64. ஸூரத்துத் தஃகாபுன் (நஷ்டம்)
மதனீ, வசனங்கள்: 18

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
64:1
64:1 يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ۚ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ‌ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
يُسَبِّحُ துதிக்கின்றனர் لِلّٰهِ அல்லாஹ்வை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَا فِى الْاَرْضِ‌ۚ பூமியில் உள்ளவர்களும் لَهُ அவனுக்கே الْمُلْكُ ஆட்சிகள் وَلَهُ இன்னும் அவனுக்கே الْحَمْدُ‌ புகழ் அனைத்தும் وَهُوَ அவன்தான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
64:1. யுஸBப்Bபிஹு லில்லாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி லஹுல் முல்கு வ லஹுல் ஹம்த், வ ஹுவ 'அலா குல்லி ஷய் 'இன் கதீர்
64:1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.
64:2
64:2 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
هُوَ الَّذِىْ خَلَقَكُمْ அவன்தான்/உங்களைப் படைத்தான் فَمِنْكُمْ உங்களில் كَافِرٌ நிராகரிப்பாளரும் وَّمِنْكُمْ இன்னும் உங்களில் مُّؤْمِنٌ‌ؕ நம்பிக்கையாளரும் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
64:2. ஹுவல் லதீ கலககும் Fபமின்கும் காFபிரு(ன்)வ் வ மின் கும் மு'மின் ; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
64:2. (மானிடர்களே!) அவனே உங்களைப் படைத்தவன்; உங்களில் காஃபிரும் உண்டு; முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கியவாறே இருக்கின்றான்.
64:3
64:3 خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ وَصَوَّرَكُمْ‌ فَاَحْسَنَ صُوَرَكُمْۚ‌ وَاِلَيْهِ الْمَصِيْرُ‏
خَلَقَ அவன் படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் بِالْحَـقِّ உண்மையான காரணத்திற்காக وَصَوَّرَكُمْ‌ இன்னும் உங்களுக்கு உருவமைத்தான் فَاَحْسَنَ அழகாக்கினான் صُوَرَكُمْۚ‌ உங்கள் உருவங்களை وَاِلَيْهِ அவன் பக்கமே الْمَصِيْرُ‏ மீளுமிடம்
64:3. கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்கி வ ஸவ்வரகும் Fப அஹ்ஸன ஸுவரகும் வ இலய்ஹில் மஸீர்
64:3. வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான்; அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.
64:4
64:4 يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவற்றை وَالْاَرْضِ இன்னும் பூமியில் وَيَعْلَمُ இன்னும் நன்கறிவான் مَا تُسِرُّوْنَ நீங்கள் மறைப்பதையும் وَمَا تُعْلِنُوْنَ‌ؕ நீங்கள் வெளிப்படுத்துவதையும் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
64:4. யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ யஃலமு மா துஸிர்ரூன வமா துஃலினூன்; வல்லாஹு 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
64:4. வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும்; பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.
64:5
64:5 اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
اَلَمْ يَاْتِكُمْ உங்களுக்கு வரவில்லையா? نَبَـؤُا செய்தி الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களின் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَذَاقُوْا அவர்கள் சுவைத்தனர் وَبَالَ தீய முடிவை اَمْرِهِمْ தங்கள் காரியத்தின் وَلَهُمْ அவர்களுக்கு عَذَابٌ தண்டனை اَلِيْمٌ‏ வலி தரக்கூடிய(து)
64:5. அலம் ய'திகும் னBப'உல் லதீன கFபரூ மின் கBப்லு Fபதாகூ வBபால அம்ரிஹிம் வ லஹும் 'அதாBபுன் அலீம்
64:5. இதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? பின்னர்; அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
64:6
64:6 ذٰ لِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ يَّهْدُوْنَـنَا فَكَفَرُوْا وَتَوَلَّوْا‌ وَّاسْتَغْنَى اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ غَنِىٌّ حَمِيْدٌ‏
ذٰ لِكَ بِاَنَّهٗ அதற்கு காரணம் நிச்சயமாக كَانَتْ تَّاْتِيْهِمْ அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர் رُسُلُهُمْ அவர்களின் தூதர்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَقَالُوْۤا அவர்கள் கூறினார்கள் اَبَشَرٌ மனிதர்களா? يَّهْدُوْنَـنَا எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள் فَكَفَرُوْا ஆகவே, அவர்கள் நிராகரித்தனர் وَتَوَلَّوْا‌ இன்னும் விலகினார்கள் وَّاسْتَغْنَى அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ்வும் وَاللّٰهُ அல்லாஹ் غَنِىٌّ மகா செல்வந்தன் حَمِيْدٌ‏ மகா புகழுக்குரியவன்
64:6. தாலிக Bபி அன்னஹூ கானத் த'தீஹிம் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபகாலூ அ Bபஷரு(ன்)ய் யஹ்தூனனா FபகFபரூ வ தவல்லவ்; வஸ்தக்னல் லாஹ்; வல்லாஹு கனிய்யுன் ஹமீத்
64:6. இதற்குக் காரணம்: நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர்; ஆனால் அப்போது அவர்களோ: (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?” என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன்; அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.
64:7
64:7 زَعَمَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ يُّبْـعَـثُـوْا‌ ؕ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتُبْـعَـثُـنَّ ثُمَّ لَـتُنَـبَّـؤُنَّ بِمَا عَمِلْـتُمْ‌ؕ وَذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏
زَعَمَ பிதற்றுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் اَنْ لَّنْ يُّبْـعَـثُـوْا‌ ؕ அறவே எழுப்பப்பட மாட்டார்கள் قُلْ நீர் கூறுவீராக! بَلٰى ஏன் இல்லை! وَرَبِّىْ என் இறைவன் மீது சத்தியமாக لَـتُبْـعَـثُـنَّ நிச்சயமாகஎழுப்பப்படுவீர்கள் ثُمَّ பிறகு لَـتُنَـبَّـؤُنَّ நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும் بِمَا عَمِلْـتُمْ‌ؕ நீங்கள் செய்தவற்றை وَذٰ لِكَ அது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு يَسِيْرٌ‏ மிக எளிதானதே!
64:7. Zஜ'அமல் லதீன கFபரூ அல்-ல(ன்)ய் யுBப்'அதூ; குல் Bபலா வ ரBப்Bபீ லதுBப்'அதுன்ன தும்ம லதுனBப்Bப'உன்ன Bபிமா 'அமில்தும்; வ தாலிக 'அலல் லாஹி யஸீர்
64:7. (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
64:8
64:8 فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِىْۤ اَنْزَلْنَا‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖ அவனது தூதரையும் وَالنُّوْرِ ஒளியையும் الَّذِىْۤ எதை اَنْزَلْنَا‌ؕ இறக்கினோம் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
64:8. Fபஆமினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வன்னூரில் லதீ அன்Zஜல்னா; வல்லாஹு Bபிம தஃமலூன கBபீர்
64:8. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம் இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
64:9
64:9 يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ‌ ذٰ لِكَ يَوْمُ التَّغَابُنِ‌ ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْفَوْزُ الْعَظِیْمُ‏
يَوْمَ நாளை يَجْمَعُكُمْ அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் لِيَوْمِ நாளுக்காக الْجَمْعِ‌ ஒன்று சேர்க்கப்படும் ذٰ لِكَ يَوْمُ அதுதான்/நாளாகும் التَّغَابُنِ‌ ؕ ஏமாறுகின்ற وَمَنْ யார் يُّؤْمِنْۢ நம்பிக்கை கொள்வார்(கள்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَيَعْمَلْ இன்னும் செய்வார்(கள்) صَالِحًـا நன்மையை يُّكَفِّرْ போக்கிவிடுவான் عَنْهُ அவர்களை விட்டும் سَيِّاٰتِهٖ அவர்களின் பாவங்களை وَيُدْخِلْهُ இன்னும் அவர்களை நுழைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாக இருப்பார்கள் فِيْهَاۤ அவற்றில் اَبَدًا‌ ؕ எப்போதும் ذٰ لِكَ இதுதான் الْفَوْزُ வெற்றியாகும் الْعَظِیْمُ‏ மகத்தான
64:9. யவ்ம யஜ்ம'உகும் லி யவ்மில் ஜம்'இ தாலிக யவ்முத் தகாBபுன்; வ ம(ன்)ய்-யுமிம் Bபில்லாஹி வ யஃமல் ஸாலிஹ(ன்)ய் யுகFப்Fபிர் 'அன்ஹு ஸய்யி ஆதிஹீ வ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா அBபதா; தாலிகல் Fபவ்Zஜுல் 'அளீம்
64:9. ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.
64:10
64:10 وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَاۤ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَبِئْسَ الْمَصِيْرُ
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்களோ وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்களோ بِاٰيٰتِنَاۤ நமது வசனங்களை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் اَصْحٰبُ النَّارِ நரகவாசிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள் فِيْهَا‌ ؕ அதில் وَبِئْسَ அது மிகக் கெட்டதாகும் الْمَصِيْرُ‏ மீளுமிடங்களில்
64:10. வல்லதீன கFபரூ வ கத்தBபூ Bபி ஆயாதினா உலா'இக அஸ்ஹாBபுன் னாரி காலிதீன Fபீஹா வ Bபி'ஸல் மஸீர்
64:10. அன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாதிகளே; அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.  
64:11
64:11 مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
مَاۤ اَصَابَ ஏற்படாது مِنْ مُّصِيْبَةٍ எந்த சோதனையும் اِلَّا بِاِذْنِ அனுமதி இல்லாமல் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَمَنْ يُّؤْمِنْۢ யார் நம்பிக்கை கொள்வாரோ بِاللّٰهِ அல்லாஹ்வை يَهْدِ நேர்வழி காட்டுவான் قَلْبَهٗ‌ؕ அவரின் உள்ளத்திற்கு وَاللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
64:11. மா அஸாBப மிம் முஸீ Bபதின் இல்லா Bபி-இத்னில் லாஹ்; வ ம(ன்)ய் யு'மிம் Bபில்லாஹி யஹ்தி கல்Bபஹ்; வல்லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
64:11. நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
64:12
64:12 وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ‌ۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ‏
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ‌ۚ தூதருக்கு فَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰى رَسُوْلِنَا நீங்கள் விலகினால் /நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் الْبَلٰغُ எடுத்துரைப்பதுதான் الْمُبِيْنُ‏ தெளிவாக
64:12. வ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல்; Fப இன் தவல்லய்தும் Fப இன்னமா 'அலா ரஸூலினல் Bபலாகுல் முBபீன்
64:12. ஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.
64:13
64:13 اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ கடவுள் اِلَّا هُوَ‌ؕ அவனைத் தவிர وَعَلَى மீதே اللّٰهِ அல்லாஹ்வின் فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கவும் الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
64:13. அல்லாஹு லா இலாஹ இல்லா ஹூ; வ 'அலல் லாஹி Fபல்யத வக்கலில் மு'மினூன்
64:13. அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.
64:14
64:14 ‌يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْ‌ۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِنَّ நிச்சயமாக مِنْ اَزْوَاجِكُمْ உங்கள் மனைவிகளிலும் وَاَوْلَادِكُمْ உங்கள் பிள்ளைகளிலும் عَدُوًّا எதிரிகள் لَّكُمْ உங்களுக்கு فَاحْذَرُوْهُمْ‌ۚ ஆகவே அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள் وَاِنْ تَعْفُوْا நீங்கள் பிழை பொறுத்தால் وَتَصْفَحُوْا இன்னும் புறக்கணித்தால் وَتَغْفِرُوْا நீங்கள் மன்னித்தால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
64:14. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன்ன மின் அZஜ்வாஜி கும் வ அவ்லாதிகும் 'அதுவ்வல் லகும் Fபஹ்தரூஹும்; வ இன் தஃFபூ வ தஸ்Fபஹூ வ தக்Fபிரூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
64:14. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
64:15
64:15 اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ‌ؕ وَاللّٰهُ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ‏
اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ உங்கள் செல்வங்கள் எல்லாம் وَاَوْلَادُكُمْ இன்னும் உங்கள் பிள்ளைகள் فِتْنَةٌ ؕ சோதனைதான் وَاللّٰهُ அல்லாஹ் عِنْدَهٗۤ அவனிடம்தான் اَجْرٌ عَظِيْمٌ‏ மகத்தான கூலி
64:15. இன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னஹ்; வல்லாஹு 'இன்தஹூ அஜ்ருன் 'அளீம்
64:15. உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்; ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.
64:16
64:16 فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِيْعُوْا وَاَنْفِقُوْا خَيْرًا لِّاَنْفُسِكُمْ‌ؕ وَمَنْ يُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
فَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا اسْتَطَعْتُمْ உங்களுக்கு முடிந்தளவு وَاسْمَعُوْا இன்னும் செவி தாழ்த்துங்கள் وَاَطِيْعُوْا இன்னும் கீழ்ப்படியுங்கள் وَاَنْفِقُوْا இன்னும் தர்மம் செய்யுங்கள் خَيْرًا செல்வத்தை لِّاَنْفُسِكُمْ‌ؕ உங்கள் நன்மைக்காக وَمَنْ எவர்(கள்) يُّوْقَ பாதுகாக்கப்படுவார்(களோ) شُحَّ கஞ்சத் தனத்தில் இருந்து نَفْسِهٖ தமது மனதின் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
64:16. Fபத்தகுல் லாஹ மஸ்ததஃதும் வஸ்ம'ஊ வ அதீ'ஊ வ அன்Fபிகூ கய்ரல் லி அன்Fபுஸிகும்; வ ம(ன்)ய்-யூக ஷுஹ் ஹ னFப்ஸிஹீ Fப-உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
64:16. ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
64:17
64:17 اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ‏
اِنْ تُقْرِضُوا நீங்கள் கடன் கொடுத்தால் اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا கடனாக حَسَنًا அழகிய يُّضٰعِفْهُ அதை பன்மடங்காகப் பெருக்குவான் لَـكُمْ உங்களுக்கு وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் شَكُوْرٌ மிகவும் நன்றியுள்ளவன் حَلِيْمٌۙ‏ மகா சகிப்பாளன்
64:17. இன் துக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸன(ன்)ய் யுளாஇFப்ஹு லகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு ஷகூருன் ஹலீம்
64:17. நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.
64:18
64:18 عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الْحَكِيْمُ
عٰلِمُ நன்கறிந்தவன் الْغَيْبِ மறைவானவற்றையும் وَالشَّهَادَةِ வெளிப்படையானவற்றையும் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
64:18. 'ஆலிமுல்-கய்Bபி வஷ்-ஷஹாததில் 'அZஜீZஜுல் ஹகீம்
64:18. மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.