35. ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)
மக்கீ, வசனங்கள்: 45

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
35:1
35:1 اَ لْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓٮِٕكَةِ رُسُلًا اُولِىْۤ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ ؕ يَزِيْدُ فِى الْخَـلْقِ مَا يَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اَ لْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே فَاطِرِ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضِ பூமியையும் جَاعِلِ ஆக்கக்கூடியவன் الْمَلٰٓٮِٕكَةِ வானவர்களை رُسُلًا தூதர்களாகவும் اُولِىْۤ اَجْنِحَةٍ இறக்கைகளை உடையவர்களாகவும் مَّثْنٰى இரண்டு இரண்டு وَثُلٰثَ இன்னும் மூன்று மூன்று وَرُبٰعَ ؕ இன்னும் நான்கு நான்கு يَزِيْدُ அதிகப்படுத்துவான் فِى الْخَـلْقِ படைப்புகளில் مَا يَشَآءُ ؕ தான் நாடுவதை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
35:1. அல்ஹம்துலில்லாஹி Fபாதிரிஸ் ஸமாவாதி வல் அர்ளி ஜா'இலில் மலா'இகதி ருஸுலன் உலீ அஜ்னிஹதிம் மத்னா வ துலாத வ ருBபா'; யZஜீது Fபில் கல்கி மா யஷா'; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
35:1. அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
35:2
35:2 مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ وَمَا يُمْسِكْ ۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْۢ بَعْدِه ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
مَا எதை(யும்) يَفْتَحِ திறந்தால் اللّٰهُ அல்லாஹ் لِلنَّاسِ மக்களுக்கு مِنْ இருந்து رَّحْمَةٍ அருள்(கள்) فَلَا مُمْسِكَ لَهَا ۚ தடுப்பவர் எவரும் இல்லை/அதை وَمَا يُمْسِكْ ۙ எதை/அவன் தடுத்து நிறுத்திவிட்டால் فَلَا مُرْسِلَ விடுபவர் எவரும் இல்லை لَهٗ அதை مِنْۢ بَعْدِه ؕ அவனுக்குப் பின் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
35:2. மா யFப்தஹில் லாஹு லின்னாஸி மிர் ரஹ்மதின் Fபலா மும்ஸிக லஹா வமா யும்ஸிக் Fபலா முர்ஸில லஹூ மிம்Bபஃதிஹி; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
35:2. மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
35:3
35:3 يٰۤاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْؕ هَلْ مِنْ خَالِـقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۖ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتَ அருட்கொடையை اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْكُمْؕ உங்கள் மீதுள்ள هَلْ مِنْ خَالِـقٍ ?/படைப்பாளன் யாரும் غَيْرُ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி يَرْزُقُكُمْ உணவளிக்கின்றான்/உங்களுக்கு مِّنَ السَّمَآءِ வானங்களில்இருந்தும் وَالْاَرْضِؕ பூமியில் இருந்தும் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَۖ அவனை فَاَنّٰى ஆகவே எப்படி تُؤْفَكُوْنَ‏ திருப்பப்படுகிறீர்கள்
35:3. யா அய்யுஹன் னாஸுத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும்; ஹல் மின் காலிகின் கய்ருல் லாஹி யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா து'Fபகூன்
35:3. மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
35:4
35:4 وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
وَاِنْ يُّكَذِّبُوْكَ அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقَدْ திட்டமாக كُذِّبَتْ பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர் رُسُلٌ பல தூதர்கள் مِّنْ قَبْلِكَؕ உமக்கு முன்னரும் وَاِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ எல்லாக் காரியங்களும்
35:4. வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் குத்திBபத் ருஸுலும் மின் கBப்லிக்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
35:4. இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
35:5
35:5 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاوَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மக்களே! اِنَّ நிச்சயமாக وَعْدَ வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மையானதே! فَلَا تَغُرَّنَّكُمُ ஆகவே, உங்களை மயக்கிவிட வேண்டாம் الْحَيٰوةُ الدُّنْيَا உலக வாழ்க்கை وَلَا يَغُرَّنَّكُمْ இன்னும் உங்களை மயக்கிவிட வேண்டாம் بِاللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் الْغَرُوْرُ‏ ஏமாற்றக் கூடியவன்
35:5. யா அய்யுஹன் னாஸு இன்ன வஃதல் லாஹி ஹக்குன் Fபலா தகுர்ரன்னகுமுல் ஹயாதுத் துன்யா; வலா யகுர்ரன் னகும் Bபில்லாஹில் கரூர்
35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
35:6
35:6 اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا ؕ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ‏
اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரி فَاتَّخِذُوْهُ ஆகவே, அவனை எடுத்துக்கொள்ளுங்கள்! عَدُوًّا ؕ எதிரியாகவே اِنَّمَا يَدْعُوْا அவன் அழைப்பதெல்லாம் حِزْبَهٗ தனது கூட்டத்தார்களை لِيَكُوْنُوْا அவர்கள் ஆகுவதற்காகத்தான் مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ‏ கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக
35:6. இன்னஷ் ஷய்தான லகும் 'அதுவ்வுன் Fபத்தகிதூஹு 'அதுவ்வா; இன்னமா யத்'ஊ ஹிZஜ்Bபஹூ லியகூனூ மின் அஷாBபிஸ் ஸ'ஈர்
35:6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
35:7
35:7 اَ لَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ؕ وَّالَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ
اَ لَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்களோ لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை شَدِيْدٌ ؕ கடுமையான وَّالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوْا இன்னும் செய்தார்களோ الصّٰلِحٰتِ நன்மைகளை لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّغْفِرَةٌ மன்னிப்பும் وَّاَجْرٌ كَبِيْرٌ‏ பெரிய கூலியும்
35:7. அல்லதீன கFபரூ லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
35:7. எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.  
35:8
35:8 اَفَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ‌ۖ  فَلَا تَذْهَبْ نَـفْسُكَ عَلَيْهِمْ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏
اَفَمَنْ ?/எவர் ஒருவர் زُيِّنَ அலங்கரிக்கப்பட்டது لَهٗ அவருக்கு سُوْٓءُ கெட்ட(து) عَمَلِهٖ தனது செயல் فَرَاٰهُ கருதினார்/அதை حَسَنًا ؕ அழகாக فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُضِلُّ வழிகெடுக்கின்றான் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவரை وَيَهْدِىْ இன்னும் நேர்வழிபடுத்துகின்றான் مَنْ يَّشَآءُ ۖ  தான் நாடுகின்றவரை فَلَا تَذْهَبْ ஆகவே போய்விடவேண்டாம் نَـفْسُكَ உமது உயிர் عَلَيْهِمْ அவர்கள் மீது حَسَرٰتٍ ؕ கவலைகளால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِمَا يَصْنَـعُوْنَ‏ அவர்கள் செய்வதை
35:8. அFபமன் Zஜுய்யின லஹூ ஸூ'உ 'அமலிஹீ Fபர ஆஹு ஹஸனா; Fப இன்னல் லாஹ யுளில்லு மய் யஷா'உ வ யஹ்தீ மய் யஷா'உ Fபலா தத்ஹBப் னFப்ஸுக 'அலய்ஹிம் ஹஸராத்; இன்னல் லாஹ 'அலீமுன் Bபிமா யஸ்ன'ஊன்
35:8. எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
35:9
35:9 وَاللّٰهُ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰى بَلَدٍ مَّيِّتٍ فَاَحْيَيْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ كَذٰلِكَ النُّشُوْرُ‏
وَاللّٰهُ الَّذِىْۤ அல்லாஹ்தான் اَرْسَلَ அனுப்புகின்றான் الرِّيٰحَ காற்றுகளை فَتُثِيْرُ அவை கிளப்புகின்றன سَحَابًا மேகத்தை فَسُقْنٰهُ அதை ஓட்டி வருகிறோம் اِلٰى بَلَدٍ ஊருக்கு مَّيِّتٍ வறண்டுபோன فَاَحْيَيْنَا நாம் உயிர்ப்பிக்கின்றோம் بِهِ அதன்மூலம் الْاَرْضَ அந்த பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا ؕ அது வறண்டதற்கு كَذٰلِكَ இப்படித்தான் النُّشُوْرُ‏ எழுப்பப்படுவது(ம்)
35:9. வல்லாஹுல் லதீ அர்ஸலர் ரியாஹ Fபதுதீரு ஸ ஹாBபன் Fபஸுக்னாஹு இலா Bபலதிம் மய்யிதின் Fப அஹ்யய்னா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா; கதாலிகன் னுஷூர்
35:9. மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
35:10
35:10 مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ؕ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ؕ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ‏
مَنْ யார் كَانَ இருப்பாரோ يُرِيْدُ நாடுகின்றவராக الْعِزَّةَ கண்ணியத்தை فَلِلّٰهِ அல்லாஹ்விற்குத்தான் الْعِزَّةُ கண்ணியம் جَمِيْعًا ؕ அனைத்தும் اِلَيْهِ அவன் பக்கம் தான் يَصْعَدُ உயர்கின்றன الْـكَلِمُ சொற்கள் الطَّيِّبُ நல்ல وَالْعَمَلُ இன்னும் செயல் الصَّالِحُ நல்ல(து) يَرْفَعُهٗ ؕ அதை உயர்த்துகிறது وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ சூழ்ச்சி செய்பவர்கள் السَّيِّاٰتِ தீமைகளுக்கு لَهُمْ அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை شَدِيْدٌ  ؕ கடுமையான(து) وَمَكْرُ சூழ்ச்சி اُولٰٓٮِٕكَ அவர்களின் هُوَ அது يَبُوْرُ‏ அழிந்துபோய்விடும்
35:10. மன் கான யுரீதுல் 'இZஜ்Zஜத Fபலில்லாஹில் 'இZஜ்Zஜது ஜமீ'ஆ; இலய்ஹி யஸ்'அதுல் கலிமுத் தய்யிBபு வல்'அமலுஸ் ஸாலிஹு யர்Fப'உஹ்; வல்லதீன யம்குரூனஸ் ஸய்யிஆதி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வ மக்ரு உலா'இக ஹுவ யBபூர்
35:10. எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
35:11
35:11 وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَـكُمْ اَزْوَاجًا ؕ وَمَا تَحْمِلُ مِنْ اُنْثٰى وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهؕ وَمَا يُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا يُنْقَصُ مِنْ عُمُرِهٖۤ اِلَّا فِىْ كِتٰبٍؕ اِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏
وَاللّٰهُ அல்லாஹ்தான் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ تُرَابٍ மண்ணிலிருந்து ثُمَّ பிறகு مِنْ نُّطْفَةٍ இந்திரியத்திலிருந்து ثُمَّ பிறகு جَعَلَـكُمْ உங்களைஆக்கினான் اَزْوَاجًا ؕ ஜோடிகளாக وَمَا تَحْمِلُ கர்ப்பமாவதும் இல்லை مِنْ اُنْثٰى ஒரு பெண் وَلَا تَضَعُ கர்ப்பம் தரிப்பதும் இல்லை اِلَّا بِعِلْمِهؕ அவன் அறிந்தே தவிர وَمَا يُعَمَّرُ வயது கொடுக்கப்படுவதில்லை مِنْ مُّعَمَّرٍ நீண்ட வயது கொடுக்கப்பட்டவர் எவரும் وَّلَا يُنْقَصُ இன்னும் குறைக்கப்படுவதில்லை مِنْ عُمُرِهٖۤ அவருடைய வயதில் اِلَّا தவிர فِىْ كِتٰبٍؕ பதிவுப் புத்தகத்தில் اِنَّ நிச்சயமாக ذٰلِكَ இது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرٌ‏ மிக எளிதானதே
35:11. வல்லாஹு கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம ஜ'அலகும் அZஜ்வாஜா; வமா தஹ்மிலு மின் உன்தா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வமா யு'அம்மரு மிம் மு'அம்மரி(ன்)வ் வலா யுன்கஸு மின் 'உமுரிஹீ இல்லா Fபீ கிதாBப்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
35:11. அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
35:12
35:12 وَمَا يَسْتَوِىْ الْبَحْرٰنِ ‌ۖ  هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآٮِٕغٌ شَرَابُهٗ وَ هٰذَا مِلْحٌ اُجَاجٌ ؕ وَمِنْ كُلٍّ تَاْكُلُوْنَ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْيَةً تَلْبَسُوْنَهَا ۚ وَتَرَى الْـفُلْكَ فِيْهِ مَوَاخِرَ لِتَبْـتَـغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّـكُمْ تَشْكُرُوْنَ‏
وَمَا يَسْتَوِىْ சமமாகாது الْبَحْرٰنِ இரண்டு கடல்களும் ۖ  هٰذَا இது عَذْبٌ சுவையான(து) فُرَاتٌ மதுரமான(து) سَآٮِٕغٌ இலகுவான(து) شَرَابُهٗ அதை குடிப்பது وَ هٰذَا இதுவோ مِلْحٌ மிகவும் கசப்பான(து) اُجَاجٌ ؕ உவர்ப்பான(து) وَمِنْ كُلٍّ எல்லாவற்றிலிருந்தும் تَاْكُلُوْنَ சாப்பிடுகிறீர்கள் لَحْمًا கறியை طَرِيًّا பசுமையான وَّتَسْتَخْرِجُوْنَ இன்னும் உற்பத்தி செய்துகொள்கிறீர்கள் حِلْيَةً ஆபரணங்களை تَلْبَسُوْنَهَا அணிகிறீர்கள் وَتَرَى பார்க்கின்றீர் الْـفُلْكَ கப்பல்களை فِيْهِ அவற்றில் مَوَاخِرَ கிழித்து செல்லக்கூடியதாக لِتَبْـتَـغُوْا நீங்கள் தேடுவதற்காக(வும்) مِنْ فَضْلِهٖ அவனது அருள்களிலிருந்து وَلَعَلَّـكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
35:12. வமா யஸ்தவில் Bபஹ்ரானி ஹாத 'அத்Bபுன் Fபுராதுன் ஸா'இகுன் ஷராBபுஹூ வ ஹாதா மில்ஹுன் உஜாஜ்; வ மின் குல்லின் த'குலூன லஹ்மன் தரிய்ய(ன்)வ் வ தஸ்தக்ரிஜூன ஹில்யதன் தல்Bபஸூனஹா வ தரல் Fபுல்க Fபீஹி மவாகிர லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
35:12. இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
35:13
35:13 يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ‌ۖ  كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ ؕ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍؕ‏
يُوْلِجُ நுழைக்கின்றான் الَّيْلَ இரவை فِى النَّهَارِ பகலில் وَيُوْلِجُ இன்னும் நுழைக்கின்றான் النَّهَارَ பகலை فِى الَّيْلِ ۙ இரவில் وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் الشَّمْسَ சூரியனையும் وَالْقَمَرَ ۖ  சந்திரனையும் كُلٌّ எல்லாம் يَّجْرِىْ ஓடுகின்றன لِاَجَلٍ தவணையை நோக்கி مُّسَمًّى ؕ குறிப்பிட்ட ذٰ لِكُمُ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் رَبُّكُمْ உங்கள் இறைவனாகிய لَـهُ அவனுக்கே உரியது الْمُلْكُ ؕ ஆட்சி அனைத்தும் وَالَّذِيْنَ تَدْعُوْنَ நீங்கள் அழைப்பவர்கள் مِنْ دُوْنِهٖ அவனையன்றி مَا يَمْلِكُوْنَ உரிமை பெற மாட்டார்கள் مِنْ قِطْمِيْرٍؕ‏ ஒரு தொலிக்குக் கூட
35:13. யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்லி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல் கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் லஹுல் முல்க்; வல்லதீன தத்'ஊன மின் தூனிஹீ மா யம்லிகூன மின் கித்மீர்
35:13. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
35:14
35:14 اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ ؕ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ
اِنْ تَدْعُوْ நீங்கள்அழைத்தாலும் هُمْ அவர்களை لَا يَسْمَعُوْا அவர்கள் செவிமடுக்க மாட்டார்கள் دُعَآءَكُمْ‌ ۚ உங்கள் அழைப்பை وَلَوْ سَمِعُوْا அவர்கள் செவிமடுத்தாலும் مَا اسْتَجَابُوْا பதில் தர மாட்டார்கள் لَـكُمْ ؕ உங்களுக்கு وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் يَكْفُرُوْنَ மறுத்து விடுவார்கள் بِشِرْكِكُمْ ؕ நீங்கள் இணைவைத்ததை وَلَا يُـنَـبِّـئُكَ உமக்கு அறிவிக்க முடியாது مِثْلُ போன்று خَبِيْرٍ‏ ஆழ்ந்தறிபவன்
35:14. இன் தத்'ஊஹும் லா யஸ்ம'ஊ து'ஆ'அகும் வ லவ் ஸமி'ஊ மஸ் தஜாBபூ லகும்; வ யவ்மல் கியாமதி யக்Fபுரூன Bபிஷிர்கிகும்; வலா யுனBப்Bபி'உக மித்லு கBபீர்
35:14. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.  
35:15
35:15 يٰۤاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَى اللّٰهِۚ وَاللّٰهُ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே! اَنْتُمُ நீங்கள்தான் الْفُقَرَآءُ தேவையுள்ளவர்கள் اِلَى اللّٰهِۚ அல்லாஹ்வின் பக்கம் وَاللّٰهُ அல்லாஹ் هُوَ அவன்தான் الْغَنِىُّ முற்றிலும் நிறைவானவன் الْحَمِيْدُ‏ புகழுக்குரியவன்
35:15. யா அய்யுன்ஹன் னாஸு அன்துமுல் Fபுகரா'உ இலல்லாஹி வல்லாஹு ஹுவல் கனிய்யுல் ஹமீத்
35:15. மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
35:16
35:16 اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَاْتِ بِخَلْقٍ جَدِيْدٍۚ‏
اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ உங்களை அழித்து விடுவான் وَيَاْتِ இன்னும் அவன் கொண்டு வருவான் بِخَلْقٍ ஒரு படைப்பை جَدِيْدٍۚ‏ புதிய
35:16. இ(ன்)ய் யஷ' யுத்ஹிBப்கும் வ ய'தி Bபிகல்கின் ஜதீத்
35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.
35:17
35:17 وَمَا ذٰ لِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ‏
وَمَا ذٰ لِكَ அது இல்லை عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு بِعَزِيْزٍ‏ சிரமமானதாக
35:17. வமா தாலிக 'அலல் லாஹி Bபி'அZஜீZஜ்
35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
35:18
35:18 وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرَىٰ ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَىْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفْسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
وَ لَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ பாவியான ஓர் ஆன்மா وِّزْرَ பாவத்தை اُخْرَىٰ ؕ மற்றொரு وَاِنْ تَدْعُ அழைத்தால் مُثْقَلَةٌ பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா اِلٰى حِمْلِهَا தனது சுமையின் பக்கம் لَا يُحْمَلْ சுமக்கப்பட முடியாது مِنْهُ அதிலிருந்து شَىْءٌ ஏதும் وَّلَوْ كَانَ அது இருந்தாலும் சரியே ذَا قُرْبٰى ؕ உறவினராக اِنَّمَا تُنْذِرُ நீர் எச்சரிப்பதெல்லாம் الَّذِيْنَ يَخْشَوْنَ அஞ்சுகின்றவர்களைத்தான் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَيْبِ மறைவில் وَاَقَامُوا இன்னும் நிலை நிறுத்துவார்கள் الصَّلٰوةَ ؕ தொழுகையை وَمَنْ تَزَكّٰى யார் பரிசுத்தம் அடைகிறாரோ فَاِنَّمَا يَتَزَكّٰى அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் لِنَفْسِهٖ ؕ தனது நன்மைக்காகத்தான் وَاِلَى اللّٰهِ இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் الْمَصِيْرُ‏ மீளுமிடம் இருக்கிறது
35:18. வ லா தZஜிரு வாZஜிரதுன் விZஜ்ர உக்ரா; வ இன் தத்'உ முத்கலதுன் இலா ஹிம்லிஹா லா யுஹ்மல் மின்ஹு ஷய்'உ(ன்)வ் வ லவ் கான தா குர்Bபா; இன்னமா துன்திருல் லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி வ அகாமுஸ் ஸலாஹ்; வ மன் தZஜக்கா Fப இன்னமா யதZஜக்கா லினFப்ஸிஹ்; வ இலல் லாஹில் மஸீர்
35:18. (மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
35:19
35:19 وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ‏
وَمَا يَسْتَوِى சமமாக மாட்டார் الْاَعْمٰى குருடரும் وَالْبَصِيْرُ ۙ‏ பார்வையுடையவரும்
35:19. வமா யஸ்தவில் அஃமா வல் Bபஸீர்
35:19. குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
35:20
35:20 وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُۙ‏
وَلَا الظُّلُمٰتُ இருள்களும் وَلَا النُّوْرُۙ‏ வெளிச்சமும்
35:20. வ லள் ளுலுமாது வ லன் னூர்
35:20. (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
35:21
35:21 وَلَا الظِّلُّ وَلَا الْحَـرُوْرُۚ‏
وَلَا الظِّلُّ நிழலும் சமமாகாது وَلَا الْحَـرُوْرُۚ‏ வெயிலும் சமமாகாது
35:21. வ லள் ளில்லு வ லல் ஹரூர்
35:21. (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
35:22
35:22 وَمَا يَسْتَوِى الْاَحْيَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَآءُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ‏
وَمَا يَسْتَوِى சமமாக மாட்டார்கள் الْاَحْيَآءُ உயிருள்ளவர்களும் وَلَا الْاَمْوَاتُ ؕ இறந்தவர்களும் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُسْمِعُ செவியேற்க வைப்பான் مَنْ يَّشَآءُ ۚ தான் நாடுகின்றவரை وَمَاۤ اَنْتَ நீர் இல்லை بِمُسْمِعٍ செவியேற்க வைப்பவராக مَّنْ فِى الْقُبُوْرِ‏ மண்ணறையில் உள்ளவர்களை
35:22. வமா யஸ்தவில் அஹ்யா'உ வ லல் அம்வாத்; இன்னல் லாஹ யுஸ்மி'உ மய் யஷா'உ வ மா அன்த Bபி முஸ்மி'இம் மன் Fபில் குBபூர்
35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
35:23
35:23 اِنْ اَنْتَ اِلَّا نَذِيْرٌ‏
اِنْ اَنْتَ நீர் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ‏ அச்சமூட்டி எச்சரிப்பவரே
35:23. இன் அன்த இல்லா னதீர்
35:23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
35:24
35:24 اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًاؕ وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنٰكَ உம்மை அனுப்பினோம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு بَشِيْرًا நற்செய்தி கூறுபவராக(வும்) وَّنَذِيْرًاؕ அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் وَاِنْ مِّنْ اُمَّةٍ எந்த ஒரு சமுதாயமும் இல்லை اِلَّا خَلَا சென்றிருந்தே தவிர فِيْهَا அவர்களில் نَذِيْرٌ‏ அச்சமூட்டி எச்சரிப்பவர்
35:24. இன்னா அர்ஸல்னாக Bபில் ஹக்கி Bபஷீர(ன்)வ் வ னதீரா; வ இம் மின் உம்மதின் இல்லா கலா Fபீஹா னதீர்
35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
35:25
35:25 وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِيْرِ‏
وَاِنْ يُّكَذِّبُوْكَ இவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقَدْ திட்டமாக كَذَّبَ பொய்ப்பித்துள்ளனர் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ۚ இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் جَآءَتْهُمْ அவர்கள் கொண்டுவந்தனர் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளையும் وَبِالزُّبُرِ வேதங்களையும் وَبِالْكِتٰبِ வேதங்களையும் الْمُنِيْرِ‏ பிரகாசமான
35:25. வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி வ BபிZஜ் ZஜுBபுரி வ Bபில் கிதாBபில் முனீர்
35:25. இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
35:26
35:26 ثُمَّ اَخَذْتُ الَّذِيْنَ كَفَرُوْا فَكَيْفَ كَانَ نَـكِيْرِ
ثُمَّ பிறகு اَخَذْتُ நான் தண்டித்தேன் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தது نَـكِيْرِ‏ எனது மாற்றம்
35:26. தும்ம அகத்துல் லதீன கFபரூ Fபகய்Fப கான னகீர்
35:26. பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.  
35:27
35:27 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ‌ۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَاؕ وَمِنَ الْجِبَالِ جُدَدٌۢ بِيْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِيْبُ سُوْدٌ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَنْزَلَ இறக்கினான் مِنَ السَّمَآءِ மேகத்தில் இருந்து مَآءً ۚ மழையை فَاَخْرَجْنَا நாம் உற்பத்தி செய்தோம் بِهٖ அதன் மூலம் ثَمَرٰتٍ கனிகளை مُّخْتَلِفًا பலதரப்பட்ட اَلْوَانُهَاؕ அவற்றின் நிறங்கள் وَمِنَ الْجِبَالِ இன்னும் மலைகளில் جُدَدٌۢ பாதைகள் بِيْضٌ வெண்மையான وَّحُمْرٌ இன்னும் சிவப்பான مُّخْتَلِفٌ பலதரப்பட்டவையாக اَلْوَانُهَا அவற்றின் நிறங்கள் وَغَرَابِيْبُ இன்னும் மலைகளும் سُوْدٌ‏ கருப்பான
35:27. அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ்னா Bபிஹீ தமராதிம் முக்தலிFபன் அல்வானுஹா; வ மினல் ஜிBபாலி ஜுததும் Bபீளு(ன்)வ் வ ஹும்ரும் முக்தலிFபுன் அல்வானுஹா வ கராBபீBபு ஸூத்
35:27. நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
35:28
35:28 وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَ لْوَانُهٗ كَذٰلِكَ ؕ اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ‏
وَمِنَ النَّاسِ மக்களிலும் وَالدَّوَآبِّ கால்நடைகளிலும் وَالْاَنْعَامِ ஆடு மாடு ஒட்டகங்களிலும் مُخْتَلِفٌ மாறுபட்டவையாக اَ لْوَانُهٗ அவற்றின் நிறங்கள் كَذٰلِكَ ؕ இவ்வாறே اِنَّمَا يَخْشَى அஞ்சுவதெல்லாம் اللّٰهَ அல்லாஹ்வை مِنْ عِبَادِهِ அவனது அடியார்களில் الْعُلَمٰٓؤُا ؕ அறிஞர்கள்தான் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் غَفُوْرٌ‏ மகா மன்னிப்பாளன்
35:28. வ மினன் னாஸி வத்த வாBப்Bபி வல் அன்'ஆமி முக்தலிFபுன் அல்வானுஹூ கதலிக்; இன்னமா யக்-ஷல் லாஹ மின் 'இBபாதிஹில் 'உலமா'; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் கFபூர்
35:28. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
35:29
35:29 اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் يَتْلُوْنَ ஓதுகின்றார்கள் كِتٰبَ வேதத்தை اللّٰهِ அல்லாஹ்வின் وَاَقَامُوا இன்னும் நிலைநிறுத்தினர் الصَّلٰوةَ தொழுகையை وَاَنْفَقُوْا இன்னும் தர்மம் செய்தார்கள் مِمَّا رَزَقْنٰهُمْ நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து سِرًّا இரகசியமாகவும் وَّعَلَانِيَةً வெளிப்படையாகவும் يَّرْجُوْنَ ஆதரவு வைக்கின்றனர் تِجَارَةً வியாபாரத்தை لَّنْ تَبُوْرَۙ‏ அறவே அழிந்து போகாத
35:29. இன்னல் லதீன யத்லூன கிதBப்Bபல் லாஹி வ அகாமுஸ் ஸலாத வ அன்Fபகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலா னியத(ன்)ய் யர்ஜூன திஜாரதல் லன் தBபூர்
35:29. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
35:30
35:30 لِيُوَفِّيَهُمْ اُجُوْرَهُمْ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ‏
لِيُوَفِّيَهُمْ அவன் அவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவதற்கு(ம்) اُجُوْرَ கூலிகளை هُمْ அவர்களின் وَيَزِيْدَهُمْ மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கு مِّنْ فَضْلِهٖ ؕ தனது அருளிலிருந்து اِنَّهٗ நிச்சமாக அவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் شَكُوْرٌ‏ நன்றியுடையவன்
35:30. லியுவFப்Fபியஹும் உஜூரஹும் வ யZஜீதஹும் மின் Fபள்லிஹ்; இன்னஹூ கFபூருன் ஷகூர்
35:30. அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
35:31
35:31 وَالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَـقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِؕ اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِيْرٌۢ بَصِيْرٌ‏
وَالَّذِىْۤ எது اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு مِنَ الْكِتٰبِ அதாவது, இந்தவேதம் هُوَ அதுதான் الْحَـقُّ சத்தியமானது مُصَدِّقًا உண்மைப்படுத்துகிறது لِّمَا بَيْنَ يَدَيْهِؕ தனக்கு முன்னுள்ளதை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِعِبَادِهٖ தனது அடியார்களை لَخَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
35:31. வல்லதீ அவ்ஹய்னா இலய்க மினல் கிதாBபி ஹுவல் ஹக்கு முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹ்; இன்னல் லாஹ Bபி'இBபாதிஹீ ல கBபீரும் Bபஸீர்
35:31. (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
35:32
35:32 ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِيْنَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَاۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ‌ۚ وَمِنْهُمْ مُّقْتَصِدٌ ‌ۚ وَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرٰتِ بِاِذْنِ اللّٰهِؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُؕ‏
ثُمَّ பிறகு اَوْرَثْنَا நாம் கொடுத்தோம் الْكِتٰبَ இந்த வேதத்தை الَّذِيْنَ اصْطَفَيْنَا நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு مِنْ عِبَادِنَاۚ நமது அடியார்களில் فَمِنْهُمْ அவர்களில் ظَالِمٌ தீமை செய்தவரும் لِّنَفْسِهٖ‌ۚ தனக்குத் தானே وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مُّقْتَصِدٌ ۚ நடுநிலையானவரும் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் سَابِقٌۢ முந்துகின்றவரும் بِالْخَيْرٰتِ நன்மைகளில் بِاِذْنِ அனுமதிப்படி اللّٰهِؕ அல்லாஹ்வின் ذٰلِكَ هُوَ இதுதான் الْفَضْلُ சிறப்பாகும் الْكَبِيْرُؕ‏ மாபெரும்
35:32. தும்ம அவ்ரத்னல் கிதாBபல்லதீனஸ் தFபய்னா மின் 'இBபாதினா Fபமின்ஹும் ளாலிமுல் லினFப்ஸிஹீ வ மின்ஹும் முக்தஸிது, வ மின்ஹும் ஸாBபிகும் Bபில்கய்ராதி Bபி இத்னில் லாஹ்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
35:32. பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
35:33
35:33 جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا يُحَلَّوْنَ فِيْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُـؤْلُؤًا ۚ وَلِبَاسُهُمْ فِيْهَا حَرِيْرٌ‏
جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் يَّدْخُلُوْنَهَا அவர்கள் அவற்றில் நுழைவார்கள் يُحَلَّوْنَ அவர்கள் அணிவிக்கப்படுவார்கள் فِيْهَا அவற்றில் مِنْ اَسَاوِرَ கை காப்புகளிலிருந்து مِنْ ذَهَبٍ தங்கத்தினாலான وَّلُـؤْلُؤًا ۚ முத்தும் وَلِبَاسُهُمْ அவர்களின் ஆடைகள் فِيْهَا அவற்றில் حَرِيْرٌ‏ பட்டுத்துணி
35:33. ஜன்னாது 'அத்னி(ன்)ய் யத் குலூனஹா யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'அ(ன்)வ் வ லிBபா ஸுஹும் Fபீஹா ஹரீர்
35:33. அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும்.
35:34
35:34 وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْۤ اَذْهَبَ عَـنَّا الْحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَـغَفُوْرٌ شَكُوْرُ ۙ‏
وَقَالُوا அவர்கள் கூறுவார்கள் الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْۤ எவன் اَذْهَبَ போக்கினான் عَـنَّا எங்களை விட்டு الْحَزَنَ ؕ கவலையை اِنَّ நிச்சயமாக رَبَّنَا எங்கள் இறைவன் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் شَكُوْرُ ۙ‏ நன்றியுடையவன்
35:34. வ காலுல் ஹம்து லில்லாஹில் லதீ அத்ஹBப 'அன்னல் ஹZஜன்; இன்ன ரBப்Bபனா ல கFபூருன் ஷகூர்
35:34. “எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
35:35
35:35 اۨلَّذِىْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖ‌ۚ لَا يَمَسُّنَا فِيْهَا نَصَبٌ وَّلَا يَمَسُّنَا فِيْهَا لُـغُوْبٌ‏
اۨلَّذِىْۤ எவன் اَحَلَّنَا எங்களை தங்க வைத்தான் دَارَ இல்லத்தில் الْمُقَامَةِ நிரந்தர مِنْ فَضْلِهٖ‌ۚ தனது அருளினால் لَا يَمَسُّنَا எங்களுக்கு ஏற்படாது فِيْهَا அதில் نَصَبٌ சோர்வு(ம்) وَّلَا يَمَسُّنَا எங்களுக்கு ஏற்படாது فِيْهَا அதில் لُـغُوْبٌ‏ களைப்பும்
35:35. அல்லதீ அஹல்லனா தாரல் முகாமதி மின் Fபள்லிஹீ லா யமஸ்ஸுனா Fபீஹா னஸBபு(ன்)வ் வலா யமஸ்ஸுனா Fபீஹா லுகூBப்
35:35. “அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).
35:36
35:36 وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ‌ۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَـجْزِىْ كُلَّ كَفُوْرٍۚ‏
وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لَهُمْ அவர்களுக்கு نَارُ நெருப்புதான் جَهَنَّمَ‌ۚ நரக لَا يُقْضٰى தீர்ப்பளிக்கப்படாது عَلَيْهِمْ அவர்களுக்கு فَيَمُوْتُوْا ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள் وَلَا يُخَفَّفُ இன்னும் இலேசாக்கப்படாது عَنْهُمْ அவர்களை விட்டு مِّنْ عَذَابِهَا ؕ அதன் தண்டனை كَذٰلِكَ இப்படித்தான் نَـجْزِىْ கூலிகொடுப்போம் كُلَّ كَفُوْرٍۚ‏ எல்லா நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
35:36. வல்லதீன கFபரூ லஹும் னாரு ஜஹன்னம லா யுக்ளா 'அலய்ஹிம் Fப யமூதூ வலா யுகFப்FபFபு 'அன்ஹும் மின் 'அதாBபிஹா; கதாலிக னஜ்Zஜீ குல்ல கFபூர்
35:36. எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
35:37
35:37 وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ‌ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ
وَهُمْ அவர்கள் يَصْطَرِخُوْنَ கதறுவார்கள் فِيْهَا ۚ அதில் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخْرِجْنَا எங்களை வெளியேற்று نَـعْمَلْ صَالِحًـا நல்ல அமல்களை செய்வோம் غَيْرَ வேறு الَّذِىْ எது كُـنَّا نَـعْمَلُؕ நாங்கள் செய்து கொண்டிருந்தோம் اَوَلَمْ نُعَمِّرْكُمْ உங்களுக்கு நாம் வாழ்க்கையளிக்கவில்லையா? مَّا எது (-காலம்) يَتَذَكَّرُ அறிவுரை பெறுகின்றார் فِيْهِ அதில் مَنْ تَذَكَّرَ அறிவுரை பெறுபவர் وَجَآءَكُمُ இன்னும் உங்களிடம் வந்தார் النَّذِيْرُؕ அச்சமூட்டி எச்சரிப்பவர் فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் فَمَا لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு இல்லை مِنْ نَّصِيْرٍ‏ உதவியாளர் எவரும்
35:37. வ ஹும் யஸ்தரிகூன Fபீஹா ரBப்Bபனா அக்ரிஜ்னா னஃமல் ஸாலிஹன் கய்ரல் லதீ குன்னா னஃமல்; அவ லம்னு 'அம்மிர்கும் மா யததக் கரு Fபீஹி மன் ததக்கர வ ஜா'அகுமுன் னதீரு Fபதூகூ Fபமா லிள்ளாலிமீன மின் னஸீர்
35:37. இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).  
35:38
35:38 اِنَّ اللّٰهَ عٰلِمُ غَيْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عٰلِمُ நன்கறிந்தவன் غَيْبِ மறைவானவற்றை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِؕ மற்றும் பூமி(யில் உள்ள) اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
35:38. இன்னல் லாஹ 'ஆலிமு கய்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
35:38. நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.
35:39
35:39 هُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ فِى الْاَرْضِ ؕ فَمَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗ ؕ وَلَا يَزِيْدُ الْـكٰفِرِيْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚ وَلَا يَزِيْدُ الْـكٰفِرِيْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا‏
هُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَـكُمْ உங்களை ஆக்கினான் خَلٰٓٮِٕفَ பிரதிநிதிகளாக فِى الْاَرْضِ ؕ பூமியில் فَمَنْ எவர் كَفَرَ நிராகரிப்பாரோ فَعَلَيْهِ அவருக்குத்தான் தீங்காகும் كُفْرُهٗ ؕ அவருடைய நிராகரிப்பு وَلَا يَزِيْدُ அதிகப்படுத்தாது الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு كُفْرُ நிராகரிப்பு هُمْ அவர்களின் عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் اِلَّا தவிர مَقْتًا ۚ கோபத்தை / வெறுப்பை وَلَا يَزِيْدُ அதிகப்படுத்தாது الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு كُفْرُ நிராகரிப்பு هُمْ அவர்களின் اِلَّا தவிர خَسَارًا‏ நஷ்டத்தை
35:39. ஹுவல் லதீ ஜ'அலகும் கலா'இFப Fபில் அர்ள்; Fபமன் கFபர Fப'அலய்ஹி குFப்ருஹூ; வலா யZஜீதுல் காFபிரீன குFப்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் இல்லா மக்த(ன்)வ் வலா யZஜீதுல் காFபிரீன குFப்ருஹும் இல்லா கஸாரா
35:39. அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.
35:40
35:40 قُلْ اَرَءَيْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ ۚ اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰى بَيِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ اِنْ يَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا‏
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் شُرَكَآءَ இணை தெய்வங்களை كُمُ உங்கள் الَّذِيْنَ எவர்கள் تَدْعُوْنَ நீங்கள் அழைக்கின்றீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ ؕ அல்லாஹ்வையன்றி اَرُوْنِىْ எனக்கு காண்பியுங்கள் مَاذَا எதை خَلَقُوْا படைத்தார்கள் مِنَ الْاَرْضِ பூமியில் اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு شِرْكٌ பங்கு فِى السَّمٰوٰتِ‌ ۚ வானங்களில் اَمْ அல்லது اٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்தோம் كِتٰبًا ஒரு வேதத்தை فَهُمْ ஆகவே, அவர்கள் عَلٰى بَيِّنَتٍ தெளிவான சான்றின் மீது مِّنْهُ ۚ அது விஷயத்தில் بَلْ மாறாக اِنْ يَّعِدُ வாக்களிப்பதில்லை الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் بَعْضًا சிலருக்கு اِلَّا غُرُوْرًا‏ ஏமாற்றத்தைத் தவிர
35:40. குல் அர'அய்தும் ஷுரகா'அ குமுல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி; அரூனீ மாதா கலகூ மினல் அர்ளி அம் லஹும் ஷிர்குன் Fபிஸ் ஸமாவாதி அம் ஆதய்னாஹும் கிதாBபன் Fபஹும் 'அலா Bபய்யினதிம் மின்ஹ்; Bபல் இ(ன்)ய் ய'இதுள் ளாலிமூன Bபஃளுஹும் Bபஃளன் இல்லா குரூரா
35:40. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).
35:41
35:41 اِنَّ اللّٰهَ يُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ۚوَلَٮِٕنْ زَالَــتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْۢ بَعْدِهٖ ؕ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُمْسِكُ தடுத்து வைத்திருக்கின்றான் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் اَنْ تَزُوْلَا ۚ இரண்டும் நீங்கிவிடாமல் وَلَٮِٕنْ زَالَــتَاۤ அவை இரண்டும் நீங்கிவிட்டால் اِنْ اَمْسَكَهُمَا அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது مِنْ اَحَدٍ எவர் ஒருவரும் مِّنْۢ بَعْدِهٖ ؕ அவனுக்குப் பின்னர் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் حَلِيْمًا மகா சகிப்பாளனாக غَفُوْرًا‏ மகா மன்னிப்பாளனாக
35:41. இன்னல் லாஹ யும்ஸிகுஸ் ஸமாவாதி வல் அர்ள அன் தZஜூலா; வ ல'இன் Zஜாலதா இன் அம்ஸ கஹுமா மின் அஹதிம் மிம் Bபஃதிஹ்; இன்னஹூ கான ஹலீமன் கFபூரா
35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்.
35:42
35:42 وَاَ قْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ جَآءَهُمْ نَذِيْرٌ لَّيَكُوْنُنَّ اَهْدٰى مِنْ اِحْدَى الْاُمَمِۚ فَلَمَّا جَآءَهُمْ نَذِيْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرًا ۙ‏
وَاَ قْسَمُوْا சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது جَهْدَ اَيْمَانِهِمْ மிக உறுதியாக சத்தியம் செய்தல் لَٮِٕنْ جَآءَ வந்தால் هُمْ அவர்களிடம் نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளர் لَّيَكُوْنُنَّ நிச்சயமாக இருந்திருப்பார்கள் اَهْدٰى மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக مِنْ اِحْدَى الْاُمَمِۚ சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை விட فَلَمَّا جَآءَ வந்த போது هُمْ அவர்களிடம் نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளர் مَّا زَادَ அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு اِلَّا தவிர نُفُوْرًا ۙ‏ விலகிச் செல்வதை
35:42. வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் ல'இன் ஜா'அஹும் னதீருல் லயகூனுன்ன அஹ்தா மின் இஹ்தல் உமமி Fபலம் மா ஜா'அஹும் னதீரும் மா Zஜாதஹும் இல்லா னுFபூரா
35:42. அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிரமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
35:43
35:43 اۨسْتِكْبَارًا فِى الْاَرْضِ وَمَكْرَ السَّیِّئِ ؕ وَلَا يَحِيْقُ الْمَكْرُ السَّيِّـئُ اِلَّا بِاَهْلِهٖ ؕ فَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِيْنَ ۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِيْلًا ۚ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِيْلًا‏
اۨسْتِكْبَارًا பெருமையடிப்பதை(யும்) فِى الْاَرْضِ பூமியில் وَمَكْرَ சூழ்ச்சி செய்வதையும் السَّیِّئِ ؕ தீய(து) وَلَا يَحِيْقُ சூழ்ந்துகொள்ளாது الْمَكْرُ சூழ்ச்சி السَّيِّـئُ தீய(து) اِلَّا தவிர بِاَهْلِهٖ ؕ அதை செய்தவர்களை فَهَلْ يَنْظُرُوْنَ இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? اِلَّا سُنَّتَ வழிமுறையைத் தவிர الْاَوَّلِيْنَ ۚ முன் சென்றோரின் فَلَنْ تَجِدَ அறவே நீர் காணமாட்டீர் لِسُنَّتِ வழிமுறையில் اللّٰهِ அல்லாஹ்வின் تَبْدِيْلًا ۚ மாற்றத்தை وَلَنْ تَجِدَ இன்னும் நீர் காணமாட்டீர் لِسُنَّتِ வழிமுறையில் اللّٰهِ அல்லாஹ்வின் تَحْوِيْلًا‏ எவ்வித திருப்பத்தை
35:43. இஸ்திக்Bபாரன் Fபில் அர்ளி வ மக்ரஸ் ஸய்யி'; வலா யஹீகுல் மக்ருஸ் ஸய்யி'உ இல்லா Bபி அஹ்லிஹ்; Fபஹல் யன்ளுரூன இல்லா ஸுன்னதல் அவ்வலீன்; Fபலன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீல(ன்)வ் வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தஹ்வீலா
35:43. (அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
35:44
35:44 اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُعْجِزَهٗ مِنْ شَىْءٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ ؕ اِنَّهٗ كَانَ عَلِيْمًا قَدِيْرًا‏
اَوَلَمْ يَسِيْرُوْا அவர்கள் பயணிக்கவில்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا அவர்கள் பார்க்கவில்லை كَيْفَ எப்படி كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் وَكَانُوْۤا அவர்கள் இருந்தனர் اَشَدَّ கடுமையானவர்களாக مِنْهُمْ இவர்களை விட قُوَّةً ؕ பலத்தால் وَمَا كَانَ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيُعْجِزَهٗ அவனை பலவீனப்படுத்தக் கூடியதாக مِنْ شَىْءٍ எதுவும் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَلَا فِى الْاَرْضِ ؕ இன்னும் பூமியில் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
35:44. அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம் வ கானூ அஷத்த மின்ஹும் குவ்வஹ்; வமா கானல் லாஹு லியுஃஜிZஜஹூ மின் ஷய்'இன் Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ள்; இன்னஹூ கான 'அலீமன் கதீரா
35:44. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
35:45
35:45 وَلَوْ يُـؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰى ظَهْرِهَا مِنْ دَآ بَّةٍ وَّلٰـكِنْ يُّؤَخِّرُهُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِيْرًا
وَلَوْ يُـؤَاخِذُ தண்டிப்பதாக இருந்தால் اللّٰهُ அல்லாஹ் النَّاسَ மக்களை بِمَا كَسَبُوْا அவர்கள் செய்ததற்காக مَا تَرَكَ அவன் விட்டிருக்க மாட்டான் عَلٰى ظَهْرِهَا அதன் மேற்பரப்பில் مِنْ دَآ بَّةٍ எந்த உயிரினத்தையும் وَّلٰـكِنْ எனினும் يُّؤَخِّرُ அவன் பிற்படுத்தி வைக்கின்றான் هُمْ அவர்களை اِلٰٓى اَجَلٍ தவணை வரை مُّسَمًّىۚ ஒரு குறிப்பிட்ட فَاِذَا جَآءَ வந்துவிட்டால் اَجَلُهُمْ அவர்களுடைய தவணை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கின்றான் بِعِبَادِهٖ தனது அடியார்களை بَصِيْرًا‏ உற்றுநோக்கியவனாக
35:45. வ லவ் யு'ஆகிதுல் லாஹுன் னாஸ Bபிம கஸBபூ மா தரக 'அலா ளஹ்ரிஹா மின் தாBப்Bபதி(ன்)வ் வ லாகி(ன்)ய் யு'அக்கிருஹும் இலா அஜலிம் முஸம்மன் Fப இதா ஜா'அ அஜலுஹும் Fப இன்னல் லாஹ கான Bபி'இBபாதிஹீ Bபஸீரா
35:45. மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.