36. ஸூரத்து யாஸீன்
மக்கீ, வசனங்கள்: 83

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
36:1
36:1 يٰسٓ ۚ‏
يٰسٓ ۚ‏ யா சீன்
36:1. யாஸீன்.
36:1. யா ஸீன்.
36:1. யாஸீன்.
36:1. யாஸீன்.
36:2
36:2 وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ ۙ‏
وَالْقُرْاٰنِ குர்ஆன் மீது சத்தியமாக! الْحَكِيْمِ ۙ‏ ஞானமிகுந்த(து)
36:2. ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
36:2. முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!
36:2. ஞானம் நிறைந்த குர்ஆனின் மீது ஆணையாக,
36:2. தீர்க்கமான (சட்டங்களையும் தெளிவான ஆதாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள) இந்த குர் ஆனின் மீது சத்தியமாக,
36:3
36:3 اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَۙ‏
اِنَّكَ நிச்சயமாக நீர் لَمِنَ الْمُرْسَلِيْنَۙ‏ இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்
36:3. நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
36:3. (நபியே!) நிச்சயமாக நீர் (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
36:3. திண்ணமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவராவீர்;
36:3. (நபியே!) நிச்சயமாக நீர் (நம்முடைய) தூதர்களில் உள்ளவராவீர்.
36:4
36:4 عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍؕ‏
عَلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍؕ‏ நேரான(து)
36:4. நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
36:4. (நீர்) நேரான வழியில் இருக்கிறீர்.
36:4. நேரிய வழியில் இருக்கின்றீர்.
36:4. (நீர்) நேரான வழியின் மீதிருக்கின்றீர்.
36:5
36:5 تَنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِ ۙ‏
تَنْزِيْلَ இறக்கிய வேதமாகும் الْعَزِيْزِ மிகைத்தவன் الرَّحِيْمِ ۙ‏ மகா கருணையாளன்
36:5. (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
36:5. (இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது.
36:5. (மேலும் இந்தக் குர்ஆன்) யாவரையும் மிகைத்தவனும் அருள்மிக்கவனுமாகிய இறைவனால் இறக்கியருளப்பட்டதாகும்.
36:5. (இது யாவரையும்) மிகைத்தோன், மிகக் கிருபையுடையோனா(கிய அல்லாஹ்வினா)ல் இறக்கப்பட்டதாகும்.
36:6
36:6 لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ‏
لِتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக قَوْمًا ஒரு சமுதாயத்தை مَّاۤ اُنْذِرَ எச்சரிக்கப்படவில்லை اٰبَآؤُ மூதாதைகள் هُمْ அவர்களின் فَهُمْ ஆகவே, அவர்கள் غٰفِلُوْنَ‏ அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்
36:6. எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
36:6. (உமது) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (ஒரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும்) கவலையற்று இருக்கின்றனர். ஆகவே, இவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
36:6. தம் மூதாதையர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாததால் எந்தச் சமுதாயம் அலட்சியமாக இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!
36:6. தங்களின் மூதாதையர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படாத ஒரு சமூகத்தார்க்கு, நீர் எச்சரிக்கை செய்வதற்காக (இவ்வேதம் இறக்கியருளப்பட்டது), அவர்கள் (அலட்சியமாக) மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
36:7
36:7 لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
لَقَدْ திட்டமாக حَقَّ உறுதியாகிவிட்டது الْقَوْلُ வாக்கு عَلٰٓى اَكْثَرِ அதிகமானவர்கள் மீது هِمْ அவர்களில் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
36:7. இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
36:7. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள்தான் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக உறுதியாகி விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
36:7. அவர்களில் பெரும்பாலோர் தண்டனைக்குரிய தீர்ப்புக்கு ஆளாகிவிட்டனர். எனவே அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
36:7. நிச்சயமாக இவர்களில் அநேகர் மீது (அவர்களுக்கு வேதனை உண்டு என்ற அல்லாஹ்வின்) வாக்கு உண்மையாகிவிட்டது, ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ளமாட்டர்கள்.
36:8
36:8 اِنَّا جَعَلْنَا فِىْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِىَ اِلَى الْاَ ذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنَا ஏற்படுத்தி விட்டோம் فِىْۤ اَعْنَاقِهِمْ அவர்களின் கழுத்துகள் மீது اَغْلٰلًا அரிகண்டங்களை فَهِىَ அவை اِلَى الْاَ ذْقَانِ தாடைகள் வரை فَهُمْ ஆகவே, அவர்கள் مُّقْمَحُوْنَ‏ உயர்த்தியவர்களாக
36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரை விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன.
36:8. நாம் அவர்களின் கழுத்துகளில் விலங்குகளைப் பூட்டியுள்ளோம். அவை அவர்களின் முகவாய்க் கட்டைகள் வரை நெருக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள்.
36:8. நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் விலங்குச் சங்கிலிகளை ஆக்கிவிட்டோம், அவை மோவாய்க் கட்டைகள் வரையில் இருக்கின்றன. ஆகவே, (குனிய முடியாதவாறு) அவர்கள் தலை உயர்த்தப்பட்டவர்கள்.
36:9
36:9 وَجَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏
وَجَعَلْنَا நாம் ஆக்கினோம் مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னும் سَدًّا ஒரு தடுப்பை وَّمِنْ خَلْفِهِمْ அவர்களுக்கு பின்னும் سَدًّا ஒரு தடுப்பை فَاَغْشَيْنٰهُمْ ஆகவே நாம் அவர்க(ளின் பார்வைக)ளை மூடி விட்டோம் (-குருடாக்கி விட்டோம்) فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يُبْصِرُوْنَ‏ பார்க்கமாட்டார்கள்
36:9. இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
36:9. அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது.
36:9. மேலும் நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் எழுப்பி, அவர்களை மூடி விட்டிருக்கின்றோம். இனி அவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லை.
36:9. அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்குப் பின்னால் ஒரு தடுப்பையும் ஆக்கி விட்டோம், பின்னர், அவர்களை மூடிவிட்டோம், ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க(ச்சக்திபெற) மாட்டார்கள்.
36:10
36:10 وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
وَسَوَآءٌ சமம் தான் عَلَيْهِمْ அவர்கள் மீது ءَاَنْذَرْتَهُمْ நீர் அவர்களை எச்சரித்தாலும் اَمْ அல்லது لَمْ تُنْذِرْهُمْ அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் لَا يُؤْمِنُوْنَ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
36:10. இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
36:10. அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
36:10. அவர்களுக்கு எல்லாமே ஒன்றுதான். நீர் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் சரி; எச்சரிக்காவிட்டாலும் சரி; அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
36:10. அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்குச் சமமே! ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
36:11
36:11 اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏
اِنَّمَا تُنْذِرُ நீர் எச்சரிப்பதெல்லாம் مَنِ எவர் اتَّبَعَ பின்பற்றினார் الذِّكْرَ இந்த வேதத்தை وَخَشِىَ இன்னும் பயந்தார் الرَّحْمٰنَ பேரருளாளனை بِالْغَيْبِۚ மறைவில் فَبَشِّرْهُ ஆகவே அவருக்கு நற்செய்தி கூறுவீராக! بِمَغْفِرَةٍ மன்னிப்பைக் கொண்டும் وَّاَجْرٍ கூலியைக் கொண்டும் كَرِيْمٍ‏ கண்ணியமான
36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக.
36:11. யார் அறிவுரையைப் பின்பற்றி நேரில் காணாமலே ரஹ்மானுக்கு கருணை மிக்க இறைவனுக்கு அஞ்சுகிறாரோ அவருக்குத்தான் நீர் எச்சரிக்கை செய்ய முடியும். அத்தகையோருக்கு மன்னிப்பும், சிறப்பான கூலியும் இருக்கின்றதென்று நற்செய்தி கூறுவீராக!
36:11. நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், (குர் ஆனாகிய) நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவில் அர்ரஹ்மானை அஞ்சுகின்றாரே அவருக்குத்தான். ஆகவே, அ(த்தகைய)வருக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமாக கூலியைக் கொண்டும் நீர் நன்மாரயாம் கூறுவீராக!
36:12
36:12 اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ‏
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نُحْىِ உயிர்ப்பிக்கின்றோம் الْمَوْتٰى இறந்தவர்களை وَنَكْتُبُ இன்னும் பதிவு செய்வோம் مَا قَدَّمُوْا அவர்கள் முன்னர் செய்தவற்றையும் وَاٰثَارَ காலடிச் சுவடுகளை هُمْؕؔ அவர்களின் وَكُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் اَحْصَيْنٰهُ அதைப் பதிவு செய்துள்ளோம் فِىْۤ اِمَامٍ பதிவேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.  
36:12. நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்.
36:12. திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக் கொண்டேயிருக்கின்றோம். அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்.
36:12. நிச்சயமாக நாமே, மரணித்தோரை (மறுமையில்) உயிர்ப்பிக்கிறோம், அவர்கள் முற்படுத்தியவற்றையும், (அவர்கள் மரணித்த பின்னும் நன்மையைச் சேர்த்து வைக்கின்ற) அவர்களின் (நற்செயல்களான) அடிச்சுவடுகளையும் நாம் எழுதுகிறோம், ஒவ்வொரு பொருளை(ப்பற்றி)யும், (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான ஏட்டில் அதைக்கணக்கெடுத்து (பதிந்து) வைத்திருக்கின்றோம்.
36:13
36:13 وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْيَةِ ‌ۘ اِذْ جَآءَهَا الْمُرْسَلُوْنَۚ‏
وَاضْرِبْ எடுத்துச் சொல்வீராக! لَهُمْ அவர்களுக்கு مَّثَلًا உதாரணமாக اَصْحٰبَ الْقَرْيَةِ ۘ அந்த ஊர் வாசிகளை اِذْ جَآءَهَا அவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! الْمُرْسَلُوْنَۚ‏ தூதர்கள்
36:13. (நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
36:13. (நபியே!) நம் தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக.
36:13. மேலும், ஓர் ஊர் மக்களிடம் தூதர்கள் வந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக.
36:13. இன்னும் (நபியே!) ஓர் ஊர்வாசிகளை _ அவ்வூராரிடம் (நம்மால்) அனுப்பப்பட்ட தூதர்கள் வந்த(போது நடந்த)தை _ உதாரணமாக அவர்களுக்குக் கூறுவீராக!
36:14
36:14 اِذْ اَرْسَلْنَاۤ اِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوْهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُـوْۤا اِنَّاۤ اِلَيْكُمْ مُّرْسَلُوْنَ‏
اِذْ اَرْسَلْنَاۤ நாம் அனுப்பியபோது اِلَيْهِمُ அவர்களிடம் اثْنَيْنِ இருவரை فَكَذَّبُوْ அவர்கள் பொய்ப்பித்தனர் هُمَا அவ்விருவரையும் فَعَزَّزْنَا பலப்படுத்தினோம் بِثَالِثٍ மூன்றாவது ஒருவரைக்கொண்டு فَقَالُـوْۤا அவர்கள் கூறினர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلَيْكُمْ உங்கள் பக்கம் مُّرْسَلُوْنَ‏ அனுப்பப்பட்ட தூதர்கள்
36:14. நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே, “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
36:14. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்.
36:14. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம்மக்களை நோக்கி) “உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத்தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம்” எனக் கூறினார்கள்.
36:14. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபோது, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவரையும்) நாம் வலுப்படுத்தினோம், ஆகவே, இவர்கள் “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட (அல்லாஹ்வின் தூது)வர்களாவோம்” என்று கூறினார்கள்.
36:15
36:15 قَالُوْا مَاۤ اَنْـتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ۙ وَمَاۤ اَنْزَلَ الرَّحْمٰنُ مِنْ شَىْءٍۙ اِنْ اَنْـتُمْ اِلَّا تَكْذِبُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் مَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை اِلَّا அன்றி بَشَرٌ மனிதர்கள் مِّثْلُـنَا ۙ எங்களைப் போன்ற وَمَاۤ اَنْزَلَ இறக்கவில்லை الرَّحْمٰنُ பேரருளாளன் مِنْ شَىْءٍۙ எதையும் اِنْ اَنْـتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர تَكْذِبُوْنَ‏ பொய் சொல்கின்றவர்களாகவே
36:15. (அதற்கு அம்மக்கள்:) “நீங்களும் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறல்லர்; அர்ரஹ்மான் (உங்களுக்கு) எதனையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் பொய்யே கூறுகிறீர்களேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
36:15. அதற்கவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.
36:15. “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கி வைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள்” என்று அந்த ஊர் மக்கள் கூறினார்கள்.
36:15. அ(தற்க)வர்கள், “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை, அர்ரஹ்மான் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கிவைக்கவுமில்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்களே தவிர வேறில்லை” என்று கூறினார்கள்.
36:16
36:16 قَالُوْا رَبُّنَا يَعْلَمُ اِنَّاۤ اِلَيْكُمْ لَمُرْسَلُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் رَبُّنَا எங்கள் இறைவன் يَعْلَمُ நன்கறிவான் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلَيْكُمْ உங்கள் பக்கம் لَمُرْسَلُوْنَ‏ அனுப்பப்பட்ட தூதர்கள்
36:16. (இதற்கு அவர்கள்:) “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்” என்று கூறினர்.
36:16. அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்,
36:16. தூதர்கள் கூறினார்கள்: “திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான்.
36:16. அ(தற்க)வர்கள், “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட (தூது)வர்கள்தாம் என்பதை எங்கள் இரட்சகனே நன்கறிவான்” என்று கூறினர்.
36:17
36:17 وَمَا عَلَيْنَاۤ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏
وَمَا عَلَيْنَاۤ எங்கள் மீது இல்லை اِلَّا தவிர الْبَلٰغُ எடுத்துரைப்பதை الْمُبِيْنُ‏ தெளிவாக
36:17. “இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (என்றும் கூறினார்).
36:17. “எங்கள் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமையல்ல'' (என்றும் கூறினார்கள்.)
36:17. மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத்தவிர வேறில்லை!”
36:17. “மேலும், எங்கள் மீது (அல்லாஹ்வுடைய தூதைப்) பகிரங்கமாக எத்திவைப்பதைத் தவிர (வேறு கடமை) இல்லை” (என்றும் கூறினார்கள்.)
36:18
36:18 قَالُـوْۤا اِنَّا تَطَيَّرْنَا بِكُمْۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ‏
قَالُـوْۤا அவர்கள் கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் تَطَيَّرْنَا துர்ச்குனமாக கருதுகின்றோம் بِكُمْۚ உங்களை لَٮِٕنْ لَّمْ تَنْتَهُوْا நீங்கள் விலகவில்லை என்றால் لَنَرْجُمَنَّكُمْ நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம் وَلَيَمَسَّنَّكُمْ இன்னும் நிச்சயமாக உங்களை வந்தடையும் مِّنَّا எங்களிடமிருந்து عَذَابٌ வேதனை اَلِيْمٌ‏ வலிமிகுந்த
36:18. (அதற்கு அம்மக்கள்:) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம்; நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிட்டால் உங்களைத் திட்டமாகக் கல்லாலடிப்போம்; மேலும் எம்மிடமிருந்து உங்களை நோவினை செய்யும் வேதனையும் பிடித்துக் கொள்ளும்.”
36:18. அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்.
36:18. அதற்கு அவ்வூர் மக்கள், “நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக்கொள்ளாவிட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்களிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்!” எனக் கூறலானார்கள்.
36:18. அ(தற்க)வர்கள், “நிச்சயமாக, நாங்கள் உங்களைத் துர்ச்சகுனமாகவே கருதுகின்றோம், நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில், உங்களைத் திட்டமாக நாம் கல்லால் எறிவோம், அன்றியும், எம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்கள்.
36:19
36:19 قَالُوْا طٰۤٮِٕـرُكُمْ مَّعَكُمْؕ اَٮِٕنْ ذُكِّرْتُمْ ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் طٰۤٮِٕـرُ துர்ச்சகுனம் كُمْ உங்கள் مَّعَكُمْؕ உங்களுடன்தான் اَٮِٕنْ ذُكِّرْتُمْ ؕ நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் قَوْمٌ மக்கள் مُّسْرِفُوْنَ‏ வரம்பு மீறுகின்ற
36:19. அ(தற்கு தூதனுப்பப்பட்ட)வர்கள் கூறினார்கள்: “உங்கள் துர்ச்சகுனம் உங்களிடத்தில் தான் இருக்கின்றது; உங்களுக்கு நற்போதனை செய்வதையா (துர்ச்சகுனமாகக் கருதுகிறீர்கள்?) அப்படியல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகவே இருக்கிறீர்கள்.
36:19. அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்.
36:19. (அதற்கு) அத்தூதர்கள், “உங்களுடைய அபசகுனம் உங்களோடுதான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்!” எனப் பதிலளித்தார்கள்.
36:19. (அதற்கு நம் தூதர்கள்,) “உங்களுடைய துர்ச்சகுனம் உங்களுடன் தான் இருக்கின்றது, (எங்கள் மூலம் அல்லாஹ்வைப் பற்றி) நீங்கள் (நற்போதனை செய்யப்பட்டு) நினைவூட்டப்பட்டீர்களானாலுமா? (துர்ச்சகுனமென்று கூறுவீர்கள்?) அவ்வாறல்ல! நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தார்” என்று கூறினார்கள்.
36:20
36:20 وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِيْنَةِ رَجُلٌ يَّسْعٰى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِيْنَۙ‏
وَجَآءَ வந்தார் مِنْ اَقْصَا கடைக்கோடியில் இருந்து الْمَدِيْنَةِ பட்டணத்தின் رَجُلٌ ஓர் ஆடவர் يَّسْعٰى விரைந்தவராக قَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! اتَّبِعُوا நீங்கள் பின்பற்றுங்கள் الْمُرْسَلِيْنَۙ‏ தூதர்களை
36:20. (அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
36:20. இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக் கோடியிலிருந்து ‘(ஹபீபுந் நஜ்ஜார்' என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: “என் மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.
36:20. (இதற்கிடையில்) நகரத்தின் ஒரு கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து கூறினார்: “என் சமூகத்தவரே! இறைத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.
36:20. மேலும், அப்பட்டணத்தின் கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டணவாசிகளிடம்) “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
36:21
36:21 اتَّبِعُوْا مَنْ لَّا يَسْــٴَــلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ‏
اتَّبِعُوْا பின்பற்றுங்கள் مَنْ எவர் لَّا يَسْــٴَــلُكُمْ உங்களிடம் கேட்க மாட்டார் اَجْرًا கூலியை وَّهُمْ அவர்கள்தான் مُّهْتَدُوْنَ‏ நேர்வழி பெற்றவர்கள்
36:21. “உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).  
36:21. உங்களிடம் ஒரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி அடைந்தவர்கள்.
36:21. எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லையோ, மேலும், எவர்கள் நேர்வழியில் இருக்கிறார்களோ, அவர்களையே நீங்கள் பின்பற்றுங்கள்.
36:21. “உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காதவர்(களான இத்தூதர்)களை நீங்கள் பின்பற்றுங்கள், மேலும், (இவர்கள் நேர்வழி போதனை செய்பவர்கள் மட்டுமல்ல.) இவர்கள் (அல்லாஹ்வினால்) நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் கூறினார்).
36:22
36:22 وَمَا لِىَ لَاۤ اَعْبُدُ الَّذِىْ فَطَرَنِىْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَمَا لِىَ எனக்கு என்ன நேர்ந்தது? لَاۤ اَعْبُدُ நான் வணங்காமல் இருப்பதற்கு الَّذِىْ فَطَرَنِىْ என்னைப் படைத்தவனை وَاِلَيْهِ அவன் பக்கம்தான் تُرْجَعُوْنَ‏ நீங்களும் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
36:22. “அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
36:22. என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.''
36:22. எவன் என்னைப் படைத்தானோ மேலும், எவன் பக்கம் நீங்கள் அனைவரும் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்களோ அத்தகைய ஒருவனுக்கு நான் ஏன் அடிபணியக் கூடாது?
36:22. “என்னைப் படைத்தானே அத்தகையவனை நான் வணங்காதிருக்க எனகென்ன (இருக்கிறது) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.”
36:23
36:23 ءَاَ تَّخِذُ مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً اِنْ يُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّىْ شَفَاعَتُهُمْ شَيْئًا وَّلَا يُنْقِذُوْنِ‌ۚ‏
ءَاَ تَّخِذُ நான் எடுத்துக் கொள்வேனா! مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اٰلِهَةً (வேறு) தெய்வங்களை اِنْ يُّرِدْنِ எனக்கு நாடினால் الرَّحْمٰنُ பேரருளாளன் بِضُرٍّ ஒரு தீங்கை لَّا تُغْنِ தடுக்காது عَنِّىْ என்னை விட்டும் شَفَاعَتُهُمْ அவற்றின் சிபாரிசு شَيْئًا எதையும் وَّلَا يُنْقِذُوْنِ‌ۚ‏ இன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்
36:23. “அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியாது.
36:23. அவனையன்றி, (மற்ற எதையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு எதையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது.
36:23. அவனை விடுத்து மற்றவர்களை அடி பணிவதற்குரியவர்களாய் நான் எடுத்துக் கொள்வேனா? உண்மையில், கருணைமிக்க இறைவன் எனக்கு ஏதேனும் தீங்கினை ஏற்படுத்த நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது. அவர்களால் என்னை விடுவிக்கவும் முடியாது.
36:23. “அவனையன்றி வேறு வணங்கப்படுபவர்களை (என் வணக்கதிற்குரியவர்களாக) நான் எடுத்துக் கொள்வேனோ? அர்ரஹ்மான் யாதொரு இடரை எனக்கு நாடினால் இவர்களின் பரிந்துரை எதற்கும் எனக்குப் பயனளிக்காது, (அதிலிருந்து) என்னை இவர்கள் விடுவிக்கவும் மாட்டார்கள்.”
36:24
36:24 اِنِّىْۤ اِذًا لَّفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
اِنِّىْۤ நிச்சயமாக நான் اِذًا அப்போது لَّفِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் مُّبِيْنٍ‏ தெளிவான
36:24. “(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.
36:24. (அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்.
36:24. நான் அவ்வாறு செய்தால், வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்துவிடுவேன் என்பதில் ஐயமில்லை.
36:24. “ஆகவே, (அல்லாஹ்வைத் தவிர்த்து இவர்களை வணங்கினால்,) அப்போது நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பேன்.
36:25
36:25 اِنِّىْۤ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِؕ‏
اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰمَنْتُ நம்பிக்கை கொண்டேன் بِرَبِّكُمْ உங்கள் இறைவனை فَاسْمَعُوْنِؕ‏ ஆகவே எனக்கு செவிசாயுங்கள்!
36:25. “உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.”
36:25. நிச்சயமாக நான் உங்கள் இறைவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அல்ல.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்'' (என்று கூறினார்).
36:25. நானோ உங்கள் அதிபதியின் மீதே உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நீங்களும் நான் கூறுவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.”
36:25. “நிச்சயமாக நான், உங்கள் இரட்சகனையே விசுவாசித்திருக்கிறேன், ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்” (என்று கூறினார்).
36:26
36:26 قِيْلَ ادْخُلِ الْجَـنَّةَ ؕ قَالَ يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ‏
قِيْلَ கூறப்பட்டது ادْخُلِ நீர் நுழைவீராக! الْجَـنَّةَ ؕ சொர்க்கத்தில் قَالَ அவர் கூறினார் يٰلَيْتَ قَوْمِىْ يَعْلَمُوْنَۙ‏ என் மக்கள் (இதை) அறியவேண்டுமே!
36:26. (ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
36:26. (எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.
36:26. (இறுதியில் அம்மக்கள் அவரைக் கொன்று விட்டார்கள். பிறகு) அவரிடம் “சுவனம் புகுவீராக!” என்று கூறப்பட்டது. அவர் கூறினார்: “ஆஹா! என் சமூகத்தவர் அறிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்!”
36:26. (எனினும், அச்சமூகத்தார் அவரைக் கொலை செய்துவிட்டனர், ஆகவே,) “நீர் சுவனபதியில் நுழைவீராக!” என (அவருக்கு)க் கூறப்பட்டது, (சுவனபதி நுழைந்த) அவர், “என்னுடைய சமூகத்தார் (எனக்குக் கிடைத்த இப்பாக்கியத்தை) அறிந்துகொள்ள வேண்டுமே” என்று கூறினார்.
36:27
36:27 بِمَا غَفَرَلِىْ رَبِّىْ وَجَعَلَنِىْ مِنَ الْمُكْرَمِيْنَ‏
بِمَا غَفَرَ மன்னிப்பு வழங்கியதையும் لِىْ எனக்கு رَبِّىْ என் இறைவன் وَجَعَلَنِىْ என்னை அவன் ஆக்கியதையும் مِنَ الْمُكْرَمِيْنَ‏ கண்ணியமானவர்களில்
36:27. “என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்” (என்பதை).
36:27. (சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
36:27. என் இறைவன் எக்காரணத்தால் என்னை மன்னித்து, கண்ணியமிக்கவர்களில் ஒருவனாய் என்னை ஆக்கினான் என்பதனை.
36:27. “என் இரட்சகன் என்னை மன்னித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டான்” என்பதை (அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே என்று கூறினார்).
36:28
36:28 وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى قَوْمِهٖ مِنْۢ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُـنَّا مُنْزِلِيْنَ‏
وَمَاۤ اَنْزَلْنَا நாம் இறக்கவில்லை عَلٰى மீது قَوْمِهٖ அவருடைய மக்கள் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் مِنْ جُنْدٍ ஒரு படையை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து وَمَا كُـنَّا நாம் இல்லை مُنْزِلِيْنَ‏ இறக்குபவர்களாகவும்
36:28. தவிர, நாம் அவருக்குப் பின்னால் அவருடைய சமூகத்தார் மீது வானத்திலிருந்து எந்த சேனையையும் (அவர்களை அழிப்பதற்காக) இறக்கிவைக்கவில்லை; அப்படி இறக்கி வைப்பவராகவும் நாம் இல்லை.
36:28. அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து ஒரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை.
36:28. அவருக்குப் பின்னர் அவருடைய சமூகத்தினர் மீது வானத்திலிருந்து யாதொரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை. அவ்வாறு இறக்குவதற்கான அவசியமும் நமக்கு இருக்கவில்லை.
36:28. மேலும், அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர், அவருடைய சமூகத்தவர் மீது வானத்திலிருந்து (அவர்களை அழிக்க) யாதொரு படையையும் நாம் இறக்கிவைக்கவில்லை, (அவ்வாறு) இறக்கிவைப்பவர்களாகவும் நாம் இல்லை.
36:29
36:29 اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ‏
اِنْ كَانَتْ அது இருக்கவில்லை اِلَّا தவிர صَيْحَةً ஒரு சப்தமாகவே وَّاحِدَةً ஒரே ஒரு فَاِذَا هُمْ ஆகவே, அப்போது அவர்கள் خٰمِدُوْنَ‏ அழிந்து விட்டார்கள்
36:29. ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.
36:29. ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள்.
36:29. ஒரே ஓர் உரத்த ஓசைதான் (முழங்கியது). அவர்களெல்லோரும் உடனே கருகிச் சாம்பலாகிவிட்டனர்.
36:29. (அவர்களின் அழிவு) ஒரே ஒரு பயங்கர சப்தத்தைத் தவிர வேறு இல்லை, அப்பொழுது அவர்கள் நூர்ந்து (சாம்பலாகி)விட்டவர்கள் ஆயினர்.
36:30
36:30 يٰحَسْرَةً عَلَى الْعِبَادِ ؔ‌ۚ مَا يَاْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
يٰحَسْرَةً நிகழ்ந்த துக்கமே! عَلَى الْعِبَادِ ؔ‌ۚ அடியார்கள் மீது مَا يَاْتِيْهِمْ அவர்களிடம் வரவில்லை مِّنْ رَّسُوْلٍ எந்த ஒரு தூதரும் اِلَّا தவிர كَانُوْا அவர்கள் இருந்தே بِهٖ அவரை يَسْتَهْزِءُوْنَ‏ அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக
36:30. அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
36:30. அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நமது தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை.
36:30. அந்தோ! இம்மக்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. அவர்களிடம் எந்த இறைத்தூதர் வந்தபோதும், அத்தூதரை அவர்கள் ஏளனம் செய்துகொண்டுதான் இருந்தார்கள்.
36:30. அடியார்கள் மீதுள்ள கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதரும் _அவரை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டவர்களாக இருந்தேயல்லாது வருவதில்லை.
36:31
36:31 اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَيْهِمْ لَا يَرْجِعُوْنَؕ‏
اَلَمْ يَرَوْا அவர்கள் கவனிக்க மாட்டார்களா? كَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்திருக்கின்றோம் قَبْلَهُمْ அவர்களுக்கு முன்னர் مِّنَ الْقُرُوْنِ தலைமுறைகளை اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اِلَيْهِمْ தங்கள் பக்கம் لَا يَرْجِعُوْنَؕ‏ திரும்பி வரமாட்டார்கள்
36:31. “அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
36:31. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்து விட்டோம் என்பதையும் அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?
36:31. இவர்களுக்கு முன்பு (வாழ்ந்த) எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். (பிறகு) அவர்கள் ஒருபோதும் இவர்களிடம் திரும்பிவர மாட்டார்கள் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா, என்ன?
36:31. “அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலை முறையினரை நாம் அழித்திருக்கிறோம், நிச்சயமாக (அழிந்துவிட்ட) அவர்கள் இவர்கள் பால் திரும்பமாட்டார்கள்” என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
36:32
36:32 وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ‏
وَاِنْ كُلٌّ (அவர்கள்) எல்லோரும் இல்லை لَّمَّا தவிர جَمِيْعٌ அனைவரும் لَّدَيْنَا நம்மிடம் مُحْضَرُوْنَ‏ ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே
36:32. மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.  
36:32. அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
36:32. மேலும், திண்ணமாக இவர்கள் அனைவருமே (ஒருநாள்) நம்முன் கொண்டுவரப்பட இருக்கின்றார்கள்.
36:32. மேலும், அவர்கள் அனைவரும் (விசாரணைக்காக) ஒன்று திரட்டப்பட்டு நம்மிடம் முன்னிலைப்படுத்தப்படுபவர்களே தவிர வேறில்லை.
36:33
36:33 وَاٰيَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَيْتَةُ ۖۚ اَحْيَيْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَاْكُلُوْنَ‏
وَاٰيَةٌ அத்தாட்சி لَّهُمُ அவர்களுக்கு الْاَرْضُ பூமியாகும் الْمَيْتَةُ ۖۚ இறந்துபோன اَحْيَيْنٰهَا அதை நாம் உயிர்ப்பித்தோம் وَاَخْرَجْنَا நாம் வெளியாக்கினோம் مِنْهَا அதிலிருந்து حَبًّا வித்துக்களை فَمِنْهُ அதில் இருந்துதான் يَاْكُلُوْنَ‏ அவர்கள் சாப்பிடுகின்றார்கள்
36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.
36:33. இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்.
36:33. உயிரற்ற பூமி அவர்களுக்கு ஒரு சான்றாகும். நாம் அதற்கு உயிர்கொடுத்து அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம்; அதிலிருந்து அவர்கள் புசிக்கிறார்கள்.
36:33. இறந்த (பொட்டலான) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும், அதனை நாம் (மழையைக் கொண்டு) உயிர்ப்பிக்கிறோம், இன்னும், அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம், அப்போது அதிலிருந்து(தான்) அவர்கள் உண்ணுகின்றார்கள்.
36:34
36:34 وَجَعَلْنَا فِيْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِيْهَا مِنَ الْعُيُوْنِۙ‏
وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் فِيْهَا அதில் جَنّٰتٍ தோட்டங்களை مِّنْ نَّخِيْلٍ பேரித்த மரங்கள் وَّاَعْنَابٍ இன்னும் திராட்சைகளின் وَّفَجَّرْنَا உதித்தோடச்செய்தோம் فِيْهَا அதில் مِنَ الْعُيُوْنِۙ‏ ஊற்றுக் கண்களை
36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.
36:34. மேலும், அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கிறோம்.
36:34. மேலும், நாம் இதில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினோம்; மேலும், இதில் நீரூற்றுகளைப் பீரிட்டெழச் செய்தோம்;
36:34. இன்னும், அதில் நாம் பேரீச்சை, திராட்சைகளிலிருந்து தோட்டங்களை அமைத்தோம், அதில் நீரூற்றுகளைப் பீறிட்டு ஓடவும் செய்கின்றோம்.
36:35
36:35 لِيَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ وَمَا عَمِلَـتْهُ اَيْدِيْهِمْ‌ ؕ اَفَلَا يَشْكُرُوْنَ‏
لِيَاْكُلُوْا அவர்கள் புசிப்பதற்காக مِنْ ثَمَرِهٖ ۙ அவனுடைய கனிகளில் இருந்து وَمَا عَمِلَـتْهُ இவற்றை செய்யவில்லை اَيْدِيْهِمْ‌ ؕ அவர்களின் கரங்கள் اَفَلَا يَشْكُرُوْنَ‏ அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை - ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:35. இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமே தவிர) இவர்களுடைய கைகள் அதை செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
36:35. இதன் கனிகளை அவர்கள் உண்பதற்காக! இவையனைத்தும் அவர்களுடைய கைகள் உருவாக்கியவை அல்லவே! பிறகு ஏன், அவர்கள் நன்றி செலுத்துவதில்லை?
36:35. அதன் கனி(வர்க்கங்)களிலிருந்து அவர்கள் உண்ணுவதற்காக (இவைகளைப் படைத்தோம்), அவர்களுடைய கைகள் அதைச் செய்யவில்லை, ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:36
36:36 سُبْحٰنَ الَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் الَّذِىْ خَلَقَ படைத்தவன் الْاَزْوَاجَ பல வகைகளை كُلَّهَا எல்லாம் مِمَّا تُنْۢبِتُ முளைக்க வைக்கக்கூடியதில் الْاَرْضُ பூமி وَمِنْ اَنْفُسِهِمْ அவர்களிலும் وَمِمَّا لَا يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறியாதவற்றிலும்
36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
36:36. இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.
36:36. மிகவும் தூய்மையானவன்; எல்லா வகையான ஜோடிகளையும் படைத்திருப்பவன்! அவை பூமி முளைக்கச் செய்யக்கூடியவையானாலும் சரி; அவர்களுடைய இனத்திலிருந்தானாலும் சரி; அவர்கள் அறிந்திராத மற்ற பொருள்களிலிருந்தானாலும் சரியே!
36:36. பூமி முளைப்பித்தவற்றிலிருந்தும், (மனிதர்களாகிய) அவர்கள் தம்மிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகளை_அவை ஒவ்வொன்றையும் படைத்தானே அவன் மிகத் தூய்மையானவன்.
36:37
36:37 وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖۚ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ‏
وَاٰيَةٌ இன்னும் அத்தாட்சி لَّهُمُ அவர்களுக்கு الَّيْلُ ۖۚ இரவாகும் نَسْلَخُ உரித்தெடுக்கின்றோம் مِنْهُ அதிலிருந்து النَّهَارَ பகலை فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مُّظْلِمُوْنَۙ‏ இருளில் ஆகிவிடுகின்றனர்
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
36:37. இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள்.
36:37. மேலும், இரவு அவர்களுக்கு மற்றொரு சான்று ஆகும். அதிலிருந்து நாம் பகலை அகற்றிவிடும்போது அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொள்கிறது.
36:37. இரவும் அவர்களுக்கோர் அத்தாட்சியாகும், அதிலிருந்து பகலை நாம் கழற்றுகின்றோம், அப்போது இவர்கள் இருளில் ஆகிவிடுகிறார்கள்.
36:38
36:38 وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِؕ‏
وَالشَّمْسُ சூரியன் تَجْرِىْ ஓடுகிறது لِمُسْتَقَرٍّ இருப்பிடத்தை நோக்கி لَّهَا ؕ தனது ذٰلِكَ அது تَقْدِيْرُ ஏற்பாடாகும் الْعَزِيْزِ மிகைத்தவனுடைய الْعَلِيْمِؕ‏ நன்கறிந்த(வன்)
36:38. இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
36:38. தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்.
36:38. மேலும், சூரியனும் (பிறிதொரு சான்றாகும்). அது தனக்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது பேரறிவு படைத்தவனும் வல்லமை மிக்கவனுமான இறைவனின் நிர்ணயமாகும்.
36:38. சூரியனும் அதற்குரிய தங்குமிடத்தின்பால் அது சென்று கொண்டிருக்கிறது, இது (யாவரையும்) மிகைத்தவன், நன்கறிந்தவன் ஏற்படுத்தியதாகும்.
36:39
36:39 وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏
وَالْقَمَرَ சந்திரனை قَدَّرْنٰهُ அதை நாம் திட்டமிட்டோம் مَنَازِلَ பல தங்குமிடங்களில் حَتّٰى இறுதியாக عَادَ திரும்பிவிடுகின்றது كَالْعُرْجُوْنِ பேரிச்ச குலையின் காய்ந்த மட்டையைப் போல் الْقَدِيْمِ‏ பழைய
36:39. இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:39. (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.
36:39. மேலும், சந்திரன் (இன்னொரு சான்றாகும்). அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். எதுவரையெனில், அது (அவற்றையெல்லாம் கடந்து) உலர்ந்து வளைந்துபோன பேரீச்சங்காம்பு போல் மீண்டும் ஆகி விடுகிறது.
36:39. இன்னும், சந்திரனை_(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சங்குலையின் குச்சி போல் அது மீண்டுவிடும் வரையில், அதற்கு நாம் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
36:40
36:40 لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ‌ؕ وَكُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏
لَا الشَّمْسُ يَنْۢبَغِىْ சூரியன் ஆகுமாகாது لَهَاۤ அதற்கு اَنْ تُدْرِكَ அது அடைவது الْقَمَرَ சந்திரனை وَلَا الَّيْلُ سَابِقُ இரவு முந்திவிடாது النَّهَارِ‌ؕ பகலை وَكُلٌّ ஒவ்வொன்றும் فِىْ فَلَكٍ ஒரு கோளில் يَّسْبَحُوْنَ‏ நீந்துகின்றன
36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:40. சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
36:40. சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
36:40. சூரியன்_அதற்குச் சந்திரனை (அணுகி)ப்பிடிக்கமுடியாது, இரவு, பகலை முந்தவும் முடியாது. (இவ்வாறே கிரகங்கள், நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தனது) வட்டத்துக்குள் நீந்திச் செல்கின்றன.
36:41
36:41 وَاٰيَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ‏
وَاٰيَةٌ இன்னும் அத்தாட்சியாவது لَّهُمْ அவர்களுக்கு اَنَّا நிச்சயமாக நாம் حَمَلْنَا நாம் பயணிக்க வைத்தோம் ذُرِّيَّتَهُمْ அவர்களின் சந்ததிகளை فِى الْفُلْكِ கப்பலில் الْمَشْحُوْنِۙ‏ நிரம்பிய
36:41. இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
36:41. கப்பல் நிறைய அவர்களுடைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
36:41. மேலும், நிரம்பிய பெரிய தோணியில் நாம் அவர்களின் வழித்தோன்றல்களை ஏற்றியதும் அவர்களுக்கு ஒரு சான்றாகும்.
36:41. இன்னும், நாம் அவர்களுடைய சந்ததியினரை, (சகலவற்றாலும்) நிரப்பப்பட்ட கப்பலில் ஏற்றி(ச் சுமந்து காப்பாற்றி)னோம் என்பதும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
36:42
36:42 وَخَلَقْنَا لَهُمْ مِّنْ مِّثْلِهٖ مَا يَرْكَبُوْنَ‏
وَخَلَقْنَا நாம் படைத்தோம் لَهُمْ அவர்களுக்கு مِّنْ مِّثْلِهٖ அதைப் போன்று مَا يَرْكَبُوْنَ‏ அவர்கள் வாகணிப்பதை
36:42. இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.
36:42. அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற)வற்றையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கிறோம்.
36:42. பிறகு, அவர்கள் ஏறிச் செல்லக்கூடிய அதைப் போன்றவற்றையும் அவர்களுக்காக நாம் படைத்திருக்கின்றோம்.
36:42. அதைப் போன்று அவர்கள் ஏறிச் செல்கின்றவைகளையும் நாம் அவர்களுக்குப் படைத்திருகின்றோம்.
36:43
36:43 وَاِنْ نَّشَاْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيْخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقَذُوْنَۙ‏
وَاِنْ نَّشَاْ நாம் நாடினால் نُغْرِقْهُمْ அவர்களை மூழ்கடிப்போம் فَلَا صَرِيْخَ لَهُمْ அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை وَلَا هُمْ يُنْقَذُوْنَۙ‏ இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்
36:43. அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
36:43. நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
36:43. மேலும், நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்துவிடுவோம். அப்போது அவர்களுடைய முறையீடுகளைக் கேட்பவர் எவரும் இருக்கமாட்டார். அவர்கள் (எந்த வகையிலும்) மீட்கப்படவும் மாட்டார்கள்;
36:43. மேலும், நாம் நாடினால், அவர்களை(க் கடலில்) மூழ்கடித்துவிடுவோம், அதுசமயம் (அபயக் குரலிடும்) அவர்களைக் காப்பற்றுவோர் ஒருவருமிரார், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
36:44
36:44 اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰى حِيْنٍ‏
اِلَّا எனினும் رَحْمَةً கருணையினாலும் مِّنَّا நமது وَمَتَاعًا சுகம் அனுபவிப்பதற்காகவும் اِلٰى حِيْنٍ‏ சில காலம் வரை
36:44. நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),
36:44. எனினும் நமது கருணையினாலும் சிறிது காலம் (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்).
36:44. ஆயினும் நம்முடைய கருணையே அவர்களைக் காப்பாற்றுகிறது; மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுக்கு அவகாசம் அளிக்கின்றது.
36:44. என்றாலும் நம்மிடமிருந்துள்ள அருளால் (கடலிலும் கரையிலும் நாம் நடத்திச் செல்கிறோம்) இன்னும் ஒரு காலம் வரை அவர்கள் சுகமனுபவிப்பதற்காக (விட்டும் வைக்கிறோம்).
36:45
36:45 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَيْنَ اَيْدِيْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمُ அவர்களுக்கு اتَّقُوْا நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! مَا بَيْنَ اَيْدِيْكُمْ உங்களுக்கு முன்னுள்ளதையும் وَمَا خَلْفَكُمْ உங்களுக்கு பின்னுள்ளதையும் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
36:45. “இன்னும், நீங்கள் கிருபை செய்யப்பெறும் பொருட்டு, உங்களுக்குமுன் இருப்பதையும், உங்களுக்குப்பின் இருப்பதையும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டாலும் -
36:45. “உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).
36:45. மேலும், “உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பவற்றின் விளைவுகளிலிருந்தும், உங்களைக் கடந்து சென்று விட்டவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளுங்கள்; உங்கள் மீது கருணை பொழியப்படக்கூடும்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள் கேட்டும் கேளாதவர்கள் போல் இருந்து விடுகின்றார்கள்).
36:45. “இன்னும், நீங்கள் கிருபைசெய்யப்படுவதற்காக, உங்களுக்கு முன் இருப்பதையும், உங்களுக்குப் பின் இருப்பதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).
36:46
36:46 وَمَا تَاْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ‏
وَمَا تَاْتِيْهِمْ அவர்களிடம் வருவதில்லை مِّنْ اٰيَةٍ ஓர் அத்தாட்சி مِّنْ اٰيٰتِ அத்தாட்சிகளில் இருந்து رَبِّهِمْ அவர்களுடைய இறைவனின் اِلَّا தவிர كَانُوْا அவர்கள் இருந்தே عَنْهَا அதை مُعْرِضِيْنَ‏ புறக்கணித்தவர்களாக
36:46. அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
36:46. மேலும், அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்த போதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை.
36:46. மேலும், அவர்களிடம் தம் இறைவனின் சான்றுகளிலிருந்து எந்த ஒரு சான்று வந்தாலும் அவர்கள் அதனை ஏறிட்டும் பார்ப்பதில்லை.
36:46. இன்னும், அவர்களுடைய இரட்சகனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சியும் அதனை அவர்கள் புறக்கணிக்கக் கூடியவர்களாக இருந்தே தவிர அவர்களிடம் வருவதில்லை.
36:47
36:47 وَاِذَا قِيْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْۤا اَنُطْعِمُ مَنْ لَّوْ يَشَآءُ اللّٰهُ اَطْعَمَهٗٓ ۖ  اِنْ اَنْـتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு اَنْفِقُوْا நீங்கள் தர்மம் செய்யுங்கள் مِمَّا رَزَقَكُمُ உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து اللّٰهُ ۙ அல்லாஹ் قَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களை நோக்கி اَنُطْعِمُ நாங்கள் உணவளிக்க வேண்டுமா? مَنْ لَّوْ يَشَآءُ எவருக்கு/நாடினால் اللّٰهُ அல்லாஹ் اَطْعَمَهٗٓ அவருக்கு உணவளித்து விடுவான் ۖ  اِنْ اَنْـتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர فِىْ ضَلٰلٍ வழிகேட்டிலேயே مُّبِيْنٍ‏ தெளிவான
36:47. “அல்லாஹ் உங்களுக்கு அளித்திருப்பவற்றிலிருந்து நீங்கள் (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், “அல்லாஹ் நாடியிருந்தால் எவருக்கு அவன் உணவளித்திருப்பானோ, அவர்களுக்கு நாம் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள்” என்று நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப் பார்த்துக் கூறுகிறார்கள்.
36:47. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
36:47. மேலும், “அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்பேறுகளிலிருந்து (இறைவழியிலும் பிறருக்கு) செலவழியுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் இறைநிராகரிப்பாளர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கிக் கூறுகின்றார்கள்: “நாங்கள் அவர்களுக்கு உணவளிப்பதா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு அவனே உணவளித்திருப்பானே! திண்ணமாக, நீங்கள் முற்றிலும் வழிபிறழ்ந்து விட்டிருக்கிறீர்கள்!”
36:47. மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருப்பவற்றிலிருந்து செலவு செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறபட்டால், அல்லாஹ் நாடியிருந்தால் எவர்களுக்கு அவன் உணவளித்துவிடுவானோ, அவர்களுக்கு நாங்கள் உணவளிப்போமா? நீங்கள் பகிரங்கமான வழிகேட்டிலன்றி வேறில்லை” என்று விசுவாசிகளிடம் நிராகரிப்போர் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
36:48
36:48 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுகின்றனர் مَتٰى எப்போது நிகழும் هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
36:48. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது வந்து சேரும்?” என்று.
36:48. மேலும், மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) “தண்டனை எப்பொழுது வரும்?'' என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
36:48. மேலும் அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மை கூறுவோராயின், (மறுமைநாளைப் பற்றிய உங்களின்) இந்த அச்சுறுத்தல் எப்போது நிறைவேறப் போகிறது? (என்பதை அறிவியுங்களேன்)”
36:48. “நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் (நீங்கள் கூறும் தண்டனை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்)” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
36:49
36:49 مَا يَنْظُرُوْنَ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً تَاْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُوْنَ‏
مَا يَنْظُرُوْنَ அவர்கள் எதிர்பார்க்கவில்லை اِلَّا صَيْحَةً சப்தத்தைத் தவிர وَّاحِدَةً ஒரே ஒரு تَاْخُذُهُمْ அவர்களை அது பிடித்துக் கொள்ளும் وَهُمْ يَخِصِّمُوْنَ‏ அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:49. ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:49. அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது ஒரேயொரு பயங்கர ஓசையேயன்றி வேறில்லை. அவர்கள் (உலக விவகாரங்கள் குறித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கும்போதே (திடீரென்று) அது அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.
36:49. ஒரே ஒரு (பெரும்) சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிபார்(த்திரு)க்கவில்லை! (இதனை பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையில் அது அவர்களைப் பிடித்துகொள்ளும்.
36:50
36:50 فَلَا يَسْتَطِيْعُوْنَ تَوْصِيَةً وَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْ يَرْجِعُوْنَ‏
فَلَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் تَوْصِيَةً மரண சாசனம் கூறுவதற்கு وَّلَاۤ اِلٰٓى اَهْلِهِمْ இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் يَرْجِعُوْنَ‏ திரும்பி வர மாட்டார்கள்
36:50. அப்போது அவர்கள் வஸிய்யத்து சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.  
36:50. அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)
36:50. அப்போது அவர்களால் மரண சாஸனம் அளிக்கவோ, தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்லவோ முடியாது.
36:50. அப்போது அவர்கள் (தங்களுக்குரிய சாதக, பாதகம் பற்றிய) மரணோபதேசம் கூற சக்தியும் பெறமாட்டார்கள், தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் மாட்டார்கள் (அதற்குள் அழிந்துவிடுவார்கள்).
36:51
36:51 وَنُفِخَ فِى الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰى رَبِّهِمْ يَنْسِلُوْنَ‏
وَنُفِخَ ஊதப்படும் فِى الصُّوْرِ சூரில் فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مِّنَ الْاَجْدَاثِ கப்ருகளில் இருந்து اِلٰى رَبِّهِمْ தங்கள் இறைவன் பக்கம் يَنْسِلُوْنَ‏ விரைவாக வெளியேறி வருவார்கள்
36:51. மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:51. (மறுமுறை) ‘ஸூர்' ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள்.
36:51. பிறகு ஒரு சங்கு ஊதப்படும். அப்பொழுது உடனே அவர்கள், (தத்தம்) அடக்கத்தலங்களிலிருந்து தம் இறைவனை நோக்கி விரைந்து வருவார்கள்.
36:51. மேலும், (ஸுர்எனும்) குழல் ஊதப்படும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து (வெளியேறி) தங்கள் இரட்சகன்பால் விரைந்து நடப்பார்கள்.
36:52
36:52 قَالُوْا يٰوَيْلَنَا مَنْۢ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَاۘؔ ٚ هٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் يٰوَيْلَنَا எங்கள் நாசமே! مَنْۢ بَعَثَنَا யார் எங்களை எழுப்பியது? مِنْ مَّرْقَدِنَاۘؔ ٚ எங்கள் தூங்குமிடத்தில் இருந்து هٰذَا இது مَا وَعَدَ வாக்களித்தது(ம்) الرَّحْمٰنُ பேரருளாளன் وَصَدَقَ உண்மையாகக் கூறியதும் الْمُرْسَلُوْنَ‏ தூதர்கள்
36:52. “எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
36:52. ‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்).
36:52. அவர்கள் (திகிலடைந்தவாறு) கேட்பார்கள்: “அந்தோ, எங்கள் பரிதாபமே! நாங்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” (அப்போது), “கருணைமிக்க இறைவன் வாக்களித்திருந்தது இதுவேயாகும்! இறைத்தூதர்களின் வாக்கும் உண்மையாகிவிட்டது!” (என்று பதில் சொல்லப்படும்)
36:52. (அந்நாளின் அமளியைக் கண்டு மதியிழந்து)” எங்களுடைய நாசமே! எங்களை, எங்கள் (சமாதிகளாகிய) தூங்குமிடங்களிலிருந்து எழுப்பியவர் யார்?” என்று கேட்பார்கள், (அதற்கு மலக்குகள் அவர்களிடம்) “அர்ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், தூதர்கள் (உங்களுக்கு) உண்மை (என எடுத்துக்) கூறியதும் இது தான் “ (என்று கூறுவார்கள்).
36:53
36:53 اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ‏
اِنْ كَانَتْ அது இருக்காது اِلَّا தவிர صَيْحَةً சப்தமே وَّاحِدَةً ஒரே ஒரு فَاِذَا هُمْ அப்போது அவர்கள் جَمِيْعٌ அனைவரும் لَّدَيْنَا நம்மிடம் مُحْضَرُوْنَ‏ ஆஜராக்கப்படுவார்கள்
36:53. ஒரே ஒரு பேரொலி தவிர (வேறொன்றும்) இருக்காது; உடன், அவர்கள் யாவரும் நம்முன் கொண்டுவரப்படுவார்கள்.
36:53. அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டுவரப்பட்டு விடுவார்கள்.
36:53. அது ஒரே ஓர் உரத்த ஓசையாகத்தான் இருக்கும். அக்கணம் அவர்கள் அனைவருமே நம்முன் கொண்டு வரப்படுவார்கள்.
36:53. அது ஒரே ஒரு (பெரும்) சப்தத்தைத் தவிர_(வேறொன்றுமாக) இருக்காது, அப்பொழுது அவர்கள் அனைவரும் நம்மிடம் (ஒன்றுதிரட்டப்பட்டு கேள்வி கணக்கிற்காக) முன்னிலைப்படுத்தப்பட்டு விடுபவர்களாவர்.
36:54
36:54 فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
فَالْيَوْمَ இன்றைய தினம் لَا تُظْلَمُ نَفْسٌ அநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும் شَيْئًا சிறிதளவும் وَّلَا تُجْزَوْنَ கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர
36:54. அன்றியும், அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஏதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது; இன்னும், நீங்கள் செய்தவற்றிற்கேயன்றி (வேறு எதற்கும்) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
36:54. அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.
36:54. இன்று எவர் மீதும் இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் எத்தகைய செயல்கள் புரிந்து கொண்டு இருந்தீர்களோ அவற்றிற்குத் தகுந்தாற்போல்தான் உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும்
36:54. எனவே, அந்நாளில், எந்த ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது, இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்கன்றி (வேறு எதற்கும்) நீங்கள் கூலிகொடுக்கப்படமாட்டீர்கள்.
36:55
36:55 اِنَّ اَصْحٰبَ الْجَـنَّةِ الْيَوْمَ فِىْ شُغُلٍ فٰكِهُوْنَ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக اَصْحٰبَ الْجَـنَّةِ சொர்க்கவாசிகள் الْيَوْمَ இன்று فِىْ شُغُلٍ வேளையில் இருந்துகொண்டு فٰكِهُوْنَ‌ۚ‏ இன்பமனுபவிப்பார்கள்
36:55. அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
36:55. அந்நாளில் நிச்சயமாக சொர்க்கவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.
36:55. திண்ணமாக, இன்று சுவனவாசிகள் இன்பநுகர்ச்சியில் திளைத்திருப்பார்கள்.
36:55. நிச்சயமாக சுவனவாசிகள் அந்நாளில் தங்கள் காரியத்தில் மகிழ்ச்சியுடையோராக இருப்பர்.
36:56
36:56 هُمْ وَاَزْوَاجُهُمْ فِىْ ظِلٰلٍ عَلَى الْاَرَآٮِٕكِ مُتَّكِــــٴُـوْنَ‏
هُمْ அவர்களும் وَاَزْوَاجُهُمْ அவர்களின் மனைவிகளும் فِىْ ظِلٰلٍ நிழல்களில் عَلَى الْاَرَآٮِٕكِ கட்டில்கள் மீது مُتَّكِــــٴُـوْنَ‏ சாய்ந்தவர்களாக
36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
36:56. அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நிழல்களின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள்.
36:56. அவர்களும், அவர்களின் மனைவியரும் அடர்ந்த நிழலில் சாய்வாசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள்.
36:56. அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் (உள்ள) கட்டில்களின் மேல் (வெகு உல்லாசமாக) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
36:57
36:57 لَهُمْ فِيْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا يَدَّعُوْنَ‌ ۖ‌ۚ‏
لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் கிடைக்கும் فَاكِهَةٌ கனிகள் وَّلَهُمْ இன்னும் அவர்களுக்கு مَّا يَدَّعُوْنَ‌ ۖ‌ۚ‏ அவர்கள் ஆசைப்படுவதும்
36:57. அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.
36:57. அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்.
36:57. அவர்களுக்காக அங்கே உண்ணவும் பருகவும் வித விதமான சுவைமிக்க பொருள்கள் இருக்கும். மேலும், அவர்கள் விரும்பிக்கேட்கும் அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும்.
36:57. அதில் அவர்களுக்கு (விதவிதமான) கனிவர்க்கங்களுண்டு, இன்னும், அவர்கள் வேண்டுவன(யாவும்) அவர்களுக்குண்டு.
36:58
36:58 سَلٰمٌ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ‏
سَلٰمٌ ஸலாம் உண்டாகட்டும் قَوْلًا கூறப்படும் مِّنْ رَّبٍّ இறைவன் புறத்தில் رَّحِيْمٍ‏ மகா கருணையாளன்
36:58. “ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.
36:58. நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும்.
36:58. கருணைமிக்க இறைவனிடமிருந்து அவர்களுக்கு வாழ்த்துரை (ஸலாம்) கூறப்படும்.
36:58. (அவர்களை நோக்கி) நிகரற்ற அன்புடைய இரட்சகனின் சொல்லாக_ “சாந்தி உண்டாகுக!” (என்று கூறுதல்) உண்டு.
36:59
36:59 وَامْتَازُوا الْيَوْمَ اَيُّهَا الْمُجْرِمُوْنَ‏
وَامْتَازُوا நீங்கள் பிரிந்து விடுங்கள்! الْيَوْمَ இன்றைய தினம் اَيُّهَا الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகளே!
36:59. அன்றியும்: “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:59. (மற்ற பாவிகளை நோக்கி) “குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று கூறப்படும்).
36:59. மேலும், “குற்றம் புரிந்தவர்களே! இன்று நீங்கள் தனியே பிரிந்து நில்லுங்கள்.
36:59. மேலும், “குற்றவாளிகளே! இன்றையத்தினம் நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து விடுங்கள்” (என்று கூறப்படும்).
36:60
36:60 اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِىْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَ‌‌ۚ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏
اَلَمْ اَعْهَدْ நான் கட்டளையிடவில்லையா? اِلَيْكُمْ உங்களுக்கு يٰبَنِىْۤ اٰدَمَ ஆதமின் மக்களே! اَنْ لَّا تَعْبُدُوا நீங்கள் வணங்காதீர்கள் என்று الشَّيْطٰنَ‌ۚ ஷைத்தானை اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரியாவான் مُّبِيْنٌ ۙ‏ தெளிவான
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:60. ‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?
36:60. ஆதத்தின் மக்களே, நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; அவன் உங்களுடைய வெளிப்படையான பகைவன் என்றும்,
36:60. “ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதி” என்று நான் உங்களிடம் உறுதி மொழி வாங்கவில்லையா?
36:61
36:61 وَّاَنِ اعْبُدُوْنِىْ ؔ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
وَّاَنِ اعْبُدُوْنِىْ ؔ‌ؕ இன்னும் என்னை வணங்குங்கள் هٰذَا இதுதான் صِرَاطٌ பாதையாகும் مُّسْتَقِيْمٌ‏ நேரான
36:61. “என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.
36:61. இன்னும், நீங்கள் என்னையே வணங்கவேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?)
36:61. எனக்கே அடிபணியுங்கள்; இதுவே நேரான வழி என்றும் நான் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கவில்லையா?
36:61. “என்னையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழியாகும் (என்றும் நான் உங்களிடம் உறுதி மொழி வாங்கவில்லையா?)
36:62
36:62 وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيْرًا‌ ؕ اَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَضَلَّ அவன் வழிகெடுத்துள்ளான் مِنْكُمْ உங்களில் جِبِلًّا படைப்புகளை كَثِيْرًا‌ ؕ அதிகமான اَفَلَمْ تَكُوْنُوْا நீங்கள்இருக்கவில்லையா? تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக
36:62. “அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
36:62. (அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
36:62. (அவ்வாறிருந்தும்) அவன், உங்களில் பெரும்பாலான மக்களைத் திண்ணமாக வழிபிறழச் செய்துவிட்டான். நீங்கள் அறிவு பெற்றவர்களாய் இருக்கவில்லையா?
36:62. “உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்தும்விட்டான், இதனை நீங்கள் விளங்கிக் கொள்பவர்களாக இருக்கவில்லையா?
36:63
36:63 هٰذِهٖ جَهَنَّمُ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏
هٰذِهٖ இதுதான் جَهَنَّمُ நரகம் الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ‏ நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த
36:63. “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.
36:63. உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.
36:63. எதனைக் குறித்து நீங்கள் அச்சுறுத்தப்பட்டு வந்தீர்களோ அந்த நரகம் இதுவேயாகும்.
36:63. “இதுதான் நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே அந்த நரகம்.
36:64
36:64 اِصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
اِصْلَوْهَا அதில் நீங்கள் பொசுங்குங்கள் الْيَوْمَ இன்று بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்
36:64. “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
36:64. இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்).
36:64. நீங்கள் (உலகில் சத்தியத்தை) நிராகரித்து வந்ததன் விளைவாக இன்று அதன் எரிபொருளாகுங்கள்!”
36:64. “(இதனை) நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்ததன் காரணமாக இன்றையத்தினம் இதில் நீங்கள் நுழைந்துவிடுங்கள்” (என்று கூறப்படும்).
36:65
36:65 اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
اَلْيَوْمَ இன்று نَخْتِمُ முத்திரையிடுவோம் عَلٰٓى اَفْوَاهِهِمْ அவர்களின் வாய்களின் மீது وَتُكَلِّمُنَاۤ இன்னும் நம்மிடம் பேசும் اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் وَتَشْهَدُ இன்னும் சாட்சி சொல்லும் اَرْجُلُهُمْ அவர்களின் கால்கள் بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
36:65. அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிடுவோம். அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.
36:65. இன்று, அவர்களுடைய வாய்களுக்கு நாம் முத்திரை வைத்து விடுவோம். (உலகில்) அவர்கள் எவற்றைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று அவர்களின் கைகள் நம்மிடம் சொல்லும்; அவர்களின் கால்களும் சாட்சி பகரும்.
36:65. இன்றையத் தினம் நாம் அவர்களுடைய வாய்களின் மீது முத்திரையிட்டுவிடுவோம், அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவகளைப்பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.
36:66
36:66 وَلَوْ نَشَآءُ لَـطَمَسْنَا عَلٰٓى اَعْيُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰى يُبْصِرُوْنَ‏
وَلَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَـطَمَسْنَا குருடாக்கி இருப்போம் عَلٰٓى اَعْيُنِهِمْ அவர்களின் கண்களை فَاسْتَبَقُوا தவறி இருப்பார்கள் الصِّرَاطَ பாதை فَاَنّٰى ஆக, எப்படி يُبْصِرُوْنَ‏ பார்ப்பார்கள்
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:66. நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்?
36:66. மேலும், நாம் நாடினால் அவர்களுடைய கண்களை அவித்து விடுவோம். பிறகு, அவர்கள் பாதையை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால், எவ்வாறு அவர்களுக்குப் (பாதை) புலப்படும்?
36:66. மேலும், நாம் நாடியிருந்தால் அவர்களுடைய கண்களைப் போக்கி (குருடாக்கி)யிருப்போம், பின்னர் (தப்பித்துகொள்ளும்) வழியின்பால் (அதைக்கடக்க) முந்தியிருப்பார்கள், அப்போது (அவர்கள் உண்மைவழியை) எவ்வாறு பார்ப்பார்கள்?
36:67
36:67 وَلَوْ نَشَآءُ لَمَسَخْنٰهُمْ عَلٰى مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِيًّا وَّلَا يَرْجِعُوْنَ‏
وَلَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَمَسَخْنٰهُمْ அவர்களை உட்கார வைத்திருப்போம் عَلٰى مَكَانَتِهِمْ அவர்களின் இடத்திலேயே فَمَا اسْتَطَاعُوْا ஆக, அவர்கள் ஆற்றல் பெறமாட்டார்கள் مُضِيًّا நடப்பதற்கு(ம்) وَّلَا يَرْجِعُوْنَ‏ திரும்பி வரவும் மாட்டார்கள்
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.  
36:67. நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.
36:67. மேலும், நாம் நாடியிருந்தால் முன்னோக்கிச் செல்லவும், பின்னோக்கித் திரும்பவும் அவர்களால் முடியாதவாறு தம் இருப்பிடத்திலேயே அவர்களை உருமாற்றி விட்டிருப்போம்!
36:67. இன்னும், நாம் நாடியிருந்தால், அவர்கள் இருந்த இடத்திலேயே அவர்கள் உருவத்தை மாற்றி (கல்லாகவோ, மற்ற ஜடப் பொருளாகவோ ஆக்கி)யிருப்போம். அது சமயம், அவர்கள் முன் செல்லவும் சக்திபெறமாட்டார்கள், பின் திரும்பவும் மாட்டார்கள்.
36:68
36:68 وَمَنْ نُّعَمِّرْهُ نُـنَكِّسْهُ فِى الْخَـلْقِ‌ؕ اَفَلَا يَعْقِلُوْنَ‏
وَمَنْ نُّعَمِّرْهُ நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ نُـنَكِّسْهُ அவரை திருப்பி விடுவோம் فِى الْخَـلْقِ‌ؕ படைப்பில் اَفَلَا يَعْقِلُوْنَ‏ அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
36:68. மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா?
36:68. நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
36:68. மேலும், நாம் எவருக்கேனும் நீண்ட ஆயுளைக் கொடுத்தால், அவருடைய அமைப்பை அடியோடு மாற்றிவிடுவோம். (இவை அனைத்தையும் பார்த்து) அவர்களுக்கு அறிவு வர வேண்டாமா, என்ன?
36:68. எவரை நாம் (வயோதிகராக்கி) வயதை நீட்டிவிடுகிறோமோ அவரை, படைப்பில் (வாலிபத்திற்குப்பிறகு முதுமையும், பலத்திற்குப்பிறகு பலவீனத்தையும் கொடுத்து), தலைகீழாக மாற்றிவிடுகின்றோம் (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்களா?
36:69
36:69 وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا يَنْۢبَغِىْ لَهٗؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِيْنٌۙ‏
وَمَا عَلَّمْنٰهُ நாம் அவருக்கு கற்றுத்தரவில்லை الشِّعْرَ கவிதைகளை وَمَا يَنْۢبَغِىْ தகுதியானதும் இல்லை لَهٗؕ அவருக்கு اِنْ هُوَ இது இல்லை اِلَّا ذِكْرٌ அறிவுரை(யும்) அன்றி وَّقُرْاٰنٌ குர்ஆனும் مُّبِيْنٌۙ‏ தெளிவான(து)
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை; அது அவருக்குத் தேவையானதும் அல்ல; இது நல்லுப தேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை.
36:69. (நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை.
36:69. மேலும், (நபியாகிய) இவருக்கு நாம் கவிதை கற்றுக்கொடுக்கவில்லை; அது (கவிதை புனைதல்) அவருக்கு ஏற்றதுமன்று. திண்ணமாக இது ஒரு நல்லுரையாகவும், தெளிவாக ஓதப்படுகின்ற வேதமாகவும் இருக்கின்றது.
36:69. (நம்முடைய தூதராகிய) அவருக்கு நாம் கவிதையை (இயற்ற)க் கற்றுக் கொடுக்கவுமில்லை, அது அவருக்கு அவசியமானதுமல்ல, இது நல்லுபதேசமும் தெளிவான குர் ஆனுமே தவிர (வேறு) இல்லை.
36:70
36:70 لِّيُنْذِرَ مَنْ كَانَ حَيًّا وَّيَحِقَّ الْقَوْلُ عَلَى الْكٰفِرِيْنَ‏
لِّيُنْذِرَ அது எச்சரிப்பதற்காகவும் مَنْ எவர் كَانَ இருக்கின்றார் حَيًّا உயிருள்ளவராக وَّيَحِقَّ உறுதியாகி விடுவதற்காகவும் الْقَوْلُ வாக்கு عَلَى மீது الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
36:70. (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது.
36:70. உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்).
36:70. இதன் வாயிலாக உயிரோடிருக்கின்ற (ஒவ்வொரு) மனிதனையும் எச்சரிப்பதற்காகவும், நிராகரிப்பவர்களுக்கு எதிரான ஆதாரம் நிறைவு பெறுவதற்காகவும்தான்!
36:70. அ(க்குர் ஆனான)து, உயிரோடு (_உண்மையை ஏற்று பொய்யை மறுக்கும் உள்ளத்துடன்) இருப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நிராகரிப்போர் மீது (தண்டனையைப் பற்றிய) வாக்கை உறுதிப்படுத்துவதற்காகவும் (இறக்கப்பட்டது).
36:71
36:71 اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّا நிச்சயமாக நாம் خَلَقْنَا நாம் படைத்ததை لَهُمْ அவர்களுக்கு مِّمَّا عَمِلَتْ செய்தவற்றிலிருந்து اَيْدِيْنَاۤ நமது கரங்கள் اَنْعَامًا கால்நடைகளை فَهُمْ அவர்கள் لَهَا அவற்றுக்கு مٰلِكُوْنَ‏ உரிமையாளர்களாக
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
36:71. நம் கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.
36:71. அவர்கள் கவனிக்கவில்லையா, என்ன? திண்ணமாக, நம் கைகள் உருவாக்கியவற்றிலிருந்து அவர்களுக்காகக் கால்நடைகளை நாம் படைத்துள்ளோம். இப்போது அவர்கள் அவற்றிற்கு உரிமையாளர்களாய் இருக்கின்றார்கள்.
36:71. நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக நாம் அவர்களுக்காக (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் காணவில்லையா? பின்னர், அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.
36:72
36:72 وَذَلَّـلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا يَاْكُلُوْنَ‏
وَذَلَّـلْنٰهَا நாம் அவற்றை பணியவைத்தோம் لَهُمْ அவர்களுக்கு فَمِنْهَا அவற்றில் رَكُوْبُهُمْ அவர்களின் வாகனங்களும் وَمِنْهَا இன்னும் அவற்றில் இருந்து يَاْكُلُوْنَ‏ அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்
36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.
36:72. அவற்றை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன; (அறுத்து) புசிக்கக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன.
36:72. மேலும் அவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளோம். அவற்றில், சிலவற்றின்மீது அவர்கள் சவாரி செய்கின்றார்கள். மேலும், சிலவற்றின் இறைச்சியைப் புசிக்கின்றார்கள்.
36:72. அவைகளை, (இலகுவான முறையில்) அவர்களுக்குக் கீழ்படியும்படியும் நாம் செய்தோம், அவைகளில் அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவைகளும் இருக்கின்றன, அவர்கள் அவற்றிலிருந்து உண்ணவும் செய்கிறார்கள்.
36:73
36:73 وَلَهُمْ فِيْهَا مَنَافِعُ وَمَشَارِبُ‌ؕ اَفَلَا يَشْكُرُوْنَ‏
وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِيْهَا இவற்றில் مَنَافِعُ பலன்கள் وَمَشَارِبُ‌ؕ குடிபானங்களும் اَفَلَا يَشْكُرُوْنَ‏ அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
36:73. அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
36:73. மேலும், அவற்றில் அவர்களுக்குப் பலவிதமான பயன்களும் பானங்களும் இருக்கின்றன. (பிறகும்) அவர்கள் நன்றி செலுத்துவோராய் இருக்க வேண்டாமா, என்ன?
36:73. இன்னும் அநேகபயன்களும், பானங்களும் அவர்களுக்கு அவைகளில் இருக்கின்றன, எனவே, அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?
36:74
36:74 وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕ‏
وَاتَّخَذُوْا அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اٰلِهَةً பல கடவுள்களை لَّعَلَّهُمْ يُنْصَرُوْنَؕ‏ தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக
36:74. எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:74. எனினும், அல்லாஹ் அல்லாதவற்றாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவற்றை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!
36:74. (இவ்வாறெல்லாம் இருந்தும்) அல்லாஹ்வை விடுத்து பிற கடவுள்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், தாம் உதவி செய்யப்படலாமென்று ஆசை கொள்கிறார்கள்.
36:74. இன்னும், அல்லாஹ்வையன்றி (அவற்றால்) தங்களுக்கு உதவிசெய்யப்படக்கூடும் என்பதற்காக, அவர்கள் (வணக்கத்திற்குரிய வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
36:75
36:75 لَا يَسْتَطِيْعُوْنَ نَصْرَهُمْۙ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ‏
لَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் نَصْرَ உதவுவதற்கு هُمْۙ அவர்களுக்கு وَهُمْ இன்னும் அவர்கள் لَهُمْ அவர்கள் முன் جُنْدٌ ராணுவமாக مُّحْضَرُوْنَ‏ தயாராக இருக்கின்ற
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
36:75. அவற்றால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவை இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.
36:75. அவற்றால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது! (இதற்கு நேர்மாறாக) அம்மக்கள், அவற்றிற்காக தயார் நிலையிலிருக்கும் சேனையாக விளங்குகிறார்கள்.
36:75. (ஆனால்) அவர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் பெற மாட்டார்கள், (ஆயினும் மறுமையில்) அவர்கள் இவர்களுக்கு (எதிராகச் சாட்சிகூற) முன்னிலைப்படுத்தப்படும் படையினராவர்.
36:76
36:76 فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ‌ۘ اِنَّا نَـعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ‏
فَلَا يَحْزُنْكَ ஆகவே உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம் قَوْلُهُمْ‌ۘ அவர்களின் பேச்சு اِنَّا نَـعْلَمُ நிச்சயமாக நாம் நன்கறிவோம் مَا يُسِرُّوْنَ அவர்கள் மறைத்து பேசுவதை(யும்) وَمَا يُعْلِنُوْنَ‏ அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதை(யும்)
36:76. (நபியே!) அவர்களுடைய பேச்சு உம்மை விசனப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் (தங்கள் மனத்தில்) மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் நன்கறிவோம்.
36:76. (நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.
36:76. (இட்டுக்கட்டிப் பேசும்) அவர்களின் பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திட வேண்டாம். அவர்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசுபவை அனைத்தையும் திண்ணமாக நாம் அறிகின்றோம்.
36:76. (நபியே! உமக்கு விரோதமாகக் கூறப்படும்) அவர்களுடைய கூற்று உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நாம் நன்கறிவோம்.
36:77
36:77 اَوَلَمْ يَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏
اَوَلَمْ يَرَ பார்க்கவில்லையா? الْاِنْسَانُ மனிதன் اَنَّا خَلَقْنٰهُ நிச்சயமாக நாம் அவனை படைத்துள்ளோம் مِنْ نُّطْفَةٍ ஓர் இந்திரியத் துளியில் இருந்து فَاِذَا هُوَ ஆனால், அவனோ خَصِيْمٌ தர்க்கம் செய்பவனாக مُّبِيْنٌ‏ தெளிவாக
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:77. மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகிறான்.
36:77. திண்ணமாக நாம் மனிதனை விந்திலிருந்து படைத்திருக்கின்றோம் என்பதை அவன் பார்க்கவில்லையா என்ன? ஆனால் அவ்வாறிருந்தும் (நம்மை எதிர்த்து) வெளிப்படையாக தர்க்கம் புரிபவனாகிவிட்டான்.
36:77. மனிதன்_அவனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நிச்சயமாக நாம் படைத்தோம் என்பதை_அவன் பார்க்கவில்லையா? பின்னர் திடீரென அவன், பகிரங்கமாகத் தர்க்கிக்கக் கூடியவனாக இருக்கிறான்.
36:78
36:78 وَضَرَبَ لَـنَا مَثَلًا وَّ نَسِىَ خَلْقَهٗ‌ ؕ قَالَ مَنْ يُّحْىِ الْعِظَامَ وَهِىَ رَمِيْمٌ‏
وَضَرَبَ விவரிக்கின்றான் لَـنَا நமக்கு مَثَلًا ஓர் உதாரணத்தை وَّ نَسِىَ அவன் மறந்துவிட்டான் خَلْقَهٗ‌ ؕ தான் படைக்கப்பட்டதை قَالَ அவன் கூறுகின்றான் مَنْ யார் يُّحْىِ உயிர்ப்பிப்பான்? الْعِظَامَ எலும்புகளை وَهِىَ رَمِيْمٌ‏ அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்றபோது
36:78. மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று.
36:78. (மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான். அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்.
36:78. மேலும், அவன் நமக்கு உவமையைப் பொருத்துகின்றான். ஆனால் தான் படைக்கப்பட்ட விதத்தை மறந்துவிடுகின்றான். மக்கிப் போய்விட்ட நிலையிலுள்ள இந்த எலும்புகளை உயிர்ப்பிப்பவர் யார்? என்று அவன் கேட்கின்றான்.
36:78. மேலும், அவன் தன்னுடைய படைப்பை (தான் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதை) மறந்துவிட்டு, ஓர் உதாரணத்தையும் நமக்காக அவன் கூறுகிறான், “எலும்புகளை, அவை மக்கிப்போன நிலையில் உயிரூட்டுபவன் யார்?” என்று அவன் கேட்கிறான்.
36:79
36:79 قُلْ يُحْيِيْهَا الَّذِىْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ‌ ؕ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيْمُ ۙ‏
قُلْ கூறுவீராக! يُحْيِيْهَا அவற்றை உயிர்ப்பிப்பான் الَّذِىْۤ اَنْشَاَهَاۤ அவற்றை உருவாக்கியவன்தான் اَوَّلَ முதல் مَرَّةٍ‌ ؕ முறை وَهُوَ இன்னும் அவன் بِكُلِّ எல்லா خَلْقٍ படைப்புகளையும் عَلِيْمُ ۙ‏ நன்கறிந்தவன்
36:79. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:79. (நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.
36:79. அவனிடம் கூறுங்கள்: “எவன் முதலில் அவற்றைப் படைத்தானோ அவனே அவற்றை உயிர்ப்பிப்பான். மேலும், அவன் படைப்பு நுட்பம் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.”
36:79. (நபியே!) அதற்கு) நீர் கூறுவீராக: “முதன்முறையில் அதனைப்படைத்தானே அத்தகையவனே அதனை உயிர்ப்பிப்பான், அவன் ஒவ்வொரு படைப்பைப்பற்றியும் நன்கறிகிறவன்.”
36:80
36:80 اۨلَّذِىْ جَعَلَ لَـكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْـتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ‏
اۨلَّذِىْ எவன் جَعَلَ ஏற்படுத்துகின்றான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ الشَّجَرِ மரத்தில் இருந்து الْاَخْضَرِ பச்சை نَارًا நெருப்பை فَاِذَاۤ اَنْـتُمْ அப்போது நீங்கள் مِّنْهُ அதில் تُوْقِدُوْنَ‏ நெருப்பை மூட்டிக்கொள்கிறீர்கள்
36:80. “பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:80. அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கிறீர்கள்.
36:80. அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பைப் படைத்தான். இப்போது நீங்கள் அதன் மூலம் (தீ) பற்றவைத்துக் கொள்கின்றீர்கள்!
36:80. அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உண்டாக்கினான், அப்போது அதிலிருந்து நீங்கள் (நெருப்பை) மூட்டுகிறீர்கள்.
36:81
36:81 اَوَلَيْسَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْؔؕ بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏
اَوَلَيْسَ இல்லையா? الَّذِىْ خَلَقَ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் بِقٰدِرٍ ஆற்றலுடையவனாக عَلٰٓى اَنْ يَّخْلُقَ படைப்பதற்கு مِثْلَهُمْؔؕ இவர்களைப் போன்றவர்களை بَلٰی ஏன் இல்லை! وَهُوَ அவன்தான் الْخَـلّٰقُ மகா படைப்பாளன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் நன்கறிந்தவனும் ஆவான்.
36:81. வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அவன் அவர்களைப் போன்றவர்களைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனல்லவா? ஏன் இல்லை! நன்கு அறிந்த மாபெரும் படைப்பாளன் அவனே.
36:81. வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகையவன், அவர்களைப் போன்றதைப் படைக்கச் சக்திபெற்றவனாக இல்லையா? ஏன் இல்லை? (அவனே ஆற்றலுடையவன்.) நிச்சயமாக, அவனே மிகப் பெரும் படைப்பாளன், நன்கறிகிறவன்.
36:82
36:82 اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
اِنَّمَاۤ اَمْرُهٗۤ அவனது கட்டளை எல்லாம் اِذَاۤ اَرَادَ அவன் நாடினால் شَیْـٴًـــا எதையும் اَنْ يَّقُوْلَ அவன் கூறுவதுதான் لَهٗ அதற்கு كُنْ ஆகு (என்று) فَيَكُوْنُ‏ அது ஆகிவிடும்
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆகுக!) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
36:82. அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது.
36:82. அவன் ஏதாவது ஒருபொருளைப் படைக்க நாடினால், அவன் செய்வது ‘ஆகுக!’ என்று அதற்கு ஆணை இடுவதுதான்; உடனே அது ஆகிவிடுகின்றது!
36:82. அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்” ஆகுக!” எனக் கூறுவதுதான் உடனே அது ஆகிவிடும்.
36:83
36:83 فَسُبْحٰنَ الَّذِىْ بِيَدِهٖ مَلَـكُوْتُ كُلِّ شَىْءٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
فَسُبْحٰنَ ஆக, அவன் மகா பரிசுத்தமானவன் الَّذِىْ எவன் بِيَدِهٖ அவனுடைய கரத்தில் مَلَـكُوْتُ பேராட்சி كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் وَّاِلَيْهِ அவன் பக்கம்தான் تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.
36:83. சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
36:83. தூய்மையானவன், ஒவ்வொரு பொருளின் முழு அதிகாரமும் எவனுடைய கையில் உள்ளதோ அவன்! மேலும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்பட இருக்கின்றீர்கள்.
36:83. ஆகவே, சகலவற்றின் அதிகாரம் (ஆட்சி) எவனுடைய கைவசம் இருக்கின்றதோ அத்தகையவனே மிகப் பரிசுத்தமானவன், மேலும் அவன்பாலே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.