28. ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்)
மக்கீ, வசனங்கள்: 88

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
28:1
28:1 طٰسٓمٓ‏
طٰسٓمٓ‏ தா சீம் மீம்
28:1. தா, ஸீம். மீம்.
28:1. தா; ஸீம்; மீம்.
28:1. தாஸீம்மீம்.
28:1. தா ஸீம் மீம்.
28:2
28:2 تِلْكَ اٰيٰتُ الْـكِتٰبِ الْمُبِيْنِ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்களாகும் الْـكِتٰبِ வேதத்தின் الْمُبِيْنِ‏ தெளிவான
28:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
28:2. (நபியே!) இவை(களும்) தெளிவான இவ்வேதத்திலுள்ள சில வசனங்களாகும்.
28:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
28:2. (நபியே!) இவை தெளிவான இவ்வேத வசனங்களாகும்.
28:3
28:3 نَـتْلُوْا عَلَيْكَ مِنْ نَّبَاِ مُوْسٰى وَفِرْعَوْنَ بِالْحَـقِّ لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
نَـتْلُوْا நாம் ஓதுகிறோம் عَلَيْكَ உம்மீது مِنْ نَّبَاِ செய்தியை مُوْسٰى மூசா وَفِرْعَوْنَ மற்றும் ஃபிர்அவ்னின் بِالْحَـقِّ உண்மையாக لِقَوْمٍ மக்களுக்காக يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கைகொள்கின்ற
28:3. நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக நாம் மூஸாவுடையவும் ஃபிர்அவ்னுடையவும் வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு, உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்.
28:3. (நபியே!) நம்பிக்கை கொண்ட மக்களுக்காக மூஸா, ஃபிர்அவ்னைப் பற்றிய சில உண்மை விஷயங்களை நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறோம்.
28:3. நம்பிக்கை கொள்ளும் மக்களின் நலனுக்காக மூஸா மற்றும் ஃபிர்அவ்னைப் பற்றிய சில செய்திகளை மிகத் துல்லியமாக உங்களுக்கு நாம் எடுத்துரைக்கின்றோம்.
28:3. (நபியே!) விசுவாசங்கொள்ளும் கூட்டத்தாருக்காக மூஸா, ஃபிர் அவ்னுடைய செய்தியை உண்மையைக் கொண்டு உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கிறோம்.
28:4
28:4 اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَـعًا يَّسْتَضْعِفُ طَآٮِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَآءَهُمْ وَيَسْتَحْىٖ نِسَآءَهُمْ‌ ؕ اِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் عَلَا பலவந்தப்படுத்தினான் فِى الْاَرْضِ பூமியில் وَجَعَلَ இன்னும் ஆக்கினான் اَهْلَهَا அங்குள்ளவர்களை شِيَـعًا பல பிரிவுகளாக يَّسْتَضْعِفُ பலவீனப்படுத்தினான் طَآٮِٕفَةً ஒரு வகுப்பாரை مِّنْهُمْ அவர்களில் يُذَبِّحُ கொன்றான் اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை هُمْ அவர்களின் وَيَسْتَحْىٖ வாழவிட்டான் نِسَآءَهُمْ‌ ؕ அவர்களின் பெண்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் مِنَ الْمُفْسِدِيْنَ‏ கெட்டவர்களில் ஒருவனாக
28:4. நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
28:4. நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ வைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமம் செய்பவனாக இருந்தான்.
28:4. திண்ணமாக, ஃபிர்அவ்ன் பூமியில் வரம்பு மீறி நடந்துகொண்டான். அதில் வசிப்பவர்களைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான். அவர்களில் ஒரு பிரிவினரை இழிவுபடுத்தினான். அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றான்; அவர்களின் பெண் மக்களை உயிரோடு விட்டுவிட்டான். உண்மையில் அவன் அராஜகம் புரிவோரைச் சேர்ந்தவனாக இருந்தான்.
28:4. நிச்சயமாக ஃபிர் அவ்ன் பூமியில் (மிகவும்) பெருமை கொண்டு, அதிலுள்ளவர்களைப் பல பிரிவினர்களாக்கி, அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனப்படுத்தினான், அவர்களுடைய ஆண் மக்களை அறுத்(துக் கொலை செய்)தான், மேலும் அவர்களின் பெண் மக்களை (உயிருடன் வாழ)விட்டுவைத்தான், நிச்சயமாக அவன் குழப்பம் செய்பவர்களில் (உள்ளவனாக) இருந்தான்.
28:5
28:5 وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَٮِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَۙ‏
وَنُرِيْدُ இன்னும் நாடினோம் اَنْ نَّمُنَّ ?/நாம் அருள்புரிவதற்கு عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது فِى الْاَرْضِ பூமியில் وَنَجْعَلَهُمْ இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு اَٮِٕمَّةً அரசர்களாக وَّنَجْعَلَهُمُ இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு الْوٰرِثِيْنَۙ‏ வாரிசுகளாக
28:5. ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
28:5. எனினும், பூமியில் அவன் பலவீனப்படுத்தியவர்கள் மீது நாம் அருள் புரிந்து அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு இருந்தவர்களுடைய பொருள்களுக்கும்,) இவர்களையே வாரிசுகளாக்கி வைக்க விரும்பினோம்.
28:5. மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்.
28:5. (எகிப்திய) பூமியில் அவனால் பலவீனப்படுத்தப்பட்டோர் மீது நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக நாம் ஆக்கிவைக்கவும், (கொடுமை செய்தோரான பலசாலிகளின் உடமைகளுக்கு) அவர்களை வாரிசுகளாக நாம் ஆக்கி வைக்கவும் நாடினோம்.
28:6
28:6 وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِىَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ‏
وَنُمَكِّنَ இன்னும் நாம் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கு لَهُمْ அவர்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَنُرِىَ நாம் காண்பிப்பதற்கு فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَهَامٰنَ இன்னும் ஹாமான் وَجُنُوْدَ இன்னும் இராணுவங்களுக்கு هُمَا அவ்விருவரின் مِنْهُمْ அவர்கள் மூலமாக مَّا كَانُوْا எதை/இருந்தனர் يَحْذَرُوْنَ‏ அச்சப்படுகின்றனர்
28:6. இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).
28:6. அப்பூமியில் நாம் (பலவீனமான) அவர்களை மேன்மையாக்கி வைத்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் எந்த வேதனைக்குப் பயந்து கொண்டிருந்தார்களோ, அதனை அவர்களுக்குக் காண்பிக்கவும் நாம் கருதினோம்.
28:6. மேலும், அவர்களின் மூலமாக ஃபிர்அவ்னுக்கும், ஹாமானுக்கும், அவ்விருவரின் படையினருக்கும் அவர்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருந்தார்களோ அதை நாம் காண்பித்துக் கொடுக்கவும் நாடியிருந்தோம்.
28:6. மேலும், அப்பூமியில் நாம் அவர்களை ஸ்திரப்படுத்தி வைக்கவும், ஃபிர் அவ்னுக்கும், ஹாமானுக்கும், அவ்விருவரின் படையினருக்கும் இவர்களிடமிருந்து அவர்கள் எ(வ்விஷயத்)தை பயந்துகொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்குக் காண்பிக்கவும் (நாடினோம்).
28:7
28:7 وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ‌ۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْۚ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ‏
وَاَوْحَيْنَاۤ நாம் உள்ளத்தில் போட்டோம் اِلٰٓى اُمِّ தாயாருக்கு مُوْسٰٓى மூஸாவின் اَنْ اَرْضِعِيْهِ‌ۚ நீ அவருக்கு பாலூட்டு! فَاِذَا خِفْتِ நீ பயந்தால் عَلَيْهِ அவரை فَاَ لْقِيْهِ அவரை எரிந்து விடு فِى الْيَمِّ கடலில் وَلَا تَخَافِىْ நீ பயப்படாதே! وَلَا تَحْزَنِىْۚ இன்னும் நீ கவலைப்படாதே! اِنَّا நிச்சயமாக நாம் رَآدُّوْهُ அவரை திரும்பக் கொண்டு வருவோம் اِلَيْكِ உம்மிடம் وَجٰعِلُوْهُ இன்னும் , அவரை ஆக்குவோம் مِنَ الْمُرْسَلِيْنَ‏ தூதர்களில்
28:7. நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
28:7. (ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன்னுடைய இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக்கொண்டு) "அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை நம்முடைய தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்" (என்று அறிவித்தோம்.)
28:7. மேலும், நாம் மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம், “இக் குழந்தைக்குப் பாலூட்டுவீராக! இனி, அதன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நீர் அஞ்சினால் அதனை ஆற்றில் விட்டுவிடும். நீர் யாதொரு அச்சமும், கவலையும் கொள்ளவேண்டாம். திண்ணமாக நாம், அவரை உம்மிடமே திரும்பக் கொண்டுவந்துவிடுவோம். மேலும், அவரைத் தூதர்களில் ஒருவராயும் ஆக்குவோம்!”
28:7. மேலும், மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ (மூலம்) அறிவித்தோம்: “அவருக்குப் பாலுட்டுவாயாக! பின்னர் (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை(ப்பேழையில் வைத்து) ஆற்றில் போட்டு விடுவாயாக, நீ அவரைப் பற்றிப்பயபடவும் வேண்டாம், கவலைப்படவும் வேண்டாம், நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்போராகவும், அவரை, (நம்) தூதர்களில் (ஒருவராக) ஆக்குவோராகவும் உள்ளோம்!”
28:8
28:8 فَالْتَقَطَهٗۤ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًا ‌ ؕ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـــِٕيْنَ‏
فَالْتَقَطَهٗۤ அவரைக் கண்டெடுத்தனர் اٰلُ குடும்பத்தினர் فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் لِيَكُوْنَ முடிவில் அவர் ஆகுவதற்காக لَهُمْ அவர்களுக்கு عَدُوًّا எதிரியாகவும் وَّحَزَنًا ؕ கவலையாகவும் اِنَّ நிச்சயமாக فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَهَامٰنَ ஹாமான் وَجُنُوْدَ இன்னும் ராணுவங்கள் هُمَا அவ்விருவரின் كَانُوْا இருந்தனர் خٰطِـــِٕيْنَ‏ பாவிகளாகவே
28:8. (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
28:8. (ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினரில் ஒருவர் எடுத்துக்கொண்டார். (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தரக்கூடிய (அக்குழந்)தை (யை அவர்களே எடுத்துக்கொண்டதினால்) ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் நிச்சயமாகத் தவறிழைத்தவர்களாவே ஆயினர்.
28:8. இறுதியில், ஃபிர்அவ்னுடைய குடும்பத்தார் அக்குழந்தையை (ஆற்றிலிருந்து) கண்டெடுத்தார்கள். அக்குழந்தை அவர்களுக்கு எதிரியாகவும், அவர்களின் கவலைக்குக் காரணமாகவும் அமையவேண்டும் என்பதற்காக! உண்மையில் ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவருடைய படையினரும் (தங்கள் திட்டத்தில்) பெரிதும் தவறிவிட்டிருந்தார்கள்.
28:8. (ஆகவே, நதியில் மிதந்து வந்த) அக்குழந்தையை ஃபிர் அவ்னுடைய குடும்பத்தினர், அவர் அவர்களுக்கு விரோதியாகவும், துக்கம் தரக்கூடியவராகவும் ஆவதற்காக கண்டெடுத்துக் கொண்டார்கள், நிச்சயமாக ஃபிர் அவ்னும், ஹாமானும், அவ்விருவருடைய படைகளும் தவறிழைத்தவர்களாக இருந்தனர்.
28:9
28:9 وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّىْ وَلَكَ‌ ؕ لَا تَقْتُلُوْهُ ‌ۖ  عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏
وَقَالَتِ கூறினாள் امْرَاَتُ மனைவி فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் قُرَّتُ குளிர்ச்சியாகும் عَيْنٍ கண் لِّىْ وَلَكَ‌ ؕ எனக்கும் உனக்கும் لَا تَقْتُلُوْهُ அதைக் கொல்லாதீர்கள்! ۖ  عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ அது நமக்கு நன்மை தரலாம் اَوْ نَـتَّخِذَهٗ அல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம் وَلَدًا பிள்ளையாக وَّهُمْ இன்னும் அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ உணரவில்லை
28:9. இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.
28:9. (அக்குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மனைவி (தன் கணவனை நோக்கி) "நீ இதனை கொலை செய்துவிடாதே! எனக்கும், உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கின்றது. இதனால் நாம் நன்மை அடையலாம் அல்லது இதனை நாம் நம்முடைய குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினாள். எனினும், (இவராலேயே தங்களுக்கும் அழிவு ஏற்படும் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
28:9. ஃபிர்அவ்னுடைய மனைவி (அவனிடம்) கூறினாள்: “இக்குழந்தை எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாய் உள்ளது. நீங்கள் இதனைக் கொன்றுவிடாதீர்கள். இக்குழந்தை நமக்குப் பயனளிக்கலாம். அல்லது இதனை நாம் மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.” அவர்கள் (விளைவை) உணராதிருந்தார்கள்.
28:9. மேலும், (கண்டெடுக்கப்பட்ட குழந்தயைப் பார்த்த) ஃபிர் அவ்னுடைய மனைவி, (தன் கணவனிடம்), ”எனக்கும், உமக்கும் (இது) ஒரு கண்குளிர்ச்சியாக இருக்கும், இதனை நீங்கள் கொலைசெய்து விடவேண்டாம், இது நமக்கு பயனளிக்கலாம், அல்லது இதனை நாம் நம்முடைய (சுவீகாரக்) குழந்தையாக்கிகொள்ளலாம்” என்று கூறினாள். இன்னும் (இவரால் தங்களுக்கு என்ன நேரும் என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
28:10
28:10 وَاَصْبَحَ فُؤَادُ اُمِّ مُوْسٰى فٰرِغًا‌ ؕ اِنْ كَادَتْ لَـتُبْدِىْ بِهٖ لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا عَلٰى قَلْبِهَا لِتَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
وَاَصْبَحَ ஆகிவிட்டது فُؤَادُ உள்ளம் اُمِّ தாயாருடைய مُوْسٰى மூஸாவின் فٰرِغًا‌ ؕ வெறுமையாக اِنْ كَادَتْ لَـتُبْدِىْ நிச்சயமாக அவள் வெளிப்படுத்தி இருக்கக்கூடும் بِهٖ அவரை لَوْلَاۤ اَنْ رَّبَطْنَا நாம் உறுதிப்படுத்தவில்லையெனில் عَلٰى قَلْبِهَا அவளுடைய உள்ளத்தை لِتَكُوْنَ அவள் ஆகவேண்டும் என்பதற்காக مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
28:10. மூஸாவின் தாயுடைய இருதயம் (துக்கத்தால்) வெறுமையாகி விட்டது; முஃமின்களில் நின்றுமுள்ளவளாய் இருப்பதற்காக நாம் அவள் உள்ளத்தை உறுதிப்படுத்தாது இருந்திருந்தால், அவள் (மூஸா ஆற்றில் விடப்பட்டதை) வெளிப்படுத்த முடுகியிருப்பாள்.
28:10. மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் என்னுடைய வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப் படுத்தியிருக்காவிடில், (மூஸா பிறந்திருக்கும் விஷயத்தை அனைவருக்கும்) அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.
28:10. அங்கே.. மூஸாவுடைய தாயாரின் உள்ளம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது. (நமது வாக்குறுதியின்மீது) நம்பிக்கை கொள்வோரில் அவரும் ஒருவராக வேண்டும் என்பதற்காக, நாம் அவருடைய உள்ளத்தை உறுதிப்படுத்தவில்லையானால் நிச்சயம் அக்குழந்தையின் இரகசியத்தை அவர் வெளிப்படுத்த முனைந்திருப்பார்.
28:10. (குழந்தையை ஆற்றில் போட்ட பின்னர், அவரைப்பற்றிய நினைவைத் தவிர மற்றவைகளை நினைப்பதை விட்டும்) மூஸாவுடைய தாயின் இதயம் வெறுமையாகி விட்டது, அவள் நம்புவர்களில் உள்ளவளாக இருப்பதற்காக நாம் அவளுடைய இதயத்தை (நம்முடைய பேருதவியைக் கொண்டு) கட்டுப்படுத்தி இருக்காவிடில், அவள் இ(வ்விஷயத்)தை (மற்றவருக்கு) வெளிப்படுத்த முனைந்திருப்பாள்
28:11
28:11 وَقَالَتْ لِاُخْتِهٖ قُصِّيْهِ‌ فَبَصُرَتْ بِهٖ عَنْ جُنُبٍ وَّهُمْ لَا يَشْعُرُوْنَۙ‏
وَقَالَتْ அவள் கூறினாள் لِاُخْتِهٖ அவருடைய சகோதரிக்கு قُصِّيْهِ‌ நீ அவரைப் பின்தொடர்ந்து செல் فَبَصُرَتْ ஆக, அவள் பார்த்துவிட்டாள் بِهٖ அவரை عَنْ جُنُبٍ தூரத்திலிருந்து وَّهُمْ எனினும், அவர்கள் لَا يَشْعُرُوْنَۙ‏ உணரவில்லை
28:11. இன்னும் மூஸாவின் சகோதரியிடம்: “அவரை நீ பின் தொடர்ந்து செல்” என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவரை கவனித்து வந்தாள்.
28:11. (அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி "(ஆற்றில் மிதந்து செல்லும்) அதனைப் பின்தொடர்ந்து நீயும் செல்" என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதனை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்.
28:11. அவர் அக்குழந்தையின் சகோதரியிடம் கூறினார்: “அதைப் பின்தொடர்ந்தே செல்!” அவ்வாறே (எதிரிகள்) அறிந்து கொள்ளாத வகையில் தூரத்திலிருந்து அக்குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
28:11. மேலும், (அக்குழந்தையாகிய) அவரின் சகோதரியிடம் “நீ அதனைப் பின் தொடர்ந்து செல்” என்று (மூஸாவுடைய தாயாகிய) அவள் கூறினாள், ஆகவே, அவர்கள் உணராத விதத்தில் தூரத்திலிருந்தே அதனை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
28:12
28:12 وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ اَدُلُّـكُمْ عَلٰٓى اَهْلِ بَيْتٍ يَّكْفُلُوْنَهٗ لَـكُمْ وَهُمْ لَهٗ نٰصِحُوْنَ‏
وَحَرَّمْنَا நாம் தடுத்துவிட்டோம் عَلَيْهِ அவர் மீது الْمَرَاضِعَ பால்கொடுப்பவர்களை مِنْ قَبْلُ முன்னர் فَقَالَتْ கூறினாள் هَلْ اَدُلُّـكُمْ நான் உங்களுக்கு அறிவிக்கலாமா? عَلٰٓى اَهْلِ بَيْتٍ ஒரு வீட்டாரை يَّكْفُلُوْنَهٗ அவர்கள் அவரை பொறுப்பேற்பார்கள் لَـكُمْ உங்களுக்காக وَهُمْ அவர்கள் لَهٗ அவருக்கு نٰصِحُوْنَ‏ நன்மையை நாடுபவர்கள்
28:12. நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: “உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.”
28:12. (ஆற்றில் மிதந்து சென்ற குழந்தையை எடுத்துக் கொண்டவர்கள் அதற்குப் பாலூட்ட பல செவிலித் தாய்களை அழைத்து வந்தனர். எனினும்,) இதற்கு முன்னதாகவே அக்குழந்தை (எவளுடைய) பாலையும் அருந்தாது தடுத்துவிட்டோம். (ஆகவே, இதைப் பற்றி அவர்கள் திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மூஸாவின் சகோதரி அவர்கள் முன் வந்து) "உங்களுக்காக இக்குழந்தைக்கு செவிலித்தாயாக இருந்து அதன் நன்மையைக் கவனிக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளக்கூடிய ஒரு வீட்டுடையாரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று கூறினாள்.
28:12. மேலும், இதர பெண்களின் மார்பகங்களிலிருந்து பால் அருந்துவதை விட்டு முன்னரே, அக்குழந்தையைத் தடுத்திருந்தோம். (இந்நிலையைக் கவனித்து) அச்சிறுமி கூறினாள்: “இக்குழந்தையைப் பரிபாலித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வீட்டாரைப்பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?”
28:12. (நம் திட்டபடி) முன்னரே பால் கொடுப்பவர்களிலிருந்து (பால் குடிப்பதை விட்டும்) அவரை நாம் தடுத்துவிட்டோம், அப்பொழுது, “உங்களுக்காக அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் ஒரு வீட்டினரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? இன்னும், அவர்கள் அதற்கு நன்மையையே நாடுகிறவர்கள்” என்று (மூஸாவின் சகோதரியான) அவள் கூறினாள்.
28:13
28:13 فَرَدَدْنٰهُ اِلٰٓى اُمِّهٖ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
فَرَدَدْنٰهُ அவரை நாம் திரும்பக் கொண்டுவந்தோம் اِلٰٓى اُمِّهٖ அவருடைய தாயாரிடம் كَىْ تَقَرَّ குளிர்வதற்காகவும் عَيْنُهَا அவளது கண் وَلَا تَحْزَنَ இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் وَلِتَعْلَمَ அவள் அறிவதற்காகவும் اَنَّ وَعْدَ நிச்சயமாக/வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ உண்மை وَّلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
28:13. இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.
28:13. (அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும் படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறியமாட்டார்கள்.
28:13. இவ்வாறு நாம் மூஸாவை அவருடைய தாயாரிடம் திரும்பக் கொண்டு வந்தோம்; அவர் கண்குளிர்ந்து, கவலை மறந்திருப்பதற்காகவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதென்று அறிந்து கொள்வதற்காகவும்தான்! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை அறிவதில்லை.
28:13. பின்னர், அவருடைய தாயிடம்_அவளுடைய கண்குளிர்ச்சியடைவதற்காகவும், அவள் கவலை அடையாதிருப்பதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது தான் என்று அவள் அறிந்து கொள்வதற்காகவும்_அவரை நாம் திருப்பிக் கொடுத்தோம் எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதன் உண்மையை) அறியமாட்டார்கள்.
28:14
28:14 وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
وَلَمَّا போது بَلَغَ அடைந்தார் اَشُدَّهٗ அவர் தனது வலிமையை وَاسْتَوٰٓى அவர் முழுமை பெற்றார் اٰتَيْنٰهُ நாம் அவருக்கு தந்தோம் حُكْمًا ஞானத்தையும் وَّعِلْمًا‌ ؕ அறிவையும் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى நாம்கூலிதருகிறோம் الْمُحْسِنِيْنَ‏ நன்மை செய்பவர்களுக்கு
28:14. இன்னும், அவர் வாலிபமடைந்து, (பக்குவ) நிலை பெற்றபோது, நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
28:14. அவர் வாலிபத்தையடைந்து அவருடைய அறிவு பூரணப் பக்குவம் அடையவே, அவருக்கு ஞானக் கல்வியையும், வேதத்தையும் நாம் அளித்தோம். இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்.
28:14. மேலும், மூஸா வாலிபத்தை அடைந்து முழு வளர்ச்சியும் பெற்றபோது, நாம் அவருக்கு நுண்ணறிவையும் ஞானத்தையும் வழங்கினோம். நன்மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்.
28:14. அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலையைப் பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் (நற்) கூலி வழங்குவோம்.
28:15
28:15 وَدَخَلَ الْمَدِيْنَةَ عَلٰى حِيْنِ غَفْلَةٍ مِّنْ اَهْلِهَا فَوَجَدَ فِيْهَا رَجُلَيْنِ يَقْتَتِلٰنِ  هٰذَا مِنْ شِيْعَتِهٖ وَهٰذَا مِنْ عَدُوِّهٖ‌ۚ فَاسْتَغَاثَهُ الَّذِىْ مِنْ شِيْعَتِهٖ عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙ فَوَكَزَهٗ مُوْسٰى فَقَضٰى عَلَيْهِ‌  قَالَ هٰذَا مِنْ عَمَلِ الشَّيْطٰنِ‌ ؕ اِنَّهٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِيْنٌ‏
وَدَخَلَ இன்னும் நுழைந்தார் الْمَدِيْنَةَ நகரத்தில் عَلٰى حِيْنِ நேரத்தில் غَفْلَةٍ கவனமற்று இருந்த مِّنْ اَهْلِهَا அதன் வாசிகள் فَوَجَدَ கண்டார் فِيْهَا அதில் رَجُلَيْنِ இருவரை يَقْتَتِلٰنِ  அவ்விருவரும் சண்டை செய்தனர் هٰذَا இவர் مِنْ شِيْعَتِهٖ அவருடைய பிரிவை சேர்ந்தவர் وَهٰذَا இன்னும் இவர் مِنْ عَدُوِّهٖ‌ۚ அவருடைய எதிரிகளில் உள்ளவர் فَاسْتَغَاثَهُ அவரிடம் உதவி கேட்டான் الَّذِىْ مِنْ شِيْعَتِهٖ இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் عَلَى الَّذِىْ مِنْ عَدُوِّهٖۙ தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக فَوَكَزَهٗ مُوْسٰى மூஸா அவனை குத்து விட்டார் فَقَضٰى கதையை முடித்து விட்டார் عَلَيْهِ‌  அவனுடைய قَالَ هٰذَا கூறினார்/இது مِنْ عَمَلِ செயலில் உள்ளது الشَّيْطٰنِ‌ ؕ ஷைத்தானின் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَدُوٌّ எதிரி ஆவான் مُّضِلٌّ வழி கெடுக்கின்றவன் مُّبِيْنٌ‏ தெளிவான
28:15. (ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார்.
28:15. (மூஸா ஒரு நாளன்று) மக்கள் அயர்ந்து (பராமுகமாக) இருக்கும் சமயத்தில் அவ்வூரில் சென்றபொழுது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார். ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடத்தில் கோரிக் கொண்டான். (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தி அவன் காரியத்தை முடித்து விட்டார். (அதனால் அவன் இறந்து விட்டான். இதை அறிந்த மூஸா) "இது ஷைத்தானுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான எதிரி" எனக் கூறினார்.
28:15. (ஒருநாள்) நகர மக்கள் கவனக்குறைவாய் இருந்தபோது அவர் நகரினுள் நுழைந்தார். அங்கு இருவர் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். ஒருவன் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவன். மற்றவன் அவருடைய எதிரிகளின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவருடைய சொந்த சமுதாயத்தைச் சேர்ந்தவன், எதிர் சமுதாயத்தைச் சேர்ந்தவனுக்கு எதிராகத் தனக்கு உதவும்படி இவரை அழைத்தான். மூஸா அவனை ஓங்கிக் குத்தினார்; அவன் கதையை முடித்தார். (இவ்வாறு நிகழ்ந்ததும்) மூஸா கூறினார்: “இது ஷைத்தானின் செயல்; அவன் கடும் பகைவனும், வெளிப்படையாக வழி கெடுப்பவனுமாவான்.”
28:15. அந்நகரத்தில்_ அதைச்சார்ந்தோர் பாராமுகமாக (அயர்ந்த தூக்கத்தில்) இருந்த சமயத்தில் (மூஸாவாகிய) அவர் நுழைந்தார், அப்போது சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களை அதில் அவர் கண்டார், அ(தில் ஒரு)வன் அவருடைய கூட்டத்தைச் சார்ந்தவன், இ(ன்னொரு)வன் அவருடைய பகைவனைச் சார்ந்தவன். அப்போது அவர் இனத்தைச் சேர்ந்தவன், அவருடைய பகைவனைச் சார்ந்தவனக்கு எதிராக உதவி செய்யுமாறு அவரிடத்தில் கோரினான், (அதற்கிணங்கி) மூஸா அவனை ஒரு குத்துக் குத்தினார், அவன் காரியத்தை முடித்துவிட்டார். (அவன் இறந்துவிட்டதை அறிந்த மூஸா,) “இது ஷைத்தானுடைய செயலில் உள்ளதாகும், நிச்சயமாக அவன் பகிரங்கமாக வழி கெடுக்கக்கூடிய விரோதி” எனக் கூறினார்.
28:16
28:16 قَالَ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ فَغَفَرَ لَهٗ‌ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் ظَلَمْتُ அநீதி இழைத்தேன் نَفْسِىْ எனக்கு فَاغْفِرْ لِىْ ஆகவே, என்னை மன்னித்துவிடு فَغَفَرَ ஆகவே அவன் மன்னித்தான் لَهٗ‌ؕ அவரை اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
28:16. “என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்; அப்போது அவன் அவரை மன்னித்தான் - நிச்சயமாக அவன், மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
28:16. அன்றி அவர் "என் இறைவனே! நிச்சயமாக நான் எனக்கே தீங்கிழைத்துக் கொண்டேன். நீ என்னுடைய குற்றத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். ஆகவே, (இறைவனும்) அவருடைய குற்றத்தை மன்னித்துவிட்டான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான்.
28:16. மூஸா இறைஞ்சினார்: “என் இறைவா! என்மீது நானே கொடுமை இழைத்துக் கொண்டேன். என்னை மன்னித்தருள்வாயாக!” அல்லாஹ் அவருக்கு மன்னிப்பு வழங்கினான். அவன் பெரிதும் மன்னிப்பவனாகவும் கிருபை புரிபவனாகவும் இருக்கின்றான்.
28:16. அவர் “என் இரட்சகனே! நிச்சயமாக நான் எனக்கே அநியாயம் செய்துவிட்டேன், ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக! என்று (பிரார்த்தித்துக்) கூறினார். அப்போது (அல்லாஹ்வாகிய) அவன் அவரை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அவனே மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபை செய்கிறவன்.
28:17
28:17 قَالَ رَبِّ بِمَاۤ اَنْعَمْتَ عَلَىَّ فَلَنْ اَكُوْنَ ظَهِيْرًا لِّلْمُجْرِمِيْنَ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! بِمَاۤ اَنْعَمْتَ சத்தியமாக/அருள் புரிந்ததின் மீது عَلَىَّ எனக்கு فَلَنْ اَكُوْنَ ஆகவே நான் ஆகவே மாட்டேன் ظَهِيْرًا உதவுபவனாக لِّلْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளுக்கு
28:17. “என் இறைவா! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.
28:17. (பின்னும் அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) ஒரு காலத்திலும் நான் குற்றவாளிகளுக்கு உதவி செய்யமாட்டேன்" என்று கூறினார்.
28:17. மூஸா உறுதியாகக் கூறினார்: “என் இறைவா! நீ என்மீது அருளிய இந்த உபகாரத்திற்காக இனி ஒருபோதும் நான், குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்கமாட்டேன்.”
28:17. “என் இரட்சகனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக, (இனி) குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக நான் ஒருபோதும் இருக்கமாட்டேன்” என்று அவர் கூறினார்.
28:18
28:18 فَاَصْبَحَ فِى الْمَدِيْنَةِ خَآٮِٕفًا يَّتَرَقَّبُ فَاِذَا الَّذِى اسْتَـنْصَرَهٗ بِالْاَمْسِ يَسْتَصْرِخُهٗ‌ ؕ قَالَ لَهٗ مُوْسٰٓى اِنَّكَ لَـغَوِىٌّ مُّبِيْنٌ‏
فَاَصْبَحَ காலையில் அவர் இருந்தார் فِى الْمَدِيْنَةِ நகரத்தில் خَآٮِٕفًا பயந்தவராக يَّتَرَقَّبُ எதிர்பார்த்தவராக فَاِذَا الَّذِى اسْتَـنْصَرَهٗ அப்போது/ எவன்/உதவிதேடினான்/அவரிடத்தில் بِالْاَمْسِ நேற்று يَسْتَصْرِخُهٗ‌ ؕ அவரை உதவிக்கு கத்தி அழைத்தான் قَالَ கூறினார் لَهٗ அவனுக்கு مُوْسٰٓى மூசா اِنَّكَ நிச்சயமாக நீ لَـغَوِىٌّ ஒரு மூடன் ஆவாய் مُّبِيْنٌ‏ தெளிவான
28:18. மேலும், (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் இருந்தபோது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன் (மீண்டும்) அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான் அதற்கு, மூஸா: “நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கின்றாய்” என்று அவனிடம் கூறினார்.
28:18. (அன்றிரவு அவருக்கு நிம்மதியாகவே கழிந்தது. எனினும்) காலையில் எழுந்து அந்நகரத்தில் (தன்னைப் பற்றி என்ன நடந்திருக்கின்றதோ என்று) பயந்தவராகக் கவனித்துக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன் (பின்னும் தனக்கு உதவி செய்யுமாறு) கூச்சலிட்டு இவரை அழைத்தான். அதற்கு மூஸா அவனை நோக்கி "நீ பகிரங்கமான கலகக்காரனாக இருக்கிறாய்" என்று நிந்தித்து,
28:18. மறுநாள் அதிகாலையில் அஞ்சியபடியும் (நாற்புறங்களிலிருந்து) அபாயத்தை உணர்ந்தவாறும் நகரில் அவர் போய்க் கொண்டிருந்தார். அப்போது நேற்றைய தினம் அவரை உதவிக்கு அழைத்த அதே மனிதன் இன்றும் உதவிக்காக அழைத்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றார். “நிச்சயம் நீ வெளிப்படையான வழிகேடன்தான்” என்று மூஸா அவனை நோக்கிக் கூறிவிட்டு,
28:18. பின்னர் (மறுநாள்) காலையில் அந்நகரத்தில் (தமக்கு என்ன ஏற்படுமோ என்று) பயந்தவராக (அங்கும் இங்குமாக அவர் கவனித்துக்கொண்டிருந்த அச்சமயத்தில், நேற்று இவரிடம் உதவி தேடியவன், (பின்னர் தனக்கு உதவி கேட்டு) கூச்சலிட்டு இவரை அழைத்தான்; அதற்கு மூஸா அவனிடம், “நீ பகிரங்கமான அழிச்சாட்டியக்காரனாக இருக்கின்றாய்” என்று கூறினார்.
28:19
28:19 فَلَمَّاۤ اَنْ اَرَادَ اَنْ يَّبْطِشَ بِالَّذِىْ هُوَ عَدُوٌّ لَّهُمَا ۙ قَالَ يٰمُوْسٰٓى اَ تُرِيْدُ اَنْ تَقْتُلَنِىْ كَمَا قَتَلْتَ نَفْسًۢا بِالْاَمْسِ ‌ۖ  اِنْ تُرِيْدُ اِلَّاۤ اَنْ تَكُوْنَ جَبَّارًا فِى الْاَرْضِ وَمَا تُرِيْدُ اَنْ تَكُوْنَ مِنَ الْمُصْلِحِيْنَ‏
فَلَمَّاۤ اَنْ اَرَادَ ஆக, அவர் நாடியபோது اَنْ يَّبْطِشَ தண்டிக்க بِالَّذِىْ எவனை هُوَ அவன் عَدُوٌّ எதிரியாக لَّهُمَا ۙ அவர்கள் இருவருக்கும் قَالَ அவன் கூறினான் يٰمُوْسٰٓى மூஸாவே! اَ تُرِيْدُ நீ நாடுகிறாயா? اَنْ تَقْتُلَنِىْ என்னை கொல்ல كَمَا قَتَلْتَ நீ கொன்றது போன்று نَفْسًۢا ஓர் உயிரை بِالْاَمْسِ நேற்று ۖ  اِنْ تُرِيْدُ நீ நாடவில்லை اِلَّاۤ தவிர اَنْ تَكُوْنَ நீ ஆகுவதை جَبَّارًا அநியாயக்காரனாக فِى الْاَرْضِ பூமியில் وَمَا تُرِيْدُ நீ நாடவில்லை اَنْ تَكُوْنَ நீ ஆகுவதை مِنَ الْمُصْلِحِيْنَ‏ சீர்திருத்தவாதிகளில்
28:19. பின்னர், மூஸா தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் (தன்னையே அவர் பிடிக்க) வருகிறார் என்று எண்ணி) “மூஸாவே! நேற்று ஒரு மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னையும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில் (ஒருவராக) இருக்க நீர் நாடவில்லை” என்று கூறினான்.
28:19. பின்னும் (அவனுக்கு உதவி செய்யவே விரும்பி) அவனுக்கும் தனக்கும் விரோதமாய் இருப்பவனைப் பிடிக்க விரும்பினார். (எனினும், இவருடைய இனத்தான் இவர் தன்னையே பிடிக்க வருவதாய்த் தவறாக எண்ணிப் பயந்து) "மூஸாவே! நேற்றைய தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல் என்னையும் நீங்கள் கொலை செய்யக் கருதுகிறீர்களா? இவ்வூரில் (நீங்கள் கொலை பாதகம் செய்யும்) வம்பனாக இருக்கக் கருதுகிறீர்களே அன்றி, சீர்திருத்தும் நல்ல மனிதராக இருக்க நீங்கள் நாடவில்லை" என்று கூச்சலிட்டான்.
28:19. தங்கள் எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்த மனிதனைத் தாக்க விரும்பியபோது அவன் உரக்கக் கூறினான்: “மூஸாவே! நேற்று ஒருவனை நீர் கொலை செய்தது போல இன்று என்னையும் கொலை செய்யலாமென்று கருதுகின்றீரா? நீர் இந்த நாட்டில் அடக்குமுறையாளராய் இருக்க நினைக்கின்றீரே தவிர, சீர்திருத்தவாதியாய்த் திகழ விரும்பவில்லை.”
28:19. பின்னர், தம்மிருவருக்கும் விரோதியாயிருந்தவனைப் பிடிக்க (மூஸாவாகிய) அவர் நாடியபோது, (மூஸாவுடைய கூட்டத்தைச் சார்ந்தவன், அதைத்தவறாக புரிந்துகொண்டு) “மூஸாவே! நேற்றையத்தினம் ஒரு மனிதனைக் கொலை செய்தது போல், என்னையும் நீர் கொலை செய்ய நாடுகிறீரா? பூமியில் வம்பனாக ஆவதைத் தவிர (வேறு எதனையும்) நீர் நாடவில்லை, இன்னும், சீர்திருத்துவோரில் உள்ளவராவதையும் நீர் நாடவில்லை” என்று அவன் கூறினான்.
28:20
28:20 وَجَآءَ رَجُلٌ مِّنْ اَقْصَا الْمَدِيْنَةِ يَسْعٰى قَالَ يٰمُوْسٰٓى اِنَّ الْمَلَاَ يَاْتَمِرُوْنَ بِكَ لِيَـقْتُلُوْكَ فَاخْرُجْ اِنِّىْ لَـكَ مِنَ النّٰصِحِيْنَ‏
وَجَآءَ இன்னும் வந்தார் رَجُلٌ ஓர் ஆடவர் مِّنْ اَقْصَا இறுதியிலிருந்து الْمَدِيْنَةِ நகரத்தின் يَسْعٰى விரைந்தவராக قَالَ கூறினார் يٰمُوْسٰٓى மூஸாவே! اِنَّ நிச்சயமாக الْمَلَاَ பிரமுகர்கள் يَاْتَمِرُوْنَ ஆலோசிக்கின்றனர் بِكَ உமக்காக لِيَـقْتُلُوْكَ அவர்கள் உம்மைக் கொல்வதற்கு فَاخْرُجْ ஆகவே, நீர் வெளியேறிவிடும்! اِنِّىْ நிச்சயமாக நான் لَـكَ உமக்கு مِنَ النّٰصِحِيْنَ‏ நன்மையை நாடுபவர்களில் ஒருவன்
28:20. பின்னர், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, “மூஸாவே! நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நாம் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார்.
28:20. (இக்கூச்சல் மக்களிடையே பரவி, நேற்று இறந்தவனைக் கொலை செய்தவர் மூஸாதான் என்று மக்களுக்குத் தெரிந்து இவரைப் பழிவாங்கக் கருதினார்கள்.) அச்சமயம் பட்டிணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் (விரைவாக) ஓடிவந்து மூஸாவே! "மெய்யாகவே உங்களைக் கொலை செய்துவிட வேண்டுமென்று தலைவர்கள் முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால், நீங்கள் (இவ்வூரைவிட்டு) வெளியேறி விடுங்கள். மெய்யாகவே நான் உங்களுடைய நன்மைக்கே (இதனைக்) கூறுகிறேன்" என்று கூறினார்.
28:20. (இதன் பின்னர்) நகரின் கோடியிலிருந்து ஒருவர் ஓடிவந்து கூறினார்: “மூஸாவே! தலைவர்கள் உம்மைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, நீர் இங்கிருந்து வெளியேறிவிடும். நான் உமக்கு நலம் நாடுபவனாய் இருக்கின்றேன்.
28:20. மேலும், பட்டணத்தின் கோடியிலிருந்து மனிதர் விரைவாக (ஓடி) வந்து, “மூஸாவே! நிச்சயமாக உம்மைக் கொலை செய்துவிட, (இந்நகர) பிரதானிகள் ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்; ஆதலால், நீர் (இங்கிருந்து) வெளியேறிவிடும்; நிச்சயமாக நான் (உம்முடைய நன்மையைக் கருதி) உபதேசம் செய்பவர்களிலுள்ளவனாவேன்” என்று கூறினார்.
28:21
28:21 فَخَرَجَ مِنْهَا خَآٮِٕفًا يَّتَرَقَّبُ‌ قَالَ رَبِّ نَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
فَخَرَجَ ஆக, அவர் வெளியேறினார் مِنْهَا அதிலிருந்து خَآٮِٕفًا பயந்தவராக يَّتَرَقَّبُ‌ எதிர்பார்த்தவராக قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! نَجِّنِىْ என்னைப் பாதுகாத்துக்கொள்! مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
28:21. ஆகவே, அவர் பயத்துடனும், கவனமாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார்.
28:21. ஆகவே, அவர் (தன்னை மக்கள் என்ன செய்யப் போகின்றனரோ என்று) கவலைப்பட்டுப் பயந்தவராக அவ்வூரை விட்டு வெளியேறி, "என் இறைவனே! இவ்வக்கிரமக்கார மக்களிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.
28:21. (இச்செய்தியைக் கேட்டதும்) மூஸா அஞ்சியவராய் முழு எச்சரிக்கையோடு வெளியேறிவிட்டார். மேலும் இறைஞ்சினார்: “என் இறைவா! என்னை கொடுமையாளர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!”
28:21. ஆகவே, அவர் பயந்தவராக (தன்னைப்பற்றி கவலைப்பட்டு அங்குமிங்கும் திரும்பி) கவனித்தவராக அ(வ்வூரான)தைவிட்டு வெளியேறி, “என் இரட்சகனே! அநியாயக்காரர்களின் கூட்டத்திலிருந்து என்னை நீ காப்பாற்றுவாயாக!” என்று கூறினார்.
28:22
28:22 وَلَمَّا تَوَجَّهَ تِلْقَآءَ مَدْيَنَ قَالَ عَسٰى رَبِّىْۤ اَنْ يَّهْدِيَنِىْ سَوَآءَ السَّبِيْلِ‏
وَلَمَّا تَوَجَّهَ மேலும், அவர் முன்னோக்கிச் சென்றபோது تِلْقَآءَ பக்கம் مَدْيَنَ மத்யன் நகரத்தின் قَالَ கூறினார் عَسٰى رَبِّىْۤ என் இறைவன் اَنْ يَّهْدِيَنِىْ எனக்கு வழி காட்டுவான் سَوَآءَ السَّبِيْلِ‏ நேரான பாதையை
28:22. பின்னர், அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, “என் இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்” என்று கூறினார்.
28:22. அவர் "மத்யன்" பக்கம் செல்லக் கருதிய சமயத்தில் (அதன் வழியை அறியாததனால்) "என் இறைவன் அதற்குரிய நேரான வழியை எனக்கு அறிவிக்கக்கூடும்" (என்று தமக்குள்ளாகவே கூறிக்கொண்டு சென்றார்.)
28:22. மூஸா (எகிப்திலிருந்து வெளியேறி) மத்யனை நோக்கித் திரும்பியபோது “என்னுடைய இறைவன் எனக்கு நேரான வழியைக் காட்டக்கூடும்!” என்று கூறினார்.
28:22. இன்னும், அவர் மத்யன் (நகரத்தின்) பக்கம் முன்னோக்கிச் சென்ற சமயத்தில், “என் இரட்சகன் (அதற்குரிய) நேரான வழியில் என்னை செலுத்தப் போதுமானவன்” என்று கூறினார்.
28:23
28:23 وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ اُمَّةً مِّنَ النَّاسِ يَسْقُوْنَ  وَوَجَدَ مِنْ دُوْنِهِمُ امْرَاَتَيْنِ تَذُوْدٰنِ‌ ۚ قَالَ مَا خَطْبُكُمَا‌ ؕ قَالَـتَا لَا نَسْقِىْ حَتّٰى يُصْدِرَ الرِّعَآءُ‌ ٚ وَاَبُوْنَا شَيْخٌ كَبِيْرٌ‏
وَلَمَّا وَرَدَ அவர் வந்தபோது مَآءَ நீர்நிலைக்கு مَدْيَنَ மத்யனுடைய وَجَدَ கண்டார் عَلَيْهِ அதனருகில் اُمَّةً ஒரு கூட்டம் مِّنَ النَّاسِ மக்களில் يَسْقُوْنَ  அவர்கள் நீர் புகட்டுகின்றனர் وَوَجَدَ கண்டார் مِنْ دُوْنِهِمُ அவர்கள் அன்றி امْرَاَتَيْنِ இரண்டு பெண்களையும் تَذُوْدٰنِ‌ ۚ தடுத்துக் கொண்டிருந்தனர் قَالَ அவர் கேட்டார் مَا خَطْبُكُمَا‌ ؕ உங்கள் இருவரின் பிரச்சனை என்ன? قَالَـتَا அவ்விருவரும்கூறினர் لَا نَسْقِىْ நாங்கள் நீர் புகட்ட மாட்டோம் حَتّٰى வரை يُصْدِرَ வெளியேற்றாத الرِّعَآءُ‌ ٚ மேய்ப்பவர்கள் وَاَبُوْنَا எங்கள் தந்தையோ شَيْخٌ வயதான كَبِيْرٌ‏ பெரியவர்
28:23. இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
28:23. (அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி) லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) "உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)" என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் "இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரையில் நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயதடைந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவைகளை ஓட்டி வந்திருக்கிறோம்)" என்றார்கள்.
28:23. மேலும், அவர் மத்யனுடைய கிணற்றுக்கு அருகில் வந்தபோது, அங்கு மக்கள் பலர் தங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களைவிட்டு சற்று விலகி ஒருபுறம் இரண்டு பெண்கள் தம்முடைய கால்நடைகளைத் தடுத்து வைத்துக்கொண்டிருப்பதையும் கண்டார். மூஸா (அப்பெண்களிடம்) “உங்களுடைய பிரச்னை என்ன?” என்று கேட்டார். அவர்கள் கூறினார்கள்: “இந்த இடையர்கள் (தங்கள் கால்நடைகளை) திரும்ப ஓட்டிச் செல்லும் வரை (எங்களுடைய கால்நடைகளுக்கு) எங்களால் தண்ணீர் புகட்ட முடிவதில்லை. மேலும், எங்கள் தந்தையோ மிகவும் வயதானவராய் இருக்கின்றார்”
28:23. இன்னும், (அவ்வாறு சென்ற) அவர், மத்யன் (நகரத்தின் வெளியிலிருந்த) தண்ணீருக்கு (அதன் கிணற்றுக்கு அருகே) வந்தபொழுது, அங்கு ஜனங்களில் ஒரு கூட்டத்தினரை(த்தங்கள் ஆடு, மாடு முதலிய கால்நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பவர்களாகக் கண்டார், இன்னும், அவர்களைத்தவிர இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து (நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டார், அப்பொழுது (அப்பெண்களிடம்) உங்கள் இருவரின் விஷயமென்ன? என்று கேட்டார், அதுக்கு “இம்மேய்ப்பாளர்கள் (தண்ணீர் புகட்டிவிட்டு) விலகும்வரை நாங்கள் தண்ணீர் புகட்ட முடியாது, எங்கள் தந்தையோ முதிர்ந்த வயதையுடைய பெரியவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
28:24
28:24 فَسَقٰى لَهُمَا ثُمَّ تَوَلّٰٓى اِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏
فَسَقٰى ஆகவே, அவர் நீர் புகட்டினார் لَهُمَا அவ்விருவருக்காக ثُمَّ பிறகு تَوَلّٰٓى திரும்பிச் சென்றார் اِلَى பக்கம் الظِّلِّ நிழலின் فَقَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் لِمَاۤ اَنْزَلْتَ நீ எதன் பக்கம் இறக்கினாய் اِلَىَّ எனக்கு مِنْ خَيْرٍ நன்மையின் فَقِيْرٌ‏ தேவை உள்ளவன்
28:24. ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
28:24. (இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு "என் இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதனை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன்" என்று பிரார்த்தித்தார்.
28:24. (இதைக் கேட்ட) மூஸா, அவர்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டினார். பிறகு, ஒரு நிழலில் போய் அமர்ந்து கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி, நான் அதன் பக்கம் தேவையுடையவனாக இருக்கின்றேன்”
28:24. ஆகவே அவர் அவ்விருவரு(டைய கால்நடைகளு)க்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டினார். அதன்பின்னர் அவர் ஒரு (மரத்தின்) நிழலின் பக்கம் திரும்பி, “என் இரட்சகனே! என்பால் எந்த நன்மையை நீ இறக்கிவைக்கிறாயோ நிச்சயமாக நான் (அதற்குத்) தேவையுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.
28:25
28:25 فَجَآءَتْهُ اِحْدٰٮہُمَا تَمْشِىْ عَلَى اسْتِحْيَآءٍ  قَالَتْ اِنَّ اَبِىْ يَدْعُوْكَ لِيَجْزِيَكَ اَجْرَ مَا سَقَيْتَ لَـنَا‌ ؕ فَلَمَّا جَآءَهٗ وَقَصَّ عَلَيْهِ الْقَصَصَ ۙ قَالَ لَا تَخَفْ‌ نَجَوْتَ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
فَجَآءَتْهُ அவரிடம் வந்தாள் اِحْدٰٮہُمَا அவ்விருவரில் ஒருத்தி تَمْشِىْ நடந்தவளாக عَلَى اسْتِحْيَآءٍ  வெட்கத்துடன் قَالَتْ அவள் கூறினாள் اِنَّ நிச்சயமாக اَبِىْ என் தந்தை يَدْعُوْكَ உம்மை அழைக்கிறார் لِيَجْزِيَكَ உமக்கு தருவதற்காக اَجْرَ கூலியை مَا سَقَيْتَ நீநீர்புகட்டியதற்குரிய لَـنَا‌ ؕ எங்களுக்காக فَلَمَّا جَآءَهٗ போது/அவரிடம்/வந்தார் وَقَصَّ இன்னும் விவரித்தார் عَلَيْهِ அவரிடம் الْقَصَصَ ۙ வரலாற்றை قَالَ அவர் கூறினார் لَا تَخَفْ‌ பயப்படாதே! نَجَوْتَ நீ தப்பித்து விட்டாய் مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்(கள்)
28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் முன் வந்து; “எங்களுக்காக நீங்கள் தண்ணீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்கு வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்று கூறினார்; இவ்வாறாக மூஸா அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை எடுத்துச் சொன்னார்; அதற்கவர்; “பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீர் தப்பித்துவிட்டீர்” என்று கூறினார்.
28:25. அச்சமயம் (அவ்விரு பெண்களில்) ஒருத்தி மிக்க நாணத்துடன் இவர் முன் வந்து "நீங்கள் எங்க(ள் கால்நடைக)ளுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உங்களுக்குக் கொடுக்கும் பொருட்டு மெய்யாகவே என் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறி அழைத்துச் சென்றாள். மூஸா அவரிடம் சென்று தன் சரித்திரத்தைக் கூறவே அவர் (இனி) "நீங்கள் பயப்படவேண்டாம். அநியாயக்கார மக்களைவிட்டு நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்" என்று கூறினார்.
28:25. (சிறிது நேரம்கூட செல்லவில்லை, அதற்குள்) அவ்விரு பெண்களில் ஒருத்தி நாணத்தோடு அவரிடம் நடந்து வந்து கூறினாள்: “என்னுடைய தந்தை உங்களை அழைக்கின்றார். நீங்கள் எங்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டியதற்கான கூலியைத் தங்களுக்குத் தருவதற்காக!” மூஸா அவரிடம் வந்தார். மேலும், தனக்கு நேர்ந்த அனைத்து நிலைமைகளையும் அவரிடம் எடுத்துரைத்தபோது அவர் கூறினார்: “அஞ்சாதீர்! கொடுமையாளர்களிடமிருந்து நீர் தப்பித்துவிட்டீர்!”
28:25. (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவ்விருவரில் ஒருத்தி மிக்க நாணத்துடன் நடந்து அவரிடம் வந்து, “ நீர் எங்(கள் கால்நடை)களுக்குத் தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்குக் கொடுப்பதற்காக நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார்” என்று கூறினாள். (இவ்வாறாக) மூஸா அவரிடம் வந்து (தன்) வரலாற்றைக் கூறவே, அவர் “நீர் பயப்படவேண்டாம், அநியாயக்காரர்களான கூட்டத்தாரைவிட்டு நீர் தப்பித்து விட்டீர்” என்று கூறினார்.
28:26
28:26 قَالَتْ اِحْدٰٮہُمَا يٰۤاَبَتِ اسْتَاْجِرْهُ‌ اِنَّ خَيْرَ مَنِ اسْتَـاْجَرْتَ الْقَوِىُّ الْاَمِيْنُ‏
قَالَتْ கூறினாள் اِحْدٰٮہُمَا அவ்விருவரில் ஒருத்தி يٰۤاَبَتِ என் தந்தையே اسْتَاْجِرْهُ‌ அவரை பணியில் அமர்த்துவீராக! اِنَّ நிச்சயமாக خَيْرَ சிறந்தவர் مَنِ اسْتَـاْجَرْتَ எவர்கள்/பணியில் அமர்த்தினீர் الْقَوِىُّ பலசாலி الْاَمِيْنُ‏ நம்பிக்கையளரான
28:26. அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”
28:26. (அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் கூலிக்கு அமர்த்தியவர் களிலேயே மிகச் சிறந்தவர் நம்பிக்கைக்குரிய (இந்த) பலசாலியே ஆவார்" என்று கூறினாள்.
28:26. அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையிடம் கூறினாள்: “என் தந்தையே! இவரைப் பணியாளாய் வைத்துக் கொள்ளுங்கள். எவர் வலிமை மிக்கவராயும் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றாரோ அப்படிப்பட்டவர்தான் நீங்கள் பணியில் அமர்த்திக்கொள்வதற்கு மிகவும் சிறந்தவராவார்.”
28:26. (அப்போது) அவ்விருவரில் ஒருத்தி “என் தந்தையே! நீங்கள் இவரைக்கூலிக்கு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூலிக்குவைத்துக் கொண்டவர்களில் நிச்சயமாக (இவர்) மிகச்சிறந்த பலமிக்கவர், நம்பிக்கைக்குரியவர் ஆவார்” என்று கூறினாள்.
28:27
28:27 قَالَ اِنِّىْۤ اُرِيْدُ اَنْ اُنْكِحَكَ اِحْدَى ابْنَتَىَّ هٰتَيْنِ عَلٰٓى اَنْ تَاْجُرَنِىْ ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ فَاِنْ اَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ‌ۚ وَمَاۤ اُرِيْدُ اَنْ اَشُقَّ عَلَيْكَ‌ؕ سَتَجِدُنِىْۤ اِنْ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰلِحِيْنَ‏
قَالَ அவர் கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اُرِيْدُ நான் விரும்புகிறேன் اَنْ اُنْكِحَكَ உனக்கு நான் மணமுடித்துத்தர اِحْدَى ஒருத்தியை ابْنَتَىَّ என் இரு பெண் பிள்ளைகளில் هٰتَيْنِ இந்த இரண்டு عَلٰٓى மீது اَنْ تَاْجُرَنِىْ எனக்கு கூலியாக (-மஹராக)த் தரவேண்டும் ثَمٰنِىَ حِجَجٍ‌ۚ எட்டு ஆண்டுகள் فَاِنْ اَتْمَمْتَ நீ பூர்த்திசெய்தால் عَشْرًا பத்து ஆண்டுகளை فَمِنْ عِنْدِكَ‌ۚ உன் புறத்திலிருந்து وَمَاۤ اُرِيْدُ நான் விரும்பவில்லை اَنْ اَشُقَّ நான் சிரமம் ஏற்படுத்த عَلَيْكَ‌ؕ உம்மீது سَتَجِدُنِىْۤ நீ காண்பாய்/என்னை اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் مِنَ الصّٰلِحِيْنَ‏ என்னை நல்லோரில்
28:27. (அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: “நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.”
28:27. அதற்கு அவர் (மூஸாவிடம்) கூறினார்: "நீங்கள் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது நீங்கள் எனக்கு செய்யும் நன்றிதான். நான் உங்களுக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீங்கள் என்னை உங்களுக்கு உபகாரியாகவே காண்பீர்கள்" (என்றார்).
28:27. அப்பெண்ணின் தந்தை மூஸாவிடம் கூறினார்: “என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருத்தியை உமக்குத் திருமணம் செய்து தர நான் விரும்புகின்றேன். நீர் எட்டாண்டு காலம் எனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்கின்ற நிபந்தனையின் பேரில்! ஆனால், நீர் பத்து ஆண்டாக நிறைவு செய்தால் அது உம்முடைய விருப்பம்!. நான் உமக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால், என்னை நல்லவராக நீர் காண்பீர்.”
28:27. அ(தற்க)வர் (மூஸாவிடம்) “நீர் எனக்கு எட்டு வருடங்கள் (ஆடு மேய்த்து) வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின்மீது என்னுடைய இவ்விரு குமாரத்திகளில் ஒருத்தியை நான் உமக்குத் திருமணம் செய்து கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன், நீர் (அதைப்) பத்துவருடங்ககளாகப் பூர்த்தி செய்தால் (அது உம்விருப்பப்படி) உம்மிடத்திலிருந்தாகும், நான் உமக்கு சிரமத்தை உண்டாக்க நாடவில்லை, அல்லாஹ் நாடினால், நீர் என்னை நல்லவர்களில் உள்ள (ஒரு)வராகவே காண்பீர்” என்று கூறினார்.
28:28
28:28 قَالَ ذٰ لِكَ بَيْنِىْ وَبَيْنَكَ‌ ؕ اَيَّمَا الْاَجَلَيْنِ قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَـىَّ‌ ؕ وَاللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ‏
قَالَ அவர் கூறினார் ذٰ لِكَ இது بَيْنِىْ எனக்கு மத்தியிலும் وَبَيْنَكَ‌ ؕ உமக்கு மத்தியிலும் اَيَّمَا எதை الْاَجَلَيْنِ இரண்டு தவணையில் قَضَيْتُ நான் நிறைவேற்றினாலும் فَلَا عُدْوَانَ வரம்பு மீறுதல் கூடாது عَلَـىَّ‌ ؕ என் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى مَا نَقُوْلُ நாம் கூறுவதற்கு وَكِيْلٌ‏ பொறுப்பாளன்
28:28. (அதற்கு மூஸா) கூறினார்: “இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்), இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்.
28:28. அதற்கு மூஸா "உங்களுக்கும் நமக்குமிடையே இதுவே (உடன் படிக்கையாகும்). இவ்விரு நிபந்தனைகளில் எதனையும் நான் நிறைவேற்றலாம். (இன்னதைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று) என்மீது கட்டாயமில்லை. நாம் பேசிக்கொண்ட இவ்வுடன் படிக்கைக்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்" என்று கூறினார்.
28:28. அதற்கு மூஸா பதிலளித்தார்: “எனக்கும் உங்களுக்கும் இடையில் இந்த விஷயம் முடிவாகிவிட்டது. இவ்விரு தவணைகளில் எதனை நான் நிறைவேற்றினாலும் (அதன் பிறகு) எவ்விதத்திலும் எனக்கு சிரமம் தரக்கூடாது. மேலும், நாம் பேசித் தீர்மானித்திருக்கின்ற இந்த ஒப்பந்தத்துக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.”
28:28. அதற்கு (மூஸா) அது “எனக்கும், உங்களுக்குமிடையில் உள்ளதாகும். இரு தவணைகளில் எதனை நான் நிறைவேற்றினாலும் என்மீது குற்றமில்லை, நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன்” என்று கூறினார்.
28:29
28:29 فَلَمَّا قَضٰى مُوْسَى الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖۤ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًا‌ۚ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّىْۤ اٰنَسْتُ نَارًا‌ لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏
فَلَمَّا போது قَضٰى முடித்தார் مُوْسَى மூசா الْاَجَلَ தவணையை وَسَارَ இன்னும் சென்றார் بِاَهْلِهٖۤ தனது குடும்பத்தினரோடு اٰنَسَ பார்த்தார் مِنْ جَانِبِ அருகில் الطُّوْرِ மலையின் نَارًا‌ۚ நெருப்பை قَالَ கூறினார் لِاَهْلِهِ தனது குடும்பத்தினரிடம் امْكُثُوْۤا நீங்கள் தாமதியுங்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰنَسْتُ நான் பார்த்தேன் نَارًا‌ ஒரு நெருப்பை لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ உங்களிடம் (கொண்டு) வருகிறேன் مِّنْهَا அதிலிருந்து بِخَبَرٍ ஒரு செய்தியை اَوْ அல்லது جَذْوَةٍ கங்கை مِّنَ النَّارِ நெருப்பின் لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ‏ நீங்கள் குளிர்காய்வதற்காக
28:29. ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
28:29. மூஸா தன்னுடைய தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்வியை திருமணம் செய்துகொண்டு) தன்னுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் ("ஸீனாய்" என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி "நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்குச் சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி யாதொரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.
28:29. மூஸா தவணையை பூர்த்தியாக்கி விட்டுத் தம் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபோது ‘தூர்’ அருகில் நெருப்பைக் கண்டார். அவர் தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “நில்லுங்கள்! நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் அங்கிருந்து ஏதேனும் செய்தியை அறிந்து வரலாம்; அல்லது அந்த நெருப்பிலிருந்து ஒரு கொள்ளியைக் கொண்டு வரலாம். அதன் மூலம் நீங்கள் குளிர்காயலாம்.”
28:29. ஆகவே, மூஸா (தம்) தவணையை முடித்துக் கொண்டு தன் குடும்பத்தினருடன் (இரவில்) பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, (வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் (ஸீனாய் மலையின்) புறத்திலிருந்து ஒரு நெருப்பைப் பார்த்தார், தன் குடும்பத்தினரிடம், “நீங்கள் தங்கியிருங்கள், நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன், அதிலிருந்து (பாதையைப் பற்றிய) ஒரு தகவலையோ அல்லது நீங்கள் குளிர்க்காய்வதற்காக நெருப்பின் ஒரு பந்தத்தையோ உங்களுக்கு நான் கொண்டுவரக்கூடும்” என்று கூறினார்.
28:30
28:30 فَلَمَّاۤ اَتٰٮهَا نُوْدِىَ مِنْ شَاطِیٴِ الْوَادِ الْاَيْمَنِ فِى الْبُقْعَةِ الْمُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ اَنْ يّٰمُوْسٰٓى اِنِّىْۤ اَنَا اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ ۙ‏
فَلَمَّاۤ اَتٰٮهَا அவர் அதனிடம் வந்தபோது نُوْدِىَ சப்தமிட்டு அழைக்கப்பட்டார் مِنْ شَاطِیٴِ பக்கத்திலிருந்து الْوَادِ பள்ளத்தாக்கின் الْاَيْمَنِ வலது فِى الْبُقْعَةِ இடத்தில் الْمُبٰرَكَةِ புனிதமான مِنَ الشَّجَرَةِ மரத்திலிருந்து اَنْ يّٰمُوْسٰٓى மூசாவே! اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ ۙ‏ அகிலங்களின்
28:30. அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார்.
28:30. அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற அந்த மைதானத்தின் ஓடையின் வலது பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் இருந்து "மூஸாவே! நிச்சயமாக உலகத்தாரை படைத்து வளர்த்து காக்கும் அல்லாஹ் நான்தான்" என்ற சப்தத்தைக் கேட்டார்.
28:30. அவர் அங்கு சென்றதும் பள்ளத்தாக்கின் வலக்கரையில் அருள்பாலிக்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து உருவிலி (அசரீரி) எழுந்தது: “மூஸாவே! நான்தான் அல்லாஹ்! அகிலத்தாரின் அதிபதி”.
28:30. அவர் அதனிடம் வந்தபொழுது, மிக்க பாக்கியம் பெற்ற பகுதியிலுள்ள வலப்பக்கத்திலுள்ள ஓடையின் ஓர் மரத்திலிருந்து, “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்” என அழைக்கப்பட்டார்.
28:31
28:31 وَاَنْ اَ لْقِ عَصَاكَ‌ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ يٰمُوْسٰٓى اَ قْبِلْ وَلَا تَخَفْ‌ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ‏
وَاَنْ اَ لْقِ இன்னும் எறிவீராக! عَصَاكَ‌ ؕ உமது கைத்தடியை فَلَمَّا رَاٰهَا ஆக, அவர் பார்த்தபோது/அதை تَهْتَزُّ நெளிவதாக كَاَنَّهَا ஒரு போன்று/அது جَآنٌّ பாம்பை وَّلّٰى திரும்பி ஓடினார் مُدْبِرًا புறமுதுகிட்டவராக وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ அவர் பார்க்கவில்லை يٰمُوْسٰٓى மூஸாவே! اَ قْبِلْ முன்னே வருவீராக! وَلَا تَخَفْ‌ பயப்படாதீர்! اِنَّكَ நிச்சயமாக நீர் مِنَ الْاٰمِنِيْنَ‏ பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்
28:31. “உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
28:31. (அன்றி) "நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதனை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதனைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) "மூஸாவே! பயப்படாது நீங்கள் முன் வாருங்கள்! நிச்சயமாக நீங்கள் அச்சமற்றவர்.
28:31. மேலும், (கட்டளையிடப்பட்டது) “உம்முடைய கைத்தடியைக் கீழே போடும்!” அத்தடி பாம்பைப்போல் அசைந்து நெளிவதை மூஸா பார்த்தபோது, பின் நோக்கி ஓடினார்; திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. (அப்போது சொல்லப்பட்டது:) “மூஸாவே! திரும்பி வாரும்! அஞ்ச வேண்டாம். நீர் முற்றிலும் பாதுகாக்கப்பட்டவராவீர்.
28:31. அன்றியும் ‘நீர் உம்முடைய தடியைப் போடுவீராக! (என்று அவருக்குக் கூறப்பட்டது.) அப்பொழுது நிச்சயமாக அது பெரியதொரு பாம்பைப் போன்று மிகவேகமாக நெளிவதைக்கண்டு (பயந்து) அவர் திரும்பிப் பார்க்காதவராக (அதனைவிட்டும் விலகி) புறமுதுகிட்டுத் திரும்பினார். (அச்சமயத்தில்) ”மூஸாவே! நீர் முன்னோக்கிவாரும், இன்னும் நீர் பயப்படாதீர், நிச்சயமாக நீர் அச்சமற்றவர்களில் உள்ளவராவீர்” (என்றும் சொல்லப்பட்டது).
28:32
28:32 اُسْلُكْ يَدَكَ فِىْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ وَّاضْمُمْ اِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ‌ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏‏‏
اُسْلُكْ நுழைப்பீராக! يَدَكَ உமது கையை فِىْ جَيْبِكَ உமது சட்டைப் பையில் تَخْرُجْ அது வெளிவரும் بَيْضَآءَ வெண்மையாக مِنْ غَيْرِ இன்றி سُوْٓءٍ குறை وَّاضْمُمْ அணைப்பீராக! اِلَيْكَ உம்முடன் جَنَاحَكَ உமது கையை مِنَ الرَّهْبِ‌ பயந்துவிட்டதால் فَذٰنِكَ ஆக,இவைஇரண்டும் بُرْهَانٰنِ இரண்டு அத்தாட்சிகளாகும் مِنْ புறத்திலிருந்து رَّبِّكَ உமது இறைவன் اِلٰى பக்கம் فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَمَلَا۟ٮِٕهٖؕ இன்னும் அவனது பிரமுகர்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருக்கின்றனர் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ‏‏‏ பாவிகளான
28:32. உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது).
28:32. உங்களுடைய சட்டைப் பையில் உங்களுடைய கையைப் புகுத்துங்கள். அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீங்கள் பயப்படாதிருக்கும் பொருட்டு உங்களுடைய கைகளை உங்களுடைய விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீங்கள் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உங்கள் இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்" (என்று அவருக்குக் கூறப்பட்டது).
28:32. உம்முடைய கையை உம் சட்டையின் நெஞ்சுப் பகுதியில் புகுத்தும்! அது பிரகாசிக்கக்கூடியதாய் வெளிப்படும், எவ்வித மாசுமருவுமின்றி! மேலும், அச்சத்தைப் போக்குவதற்காக உம்முடைய தோள்களை நெருக்கமாக வையும். இவை இரண்டும் இறைவனிடமிருந்துள்ள தெளிவான சான்றுகளாகும், ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அவைப் பிரமுகர்களிடமும் சமர்ப்பிப்பதற்காக! அவர்கள் அறவே கீழ்ப்படியாத மக்களாக இருக்கின்றார்கள்.”
28:32. “உம்முடைய சட்டைப்பைக்குள் உம்முடைய கையை நுழைப்பீராக, அது எவ்விததீங்கின்றி (பிரகாசமுள்ள) வெண்மையாக வெளிப்படும், பயத்திலிருந்து (விடுபட) உம்முடைய புஜங்களை உம் (விலாவின்) பால் சேர்த்துக் கொள்வீராக! இவ்விரண்டும் ஃபிர் அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் (நீர் எடுத்துச் செல்வதற்கு) உரிய உமதிரட்சகனிடமிருந்து இரு அத்தாட்சிகளாகும், நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் கூட்டதினர்களாகவே இருக்கிறார்கள்” (என்றும் அவருக்குக் கூறப்பட்டது).
28:33
28:33 قَالَ رَبِّ اِنِّىْ قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ‏
قَالَ அவர் கூறினார்: رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் قَتَلْتُ கொன்றுள்ளேன் مِنْهُمْ அவர்களில் نَفْسًا ஓர் உயிரை فَاَخَافُ ஆகவே, நான் பயப்படுகிறேன் اَنْ يَّقْتُلُوْنِ‏ அவர்கள் என்னை கொல்வதை
28:33. (அதற்கு அவர்): “என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்” என்று கூறினார்.
28:33. அதற்கவர் "என் இறைவனே! மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (அன்றி, என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை.)
28:33. மூஸா கூறினார்: “என் அதிபதியே! நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன். எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்களோ என்னு நான் அஞ்சுகின்றேன்.
28:33. அ(தற்க)வர், “என் இரட்சகனே! நிச்சயமாக நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கின்றேன், ஆகவே அதற்கு(ப் பகரமாக) என்னை அவர்கள் கொலை செய்துவிடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
28:34
28:34 وَاَخِىْ هٰرُوْنُ هُوَ اَفْصَحُ مِنِّىْ لِسَانًا فَاَرْسِلْهُ مَعِىَ رِدْاً يُّصَدِّقُنِىْٓ‌ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِ‏
وَاَخِىْ எனது சகோதரர் هٰرُوْنُ ஹாரூன் هُوَ அவர் اَفْصَحُ தெளிவான مِنِّىْ என்னைவிட لِسَانًا நாவன்மைஉடையவர் فَاَرْسِلْهُ ஆகவே, அவரைஅனுப்பு! مَعِىَ رِدْاً என்னுடன் உதவியாக يُّصَدِّقُنِىْٓ‌ அவர் என்னை உண்மைப்படுத்துவார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ நான் பயப்படுகிறேன் اَنْ يُّكَذِّبُوْنِ‏ அவர்கள் என்னை பொய்ப்பிப்பதை
28:34. இன்னும்: “என் சகோதரர் ஹாரூன் - அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்” (என்றுங் கூறினார்).
28:34. என்னுடைய சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.
28:34. மேலும், என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னைவிட அதிகமாக நாவன்மை உடையவர். அவரை உதவியாளர் எனும் முறையில் என்னுடன் அனுப்பிவைப்பாயாக! அவர் எனக்குத் துணையிருப்பார். என்னைப் பொய்யன் என்று அம்மக்கள் மறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.”
28:34. “மேலும், என்னுடைய சகோதரர் ஹாருன், அவர் என்னைவிட பேச்சால் மிகத் தெளிவானவர், ஆகவே அவரை எனக்கு உதவியாக என்னுடன் நீ அனுப்பிவை, அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார், அவர்கள் என்னைப் பொய்யாக்கிவிடுவதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” (என்று கூறினார்).
28:35
28:35 قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِيْكَ وَنَجْعَلُ لَـكُمَا سُلْطٰنًا فَلَا يَصِلُوْنَ اِلَيْكُمَا‌‌ ۛ ‌ۚ بِاٰيٰتِنَاۤ ‌ ۛ‌ ۚ اَنْـتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ‏
قَالَ அவன் கூறினான் سَنَشُدُّ பலப்படுத்துவோம் عَضُدَكَ உமது புஜத்தை بِاَخِيْكَ உமது சகோதரரைக் கொண்டு وَنَجْعَلُ இன்னும் ஆக்குவோம் لَـكُمَا உம் இருவருக்கும் سُلْطٰنًا ஓர் அத்தாட்சியை فَلَا يَصِلُوْنَ ஆகவே அவர்கள் வரமுடியாது اِلَيْكُمَا‌ ۛ ۚ உங்கள் இருவர் பக்கம் بِاٰيٰتِنَاۤ ۛ‌ ۚ நமது அத்தாட்சிகளைக் கொண்டு اَنْـتُمَا நீங்கள் இருவரும் وَمَنِ اتَّبَعَكُمَا உங்கள் இருவரை பின்பற்றினார்(கள்)/எவர்கள் الْغٰلِبُوْنَ‏ மிகைத்தவர்கள்
28:35. (அல்லாஹ்) கூறினான்: “நாம் உம் கையை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.”
28:35. அதற்கு இறைவன் "உங்கள் சகோதரரைக் கொண்டு உங்கள் தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நம்முடைய (இந்த) அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும்தான் வெற்றி பெருவீர்கள்" என்று கூறினான்.
28:35. இறைவன் கூறினான்: “நாம் உம்முடைய சகோதரர் மூலம் உம்முடைய கையைப் பலப்படுத்துவோம். மேலும், நாம் உங்களிருவருக்கும் எத்தகைய அதிகாரத்தை வழங்குவோம் என்றால், உங்களுக்கு அவர்கள் எந்தத் தீங்கையும் செய்ய முடியாது. நம்முடைய சான்றுகளின் பலத்தினால் நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுகின்றவர்களுமே வெற்றியார்களாய்த் திகழ்வீர்கள்!”
28:35. (அதற்கு அல்லாஹ்) “உம் சகோதரரைக் கொண்டு உம் புஜத்தை நாம் வலுப்படுத்துவோம், நாம் உங்களிருவருக்குமே வெற்றியைத் தருவோம், ஆகவே அவர்கள் உங்களிருவர்பால் நெருங்கமாட்டார்கள், நீங்கள் நம்முடைய அத்தாட்சிகளுடன் (செல்லுங்கள்), நீங்களிருவரும் உங்கள் இருவரைப் பின்பற்றுவோரும்தான் வெற்றி பெறக்கூடியவர்கள்” என்று கூறினான்.
28:36
28:36 فَلَمَّا جَآءَهُمْ مُّوْسٰى بِاٰيٰتِنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّفْتَـرًى وَمَا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ‏
فَلَمَّا جَآءَ ஆகவே, வந்தபோது هُمْ அவர்களிடம் مُّوْسٰى மூசா بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளுடன் بَيِّنٰتٍ தெளிவான قَالُوْا அவர்கள் கூறினர் مَا இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியமே مُّفْتَـرًى இட்டுக்கட்டப்பட்ட وَمَا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதைப் பற்றி فِىْۤ اٰبَآٮِٕنَا எங்கள் மூதாதைகளில் الْاَوَّلِيْنَ‏ முந்திய(வர்கள்)
28:36. ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்: “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.
28:36. நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் "இது சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை" என்று கூறினார்கள்.
28:36. பிறகு, மூஸா தெளிவான சான்றுகளோடு அம்மக்களிடம் வந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “இது புனையப்பட்ட சூனியமேயன்றி வேறில்லை. எங்களுடைய முன்னோர்களின் காலத்தில்கூட இதனை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை.”
28:36. எனவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபொழுது, அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட சூனியத்தைத் தவிர வேறில்லை, முன்னோர்களான எங்கள் மூதாதையரிடத்திலும் இ(வ்விஷயத்)தை நாங்கள் கேள்விப்படவுமில்லை” என்று கூறினார்கள்.
28:37
28:37 وَقَالَ مُوْسٰى رَبِّىْۤ اَعْلَمُ بِمَنْ جَآءَ بِالْهُدٰى مِنْ عِنْدِهٖ وَمَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ‌ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
وَقَالَ கூறினார் مُوْسٰى மூசா رَبِّىْۤ என் இறைவன் اَعْلَمُ நன்கறிந்தவன் بِمَنْ جَآءَ வந்தவரை(யும்) بِالْهُدٰى நேர்வழியுடன் مِنْ عِنْدِهٖ அவனிடமிருந்து وَمَنْ இன்னும் எவர் تَكُوْنُ இருக்கும் لَهٗ عَاقِبَةُ அவருக்கு முடிவு الدَّارِ‌ؕ மறுமையின் اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
28:37. (அப்போது மூஸா) கூறினார்: “அவனிடமிருந்து நேர்வழியுடன் வருபவர் யாரென்றும்; இறுதி(யாக சுவன) வீடு யாருக்காக உள்ளது என்பதையும் என் இறைவன் நன்கறிவான். நிச்சயமாக அக்கிரமம் செய்வோர் வெற்றி பெற மாட்டார்கள்.”
28:37. அதற்கு மூஸா "தன் இறைவனிடமிருந்து நேரான வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும், நல்ல முடிவு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் என் இறைவனே நன்கறிவான். நிச்சயமாக (சூனியம் செய்யும்) அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்" என்று கூறினார்.
28:37. அதற்கு மூஸா பதிலளித்தார்: “என்னுடைய இறைவன் தன்னிடமிருந்து நேர்வழியைப் பெற்று வந்தவரின் நிலை என்னவென்பதையும், இறுதி முடிவு எவருக்கு நல்லவிதமாக அமையும் என்பதையும் நன்கு அறிவான். உண்மையாக, கொடுமைக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.”
28:37. (அதற்கு) மூஸா, ”என் இரட்சகன், தன்னிடமிருந்து நேர் வழியைக் கொண்டு வந்தவர் யார் என்பதையும், இறுதி(யில் சுவன) வீடு யாருக்குக் கிடைக்கும் என்பதையும் மிக அறிவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” என்று கூறினார்.
28:38
28:38 وَقَالَ فِرْعَوْنُ يٰۤـاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرِىْ‌ ۚ فَاَوْقِدْ لِىْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّىْ صَرْحًا لَّعَلِّىْۤ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى ۙ وَاِنِّىْ لَاَظُنُّهٗ مِنَ الْـكٰذِبِيْنَ‏
وَقَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் يٰۤـاَيُّهَا الْمَلَاُ பிரமுகர்களே! مَا عَلِمْتُ நான் அறியமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு (இருப்பதை) مِّنْ اِلٰهٍ ஒரு கடவுள் غَيْرِىْ‌ ۚ என்னை அன்றி فَاَوْقِدْ لِىْ ஆகவே, நெருப்பூட்டு/எனக்காக يٰهَامٰنُ ஹாமானே! عَلَى الطِّيْنِ குழைத்தகளிமண்ணை فَاجْعَلْ உருவாக்கு لِّىْ எனக்காக صَرْحًا முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை لَّعَلِّىْۤ اَطَّلِعُ நான் தேடிப்பார்க்க வேண்டும் اِلٰٓى اِلٰهِ கடவுளை مُوْسٰى ۙ மூஸாவின் وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் لَاَظُنُّهٗ அவரை கருதுகிறேன் مِنَ الْـكٰذِبِيْنَ‏ பொய்யர்களில் (ஒருவராக)
28:38. இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.
28:38. அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) "தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு இறைவன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச் செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய இறைவனை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு இறைவன் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ் விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்" என்று கூறினான்.
28:38. மேலும், ஃபிர்அவ்ன் கூறினான்: “அவையோரே! உங்களுக்கு என்னைத் தவிர வேறு இறைவன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஹாமானே! களிமண்ணைச் சுட்டு கற்கள் தயாரித்து எனக்காக ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பும். ஒருவேளை, அதன் மீதேறி நான் மூஸாவுடைய இறைவனைப் பார்க்கக்கூடும். திண்ணமாக, நான் அவரைப் பொய்யர் என்றே கருதுகின்றேன்.”
28:38. (அதற்கு) ஃபிர் அவன், “பிரதானிகளே! என்னைத் தவிர வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை, ஆகவே, ஹாமானே! களிமண்ணின் மீது (_செங்கல் சூளைக்கு) எனக்காக நெருப்பை மூட்டி (அவற்றைக் கொண்டு மிக உயரமான) மாளிகையை எனக்காக நீ கட்டுவாயாக, (அதில் ஏறி) மூஸாவுடைய இரட்சகனை நான் எட்டிப் பார்க்க வேண்டும், (அவர்) தனக்கு வேறு இரட்சகன் இருப்பதாகக் கூறுகிறாரே, இவ்விஷயத்தில் நிச்சயமாக அவரைப் பொய்யர்களில் உள்ளவராகவே நான் எண்ணுகிறேன்” என்றும் கூறினான்.
28:39
28:39 وَاسْتَكْبَرَ هُوَ وَجُنُوْدُهٗ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ وَظَنُّوْۤا اَنَّهُمْ اِلَـيْنَا لَا يُرْجَعُوْنَ‏
وَاسْتَكْبَرَ பெருமையடித்தனர் هُوَ அவனும் وَجُنُوْدُهٗ அவனுடைய ராணுவங்களும் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَـقِّ நியாயமின்றி وَظَنُّوْۤا இன்னும் நினைத்தனர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اِلَـيْنَا நம்மிடம் لَا يُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள்
28:39. மேலும் அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர், மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக்கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள்.
28:39. அவனும் அவனுடைய இராணுவங்களும் நியாயமின்றிப் பூமியில் பெருமை அடித்துக்கொண்டு நிச்சயமாக அவர்கள் நம்மிடம் (விசாரணைக்காக) கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்கள்.
28:39. அவனும் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றித் தற்பெருமை கொண்டனர். மேலும், அவர்கள் எப்போதும் நம் பக்கம் திரும்பி வரவேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டனர்.
28:39. அவனும், அவனுடைய படையினரும் நியாயமின்றி பூமியில் பெருமையடித்துக் கொண்டிருந்தனர், நிச்சயமாக அவர்கள் நம்பக்கம் திருப்பப்படமாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்கள்.
28:40
28:40 فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ‌ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ‏
فَاَخَذْنٰهُ ஆகவே, அவனை(யும்) ஒன்றிணைத்தோம் وَجُنُوْدَهٗ அவனுடைய ராணுவங்களையும் فَنَبَذْنٰهُمْ அவர்களை நாம் எறிந்தோம் فِى الْيَمِّ‌ۚ கடலில் فَانْظُرْ ஆக, பார்ப்பீராக! كَيْفَ எப்படி كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களின்
28:40. ஆகையால், நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம்; பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம்; ஆகவே, அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே!) நீர் கவனித்துக் கொள்ளும்.
28:40. ஆதலால், நாம் அவனையும் அவனுடைய இராணுவங்களையும் பிடித்து அவர்களை கடலில் எறிந்து (மூழ்கடித்து) விட்டோம். (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனியுங்கள்.
28:40. இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம்; அவர்களைக் கடலில் சிதறடித்தோம். இப்போது பார்த்துக் கொள்ளுங்கள், அந்தக் கொடுமைக்காரர்களின் கதி என்னவாயிற்று என்பதை!
28:40. ஆதலால் நாம் அவனையும், அவனுடைய படையினரையும் பிடித்தோம், பின்னர் அவர்களைக் கடலில் எரிந்து விட்டோம், ஆகவே, (நபியே!) அநியாயக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் கவனிப்பீராக.
28:41
28:41 وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّدْعُوْنَ اِلَى النَّارِ‌ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ لَا يُنْصَرُوْنَ‏
وَجَعَلْنٰهُمْ அவர்களை ஆக்கினோம் اَٮِٕمَّةً முன்னோடிகளாக يَّدْعُوْنَ அழைக்கின்றனர் اِلَى النَّارِ‌ۚ நரகத்தின் பக்கம் وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا يُنْصَرُوْنَ‏ அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
28:41. மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர்களை ஆக்கியிருந்தோம்; இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
28:41. (அவர்கள் இவ்வுலகத்தில் இருந்தவரை மனிதர்களை) நரகத்திற்கு அழைக்கக்கூடிய தலைவர்களாகவே அவர்களை ஆக்கி வைத்தோம். மறுமை நாளிலோ அவர்களுக்கு எத்தகைய உதவியும் கிடைக்காது.
28:41. நாம் அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கும் தலைவர்களாக ஆக்கினோம். மேலும், மறுமைநாளில் எங்கிருந்தும் எவ்வித உதவியும் அவர்களால் பெறமுடியாது.
28:41. மேலும், நரகத்தின் பக்கம் அழைக்கக்கூடிய தலைவர்களாகவே (இம்மையில்) நாம் அவர்களை ஆக்கிவைத்திருந்தோம். இன்னும், மறுமை நாளில் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படமாட்டர்கள்.
28:42
28:42 وَاَتْبَعْنٰهُمْ فِىْ هٰذِهِ الدُّنْيَا لَـعْنَةً‌  ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ هُمْ مِّنَ الْمَقْبُوْحِيْنَ‏
وَاَتْبَعْنٰهُمْ அவர்களுக்குத் தொடர வைத்தோம் فِىْ هٰذِهِ الدُّنْيَا இவ்வுலகத்திலும் لَـعْنَةً‌  ۚ சாபத்தை وَيَوْمَ الْقِيٰمَةِ மறுமையிலும் هُمْ அவர்கள் مِّنَ الْمَقْبُوْحِيْنَ‏ அசிங்கப்படுத்தப்பட்டவர்களில் உள்ளவர்கள்
28:42. இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
28:42. இவ்வுலகில் நம்முடைய சாபம் அவர்களைப் பின்பற்றும்படி செய்தோம். மறுமை நாளிலோ அவர்களுடைய நிலைமை மிக்க கேடானதாகவே இருக்கும்.
28:42. இவ்வுலகில் சாபம் அவர்களைத் தொடரும்படிச் செய்தோம். மேலும், மறுமைநாளில் அவர்கள் மிகவும் அருவருப்பான நிலைக்கு ஆளாவார்கள்.
28:42. அன்றியும், இவ்வுலகில் (நம்முடைய) சாபத்தை அவர்களுக்கு பின்தொடரச் செய்தோம், மேலும், மறுமை நாளில் அவர்கள் இழிநிலையுடையவர்களில் உள்ளோராவர்.
28:43
28:43 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ مِنْۢ بَعْدِ مَاۤ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰى بَصَآٮِٕرَ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةً لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் தந்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை مِنْۢ بَعْدِ பின்னர் مَاۤ اَهْلَكْنَا நாம் அழித்த الْقُرُوْنَ தலைமுறையினர்களை الْاُوْلٰى முந்திய(வர்கள்) بَصَآٮِٕرَ ஒளியாகவும் لِلنَّاسِ மக்களுக்கு وَهُدًى நேர்வழியாகவும் وَّرَحْمَةً கருணையாகவும் لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏ அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்
28:43. இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).
28:43. (அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக் கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (அதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே (கொடுத்தோம்).
28:43. மேலும், முந்தைய தலைமுறையினரை அழித்த பிறகு, நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம் மக்களுக்கு அறிவொளி ஊட்டக்கூடியதாகவும் வழிகாட்டக் கூடியதாகவும் கருணையாகவும் அது திகழ்ந்தது மக்கள் படிப்பினை பெறக்கூடும் என்பதற்காக!
28:43. மேலும், (இவ்வாறு) முந்தைய தலைமுறையினர்களை நாம் அழித்துவிட்ட பின்னர், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம், (அது) மனிதர்களுக்கு நல்ல படிப்பினைகளை தரக்கூடியதாகவும், நேர் வழியாகவும், அருளாகவும் இருந்தது; அவர்கள் (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவதற்காக(க்கொடுத்தோம்).
28:44
28:44 وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِىِّ اِذْ قَضَيْنَاۤ اِلٰى مُوْسَى الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِيْنَۙ‏
وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை بِجَانِبِ பக்கத்தில் الْغَرْبِىِّ மேற்கு اِذْ قَضَيْنَاۤ நாம் ஒப்படைத்த போது اِلٰى مُوْسَى மூஸாவிடம் الْاَمْرَ சட்டங்களை وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை مِنَ الشّٰهِدِيْنَۙ‏ இருந்தவர்களில்
28:44. மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
28:44. (நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீங்கள் அதன் மேற்குத் திசையில் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நீங்கள் ஒருவருமல்ல.
28:44. மேலும் (நபியே!) நாம் மூஸாவுக்கு இந்த ஷரீஅத் சட்டத்தை வழங்கியபோது நீர் அந்த மேற்குப் பகுதியில் இருக்கவில்லை. சாட்சியாளர்களில் ஒருவராயும் இருக்கவில்லை.
28:44. (நபியே!) நாம் மூஸாவுக்குக் கட்டளையை விதித்தபோது, நீர் (சினாய் மலையின்) மேற்குத் திசையில் இருக்கவுமில்லை, அங்கு அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை.
28:45
28:45 وَلٰـكِنَّاۤ اَنْشَاْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَيْهِمُ الْعُمُرُ‌ۚ وَمَا كُنْتَ ثَاوِيًا فِىْۤ اَهْلِ مَدْيَنَ تَـتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَاۙ وَلٰـكِنَّا كُنَّا مُرْسِلِيْنَ‏
وَلٰـكِنَّاۤ என்றாலும் اَنْشَاْنَا நாம்உருவாக்கினோம் قُرُوْنًا பல தலைமுறையினரை فَتَطَاوَلَ நீண்டு சென்றது عَلَيْهِمُ அவர்களுக்கு الْعُمُرُ‌ۚ காலம் وَمَا كُنْتَ இன்னும் நீர் இல்லை ثَاوِيًا தங்கியவராக فِىْۤ اَهْلِ مَدْيَنَ மத்யன் வாசிகளுடன் تَـتْلُوْا நீர் ஓதியவராக عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتِنَاۙ நமது வசனங்களை وَلٰـكِنَّا என்றாலும் நாம்தான் كُنَّا இருந்தோம் مُرْسِلِيْنَ‏ தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக
28:45. எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன; அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை; அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை; எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.
28:45. எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீங்கள் கூறுவதெல்லாம் இறைவனால் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) அன்றி, (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீங்கள் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம்முடைய வசனங்களை நீங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றீர்கள். ஆகவே, நிச்சயமாக நாம் உங்களை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பி வைத்திருக்கின்றோம். (நம்முடைய வஹீ மூலம் கிடைத்த விஷயங்களையே நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கின்றீர்கள்.)
28:45. ஆயினும், அதன் பின்னர் (உமது காலம் வரை) நாம் பற்பல தலைமுறையினரைத் தோற்றுவித்திருக்கின்றோம். மேலும், அவர்கள் மீது காலங்கள் பல உருண்டு சென்றன. மேலும், நீர் மத்யன்வாசிகளிடையே, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காண்பிப்பவராயும் இருக்கவில்லை. ஆயினும் (அக்காலத்தில் நிகழ்ந்த இந்தச் செய்திகளையெல்லாம்) அனுப்பித் தருவது நாம்தான்!
28:45. எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ தலைமுறையினர்களை நாம் உற்பத்தி செய்தோம்; அவர்கள் மீது (பல) காலமும் நீண்டது; இன்னும் மத்யன்வாசிகளிடம்_அவர்களுக்கு நம்முடைய வசனங்களை நீர் ஓதிக்காண்பித்துக் கொண்டு தங்கியவராக நீர் இருக்கவில்லை; எனினும் (தூதர்களை) நாம் அனுப்புவோராக இருந்தோம்.
28:46
28:46 وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَيْنَا وَلٰـكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰٮهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை بِجَانِبِ அருகில் الطُّوْرِ மலைக்கு اِذْ نَادَيْنَا நாம் அழைத்தபோது وَلٰـكِنْ எனினும் رَّحْمَةً அருளினால் مِّنْ رَّبِّكَ உமது இறைவனின் لِتُنْذِرَ ஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும் قَوْمًا ஒரு மக்களை مَّاۤ اَتٰٮهُمْ அவர்களிடம் வரவில்லை مِّنْ نَّذِيْرٍ எச்சரிப்பாளர் எவரும் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏ அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
28:46. இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).
28:46. அன்றி, (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் சார்பிலும் நீங்கள் இருக்கவில்லை. எனினும், உங்களுக்கு முன்னர் நம்முடைய யாதொரு தூதருமே வராத (இந்த) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உங்கள் இறைவனின் அருளால் (இவ்விஷயம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டது.) அவர்கள் (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக!
28:46. மேலும், நாம் (முதன்முறையாக மூஸாவை) அழைத்தபோதும் ‘தூர்’ அருகில் நீர் இருக்கவில்லை. ஆயினும், (இந்த விவரங்களை இவ்வாறு உமக்குத் தெரியப்படுத்துவது) உம் இறைவனின் கருணையாகும்; எதற்காகவெனில், உமக்கு முன்பு எந்த எச்சரிக்கையாளரும் வந்திராத இந்தச் சமூகத்தினரை அவர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு நீர் எச்சரிக்கை செய்வதற்காக!
28:46. மேலும், (மூஸாவை) நாம் அழைத்த பொழுது, தூர் (மலையின் ஒரு) பகுதியிலும் நீர் இருக்கவில்லை, எனினும் உமக்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிப்பவர் வராத (இச்) சமூகத்தார்க்கு நீர் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உம்முடைய இரட்சகனின் ஓர் அருளாக (உமக்கு வஹீ அறிவித்தோம். இதனால்) அவர்கள் நல்லுபதேசம் பெறலாம்.
28:47
28:47 وَلَوْلَاۤ اَنْ تُصِيْبَـهُمْ مُّصِيْبَةٌۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَيَقُوْلُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَـيْنَا رَسُوْلًا فَنَـتَّبِعَ اٰيٰتِكَ وَنَـكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
وَلَوْلَاۤ اَنْ تُصِيْبَـهُمْ அவர்களுக்கு ஏற்பட்டு مُّصِيْبَةٌۢ ஒரு சோதனை بِمَا قَدَّمَتْ முற்படுத்தியதால் اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் فَيَقُوْلُوْا அவர்கள் கூறாதிருப்பதற்காக رَبَّنَا எங்கள் இறைவா! لَوْلَاۤ اَرْسَلْتَ நீ அனுப்பி இருக்கக்கூடாதா? اِلَـيْنَا எங்களிடம் رَسُوْلًا ஒரு தூதரை فَنَـتَّبِعَ நாங்கள் பின்பற்றி இருப்போமே! اٰيٰتِكَ உனது வசனங்களை وَنَـكُوْنَ நாங்கள்ஆகியிருப்போமே مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
28:47. அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!” என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).
28:47. (நபியே! உங்களுடைய மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை யாதொரு வேதனை வந்தடையும் சமயத்தில் "எங்கள் இறைவனே! எங்களிடம் உன்னுடைய ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றி உன்னை நம்பிக்கை கொண்டிருப்போமே" என்று கூறாதிருக்கும் பொருட்டே (உங்களை நம்முடைய தூதராக இவர்களிடம் அனுப்பி வைத்தோம்.)
28:47. மேலும், (இவ்வாறு நாம் செய்தது) அவர்கள் செய்த தீவினைகளின் காரணமாக ஏதேனும் துன்பம் அவர்களுக்கு வந்தால் அவர்கள், “எங்கள் இறைவனே! நீ யாரேனும் ஒரு தூதரை எங்களிடம் ஏன் அனுப்பவில்லை? நாங்கள் உன்னுடைய வசனங்களைப் பின்பற்றி நம்பிக்கையாளர்களோடு சேர்ந்திருப்போமே!” என்று கூறாமல் இருப்பதற்காகத்தான்.
28:47. அவர்களுடைய கைகள் முற்படுத்திய (தீ) வினையின் காரணமாக அவர்களை ஏதேனும் ஒரு துன்பம் வந்தடையுமென்பது இல்லையானால் (உம்மை நம்முடைய தூதராக நாம் அனுப்பி இருக்கமாட்டோம்). ஆகவே அவர்கள் “எங்கள் இரட்சகனே! எங்கள் பால் (உன்னுடைய) ஒரு தூதரை அனுப்பி வைத்திருக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றி (உன்னை) விசுவாசித்தவர்களில் நாங்களும் ஆகியிருப்போம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
28:48
28:48 فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْا لَوْلَاۤ اُوْتِىَ مِثْلَ مَاۤ اُوْتِىَ مُوْسٰى‌ ؕ اَوَلَمْ يَكْفُرُوْا بِمَاۤ اُوْتِىَ مُوْسٰى مِنْ قَبْلُ ‌ۚ قَالُوْا سِحْرٰنِ تَظَاهَرَا وَقَالُوْۤا اِنَّا بِكُلٍّ كٰفِرُوْنَ‏
فَلَمَّا جَآءَ வந்த போது هُمُ அவர்களுக்கு الْحَـقُّ சத்திய தூதர் مِنْ عِنْدِنَا நம்மிடமிருந்து قَالُوْا கூறினர் لَوْلَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டிருக்க வேண்டாமா! مِثْلَ போன்ற مَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டதை مُوْسٰى‌ ؕ மூஸாவிற்கு اَوَلَمْ يَكْفُرُوْا இவர்கள் மறுக்கவில்லையா? بِمَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டதை مُوْسٰى மூஸாவிற்கு مِنْ قَبْلُ ۚ இதற்கு முன்னர் قَالُوْا கூறினர் سِحْرٰنِ இரண்டு சூனியங்களாகும் تَظَاهَرَا தங்களுக்குள் உதவி செய்தனர் وَقَالُوْۤا அவர்கள் கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِكُلٍّ அனைத்தையும் كٰفِرُوْنَ‏ மறுப்பவர்கள்தான்
28:48. எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை” என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்(களின் மூதாதையர்)கள் நிராகரிக்க வில்லையா? இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: (திருக் குர்ஆனும், தவ்ராத்தும்) “ஒன்றையொன்று உறுதிப்படுத்தும் இரண்டு சூனிய(மந்திர)ங்களே!” என்று; இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இவை) அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று.
28:48. எனினும், இத்தகைய உண்மை (விஷயங்களையுடைய சத்திய வேதம்) நம்மிடமிருந்து இவர்களிடம் வந்த சமயத்தில் (இதனை நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக இவர்கள் "மூஸாவுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (என்னே!) இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதங்களையும் இவர்(களின் மூதாதை)கள் நிராகரித்துவிட வில்லையா? "(மூஸாவும், ஹாரூனும்) ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் சூனியக்காரர்கள் என்று இவர்கள் கூறியதுடன், நிச்சயமாக நாங்கள் இவ்விருவரையும் நிராகரித்து விட்டோம்" என்றும் கூறினார்கள்.
28:48. ஆனால், நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது அவர்கள் கேட்கலானார்கள்: “மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததைப் போன்று இவருக்கு ஏன் வழங்கப்பட வில்லை?” முன்னர் மூஸாவுக்கு வழங்கப்பட்டிருந்ததை இவர்கள் நிராகரித்திடவில்லையா? இவர்கள் கூறினார்கள்: “இரண்டும் ஒன்றுக்கொன்று உதவுகின்ற இரு சூனியங்கள்.” மேலும், கூறினார்கள்: “நாங்கள் எதையும் நம்பக்கூடியவர்களல்லர்.”
28:48. பின்னர் நம்மிடமிருந்து சத்தியம் அவர்களுக்கு வந்தபொழுது. “மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல் இவருக்கும் கொடுக்கப்பட வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகின்றனர், முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதை இவர்(களின் மூதாதையர்)கள் நிராகரித்து விடவில்லையா? (குர் ஆனும், தவ்ராத்தும்) ஒன்றையொன்று உறுதிப்படுத்தக்கூடிய இரண்டு சூனியங்கள் தாம் என்று இவர்கள் கூறினார்கள், மேலும் “நிச்சயமாக நாங்கள் இவை ஒவ்வொன்றையும் நிராகரிப்பவர்கள்” என்று கூறினார்கள்.
28:49
28:49 قُلْ فَاْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰى مِنْهُمَاۤ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ கூறுவீராக فَاْتُوْا بِكِتٰبٍ ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் مِّنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து هُوَ அது اَهْدٰى மிக்க நேர்வழி مِنْهُمَاۤ அவ்விரண்டை விட اَتَّبِعْهُ நான் அதை பின்பற்றுகிறேன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
28:49. ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
28:49. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ் விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதமும், திருக்குர்ஆனுமாகிய) இவ்விரண்டையும்விட நேரான வழியை அறிவிக்கக் கூடியதொரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதனைப் பின்பற்றுகிறேன்" என்று நீங்கள் கூறுங்கள்.
28:49. (நபியே! இவர்களிடம்) கூறுங்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின், இவ்விரண்டையும் விட அதிக அளவு நேர்வழிகாட்டும் வேதம் ஒன்றை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவாருங்கள். நான் அதனைப் பின்பற்றுகின்றேன்.”
28:49. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட அதிக நேர் வழியை அறிவிக்கக்கூடிய (மிக்க மேலானதொரு) வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவாருங்கள், அதனை நான் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
28:50
28:50 فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا يَـتَّبِعُوْنَ اَهْوَآءَهُمْ‌ ؕ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰٮهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால் لَكَ உமக்கு فَاعْلَمْ நீர் அறிவீராக! اَنَّمَا يَـتَّبِعُوْنَ நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் اَهْوَآءَ மன இச்சைகளைத்தான் هُمْ‌ ؕ தங்கள் وَمَنْ யார்? اَضَلُّ பெரும் வழிகேடன் مِمَّنِ اتَّبَعَ பின்பற்றியவனை விட هَوٰٮهُ தனது மன இச்சையை بِغَيْرِ هُدًى நேர்வழி அன்றி مِّنَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.  
28:50. உங்களுக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வினுடைய நேரான வழியை விட்டுத் தன்னுடைய சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
28:50. உம்முடைய இந்தக் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்றவில்லையாயின், அவர்கள் தங்களின் மன இச்சைகளைத்தான் பின்பற்றுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளும். மேலும், அல்லாஹ்வின் வழிகாட்டலின்றி தன்னுடைய மன இச்சைகளை மட்டுமே பின்பற்றி வாழ்கின்றவனைவிட வழிகெட்டவன் யார்? இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை.
28:50. (பின்னர்) உமக்கவர்கள் பதில் கூறவில்லையானால், நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்களின் மனோ இச்சைகளைத்தான் என்று உறுதியாக நீர் அறிந்துகொள்வீராக! அல்லாஹ்விடமிருந்துள்ள நேர் வழியை அன்றி தன்னுடைய மனோ இச்சையைப் பின்பற்றியவனை விடவும் மிக வழிகெட்டவன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான்.
28:51
28:51 وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَؕ‏
وَلَقَدْ திட்டவட்டமாக وَصَّلْنَا நாம் சேர்ப்பித்தோம் لَهُمُ அவர்களுக்கு الْقَوْلَ செய்தியை لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَؕ‏ அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக
28:51. இன்னும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக நாம் அவர்களுக்கு (அவ்வப்போது வேத) வாக்கை அனுப்பிக் கொண்டே இருந்தோம்.
28:51. அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு நம்முடைய வசனத்தை மென்மேலும் அவர்களுக்கு (இறக்கி)ச் சேர்ப்பித்தே வந்தோம்.
28:51. மேலும், தொடர்ந்து (அறிவுரை மிக்க) வார்த்தைகளை அவர்களுக்குக் கிடைக்கச் செய்திருக்கின்றோம்; அவர்கள் அலட்சியத்திலிருந்து விழித்தெழ வேண்டும் என்பதற்காக!
28:51. மேலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக நம்முடைய (வேத)வாக்கை அவர்களுக்குத் திட்டமாக சேர்த்துவைத்தோம்.
28:52
28:52 اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ مِنْ قَبْلِهٖ هُمْ بِهٖ يُؤْمِنُوْنَ‏
اَلَّذِيْنَ اٰتَيْنٰهُمُ நாம் கொடுத்தவர்கள் الْـكِتٰبَ வேதத்தை مِنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் هُمْ அவர்கள் بِهٖ இதையும் يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்வார்கள்
28:52. இதற்கு முன்னர், எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.
28:52. ஆகவே, இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் நம்முடைய வேதத்தைக் கொடுத்து, அவர்களும் அதனை உண்மையாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ,
28:52. இதற்கு முன்பு எவர்களுக்கு நாம் வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் குர்ஆன் ஆகிய இதன் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள்.
28:52. (ஆகவே, குர் ஆனாகிய) இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் (நம்முடைய) வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அத்தகையோர்_அவர்களே இதனை விசுவாசிக்கின்றார்கள்.
28:53
28:53 وَاِذَا يُتْلٰى عَلَيْهِمْ قَالُوْۤا اٰمَنَّا بِهٖۤ اِنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّنَاۤ اِنَّا كُنَّا مِنْ قَبْلِهٖ مُسْلِمِيْنَ‏
وَاِذَا يُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் முன் قَالُوْۤا அவர்கள் கூறுவார்கள் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِهٖۤ இதை اِنَّهُ நிச்சயமாக இது الْحَـقُّ உண்மையான வேதம் مِنْ رَّبِّنَاۤ எங்கள் இறைவனிடமிருந்து اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் مِنْ قَبْلِهٖ இதற்கு முன்னரும் مُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களாகவே இருந்தோம்
28:53. மேலும் (இது) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன)மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
28:53. அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் "இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இதுவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்)தான். இதற்கு முன்னதாகவே நிச்சயமாக நாங்கள் இதனை (எங்கள் வேதத்தின் மூலம் அறிந்து) ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவார்கள்.
28:53. மேலும், இந்த வேதம் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் போது, “நாங்கள் இதன்மீது நம்பிக்கை கொண்டோம். உண்மையாக, இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். நாங்களோ முன்பிருந்தே முஸ்லிம்களாக கீழ்ப்படிந்தவர்களாக இருந்து வருகின்றோம்” என்று கூறுகின்றார்கள்.
28:53. இன்னும் அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதிக்காண்பிக்கப்பட்டால், அ(தற்க)வர்கள், “இதனை கொண்டு விசுவாசங்கொண்டோம்; நிச்சயமாக இதுவும் எங்கள் இரட்சகனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்) தான்; இதற்கு முன்னதாகவே, நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லீம்களாகவே இருந்தோம்” என்று கூறுகிறார்கள்.
28:54
28:54 اُولٰٓٮِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் يُؤْتَوْنَ வழங்கப்படுவார்கள் اَجْرَهُمْ தங்கள் கூலியை مَّرَّتَيْنِ இருமுறை بِمَا صَبَرُوْا அவர்கள் பொறுமையாக இருந்ததால் وَيَدْرَءُوْنَ இன்னும் அவர்கள் தடுப்பார்கள் بِالْحَسَنَةِ நன்மையைக்கொண்டு السَّيِّئَةَ தீமையை وَمِمَّا رَزَقْنٰهُمْ இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து يُنْفِقُوْنَ‏ தர்மம் செய்வார்கள்
28:54. இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.
28:54. இத்தகையவர் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்) கூலி கொடுக்கப்படும். இத்தகைய வர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள்.
28:54. அவர்கள் நிலைகுலையாமல் இருந்ததற்குப் பகரமாக அவர்களுடைய கூலி அவர்களுக்கு இரு தடவை வழங்கப்படும். மேலும், அவர்கள் தீமையை நன்மையின் மூலம் தடுக்கின்றார்கள், மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்கின்றார்கள்.
28:54. அத்தகையோர்_அவர்கள் பொறுமையாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவை அவர்களது (நற்) கூலியை கொடுக்கப்படுவார்கள், இவர்கள் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து அவர்கள் (தர்மமாகச்) செலவும் செய்வார்கள்.
28:55
28:55 وَاِذَا سَمِعُوا اللَّغْوَ اَعْرَضُوْا عَنْهُ وَقَالُوْا لَنَاۤ اَعْمَالُنَا وَلَـكُمْ اَعْمَالُـكُمْ سَلٰمٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِى الْجٰهِلِيْنَ‏
وَاِذَا سَمِعُوا அவர்கள் செவிமடுத்தால் اللَّغْوَ வீணானவற்றை اَعْرَضُوْا புறக்கணித்து விடுவார்கள் عَنْهُ அதை وَقَالُوْا இன்னும் கூறுவார்கள் لَنَاۤ எங்களுக்கு اَعْمَالُنَا எங்கள் செயல்கள் وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு اَعْمَالُـكُمْ உங்கள் செயல்கள் سَلٰمٌ ஸலாம் உண்டாகட்டும் عَلَيْكُمْ உங்கள் மீது لَا نَبْتَغِى நாங்கள் விரும்ப மாட்டோம் الْجٰهِلِيْنَ‏ அறியாதவர்களிடம்
28:55. அன்றியும், இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து: “எங்களுக்கு எங்கள் அமல்கள்; உங்களுக்கு உங்கள் அமல்கள்; ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை” என்று கூறுவார்கள்.
28:55. அன்றி, அவர்கள் வீணான வார்த்தைகளைக் கேள்வி யுற்றால் (அதில் சம்பந்தப்படாது) அதனைப் புறக்கணித்து விட்டு "எங்களுடைய காரியங்கள் எங்களுக்கும் உங்களுடைய காரியங்கள் உங்களுக்கும் (பெரியது) உங்களுக்கு ஸலாம்! அறியாதவர்களிடம் நாங்கள் (தர்க்கிக்க) விரும்புவதில்லை" என்று கூறுவார்கள்.
28:55. இன்னும் அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகிவிடுகின்றார்கள். மேலும், கூறுகின்றார்கள்: “எங்களுடைய செயல் எங்களுக்கு; உங்களுடைய செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள் அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை.”
28:55. இன்னும் அவர்கள் (செய்திகளில்) வீணானதைச் செவியுற்றால், அதனைப் புறக்கணித்துவிட்டு, “ எங்களுடைய செயல்கள் எங்களுக்கும், உங்களுடைய செயல்கள் உங்களுக்கும் (உரியன) உங்களுக்கு ஸலாம்! அறிவீனர்களை நாங்கள் விரும்பமாட்டோம்” என்று கூறுவார்கள்.
28:56
28:56 اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ؕ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏
اِنَّكَ நிச்சயமாக நீர் لَا تَهْدِىْ நீர் நேர்வழி செலுத்த மாட்டீர் مَنْ اَحْبَبْتَ நீர் விரும்பியவரை وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி செலுத்துகின்றான் مَنْ يَّشَآءُ‌ؕ தான் நாடியவரை وَهُوَ அவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ‏ நேர்வழி செல்பவர்களை
28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.
28:56. (நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
28:56. (நபியே!) நீர் விரும்புகின்றவருக்கு நேர்வழி காட்டிட உம்மால் முடியாது. ஆயினும், அல்லாஹ் தான் நாடுவோருக்கு வழிகாட்டுதலை அளிக்கின்றான். மேலும், வழிகாட்டுதலைப் பெறக்கூடியவர்களை அவன் நன்கறிகின்றான்.
28:56. (நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்தி விடமாட்டீர், எனினும் அல்லாஹ், தான் நாடியோரையே நேர் வழியில் செலுத்துகின்றான், மேலும் நேர் வழி பெறுகிறவர்களை அவனே மிக அறிந்தவன்.
28:57
28:57 وَقَالُوْۤا اِنْ نَّـتَّبِعِ الْهُدٰى مَعَكَ نُـتَخَطَّفْ مِنْ اَرْضِنَا ؕ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا يُّجْبٰٓى اِلَيْهِ ثَمَرٰتُ كُلِّ شَىْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَقَالُوْۤا அவர்கள் கூறினர் اِنْ نَّـتَّبِعِ நாம் பின்பற்றினால் الْهُدٰى நேர்வழியை مَعَكَ உம்முடன் نُـتَخَطَّفْ நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம் مِنْ اَرْضِنَا ؕ எங்கள் பூமியிலிருந்து اَوَلَمْ نُمَكِّنْ நாம் ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? لَّهُمْ அவர்களுக்கு حَرَمًا புனித தலத்தை اٰمِنًا பாதுகாப்பான يُّجْبٰٓى கொண்டு வரப்படுகின்றன اِلَيْهِ அங்கு ثَمَرٰتُ கனிகளும் كُلِّ எல்லா شَىْءٍ வகையான رِّزْقًا உணவாக مِّنْ لَّدُنَّا நம் புறத்திலிருந்து وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
28:57. இன்னும் அவர்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
28:57. (நபியே! மக்காவாசிகளான) இவர்கள் (உங்களை நோக்கி) "நாங்கள் உங்களுடன் குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்" என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்துகொண்டே இருக்கின்றது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறியமாட்டார்கள்.
28:57. மேலும்; அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றினால், எங்கள் பூமியிலிருந்து நாங்கள் இறாஞ்சிக்கொண்டு செல்லப்பட்டு விடுவோம்.” அமைதி நிறைந்த ஹரம்* பகுதியை அவர்களுக்கு நாம் தங்குமிடமாக்கிக் கொடுக்கவில்லையா? நம்மிடமிருந்து உணவு எனும் முறையில் அனைத்துவிதமான கனிகளும் அதன் பக்கம் கொண்டுவரப்படவில்லையா? ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் அறிந்துகொள்வதில்லை!
28:57. (நபியே! மக்காவாசிகளான) இவர்கள் “நாங்கள் உம்முடன் (குர் ஆனாகிய) இந்த நேர்வழியைப் பின்பற்றினால் எங்கள் ஊரிலிருந்து நாங்கள் இறாய்ஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்பட்டு விடுவோம்” என்று கூறுகின்றனர் (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் கண்ணியமான இடத்தை அவர்களுக்கு (வசிக்க) நாம் ஆக்கித்தரவில்லையா? நம்மிடமிருந்து உணவாக (பல பகுதிகளிலிருந்தும்) ஒவ்வொருவகைக் கனிவர்க்கமும் அதன்பால் கொண்டு வரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியாமாட்டர்கள்.
28:58
28:58 وَكَمْ اَهْلَـكْنَا مِنْ قَرْيَةٍۢ بَطِرَتْ مَعِيْشَتَهَا ‌ۚ فَتِلْكَ مَسٰكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِّنْۢ بَعْدِهِمْ اِلَّا قَلِيْلًا ؕ وَكُنَّا نَحْنُ الْوٰرِثِيْنَ‏
وَكَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்தோம் مِنْ قَرْيَةٍۢ ஊர்களை بَطِرَتْ வரம்பு மீறி நிராகரித்தனர் مَعِيْشَتَهَا ۚ தங்களது வாழ்க்கை (வசதியால்) فَتِلْكَ இதோ مَسٰكِنُهُمْ அவர்களது இல்லங்கள் لَمْ تُسْكَنْ வசிக்கப்படவில்லை مِّنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு اِلَّا தவிர قَلِيْلًا ؕ குறைவாகவே وَكُنَّا இருக்கின்றோம் نَحْنُ நாமே الْوٰرِثِيْنَ‏ வாரிசுகளாக
28:58. தங்களுடைய வாழ்க்கை வசதிகளின் செருக்கினால் (அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்; இவை யாவும் அவர்கள் வாழ்ந்த இடங்களேயாகும்; அவர்களுக்குப் பின் சொற்பமான நேரம் தவிர அங்கு எவரும் வசிக்க வில்லை; மேலும் நாமே (அவற்றிற்கு) வாரிசுகளாகினோம்.
28:58. (இவர்களைப் போன்று) தன் வாழ்க்கைத் தரத்தால் கொழுத்துத் திமிர் பிடித்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம். இதோ! (பாருங்கள்.) இவை யாவும் அவர்கள் வசித்திருந்த இடங்கள்தாம். (எனினும், அங்கே மூலை முடுக்குகளில் உள்ள) சொற்ப சிலரைத் தவிர நாம்தான் அதற்கு வாரிசுகளாக இருக்கிறோம்.
28:58. மேலும், எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். அந்த ஊர் மக்கள் தங்களுடைய அதிகப்படியான வாழ்க்கை வசதிகள் குறித்து கர்வம் கொண்டிருந்தார்கள். (இதோ! பார்த்துக்கொள்ளுங்கள்) இவை அவர்கள் குடியிருந்த இல்லங்கள். இவற்றில் அவர்களுக்குப் பின்னர் யாருமே வசிக்கவில்லை ஒரு சிலரைத் தவிர! இறுதியில் நாமே வாரிசுகளாகிவிட்டோம்.
28:58. மேலும், தம் வாழ்க்கை வசதிகளின் மேம்பாட்டால் (அட்டூழியம் செய்து) வரம்பு மீறி விட்ட எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம். அவை அவர்களின் குடியிருப்புகளாகும், கொஞ்ச (நேர)மே தவிர அவர்களுக்குப்பின் யாராலும் குடியிருக்கப்படவில்லை, நாமே (அவைகளுக்கு) வாரிசுகளாக ஆகிவிட்டோம்.
28:59
28:59 وَ مَا كَانَ رَبُّكَ مُهْلِكَ الْقُرٰى حَتّٰى يَبْعَثَ فِىْۤ اُمِّهَا رَسُوْلًا يَّتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَا‌ ۚ وَمَا كُنَّا مُهْلِكِى الْقُرٰٓى اِلَّا وَاَهْلُهَا ظٰلِمُوْنَ‏
وَ مَا كَانَ இல்லை رَبُّكَ உமது இறைவன் مُهْلِكَ அழிப்பவனாக الْقُرٰى ஊர்களை حَتّٰى يَبْعَثَ அனுப்புகின்ற வரை فِىْۤ اُمِّهَا அதனுடைய தலைநகரில் رَسُوْلًا ஒரு தூதரை يَّتْلُوْا அவர் ஓதுவார் عَلَيْهِمْ அவர்கள் முன் اٰيٰتِنَا‌ ۚ நமது வசனங்களை وَمَا كُنَّا நாம் இல்லை مُهْلِكِى அழிப்பவர்களாக الْقُرٰٓى ஊர்களை اِلَّا தவிர وَاَهْلُهَا அதன் வாசிகள் இருந்தே ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்களாக
28:59. (நபியே!) நம் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் தூதர் ஒருவரை அவர்களுடைய தலைநகருக்கு அனுப்பி வைக்காத வரையில் எந்த ஊர்களையும் உம்முடைய இறைவன் அழிப்பவனாக இல்லை; மேலும் ,எந்த ஊரையும் அதன் மக்கள் அக்கிரமக் காரர்களாக இல்லாத வரையில் நாம் அழிப்போராகவும் இல்லை.
28:59. (நபியே!) உங்களது இறைவன் (தன்னுடைய) தூதரை (மக்களின்) தலை நகரங்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு நம்முடைய வசனங்களை அவர் ஓதிக் காண்பிக்காத வரையில் எவ்வூராரையும் அழிப்பதில்லை. அன்றி, எந்த ஊராரையும் அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலைமையிலேயே தவிர நாம் அழிக்கவில்லை.
28:59. மேலும், உம் இறைவன் எந்த ஊர்களையும் அழிப்பவனாக இருந்ததில்லை, அவற்றின் மத்தியில் மக்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக்காட்டும் தூதர் ஒருவரை அனுப்பாதவரையில்! ஊரில் வாழ்பவர்கள் கொடுமை புரிபவர்களாய் இருந்தாலே தவிர, அந்த ஊர்களை நாம் அழிப்பவர்களல்லர்!
28:59. மேலும், (நபியே!) உமதிரட்சகன்_ஊர்களை, அவற்றின் தலைநகருக்கு நம்முடைய வசனங்களை அவர்களுக்கு ஒதிக்காண்பிக்கும் ஒரு தூதரை அனுப்புகிறவரை_அழிப்பவனாக இல்லை. மேலும் ஊர்களை, அவ்வூர்வாசிகள் அநியாயக்காரர்களாக இருந்தே தவிர நாம் அழிக்கக் கூடியவர்களாக இல்லை.
28:60
28:60 وَمَاۤ اُوْتِيْتُمْ مِّنْ شَىْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَزِيْنَـتُهَا‌ ۚ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى‌ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَمَاۤ اُوْتِيْتُمْ நீங்கள் எது கொடுக்கப்பட்டீர்களோ مِّنْ شَىْءٍ பொருளில் فَمَتَاعُ இன்பமும் الْحَيٰوةِ الدُّنْيَا உலக வாழ்க்கையின் وَزِيْنَـتُهَا‌ ۚ அதன் அலங்காரமும் وَمَا عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் உள்ளதுதான் خَيْرٌ சிறந்ததும் وَّاَبْقٰى‌ ؕ நிலையானதும் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
28:60. மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?”  
28:60. (நபியே! நீங்கள் கூறுங்கள்:) உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பவைகள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ்விடத்தில் இருப்பவைகளோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
28:60. உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பவை யாவும் உலக வாழ்வின் சாதனங்களும் அதன் அலங்காரமும்தான்! ஆனால், அல்லாஹ்விடம் இருப்பதுதான் இவற்றை விடச் சிறந்ததும் நிலையானதுமாகும். நீங்கள் சிந்தித்துணரமாட்டீர்களா?
28:60. (நபியே! நீர் கூறுவீராக!) இன்னும் எப்பொருளிலிருந்து நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்களோ அவை இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அற்ப) சுகமும் அதனுடைய அலங்காரமும்தான். ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பதோ, மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும், (இதை) நீங்கள் விளங்கிக்கொள்ளமாட்டீர்களா?
28:61
28:61 اَفَمَنْ وَّعَدْنٰهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيْهِ كَمَنْ مَّتَّعْنٰهُ مَتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيٰمَةِ مِنَ الْمُحْضَرِيْنَ‏
اَفَمَنْ எவருக்கு وَّعَدْنٰهُ நாம் வாக்களித்தோம் وَعْدًا வாக்கை حَسَنًا அழகிய فَهُوَ அவர் لَاقِيْهِ அதை சந்திப்பாரோ كَمَنْ مَّتَّعْنٰهُ நாம் இன்பமளித்தவர் போன்று ஆவாரா? مَتَاعَ இன்பத்தைக்கொண்டு الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا இவ்வுலக ثُمَّ பிறகு هُوَ இவர் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் مِنَ الْمُحْضَرِيْنَ‏ ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இருப்பார்
28:61. எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்குறுதியளித்து; அதை அவனும் அடையப்போகிறானோ அ(த்தகைய)வன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை மட்டும் கொடுத்துப் பின்னர் கியாம நாளில் (தண்டனை பெறுவதற்காக நம்முன்) கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா?
28:61. எவனுக்கு நாம் நன்மை தருவதாக வாக்களித்து அதனை அவன் அடையக்கூடியவனாகவும் இருக்கின்றானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலகத்தில் அற்ப சுகத்தை அனுபவிக்கும்படி விட்டுவைத்துப் பின்னர் மறுமையில் (அதற்குக் கணக்குக் கொடுக்கும்படி) நம்மிடம் பிடித்துக்கொண்டு வரப்படுவானோ அவனைப் போலாவானா? (இவ்விருவரும் சமமாக மாட்டார்கள்.)
28:61. எவனுக்கு நாம் நல்ல வாக்குறுதி அளித்து, அவன் அதனை அடையவும் இருக்கின்றானோ அவன், நாம் உலக வாழ்க்கையின் வசதிகளை மட்டும் வழங்கி, பிறகு மறுமைநாளில் தண்டனைக்காகக் கொண்டு வரப்பட இருக்கின்றவனுக்கு சமம் ஆவானா?
28:61. (என்னே!) எவனுக்கு நாம் அழகான வாக்காக வாக்களித்து, அதை அவனும் அடைய இருக்கின்றானோ அவன், எவனுக்கு நாம் இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களை (மட்டும்) அளித்து, பின்னர் அவன் மறுமை நாளில் (குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்காக) முன்னிலைப்படுத்தப்படுபவர்களில் இருப்பானோ அவனைப்போல் ஆவானா?
28:62
28:62 وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ اَيْنَ شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏
وَيَوْمَ இன்னும் நாளில் يُنَادِيْهِمْ அவன் அவர்களை அழைப்பான் فَيَـقُوْلُ அவன் கேட்பான் اَيْنَ எங்கே என்று شُرَكَآءِىَ எனது இணைகள் الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏ நீங்கள் சொல்லிக்கொண்டிருந்த
28:62. இன்னும், (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் எங்கே” என்று கேட்பான்.
28:62. (இறைவன்) அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில் (அவர்களை நோக்கி "பொய்யான தெய்வங்களை) எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே! அவை எங்கே?" என்று கேட்பான்.
28:62. மேலும், அந்த மறுமைநாளினை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு யாரை இணையானவர்களென்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?”
28:62. இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களை அழைக்கும் நாளில், (அவர்களிடம்,) “நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தீர்களே அத்தகைய என்னுடைய இணையாளர்கள் எங்கே?” என்று கேட்பான்.
28:63
28:63 قَالَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَغْوَيْنَا ۚ اَغْوَيْنٰهُمْ كَمَا غَوَيْنَا‌ ۚ تَبَـرَّاْنَاۤ اِلَيْكَ‌ مَا كَانُوْۤا اِيَّانَا يَعْبُدُوْنَ‏
قَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ حَقَّ எவர்கள்/கடமையாகிவிட்டது عَلَيْهِمُ அவர்கள் மீது الْقَوْلُ வாக்கு رَبَّنَا எங்கள் இறைவா! هٰٓؤُلَاۤءِ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் اَغْوَيْنَا ۚ நாங்கள் வழிகெடுத்தோம் اَغْوَيْنٰهُمْ அவர்களை நாங்கள் வழிகெடுத்தோம் كَمَا போன்றே غَوَيْنَا‌ ۚ நாங்கள் வழிகெட்டது تَبَـرَّاْنَاۤ நாங்கள் விலகி விட்டோம் اِلَيْكَ‌ உன் பக்கம் مَا كَانُوْۤا அவர்கள் இல்லை اِيَّانَا எங்களை يَعْبُدُوْنَ‏ அவர்கள் வணங்குகின்றனர்
28:63. எவர் மீது (அல்லாஹ்வின் தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், “எங்கள் இறைவா! நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம். நாங்கள் வழிகெட்டது போன்றே, இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம் - உன்னிடம் நாங்கள் (அவர்களை விட்டும்) விலகிக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
28:63. (இணைவைக்கும்படி செய்து வழிகெடுத்தவர்களில்) எவர்கள் மீது நம்முடைய தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவர்கள் (இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் வழி கெடுத்தவர்கள் இவர்கள்தாம். (எனினும், எவருடைய நிர்ப்பந்தமுமின்றி) எவ்வாறு நாங்கள் வழி கெட்டோமோ அவ்வாறே இவர்களையும் (எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே) வழி கெடுத்தோம். ஆதலால், உன்னிடம் (அவர்களுடைய பொறுப்பிலிருந்து) நாங்கள் விலகிக் கொள்கின்றோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவும் இல்லை" என்று கூறுவார்கள்.
28:63. இந்தக் கேள்வி எவர்களுக்குப் பொருந்துமோ அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! திண்ணமாக, நாங்கள் வழிகெடுத்தது இவர்களைத்தாம்! நாங்கள் எவ்வாறு வழிகெட்டுப் போனோமோ அவ்வாறே இவர்களையும் வழிகெடுத்தோம். இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று உன் முன்னிலையில் முறையிடுகின்றோம். இவர்கள் எங்களை ஒன்றும் வணங்கிக் கொண்டிருக்கவில்லை.
28:63. எவர்கள் மீது (தண்டனை பற்றிய) வாக்கு உறுதியாகி விட்டதோ அவர்கள், “எங்கள் இரட்சகனே! நாங்கள் எவர்களை வழிகெடுத்தோமோ அவர்கள் இவர்கள் தாம், நாங்கள் வழிகெட்டது போன்றே இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம், (எங்களை அவர்கள் வணங்கிக் கொண்டிருந்ததிலிருந்து அவர்களை விட்டும்) நாங்கள் உன்பால் நீங்கிக் கொள்கிறோம்_ அவர்கள் எங்களை வணங்கிக்கொண்டிருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
28:64
28:64 وَقِيْلَ ادْعُوْا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ وَرَاَوُا الْعَذَابَ‌ۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا يَهْتَدُوْنَ‏
وَقِيْلَ இன்னும் சொல்லப்படும் ادْعُوْا அழையுங்கள் شُرَكَآءَ தெய்வங்களை كُمْ உங்கள் فَدَعَوْهُمْ அவற்றை அவர்கள் அழைப்பார்கள் فَلَمْ يَسْتَجِيْبُوْا ஆனால், அவை பதில் தரமாட்டா لَهُمْ அவர்களுக்கு وَرَاَوُا இன்னும் காண்பார்கள் الْعَذَابَ‌ۚ தண்டனையை لَوْ اَنَّهُمْ كَانُوْا நிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே! يَهْتَدُوْنَ‏ நேர்வழி பெற்றவர்களாக
28:64. “உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்” என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).
28:64. பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும்படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவைகளையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. அதற்குள்ளாக இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.)
28:64. பின்னர், இவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் எனக்கு இணையாக ஏற்படுத்திய தெய்வங்களை அழையுங்கள்”. அப்போது இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆயினும், அவர்கள் இவர்களுக்கு யாதொரு பதிலும் அளிக்கமாட்டார்கள். மேலும், இந்த மக்கள் வேதனையைக் கண்டுகொள்வார்கள். அந்தோ! இவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோராய் இருந்திருக்க வேண்டுமே!
28:64. “பின்னர், உங்கள் இணையாளர்(களான தெய்வங்)களை (உதவிக்கு) அழையுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும், (அவ்வாறே) அவர்களை இவர்கள் அழைப்பார்கள், ஆனால், அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள். மேலும் இவர்கள் (தங்கள்) வேதனையைக் கண்டுகொள்வார்கள். நிச்சயமாக இவர்கள் (உலகில்) நேரான வழியில் சென்றவர்களாக இருந்திருந்தால் (அவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும்).
28:65
28:65 وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ مَاذَاۤ اَجَبْتُمُ الْمُرْسَلِيْنَ‏
وَيَوْمَ இன்னும் நாளில் يُنَادِيْهِمْ அவன் அவர்களை அழைக்கின்றான் فَيَـقُوْلُ அவன் கேட்பான் مَاذَاۤ என்ன اَجَبْتُمُ நீங்கள் பதிலளித்தீர்கள் الْمُرْسَلِيْنَ‏ தூதர்களுக்கு
28:65. மேலும், (அல்லாஹ் விசாரணைக்காக) அவர்களைக் கூப்பிடும் நாளில், (உங்களை நேர்வழிக்கு அழைத்த நம்) தூதர்களுக்கு என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றும் கேட்பான்.
28:65. அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நம்முடைய நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?" என்று கேட்கப்படும்.
28:65. மேலும், அந்நாளை (இவர்கள் மறந்துவிடக் கூடாது). அன்று இறைவன் இவர்களை அழைத்து, “இறைதூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள்?” என்று கேட்பான்.
28:65. மேலும், (விசாரணைக்காக அல்லாஹ்வாகிய) அவன் அவர்களை அழைக்கும் நாளில் (“உங்களிடம் வந்த) நம்முடைய தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?” என்று கேட்பான்.
28:66
28:66 فَعَمِيَتْ عَلَيْهِمُ الْاَنْۢبَآءُ يَوْمَٮِٕذٍ فَهُمْ لَا يَتَسَآءَلُوْنَ‏
فَعَمِيَتْ மறைத்து விடும் عَلَيْهِمُ அவர்கள் மீது الْاَنْۢبَآءُ செய்திகள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَتَسَآءَلُوْنَ‏ கேட்டுக்கொள்ள மாட்டார்கள்
28:66. ஆனால், அந்நாளில் அவர்களுக்கு எல்லா விசயங்களும் மூடலாகிப் போகும், ஆகவே அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள்.
28:66. அந்நேரத்தில் எல்லா விஷயங்களையும் அவர்கள் மறந்து தடுமாறி (எதைப் பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்க சக்தியற்றுப் போவார்கள்.
28:66. அந்நேரம் அதற்கு என்ன பதில் அளிப்பது என்றே அவர்களுக்குப் புலப்படாது. தங்களிடையே பரஸ்பரம் ஒருவர் மற்றவரிடம் கேட்கவும் முடியாது.
28:66. அந்நாளில் (சகல) செய்திகளும் அவர்களுக்கு மறைந்ததாகி விடும் (எதைப்பற்றியும்) ஒருவர் ஒருவரைக் கேட்டுக் கொள்ளவும் மாட்டார்கள்.
28:67
28:67 فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏
فَاَمَّا ஆக, مَنْ யார் تَابَ திருந்தினார் وَاٰمَنَ இன்னும் நம்பிக்கைகொண்டார் وَعَمِلَ இன்னும் செய்வார் صَالِحًـا நற்செயலை فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ அவர் ஆகக்கூடும் مِنَ الْمُفْلِحِيْنَ‏ வெற்றியாளர்களில்
28:67. ஆனால், எவர் தவ்பா செய்து நன்னம்பிக்கை கொண்டு, நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் சித்தியடைந்தோரில் ஆகுவார்கள்.
28:67. எனினும், (இவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்தில் இருந்து) விலகி, மன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றார்களோ அவர்கள் வெற்றி அடைந்தவர்களில் (சேர்ந்து) விடுவார்கள்.
28:67. ஆயினும், எவர் (இன்று) பாவமன்னிப்புக் கோரி, நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரிந்தாரோ அவர்தாம் (அங்கு) வெற்றி அடைந்தவராவார்.
28:67. ஆகவே, (அவர்களில்) எவர் பச்சாதாபப்பட்டு, விசுவாசமுங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றாரோ, அவர் அப்போது வெற்றியடைந்தோரில் ஆகிவிடலாம்.
28:68
28:68 وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ‌ؕ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ‌ ؕ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏
وَرَبُّكَ உமது இறைவன் يَخْلُقُ படைக்கிறான் مَا يَشَآءُ தான் நாடுவதை وَيَخْتَارُ‌ؕ இன்னும் தேர்ந்தெடுக்கிறான் مَا كَانَ இல்லை لَهُمُ அவர்களுக்கு الْخِيَرَةُ‌ ؕ விருப்பம் سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் وَتَعٰلٰى மிக உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு
28:68. மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
28:68. (நபியே!) உங்களது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன்னுடைய தூதுக்காக அவர்களில்) தான் விரும்பிய வர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனுமாவான்.
28:68. மேலும், உம்முடைய இறைவன் தான் நாடுவதைப் படைக்கின்றான். மேலும், (தன்னுடைய பணிக்காகத் தான் நாடுவோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். இப்படித் தேர்ந்தெடுப்பது, இவர்கள் செய்கின்ற பணியன்று; அல்லாஹ் தூய்மையானவன்; மிகவும் உயர்ந்தவன், இவர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களிலிருந்து!
28:68. மேலும், (நபியே!) உமதிரட்சகன், தான் நாடியவற்றைப் படைக்கிறான், (தன்னுடைய தூதுக்காக அவர்களில் தான் விரும்பியவர்களைத்) தேர்ந்தெடுக்கின்றான், (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுத்தல் அவர்களுக்கு இல்லை, அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன், இன்னும், இவர்கள் இணைவைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவனாகிவிட்டான்.
28:69
28:69 وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُوْرُهُمْ وَمَا يُعْلِنُوْنَ‏
وَرَبُّكَ உமது இறைவன் يَعْلَمُ நன்கறிவான் مَا تُكِنُّ மறைக்கின்றவற்றையும் صُدُوْرُ நெஞ்சங்கள் هُمْ அவர்களது وَمَا يُعْلِنُوْنَ‏ அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும்
28:69. மேலும், உம்முடைய இறைவன் அவர்களுடைய இருதயங்கள் மறைத்து வைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிகிறான்.
28:69. உங்களது இறைவன் அவர்களுடைய உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவான்.
28:69. இவர்கள் தங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றையும், வெளிப்படுத்துகின்றவற்றையும் உம்முடைய இறைவன் அறிவான்.
28:69. உமதிரட்சகன், அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதையும், (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்.
28:70
28:70 وَهُوَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ؕ لَـهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ وَلَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَهُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ‌ؕ அவனை لَـهُ அவனுக்கே الْحَمْدُ புகழ் فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ இவ்வுலகிலும் மறுமையிலும் وَلَـهُ அவனுக்கே الْحُكْمُ தீர்ப்பளிப்பது وَاِلَيْهِ இன்னும் அவனிடமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
28:70. மேலும்: அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.
28:70. அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் (இல்லவே) இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கு உரியனவே! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்குரியதே! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
28:70. அவனே, அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே. இம்மையிலும் மறுமையிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியதாகும். மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
28:70. இன்னும், அவனே அல்லாஹ், அவனைத் தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் யாவும் அவனுக்கே உரியது! (தீர்ப்புக்கூறும்) அதிகாரமும் அவனுக்கே உரியது! ஆதலால் (மறுமையில்) நீங்கள் (யாவரும்) அவன்பக்கமே திருப்பிக் கொண்டுவரப்படுவீர்கள்.
28:71
28:71 قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ الَّيْلَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِضِيَآءٍ‌ؕاَفَلَا تَسْمَعُوْنَ‏
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் اِنْ جَعَلَ ஆக்கிவிட்டால் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمُ உங்கள் மீது الَّيْلَ இரவை سَرْمَدًا நிரந்தரமானதாக اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் مَنْ எந்த اِلٰـهٌ (வேறு) ஒரு கடவுள் غَيْرُ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி يَاْتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருவார் بِضِيَآءٍ‌ؕ ஒளியை اَفَلَا تَسْمَعُوْنَ‏ செவிமடுக்க மாட்டீர்களா?
28:71. (நபியே!) நீர் கூறுவீராக: “கியாம நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக் கூடியவன் அல்லாஹ்வை அன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?
28:71. (நபியே!) நீங்கள் கேளுங்கள்: "இரவை மறுமை நாள் வரையில் உங்கள் மீது நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், உங்களுக்கு(ப் பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு ஒருவன் இருக்கின்றானா?" (இக்கேள்வியை) நீங்கள் செவியுற வேண்டாமா?
28:71. (நபியே! இவர்களிடம்) கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் இரவை உங்கள் மீது மறுமைநாள் வரை நிரந்தரமானதாக்கி இருந்தால், அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால்தான் உங்களுக்கு ஒளியைக் கொண்டுவர முடியும்? நீங்கள் செவியேற்பதில்லையா?”
28:71. (நபியே!) நீர் கூறுவீராக: மறுமைநாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக ஆக்கிவிட்டால், உங்களுக்கு (ப்பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் யார்? (இருக்கின்றான்) என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இதனை) நீங்கள் செவியுறமாட்டீர்களா?
28:72
28:72 قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِ‌ؕ اَفَلَا تُبْصِرُوْنَ‏
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள் اِنْ جَعَلَ ஆக்கிவிட்டால் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمُ உங்கள் மீது النَّهَارَ பகலை سَرْمَدًا நிரந்தரமாக اِلٰى வரை يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் مَنْ எந்த اِلٰـهٌ (வேறு) ஒரு கடவுள் غَيْرُ اللّٰهِ அல்லாஹ்வை அன்றி يَاْتِيْكُمْ உங்களுக்கு கொண்டு வருவான் بِلَيْلٍ இரவை تَسْكُنُوْنَ فِيْهِ‌ؕ அதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள் اَفَلَا تُبْصِرُوْنَ‏ நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
28:72. “கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!
28:72. (பின்னும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: "பகலை இறுதி நாள் வரையில் உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக் கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?" (இதனை) நீங்கள் (படிப்பினை பெறும் கண் கொண்டு) பார்க்க வேண்டாமா?
28:72. மேலும், இவர்களிடம் கேளும்: “நீங்கள் என்றேனும் சிந்தித்ததுண்டா? அல்லாஹ் பகலை மறுமை நாள் வரை உங்களுக்கு நிரந்தரமானதாக ஆக்கியிருந்தால், நீங்கள் அமைதி பெறுகின்ற இரவை உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால் கொண்டு வரமுடியும்? என்ன, உங்களுக்குப் புலப்படவில்லையா?
28:72. (நபியே!) நீர் கூறுவீராக: “மறுமை நாள் வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக ஆக்கி விட்டால், நீங்கள் எதில் இளைப்பாறுவீர்களோ அந்த இரவை உங்களுக்குக் கொண்டுவரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் யார்? (இருக்கிறான்) என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இதனை) நீங்கள் (உணர்ந்து) பார்க்கமாட்டீர்களா?
28:73
28:73 وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَمِنْ رَّحْمَتِهٖ அவன் தனது கருணையினால் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الَّيْلَ وَالنَّهَارَ இரவை/இன்னும் பகலை لِتَسْكُنُوْا நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக فِيْهِ அதில் وَلِتَبْتَغُوْا இன்னும் நீங்கள் தேடுவதற்காக مِنْ فَضْلِهٖ அவனுடைய அருளை وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ இன்னும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
28:73. இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்: (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
28:73. (அவ்வாறின்றி) நீங்கள் இளைப்பாறுவதற்கு இரவையும் (பல இடங்களுக்குச் சென்று வாழ்க்கைக்குத் தேவையான) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டுப் பகலையும் உங்களுக்கு அவன் உற்பத்தி செய்திருப்பதற்கு அவன் கிருபைதான் காரணம். இதற்கு நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக!
28:73. அவன் தன்னுடைய கருணையினால்தான் உங்களுக்காக இரவையும் பகலையும் படைத்திருக்கின்றான். இரவில் நீங்கள் அமைதி பெற வேண்டும். மேலும், பகலில் அவனுடைய அருட் கொடையை நீங்கள் தேட வேண்டும்: அதனால் நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும் என்பதற்காக!
28:73. இன்னும் தன் அருளால் இரவையும், பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான் (இரவை) அதில் நீங்கள் இளைப்பாறுவதற்கும், பகலை நீங்கள் (அதில் அவனுடைய அருளைத் தேடிக் கொள்வதற்கும், இன்னும் நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் (அவ்வாறு ஆக்கியுள்ளான்).
28:74
28:74 وَيَوْمَ يُنَادِيْهِمْ فَيَـقُوْلُ اَيْنَ شُرَكَآءِىَ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏
وَيَوْمَ நாளில் يُنَادِيْهِمْ அவன் அவர்களை அழைப்பான் فَيَـقُوْلُ அவன் கேட்பான் اَيْنَ எங்கே? شُرَكَآءِىَ எனது இணைகள் الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏ எவர்கள்/நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்
28:74. இன்னும் (அல்லாஹ்) அவர்களை அழைக்கும் நாளில்: “எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்களே அவர்கள் எங்கே?” என்று கேட்பான்.
28:74. (நபியே!) அல்லாஹ் அவர்களை (விசாரணைக்காக) அழைத்து, "எனக்கு இணையானவை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அவை எங்கே?" என்று கேட்கும் நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.
28:74. மேலும், அந்நாளை (இவர்கள் நினைவில் வைக்க வேண்டும்). அன்று இறைவன் இவர்களை அழைத்துக் கேட்பான்: “எனக்கு இணை ஆனவர்கள் என்று நீங்கள் யாரைக் குறித்து எண்ணிக்கொண்டு இருந்தீர்களோ அவர்கள் எங்கே?”
28:74. (நபியே! அல்லாஹ்வாகிய) அவன் அவர்களை (விசாரணைக்காக) அழைக்கும் நாளில், “நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களே அத்தகைய எனது இணையாளர்கள் எங்கே?” என்று கேட்பான்.
28:75
28:75 وَنَزَعْنَا مِنْ كُلِّ اُمَّةٍ شَهِيْدًا فَقُلْنَا هَاتُوْا بُرْهَانَكُمْ فَعَلِمُوْۤا اَنَّ الْحَـقَّ لِلّٰهِ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
وَنَزَعْنَا நாம் கொண்டு வருவோம் مِنْ كُلِّ ஒவ்வொரு اُمَّةٍ சமுதாயத்திலிருந்து شَهِيْدًا ஒரு சாட்சியாளரை فَقُلْنَا பிறகு, கூறுவோம் هَاتُوْا கொண்டு வாருங்கள் بُرْهَانَكُمْ உங்கள் ஆதாரங்களை فَعَلِمُوْۤا அறிந்துகொள்வார்கள் اَنَّ நிச்சயமாக الْحَـقَّ உண்மை لِلّٰهِ அல்லாஹ்விற்கே وَضَلَّ தவறிவிடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏ அவர்கள் பொய்யாக கற்பனைசெய்து கொண்டிருந்தவை
28:75. இன்னும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை வைத்துக் கொண்டு (முஷ்ரிக்குகளை நோக்கி) “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறுவோம்; அப்பொழுது அவர்கள் சத்தியமென்பது அல்லாஹ்வுக்கே சொந்த மென்றும், அவர்கள் இட்டுக்கட்டியவை யெல்லாம் அவர்களை விட்டும் மறைந்துவிடும் என்றும் அறிந்து கொள்வார்கள்.
28:75. ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம்முடைய தூதர்களை) அவர்களுக்கு சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி "என்னை அல்லாதவர்களையும் தெய்வங்களென நீங்கள் கூறிக்கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்" என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக்கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மையான இறைத் தன்மை அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
28:75. மேலும், நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை வெளிக் கொணர்வோம்; பிறகு கூறுவோம்: “இப்போது கொண்டு வாருங்கள் உங்களுடைய ஆதாரத்தை!” அப்போது, உண்மை அல்லாஹ்வின் பக்கம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும். அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருந்த அனைத்தும் அவர்களைவிட்டு மறைந்து போகும்!
28:75. இன்னும், ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும், சாட்சியைத் தனித்தனியாக நாம் வெளிப்படுத்தி, (இணை வைத்துக் கொண்டிருந்தீர்களே, அதற்குரிய) “உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள்” என்று கூறுவோம், அப்போது நிச்சயமாக உண்மை அல்லாஹ்விற்கே உரியதென்று அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள், இன்னும் அவர்கள் இட்டுக்கட்டியவை (யாவும்) அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
28:76
28:76 اِنَّ قَارُوْنَ كَانَ مِنْ قَوْمِ مُوْسٰى فَبَغٰى عَلَيْهِمْ‌ وَاٰتَيْنٰهُ مِنَ الْكُنُوْزِ مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ لَـتَـنُوْٓاُ بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ اِذْ قَالَ لَهٗ قَوْمُهٗ لَا تَفْرَحْ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْفَرِحِيْنَ‏
اِنَّ நிச்சயமாக قَارُوْنَ காரூன் كَانَ இருந்தான் مِنْ قَوْمِ சமுதாயத்தில் مُوْسٰى மூஸாவின் فَبَغٰى அநியாயம் புரிந்தான் عَلَيْهِمْ‌ அவர்கள் மீது وَاٰتَيْنٰهُ அவனுக்கு நாம் கொடுத்தோம் مِنَ الْكُنُوْزِ பொக்கிஷங்களிலிருந்து مَاۤ اِنَّ مَفَاتِحَهٗ எவை/நிச்சயமாக/அவற்றின் சாவிகள் لَـتَـنُوْٓاُ சிரமத்தோடு சுமக்கும் بِالْعُصْبَةِ اُولِى الْقُوَّةِ பலமுள்ள கூட்டம் اِذْ அந்த சமயத்தை (நினைவு கூறுங்கள்) قَالَ கூறினர் لَهٗ அவனுக்கு قَوْمُهٗ அவனுடைய மக்கள் لَا تَفْرَحْ‌ பெருமிதம் கொள்ளாதே! اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْفَرِحِيْنَ‏ பெருமிதப்படுவோரை
28:76. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
28:76. காரூன் (என்பவன்) மூஸாவுடைய மக்களிடம் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவைகளின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க கஷ்டத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் "நீ மகிழ்வடைந்துவிடாதே! (பெருமை கொண்டு) மகிழ்வடைபவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும்,
28:76. உண்மை யாதெனில், காரூன், மூஸாவின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அவன் தன் சமூகத்திற்கு எதிராக வரம்புமீறி நடந்தான். மேலும், நாம் அவனுக்கு எந்த அளவுக்கு செல்வக் கருவூலங்களை வழங்கியிருந்தோமெனில், அவற்றின் சாவிகளை பலசாலிகளின் ஒரு குழுவால்கூட சிரமப்பட்டுத்தான் தூக்க முடியும். ஒரு தடவை அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினார்கள். “நீ பூரித்து விடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
28:76. நிச்சயமாக காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமூகத்தாரில் உள்ளவனாக இருந்தான்; அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; ஏராளமான பொக்கிஷங்களிலிருந்து_ அவைகளின் சாவிகள் (மாத்திரம்) பலசாலியான ஒரு கூட்டத்தாருக்கு (அதைச் சுமப்பது) கனமாகிவிடுமே அந்த அளவு_ நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம்; (அப்போது) அவனுடைய கூட்டத்தார் அவனிடம், “நீ அகம்பாவம் கொள்ளாதே! அகம்பாவம் கொள்வோரை நிச்சயமாக அல்லாஹ் விரும்பமாட்டான்” என்று கூறிய நேரத்தை (நினைவு கூர்வீராக!)
28:77
28:77 وَابْتَغِ فِيْمَاۤ اٰتٰٮكَ اللّٰهُ الدَّارَ الْاٰخِرَةَ‌ وَلَا تَنْسَ نَصِيْبَكَ مِنَ الدُّنْيَا‌ وَاَحْسِنْ كَمَاۤ اَحْسَنَ اللّٰهُ اِلَيْكَ‌ وَلَا تَبْغِ الْـفَسَادَ فِى الْاَرْضِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ‏
وَابْتَغِ தேடிக்கொள்! فِيْمَاۤ اٰتٰٮكَ உமக்கு வழங்கியவற்றில் اللّٰهُ அல்லாஹ் الدَّارَ வீட்டை الْاٰخِرَةَ‌ மறுமை وَلَا تَنْسَ மறந்து விடாதே! نَصِيْبَكَ உனது பங்கை مِنَ الدُّنْيَا‌ உலகத்திலிருந்து وَاَحْسِنْ நீ நன்மை செய்! كَمَاۤ போன்று اَحْسَنَ நன்மை செய்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَيْكَ‌ உனக்கு وَلَا تَبْغِ இன்னும் விரும்பாதே الْـفَسَادَ கலகம் செய்வதை, குழப்பத்தை فِى الْاَرْضِ‌ؕ பூமியில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُفْسِدِيْنَ‏ குழப்பம் செய்வோரை
28:77. “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
28:77. "(உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்களித்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக் கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டது தான்) உன்னுடைய பாகம் (என்பதை) நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதனை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை" என்றும் கூறினார்கள்.
28:77. அல்லாஹ் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப்பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்துவிடாதே! மேலும், அல்லாஹ் உனக்கு உதவி செய்திருப்பது போல் நீயும் உதவி செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே! அராஜகம் விளைவிப்பவர்களைத் திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.”
28:77. இன்னும், “அல்லாஹ் உனக்குக் கொடுத்ததிலிருந்து (தர்மம் செய்து) மறுமை வீட்டைத்தேடிக்கொள், மேலும் இம்மையில் உன் பங்கை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தவாறு நீயும் உபகாரம் செய், பூமியில் நீ குழப்பத்தையும் தேடாதே! (ஏனென்றால்), குழப்பம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்பமாட்டான்” (என்று அவனின் சமூகத்தார் கூறினார்).
28:78
28:78 قَالَ اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِىْ‌ؕ اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا‌ؕ وَلَا يُسْـٴَــلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ‏
قَالَ அவன் கூறினான் اِنَّمَاۤ اُوْتِيْتُهٗ இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் عَلٰى عِلْمٍ அறிவினால்தான் عِنْدِىْ‌ؕ என்னிடம் உள்ள اَوَلَمْ يَعْلَمْ அவன் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَدْ اَهْلَكَ அழித்திருக்கிறான் என்பதை مِنْ قَبْلِهٖ இவனுக்கு முன்னர் مِنَ الْقُرُوْنِ பல தலைமுறையினர்களில் مَنْ هُوَ யார்?/அவர் اَشَدُّ மிக்க கடினமானவர் مِنْهُ இவனைவிட قُوَّةً பலத்தால் وَّاَكْثَرُ மிக அதிகமானவர் جَمْعًا‌ؕ சேகரிப்பதில் وَلَا يُسْـٴَــلُ விசாரிக்கப்பட மாட்டார்கள் عَنْ ذُنُوْبِهِمُ தங்கள் குற்றங்களைப் பற்றி الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
28:78. (அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
28:78. அதற்கவன் "(என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என்னுடைய சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)" என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறிய வில்லையா? குற்றவாளிகள் தங்கள் பாவங்களைப் பற்றி கூறும் புகல் (அங்குக் கவனித்துக்) கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.)
28:78. அதற்கவன், “இவையனைத்தும் என்னிடமுள்ள அறிவினால்தான் எனக்குக் கிடைத்திருக்கின்றன!” என்றான்அவனுக்கு முன்னால் அவனைவிட அதிக வலிமையையும் ஆள் பலத்தையும் பெற்றிருந்த சமூகங்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பது இவனுக்குத் தெரியாதா? மேலும், குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்கள் பற்றிக் கேட்கப்படுவதில்லை.
28:78. அ(தற்க)வன், “அதனை நான் கொடுக்கப்பட்டதெல்லாம் என்னிடம் இருக்கும் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான்” என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட மிக்க பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப்பொருளுடையவர்களாகவும் இருந்த எத்தனையோ தலைமுறையினர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (அல்லாஹ் அவைகளைப் பற்றி மிக அறிந்துள்ளதால்) கேட்கப்படமாட்டார்கள்.
28:79
28:79 فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِىْ زِيْنَتِهٖ‌ؕ قَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَـنَا مِثْلَ مَاۤ اُوْتِىَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ‏
فَخَرَجَ அவன் வெளியில் வந்தான் عَلٰى قَوْمِهٖ தனது மக்களுக்கு முன் فِىْ زِيْنَتِهٖ‌ؕ தனது அலங்காரத்தில் قَالَ கூறினார்கள் الَّذِيْنَ يُرِيْدُوْنَ விரும்புகின்றவர்கள் الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا உலக يٰلَيْتَ இருக்க வேண்டுமே! لَـنَا நமக்கு مِثْلَ போன்று مَاۤ اُوْتِىَ வழங்கப்பட்டது قَارُوْنُۙ காரூனுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவன் لَذُوْ حَظٍّ பேருடையவன் عَظِيْمٍ‏ பெரும்
28:79. அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.
28:79. அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதனைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் "காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டாமா? ஏனென்றால், நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்" என்று கூறினார்கள்.
28:79. (ஒருநாள்) அவன் தன்னுடைய முழு அலங்கார மிடுக்குடன் தன் சமூகத்தார் முன்னிலையில் வந்தான். எவர்கள் உலக வாழ்க்கையை விரும்புவோராய் இருந்தனரோ அவர்கள் (அவனைப் பார்த்து) கூறலானார்கள்: “ஆஹா! காரூனுக்கு வழங்கப்பட்டிருப்பதைப் போன்று நமக்கும் கிடைத்திட வேண்டுமே! அவன் மகத்தான பாக்கியசாலிதான்!”
28:79. பின்னர், அவன் தன் அலங்காரத்தில் தன் சமூகத்தார்க்கு முன் புறப்பட்டு வந்தான் (அதனைக் கண்ணுற்றவர்களில்) இவ்வுலக வாழ்க்கையையே (பெரிதென) விரும்புகிறவர்கள், “காரூன் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் இருந்திருக்கவேண்டுமே! (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மகத்தான பாக்கியவான்” என்று கூறினார்கள்.
28:80
28:80 وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَيْلَـكُمْ ثَوَابُ اللّٰهِ خَيْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ۚ وَلَا يُلَقّٰٮهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ‏
وَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ اُوْتُوا வழங்கப்பட்டவர்கள் الْعِلْمَ கல்வி وَيْلَـكُمْ உங்களுக்கு நாசம் உண்டாகட்டும் ثَوَابُ நற்கூலி اللّٰهِ அல்லாஹ்வின் خَيْرٌ மிகச் சிறந்ததாகும் لِّمَنْ யாருக்கு اٰمَنَ நம்பிக்கை கொண்டு وَعَمِلَ செய்பவருக்கு صَالِحًـا ۚ நன்மை وَلَا يُلَقّٰٮهَاۤ வாய்ப்பளிக்கப்பட மாட்டார்(கள்)/இதற்கு اِلَّا தவிர الصّٰبِرُوْنَ‏ பொறுமையாளர்களை
28:80. கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
28:80. எனினும், அவர்களில் எவர்களுக்கு மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "உங்களுக்கு என்ன கேடு? (இவ்வாறு ஏன் கூறுகின்றீர்கள்?) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் கூலியோ (இதனைவிட) எவ்வளவோ மேலானது. அதனைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்ற எவரும்) அடைய மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
28:80. ஆயினும் ஞானம் வழங்கப்பட்டவர்கள் கூறலானார்கள்: “உங்கள் நிலை குறித்து வருந்துகின்றோம். நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ்வின் நற்கூலி சிறந்ததாகும். மேலும், பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்குத்தான் இந்த நற்பாக்கியம் கிடைக்கும்.”
28:80. (அவர்களில்) அறிவு கொடுக்கப்பட்டவர்களோ, (மற்றவர்களிடம்) “உங்களுக்கு கேடுதான்! விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்தவர்களுக்கு, (மறுமையில்) அல்லாஹ் கொடுக்கும் வெகுமதி (இதனைவிட) எவ்வளவோ மேலானதாகும், மேலும், அதனைப் பொறுமையாளர்களைத் தவிர (மற்றெவரும்) கொடுக்கப்படமாட்டார்கள்” என்று கூறினார்கள்.
28:81
28:81 فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ يَّـنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِيْنَ‏
فَخَسَفْنَا ஆகவே, சொருகிவிட்டோம் بِهٖ அவனையும் وَبِدَارِهِ அவனுடைய இல்லத்தையும் الْاَرْضَ பூமியில் فَمَا كَانَ ஆக, ஏதும் இல்லை لَهٗ அவனுக்கு مِنْ فِئَةٍ கூட்டம் يَّـنْصُرُوْنَهٗ அவனுக்கு உதவுகின்ற مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَمَا كَانَ இன்னும் அவன் இல்லை مِنَ الْمُنْتَصِرِيْنَ‏ உதவி செய்துகொள்பவர்களில்
28:81. ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
28:81. அவனையும், அவனுடைய மாளிகையையும் நாம் பூமியில் சொருகி விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிரிடையாக அவனுக்கு உதவி செய்யக்கூடிய கூட்டத்தார் ஒருவரும் இருக்கவில்லை. அல்லது அவன் தன்னைத்தானே (அல்லாஹ்வின் பிடியிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.
28:81. இறுதியில், நாம் அவனையும் அவனுடைய வீட்டையும் பூமியில் புதைத்துவிட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை. தனக்குத்தானே உதவி செய்து கொள்ளக்கூடியவனாகவும் அவன் இல்லை.
28:81. எனவே, அவனையும், அவனுடைய மாளிகையையும் பூமிக்குள் நாம் அழுந்தச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய எந்தக்கூட்டமும் இருக்கவில்லை, (தன்னிலிருந்தோ, மற்றவரிடமிருந்தோ) அவன் உதவி பெறுபவர்களிலும் இருக்கவில்லை.
28:82
28:82 وَاَصْبَحَ الَّذِيْنَ تَمَـنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ يَقُوْلُوْنَ وَيْكَاَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ‌ۚ لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا‌ ؕ وَيْكَاَنَّهٗ لَا يُفْلِحُ الْكٰفِرُوْنَ‏
وَاَصْبَحَ காலையில் الَّذِيْنَ تَمَـنَّوْا ஆசைப்பட்டவர்கள் مَكَانَهٗ அவனுடைய இடத்தை بِالْاَمْسِ நேற்று يَقُوْلُوْنَ கூறினர் وَيْكَاَنَّ பார்க்கவில்லையா!/நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَبْسُطُ விசாலமாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் وَيَقْدِرُ‌ۚ இன்னும் சுருக்கிவிடுகிறான் لَوْلَاۤ اَنْ مَّنَّ அருள் புரிந்திருக்கவில்லையென்றால் اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَا நம்மீது لَخَسَفَ அவன் சொருகியிருப்பான் بِنَا‌ ؕ நம்மையும் وَيْكَاَنَّهٗ பார்க்கவில்லையா!/நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் الْكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்கள்
28:82. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
28:82. நேற்றைய தினம் அவனுடைய பதவியை விரும்பியவர் களெல்லாம் (அவனும், அவனுடைய மாளிகையும் பூமியில் சொருகிப்போனதைக் கண்ணுற்றதும் திடுக்கிட்டு நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமாகக் கொடுக்கின்றான்; (அவன் விரும்பியவர்களுக்கு) குறைத்தும் விடுகின்றான் என்றும், (மனிதனுடைய சாமர்த்தியத்தால் மட்டும் ஒன்றும் ஆவதில்லை என்றும்) தெரிகின்றதே! அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கா விடில் அவ்வாறே நம்மையும் பூமி விழுங்கியே இருக்கும், (என்று கூறினர். பிறகு திடுக்கிட்டு, நாணமுற்று) என்ன நேர்ந்தது! நிச்சயமாக (இறைவனின் அருட்கொடையை மறுக்கும்) நன்றி கெட்டவர்கள் வெற்றி அடையவே மாட்டார்கள் என்று (தெரிகின்றதே! என்று) கூற ஆரம்பித்தார்கள்.
28:82. நேற்று அவன் பெற்ற அந்தஸ்தை அடைய ஏக்கம் கொண்டிருந்த அதே ஆட்கள் இப்போது கூற ஆரம்பித்தார்கள்: “ஐயகோ! நாம் மறந்துவிட்டிருந்தோம், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான்; மேலும், தான் நாடுவோர்க்கு அளவோடு கொடுக்கின்றான் என்பதை! அல்லாஹ் எங்களுக்கு உதவி செய்திராவிட்டால், எங்களையும் பூமியில் புதைத்திருப்பான். ஐயகோ! நிராகரிப்பாளர்கள் வெற்றியடைவதில்லை என்பது எங்களுக்கு நினைவில்லாமல் போய்விட்டதே!”
28:82. (அவனும், அவனுடைய மாளிகையும், பூமியில் அழுத்தப்பட்டதைக் கண்டு) நேற்றையதினம் அவனுடைய பதவியை விரும்பியவர்கள், அந்தோ நாசமே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடிவருக்கு சம்பத்துகளை ஏராளமாகக் கொடுக்கின்றான், (தான் நாடியவருக்கு) அளவோடும் கொடுக்கின்றான், அல்லாஹ் நம்மீது பேருபகாரம் செய்திருக்காவிட்டால் நிச்சயமாக நம்மையும் (பூமிக்குள்) அழுந்தச் செய்திருப்பான் என்பதைப் பார்க்கவில்லையா? அந்தோ நாசமே! நிச்சயமாக (அல்லாஹ்வின் நன்றியை) மறுப்போர் வெற்றியடையவே மாட்டார்கள்” என்பதைக் காணவில்லையா? என்று கூறியவர்களாக காலைப்பொழுதை அடைந்தார்கள்.
28:83
28:83 تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌ ؕ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏
تِلْكَ அந்த الدَّارُ இல்லமானது الْاٰخِرَةُ மறுமை نَجْعَلُهَا அதை ஆக்குவோம் لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ விரும்பாதவர்களுக்கு عُلُوًّا அநியாயத்தையோ فِى الْاَرْضِ பூமியில் وَلَا فَسَادًا‌ ؕ குழப்பத்தையோ وَالْعَاقِبَةُ முடிவான நற்பாக்கியம் لِلْمُتَّقِيْنَ‏ இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு
28:83. அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.  
28:83. (மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால், முடிவான நற்பாக்கியம் இறை அச்சம் உடையவர்களுக்குத்தான்.
28:83. அந்த மறுமை வீட்டையோ எவர்கள் உலகில் பெருமையடிக்கவும் அராஜகம் விளைவிக்கவும் விரும்பமாட்டார்களோ அவர்களுக்கே உரித்தானதாக்கி வைத்துள்ளோம். மேலும், இறுதியில் நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்கே இருக்கிறது.
28:83. மறுமையின் அந்த வீடாகிறது_ அதை பூமியில் அகம்பாவத்தையும், குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே அதை நாம் (சொந்தமாக) ஆக்கிவிடுவோம், இன்னும் (நல்ல) முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான்.
28:84
28:84 مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
مَنْ எவர் جَآءَ வருவாரோ بِالْحَسَنَةِ நன்மையைக்கொண்டு فَلَهٗ அவருக்கு خَيْرٌ நற்கூலி கிடைக்கும் مِّنْهَا‌ ۚ அதனால் وَمَنْ எவர்கள் جَآءَ வருவார்களோ بِالسَّيِّئَةِ தீமையைக் கொண்டு فَلَا يُجْزَى கூலி கொடுக்கப்பட மாட்டார்(கள்) الَّذِيْنَ عَمِلُوا செய்தவர்கள் السَّيِّاٰتِ தீமைகளை اِلَّا தவிர مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே
28:84. எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியைப் பெறுவார்கள்.
28:84. (உங்களில்) எவரேனும் யாதொரு நன்மையை(ச் செய்து) கொண்டு வந்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவரேனும் யாதொரு பாவத்தைக் கொண்டு வந்தாலோ, அவர் செய்த பாவங்களின் அளவேயன்றி (அதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார்.
28:84. ஒருவர் நன்மையைக் கொண்டு வருவாராயின், அவருக்கு அதைவிடச் சிறந்த நன்மை இருக்கின்றது. எவரேனும் தீமையைக் கொண்டுவருவாராயின், தீமைகள் செய்வோருக்கு அவர்கள் செய்துகொண்டிருந்த தீமைகளின் கூலியே கொடுக்கப்படும்.
28:84. யார் நன்மையைக் கொண்டுவந்தாரோ அவருக்கு அதைவிடச் சிறந்தது (கூலியாக) உண்டு, இன்னும் யார் தீமையைக் கொண்டுவந்தாரோ (அப்போது) தீமையைச் செய்தோர் அவர்கள் எதைச் செய்துகொண்டிருந்தார்களோ அதையல்லாது (வேறுஎதையும்) கூலியாகக் கொடுக்கப்படமாட்டார்கள்.
28:85
28:85 اِنَّ الَّذِىْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰنَ لَرَآدُّكَ اِلٰى مَعَادٍ‌ ؕ قُلْ رَّبِّىْۤ اَعْلَمُ مَنْ جَآءَ بِالْهُدٰى وَمَنْ هُوَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
اِنَّ நிச்சயமாக الَّذِىْ فَرَضَ இறக்கியவன் عَلَيْكَ உம்மீது الْقُرْاٰنَ குர்ஆனை لَرَآدُّكَ உம்மை திரும்பக்கொண்டு வருவான் اِلٰى مَعَادٍ‌ ؕ வழமைக்கு قُلْ கூறுவீராக! رَّبِّىْۤ என் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் مَنْ جَآءَ கொண்டு வந்தவரையும் بِالْهُدٰى நேர்வழியை وَمَنْ هُوَ இருப்பவரையும் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
28:85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக.
28:85. (நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உங்கள் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உங்களை (மக்காவாகிய) உங்களுடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்.
28:85. (நபியே! உறுதியாய் அறிந்து கொள்வீராக!) இந்தக் குர்ஆனை உம்மீது கடமையாக்கியவன் உம்மை ஒரு நல்ல முடிவின் பக்கம் கொண்டு செல்வான். (இம்மக்களிடம்) கூறுவீராக: “வழிகாட்டுதலைக் கொண்டு வந்திருப்பவன் யார்; வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்று என் அதிபதி நன்கு அறிவான்.”
28:85. (நபியே!) நிச்சயமாக உம்மீது இந்தக்குர் ஆனை விதியாக்கி (இறக்கி)யவன் உம்மை மீளுமிடத்தின் பால் (மக்காவின் பக்கம்) திரும்பச் சேர்த்து வைப்பவனாவான். (ஆகவே, நபியே!) நீர் கூறுவீராக: “நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்து) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இரட்சகன் மிக அறிந்தவன்.
28:86
28:86 وَمَا كُنْتَ تَرْجُوْۤا اَنْ يُّلْقٰٓى اِلَيْكَ الْكِتٰبُ اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌ فَلَا تَكُوْنَنَّ ظَهِيْرًا لِّـلْكٰفِرِيْنَ‏
وَمَا كُنْتَ تَرْجُوْۤا நீர் எதிர்பார்த்திருக்கவில்லை اَنْ يُّلْقٰٓى இறக்கப்படுவதை اِلَيْكَ உமக்கு الْكِتٰبُ இந்த வேதம் اِلَّا என்றாலும் رَحْمَةً கருணையினால்தான்` مِّنْ رَّبِّكَ‌ உமது இறைவனின் فَلَا تَكُوْنَنَّ ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர் ظَهِيْرًا உதவியாளராக لِّـلْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களுக்கு
28:86. இன்னும், உம்முடைய இறைவனிடமுள்ள ரஹ்மத்தினாலன்றி இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை. எனவே நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர்.
28:86. (நபியே!) உங்களது இறைவனின் அருளால் அன்றி இவ்வேதம் (அவன் புறத்திலிருந்து) உங்களுக்குக் கொடுக்கப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. (அவனுடைய அருளாலேயே இது உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.) ஆகவே, நீங்கள் நிராகரிப்பவர்களுக்கு உதவியாக இருக்கவேண்டாம்.
28:86. உம்மீது வேதம் இறக்கியருளப்பட இருக்கின்றது என்பதை நீர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், இது உம்முடைய இறைவனின் கிருபை(யினால் உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கின்றது). எனவே, நீர் நிராகரிப்பாளர்களுக்கு உதவி செய்பவராய் இருக்காதீர்.
28:86. அன்றியும், (நபியே!) இவ்வேதம் உமக்குக் கொடுக்கப்படும் என்று நீர் எதிர்பார்த்து இருக்கவில்லை, எனினும் உம்முடைய இரட்சகனிடமிருந்து அருளாகவே (நீர் அதைக் கொடுக்கப்பட்டீர்), ஆகவே, நிராகரிப்போருக்கு உதவியாளராக திண்ணமாக நீர் ஆகிவிடவேண்டாம்.
28:87
28:87 وَلَا يَصُدُّنَّكَ عَنْ اٰيٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَيْكَ‌ وَادْعُ اِلٰى رَبِّكَ‌ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏
وَلَا يَصُدُّنَّكَ உம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம் عَنْ اٰيٰتِ வசனங்களை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் بَعْدَ பின்னர் اِذْ اُنْزِلَتْ அவை இறக்கப்பட்டதன் اِلَيْكَ‌ உமக்கு وَادْعُ அழைப்பீராக اِلٰى பக்கம் رَبِّكَ‌ உமது இறைவன் وَلَا تَكُوْنَنَّ இன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர் مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏ இணைவைப்பவர்களில்
28:87. இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக; நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
28:87. இவ்வேதம் உங்களுக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீங்கள் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உங்களைத் தடுத்து விட வேண்டாம். ஆகவே, உங்கள் இறைவன் பக்கம் (நீங்கள் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருங்கள். நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம்.
28:87. மேலும், அல்லாஹ்வின் வசனங்கள் உம்மீது இறக்கியருளப்பட்ட பிறகு, பின்னர் இறைநிராகரிப்பாளர்கள் அவற்றை விட்டு உம்மை ஒருபோதும் தடுத்துவிட வேண்டாம். உம் இறைவனின் பக்கம் அழைப்பு விடுப்பீராக!. மேலும், இணைவைப்போருடன் நீர் ஒருபோதும் சேர்ந்துவிட வேண்டாம்.
28:87. இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உம்பால் இறக்கிவைக்கபட்டதன் பின்னர் நிச்சயமாக அவர்கள் (அவற்றை எத்திவைப்பதிலிருந்து) உம்மைத் தடுத்துவிடவேண்டாம், இன்னும் உமதிரட்சகன் பக்கம் நீர் (அவர்களை) அழைப்பீராக! நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஆகிவிடவேண்டாம்.
28:88
28:88 وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ۘ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ كُلُّ شَىْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ‌ؕ لَـهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَلَا تَدْعُ இன்னும் அழைத்துவிடாதீர் ! مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَ‌ۘ வேறு لَاۤ இல்லவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரிய கடவுள் اِلَّا தவிர هُوَ‌ அவனை كُلُّ எல்லா شَىْءٍ பொருள்களும் هَالِكٌ அழியக்கூடியவையே اِلَّا தவிர وَجْهَهٗ‌ؕ அவனது முகத்தை لَـهُ அவனுக்கே உரியது الْحُكْمُ அதிகாரம் وَاِلَيْهِ அவனிடமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
28:88. அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
28:88. (நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை நீங்கள் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள்.
28:88. மேலும், அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்க வேண்டாம். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்து போகக்கூடியதாகும். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரித்தானது. மேலும், அவனிடமே நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
28:88. மேலும், (நபியே!) அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை நீர் அழைக்கவேண்டாம், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறொரு நாயன் இல்லை, அவன் முகம் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்துவிடக்கூடியதே. அதிகாரம் (அனைத்தும்) அவனுக்கே உரியதாகும், அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.