96. ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி)  
மக்கீ, வசனங்கள்: 19

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
96:1
96:1 اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏
اِقْرَاْ படிப்பீராக بِاسْمِ பெயரால் رَبِّكَ உம் இறைவனின் الَّذِىْ எவன் خَلَقَ‌ۚ‏ படைத்தான்
96:1. இக்ர Bபிஸ்மி ரBப் Bபிகல் லதீ கலக்
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2
96:2 خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏
خَلَقَ அவன் படைத்தான் الْاِنْسَانَ மனிதனை مِنْ عَلَقٍ‌ۚ‏ கருவிலிருந்து
96:2. கலகல் இன்ஸான மின் 'அலக்
96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3
96:3 اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏
اِقْرَاْ படிப்பீராக وَرَبُّكَ இன்னும் உம் இறைவன் الْاَكْرَمُۙ‏ பெரும் கண்ணியவான்
96:3. இக்ர வ ரBப் Bபுகல் அக்ரம்
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4
96:4 الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏
الَّذِىْ எவன் عَلَّمَ கற்பித்தான் بِالْقَلَمِۙ‏ எழுதுகோல் மூலம்
96:4. அல் லதீ 'அல்லம Bபில் கலம்
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5
96:5 عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْؕ‏
عَلَّمَ கற்பித்தான் الْاِنْسَانَ மனிதனுக்கு مَا لَمْ يَعْلَمْؕ‏ அவன் அறியாததை
96:5. 'அல் லமல் இன்ஸான ம லம் யஃலம்
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6
96:6 كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰٓىۙ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் لَيَطْغٰٓىۙ‏ வரம்பு மீறுகிறான்
96:6. கல்லா இன்னல் இன்ஸான லயத்கா
96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7
96:7 اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىؕ‏
اَنْ رَّاٰهُ தன்னை அவன் எண்ணியதால் اسْتَغْنٰىؕ‏ தேவையற்றவனாக
96:7. அர்-ர ஆஹுஸ் தக்னா
96:7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8
96:8 اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىؕ‏
اِنَّ நிச்சயமாக اِلٰى பக்கம்தான் رَبِّكَ உம் இறைவன் الرُّجْعٰىؕ‏ மீட்சி
96:8. இன்ன்ன இலா ரBப்Bபிகர் ருஜ்'ஆ
96:8. நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9
96:9 اَرَءَيْتَ الَّذِىْ يَنْهٰىؕ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? الَّذِىْ يَنْهٰىؕ‏ தடுப்பவனை
96:9. அர-அய்தல் லதீ யன்ஹா
96:9. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10
96:10 عَبْدًا اِذَا صَلّٰىؕ‏
عَبْدًا ஓர் அடியாரை اِذَا صَلّٰىؕ‏ அவர் தொழும் போது
96:10. 'அBப்தன் இத ஸல்லா
96:10. ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:11
96:11 اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰٓىۙ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? اِنْ كَانَ அவர் இருந்தாலுமா عَلَى இல் الْهُدٰٓىۙ‏ நேர்வழி
96:11. அர-அய்த இன் கான 'அலல் ஹுதா
96:11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12
96:12 اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۙ‏
اَوْ அல்லது اَمَرَ அவர் ஏவினாலுமா بِالتَّقْوٰىۙ‏ நன்மையை
96:12. அவ் அமர Bபித் தக்வா
96:12. அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13
96:13 اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? اِنْ كَذَّبَ அவன் பொய்ப்பித்தால் وَتَوَلّٰىؕ‏ இன்னும் புறக்கணித்தால்
96:13. அர-அய்த இன் கத் தBப வ த வல்லா
96:13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
96:14
96:14 اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ‏
اَلَمْ يَعْلَمْ அவன் அறியவில்லையா? بِاَنَّ என்பதை/நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَرٰىؕ‏ பார்க்கிறான்
96:14. அலம் யஃலம் Bபி-அன் னல் லஹா யரா
96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15
96:15 كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ‏
كَلَّا அவ்வாறல்ல لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙ அவன் விலகவில்லையெனில் لَنَسْفَعًۢا கடுமையாகப் பிடிப்போம் بِالنَّاصِيَةِۙ‏ நெற்றி முடியை
96:15. கல்ல ல இல்லம் யன்தஹி ல னஸ்Fப'அம் Bபின் னஸியஹ்
96:15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16
96:16 نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌ ۚ‏
نَاصِيَةٍ நெற்றி முடி كَاذِبَةٍ பொய் கூறுகின்ற خَاطِئَةٍ‌ ۚ‏ குற்றம் புரிகின்ற
96:16. னாஸியதின் கதி Bபதின் காதிஅஹ்
96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17
96:17 فَلْيَدْعُ نَادِيَهٗ ۙ‏
فَلْيَدْعُ ஆகவே அவன் அழைக்கட்டும் نَادِيَهٗ ۙ‏ தன் சபையோரை
96:17. Fபல் யத்'உ னாதியஹ்
96:17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18
96:18 سَنَدْعُ الزَّبَانِيَةَ ۙ‏
سَنَدْعُ நாம் அழைப்போம் الزَّبَانِيَةَ ۙ‏ நரகத்தின் காவலாளிகளை
96:18. ஸனத் 'உZஜ் ZஜBபானியஹ்
96:18. நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19
96:19 كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩
كَلَّا ؕ அவ்வாறல்ல لَا تُطِعْهُ அவனுக்குக் கீழ்ப்படியாதீர் وَاسْجُدْ இன்னும் சிரம் பணிவீராக وَاقْتَرِبْ۩‏ இன்னும் நெருங்குவீராக
96:19. கல்லா; ல துதிஃஹு வஸ்ஜுத் வக்தரிBப்
96:19. (அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.