37. ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
மக்கீ, வசனங்கள்: 182

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
37:1
37:1 وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ‏
وَالصّٰٓفّٰتِ அணிவகுப்பவர்கள் மீது சத்தியமாக! صَفًّا ۙ‏ அணி அணியாக
37:1. வஸ்ஸாFப்Fபாதி ஸFப்Fபா
37:1. அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
37:2
37:2 فَالزّٰجِرٰتِ زَجْرًا ۙ‏
فَالزّٰجِرٰتِ விரட்டுகின்றவர்கள் மீது சத்தியமாக! زَجْرًا ۙ‏ (கடுமையாக) விரட்டுதல்
37:2. FபZஜ்Zஜாஜிராதி Zஜஜ்ரா
37:2. பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
37:3
37:3 فَالتّٰلِيٰتِ ذِكْرًا ۙ‏
فَالتّٰلِيٰتِ ஓதுபவர்கள் மீது சத்தியமாக! ذِكْرًا ۙ‏ வேதத்தை
37:3. Fபத்தாலியாதி திக்ரா
37:3. (நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
37:4
37:4 اِنَّ اِلٰهَكُمْ لَوَاحِدٌ ؕ‏
اِنَّ நிச்சயமாக اِلٰهَكُمْ உங்கள் கடவுள் لَوَاحِدٌ ؕ‏ ஒருவன்தான்
37:4. இன்ன இல்லாஹகும் ல வாஹித்
37:4. நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
37:5
37:5 رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ‏
رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் وَرَبُّ இன்னும் நிர்வகிப்பவன் الْمَشَارِقِ ؕ‏ அவன் சூரியன் உதிக்கும் இடங்களையும்
37:5. ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ ரBப்Bபுல் மஷாரிக்
37:5. வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
37:6
37:6 اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنْيَا بِزِيْنَةِ اۨلْكَوَاكِبِۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் زَيَّنَّا அலங்கரித்துள்ளோம் السَّمَآءَ வானத்தை الدُّنْيَا சமீபமான(து) بِزِيْنَةِ அலங்காரத்தால் اۨلْكَوَاكِبِۙ‏ நட்சத்திரங்களின்
37:6. இன்னா Zஜய்யன்னஸ் ஸமா 'அத் துன்யா BபிZஜீனதினில் கவாகிBப்
37:6. நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
37:7
37:7 وَحِفْظًا مِّنْ كُلِّ شَيْطٰنٍ مَّارِدٍ‌ۚ‏
وَحِفْظًا பாதுகாப்பதற்காகவும் مِّنْ كُلِّ شَيْطٰنٍ எல்லா ஷைத்தான்களிடமிருந்து مَّارِدٍ‌ۚ‏ அடங்காத
37:7. வ ஹிFப்ளம் மின் குல்லி ஷய்தானிம் மாரித்
37:7. (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
37:8
37:8 لَّا يَسَّمَّعُوْنَ اِلَى الْمَلَاِ الْاَعْلٰى وَيُقْذَفُوْنَ مِنْ كُلِّ جَانِبٍۖ ‏
لَّا يَسَّمَّعُوْنَ அவர்களால் செவியுற முடியாது اِلَى الْمَلَاِ கூட்டத்தினரின் பக்கம் الْاَعْلٰى மிக உயர்ந்த وَيُقْذَفُوْنَ இன்னும் எறியப்படுவார்கள் مِنْ இருந்தும் كُلِّ எல்லா جَانِبٍۖ ‏ பக்கங்களில்
37:8. லா யஸ்ஸம்ம 'ஊன இலல் மல 'இல் அஃலா வ யுக்தFபூன மின் குல்லி ஜானிBப்
37:8. (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
37:9
37:9 دُحُوْرًا  وَّلَهُمْ عَذَابٌ وَّاصِبٌ  ۙ‏
دُحُوْرًا  தடுக்கப்படுவதற்காக وَّلَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை وَّاصِبٌ  ۙ‏ நிரந்தரமான
37:9. துஹூர(ன்)வ் வ லஹும் 'அதாBபு(ன்)வ் வாஸிBப்
37:9. (அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
37:10
37:10 اِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَاَتْبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ‏
اِلَّا எனினும் مَنْ யார் خَطِفَ திருடினான் الْخَطْفَةَ திருட்டுத்தனமாக فَاَتْبَعَهٗ அவரை பின்தொடரும் شِهَابٌ நெருப்புக் கங்கு ثَاقِبٌ‏ எரிக்கின்ற
37:10. இல்லா மன் கதிFபல் கத்Fபத Fப அத்Bப'அஹூ ஷிஹாBபுன் தாகிBப்
37:10. (ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
37:11
37:11 فَاسْتَفْتِهِمْ اَهُمْ اَشَدُّ خَلْقًا اَمْ مَّنْ خَلَقْنَاؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّنْ طِيْنٍ لَّازِبٍ‏
فَاسْتَفْتِهِمْ அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! اَهُمْ ?/அவர்கள் اَشَدُّ பலமிக்கவர்கள் خَلْقًا படைப்பால் اَمْ அல்லது مَّنْ எவர்கள் خَلَقْنَاؕ படைத்தோம் اِنَّا நிச்சயமாக நாம் خَلَقْنٰهُمْ அவர்களை படைத்தோம் مِّنْ طِيْنٍ மண்ணிலிருந்து لَّازِبٍ‏ பிசுபிசுப்பான
37:11. Fபஸ்தFப்திஹிம் அஹும் அஷத்து கல்கன் அம் மன் கலக்னா; இன்னா கலக்னாஹும் மின் தீனில் லாZஜிBப்
37:11. ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
37:12
37:12 بَلْ عَجِبْتَ وَيَسْخَرُوْنَ‏
بَلْ மாறாக عَجِبْتَ நீர் ஆச்சரியப்பட்டீர் وَيَسْخَرُوْنَ‏ அவர்கள் பரிகாசிக்கின்றனர்
37:12. Bபல்'அஜிBப்த வ யஸ்கரூன்
37:12. (நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
37:13
37:13 وَاِذَا ذُكِّرُوْا لَا يَذْكُرُوْنَ‏
وَاِذَا ذُكِّرُوْا அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் لَا يَذْكُرُوْنَ‏ அறிவுரை பெறமாட்டார்கள்
37:13. வ இதா துக்கிரூ லா யத்குரூன்
37:13. அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
37:14
37:14 وَاِذَا رَاَوْا اٰيَةً يَّسْتَسْخِرُوْنَ‏
وَاِذَا رَاَوْا அவர்கள் பார்த்தால் اٰيَةً ஓர் அத்தாட்சியை يَّسْتَسْخِرُوْنَ‏ பரிகாசம் செய்கிறார்கள்
37:14. வ இதா ர அவ் ஆயத(ன்)ய் யஸ்தஸ்கிரூன்
37:14. அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
37:15
37:15 وَقَالُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‌ ۖ‌ۚ‏
وَقَالُوْۤا கூறுகின்றனர் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا سِحْرٌ சூனியமே தவிர مُّبِيْنٌ‌ ۖ‌ۚ‏ தெளிவான
37:15. வ காலூ இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
37:15. “இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
37:16
37:16 ءَاِذَا مِتْنَا وَكُـنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏
مِتْنَا நாங்கள் இறந்து விட்டால் وَكُـنَّا تُرَابًا மண்ணாக(வும்) மாறிவிட்டால் وَّعِظَامًا எலும்புகளாகவும் ءَاِنَّا ?/நிச்சயமாக நாங்கள் لَمَبْعُوْثُوْنَۙ‏ எழுப்பப்படுவோம்
37:16. அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமBப்'ஊதூன்
37:16. “நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
37:17
37:17 اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَؕ‏
اَوَاٰبَآؤُنَا இன்னும் எங்கள் முன்னோர்களுமா? الْاَوَّلُوْنَؕ‏ முந்திய
37:17. அவ ஆBபா'உனல் அவ்வலூன்
37:17. “அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
37:18
37:18 قُلْ نَعَمْ وَاَنْـتُمْ دٰخِرُوْنَ‌ۚ‏
قُلْ கூறுவீராக! نَعَمْ ஆம் وَاَنْـتُمْ நீங்கள் دٰخِرُوْنَ‌ۚ‏ மிகவும் சிறுமைப்பட்டவர்களாக
37:18. குல் ன'அம் வ அன்தும் தாகிரூன்
37:18. “ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
37:19
37:19 فَاِنَّمَا هِىَ زَجْرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ‏
فَاِنَّمَا هِىَ அதுவெல்லாம் زَجْرَةٌ பலமான சப்தம்தான் وَّاحِدَةٌ ஒரே ஒரு فَاِذَا هُمْ يَنْظُرُوْنَ‏ அப்போது அவர்கள் பார்ப்பார்கள்
37:19. Fப இன்னமா ஹிய Zஜஜ்ர து(ன்)வ் வாஹிததுன் Fப இதா ஹும் யன்ளுரூன்
37:19. ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
37:20
37:20 وَقَالُوْا يٰوَيْلَنَا هٰذَا يَوْمُ الدِّيْنِ‏
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் يٰوَيْلَنَا எங்கள் நாசமே! هٰذَا இதுதான் يَوْمُ நாள் الدِّيْنِ‏ கூலி கொடுக்கப்படும்
37:20. வ காலூ யா வய்லனா ஹாதா யவ்முத்-தீன்
37:20. (அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
37:21
37:21 هٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ
هٰذَا இதுதான் يَوْمُ நாள் الْفَصْلِ தீர்ப்பு الَّذِىْ எதை كُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் بِهٖ இதை تُكَذِّبُوْنَ‏ பொய்ப்பிப்பவர்களாக
37:21. ஹாதா யவ்முல் Fபஸ்லில் லதீ குன்தும் Bபிஹீ துகதிBபூன்
37:21. “நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)  
37:22
37:22 اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏
اُحْشُرُوا ஒன்று திரட்டுங்கள்! الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களை وَاَزْوَاجَهُمْ அவர்களின் இனத்தவர்களையும் وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏ இன்னும் அவர்கள் வணங்கி வந்தவர்களையும்
37:22. உஹ்ஷுருல் லதீன ளலமூ வ அZஜ்வாஜஹும் வமா கானூ யஃBபுதூன்
37:22. “அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
37:23
37:23 مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ‏
مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி فَاهْدُوْ வழிகாட்டுங்கள் هُمْ அவர்களுக்கு اِلٰى صِرَاطِ பாதைக்கு الْجَحِيْمِ‏ நரகத்தின்
37:23. மின் தூனில் லாஹி Fபஹ்தூஹும் இலா ஸிராதில் ஜஹீம்
37:23. “அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
37:24
37:24 وَقِفُوْهُمْ‌ اِنَّهُمْ مَّسْــٴُــوْلُوْنَۙ‏
وَقِفُوْ நிறுத்துங்கள்! هُمْ‌ அவர்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مَّسْــٴُــوْلُوْنَۙ‏ விசாரிக்கப்படுவார்கள்
37:24. வ கிFபூஹும் இன்னஹும் மஸ்'ஊலூன்
37:24. “இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
37:25
37:25 مَا لَـكُمْ لَا تَنَاصَرُوْنَ‏
مَا என்ன நேர்ந்தது? لَـكُمْ உங்களுக்கு لَا تَنَاصَرُوْنَ‏ நீங்கள் உங்களுக்குள் உதவிக்கொள்ளவில்லை
37:25. மா லகும் லா தனாஸரூன்
37:25. “உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
37:26
37:26 بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ‏
بَلْ هُمُ மாறாக அவர்கள் الْيَوْمَ இன்று مُسْتَسْلِمُوْنَ‏ முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்
37:26. Bபல் ஹுமுல் யவ்ம முஸ்தஸ்லிமூன்
37:26. ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
37:27
37:27 وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
وَاَقْبَلَ முன்னோக்கி(னர்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ விசாரித்துக் கொள்வார்கள்
37:27. வ அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா'அலூன்
37:27. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
37:28
37:28 قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ‏
قَالُوْۤا அவர்கள் கூறுவார்கள் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் كُنْتُمْ இருந்தீர்கள் تَاْتُوْنَنَا எங்களிடம் வருபவர்களாக عَنِ الْيَمِيْنِ‏ நன்மையை விட்டுத் தடுக்க
37:28. காலூ இன்னகும் குன்தும் தா'தூனனா 'அனில் யமீன்
37:28. (தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
37:29
37:29 قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‌ۚ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلْ لَّمْ تَكُوْنُوْا மாறாக/நீங்கள் இருக்கவில்லை مُؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களாக
37:29. காலூ Bபல் லம் தகூனூ மு'மினீன்
37:29. (“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
37:30
37:30 وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை لَنَا எங்களுக்கு عَلَيْكُمْ உங்கள் மீது مِّن سُلْطٰنٍۚ எவ்வித அதிகாரமும் بَلْ كُنْتُمْ மாறாக நீங்கள் இருந்தீர்கள் قَوْمًا மக்களாக طٰغِيْنَ‏ எல்லை மீறுகின்ற(வர்கள்)
37:30. வமா கான லனா 'அலய்கும் மின் ஸுல்தானிம் Bபல் குன்தும் கவ்மன் தாகீன்
37:30. “அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”
37:31
37:31 فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ اِنَّا لَذَآٮِٕقُوْنَ‏
فَحَقَّ ஆகவே, உறுதியாகிவிட்டது عَلَيْنَا நம் மீது قَوْلُ வாக்கு رَبِّنَآ ۖ நமது இறைவனுடைய اِنَّا நிச்சயமாக நாம் لَذَآٮِٕقُوْنَ‏ சுவைப்பவர்கள்தான்
37:31. Fபஹக்க 'அலய்னா கவ்லு ரBப்Bபினா இன்னா லதா'இகூன்
37:31. ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!
37:32
37:32 فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ‏
فَاَغْوَيْنٰكُمْ ஆக, நாங்கள் உங்களை வழி கெடுத்தோம் اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் غٰوِيْنَ‏ வழி கெட்டவர்களாகவே
37:32. Fப அக்வய்னாகும் இன்னா குன்னா காவீன்
37:32. “(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”
37:33
37:33 فَاِنَّهُمْ يَوْمَٮِٕذٍ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ‏
فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் فِى الْعَذَابِ வேதனையில் مُشْتَرِكُوْنَ‏ கூட்டாகுவார்கள்
37:33. Fப இன்னஹும் யவ்ம'இதின் Fபில்'அதாBபி முஷ்தரிகூன்
37:33. ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
37:34
37:34 اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இப்படித்தான் نَفْعَلُ நடந்து கொள்வோம் بِالْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளுடன்
37:34. இன்னா கதாலிக னFப்'அலு Bபில் முஜ்ரிமீன்
37:34. குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
37:35
37:35 اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسْتَكْبِرُوْنَۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْۤا இருந்தனர் اِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا اللّٰهُۙ அல்லாஹ்வைத் தவிர يَسْتَكْبِرُوْنَۙ‏ பெருமை அடிப்பவர்களாக
37:35. இன்னஹும் கானூ இதா கீல லஹும் லா இலாஹ இல்லல் லாஹு யஸ்தக்Bபிரூன்
37:35. “அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
37:36
37:36 وَيَقُوْلُوْنَ اَٮِٕنَّا لَتٰرِكُوْۤا اٰلِهَـتِنَا لِشَاعِرٍ مَّجْـنُوْنٍ ؕ‏
وَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் اَٮِٕنَّا ?/நிச்சயமாக நாங்கள் لَتٰرِكُوْۤا விட்டுவிடுவோம் اٰلِهَـتِنَا எங்கள் தெய்வங்களை لِشَاعِرٍ ஒரு கவிஞருக்காக مَّجْـنُوْنٍ ؕ‏ பைத்தியக்காரரான
37:36. வ யகூலூன அ'இன்னா லதாரிகூ ஆலிஹதினா லிஷா'இரிம் மஜ்னூன்
37:36. “ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
37:37
37:37 بَلْ جَآءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِيْنَ‏
بَلْ جَآءَ بِالْحَقِّ மாறாக அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார் وَصَدَّقَ இன்னும் உண்மைப்படுத்தினார் الْمُرْسَلِيْنَ‏ தூதர்களை
37:37. Bபல் ஜா'அ Bபில்ஹக்கி வ ஸத்தகல் முர்ஸலீன்
37:37. அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
37:38
37:38 اِنَّكُمْ لَذَآٮِٕقُوا الْعَذَابِ الْاَلِيْمِ‌ۚ‏
اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَذَآٮِٕقُوا சுவைப்பீர்கள் الْعَذَابِ வேதனையை الْاَلِيْمِ‌ۚ‏ வலிதரும்
37:38. இன்னகும் லதா'இகுல் 'அதாBபில் அலீம்
37:38. (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
37:39
37:39 وَمَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ‏
وَمَا تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள் اِلَّا அன்றி مَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ‏ நீங்கள் செய்து வந்ததற்கே
37:39. வமா துஜ்Zஜவ்ன இல்லா மா குன்தும் தஃமலூன்
37:39. ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
37:40
37:40 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا தவிர عِبَادَ அடியார்களை اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:40. இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
37:40. அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
37:41
37:41 اُولٰٓٮِٕكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُوْمٌۙ‏
اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு உண்டு رِزْقٌ உணவு مَّعْلُوْمٌۙ‏ அறியப்பட்ட
37:41. உலா'இக லஹும் ரிZஜ்கும் மஃலூம்
37:41. அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
37:42
37:42 فَوَاكِهُ‌ۚ وَهُمْ مُّكْرَمُوْنَۙ‏
فَوَاكِهُ‌ۚ பழங்கள் وَهُمْ இன்னும் அவர்கள் مُّكْرَمُوْنَۙ‏ கண்ணியப்படுத்தப்படுவார்கள்
37:42. Fப வாகிஹு வ ஹும் முக்ரமூன்
37:42. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
37:43
37:43 فِىْ جَنّٰتِ النَّعِيْمِۙ‏
فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِۙ‏ இன்பமிகு
37:43. Fபீ ஜன்னாதின் ன'ஈம்
37:43. இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
37:44
37:44 عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏
عَلٰى سُرُرٍ கட்டில்கள் மீது مُّتَقٰبِلِيْنَ‏ ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
37:44. 'அலா ஸுருரிம் முதகா Bபிலீன்
37:44. ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:45
37:45 يُطَافُ عَلَيْهِمْ بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ‏
يُطَافُ சுற்றி வரப்படும் عَلَيْهِمْ அவர்களை بِكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۢ ۙ‏ மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன்
37:45. யுதாFபு 'அலய்ஹிம் Bபிகாஸிம் மிம் ம'ஈன்
37:45. தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
37:46
37:46 بَيْضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيْنَ‌ ۖ‌ۚ‏
بَيْضَآءَ வெள்ளைநிற لَذَّةٍ மிக இன்பமான لِّلشّٰرِبِيْنَ‌ ۖ‌ۚ‏ குடிப்பவர்களுக்கு
37:46. Bபய்ளா'அ லத் ததில் லிஷ் ஷாரிBபீன்
37:46. (அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
37:47
37:47 لَا فِيْهَا غَوْلٌ وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ‏
لَا فِيْهَا அதில் இருக்காது غَوْلٌ போதை(யும்) وَّلَا هُمْ عَنْهَا يُنْزَفُوْنَ‏ அவர்கள் அதனால் மயக்கமுறவுமாட்டார்கள்
37:47. லா Fபீஹா கவ்லு(ன்)வ் வலா ஹும் 'அன்ஹா யுன்ZஜFபூன்
37:47. அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
37:48
37:48 وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ عِيْنٌۙ‏
وَعِنْدَهُمْ அவர்களிடம் قٰصِرٰتُ பார்வைகளை الطَّرْفِ தாழ்த்திய عِيْنٌۙ‏ கண்ணழகிகள்
37:48. வ 'இன்தஹும் காஸிராதுத் தர்Fபி 'ஈன்
37:48. இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
37:49
37:49 كَاَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُوْنٌ‏
كَاَنَّهُنَّ அவர்கள் போன்று இருப்பார்கள் بَيْضٌ முட்டையைப்போன்று مَّكْنُوْنٌ‏ பாதுகாக்கப்பட்ட(து)
37:49. க அன்னஹுன்ன Bபய்ளும் மக்னூன்
37:49. (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
37:50
37:50 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
فَاَقْبَلَ முன்னோக்குவார்(கள்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ விசாரிப்பார்கள்
37:50. Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா 'அலூன்
37:50. (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
37:51
37:51 قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ اِنِّىْ كَانَ لِىْ قَرِيْنٌۙ‏
قَالَ கூறுவார் قَآٮِٕلٌ கூறக்கூடிய ஒருவர் مِّنْهُمْ அவர்களில் اِنِّىْ நிச்சயமாக كَانَ இருந்தான் لِىْ எனக்கு قَرِيْنٌۙ‏ ஒரு நண்பன்
37:51. கால கா'இலும் மின்ஹும் இன்னீ கான லீ கரீன்
37:51. அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
37:52
37:52 يَقُوْلُ اَءِ نَّكَ لَمِنَ الْمُصَدِّقِيْنَ‏
يَقُوْلُ கூறுவான் اَءِ نَّكَ நிச்சயமாக நீ இருக்கின்றாயா لَمِنَ الْمُصَدِّقِيْنَ‏ உண்மைப்படுத்துபவர்களில்
37:52. யகூலு 'அ இன்னக லமினல் முஸத்திகீன்
37:52. (மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
37:53
37:53 ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيْنُوْنَ‏
مِتْنَا நாங்கள் இறந்து விட்டால் وَكُنَّا இன்னும் மாறிவிட்டால் تُرَابًا மண்ணாக(வும்) وَّعِظَامًا எலும்புகளாகவும் ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَدِيْنُوْنَ‏ கூலி கொடுக்கப்படுவோம்
37:53. 'அ-இதா மித்னா வ குன்னா துராBப(ன்)வ் வ 'இளாமன் 'அ இன்னா லமதீனூன்
37:53. “நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
37:54
37:54 قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ‏
قَالَ அவர் கூறுவார் اَنْتُمْ நீங்கள் مُّطَّلِعُوْنَ‏ எட்டிப்பார்ப்பீர்களா
37:54. கால ஹல் அன்தும் முத்தலி'ஊன்
37:54. (அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
37:55
37:55 فَاطَّلَعَ فَرَاٰهُ فِىْ سَوَآءِ الْجَحِيْمِ‏
فَاطَّلَعَ அவர்எட்டிப்பார்ப்பார் فَرَاٰهُ அவனை பார்ப்பார் فِىْ سَوَآءِ நடுவில் الْجَحِيْمِ‏ நரகத்தின்
37:55. Fபத்தல'அ Fபர ஆஹு Fபீ ஸவா'இல் ஜஹீம்
37:55. அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
37:56
37:56 قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَـتُرْدِيْنِۙ‏
قَالَ அவர் கூறுவார் تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنْ كِدْتَّ நிச்சயமாக நீ நெருக்கமாக இருந்தாய் لَـتُرْدِيْنِۙ‏ என்னை நாசமாக்குவதற்கு
37:56. கால தல்லாஹி இன் கித்த லதுர்தீன்
37:56. (அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
37:57
37:57 وَلَوْلَا نِعْمَةُ رَبِّىْ لَـكُنْتُ مِنَ الْمُحْضَرِيْنَ‏
وَلَوْلَا نِعْمَةُ அருள் இல்லாதிருந்தால் رَبِّىْ என் இறைவனின் لَـكُنْتُ நானும் ஆகி இருப்பேன் مِنَ الْمُحْضَرِيْنَ‏ ஆஜர்படுத்தப்படுபவர்களில்
37:57. வ லவ் லா னிஃமது ரBப்Bபீ லகுன்து மினல் முஹ்ளரீன்
37:57. “என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
37:58
37:58 اَفَمَا نَحْنُ بِمَيِّتِيْنَۙ‏
اَفَمَا نَحْنُ நாங்கள் இல்லைதானே? بِمَيِّتِيْنَۙ‏ மரணிப்பவர்களாக
37:58. அFபமா னஹ்னு Bபிமய்யிதீன்
37:58. “(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?
37:59
37:59 اِلَّا مَوْتَتَـنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏
اِلَّا مَوْتَتَـنَا எங்கள் மரணத்தை தவிர الْاُوْلٰى முதல் وَمَا نَحْنُ இன்னும் நாங்கள் இல்லை بِمُعَذَّبِيْنَ‏ வேதனை செய்யப்படுபவர்களாக
37:59. இல்லா மவ்ததனல் ஊல வமா னஹ்னு Bபிமு'அத்தBபீன்
37:59. “(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
37:60
37:60 اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْفَوْزُ வெற்றியாகும் الْعَظِيْمُ‏ மகத்தான
37:60. இன்ன ஹாதா லஹுவல் Fபவ்Zஜுல் 'அளீம்
37:60. நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
37:61
37:61 لِمِثْلِ هٰذَا فَلْيَعْمَلِ الْعٰمِلُوْنَ‏
لِمِثْلِ போன்றதற்காக هٰذَا இது فَلْيَعْمَلِ அமல் செய்யட்டும். الْعٰمِلُوْنَ‏ அமல்செய்பவர்கள்
37:61. லிமித்லி ஹாத Fபல்யஃம லில் 'ஆமிலூன்
37:61. எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
37:62
37:62 اَذٰ لِكَ خَيْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ‏
اَذٰ لِكَ خَيْرٌ அது மிகச் சிறந்ததா نُّزُلًا விருந்தோம்பலால் اَمْ அல்லது شَجَرَةُ மரமா الزَّقُّوْمِ‏ ஸக்கூம்
37:62. அதாலிக கய்ருன் னுZஜுலன் அம் ஷஜரதுZஜ் Zஜக்கூம்
37:62. அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?
37:63
37:63 اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنٰهَا அதை ஆக்கினோம் فِتْنَةً ஒரு சோதனையாக لِّلظّٰلِمِيْنَ‏ இணைவைப்ப வர்களுக்கு
37:63. இன்னா ஜ'அல்னாஹா Fபித்னதல் லிள்ளாலிமீன்
37:63. நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
37:64
37:64 اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىْۤ اَصْلِ الْجَحِيْمِۙ‏
اِنَّهَا நிச்சயமாக அது شَجَرَةٌ ஒரு மரமாகும் تَخْرُجُ முளைக்கின்ற(து) فِىْۤ اَصْلِ الْجَحِيْمِۙ‏ நரகத்தின் அடியில்
37:64. இன்னஹா ஷஜரதுன் தக்ருஜு Fபீ அஸ்லில் ஜஹீம்
37:64. மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
37:65
37:65 طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّيٰطِيْنِ‏
طَلْعُهَا அதன் கனிகள் كَاَنَّهٗ போல் இருக்கும் رُءُوْسُ தலைகளை الشَّيٰطِيْنِ‏ ஷைத்தான்களின்
37:65. தல்'உஹா க அன்னஹூ ரு'ஊஸுஷ் ஷயாதீன்
37:65. அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
37:66
37:66 فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمٰلِـــٴُـــوْنَ مِنْهَا الْبُطُوْنَ ؕ‏
فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَاٰكِلُوْنَ சாப்பிடுவார்கள் مِنْهَا அதிலிருந்து فَمٰلِـــٴُـــوْنَ இன்னும் நிரப்புவார்கள் مِنْهَا அதிலிருந்து الْبُطُوْنَ ؕ‏ வயிறுகளை
37:66. Fப இன்னஹும் ல ஆகிலூன மின்ஹா Fபமாலி'ஊன மின்ஹல் Bபுதூன்
37:66. நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
37:67
37:67 ثُمَّ اِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيْمٍ‌ۚ‏
ثُمَّ பின்னர் اِنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு عَلَيْهَا அதற்கு மேல் لَشَوْبًا கலக்கப்படும் مِّنْ حَمِيْمٍ‌ۚ‏ கொதி நீரில் இருந்து
37:67. தும்ம இன்ன லஹும் 'அலய்ஹா லஷவ்Bபம் மின் ஹமீம்
37:67. பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
37:68
37:68 ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَا۟اِلَى الْجَحِيْمِ‏
ثُمَّ اِنَّ பிறகு நிச்சயமாக مَرْجِعَهُمْ அவர்களின் மீளுமிடம் لَا۟اِلَى الْجَحِيْمِ‏ நரக நெருப்பின் பக்கம்தான்
37:68. தும்ம இன்ன மர்ஜி'அஹும் ல இலல் ஜஹீம்
37:68. அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
37:69
37:69 اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّيْنَۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اَلْفَوْا பெற்றார்கள் اٰبَآءَهُمْ தங்கள் மூதாதைகளை ضَآلِّيْنَۙ‏ வழிகெட்டவர்களாக
37:69. இன்னஹும் அல்Fபவ் ஆBபா'அஹும் ளால்லீன்
37:69. நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
37:70
37:70 فَهُمْ عَلٰٓى اٰثٰرِهِمْ يُهْرَعُوْنَ‏
فَهُمْ இவர்கள் عَلٰٓى اٰثٰرِهِمْ அவர்களின் அடிச்சுவடுகளில் يُهْرَعُوْنَ‏ விரைகின்றார்கள்
37:70. Fபஹும் 'அலா ஆதாரிஹிம் யுஹ்ர'ஊன்
37:70. ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.
37:71
37:71 وَلَـقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِيْنَۙ‏
وَلَـقَدْ ضَلَّ திட்டமாகவழி கெட்டுள்ளனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் اَكْثَرُ அதிகமானவர்கள் الْاَوَّلِيْنَۙ‏ முன்னோரில்
37:71. வ லகத் ளல்ல கBப்லஹும் அக்தருல் அவ்வலீன்
37:71. இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
37:72
37:72 وَلَقَدْ اَرْسَلْنَا فِيْهِمْ مُّنْذِرِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் فِيْهِمْ அவர்களில் مُّنْذِرِيْنَ‏ அச்சமூட்டி எச்சரிப்பவர்களை
37:72. வ லகத் அர்ஸல்னா Fபீஹிம் முன்திரீன்
37:72. மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
37:73
37:73 فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَۙ‏
فَانْظُرْ ஆகவே நீர் பார்ப்பீராக! كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُنْذَرِيْنَۙ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
37:73. Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முன்தரீன்
37:73. பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
37:74
37:74 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ
اِلَّا எனினும் عِبَادَ அடியார்கள் اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான(வர்கள்)
37:74. இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
37:74. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.  
37:75
37:75 وَلَقَدْ نَادٰٮنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِيْبُوْنَ  ۖ‏
وَلَقَدْ திட்டவட்டமாக نَادٰٮنَا நம்மை அழைத்தார் نُوْحٌ நூஹ் فَلَنِعْمَ நாம் மிகச் சிறந்தவர்கள் الْمُجِيْبُوْنَ  ۖ‏ பதில் தருபவர்களில்
37:75. வ லகத் னாதானா னூஹுன் Fபலனிஃமல் முஜீBபூன்
37:75. அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
37:76
37:76 وَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ  ۖ‏
وَنَجَّيْنٰهُ அவரை(யும்) பாதுகாத்தோம் وَاَهْلَهٗ அவரது குடும்பத்தாரையும் مِنَ الْكَرْبِ துக்கத்தில் இருந்து الْعَظِيْمِ  ۖ‏ மிகப் பெரிய
37:76. வ னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ மினல் கர்Bபில் 'அளீம்
37:76. ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
37:77
37:77 وَجَعَلْنَا ذُرِّيَّتَهٗ هُمُ الْبٰقِيْنَ  ۖ‏
وَجَعَلْنَا நாம் ஆக்கினோம் ذُرِّيَّتَهٗ هُمُ அவரது சந்ததிகளைத்தான் الْبٰقِيْنَ  ۖ‏ மீதமானவர்களாக
37:77. வ ஜ'அல்னா துர்ரிய்யதஹூ ஹும்முல் Bபாகீன்
37:77. மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
37:78
37:78 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ  ۖ‏
وَتَرَكْنَا நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம் عَلَيْهِ அவரைப் பற்றி فِى الْاٰخِرِيْنَ  ۖ‏ பின் வருபவர்களில்
37:78. வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
37:78. மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
37:79
37:79 سَلٰمٌ عَلٰى نُوْحٍ فِى الْعٰلَمِيْنَ‏
سَلٰمٌ பாதுகாப்பு உண்டாகட்டும் عَلٰى نُوْحٍ நூஹூக்கு فِى الْعٰلَمِيْنَ‏ உலகத்தார்களில்
37:79. ஸலாமுன் 'அலா னூஹின் Fபில் 'ஆலமீன்
37:79. “ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
37:80
37:80 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:80. இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
37:80. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
37:81
37:81 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:81. இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
37:81. நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:82
37:82 ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‏
ثُمَّ பிறகு اَغْرَقْنَا நாம் மூழ்கடித்தோம் الْاٰخَرِيْنَ‏ மற்றவர்களை
37:82. தும்ம அக்ரக்னல் ஆகரீன்
37:82. பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
37:83
37:83 وَاِنَّ مِنْ شِيْعَتِهٖ لَاِبْرٰهِيْمَ‌ۘ‏
وَاِنَّ நிச்சயமாக مِنْ شِيْعَتِهٖ அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் لَاِبْرٰهِيْمَ‌ۘ‏ இப்ராஹீம்
37:83. வ இன்ன மின் ஷீ'அதிஹீ ல இBப்ராஹீம்
37:83. நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
37:84
37:84 اِذْ جَآءَ رَبَّهٗ بِقَلْبٍ سَلِيْمٍ‏
اِذْ جَآءَ அவர் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! رَبَّهٗ தனது இறைவனிடம் بِقَلْبٍ உள்ளத்துடன் سَلِيْمٍ‏ ஈடேற்றம் பெற்ற
37:84. இத் ஜா'அ ரBப்Bபஹூ Bபி கல்Bபின் ஸலீம்
37:84. அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
37:85
37:85 اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَاذَا تَعْبُدُوْنَ‌ۚ‏
اِذْ قَالَ அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! لِاَبِيْهِ தனது தந்தைக்கு(ம்) وَقَوْمِهٖ தனது மக்களுக்கும் مَاذَا எதை تَعْبُدُوْنَ‌ۚ‏ நீங்கள் வணங்குகிறீர்கள்
37:85. இத் கால லி அBபீஹி வ கவ்மிஹீ மாதா தஃBபுதூன்
37:85. அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
37:86
37:86 اَٮِٕفْكًا اٰلِهَةً دُوْنَ اللّٰهِ تُرِيْدُوْنَؕ‏
اَٮِٕفْكًا اٰلِهَةً பல பொய்யான தெய்வங்களையா دُوْنَ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி تُرِيْدُوْنَؕ‏ நீங்கள் நாடுகிறீர்கள்
37:86. அ'இFப்கன் ஆலிஹதன் தூனல் லாஹி துரீதூன்
37:86. “அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
37:87
37:87 فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ‏
فَمَا ظَنُّكُمْ உங்கள் எண்ணம் என்ன? بِرَبِّ இறைவனைப் பற்றி الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
37:87. Fபமா ளன்னுகும் Bபி ரBப்Bபில்'ஆலமீன்
37:87. “அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)
37:88
37:88 فَنَظَرَ نَظْرَةً فِى النُّجُوْمِۙ‏
فَنَظَرَ அவர் பார்த்தார் نَظْرَةً ஒரு பார்வை فِى النُّجُوْمِۙ‏ நட்சத்திரங்களின் பக்கம்
37:88. Fபனளர னள்ரதன் Fபின்னுஜூம்
37:88. பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
37:89
37:89 فَقَالَ اِنِّىْ سَقِيْمٌ‏
فَقَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் سَقِيْمٌ‏ ஒரு நோயாளி
37:89. Fபகால இன்னீ ஸகீம்
37:89. “நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.
37:90
37:90 فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِيْنَ‏
فَتَوَلَّوْا ஆகவே, அவர்கள் விலகிச் சென்றனர் عَنْهُ அவரை விட்டு مُدْبِرِيْنَ‏ முகம் திருப்பியவர்களாக
37:90. Fபதவல்லவ் 'அன்ஹு முத்Bபிரீன்
37:90. எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
37:91
37:91 فَرَاغَ اِلٰٓى اٰلِهَتِهِمْ فَقَالَ اَلَا تَاْكُلُوْنَ‌ۚ‏
فَرَاغَ ஆக, அவர் விரைந்தார் اِلٰٓى اٰلِهَتِهِمْ அவர்களின் தெய்வங்கள் பக்கம் فَقَالَ கூறினார் اَلَا تَاْكُلُوْنَ‌ۚ‏ நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?
37:91. Fபராக இலா ஆலிஹதிஹிம் Fபகால அலா த'குலூன்
37:91. அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
37:92
37:92 مَا لَـكُمْ لَا تَنْطِقُوْنَ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன ஏற்பட்டது? لَا تَنْطِقُوْنَ‏ நீங்கள் ஏன் பேசுவதில்லை
37:92. மா லகும் லா தன்திகூன்
37:92. “உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)
37:93
37:93 فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِالْيَمِيْنِ‏
فَرَاغَ பாய்ந்தார் عَلَيْهِمْ அவற்றின் மீது ضَرْبًۢا அடிப்பதற்காக بِالْيَمِيْنِ‏ வலக்கரத்தால்
37:93. Fபராக 'அலய்ஹிம் ளர்Bபம் Bபில்யமீன்
37:93. பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
37:94
37:94 فَاَقْبَلُوْۤا اِلَيْهِ يَزِفُّوْنَ‏
فَاَقْبَلُوْۤا அவர்கள் வந்தனர் اِلَيْهِ அவரை நோக்கி يَزِفُّوْنَ‏ விரைந்தவர்களாக
37:94. Fப அக்Bபலூ இலய்ஹி யZஜிFப்Fபூன்
37:94. (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
37:95
37:95 قَالَ اَتَعْبُدُوْنَ مَا تَنْحِتُوْنَۙ‏
قَالَ அவர் கூறினார் اَتَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகிறீர்களா مَا تَنْحِتُوْنَۙ‏ நீங்கள் செதுக்குகின்றவற்றை
37:95. கால அதஃBபுதூன மா தன்ஹிதூன்
37:95. அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
37:96
37:96 وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ‏
وَاللّٰهُ அல்லாஹ்தான் خَلَقَكُمْ உங்களை(யும்) படைத்தான் وَمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதையும்
37:96. வல்லாஹு கலககும் வமா தஃமலூன்
37:96. “உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
37:97
37:97 قَالُوا ابْنُوْا لَهٗ بُنْيَانًا فَاَلْقُوْهُ فِى الْجَحِيْمِ‏
قَالُوا அவர்கள் கூறினர் ابْنُوْا கட்டுங்கள் لَهٗ அவருக்கு بُنْيَانًا ஒரு கட்டிடத்தை فَاَلْقُوْهُ அவரை எறிந்து விடுங்கள் فِى الْجَحِيْمِ‏ அந்த நெருப்பில்
37:97. காலுBப் னூ லஹூ Bபுன் யானன் Fப அல்கூஹு Fபில் ஜஹீம்
37:97. அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
37:98
37:98 فَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَسْفَلِيْنَ‏
فَاَرَادُوْا அவர்கள் நாடினர் بِهٖ அவருக்கு كَيْدًا ஒரு சூழ்ச்சியை فَجَعَلْنٰهُمُ நாம் அவர்களை(த்தான்) ஆக்கினோம் الْاَسْفَلِيْنَ‏ மிகத் தாழ்ந்தவர்களாக
37:98. Fப அராதூ Bபிஹீ கய்தன் Fபஜ 'அல்னாஹுமுல் அஸ்Fபலீன்
37:98. (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
37:99
37:99 وَقَالَ اِنِّىْ ذَاهِبٌ اِلٰى رَبِّىْ سَيَهْدِيْنِ‏
وَقَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் ذَاهِبٌ செல்கிறேன் اِلٰى رَبِّىْ என் இறைவனின் பக்கம் سَيَهْدِيْنِ‏ அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்
37:99. வ கால இன்னீ தாஹிBபுன் இலா ரBப்Bபீ ஸ யஹ்தீன்
37:99. மேலும், அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”
37:100
37:100 رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏
رَبِّ என் இறைவா هَبْ لِىْ எனக்கு தா! مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
37:100. ரBப்Bபி ஹBப் லீ மினஸ் ஸாலிஹீன்
37:100. “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
37:101
37:101 فَبَشَّرْنٰهُ بِغُلٰمٍ حَلِيْمٍ‏
فَبَشَّرْنٰهُ ஆகவே, அவருக்கு நற்செய்தி கூறினோம் بِغُلٰمٍ ஒரு குழந்தையைக்கொண்டு حَلِيْمٍ‏ மிக சகிப்பாளரான
37:101. FபBபஷ்ஷர்னாஹு Bபிகுலாமின் ஹலீம்
37:101. எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
37:102
37:102 فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىْۤ اَرٰى فِى الْمَنَامِ اَنِّىْۤ اَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرٰى‌ؕ قَالَ يٰۤاَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ‌ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيْنَ‏
فَلَمَّا بَلَغَ பருவத்தை அடைந்தபோது مَعَهُ அவருடன் السَّعْىَ உழைக்கின்ற قَالَ அவர் கூறினார் يٰبُنَىَّ என் மகனே! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰى பார்க்கிறேன் فِى الْمَنَامِ கனவில் اَنِّىْۤ நிச்சயமாக நான் اَذْبَحُكَ உன்னை பலியிடுவதாக فَانْظُرْ ஆகவே, நீ யோசி مَاذَا என்ன تَرٰى‌ؕ நீ கருதுகிறாய் قَالَ அவர் கூறினார் يٰۤاَبَتِ என் தந்தையே! افْعَلْ நீர் செய்வீராக! مَا تُؤْمَرُ‌ உமக்கு ஏவப்படுவதை سَتَجِدُنِىْۤ என்னை நீர் காண்பீர் اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் مِنَ الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்களில் (ஒருவராக)
37:102. Fபலம்மா Bபலக ம'அ ஹுஸ் ஸஃய கால யா Bபுனய்ய இன்னீ அரா Fபில் மனாமி அன்னீ அத்Bபஹுக Fபன்ளுர் மாதா தரா; கால யா அBபதிFப் 'அல் மா து'மரு ஸதஜிதுனீ இன் ஷா'அல்லாஹு மினஸ் ஸாBபிரீன்
37:102. பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
37:103
37:103 فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِيْنِ‌ۚ‏
فَلَمَّاۤ اَسْلَمَا அப்போது அவர்கள் இருவரும் முற்றிலும் பணிந்தனர் وَتَلَّهٗ அவர் அவரை கீழே சாய்த்தார் لِلْجَبِيْنِ‌ۚ‏ கன்னத்தின் மீது
37:103. Fபலம்மா அஸ்லமா வ தல்லஹூ லில்ஜBபீன்
37:103. ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
37:104
37:104 وَنَادَيْنٰهُ اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏
وَنَادَيْنٰهُ நாம் அவரை அழைத்தோம் اَنْ يّٰۤاِبْرٰهِيْمُۙ‏ இப்ராஹீமே! என்று
37:104. வ னாதய்னாஹு அய் யா இBப்ரஹீம்
37:104. நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
37:105
37:105 قَدْ صَدَّقْتَ الرُّءْيَا ‌ ‌ۚ اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
قَدْ திட்டமாக صَدَّقْتَ உண்மைப்படுத்தினீர் الرُّءْيَا ۚ கனவை اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:105. கத் ஸத்தக்தர் ரு'யா; இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
37:105. “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:106
37:106 اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِيْنُ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் الْبَلٰٓؤُا சோதனையாகும் الْمُبِيْنُ‏ தெளிவான
37:106. இன்ன ஹாதா லஹுவல் Bபலா'உல் முBபீன்
37:106. “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
37:107
37:107 وَفَدَيْنٰهُ بِذِبْحٍ عَظِيْمٍ‏
وَفَدَيْنٰهُ அவரை விடுதலை செய்தோம் بِذِبْحٍ ஒரு பலிப் பிராணியைக்கொண்டு عَظِيْمٍ‏ மகத்தான
37:107. வ Fபதய்னாஹு BபிதிBப்ஹின் 'அளீம்
37:107. ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
37:108
37:108 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏
وَتَرَكْنَا عَلَيْهِ அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம் فِى الْاٰخِرِيْنَ‌ۖ‏ பின்னோரில்
37:108. வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
37:108. இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:109
37:109 سَلٰمٌ عَلٰٓى اِبْرٰهِيْمَ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلٰٓى اِبْرٰهِيْمَ‏ இப்றாஹீமுக்கு
37:109. ஸலாமுன் 'அலா இBப்ராஹீம்
37:109. “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
37:110
37:110 كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
كَذٰلِكَ இப்படித்தான் نَجْزِى நாம் கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:110. கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
37:110. இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
37:111
37:111 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:111. இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
37:111. நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:112
37:112 وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏
وَبَشَّرْنٰهُ நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம் بِاِسْحٰقَ இஸ்ஹாக்கைக் கொண்டு نَبِيًّا நபி(யாகவும்) مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் (ஒருவராகவும்)
37:112. வ Bபஷ்ஷர்னாஹு Bபி இஷ்ஹாக னBபியம் மினஸ் ஸாலிஹீன்
37:112. ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
37:113
37:113 وَبٰرَكْنَا عَلَيْهِ وَعَلٰٓى اِسْحٰقَ‌ؕ وَ مِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِيْنٌ‌
وَبٰرَكْنَا அருள் வளம் புரிந்தோம் عَلَيْهِ அவருக்கு(ம்) وَعَلٰٓى اِسْحٰقَ‌ؕ இஸ்ஹாக்கிற்கும் وَ مِنْ ذُرِّيَّتِهِمَا அவ்விருவரின் சந்ததியில் مُحْسِنٌ நல்லவரும் وَّظَالِمٌ தீங்கிழைத்தவரும் لِّنَفْسِهٖ தனக்கு مُبِيْنٌ‌‏ தெளிவாக
37:113. வ Bபாரக்னா 'அலய்ஹி வ 'அலா இஸ்ஹாக்; வ மின் துர்ரிய்ய திஹிமா முஹ்ஸினு(ன்)வ் வ ளாலிமுல் லினFப்ஸிஹீ முBபீன்
37:113. இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
37:114
37:114 وَلَقَدْ مَنَنَّا عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக مَنَنَّا அருள்புரிந்தோம் عَلٰى مُوْسٰى மூஸாவிற்கு(ம்) وَهٰرُوْنَ‌ۚ‏ ஹாரூனுக்கு
37:114. வ லகத் மனன்ன அலா மூஸா வ ஹாரூன்
37:114. மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
37:115
37:115 وَنَجَّيْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ‌ۚ‏
وَنَجَّيْنٰهُمَا அவ்விருவரையு(ம்) பாதுகாத்தோம் وَقَوْمَهُمَا அவ்விருவரின் மக்களையும் مِنَ الْكَرْبِ துக்கத்தில் இருந்து الْعَظِيْمِ‌ۚ‏ பெரிய
37:115. வ னஜ்ஜய்னாஹுமா வ கவ்மஹுமா மினல் கர்Bபில் 'அளீம்
37:115. அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
37:116
37:116 وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ‌ۚ‏
وَنَصَرْنٰهُمْ அவர்களுக்கு உதவினோம் فَكَانُوْا ஆகவே, ஆனார்கள் هُمُ அவர்கள்தான் الْغٰلِبِيْنَ‌ۚ‏ வெற்றியாளர்களாக
37:116. வ னஸர்னாஹும் Fபகானூ ஹுமுல் காலிBபீன்
37:116. மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
37:117
37:117 وَاٰتَيْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِيْنَ‌ۚ‏
وَاٰتَيْنٰهُمَا அவ்விருவருக்கும் கொடுத்தோம் الْكِتٰبَ வேதத்தை الْمُسْتَبِيْنَ‌ۚ‏ தெளிவான
37:117. வ ஆதய்னாஹுமல் கிதாBபல் முஸ்தBபீன்
37:117. அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
37:118
37:118 وَهَدَيْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ‌ۚ‏
وَهَدَيْنٰهُمَا அவ்விருவரையும் நேர்வழி நடத்தினோம் الصِّرَاطَ பாதையில் الْمُسْتَقِيْمَ‌ۚ‏ நேரான
37:118. வ ஹதய்னாஹுமுஸ் ஸிராதல் முஸ்தகீம்
37:118. இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
37:119
37:119 وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى الْاٰخِرِيْنَۙ‏
وَتَرَكْنَا நற்பெயரை ஏற்படுத்தினோம் عَلَيْهِمَا அவ்விருவருக்கும் فِى الْاٰخِرِيْنَۙ‏ பின்னோரில்
37:119. வ தரக்னா 'அலய்ஹிமா Fபில் ஆகிரீன்
37:119. இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
37:120
37:120 سَلٰمٌ عَلٰى مُوْسٰى وَهٰرُوْنَ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلٰى مُوْسٰى மூஸாவிற்கும் وَهٰرُوْنَ‏ ஹாரூனுக்கும்
37:120. ஸலாமுன் 'அலா மூஸா வ ஹாரூன்
37:120. “ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
37:121
37:121 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:121. இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
37:121. இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
37:122
37:122 اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهُمَا நிச்சயமாக அவ்விருவரும் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் உள்ளவர்கள் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:122. இன்னஹுமா மின் 'இBபாதினல் மு'மினீன்
37:122. நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
37:123
37:123 وَاِنَّ اِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏
وَاِنَّ இன்னும் நிச்சயமாக اِلْيَاسَ இல்யாஸ் لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ தூதர்களில் உள்ளவர்தான்
37:123. வ இன்ன இல்யாஸ லமினல் முர்ஸலீன்
37:123. மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
37:124
37:124 اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ‏
اِذْ قَالَ அவர் கூறிய சமயத்தை لِقَوْمِهٖۤ தனது மக்களுக்கு اَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்சிக் கொள்ள மாட்டீர்களா?
37:124. இத் கால லிகவ்மிஹீ அலா தத்தகூன்
37:124. அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
37:125
37:125 اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخٰلِقِيْنَۙ‏
اَتَدْعُوْنَ நீங்கள் வணங்குகிறீர்களா? بَعْلًا பஃலை وَّتَذَرُوْنَ விட்டுவிடுகிறீர்களா? اَحْسَنَ மிக அழகியவனை الْخٰلِقِيْنَۙ‏ படைப்பாளர்களில்
37:125. அதத்'ஊன Bபஃல(ன்)வ் வ ததரூன அஹ்ஸனல் காலிகீன்
37:125. “நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
37:126
37:126 اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏
اللّٰهَ அல்லாஹ்வை رَبَّكُمْ உங்கள் இறைவனான وَرَبَّ இன்னும் இறைவனுமான اٰبَآٮِٕكُمُ உங்கள் மூதாதைகளின் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
37:126. அல்லாஹ ரBப்Bபகும் வ ரBப்Bப ஆBபா'இகுமுல் அவ்வலீன்
37:126. “அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
37:127
37:127 فَكَذَّبُوْهُ فَاِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏
فَكَذَّبُوْهُ அவரை பொய்ப்பித்தனர் فَاِنَّهُمْ ஆகவே நிச்சயமாக அவர்கள் لَمُحْضَرُوْنَۙ‏ ஆஜர்படுத்தப்படுவார்கள்
37:127. Fபகத்தBபூஹு Fப இன்ன ஹும் லமுஹ்ளரூன்
37:127. ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
37:128
37:128 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا எனினும் عِبَادَ اللّٰهِ அல்லாஹ்வின் அடியார்கள் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:128. இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
37:128. அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
37:129
37:129 وَتَرَكْنَا عَلَيْهِ فِى الْاٰخِرِيْنَۙ‏
وَتَرَكْنَا நற்பெயரை ஏற்படுத்தினோம் عَلَيْهِ அவருக்கு فِى الْاٰخِرِيْنَۙ‏ பின்னோரில்
37:129. வ தரக்னா 'அலய்ஹி Fபில் ஆகிரீன்
37:129. மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:130
37:130 سَلٰمٌ عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏
سَلٰمٌ ஈடேற்றம் உண்டாகட்டும் عَلٰٓى اِلْ يَاسِيْنَ‏ இல்யாசுக்கு
37:130. ஸலாமுன் 'அலா இல்யாஸீன்
37:130. “ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
37:131
37:131 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இப்படித்தான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லவர்களுக்கு
37:131. இன்னா கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
37:131. இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
37:132
37:132 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களான
37:132. இன்னஹூ மின் 'இBபாதினல் மு'மினீன்
37:132. நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:133
37:133 وَاِنَّ لُوْطًا لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏
وَاِنَّ நிச்சயமாக لُوْطًا லூத் لَّمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ தூதர்களில்
37:133. வ இன்ன லூதல் லமினல் முர்ஸலீன்
37:133. மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
37:134
37:134 اِذْ نَجَّيْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏
اِذْ نَجَّيْنٰهُ நாம் அவரை(யும்) பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக! وَاَهْلَهٗۤ அவரது குடும்பத்தாரையும் اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
37:134. இத் னஜ்ஜய்னாஹு வ அஹ்லஹூ அஜ்ம'ஈன்
37:134. அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
37:135
37:135 اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‏
اِلَّا தவிர عَجُوْزًا ஒரு மூதாட்டியை فِى الْغٰبِرِيْنَ‏ தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)
37:135. இல்லா 'அஜூZஜன் Fபில் காBபிரீன்
37:135. பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
37:136
37:136 ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‏
ثُمَّ பிறகு دَمَّرْنَا நாம் அழித்தோம் الْاٰخَرِيْنَ‏ மற்றவர்களை
37:136. தும்ம தம்மர்னல் ஆகரீன்
37:136. பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
37:137
37:137 وَاِنَّكُمْ لَتَمُرُّوْنَ عَلَيْهِمْ مُّصْبِحِيْنَۙ‏
وَاِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَتَمُرُّوْنَ கடந்து செல்கிறீர்கள் عَلَيْهِمْ அவர்களை مُّصْبِحِيْنَۙ‏ காலையிலும்
37:137. வ இன்னகும் லதமுர்ரூன 'அலய்ஹிம் முஸ்Bபிஹீன்
37:137. இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
37:138
37:138 وَبِالَّيْلِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‌
وَبِالَّيْلِ‌ؕ இரவிலும் اَفَلَا تَعْقِلُوْنَ‌‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
37:138. வ Bபில்லய்ல்; அFபலா தஃகிலூன்
37:138. இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?  
37:139
37:139 وَاِنَّ يُوْنُسَ لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏
وَاِنَّ நிச்சயமாக يُوْنُسَ யூனுஸ் لَمِنَ الْمُرْسَلِيْنَؕ‏ தூதர்களில் உள்ளவர்தான்
37:139. வ இன்ன யூனுஸ லமினல் முர்ஸலீன்
37:139. மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
37:140
37:140 اِذْ اَبَقَ اِلَى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ‏
اِذْ اَبَقَ அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக اِلَى الْفُلْكِ கப்பலை நோக்கி الْمَشْحُوْنِۙ‏ நிரம்பிய(து)
37:140. இத் அBபக இலல் Fபுல்கில் மஷ் ஹூன்
37:140. நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
37:141
37:141 فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِيْنَ‌ۚ‏
فَسَاهَمَ குலுக்கிப் போட்டார் فَكَانَ ஆகிவிட்டார் مِنَ الْمُدْحَضِيْنَ‌ۚ‏ குலுக்கலில் பெயர்வந்தவர்களில்
37:141. Fபஸாஹம Fபகான மினல் முத்ஹளீன்
37:141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
37:142
37:142 فَالْتَقَمَهُ الْحُوْتُ وَهُوَ مُلِيْمٌ‏
فَالْتَقَمَهُ அவரை விழுங்கியது الْحُوْتُ திமிங்கிலம் وَهُوَ அவர் مُلِيْمٌ‏ பழிப்புக்குரியவர்
37:142. Fபல்தகமஹுல் ஹூது வ ஹுவ முலீம்
37:142. ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
37:143
37:143 فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏
فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ நிச்சயமாக அவர் இருந்திருக்கவில்லை என்றால் مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏ துதிப்பவர்களில்
37:143. Fபலவ் லா அன்னஹூ கான மினல் முஸBப்Bபிஹீன்
37:143. ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
37:144
37:144 لَلَبِثَ فِىْ بَطْنِهٖۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‌ۚ‏
لَلَبِثَ தங்கி இருந்திருப்பார் فِىْ بَطْنِهٖۤ அதனுடைய வயிற்றில் اِلٰى يَوْمِ நாள் வரை يُبْعَثُوْنَ‌ۚ‏ எழுப்பப்படுகின்ற
37:144. லலBபித Fபீ Bபத்னிஹீ இலா யவ்மி யுBப்'அதூன்
37:144. (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
37:145
37:145 فَنَبَذْنٰهُ بِالْعَرَآءِ وَهُوَ سَقِيْمٌ‌ۚ‏
فَنَبَذْنٰهُ அவரை எறிந்தோம் بِالْعَرَآءِ பெருவெளியில் وَهُوَ அவர் سَقِيْمٌ‌ۚ‏ நோயுற்றவராக இருந்தார்
37:145. FபனBபத்னாஹு Bபில்'அரா'இ வ ஹுவ ஸகீம்
37:145. ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
37:146
37:146 وَاَنْۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّنْ يَّقْطِيْنٍ‌ۚ‏
وَاَنْۢبَتْنَا முளைக்க வைத்தோம் عَلَيْهِ அவருக்கு அருகில் شَجَرَةً ஒரு செடியை مِّنْ يَّقْطِيْنٍ‌ۚ‏ சுரைக்காய்
37:146. வ அம்Bபத்னா 'அலய்ஹி ஷஜரதம் மி யக்தீன்
37:146. அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
37:147
37:147 وَاَرْسَلْنٰهُ اِلٰى مِائَةِ اَلْفٍ اَوْ يَزِيْدُوْنَ‌ۚ‏
وَاَرْسَلْنٰهُ அவரைஅனுப்பினோம் اِلٰى مِائَةِ اَلْفٍ ஒரு இலட்சம் اَوْ அல்லது يَزِيْدُوْنَ‌ۚ‏ அதிகமானவர்களுக்கு
37:147. வ அர்ஸல்னாஹு இலா மி'அதி அல்Fபின் அவ் யZஜீதூன்
37:147. மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
37:148
37:148 فَاٰمَنُوْا فَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍؕ‏
فَاٰمَنُوْا நம்பிக்கைகொண்டனர் فَمَتَّعْنٰهُمْ ஆகவே, நாம் அவர்களுக்கு சுகமளித்தோம் اِلٰى حِيْنٍؕ‏ ஒரு காலம் வரை
37:148. Fப ஆமனூ Fபமத்தஃ னாஹும் இலா ஹீன்
37:148. ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.  
37:149
37:149 فَاسْتَفْتِهِمْ اَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُوْنَۙ‏
فَاسْتَفْتِهِمْ ஆகவே, அவர்களிடம் கேட்பீராக! اَلِرَبِّكَ உமது இறைவனுக்கு الْبَنَاتُ பெண் பிள்ளைகளும் وَلَهُمُ அவர்களுக்கு الْبَنُوْنَۙ‏ ஆண் பிள்ளைகளுமா
37:149. Fபஸ்தFப்திஹிம் அலி ரBப்Bபிகல் Bபனாது வ லஹுமுல் Bபனூன்
37:149. (நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
37:150
37:150 اَمْ خَلَقْنَا الْمَلٰٓٮِٕكَةَ اِنَاثًا وَّهُمْ شٰهِدُوْنَ‏
اَمْ ? خَلَقْنَا நாம் படைத்தோம் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை اِنَاثًا பெண்களாகவா وَّهُمْ அவர்கள் شٰهِدُوْنَ‏ பார்த்துக்கொண்டு இருந்தார்களா?
37:150. அம் கலக்னல் மலா'இ கத இனாத(ன்)வ் வ ஹும் ஷாஹிதூன்
37:150. அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
37:151
37:151 اَلَاۤ اِنَّهُمْ مِّنْ اِفْكِهِمْ لَيَقُوْلُوْنَۙ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مِّنْ اِفْكِهِمْ தங்களது பெரும் பொய்யில் لَيَقُوْلُوْنَۙ‏ அவர்கள் கூறுகின்றனர்
37:151. அலா இன்னஹும் மின் இFப்கிஹிம் ல யகூலூன்
37:151. “அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
37:152
37:152 وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
وَلَدَ اللّٰهُۙ அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்
37:152. வலதல் லாஹு வ இன்னஹும் லகாதிBபூன்
37:152. “அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
37:153
37:153 اَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِيْنَؕ‏
اَصْطَفَى அவன் தேர்தெடுத்துக் கொண்டானா? الْبَنَاتِ பெண் பிள்ளைகளை عَلَى الْبَنِيْنَؕ‏ ஆண் பிள்ளைகளை விட
37:153. அஸ்தFபல் Bபனாதி 'அலல் Bபனீன்
37:153. (அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
37:154
37:154 مَا لَـكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன? كَيْفَ எப்படி تَحْكُمُوْنَ‏ தீர்ப்பளிக்கிறீர்கள்
37:154. மா லகும் கய்Fப தஹ்குமூன்
37:154. உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
37:155
37:155 اَفَلَا تَذَكَّرُوْنَ‌ۚ‏
اَفَلَا تَذَكَّرُوْنَ‌ۚ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
37:155. அFபலா ததக்கரூன்
37:155. நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
37:156
37:156 اَمْ لَـكُمْ سُلْطٰنٌ مُّبِيْنٌۙ‏
اَمْ لَـكُمْ உங்களிடம் ஏதும் இருக்கிறதா? سُلْطٰنٌ ஆதாரம் مُّبِيْنٌۙ‏ தெளிவான
37:156. அம் லகும் ஸுல்தானும் முBபீன்
37:156. அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
37:157
37:157 فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
فَاْتُوْا بِكِتٰبِكُمْ உங்கள் வேதத்தை கொண்டு வாருங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
37:157. Fபா'தூ Bபி கிதாBபிகும் இன் குன்தும் ஸாதிகீன்
37:157. நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
37:158
37:158 وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ‌ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَۙ‏
وَجَعَلُوْا அவர்கள் ஏற்படுத்தினர் بَيْنَهٗ அவனுக்கு இடையில் وَبَيْنَ இன்னும் இடையில் الْجِنَّةِ ஜின்களுக்கு نَسَبًا ؕ ஓர் உறவை وَلَقَدْ திட்டவட்டமாக عَلِمَتِ அறிந்து கொண்டனர் الْجِنَّةُ ஜின்கள் اِنَّهُمْ நிச்சயமாக தாங்கள் لَمُحْضَرُوْنَۙ‏ ஆஜர்படுத்தப்படுவோம்
37:158. வ ஜ'அலூ Bபய்னஹூ வ Bபய்னல் ஜின்னதி னஸBபா; வ லகத் 'அலிமதில் ஜின்னது இன்னஹும் லமுஹ்ளரூன்
37:158. அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
37:159
37:159 سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يَصِفُوْنَۙ‏ அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
37:159. ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யஸிFபூன்
37:159. எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
37:160
37:160 اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا தவிர عِبَادَ அடியார்களை اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:160. இல்லா 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
37:160. அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
37:161
37:161 فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَۙ‏
فَاِنَّكُمْ நிச்சயமாக நீங்களும் وَمَا تَعْبُدُوْنَۙ‏ நீங்கள் வணங்குகின்றவையும்
37:161. Fப இன்னகும் வமா தஃBபுதூன்
37:161. ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
37:162
37:162 مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ بِفٰتِنِيْنَۙ‏
مَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை عَلَيْهِ அதன் மூலம் بِفٰتِنِيْنَۙ‏ வழி கெடுப்பவர்களாக
37:162. மா அன்தும் 'அலய்ஹி Bபி Fபாதினீன்
37:162. (எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
37:163
37:163 اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيْمِ‏
اِلَّا தவிர مَنْ هُوَ صَالِ எரிந்து பொசுங்குகின்றவரை الْجَحِيْمِ‏ நரகத்தில்
37:163. இல்லா மன் ஹுவ ஸாலில் ஜஹீம்
37:163. நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
37:164
37:164 وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌۙ‏
وَمَا مِنَّاۤ எங்களில் (யாரும்) இல்லை اِلَّا لَهٗ அவருக்கு இருந்தே தவிர مَقَامٌ தகுதி مَّعْلُوْمٌۙ‏ ஒரு குறிப்பிட்ட(து)
37:164. வமா மின்னா இல்லா லஹூ மகாமுன் மஃலூம்
37:164. (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”
37:165
37:165 وَّاِنَّا لَـنَحْنُ الصَّآفُّوْنَ‌ۚ‏
وَّاِنَّا لَـنَحْنُ நிச்சயமாக நாங்கள்தான் الصَّآفُّوْنَ‌ۚ‏ அணிவகுப்பவர்கள்
37:165. வ இன்னா லனஹ் னுஸ் ஸாFப்Fபூன்
37:165. “நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
37:166
37:166 وَاِنَّا لَـنَحْنُ الْمُسَبِّحُوْنَ‏
وَاِنَّا لَـنَحْنُ நிச்சயமாக நாங்கள்தான் الْمُسَبِّحُوْنَ‏ துதித்து தொழுபவர்கள்
37:166. வ இன்னா லனஹ் னுல் முஸBப்Bபிஹூன்
37:166. “மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”
37:167
37:167 وَاِنْ كَانُوْا لَيَقُوْلُوْنَۙ‏
وَاِنْ كَانُوْا நிச்சயமாக இருந்தனர் لَيَقُوْلُوْنَۙ‏ கூறுகின்றவர்களாக
37:167. வ இன் கானூ ல யகூலூன்
37:167. (நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்:
37:168
37:168 لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِيْنَۙ‏
لَوْ اَنَّ عِنْدَنَا நிச்சயமாக எங்களிடம் இருந்திருந்தால் ذِكْرًا வேதம் مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ முன்னோரிடம்இருந்த
37:168. லவ் அன்ன 'இன்தனா திக்ரம் மினல் அவ்வலீன்
37:168. “முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
37:169
37:169 لَـكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِيْنَ‏
لَـكُنَّا நாங்கள் ஆகியிருப்போம் عِبَادَ அடியார்களாக اللّٰهِ அல்லாஹ்வின் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான
37:169. லகுன்ன 'இBபாதல் லாஹில் முக்லஸீன்
37:169. “அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.
37:170
37:170 فَكَفَرُوْا بِهٖ‌ فَسَوْفَ يَعْلَمُوْنَ‏
فَكَفَرُوْا بِهٖ‌ அதை அவர்கள் நிராகரித்து விட்டனர் فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்
37:170. FபகFபரூ Bபிஹீ Fபஸவ்Fப யஃலமூன்
37:170. ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
37:171
37:171 وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِيْنَ ‌ۖ‌ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக سَبَقَتْ முந்தி விட்டது كَلِمَتُنَا நமது வாக்கு لِعِبَادِنَا நமதுஅடியார்களுக்கு الْمُرْسَلِيْنَ ۖ‌ۚ‏ தூதர்களான
37:171. வ லகத் ஸBபகத் கலிமதுனா லி'இBபாதினல் முர்ஸ லீன்
37:171. தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
37:172
37:172 اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ‏
اِنَّهُمْ لَهُمُ நிச்சயமாக அவர்கள்தான் الْمَنْصُوْرُوْنَ ‏ உதவப்படுவார்கள்
37:172. இன்னா ஹும் லஹுமுல் மன்ஸூரூன்
37:172. (அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
37:173
37:173 وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக جُنْدَنَا நமது இராணுவம்தான் لَهُمُ அவர்கள்தான் الْغٰلِبُوْنَ‏ வெற்றி பெறுபவர்கள்
37:173. வ இன்ன ஜுன்தன லஹுமுல் காலிBபூன்
37:173. மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
37:174
37:174 فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ‏
فَتَوَلَّ ஆகவே, விலகி இருப்பீராக! عَنْهُمْ அவர்களை விட்டு حَتّٰى حِيْنٍۙ‏ சிறிது காலம் வரை
37:174. Fபதவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
37:174. (ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
37:175
37:175 وَاَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُوْنَ‏
وَاَبْصِرْ (நீரும்) பார்ப்பீராக! هُمْ அவர்களை فَسَوْفَ يُبْصِرُوْنَ‏ விரைவில் பார்ப்பார்கள்
37:175. வ அBப்ஸிர்ஹும் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
37:175. (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
37:176
37:176 اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ‏
اَفَبِعَذَابِنَا ?/நமது வேதனையை يَسْتَعْجِلُوْنَ‏ அவசரமாக வேண்டுகின்றனர்
37:176. அFபBபி'அதாBபினா யஸ்தஃஜிலூன்
37:176. நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
37:177
37:177 فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ‏
فَاِذَا نَزَلَ அது இறங்கிவிட்டால் بِسَاحَتِهِمْ அவர்களின் முற்றத்தில் فَسَآءَ மிக கெட்டதாக இருக்கும் صَبَاحُ காலை الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
37:177. Fப இதா னZஜல Bபிஸாஹதிஹிம் Fபஸா'அ ஸBபாஹுல் முன்தரீன்
37:177. (அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
37:178
37:178 وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰى حِيْنٍۙ‏
وَتَوَلَّ عَنْهُمْ அவர்களை விட்டு விலகி இருப்பீராக! حَتّٰى حِيْنٍۙ‏ சிறிது காலம் வரை
37:178. வ தவல்ல 'அன்ஹும் ஹத்தா ஹீன்
37:178. ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
37:179
37:179 وَّاَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُوْنَ‏
وَّاَبْصِرْ (நீரும்) அவர்களைப் பார்ப்பீராக! فَسَوْفَ يُبْصِرُوْنَ‏ (விரைவில்) பார்ப்பார்கள்
37:179. வ அBப்ஸிர் Fபஸவ்Fப யுBப்ஸிரூன்
37:179. (அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
37:180
37:180 سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ‌ۚ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّكَ உமது இறைவன் رَبِّ அதிபதியான الْعِزَّةِ கண்ணியத்தின் عَمَّا يَصِفُوْنَ‌ۚ‏ அவர்கள் வர்ணிப்பதை விட்டும்
37:180. ஸுBப்ஹான ரBப்Bபிக ரBப்Bபில் 'இZஜ்Zஜதி 'அம்ம யஸிFபூன்
37:180. அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
37:181
37:181 وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ‌ۚ‏
وَسَلٰمٌ ஈடேற்றம் உண்டாகுக! عَلَى الْمُرْسَلِيْنَ‌ۚ‏ இறைத் தூதர்களுக்கு
37:181. வ ஸலாமுன் 'அலல்முர்ஸலீன்
37:181. மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
37:182
37:182 وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‌
وَالْحَمْدُ புகழும் உண்டாகுக! لِلّٰهِ அல்லாஹ்விற்கு رَبِّ அதிபதியான الْعٰلَمِيْنَ‌‏ அகிலங்களின்
37:182. வல்ஹம்து லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
37:182. வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).