83. ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)
மக்கீ, வசனங்கள்: 36

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
83:1
83:1 وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ‏
وَيْلٌ கேடுதான் لِّلْمُطَفِّفِيْنَۙ‏ மோசடிக்காரர்களுக்கு
83:1. வய்லுல் லில் முதFப்FபிFபீன்
83:1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
83:2
83:2 الَّذِيْنَ اِذَا اكْتَالُوْا عَلَى النَّاسِ يَسْتَوْفُوْنَۖ‏
الَّذِيْنَ எவர்கள் اِذَا اكْتَالُوْا அவர்கள் அளந்து வாங்கும் போது عَلَى النَّاسِ மக்களிடம் يَسْتَوْفُوْنَۖ‏ நிறைவாக வாங்குகின்றனர்
83:2. அல்லதீன இதக் தாலூ 'அலன் னாஸி யஸ்தவ்Fபூன்
83:2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
83:3
83:3 وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ يُخْسِرُوْنَؕ‏
وَاِذَا كَالُوْهُمْ இன்னும் அவர்கள் அவர்களுக்காக அளந்து கொடுக்கும் போது اَوْ அல்லது وَّزَنُوْهُمْ அவர்களுக்காக நிறுத்து கொடுக்கும் போது يُخْسِرُوْنَؕ‏ குறைத்துக் கொடுக்கிறார்கள்
83:3. வ இதா காலூஹும் அவ் வZஜனூஹும் யுக்ஸிரூன்
83:3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
83:4
83:4 اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ‏
اَلَا يَظُنُّ நம்பவில்லையா? اُولٰٓٮِٕكَ அவர்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் مَّبْعُوْثُوْنَۙ‏ எழுப்பப்படுவோம்
83:4. அலா யளுன்னு உலா'இக அன்னஹும் மBப்'ஊதூன்
83:4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:5
83:5 لِيَوْمٍ عَظِيْمٍۙ‏
لِيَوْمٍ ஒரு நாளில் عَظِيْمٍۙ‏ மகத்தான
83:5. லி யவ்மின் 'அளீம்
83:5. மகத்தான ஒரு நாளுக்காக,
83:6
83:6 يَّوْمَ يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِيْنَؕ‏
يَّوْمَ அந்நாளில் يَقُوْمُ நிற்பார்கள் النَّاسُ மக்கள் لِرَبِّ இறைவனுக்கு முன் الْعٰلَمِيْنَؕ‏ அகிலத்தார்களின்
83:6. யவ்ம யகூமுன் னாஸு லி ரBப்Bபில் 'ஆலமீன்
83:6. அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
83:7
83:7 كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِىْ سِجِّيْنٍؕ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّ كِتٰبَ நிச்சயமாக பதிவேடு الْفُجَّارِ தீயவர்களின் لَفِىْ سِجِّيْنٍؕ‏ சிஜ்ஜீனில்தான் இருக்கும்
83:7. கல்லா இன்ன கிதாBபல் Fபுஜ்ஜாரி லFபீ ஸிஜ்ஜீன்
83:7. ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
83:8
83:8 وَمَاۤ اَدْرٰٮكَ مَا سِجِّيْنٌؕ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) سِجِّيْنٌؕ‏ சிஜ்ஜீன்
83:8. வமா அத்ராக மா ஸிஜ்ஜீன்
83:8. “ஸிஜ்ஜீன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:9
83:9 كِتٰبٌ مَّرْقُوْمٌؕ‏
كِتٰبٌ ஒரு பதிவேடு مَّرْقُوْمٌؕ‏ எழுதப்பட்ட
83:9. கிதாBபும் மர்கூம்
83:9. அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
83:10
83:10 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ‏
وَيْلٌ கேடுதான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَۙ‏ பொய்ப்பிப்பவர்களுக்கு
83:10. வய்லு(ன்)ய் யவ்ம'இதில் லில் முகத்திBபீன்
83:10. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83:11
83:11 الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِؕ‏
الَّذِيْنَ எவர்கள் يُكَذِّبُوْنَ பொய்ப்பிக்கின்றனர் بِيَوْمِ الدِّيْنِؕ‏ கூலி நாளை
83:11. அல்லதீன யுகத்திBபூன Bபி யவ்மித் தீன்
83:11. அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
83:12
83:12 وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ‏
وَمَا يُكَذِّبُ இன்னும் பொய்ப்பிக்க மாட்டார் بِهٖۤ அதை اِلَّا தவிர كُلُّ எல்லோரையும் مُعْتَدٍ வரம்பு மீறுகிறவன் اَثِيْمٍۙ‏ பெரும் பாவி
83:12. வமா யுகத்திBபு Bபிஹீ இல்லா குல்லு முஃததின் அதீம்
83:12. வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
83:13
83:13 اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَؕ‏
اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِ அவன் மீது اٰيٰتُنَا நம் வசனங்கள் قَالَ கூறுகிறான் اَسَاطِيْرُ கட்டுக் கதைகள் الْاَوَّلِيْنَؕ‏ முன்னோரின்
83:13. இதா துத்லா'அலய்ஹி ஆயாதுனா கால அஸாதீருல் அவ்வலீன்
83:13. நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே” என்று கூறுகின்றான்.
83:14
83:14 كَلَّا ٚ ‌ بَلْ رَانَ عَلٰى قُلُوْبِهِمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏
كَلَّا அவ்வாறல்ல ٚ بَلْ மாறாக رَانَ மூடின عَلٰى மீது قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் مَّا எது كَانُوْا இருந்தார்கள் يَكْسِبُوْنَ‏ செய்கிறார்கள்
83:14. கல்லா Bபல் ரான 'அலா குலூBபிஹிம் மா கானூ யக்ஸிBபூன்
83:14. அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
83:15
83:15 كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ يَوْمَٮِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ‌ؕ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عَنْ رَّبِّهِمْ அவர்களுடைய இறைவனை விட்டு يَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّمَحْجُوْبُوْنَ‌ؕ‏ தடுக்கப்பட்டவர்கள்தான்
83:15. கல்லா இன்னஹும் 'அர் ரBப்Bபிஹிம் யவ்ம'இதில் லமஹ் ஜூBபூன்
83:15. (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
83:16
83:16 ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِيْمِؕ‏
ثُمَّ பிறகு اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَصَالُوا எரியக் கூடியவர்கள்தான் الْجَحِيْمِؕ‏ ஜஹீம் என்ற நரகத்தில்
83:16. தும்ம இன்னஹும் லஸா லுல் ஜஹீம்
83:16. பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
83:17
83:17 ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَؕ‏
ثُمَّ பிறகு يُقَالُ கூறப்படும் هٰذَا இதுதான் الَّذِىْ எது كُنْتُمْ இருந்தீர்கள் بِهٖ அதை تُكَذِّبُوْنَؕ‏ நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
83:17. தும்ம யுகாலு ஹாதல் லதீ குன்தும் Bபிஹீ துகத்திBபூன்
83:17. “எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
83:18
83:18 كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِىْ عِلِّيِّيْنَؕ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّ كِتٰبَ நிச்சயமாக பதிவேடு الْاَبْرَارِ நல்லோரின் لَفِىْ عِلِّيِّيْنَؕ‏ இல்லிய்யூனில்தான்
83:18. கல்லா இன்ன கிதாBபல் அBப்ராரி லFபீ'இல்லிய்யீன்
83:18. நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது.
83:19
83:19 وَمَاۤ اَدْرٰٮكَ مَا عِلِّيُّوْنَؕ‏
وَمَاۤ எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) عِلِّيُّوْنَؕ‏ இல்லிய்யூன்
83:19. வ மா அத்ராக மா 'இல்லிய்யூன்
83:19. “இல்லிய்யுன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:20
83:20 كِتٰبٌ مَّرْقُوْمٌۙ‏
كِتٰبٌ ஒரு பதிவேடு مَّرْقُوْمٌۙ‏ எழுதப்பட்ட
83:20. கிதாBபும் மர்கூம்
83:20. (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
83:21
83:21 يَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَؕ‏
يَّشْهَدُهُ அதைக் கண்காணிக்கிறார்கள் الْمُقَرَّبُوْنَؕ‏ நெருக்கமானவர்கள்
83:21. யஷ்ஹது ஹுல் முகர்ர Bபூன்
83:21. (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
83:22
83:22 اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْاَبْرَارَ நல்லோர் لَفِىْ نَعِيْمٍۙ‏ நயீம் என்ற சொர்க்கத்தில்
83:22. இன்னல் அBப்ரார லFபீ ன'ஈம்
83:22. நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:23
83:23 عَلَى الْاَرَآٮِٕكِ يَنْظُرُوْنَۙ‏
عَلَى மீது الْاَرَآٮِٕكِ கட்டில்கள் يَنْظُرُوْنَۙ‏ பார்ப்பார்கள்
83:23. 'அலல் அரா'இகி யன்ளுரூன்
83:23. ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
83:24
83:24 تَعْرِفُ فِىْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِيْمِ‌ۚ‏
تَعْرِفُ அறிவீர் فِىْ وُجُوْهِهِمْ அவர்களின் முகங்களில் نَضْرَةَ செழிப்பை النَّعِيْمِ‌ۚ‏ இன்பத்தின்
83:24. தஃரிFபு Fபீ வுஜூஹிஹிம் னள்ரதன் ன'ஈம்
83:24. அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
83:25
83:25 يُسْقَوْنَ مِنْ رَّحِيْقٍ مَّخْتُوْمٍۙ‏
يُسْقَوْنَ புகட்டப்படுவார்கள் مِنْ رَّحِيْقٍ மதுவிலிருந்து مَّخْتُوْمٍۙ‏ முத்திரையிடப்பட்ட
83:25. யுஸ்கவ்ன மிர் ரஹீகிம் மக்தூம்
83:25. (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:26
83:26 خِتٰمُهٗ مِسْكٌ ‌ؕ وَفِىْ ذٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ‏
خِتٰمُهٗ அதன் முத்திரை مِسْكٌ ؕ கஸ்தூரி وَفِىْ ذٰلِكَ இன்னும் அதில் فَلْيَتَنَافَسِ ஆகவே ஆசை வைக்கவும் الْمُتَنَافِسُوْنَ‏ ஆசை வைப்போர்
83:26. கிதாமுஹூ மிஸ்க்; வ Fபீ தாலிக Fபல்யதனாFபஸில் முதனாFபிஸூன்
83:26. அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
83:27
83:27 وَ مِزَاجُهٗ مِنْ تَسْنِيْمٍۙ‏
وَ مِزَاجُهٗ இன்னும் அதன் கலவை مِنْ இருந்து تَسْنِيْمٍۙ‏ தஸ்னீம்
83:27. வ மிZஜாஜுஹூ மின் தஸ்னீம்
83:27. இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.
83:28
83:28 عَيْنًا يَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَؕ‏
عَيْنًا ஒரு நீரூற்று يَّشْرَبُ بِهَا அதில்பருகுவார்கள் الْمُقَرَّبُوْنَؕ‏ நெருக்கமாக்கப்பட்டவர்கள்
83:28. 'அய்னய்ய் யஷ்ரBபு Bபிஹல் முகர்ரBபூன்
83:28. அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
83:29
83:29 اِنَّ الَّذِيْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا يَضْحَكُوْنَ  ۖ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اَجْرَمُوْا குற்றம் புரிந்தவர்கள் كَانُوْا இருந்தார்கள் مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களைப் பார்த்து يَضْحَكُوْنَ  ۖ‏ சிரிப்பவர்களாக
83:29. இன்னல் லதீன அஜ்ரமூ கானூ மினல் லதீன ஆமனூ யள்ஹகூன்
83:29. நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
83:30
83:30 وَاِذَا مَرُّوْا بِهِمْ يَتَغَامَزُوْنَ  ۖ‏
وَاِذَا مَرُّوْا இன்னும் அவர்கள் கடந்து செல்லும் போது بِهِمْ يَتَغَامَزُوْنَ  ۖ‏ அவர்களை/கண் ஜாடை காட்டுகிறார்கள்
83:30. வ இதா மர்ரூ Bபிஹிம் யதகாமZஜூன்
83:30. அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
83:31
83:31 وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِيْنَ  ۖ‏
وَاِذَا انْقَلَبُوْۤا இன்னும் அவர்கள் திரும்பும் போது اِلٰٓى اَهْلِهِمُ தங்கள் குடும்பத்தாரிடம் انْقَلَبُوْا திரும்புகிறார்கள் فَكِهِيْنَ  ۖ‏ மகிழ்ச்சியாளர்களாக
83:31. வ இதன் கலBபூ இலா அஹ்லிஹிமுன் கலBபூ Fபகிஹீன்
83:31. இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
83:32
83:32 وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوْنَۙ‏
وَاِذَا رَاَوْهُمْ இன்னும் அவர்கள் அவர்களைப் பார்க்கும் போது قَالُوْۤا கூறுகிறார்கள் اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் لَـضَآلُّوْنَۙ‏ வழிதவறியவர்கள்தான்
83:32. வ இதா ர அவ்ஹும் காலூ இன்ன ஹா'உலா'இ லளால் லூன்
83:32. மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.
83:33
83:33 وَمَاۤ اُرْسِلُوْا عَلَيْهِمْ حٰفِظِيْنَۙ‏
وَمَاۤ اُرْسِلُوْا இன்னும் இவர்கள் அனுப்பப்படவில்லையே عَلَيْهِمْ அவர்கள் மீது حٰفِظِيْنَۙ‏ கண்காணிப் பவர்களாக
83:33. வ மா உர்ஸிலூ 'அலய்ஹிம் ஹாFபிளீன்
83:33. (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
83:34
83:34 فَالْيَوْمَ الَّذِيْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ يَضْحَكُوْنَۙ‏
فَالْيَوْمَ ஆகவே, இன்று الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் مِنَ الْكُفَّارِ நிராகரிப்பாளர்களைப் பார்த்து يَضْحَكُوْنَۙ‏ சிரிப்பார்கள்
83:34. Fபல் யவ்மல் லதீன ஆமனூ மினல் குFப்Fபாரி யள்ஹகூன்
83:34. ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
83:35
83:35 عَلَى الْاَرَآٮِٕكِۙ يَنْظُرُوْنَؕ‏
عَلَى மீது الْاَرَآٮِٕكِۙ கட்டில்கள் يَنْظُرُوْنَؕ‏ பார்ப்பார்கள்
83:35. 'அலல் அரா'இகி யன்ளுரூன்
83:35. ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
83:36
83:36 هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا يَفْعَلُوْنَ
هَلْ ثُوِّبَ கூலி கொடுக்கப்பட்டார்களா? الْكُفَّارُ நிராகரிப்பாளர்கள் مَا எது كَانُوْا இருந்தார்கள் يَفْعَلُوْنَ‏ செய்கிறார்கள்
83:36. ஹல் துவ்விBபல் குFப்Fபாரு மா கானூ யFப்'அலூன்
83:36. காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)