73. ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
மக்கீ, வசனங்கள்: 20

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
73:1
73:1 يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏
يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏ போர்வை போர்த்தியவரே!
73:1. யா அய்யுஹல் முZஜ்Zஜம்மில்
73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
73:2
73:2 قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا ۙ‏
قُمِ الَّيْلَ இரவில் எழுவீராக! اِلَّا தவிர قَلِيْلًا ۙ‏ குறைந்த நேரத்தை
73:2. குமில் லய்ல இல்லா கலீலா
73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
73:3
73:3 نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ۙ‏
نِّصْفَهٗۤ அதன் பாதியில் اَوِ انْقُصْ அல்லது குறைப்பீராக! مِنْهُ அதில் قَلِيْلًا ۙ‏ கொஞ்சம்
73:3. னிஸ்Fபஹூ அவின்குஸ் மின்ஹு கலீலா
73:3. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
73:4
73:4 اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ‏
اَوْ அல்லது زِدْ அதிகப்படுத்துவீராக! عَلَيْهِ அதற்கு மேல் وَرَتِّلِ இன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! الْقُرْاٰنَ குர்ஆனை تَرْتِيْلًا ؕ‏ நிறுத்தி நிதானமாக ஓதுதல்
73:4. அவ் Zஜித் 'அலய்ஹி வ ரத்திலில் குர்'ஆன தர்தீலா
73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
73:5
73:5 اِنَّا سَنُلْقِىْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا‏
اِنَّا நிச்சயமாக நாம் سَنُلْقِىْ இறக்குவோம் عَلَيْكَ உம்மீது قَوْلًا வேதத்தை ثَقِيْلًا‏ மிக கனமான
73:5. இன்னா ஸனுல்கீ 'அலய்க கவ்லன் தகீலா
73:5. நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.
73:6
73:6 اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ‏
اِنَّ நிச்சயமாக نَاشِئَةَ வணக்கம் الَّيْلِ இரவு هِىَ அதுதான் اَشَدُّ மிகவும் வலுவான وَطْـاً தாக்கமுடையது(ம்) وَّاَقْوَمُ மிகத் தெளிவானதும் قِيْلًا ؕ‏ அறிவுரையால்
73:6. இன்ன் னாஷி'அதல் லய்லி ஹிய அஷத்த்து வத் அ(ன்)வ் வ அக்வமு கீலா
73:6. நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
73:7
73:7 اِنَّ لَـكَ فِى النَّهَارِ سَبْحًا طَوِيْلًا ؕ‏
اِنَّ நிச்சயமாக لَـكَ உமக்கு فِى النَّهَارِ பகலில் سَبْحًا طَوِيْلًا ؕ‏ நீண்ட பணிகள்
73:7. இன்ன லக Fபின் னஹாரி ஸBப்ஹன் தவீலா
73:7. நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.
73:8
73:8 وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَيْهِ تَبْتِيْلًا ؕ‏
وَاذْكُرِ இன்னும் நினைவு கூறுவீராக اسْمَ பெயரை رَبِّكَ உமது இறைவனின் وَتَبَتَّلْ இன்னும் ஒதுங்கிவிடுவீராக! اِلَيْهِ அவன் பக்கம் تَبْتِيْلًا ؕ‏ முற்றிலும் ஒதுங்குதல்
73:8. வத்குரிஸ் ம ரBப்Bபிக வ தBபத்தல் இலய்ஹி தBப்தீலா
73:8. எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
73:9
73:9 رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيْلًا‏
رَبُّ இறைவன் الْمَشْرِقِ கிழக்கு وَالْمَغْرِبِ இன்னும் மேற்கின் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ அவனைத் தவிர فَاتَّخِذْهُ ஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக! وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
73:9. ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிஇBபி லா இலாஹ இல்லா ஹுவ Fபத்தகித்ஹு வகீலா
73:9. (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
73:10
73:10 وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا‏
وَاصْبِرْ இன்னும் சகிப்பீராக! عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் பேசுவதை وَاهْجُرْ இன்னும் விட்டு விடுவீராக! هُمْ அவர்களை هَجْرًا விட்டு விடுதல் جَمِيْلًا‏ அழகிய விதத்தில்
73:10. வஸ்Bபிர் 'அலா மா யகூ லூன வஹ்ஜுர்ஹும் ஹஜ்ரன் ஜமீலா
73:10. அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
73:11
73:11 وَذَرْنِىْ وَالْمُكَذِّبِيْنَ اُولِى النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيْلًا‏
وَذَرْنِىْ என்னையும் விட்டு விடுவீராக! وَالْمُكَذِّبِيْنَ பொய்ப்பித்தவர்களையும் اُولِى النَّعْمَةِ சுகவாசிகளான وَمَهِّلْهُمْ இன்னும் அவர்களுக்கு அவகாசம் தருவீராக ! قَلِيْلًا‏ கொஞ்சம்
73:11. வ தர்னீ வல்முகத் திBபீன உலின் னஃமதி வ மஹ்ஹில்ஹும் கலீலா
73:11. என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
73:12
73:12 اِنَّ لَدَيْنَاۤ اَنْـكَالًا وَّجَحِيْمًا ۙ‏
اِنَّ நிச்சயமாக لَدَيْنَاۤ நம்மிடம் اَنْـكَالًا கை, கால் விலங்குகளும் وَّجَحِيْمًا ۙ‏ சுட்டெரிக்கும்நரகமும்
73:12. இன்ன லதய்னா அன்கால(ன்)வ் வ ஜஹீமா
73:12. நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
73:13
73:13 وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِيْمًا‏
وَّطَعَامًا ذَا غُصَّةٍ உணவும்/தொண்டையில் சிக்கிக் கொள்ளும் وَّعَذَابًا வேதனையும் اَلِيْمًا‏ வலி தரக்கூடிய
73:13. வ த'ஆமன் தா குஸ்ஸ தி(ன்)வ் வ'அதாBபன் அலீமா
73:13. (தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.
73:14
73:14 يَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيْبًا مَّهِيْلًا‏
يَوْمَ நாளில் تَرْجُفُ குலுங்குகின்ற الْاَرْضُ பூமி(யும்) وَالْجِبَالُ மலைகளும் وَكَانَتِ ஆகிவிடும் الْجِبَالُ மலைகள் كَثِيْبًا மணலாக مَّهِيْلًا‏ தூவப்படுகின்ற
73:14. யவ்ம தர்ஜுFபுல் அர்ளு வல்ஜிBபாலு வ கானதில் ஜிBபாலு கதீBபம் மஹீலா
73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
73:15
73:15 اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَيْكُمْ رَسُوْلًا ۙ شَاهِدًا عَلَيْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰى فِرْعَوْنَ رَسُوْلًا ؕ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَاۤ அனுப்பினோம் اِلَيْكُمْ உங்களிடம் رَسُوْلًا ۙ ஒரு தூதரை شَاهِدًا சாட்சி கூறுகின்ற عَلَيْكُمْ உங்களைப் பற்றி كَمَاۤ اَرْسَلْنَاۤ நாம் அனுப்பியது போன்று اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கு رَسُوْلًا ؕ‏ ஒரு தூதரை
73:15. இன்னா அர்ஸல்னா இலய்கும் ரஸூலன் ஷாஹிதன் 'அலீய்கும் கமா அர்ஸல்னா இலா Fபிர்'அவ்ன ரஸூலா
73:15. நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.
73:16
73:16 فَعَصٰى فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِيْلًا‏
فَعَصٰى மாறுசெய்தான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் الرَّسُوْلَ அந்த தூதருக்கு فَاَخَذْنٰهُ ஆகவே, நாம் அவனை பிடித்தோம் اَخْذًا பிடியால் وَّبِيْلًا‏ தாங்கிக் கொள்ள முடியாத
73:16. Fப'அஸா Fபிர்'அவ்னுர் ரஸூல Fப அகத்னாஹு அக்த(ன்)வ் வBபீலா
73:16. எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
73:17
73:17 فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبَا  ۖ‏
فَكَيْفَ எப்படி? تَتَّقُوْنَ காத்துக் கொள்வீர்கள் اِنْ كَفَرْتُمْ நீங்கள் நிராகரித்தால் يَوْمًا ஒரு நாளை يَّجْعَلُ ஆக்கிவிடுகின்ற الْوِلْدَانَ பிள்ளைகளை شِيْبَا  ۖ‏ வயோதிகர்களாக
73:17. Fபகய்Fப தத்தகூன இன் கFபர்தும் யவ்ம(ன்)ய் யஜ்'அலுல் வில்தான ஷீBபா
73:17. எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
73:18
73:18 اۨلسَّمَآءُ مُنْفَطِرٌ ۢ بِهٖ‌ؕ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا‏
اۨلسَّمَآءُ வானம் مُنْفَطِرٌ ۢ வெடித்து பிளந்து விடும் بِهٖ‌ؕ அதில் كَانَ ஆகும் وَعْدُهٗ அவனுடைய வாக்கு مَفْعُوْلًا‏ நிறைவேறியே
73:18. அஸ்ஸமா'உ முன்Fபதிரும் Bபிஹ்; கான வஃதுஹூ மFப்'ஊலா
73:18. அதில் வானம் பிளந்து விடும்; அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
73:19
73:19 اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ‌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا
اِنَّ நிச்சயமாக هٰذِهٖ இது تَذْكِرَةٌ ۚ ஓர் அறிவுரையாகும் فَمَنْ ஆகவே, யார் شَآءَ நாடுகின்றாரோ اتَّخَذَ ஏற்படுத்திக் கொள்ளட்டும் اِلٰى رَبِّهٖ தன் இறைவன் பக்கம் سَبِيْلًا‏ ஒரு பாதையை
73:19. இன்ன ஹாதிஹீ தத்கிரதுன் Fப மன் ஷா'அத் தகத இலா ரBப்Bபிஹீ ஸBபீலா
73:19. நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.  
73:20
73:20 اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَ‌ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ‌ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ‌ؕ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰى‌ۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ‌ۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ‌ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا‌ ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا‌ ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் يَعْلَمُ அறிவான் اَنَّكَ நிச்சயமாக நீர் تَقُوْمُ நின்று வணங்குகிறீர் اَدْنٰى குறைவாக مِنْ ثُلُثَىِ மூன்றில் இரண்டு பகுதிகளைவிட الَّيْلِ இரவின் وَ نِصْفَهٗ இன்னும் அதன் பாதி وَثُلُثَهٗ இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி وَطَآٮِٕفَةٌ ஒரு கூட்டமும் مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕ உம்முடன் இருப்பவர்களில் وَاللّٰهُ அல்லாஹ்தான் يُقَدِّرُ நிர்ணயிக்கின்றான் الَّيْلَ இரவை(யும்) وَالنَّهَارَ‌ؕ பகலையும் عَلِمَ நன்கறிவான் اَنْ لَّنْ تُحْصُوْهُ அதற்கு சக்திபெறவே மாட்டீர்கள் فَتَابَ ஆகவே மன்னித்தான் عَلَيْكُمْ‌ உங்களை فَاقْرَءُوْا ஓதுங்கள்! مَا تَيَسَّرَ இலகுவானதை مِنَ الْقُرْاٰنِ‌ؕ குர்ஆனில் عَلِمَ அறிவான் اَنْ سَيَكُوْنُ இருப்பார்(கள்) مِنْكُمْ உங்களில் مَّرْضٰى‌ۙ நோயாளிகள் وَاٰخَرُوْنَ இன்னும் மற்றும் சிலர் يَضْرِبُوْنَ பயணம் செய்வார்கள் فِى الْاَرْضِ பூமியில் يَبْتَغُوْنَ தேடியவர்களாக مِنْ فَضْلِ அருளை اللّٰهِ‌ۙ அல்லாஹ்வின் وَاٰخَرُوْنَ இன்னும் மற்றும் சிலர் يُقَاتِلُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ ۖ அல்லாஹ்வின் فَاقْرَءُوْا ஆகவே, ஓதுங்கள்! مَا تَيَسَّرَ இலகுவானதை مِنْهُ‌ ۙ அதிலிருந்து وَاَقِيْمُوا இன்னும் நிலை நிறுத்துங்கள்! الصَّلٰوةَ தொழுகையை وَاٰتُوا இன்னும் கொடுங்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَاَقْرِضُوا இன்னும் கடன் கொடுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا கடனாக حَسَنًا‌ ؕ அழகிய وَمَا تُقَدِّمُوْا நீங்கள் எதை முற்படுத்துகிறீர்களோ لِاَنْفُسِكُمْ உங்களுக்காக مِّنْ خَيْرٍ நன்மையில் تَجِدُوْهُ அதை பெறுவீர்கள் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் هُوَ அது خَيْرًا மிகச் சிறப்பாகவும் وَّاَعْظَمَ மிகப் பெரியதாகவும் اَجْرًا‌ ؕ கூலியால் وَاسْتَغْفِرُوا இன்னும் பாவமன்னிப்புத் தேடுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
73:20. இன்ன ரBப்Bபக யஃலமு அன்னக தகூமு அத்னா மின் துலுத யில் லய்லி வ னிஸ்Fபஹூ வ துலுதஹூ வ தா'இFபதும் மினல் லதீன ம'அக்; வல் லாஹு யுகத்திருல் லய்ல வன்ன ஹார்; 'அலிம அல் லன் துஹ்ஸூஹு FபதாBப 'அலய்கும் Fபக்ர'ஊ மா தயஸ்ஸர மினல் குர்'ஆன்; 'அலிம அன் ஸ யகூனு மின்கும் மர்ளா வ ஆகரூன யள்ரிBபூன Fபில் அர்ளி யBப்தகூன மின் Fபள்லில் லாஹி வ ஆகரூன யுகாதிலூன Fபீ ஸBபீலில் லாஹி Fபக்ர'ஊ ம தயஸ்ஸர மின்ஹு வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அக்ரிளுல் லாஹ கர்ளன் ஹஸனா; வமா துகத்திமூ லி அன்Fபுஸிகும் மின் கய்ரின் தஜிதூஹு 'இன்தல் லாஹி ஹுவ கய்ர(ன்)வ் வ அஃளம அஜ்ரா; வஸ்தக்Fபிருல் லாஹா இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்.
73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.