82. ஸூரத்துல் இன்ஃபிதார்(வெடித்துப் போதல்)
மக்கீ, வசனங்கள்: 19

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
82:1
82:1 اِذَا السَّمَآءُ انْفَطَرَتْۙ‏
اِذَا போது السَّمَآءُ வானம் انْفَطَرَتْۙ‏ பிளந்துவிடும்
82:1. இதஸ் ஸமா'உன் Fபதரத்
82:1. வானம் பிளந்து விடும்போது-
82:2
82:2 وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْكَوَاكِبُ நட்சத்திரங்கள் انْتَثَرَتْۙ‏ விழுந்து சிதறும்
82:2. வ இதல் கவாகிBபுன் ததரத்
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3
82:3 وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْبِحَارُ கடல்கள் فُجِّرَتْۙ‏ பிளக்கப்பட்டு
82:3. வ இதல் Bபிஹாரு Fபுஜ்ஜிரத்
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4
82:4 وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْقُبُوْرُ சமாதிகள் بُعْثِرَتْۙ‏ புரட்டப்படும்
82:4. வ இதல் குBபூரு Bபுஃதிரத்
82:4. மண்ணறைகள் திறக்கப்படும் போது,
82:5
82:5 عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْؕ‏
عَلِمَتْ அறியும் نَفْسٌ ஓர் ஆன்மா مَّا எதை قَدَّمَتْ முற்படுத்தியது وَاَخَّرَتْؕ‏ இன்னும் பிற்படுத்தியது
82:5. 'அலிமத் னFப்ஸும் மா கத்தமத் வ அக்கரத்
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
82:6
82:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ மனிதனே! مَا எது? غَرَّكَ உன்னை ஏமாற்றியது بِرَبِّكَ உன் இறைவனைப் பற்றி الْكَرِيْمِۙ‏ கண்ணியவான்
82:6. யா அய்யுஹல் இன்ஸானு மா கர்ரக Bபி ரBப்Bபிகல் கரீம்
82:6. மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
82:7
82:7 الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ‏
الَّذِىْ எப்படிப்பட்டவன் خَلَقَكَ உன்னைப் படைத்தான் فَسَوّٰٮكَ இன்னும் உன்னை சீர்செய்தான் فَعَدَلَـكَۙ‏ இன்னும் உன்னைத் திருப்பினான்
82:7. அல்லதீ கலகக Fபஸவ் வாக Fப'அதலக்
82:7. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
82:8
82:8 فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ‏
فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا எந்த உருவத்தில் شَآءَ நாடினானோ رَكَّبَكَؕ‏ உன்னைப் பொறுத்தினான்
82:8. Fபீ அய்யீ ஸூரதிம் மா ஷா'அ ரக்கBபக்
82:8. எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
82:9
82:9 كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ‏
كَلَّا அவ்வாறல்ல بَلْ மாறாக تُكَذِّبُوْنَ பொய்ப்பிக்கிறீர்கள் بِالدِّيْنِۙ‏ கூலி கொடுக்கப்படுவதை
82:9. கல்லா Bபல் துகத்திBபூன Bபித் தீன்
82:9. இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
82:10
82:10 وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ‏
وَاِنَّ عَلَيْكُمْ இன்னும் நிச்சயமாக உங்கள் மீது لَحٰـفِظِيْنَۙ‏ காவலர்கள்
82:10. வ இன்ன 'அலய்கும் லஹா Fபிளீன்
82:10. நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
82:11
82:11 كِرَامًا كَاتِبِيْنَۙ‏
كِرَامًا கண்ணியமானவர்கள் كَاتِبِيْنَۙ‏ எழுத்தாளர்கள்
82:11. கிராமன் காதிBபீன்
82:11. (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:12
82:12 يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ‏
يَعْلَمُوْنَ அவர்கள் அறிகிறார்கள் مَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்வதை
82:12. யஃலமூன ம தFப்'அலூன்
82:12. நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:13
82:13 اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۚ‏
اِنَّ நிச்சயமாக الْاَبْرَارَ நல்லோர் لَفِىْ نَعِيْمٍۚ‏ நயீம் என்ற சொர்க்கத்தில்தான்
82:13. இன்னல் அBப்ரார லFபீ ன'ஈம்
82:13. நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
82:14
82:14 وَاِنَّ الْفُجَّارَ لَفِىْ جَحِيْمٍ ۚۖ‏
وَاِنَّ இன்னும் நிச்சயமாக الْفُجَّارَ தீயோர் لَفِىْ جَحِيْمٍ ۚۖ‏ ஜஹீம் என்ற நரகத்தில்தான்
82:14. வ இன்னல் Fபுஜ்ஜார லFபீ ஜஹீம்
82:14. இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
82:15
82:15 يَّصْلَوْنَهَا يَوْمَ الدِّيْنِ‏
يَّصْلَوْنَهَا அதில் எரிவார்கள் يَوْمَ நாளில் الدِّيْنِ‏ கூலி
82:15. யஸ்லவ்னஹா யவ்மத் தீன்
82:15. நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
82:16
82:16 وَمَا هُمْ عَنْهَا بِغَآٮِٕبِيْنَؕ‏
وَمَا இன்னும் இல்லை هُمْ அவர்கள் عَنْهَا அதிலிருந்து بِغَآٮِٕبِيْنَؕ‏ மறைபவர்களாக
82:16. வமா ஹும் 'அன்ஹா Bபிகா 'இBபீன்
82:16. மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
82:17
82:17 وَمَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الدِّيْنِۙ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) يَوْمُ الدِّيْنِۙ‏ கூலி நாள்
82:17. வ மா அத்ராக மா யவ்முத் தீன்
82:17. நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
82:18
82:18 ثُمَّ مَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الدِّيْنِؕ‏
ثُمَّ பிறகு مَاۤ எது? اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) يَوْمُ الدِّيْنِؕ‏ கூலி நாள்
82:18. தும்ம மா அத்ராக மா யவ்முத் தீன்
82:18. பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
82:19
82:19 يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا‌ ؕ وَالْاَمْرُ يَوْمَٮِٕذٍ لِّلّٰهِ
يَوْمَ நாள் لَا تَمْلِكُ உரிமை பெறாது نَفْسٌ ஓர் ஆன்மா لِّنَفْسٍ ஓர் ஆத்மாவிற்கு شَيْئًا‌ ؕ எதையும் وَالْاَمْرُ இன்னும் அதிகாரம் يَوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلّٰهِ‏ அல்லாஹ்விற்கே
82:19. யவ்ம லா தம்லிகு னFப்ஸுல் லினFப்ஸின் ஷய்'அ வல் அம்ரு யவ்ம'இதில் லில்லாஹ்
82:19. அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.