56. ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
மக்கீ, வசனங்கள்: 96

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
56:1
56:1 اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏
اِذَا وَقَعَتِ நிகழ்ந்து விட்டால் الْوَاقِعَةُ ۙ‏ நிகழக்கூடிய மறுமை
56:1. மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் -
56:1. (யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்,
56:1. நிகழவேண்டிய அந்நிகழ்ச்சி நிகழ்ந்து விடும் போது,
56:1. நிகழக்கூடிய (இறுதிநாளான)து நிகழ்ந்து விடுமானால்_
56:2
56:2 لَيْسَ لِـوَقْعَتِهَا كَاذِبَةٌ‌ ۘ‏
لَيْسَ முடியாது لِـوَقْعَتِهَا அது நிகழ்வதை كَاذِبَةٌ‌ ۘ‏ பொய்ப்பிக்க
56:2. அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:2. அதை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை.
56:2. அது நிகழ்வதைப் பொய்யெனக் கூறுபவர் எவரும் இருக்கமாட்டார்.
56:2. அது நிகழ்வதைப் பொய்யாக்கக்கூடியது (எதுவும்) இல்லை.
56:3
56:3 خَافِضَةٌ رَّافِعَةٌ ۙ‏
خَافِضَةٌ தாழ்த்தக்கூடியது رَّافِعَةٌ ۙ‏ உயர்த்தக்கூடியது
56:3. அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்; (நல்லோரை) உயர்த்தி விடும்.
56:3. அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும்.
56:3. அது தலைகீழாகப் புரட்டக்கூடிய ஆபத்தாயிருக்கும்.
56:3. அது (தீயோரைத்) தாழ்த்தி, (நல்லோரை) உயர்த்திவிடக் கூடியது.
56:4
56:4 اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۙ‏
اِذَا رُجَّتِ குலுக்கப்பட்டால் الْاَرْضُ பூமி رَجًّا ۙ‏ பலமாக
56:4. பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
56:4. (அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு,
56:4. அந்நேரம் பூமி ஒரே உலுக்காக உலுக்கப்படும்.
56:4. பூமி, மிக பலமான அசைவாக அசைக்கப்பட்டால்,
56:5
56:5 وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۙ‏
وَّبُسَّتِ தூளாக ஆக்கப்பட்டால் الْجِبَالُ மலைகள் بَسًّا ۙ‏ தூள்
56:5. இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
56:5. மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்து விடும்.
56:5. மேலும், மலைகள் பொடிப் பொடியாக்கப்பட்டு ;
56:5. இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டுவிட்டால்,
56:6
56:6 فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَـثًّا ۙ‏
فَكَانَتْ ஆகிவிடும் هَبَآءً ஒளிக் கதிர்களைப் போல் مُّنْۢبَـثًّا ۙ‏ பரவுகின்ற(து)
56:6. பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
56:6. அவை (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்.
56:6. பரத்தப்பட்ட புழுதியாகிவிடும்!
56:6. அப்போது அவைகள் பரத்தப்பட்ட புழுதிகளாக ஆகிவிடும் (அந்நாளில்),
56:7
56:7 وَّكُنْـتُمْ اَزْوَاجًا ثَلٰـثَـةً ؕ‏
وَّكُنْـتُمْ நீங்கள் ஆகிவிடுவீர்கள் اَزْوَاجًا வகையினராக ثَلٰـثَـةً ؕ‏ மூன்று
56:7. (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
56:7. (அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.
56:7. அப்போது நீங்கள் மூன்று குழுவினராய்ப் பிரிந்துவிடுவீர்கள்.
56:7. நீங்களும் மூன்று வகையினர்களாக ஆகி விடுவீர்கள்.
56:8
56:8 فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ۙ مَاۤ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏
فَاَصْحٰبُ الْمَيْمَنَةِ ۙ அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! مَاۤ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏ யார்? அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
56:8. (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:8. (முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.)
56:8. வலப்பக்கத்தார்! வலப்பக்கத்தாருடைய (நற்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
56:8. (முதலாம் வகையினர்) வலப்பக்கத்தார்_வலப்பக்கத்தாரின் தன்மை என்ன?
56:9
56:9 وَاَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ۙ مَاۤ اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِؕ‏
وَاَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ۙ துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! مَاۤ اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِؕ‏ துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?
56:9. (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
56:9. (இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத்திலுள்ள (இ)வர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.)
56:9. மேலும், இடப்பக்கத்தார்! இடப்பக்கத்தாருடைய (துர்ப்பாக்கிய) நிலைமையை என்னவென்றுரைப்பது!
56:9. (இரண்டாம் வகையினர்) இடப்பக்கத்தார்_இடப்பக்கத்தாரின் தன்மை என்ன?
56:10
56:10 وَالسّٰبِقُوْنَ السّٰبِقُوْنَۚ  ۙ‏
وَالسّٰبِقُوْنَ முந்தியவர்கள்தான் السّٰبِقُوْنَۚ ۙ‏ முந்தியவர்கள்
56:10. (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
56:10. (மூன்றாவது:) முன்சென்று விட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற அனைவரையும்விட) முன்சென்று விட்டவர்கள்.
56:10. மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே!
56:10. (மூன்றாம் வகையினர் நம்பிக்கைக் கொள்வதில்) முந்திக் கொண்டவர்கள், (இவர்கள் சுவனத்தின்பால்) முந்திக் கொண்டவர்களாவர்.
56:11
56:11 اُولٰٓٮِٕكَ الْمُقَرَّبُوْنَ‌ۚ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الْمُقَرَّبُوْنَ‌ۚ‏ மிக நெருக்கமானவர்கள்
56:11. இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:11. இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்.
56:11. அவர்கள்தாம் நெருக்கமானவர்கள்.
56:11. இவர்கள் தாம் (தங்கள் இரட்சகன் பக்கம் மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்கள்.
56:12
56:12 فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏
فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِ‏ இன்பங்கள் நிறைந்த
56:12. இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
56:12. இவர்கள் இன்பம் தரும் சொர்க்கங்களில் இருப்பார்கள்.
56:12. அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில் இருப்பார்கள்.
56:12. அருட்கொடைகளுள்ள சுவனபதிகளில் (இக்கூட்டத்தினர் இருப்பர்.)
56:13
56:13 ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏
ثُلَّةٌ அதிகமானவர்கள் مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ முந்தியவர்களில்
56:13. முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
56:13. (இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,
56:13. முன்னோரில் நிறையப் பேரும்
56:13. (இவற்றில்) முன்னவர்களில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,
56:14
56:14 وَقَلِيْلٌ مِّنَ الْاٰخِرِيْنَؕ‏
وَقَلِيْلٌ இன்னும் குறைவானவர்கள் مِّنَ الْاٰخِرِيْنَؕ‏ பின்னோரில்
56:14. பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
56:14. பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்.
56:14. பின்னோரில் ஒரு சிலரும் இருப்பார்கள்.
56:14. பின்னுள்ளோரில் ஒரு சொற்பத் தொகையினரும்_
56:15
56:15 عَلٰى سُرُرٍ مَّوْضُوْنَةٍۙ‏
عَلٰى سُرُرٍ கட்டில்களின் மீது مَّوْضُوْنَةٍۙ‏ ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட(து)
56:15. (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
56:15. பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது,
56:15. தங்க இழைகளால் நெய்யப்பட்ட இருக்கைகளில்
56:15. பொன்னிழைகளால் ஆக்கப்பட்ட உன்னதக் கட்டில்கள் மீது இருப்பார்கள்.
56:16
56:16 مُّتَّكِـــِٕيْنَ عَلَيْهَا مُتَقٰبِلِيْنَ‏
مُّتَّكِـــِٕيْنَ சாய்ந்தவர்களாக عَلَيْهَا அவற்றின் மீது مُتَقٰبِلِيْنَ‏ ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
56:16. ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:16. ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
56:16. எதிரெதிரே சாய்ந்திருப்பார்கள்.
56:16. ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
56:17
56:17 يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۙ‏
يَطُوْفُ சுற்றி வருவார்கள் عَلَيْهِمْ அவர்கள் மீது وِلْدَانٌ சிறுவர்கள் مُّخَلَّدُوْنَۙ‏ நிரந்தரமான(வர்கள்)
56:17. நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
56:17. என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்;
56:17. அவர்களின் அவைகளில் நிரந்தரச் சிறுவர்கள்
56:17. என்றும் நிலையான (இளமையுடையோராக இருக்கும்) சிறுவர்கள், (பணிபுரிய) இவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
56:18
56:18 بِاَكْوَابٍ وَّاَبَارِيْقَ ۙ وَكَاْسٍ مِّنْ مَّعِيْنٍۙ‏
بِاَكْوَابٍ குவளைகளுடனும் وَّاَبَارِيْقَ ۙ கூஜாக்களுடனும் وَكَاْسٍ கிண்ணங்களுடனும் مِّنْ مَّعِيْنٍۙ‏ தூய்மையான மது நிறைந்த
56:18. தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
56:18. இன்பமான குடிபானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக்கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்).
56:18. மது ஓடுகின்ற ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும், பளிங்குக் கிண்ணங்களையும் ஏந்தியவாறு சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
56:18. தெளிவான (உயர்மது) பானத்திலிருந்து (நிரப்பப்பட்டு)ள்ள கிண்ணங்களையும் கெண்டிகளையும், குவளைகளையும் (தூக்கிக்) கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்).
56:19
56:19 لَّا يُصَدَّعُوْنَ عَنْهَا وَلَا يُنْزِفُوْنَۙ‏
لَّا يُصَدَّعُوْنَ عَنْهَا அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள்/ அதனால் وَلَا يُنْزِفُوْنَۙ‏ அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்
56:19. (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
56:19. (அக்குடிபானங்களால்) இவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது; அவர்களுடைய புத்தியும் மாறாது.
56:19. அவற்றை அருந்துவதால் அவர்களுக்குத் தலைச்சுற்றல் ஏற்படாது; அவர்களின் அறிவு பேதலிக்கவும் செய்யாது.
56:19. அ(ம் மதுவை அருந்துவ)தனால் தலைவலிக்குள்ளாகமாட்டார்கள், மதி மயக்கத்திற்கும் உள்ளாக மாட்டார்கள்,
56:20
56:20 وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُوْنَۙ‏
وَفَاكِهَةٍ பழங்களுடனும் مِّمَّا يَتَخَيَّرُوْنَۙ‏ அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற
56:20. இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
56:20. இவர்கள் பிரியப்பட்ட கனிவர்க்கங்களையும்,
56:20. அவர்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக அச்சிறுவர்கள் அவர்களுக்கு விதவிதமான, சுவையான கனிகளைப் பரிமாறுவார்கள்;
56:20. இவர்கள் (பிரியப்பட்டு) தேர்ந்தெடுக்கின்றவற்றிலிருந்து கனி(வர்க்கங்)களோடும்.
56:21
56:21 وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُوْنَؕ‏
وَلَحْمِ மாமிசங்களுடனும் طَيْرٍ பறவை مِّمَّا يَشْتَهُوْنَؕ‏ அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின்
56:21. விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
56:21. விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்).
56:21. மேலும், அவர்கள் விரும்புகின்ற பறவை இறைச்சியையும் உண்பதற்காக அளிப்பார்கள்.
56:21. அவர்கள் விரும்பக்கூடியவற்றிலிருந்து பட்சிகளின் மாமிசத்தோடும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவர்).
56:22
56:22 وَحُوْرٌ عِيْنٌۙ‏
وَحُوْرٌ வெண்மையான பெண்கள் عِيْنٌۙ‏ கண்ணழகிகளான
56:22. (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
56:22. (அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளான மனைவி)களும் இருப்பார்கள்.
56:22. மேலும், அழகிய கண்களை உடைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்;
56:22. (அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல்ஈன்’ (என்னும் கண்ணழகிகளான மனைவிகளும் இருப்பார்கள்.
56:23
56:23 كَاَمْثَالِ اللُّـؤْلُـوٴِالْمَكْنُوْنِ‌ۚ‏
كَاَمْثَالِ போல் உள்ள اللُّـؤْلُـوٴِ முத்துக்களை الْمَكْنُوْنِ‌ۚ‏ பாதுகாக்கப்பட்ட(து)
56:23. மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
56:23. அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
56:23. அவர்கள் மறைத்துவைக்கப்பட்ட முத்துக்களைப் போன்று அழகாய் இருப்பார்கள்.
56:23. (வெண்மையில் சிப்பிக்குள்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் (அவர்கள்) இருப்பார்கள்.
56:24
56:24 جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ கூலியாக/அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
56:24. (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
56:24. இவை அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும்.
56:24. இவை அனைத்தும் உலகில் அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்.
56:24. (இவைகள் யாவும்) இவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) செயல்களுக்குக் கூலியாக(க் கிடைக்கும்.)
56:25
56:25 لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَاْثِيْمًا ۙ‏
لَا يَسْمَعُوْنَ அவர்கள் செவியுற மாட்டார்கள் فِيْهَا அதில் لَغْوًا வீண் பேச்சுகளை(யும்) وَّلَا تَاْثِيْمًا ۙ‏ பாவமான பேச்சுகளையும்
56:25. அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
56:25. அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள்.
56:25. அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள்.
56:25. அதில் அவர்கள் வீணானதையும், அவர்களைப் பாவத்தில் ஆக்கக்கூடியதையும் செவியுற மாட்டார்கள்.
56:26
56:26 اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا‏
اِلَّا قِيْلًا பேச்சைத் தவிர سَلٰمًا سَلٰمًا‏ ஸலாம் ஸலாம்
56:26. “ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
56:26. ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள்.
56:26. எது பேசப்பட்டாலும் சரியாகவே பேசப்படும்.
56:26. ஆயினும், “ஸலாமன், ஸலாமன்” (சாந்தி, சாந்தி) என்ற சொல்லையன்றி (மற்றெதையும் செவியுறமாட்டார்கள்).
56:27
56:27 وَاَصْحٰبُ الْيَمِيْنِ ۙ مَاۤ اَصْحٰبُ الْيَمِيْنِؕ‏
وَاَصْحٰبُ الْيَمِيْنِ ۙ வலது பக்கம் உடையவர்கள்! مَاۤ اَصْحٰبُ الْيَمِيْنِؕ‏ வலது பக்கம் உடையவர்கள் யார்
56:27. இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:27. வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள்,
56:27. மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?
56:27. மேலும், வலப்பக்கத்தார்_வலப் பக்கத்தாரின் நிலை என்ன? (அல்லாஹ் எதை அவர்களுக்குத் தயாராக்கி வைத்திருக்கிறான்?)
56:28
56:28 فِىْ سِدْرٍ مَّخْضُوْدٍۙ‏
فِىْ سِدْرٍ மரங்களின் அருகிலும் مَّخْضُوْدٍۙ‏ முட்கள் நீக்கப்பட்ட இலந்தை
56:28. (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
56:28. முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்,
56:28. அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள்,
56:28. அவர்கள் முள்ளற்ற இலந்தை மரத்தி(ன் அடியி)லும்,
56:29
56:29 وَّطَلْحٍ مَّنْضُوْدٍۙ‏
وَّطَلْحٍ வாழை மரங்களுக்கு مَّنْضُوْدٍۙ‏ குலைகுலையாய் தொங்குகின்ற
56:29. (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
56:29. (நுனி முதல்) அடி வரை குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும்,
56:29. மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்;
56:29. (மேலிருந்து கீழ்வரையில்) குலைகள் தொங்கும் வாழை மரத்தி(ன் அடியி)லும்,
56:30
56:30 وَّظِلٍّ مَّمْدُوْدٍۙ‏
وَّظِلٍّ நிழல்களிலும் مَّمْدُوْدٍۙ‏ நீங்காத
56:30. இன்னும், நீண்ட நிழலிலும்,
56:30. அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள்.
56:30. பரந்து விரிந்திருக்கும் நிழல்,
56:30. நீண்ட நிழலிலும் இருப்பார்கள்.
56:31
56:31 وَّ مَآءٍ مَّسْكُوْبٍۙ‏
وَّ مَآءٍ நீருக்கு அருகிலும் مَّسْكُوْبٍۙ‏ ஓடிக்கொண்டே இருக்கின்ற
56:31. (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
56:31. அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும்,
56:31. எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர்,
56:31. (அல்லாஹ்வினால்) ஓடவிடப்பட்ட நீரி(ன் அருகாமையி)லும் (இருப்பர்).
56:32
56:32 وَّفَاكِهَةٍ كَثِيْرَةٍۙ‏
وَّفَاكِهَةٍ பழங்களுக்கு அருகிலும் كَثِيْرَةٍۙ‏ அதிகமான
56:32. ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
56:32. ஏராளமான கனிவர்க்கங்களும் உண்டு.
56:32. என்றைக்கும் தீர்ந்துவிடாத
56:32. ஏராளமான கனிவர்க்கங்களுக்கு மத்தியிலும்_
56:33
56:33 لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍۙ‏
لَّا مَقْطُوْعَةٍ தீர்ந்துவிடாத وَّلَا مَمْنُوْعَةٍۙ‏ தடுக்கப்படாத
56:33. அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
56:33. அதன் கனிகள் (புசிக்க) தடுக்கப்படாது, (பறிப்பதால்) குறைவுறாது.
56:33. தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் ;
56:33. (அதன், கனிகள் கால வித்தியாசமின்றி எச்சமயத்திலும் கிடைத்துக் கொண்டிருக்குமே தவிர, அவை) அற்றுப்போகாதவை, அன்றியும், (புசிப்பதற்குத்) தடுக்கப்படாதவை.
56:34
56:34 وَّ فُرُشٍ مَّرْفُوْعَةٍؕ‏
وَّ فُرُشٍ விரிப்புகளிலும் مَّرْفُوْعَةٍؕ‏ உயர்வான
56:34. மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
56:34. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்).
56:34. மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்.
56:34. (ஒன்றின் மேல் ஒன்றாக) உயரமாக்கப்பட்ட விரிப்புகளிலும் (அமர்ந்திருப்பார்கள்).
56:35
56:35 اِنَّاۤ اَنْشَاْنٰهُنَّ اِنْشَآءًۙ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْشَاْنٰهُنَّ அவர்களை உருவாக்குவோம் اِنْشَآءًۙ‏ முற்றிலும் புதிதாகவே
56:35. நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
56:35. (அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக்கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கிறோம்.
56:35. அவர்களின் மனைவியரை நாம் தனிச்சிறப்புடன் புது அமைப்பில் படைப்போம்.
56:35. நிச்சயமாக நாம் (ஹூருல் ஈன்களான) அவர்களைப் பிரத்தியேகமாக (இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம்.
56:36
56:36 فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًاۙ‏
فَجَعَلْنٰهُنَّ அவர்களை நாம் ஆக்குவோம் اَبْكَارًاۙ‏ கன்னிப் பெண்களாக
56:36. அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
56:36. கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கிறோம்.
56:36. மேலும், அவர்களைக் கன்னிகளாகவும்,
56:36. அப்பால் கன்னியர்களாக அவர்களை ஆக்கியிருக்கிறோம்.
56:37
56:37 عُرُبًا اَتْرَابًاۙ‏
عُرُبًا கணவனை நேசிப்பவர்களாக اَتْرَابًاۙ‏ சம வயதுடையவர்களாக
56:37. (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
56:37. அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள்.
56:37. தங்கள் கணவர்கள் மீது காதல் கொண்டவர்களாகவும் சமவயதுடையவர்களாகவும் ஆக்குவோம்.
56:37. (தம் கணவர்களையே) நேசிக்கக் கூடியவர்களாக, சமவயதுடைவர்களாக (அவர்களை ஆக்கியுள்ளோம்).
56:38
56:38 لِّاَصْحٰبِ الْيَمِيْنِؕ‏
لِّاَصْحٰبِ الْيَمِيْنِؕ‏ வலப் பக்கமுடையவர்களுக்காக
56:38. வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).  
56:38. (முன்னர் வர்ணிக்கப்பட்ட இவை) வலது பக்கத்திலுள்ளவர்களுக்குக் கிடைக்கும்.
56:38. இவை அனைத்தும் வலப்பக்கத்தாருக்கு உரியவை.
56:38. (முன்னர் கூறப்பட்டது) வலப்பக்கத்தார்க்குரியதாகும்.
56:39
56:39 ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏
ثُلَّةٌ அதிகமானவர்கள் مِّنَ الْاَوَّلِيْنَۙ‏ முன்னோரிலும்
56:39. முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
56:39. (இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும்,
56:39. அத்தகையவர்கள், முன்னோர்களில் நிறையப் பேரும்,
56:39. (இவர்களுடன்) முன்னோர்களில் ஒரு கூட்டத்தினரும்,
56:40
56:40 وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِيْنَؕ‏
وَثُلَّةٌ அதிகமானவர்கள் مِّنَ الْاٰخِرِيْنَؕ‏ இன்னும் பின்னோரிலும்
56:40. பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
56:40. பின்னுள்ளோரில் ஒரு பெரும் கூட்டத்தினரும் இருப்பார்கள்.
56:40. பின்னோர்களில் நிறையப் பேருமாய் இருப்பார்கள்.
56:40. பின்னோர்களில் ஒரு கூட்டத்தினரும் (வலப்பக்கத்தைச் சார்ந்தோரில்) இருப்பார்கள்.
56:41
56:41 وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ مَاۤ اَصْحٰبُ الشِّمَالِؕ‏
وَاَصْحٰبُ الشِّمَالِ ۙ இடப்பக்கமுடையவர்கள்! مَاۤ اَصْحٰبُ الشِّمَالِؕ‏ இடப்பக்கமுடையவர்கள் யார்?
56:41. இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
56:41. இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம்தான் என்னே!
56:41. மேலும், இடப்பக்கத்தார்; இடப்பக்கத்தார் (உடைய துர்பாக்கியம்) பற்றி என்ன சொல்வது?
56:41. மேலும், இடப்புறத்தார், இடப்புறத்தார்க்குரிய தன்மை என்ன?
56:42
56:42 فِىْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ‏
فِىْ سَمُوْمٍ கடுமையான வெப்பக் காற்றிலும் وَّحَمِيْمٍۙ‏ நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்
56:42. (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
56:42. (அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும்,
56:42. அனற்காற்றிலும், கொதிக்கும் நீரிலும்,
56:42. (அவர்கள்) கொடிய அனல்காற்றிலும், முடிவுறக்காய்ச்சப்பட்ட கொதிக்கும் நீரிலும்_
56:43
56:43 وَّظِلٍّ مِّنْ يَّحْمُوْمٍۙ‏
وَّظِلٍّ நிழலிலும் مِّنْ يَّحْمُوْمٍۙ‏ கரும் புகையின்
56:43. அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
56:43. அடர்ந்த இருண்ட புகையின் மத்தியிலும் இருப்பார்கள்.
56:43. கரும்புகைகளின் நிழலிலும் கிடப்பார்கள்.
56:43. அடர்ந்த இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
56:44
56:44 لَّا بَارِدٍ وَّلَا كَرِيْمٍ‏
لَّا بَارِدٍ குளிர்ந்திருக்காது وَّلَا كَرِيْمٍ‏ நறுமணம் உடையதாகவும் இருக்காது
56:44. (அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.
56:44. (அங்கு) குளிர்ச்சியான குடிபானமும் இருக்காது; கண்ணியமான (உணவு) எதுவும் இருக்காது.
56:44. அது குளிர்ச்சியாகவும் இராது; சுகமாகவும் இராது.
56:44. (அங்கு) குளிர்ச்சியுமில்லை, எவ்வித சுகமுமில்லை.
56:45
56:45 اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰ لِكَ مُتْرَفِيْنَۚ  ۖ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَبْلَ ذٰ لِكَ இதற்கு முன்னர் مُتْرَفِيْنَۚ  ۖ‏ சுகவாசிகளாக
56:45. நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
56:45. இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர்.
56:45. இவர்கள் எப்படிப்பட்ட மக்களெனில் இந்த கதியை அடைவதற்கு முன்பு சுகபோகத்தில் மூழ்கியிருந்தார்கள்;
56:45. நிச்சயமாக இவர்கள் இதற்கு முன்னர் பெரும் சுகபோக வாழ்வுடையவர்களாக இருந்தனர்.
56:46
56:46 وَكَانُوْا يُصِرُّوْنَ عَلَى الْحِنْثِ الْعَظِيْمِ‌ۚ‏
وَكَانُوْا இருந்தனர் يُصِرُّوْنَ பிடிவாதம் பிடித்தவர்களாக عَلَى الْحِنْثِ பாவத்தின் மீது الْعَظِيْمِ‌ۚ‏ பெரும்
56:46. ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
56:46. எனினும், பெரும்பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்.
56:46. மேலும், பெரும் பாவங்கள் புரிவதில் பிடிவாதமாக இருந்தார்கள்.
56:46. (ஆனால்) அவர்கள் பெரும் பாவத்தின் மீது (பிடிவாதம் கொண்டோராக) நிலைத்தும் இருந்தனர்.
56:47
56:47 وَكَانُوْا يَقُوْلُوْنَ ۙ اَٮِٕذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏
وَكَانُوْا இருந்தனர் يَقُوْلُوْنَ ۙ கூறுபவர்களாக اَٮِٕذَا مِتْنَا நாங்கள் இறந்துவிட்டால் وَكُنَّا இன்னும் ஆகிவிட்டால் تُرَابًا மண்ணாக(வும்) وَّعِظَامًا எலும்புகளாகவும் ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَۙ‏ நாங்கள் எழுப்பப்படுவோமா?
56:47. மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
56:47. மேலும், என்னே! நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்பாகவும் போனதன் பின்னர், மெய்யாகவே நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவோமா?
56:47. “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகி விட்டாலும், எலும்புக்கூடாகிப்போனாலும் மீண்டும் எழுப்பப்படுவோமா, என்ன?
56:47. “நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நிச்சயமாக நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்கள்?” என்று கூறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.
56:48
56:48 اَوَاٰبَآؤُنَا الْاَوَّلُوْنَ‏
اَوَاٰبَآؤُنَا எங்கள் மூதாதைகளுமா الْاَوَّلُوْنَ‏ முன்னோர்களான
56:48. “அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)
56:48. (அவ்வாறே) முன் சென்றுபோன நம் மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தனர்.
56:48. முன்பு வாழ்ந்துசென்ற எங்களுடைய மூதாதையர்களும் எழுப்பப்படுவார்களா, என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
56:48. “(அவ்வாறே) முன்னோர்களான நம்முடைய மூதாதையருமா? (எழுப்பப் படுவார்கள்” என்று பரிகாசமாகக் கூறிக் கொண்டிருந்தனர்).
56:49
56:49 قُلْ اِنَّ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَۙ‏
قُلْ நீர் கூறுவீராக! اِنَّ நிச்சயமாக الْاَوَّلِيْنَ முன்னோரும் وَالْاٰخِرِيْنَۙ‏ பின்னோரும்
56:49. (நபியே!) நீர் கூறும்: “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
56:49. (நபியே!) கூறுவீராக: நிச்சயமாக (உங்களில்) முன்னுள்ளோரும், பின்னுள்ளோரும்...
56:49. (நபியே!) இவர்களிடம் கூறும்: “முன்னோர்கள், பின்னோர்கள் அனைவரும்
56:49. (நபியே!) நீர் கூறுவீராக: “நிச்சயமாக (உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்_
56:50
56:50 لَمَجْمُوْعُوْنَ ۙ اِلٰى مِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍ‏
لَمَجْمُوْعُوْنَ ۙ ஒன்று சேர்க்கப்படுவீர்கள் اِلٰى مِيْقَاتِ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் يَوْمٍ நாளின் مَّعْلُوْمٍ‏ அறியப்பட்ட
56:50. “குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
56:50. (நீங்கள் யாவருமே) அறியப்பட்ட ஒரு நாளின் குறித்த நேரத்தில் (தவறாமல் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
56:50. திண்ணமாக ஒன்றுகூட்டப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள், நேரம் குறிக்கப்பட்ட ஒரு நாளில்!
56:50. (நீங்கள் அனைவரும்) குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் திட்டமாக (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுபவர்கள்.”
56:51
56:51 ثُمَّ اِنَّكُمْ اَيُّهَا الضَّآلُّوْنَ الْمُكَذِّبُوْنَۙ‏
ثُمَّ பிறகு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اَيُّهَا الضَّآلُّوْنَ வழிகேடர்களே! الْمُكَذِّبُوْنَۙ‏ பொய்ப்பிக்கின்ற
56:51. அதற்குப் பின்னர்: “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
56:51. பிறகு, (கூறப்படும். இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்,
56:51. பின்னர், வழி கெட்டவர்களே! பொய் என்று தூற்றியவர்களே!
56:51. “பின்னர், (இந்நாளைப்) பொய்யக்கியோரான வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்_
56:52
56:52 لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍۙ‏
لَاٰكِلُوْنَ சாப்பிடுவீர்கள் مِنْ شَجَرٍ மரத்தில் இருந்துதான் مِّنْ زَقُّوْمٍۙ‏ சக்கூம்
56:52. ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
56:52. கண்டிப்பாக கள்ளி மரத்தையே புசிப்பீர்கள்.
56:52. நீங்கள் ஸக்கூம் மரத்தினுடையதையே உண்ணப் போகின்றீர்கள்!
56:52. (ஜக்கூம் எனும்) கள்ளிமரத்திலிருந்து உண்ணக்கூடியவர்கள்.
56:53
56:53 فَمٰلِـــٴُـوْنَ مِنْهَا الْبُطُوْنَ‌ۚ‏
فَمٰلِـــٴُـوْنَ நிரப்புவீர்கள் مِنْهَا அதில் இருந்து الْبُطُوْنَ‌ۚ‏ வயிறுகளை
56:53. ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.
56:53. இன்னும் அதைக் கொண்டே உங்கள் வயிற்றை நிரப்புவீர்கள்.
56:53. நீங்கள் அதைக்கொண்டே வயிற்றை நிரப்புவீர்கள்.
56:53. “அதைக் கொண்டே (உங்களுடைய) வயிறுகளை நிரப்பக்கூடியவர்கள்.
56:54
56:54 فَشٰرِبُوْنَ عَلَيْهِ مِنَ الْحَمِيْمِ‌ۚ‏
فَشٰرِبُوْنَ குடிப்பீர்கள் عَلَيْهِ அதற்கு மேலாக مِنَ الْحَمِيْمِ‌ۚ‏ கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை
56:54. அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
56:54. அத்துடன் முற்றிலும் கொதித்த சுடு நீரைக் குடிப்பீர்கள்.
56:54. அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள்,
56:54. அப்பால், அதற்குமேல் கடுமையாகக் கொதிக்கும் நீரிலிருந்து குடிக்கக் கூடியவர்கள்.
56:55
56:55 فَشٰرِبُوْنَ شُرْبَ الْهِيْمِؕ‏
فَشٰرِبُوْنَ இன்னும் குடிப்பீர்கள் شُرْبَ குடிப்பதைப் போல் الْهِيْمِؕ‏ தாகித்த ஒட்டகங்கள்
56:55. “பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.”
56:55. (அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப்போல் (நீங்கள்) குடிப்பீர்கள்.
56:55. அடங்கா தாகம் கொண்ட ஒட்டகத்தைப் போன்று!
56:55. (நோயினால் பாதிக்கப்பட்டு) கடும் தாகதிற்குள்ளான ஒட்டகம் குடிப்பதைப் போல் குடிக்கக்கூடியவர்கள்.
56:56
56:56 هٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّيْنِؕ‏
هٰذَا இதுதான் نُزُلُهُمْ அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும் يَوْمَ الدِّيْنِؕ‏ கூலி நாளில்
56:56. இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
56:56. கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான்.
56:56. இதுதான் (இந்த இடப்பக்கத்தார்க்குரிய) விருந்து உபசாரப் பொருட்களாகும், கூலி கொடுக்கும் நாளில்!
56:56. இது கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்குரிய விருந்தாகும்.
56:57
56:57 نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ‏
نَحْنُ நாம்தான் خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் فَلَوْلَا تُصَدِّقُوْنَ‏ உண்மை என நம்பமாட்டீர்களா?
56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:57. (வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கிறோம். (ஆகவே, மறுமுறை நாம் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?
56:57. நாமே உங்களைப் படைத்தோம். பிறகு ஏன் நீங்கள் உண்மை என ஏற்றுக்கொள்வதில்லை?
56:57. நாமே உங்களை (முதன் முறையாக)ப் படைத்திருக்கின்றோம், (ஆகவே, மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?”
56:58
56:58 اَفَرَءَيْتُمْ مَّا تُمْنُوْنَؕ‏
اَفَرَءَيْتُمْ அறிவியுங்கள்! مَّا تُمْنُوْنَؕ‏ நீங்கள் செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:58. நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:58. நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
56:58. ஆகவே, (பெண்ணின் கர்ப்பத்தில்) நீங்கள் செலுத்திவிடுகின்ற (விந்தான)தைப் பார்த்தீர்களா?
56:59
56:59 ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ‏
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ அதை நீங்கள் படைக்கின்றீர்களா? اَمْ அல்லது نَحْنُ நாம்தான் الْخٰلِقُوْنَ‏ படைப்பவர்களா?
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
56:59. அதை (சிசுவாக) நீங்கள் படைக்கிறீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா?
56:59. இதனைக் கொண்டு குழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா; அல்லது அதனை உருவாக்குவது நாமா?
56:59. அதனை(க்குழந்தையாக) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தாம் படைப்பவர்களா?
56:60
56:60 نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ‏
نَحْنُ நாம்தான் قَدَّرْنَا நிர்ணயித்தோம் بَيْنَكُمُ உங்களுக்கு மத்தியில் الْمَوْتَ மரணத்தை وَمَا نَحْنُ நாங்கள் இல்லை بِمَسْبُوْقِيْنَۙ‏ முடியாதவர்கள்
56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
56:60,61,60. நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.
56:60. நாமே மரணத்தை உங்களிடையே விதித்திருக்கின்றோம்.
56:60. நாமே உங்களுக்கிடையில் மரணத்தை ஏற்படுத்தியுள்ளோம் நாம் தோற்கடிக்கப்படுவோரும் அல்லர்.
56:61
56:61 عَلٰٓى اَنْ نُّبَدِّلَ اَمْثَالَـكُمْ وَنُـنْشِئَكُمْ فِىْ مَا لَا تَعْلَمُوْنَ‏
عَلٰٓى اَنْ نُّبَدِّلَ நாங்கள் மாற்றுவதற்கு اَمْثَالَـكُمْ உங்கள் உருவங்களை وَنُـنْشِئَكُمْ இன்னும் உங்களை உருவாக்கிவிடுவதற்கு فِىْ مَا لَا تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறியாத ஒன்றில்
56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
56:60,61,61. நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டுவருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல.
56:61. மேலும், உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவரல்லர்.
56:61. (அன்றி) நாம் (உங்களை அழித்து விட்டு உங்களுடைய இடத்தில்) உங்களைப் போன்றோரை மாற்றிவிடவும், இன்னும் நீங்கள் அறியாதவற்றில், உங்களை நாம் அமைத்துவிடுவதற்கும் (நாம் இயலாதவர்களன்று).
56:62
56:62 وَلَـقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰى فَلَوْلَا تَذَكَّرُوْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக عَلِمْتُمُ நீங்கள் அறிந்தீர்கள். النَّشْاَةَ படைத்திருப்பதை الْاُوْلٰى முதல் முறை فَلَوْلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
56:62. முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
56:62. முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கிறீர்கள். (இதைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெறவேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.)
56:62. உங்களின் முதல் பிறப்பைப் பற்றி நீங்கள் அறிந்தே இருக்கின்றீர்கள். பிறகு, ஏன் நீங்கள் படிப்பினை பெறுவதில்லை?
56:62. மேலும், (உங்களுடைய) முதலாவதான உற்பத்தியை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்திருக்கின்றீர்கள்! (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
56:63
56:63 اَفَرَءَيْتُمْ مَّا تَحْرُثُوْنَؕ‏
اَفَرَءَيْتُمْ நீங்கள் அறிவியுங்கள்! مَّا எதை تَحْرُثُوْنَؕ‏ உழுகின்றீர்கள்
56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
56:63. (நீங்கள் பூமியில்) பயிரிடுபவற்றைக் கவனித்தீர்களா?
56:63. நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
56:63. நீங்கள் (பூமியைக்கிளறி அதில் வித்துக்களை) விதைப்பதைப் பார்த்தீர்களா?
56:64
56:64 ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ‏
ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா? اَمْ அல்லது نَحْنُ நாம்தான் الزّٰرِعُوْنَ‏ முளைக்க வைக்கின்றோமா?
56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
56:64. அதை, நீங்கள் (முளைக்க வைத்துப்) பயிராக்குகிறீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா?
56:64. இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக்கின்றோமா?
56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் தாம் முளைப்பிக்கச் செய்பவர்களா?
56:65
56:65 لَوْ نَشَآءُ لَجَـعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ‏
لَوْ نَشَآءُ நாம் நாடினால் لَجَـعَلْنٰهُ அதை ஆக்கிவிடுவோம் حُطَامًا குப்பையாக فَظَلْتُمْ நீங்கள் ஆகி இருப்பீர்கள் تَفَكَّهُوْنَ‏ நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக
56:65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
56:65. நாம் விரும்பினால், அதை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
56:65. நாம் நாடினால் இவற்றைப் பதர்களாய் ஆக்கிவிட்டிருப்போம். அப்போது நீங்கள் பலவாறு புலம்பிக்கொண்டிருப்பீர்கள்;
56:65. நாம் நாடினால், திட்டமாக அதனைக்கூளமாக ஆக்கியிருப்போம், பின்னர் (அதன் தீய நிலை கண்டு) நீங்கள் ஆச்சரியப்படுவோராய் ஆகிவிடுவீர்கள்.
56:66
56:66 اِنَّا لَمُغْرَمُوْنَۙ‏
اِنَّا لَمُغْرَمُوْنَۙ‏ நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்
56:66. “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
56:66. ‘‘நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம்,
56:66. அனைத்தும் தண்டமாகிவிட்டதே;
56:66. “நிச்சயமாக நாங்கள் கடன்பட்டவர்களாகி (தண்டிக்கப்பட்டு) விட்டோம்.
56:67
56:67 بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ‏
بَلْ மாறாக نَحْنُ நாங்கள் مَحْرُوْمُوْنَ‏ பெரும் இழப்புக்குள்ளானவர்கள்
56:67. “மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
56:67. மாறாக, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று'' (என்று கூறிக்கொண்டிருப்பீர்கள்).
56:67. நாம் பெரும் துர்ப்பாக்கியவான்களாய் ஆகிவிட்டோமே என்று!
56:67. இல்லை, நாங்கள் (பயிரை அடைவதிலிருந்து) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக்கொண்டிருப்பீர்கள்).
56:68
56:68 اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ‏
اَفَرَءَيْتُمُ அறிவியுங்கள்! الْمَآءَ தண்ணீரைப் பற்றி الَّذِىْ எது تَشْرَبُوْنَؕ‏ குடிக்கின்றீர்கள்
56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
56:68. நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா?
56:68. நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண்திறந்து பார்த்திருக்கின்றீர்களா?
56:68. நீங்கள் குடிக்கின்றீர்களே அந்நீரைப் பார்த்தீர்களா?
56:69
56:69 ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ‏
ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ அதை நீங்கள் இறக்கினீர்களா? مِنَ الْمُزْنِ கார்மேகத்தில் இருந்து اَمْ அல்லது نَحْنُ நாம்தான் الْمُنْزِلُوْنَ‏ இறக்குகின்றவர்களா?
56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் பொழிய வைக்கிறீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா?
56:69. மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்களா? அல்லது அதனைப் பொழியச் செய்தது நாமா?
56:69. அதை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் தாம் இறக்கிவைப்பவர்களா?
56:70
56:70 لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ‏
لَوْ نَشَآءُ நாம் நாடினால் جَعَلْنٰهُ அதை ஆக்கிவிடுவோம் اُجَاجًا உப்பு நீராக فَلَوْلَا تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:70. நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:70. நாம் விரும்பினால் அதை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:70. நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை?
56:70. நாம் நாடினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி இருப்போம், (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:71
56:71 اَفَرَءَيْتُمُ النَّارَ الَّتِىْ تُوْرُوْنَؕ‏
اَفَرَءَيْتُمُ அறிவியுங்கள்! النَّارَ நெருப்பைப் பற்றி الَّتِىْ எது تُوْرُوْنَؕ‏ தீ மூட்டுகின்றீர்கள்
56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
56:71. நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா?
56:71. நீங்கள் எரிக்கின்ற இந்தத் தீயைப் பற்றி எப்போதாவது நீங்கள் எண்ணிப்பார்த்தீர்களா?
56:71. நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைப் பார்த்தீர்களா?
56:72
56:72 ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِــٴُــوْنَ‏
ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ நீங்கள் உருவாக்கினீர்களா? شَجَرَتَهَاۤ அதன் மரத்தை اَمْ அல்லது نَحْنُ நாம் الْمُنْشِــٴُــوْنَ‏ உருவாக்குகின்றோமா?
56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
56:72. அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கிறீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா?
56:72. அதன் மரத்தை நீங்கள் படைத்திருக்கின்றீர்களா? அல்லது அதனைப் படைத்தவர் நாமா?
56:72. அதனுடைய மரத்தை நீங்கள் உற்பத்தி செய்தீர்களா? அல்லது நாம் தாம் உற்பத்தி செய்பவர்களா?
56:73
56:73 نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِيْنَ‌ۚ‏
نَحْنُ நாம் جَعَلْنٰهَا அதை ஆக்கினோம் تَذْكِرَةً ஒரு நினைவூட்டலாகவும் وَّمَتَاعًا ஒரு பலனாகவும் لِّلْمُقْوِيْنَ‌ۚ‏ பயணிகளுக்கு
56:73. நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
56:73. (நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப்போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதை நாம்தான் படைத்திருக்கிறோம்.
56:73. நாம் இதனை நினைவூட்டும் சாதனமாகவும் தேவையுடையோருக்கு வாழ்க்கைச் சாதனமாகவும் அமைத்துள்ளோம்.
56:73. (நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) நினைவூட்டும் பொருட்டும், பிரயாணிகளுக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதனை நாமே ஆக்கினோம்.
56:74
56:74 فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏
فَسَبِّحْ ஆகவே, துதிப்பீராக! بِاسْمِ பெயரை رَبِّكَ உமது இறைவனின் الْعَظِيْمِ‏ மகத்தான
56:74. ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
56:74. ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரைக்கொண்டு நீர் (அவனை) புகழ்வீராக!
56:74. எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
56:74. ஆகவே, (நபியே! இவைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில்) மகத்தான உமதிரட்சகனின் பெயரைக் கொண்டு நீர் துதி செய்து கொண்டிருப்பீராக!
56:75
56:75 فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِۙ‏‏
فَلَاۤ اُقْسِمُ நான் சத்தியம் செய்கின்றேன் بِمَوٰقِعِ விழுகின்ற இடங்கள் மீது النُّجُوْمِۙ‏‏ நட்சத்திரங்கள்
56:75. நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
56:75. நட்சத்திரங்கள் மறையும் இடங்களின் மீது நாம் சத்தியம் செய்கிறோம்.
56:75. இல்லை, நட்சத்திரங்களின் அமைநிலைகள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
56:75. நட்சத்திரங்கள் (விழுந்து) மறையுமிடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
56:76
56:76 وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَقَسَمٌ சத்தியமாகும் لَّوْ تَعْلَمُوْنَ நீங்கள் அறிந்து கொண்டால் عَظِيْمٌۙ‏ மாபெரும்
56:76. நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
56:76. மனிதர்களே! (உங்களுக்கு) அறிவிருந்தால் நிச்சயமாக இது ஒரு மகத்தான சத்தியம் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.
56:76. நீங்கள் உணர்வீர்களேயானால், திண்ணமாக இது ஒரு மகத்தான சத்தியம்தான்!
56:76. நீங்கள் அறிந்திருந்தால், நிச்சயமாக இது மகத்தானதொரு சத்தியமென்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
56:77
56:77 اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ‏
اِنَّهٗ لَـقُرْاٰنٌ நிச்சயமாக இது குர்ஆனாகும் كَرِيْمٌۙ‏ கண்ணியமான
56:77. நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:77. நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்.
56:77. இது ஓர் உன்னதமான குர்ஆன்.
56:77. நிச்சயமாக இது மிக கண்ணியமிக்க குர் ஆனாகும்.
56:78
56:78 فِىْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ‏
فِىْ كِتٰبٍ பதிவேட்டில் உள்ள مَّكْنُوْنٍۙ‏ பாதுகாக்கப்பட்ட(து)
56:78. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:78. (இது ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
56:78. இது பாதுகாப்பானதொரு நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
56:78. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பாதுகாக்கப்பட்ட புத்தகத்தில் (எழுதப்பட்டுள்ளது).
56:79
56:79 لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏
لَّا يَمَسُّهٗۤ இதைத் தொடமாட்டார்கள் اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏ மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர
56:79. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
56:79. பரிசுத்தவான்களைத் தவிர, (மற்றெவரும்) இதைத் தொட மாட்டார்கள்.
56:79. தூய்மையானவர்களைத் தவிர வேறு எவரும் இதனைத் தொடமுடியாது.
56:79. பரிசுத்தமானவர்களைத் தவிர, (மற்றெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்.
56:80
56:80 تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
تَنْزِيْلٌ இறக்கப்பட்ட வேதமாகும் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
56:80. அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
56:80. உலகத்தார் அனைவரின் (எஜமானாகிய) இறைவனால் இது இறக்கப்பட்டது.
56:80. இது அகிலத்தின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும்.
56:80. அகிலத்தாரின் இரட்சகனால் (இது) இறக்கப்பட்டது.
56:81
56:81 اَفَبِهٰذَا الْحَـدِيْثِ اَنْتُمْ مُّدْهِنُوْنَۙ‏
اَفَبِهٰذَا ?/இந்த الْحَـدِيْثِ பேச்சை اَنْتُمْ நீங்கள் مُّدْهِنُوْنَۙ‏ அலட்சியம் செய்கின்றீர்கள்
56:81. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
56:81. ஆகவே, இதிலுள்ள விஷயங்களையும் நீங்கள் அலட்சியம் செய்யக் கருதுகிறீர்களா?
56:81. பிறகு என்ன, இந்த வசனத்தையா நீங்கள் அலட்சியப்படுத்துகின்றீர்கள்?
56:81. ஆகவே, இச்செய்தியை நீங்கள் அலட்சியம் செய்பவர்களாக இருக்கின்றீர்களா?
56:82
56:82 وَتَجْعَلُوْنَ رِزْقَكُمْ اَنَّكُمْ تُكَذِّبُوْنَ‏
وَتَجْعَلُوْنَ ஆக்கிக் கொண்டீர்களா? رِزْقَكُمْ உங்கள் நன்றியாக اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் تُكَذِّبُوْنَ‏ பொய்ப்பிப்பதையே
56:82. நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
56:82. அல்லது பொய்யாக்குவதையே நீங்கள் உங்கள் தொழிலாக்கிக் கொள்கிறீர்களா?
56:82. மேலும், இதனைப் பொய்யென்று தூற்றுவதுதான் இந்த அருட்கொடையில் உங்களுக்குரிய பங்கா?
56:82. (அல்லாஹ் அளித்துள்ளவற்றுக்கு) உங்கள் நன்றியை நிச்சயமாக நீங்கள் பொய்ப்படுத்துவதையே (பிரதியாக) ஆக்குகின்றீர்களா.
56:83
56:83 فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ الْحُـلْقُوْمَۙ‏
فَلَوْلَاۤ اِذَا بَلَغَتِ தடுத்திருக்கவேண்டாமா அது அடைந்தபோது الْحُـلْقُوْمَۙ‏ தொண்டைக் குழியை
56:83. மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
56:83. (உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்) தொண்டைக் குழியை அடைந்தால்,
56:83. இறந்துபோகின்ற ஒருவரின் உயிர் தொண்டைவரை வந்து அவர் இறந்து கொண்டிருக்கும்போது;
56:83. (உங்களில் மரணிக்கும் ஒருவரின் உயிர்_) அது தொண்டைக் குழியை அடைந்து விடுமானால்_
56:84
56:84 وَاَنْتُمْ حِيْنَٮِٕذٍ تَـنْظُرُوْنَۙ‏
وَاَنْتُمْ நீங்கள் حِيْنَٮِٕذٍ அந்நேரத்தில் تَـنْظُرُوْنَۙ‏ நீங்கள் பார்க்கின்றீர்கள்
56:84. அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
56:84. அந்நேரத்தில் நீங்கள் (இறப்பவனுக்குச் சமீபமாயிருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல்) பரக்கப் பரக்க விழிக்கிறீர்கள்.
56:84. உங்கள் கண்களாலேயே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
56:84. அந்நேரத்தில் நீங்கள் (சகராத்_ மரணவேதனையில் சிக்கித்தவிப்பதை) பார்க்கிறீர்கள்.
56:85
56:85 وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْكُمْ وَلٰـكِنْ لَّا تُبْصِرُوْنَ‏
وَنَحْنُ நாம் اَقْرَبُ மிக அருகில் اِلَيْهِ அவருக்கு مِنْكُمْ உங்களை விட وَلٰـكِنْ என்றாலும் لَّا تُبْصِرُوْنَ‏ நீங்கள் பார்க்க முடியாது
56:85. ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
56:85. ஆயினும், நாம் அவனுக்கு உங்களைவிட மிக சமீபமாக இருக்கிறோம். எனினும், நீங்கள் (நம்மைப்) பார்ப்பதில்லை.
56:85. அப்போது உங்களைக் காட்டிலும் நாம் அவருக்கு மிக அண்மையில் இருக்கின்றோம். ஆனால், அது உங்களுக்குத் தென்படுவதில்லை.
56:85. நாமோ உங்களைவிட அவருக்கு மிகச் சமீபாக இருக்கின்றோம், எனினும் நீங்கள் பார்ப்பதில்லை.
56:86
56:86 فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ غَيْرَ مَدِيْنِيْنَۙ‏
فَلَوْلَاۤ اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் غَيْرَ مَدِيْنِيْنَۙ‏ கூலி கொடுக்கப்படாதவர்களாக
56:86. எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
56:86. நீங்கள் எவருக்குமே கட்டுப்படாமல் (பூரண சுதந்திரம் உடையவர்களாக) இருந்தால்...
56:86. நீங்கள் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்களாய் இருந்தால்
56:86. ஆகவே நீங்கள் (யாருடைய) அதிகாரத்திற்கு(ம்) கட்டுப்படாதவர்களாக இருந்தால்_
56:87
56:87 تَرْجِعُوْنَهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
تَرْجِعُوْنَهَاۤ அதை நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா? اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
56:87. நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
56:87. மெய்யாகவே, நீங்கள் (இதில்) உண்மை சொல்பவர்களாகவுமிருந்தால், (இறந்த அவனுடைய உயிரை) நீங்கள் மீட்டுக் கொண்டு வரவேண்டியது தானே!
56:87. உங்களுடைய இந்தக் கருத்தில் நீங்கள் வாய்மையானவர்களாய் இருந்தால் அந்நேரத்தில் வெளியேறிக் கொண்டிருக்கும் அவருடைய உயிரை நீங்கள் ஏன் திரும்பக் கொண்டு வருவதில்லை?
56:87. நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், அ(வருடைய உயிரான)தை நீங்கள் அவரின் பால் மீளவைத்திருக்கலாமே?
56:88
56:88 فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ‏
فَاَمَّاۤ ஆக اِنْ كَانَ இருந்தால் مِنَ الْمُقَرَّبِيْنَۙ‏ நெருக்கமானவர்களில்
56:88. (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
56:88. (இறந்தவர் இறையச்சமுடையவராக இருந்து அல்லாஹ்வின்) நெருக்கத்தை பெற்றவர்களில் ஒருவராக இருந்தால்,
56:88. பின்னர், இறக்கின்ற அந்த மனிதர் நெருக்கமானவர்களுள் ஒருவராய் இருந்தால்
56:88. ஆகவே, (அல்லாஹ்வுக்கு) நெருக்கமாக்கப் பட்டவர்களில் உள்ளவராக அவர் இருந்தால்_
56:89
56:89 فَرَوْحٌ وَّ رَيْحَانٌ ۙ وَّجَنَّتُ نَعِيْمٍ‏
فَرَوْحٌ இறையருளும் وَّ رَيْحَانٌ ۙ உணவும் وَّجَنَّتُ சொர்க்கமும் نَعِيْمٍ‏ இன்பம் நிறைந்த
56:89. அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
56:89. அவருக்குச் சுகமும் மகிழ்ச்சியும் நறுமனமும் உண்டு; இன்பமளிக்கும் சொர்க்கமும் உண்டு.
56:89. அவருக்கு சுகமும், உயர்தரமான உணவும், அருட்கொடைகள் நிறைந்த சுவனமும் இருக்கின்றன.
56:89. அப்போது அவருக்கு சுகமும், நல்லுணவும், அருட்கொடையுடைய சுவனமும் உண்டு.
56:90
56:90 وَاَمَّاۤ اِنْ كَانَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۙ‏
وَاَمَّاۤ ஆக اِنْ كَانَ இருந்தால் مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِۙ‏ வலப்பக்கம் உடையவர்களில்
56:90. அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
56:90. (அதிலும்) அவர் வலப்பக்கத்திலுள்ளவராக இருந்தாலோ,
56:90. மேலும், அவர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருந்தால்,
56:90. அன்றியும், அவர் வலப்புறத்தாரில் உள்ளவராக இருந்தால்_
56:91
56:91 فَسَلٰمٌ لَّكَ مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِؕ‏
فَسَلٰمٌ ஸலாம் உண்டாகட்டும் لَّكَ உமக்கு مِنْ اَصْحٰبِ الْيَمِيْنِؕ‏ வலப்பக்கம் உடையவர்களில்
56:91. “வலப்புறத்தோரே! உங்களுக்கு “ஸலாம்” உண்டாவதாக” (என்று கூறப்படும்).
56:91. அவரை நோக்கி ‘‘வலப்பக்கத்தில் உள்ளவர்களில் இருந்து உமக்கு ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாகுக! (என்ற முகமன்) கூறப்படும்.
56:91. “சாந்தி உண்டாகட்டும், உம்மீது! நீர் வலப்பக்கத்தாருள் ஒருவராய் இருக்கின்றீர்!” என்று கூறி வரவேற்கப்படுவார்.
56:91. (அவரிடம்,) ”வலப்புறத்தாரிலிருந்து உமக்குச் சாந்தி உண்டாவதாக!” (என்று கூறப்படும்).
56:92
56:92 وَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِيْنَ الضَّآلِّيْنَۙ‏
وَاَمَّاۤ اِنْ كَانَ ஆக/இருந்தால் مِنَ الْمُكَذِّبِيْنَ பொய்ப்பித்த(வர்களில்) الضَّآلِّيْنَۙ‏ வழிகெட்டவர்கள்
56:92. ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
56:92. அவன் வழிகெட்டவனாகவும் (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகிறவனாகவும் இருந்தால்,
56:92. மேலும், அவர் பொய் எனத் தூற்றியவர்களில் ஒருவராகவும், வழிகேடர்களில் ஒருவராகவும் இருந்தால்,
56:92. அன்றியும் அவர் வழி கெட்டோரான (இவ்வேதத்தைப்) பொய்யாக்குகின்றவர்களில் உள்ளவராக இருந்தால்_
56:93
56:93 فَنُزُلٌ مِّنْ حَمِيْمٍۙ‏
فَنُزُلٌ விருந்து(ம்) مِّنْ حَمِيْمٍۙ‏ கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரின்
56:93. கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
56:93. முற்றிலும் கொதித்த சுடுநீர் அவனுக்கு விருந்தாகும்.
56:93. கொதிக்கும் நீரும்,
56:93. கொதித்து அதன் உச்சத்தை அடைந்துவிட்ட நீரிலிருந்தே (அவருக்கு) விருந்துண்டு_
56:94
56:94 وَّتَصْلِيَةُ جَحِيْمٍ‏
وَّتَصْلِيَةُ நெருப்பில் பொசுக்குவதும்தான் جَحِيْمٍ‏ நரகத்தில்
56:94. நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
56:94. இன்னும், நரகத்தில் தள்ளப்படுவான்.
56:94. நரகத்தில் வீசப்படுவதும்தாம் அவருக்குரிய ‘உபசாரம்’ ஆகும்!
56:94. இன்னும், நரகத்தில் நுழைவித்தலும் உண்டு.
56:95
56:95 اِنَّ هٰذَا لَهُوَ حَقُّ الْيَـقِيْنِۚ‏
اِنَّ நிச்சயமாக هٰذَا لَهُوَ இதுதான் حَقُّ உண்மையாகும் الْيَـقِيْنِۚ‏ மிக உறுதியான
56:95. நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
56:95. நிச்சயமாக இது சந்தேகமற்ற உண்மையாகும்.
56:95. திண்ணமாக, இவை அனைத்தும் திட்டவட்டமான உண்மைகளாகும்.
56:95. நிச்சயமாக இது (மிக்க) உறுதியான உண்மையாகும்.
56:96
56:96 فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏
فَسَبِّحْ ஆக, துதிப்பீராக! بِاسْمِ பெயரை رَبِّكَ உமது இறைவனின் الْعَظِيْمِ‏ மகத்தான(வன்)
56:96. எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
56:96. ஆகவே (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரைக் கூறி புகழ்ந்து கொண்டிருப்பீராக!
56:96. எனவே (நபியே!) மகத்துவமிக்க உம் இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
56:96. ஆகவே (நபியே!) மகத்தான உமதிரட்சகனின் பெயரை(க்கூறி) துதி செய்வீராக.