113. ஸூரத்துல் ஃபலக்(அதிகாலை)
மக்கீ, வசனங்கள்: 5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
113:1
113:1 قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏
قُلْ கூறுவீராக اَعُوْذُ பாதுகாப்புத் தேடுகிறேன் بِرَبِّ இறைவனிடம் الْفَلَقِۙ‏ அதிகாலையின்
113:1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:1. (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
113:1. கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்;
113:1. (நபியே! நீர் கூறுவீராக! வைகறையின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
113:2
113:2 مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏
مِنْ شَرِّ தீங்கைவிட்டும் مَا எவற்றை خَلَقَۙ‏ படைத்தான்
113:2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:2. அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
113:2. அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்!
113:2. அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்,
113:3
113:3 وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏
وَمِنْ شَرِّ இன்னும் தீங்கைவிட்டும் غَاسِقٍ இரவின் اِذَا وَقَبَۙ‏ காரிருள் படரும் போது
113:3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113:3. (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
113:3. இரவுடைய இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது!
113:3. (இரவினுடைய) இருளின் தீங்கைவிட்டும் – அது பரவிவிடும்போது,
113:4
113:4 وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏
وَمِنْ شَرِّ இன்னும் தீங்கைவிட்டும் النَّفّٰثٰتِ ஊதுகிற சூனியக்காரிகளின் فِى الْعُقَدِۙ‏ முடிச்சுகளில்
113:4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113:4. முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
113:4. முடிச்சுகளில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும்
113:4. மேலும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும்,
113:5
113:5 وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏
وَمِنْ شَرِّ இன்னும் தீங்கைவிட்டும் حَاسِدٍ பொறாமைக்காரன் اِذَا حَسَدَ‏ பொறாமைப்படும்போது
113:5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).  
113:5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
113:5. மேலும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும், அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்).
113:5. பொறாமைக்காரனின் தீங்கைவிட்டும் -அவன் பொறாமை கொள்ளும்போது (நான் காவல் தேடுகிறேன்).