபியையும் அனுப்பவில்லை.
7:95 ثُمَّ بَدَّلْـنَا مَكَانَ السَّيِّئَةِ الْحَسَنَةَ حَتّٰى عَفَوْا وَّقَالُوْا قَدْ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذْنٰهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ
ثُمَّ பிறகு بَدَّلْـنَا மாற்றினோம் مَكَانَ இடத்தில் السَّيِّئَةِ துன்பத்தின் الْحَسَنَةَ இன்பத்தை حَتّٰى இறுதியாக عَفَوْا அவர்கள் அதிகரிக்கவே وَّقَالُوْا இன்னும் கூறினர் قَدْ مَسَّ அடைந்திருக்கிறது اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை(யும்) الضَّرَّآءُ நோய் وَالسَّرَّآءُ இன்னும் சுகம் فَاَخَذْنٰهُمْ ஆகவே பிடித்தோம்/அவர்களை بَغْتَةً திடீரென وَّهُمْ لَا يَشْعُرُوْنَ அவர்கள் உணராமல் இருக்கும் நிலையில்
7:95. தும்ம Bபத்தல்னா மகா னஸ் ஸய்யி'அதில் ஹஸனத ஹத்தா 'அFபவ் வ காலூ கத் மஸ்ஸ ஆBபா'அனள் ளர்ரா'உ வஸ்ஸர்ரா'உ Fப அகத்னாஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
7:95. பின்னர், (வறுமை, நோய் போன்ற) தீயதின் இடத்தில் நன்மையை நாம் மாற்றியமைத்தோம்; அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: "நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன" என்று (அலட்சியமாகக்) கூறினார்கள்; ஆகையால், அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) நாம் பிடித்தோம்.
7:96 وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ
وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى இருந்தால்/நிச்சயமாக/ஊர்வாசிகள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَاتَّقَوْا இன்னும் அஞ்சினர் لَـفَتَحْنَا திறந்திருப்போம் عَلَيْهِمْ அவர்கள் மீது بَرَكٰتٍ அருள்வளங்களை مِّنَ இருந்து السَّمَآءِ வானம் وَالْاَرْضِ இன்னும் பூமி وَلٰـكِنْ எனினும் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் فَاَخَذْنٰهُمْ ஆகவே பிடித்தோம்/அவர்களை بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ அல்லது செய்து கொண்டிருந்ததன் காரணமாக
7:96. வ லவ் அன்ன அஹ்லல் குரா ஆமனூ வத்தகவ் லFபதஹ்னா 'அலய்ஹிம் Bபரகாதிம் மினஸ் ஸமா'இ வல் அர்ளி வ லாகின் கத்தBபூ Fப அகத்னாஹும் Bபிமா கானூ யக்ஸிBபூன்
7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால், நாம் அவர்களுக்காக வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால், அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
7:97 اَفَاَمِنَ اَهْلُ الْـقُرٰٓى اَنْ يَّاْتِيَهُمْ بَاْسُنَا بَيَاتًا وَّهُمْ نَآٮِٕمُوْنَؕ
اَفَاَمِنَ ?/அச்சமற்றார்(கள்) اَهْلُ الْـقُرٰٓى ஊர்வாசிகள் اَنْ يَّاْتِيَهُمْ அவர்களுக்கு வருவதை بَاْسُنَا நம் வேதனை بَيَاتًا இரவில் وَّهُمْ نَآٮِٕمُوْنَؕ அவர்கள் தூங்கியவர்களாக இருக்கும்போது
7:97. அFப அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா Bபயாத(ன்)வ் வ ஹும் னா'இமூன்
7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும்போது, நமது வேதனை அவர்களிடம் வருமென்பதைப் பற்றி அச்சமற்று இருக்கின்றார்களா?
7:98 اَوَاَمِنَ اَهْلُ الْقُرٰٓى اَنْ يَّاْتِيَهُمْ بَاْسُنَا ضُحًى وَّهُمْ يَلْعَبُوْنَ
اَوَاَمِنَ ?/அச்சமற்றார்(கள்) اَهْلُ الْقُرٰٓى ஊர்வாசிகள் اَنْ يَّاْتِيَهُ அவர்களுக்கு வருவதை بَاْسُنَا நம் வேதனை ضُحًى முற்பகலில் وَّهُمْ يَلْعَبُوْنَ அவர்கள் விளையாடும்போது
7:98. அவ அமின அஹ்லுல் குரா அய் ய'தியஹும் Bப'ஸுனா ளுஹ(ன்)வ் வ ஹும் யல்'அBபூன்
7:98. அல்லது, அவ்வூர்வாசிகள் (கவலையில்லாது) முற்பகலில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே, நமது வேதனை அவர்களிடம் வருமென்பதைப் பற்றி அச்சமற்று இருக்கின்றார்களா?
7:99 اَفَاَمِنُوْا مَكْرَ اللّٰهِ ۚ فَلَا يَاْمَنُ مَكْرَ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْخٰسِرُوْنَ
اَفَاَمِنُوْا அச்சமற்றார்களா? مَكْرَ சூழ்ச்சியை اللّٰهِ ۚ அல்லாஹ்வின் فَلَا يَاْمَنُ அச்சமற்றிருக்க மாட்டார்(கள்) مَكْرَ சூழ்ச்சியை اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا الْقَوْمُ மக்களைத் தவிர الْخٰسِرُوْنَ நஷ்டவாளிகளான
7:99. அFப அமினூ மக்ரல் லாஹ்; Fபலா ய'மனு மக்ரல் லாஹி இல்லல் கவ்முல் காஸிரூன்
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சி பற்றி அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா? நஷ்டவாளிகளான கூட்டத்தாரைத் தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சமற்று இருக்கமாட்டார்கள்.
7:100 اَوَلَمْ يَهْدِ لِلَّذِيْنَ يَرِثُوْنَ الْاَرْضَ مِنْۢ بَعْدِ اَهْلِهَاۤ اَنْ لَّوْ نَشَآءُ اَصَبْنٰهُمْ بِذُنُوْبِهِمْ ۚ وَنَطْبَعُ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَسْمَعُوْنَ
اَوَلَمْ يَهْدِ தெளிவாகவில்லையா? لِلَّذِيْنَ எவர்களுக்கு يَرِثُوْنَ வாரிசாகிறார்கள் الْاَرْضَ பூமிக்கு مِنْۢ بَعْدِ பின்னர் اَهْلِهَاۤ அதில் வசித்தவர்களுக்கு اَنْ لَّوْ نَشَآءُ என்பது/நாம் நாடினால் اَصَبْنٰهُمْ சோதித்திருப்போம்/அவர்களை بِذُنُوْبِهِمْ ۚ அவர்களுடைய பாவங்களின் காரணமாக وَنَطْبَعُ இன்னும் முத்திரையிடுவோம் عَلٰى மீது قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்கள் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَسْمَعُوْنَ செவியுறமாட்டார்கள்
7:100. அவ லம் யஹ்தி லில்லதீன யரிதூனல் அர்ள மிம் Bபஃதி அஹ்லிஹா அல் லவ் னஷா'உ அஸBப்னாஹும் BபிதுனூBபிஹிம்; வ னத்Bப'உ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யஸ்ம'ஊன்
7:100. பூமியை - அதில் (முன்னர்) இருந்தவர்களுக்குப் பின் - வாரிசாக்கிக் கொண்டவர்களுக்கு நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் இவர்களையும் (அவ்வாறே) நாம் பிடிப்போம் என்பதும், இவர்கள் செவியுறாதவாறு இவர்களின் இதயங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுவோம் என்பதும் தெளிவாகவில்லையா?
7:101 تِلْكَ الْقُرٰى نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآٮِٕهَا ۚ وَلَقَدْ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ ۚ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا مِنْ قَبْلُ ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الْكٰفِرِيْنَ
تِلْكَ الْقُرٰى அந்த ஊர்கள் نَقُصُّ விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு مِنْ இருந்து اَنْۢبَآٮِٕهَا ۚ அவற்றின் செய்திகள் وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَتْهُمْ வந்தனர்/அவர்களிடம் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ ۚ அத்தாட்சிகளைக் கொண்டு فَمَا كَانُوْا அவர்கள் இல்லை لِيُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக بِمَا எதை كَذَّبُوْا பொய்ப்பித்தனர் مِنْ قَبْلُ ؕ முன்னர் كَذٰلِكَ இவ்வாறே يَطْبَعُ முத்திரையிடுகிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى قُلُوْبِ உள்ளங்கள் மீது الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களின்
7:101. தில்கல் குரா னகுஸ்ஸு 'அலய்க மின் அம்Bபா'இஹா; வ லகத் ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபமா கானூ லியு'மினூ Bபிமா கத்தBபூ மின் கBப்ல்; கதாலிக யத்Bப'உல் லாஹு 'அலா குலூBபில் காFபிரீன்
7:101. (நபியே!) இந்த ஊர்கள் - அவற்றின் செய்திகளிலிருந்து நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டுவந்தார்கள்; எனினும், அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை; இவ்வாறே அல்லாஹ் நிராகரிப்பவர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டுவிடுகிறான்.
7:102 وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍۚ وَاِنْ وَّجَدْنَاۤ اَكْثَرَهُمْ لَفٰسِقِيْنَ
وَمَا وَجَدْنَا நாம் காணவில்லை لِاَكْثَرِهِمْ அவர்களில் அதிகமானவர்களுக்கு مِّنْ عَهْدٍۚ எந்த வாக்குறுதியையும் وَاِنْ وَّجَدْنَاۤ நிச்சயமாக கண்டோம் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானவர்களை لَفٰسِقِيْنَ பாவிகளாகவே
7:102. வமா வஜத்னா லி அக்தரிஹிம் மின் 'அஹ்த்; வ இ(ன்)வ் வஜத்னா அக்தரஹும் லFபாஸிகீன்
7:102. இன்னும், எந்த வாக்குறுதியையும் (நிறைவேற்றுவதை) அவர்களில் பெரும்பாலோரிடம் நாம் காணவில்லை; அன்றியும், அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
7:103 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى بِاٰيٰتِنَاۤ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ئِهٖ فَظَلَمُوْا بِهَا ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِيْنَ
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு مُّوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَاۤ நம் அத்தாட்சிகளைக் கொண்டு اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَمَلَا۟ئِهٖ இன்னும் அவனுடைய தலைவர்களிடம் فَظَلَمُوْا அநீதியிழைத்தனர் بِهَا ۚ அவற்றுக்கு فَانْظُرْ கவனிப்பீராக كَيْفَ كَانَ எவ்வாறு இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُفْسِدِيْنَ விஷமிகளின்
7:103. தும்ம Bப'அத்னா மிம் Bபஃதிஹிம் மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவன வ மல'இஹீ Fபளலமூ Bபிஹா Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முFப்ஸிதீன்
7:103. அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் நாம் அனுப்பி வைத்தோம்; அப்போது, அவர்கள் அவற்றை நிராகரித்து (அநியாயம் செய்து) விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைக் கவனிப்பீராக!
7:104 وَ قَالَ مُوْسٰى يٰفِرْعَوْنُ اِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَۙ
وَ قَالَ கூறினார் مُوْسٰى மூஸா يٰفِرْعَوْنُ ஃபிர்அவ்னே اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட الْعٰلَمِيْنَۙ அகிலங்களின்
7:104. வ கால மூஸா யா Fபிர்'அவ்னு இன்னீ ரஸூலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
7:104. "ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார்.
7:105 حَقِيْقٌ عَلٰٓى اَنْ لَّاۤ اَقُوْلَ عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ ؕ قَدْ جِئْـتُكُمْ بِبَيِّنَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاَرْسِلْ مَعِىَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ
حَقِيْقٌ பேராசை உள்ளவன், கடமைப் பட்டவன், தகுதி உள்ளவன் عَلٰٓى اَنْ لَّاۤ اَقُوْلَ நான் கூறாமலிருப்பதற்கு عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது اِلَّا الْحَـقَّ ؕ உண்மையைத் தவிர قَدْ நிச்சயமாக جِئْـتُكُمْ உங்களிடம் வந்துவிட்டேன் بِبَيِّنَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து فَاَرْسِلْ ஆகவே அனுப்பிவை مَعِىَ என்னுடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ இஸ்ரவேலர்களை
7:105. ஹகீகுன் 'அலா அல் லா அகூல 'அலல் லாஹி இல்லல் ஹக்க்; கத் ஜி'துகும் BபிBபய்யினதிம் மிர் ரBப்Bபிகும் Fப அர்ஸில் ம'இய Bபனீ இஸ்ரா'ஈல்
7:105. "அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என் மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்: ஆகவே, இஸ்ராயீலின் சந்ததியினரை என்னுடன் அனுப்பிவை!" (என்றும் அவர் கூறினார்.)
7:106 قَالَ اِنْ كُنْتَ جِئْتَ بِاٰيَةٍ فَاْتِ بِهَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ
قَالَ கூறினான் اِنْ كُنْتَ جِئْتَ நீர் இருந்தால்/வந்தீர் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு فَاْتِ வாரீர் بِهَاۤ அதைக் கொண்டு اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ உண்மையாளர்களில்
7:106. கால இன் குன்ன்த ஜி'த Bபி ஆயதின் Fப'திBபிஹா இன் குன்ன்த மினஸ் ஸாதிகீன்
7:106. அதற்கு அவன், "நீர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருப்பீரானால் - (அதுபற்றி) நீர் உண்மையாளராக இருப்பின் - அதைக் கொண்டு வாரும்" என்று கூறினான்.
7:107 فَاَلْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ ۖ ۚ
فَاَلْقٰى ஆகவே, எறிந்தார் عَصَاهُ தன் தடியை فَاِذَا அப்போது هِىَ அது ثُعْبَانٌ பெரிய பாம்பாக مُّبِيْنٌ ۖ ۚ தெளிவானது
7:107. Fப அல்கா 'அஸாஹு Fப இதா ஹிய துஃBபானும் முBபீன்
7:107. அப்போது (மூஸா) தம் கைத்தடியைப் போட்டார்; உடனே அது ஒரு தெளிவான பெரிய பாம்பாகிவிட்டது.
7:108 وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ
وَّنَزَعَ இன்னும் வெளியில் எடுத்தார் يَدَهٗ தன் கையை فَاِذَا அப்போது هِىَ அது بَيْضَآءُ மிக வெண்மையானதாக لِلنّٰظِرِيْنَ பார்ப்பவர்களுக்கு
7:108. வ னZஜ'அ யதஹூ Fப இதா ஹிய Bபய்ளா'உ லின்னாளிரீன்
7:108. மேலும், அவர் தம் கையை (சட்டைப்பையிலிருந்து) வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு(ப் பளிச்சிடும்) வெண்மையானதாக இருந்தது.
7:109 قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌ ۙ
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் مِنْ قَوْمِ சமுதாயத்தின் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய اِنَّ هٰذَا நிச்சயமாக இவர் لَسٰحِرٌ சூனியக்காரர் عَلِيْمٌ ۙ கற்றறிந்தவர்
7:109. காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன இன்ன ஹாதா லஸாஹிருன் 'அலீம்
7:109. ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், "இவர் நிச்சயமாக மிக அறிந்த சூனியக்காரரே" என்று கூறினார்கள்.
7:110 يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَاْمُرُوْنَ
يُّرِيْدُ நாடுகிறார் اَنْ يُّخْرِجَكُمْ உங்களை வெளியேற்ற مِّنْ இருந்து اَرْضِكُمْ ۚ உங்கள் பூமியிலிருந்து فَمَاذَا ஆகவே என்ன? تَاْمُرُوْنَ கட்டளையிடுகிறீர்கள்
7:110. யுரீது அய் யுக்ரிஜகும் மின் அர்ளிகும் Fபமாதா த'முரூன்
7:110. (அதற்கு ஃபிர்அவ்ன்), "இவர் உங்களை, உங்களுடைய பூமியை (நாட்டை) விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே, (இதைப்பற்றி) நீங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்?" (என்று கேட்டான்.)
7:111 قَالُوْآ اَرْجِهْ وَاَخَاہُ وَاَرْسِلْ فِی الْمَدَآٮِٕنِ حٰشِرِیْنَ ۙ
قَالُوْآ கூறினார்கள் اَرْجِهْ தவணை கொடு/அவருக்கு وَاَخَاہُ இன்னும் அவருடைய சகோதரருக்கு وَاَرْسِلْ இன்னும் அனுப்பு فِی الْمَدَآٮِٕنِ நகரங்களில் حٰشِرِیْنَ ۙ ஒன்றுதிரட்டுபவர்களை
7:111. காலூ அர்ஜிஹ் வ அகாஹு வ அர்ஸில் Fபில்மதா'இனி ஹாஷிரீன்
7:111. அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்துவிட்டு, பல பட்டணங்களுக்கு (சூனியக்காரர்களைத்) திரட்டிக் கொண்டுவருவோரை அனுப்பி வைப்பீராக!" என்று கூறினார்கள்.
7:112 يَاْتُوْكَ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ
يَاْتُوْكَ உம்மிடம் வருவார்கள் بِكُلِّ எல்லோரையும் கொண்டு سٰحِرٍ சூனியக்காரர் عَلِيْمٍ கற்றறிந்தவர்
7:112. ய'தூக Bபிகுல்லி ஸாஹிரின் 'அலீம்
7:112. "அவர்கள் நன்கறிந்த ஒவ்வொரு சூனியக்காரரையும் உம்மிடம் கொண்டுவருவார்கள்" (என்று கூறினார்கள்).
7:113 وَجَآءَ السَّحَرَةُ فِرْعَوْنَ قَالُوْۤا اِنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ
وَجَآءَ வந்தார்(கள்) السَّحَرَةُ சூனியக்காரர்கள் فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் قَالُوْۤا கூறினர் اِنَّ நிச்சயமாக لَـنَا எங்களுக்கு لَاَجْرًا திட்டமாக கூலி اِنْ كُنَّا நாங்கள் ஆகிவிட்டால் نَحْنُ நாங்கள் الْغٰلِبِيْنَ மிகைத்தவர்களாக
7:113. வ ஜா'அஸ் ஸஹரது Fபிர்'அவ்ன காலூ இன்ன லனா ல அஜ்ஜ்ரன் இன் குன்னா னஹ்னுல் காலிBபீன்
7:113. அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள்; அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமா?" என்று கேட்டார்கள்.
7:114 قَالَ نَـعَمْ وَاِنَّكُمْ لَمِنَ الْمُقَرَّبِيْنَ
قَالَ கூறினான் نَـعَمْ ஆம்! وَاِنَّكُمْ இன்னும் நிச்சயமாக நீங்கள் لَمِنَ الْمُقَرَّبِيْنَ நெருக்கமானவர்களில்
7:114. கால ன'அம் வ இன்னகும் லமினல் முகர்ரBபீன்
7:114. அவன் கூறினான்: "ஆம்! (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்); இன்னும், நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகிவிடுவீர்கள்."
7:115 قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ نَحْنُ الْمُلْقِيْنَ
قَالُوْا கூறினார்கள் يٰمُوْسٰٓى மூஸாவே! اِمَّاۤ اَنْ تُلْقِىَ நீர் எறிகிறீரா? وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ அவர்கள் நாங்கள் இருக்கவா? نَحْنُ நாங்களே الْمُلْقِيْنَ எறிபவர்களாக
7:115. காலூ யா மூஸா இம்மா அன் துல்கிய வ இம்மா அன் னகூன னஹ்னுல் முல்கீன்
7:115. "மூஸாவே! (முதலில்) நீர் போடுகிறீரா? (முதலில்) போடுகிறவர்களாக நாங்கள் இருக்கட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
7:116 قَالَ اَلْقُوْا ۚ فَلَمَّاۤ اَلْقَوْا سَحَرُوْۤا اَعْيُنَ النَّاسِ وَاسْتَرْهَبُوْهُمْ وَجَآءُوْ بِسِحْرٍ عَظِيْمٍ
قَالَ கூறினார் اَلْقُوْا ۚ எறியுங்கள் فَلَمَّاۤ اَلْقَوْا அவர்கள் எறிந்தபோது سَحَرُوْۤا மயக்கினார்கள் اَعْيُنَ கண்களை النَّاسِ மக்களுடைய وَاسْتَرْهَبُوْ இன்னும் திடுக்கிடச் செய்தனர் هُمْ அவர்களை وَجَآءُوْ இன்னும் வந்தனர் بِسِحْرٍ ஒரு சூனியத்தைக்கொண்டு عَظِيْمٍ பெரியது
7:116. கால அல்கூ Fபலம் மா அல்கவ் ஸஹரூ அஃயுனன்னாஸி வஸ்தர்ஹBபூஹும் வ ஜா'ஊ Bபிஸிஹ்ரின் 'அளீம்
7:116. அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) போடுங்கள்" என்று கூறினார்; அவ்வாறே அவர்கள் போட்டபோது, மக்களின் கண்களை மருட்டி அவர்களைத் திடுக்கிடும்படியும் செய்துவிட்டனர்; இன்னும், மகத்தான சூனியத்தைக் கொண்டுவந்தனர்.
7:117 وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَ ۚ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ ۚ
وَاَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنْ اَلْقِ எறிவீராக என்று عَصَاكَ ۚ உம் தடியை فَاِذَا هِىَ تَلْقَفُ அப்போது அது விழுங்கிவிட்டது مَا எவற்றை يَاْفِكُوْنَ போலியாக செய்வார்கள்
7:117. வ அவ்ஹய்னா இலா மூஸா அன் அல்கி 'அஸாக Fப இதா ஹிய தல்கFபு மா ய'Fபிகூன்
7:117. அப்பொழுது நாம் மூஸாவுக்கு, "நீர் உம் கைத்தடியைப் போடும்" என 'வஹீ' அறிவித்தோம்; அவ்வாறு, அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கிவிட்டது.
7:118 فَوَقَعَ الْحَـقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَۚ
فَوَقَعَ நிகழ்ந்தது الْحَـقُّ உண்மை وَبَطَلَ பொய்ப்பித்தது مَا كَانُوْا يَعْمَلُوْنَۚ அவர்கள் செய்து கொண்டிருந்தது
7:118. Fபவக'அல் ஹக்கு வ Bபதல மா கானூ யஃமலூன்
7:118. இவ்வாறு உண்மை வெளிப்பட்டுவிட்டது; அவர்கள் செய்துகொண்டிருந்த (சூனியங்கள்) யாவும் வீணாகிவிட்டன.
7:119 فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِيْنَۚ
فَغُلِبُوْا ஆகவே தோற்கடிக்கப்பட்டனர் هُنَالِكَ அங்கே وَانْقَلَبُوْا இன்னும் திரும்பினர் صٰغِرِيْنَۚ இழிவானவர்களாக
7:119. FபகுலிBபூ ஹுனாலிக வன்கலBபூ ஸாகிரீன்
7:119. அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்னும், அவர்கள் சிறுமை அடைந்தவர்களாகவும் திரும்பினர்.
7:120 وَ اُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَ ۙ
وَ اُلْقِىَ தள்ளப்பட்டனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் سٰجِدِيْنَ ۙ சிரம் பணிந்தவர்களாக
7:120. வ உல்கியஸ் ஸஹரது ஸாஜிதீன்
7:120. அன்றியும், அந்தச் சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் வீழ்ந்தார்கள்.
7:121 قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَ ۙ
قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِرَبِّ இறைவனை الْعٰلَمِيْنَ ۙ அகிலத்தார்களின்
7:121. காலூ ஆமன்னா Bபி ரBப்Bபில் 'ஆலமீன்
7:121. "அகிலத்தாரின் இறைவன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறினார்கள்.
7:122 رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ
رَبِّ இறைவனான مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனுடைய
7:122. ரBப்Bபி மூஸா வ ஹாரூன்
7:122. "அவனே மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள்.
7:123 قَالَ فِرْعَوْنُ اٰمَنْتُمْ بِهٖ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْۚ اِنَّ هٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوْهُ فِى الْمَدِيْنَةِ لِتُخْرِجُوْا مِنْهَاۤ اَهْلَهَا ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ
قَالَ கூறினான். فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِهٖ அவரை قَبْلَ முன்னர் اَنْ اٰذَنَ நான் அனுமதியளிப்பதற்கு لَـكُمْۚ உங்களுக்கு اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَمَكْرٌ சூழ்ச்சிதான் مَّكَرْتُمُوْهُ சூழ்ச்சிசெய்தீர்கள்/அதை فِى الْمَدِيْنَةِ நகரத்தில் لِتُخْرِجُوْا நீங்கள் வெளியேற்றுவதற்காக مِنْهَاۤ அதிலிருந்து اَهْلَهَا ۚ அதில் வசிப்போரை فَسَوْفَ تَعْلَمُوْنَ அறிவீர்கள்
7:123. கால Fபிர்'அவ்னு ஆமன்தும் Bபிஹீ கBப்ல அன் ஆதன லகும்; இன்ன ஹாத லமக்ரும் மகர்துமூஹு Fபில்மதீனதி லிதுக்ரிஜூ மின்ஹா அஹ்லஹா Fபஸவ்Fப தஃலமூன்
7:123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி): "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர்மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும்: இந்நகரத்தில் - இதில் வசிப்பவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் சேர்ந்து) நீங்கள் சூழ்ச்சி செய்திருக்கிறீர்கள்; (இதன் விளைவை) நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்" என்று கூறினான்.
7:124 لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ
لَاُقَطِّعَنَّ நிச்சயமாக வெட்டுவேன் اَيْدِيَكُمْ உங்கள் கைகளை وَاَرْجُلَكُمْ இன்னும் உங்கள் கால்களை مِّنْ خِلَافٍ மாறாக ثُمَّ பிறகு لَاُصَلِّبَنَّكُمْ நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களை اَجْمَعِيْنَ அனைவரையும்
7:124. ல உகத்தி'அன்ன அய்தியகும் வ அர்ஜுலகும் மின் கிலாFபின் தும்ம ல உஸல்லிBபன்னகும் அஜ்ம'ஈன்
7:124. "நிச்சயமாக நான் உங்களுடைய மாறுகை, மாறுகால்களை வெட்டி, பின்னர் உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" (என்றும் கூறினான்).
7:125 قَالُـوْۤا اِنَّاۤ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَۚ
قَالُـوْۤا கூறினர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى رَبِّنَا எங்கள் இறைவனிடம் مُنْقَلِبُوْنَۚ திரும்பக்கூடியவர்கள்
7:125. காலூ இன்னா இலா ரBப்Bபினா முன்கலிBபூன்
7:125. அதற்கு அவர்கள்: "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்! (எனவே, இதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள்.
7:126 وَمَا تَـنْقِمُ مِنَّاۤ اِلَّاۤ اَنْ اٰمَنَّا بِاٰيٰتِ رَبِّنَا لَمَّا جَآءَتْنَا ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ
وَمَا تَـنْقِمُ நீ பழிக்கவில்லை مِنَّاۤ எங்களை اِلَّاۤ தவிர اَنْ اٰمَنَّا என்பதற்காக / நம்பிக்கை கொண்டோம் بِاٰيٰتِ அத்தாட்சிகளை رَبِّنَا எங்கள் இறைவனின் لَمَّا போது جَآءَتْنَا ؕ வந்தன/எங்களிடம் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَفْرِغْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது صَبْرًا பொறுமையை وَّتَوَفَّنَا கைப்பற்று/எங்களை مُسْلِمِيْنَ முஸ்லிம்களாக
7:126. வமா தன்கிமு மின்னா இல்லா அன் ஆமன்னா Bபி ஆயாதி ரBப்Bபினா லம்மா ஜா'அத்னா; ரBப்Bபனா அFப்ரிக் 'அலய்னா ஸBப்ர(ன்)வ் வ தவFப்Fபனா முஸ்லிமீன்
7:126. "எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழிவாங்குகிறாய்?" (என்று ஃபிர்அவ்னிடம் கூறி,) "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையைப் பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்களை மரணிக்கச் செய்வாயாக!" (எனப் பிரார்த்தித்தனர்.)
7:127 وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَ ؕ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْىٖ نِسَآءَهُمْ ۚ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ
وَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் مِنْ قَوْمِ சமுதாயத்திலிருந்து فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய اَتَذَرُ நீ விட்டுவிடப்போகிறாயா? مُوْسٰى மூஸாவை وَقَوْمَهٗ இன்னும் அவருடைய சமுதாயத்தை لِيُفْسِدُوْا அவர்கள் விஷமம் செய்வதற்கு فِى الْاَرْضِ பூமியில் وَيَذَرَكَ இன்னும் விட்டுவிடுவதற்கு/உன்னை وَاٰلِهَتَكَ ؕ இன்னும் உன் தெய்வங்களை قَالَ கூறினான் سَنُقَتِّلُ கொன்று குவிப்போம் اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை هُمْ அவர்களுடைய وَنَسْتَحْىٖ இன்னும் வாழவிடுவோம் نِسَآءَهُمْ ۚ அவர்களுடைய பெண் (பிள்ளை)களை وَاِنَّا நிச்சயமாக நாம் فَوْقَهُمْ அவர்களுக்கு மேல் قَاهِرُوْنَ ஆதிக்கம் வகிப்பவர்கள்
7:127. வ காலல் மல-உ மின் கவ்மி Fபிர்'அவ்ன அததரு மூஸா வ கவ்மஹூ லியுFப்ஸிதூ Fபில் அர்ளி வ யதரக வ ஆலிஹதக்; கால ஸனுகத்திலு அBப்னா 'அஹும் வ னஸ்தஹ்யீ னிஸா'அஹும் வ இன்னா Fபவ்கஹும் காஹிரூன்
7:127. அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகப்பிரமுகர்கள் (அவனை நோக்கி): "மூஸாவும், அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கவும், உம்மையும், உம் தெய்வங்களையும் (புறக்கணித்து) விட்டு விடுவதற்காகவும் நீர் அவர்களை விட்டு வைப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, அவர்களுடைய பெண்மக்களை (மட்டும்) உயிருடன் வாழவிடுவோம்; நிச்சயமாக நாம் அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கிறோம்" என்று கூறினான்.
7:128 قَالَ مُوْسٰى لِقَوْمِهِ اسْتَعِيْنُوْا بِاللّٰهِ وَاصْبِرُوْا ۚ اِنَّ الْاَرْضَ لِلّٰهِ ۙ يُوْرِثُهَا مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ
قَالَ கூறினார் مُوْسٰى மூஸா لِقَوْمِهِ தன் சமுதாயத்திற்கு اسْتَعِيْنُوْا உதவி தேடுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்விடம் وَاصْبِرُوْا ۚ இன்னும் பொறுத்திருங்கள் اِنَّ நிச்சயமாக الْاَرْضَ பூமி لِلّٰهِ ۙ அல்லாஹ்வுக்குரியதே يُوْرِثُهَا வாரிசாக்குவான்/அதற்கு مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் مِنْ عِبَادِهٖ ؕ தன் அடியார்களில் وَالْعَاقِبَةُ முடிவு لِلْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே
7:128. கால மூஸா லிகவ்மிஹிஸ் த'ஈனூ Bபில்லாஹி வஸ்Bபிரூ இன்னல் அர்ள லில்லாஹி யூரிதுஹா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வல் 'ஆகிBபது லில்முத்தகீன்
7:128. மூஸா தம் சமூகத்தாரிடம்: "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும், பொறுமையாகவும் இருங்கள்: நிச்சயமாக (இந்தப்) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம்; தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அதை உரியதாக்கி விடுகின்றான்; இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுபவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறினார்.
7:129 قَالُـوْۤا اُوْذِيْنَا مِنْ قَبْلِ اَنْ تَاْتِيَنَا وَمِنْۢ بَعْدِ مَا جِئْتَنَا ؕ قَالَ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى الْاَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ
قَالُـوْۤا கூறினர் اُوْذِيْنَا துன்புறுத்தப்பட்டோம் مِنْ قَبْلِ முன்னர் اَنْ تَاْتِيَنَا நீர் வருவதற்கு / எங்களிடம் وَمِنْۢ بَعْدِ இன்னும் பின்னர் مَا جِئْتَنَا ؕ நீர்வந்தது/எங்களிடம் قَالَ கூறினார் عَسٰى கூடும் رَبُّكُمْ உங்கள் இறைவன் اَنْ يُّهْلِكَ அவன் அழித்து عَدُوَّكُمْ எதிரிகளை/உங்கள் وَيَسْتَخْلِفَكُمْ இன்னும் அதிபதிகளாக்க/உங்களை فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرَ கவனிப்பான் كَيْفَ எவ்வாறு تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
7:129. காலூ ஊதீனா மின் கBப்லி அன் த'தியனா வ மிம் Bபஃதி மா ஜி'தனா; கால 'அஸா ரBப்Bபுகும் அய் யுஹ்லிக 'அதுவ்வகும் வ யஸ்தக்லி Fபகும் Fபில் அர்ளி Fபயன்ளுர கய்Fப தஃமலூன்
7:129. "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்படுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்; அதற்கவர் கூறினார்: "உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை அவன் கவனிப்பான்."
7:130 وَلَقَدْ اَخَذْنَاۤ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِيْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக اَخَذْنَاۤ பிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம், اٰلَ குடும்பத்தாரை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய بِالسِّنِيْنَ பஞ்சங்களாலும் وَنَقْصٍ இன்னும் குறைத்து مِّنَ الثَّمَرٰتِ கனிகளை لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
7:130. வ லகத் அகத்னா ஆல Fபிர்'அவ்ன Bபிஸ் ஸினீன வ னக்ஸிம் மினஸ் தமராதி ல'அல்லஹும் யத்தக்கரூன்
7:130. பின்னர், நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை அவர்கள் படிப்பினை பெறுவதற்காக, பஞ்சங்களைக் கொண்டும், கனிவர்க்கங்களில் குறைவைக் கொண்டும் நாம் பிடித்தோம்.
7:131 فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَـنَا هٰذِهٖ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّطَّيَّرُوْا بِمُوْسٰى وَمَنْ مَّعَهٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓٮِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ
فَاِذَا جَآءَتْهُمُ அவர்களுக்குவந்தால் الْحَسَنَةُ இன்பம் قَالُوْا கூறுவார்கள் لَـنَا எங்களுக்கு هٰذِهٖ ۚ இது وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் سَيِّئَةٌ ஒரு துன்பம் يَّطَّيَّرُوْا துர்ச்சகுணமாக எண்ணுவார்கள் بِمُوْسٰى மூஸாவையும் وَمَنْ இன்னும் எவர்கள் مَّعَهٗ ؕ அவருடன் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّمَا எல்லாம் طٰٓٮِٕرُهُمْ துர்ச்சகுணம்/அவர்களுடைய عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம்தான் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
7:131. Fப இதா ஜா'அத் ஹுமுல் ஹஸனது காலூ லனா ஹாதிஹீ வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அது(ன்)ய் யத்தய்யரூ Bபி மூஸா வ மம் ம'அஹ்; அலா இன்னமா தா'இருஹும் 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
7:131. அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால் "இது எங்களுக்கு உரியது!" என்று கூறுகின்றனர்; ஆனால், அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடன் இருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது. எனினும், அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வதில்லை.
7:132 وَقَالُوْا مَهْمَا تَاْتِنَا بِهٖ مِنْ اٰيَةٍ لِّـتَسْحَرَنَا بِهَا ۙ فَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِيْنَ
وَقَالُوْا இன்னும் கூறினார்கள் مَهْمَا எவ்வளவோ تَاْتِنَا எங்களிடம் வந்தாலும் بِهٖ அதைக் கொண்டு مِنْ اٰيَةٍ அத்தாட்சியை لِّـتَسْحَرَنَا நீர் எங்களை ஏமாற்றுவதற்காக, திசை திருப்புவதற்காக بِهَا ۙ அதன் மூலம் فَمَا نَحْنُ நாங்கள் இல்லை لَكَ உம்மை بِمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொள்பவர்களாக
7:132. வ காலூ மஹ்மா தாதினா Bபிஹீ மின் ஆயதில் லிதஸ்'ஹரனா Bபிஹா Fபமா னஹ்னு லக Bபிமு'மினீன்
7:132. அவர்கள் (மூஸாவிடம்), "நீர் எங்களை வசியப்படுத்துவதற்காக எவ்வளவு அத்தாட்சிகளை எங்களிடம் கொண்டுவந்தபோதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை" என்று கூறினார்கள்.
7:133 فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَـرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ
فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் عَلَيْهِمُ அவர்கள் மீது الطُّوْفَانَ புயல் காற்றை وَالْجَـرَادَ இன்னும் வெட்டுக்கிளிகளை وَالْقُمَّلَ இன்னும் பேன்களை وَالضَّفَادِعَ இன்னும் தவளைகளை وَالدَّمَ இன்னும் இரத்தத்தை اٰيٰتٍ அத்தாட்சிகளாக مُّفَصَّلٰتٍ தெளிவானவை فَاسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்தனர் وَكَانُوْا இன்னும் இருந்தனர் قَوْمًا மக்களாக مُّجْرِمِيْنَ குற்றம் புரிகின்றவர்கள்
7:133. Fப அர்ஸல்னா 'அலய்ஹிமுத் தூFபான வல்ஜராத வல்கும் மல வள்ளFபாதி'அ வத்தம ஆயாதிம் முFபஸ்ஸலாதின் Fபஸ்தக்Bபரூ வ கானூ கவ்மம் முஜ்ரிமீன்
7:133. ஆகவே, அவர்கள் மீது வெள்ளப்பெருக்கையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம்; ஆனால், அவர்கள் பெருமையடித்துக் குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
7:134 وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوْا يٰمُوْسَى ادْعُ لَـنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَۚ لَٮِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَـنُؤْمِنَنَّ لَكَ وَلَـنُرْسِلَنَّ مَعَكَ بَنِىْۤ اِسْرَآءِيْلَۚ
وَلَمَّا போது وَقَعَ நிகழ்ந்தது عَلَيْهِمُ அவர்கள் மீது الرِّجْزُ வேதனை قَالُوْا கூறினர் يٰمُوْسَى மூஸாவே! ادْعُ பிரார்த்திப்பீராக لَـنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் بِمَا عَهِدَ அவன் வாக்குறுதி கொடுத்ததைக் கொண்டு عِنْدَكَۚ உம்மிடம் لَٮِٕنْ كَشَفْتَ நீர் நீக்கினால் عَنَّا எங்களை விட்டு الرِّجْزَ வேதனையை لَـنُؤْمِنَنَّ நிச்சயமாக நம்பிக்கைகொள்வோம் لَكَ உம்மை وَلَـنُرْسِلَنَّ நிச்சயமாக அனுப்புவோம் مَعَكَ உம்முடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَۚ இஸ்ரவேலர்களை
7:134. வ லம்மா வக'அ 'அலய்ஹிமுர் ரிஜ்Zஜு காலூ ய மூஸத்-உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக ல'இன் கஷFப்த 'அன்னர் ரிஜ்Zஜ லனு 'மினன்ன லக வ லனுர்ஸிலன்ன ம'அக Bபனீ இஸ்ரா'ஈல்
7:134. தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள், "மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதிப்படி எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ்வேதனையை நீர் நீக்கிவிட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மது நம்பிக்கை கொண்டு, இஸ்ராயீலின் சந்ததியினரை உம்முடன் நிச்சயமாக அனுப்பிவிடுவோம்" என்று கூறினார்கள்.
7:135 فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ اِلٰٓى اَجَلٍ هُمْ بٰلِغُوْهُ اِذَا هُمْ يَنْكُثُوْنَ
فَلَمَّا போது كَشَفْنَا நீக்கினோம் عَنْهُمُ அவர்களை விட்டு الرِّجْزَ வேதனையை اِلٰٓى வரை اَجَلٍ ஒரு தவணை هُمْ அவர்கள் بٰلِغُوْهُ அடைபவர்கள்/அதை اِذَا அப்போது هُمْ அவர்கள் يَنْكُثُوْنَ முறித்து விடுகின்றனர்
7:135. Fபலம்மா கஷFப்னா 'அன்ஹுமுர் ரிஜ்Zஜ இலா அஜலின் ஹும் Bபாலிகூஹு இதா ஹும் யன்குதூன்
7:135. அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணைவரை, வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது, அவர்கள் (தாம் அளித்த வாக்குறுதியை) முறித்துவிடுகின்றனர்.
7:136 فَانْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ فِى الْيَمِّ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ
فَانْتَقَمْنَا ஆகவே பழி தீர்த்தோம் مِنْهُمْ அவர்களிடம் فَاَغْرَقْنٰهُمْ ஆகவே மூழ்கடித்தோம்/அவர்களை فِى الْيَمِّ கடலில் بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை وَكَانُوْا இன்னும் இருந்தனர் عَنْهَا அவற்றை விட்டு غٰفِلِيْنَ கவனமற்றவர்களாக
7:136. Fபன்தகம்னா மின்ஹும் Fப'அக்ரக்னாஹும் Fபில்'யம்மி Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
7:136. ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்து, அவற்றை அவர்கள் பொருட்படுத்தாதவர்களாகவும் இருந்த காரணத்தால் அவர்களை நாம் தண்டித்தோம்; ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்தோம்.
7:137 وَاَوْرَثْنَا الْقَوْمَ الَّذِيْنَ كَانُوْا يُسْتَضْعَفُوْنَ مَشَارِقَ الْاَرْضِ وَمَغَارِبَهَا الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا ؕ وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنٰى عَلٰى بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ بِمَا صَبَرُوْا ؕ وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهٗ وَمَا كَانُوْا يَعْرِشُوْنَ
وَاَوْرَثْنَا வாரிசாக்கினோம் الْقَوْمَ சமுதாயத்தை الَّذِيْنَ எவர்கள் كَانُوْا இருந்தனா் يُسْتَضْعَفُوْنَ பலவீனமாகக் கருதப்படுவர் مَشَارِقَ கிழக்குப்பகுதிகளுக்கு الْاَرْضِ பூமியின் وَمَغَارِبَهَا இன்னும் மேற்குப் பகுதிகளுக்கு الَّتِىْ எது بٰرَكْنَا அருள் வளம் புரிந்தோம் فِيْهَا ؕ அதில் وَتَمَّتْ இன்னும் முழுமையடைந்தது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் الْحُسْنٰى மிக அழகியது عَلٰى மீது بَنِىْۤ اِسْرَاۤءِيْلَۙ இஸ்ரவேலர்கள் بِمَا صَبَرُوْا ؕ அவர்கள் பொறுத்ததால் وَدَمَّرْنَا இன்னும் நாசப்படுத்தினோம் مَا எவற்றை كَانَ இருந்தான் يَصْنَعُ செய்வான் فِرْعَوْنُ ஃபிர்அவ்னும் وَقَوْمُهٗ இன்னும் அவனுடைய சமுதாயமும் وَمَا இன்னும் எவற்றை كَانُوْا இருந்தனர் يَعْرِشُوْنَ உயர்த்திக் கட்டுவார்கள்
7:137. வ அவ்ரத்னல் கவ்மல் லதீன கானூ யுஸ்தள்'அFபூன மஷாரிகல் அர்ளி வ மகாரி Bபஹல் லதீ Bபாரக்னா Fபீஹா வ தம்மத் கலிமது ரBப்Bபிகல் ஹுஸ்னா 'அலா Bபனீ இஸ்ரா'ஈல Bபிமா ஸBபரூ வ தம்மர்னா மா கான யஸ்ன'உ Fபிர்'அவ்னு வ கவ்முஹூ வமா கானூ யஃரிஷூன்
7:137. எனவே, எவர்கள் பலவீனர்களாகக் கருதப்பட்டார்களோ அத்தகைய சமூகத்தினரை, எதில் நாம் பாக்கியம் அளித்திருந்தோமோ அத்தகைய பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், அதன் மேற்குப் பகுதிகளுக்கும் நாம் வாரிசுகளாக்கினோம்; இஸ்ராயிலின் மக்கள் பொறுமையாக இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி (நிறைவேறி)விட்டது; மேலும், ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உற்பத்தி செய்திருந்தவற்றையும், மிக உயரமாக அவர்கள் எழுப்பியிருந்த (மாடமாளிகைகள் போன்ற)வற்றையும் நாம் தரைமட்டமாக்கிவிட்டோம்.
7:138 وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَ تَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ ۚ قَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ
وَجَاوَزْنَا கடக்க வைத்தோம் بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ இஸ்ரவேலர்களை الْبَحْرَ கடலை فَاَ تَوْا வந்தனர் عَلٰى அருகில் قَوْمٍ ஒரு சமுதாயத்தின் يَّعْكُفُوْنَ வழிபாட்டுக்காக தங்கியிருக்கின்றனர் عَلٰٓى اَصْنَامٍ சிலைகளுக்கருகில் لَّهُمْ ۚ தங்கள் قَالُوْا கூறினர் يٰمُوْسَى மூஸாவே! اجْعَلْ ஏற்படுத்து لَّـنَاۤ எங்களுக்கு اِلٰهًا வணங்கப்படும் ஒரு கடவுளை كَمَا போல் لَهُمْ அவர்களுக்கு اٰلِهَةٌ ؕ வணங்கப்படும் கடவுள்கள் قَالَ கூறினார் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் قَوْمٌ சமுதாயம் تَجْهَلُوْنَ அறியமாட்டீர்கள்
7:138. வ ஜாவZஜ்னா Bபி Bபனீ இஸ்ரா'ஈலல் Bபஹ்ர Fப அதவ் 'அலா கவ்மி(ன்)ய் யஃகுFபூன 'அலா அஸ்னாமில் லஹும்; காலூ யா மூஸஜ்'அல் லனா இலாஹன் கமா லஹும் ஆலிஹஹ்; கால இன்னகும் கவ்முன் தஜ்ஹலூன்
7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடல் கடந்துசெல்ல வைத்தோம்; தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்துகொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே அவர்கள் வந்தார்கள்; அப்போது அவர்கள், "மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப்போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று அவர் (மூஸா அவர்களிடம்) கூறினார்.
7:139 اِنَّ هٰٓؤُلَۤاءِ مُتَبَّرٌ مَّا هُمْ فِيْهِ وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَۤاءِ இவர்கள் مُتَبَّرٌ அழிக்கப்படக் கூடியது مَّا எது هُمْ அவர்கள் فِيْهِ அதில் وَبٰطِلٌ இன்னும் பொய் مَّا எவை كَانُوْا இருக்கின்றனர் يَعْمَلُوْنَ செய்கிறார்கள்
7:139. இன்னா ஹா'உலா'இ முதBப்Bபரும் மா ஹும் Fபீஹி வ Bபாதிலும் மா கானூ யஃமலூன்
7:139. "நிச்சயமாக இவர்கள் எதில் இருக்கிறார்களோ அது அழியக்கூடியது; இன்னும், அவர்கள் செய்பவையாவும் (முற்றிலும்) வீணானது" (என்றும் கூறினார்).
7:140 قَالَ اَغَيْرَ اللّٰهِ اَبْغِيْكُمْ اِلٰهًا وَّهُوَ فَضَّلَـكُمْ عَلَى الْعٰلَمِيْنَ
قَالَ கூறினார் اَغَيْرَ அல்லாததையா? اللّٰهِ அல்லாஹ் اَبْغِيْكُمْ தேடுவேன்/ உங்களுக்கு اِلٰهًا வணங்கப்படும் ஒரு கடவுளாக وَّهُوَ அவனோ فَضَّلَـكُمْ மேன்மைப்படுத்தினான்/உங்களை عَلَى الْعٰلَمِيْنَ உலகத்தார்களைப் பார்க்கிலும்
7:140. கால அ-கய்ரல் லாஹி அBப்கீகும் இலாஹ(ன்)வ் வ ஹுவ Fபள்ளலகும் 'அலல் 'ஆலமீன்
7:140. (அன்றியும்,) "அல்லாஹ் அல்லாதவனையா நான் உங்களுக்கு இறைவனாகத் தேடுவேன்? அவனோ உங்களை அகிலத்தாரைவிட மேன்மையாக்கி வைத்துள்ளான்" என்றும் அவர் கூறினார்.
7:141 وَاِذْ اَنْجَيْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَـكُمْ سُوْٓءَ الْعَذَابِ ۚ يُقَتِّلُوْنَ اَبْنَآءَكُمْ وَ يَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِىْ ذٰ لِكُمْ بَلَاۤ ءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ
وَاِذْ اَنْجَيْنٰكُمْ சமயம்/காப்பாற்றினோம்/உங்களை مِّنْ இருந்து اٰلِ குடும்பத்தார் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய يَسُوْمُوْنَـكُمْ துன்புறுத்துகின்றனர்/உங்களை سُوْٓءَ الْعَذَابِ ۚ கொடியவேதனையால் يُقَتِّلُوْنَ கொன்றுகுவிப்பார்கள் اَبْنَآءَكُمْ உங்கள் மகன்களை وَ يَسْتَحْيُوْنَ இன்னும் வாழவிடுவார்கள் نِسَآءَكُمْ ؕ உங்கள்பெண்களை وَفِىْ ذٰ لِكُمْ இதில் بَلَاۤ ءٌ சோதனை مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து عَظِيْمٌ பெரியது
7:141. வ இத் அன்ஜய்னாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBப், யுகத்திலூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உம் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
7:141. இன்னும் நினைவுகூருங்கள்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனையைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை (ஏற்பட்டு) இருந்தது.
7:142 وَوٰعَدْنَا مُوْسٰى ثَلٰثِيْنَ لَيْلَةً وَّاَتْمَمْنٰهَا بِعَشْرٍ فَتَمَّ مِيْقَاتُ رَبِّهٖۤ اَرْبَعِيْنَ لَيْلَةً ۚ وَقَالَ مُوْسٰى لِاَخِيْهِ هٰرُوْنَ اخْلُفْنِىْ فِىْ قَوْمِىْ وَاَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيْلَ الْمُفْسِدِيْنَ
وَوٰعَدْنَا வாக்களித்தோம் مُوْسٰى மூஸாவுக்கு ثَلٰثِيْنَ முப்பது لَيْلَةً இரவு(களை) وَّاَتْمَمْنٰهَا இன்னும் முழுமைப்படுத்தினோம்/அதை بِعَشْرٍ பத்து இரவுகளைக் கொண்டு فَتَمَّ ஆகவே முழுமையடைந்தது مِيْقَاتُ குறிப்பிட்ட காலம் رَبِّهٖۤ அவருடைய இறைவனின் اَرْبَعِيْنَ நாற்பது لَيْلَةً ۚ இரவு(களாக) وَقَالَ கூறினார் مُوْسٰى மூஸா لِاَخِيْهِ தன் சகோதரருக்கு هٰرُوْنَ ஹாரூன் اخْلُفْنِىْ நீர் எனக்கு பிரதிநிதியாக இரு فِىْ قَوْمِىْ என் சமுதாயத்தில் وَاَصْلِحْ இன்னும் சீர்திருத்து وَلَا تَتَّبِعْ பின்பற்றாதே سَبِيْلَ பாதையை الْمُفْسِدِيْنَ விஷமிகளுடைய
7:142. வ வா'அத்னா மூஸா தலாதீன லய்லத(ன்)வ் வ அத் மம்னாஹா Bபி'அஷ்ரிம் Fபதம்ம மீகாது ரBப்Bபிஹீ அர்Bப'ஈன லய்லஹ்; வ கால மூஸா லிஅகீஹி ஹாரூனக் லுFப்னீ Fபீ கவ்மீ வ அஸ்லிஹ் வலா தத்தBபிஃ ஸBபீலல் முFப்ஸிதீன்
7:142. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; மேலும் அதை, பத்து (இரவுகள்) மூலம் பூர்த்தியாக்கினோம்: இவ்வாறாக அவருடைய இறைவனின் காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமைபெற்றது; அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, "நீர் என்னுடைய சமூகத்தாரில் என்னுடைய பிரதிநிதியாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீராக! குழப்பம் உண்டாக்குபவரின் வழியைப் பின்பற்றாதிருப்பீராக!" எனக் கூறினார்.
7:143 وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ ؕ قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ
وَلَمَّا போது جَآءَ வந்தார் مُوْسٰى மூஸா لِمِيْقَاتِنَا நமது குறித்தநேரத்திற்கு وَكَلَّمَهٗ இன்னும் பேசினாu/அவருடன் رَبُّهٗ ۙ அவருடைய இறைவன் قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اَرِنِىْۤ நீ காண்பி/எனக்கு اَنْظُرْ பார்ப்பேன் اِلَيْكَ ؕ உன்னை قَالَ கூறினான் لَنْ تَرٰٮنِىْ என்னை நீர் அறவே பார்க்க மாட்டீர் وَلٰـكِنِ எனினும் انْظُرْ பார்ப்பீராக! اِلَى الْجَـبَلِ மலையை فَاِنِ اسْتَقَرَّ அது நிலைத்தால் مَكَانَهٗ தன் இடத்தில் فَسَوْفَ تَرٰٮنِىْ ۚ நீர் என்னைப் பார்ப்பீர் فَلَمَّا போது تَجَلّٰى வெளிப்பட்டான் رَبُّهٗ அவருடைய இறைவன் لِلْجَبَلِ அம்மலை மீது جَعَلَهٗ ஆக்கினான்/அதை دَكًّا துகளாக وَّخَرَّ இன்னும் விழுந்தார் مُوْسٰى மூஸா صَعِقًا ۚ மூர்ச்சையானவராக فَلَمَّاۤ போது اَفَاقَ தெளிவுபெற்றார் قَالَ கூறினார் سُبْحٰنَكَ நீ மிகப் பரிசுத்தமானவன் تُبْتُ நான் திருந்தி திரும்புகிறேன் اِلَيْكَ உன் பக்கம் وَاَنَا நான் اَوَّلُ முதலாமவன் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொள்பவர்களில்
7:143. வ லம்மா ஜா'அ மூஸா லிமீகாதினா வ கல்லமஹூ ரBப்Bபுஹூ கால ரBப்Bபி அரினீ அன்ளுர் இலய்க்; கால லன் தரானீ வ லாகினின்ளுர் இலல் ஜBபலி Fப இனிஸ்தகர்ர மகானஹூ Fபஸவ்Fப தரானீ; Fபலம்மா தஜல்லா ரBப்Bபுஹூ லில்ஜBபலி ஜ'அலஹூ தக்க(ன்)வ் வ கர்ர மூஸா ஸ'இகா; Fபலம்மா அFபாக கால ஸுBப்ஹானக துBப்து இலய்க வ அன அவ்வலுல் மு'மினீன்
7:143. நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்தபோது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; (அப்போது) "என் இறைவனே! நீ (உன்னை) எனக்குக் காண்பிப்பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்;" என்று அவர் வேண்டினார்; (அதற்கு) அவன், "நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது; எனினும், நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும்; அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான்: ஆகவே, அவருடைய இறைவன் அம்மலை மீது வெளிப்பட்டபோது அ(வ்வாறு வெளிப்பட்ட நிலையான)து, அ(ம்மலையான)தைத் தூளாக்கி விட்டது: அப்போது, மூஸா மூர்ச்சையாகி (கீழே) விழுந்துவிட்டார்: அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்: நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்; நம்பிக்கை கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
7:144 قَالَ يٰمُوْسٰٓى اِنِّى اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسٰلٰتِىْ وَ بِكَلَامِىْ ۖ فَخُذْ مَاۤ اٰتَيْتُكَ وَكُنْ مِّنَ الشّٰكِرِيْنَ
قَالَ கூறினான் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنِّى நிச்சயமாக நான் اصْطَفَيْتُكَ தேர்ந்தெடுத்தேன்/ உம்மை عَلَى النَّاسِ மக்களை விட بِرِسٰلٰتِىْ என் தூதுகளுக்கும் وَ بِكَلَامِىْ ۖ இன்னும் என் பேச்சுக்கும் فَخُذْ ஆகவே பற்றிப்பிடிப்பீராக مَاۤ اٰتَيْتُكَ எதை/கொடுத்தேன்/உமக்கு وَكُنْ ஆகிவிடுவீராக مِّنَ الشّٰكِرِيْنَ நன்றிசெலுத்துவோரில்
7:144. கால யா மூஸா இன்னிஸ் தFபய்துக 'அலன் னாஸி Bபி ரிஸாலாதீ வ Bபி கலாமீ Fபகுத் மா ஆதய்துக வ கும் மினஷ் ஷாகிரீன்
7:144. அதற்கு அவன், "மூஸாவே! நிச்சயமாக நான் என் தூது(ச்செய்தி)களைக் கொண்டும், (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும் உம்மை மனிதர்களைவிட (மேலானவராக) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆகவே, நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக்கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக!" என்று கூறினான்.
7:145 وَكَتَبْنَا لَهٗ فِى الْاَلْوَاحِ مِنْ كُلِّ شَىْءٍ مَّوْعِظَةً وَّتَفْصِيْلًا لِّـكُلِّ شَىْءٍ ۚ فَخُذْهَا بِقُوَّةٍ وَّاْمُرْ قَوْمَكَ يَاْخُذُوْا بِاَحْسَنِهَا ؕ سَاُورِيْكُمْ دَارَ الْفٰسِقِيْنَ
وَكَتَبْنَا இன்னும் எழுதினோம் لَهٗ அவருக்கு فِى الْاَلْوَاحِ பலகைகளில் مِنْ كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் مَّوْعِظَةً (ஓர்) அறிவுரையை وَّتَفْصِيْلًا இன்னும் விளக்கத்தை لِّـكُلِّ شَىْءٍ ۚ எல்லாவற்றுக்குரிய فَخُذْهَا ஆகவே இவற்றைப் பற்றிப் பிடிப்பீராக بِقُوَّةٍ பலமாக وَّاْمُرْ இன்னும் ஏவுவீராக قَوْمَكَ உம் சமுதாயத்தை يَاْخُذُوْا அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும் بِاَحْسَنِهَا ؕ அவற்றில் மிக அழகியவற்றை سَاُورِيْكُمْ காண்பிப்பேன்/உங்களுக்கு دَارَ இல்லத்தை الْفٰسِقِيْنَ பாவிகளின்
7:145. வ கதBப்னா லஹூ Fபில் அல்வாஹி மின்குல்லி ஷய்'இம் மவ்'இளா(ன்)வ் வ தFப்ஸீலல் லிகுல்லி ஷய்'இன் Fபகுத்ஹா Bபிகுவ்வதி(ன்)வ் வ'முர் கவ்மக ய'குதூ Bபி அஹ்ஸனிஹா; ஸ'ஊரீகும் தாரல் Fபாஸிகீன்
7:145. மேலும், நாம் அவருக்குப் பலகைகளில் ஒவ்வொரு விஷயத்திலிருந்து உபதேசத்தையும், ஒவ்வொரு விஷயத்திற்குரிய விளக்கத்தையும் எழுதினோம்; ஆகவே, "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும், உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் வீட்டை (தங்குமிடத்தை) நான் உங்களுக்குக் காட்டுவேன்" (என்று கூறினான்).
7:146 سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا ۚ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ
سَاَصْرِفُ திருப்புவேன் عَنْ விட்டு اٰيٰتِىَ என் அத்தாட்சிகள், என் வசனங்கள் الَّذِيْنَ எவர்கள் يَتَكَبَّرُوْنَ பெருமையடிப்பார்கள் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَـقِّ ؕ நியாயமின்றி وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் كُلَّ எல்லாம் اٰيَةٍ அத்தாட்சி لَّا يُؤْمِنُوْا நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِهَا ۚ அவற்றை وَاِنْ يَّرَوْا இன்னும் அவர்கள் பார்த்தால் سَبِيْلَ பாதையை الرُّشْدِ நேரிய لَا மாட்டார்கள் يَتَّخِذُوْهُ அதை எடுத்துக் கொள்ள سَبِيْلًا ۚ பாதையாக وَّاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் سَبِيْلَ பாதையை الْغَىِّ வழிகேட்டின் يَتَّخِذُوْهُ எடுத்துக் கொள்வார்கள்/அதை سَبِيْلًا ؕ பாதையாக ذٰ لِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَكَانُوْا இருந்தார்கள் عَنْهَا அவற்றை விட்டு غٰفِلِيْنَ கவனமற்றவர்களாக
7:146. ஸ அஸ்ரிFபு 'அன் ஆயாதியல் லதீன யதகBப்Bபரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்க்; வ இ(ன்)ய்-யரவ் குல்ல ஆயதில் லா யு'மினூ Bபிஹா வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலர் ருஷ்தி லா யத்தகிதூஹு ஸBபீல(ன்)வ் வ இ(ன்)ய்-யரவ் ஸBபீலல் கய்யி யத்தகிதூஹு ஸBபீலா; தாலிக Bபி அன்னஹும் கத்தBபூ Bபி ஆயாதினா வ கானூ 'அன்ஹா காFபிலீன்
7:146. (எவ்வித) நியாயமுமின்றி, பூமியில் பெருமையடிப்பவர்களை, என் அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பிவிடுவேன்; அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்டபோதிலும் அவற்றை நம்பமாட்டார்கள்; அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்; ஆனால், தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியாக எடுத்துக்கொள்வார்கள்; அது (ஏனெனில்), அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறினார்கள்; இன்னும், அவற்றை விட்டும் அலட்சியமானவர்களாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலாகும்.
7:147 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَآءِ الْاٰخِرَةِ حَبِطَتْ اَعْمَالُهُمْؕ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَلِقَآءِ இன்னும் சந்திப்பை الْاٰخِرَةِ மறுமையின் حَبِطَتْ பாழாகின اَعْمَالُهُمْؕ (நற்)செயல்கள்/அவர்களுடைய هَلْ يُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவார்களா? اِلَّا தவிர مَا எவற்றை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்வார்கள்
7:147. வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ லிகா'இல் ஆகிரதி ஹBபிதத் அஃமாலுஹும்; ஹல் யுஜ்Zஜவ்ன இல்லா மா கானூ யஃமலூன்
7:147. எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய (நற்) செயல்கள் (யாவும்) அழிந்துவிடும்; அவர்கள் செய்துகொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்படமாட்டார்கள்.
7:148 وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ ؕ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ
وَاتَّخَذَ எடுத்துக் கொண்டனர் قَوْمُ சமுதாயம் مُوْسٰى மூஸாவுடைய مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் مِنْ حُلِيِّهِمْ தங்கள் நகையிலிருந்து عِجْلًا ஒரு காளைக் கன்றை جَسَدًا ஓர் உடலை لَّهٗ அதற்கு خُوَارٌ ؕ மாட்டின் சப்தம் اَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّهٗ நிச்சயமாக அது لَا இல்லை يُكَلِّمُهُمْ அவர்களுடன் பேசுவது وَلَا இன்னும் இல்லை يَهْدِيْهِمْ அவர்களுக்கு (நேர்)வழி காட்டுவது سَبِيْلًا ۘ பாதையை اِتَّخَذُوْهُ எடுத்துக் கொண்டார்கள்/அதை وَكَانُوْا இன்னும் ஆகிவிட்டனர் ظٰلِمِيْنَ அநியாயக்காரர்களாக
7:148. வத்தகத கவ்மு மூஸா மிம் Bபஃதிஹீ மின் ஹுலிய்யிஹிம் 'இஜ்லன் ஜஸதல் லஹூ குவார்; அலம் யரவ் அன்னஹூ லா யுகல்லிமுஹும் வலா யஹ்தீஹிம் ஸBபீலா; இத்தகதூஹு வ கானூ ளாலிமீன்
7:148. மூஸாவின் சமூகத்தார், அவருக்குப் பின் தங்கள் நகைகளைக் கொண்டு, ஒரு காளைக் கன்றின் உடலை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக்கொண்டார்கள்; அதற்கு மாட்டின் சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது; இன்னும், அவர்களுக்கு (நேர்) வழியும் காட்டாது என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக்கொண்டார்கள்; இன்னும், அவர்கள் (தமக்குத்தாமே) அநியாயக்காரர்களாகவும் ஆகிவிட்டனர்.
7:149 وَلَمَّا سُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَـنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
وَلَمَّا போது سُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْ அவர்கள் கைசேதப் பட்டனர் وَرَاَوْا இன்னும் அறிந்தனர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் قَدْ ضَلُّوْا ۙ வழிதவறிவிட்டனர் قَالُوْا கூறினார்கள் لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا கருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் وَيَغْفِرْ இன்னும் மன்னிக்க வில்லையென்றால் لَـنَا எங்களை لَنَكُوْنَنَّ நிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம் مِنَ الْخٰسِرِيْنَ நஷ்டவாளிகளில்
7:149. வ லம்மா ஸுகித Fபீ அய்தீஹிம் வ ர அவ் அன்னஹும் கத் ளல்லூ காலூ ல'இல் லம் யர்ஹம்னா ரBப்Bபுனா வ யக்Fபிர் லனா லனகூனன்ன மினல் காஸிரீன்
7:149. அவர்கள் (செய்துவிட்ட தவறு பற்றி) கைசேதப்பட்டு, நிச்சயமாக தாங்களே வழிதவறி விட்டதை அறிந்து கொண்டபோது, அவர்கள்: "எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்காவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகிவிடுவோம்" என்று கூறினார்கள்.
7:150 وَلَمَّا رَجَعَ مُوْسٰٓى اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ بِئْسَمَا خَلَفْتُمُوْنِىْ مِنْۢ بَعْدِىْ ۚ اَعَجِلْتُمْ اَمْرَ رَبِّكُمْ ۚ وَاَلْقَى الْاَلْوَاحَ وَاَخَذَ بِرَاْسِ اَخِيْهِ يَجُرُّهٗۤ اِلَيْهِؕ قَالَ ابْنَ اُمَّ اِنَّ الْـقَوْمَ اسْتَضْعَفُوْنِىْ وَكَادُوْا يَقْتُلُوْنَنِىْ ۖ فَلَا تُشْمِتْ بِىَ الْاَعْدَآءَ وَ لَا تَجْعَلْنِىْ مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ
وَلَمَّا போது رَجَعَ திரும்பினார் مُوْسٰٓى மூஸா اِلٰى قَوْمِهٖ தன் சமுதாயத்திடம் غَضْبَانَ கோபித்தவராக اَسِفًا ۙ ஆவேசப்பட்டவராக, துக்கித்தவராக قَالَ கூறினார் بِئْسَمَا கெட்டுவிட்டது/எது خَلَفْتُمُوْنِىْ நான் சென்றதற்குப்பிறகு செய்தீர்கள்/எனக்கு مِنْۢ بَعْدِىْ ۚ எனக்குப் பின்னர் اَعَجِلْتُمْ அவசரப்பட்டீர்களா اَمْرَ கட்டளையை رَبِّكُمْ ۚ உங்கள் இறைவனின் وَاَلْقَى எறிந்தார் الْاَلْوَاحَ பலகைகளை وَاَخَذَ இன்னும் பிடித்தார் بِرَاْسِ தலையை اَخِيْهِ தன் சகோதரனின் يَجُرُّهٗۤ இழுத்தார்/அவரை اِلَيْهِؕ தன் பக்கம் قَالَ கூறினார் ابْنَ اُمَّ என் தாயின் மகனே اِنَّ நிச்சயமாக الْـقَوْمَ சமுதாயம் اسْتَضْعَفُوْنِىْ பலவீனப்படுத்தினர்/என்னை وَكَادُوْا இன்னும் முற்பட்டனர் يَقْتُلُوْنَنِىْ ۖ கொல்வார்கள்/என்னை فَلَا تُشْمِتْ நகைக்கச் செய்யாதீர் بِىَ என்னைக் கொண்டு الْاَعْدَآءَ எதிரிகளை وَ لَا تَجْعَلْنِىْ ஆக்கிவிடாதீர்/ என்னை مَعَ الْقَوْمِ மக்களுடன் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள்
7:150. வ லம்மா ரஜ'அ மூஸா இலா கவ்மிஹீ கள்Bபான அஸிFபன் கால Bபி'ஸமா கலFப்துமூனீ மின் Bபஃதீ 'அ-'அஜில்தும் அம்ர ரBப்Bபிகும் வ அல்கல் அல்வாஹ வ அகத Bபிர'ஸி அகீஹி யஜுர்ருஹூ இலய்ய்ஹ்; காலBப் ன உம்ம இன்னல் கவ்மஸ் தள்'அFபூனீ வ கதூ யக்து லூனனீ; Fபலா துஷ்மித் Bபியல் அஃதா'அ வலா தஜ்'அல்னீ ம'அல் கவ்மிள் ளாலிமீன்
7:150. (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபமுற்றவராகவும், வருத்தம் நிறைந்தவராகவும் திரும்பி வந்தபோது (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யை(க் கொண்டுவர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர், பலகைகளைப் போட்டுவிட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்து அவரைத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னைப் பலவீனமாகக் கருதி என்னைக் கொலை செய்யவும் முற்பட்டனர்; ஆகவே, (என்னுடைய) பகைவர்களுக்கு என் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடாதீர்; இன்னும், என்னை அநியாயக்காரக் கூட்டத்தாருடன் சேர்த்து விடாதீர்" என்று கூறினார்.
7:151 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَلِاَخِىْ وَ اَدْخِلْنَا فِىْ رَحْمَتِكَ ۖ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اغْفِرْ மன்னிப்பு வழங்கு لِىْ எனக்கு وَلِاَخِىْ இன்னும் என் சகோதரருக்கு وَ اَدْخِلْنَا இன்னும் சேர்த்துக்கொள் / எங்களை فِىْ رَحْمَتِكَ ۖ உன் கருணையில் وَاَنْتَ اَرْحَمُ நீ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ கருணையாளர்களில்
7:151. கால ரBப்Bபிக்Fபிர்லீ வ லி அகீ வ அத்கில்னா Fபீ ரஹ்மதிக வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்
7:151. என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் கிருபையில் எங்களை நீ பிரவேசிக்கச் செய்வாயாக! (ஏனெனில்,) நீயே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
7:152 اِنَّ الَّذِيْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّـةٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ؕ وَكَذٰلِكَ نَجْزِىْ الْمُفْتَرِيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوا எடுத்துக் கொண்டனர் الْعِجْلَ காளைக் கன்றை سَيَنَالُهُمْ அடையும்/அவர்களை غَضَبٌ கோபம் مِّنْ இருந்து رَّبِّهِمْ அவர்களின் இறைவன் وَذِلَّـةٌ இன்னும் இழிவு فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا ؕ உலகம் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِىْ கூலி கொடுப்போம் الْمُفْتَرِيْنَ இட்டுக்கட்டுபவர்களுக்கு
7:152. இன்னல் லதீனத் தகதுல் 'இஜ்ல-ஸ யனாலுஹும் களBபும் மிர் ரBப்Bபிஹிம் வ தில்லதுன் Fபில் ஹயாதித் துன்யா; வ கதாலிக னஜ்Zஜில் முFப்தரீன்
7:152. நிச்சயமாக எவர்கள் காளைக்கன்றை (இறைவனாக) ஆக்கிக்கொண்டார்களோ, அவர்களை அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்துசேரும்; பொய்க்கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
7:153 وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْۢ بَعْدِهَا وَاٰمَنُوْۤا اِنَّ رَبَّكَ مِنْۢ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ
وَالَّذِيْنَ எவர்கள் عَمِلُوا செய்தனர் السَّيِّاٰتِ தீமைகளை ثُمَّ பிறகு تَابُوْا திருந்தி திரும்பினர் مِنْۢ بَعْدِهَا அவற்றுக்குப் பின்னர் وَاٰمَنُوْۤا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் اِنَّ رَبَّكَ நிச்சயமாக உம் இறைவன் مِنْۢ بَعْدِهَا அதற்குப் பின்னர் لَغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ பெரும் கருணையாளன்
7:153. வல்லதீன 'அமிலுஸ் ஸய்யிஆதி தும்ம தாBபூ மின் Bபஃதிஹா வ ஆமனூ இன்ன ரBப்Bபக மின் Bபஃதிஹா ல கFபூருர் ரஹீம்
7:153. ஆனால், எவர்கள் தீய செயல்கள் செய்து (மனந்திருந்தி) பின்னர், அதன் பிறகு (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டனரோ, நிச்சயமாக அதன் பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
7:154 وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَى الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَ ۖ وَفِىْ نُسْخَتِهَا هُدًى وَّرَحْمَةٌ لِّـلَّذِيْنَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُوْنَ
وَلَمَّا போது سَكَتَ தனிந்தது, அடங்கியது, அமைதியானது عَنْ مُّوْسَى மூஸாவிற்கு الْغَضَبُ கோபம் اَخَذَ الْاَلْوَاحَ ۖ எடுத்தார்/பலகைகளை وَفِىْ نُسْخَتِهَا அவற்றில் எழுதப்பட்டதில் هُدًى நேர்வழி وَّرَحْمَةٌ இன்னும் கருணை لِّـلَّذِيْنَ எவர்களுக்கு هُمْ அவர்கள் لِرَبِّهِمْ தங்கள் இறைவனை يَرْهَبُوْنَ பயப்படுகிறார்கள்
7:154. வ லம்மா ஸகத 'அன் மூஸல் களBபு அகதல் அல்வாஹ வ Fபீ னுஸ்கதிஹா ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லில் லதீன ஹும் லி ரBப்Bபிஹிம் யர்ஹBபூன்
7:154. மூஸாவை விட்டும் கோபம் தணிந்தபோது, (அவர் போட்டுவிட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார்; அவற்றில் எழுதப்பட்டிருந்ததில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர்வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
7:155 وَاخْتَارَ مُوْسٰى قَوْمَهٗ سَبْعِيْنَ رَجُلًا لِّمِيْقَاتِنَا ۚ فَلَمَّاۤ اَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ اَهْلَـكْتَهُمْ مِّنْ قَبْلُ وَاِيَّاىَ ؕ اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ اِنْ هِىَ اِلَّا فِتْنَـتُكَ ؕ تُضِلُّ بِهَا مَنْ تَشَآءُ وَتَهْدِىْ مَنْ تَشَآءُ ؕ اَنْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الْغَافِرِيْنَ
وَاخْتَارَ தேர்ந்தெடுத்தார் مُوْسٰى மூஸா قَوْمَهٗ தன் சமுதாயத்தில் سَبْعِيْنَ எழுபது رَجُلًا ஆண்களை لِّمِيْقَاتِنَا ۚ நம் குறிப்பிட்ட நேரத்திற்கு فَلَمَّاۤ போது اَخَذَتْهُمُ பிடித்தது/அவர்களை الرَّجْفَةُ இடிமுழக்கம் قَالَ கூறினார் رَبِّ என் இறைவா لَوْ شِئْتَ நீ நாடியிருந்தால் اَهْلَـكْتَهُمْ அழித்திருப்பாய்/அவர்களை مِّنْ قَبْلُ (இதற்கு) முன்னரே وَاِيَّاىَ ؕ இன்னும் என்னை اَ تُهْلِكُنَا அழிப்பாயா / எங்களை بِمَا فَعَلَ செய்ததற்காக السُّفَهَآءُ அறிவீனர்கள் مِنَّا ۚ எங்களில் اِنْ இல்லை هِىَ இது اِلَّا தவிர فِتْنَـتُكَ ؕ உன் சோதனையே تُضِلُّ வழிகெடுக்கிறாய் بِهَا இதைக் கொண்டு مَنْ எவரை تَشَآءُ நாடுகிறாய் وَتَهْدِىْ இன்னும் நேர்வழி செலுத்துகிறாய் مَنْ எவரை تَشَآءُ ؕ நாடுகிறாய் اَنْتَ நீ وَلِيُّنَا எங்கள் பாதுகாவலன் فَاغْفِرْ ஆகவே மன்னிப்பு வழங்கு لَـنَا எங்களுக்கு وَارْحَمْنَا கருணைபுரி/எங்களுக்கு وَاَنْتَ خَيْرُ நீ மிகச் சிறந்தவன் الْغَافِرِيْنَ மன்னிப்பவர்களில்
7:155. வக்தார மூஸா கவ்மஹூ ஸBப்'ஈன ரஜுலல் லி மீகாதினா Fபலம்மா அகதத் ஹுமுர் ரஜ்Fபது கால ரBப்Bபி லவ் ஷி'த அஹ்லக்தஹும் மின் கBப்லு வ இய்யாய்; 'அ துஹ்லிகுன Bபிமா Fப'அலஸ் ஸுFபஹா'உ மின்னா இன் ஹிய இல்லா Fபித்னதுக துளில்லு Bபிஹா மன் தஷா'உ வ தஹ்தீ மன் தஷா; அன்த வலிய்யுனா Fபக்Fபிர் லனா வர்ஹம்னா வ அன்த கய்ருல் காFபிரீன்
7:155. இன்னும், மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்திற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக் கொண்டபோது அவர், "என் இறைவனே! நீ நாடியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை; இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவறவிடுகிறாய்; இன்னும், நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய்; நீதான் எங்களுடைய பாதுகாவலன்; ஆகவே, எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்குக் கிருபை செய்வாயாக! மன்னிப்பவர்களிலெல்லாம், நீதான் மிக்க மேன்மையானவன்" என்று பிரார்த்தித்தார்.
7:156 وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَيْكَ ؕ قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ ۚ وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ ؕ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ۚ
وَاكْتُبْ எழுதுவாயாக, விதிப்பாயாக لَـنَا எங்களுக்கு فِىْ هٰذِهِ الدُّنْيَا இம்மையில் حَسَنَةً அழகியதை, நல்ல வாழ்வை وَّفِى الْاٰخِرَةِ இன்னும் மறுமையில் اِنَّا நிச்சயமாக நாங்கள் هُدْنَاۤ திரும்பினோம் اِلَيْكَ ؕ உன் பக்கம் قَالَ கூறினான் عَذَابِىْۤ என் வேதனை اُصِيْبُ அடைவேன் بِهٖ அதைக் கொண்டு مَنْ اَشَآءُ ۚ எவரை/நாடுவேன் وَرَحْمَتِىْ என் கருணை وَسِعَتْ விசாலமாக்கி விட்டது كُلَّ شَىْءٍ ؕ எல்லாவற்றையும் فَسَاَكْتُبُهَا விதிப்பேன்/அதை لِلَّذِيْنَ எவர்களுக்கு يَتَّقُوْنَ அஞ்சுவார்கள் وَيُؤْتُوْنَ இன்னும் கொடுப்பார்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள்
7:156. வக்துBப் லனா Fபீ ஹாதி ஹித் துன்யா ஹஸனத(ன்)வ் வ Fபில் ஆகிரதி இன்னா ஹுத்னா இலய்க்; கால 'அதாBபீ உஸீBபு Bபிஹீ மன் அஷா'உ வ ரஹ்மதீ வஸி'அத் குல்ல ஷய்'; Fபஸ அக்துBபுஹா லில் லதீன யத்தகூன வ யு'தூனZஜ் Zஜகாத வல் லதீன ஹும் Bபி ஆயாதினா யு'மினூன்
7:156. இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன்பக்கமே திரும்பிவிட்டோம்!" (என்றும் பிரார்த்தித்தார்); அதற்கு அவன், "என்னுடைய வேதனையாகிறது - அதனைக் கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால், என்னுடைய அருளானது ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது; எனினும் அதனை, (என்னை) அஞ்சி (முறையாக) ஜகாத்து கொடுப்போருக்கும், நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதியாக்குவேன்" என்று கூறினான்.
7:157 اَ لَّذِيْنَ يَتَّبِعُوْنَ الرَّسُوْلَ النَّبِىَّ الْاُمِّىَّ الَّذِىْ يَجِدُوْنَهٗ مَكْتُوْبًا عِنْدَهُمْ فِى التَّوْرٰٮةِ وَالْاِنْجِيْلِ يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
اَ لَّذِيْنَ எவர்கள் يَتَّبِعُوْنَ பின்பற்றுவார்கள் الرَّسُوْلَ இத்தூதரை النَّبِىَّ நபியான الْاُمِّىَّ எழுதப் படிக்கத் தெரியாதவர் الَّذِىْ எவர் يَجِدُوْنَهٗ காண்கின்றனர்/அவரை مَكْتُوْبًا குறிப்பிடப்பட்டவராக عِنْدَهُمْ அவர்களிடம் فِى التَّوْرٰٮةِ தவ்றாத்தில் وَالْاِنْجِيْلِ இன்னும் இன்ஜீலில் يَاْمُرُ ஏவுவார் هُمْ அவர்களுக்கு بِالْمَعْرُوْفِ நன்மையை وَيَنْهٰٮهُمْ இன்னும் தடுப்பார்/அவர்களை عَنِ الْمُنْكَرِ தீமையைவிட்டு وَيُحِلُّ இன்னும் ஆகுமாக்குவார் لَهُمُ அவர்களுக்கு الطَّيِّبٰتِ நல்ல,சுத்தமானவற்றை وَيُحَرِّمُ இன்னும் தடை செய்வார் عَلَيْهِمُ அவர்களுக்கு الْخَبٰۤٮِٕثَ கெட்டவற்றை, கெடுதி செய்பவற்றை وَيَضَعُ இன்னும் அகற்றுவார் عَنْهُمْ அவர்களை விட்டு اِصْرَهُمْ கடின சுமையை/அவர்களுடைய وَالْاَغْلٰلَ இன்னும் விலங்குகளை الَّتِىْ எவை كَانَتْ இருந்தன عَلَيْهِمْ ؕ அவர்கள் மீது فَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِهٖ அவரை وَعَزَّرُوْهُ இன்னும் பாதுகாத்தனர்/அவரை وَنَصَرُوْهُ இன்னும் உதவினர்/அவருக்கு وَ اتَّبَـعُوا இன்னும் பின்பற்றினர் النُّوْرَ ஒளியை الَّذِىْۤ எது اُنْزِلَ இறக்கப்பட்டது مَعَهٗ ۤ ۙ அவருடன் اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ வெற்றியாளர்கள்
7:157. அல்லதீன யத்தBபி'ஊனர் ரஸூலன் னBபிய்யல் உம்மிய்யல் லதீ யஜிதூனஹூ மக்தூBபன் 'இன்தஹும் Fபித் தவ்ராதி வல் இன்ஜீலி ய' முருஹும் Bபில்மஃரூFபி வ யன்ஹாஹும் 'அனில் முன்கரி வ யுஹில்லு லஹுமுல் தய்யிBபாதி வ யுஹர்ரிமு 'அலய்ஹிமுல் கBபா'இத வ யள'உ 'அன்ஹும் இஸ்ரஹும் வல் அக்லாலல் லதீ கானத் 'அலய்ஹிம்; Fபல்லதீன ஆமனூ Bபிஹீ வ 'அZஜ்Zஜரூஹு வ னஸரூஹு வத்தBப'உன் னூரல் லதீ உன்Zஜில ம'அஹூ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
7:157. அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையைக் கொண்டும் ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களை அவர் விலக்குவார்; தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்; இன்னும், அவர்களை விட்டு அவர்களுடைய சுமைகளையும், அவர்கள்மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே, எவர்கள் அவரை நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளியை (வேதத்தை)யும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
7:158 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ جَمِيْعَاْ ۨالَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُمِّىِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا النَّاسُ மனிதர்களே اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَيْكُمْ جَمِيْعَاْ உங்கள் அனைவருக்கும் ۨالَّذِىْ எவன் لَهٗ அவனுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِۚ இன்னும் பூமியின் لَاۤ اِلٰهَ அறவே இல்லை اِلَّا வணங்கப்படும் இறைவன் هُوَ அவனைத்தவிர يُحْىٖ உயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُ இன்னும் மரணிக்கச் செய்கிறான் فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَرَسُوْلِهِ இன்னும் அவனுடைய தூதரை النَّبِىِّ நபி الْاُمِّىِّ எழுதப்படிக்கத் தெரியாதவர் الَّذِىْ எவர் يُؤْمِنُ நம்பிக்கைகொள்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَكَلِمٰتِهٖ இன்னும் அவனுடைய வாக்குகளை وَاتَّبِعُوْهُ பின்பற்றுங்கள்/அவரை لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ நீங்கள் நேர்வழிபெறுவதற்காக
7:158. குல் யா அய்யுஹன் னாஸு இன்னீ ரஸூலுல் லாஹி இலய்கும் ஜமீ'அனில் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி லா இலாஹ இல்லா ஹுவ யுஹ்யீ வ யுமீது Fப ஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹின் னBபிய்யில் உம்மிய் யில் லதீ யு'மினு Bபில்லாஹி வ கலிமாதிஹீ வத்தBபி'ஊஹு ல'அல்லகும் தஹ்ததூன்
7:158. (நபியே!) நீர் கூறுவீராக: "மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) கடவுள் (வேறு) யாருமில்லை; அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கிறான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்: அவரும் அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்: அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."
7:159 وَ مِنْ قَوْمِ مُوْسٰٓى اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَـقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ
وَ مِنْ قَوْمِ சமுதாயத்தில் مُوْسٰٓى மூஸாவுடைய اُمَّةٌ ஒரு கூட்டம் يَّهْدُوْنَ வழி காட்டுகிறார்கள் بِالْحَـقِّ சத்தியத்தின்படி وَبِهٖ இன்னும் அதைக்கொண்டு يَعْدِلُوْنَ நீதியாக நடக்கின்றனர்
7:159. வ மின் கவ்மி மூஸா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
7:159. இன்னும், மூஸாவுடைய சமூகத்தாரில் ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர்; அவர்கள் சத்தியத்தைக் கொண்டு (மக்களுக்கு) வழிகாட்டுகின்றனர்; அதன்படி நீதியும் செய்கின்றனர்.
7:160 وَقَطَّعْنٰهُمُ اثْنَتَىْ عَشْرَةَ اَسْبَاطًا اُمَمًا ؕ وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اِذِ اسْتَسْقٰٮهُ قَوْمُهٗۤ اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ ۚ فَانْۢبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ؕ قَدْ عَلِمَ كُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْؕ وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوٰىؕ كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْؕ وَ مَا ظَلَمُوْنَا وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
وَقَطَّعْنٰهُمُ பிரித்தோம்/அவர்களை اثْنَتَىْ عَشْرَةَ பன்னிரெண்டு اَسْبَاطًا சந்ததிகளாக اُمَمًا ؕ கூட்டங்களாக وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اِذِ اسْتَسْقٰٮهُ போது/தண்ணீர் கேட்டார்(கள்)/அவரிடம் قَوْمُهٗۤ அவருடைய சமுதாயம் اَنِ اضْرِبْ அடிப்பீராக! என்று بِّعَصَاكَ உமது தடியால் الْحَجَرَ ۚ கல்லை فَانْۢبَجَسَتْ பீறிட்டன مِنْهُ அதிலிருந்து اثْنَتَا عَشْرَةَ பன்னிரெண்டு عَيْنًا ؕ ஊற்று(கள்) قَدْ عَلِمَ அறிந்து கொண்டார்(கள்) كُلُّ எல்லாம் اُنَاسٍ மக்கள் مَّشْرَبَهُمْؕ தங்கள் அருந்துமிடத்தை وَظَلَّلْنَا இன்னும் நிழலிடச் செய்தோம் عَلَيْهِمُ அவர்கள் மீது الْغَمَامَ மேகத்தை وَاَنْزَلْنَا இன்னும் இறக்கினோம் عَلَيْهِمُ அவர்கள் மீது الْمَنَّ ‘மன்னு’ஐ وَالسَّلْوٰىؕ இன்னும் ஸல்வாவை كُلُوْا உண்ணுங்கள் مِنْ طَيِّبٰتِ நல்லவற்றை مَا رَزَقْنٰكُمْؕ எவை/(உணவு) அளித்தோம்/உங்களுக்கு وَ مَا ظَلَمُوْنَا அவர்கள் அநீதியிழைக்கவில்லை/நமக்கு وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ அநீதியிழைப்பவர்களாக
7:160. வ கத்தஃ னாஹுமுத் னதய் 'அஷ்ரத அஸ்Bபாதன் உமமா; வ அவ்ஹய்னா இலா மூஸா இதிஸ் தஸ்காஹு கவ்முஹூ அனிள் ரிBப் Bபி'அஸாகல் ஹஜர Fபம்Bபஜஸத் மின்ஹுத் னத 'அஷ்ரத 'அய்னன் கத் 'அலிம குல்லு உனாஸிம் மஷ்ரBபஹும்; வ ளல்லல்னா 'அலய்ஹிமுல் கமாம வ அன்Zஜல்னா 'அலய்ஹிமுல் மன்ன வஸ் ஸல்வா குலூ மின் தய்யிBபாதி மா ரZஜக்னாகும்; வமா ளலமூனா வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
7:160. (மூஸாவின் கூட்டத்தாராகிய) அவர்களை நாம் பன்னிரண்டு பிரிவினர்களாக - கூட்டங்களாகப் பிரித்தோம்; மூஸாவுக்கு, அவருடைய சமூகத்தினர் அவரிடம் அவர்கள் தண்ணீர் கேட்டபோது, "உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!" என்று நாம் 'வஹீ' அறிவித்தோம்; (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பொங்கிவந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம் (நீர்) அருந்தும் ஊற்றை அறிந்துகொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம்; அவர்களுக்கு 'மன்னு ஸல்வா'வையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து, "நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்!" (என்று சொன்னோம்; அவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தார்கள்); அவர்கள் நமக்கு அநியாயம் செய்யவில்லை; எனினும், அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்துகொண்டிருந்தனர்.
7:161 وَاِذْ قِيْلَ لَهُمُ اسْكُنُوْا هٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوْا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُوْلُوْا حِطَّةٌ وَّادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَّـغْفِرْ لَـكُمْ خَطِيْٓــٰٔــتِكُمْ ؕ سَنَزِيْدُ الْمُحْسِنِيْنَ
وَاِذْ சமயம் قِيْلَ கூறப்பட்டது لَهُمُ அவர்களுக்கு اسْكُنُوْا வசித்திருங்கள் هٰذِهِ الْقَرْيَةَ இவ்வூரில் وَكُلُوْا இன்னும் புசியுங்கள் مِنْهَا அதில் حَيْثُ இடத்தில் شِئْتُمْ நாடினீர்கள் وَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் حِطَّةٌ நீங்கட்டும் وَّادْخُلُوا இன்னும் நுழையுங்கள் الْبَابَ வாசலில் سُجَّدًا சிரம் தாழ்த்தியவர்களாக نَّـغْفِرْ மன்னிப்போம் لَـكُمْ உங்களுக்கு خَطِيْٓــٰٔــتِكُمْ ؕ பாவங்களை / உங்கள் سَنَزِيْدُ அதிகப்படுத்துவோம் الْمُحْسِنِيْنَ நல்லறம் புரிவோருக்கு
7:161. வ இத் கீல லஹுமுஸ்குனூ ஹாதிஹில் கர்யத வ குலூ மின்ஹா ஹய்து ஷி'தும் வ கூலூ ஹித்தது(ன்)வ் வத்குலுல் BபாBப ஸுஜ்ஜதன் னக்Fபிர் லகும் கதீ'ஆதிகும்; ஸனZஜீதுல் முஹ்ஸினீன்
7:161. இன்னும், அவர்களை நோக்கி: "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்; இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக்கொள்ளுங்கள்; 'மன்னிப்பு' என்று கூறுங்கள்; (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிப்போம்; நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது-
7:162 فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِىْ قِيْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا يَظْلِمُوْنَ
فَبَدَّلَ மாற்றினர் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநீதியிழைத்தனர் مِنْهُمْ அவர்களில் قَوْلًا ஒரு சொல்லாக غَيْرَ அல்லாத الَّذِىْ எது قِيْلَ கூறப்பட்டது لَهُمْ அவர்களுக்கு فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் இறக்கினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது رِجْزًا ஒரு வேதனையை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து بِمَا كَانُوْا அவர்கள் இருந்ததால் يَظْلِمُوْنَ அநீதியிழைப்பவர்களாக
7:162. FபBபத்தலல் லதீன ளலமூ மின்ஹும் கவ்லன் கய்ரல் லதீ கீல லஹும் Fப அர்ஸல்னா 'அலய்ஹிம் ரிஜ்Zஜன் மினஸ் ஸமா'இ Bபிமா கானூ யள்லிமூன்
7:162. அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்குக் கூறப்படாத (வேறொரு) சொல்லாக (அதை) மாற்றிவிட்டார்கள்; எனவே, அவர்கள் அநியாயம் செய்துகொண்டிருந்ததின் காரணமாக அவர்கள்மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
7:163 وَسْــٴَــلْهُمْ عَنِ الْـقَرْيَةِ الَّتِىْ كَانَتْ حَاضِرَةَ الْبَحْرِۘ اِذْ يَعْدُوْنَ فِى السَّبْتِ اِذْ تَاْتِيْهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَّيَوْمَ لَا يَسْبِتُوْنَ ۙ لَا تَاْتِيْهِمْ ۛۚ كَذٰلِكَ ۛۚ نَبْلُوْهُمْ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
وَسْــٴَــلْهُمْ விசாரிப்பீராக/அவர்களிடம் عَنِ الْـقَرْيَةِ ஊர் பற்றி الَّتِىْ எது كَانَتْ இருந்தது حَاضِرَةَ அருகில் الْبَحْرِۘ கடலுக்கு اِذْ போது يَعْدُوْنَ வரம்பு மீறினார்கள் فِى السَّبْتِ சனிக்கிழமையில் اِذْ போது تَاْتِيْهِمْ வந்தன/அவர்களிடம் حِيْتَانُهُمْ மீன்கள்/அவர்களுடைய يَوْمَ கிழமையில் سَبْتِهِمْ அவர்களின் சனி شُرَّعًا தலைகளை நீட்டியவையாக وَّيَوْمَ நாளில் لَا يَسْبِتُوْنَ ۙ அவர்கள் சனிக்கிழமையில் இல்லாதவர்கள் لَا تَاْتِيْهِمْ ۛۚ அவை வருவதில்லை/அவர்களிடம் كَذٰلِكَ ۛۚ இவ்வாறு نَبْلُوْهُمْ சோதித்தோம்/ அவர்களை بِمَا كَانُوْا அவர்கள் இருந்த காரணத்தால் يَفْسُقُوْنَ பாவம் செய்வார்கள்
7:163. வஸ்'அல்ஹும் 'அனில் கர்யதில் லதீ கானத் ஹாளிரதல் Bபஹ்ரி இத் யஃதூன Fபிஸ் ஸBப்தி இத் த'தீஹிம் ஹீதானுஹும் யவ்ம ஸBப்திஹிம் ஷுர்ர'அ(ன்)வ் வ யவ்ம லா யஸ்Bபிதூன லா த'தீஹிம்; கதாலிக னBப்லூஹும் Bபிமா கானூ யFப்ஸுகூன்
7:163. (நபியே!) கடலோரத்திலிருந்த ஓர் ஊர் (மக்களைப்) பற்றி நீர் அவர்களைக் கேளும்; அவர்கள் சனிக்கிழமையன்று வரம்புமீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால், அவர்களுடைய சனிக்கிழமையன்று நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே மீன்கள் வந்தன; ஆனால், சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) வருவதில்லை; அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.
7:164 وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَاْ ۙ اۨللّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا ؕ قَالُوْا مَعْذِرَةً اِلٰى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ
وَاِذْ போது قَالَتْ கூறியது اُمَّةٌ ஒரு கூட்டம் مِّنْهُمْ அவர்களில் لِمَ ஏன் تَعِظُوْنَ உபதேசிக்கிறீர்கள் قَوْمَاْ ۙ மக்களுக்கு اۨللّٰهُ அல்லாஹ் مُهْلِكُهُمْ அவர்களை அழிப்பவனாக اَوْ அல்லது مُعَذِّبُهُمْ வேதனை செய்பவனாக/அவர்களை عَذَابًا வேதனையால் شَدِيْدًا ؕ கடுமையானது قَالُوْا கூறினர் مَعْذِرَةً புகல் கூறுவதற்காக اِلٰى رَبِّكُمْ உங்கள் இறைவனிடம் وَلَعَلَّهُمْ يَتَّقُوْنَ அவர்கள் அஞ்சுவதற்காக
7:164. வ இத் காலத் உம்மதும் மின்ஹும் லிம த'இளூன கவ் மனில் லாஹு முஹ்லிகுஹும் அவ் மு'அத்திBபுஹும் 'அதாBபன் ஷதீதன் காலூ மஃதிரதன் இலா ரBப்Bபிகும் வ ல'அல்லஹும் யத்தகூன்
7:164. (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்னபோது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ இருக்கிறானோ, அந்தக் கூட்டத்தாருக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு (அந்த நல்லடியார்கள்), "உங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கிவிடுவதற்காகவும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்)" என்று கூறினார்கள்.
7:165 فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَيْنَا الَّذِيْنَ يَنْهَوْنَ عَنِ السُّوْۤءِ وَاَخَذْنَا الَّذِيْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَــِٕيْسٍۭ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ
فَلَمَّا போது نَسُوْا மறந்தனர் مَا எதை ذُكِّرُوْا நினைவூட்டப்பட்டனர், உபதேசிக்கப்பட்டனர் بِهٖۤ அதைக் கொண்டு اَنْجَيْنَا பாதுகாத்தோம் الَّذِيْنَ يَنْهَوْنَ தடுத்தவர்களை عَنِ السُّوْۤءِ தீமையைவிட்டு وَاَخَذْنَا இன்னும் பிடித்தோம் الَّذِيْنَ எவர்களை ظَلَمُوْا அநீதியிழைத்தனர் بِعَذَابٍۭ வேதனையால் بَــِٕيْسٍۭ கடுமையான بِمَا كَانُوْا அவர்கள் இருந்த காரணத்தால் يَفْسُقُوْنَ பாவம் செய்வார்கள்
7:165. Fபலம்மா னஸூ மா துக்கிரூ Bபிஹீ அன்ஜய்னல் லதீன யன்ஹவ்ன 'அனிஸ் ஸூ'இ வ அகத்னல் லதீன ளலமூ Bபி'அதாBபிம் Bப'ஈஸிம் Bபிமா கானூ யFப்ஸுகூன்
7:165. அவர்கள் எது குறித்து உபதேசிக்கப்பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்துவிட்ட போது - தீமையைவிட்டு விலக்கிக்கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்புமீறி அக்கிரமம் செய்துகொண்டிருந்தவர்களை அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொண்டு நாம் பிடித்தோம்.
7:166 فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِـٮِٕیْنَ
فَلَمَّا போது عَتَوْا மீறினர் عَنْ எதைவிட்டு مَّا نُهُوْا தடுக்கப்பட்டனர் عَنْهُ அதை விட்டு قُلْنَا கூறினோம் لَهُمْ அவர்களுக்கு كُوْنُوْا ஆகிவிடுங்கள் قِرَدَةً குரங்குகளாக خٰسِـٮِٕیْنَ அபாக்கியவான்களாக
7:166. Fபலம்மா 'அதவ் 'அம்மா னுஹூ 'அன்ஹு குல்ன லஹும் கூனூ கிரததன் காஸி'ஈன்
7:166. எதனை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தார்களோ அதனை விட்டும் அவர்கள் வரம்பு மீறியபோது, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
7:167 وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ يَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ اِنَّ رَبَّكَ لَسَرِيْعُ الْعِقَابِ ۖۚ وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
وَاِذْ சமயம் تَاَذَّنَ அறிவித்தான் رَبُّكَ உம் இறைவன் لَيَبْعَثَنَّ நிச்சயமாக அனுப்புவான் عَلَيْهِمْ அவர்கள் மீது اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் مَنْ எவர்(கள்) يَّسُوْمُهُمْ சிரமம் தருவார்(கள்)/அவர்களுக்கு سُوْٓءَ கொடிய الْعَذَابِ ؕ வேதனையால் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لَسَرِيْعُ தீவிரமானவன் الْعِقَابِ ۖۚ தண்டிப்பதில் وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளனே رَّحِيْمٌ பெரும் கருணையாளனே
7:167. வ இத் த அத்தன ரBப்Bபுக ல யBப்'அதன்ன்ன 'அலய்ஹிம் இலா யவ்மில் கியாமதி மய் யஸூமுஹும் ஸூ'அல் 'அதாBப்; இன்ன ரBப்Bபக லஸரீ'உல் 'இகாBபி வ இன்னஹூ ல கFபூருர் ரஹீம்
7:167. (நபியே!) உம்முடைய இறைவன் - அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்கக் கூடியவர்களையே அவர்கள் மீது (ஆதிக்கம் செலுத்துமாறு) மறுமை நாள் வரை, திண்ணமாக அவன் அனுப்புவான் என்று அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன்; மேலும், நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
7:168 وَقَطَّعْنٰهُمْ فِى الْاَرْضِ اُمَمًا ۚ مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰ لِكَ وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّيِّاٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
وَقَطَّعْنٰهُمْ இன்னும் பிரித்தோம்/அவர்களை فِى الْاَرْضِ பூமியில் اُمَمًا ۚ (பல) பிரிவுகளாக مِنْهُمُ அவர்களில் الصّٰلِحُوْنَ நல்லவர்கள் وَمِنْهُمْ அவர்களில் دُوْنَ ذٰ لِكَ மற்றவர்கள் وَبَلَوْنٰهُمْ இன்னும் சோதித்தோம்/அவர்களை بِالْحَسَنٰتِ இன்பங்களைக் கொண்டு وَالسَّيِّاٰتِ இன்னும் துன்பங்கள் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ அவர்கள் திரும்புவதற்காக
7:168. வ கத்தஃனாஹும் Fபில் அர்ளி உமமன் மின் ஹுமுஸ் ஸாலிஹூன வ மின் ஹும் தூன தாலிக வ Bபலவ்னாஹும் Bபில் ஹஸனாதி வஸ் ஸய்யி'ஆதி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
7:168. அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராக (சிதறித் திரியுமாறு) பிரித்துவிட்டோம்; அவர்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; அதுவல்லாத (கெட்ட)வர்களும் அவர்களில் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
7:169 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ يَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰى وَيَقُوْلُوْنَ سَيُغْفَرُ لَـنَا ۚ وَاِنْ يَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ يَاْخُذُوْهُ ؕ اَلَمْ يُؤْخَذْ عَلَيْهِمْ مِّيْثَاقُ الْـكِتٰبِ اَنْ لَّا يَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ وَدَرَسُوْا مَا فِيْهِ ؕ وَالدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ
فَخَلَفَ பின்தோன்றினார்(கள்) مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின்னர் خَلْفٌ பின்னோர் وَّرِثُوا வாரிசுகளாக ஆகினர் الْكِتٰبَ வேதத்திற்கு يَاْخُذُوْنَ வாங்குகிறார்கள் عَرَضَ பொருள் هٰذَا இந்த الْاَدْنٰى அற்பமானது وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் سَيُغْفَرُ لَـنَا ۚ மன்னிக்கப்படும்/எங்களுக்கு وَاِنْ يَّاْتِهِمْ இன்னும் வந்தால் / அவர்களுக்கு عَرَضٌ பொருள் مِّثْلُهٗ இது போன்ற يَاْخُذُوْهُ ؕ வாங்குவார்கள்/அதை اَلَمْ يُؤْخَذْ எடுக்கப்படவில்லையா? عَلَيْهِمْ அவர்கள் மீது مِّيْثَاقُ உறுதிமொழி الْـكِتٰبِ வேதத்தின் اَنْ لَّا يَقُوْلُوْا அவர்கள் கூறக்கூடாது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் اِلَّا தவிர الْحَـقَّ உண்மையை وَدَرَسُوْا இன்னும் அவர்கள் படித்தனர் مَا فِيْهِ ؕ எதை/அதில் وَالدَّارُ வீடு الْاٰخِرَةُ மறுமை خَيْرٌ சிறந்தது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு يَتَّقُوْنَ ؕ அஞ்சுகிறார்கள் اَفَلَا تَعْقِلُوْنَ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
7:169. FபகலFப மின் Bபஃதிஹிம் கல்Fபு(ன்)வ் வரிதுல் கிதாBப ய'குதூன 'அரள ஹாதல் அத்னா வ யகூலூன ஸயுக்Fபரு லனா வ இ(ன்)ய் ய'திஹிம் 'அரளுன் மித்லுஹூ ய'குதூஹ்; அலம் யு'கத் 'அலய்ஹிம் மீதாகுல் கிதாBபி அன் லா யகூலூ 'அலல் லாஹி இல்லல் ஹக்க வ தரஸூ மா Fபீஹ்; வத் தாருல் ஆகிர்து கய்ருல் லில் லதீன யத்தகூன்; அFபலா தஃகிலூன்
7:169. அவர்களுக்குப் பின்னால் தீயமக்கள் (அவர்களுக்குப்) பகரமாக வந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்; இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு (அதற்குத் தகுந்தபடி வேதத்தை மாற்றிக் கொண்டார்கள்); 'எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்' என்றும் கூறிக்கொள்கிறார்கள்; இது போன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்துவிட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறொன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப்படவில்லையா? (இன்னும்,) அதிலுள்ளதை (போதனைகளை) அவர்கள் ஓதியும் உள்ளார்கள். (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும்; நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டாமா?
7:170 وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَ بِالْـكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ الْمُصْلِحِيْنَ
وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَ உறுதியாக பிடிப்பவர்கள் بِالْـكِتٰبِ வேதத்தை وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ ؕ தொழுகையை اِنَّا நிச்சயமாக நாம் لَا نُضِيْعُ வீணாக்க மாட்டோம் اَجْرَ கூலியை الْمُصْلِحِيْنَ சீர்திருத்தவாதிகளின்
7:170. வல்லதீன யுமஸ் ஸிகூன Bபில் கிதாBபி வ அகாமுஸ் ஸலாத இன்னா லா னுளீஉ'அஜ்ரல் முஸ்லிஹீன்
7:170. எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ - அத்தகைய சீர்படுத்திக்கொள்வோரின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
7:171 وَاِذْ نَـتَقْنَا الْجَـبَلَ فَوْقَهُمْ كَاَنَّهٗ ظُلَّةٌ وَّظَنُّوْۤا اَنَّهٗ وَاقِعٌ ۢ بِهِمْ ۚ خُذُوْا مَاۤ اٰتَيْنٰكُمْ بِقُوَّةٍ وَّاذْكُرُوْا مَا فِيْهِ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ
وَاِذْ சமயம் نَـتَقْنَا பிடுங்கினோம் الْجَـبَلَ மலையை فَوْقَهُمْ அவர்களுக்கு மேல் كَاَنَّهٗ போன்று/அது ظُلَّةٌ நிழலிடும் மேகம் وَّظَنُّوْۤا இன்னும் எண்ணினர் اَنَّهٗ நிச்சயமாக அது وَاقِعٌ ۢ விழுந்துவிடும் بِهِمْ ۚ அவர்கள் மீது خُذُوْا பிடியுங்கள் مَاۤ اٰتَيْنٰكُمْ எதை/கொடுத்தோம்/உங்களுக்கு بِقُوَّةٍ பலமாக وَّاذْكُرُوْا இன்னும் நினைவு கூருங்கள் مَا எது فِيْهِ அதில் لَعَلَّكُمْ تَتَّقُوْنَ நீங்கள் அஞ்சுவதற்காக
7:171. வ இத் னதக்னல் ஜBபல Fபவ்கஹும் க அன்னஹூ ளுல்லது(ன்)வ் வ ளன்னூ அன்னஹூ வாகி'உன் Bபிஹிம் குதூ மா ஆதய்னாகும் Bபிகுவ்வதி(ன்)வ் வத்குரூ மா Fபீஹி ல'அல்லகும் தத்தகூன்
7:171. நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது, அவர்கள் அது தங்கள்மீது விழுந்துவிடுமோ என்று எண்ணியபோது: (நாம் அவர்களை நோக்கி), "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்; அதிலுள்ளதை நினைவுகூருங்கள்; நீங்கள் (நம்மை) அஞ்சுவோராக ஆகலாம்" (என்று கூறினோம்).
7:172 وَ اِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ ؕ قَالُوْا بَلٰى ۛۚ شَهِدْنَا ۛۚ اَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ ۙ
وَ اِذْ சமயம் اَخَذَ எடுத்தான் رَبُّكَ உம் இறைவன் مِنْۢ بَنِىْۤ اٰدَمَ ஆதமின் சந்ததிகளில் مِنْ ظُهُوْرِهِمْ இருந்து/முதுகுகள்/அவர்களுடைய ذُرِّيَّتَهُمْ அவர்களின் சந்ததிகளை وَ اَشْهَدَهُمْ இன்னும் சாட்சியாக்கினான் / அவர்களை عَلٰٓى மீதே اَنْفُسِهِمْ ۚ அவர்கள் اَلَسْتُ நான் இல்லையா? بِرَبِّكُمْ ؕ உங்கள் இறைவனாக قَالُوْا கூறினர் بَلٰى ۛۚ ஏன் இல்லை شَهِدْنَا ۛۚ நாங்கள் சாட்சி கூறினோம் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறாமல் இருப்பதற்காக يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் عَنْ هٰذَا இதை விட்டு غٰفِلِيْنَ ۙ கவனமற்றவர்களாக
7:172. வ இத் அகத ரBப்Bபுக மின் Bபனீ ஆதம மின் ளுஹூரிஹிம் துர்ரிய்யதஹும் வ அஷ்ஹதஹும் 'அலா அன்Fபுஸிஹிம் அலஸ்து Bபி ரBப்Bபிகும் காலூ Bபலா ஷஹித்னா; அன் தகூலூ யவ்மல் கியாமதி இன்னா குன்னா 'அன் ஹாதா காFபிலீன்
7:172. உம் இறைவன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள், "மெய்தான்; நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை நினைவூட்டுவீராக! "(ஏனெனில், நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து)விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம்" என்று மறுமைநாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருப்பதற்காக-
7:173 اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنْۢ بَعْدِهِمْۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ
اَوْ அல்லது تَقُوْلُوْۤا நீங்கள் கூறாதிருப்பதற்காக اِنَّمَاۤ எல்லாம் اَشْرَكَ இணைவைத்தார்(கள்) اٰبَآؤُنَا எங்கள் மூதாதைகள் مِنْ قَبْلُ முன்னர் وَكُنَّا இருக்கிறோம் ذُرِّيَّةً சந்ததிகளாக مِّنْۢ வந்த بَعْدِهِمْۚ அவர்களுக்கு பின்னர் اَفَتُهْلِكُنَا அழிப்பாயா?/எங்களை بِمَا فَعَلَ செய்ததற்காக الْمُبْطِلُوْنَ பொய்யர்கள்
7:173. அவ் தகூலூ இன்னமா அஷ்ரக ஆBபா 'உனா மின் கBப்லு வ குன்னா துர்ரிய்யதன் மின் Bபஃதிஹிம் 'அ Fப துஹ்லிகுனா Bபி மா Fப'அலல் முBப்திலூன்
7:173. அல்லது, 'இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே! நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?' என்று சொல்லாமலிருப்பதற்காக! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக!)
7:174 وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ
وَكَذٰلِكَ இவ்வாறே نُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை وَلَعَلَّهُمْ يَرْجِعُوْنَ இன்னும் அவர்கள் திரும்புவதற்காக
7:174. வ கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி வ ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
7:174. அவர்கள் (பாவங்களிலிருந்து விடுபட்டு நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
7:175 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ الَّذِىْۤ اٰتَيْنٰهُ اٰيٰتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَاَتْبَعَهُ الشَّيْطٰنُ فَكَانَ مِنَ الْغٰوِيْنَ
وَاتْلُ ஓதிக் காட்டுவீராக عَلَيْهِمْ அவர்கள் மீது نَبَاَ செய்தியை الَّذِىْۤ எவன் اٰتَيْنٰهُ கொடுத்தோம்/அவனுக்கு اٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை فَانْسَلَخَ கழண்டான் مِنْهَا அதிலிருந்து فَاَتْبَعَهُ பின்தொடர்ந்தான்/அவனை الشَّيْطٰنُ ஷைத்தான் فَكَانَ ஆகிவிட்டான் مِنَ الْغٰوِيْنَ வழிகெட்டவர்களில்
7:175. வத்லு 'அலய்ஹிம் னBப அல்லதீ ஆதய்னாஹு ஆயாதினா Fபன்ஸலக மின்ஹா Fப அத்Bப'அ ஹுஷ் ஷய்தானூ Fபகான மினல் காவீன்
7:175. (நபியே!) நீர் அவர்களுக்கு ஒருவனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும், அவன் அவற்றை விட்டு நழுவி விட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான்; அதனால், அவன் வழிதவறியவர்களில் ஒருவனாகிவிட்டான்.
7:176 وَلَوْ شِئْنَا لَرَفَعْنٰهُ بِهَا وَلٰـكِنَّهٗۤ اَخْلَدَ اِلَى الْاَرْضِ وَاتَّبَعَ هَوٰٮهُ ۚ فَمَثَلُهٗ كَمَثَلِ الْـكَلْبِ ۚ اِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ اَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ؕ ذٰ لِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ۚ فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
وَلَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَرَفَعْنٰهُ உயர்த்தியிருப்போம்/அவனை بِهَا அவற்றைக் கொண்டு وَلٰـكِنَّهٗۤ என்றாலும்/நிச்சயமாக அவன் اَخْلَدَ நிரந்தரம் தேடினான் اِلَى الْاَرْضِ பூமியில் وَاتَّبَعَ இன்னும் பின்பற்றினான் هَوٰٮهُ ۚ தன் ஆசையை فَمَثَلُهٗ ஆகவே அவனுடைய உதாரணம் كَمَثَلِ உதாரணத்தைப் போன்று الْـكَلْبِ ۚ நாய் اِنْ تَحْمِلْ நீர் துரத்தினால் عَلَيْهِ அதை يَلْهَثْ அது நாக்கைத் தொங்கவிடும் اَوْ அல்லது تَتْرُكْهُ நீர் விட்டு விட்டால்/அதை يَلْهَثْ ؕ அது நாக்கைத் தொங்கவிடும் ذٰ لِكَ مَثَلُ இது/உதாரணம் الْقَوْمِ மக்கள் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا ۚ நம் வசனங்களை فَاقْصُصِ விவரிப்பீராக الْقَصَصَ சரித்திரத்தை لَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ அவர்கள் சிந்திப்பதற்காக
7:176. வ லவ் ஷி'னா லரFபஃனாஹு Bபிஹா வ லாகின் னஹூ அக்லத இலல் அர்ளி வத்தBப'அ ஹவாஹ்; Fபமதலுஹூ கமதலில் கல்Bபி இன் தஹ்மில் 'அலய்ஹி யல்ஹத் அவ் தத்ருக் ஹு யல்ஹத்; தாலிக மதலுல் கவ்மில் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா; Fபக்ஸுஸில் கஸஸ ல'அல்லஹும் யதFபக்கரூன்
7:176. நாம் நாடியிருந்தால், அவற்றைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; ஆனால், அவன் (இந்த) உலகத்தின் பக்கம் சாய்ந்து தன் மனோ இச்சையைப் பின்பற்றினான்; ஆகவே, அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றதாகும்; அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்கவிடுகிறது; அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிடுகிறது; இதுவே, நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கு உதாரணமாகும்; ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக!
7:177 سَآءَ مَثَلَاْ ۨالْقَوْمُ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا يَظْلِمُوْنَ
سَآءَ கெட்டு விட்டனர் مَثَلَاْ உதாரணமாக ۨالْقَوْمُ மக்கள் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَاَنْفُسَهُمْ தங்களுக்கே كَانُوْا இருந்தனர் يَظْلِمُوْنَ அநீதியிழைக்கிறார்கள்
7:177. ஸா'அ மதலனில் கவ்முல் லதீன கத்தBபூ Bபி ஆயாதினா வ அன்Fபுஸஹும் கானூ யள்லிமூன்
7:177. நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
7:178 مَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِىْۚ وَمَنْ يُّضْلِلْ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
مَنْ எவரை يَّهْدِ நேர்வழி செலுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் فَهُوَ அவர்தான் الْمُهْتَدِىْۚ நேர்வழிபெற்றவர் وَمَنْ இன்னும் எவர்(களை) يُّضْلِلْ வழிகெடுக்கிறான் فَاُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ நஷ்டவாளிகள்
7:178. மய் யஹ்தில் லாஹு Fப ஹுவல் முஹ்ததீ வ மய் யுள்லில் Fப உலா'இக ஹுமுல் காஸிரூன்
7:178. அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்; யாரைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அத்தகையவர்கள்தாம் நஷ்டம் அடைந்தவர்கள்.
7:179 وَلَـقَدْ ذَرَاْنَا لِجَـهَنَّمَ كَثِيْرًا مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ۖ لَهُمْ قُلُوْبٌ لَّا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ اَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ اٰذَانٌ لَّا يَسْمَعُوْنَ بِهَا ؕ اُولٰۤٮِٕكَ كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ ؕ اُولٰۤٮِٕكَ هُمُ الْغٰفِلُوْنَ
وَلَـقَدْ ذَرَاْنَا படைத்து விட்டோம் لِجَـهَنَّمَ நரகத்திற்காக كَثِيْرًا அதிகமானோரை مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ ۖ இன்னும் மனிதர்கள் لَهُمْ அவர்களுக்கு قُلُوْبٌ உள்ளங்கள் لَّا يَفْقَهُوْنَ சிந்தித்து விளங்க மாட்டார்கள் بِهَا அவற்றைக் கொண்டு وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு اَعْيُنٌ கண்கள் لَّا يُبْصِرُوْنَ பார்க்க மாட்டார்கள் بِهَا அவற்றைக் கொண்டு وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு اٰذَانٌ காதுகள் لَّا يَسْمَعُوْنَ செவிசாய்க்க மாட்டார்கள் بِهَا ؕ அவற்றைக் கொண்டு اُولٰۤٮِٕكَ அவர்கள் كَالْاَنْعَامِ கால்நடைகளைப் போன்று بَلْ மாறாக هُمْ அவர்கள் اَضَلُّ ؕ அதிகம் வழிகெட்டவர்(கள்) اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْغٰفِلُوْنَ கவனமற்றவர்கள்
7:179. வ லகத் தர'னா லி ஜஹன்னம கதீரன் மினல் ஜின்னி வல் இன்ஸி லஹும் குலூBபுல் லா யFப்கஹூன Bபிஹா வ லஹும் அஃயுனுல் லா யுBபிஸிரூன Bபிஹா வ லஹும் ஆதானுல் லா யஸ்ம'ஊன Bபிஹா; உலா'இக கல் அன்'ஆமி Bபல் ஹும் அளல்ல்; உலா'இக ஹுமுல் காFபிலூன்
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்க்கமாட்டார்கள்; அவர்களுக்குக் காதுகள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்; இல்லை! அவற்றைவிடவும் வழிகேடர்கள்; இவர்கள்தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
7:180 وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கே الْاَسْمَآءُ பெயர்கள் الْحُسْنٰى மிக அழகிய(வை) فَادْعُوْهُ ஆகவே அழையுங்கள்/அவனை بِهَا அவற்றைக் கொண்டு وَذَرُوا விட்டு விடுங்கள் الَّذِيْنَ எவர்களை يُلْحِدُوْنَ தவறிழைப்பார்கள் فِىْۤ اَسْمَآٮِٕهٖ ؕ அவனுடைய பெயர்களில் سَيُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவார்கள் مَا எதற்கு كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ செய்வார்கள்
7:180. வ லில்லாஹில் அஸ்மா 'உல் ஹுஸ்னா Fபத்'ஊஹு Bபிஹா வ தருல் லதீன யுல்ஹிதூன Fபீ அஸ்மா'இஹ்; ஸ யுஜ்Zஜவ்ன மா கானூ யஃமலூன்
7:180. அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்; அவனுடைய பெயர்களில் திரித்துக் கூறுவோரை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள்; அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
7:181 وَمِمَّنْ خَلَقْنَاۤ اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَـقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ
وَمِمَّنْ எவர்களிலிருந்து خَلَقْنَاۤ படைத்தோம் اُمَّةٌ ஒரு கூட்டம் يَّهْدُوْنَ நேர்வழி காட்டுகின்றனர் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَبِهٖ இன்னும் அதைக்கொண்டே يَعْدِلُوْنَ நீதமாக நடக்கின்றனர்
7:181. வ மிம்மன் கலக்னா உம்மது(ன்)ய் யஹ்தூன Bபில்ஹக்கி வ Bபிஹீ யஃதிலூன்
7:181. நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள்; அவர்கள் சத்தியத்தைக் கொண்டு (மனிதர்களுக்கு) வழிகாட்டுகிறார்கள்; அதைக்கொண்டே அவர்கள் நீதியும் செலுத்துகிறார்கள்.
7:182 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَ ۖ ۚ
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை سَنَسْتَدْرِجُهُمْ விட்டுவிட்டுப் பிடிப்போம்/அவர்களை مِّنْ حَيْثُ விதத்தில் لَا يَعْلَمُوْنَ ۖ ۚ அறியமாட்டார்கள்
7:182. வல்லதீன கத்தBபூ Bபி ஆயாதினா ஸனஸ்தத்ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
7:182. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ, அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியாத வண்ணம் நாம் பிடிப்போம்.
7:183 وَاُمْلِىْ لَهُمْ ؕ اِنَّ كَيْدِىْ مَتِيْنٌ
وَاُمْلِىْ அவகாசமளிப்பேன், பிற்படுத்துவேன் لَهُمْ ؕ அவர்களுக்கு اِنَّ كَيْدِىْ நிச்சயமாக என் சூழ்ச்சி مَتِيْنٌ மிக உறுதியானது
7:183. வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
7:183. (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
7:184 اَوَلَمْ يَتَفَكَّرُوْا ٚ مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍؕ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ
اَوَلَمْ يَتَفَكَّرُوْا ٚ அவர்கள் சிந்திக்கவில்லையா? مَا இல்லை بِصَاحِبِهِمْ அவர்களுடைய தோழருக்கு مِّنْ جِنَّةٍؕ அறவே பைத்தியம் اِنْ இல்லை هُوَ அவர் اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பவர் مُّبِيْنٌ தெளிவானவர்
7:184. அவலம் யதFபக்கரூ மா BபிஸாஹிBபிஹிம் மின் ஜின்னஹ்; இன் ஹுவ இல்லா னதீருன் முBபீன்
7:184. அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை; அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
7:185 اَوَلَمْ يَنْظُرُوْا فِىْ مَلَـكُوْتِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا خَلَقَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۙ وَّاَنْ عَسٰٓى اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَ اَجَلُهُمْ ۚ فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ
اَوَلَمْ يَنْظُرُوْا அவர்கள் கவனிக்கவில்லையா? فِىْ مَلَـكُوْتِ பேராட்சியில் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا خَلَقَ இன்னும் எவற்றைப்படைத்தான் اللّٰهُ அல்லாஹ் مِنْ شَىْءٍ ۙ பொருளிலும் وَّاَنْ என்பதிலும் عَسٰٓى கூடும் اَنْ يَّكُوْنَ قَدِ اقْتَرَبَ நெருங்கி இருக்க اَجَلُهُمْ ۚ அவர்களுடைய தவணை فَبِاَىِّ حَدِيْثٍۢ எந்த செய்தியை? بَعْدَهٗ இதற்குப் பின்னர் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள்
7:185. அவலம் யன்ளுரூ Fபீ மலகூதிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா கலகல் லாஹு மின் ஷய்'இ(ன்)வ் வ அன் 'அஸா அய் யகூன கதிக்தரBப அஜலுஹும் Fப Bபி அய்யி ஹதீதின் Bபஃதஹூ யு'மினூன்
7:185. வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியையும், அல்லாஹ் படைத்திருக்கும் (மற்றப்) பொருட்களையும், அவர்களுடைய (மரண) தவணை திட்டமாக நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? இதற்குப் பின்னர், எந்த விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்கள்?
7:186 مَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِىَ لَهٗ ؕ وَ يَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ
مَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَا அறவே இல்லை هَادِىَ நேர்வழிசெலுத்துபவர் لَهٗ ؕ அவரை وَ يَذَرُ இன்னும் விட்டுவிடுகிறான் هُمْ அவர்களை فِىْ طُغْيَانِهِمْ அவர்களுடைய அட்டூழியத்தில் يَعْمَهُوْنَ கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
7:186. மய் யுள்லில் லில்லாஹி Fபலா ஹாதிய லஹ்; வ யதருஹும் Fபீ துக்யானிஹிம் யஃமஹூன்
7:186. எவரை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ அவனை நேரான வழியில் செலுத்துபவர் எவருமிலர்; அவன், அவர்களை அவர்களது வழிகேட்டிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
7:187 يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّىْ ۚ لَا يُجَلِّيْهَا لِوَقْتِهَاۤ اِلَّا هُوَۘ ؕؔ ثَقُلَتْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ لَا تَاْتِيْكُمْ اِلَّا بَغْتَةً ؕ يَسْــٴَــلُوْنَكَ كَاَنَّكَ حَفِىٌّ عَنْهَا ؕ قُلْ اِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللّٰهِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ السَّاعَةِ நேரத்தைப் பற்றி اَيَّانَ எப்போது مُرْسٰٮهَا ؕ அது நிகழ்வது قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் عِلْمُهَا அதன் அறிவு عِنْدَ இடம்தான் رَبِّىْ ۚ என் இறைவன் لَا மாட்டான் يُجَلِّيْهَا அதை வெளிப்படுத்த لِوَقْتِهَاۤ அதன் நேரத்தில் اِلَّا தவிர هُوَۘ ؕؔ அவனை ثَقُلَتْ கனத்து விட்டது فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِؕ இன்னும் பூமியில் لَا வராது تَاْتِيْكُمْ அது உங்களிடம் اِلَّا தவிர بَغْتَةً ؕ திடீரென்றே يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் كَاَنَّكَ நிச்சயமாக போன்று/நீர் حَفِىٌّ அறிந்தவர் عَنْهَا ؕ அதைப் பற்றி قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் عِلْمُهَا அதன் அறிவு عِنْدَ இடம் اللّٰهِ அல்லாஹ் وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானோர் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ அறியமாட்டார்கள்
7:187. யஸ்'அலூனக 'அனிஸ் ஸா'அதி அய்யான முர்ஸாஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்த ரBப்Bபீ லா யுஜல்லீஹா லிவக்திஹா இல்லா ஹூ; தகுலத் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; லா த'தீகும் இல்லா Bபக்தஹ்; யஸ்'அலூனக க அன்னக ஹFபிய்யுன் 'அன்ஹா குல் இன்னமா 'இல்முஹா 'இன்தல் லாஹி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
7:187. (நபியே!) மறுமைநாளைப்பற்றி - "அதனுடைய வருகை எப்பொழுது?" என்று அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது; அதற்குரிய நேரத்தில் - அவனைத்தவிர வேறு எவரும் அதை வெளிப்படுத்த இயலாது: அது வானங்களிலும் பூமியிலும் பெரும்பளுவான சம்பவமாக நிகழும்; திடீரென்றுதான் அது உங்களிடம் வரும்." அதை முற்றிலும் அறிந்துகொண்டவர் போன்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; (அதற்கு) "அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறியமாட்டார்கள்" என்று கூறுவீராக!
7:188 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ۖ ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
قُلْ கூறுவீராக لَّاۤ اَمْلِكُ நான் உரிமை பெறமாட்டேன் لِنَفْسِىْ எனக்கு نَـفْعًا எந்த ஒரு பலனையும் وَّلَا ضَرًّا எந்த ஒரு கெடுதியையும் اِلَّا தவிர مَا எதை شَآءَ நாடினான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَلَوْ كُنْتُ நான் இருந்திருந்தால் اَعْلَمُ அறிபவனாக الْغَيْبَ மறைவானவற்றை لَاسْتَكْثَرْتُ அதிகம்பெற்றிருப்பேன் مِنَ الْخَيْرِ ۖ ۛۚ நன்மையில் وَمَا مَسَّنِىَ என்னை தீண்டி இருக்காது السُّۤوْءُ ۛۚ தீங்கு اِنْ اَنَا நான் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பவராக وَّبَشِيْرٌ இன்னும் நற்செய்தி கூறுபவராக لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
7:188. குல் லா அம்லிகு லினFப்ஸீ னFப்'அ(ன்)வ் வலா ளர்ரன் இல்லா மா ஷா'அல் லாஹ்; வ லவ் குன்து அஃலமுல் கய்Bப லஸ்தக்தர்து மினல் கய்ரி வமா மஸ்ஸனியஸ் ஸூ'; இன் அன இல்லா னதீரு(ன்)வ் வ Bபஷீருல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
7:188. (நபியே!) நீர் கூறும்: "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்துகொள்ள சக்திபெறமாட்டேன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது; நம்பிக்கை கொள்ளும் கூட்டத்தினருக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை".
7:189 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّـفْسٍ وَّاحِدَةٍ وَّجَعَلَ مِنْهَا زَوْجَهَا لِيَسْكُنَ اِلَيْهَا ۚ فَلَمَّا تَغَشّٰٮهَا حَمَلَتْ حَمْلًا خَفِيْفًا فَمَرَّتْ بِهٖ ۚ فَلَمَّاۤ اَثْقَلَتْ دَّعَوَا اللّٰهَ رَبَّهُمَا لَٮِٕنْ اٰتَيْتَـنَا صَالِحًا لَّـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ
هُوَ அவன் الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ இருந்து نَّـفْسٍ ஒரு மனிதர் وَّاحِدَةٍ ஒரே وَّجَعَلَ இன்னும் உருவாக்கினான் مِنْهَا இன்னும் அவரிலிருந்தே زَوْجَهَا அவருடைய மனைவியை لِيَسْكُنَ அவர் வசிப்பதற்காக, நிம்மதி பெறுவதற்காக اِلَيْهَا ۚ அவளுடன் فَلَمَّا எப்போது تَغَشّٰٮهَا மூடினார்/அவளை حَمَلَتْ கர்ப்பமானாள் حَمْلًا கர்ப்பம் خَفِيْفًا லேசான فَمَرَّتْ நடந்தாள் بِهٖ ۚ அதைக் கொண்டு فَلَمَّاۤ போது اَثْقَلَتْ கனமானாள் دَّعَوَا இருவரும் பிரார்த்தித்தனர் اللّٰهَ அல்லாஹ்விடம் رَبَّهُمَا அவ்விருவரின் இறைவனை لَٮِٕنْ اٰتَيْتَـنَا நீ கொடுத்தால் / எங்களுக்கு صَالِحًا நல்ல குழந்தையை لَّـنَكُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடுவோம் مِنَ الشّٰكِرِيْنَ நன்றிசெலுத்துவோரில்
7:189. ஹுவல் லதீ கலககும் மின் னFப்ஸி(ன்)வ் வாஹிததி(ன்)வ் வ ஜ'அல மின்ஹா Zஜவ்ஜஹா லியஸ் குன இலய்ஹா Fபலம்மா தகஷ் ஷாஹா ஹமலத் ஹம்லன் கFபீFபன் Fபமர்ரத் Bபிஹீ Fபலம்மா அத்கலத் த'அ வல்லாஹ ரBப்Bபஹுமா ல'இன் ஆதய்தன ஸாலிஹல் லனகூனன்ன மினஷ் ஷாகிரீன்
7:189. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; அவரிலிருந்து அவருடைய துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்: அவர் அவளை நெருங்கியபோது, அவள் இலேசான சுமையைச் சுமந்தாள்; பின்பு, அதனுடன் நடமாடிக்கொண்டிருந்தாள்; பின்பு, அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ (சந்ததியில்) நல்லதைக் கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்தனர்.
7:190 فَلَمَّاۤ اٰتٰٮهُمَا صَالِحًـا جَعَلَا لَهٗ شُرَكَآءَ فِيْمَاۤ اٰتٰٮهُمَا ۚ فَتَعٰلَى اللّٰهُ عَمَّا يُشْرِكُوْنَ
فَلَمَّاۤ போது اٰتٰٮهُمَا கொடுத்தான்/அவ்விருவருக்கும் صَالِحًـا நல்ல குழந்தையை جَعَلَا அவ்விருவரும் ஆக்கினர் لَهٗ அவனுக்கு شُرَكَآءَ இணைகளை فِيْمَاۤ எதில் اٰتٰٮهُمَا ۚ கொடுத்தான் / அவ்விருவருக்கு فَتَعٰلَى உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் عَمَّا எவற்றைவிட்டு يُشْرِكُوْنَ இணைவைக்கிறார்கள்
7:190. Fபலம்மா ஆதாஹுமா ஸாலிஹன் ஜ'அலா லஹூ ஷுரகா'அ Fபீமா ஆதாஹுமா; Fபத'ஆலல் லாஹு 'அம்மா யுஷ்ரிகூன்
7:190. அவ்விருவருக்கும் (அவர்கள் விருப்பப்படி குழந்தையை) நல்லதை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணையாளர்களை ஆக்கினார்கள்; இவர்கள் இணைவைப்பதைவிட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
7:191 اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـٴًـــــا وَّهُمْ يُخْلَقُوْنَ ۖ
اَيُشْرِكُوْنَ இணையாக்குகிறார்களா? مَا எவர்களை لَا يَخْلُقُ படைக்கமாட்டார்(கள்) شَيْـٴًـــــا எந்த ஒரு பொருளையும் وَّهُمْ அவர்கள் يُخْلَقُوْنَ ۖ படைக்கப்படுகிறார்கள்
7:191. அ யுஷ்ரிகூன மா லா யக்லுகு ஷய்'அ(ன்)வ் வ ஹும் யுக்லகூன்
7:191. எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
7:192 وَلَا يَسْتَطِيْعُوْنَ لَهُمْ نَـصْرًا وَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ
وَلَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் لَهُمْ இவர்களுக்கு نَـصْرًا உதவி செய்ய وَّلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்
7:192. வ லா யஸ்ததீ'ஊன லஹும் னஸ்ர(ன்)வ் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
7:192. அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்திபெற மாட்டார்கள்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவர்கள்.
7:193 وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَتَّبِعُوْكُمْ ؕ سَوَآءٌ عَلَيْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْـتُمْ صٰمِتُوْنَ
وَاِنْ تَدْعُوْ நீங்கள் அழைத்தால் هُمْ அவர்களை اِلَى الْهُدٰى நேர்வழிக்கு لَا يَتَّبِعُوْ பின்பற்ற மாட்டார்கள் كُمْ ؕ உங்களை سَوَآءٌ சமம்தான் عَلَيْكُمْ உங்களுக்கு اَدَعَوْتُمُوْ நீங்கள் அழைத்தாலும் هُمْ அவர்களை اَمْ அல்லது اَنْـتُمْ நீங்கள் صٰمِتُوْنَ வாய்மூடியவர்களாக
7:193. வ இன் தத்'ஊஹும் இலல்ஹுதா லா யத்தBபி'ஊகும்; ஸவா'உன் 'அலய்கும் அ-த'அவ்துமூஹும் 'அம் அன்தும் ஸாமிதூன்
7:193. நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்றமாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய் மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
7:194 اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ عِبَادٌ اَمْثَالُـكُمْ فَادْعُوْهُمْ فَلْيَسْتَجِيْبُوْا لَـكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் تَدْعُوْنَ பிரார்த்திக்கிறீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி عِبَادٌ அடிமைகள் اَمْثَالُـكُمْ உங்களைப் போன்ற فَادْعُوْ பிரார்த்தியுங்கள் هُمْ அவர்களிடம் فَلْيَسْتَجِيْبُوْا அவர்கள் பதிலளிக்கட்டும் لَـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
7:194. இன்னல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி 'இBபாதுன் அம்தாலுகும் Fபத்'ஊஹும் Fபல் யஸ்தஜீBபூ லகும் இன் குன்தும் ஸாதிகீன்
7:194. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்குப் பதில் அளிக்கட்டும்!
7:195 اَلَهُمْ اَرْجُلٌ يَّمْشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَيْدٍ يَّبْطِشُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اَعْيُنٌ يُّبْصِرُوْنَ بِهَآ اَمْ لَهُمْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا ؕ قُلِ ادْعُوْا شُرَكَآءَكُمْ ثُمَّ كِيْدُوْنِ فَلَا تُنْظِرُوْنِ
اَلَهُمْ ?/அவர்களுக்கு اَرْجُلٌ கால்கள் يَّمْشُوْنَ நடப்பார்கள் بِهَآ அவற்றைக் கொண்டு اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு اَيْدٍ கைகள் يَّبْطِشُوْنَ பிடிப்பார்கள் بِهَآ அவற்றைக் கொண்டு اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு اَعْيُنٌ கண்கள் يُّبْصِرُوْنَ பார்ப்பார்கள் بِهَآ அவற்றைக் கொண்டு اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு اٰذَانٌ காதுகள் يَّسْمَعُوْنَ கேட்பார்கள் بِهَا ؕ அவற்றைக் கொண்டு قُلِ கூறுவீராக ادْعُوْا பிரார்த்தியுங்கள் شُرَكَآءَ தெய்வங்களிடம் كُمْ உங்கள் ثُمَّ பிறகு كِيْدُوْنِ எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள் فَلَا அளிக்காதீர்கள் تُنْظِرُوْنِ எனக்கு அவகாசம்
7:195. அ லஹும் அர்ஜுலு(ன்)ய் யம்ஷூன Bபிஹா 'அம் லஹும் 'அய்தி(ன்)ய் யBப்திஷூன Bபிஹா 'அம் லஹும் அஃயுனுய் யுBப்ஸிரூன Bபிஹா 'அம் லஹும் ஆதானு(ன்)ய் யஸ்ம'ஊன Bபிஹா; குலித்'ஊ ஷுரகா'அகும் தும்ம கீதூனி Fபலா துன்ளிரூன்
7:195. அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக்கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக்கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் உங்கள் தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்யுங்கள்; (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று.
7:196 اِنَّ وَلِىَِّۧ اللّٰهُ الَّذِىْ نَزَّلَ الْـكِتٰبَ ۖ وَهُوَ يَتَوَلَّى الصّٰلِحِيْنَ
اِنَّ وَلِىَِّۧ நிச்சயமாக என் பாதுகாவலன், என் பொறுப்பாளன் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எவன் نَزَّلَ இறக்கினான் الْـكِتٰبَ ۖ வேதத்தை وَهُوَ அவன் يَتَوَلَّى பொறுப்பேற்கிறான் الصّٰلِحِيْنَ நல்லவர்களுக்கு
7:196. இன்ன வலிய்யிஅல் லாஹுல் லதீ னZஜ்Zஜலல் கிதாBப வ ஹுவ யதவல்லஸ் ஸாலிஹீன்
7:196. நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே; அவனே வேதத்தை இறக்கிவைத்தான்; அவனே நல்லவர்களைப் பாதுகாக்கிறான்.
7:197 وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَطِيْعُوْنَ نَـصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ
وَالَّذِيْنَ எவர்களிடம் تَدْعُوْنَ பிரார்த்திக்கிறீர்கள் مِنْ دُوْنِهٖ அவனையன்றி لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் نَـصْرَكُمْ உங்களுக்கு உதவி செய்ய وَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ இன்னும் தங்களுக்கு உதவிக்கொள்ள மாட்டார்கள்
7:197. வல்லதீன தத்'ஊன மின் தூனிஹீ லா யஸ்ததீ'ஊன னஸ்ரகும் வ லா அன்Fபுஸஹும் யன்ஸுரூன்
7:197. அவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய சக்தி பெற மாட்டார்கள்; இன்னும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்.
7:198 وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَسْمَعُوْا ؕ وَتَرٰٮهُمْ يَنْظُرُوْنَ اِلَيْكَ وَهُمْ لَا يُبْصِرُوْنَ
وَاِنْ تَدْعُوْ நீர் அழைத்தால் هُمْ அவர்களை اِلَى الْهُدٰى நேர்வழிக்கு لَا يَسْمَعُوْا ؕ செவியுறமாட்டார்கள் وَتَرٰٮهُمْ நீர் காண்கிறீர்/அவர்களை يَنْظُرُوْنَ அவர்கள் பார்ப்பவர்களாக اِلَيْكَ உம்மை وَهُمْ அவர்களோ لَا يُبْصِرُوْنَ பார்க்க மாட்டார்கள்
7:198. வ இன் தத்'ஊஹும் இலல் ஹுதா லா யஸ்ம'ஊ வ தராஹும் யன்ளுரூன இலய்க வ ஹும் லா யுBப்ஸிரூன்
7:198. நீங்கள் அவர்களை நேர்வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள்; (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பதுபோல் உமக்குத் தோன்றும்; ஆனால், அவர்கள் (உம்மைப்) பார்ப்பதில்லை.
7:199 خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ
خُذِ பற்றிப் பிடிப்பீராக الْعَفْوَ மன்னிப்பை وَاْمُرْ இன்னும் ஏவுவீராக بِالْعُرْفِ நன்மையைக்கொண்டு وَاَعْرِضْ இன்னும் புறக்கணிப்பீராக عَنِ الْجٰهِلِيْنَ அறியாதவர்களை
7:199. குதில் 'அFப்வ வ முர் Bபில்'உர்Fபி வ அஃரிள் 'அனில் ஜாஹிலீன்
7:199. எனினும், (நபியே!) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! நன்மையை(க் கடைப்பிடிக்குமாறு மக்களை) ஏவுவீராக! மேலும், அறிவீனர்களைப் புறக்கணித்துவிடும்.
7:200 وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِؕ اِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ
وَاِمَّا يَنْزَغَـنَّكَ குழப்பினால் / உம்மை مِنَ الشَّيْطٰنِ ஷைத்தானிடமிருந்து نَزْغٌ ஒரு குழப்பம் فَاسْتَعِذْ பாதுகாப்புக் கோருவீராக بِاللّٰهِؕ அல்லாஹ்விடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ நன்கறிந்தவன்
7:200. வ இம்மா யன்Zஜகன்னக மினஷ் ஷய்தானி னZஜ்குன் Fபஸ்த'இத் Bபில்லாஹ்; இன்னஹூ ஸமீ'உன் அலீம்
7:200. ஷைத்தானிலிருந்து ஏதேனும் தீண்டுதல் உமக்குத் திண்ணமாக ஏற்படுமானால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
7:201 اِنَّ الَّذِيْنَ اتَّقَوْا اِذَا مَسَّهُمْ طٰۤٮِٕفٌ مِّنَ الشَّيْطٰنِ تَذَكَّرُوْا فَاِذَا هُمْ مُّبْصِرُوْنَۚ
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் اتَّقَوْا அஞ்சினார்கள் اِذَا போது مَسَّهُمْ அவர்களுக்கு ஏற்பட்ட طٰۤٮِٕفٌ ஓர் எண்ணம் مِّنَ இருந்து الشَّيْطٰنِ ஷைத்தான் تَذَكَّرُوْا நினைவுகூருகிறார்கள் فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مُّبْصِرُوْنَۚ பார்த்துக் கொள்கிறார்கள்
7:201. இன்னல் லதீனத் தகவ் இதா மஸ்ஸஹும் தா'இFபுன் மினஷ் ஷய்தானி ததக்கரூ Fப இதா ஹும் முBப்ஸிரூன்
7:201. நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து (தவறான) எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அவர்கள் திடீரென விழிப்படைந்து கொள்வார்கள்.
7:202 وَاِخْوَانُهُمْ يَمُدُّوْنَهُمْ فِى الْغَىِّ ثُمَّ لَا يُقْصِرُوْنَ
وَاِخْوَانُهُمْ அவர்களுடைய சகோதரர்கள் يَمُدُّوْنَهُمْ அதிகப்படுத்துகிறார்கள்/அவர்களை فِى الْغَىِّ வழிகேட்டில் ثُمَّ பிறகு لَا يُقْصِرُوْنَ அவர்கள் குறைவு செய்வதில்லை
7:202. வ இக்வானுஹும் யமுத்தூனஹும் Fபில் கய்யி தும்ம லா யுக்ஸிரூன்
7:202. ஆனால், (ஷைத்தான்களாகிய) அவர்களின் சகோதரர்களோ அவர்களை வழிகேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள்; பின்னர், அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறைவும் செய்யமாட்டார்கள்.
7:203 وَاِذَا لَمْ تَاْتِهِمْ بِاٰيَةٍ قَالُوْا لَوْلَا اجْتَبَيْتَهَا ؕ قُلْ اِنَّمَاۤ اَتَّبِعُ مَا يُوْحٰٓى اِلَىَّ مِنْ رَّبِّىْ ۚ هٰذَا بَصَآٮِٕرُ مِنْ رَّبِّكُمْ وَهُدًى وَّ رَحْمَةٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ
وَاِذَا لَمْ تَاْتِهِمْ நீர் வரவில்லையென்றால்/அவர்களிடம் بِاٰيَةٍ ஒரு வசனத்தைக் கொண்டு قَالُوْا கூறுகின்றனர் لَوْلَا اجْتَبَيْتَهَا ؕ நீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா? قُلْ கூறுவீராக اِنَّمَاۤ اَتَّبِعُ நான் பின்பற்றுவதெல்லாம் مَا எதை يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ எனக்கு مِنْ رَّبِّىْ ۚ என் இறைவனிடமிருந்து هٰذَا இவை بَصَآٮِٕرُ தெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள் مِنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَهُدًى இன்னும் நேர்வழி وَّ رَحْمَةٌ இன்னும் கருணை لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள்
7:203. வ இதா லம் த'திஹிம் Bபி ஆயதின் காலூ லவ் லஜ்தBபய் தஹா; குல் இன்னமா அத்தBபி'உ மா யூஹா இலய்ய மிர் ரBப்Bபீ; ஹாதா Bபஸா'இரு மிர் ரBப்Bபிகும் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதுல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
7:203. நீர் (அவர்கள் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவராவிட்டால், "நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டுவரவில்லை?" என்று கேட்பார்கள்; நீர் கூறும்: "நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவார்ந்த ஆதாரங்களாகவும், நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது - நம்பிக்கைகொண்ட சமூகத்தினருக்கு."
7:204 وَاِذَا قُرِئَ الْقُرْاٰنُ فَاسْتَمِعُوْا لَهٗ وَاَنْصِتُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
وَاِذَا قُرِئَ ஓதப்பட்டால் الْقُرْاٰنُ குர்ஆன் فَاسْتَمِعُوْا செவி தாழ்த்துங்கள் لَهٗ அதற்கு وَاَنْصِتُوْا இன்னும் வாய்மூடுங்கள் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
7:204. வ இதா குரி'அல் குர்'ஆனு Fபஸ்தமி'ஊ லஹூ வ அன்ஸிதூ ல 'அல்லகும் துர்ஹமூன்
7:204. குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள்; (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
7:205 وَاذْكُرْ رَّبَّكَ فِىْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ
وَاذْكُرْ நினைவு கூருவீராக رَّبَّكَ உம் இறைவனை فِىْ نَفْسِكَ உம் மனதில் تَضَرُّعًا பணிந்து وَّخِيْفَةً இன்னும் பயந்து وَّدُوْنَ இன்றி الْجَـهْرِ சப்தம் مِنَ الْقَوْلِ சொல்லில் بِالْغُدُوِّ காலையில் وَالْاٰصَالِ இன்னும் மாலையில் وَلَا تَكُنْ ஆகிவிடாதீர் مِّنَ الْغٰفِلِيْنَ கவனமற்றவர்களில்
7:205. வத்குர் ரBப்Bபக Fபீ னFப்ஸிக தளர்ரு'அ(ன்)வ் வ கீFபத(ன்)வ் வ தூனல் ஜஹ்ரி மினல் கவ்லி Bபில்குதுவ்வி வல் ஆஸலி வலா தகும் மினல் காFபிலீன்
7:205. (நபியே!) நீர் உம் மனத்திற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும், சொல்லில் உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நீர் நினைவுகூர்வீராக! (அவனை) மறந்துவிட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
7:206 اِنَّ الَّذِيْنَ عِنْدَ رَبِّكَ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَيُسَبِّحُوْنَهٗ وَلَهٗ يَسْجُدُوْنَ۩
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் عِنْدَ இடம் رَبِّكَ உம் இறைவன் لَا يَسْتَكْبِرُوْنَ பெருமையடிக்க மாட்டார்கள் عَنْ عِبَادَتِهٖ அவனை வணங்குவதைவிட்டு وَيُسَبِّحُوْنَهٗ இன்னும் துதிப்பார்கள்/அவனை وَلَهٗ அவனுக்கே يَسْجُدُوْنَ۩ சிரம் பணிவார்கள்
7:206. இன்னல் லதீன 'இன்த ரBப்Bபிக லா யஸ்தக்Bபிரூன 'அன் 'இBபாததிஹீ வ யுஸBப்Bபிஹூனஹூ வ லஹூ யஸ்ஜுதூன்
7:206. நிச்சயமாக எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ, அவர்கள் அவனை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கமாட்டார்கள்; மேலும், அவனைத் துதித்துக் கொண்டும், அவனுக்கு 'ஸஜ்தா' செய்துகொண்டும் இருக்கின்றனர்.