46. ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)
மக்கீ, வசனங்கள்: 35

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
46:1
46:1 حٰمٓ‏
حٰمٓ‏ ஹா மீம்
46:1. ஹா-மீம்
46:1. ஹா, மீம்.
46:2
46:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏
تَنْزِيْلُ இறக்கப்படுகிறது الْكِتٰبِ இந்த வேதம் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَكِيْمِ‏ மகா ஞானவான்
46:2. தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில்-'அZஜீZஜில் ஹகீம்
46:2. இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
46:3
46:3 مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّى‌ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا عَمَّاۤ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ‏
مَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَاۤ அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் اِلَّا தவிர بِالْحَقِّ உண்மையான காரணத்திற்கு(ம்) وَاَجَلٍ مُّسَمًّى‌ؕ ஒரு குறிப்பிட்ட தவணைக்கும் وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் عَمَّاۤ اُنْذِرُوْا அவர்கள் எச்சரிக்கப்பட்டதை مُعْرِضُوْنَ‏ புறக்கணிக்கின்றார்கள்
46:3. மா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில்ஹக்கி வ அஜலிம் முஸம்மா; வல்லதீன கFபரூ 'அம்மா உன்திரூ முஃரிளூன்
46:3. வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை; ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
46:4
46:4 قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ؕ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ நீர் கூறுவீராக! اَرَءَيْتُمْ அறிவியுங்கள்! مَّا تَدْعُوْنَ நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَرُوْنِىْ எனக்கு காண்பியுங்கள் مَاذَا எதை خَلَقُوْا படைத்தார்கள் مِنَ الْاَرْضِ பூமியில் اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு شِرْكٌ பங்கு فِى السَّمٰوٰتِ‌ؕ வானங்களில் اِیْتُوْنِىْ بِكِتٰبٍ ஒரு வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள் مِّنْ قَبْلِ هٰذَاۤ இதற்கு முன்னுள்ள اَوْ அல்லது اَثٰرَةٍ மீதமிருப்பதை مِّنْ عِلْمٍ கல்வியில் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
46:4. குல் அர'அய்தும் மா தத்'ஊன மின் தூனில் லாஹி அரூனீ மாதா கலகூ மினல் அர்ளி அம் லஹும் ஷிர்குன் Fபிஸ் ஸமாவாதி ஈதூனீ Bபி கிதாBபிம் மின் கBப்லி ஹாதா அவ் அதாரதிம் மின் 'இல்மின் இன் குன்தும் ஸாதிகீன்
46:4. “நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
46:5
46:5 وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ‏
وَمَنْ யார்? اَضَلُّ மிகப் பெரிய வழிகேடர்கள் مِمَّنْ يَّدْعُوْا அழைக்கின்ற வர்களை விட مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَنْ لَّا يَسْتَجِيْبُ பதில் அளிக்க மாட்டார்கள் لَهٗۤ அவர்களுக்கு اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் வரை وَهُمْ அவர்கள் عَنْ دُعَآٮِٕهِمْ அவர்களின்துஆவை غٰفِلُوْنَ‏ அறியமாட்டார்கள்
46:5. வ மன் அளல்லு மிம்ம(ன்)ய் யத்'ஊ மின் தூனில் லாஹி மல்லா யஸ்தஜீBபு லஹூ இலா யவ்மில் கியாமதி வ ஹும்'அன் து'ஆ'இஹிம் காFபிலூன்
46:5. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
46:6
46:6 وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّ كَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِيْنَ‏
وَاِذَا حُشِرَ எழுப்பப்படும் போது النَّاسُ மக்கள் كَانُوْا ஆகிவிடுவார்கள் لَهُمْ அவர்களுக்கு اَعْدَآءً எதிரிகளாக وَّ كَانُوْا இன்னும் ஆகிவிடுவார்கள் بِعِبَادَتِهِمْ அவர்கள் தங்களை வணங்கியதை كٰفِرِيْنَ‏ மறுப்பவர்களாக
46:6. வ இதா ஹுஷிரன் னாஸு கானூ லஹும் அஃதா'அ(ன்)வ் வ கானூ Bபி'இBபாததிஹிம் காFபிரீன்
46:6. அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.
46:7
46:7 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْۙ هٰذَا سِحْرٌ مُّبِيْنٌؕ‏
وَاِذَا تُتْلٰى ஓதிக் காண்பிக்கப்பட்டால் عَلَيْهِمْ இவர்கள் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான அத்தாட்சிகளாக قَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلْحَقِّ சத்தியத்தைப் பார்த்து لَمَّا جَآءَ அது வந்த போது هُمْۙ அவர்களிடம் هٰذَا இது سِحْرٌ சூனியமாகும் مُّبِيْنٌؕ‏ தெளிவான
46:7. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன கFபரூ லில்ஹக்கி லம்மா ஜா'அஹும் ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
46:7. மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், “இது தெளிவான சூனியமே!” என்றும் கூறுகிறார்கள்.
46:8
46:8 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ؕ قُلْ اِنِ افْتَـرَيْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِىْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ هُوَ اَعْلَمُ بِمَا تُفِيْضُوْنَ فِيْهِ‌ؕ كَفٰى بِهٖ شَهِيْدًاۢ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
اَمْ يَقُوْلُوْنَ கூறுகிறார்களா? افْتَـرٰٮهُ‌ؕ இவர் இதை இட்டுக்கட்டினார் قُلْ கூறுவீராக! اِنِ افْتَـرَيْتُهٗ நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் فَلَا تَمْلِكُوْنَ நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள் لِىْ எனக்காக مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து شَیْـًٔا ؕ எதையும் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை تُفِيْضُوْنَ நீங்கள் ஈடுபடுகிறீர்களோ فِيْهِ‌ؕ அதில் كَفٰى போதுமானவன் بِهٖ அவனே شَهِيْدًاۢ சாட்சியால் بَيْنِىْ எனக்கு மத்தியிலும் وَبَيْنَكُمْ‌ ؕ உங்களுக்கு மத்தியிலும் وَهُوَ அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
46:8. அம் யகூலூனFப் தராஹு குல் இனிFப் தரய்துஹூ Fபலா தம்லிகூன லீ மினல் லாஹி ஷய்'அன் ஹுவ அஃலமு Bபிமா துFபீளூன Fபீஹி கFபா Bபிஹீ ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும் வ ஹுவல் கFபூருர் ரஹீம்
46:8. அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக: “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்).
46:9
46:9 قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِىْ مَا يُفْعَلُ بِىْ وَلَا بِكُمْؕ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ‏
قُلْ கூறுவீராக! مَا كُنْتُ நான் இருக்கவில்லை بِدْعًا புதுமையானவனாக مِّنَ الرُّسُلِ தூதர்களில் وَمَاۤ اَدْرِىْ அறியமாட்டேன் مَا يُفْعَلُ என்ன செய்யப்படும் بِىْ எனக்கு وَلَا بِكُمْؕ இன்னும் உங்களுக்கு اِنْ اَتَّبِعُ பின்பற்ற மாட்டேன் اِلَّا தவிர مَا எது يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகின்றது اِلَىَّ எனக்கு وَمَاۤ اَنَا اِلَّا நான் இல்லை/தவிர نَذِيْرٌ எச்சரிப்பாளராகவே مُّبِيْنٌ‏ தெளிவான
46:9. குல் மா குன்து Bபித்'அம் மினல் ருஸுலி வ மா அத்ரீ ம யுFப்'அலு Bபீ வலா Bபிகும் இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய வ மா அன இல்லா னதீரும் முBபீன்
46:9. “(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
46:10
46:10 قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ كَانَ இது இருந்தால் مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَكَفَرْتُمْ இன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால் بِهٖ இதை وَشَهِدَ இன்னும் சாட்சியும் கூறினார் شَاهِدٌ ஒரு சாட்சியாளர் مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் உள்ள عَلٰى مِثْلِهٖ இதுபோன்ற ஒன்றுக்கு فَاٰمَنَ அவர் நம்பிக்கை கொண்டிருக்க وَاسْتَكْبَرْتُمْ‌ ؕ நீங்களோ பெருமை அடித்தீர்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி காட்ட மாட்டான் الْقَوْمَ மக்களுக்கு الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார(ர்கள்)
46:10. குல் அர'அய்தும் இன் கான மின் 'இன்தில் லாஹி வ கFபர்தும் Bபிஹீ வ ஷஹித ஷாஹிதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா மித்லிஹீ Fப ஆமன வஸ்தக் Bபர்தும் இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
46:10. “இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.  
46:11
46:11 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَيْهِ‌ ؕ وَاِذْ لَمْ يَهْتَدُوْا بِهٖ فَسَيَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِيْمٌ‏
وَقَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி لَوْ كَانَ خَيْرًا இது சிறந்ததாக இருந்தால் مَّا سَبَقُوْنَاۤ இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள் اِلَيْهِ‌ ؕ இதனளவில் وَاِذْ لَمْ يَهْتَدُوْا அவர்கள் நேர்வழி பெறாமல் போனபோது بِهٖ இதன் மூலம் فَسَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் هٰذَاۤ இது اِفْكٌ பொய்யாகும் قَدِيْمٌ‏ பழைய(து)
46:11. வ காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ லவ் கான கய்ரம் மா ஸBபகூனா இல்ய்ஹ்; வ இத் லம் யஹ்ததூ Bபிஹீ Fபஸ யகூலூன ஹாதா இFப்குன் கதீம்
46:11. நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி: “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள்.
46:12
46:12 وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً  ‌ ؕ وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنْذِرَ الَّذِيْنَ ظَلَمُوْا ‌ۖ  وَبُشْرٰى لِلْمُحْسِنِيْنَ‌ۚ‏
وَمِنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் كِتٰبُ مُوْسٰٓى மூஸாவின் வேதம் اِمَامًا ஒரு முன்னோடியாக(வும்) وَّرَحْمَةً  ؕ அருளாகவும் وَهٰذَا இதுவோ كِتٰبٌ ஒரு வேதமாகும் مُّصَدِّقٌ மெய்ப்பிக்கக்கூடிய(து) لِّسَانًا عَرَبِيًّا அரபி மொழியில் لِّيُنْذِرَ எச்சரிப்பதற்காக(வும்) الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களை ۖ  وَبُشْرٰى நற்செய்தியாகவும் لِلْمُحْسِنِيْنَ‌ۚ‏ நல்லவர்களுக்கு
46:12. வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ்-வ ரஹ்மஹ்; வ ஹாதா கிதாBபும் முஸத் திகுல் லிஸானன் 'அரBபிய்யல் லியுன்திரல் லதீன ளலமூ வ Bபுஷ்ரா லில்முஹ்ஸினீன்
46:12. இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
46:13
46:13 اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் قَالُوْا கூறினார்கள் رَبُّنَا எங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ்தான் ثُمَّ பிறகு اسْتَقَامُوْا உறுதியாக இருந்தார்களோ فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۚ‏ இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
46:13. இன்னல் லதீன காலூ ரBப்Bபுனல் லாஹு தும்மஸ் தகாமூ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வ லாஹும் யஹ்Zஜனூன்
46:13. நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
46:14
46:14 اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِيْنَ فِيْهَا‌ ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَنَّةِ சொர்க்கவாசிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாக இருப்பார்கள் فِيْهَا‌ ۚ அதில் جَزَآءًۢ கூலியாக بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு
46:14. உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி காலிதீன Fபீஹா ஜZஜா'அம் Bபிமா கானூ யஃமலூன்
46:14. அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.
46:15
46:15 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌ ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌ ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌ ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏
وَوَصَّيْنَا நாம் உபதேசித்தோம் الْاِنْسَانَ மனிதனுக்கு بِوَالِدَيْهِ தன் பெற்றோருக்கு اِحْسَانًا‌ ؕ நன்மை செய்வதற்கு حَمَلَـتْهُ அவனை சுமந்தாள் اُمُّهٗ அவனது தாய் كُرْهًا சிரமத்துடன் وَّوَضَعَتْهُ இன்னும் அவனை ஈன்றெடுத்தாள் كُرْهًا‌ ؕ சிரமத்துடன் وَحَمْلُهٗ அவனை சுமந்ததும் وَفِصٰلُهٗ இன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும் ثَلٰـثُوْنَ முப்பது شَهْرًا‌ ؕ மாதங்களாகும் حَتّٰٓى இறுதியாக اِذَا بَلَغَ அவன் அடைந்து (விட்டால்) اَشُدَّهٗ தனது வாலிபத்தை وَبَلَغَ இன்னும் அடைந்து(விட்டால்) اَرْبَعِيْنَ நாற்பது سَنَةً  ۙ வயதை قَالَ அவன் கூறுகிறான் رَبِّ என் இறைவா اَوْزِعْنِىْۤ என்னை தூண்டுவாயாக اَنْ اَشْكُرَ நான் நன்றி செலுத்துவதற்கு(ம்) نِعْمَتَكَ உனது அருளுக்கு الَّتِىْۤ எது اَنْعَمْتَ நீ அருள் புரிந்தாய் عَلَىَّ என்மீது(ம்) وَعَلٰى மீதும் وَالِدَىَّ என் பெற்றோர் وَاَنْ اَعْمَلَ நான் செய்வதற்கும் صَالِحًا நல்ல அமலை تَرْضٰٮهُ அதை நீ திருப்திபடுகின்றாய் وَاَصْلِحْ இன்னும் சீர்திருத்தம் செய் لِىْ எனக்கு فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ என் சந்ததியில் اِنِّىْ நிச்சயமாக நான் تُبْتُ திரும்பி விட்டேன் اِلَيْكَ உன் பக்கம் وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில் ஒருவனாவேன்
46:15. வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி இஹ்ஸான; ஹமலத் ஹு உம்முஹூ குர்ஹ(ன்)வ்-வ வள'அத் ஹு குர்ஹ(ன்)வ் வ ஹம்லுஹூ வ Fபிஸாலுஹூ தலாதூன ஷஹ்ரா; ஹத்தா இதா Bபலக அஷுத்தஹூ வ Bபலக அர்Bப'ஈன ஸனதன் கால ரBப்Bபி அவ்Zஜிஃ னீ அன் அஷ்குர னிஃமதகல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அஸ்லிஹ் லீ Fபீ துர்ரிய்யதீ; இன்னீ துBப்து இலய்க வ இன்னீ மினல் முஸ்லிமீன்
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
46:16
46:16 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ نَـتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَـتَجَاوَزُ عَنْ سَيِّاٰتِهِمْ فِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ‌ ؕ وَعْدَ الصِّدْقِ الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எப்படிப்பட்டவர்கள் نَـتَقَبَّلُ ஏற்றுக் கொள்வோம் عَنْهُمْ இவர்களிடமிருந்து اَحْسَنَ மிக அழகானதை مَا عَمِلُوْا இவர்கள் செய்தவற்றில் وَنَـتَجَاوَزُ இன்னும் மன்னித்து விடுவோம் عَنْ سَيِّاٰتِهِمْ இவர்களின் பாவங்களை فِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ‌ ؕ சொர்க்க வாசிகளில் وَعْدَ الصِّدْقِ உண்மையான வாக்காகும் الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏ எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
46:16. உலா'இகல் லதீன னத கBப்Bபலு 'அன்ஹும் அஹ்ஸன மா 'அமிலூ வ னதஜாவZஜு 'அன் ஸய்யிஆதிஹிம் Fபீ அஸ்ஹாBபில் ஜன்னதி வஃதஸ் ஸித்கில் லதீ கானூ யூ'அதூன்
46:16. சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
46:17
46:17 وَالَّذِىْ قَالَ لِـوَالِدَيْهِ اُفٍّ لَّكُمَاۤ اَتَعِدٰنِنِىْۤ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِىْ‌ ۚ وَهُمَا يَسْتَغِيْثٰنِ اللّٰهَ وَيْلَكَ اٰمِنْ ۖ  اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ  ۖۚ فَيَقُوْلُ مَا هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
وَالَّذِىْ எவர் قَالَ கூறினார் لِـوَالِدَيْهِ தனது பெற்றோரை நோக்கி اُفٍّ “சீ” لَّكُمَاۤ உங்கள் இருவருக்கும் اَتَعِدٰنِنِىْۤ என்னை எச்சரிக்கிறீர்களா? اَنْ اُخْرَجَ நான் வெளியேற்றப்படுவேன் وَقَدْ திட்டமாக خَلَتِ சென்றுள்ளனர் الْقُرُوْنُ பல தலைமுறைகள் مِنْ قَبْلِىْ‌ ۚ எனக்கு முன்னர் وَهُمَا அவ்விருவரும் يَسْتَغِيْثٰنِ உதவி தேடுகின்றனர் اللّٰهَ அல்லாஹ்விடம் وَيْلَكَ உனக்கு என்ன கேடு! اٰمِنْ நீ நம்பிக்கை கொள்! ۖ  اِنَّ وَعْدَ நிச்சயமாக வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ  ۖۚ உண்மையானதே! فَيَقُوْلُ அவன் கூறுகிறான் مَا هٰذَاۤ இது இல்லை اِلَّاۤ اَسَاطِيْرُ கதைகளே தவிர الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
46:17. வல்லதீ கால லிவாலி தய்ஹி உFப்Fபில் லகுமா அத'இதனினீ அன் உக்ரஜ வ கத் கலதில் குரூனு மின் கBப்லீ வ ஹுமா யஸ்தகீதானில் லாஹ வய்லக ஆமின் இன்ன வஃதல் லாஹி ஹக்க், Fப யகூலு மா ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
46:17. ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; “சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!” என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) “உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது” என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் “இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகிறான்.
46:18
46:18 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ؕ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் حَقَّ உறுதியாகிவிட்டது عَلَيْهِمُ இவர்கள் மீதும் الْقَوْلُ வாக்கு فِىْۤ اُمَمٍ சமுதாயங்களுடன் قَدْ திட்டமாக خَلَتْ சென்றுவிட்ட(னர்) مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ‌ؕ மற்றும் மனித(ர்கள்) اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا இருக்கின்றனர் خٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளாகவே
46:18. உலா'இகல் லதீன ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிஹிம் மினல் ஜின்னி வல் இன்ஸி இன்னஹும் கானூ காஸிரீன்
46:18. இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
46:19
46:19 وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا‌ ۚ وَلِيُوَفِّيَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلِكُلٍّ எல்லோருக்கும் دَرَجٰتٌ தகுதிகள் உண்டு مِّمَّا عَمِلُوْا‌ ۚ அவர்கள் செய்தவற்றின் அடிப்படையில் وَلِيُوَفِّيَهُمْ இன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான் اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களுக்கு وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
46:19. வ லிகுல்லின் தரஜாதும் மிம்மா 'அமிலூ வ லியுவFப் Fபியஹும் அஃமாலஹும் வ ஹும் லா யுள்லமூன்
46:19. அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
46:20
46:20 وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَيِّبٰـتِكُمْ فِىْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ‌ۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْـتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ
وَيَوْمَ يُعْرَضُ சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் عَلَى النَّارِ ؕ நரகத்தின் முன் اَذْهَبْتُمْ நீங்கள் போக்கிக் கொண்டீர்கள் طَيِّبٰـتِكُمْ உங்கள் நன்மைகளை فِىْ حَيَاتِكُمُ உங்கள் வாழ்க்கையிலே الدُّنْيَا உலக وَاسْتَمْتَعْتُمْ இன்னும் இன்பம் அடைந்தீர்கள் بِهَا ۚ அவற்றின் மூலம் فَالْيَوْمَ ஆகவே இன்றைய தினம் تُجْزَوْنَ கூலியாக கொடுக்கப்படுவீர்கள் عَذَابَ தண்டனையை الْهُوْنِ கேவலமான بِمَا كُنْـتُمْ நீங்கள் இருந்த காரணத்தாலும் تَسْتَكْبِرُوْنَ நீங்கள் பெருமையடிப்பவர்களாக فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّ அநியாயமாக وَبِمَا كُنْتُمْ நீங்கள் இருந்த காரணத்தாலும் تَفْسُقُوْنَ‏ நீங்கள் பாவம் செய்பவர்களாக
46:20. வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அத்ஹBப்தும் தய்யிBபாதிகும் Fபீ ஹயாதிகுமுத் துன்யா வஸ்தம் தஃதும் Bபிஹா Fபல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தஸ்தக்Bபிரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தFப்ஸுகூன்
46:20. அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
46:21
46:21 وَاذْكُرْ اَخَا عَادٍؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக اَخَا சகோதரரை عَادٍؕ ஆது சமுதாயத்தின் اِذْ اَنْذَرَ அவர் எச்சரித்த சமயத்தை قَوْمَهٗ தனது மக்களை بِالْاَحْقَافِ மணல் பாங்கான இடத்தில் وَقَدْ திட்டமாக خَلَتِ சென்றுள்ளனர் النُّذُرُ எச்சரிப்பாளர்கள் مِنْۢ بَيْنِ يَدَيْهِ இவருக்கு முன்னரும் وَمِنْ خَلْفِهٖۤ இவருக்கு பின்னரும் اَلَّا تَعْبُدُوْۤا நீங்கள் வணங்காதீர்கள் اِلَّا اللّٰهَ ؕ அல்லாஹ்வை அன்றி اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ தண்டனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ பெரிய(து)
46:21. வத்குர் அகா 'ஆத், இத் அன்தர கவ்மஹூ Bபில் அஹ்காFபி வ கத் கலதின் னுதுரு மிம் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
46:21. மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
46:22
46:22 قَالُـوْۤا اَجِئْتَـنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَـتِنَا‌ ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
قَالُـوْۤا அவர்கள் கூறினர் اَجِئْتَـنَا நீர் எங்களிடம் வந்தீரா? لِتَاْفِكَنَا எங்களை திருப்புவதற்காக عَنْ اٰلِهَـتِنَا‌ ۚ எங்கள் தெய்வங்களை விட்டு فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ எங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக! اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
46:22. காலூ அஜி'தனா லி தா Fபிகனா 'அன் ஆலிஹதினா Fப'தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
46:22. அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
46:23
46:23 قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ‌ۖ وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰـكِنِّىْۤ اَرٰٮكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் اِنَّمَا الْعِلْمُ அறிவெல்லாம் عِنْدَ اللّٰهِ ۖ அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. وَاُبَلِّغُكُمْ உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் مَّاۤ எதை اُرْسِلْتُ அனுப்பப்பட்டேன் بِهٖ அதைக் கொண்டு وَلٰـكِنِّىْۤ என்றாலும் நான் اَرٰٮكُمْ உங்களை கருதுகிறேன் قَوْمًا மக்களாக تَجْهَلُوْنَ‏ நீங்கள் அறியாத(வர்கள்)
46:23. கால இன்னமல் 'இல்மு இன்தல் லாஹி வ உBபல்லிகுகும் மா உர்ஸில்து Bபிஹீ வ லாகின்னீ அராகும் கவ்மன் தஜ்ஹலூன்
46:23. அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.
46:24
46:24 فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌ ؕ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ۚ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَ لِيْمٌۙ‏
فَلَمَّا رَاَوْهُ அவர்கள் அதை பார்த்த போது عَارِضًا அடர்த்தியான கார் மேகமாக مُّسْتَقْبِلَ முன்னோக்கி வரக்கூடிய(து) اَوْدِيَتِهِمْ ۙ தங்களது பள்ளத்தாக்கை قَالُوْا கூறினார்கள் هٰذَا இது عَارِضٌ அடர்த்தியான கார்மேகமாகும் مُّمْطِرُنَا‌ ؕ நமக்கு மழை பொழிவிக்கும் بَلْ هُوَ மாறாக இது مَا எதை اسْتَعْجَلْتُمْ நீங்கள் அவசரமாகத் தேடினீர்கள் بِهٖ ۚ அதை رِيْحٌ (இது) ஒரு காற்றாகும் فِيْهَا இதில் உள்ளது عَذَابٌ தண்டனை اَ لِيْمٌۙ‏ வலி தரக்கூடிய(து)
46:24. Fபலம்மா ர அவ்ஹு 'ஆரிளம் முஸ்தக்Bபில அவ்தியதிஹிம் காலூ ஹாதா 'ஆரிளும் மும்திருனா; Bபல் ஹுவ மஸ்தஃஜல்தும் Bபிஹீ ரீஹுன் Fபீஹா 'அதாBபுன் அலீம்
46:24. ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
46:25
46:25 تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏
تُدَمِّرُ இது சின்னா பின்னமாக்கிவிடும் كُلَّ شَىْءٍ ۭ எல்லாவற்றையும் بِاَمْرِ கட்டளைப்படி رَبِّهَا தனது இறைவனின் فَاَصْبَحُوْا ஆகிவிட்டனர் لَا يُرٰٓى பார்க்க முடியாதபடி اِلَّا தவிர مَسٰكِنُهُمْ‌ؕ அவர்களின் வசிப்பிடங்களை كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْقَوْمَ மக்களுக்கு الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளான
46:25. துதம்மிரு குல்ல ஷய்'இம் Bபி-அம்ரி ரBப்Bபிஹா Fப அஸ்Bபஹூ லா யுரா இல்லா மஸாகினுஹும்; கதாலிக னஜ்Zஜில் கவ்மல் முஜ்ரிமீன்
46:25. “அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
46:26
46:26 وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِيْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِيْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً  ۖ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَىْءٍ اِذْ كَانُوْا يَجْحَدُوْنَۙ بِاٰيٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக مَكَّنّٰهُمْ அவர்களுக்கு நாம் வசதியளித்தோம் فِيْمَاۤ எதில் اِنْ مَّكَّنّٰكُمْ உங்களுக்கு நாம் வசதியளிக்கவில்லை(யோ) فِيْهِ அதில் وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَهُمْ அவர்களுக்கு سَمْعًا செவியை(யும்) وَّاَبْصَارًا பார்வைகளையும் وَّاَفْـِٕدَةً  ۖ உள்ளங்களையும் فَمَاۤ اَغْنٰى தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டும் سَمْعُهُمْ அவர்களின் செவி(யும்) وَلَاۤ اَبْصَارُ பார்வைகளும் هُمْ அவர்களின் وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ அவர்களின் உள்ளங்களும் مِّنْ شَىْءٍ எதையும் اِذْ كَانُوْا அவர்கள் இருந்தபோது يَجْحَدُوْنَۙ மறுப்பவர்களாக بِاٰيٰتِ அத்தாட்சிகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَحَاقَ இன்னும் சூழ்ந்து கொண்டது بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தார்கள் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களாக
46:26. வ லகத் மக்கன்னாஹும் Fபீமா இம் மக்கன்னாகும் Fபீஹி வஜ்'அல்னா லஹும் ஸம்'அ(ன்)வ் வ அBப்ஸார(ன்)வ் வ அFப்'இததன் Fபமா அக்னா 'அன்ஹும் ஸம்'உஹும் வ லா அBப்ஸாருஹும் வ லா அFப்'இததுஹும் மின் ஷய்'இன் இத் கானூ யஜ்ஹதூன Bபி ஆயாதில் லாஹி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
46:26. உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  
46:27
46:27 وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَـكُمْ مِّنَ الْقُرٰى وَصَرَّفْنَا الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَهْلَكْنَا நாம் அழித்தோம் مَا حَوْلَـكُمْ உங்களை சுற்றி உள்ளவற்றை مِّنَ الْقُرٰى ஊர்களில் وَصَرَّفْنَا இன்னும் நாம் விவரித்தோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அவர்கள் திரும்புவதற்காக
46:27. வ லகத் அஹ்லக்னா ம ஹவ்லகும் மினல் குரா வ ஸர்ரFப்னல் ஆயாதி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
46:27. அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.
46:28
46:28 فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ بَلْ ضَلُّوْا عَنْهُمْ‌ۚ وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا يَفْتَرُوْنَ‏
فَلَوْلَا نَصَرَهُمُ (அவர்கள்) இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? الَّذِيْنَ எவர்களை اتَّخَذُوْا எடுத்துக் கொண்டார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி قُرْبَانًا வழிபாட்டுக்காக اٰلِهَةً ؕ தெய்வங்களாக بَلْ மாறாக ضَلُّوْا அவர்கள் மறைந்து விட்டனர் عَنْهُمْ‌ۚ இவர்களை விட்டு وَذٰلِكَ இது اِفْكُهُمْ இவர்களின்பொய்(யும்) وَمَا இன்னும் எதை كَانُوْا இருந்தார்களோ يَفْتَرُوْنَ‏ இட்டுக் கட்டுபவர்களாக
46:28. Fபலவ் லா னஸரஹுமுல் லதீனத் தகதூ மின் தூனில் லாஹி குர்Bபானன் ஆலிஹதம் Bபல் ளல்லூ 'அன்ஹும்' வ தாலிக இFப்குஹும் வமா கானூ யFப்தரூன்
46:28. (அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.
46:29
46:29 وَاِذْ صَرَفْنَاۤ اِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ‌ۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا‌ۚ فَلَمَّا قُضِىَ وَلَّوْا اِلٰى قَوْمِهِمْ مُّنْذِرِيْنَ‏
وَاِذْ صَرَفْنَاۤ اِلَيْكَ நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக!/உம் பக்கம் نَفَرًا சில நபர்களை مِّنَ الْجِنِّ ஜின்களின் يَسْتَمِعُوْنَ செவிமடுக்கின்றனர் الْقُرْاٰنَ‌ۚ குர்ஆனை فَلَمَّا حَضَرُوْهُ அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது قَالُوْۤا கூறினார்கள் اَنْصِتُوْا‌ۚ வாய்மூடி இருங்கள்! فَلَمَّا قُضِىَ முடிக்கப்பட்ட போது وَلَّوْا திரும்பினார்கள் اِلٰى قَوْمِهِمْ தங்களது சமுதாயத்தினர் பக்கம் مُّنْذِرِيْنَ‏ எச்சரிப்பவர்களாக
46:29. வ இத் ஸரFபினா இலய்க னFபரம் மினல் ஜின்னி யஸ்தமி'ஊனல் குர்'ஆன Fபலம்மா ஹளரூஹு காலூ அன்ஸிதூ Fபலம்மா குளிய வல்லவ் இலா கவ்மிஹிம் முன்திரீன்
46:29. மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
46:30
46:30 قَالُوْا يٰقَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْۢ بَعْدِ مُوْسٰى مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِىْۤ اِلَى الْحَقِّ وَاِلٰى طَرِيْقٍ مُّسْتَقِيْمٍ‏
قَالُوْا கூறினார்கள் يٰقَوْمَنَاۤ எங்கள் சமுதாயமே! اِنَّا سَمِعْنَا நிச்சயமாக நாங்கள் செவியுற்றோம் كِتٰبًا ஒரு வேதத்தை اُنْزِلَ இறக்கப்பட்ட(து) مِنْۢ بَعْدِ பின்னர் مُوْسٰى மூஸாவிற்கு مُصَدِّقًا உண்மைப்படுத்தக்கூடிய لِّمَا بَيْنَ يَدَيْهِ தனக்கு முந்தியவற்றை يَهْدِىْۤ அது வழி காட்டுகிறது اِلَى الْحَقِّ உண்மைக்கு(ம்) وَاِلٰى طَرِيْقٍ பாதைக்கும் مُّسْتَقِيْمٍ‏ மிக நேரான
46:30. காலூ யா கவ்மனா இன்னா ஸமிஃனா கிதாBபன் உன்Zஜில மிம் Bபஃதி மூஸா முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி யஹ்தீ இலல் ஹக்கி வ இலா தரீகிம் முஸ்தகீம்
46:30. (ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.
46:31
46:31 يٰقَوْمَنَاۤ اَجِيْبُوْا دَاعِىَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ يَغْفِرْ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَ لِيْمٍ‏
يٰقَوْمَنَاۤ எங்கள் சமுதாயமே! اَجِيْبُوْا பதில் தாருங்கள்! دَاعِىَ அழைப்பாளருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் وَاٰمِنُوْا இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள் بِهٖ அவரை يَغْفِرْ அவன் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ ذُنُوْبِكُمْ உங்கள் பாவங்களை وَيُجِرْكُمْ இன்னும் உங்களை பாதுகாப்பான் مِّنْ عَذَابٍ தண்டனையிலிருந்து اَ لِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
46:31. யா கவ்மனா அஜீBபூ தா'இயல் லாஹி வ ஆமினூ Bபிஹீ யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யுஜிர்கும் மின் 'அதாBபின் அலீம்
46:31. “எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
46:32
46:32 وَمَنْ لَّا يُجِبْ دَاعِىَ اللّٰهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِى الْاَرْضِ وَلَيْسَ لَهٗ مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءُ ‌ؕ اُولٰٓٮِٕكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَمَنْ எவர் لَّا يُجِبْ பதில் தரவில்லையோ دَاعِىَ அழைப்பாளருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் فَلَيْسَ بِمُعْجِزٍ அவர் தப்பித்துவிட மாட்டார் فِى الْاَرْضِ பூமியில் وَلَيْسَ இல்லை لَهٗ அவருக்கு مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءُ ؕ பாதுகாவலர்கள் اُولٰٓٮِٕكَ இப்படிப்பட்டவர்கள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் இருக்கின்றனர் مُّبِيْنٍ‏ மிகத் தெளிவான
46:32. வ மல் லா யுஜிBப் தா'இயல் லாஹி Fபலய்ஸ BபிமுஃஜிZஜின் Fபில் அர்ளி வ லய்ஸ லஹூ மின் தூனிஹீ அவ்லியா'; உலா இக Fபீ ளலாலிம் முBபீன்
46:32. “ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது; அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.”
46:33
46:33 اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ يَعْىَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ يُّحْیَِۧ الْمَوْتٰى ‌ؕ بَلٰٓى اِنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் கவனிக்கவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் الَّذِىْ خَلَقَ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் وَلَمْ يَعْىَ கலைத்து விடாதவனுமாகிய بِخَلْقِهِنَّ அவற்றைபடைத்ததால் بِقٰدِرٍ ஆற்றலுடையவன் (என்பதை) عَلٰۤی اَنْ يُّحْیَِۧ உயிர்ப்பிப்பதற்கு الْمَوْتٰى ؕ இறந்தவர்களை بَلٰٓى ஏன் இல்லை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏‏ பேராற்றலுடையவன்
46:33. அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ லம் யஃய Bபிகல் கிஹின்ன Bபிகாதிரின் 'அலா அய்யுஹ்யியல் மவ்தா; Bபலா இன்னஹூ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
46:34
46:34 وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّ‌ ؕ قَالُوْا بَلٰى وَرَبِّنَا‌ ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْـتُمْ تَكْفُرُوْنَ‏
وَيَوْمَ நாளில் يُعْرَضُ கொண்டுவரப்படும் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் عَلَى النَّارِ ؕ நரகத்தின் முன் اَلَيْسَ இல்லையா? هٰذَا இது بِالْحَقِّ‌ ؕ உண்மையாக قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ஏன் இல்லை? وَرَبِّنَا‌ ؕ எங்கள் இறைவன் மீது சத்தியமாக قَالَ கூறுவான் فَذُوْقُوا நீங்கள் சுவையுங்கள்! الْعَذَابَ இந்த வேதனையை بِمَا كُنْـتُمْ நீங்கள் இருந்த காரணத்தால் تَكْفُرُوْنَ‏ நிராகரிப்பவர்களாக
46:34. வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அலய்ஸ ஹாத Bபில் ஹக்க்; காலூ Bபலா வ ரBப்Bபினா; கால Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
46:34. மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) “இது உண்மையல்லவா?” (என்று கேட்கப்படும்;) அதற்கவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்” என்று கூறுவார்கள். “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்” என்று அவன் கூறுவான்.
46:35
46:35 فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ‌ؕ كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُوْنَۙ لَمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ بَلٰغٌ ۚ فَهَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ
فَاصْبِرْ பொறுமை காப்பீராக! كَمَا صَبَرَ பொறுத்தது போன்று اُولُوا الْعَزْمِ மிகவும் வீரமிக்கவர்கள் مِنَ الرُّسُلِ தூதர்களில் وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ‌ؕ அவர்களுக்காக அவசரமாகக் கேட்காதீர்! كَاَنَّهُمْ அவர்களுக்குத் தோன்றும் يَوْمَ நாளில் يَرَوْنَ அவர்கள் பார்க்கின்ற(னர்) مَا يُوْعَدُوْنَۙ அவர்கள் எச்சரிக்கப்பட்டதை لَمْ يَلْبَثُوْۤا அவர்கள் தங்கவில்லை اِلَّا سَاعَةً சில மணிநேரம் தவிர مِّنْ نَّهَارٍ ؕ பகலின் بَلٰغٌ ۚ இது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும் فَهَلْ يُهْلَكُ அழிக்கப்படுவார்களா? اِلَّا الْقَوْمُ மக்களைத் தவிர الْفٰسِقُوْنَ‏ பாவிகளான
46:35. Fபஸ்Bபிர் கமா ஸBபர உலுல் 'அZஜ்மி மினர் ருஸுலி வலா தஸ்தஃஜில் லஹும்; க அன்னஹும் யவ்ம யரவ்ன மா யூ'அதூன லம் யல்Bபதூ இல்லா ஸா'அதம் மின் னஹார்; Bபலாக்; Fபஹல் யுஹ்லகு இல்லல் கவ்முல் Fபாஸிகூன்
46:35. “(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?