47. ஸூரத்து முஹம்மது(ஸல்)
மதனீ, வசனங்கள்: 38

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
47:1
47:1 اَلَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ‏
اَلَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்து(விட்டனர்) وَصَدُّوْا இன்னும் தடுத்தார்களோ عَنْ سَبِيْلِ பாதையிலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் اَضَلَّ வழிகெடுத்து விட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:1. எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.
47:1. எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்துவிட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான்.
47:1. எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.
47:1. (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை (அதில் மனிதர்கள் செல்வதை) விட்டும் தடுத்துக் கொண்டிருந்தார்களே அத்தகையோர்_அவர்களின் செயல்களை (பயனற்றதாக்கி) அவன் வீணாக்கி விட்டான்.
47:2
47:2 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ‌ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا الصّٰلِحٰتِ இன்னும் நன்மைகளை செய்தனர் وَاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் بِمَا نُزِّلَ இறக்கப்பட்டதை(யும்) عَلٰى مُحَمَّدٍ முஹம்மது நபியின் மீது وَّهُوَ அதுதான் الْحَقُّ உண்மையாகும் مِنْ رَّبِّهِمْ‌ۙ அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த كَفَّرَ போக்கிவிடுவான் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ அவர்களின் பாவங்களை وَاَصْلَحَ இன்னும் சீர் செய்துவிடுவான் بَالَهُمْ‏ அவர்களின் காரியத்தை
47:2. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
47:2. எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) அவர்கள் மீது இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (செய்த) பாவத்திற்கு இதைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங்களையும் அவன் சீர்படுத்தி விட்டான்.
47:2. எவர்கள், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ மேலும், முஹம்மதின் மீது இறக்கியருளப்பட்டதை அது முழுக்க முழுக்க அவர்களின் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமாகும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களின் தீமைகளை அல்லாஹ் அவர்களை விட்டுக் களைந்து, அவர்களின் நிலைமையைச் சீர்திருத்திவிட்டான்.
47:2. இன்னும், (அல்லாஹ்வை) விசுவாசித்து, நற்கருமங்களையும் செய்து, முஹம்மது மீது இறக்கிவைக்கப்பட்டதையும்_அது தங்கள் இரட்சகனிடமிருந்து வந்த உண்மை(யான வேதம்) ஆக இருக்கும் நிலையில்_விசுவாசித்திருந்தார்களே அத்தகையவர்களின் தீயவைகளை அவர்களை விட்டுப் போக்கி, அவர்களுடைய நிலைமையையும் (அல்லாஹ்வாகிய) அவன் சீர் படுத்திவிட்டான்.
47:3
47:3 ذٰ لِكَ بِاَنَّ الَّذِيْنَ كَفَرُوْا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِيْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ‌ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ‏
ذٰ لِكَ இது بِاَنَّ ஏனெனில் நிச்சயமாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் اتَّبَعُوا பின்பற்றினர் الْبَاطِلَ பொய்யை وَاَنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கை கொண்டவர்கள் اتَّبَعُوا பின்பற்றினார்கள் الْحَقَّ உண்மையை مِنْ رَّبِّهِمْ‌ؕ தங்கள் இறைவனிடமிருந்து كَذٰلِكَ இவ்வாறுதான் يَضْرِبُ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لِلنَّاسِ மக்களுக்கு اَمْثَالَهُمْ‏ அவர்களுக்குரிய தன்மைகளை
47:3. இது ஏனெனில்: நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான்.
47:3. ஏனென்றால், நிச்சயமாக நிராகரிப்பவர்கள் பொய்யையே பின்பற்றி இருந்தார்கள். நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையையே பின்பற்றி இருந்தார்கள். இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்களின் தன்மைகளை தெளிவாக்குகிறான்.
47:3. இதற்குக் காரணம், நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால், இறைநம்பிக்கையாளர்களோ தங்களின் இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் சரியான அந்தஸ்தைக் காண்பித்துக் கொடுக்கின்றான்.
47:3. அது (ஏனென்றால்) நிச்சயமாக நிராகரிப்போர் பொய்யைப் பின்பற்றினார்கள், விசுவாசங்கொண்டவர்களோ, நிச்சயமாக தங்கள் இரட்சகனிடமிருந்து வந்த உண்மையைப் பின்பற்றினார்கள் என்பதாலுமாகும், இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு, அல்லாஹ் அவர்களின் நிலைமைகளை உதாரணங்களா(கக் கூறி தெளிவா)க்குகின்றான்.
47:4
47:4 فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ حَتّٰٓى اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوْا الْوَثَاقَ ۙ فَاِمَّا مَنًّۢا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰى تَضَعَ الْحَـرْبُ اَوْزَارَهَا ۛۚ  ذٰ لِكَ ‌ۛؕ وَلَوْ يَشَآءُ اللّٰهُ لَانْـتَصَرَ مِنْهُمْ  وَلٰـكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍ‌ؕ وَالَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ‏
فَاِذَا لَقِيْتُمُ நீங்கள் சந்தித்தால் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை فَضَرْبَ வெட்டுங்கள்! الرِّقَابِ ؕ பிடரிகளை حَتّٰٓى இறுதியாக اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால் فَشُدُّوْا உறுதியாகக் கட்டுங்கள்! الْوَثَاقَ ۙ கயிறுகளில் فَاِمَّا ஒன்று مَنًّۢا உபகாரம் புரியுங்கள்! بَعْدُ அதற்குப் பின்னர் وَاِمَّا அல்லது فِدَآءً பிணைத்தொகை கொடுக்கட்டும்! حَتّٰى இறுதியாக تَضَعَ முடிக்கின்ற (வரை) الْحَـرْبُ போர் اَوْزَارَهَا ۛۚ அதன் சுமைகளை  ذٰ لِكَ ۛؕ இதுதான் وَلَوْ يَشَآءُ اللّٰهُ அல்லாஹ் நாடினால் لَانْـتَصَرَ பழிதீர்த்திருப்பான் مِنْهُمْ  அவர்களிடம் وَلٰـكِنْ என்றாலும் لِّيَبْلُوَا۟ அவன்சோதிப்பதற்காக بَعْضَكُمْ உங்களில் சிலரை بِبَعْضٍ‌ؕ சிலர் மூலமாக وَالَّذِيْنَ எவர்கள் قُتِلُوْا கொல்லப்பட்டார்களோ فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَلَنْ يُّضِلَّ வீணாக்கிவிட மாட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் அமல்களை
47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
47:4. (நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களிடம் ஒரு ஈடுபெற்று அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும்வரை (போர் செய்யுங்கள்). இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர்புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கிறான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகிறார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.)
47:4. எனவே, இறைநிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால் முதல் வேலை கழுத்துகளை வெட்டுவதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கி விட்டால் கைதிகளை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள்; அதன் பிறகு (அவர்களின் மீது நீங்கள்) கருணை காட்டலாம்; அல்லது ஈட்டுத் தொகை பெறலாம்; (உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது) போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்யவேண்டிய பணி. அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருப்பான். ஆயினும் (இந்த வழியை அவன் மேற்கொண்டது) உங்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதிப்பதற்காகத்தான்! மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவார்களோ, அவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விட மாட்டான்.
47:4. ஆகவே, (விசுவாசிகளே! உங்களிடம் போர் புரியும்) நிராகரிப்போரை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி அவர்களுடைய) பிடரிகளை வெட்டுங்கள், முடிவாக நீங்கள் அவர்களுடன் கடும் போரிட்டு (கைதிகளாகப் பிடித்துகொண்டு) விட்டால் அப்போது (கைதிகளின்) கட்டை பலப்படுத்தி விடுங்கள், அதன், பின்னர் (அவர்களை) உபகாரமாக (விட்டு விடுங்கள்) அல்லது ஈடுபெற்று (விட்டு விடுங்கள், இவ்வாறு) போர் (புரியும் எதிரிகள்) தம் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (போர் புரியுங்கள்), இது (அல்லாஹ்வின் கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தாலோ (முன்னதாகவே பதிலடி கொடுத்து) அவர்களை தண்டித்திருப்பான், எனினும், (போர் புரிய கட்டளையிட்டது) உங்களில் சிலரை, சிலரைக்கொண்டு சோதிப்பதற்கேயாகும், மேலும், அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டார்களே அத்தகையோர்_அவர்களுடைய (நன்மையான) செயல்களை அவன் வீணாக்கிவிடவே மாட்டான்.
47:5
47:5 سَيَهْدِيْهِمْ وَيُصْلِحُ بَالَهُمْۚ‏
سَيَهْدِيْهِمْ அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுவான் وَيُصْلِحُ இன்னும் சீர் செய்வான் بَالَهُمْۚ‏ அவர்களின் காரியத்தை
47:5. அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.
47:5. அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்திவிடுவான்.
47:5. அவன் அவர்களுக்கு வழிகாட்டுவான்; அவர்களின் நிலைமையைச் சீர்படுத்துவான்.
47:5. அவர்களை அவன் நேர் வழியில் செலுத்துவான், அவர்களுடைய நிலைமையையும் அவன் சீர்படுத்திவிடுவான்.
47:6
47:6 وَيُدْخِلُهُمُ الْجَـنَّةَ عَرَّفَهَا لَهُمْ‏
وَيُدْخِلُهُمُ இன்னும் அவர்களை நுழைப்பான் الْجَـنَّةَ சொர்க்கத்தில் عَرَّفَهَا அதை காண்பித்துக் கொடுப்பான் لَهُمْ‏ அவர்களுக்கு
47:6. மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.
47:6. இன்னும் அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சொர்க்கத்திலும் அவர்களைப் புகுத்துவான்.
47:6. மேலும், எந்தச் சுவனத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றானோ, அந்தச் சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான்.
47:6. மேலும், அவன் எ(ந்தச் சுவனபதியான)தை அவர்களுக்கு அறிவித்திருந்தானோ, அச்சுவனபதியில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.
47:7
47:7 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تَـنْصُرُوا நீங்கள் உதவினால் اللّٰهَ அல்லாஹ்விற்கு يَنْصُرْ அவன் உதவுவான் كُمْ உங்களுக்கு وَيُثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்துவான் اَقْدَامَكُمْ‏ உங்கள் பாதங்களை
47:7. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
47:7. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்கள் பாதங்களை உறுதியாக்கி விடுவான்.
47:7. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவிபுரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும், உங்களின் பாதங்களை உறுதிப்படுத்துவான்.
47:7. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவிசெய்வான், மேலும், உங்களுடைய பாதங்களை நிலைபெறச் செய்வான்.
47:8
47:8 وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்களோ فَتَعْسًا لَّهُمْ அவர்களுக்கு கேடு உண்டாகட்டும் وَاَضَلَّ இன்னும் அவன் வழிகேட்டில் விட்டு விடுவான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:8. அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.
47:8. எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கேடுதான். (அவர்களுடைய கால்களைப் பெயர்த்து) அவர்களுடைய செயல்களையெல்லாம் பயனற்றதாக்கி விடுவான்.
47:8. ஆனால், யார் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு அழிவுதான்! மேலும், அல்லாஹ் அவர்களுடைய செயல்களைப் பயனற்றதாக்கிவிட்டிருக்கிறான்.
47:8. இன்னும், (இவ்வேதத்தை) நிராகரிகின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்குக் கேடுதான், அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்வாகிய) அவன் அழித்தும்விட்டான்.
47:9
47:9 ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ‏
ذٰلِكَ அது بِاَنَّهُمْ ஏனெனில், நிச்சயமாக كَرِهُوْا வெறுத்தார்கள் مَاۤ اَنْزَلَ இறக்கியதை اللّٰهُ அல்லாஹ் فَاَحْبَطَ ஆகவே, அவன் வீணாக்கிவிட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் அமல்களை
47:9. ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்.
47:9. இதன் காரணமாவது : அல்லாஹ் இறக்கிவைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்து (நிராகரித்து) விட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயல்களை (எல்லாம் அல்லாஹ்) அழித்துவிட்டான்.
47:9. அதற்குக் காரணம், அல்லாஹ் இறக்கிவைத்ததை அவர்கள் வெறுத்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான்.
47:9. இது (ஏனெனில்,) அல்லாஹ் இறக்கிவைத்ததை நிச்சயமாக அவர்கள் வெறுத்துவிட்டார்கள் என்ற காரணத்தினாலாகும், ஆதலால், அவர்களுடைய செயல்களையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் அழித்துவிட்டான்.
47:10
47:10 اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ دَمَّرَ اللّٰهُ عَلَيْهِمْ وَلِلْكٰفِرِيْنَ اَمْثَالُهَا‏
اَفَلَمْ يَسِيْرُوْا அவர்கள் பயணித்து فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا பார்க்க வேண்டாமா? كَيْفَ எவ்வாறு كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் دَمَّرَ அழித்துவிட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்களை وَلِلْكٰفِرِيْنَ இந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும் اَمْثَالُهَا‏ அதைப் போன்ற முடிவுகளே
47:10. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
47:10. அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்ற தண்டணைகளே நிகழும்.
47:10. அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் கதி என்னவாயிற்று என்று பார்க்கவில்லையா? அவர்களுக்குரிய அனைத்தையும் அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்பிவிட்டான். மேலும், இதைப் போன்ற விளைவுகள்தாம் இந்த நிராகரிப்பாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
47:10. அவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (அவ்வாறாயின்,) அவர்களுக்கு முன்னர் (அல்லாஹ்வின் கட்டளைக்குமாறு செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கண்டுகொள்வார்கள், அவர்கள் மீது அல்லாஹ் அடியோடு அழிவை ஏற்படுத்திவிட்டான், நிராகரிப்போருக்கும் இவை போன்றவை உண்டு.
47:11
47:11 ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِيْنَ لَا مَوْلٰى لَهُمْ‏
ذٰ لِكَ بِاَنَّ ஏனெனில், நிச்சயமாக அது اللّٰهَ அல்லாஹ்தான் مَوْلَى எஜமானன் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களின் وَاَنَّ இன்னும் நிச்சயமாக الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்கள் لَا مَوْلٰى எஜமானன் இல்லை لَهُمْ‏ அவர்களுக்கு
47:11. இது ஏனெனில்: அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
47:11. இதன் காரணமாவது : நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களை காப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான். நிராகரிப்பவர்களுக்கோ, நிச்சயமாக ஒரு பாதுகாவலனுமில்லை.
47:11. இதற்குக் காரணம், நம்பிக்கையாளர்களுக்குப் பாதுகாவலனாகவும், உதவி புரிபவனாகவும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதே! மேலும், நிராகரிப்பாளர்களுக்குப் பாதுகாவலனும் உதவியாளனும் எவரும் இல்லை.
47:11. இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் விசுவாசங்கொண்டோரின் பாதுகாவலன் என்பதினாலும், நிச்சயமாக நிராகரிப்போர், அவர்களுக்குப் பாதுகாவலர் எவருமில்லை என்ற காரணத்தினாலுமாகும்.
47:12
47:12 اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا يَتَمَتَّعُوْنَ وَيَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَّهُمْ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُدْخِلُ நுழைப்பான் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ ؕ ஆறுகள் وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் يَتَمَتَّعُوْنَ இன்புறுகிறார்கள் وَيَاْكُلُوْنَ இன்னும் சாப்பிடுகிறார்கள் كَمَا போல் تَاْكُلُ சாப்பிடுவது الْاَنْعَامُ கால்நடைகள் وَالنَّارُ நரகம்தான் مَثْوًى தங்குமிடமாகும் لَّهُمْ‏ அவர்களுக்கு
47:12. நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
47:12. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துகிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப்போல் தின்று கொண்டும், (மிருகங்களைப் போல்) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்.
47:12. இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோரைத் திண்ணமாக அல்லாஹ் சுவனங்களில் புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், நிராகரிப்பாளர்கள் உலகின் சிலநாள் வாழ்வின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கால்நடைகளைப் போன்று உண்டு, பருகிக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்கள் இறுதியில் சென்றடையும் இடம் நரகமாகும்.
47:12. நிச்சயமாக அல்லாஹ் விசுவாசங்கொண்டு நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையோரை சுவனபதிகளில் புகுத்துகின்றான், அவற்றில் கீழ் நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும், இன்னும், நிராகரிக்கின்றார்களே அத்தகையவர்கள் (உலக) சுகத்தை அனுபவித்துக் கொண்டும், கால்நடைகள் தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள், (நரக) நெருப்பே அவர்களின் ஒதுங்குமிடமாகும்.
47:13
47:13 وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ هِىَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْيَتِكَ الَّتِىْۤ اَخْرَجَتْكَ‌ۚ اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ قَرْيَةٍ ஊர் (மக்)கள் هِىَ அவை اَشَدُّ மிக உறுதியான(து) قُوَّةً பலத்தால் مِّنْ قَرْيَتِكَ உமது ஊரைவிட الَّتِىْۤ எது اَخْرَجَتْكَ‌ۚ உம்மை வெளியேற்றிய(து) اَهْلَكْنٰهُمْ நாம் அவர்களை அழித்தோம் فَلَا அறவே இல்லை نَاصِرَ உதவியாளர் لَهُمْ‏ அவர்களுக்கு
47:13. மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விட்டு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
47:13. (நபியே!) உமது ஊரைவிட்டும் உம்மை வெளிப்படுத்திய இவர்களைவிட எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தனர். (அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக) அவர்கள் அனைவரையும் நாம் அழித்து விட்டோம். (அச்சமயம்) அவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரும் இருக்கவில்லை. (ஆகவே, இவர்கள் எம்மாத்திரம்! இவர்களையும் நாம் அழித்தே தீருவோம்.)
47:13. (நபியே!) உம்மை வெளியேற்றிய உம்முடைய ஊரை விடவும் அதிக வலிமை கொண்ட எத்தனையோ ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பிறகு அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்கவில்லை.
47:13. இன்னும், உம்மை வெளியேற்றிய அத்தகைய உம்முடைய ஊ(ரா)ரை விட எத்தனையோ ஊ(ரா)ர்கள்_அவை(களில் வசித்தவர்கள்) பலத்தால் மிகக் கடினமாக இருந்தன(ர்), அவர்களை (அவர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம், (அச்சமயம்) அவர்களுக்கு உதவிபுரிவோர் (எவரும்) இல்லை.
47:14
47:14 اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‏
اَفَمَنْ ஆவார்களா? كَانَ இருப்பவர்கள் عَلٰى بَيِّنَةٍ தெளிவான அத்தாட்சியில் مِّنْ رَّبِّهٖ தமது இறைவனின் كَمَنْ போன்று/எவர்களுக்கு زُيِّنَ அலங்கரிக்கப்பட்டது لَهٗ தமக்கு سُوْٓءُ கெட்ட عَمَلِهٖ தங்களது செயல்கள் وَاتَّبَعُوْۤا இன்னும் பின்பற்றுகின்றார்கள் اَهْوَآءَهُمْ‏ தங்கள் மன இச்சைகளை
47:14. எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
47:14. தங்கள் இறைவனின் தெளிவான (நேரிய) பாதையின் மீது இருப்பவர்கள், தங்கள் தீய காரியங்களையே அழகாகக் கண்டு, தங்கள் சரீர இச்சைகளையே பின்பற்றுகிறவர்களுக்கு ஒப்பாகுவார்களா?
47:14. தம் அதிபதியிடமிருந்து வந்த தெளிவான வழிகாட்டுதலில் இருப்பவர், எவர்களுக்குத் தங்களின் தீயசெயல்கள் அழகாக்கப்பட்டு தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு சமம் ஆக முடியுமா, என்ன?
47:14. எனவே, தன் இரட்சகனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீதிருக்கிறாரே அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டு, தங்கள் மனோ இச்சைகளையும் பின்பற்றினார்களே அவர்களைப் போன்று ஆவாரா?
47:15
47:15 مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ؕ فِيْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَيْرِ اٰسِنٍ‌ ۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهٗ ‌ۚ وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِيْنَ ۚ وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى‌ ؕ وَلَهُمْ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ‌ؕ كَمَنْ هُوَ خَالِدٌ فِى النَّارِ وَسُقُوْا مَآءً حَمِيْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ‏
مَثَلُ தன்மையாவது الْجَـنَّةِ சொர்க்கத்தின் الَّتِىْ எது وُعِدَ வாக்களிக்கப்பட்டது الْمُتَّقُوْنَ‌ؕ இறையச்ச முள்ளவர்களுக்கு فِيْهَاۤ அதில் اَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ مَّآءٍ தண்ணீரின் غَيْرِ اٰسِنٍ‌ ۚ துர் வாடை வீசாத وَاَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ لَّبَنٍ பாலின் لَّمْ يَتَغَيَّرْ மாறவில்லை طَعْمُهٗ ۚ அதன் ருசி وَاَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ خَمْرٍ மதுவின் لَّذَّةٍ ருசியான لِّلشّٰرِبِيْنَ ۚ அருந்துபவர்களுக்கு وَاَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ عَسَلٍ தேனின் مُّصَفًّى‌ ؕ தூய்மையான(து) وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِيْهَا அதில் مِنْ كُلِّ எல்லாவற்றிலிருந்து(ம்) الثَّمَرٰتِ கனிகள் وَمَغْفِرَةٌ மன்னிப்பும் مِّنْ رَّبِّهِمْ‌ؕ அவர்களின் இறைவனிடமிருந்து كَمَنْ هُوَ போன்று/எவர்(கள்)/ அவர்(கள்) خَالِدٌ நிரந்தரமானவர்(கள்) فِى النَّارِ நரகத்தில் وَسُقُوْا இன்னும் புகட்டப்படுவார்கள் مَآءً நீரை حَمِيْمًا கொதிக்கின்றது فَقَطَّعَ அது துண்டு துண்டாக ஆக்கிவிடும் اَمْعَآءَ குடல்களை هُمْ‏ அவர்களின்
47:15. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
47:15. இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது: அதில் தீங்கற்ற (பரிசுத்தமான) நீரருவிகள் இருக்கின்றன. பரிசுத்தமான ருசி மாறாத பாலாறுகளும் இருக்கின்றன. திராட்சை ரச ஆறுகளும் இருக்கின்றன. அது குடிப்பவர்களுக்குப் பேரின்பமளிக்கக் கூடியது. தெளிவான தேனாறுகளும் இருக்கின்றன. இன்னும் அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவர்க்கங்கள் இருப்பதுடன், இறைவனின் மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. (இத்தகைய இன்பங்களை அனுபவிப்பவர்கள்) நரகத்தில் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடக்கூடிய நரகவாசிகளுக்கு ஒப்பாகுவார்களா?
47:15. இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மகத்துவம் இதுவே: அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு எல்லாவிதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும். (இத்தகைய சுவனப்பேறுகளைப் பெறும் மனிதர்களுக்கு) நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாக்கப்படுகின்றவர்கள் ஒப்பாவார்களா?
47:15. பயபக்தியுடைவர்கள் வாக்களிக்கப்பட்டார்களே அத்தகைய சுவனத்தின் தன்மையாகிறது, அதில் தண்ணீரிலிருந்து மாற்றமடையாத (தெளிவான) ஆறுகளும், பாலிருந்து தன் சுவைமாறாத (பால்) ஆறுகளும், மதுவிலிருந்து குடிப்போருக்குப் பேரின்பமளிக்கக்கூடிய ஆறுகளும், தெளிவான தேனிலிருந்து (தேன்) ஆறுகளும் உண்டு, அதில் அவர்களுக்கு ஒவ்வொரு விதமான கனிவகைகளும், தங்கள் இரட்சகனிடமிருந்து மன்னிப்பும் உண்டு, (இத்தகைய நற்பாக்கியங்களை நல்கப்பெற்ற இத்தகையோர்) நரகத்தில் எவர் நிரந்தரமாக(த் தங்கி)யிருந்து, கொதிக்கும் நீரும் புகட்டப்பட்டு (அதனால்) அவர்களின் குடல்களை அது துண்டு துண்டாக்கிவிடுமே அவர்களைப்போன்று ஆவாரா?
47:16
47:16 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ‌ۚ حَتّٰٓى اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا‌‌ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَ اتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‏
وَمِنْهُمْ அவர்களில் உள்ளனர் مَّنْ يَّسْتَمِعُ செவி சாய்க்கின்றவர்களும் اِلَيْكَ‌ۚ உம் பக்கம் حَتّٰٓى இறுதியில் اِذَا خَرَجُوْا அவர்கள் வெளியே புறப்பட்டால் مِنْ عِنْدِكَ உம்மிடமிருந்து قَالُوْا கூறுகின்றனர் لِلَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்களிடம் الْعِلْمَ கல்வி مَاذَا என்ன قَالَ இவர் கூறினார் اٰنِفًا‌ சற்று நேரத்திற்கு முன்பு اُولٰٓٮِٕكَ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் طَبَعَ முத்திரையிட்டு விட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى قُلُوْبِهِمْ இவர்களின் உள்ளங்களில் وَ اتَّبَعُوْۤا இன்னும் இவர்கள் பின்பற்றினார்கள் اَهْوَآءَهُمْ‏ தங்கள் மன இச்சைகளை
47:16. இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து: “அவர் சற்று முன் என்ன கூறினார்?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
47:16. (நபியே! நீர் இவ்வேதத்தை ஓதிய சமயத்தில்) உமக்குச் செவிசாய்ப்பவர்களைப் போல் இருந்து பிறகு, உம்மை விட்டு வெளிப்பட்டதும், (நம்பிக்கையாளர்களாகிய, இவ்வேத) ஞானம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கி(ப் பரிகாசமாக ‘‘உங்கள் நபி) சற்று முன் என்ன கூறினார்?'' எனக் கேட்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். இத்தகையவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். (ஆதலால்,) இவர்கள் தங்கள் சரீர இச்சையைத்தான் பின்பற்றி நடக்கின்றனர்.
47:16. அவர்களில் சிலர் உமது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். பிறகு, உம்மைவிட்டு வெளியே சென்றால், ஞானம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்கின்றார்கள்: ‘இவர் இப்போது என்ன சொன்னார்?’ இத்தகையோரின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும், இவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றுவோராய் இருக்கின்றனர்.
47:16. (நபியே!) அவர்களில் உமக்குச் செவி சாய்ப்பவர்களும் இருக்கின்றனர், எதுவரையெனில், அவர்கள் உம்மிடமிருந்து வெளியேறிய சமயத்தில், (விசுவாசிகளாகிய, இவ்வேத) அறிவு கொடுக்கப்பட்டவர்களிடம் (“உங்களுடைய நபியாகிய) அவர் சிறிது முன் என்ன கூறினார்?” என்று கேட்கின்றனர், அவர்கள் எத்தகையோரேன்றால், அவர்களுடைய இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான், மேலும், இவர்கள் தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றிவிட்டனர்.
47:17
47:17 وَالَّذِيْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَّاٰتٰٮهُمْ تَقْوٰٮهُمْ‏
وَالَّذِيْنَ எவர்கள் اهْتَدَوْا நேர்வழி பெற்றார்களோ زَادَهُمْ அவர்களுக்கு அதிகப்படுத்துவான் هُدًى நேர்வழியை وَّاٰتٰٮهُمْ இன்னும் , அவர்களுக்கு வழங்குவான் تَقْوٰٮهُمْ‏ அவர்களின் தக்வாவை
47:17. மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.
47:17. எவர்கள் நேரான வழியில் செல்கிறார்களோ (அவர்கள் இந்த வேதத்தை கவனத்துடன், பின்பற்றும் எண்ணத்துடன் செவியுறுவதன் காரணமாக) அவர்களுடைய நேர்வழியை (மேலும்) அதிகப்படுத்தி இறையச்சத்தையும் அவர்களுக்கு (அல்லாஹ்) அளிக்கிறான்.
47:17. ஆனால், எவர்கள் நேர்வழி பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியில் இன்னும் அதிக முன்னேற்றத்தை அளிக்கின்றான். அவர்களுக்குரிய இறையச்சம் எனும் தன்மையையும் அவர்களுக்கு வழங்குகின்றான்.
47:17. மேலும், நேர்வழி பெற்றுவிட்டோர்_அவர்களுடைய நேர் வழியை (மேலும்) அவன் அதிகப்படுத்தி, அவர்களின் பயபக்தியையும் அவர்களுக்கு அவன் கொடுத்தான்.
47:18
47:18 فَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِيَهُمْ بَغْتَةً ‌ ۚ فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا‌‌ ۚ فَاَنّٰى لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰٮهُمْ‏
فَهَلْ يَنْظُرُوْنَ அவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? اِلَّا தவிர السَّاعَةَ மறுமை اَنْ تَاْتِيَهُمْ அவர்களிடம் வருவதை بَغْتَةً ۚ திடீரென فَقَدْ திட்டமாக جَآءَ வந்துவிட்டன اَشْرَاطُهَا‌ ۚ அதன் அடையாளங்கள் فَاَنّٰى எப்படி பலனளிக்கும்! لَهُمْ அவர்களுக்கு اِذَا جَآءَتْهُمْ அவர்களிடம் வரும் போது ذِكْرٰٮهُمْ‏ அவர்கள் நல்லறிவு பெறுவது
47:18. எனவே இவர்கள் தங்கள்பால் திடுகூறாக (தீர்ப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன; ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.
47:18. (நபியே! அந்தப் பாவிகள்) தங்களிடம் திடீரென வரக்கூடிய மறுமை(யின் வேதனை)யைத் தவிர (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் (பல) நிச்சயமாக வந்துவிட்டன. அது அவர்களிடம் வந்ததன் பின்னர், அதைப் பற்றி அவர்கள் நல்லுணர்வு பெறுவதால் என்ன பயன்?
47:18. என்ன, இந்த மக்கள் மறுமைநாள் தங்களிடம் திடீரென வந்துவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? அதன் அடையாளங்கள் வந்துவிட்டனவே! அந்நாளே அவர்களிடம் வந்துவிட்டால், அறிவுரையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த வாய்ப்புதான் எஞ்சி இருக்கப்போகிறது?
47:18. எனவே, (நபியே! நிராகரிப்பவர்களான) அவர்கள், மறுமையை_அது தங்களிடம் திடீரென வருவதைத் தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? (ஏனென்றால்,) அதன் அடையாளங்கள் திட்டமாக வந்துவிட்டன, அவர்களுக்கு (மறுமை நாளான) அது வந்து விட்டால் அவர்கள் (அல்லாஹ்வின் வழிபாட்டை உலகில் மறந்து விட்டதை) நினைவு கூர்தல் எங்ஙனம்? (பயனளிக்கும்.)
47:19
47:19 فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ‌ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰٮكُمْ‏
فَاعْلَمْ நன்கறிந்து கொள்வீராக! اَنَّهٗ நிச்சயமாக لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا اللّٰهُ அல்லாஹ்வைத் தவிர وَاسْتَغْفِرْ இன்னும் பாவமன்னிப்பு கோருவீராக! لِذَنْۢبِكَ உமது தவறுகளுக்காக وَلِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் وَ الْمُؤْمِنٰتِ‌ ؕ நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் وَاللّٰهُ يَعْلَمُ அல்லாஹ் நன்கறிவான் مُتَقَلَّبَكُمْ நீங்கள் சுற்றித்திரியும் இடங்களை(யும்) وَمَثْوٰٮكُمْ‏ நீங்கள் தங்குமிடங்களையும்
47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
47:19. (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, உமது தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (நம்பிக்கையாளர்களே!) உங்கள் நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.
47:19. (நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை. மேலும், உம் பிழைகளுக்காகவும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்களுக்காகவும் மன்னிப்புக் கேளும்! அல்லாஹ் உங்கள் செயல்பாடுகளையும் அறிகிறான்; உங்கள் தங்குமிடத்தையும் அறிகிறான்.
47:19. ஆகவே (நபியே!) நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை என்பதை நீர் அறிந்துகொள்வீராக! உம்முடைய பாவத்திற்காகவும், விசுவாசங்கொண்ட ஆண்களுக்காகவும், விசுவாசங்கொண்ட பெண்களுக்காகவும் பாவ மன்னிப்புக் கோருவீராக! இன்னும், (விசுவாசிகளே! பகலில்) உங்களுடைய செயல்பாட்டுக்குரிய இடத்தையும், (இரவில்) உங்கள் தங்குமிடத்தையும் அல்லாஹ் நன்கறிவான்.
47:20
47:20 وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ‌ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِيْهَا الْقِتَالُ‌ۙ رَاَيْتَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يَّنْظُرُوْنَ اِلَيْكَ نَظَرَ الْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ‌ؕ فَاَوْلٰى لَهُمْ‌ۚ‏
وَيَقُوْلُ கூறுகின்றார்(கள்) الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் لَوْلَا نُزِّلَتْ இறக்கப்பட வேண்டாமா سُوْرَةٌ ۚ ஓர் அத்தியாயம் فَاِذَاۤ اُنْزِلَتْ இறக்கப்பட்டால் سُوْرَةٌ ஓர் அத்தியாயம் مُّحْكَمَةٌ உறுதி செய்யப்பட்டது وَّذُكِرَ இன்னும் கூறப்பட்டது فِيْهَا அதில் الْقِتَالُ‌ۙ போர் رَاَيْتَ பார்ப்பீர் الَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் يَّنْظُرُوْنَ பார்ப்பார்கள் اِلَيْكَ உம் பக்கம் نَظَرَ பார்ப்பது போல் الْمَغْشِىِّ عَلَيْهِ மயக்கமுற்றவர்கள் مِنَ الْمَوْتِ‌ؕ மரண பயத்தால் فَاَوْلٰى ஆகவே لَهُمْ‌ۚ‏ அவர்களுக்கு
47:20. இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்: “(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?” என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.
47:20. நம்பிக்கை கொண்டவர்களிலும் பலர், (போரைப் பற்றி) ஒரு (தனி) அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகின்றனர். அவ்வாறே (தெளிவான) ஒரு திட்டமான அத்தியாயம் இறக்கப்பட்டு போர் செய்யுமாறு அதில் கூறப்பட்டிருந்தால், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்கள், மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்பவர் பார்ப்பதைப் போல் (நபியே!) உம்மை அவர்கள் நோக்குவார்கள். ஆகவே, அவர்களுக்குக் கேடுதான்.
47:20. “(போர் புரியும் படி ஆணையிடும்) ஓர் அத்தியாயம் எதுவும் ஏன் இறக்கியருளப்படுவதில்லை?” என்று இறைநம்பிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், போர் பற்றிக் கூறப்பட்ட உறுதியான ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டபோது, உள்ளங்களில் பிணி இருந்தவர்கள் மரணத்தால் சூழப்பட்டவன் பார்ப்பதைப் போன்று உம்மைப் பார்த்ததை நீர் கண்டீர்! அந்தோ, அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியதுதான்.
47:20. மேலும், விசுவாசங்கொண்டவர்கள் (போர்செய்வது பற்றி) யாதொரு (தனி) அத்தியாயம் இறக்கிவைக்கபடவேண்டாமா? என்று கூறுகிறார்கள், (அவ்வாறே) ஒரு தீர்க்கமான அத்தியாயம் இறக்கிவைக்கப்பட்டு, அதில் போர் (செய்வது) பற்றிக் கூறப்பட்டிருந்தால், தங்களுடைய இதயங்களில் நோய் இருகின்றதே அத்தகையோர் மரண அவஸ்தையில் சிக்கி மயங்கிக் கிடப்போர் பார்ப்பதைப்போல், (நபியே!) உம்மை அவர்கள் பார்ப்பதை நீர் காண்பீர்! ஆகவே, (அவர்களை அழிக்கக் கூடியது) அவர்களுக்கு நெருங்கிவிட்டது.
47:21
47:21 طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌ‌ فَاِذَا عَزَمَ الْاَمْرُ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَـكَانَ خَيْرًا لَّهُمْ‌ۚ‏
طَاعَةٌ கீழ்ப்படிவது(ம்) وَّقَوْلٌ பேசுவதும்(தான்) مَّعْرُوْفٌ‌ நேர்மையாக فَاِذَا عَزَمَ உறுதியாகிவிட்டால் الْاَمْرُ கட்டளை فَلَوْ صَدَقُوا அவர்கள் உண்மையாக நடந்திருந்தால் اللّٰهَ அல்லாஹ்வுடன் لَـكَانَ இருக்கும் خَيْرًا சிறந்ததாக لَّهُمْ‌ۚ‏ அவர்களுக்கு
47:21. (ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
47:21. (நபியே! உமக்கு) கீழ்ப்படிந்து நடப்பதும், (உம்மிடம் எதைக் கூறியபோதிலும்) உண்மையைச் சொல்வதும்தான் அவர்களுக்கு நன்று. ஆகவே, (போரைப் பற்றி) ஒரு காரியம் முடிவாகிவிட்ட பின்னர், அல்லாஹ்வுக்கு (அவர்கள்) உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்குத்தான் நன்மையாக இருக்கும்.
47:21. ‘கீழ்ப்படிந்தோம்’ என்று ஒப்புக்கொள்வதும், நல்ல நல்ல சொற்கள் பேசுவதும் (அவர்களின் உதட்டளவில்தான் உள்ளன!) திட்டவட்டமான கட்டளை கொடுக்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையானவர்களாய் அவர்கள் நடந்திருந்தால், அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும்.
47:21. (நபியே! உமக்குக்) கீழ்ப்பட்டு நடப்பதும், (உம்மிடம் எதைக் கூறிய போதிலும்) கண்ணியமாகப் பேசுவதும் தாம் (அவர்களுக்கு நன்று), ஆகவே, (போர் செய்வது பற்றிய) காரியம் உறுதியாகிவிட்டால், அப்போது அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்துகொண்டால், அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
47:22
47:22 فَهَلْ عَسَيْتُمْ اِنْ تَوَلَّيْتُمْ اَنْ تُفْسِدُوْا فِى الْاَرْضِ وَتُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ‏
فَهَلْ عَسَيْتُمْ நீங்கள் குழப்பம் செய்வீர்கள்தானே! اِنْ تَوَلَّيْتُمْ நீங்கள்விலகிவிட்டால் اَنْ تُفْسِدُوْا குழப்பம் செய்வீர்கள் فِى الْاَرْضِ பூமியில் وَتُقَطِّعُوْۤا இன்னும் துண்டித்து விடுவீர்கள் اَرْحَامَكُمْ‏ உங்கள் இரத்த உறவுகளை
47:22. (போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?
47:22. (நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராது) விலகிக் கொண்டதன் பின்னர், நீங்கள் பூமியில் சென்று விஷமம் (கலகம்) செய்து உங்கள் இரத்த உறவுகளை துண்டித்துவிடப் பார்க்கிறீர்களா?
47:22. இனி இது தவிர வேறெதையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா? நீங்கள் பின்வாங்கிச் செல்வீர்களாயின் பூமியில் நீங்கள் மீண்டும் அராஜகம் விளைவிப்பீர்கள் என்பதையும் மேலும், நீங்கள் பரஸ்பரம் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடுவீர்கள் என்பதையும் தவிர!
47:22. நீங்கள் (அல்லாஹ்வின் வேதத்திற்கு கீழ்ப்படிவதை விட்டும்) புறக்கணித்து விடுவீர்களாயின், பூமியில் (இரத்தத்தை ஓட்டி) விஷமம் செய்யவும், இரத்த பந்தத்தில் உங்களது சுற்றத்தாரைத் துண்டித்துவிடவும் முனைவீர்களா?
47:23
47:23 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰٓى اَبْصَارَهُمْ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَعَنَهُمُ அவர்களை சபித்தான் اللّٰهُ அல்லாஹ் فَاَصَمَّهُمْ செவிடாக்கி விட்டான் وَاَعْمٰٓى இன்னும் குருடாக்கி விட்டான் اَبْصَارَهُمْ‏ அவர்களின் பார்வைகளை
47:23. இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
47:23. இத்தகையவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வையையும் போக்கி குருடர்களாக்கி விட்டான்.
47:23. இத்தகையோரை அல்லாஹ் சபித்துவிட்டான். மேலும், அவர்களைச் செவிடர்களாயும், குருடர்களாயும் ஆக்கி விட்டான்.
47:23. அவர்கள்_எத்தகையோரென்றால் அவர்களை அல்லாஹ் சபித்து, அவர்களை செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் (போக்கிக்) குருடாக்கி விட்டான்.
47:24
47:24 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏
اَفَلَا يَتَدَبَّرُوْنَ அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? الْقُرْاٰنَ குர்ஆனை اَمْ ? عَلٰى قُلُوْبٍ உள்ளங்கள் மீது اَ قْفَالُهَا‏ அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?
47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
47:24. அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது, அவர்களுடைய உள்ளங்கள் மீது தாளிடப்பட்டு விட்டதா?
47:24. இவர்கள் குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா?
47:24. அவர்கள் இந்தக் குர் ஆனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்கள் மீது அவற்றிற்குரிய பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?
47:25
47:25 اِنَّ الَّذِيْنَ ارْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى‌ۙ الشَّيْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ وَاَمْلٰى لَهُمْ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ ارْتَدُّوْا திரும்பிச் عَلٰٓى اَدْبَارِهِمْ தங்களது பின் புறங்களின் மீதே مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ தெளிவானதற்குப் பின்னர் لَهُمُ சென்றவர்கள் தங்களுக்கு الْهُدَى‌ۙ நேர்வழி الشَّيْطٰنُ ஷைத்தான் سَوَّلَ அலங்கரித்துவிட்டான் لَهُمْ ؕ அவர்களுக்கு وَاَمْلٰى விட்டு வைத்துள்ளான் لَهُمْ‏ அவர்களை
47:25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
47:25. நிச்சயமாக எவர்களுக்கு நேரான வழி இன்னதென்று தெளிவானதன் பின்னரும், அவர்கள் (அதன்மீது செல்லாது) தங்கள் பின்புறமே திரும்பிச் சென்று விட்டார்களோ, அவர்களை ஷைத்தான் மயக்கி விட்டான். மேலும், அவர்களுடைய தப்பெண்ணங்களையும் விரிவாக்கி, அவர்களுக்கு அவற்றை அழகாக்கியும் விட்டான்.
47:25. உண்மையாதெனில், எவர்கள் தங்களுக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னர் அதனைப் புறக்கணித்துச் சென்று விட்டார்களோ, அவர்களுக்கு ஷைத்தான் இந்த நடத்தையை இலகுவாக்கி விட்டான். மேலும், அவர்களுக்காக பொய்யான எதிர்பார்ப்புகளின் ஒரு படலத்தை நீட்டிக் கொண்டே போகின்றான்.
47:25. நிச்சயமாக நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவான பின்னர் (அதை விட்டும் புறக்கணித்துத்) தங்கள் பின் புறங்களின் மீது திரும்பிச் சென்றுவிட்டார்களே அத்தகையோர்_(அவர்களது செயல்களை) ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக்காட்டி, அவர்களுக்கு (வீணான ஆசைகளை) நீட்டியும் விட்டான்.
47:26
47:26 ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِيْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِيْعُكُمْ فِىْ بَعْضِ الْاَمْرِ ۖۚ وَاللّٰهُ يَعْلَمُ اِسْرَارَهُمْ‏
ذٰلِكَ இது بِاَنَّهُمْ ஏனெனில், நிச்சயமாக قَالُوْا கூறினார்கள் لِلَّذِيْنَ كَرِهُوْا வெறுத்தவர்களிடம் مَا எதை نَزَّلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் سَنُطِيْعُكُمْ உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம் فِىْ بَعْضِ الْاَمْرِ ۖۚ சில விஷங்களில் وَاللّٰهُ يَعْلَمُ அல்லாஹ் நன்கறிவான் اِسْرَارَهُمْ‏ இவர்கள் தங்களுக்குள் பேசுவதை
47:26. இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
47:26. இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ் இறக்கிய (இந்த வேதத்)தை வெறுப்பவர்(களாகிய யூதர்)களை நோக்கி ‘‘நாங்கள் சில விஷயங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்'' என்று (இரகசியமாகக்) கூறுகின்றனர். இவர்களுடைய இரகசியங்களை அல்லாஹ் நன்கறிவான்.
47:26. ஆகவேதான், அல்லாஹ் இறக்கியருளிய மார்க்கத்தை வெறுப்பவர்களிடம் அவர்கள் கூறிவிட்டார்கள், “சில விவகாரங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று! அல்லாஹ் அவர்களின் இந்த இரகசியப் பேச்சுகளை நன்கு அறிகின்றான்.
47:26. இது, (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் இறக்கிவைத்த (இவ்வேதத்)தை வெறுத்துக் கொண்டிருந்தோர்(களாகிய யூதர்) களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்” என்று (இரகசியமாகக்) கூறியதனாலாகும், மேலும், அல்லாஹ் அவர்கள் மறைத்திருப்பவற்றை நன்கறிவான்.
47:27
47:27 فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ‏
فَكَيْفَ எப்படி اِذَا تَوَفَّتْهُمُ அவர்களை உயிர் வாங்கும்போது الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يَضْرِبُوْنَ அடிப்பார்கள் وُجُوْهَهُمْ அவர்களின் முகங்களை(யும்) وَاَدْبَارَهُمْ‏ அவர்களின் பின் புறங்களையும்
47:27. ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,
47:27. இவர்கள் (சாகும்பொழுது) உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் இவர்களுடைய முகத்திலும், முதுகிலும் பலமாக அடி(ப்பார்கள். அவர்கள் அடி)க்கும்பொழுது இவர்களுடைய நிலைமை எவ்வாறிருக்கும்!
47:27. பின்னர் அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டு செல்லும்போது நிலைமை எப்படியிருக்கும்?
47:27. எனவே, அவர்களுடைய முகங்கள் மீதும், அவர்களின் முதுகுகளின் மீதும் அடித்து (உயிரைக் கைப்பற்றும்) மலக்குகள், அவர்களை மரணமடையச் செய்யும் பொது (அவர்களின் நிலை) எவ்வாறிருக்கும்?
47:28
47:28 ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ‏
ذٰلِكَ இது بِاَنَّهُمُ ஏனெனில், நிச்சயமாக அவர்கள் اتَّبَعُوْا பின்பற்றினார்கள் مَاۤ اَسْخَطَ கோபமூட்டியதை اللّٰهَ அல்லாஹ்விற்கு وَكَرِهُوْا இன்னும் வெறுத்தார்கள் رِضْوَانَهٗ அவனது பொருத்தத்தை فَاَحْبَطَ ஆகவே, வீணாக்கி விட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:28. இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.
47:28. இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோப மூட்டக் கூடியவற்றையே பின்பற்றி, அவனுக்குத் திருப்தித்தரக்கூடியவற்றை வெறுத்து வந்தனர். ஆதலால், இவர்களுடைய நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்துவிட்டான்.
47:28. அதற்குக் காரணம், அல்லாஹ்வுக்குக் கோபமூட்டும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்றியதும், அவனது உவப்பைப் பெறும் பாதையை அவர்கள் விரும்பாததும்தான். இதனால், அவர்களின் செயல்கள் அனைத்தையும் அவன் வீணாக்கிவிட்டான்.
47:28. இது, (ஏனெனில்) அல்லாஹ்விற்கு கோபமூட்டக்கூடியதை இவர்கள் பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தும் வந்தனர் என்ற காரணத்தினாலாகும், ஆதலால், அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்வாகிய) அவன் அழித்துவிட்டான்.
47:29
47:29 اَمْ حَسِبَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ يُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ‏
اَمْ حَسِبَ எண்ணிக் கொண்டார்களா الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ தங்களதுஉள்ளங்களில் مَّرَضٌ நோய் اَنْ لَّنْ يُّخْرِجَ வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று اللّٰهُ அல்லாஹ் اَضْغَانَهُمْ‏ அவர்களின் குரோதங்களை
47:29. அல்லது: எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?
47:29. எவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகமென்னும்) நோய் இருக்கிறதோ அவர்கள், தங்கள் சூழ்ச்சிகளை அல்லாஹ் வெளிப்படுத்திவிட மாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
47:29. எவர்களுடைய உள்ளங்களில் பிணி இருக்கிறதோ அவர்கள், தங்கள் உள்ளங்களில் உள்ள குரோதங்களை அல்லாஹ் வெளிப்படுத்தமாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்களா, என்ன?
47:29. தம் இதயங்களில் (வஞ்சக) நோய் இருக்கின்றதே அத்தகையவர்கள்_அவர்களுடைய கடும் பொறாமைகளை அல்லாஹ் வெளிப்படுதிவிடவே மாட்டான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனரா?
47:30
47:30 وَلَوْ نَشَآءُ لَاَرَيْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيْمٰهُمْ‌ؕ وَلَتَعْرِفَنَّهُمْ فِىْ لَحْنِ الْقَوْلِ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ اَعْمَالَكُمْ‏
وَلَوْ نَشَآءُ நாம் நாடினால் لَاَرَيْنٰكَهُمْ அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம் فَلَعَرَفْتَهُمْ அவர்களை நீர் அறிந்து கொள்வீர் بِسِيْمٰهُمْ‌ؕ அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால் وَلَتَعْرِفَنَّهُمْ இன்னும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர் فِىْ لَحْنِ الْقَوْلِ‌ؕ அவர்களின் பேச்சின் தொனியிலும் وَاللّٰهُ يَعْلَمُ அல்லாஹ் நன்கறிவான் اَعْمَالَكُمْ‏ உங்கள் செயல்களை
47:30. அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்கள் செய்கைகளை நன்கறிகிறான்.
47:30. (நபியே!) நாம் விரும்பினால், அவர்களை உமக்கு காட்டிக் கொடுத்து விடுவோம். (அப்போது) அவர்களுடைய முகக்குறியைக் கொண்டே நீரும் அவர்களை அறிந்து கொள்வீர். அவர்களுடைய தந்திரமான பேச்சின் போக்கைக் கொண்டும் நீர் அவர்களை நிச்சயமாக அறிந்து கொள்வீர். (நயவஞ்சகர்களே!) அல்லாஹ் உங்கள் செயல்களை நன்கறிவான்.
47:30. நாம் விரும்பினால் அவர்களை உமக்குக் கண் கூடாய்க் காட்டித் தந்திருப்போம். அப்போது, அவர்களின் முக அடையாளங்கள் மூலம் நீர் அவர்களை அறிந்துகொள்வீர். ஏன், அவர்கள் பேசும் தொனியிலிருந்தும் அவர்களை நீர் அறிந்துகொள்வீர். அல்லாஹ் உங்கள் அனைவரின் செயல்களையும் நன்கு அறிந்திருக்கின்றான்.
47:30. மேலும் (நபியே!) நாம் நாடினால், அவர்களை உமக்குக் காண்பித்து விடுவோம், அப்பொழுது அவர்களுடைய (முக) அடையாளத்தைக் கொண்டே நீர் அவர்களை திட்டமாக அறிந்துகொள்வீர், மேலும், (சூழ்ச்சியான) பேச்சின் தொனியில் திட்டமாக அவர்களை நீர் அறிந்து கொள்வீர், அல்லாஹ் உங்களுடைய செயல்களையும் நன்கறிவான்.
47:31
47:31 وَلَـنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَ ۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ‏
وَلَـنَبْلُوَنَّكُمْ நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம் حَتّٰى نَعْلَمَ நாம் அறிகின்றவரை الْمُجٰهِدِيْنَ ஜிஹாது செய்பவர்களை مِنْكُمْ உங்களில் وَالصّٰبِرِيْنَ ۙ பொறுமையாளர்களையும் وَنَبْلُوَا۟ இன்னும் நாம் சோதிப்போம் اَخْبَارَكُمْ‏ உங்கள் செய்திகளை
47:31. அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
47:31. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனமொப்பி) போர் புரிபவர்கள் எவர்கள் என்பதையும், (போரில் ஏற்படும்) சிரமங்களை (உறுதியாக) சகித்திருப்பவர்கள் எவர்கள் என்பதையும் நாம் அறிந்து வெளிப்படுத்தும் வரை, உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம்.
47:31. நாம் உங்களை நிச்சயமாகச் சோதனைக்குள்ளாக்குவோம் உங்கள் நிலைமைகளைப் பரிசீலித்து உங்களில் யார் முஜாஹிதுகள் போராளிகள், நிலைகுலையாது துணிச்சலுடன் இருப்பவர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக!
47:31. அன்றியும் (விசுவாசிகளே!) உங்களில் அறப்போர் புரிவோரையும், பொறுமையாளர்களையும் நாம் அறிந்து (அறிவித்து) விடும் வரை, உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம், இன்னும், உங்களுடைய செய்திகளையும் நிச்சயமாக நாம் வெளிப்படுத்துவோம்.
47:32
47:32 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدٰىۙ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ؕ وَسَيُحْبِطُ اَعْمَالَهُمْ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَصَدُّوْا இன்னும் தடுத்தார்கள் عَنْ سَبِيْلِ பாதையில் இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் وَشَآقُّوا இன்னும் மாறுசெய்தார்கள் الرَّسُوْلَ தூதருக்கு مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ தெளிவானதற்குப் பின்னர் لَهُمُ தங்களுக்கு الْهُدٰىۙ நேர்வழி لَنْ يَّضُرُّوا அறவே அவர்கள் தீங்கு செய்ய முடியாது اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا ؕ எதையும் وَسَيُحْبِطُ இன்னும் வீணாக்கி விடுவான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:32. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது; அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
47:32. நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கிறார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான்.
47:32. எவர்கள் நேரியவழி தங்களுக்குத் தெளிவாகி விட்ட பிறகு நிராகரிக்கவும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கவும், தூதரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்களோ, அவர்களால் உண்மையில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் இழைத்திட முடியாது. மாறாக, அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் பாழாக்கி விடுவான்.
47:32. நிச்சயமாக நேர்வழி இன்னதென்று தங்களுக்குத் தெளிவான பின்னர், (அதனை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மற்றவர்களைத்) தடுத்துக் கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாகவும் நடக்கின்றார்களே அத்தகையோர்_(அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிடவேமாட்டார்கள், அவர்களுடைய (சூழ்ச்சியான) செயல்களை (எல்லாம்) அல்லாஹ் அழித்தும் விடுவான்.
47:33
47:33 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கு وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள்! الرَّسُوْلَ தூதருக்கு وَلَا تُبْطِلُوْۤا வீணாக்காதீர்கள்! اَعْمَالَـكُمْ‏ உங்கள் அமல்களை
47:33. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
47:33. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள், அவனுடைய தூதருக்கு கீழ்ப்படியுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்கள் நன்மைகளை நீங்கள் வீணாக்கிவிடாதீர்கள்.
47:33. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும், உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள்.
47:33. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், இன்னும், (அவனுடைய) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள், (மாறுசெய்து) உங்களுடைய செயல்களை நீங்கள் வீணாக்கியும் விடாதீர்கள்.
47:34
47:34 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَصَدُّوْا இன்னும் தடுத்தார்கள் عَنْ سَبِيْلِ பாதையில் இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ مَاتُوْا பிறகு மரணித்தார்கள் وَهُمْ தாங்கள் இருக்கின்ற நிலையில் كُفَّارٌ நிராகரிப்பாளர்களாக فَلَنْ يَّغْفِرَ மன்னிக்கவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ‏ அவர்களை
47:34. நிச்சயமாக, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
47:34. எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (மக்களைத்) தடுத்துக் கொண்டு, நிராகரித்த வண்ணமே இறந்துவிடுகிறார்களோ, அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் ஒரு காலத்திலும் மன்னிப்பதே இல்லை.
47:34. எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து, அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.
47:34. நிச்சயமாக நிராகரித்து விட்டு, அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் (பிறர் செல்வதைத்) தடுத்து, பின்னர் அவர்கள் நிராகரித்தவர்களாக இருக்க மரணித்து விடுகின்றார்களே அத்தகையோர்_ அவர்(களுடைய குற்றங்)களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
47:35
47:35 فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَى السَّلْمِ‌ۖ وَاَنْـتُمُ الْاَعْلَوْنَ‌ۖ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ يَّتِـرَكُمْ اَعْمَالَـكُمْ‏
فَلَا تَهِنُوْا பலவீனப்படாதீர்கள் وَتَدْعُوْۤا அழைத்து விடாதீர்கள்! اِلَى السَّلْمِ‌ۖ சமாதானத்திற்கு وَاَنْـتُمُ நீங்கள்தான் الْاَعْلَوْنَ‌ۖ மிக உயர்வானவர்கள் وَاللّٰهُ அல்லாஹ் مَعَكُمْ உங்களுடன் இருக்கின்றான் وَلَنْ يَّتِـرَكُمْ உங்களுக்கு குறைக்கவேமாட்டான் اَعْمَالَـكُمْ‏ உங்கள் அமல்களை
47:35. (முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
47:35. (நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியம் இழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கிறான். உங்கள் நன்மைகளில் ஒன்றையும் அவன் உங்களுக்கு குறைத்துவிட மாட்டான்.
47:35. எனவே, நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள். மேலும், சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்! அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். மேலும், உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான்.
47:35. (விசுவாசிகளே!) நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள்: இன்னும் (முன்கூட்டி) சமாதானத்தை கோராதீர்கள், இன்னும் நீங்கள் தாம் மிக உயர்ந்தவர்கள், அல்லாஹ்வோ உங்களுடன் இருக்கின்றான், மேலும், உங்களுடைய செயல்களை (அவற்றின் நற்கூலியை) அவன் குறைத்துவிடவேமாட்டான்.
47:36
47:36 اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا يُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا يَسْـٴَـــلْكُمْ اَمْوَالَكُمْ‏
اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا உலக வாழ்க்கை எல்லாம் لَعِبٌ விளையாட்டு(ம்) وَّلَهْوٌ‌ ؕ வேடிக்கையும்தான் وَاِنْ تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொண்டால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சி நடந்தால் يُؤْتِكُمْ அவன் உங்களுக்கு கொடுப்பான் اُجُوْرَكُمْ உங்கள் கூலிகளை وَلَا يَسْـٴَـــلْكُمْ அவன் உங்களிடம் கேட்கமாட்டான் اَمْوَالَكُمْ‏ உங்கள்செல்வங்களை
47:36. திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது; ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
47:36. இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும் வேடிக்கையும்தான். நீங்கள் மெய்யாகவே நம்பிக்கைகொண்டு அவனுக்குப் பயந்து நடந்துகொண்டால், உங்கள் நற்கூலிகளை உங்களுக்கு வழங்குவான்.உங்கள் பொருள்களை அவன் (தனக்காக) உங்களிடம் கேட்கவில்லை. (நன்மைக்காகவே கேட்கிறான்.)
47:36. இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தின்படி வாழ்வீர்களாயின், உங்களுக்குரிய கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான்.
47:36. நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையாட்டும், வீணுமேயாகும்! மேலும், நீங்கள் விசுவாசங்கொண்டு, (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் (நடந்து) கொண்டால் உங்களுடைய கூலிகளை அவன் உங்களுக்குக் கொடுப்பான், உங்களுடைய செல்வங்களை அவன் (தனக்காக) உங்களிடம் கேட்கவும் மாட்டான்.
47:37
47:37 اِنْ يَّسْــٴَـــلْكُمُوْهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوْا وَيُخْرِجْ اَضْغَانَكُمْ
اِنْ يَّسْــٴَـــلْكُمُوْهَا அவன் அவற்றை உங்களிடம் கேட்டால் فَيُحْفِكُمْ இன்னும் அவன் உங்களை வலியுறுத்தினால் تَبْخَلُوْا நீங்கள் கருமித்தனம் செய்வீர்கள் وَيُخْرِجْ இன்னும் வெளிப்படுத்தி காண்பித்து விடுவான் اَضْغَانَكُمْ உங்கள் குரோதங்களை
47:37. அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி விடுவான்.
47:37. அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்கள் கெட்ட எண்ணங்களை வெளியாக்கி விடுவான்.
47:37. ஒருவேளை உங்கள் செல்வங்களை உங்களிடமிருந்து அவன் கேட்டால், மேலும் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; அது நீங்கள் கொண்டிருக்கும் குரோதங்களை வெளிக்கொணரும்.
47:37. அவ்வாறு, அவன் உங்களிடம் அதனைக் கேட்டுப் பின்னர் உங்களை அவன் வற்புறுத்தினாலும், (அதனைக் கொடுக்காது) நீங்கள் உலோபத்தனம் செய்வீர்கள், (அந்நேரத்தில்) அவன், உங்களுடைய கபடங்களை வெளியாக்கியும்விடுவான்.
47:38
47:38 هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌ۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ‌ ۚ وَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّـفْسِهٖ‌ ؕ وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ ‌ۚ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم‏
هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ நீங்கள்தான் تُدْعَوْنَ அழைக்கப்படுகிறீர்கள் لِتُنْفِقُوْا நீங்கள் தர்மம் செய்வதற்கு فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ ۚ அல்லாஹ்வின் فَمِنْكُمْ உங்களில் இருக்கின்றார் مَّنْ يَّبْخَلُ ۚ கருமித்தனம் செய்பவரும் وَمَنْ يَّبْخَلْ எவர் கருமித்தனம் செய்வாரோ فَاِنَّمَا يَبْخَلُ அவர் கருமித்தனம் செய்வதெல்லாம் عَنْ نَّـفْسِهٖ‌ ؕ அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான் وَاللّٰهُ அல்லாஹ்தான் الْغَنِىُّ முற்றிலும் நிறைவானவன் وَاَنْـتُمُ நீங்கள்தான் الْفُقَرَآءُ ۚ தேவையுள்ளவர்கள் وَاِنْ تَتَوَلَّوْا நீங்கள் விலகிச்சென்றால் يَسْتَـبْدِلْ அவன் மாற்றுவான் قَوْمًا ஒரு சமுதாயத்தை غَيْرَكُمْ ۙ நீங்கள் அல்லாத ثُمَّ பிறகு لَا يَكُوْنُوْۤا அவர்கள் இருக்க மாட்டார்கள் اَمْثَالَـكُم‏ உங்களைப் போன்று
47:38. அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
47:38. (மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கிறார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். (அவனுடைய கட்டளைகளை) இன்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.
47:38. இதோ! (பாருங்கள்:) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் என்று, உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுகின்ற சிலர் உங்களில் இருக்கின்றனர். ஆனால், யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் உண்மையில் தன் விஷயத்திலேயே கஞ்சத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள்தாம் (அவன் பக்கம்) தேவையுடையோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் புறக்கணித்துவிட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.
47:38. (மனிதர்களே!) அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள்தான் அவர்கள், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காக நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள், அப்பொழுது உலோபத்தனம் செய்வோரும் உங்களில் இருக்கின்றனர், மேலும், எவர் உலோபத்தனம் செய்கிறாரோ, அவர் உலோபத்தனம் செய்வதெல்லாம் அவர் தனக்கே (கேடாகத்) தான், இன்னும், அல்லாஹ் (தேவையற்ற) சீமான், நீங்களோ தேவையுடைவர்கள், மேலும், (அவனுடைய கட்டளைகளை) நீங்கள் புறக்கணிப்பீர்களானால், (உங்களை அழித்து) உங்களையல்லாத (வேறு) சமூகத்தாரை (உங்கள் இடத்தில்) அவன் மாற்றி விடுவான், பின்னர், அவர்கள் உங்களைப் போன்றோராக இருக்கமாட்டார்கள்.