Loading the player ...
ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
மக்கீ, வசனங்கள்: 29

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
81:1    إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
81:2   وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3   وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:4   وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
81:5   وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:6   وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:7   وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:8   وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9   بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
81:9. “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
81:10   وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:11   وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
81:11. வானம் அகற்றப்படும் போது-
81:12   وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:13   وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:14   عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
81:15   فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ
81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
81:16   الْجَوَارِ الْكُنَّسِ
81:16. முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
81:17   وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
81:17. பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
81:18   وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
81:19   إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
81:19. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
81:20   ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
81:21   مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
81:21. (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
81:22   وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
81:22. மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:23   وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
81:23. அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:24   وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
81:24. மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
81:25   وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
81:25. அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
81:26   فَأَيْنَ تَذْهَبُونَ
81:26. எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
81:27   إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
81:27. இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
81:28   لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
81:29   وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.