95. ஸூரத்துத் தீன் (அத்தி)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
95:1
95:1 وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏
وَالتِّيْنِ அத்தி மரத்தின் மீது சத்தியமாக وَالزَّيْتُوْنِۙ‏ ஜைதூன் மரத்தின் மீது சத்தியமாக
95:1. வத் தீனி வZஜ் Zஜய்தூன்
95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2
95:2 وَطُوْرِ سِيْنِيْنَۙ‏
وَطُوْرِ மலையின் மீது சத்தியமாக سِيْنِيْنَۙ‏ சினாய்
95:2. வ தூரி ஸினீன்
95:2. “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
95:3
95:3 وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
وَ சத்தியமாக هٰذَا இந்த الْبَلَدِ நகரம் الْاَمِيْنِۙ‏ அபயமளிக்கக்கூடிய
95:3. வ ஹாதல் Bபலதில் அமீன்
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:4
95:4 لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
لَقَدْ خَلَقْنَا திட்டமாக படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை فِىْۤ இல் اَحْسَنِ மிக அழகிய تَقْوِيْمٍ‏ அமைப்பு
95:4. லகத் கலக்னல் இன்ஸான Fபீ அஹ்ஸனி தக்வீம்
95:4. திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:5
95:5 ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ‏
ثُمَّ பிறகு رَدَدْنٰهُ அவனைத் திருப்பினோம் اَسْفَلَ மிகத் தாழ்ந்தவனாக سَافِلِيْنَۙ‏ தாழ்ந்தோரில்
95:5. தும்ம ரதத் னாஹு அஸ்Fபல ஸாFபிலீன்
95:5. பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
95:6
95:6 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍؕ‏
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை فَلَهُمْ ஆகவே அவர்களுக்கு اَجْرٌ நன்மை غَيْرُ مَمْنُوْنٍؕ‏ முடிவுறாத
95:6. இல்ல்-லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி; Fபலஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
95:6. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
95:7
95:7 فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏
فَمَا يُكَذِّبُكَ ஆகவே யார்தான் உம்மை பொய்ப்பிப்பார் بَعْدُ (இதற்குப்) பின்னர் بِالدِّيْنِ‏ மார்க்கத்தில்
95:7. Fபம யு கத் திBபுக Bபஃது Bபித் தீன்
95:7. எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
95:8
95:8 اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏
اَلَيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِاَحْكَمِ மிக மேலான தீர்ப்பளிப்பவனாக الْحٰكِمِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
95:8. அலய் ஸல் லாஹு Bபி-அஹ்கமில் ஹாகிமீன்
95:8. அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?