6. ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்)
மக்கீ, வசனங்கள்: 165

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
6:1
6:1 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَجَعَلَ الظُّلُمٰتِ وَالنُّوْرَ  ؕ ثُمَّ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே الَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை وَجَعَلَ இன்னும் உண்டாக்கினான் الظُّلُمٰتِ இருள்களை وَالنُّوْرَ  ؕ இன்னும் ஒளியை ثُمَّ பிறகு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு يَعْدِلُوْنَ‏ சமமாக்குகின்றனர்
6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; அப்படியிருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்குகின்றனர்.
6:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியதே! அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். மேலும், இருள்களையும், ஒளியையும் உண்டாக்கினான். இவ்வாறிருந்தும் நிராகரிப்பவர்கள் (அல்லாஹ்வாகிய) தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை) சமமாக்குகின்றனர்.
6:1. வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அப்படியிருந்தும் சத்தியத்தை ஏற்க மறுத்தோர், மற்றவர்களையும் தம் இறைவனுக்குச் சமமாக்குகின்றார்கள்.
6:1. வானங்களை, மற்றும் பூமியைப் படைத்து இருள்களை, மற்றும் ஒளியை ஆக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும், அதன் பின்னரும் நிராகரிப்போர் (அல்லாஹ்வாகிய) தங்கள் இரட்சகனுக்கு (அவன் படைத்தவற்றில் சிலவற்றை)ச் சமமாக்குகின்றனர்.
6:2
6:2 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ طِيْنٍ ثُمَّ قَضٰۤى اَجَلًا  ؕ وَاَجَلٌ مُّسَمًّى عِنْدَهٗ‌ ثُمَّ اَنْـتُمْ تَمْتَرُوْنَ‏
هُوَ அவன் الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ இருந்து طِيْنٍ களிமண் ثُمَّ பிறகு قَضٰۤى விதித்தான் اَجَلًا  ؕ ஒரு தவணையை وَاَجَلٌ இன்னும் ஒரு தவணை مُّسَمًّى குறிப்பிட்டது عِنْدَهٗ‌ அவனிடம் ثُمَّ பிறகு اَنْـتُمْ நீங்கள் تَمْتَرُوْنَ‏ சந்தேகிக்கிறீர்கள்
6:2. அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்.
6:2. அவன்தான் உங்களைக் களிமண்ணால் படைத்து (உங்களுக்குரிய) வாழ்நாளைக் (குறிப்பிட்டு) நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. இவ்வாறிருந்தும் நீங்கள் (அவனுடைய இறைத்தன்மையை) சந்தேகிக்கிறீர்கள்.
6:2. அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு உங்களுக்காக ஒரு வாழ்க்கைத் தவணையை நிர்ணயித்தான். மேலும், அவனிடத்தில் முடிவு செய்யப்பட்ட மற்றொரு தவணையும் உண்டு. ஆனால் நீங்களோ சந்தேகத்தில் உழல்கின்றீர்கள்.
6:2. அவன் எத்தகையோனென்றால், உங்களைக் களிமண்ணால் அவன் படைத்தான், பின்னர், (உங்களுக்கு) ஒரு தவணையையும் நிர்ணயம் செய்துள்ளான், (உங்கள் விசாரணைக்காகவும்) ஒரு குறிப்பிட்ட தவணையும் அவனிடத்தில் உண்டு, பின்னும், நீங்கள் (அவன் வணக்கத்திற்குறியவன் என்பதில்) சந்தேகப்படுகிறீர்கள்.
6:3
6:3 وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِ‌ؕ يَعْلَمُ سِرَّكُمْ وَ جَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُوْنَ‏
وَهُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَفِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் يَعْلَمُ நன்கறிவான் سِرَّكُمْ இரகசியத்தை/உங்கள் وَ جَهْرَكُمْ இன்னும் பகிரங்கத்தை / உங்கள் وَيَعْلَمُ இன்னும் நன்கறிவான் مَا எதை تَكْسِبُوْنَ‏ நீங்கள் செய்கிறீர்கள்
6:3. இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.
6:3. வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன்தான். அவன் உங்கள் இரகசியத்தையும் வெளிப்படையானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான்.
6:3. மேலும், அந்த ஏகனாகிய அல்லாஹ்தான் வானங்களிலும், பூமியிலும் இறைவனாக இருக்கின்றான். உங்களுடைய மறைவான, வெளிப்படையான அனைத்து நிலைமைகளையும் அவன் அறிகின்றான். மேலும், நீங்கள் சம்பாதிக்கின்ற (நல்வினை, தீவினை ஆகிய)வற்றையும் அறிகின்றான்.
6:3. மேலும், அவனே வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திதற்குரிய) அல்லாஹ், அவன் உங்களுடைய இரகசியத்தையும், உங்களுடைய பரகசியத்தையும் நன்கறிவான், இன்னும், (நன்மையோ, தீமையோ செய்து) நீங்கள் சம்பாதிப்பவைகளையும் அவன் நன்கறிவான்.
6:4
6:4 وَمَا تَاْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ‏
وَمَا வருவதில்லை تَاْتِيْهِمْ அவர்களிடம் مِّنْ இருந்து اٰيَةٍ ஒரு வசனம் مِّنْ இருந்து اٰيٰتِ வசனங்கள் رَبِّهِمْ தங்கள் இறைவனின் اِلَّا தவிர كَانُوْا இருந்தார்கள் عَنْهَا அதை مُعْرِضِيْنَ‏ புறக்கணிப்பவர்களாக
6:4. (அவ்வாறு இருந்தும்,) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.
6:4. (இவ்வாறிருந்தும், நிராகரிப்பவர்களோ) தங்கள் இறைவனின் வசனங்களில் எது வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
6:4. (மக்களின் நிலை என்னவெனில்) அவர்களுடைய அதிபதியின் சான்றுகளில் எந்த ஒரு சான்று அவர்களிடம் வந்தபோதும் அதனை அவர்கள் புறக்கணிப்பவர்களாகவே இருந்தனர்.
6:4. (நிராகரிப்போர்) தங்களுடைய இரட்சகனின் வசனங்(களான அத்தாட்சி)களிலிருந்து எந்த வசனமும், அதனை அவர்கள் புறக்கணிக்கக் கூடியவர்களாக இருந்தே தவிர அவர்களிடம் வருவதில்லை.
6:5
6:5 فَقَدْ كَذَّبُوْا بِالْحَـقِّ لَمَّا جَآءَهُمْ‌ؕ فَسَوْفَ يَاْتِيْهِمْ اَنْۢـبٰٓـؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
فَقَدْ ஆகவே, திட்டமாக كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِالْحَـقِّ சத்தியத்தை لَمَّا போது جَآءَهُمْ‌ؕ வந்தது/அவர்களிடம் فَسَوْفَ வரும் يَاْتِيْهِمْ அவர்களிடம் اَنْۢـبٰٓـؤُا செய்திகள் مَا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகசிக்கிறார்கள்
6:5. எனவே, சத்திய (வேத)ம் அவர்களிடம் வந்திருக்கும் போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர்; ஆனால், எந்த விஷயங்களைப் (பொய்யென்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும்.
6:5. ஆகவே, அவர்களிடம் வந்திருக்கும் இந்த சத்திய (வேத)த்தையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர். ஆனால், எவ்விஷயங்கள் பற்றி (அவை பொய்யானவை என) அவர்கள் பரிகசித்து கொண்டிருக்கின்றனரோ அவை (உண்மையாகவே) அவர்களிடம் வந்தே தீரும்.
6:5. இவ்வாறே இப்போது அவர்களிடம் வந்துள்ள சத்தியத்தையும் அவர்கள் பொய்யென்று சொல்கிறார்கள். எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய சில செய்திகள் விரைவில் அவர்களிடம் வந்துவிடும்
6:5. ஆகவே, சத்திய (வேத)த்தை-அது அவர்களிடம் வந்திருக்கும்போது திட்டமாக அவர்கள் பொய்யாக்கிவிட்டனர்.) ஆகவே, எவ்விஷயங்கள் பற்றி, அவர்கள் பரிகசித்துக் கொண்டிருக்கின்றனரோ அவை பற்றிய செய்திகள் அவர்களுக்கு வந்தே தீரும்.
6:6
6:6 اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ مَا لَمْ نُمَكِّنْ لَّـكُمْ وَاَرْسَلْنَا السَّمَآءَ عَلَيْهِمْ مِّدْرَارًا وَّجَعَلْنَا الْاَنْهٰرَ تَجْرِىْ مِنْ تَحْتِهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ‏
اَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? كَمْ எத்தனையோ اَهْلَـكْنَا அழித்தோம் مِنْ قَبْلِهِمْ அவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْنٍ சமுதாயத்தில் مَّكَّنّٰهُمْ வசதி அளித்தோம்/அவர்களுக்கு فِى الْاَرْضِ பூமியில் مَا எந்தளவு لَمْ نُمَكِّنْ வசதியளிக்கவில்லை لَّـكُمْ உங்களுக்கு وَاَرْسَلْنَا இன்னும் அனுப்பினோம் السَّمَآءَ மழையை عَلَيْهِمْ அவர்கள் மீது مِّدْرَارًا தாரை தாரையாக وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் الْاَنْهٰرَ நதிகளை تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهِمْ அவர்களுக்குக் கீழ் فَاَهْلَكْنٰهُمْ ஆகவே அழித்தோம்/ அவர்களை بِذُنُوْبِهِمْ பாவங்களினால்/அவர்களுடைய وَاَنْشَاْنَا இன்னும் ஏற்படுத்தினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு قَرْنًا சமுதாயத்தை اٰخَرِيْنَ‏ மற்றொரு
6:6. அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம்.
6:6. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம். வானத்திலிருந்து தாரை தாரையாக மழை பெய்யும்படிச் செய்து, அவர்களின் (ஆதிக்கத்தின்) கீழ் நீரருவிகளும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்படி செய்தோம். (எனினும் அவர்கள் பாவத்திலேயே ஆழ்ந்து விட்டனர்.) ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அழித்துவிட்டோம். அவர்களுக்குப் பின்னர் மற்றொரு கூட்டத்தாரை நாம் உற்பத்தி செய்தோம்.
6:6. (தத்தமது காலத்தில் ஆட்சியுரிமை பெற்றிருந்த) எத்தனையோ சமூகத்தாரை இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்டிருக்கிறோம் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்கு வழங்கிடாத ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம். மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம். இன்னும் (அவர்களுக்குப் பகரமாக) வேறு தலைமுறையினரை உருவாக்கினோம்.
6:6. அவர்களுக்கு, முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம், என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்து தந்திருந்தோம், மேலும், அவர்களின் மீது தொடாச்சியாக மழை பொழியுமாறு நாம் செய்தோம், இன்னும், ஆறுகளை அவர்களுக்குக் கீழ் ஓடிக் கொண்டிருக்கும்படியாக நாம் ஆக்கினோம், ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை நாம் அழித்து விட்டோம், மேலும், அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை நாம் உண்டாக்கினோம்.
6:7
6:7 وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتٰبًا فِىْ قِرْطَاسٍ فَلَمَسُوْهُ بِاَيْدِيْهِمْ لَقَالَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَلَوْ نَزَّلْنَا நாம் இறக்கிவைத்தால் عَلَيْكَ உம்மீது كِتٰبًا ஒரு வேதத்தை فِىْ قِرْطَاسٍ ஓர் ஓளையில் فَلَمَسُوْهُ தொட்டுப் பார்த்தனர்/அதை بِاَيْدِيْهِمْ தங்கள் கரங்களால் لَقَالَ திட்டமாக கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِنْ இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியம் مُّبِيْنٌ‏ தெளிவானது
6:7. காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், “இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை“ என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்.
6:7. கடிதத்தில் எழுதப்பட்ட ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கிவைத்து அதை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும் ‘‘இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்.
6:7. (நபியே!) தாளில் எழுதப்பட்ட ஒரு வேதத்தை நாம் உம்மீது இறக்கி, மக்கள் அதனைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும் கூட, சத்தியத்தை நிராகரிப்பவர்கள், ‘இது அப்பட்டமான மந்திரவித்தையே அன்றி வேறில்லை’ என்றுதான் கூறியிருப் பார்கள்.
6:7. காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கி வைத்து அதனை அவர்கள் தங்கள் கைகளால் தொட்டுப் பார்த்திருந்தபோதிலும், “இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்றே நிச்சயமாக இந்நிராகரிப்போர் கூறியிருப்பர்.
6:8
6:8 وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ مَلَكٌ‌ ؕ وَلَوْ اَنْزَلْـنَا مَلَـكًا لَّـقُضِىَ الْاَمْرُ ثُمَّ لَا يُنْظَرُوْنَ‏
وَقَالُوْا இன்னும் கூறினர் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْهِ அவர் மீது مَلَكٌ‌ ؕ ஒரு வானவர் وَلَوْ اَنْزَلْـنَا நாம் இறக்கினால் مَلَـكًا ஒரு வானவரை لَّـقُضِىَ முடிக்கப்பட்டுவிடும் الْاَمْرُ காரியம் ثُمَّ பிறகு لَا يُنْظَرُوْنَ‏ அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்
6:8. (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
6:8. (‘‘இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு வானவர் அனுப்பப்பட வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு வானவரை அனுப்பி வைத்திருந்தால், (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு, (அதில்) அவர்களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.)
6:8. மேலும், இந்நபியிடத்தில் ஏன் ஒரு வானவர் அனுப்பப்படவில்லை? என்றும் கேட்கிறார்கள். வானவரை நாம் இறக்கியிருப்போமாயின் எப்போதோ விவகாரம் முடிந்துவிட்டிருக்கும். பிறகு அவர்களுக்கு எத்தகைய அவகாசமும் கிடைத்திருக்காது.
6:8. இன்னும், (இவர் உண்மையான தூதர் தான் என்று சாட்சி கூற) அவருக்காக ஒரு மலக்கு வானத்திலிருந்து இறக்கப்பட வேண்டாமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர், (அவர்கள் கூறுகின்ற பிரகாரமே) ஒரு மலக்கை நாம் இறக்கி வைத்திருந்தால் (அவர்களின்) காரியம் முடிக்கப்பட்டிருக்கும், பிறகு அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
6:9
6:9 وَلَوْ جَعَلْنٰهُ مَلَـكًا لَّـجَـعَلْنٰهُ رَجُلًا وَّلَـلَبَسْنَا عَلَيْهِمْ مَّا يَلْبِسُوْنَ‏
وَلَوْ جَعَلْنٰهُ நாம் ஆக்கினால் / அவரை مَلَـكًا ஒரு வானவராக لَّـجَـعَلْنٰهُ ஆக்குவோம்/அவரை رَجُلًا ஓர் ஆடவராக وَّلَـلَبَسْنَا இன்னும் குழப்பிவிடுவோம் عَلَيْهِمْ அவர்கள் மீது مَّا எதை يَلْبِسُوْنَ‏ குழப்புகிறார்கள்
6:9. நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கை காணுஞ் சக்தியில்லாதவர்கள்; ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி(அனுப்பி)யிருப்போம், (அப்பொழுதும்,) அந்த இடத்தில் அவர்கள் (இப்பொழுது) குழம்பிக் கொள்வது போல் (அப்பொழுதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்.
6:9. (அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். (அது சமயத்தில்) இப்போது இருக்கும் (அதே) சந்தேகத்தையே அவர்களுக்கு நாம் ஏற்படுத்தி விடுவோம்.
6:9. இன்னும் நாம் வானவரை நபியாக அனுப்ப நேர்ந்தால்கூட அவரை மனித உருவிலேயே அனுப்பிவைத்திருப்போம். மேலும், இப்போது இவர்கள் உழன்று கொண்டிருக்கின்ற சந்தேகத்திலேயே (அப்போதும்) உழன்று கொண்டிருக்கும்படிச் செய்திருப்போம்.
6:9. மேலும் (நம் தூதரான) அவரை ஒரு மலக்காக நாம் ஆக்கி அனுப்பியிருந்தால் அவரை ஒரு மனிதராகவே நாம் ஆக்கி(அனுப்பி)யிருப்போம், அப்பொழுது அவர்கள் குழம்பிக்கொண்டிருந்த ஒன்றையே அவர்களுக்கு நாம் குழப்பியவர்களாவோம்.
6:10
6:10 وَلَـقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِيْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
وَلَـقَدِ திட்டவட்டமாக اسْتُهْزِئَ பரிகசிக்கப்பட்டனர் بِرُسُلٍ தூதர்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَحَاقَ சூழ்ந்தது بِالَّذِيْنَ எவர்களை سَخِرُوْا ஏளனம் செய்தனர் مِنْهُمْ அவர்களில் مَّا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதைக் கொண்டு يَسْتَهْزِءُوْنَ‏ பரிகசிக்கின்றனர்
6:10. (நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.
6:10. (நபியே!) உமக்கு முன்னர் வந்த (நம் மற்ற) தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர். முடிவில், அவர்களில் பரிகசித்தவர்களை அவர்கள் பரிகசித்துக் கொண்டிருந்தது (வேதனை) சூழ்ந்து கொண்டது.
6:10. (நபியே,) உமக்கு முன்னரும் தூதர்களில் பலர் பரிகாசம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆயினும் அவர்களைக் கேலி செய்தவர்கள் எதனைக் குறித்துக் கேலி செய்து வந்தார்களோ, அதுவே கடைசியில் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
6:10. (நபியே!) உமக்கு முன்னர் (வந்த மற்ற) தூதர்களும் திட்டமாக பரிகசிக்கப்பட்டனர், (முடிவில்) அவர்கள் எ(ந்த வேதனையான)தைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அது அவர்களில் பரிகசித்துக் கொண்டிருந்தார்களே அத்தகையோரைச் சூழ்ந்து கொண்டது.
6:11
6:11 قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
قُلْ கூறுவீராக سِيْرُوْا செல்லுங்கள் فِى الْاَرْضِ பூமியில் ثُمَّ பிறகு انْظُرُوْا பாருங்கள் كَيْفَ كَانَ எவ்வாறு இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பிப்பவர்களின்
6:11. “பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
6:11. (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று கூறுவீராக.
6:11. (அவர்களிடம்) நீர் கூறும்: “(சற்று) பூமியைச் சுற்றிப் பாருங்கள், பிறகு சத்தியத்தைப் பொய்யென்று உரைத்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனியுங்கள்!”
6:11. “நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து பின்னர் (உங்களைப் போல் அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே! நீர் அவர்களிடம்) கூறுவீராக!
6:12
6:12 قُلْ لِّمَنْ مَّا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ قُلْ لِّلّٰهِ‌ؕ كَتَبَ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ ‌ ؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ‌ ؕ اَلَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
قُلْ கூறுவீராக لِّمَنْ யாருக்குரியன? مَّا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் قُلْ கூறுவீராக لِّلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்குரியன كَتَبَ கடமையாக்கினான் عَلٰى نَفْسِهِ தன் மீது الرَّحْمَةَ ؕ கருணை புரிவதை لَيَجْمَعَنَّكُمْ நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ‌ ؕ அதில் اَلَّذِيْنَ எவர்கள் خَسِرُوْۤا நஷ்டமாக்கினர் اَنْفُسَهُمْ தங்களை فَهُمْ அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:12. “வானங்களிலும், பூமியிலுமுள்ளவை யாருக்குச் சொந்தம்” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேளும்; (அவர்கள் என்ன பதில் கூறமுடியும்? எனவே) “எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்” என்று கூறுவீராக; அவன் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்; நிச்சயமாக இறுதி நாளில் உங்களையெல்லாம் அவன் ஒன்று சேர்ப்பான்; இதில் எவ்வித சந்தேகமும் இல்லை; எவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டார்களோ, அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
6:12. ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் யாருக்குரியன?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீரே அவர்களை நோக்கி இவை அனைத்தும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனவே!'' என்று கூறுவீராக. அவன் கருணையைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டிருக்கிறான். (ஆகவேதான், உங்கள் குற்றத்திற்காக இதுவரை உங்களைத் தண்டிக்காதிருக்கிறான். எனினும்,) நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் (உண்மையை நிராகரித்து) தங்களுக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களோ அவர்கள் (இதை) நம்பவே மாட்டார்கள்.
6:12. “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் யாருக்குரியவை?” என்று நீர் அவர்களிடம் கேளும். “அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை” என்று கூறும். கருணை புரிவதை அவன் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். (எனவே உங்களில் இறைக்கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்களையும், அதனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்பவர்களையும் உடனே அவன் பிடிப்பதில்லை) மறுமைநாளில் அவன் உங்கள் அனைவரையும் திண்ணமாக ஒன்று திரட்டுவான். இது சந்தேகத்திற்கிடமில்லாத ஓர் உண்மையாகும். ஆனால், எவர்கள் தம்மைத் தாமே அழிவுக்குள்ளாக்கிக் கொண்டார்களோ அவர்கள் இதனை ஏற்பதில்லை.
6:12. (அன்றியும்) “வானங்களில், மற்றும் பூமியில் உள்ளவை (யாவும்) யாருக்கு உரியன? என நீர் (அவர்களைக்) கேட்பீராக! (“இவை யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன” என்று கூறுவீராக! அவன் கருணையைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான், அவன் நிச்சயமாக உங்களை மறுமைநாளில் அவன் ஒன்று சேர்ப்பான், அந்நாள் நடந்தேறுவதில் சந்தேகமேயில்லை, (நிராகரித்து) தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டார்களே அத்தகையோர்-அவர்கள் (இதனை) நம்பவே மாட்டார்கள்.
6:13
6:13 وَلَهٗ مَا سَكَنَ فِى الَّيْلِ وَالنَّهَارِ‌ؕ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَلَهٗ அவனுக்குரியனவே مَا எவை سَكَنَ தங்கியன فِى الَّيْلِ இரவில் وَالنَّهَارِ‌ؕ இன்னும் பகலில் وَهُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
6:13. இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
6:13. (வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.
6:13. மேலும், இரவிலும், பகலிலும் நிலை கொண்டுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். மேலும், அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவுமிருக்கிறான்.
6:13. இரவில் மற்றும் பகலில் வாழ்ந்திருப்பவை (அனைத்தும்) அவனுக்கே உரியன! அவனேதான் நன்கு செவியேற்பவன் (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
6:14
6:14 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ‌ؕ قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ‌ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக اَغَيْرَ அல்லாதவரையா? اللّٰهِ அல்லாஹ் اَتَّخِذُ எடுத்துக்கொள்வேன் وَلِيًّا பாதுகாவலனாக فَاطِرِ படைப்பாளன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ இன்னும் பூமி وَهُوَ அவன்தான் يُطْعِمُ உணவளிக்கிறான் وَلَا يُطْعَمُ‌ؕ அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை قُلْ கூறுவீராக اِنِّىْۤ நிச்சயமாக நான் اُمِرْتُ கட்டளையிடப்பட்டுள்ளேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டுமென اَوَّلَ முதலாமவனாக مَنْ எவர் اَسْلَمَ‌ பணிந்தார் وَلَا تَكُوْنَنَّ நீர் ஆகிவிடாதீர் مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
6:14. “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு) வழிபடுபவர்களில் முதன்மையானவனாக இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்“ என்று கூறுவீராக! இன்னும், நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
6:14. (நபியே!) கூறுவீராக: ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர்த்து (மற்றெவரையும் என்) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கிறான்; அவனுக்கு யாரும் உணவளிப்பதில்லை. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.''
6:14. (நபியே!) கூறுவீராக: “வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வையன்றி வேறு ஒருவரை நான் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவன் உணவு வழங்குபவனேயன்றி உணவைப் பெறுபவனல்லன்.” மேலும், நீர் கூறுவீராக: “அவன் முன்னிலையில் சிரம் பணிவோரில் முதன்மையானவனாய் நான் ஆகிவிடவேண்டும் என்பதே எனக்கு இடப்பட்ட கட்டளையாகும்.” (இன்னும் எனக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.) இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் ஒருபோதும் நீர் ஆகிவிடாதீர்!
6:14. “வானங்களை, மற்றும் பூமியைப் படைத்த அல்லாஹ் அல்லாதவனை (வணக்கத்திற்கும் உதவியை நல்குவதற்குரிய) பாதுகாவலனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு)உணவளிக்கின்றான், (எவராலும்) அவன் உணவளிக்கப்படமாட்டான்” என (நபியே!) நீர் கூறுவீராக! முற்றிலும் அவனுக்கு கீழ்ப்படிந்தவர்களில் முதன்மையானவனாக நான் இருக்க வேண்டுமென்றும் (அல்லாஹ்வுக்கு) இணைவைத்துக் கொண்டிருப்போரில் (ஒருவராக) நீர் ஆகிவிடாதீர் என்றும் நிச்சயமாக நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்றும் நீர் கூறுவீராக!
6:15
6:15 قُلْ اِنِّىْۤ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّىْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
قُلْ கூறுவீராக اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اِنْ عَصَيْتُ நான் மாறுசெய்தால் رَبِّىْ என் இறைவனுக்கு عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் عَظِيْمٍ‏ மகத்தானது
6:15. “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்“ என்று கூறுவீராக.
6:15. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.''
6:15. கூறுவீராக: “நான் என்னுடைய அதிபதியின் கட்டளைக்கு அடிபணியாது போனால், ஒரு மாபெரும் (பயங்கரமான) நாளின் தண்டனையை அனுபவிக்க வேண்டி வருமே என்று நிச்சயம் நான் அஞ்சுகிறேன்.
6:15. “என்னுடைய இரட்சகனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என (நபியே! மேலும்) நீர் கூறுவீராக!
6:16
6:16 مَنْ يُّصْرَفْ عَنْهُ يَوْمَٮِٕذٍ فَقَدْ رَحِمَهٗ‌ؕ وَ ذٰ لِكَ الْـفَوْزُ الْمُبِيْنُ‏
مَنْ எவர் يُّصْرَفْ தடுக்கப்படும் عَنْهُ அவரை விட்டு يَوْمَٮِٕذٍ அந்நாளில் فَقَدْ رَحِمَهٗ‌ؕ திட்டமாக/அருள்புரிந்தான்/அவருக்கு وَ ذٰ لِكَ الْـفَوْزُ இதுதான்/வெற்றி الْمُبِيْنُ‏ தெளிவானது
6:16. “அந்நாளில் எவரொருவர் அந்த வேதனையை விட்டும் விலக்கப்படுவாரோ, நிச்சயமாக (அல்லாஹ்) அவர்மீது கிருபை புரிந்துவிட்டான். இது மிகத் தெளிவான வெற்றியாகும்” (என்று கூறுவீராக).
6:16. அந்நாளில் எவரை விட்டும் வேதனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிந்தே விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்.
6:16. அன்றைய நாளில் தண்டனையிலிருந்து எவர் காப்பாற்றப்படுகின்றாரோ அவருக்கு உண்மையில் அல்லாஹ் தன் பெருங்கருணையைப் பொழிந்து விட்டான்! இதுதான் தெளிவான வெற்றியாகும்.
6:16. “எவர் அந்நாளில் அதனை (அவ்வேதனையை) விட்டுத் திருப்பப்படுகிறாரோ அவருக்கு திட்டமாக (அல்லாஹ்வாகிய) அவன் அருள் புரிந்து விட்டான், அது தெளிவான வெற்றியுமாகும்.
6:17
6:17 وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ‌ؕ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَاِنْ يَّمْسَسْكَ தொட்டால் / உம்மை اللّٰهُ அல்லாஹ் بِضُرٍّ ஒரு சிரமத்தைக் கொண்டு فَلَا அறவே இல்லை كَاشِفَ நீக்குபவர் لَهٗۤ அதை اِلَّا هُوَ‌ؕ அவனைத் தவிர وَاِنْ يَّمْسَسْكَ தொட்டால் / உம்மை بِخَيْرٍ ஒரு நன்மையைக்கொண்டு فَهُوَ அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
6:17. “(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
6:17. (நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைத்தால், அதை நீக்குபவர் அவனைத் தவிர வேறெவருமில்லை. உமக்கு ஒரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
6:17. அல்லாஹ் உமக்கு ஏதேனும் தீங்கினைத் தந்துவிட்டால், அதிலிருந்து உம்மைக் காப்பாற்றுபவர் அவனைத் தவிர வேறு யாருமில்லை. மேலும், அவன் உமக்கு ஏதேனும் நன்மை(யளித்துச் செழிப்புறச்) செய்வானாகில், அவன் யாவற்றின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
6:17. இன்னும் (நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துன்பத்தைக்கொண்டு பீடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை, (அவ்வாறே) அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் அவனையன்றி எவருமில்லை), அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
6:18
6:18 وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ‏
وَهُوَ அவன்தான் الْقَاهِرُ ஆதிக்கமுடையவன் فَوْقَ மேல் عِبَادِهٖ‌ ؕ தன் அடியார்கள் وَهُوَ அவன்தான் الْحَكِيْمُ ஞானவான் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிந்தவன்
6:18. அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரண ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
6:18. அவனே தன் அடியார்களை அடக்கி ஆள்கிறான். அவன்தான் மிக்க ஞானமுடையவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
6:18. அவன் தன் அடிமைகள் மீது முழு அதிகாரமுடையவன். மேலும், அவன் நுண்ணறிவாளனாகவும் யாவற்றையும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.”
6:18. மேலும், அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து (அவர்களை) அடக்கி ஆள்பவன், அன்றியும் அவனே தீர்க்கமான அறிவுடையவன், (யாவையும்) நன்கு உணர்பவன்.
6:19
6:19 قُلْ اَىُّ شَىْءٍ اَكْبَرُ شَهَادَةً  ؕ قُلِ اللّٰهُ ‌ۙ شَهِيْدٌ ۢ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ وَاُوْحِىَ اِلَىَّ هٰذَا الْـقُرْاٰنُ لِاُنْذِرَكُمْ بِهٖ وَمَنْۢ بَلَغَ‌ ؕ اَٮِٕنَّكُمْ لَـتَشْهَدُوْنَ اَنَّ مَعَ اللّٰهِ اٰلِهَةً اُخْرٰى‌ؕ قُلْ لَّاۤ اَشْهَدُ‌ ۚ قُلْ اِنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّاِنَّنِىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ‌ۘ‏
قُلْ கூறுவீராக اَىُّ எந்த شَىْءٍ ஒரு பொருள் اَكْبَرُ மிகப் பெரியது شَهَادَةً  ؕ சாட்சியால் قُلِ கூறுவீராக اللّٰهُ ۙ அல்லாஹ் شَهِيْدٌ ۢ சாட்சியாளன் بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنَكُمْ‌ இன்னும் உங்களுக்கிடையில் وَاُوْحِىَ இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ எனக்கு هٰذَا الْـقُرْاٰنُ இந்த குர்ஆன் لِاُنْذِرَكُمْ நான் எச்சரிப்பதற்காக/உங்களை بِهٖ இதன்மூலம் وَمَنْۢ இன்னும் எவர் بَلَغَ‌ ؕ அது சென்றடைந்தது اَٮِٕنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَـتَشْهَدُوْنَ சாட்சி கூறுகிறீர்கள் اَنَّ مَعَ நிச்சயமாக اللّٰهِ அல்லாஹ் உடன் اٰلِهَةً வணங்கப்படும் கடவுள்கள் اُخْرٰى‌ؕ வேறு قُلْ கூறுவீராக لَّاۤ اَشْهَدُ‌ ۚ சாட்சி கூறமாட்டேன் قُلْ கூறுவீராக اِنَّمَا هُوَ அவனெல்லாம் اِلٰـهٌ வணங்கப்படும் ஒரு கடவுள் وَّاحِدٌ ஒருவன் وَّاِنَّنِىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا எவற்றிலிருந்து تُشْرِكُوْنَ‌ۘ‏ இணைவைக்கிறீர்கள்
6:19. (நபியே!) “சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?” எனக் கேளும்; “அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக; நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) “இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே” என்று கூறிவிடும்.
6:19. (நபியே!) ‘‘சாட்சிகளில் மிகப் பெரியது எது?'' என நீர் (அவர்களைக்) கேட்பீராக. (அவர் களால் என்ன கூறமுடியும்? நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வே! (பெரியவன். அவனே) எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியாக(வும்) இருக்கிறான். இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (அது) எட்டியவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி, நிச்சயமாக வணக்கத்திற்குரிய மற்றெவரும் அல்லாஹ்வுடன் இருப்பதாக, (உண்மையாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?'' (என்றும் அவர்களை) நீர் கேட்பீராக. (இதற்கவர்கள் பதில் கூறுவதென்ன! ‘‘அவ்வாறு) நான் சாட்சி கூறமாட்டேன்!'' என்று நீர் கூறிவிட்டு, ‘‘நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவன்தான்; (அவனுக்கு) நீங்கள் இணைவைப்பதை விட்டு மெய்யாகவே நான் வெறுத்து விலகுகின்றன்'' என்றும் கூறுவீராக.
6:19. நீர் கேளும்: “யாருடைய சாட்சி எல்லாவற்றையும் விட மேலானது?” நீர் கூறும்: “எனக்கும், உங்களுக்கும் இடையில் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான். மேலும் இக்குர்ஆன் எனக்கு வஹி மூலம் அருளப்பட்டது. எதற்காகவெனில், உங்களையும் இன்னும் யார் யாரையெல்லாம் இது எட்டுகிறதோ அவர்களையும் இதன் மூலம் நான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக...! அல்லாஹ்வுடன் மற்ற கடவுள்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உண்மையிலேயே நீங்கள் சாட்சியங்கூற முடியுமா?” “நான் அவ்வாறு ஒருபோதும் சாட்சி அளிக்கமாட்டேன்” என்று கூறுவீராக! “திண்ணமாக, அல்லாஹ்தான் ஏக இறைவன். மேலும், நீங்கள் செய்து கொண்டிருக்கும் இணைவைப்புச் செயல்களிலிருந்து முற்றிலும் நான் விலகியவனாவேன்” என்றும் கூறுவீராக!
6:19. (நபியே!) சாட்சியால் மிகப்பெரியது எது?” என நீர் (அவர்களைக்) கேட்பீராக! (அவர்களால் என்ன கூற முடியும்? நீரே அவர்களிடம்) அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாக(வும்) இருக்கின்றான், இன்னும், இந்தக் குர் ஆனைக் கொண்டு உங்களுக்கும் (இது) சென்றடைந்தவர்களுக்கும் நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹீமூலம் அறிவிக்கப் பட்டுள்ளது” (என்று கூறி) “நிச்சயமாக அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்திற்குரியவர்கள் இருப்பதாக (மெய்யாகவே) நீங்கள் சாட்சி கூறுவீர்களா?” என்றும் (அவர்களை) நீர் கேட்பீராக! (“இல்லை” அவ்வாறு) நான் சாட்சி கூற மாட்டேன்” என்று நீர் கூறுவீராக! “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான், இன்னும், (அவனுக்கு) நீங்கள் இணை வைப்பதிலிருந்தும் நிச்சயமாக நான் நீங்கிக்கொண்டவன்” என்று கூறுவீராக!
6:20
6:20 اَ لَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْرِفُوْنَهٗ كَمَا يَعْرِفُوْنَ اَبْنَآءَهُمْ‌ۘ اَ لَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
اَ لَّذِيْنَ எவர்கள் اٰتَيْنٰهُمُ அவர்களுக்கு கொடுத்தோம் الْـكِتٰبَ வேதத்தை يَعْرِفُوْنَهٗ அறிவார்கள்/அதை كَمَا போல் يَعْرِفُوْنَ அறிவார்கள் اَبْنَآءَهُمْ‌ۘ குழந்தைகளை/தங்கள் اَ لَّذِيْنَ எவர்கள் خَسِرُوْۤا நஷ்டமிழைத்தார்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கு فَهُمْ அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:20. எவரும் தம் குழந்தைகளை (சந்தேகமில்லாமல் அறிவதைப் போல், வேதங் கொடுக்கப் பெற்றவர்கள், (நம் தூதராகிய இவரை, இறைவனுடைய தூதர் தாம்) என்று நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார்களோ அவர்கள் தாம் இவரை நம்பமாட்டார்கள்.
6:20. எவரும் தங்கள் குழந்தைகளை(ச் சந்தேகமற) அறிவதைப்போல, வேதம் கொடுக்கப் பட்டவர்கள் (நம் தூதராகிய) இவரை (இவர் இறைவனுடைய தூதர்தான் என்று) நன்கறிவார்கள். (எனினும், அவர்களில்) எவர்கள் (இதை மறைத்து) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ அவர்கள்தான் (நம் தூதராகிய இவரை இறைவனுடைய தூதரென்று) நம்பமாட்டார்கள்.
6:20. யாருக்கு நாம் வேதத்தை அருளினோமோ அவர்கள் தம் குழந்தைகளை (ஐயமற) அறிந்து கொள்வது போல், இந்த விஷயத்தையும் நன்கறிவார்கள். ஆயினும் எவர்கள் தம்மைத் தாமே பேரிழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்களோ, அவர்கள் இதனை ஏற்பதில்லை.
6:20. எவர்களுக்கு நான் வேதத்தை கொடுத்திருந்தோமோ அத்தகையவர்கள்-அவர்கள் தங்களுடைய ஆண்மக்களை அறிவதைப்போல, அவரை அறிவார்கள் (எனினும், அவர்களில்) எவர்கள் (இதனை மறைத்து) தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனரோ, அவர்கள் தாம் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
6:21
6:21 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
وَمَنْ யார் اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنِ எவரைவிட افْتَرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا ஒரு பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖؕ அவனுடைய வசனங்களை اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
6:21. அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.
6:21. அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனை விடவோ பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) அநியாயக்காரர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
6:21. அல்லாஹ்வின் மீது பொய்யை ஏற்றிச் சொல்பவனைவிட அல்லது அவனுடைய சான்றுகளைப் பொய் என வாதிடுபவனைவிட அக்கிரமக்காரன் யார்? இத்தகைய அக்கிரமக்காரர்கள் திண்ணமாக ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.
6:21. மேலும், அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தவரைவிட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவரை விடவோ மிகப்பெரிய அநியாயக்காரர் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
6:22
6:22 وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْۤا اَيْنَ شُرَكَآؤُكُمُ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ‏
وَيَوْمَ நாள் نَحْشُرُ ஒன்று திரட்டுவோம் هُمْ அவர்கள் جَمِيْعًا அனைவரையும் ثُمَّ பிறகு نَقُوْلُ கூறுவோம் لِلَّذِيْنَ எவர்களுக்கு اَشْرَكُوْۤا இணைவைத்தனர் اَيْنَ எங்கே شُرَكَآؤُ இணைகள் كُمُ உங்கள் الَّذِيْنَ எவர்கள் كُنْتُمْ تَزْعُمُوْنَ‏ நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்
6:22. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம்.
6:22. நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி, ‘‘(அல்லாஹ்விற்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?'' என்று நாம் கேட்போம்.
6:22. மேலும், அந்நாளில் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். பிறகு இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தவர்களிடம், “உங்களுடைய கடவுளெனக் கருதி யார் யாரையெல்லாம் நீங்கள் இறைவனுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நாம் கேட்போம்.
6:22. இன்னும் (அந்)நாளில் நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம், பின்னர் (அவர்களில்) இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்தோரிடம், (உங்கள் இணையாளர்கள் என நீங்கள் எவர்களை(க் கற்பனையாக) எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, அத்தகைய உங்களுடைய இணையாளர்கள் எங்கே?” என்று நாம் கேட்போம்.
6:23
6:23 ثُمَّ لَمْ تَكُنْ فِتْـنَـتُهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا وَاللّٰهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِيْنَ‏
ثُمَّ பிறகு لَمْ تَكُنْ இருக்காது فِتْـنَـتُهُمْ அவர்களுடைய சோதனை اِلَّاۤ தவிர اَنْ قَالُوْا அவர்கள் கூறுவதை وَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக رَبِّنَا எங்கள் இறைவா مَا كُنَّا நாங்கள் இருக்கவில்லை مُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களாக
6:23. “எங்கள் ரப்பாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் இணைவைப்பவர்களாக இருந்ததில்லை” என்று கூறுவதைத் தவிர வேறு அவர்களுடைய பதில் எதுவும் இராது.
6:23. (அது சமயம்) அவர்கள், ‘‘எங்கள் இறைவன் அல்லாஹ்தான். நாங்கள் (அவனுக்கு எதையும்) இணைவைக்க வில்லையே!'' என்று (பொய்) கூறுவதைத் தவிர அவர்களது குழப்பம் வேறொன்றும் இருக்காது.
6:23. “எங்கள் இறைவனாகிய உன்மீது ஆணையாக! நாங்கள் ஒருபோதும் இணைவைப்போராக இருக்கவில்லை” என்று (ஒரு பொய்யைக்) கூறுவதைத் தவிர வேறு எந்தவொரு குழப்பத்தையும் அவர்கள் விளைவிக்க மாட்டார்கள்.
6:23. பின்னர் அவர்கள் “எங்களுடைய இரட்சகன் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் இணை வைக்கக்கூடியவர்களாக இருக்கவில்லை!” என்று கூறுவதைத் தவிர அவர்களின் உபாயம் (வேறு) இல்லை.
6:24
6:24 اُنْظُرْ كَيْفَ كَذَبُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு كَذَبُوْا பொய் கூறினர் عَلٰٓى மீதே اَنْفُسِهِمْ‌ தங்கள் وَضَلَّ இன்னும் மறைந்துவிட்டன عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக் கட்டுகிறார்கள்
6:24. (நபியே!) அவர்கள் தங்களுக்கு எதிராக எவ்வாறு பொய் கூறிக் கொண்டார்கள் என்பதைப் பாரும்; ஆனால் (இறைவனுக்கு இணையானவை என்று அவர்கள் பொய்யாகக்) கற்பனை செய்ததெல்லாம் (அவர்களுக்கு உதவிடாது) மறைந்துவிடும்.
6:24. தங்களைப் பற்றியே அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) கவனிப்பீராக. (அல்லாஹ்விற்கு இணையானவை என்று) அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்தவை அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
6:24. பாருங்கள், (அவ்வேளை) அவர்கள் தங்களைப் பற்றியே எவ்வாறெல்லாம் பொய் உரைக்கின்றார்கள்! மேலும் அங்கு அவர்களின் போலிக் கடவுள்கள் எல்லாம் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும்.
6:24. தங்களுக்கெதிராக அவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (அல்லாஹ்வுக்கு இணையானவர்களென்று) அவர்கள் (பொய்யாகக்) கற்பனை செய்து கொண்டிருந்தவைகள் அவர்களை விட்டும் மறைந்துவிடும்.
6:25
6:25 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ‌‌ ۚ وَجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِىْۤ اٰذَانِهِمْ وَقْرًا ‌ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا‌ ؕ حَتّٰۤى اِذَا جَآءُوْكَ يُجَادِلُوْنَكَ يَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّسْتَمِعُ செவி சாய்ப்பார் اِلَيْكَ‌ ۚ உம் பக்கம் وَجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது اَكِنَّةً திரைகளை اَنْ يَّفْقَهُوْهُ அதை புரிந்துகொள்வதற்கு وَفِىْۤ اٰذَانِهِمْ இன்னும் அவர்களுடைய காதுகளில் وَقْرًا ؕ செவிட்டை وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தாலும் كُلَّ எல்லா(ம்) اٰيَةٍ அத்தாட்சி(களையும்) لَّا يُؤْمِنُوْا بِهَا‌ ؕ நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்/அவற்றை حَتّٰۤى முடிவாக اِذَا போது جَآءُوْكَ அவர்கள் உம்மிடம் வந்த يُجَادِلُوْنَكَ தர்க்கித்தவர்களாக/உம்மிடம் يَقُوْلُ கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِنْ இல்லை هٰذَاۤ இவை اِلَّاۤ தவிர اَسَاطِيْرُ கட்டுக் கதைகளை الْاَوَّلِيْنَ‏ முன்னோர்கள்
6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; “இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை” என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
6:25. (நபியே! உமக்கு கட்டுப்படுகிறவர்களைப் போல பாவனை செய்து நீர் கூறுவதைக் கேட்க) உமக்கு செவி சாய்ப்பவர்களும் அவர்களில் உண்டு. எனினும், அவர்கள் (தம் தீயச் செயல்களின் காரணமாக) அதை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி அவர்களுடைய உள்ளங்களில் திரையையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டையும் நாம் ஏற்படுத்திவிட்டோம். ஆகவே, (இவர்கள் சத்தியத்திற்குரிய) அத்தாட்சிகள் அனைத்தையும் (தெளிவாகக்) கண்டபோதிலும் அவற்றை அவர்கள் (ஒரு சிறிதும்) நம்பவே மாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மிடம் வந்த போதிலும், உம்முடன் தர்க்கித்து, ‘‘இவை பழங்காலத்தில் உள்ளவர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை'' என்றே இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்.
6:25. அவர்களில் சிலர், நீங்கள் கூறுவதைச் செவி சாய்த்துக் கேட்கின்றார்கள். ஆயினும் நிலைமை என்னவெனில், நாம் அவர்களுடைய இதயங்களில் திரையைப் போட்டிருக்கின்றோம். இதனால் அவர்கள் அதனைக் கொஞ்சமும் புரிந்துகொள்வதில்லை. மேலும், அவர்களுடைய காதுகளை நாம் மந்தமாக்கி விட்டோம். (எல்லாவற்றையும் செவியேற்ற பிறகும் எதனையும் செவியேற்காதவர்கள் போல் இருக்கின்றார்கள்.) அவர்கள் எந்த ஒரு சான்றினைப் பார்த்தாலும் அதன்மீது நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எந்த அளவுக்கெனில், உம்மிடம் வந்து அவர்கள் தர்க்கம் புரியும்போது அவர்களில் யார் நிராகரித்திட வேண்டுமென முடிவு செய்துள்ளார்களோ, அவர்கள் (இந்த அறிவுரைகள் அனைத்தையும் கேட்ட பின்பும்) “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை!” என்று தான் கூறுகிறார்கள்.
6:25. (நபியே!) மேலும், அவர்களில் சிலர் உம்பால் (உமது உபதேசங்களை) செவியேற்பவர்கள் போன்று நடிப்பார்கள், மேலும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்ளாதிருக்கும்படி, அவர்களுடைய இதயங்களில் திரைகளையும், அவர்களுடைய காதுகளில் (பயனுள்ளதைக்கேட்காத) செவிடையும் நாம் ஏற்படுத்தி விட்டோம், இன்னும், அத்தாட்சிகளை (கண்கூடாக)க் கண்டாலும், அவற்றை அவர்கள் நம்பவேமாட்டார்கள், (நபியே!) முடிவாக அவர்கள் உம்மிடம் வந்தால் உம்முடன் வாதாடுவார்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி (வேறு) இல்லை” என்றே நிராகரித்துக் கொண்டிருப்போர் கூறுவார்கள்.
6:26
6:26 وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْــٴَــوْنَ عَنْهُ‌ۚ وَاِنْ يُّهْلِكُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ‏
وَهُمْ அவர்கள் يَنْهَوْنَ தடுக்கின்றனர் عَنْهُ இதிலிருந்து وَيَنْــٴَــوْنَ இன்னும் தூரமாகின்றனர் عَنْهُ‌ۚ இதை விட்டு وَاِنْ يُّهْلِكُوْنَ அவர்கள் அழித்துக் கொள்வதில்லை اِلَّ தவிர اَنْفُسَهُمْ தங்களை وَمَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
6:26. மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.
6:26. அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்.
6:26. அவர்கள் இந்த சத்தியத்தை ஏற்கவிடாமல் (மக்களையும்) தடுக்கிறார்கள்; தாமும் இதை விட்டு விலகி ஓடுகிறார்கள். (இவ்வாறு செய்வதனால் அவர்கள் உமக்கு ஏதோ தீங்கு இழைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றனர்.) உண்மையில் அவர்கள் தங்களைத் தாங்களே அழிவுக்குள்ளாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அதைப்பற்றி அவர்கள் உணர்வதில்லை.
6:26. அன்றியும், அவர்கள் (மற்றவர்களையும்) இக்(குர் ஆனை கேட்ப)திலிருந்து தடுக்கிறார்கள், தாங்களும் இதைவிட்டு தூரமாகிக்கொள்கிறார்கள், (இதனால்) அவர்கள் தங்களையே அல்லாது வேறு எவரையும் நாசமாக்கிக் கொள்வதில்லை, இன்னும் (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
6:27
6:27 وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلَى النَّارِ فَقَالُوْا يٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِاٰيٰتِ رَبِّنَا وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது وُقِفُوْا நிறுத்தப்பட்டனர் عَلَى النَّارِ நரகத்தின் முன் فَقَالُوْا கூறுவார்கள் يٰلَيْتَنَا نُرَدُّ நாங்கள் திருப்பப்பட வேண்டுமே وَلَا نُكَذِّبَ பொய்ப்பிக்க மாட்டோமே بِاٰيٰتِ வசனங்களை رَبِّنَا எங்கள் இறைவனின் وَنَكُوْنَ இன்னும் ஆகிவிடுவோமே مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
6:27. நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், “எங்கள் கேடே! நாங்கள் திரும்ப (உலகத்திற்கு) அனுப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்களாக இருப்போம்” எனக் கூறுவதைக் காண்பீர்.
6:27. (நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்'' என்று அவர்கள் புலம்புவார்கள்.
6:27. அந்தோ! நரகத்தின் விளிம்பில் அவர்கள் நிறுத்தப்படும்போது அந்நிலையை நீர் பார்க்க வேண்டுமே! அந்நேரத்தில் “அந்தோ! நாங்கள் உலகிற்குத் திரும்பிச் செல்ல ஒரு வாய்ப்புக் கிடைக்காதா? (அவ்வாறு கிடைத்தால்) எங்களுடைய இறைவனின் சான்றுகளைப் பொய்யென்று வாதிடாமல், இறைநம்பிக்கை கொண்டவர்களாக திகழ்ந்திருப்போமே!” என்று அவர்கள் புலம்புவார்கள்.
6:27. (நரக) நெருப்பின் மீது அவர்கள் நிறுத்தப்படும்பொழுது (நபியே) நீர் (அவர்களைப்) பார்ப்பீராயின், “நாங்கள் (உலகத்திற்குத்) திரு(ம்ப அனு)ப்பப்பட வேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இரட்சகனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்கவும் மாட்டோமே, இன்னும், விசுவாசிகளில் நாங்கள் ஆகிவிடுவோமே” என்று அவர்கள் கூறுவார்கள்.
6:28
6:28 بَلْ بَدَا لَهُمْ مَّا كَانُوْا يُخْفُوْنَ مِنْ قَبْلُ‌ؕ وَلَوْ رُدُّوْا لَعَادُوْا لِمَا نُهُوْا عَنْهُ وَاِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏
بَلْ அல்ல بَدَا வெளிப்படும் لَهُمْ அவர்களுக்கு مَّا எது كَانُوْا இருந்தனர் يُخْفُوْنَ மறைக்கிறார்கள் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் وَلَوْ رُدُّوْا அவர்கள் திருப்பப்பட்டால் لَعَادُوْا மீளுவார்கள் لِمَا எதற்கு نُهُوْا தடுக்கப்பட்டனர் عَنْهُ அதை விட்டு وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
6:28. எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது; இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
6:28. (இதுவும் அவர்கள் மனமாறக் கூறவில்லை) மாறாக! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
6:28. அவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், முன்பு எந்த உண்மையை அவர்கள் மூடிமறைத்திருந்தார்களோ அந்த உண்மை அப்போது அவர்கள் முன்னால் எந்தத் திரையுமின்றி தெளிவாகி விட்டிருக்கும். ஒருவேளை அவர்கள் முந்திய வாழ்க்கைக்கே திரும்ப அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்டிருந்த செயல்களையே மீண்டும் செய்வார்கள். திண்ணமாக, அவர்கள் பொய்யர்கள்தாம்!
6:28. அவ்வாறல்ல! இதற்கு முன்னர் அவர்கள் (தங்களுக்குள்) மறைத்து வைத்துக்கொண்டிருந்ததே அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது, (ஏனென்றால்) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்ட போதிலும், எதைவிட்டுத் தடுக்கப்பட்டார்களோ அதன் பக்கமே திரும்புவார்கள், இன்னும், நிச்சயமாக அவர்கள், பொய்யர்களாவர்.
6:29
6:29 وَقَالُوْۤا اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ‏
وَقَالُوْۤا இன்னும் கூறினர் اِنْ இல்லை هِىَ இது اِلَّا தவிர حَيَاتُنَا நம் வாழ்க்கை الدُّنْيَا உலகம் وَمَا இன்னும் இல்லை نَحْنُ நாம் بِمَبْعُوْثِيْنَ‏ எழுப்பப்படுபவர்களாக
6:29. அன்றியும், “இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை; நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
6:29. மேலும், ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழ்வதைத் தவிர (நாம் இறந்த பின் நமக்கு வேறு வாழ்க்கை) இல்லை; ஆகவே, (இறந்தபின்) நாம் உயிர்ப்பிக்கப்பட மாட்டோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
6:29. (ஆகையால்தான் ‘உலகிற்குத் திரும்ப அனுப்பப்பட்டால் நம்பிக்கை கொள்வோம்’ என்று பொய் சொல்கிறார்கள். இவ்வுலகில்) அவர்கள் கூறுகிறார்கள்: “வாழ்க்கை என்பது நம்முடைய இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான். மேலும், நாம் இறந்த பிறகு ஒருபோதும் திரும்ப எழுப்பப்பட மாட்டோம்.”
6:29. அன்றியும், “இது நம்முடைய இவ்வுலக வாழ்வைத் தவிர (இறந்தபின் வேறு வாழ்க்கை) இல்லை, (இறந்த பின்) நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) எழுப்பப்படுகிறவர்களுமல்லர்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
6:30
6:30 وَلَوْ تَرٰٓى اِذْ وُقِفُوْا عَلٰى رَبِّهِمْ‌ ؕ قَالَ اَلَـيْسَ هٰذَا بِالْحَـقِّ‌ ؕ قَالُوْا بَلٰى وَرَبِّنَا‌ ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது وُقِفُوْا நிறுத்தப்பட்டனர் عَلٰى رَبِّهِمْ‌ ؕ தங்கள் இறைவனுக்கு முன் قَالَ கூறுவான் اَلَـيْسَ இல்லையா? هٰذَا இது بِالْحَـقِّ‌ ؕ உண்மை قَالُوْا கூறுவர் بَلٰى ஏனில்லை وَرَبِّنَا‌ ؕ எங்கள் இறைவன் சத்தியமாக قَالَ கூறுவான் فَذُوْقُوا ஆகவே சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால்
6:30. இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று; ”ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)” என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
6:30. (இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீர் அவர்களைக்) காண்பீராயின்! (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி, ‘‘விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?'' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள், ‘‘எங்கள் இறைவனே! உண்மைதான்'' எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ‘‘(இதை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.
6:30. அவர்கள் தம் அதிபதியின் திருமுன் நிறுத்தப்படும் காட்சியை நீர் காணவேண்டுமே! அப்போது அவன் அவர்களிடம் வினவுவான்: “இது உண்மை அல்லவா?” அதற்கவர்கள், “ஆம், எங்கள் அதிபதியே, இது உண்மையேதான்” என பதில் கூறுவார்கள். அதற்கு அவன் கூறுவான்: “சரி, நீங்கள் இந்த உண்மையை நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்!”
6:30. மேலும், அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டுத்) தங்கள் இரட்சகன் முன் நிறுத்தப்படும் பொழுது (நபியே! அவர்களை) நீர் காண்பீராயின், (அது சமயம் அவர்களிடம், “விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?” என்று அவன் கேட்பான், அ(தற்க)வர்கள், “ஆம்! எங்கள் இரட்சகன் மீது ஆணையாக (உண்மை தான்) எனக் கூறுவார்கள், அ(தற்க)வன், (“இதனை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” என்று கூறுவான்.
6:31
6:31 قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمُ السَّاعَةُ بَغْتَةً قَالُوْا يٰحَسْرَتَنَا عَلٰى مَا فَرَّطْنَا فِيْهَا ۙ وَهُمْ يَحْمِلُوْنَ اَوْزَارَهُمْ عَلٰى ظُهُوْرِهِمْ‌ؕ اَلَا سَآءَ مَا يَزِرُوْنَ‏
قَدْ خَسِرَ நஷ்டமடைந்து விட்டனர் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِلِقَآءِ சந்திப்பை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் حَتّٰٓى முடிவில் اِذَا போது جَآءَتْهُمُ வந்துவிடும் السَّاعَةُ காலம் بَغْتَةً திடீரென قَالُوْا கூறுவர் يٰحَسْرَتَنَا எங்கள் துக்கமே عَلٰى இல் مَا எவை فَرَّطْنَا குறைசெய்தோம் فِيْهَا ۙ அவற்றில் وَهُمْ அவர்களுமோ يَحْمِلُوْنَ சுமப்பார்கள் اَوْزَارَ பாவங்களை هُمْ தங்கள் عَلٰى ظُهُوْرِهِمْ‌ؕ மீது/முதுகுகள்/தங்கள் اَلَا அறிந்து கொள்ளுங்கள் سَآءَ கெட்டுவிட்டது مَا எது يَزِرُوْنَ‏ சுமப்பார்கள்
6:31. ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
6:31. (ஆகவே,) எவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டும் என்பதைப் பொய்யாக்குகின்றனரோ அவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர். (எதிர்பாராதவாறு) திடீரென அவர்களுக்கு (விசாரணைக்) காலம் (என்ற மறுமை) வந்துவிட்டால், அவர்கள் தங்கள் பாவச் சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக, இ(ந்த வேதத்)தை நாங்கள் நம்பாத (குற்றத்)தால் எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே!'' என்று புலம்புவார்கள். அவர்கள் சுமந்து கொண்டிருப்பவை மிகக் கெட்டவை அல்லவா?
6:31. அல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதைப் பொய் என்று வாதிட்டவர்கள் பேரிழப்புக்குள்ளாகி விட்டார்கள். எந்த அளவுக்கு எனில், அந்நேரம் திடீரென்று வந்துவிடும்போது, “ஐயகோ! இவ்விஷயத்தில் நாம் எத்தகைய குறைபாடுகளைச் செய்து விட்டோம்” என்று இவர்கள் புலம்புவார்கள். அப்பொழுது அவர்களின் நிலை எப்படி இருக்கும் எனில், தங்களுடைய பாவச்சுமைகளைத் தங்களுடைய முதுகுகளில் சுமந்தவாறு இருப்பார்கள். பாருங்கள்! அவர்கள் சுமந்து கொண்டிருப்பது எத்துணைக் கெட்டது!
6:31. (ஆகவே மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர், முடிவாக, அவர்களுக்கு மறுமை நாள் திடீரென வந்துவிட்டால், அவர்களோ தங்கள் பாவச்சுமைகளைத் தங்கள் முதுகுகளின் மீது சுமந்தவர்களாக “அ(வ்வுலகத்)தில் நாங்கள் செய்யத்தவறி விட்டவைகளின் மீது, எங்களுக்கு ஏற்பட்ட கைசேதமே!” என்று கூறுவார்கள், தெரிந்து கொள்ளுங்கள், அவர்கள் சுமந்து கொண்டிருப்பது மிகக் கெட்டதாகிவிட்டது.
6:32
6:32 وَ مَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَ مَا الْحَيٰوةُ இல்லை/வாழ்வு الدُّنْيَاۤ உலகம் اِلَّا தவிர لَعِبٌ விளையாட்டு وَّلَهْوٌ‌ ؕ இன்னும் கேளிக்கை وَلَـلدَّارُ வீடுதான் الْاٰخِرَةُ மறுமை خَيْرٌ மிக மேலானது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு يَتَّقُوْنَ‌ؕ அஞ்சுகிறார்கள் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
6:32. உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
6:32. இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை! எனினும் இறையச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
6:32. உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையுமே அன்றி வேறில்லை. உண்மையில், எவர்கள் தீய நடத்தையைத் தவிர்க்க விரும்புகின்றார்களோ அவர்களுக்கு மறுமை இல்லமே மிகவும் நலமுடையதாயிருக்கும். அவ்வாறிருக்க, நீங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தமாட்டீர்களா?
6:32. மேலும், இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும், பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடாகிறது மேலானதாகும், நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளமாட்டீர்களா?
6:33
6:33 قَدْ نَـعْلَمُ اِنَّهٗ لَيَحْزُنُكَ الَّذِىْ يَقُوْلُوْنَ‌ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰـكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ‏
قَدْ திட்டமாக نَـعْلَمُ அறிவோம் اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَيَحْزُنُكَ கவலையளிக்கிறது/உமக்கு الَّذِىْ எது يَقُوْلُوْنَ‌ கூறுவார்கள் فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا இல்லை يُكَذِّبُوْنَكَ உம்மை பொய்ப்பிப்பது وَلٰـكِنَّ எனினும் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்கள் بِاٰيٰتِ اللّٰهِ அல்லாஹ்வின் வசனங்களை يَجْحَدُوْنَ‏ மறுக்கின்றனர்
6:33. (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
6:33. (நபியே! உம்மைப் பொய்யரென) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்குக் கவலையைத் தருகிறது என்பதை உறுதியாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை. ஆனால், இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்யாக்கி) நிராகரிக்கின்றனர்.
6:33. (நபியே!) இவர்கள் (புனைந்து) கூறுபவை திண்ணமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மையில் அவர்கள் உம்மைப் பொய்யரென்று தூற்றவில்லை; மாறாக அல்லாஹ்வின் வசனங்களையே இவ்வக்கிரமக்காரர்கள் மறுக்கின்றனர்.
6:33. (நபியே! உம்மைப் பொய்யரென) நிச்சயமாக அவர்கள் கூறிக்கொண்டிருப்பது உமக்குக் கவலையைத் தருகின்றது என்பதைத் திட்டமாக நாம் அறிவோம், ஆகவே, நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை, எனினும், அந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே பொய்யாக்கி மறுக்கின்றனர்.
6:34
6:34 وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰٮهُمْ نَصْرُنَا‌ ۚ وَلَا مُبَدِّلَ لِكَلِمٰتِ اللّٰهِ‌ ۚ وَلَقَدْ جَآءَكَ مِنْ نَّبَاِى الْمُرْسَلِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக كُذِّبَتْ பொய்ப்பிக்கப்பட்டனர் رُسُلٌ (பல) தூதர்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَصَبَرُوْا பொறுத்தனர் عَلٰى மீது مَا எது كُذِّبُوْا பொய்ப்பிக்கப்பட்டனர் وَاُوْذُوْا இன்னும் துன்புறுத்தப்பட்டனர் حَتّٰٓى வரை اَتٰٮهُمْ வந்தது/அவர்களுக்கு نَصْرُنَا‌ ۚ நம் உதவி وَلَا அறவே இல்லை مُبَدِّلَ மாற்றுபவர் لِكَلِمٰتِ வாக்குகளை اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் وَلَقَدْ திட்டமாக جَآءَكَ வந்துள்ளது/உமக்கு مِنْ نَّبَاِى செய்தியில் சில الْمُرْسَلِيْنَ‏ தூதர்களின்
6:34. உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர் அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப் பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது; (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.
6:34. உங்களுக்கு முன்னிருந்த (நமது பல) தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே, நபியே! நீரும் அவ்வாறே பொறுத்திருப்பீராக.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உமக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உம்மிடம் வந்தே இருக்கின்றன.
6:34. உமக்கு முன்னரும் தூதர்கள் பலர் பொய்யரென்று தூற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், நம்முடைய உதவி அவர்களிடம் வரும் வரை, பொய்யர்கள் என்று தாம் தூற்றப்பட்டதையும் பொறுமையுடன் அவர்கள் சகித்துக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுவதற்கான வல்லமையுடையவர் எவருமிலர். இன்னும் முந்திய நபிமார்(களுக்கு ஏற்பட்ட நிலைமை)களின் செய்திகள் உமக்குக் கிடைத்தே உள்ளன.
6:34. (நபியே!) திட்டமாக உமக்கு முன் (நம்முடைய) தூதர்களும்(இவ்வாறே) பொய்யாக்கப்பட்டனர், தாம் பொய்யாக்கப்பட்டதன் மீதும், துன்புறுத்தப்பட்டதன் மீதும், அவர்களுக்கு நம்முடைய உதவி வரும் வரையில் அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர், அல்லாஹ்வுடைய வார்த்தை (பேச்சுக்)களை மாற்றுகிறவர் எவரும் இல்லை, (நம்) தூதர்களின் (இத்தகைய) செய்தி திட்டமாக உம்மிடம் வந்துமிருக்கிறது.
6:35
6:35 وَاِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ اِعْرَاضُهُمْ فَاِنِ اسْتَطَعْتَ اَنْ تَبْتَغِىَ نَفَقًا فِى الْاَرْضِ اَوْ سُلَّمًا فِى السَّمَآءِ فَتَاْتِيَهُمْ بِاٰيَةٍ‌ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدٰى فَلَا تَكُوْنَنَّ مِنَ الْجٰهِلِيْنَ‏
وَاِنْ كَانَ இருந்தால் كَبُرَ பெரிதாக عَلَيْكَ உமக்கு اِعْرَاضُهُمْ அவர்களின் புறக்கணிப்பு فَاِنِ اسْتَطَعْتَ நீர் இயன்றால்... اَنْ تَبْتَغِىَ நீர் தேடுவது نَفَقًا ஒரு சுரங்கத்தை فِى الْاَرْضِ பூமியில் اَوْ அல்லது سُلَّمًا ஒர் ஏணியை فِى السَّمَآءِ வானத்தில் فَتَاْتِيَهُمْ நீர் வருவதற்கு/அவர்களுக்கு بِاٰيَةٍ‌ ؕ ஓர் அத்தாட்சியைக் கொண்டு وَلَوْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் لَجَمَعَهُمْ ஒன்றுசேர்த்திருப்பான் /அவர்களை عَلَى الْهُدٰى நேர்வழியில் فَلَا تَكُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடாதீர் مِنَ الْجٰهِلِيْنَ‏ அறியாதவர்களில்
6:35. (நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
6:35. (நபியே!) அவர்கள் (உம்மைப்) புறக்கணிப்பது உமக்குப் பெரும் சிரமமாகத் தோன்றினால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கமிட்டு(ச் சென்றோ) அல்லது வானத்தில் ஓர் ஏணி வைத்து (ஏறியோ அவர்கள் விருப்பப்படி) அத்தாட்சி ஒன்றை நீர் அவர்களுக்குக் கொண்டு வருவீராக. (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்.) எனினும், அல்லாஹ் நாடினால், அவர்கள் அனைவரையும் நேரான வழியில் ஒன்று சேர்த்து விடுவான். ஆகவே, ஒருபோதும் நீர் அறியாதவர்களுடன் சேர்ந்துவிட வேண்டாம்.
6:35. இருப்பினும் இம்மக்கள் புறக்கணிப்பதை உம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால், உமக்கு வலிமையிருக்குமாயின் பூமியில் சுரங்க வழியைத் தேடியோ, வானில் ஏணிவைத்து ஏறியோ ஏதேனும் ஒரு சான்றினை நீர் அவர்களிடம் கொண்டுவர முயற்சி செய்வீராக! அல்லாஹ் நாடியிருந்தால் நிச்சயமாக அவர்கள் எல்லோரையும் நேர்வழியில் ஒன்று திரட்டியிருப்பான். எனவே அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிடாதீர்.
6:35. இன்னும் (நபியே!) அவர்களுடைய புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தோன்றினால், பூமியில் (அதன் ஆழத்தில் செல்ல) ஒரு சுரங்கத்தையோ அல்லது வானத்தில் (ஏறிச்செல்ல) ஒரு ஏணியையோ தேடிக் கொள்வதற்கும், பின்னர் (அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை நீர் அவர்களுக்குக்கொண்டு வருவதற்கும் நீர் சக்திபெற்றால்-(அவ்வாறு செய்வீராக! அப்போதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டுதானிருப்பார்கள்) இன்னும், அல்லாஹ் நாடினால் அவர்களை நேர் வழியின்மீது ஒன்று சேர்த்து விடுவான், ஆகவே, நிச்சயமாக அறிவில்லாதவர்களில் (ஒருவராக) நீர் ஆகிவிட வேண்டாம்.
6:36
6:36 اِنَّمَا يَسْتَجِيْبُ الَّذِيْنَ يَسْمَعُوْنَ‌ ؕؔ وَالْمَوْتٰى يَـبْعَثُهُمُ اللّٰهُ ثُمَّ اِلَيْهِ يُرْجَعُوْنَؔ‏
اِنَّمَا எல்லாம் يَسْتَجِيْبُ ஏற்றுக் கொள்வார் الَّذِيْنَ எவர்கள் يَسْمَعُوْنَ‌ ؕؔ செவிசாய்ப்பார்கள் وَالْمَوْتٰى இறந்தவர்கள் يَـبْعَثُهُمُ எழுப்புவான்/அவர்களை اللّٰهُ அல்லாஹ் ثُمَّ பிறகு اِلَيْهِ அவனிடமே يُرْجَعُوْنَؔ‏ திருப்பப்படுவார்கள்
6:36. (சத்தியத்திற்கு) செவிசாய்ப்போர் தாம் நிச்சயமாக உம் உபதேசத்தை ஏற்றுக் கொள்வார்கள்; (மற்றவர்கள் உயிரற்றவர்களைப் போன்றோரே!) இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பித்து எழுப்புவான்; பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
6:36. எவர்கள் (உமக்குச்) செவிசாய்க்கக்கூடிய (உயிருள்ள)வர்களாக இருக்கின்றனரோ அவர்கள்தான் (உம்மை) ஏற்றுக்கொள்வார்கள். (ஆனால், இந்த நிராகரிப்பாளர்களோ செவிமடுக்க முடியாத இறந்தவர்களைப் போலவே இருக்கின்றனர்.) ஆகவே, இறந்தவர்களை (மறுமையில் தான்) அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டுவரப்படுவார்கள்.
6:36. செவியுறுபவர்கள்தாம் சத்திய அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள். இறந்து போனவர்களை அல்லாஹ் (அடக்கத் தலங்களிலிருந்து) எழுப்பியே தீருவான். பிறகு அவர்கள் அவனிடமே (நீதி விசாரணைக்காக) கொண்டு வரப்படுவார்கள்.
6:36. (உமதழைப்பிற்கு) பதில் கூறுபவரெல்லாம் (உமக்குச்) செவியேற்கிறார்களே, அவர்கள் தாம், (இவர்களோ செவியேற்க முடியாத இறந்தவர்களைப் போலவேயிருக்கின்றனர்) இன்னும் இறந்தவர்கள் - அவர்களை (மறுமையில்தான்) அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான், பின்னர் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.
6:37
6:37 وَ قَالُوْا لَوْلَا نُزِّلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖ‌ؕ قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰٓى اَنْ يُّنَزِّلَ اٰيَةً وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَ قَالُوْا கூறினர் لَوْلَا نُزِّلَ இறக்கப்பட வேண்டாமா عَلَيْهِ அவர் மீது اٰيَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّهٖ‌ؕ அவருடைய இறைவன் قُلْ கூறுவீராக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் قَادِرٌ ஆற்றலுடையவன் عَلٰٓى மீது اَنْ يُّنَزِّلَ அவன் இறக்குவது اٰيَةً ஓர் அத்தாட்சியை وَّلٰـكِنَّ எனினும் اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானோர் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
6:37. (நமது விருப்பம் போல்) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க வல்லமையுடையவனே; எனினும் அவர்களில் பெரும்பாலோர் அதை அறிந்து கொள்வதில்லை”
6:37. (‘‘நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவருடைய இறைவன் அவர்மீது இறக்கிவைக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீர் கூறுவீராக: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதை) அறிந்து கொள்வதில்லை.
6:37. ‘இந்த நபி மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனுமொரு சான்று இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?’ என்று அவர்கள் வினவுகிறார்கள். நீர் கூறும்: “சான்றினை இறக்குவதற்கு அல்லாஹ் முழு ஆற்றல் பெற்றவன்தான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமையில் இருக்கின்றார்கள்.”
6:37. “(நம் விருப்பப் பிரகாரம்) அவருடைய இரட்சகனிடமிருந்து அவர்மீது ஓர் அத்தாட்சி இறக்கப்பட்டிருக்கக்கூடாதா?” என்றும் அவர்கள் கேட்கின்றனர், (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக!” (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கி வைக்க நிச்சயமாக அல்லாஹ் சக்தியுடையவன், (அவ்வாறு இறக்கியும் வைத்துள்ளான்.) எனினும், அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டார்கள்.
6:38
6:38 وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُـكُمْ‌ؕ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ‌ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ‏
وَمَا இல்லை مِنْ دَآبَّةٍ ஓர் ஊர்வன فِى الْاَرْضِ பூமியில் وَلَا இன்னும் இல்லை طٰۤٮِٕرٍ பறவை يَّطِيْرُ பறக்கும் بِجَنَاحَيْهِ தன் இரு இறக்கைகள் اِلَّاۤ தவிர اُمَمٌ படைப்புகளே اَمْثَالُـكُمْ‌ؕ உங்களைப் போன்ற(வர்கள்) مَا فَرَّطْنَا நாம் விடவில்லை فِى الْـكِتٰبِ புத்தகத்தில் مِنْ இருந்து شَىْءٍ‌ எதையும் ثُمَّ பிறகு اِلٰى رَبِّهِمْ தங்கள் இறைவனிடம் يُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவார்கள்
6:38. பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
6:38. பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்.
6:38. பூமியில் வாழும் எல்லாப் பிராணிகளும், தன் இரு சிறகுகளின் துணைகொண்டு பறந்து செல்லும் எல்லாப் பறவைகளும் உங்களைப் போன்ற உயிரினங்களாகவே இருக்கின்றன (என்பதைக் கவனியுங்கள்). நாம் அவர்களைப் பற்றிப் பதிவு செய்வதில் யாதொரு குறையையும் வைக்கவில்லை. பிறகு இவர்கள் அனைவரும் தம் இறைவனிடமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
6:38. மேலும், பூமியில் ஊர்ந்து திரிகிறதும், தம்முடைய இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக்கூடிய பறவையும், உங்களைப்போன்ற (ஜீவனுள்ள) இனங்களேயன்றி வேறில்லை, (இவைகளில்) எதையும் (நம்முடைய பதிவுப்) புத்தகத்தில் (-லவ்ஹுல் மஹ்ஃபூலில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை, பின்னர், (ஒரு நாளில் யாவரும்) தம் இரட்சகனின் பக்கம் ஒன்று திரட்டப்படுவர்.
6:39
6:39 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِ‌ؕ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ ؕ وَمَنْ يَّشَاْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை صُمٌّ செவிடர்கள் وَّبُكْمٌ இன்னும் ஊமையர்கள் فِى الظُّلُمٰتِ‌ؕ இருள்களில் مَنْ எவரை يَّشَاِ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் يُضْلِلْهُ அவரை வழிகெடுக்கிறான் وَمَنْ இன்னும் எவரை يَّشَاْ நாடுகிறான் يَجْعَلْهُ ஆக்குகிறான்/அவரை عَلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍ‏ நேரானது
6:39. நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
6:39. எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டுவிடுகிறான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
6:39. ஆயினும் எவர்கள் நம்முடைய சான்றுகளைப் பொய் என வாதிடுகின்றார்களோ அவர்கள் செவிடர்களாயும், ஊமையர்களாயும் இருள்களில் உழன்று கொண்டுமிருக்கின்றார்கள். தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் வழிகேட்டில் சிக்கவைக்கிறான். மேலும் தான் நாடுகின்றவர்களை நேர்வழியில் செலுத்துகின்றான்.
6:39. இன்னும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றனரே அவர்கள், இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர், அல்லாஹ் எவரை நாடுகிறானோ அவரைத் தவறான வழியிற் செல்ல விட்டு விடுகின்றான், இன்னும், எவரை அவன் நாடுகிறானோ அவரை நேரான வழியில் ஆக்குகின்றான்.
6:40
6:40 قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰٮكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَ تَتْكُمُ السَّاعَةُ اَغَيْرَ اللّٰهِ تَدْعُوْنَ‌ۚ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتَكُمْ அறிவியுங்கள் اِنْ اَتٰٮكُمْ வந்தால் / உங்களுக்கு عَذَابُ اللّٰهِ அல்லாஹ்வின் வேதனை اَوْ அல்லது اَ تَتْكُمُ வந்தால் / உங்களுக்கு السَّاعَةُ காலம் اَغَيْرَ அல்லாதவர்களையா? اللّٰهِ அல்லாஹ் تَدْعُوْنَ‌ۚ அழைப்பீர்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
6:40. (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?
6:40. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்துவிட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறுகின்ற) நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவற்றையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்).
6:40. இவர்களிடம் நீர் கூறும்: “அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் பெருந் துன்பம் உங்களுக்கு வந்துவிடும்போது அல்லது உங்களுக்கு இறுதி நேரம் வந்துவிடும்போது அப்போது அல்லாஹ்வை அன்றி வேறு ஒருவரையா அழைக்கிறீர்கள்? நீங்கள் வாய்மையுடையோராயின் சற்று சிந்தித்துக் கூறுங்கள்!
6:40. (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்து விட்டால், அல்லது உங்களுக்கு மறுமைநாள் வந்து விட்டால், அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்?” என்பதை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள்.
6:41
6:41 بَلْ اِيَّاهُ تَدْعُوْنَ فَيَكْشِفُ مَا تَدْعُوْنَ اِلَيْهِ اِنْ شَآءَ وَتَنْسَوْنَ مَا تُشْرِكُوْنَ‏
بَلْ மாறாக اِيَّاهُ அவனையே تَدْعُوْنَ அழைப்பீர்கள் فَيَكْشِفُ அகற்றுவான் مَا எதை تَدْعُوْنَ அழைக்கிறீர்கள் اِلَيْهِ அதன் பக்கம் اِنْ شَآءَ அவன் நாடினால் وَتَنْسَوْنَ இன்னும் மறந்து விடுவீர்கள் مَا எவற்றை تُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறீர்கள்
6:41. “அப்படியல்ல! - அவனையே நீங்கள் அழைப்பீர்கள்; அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான், இன்னும் (அவனுடன்) இணை வைத்திருந்தவற்றை நீங்கள் மறந்து விடுவீர்கள்.
6:41. அவ்வாறன்று! நீங்கள் இணைவைத்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு அவனையே அழைப்பீர்கள். நீங்கள் எ(வ்வேதனையை நீக்குவ)தற்காக அவனை அழைப்பீர்களோ அதை அவன் விரும்பினால் நீக்கியும் விடுவான்.
6:41. உண்மையில் நீங்கள் அல்லாஹ்வையே அழைக்கின்றீர்கள்; பிறகு எதற்காக அவனை அழைக்கின்றீர்களோ அத்துன்பத்தை அவன் நாடினால் (உங்களை விட்டு) நீக்கி விடுகின்றான். இறைவனோடு நீங்கள் இணைவைக்கும் கடவுள்களை (இத்தகைய சந்தர்ப்பங்களில்) மறந்து விடுகின்றீர்கள்.”
6:41. அவ்வாறன்று! (அந்நேரத்தில்) அவனையே நீங்கள் அழைப்பீர்கள், அது சமயம் எதற்காக நீங்கள் அழைத்தீர்களோ அதை அவன் நாடினால் நீக்கிவிடுவான், நீங்கள் (அந்த அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தவற்றை மறந்தும் விடுவீர்கள்.
6:42
6:42 وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰٓى اُمَمٍ مِّنْ قَبْلِكَ فَاَخَذْنٰهُمْ بِالْبَاْسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَاۤ அனுப்பினோம் اِلٰٓى பக்கம் اُمَمٍ (பல) சமுதாயங்கள் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَاَخَذْنٰهُمْ பிடித்தோம்/அவர்களை بِالْبَاْسَآءِ வறுமையைக் கொண்டு وَالضَّرَّآءِ இன்னும் நோய் لَعَلَّهُمْ يَتَضَرَّعُوْنَ‏ அவர்கள் பணிவதற்காக
6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.
6:42. (நபியே!) உமக்கு முன்னிருந்த பல வகுப்பினருக்கும் நாம் (நம் தூதர்களை) நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும் அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே,) அவர்கள் பணிந்து வருவதற்காக நோயைக் கொண்டும், வறுமையைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.
6:42. (நபியே!) உமக்கு முன்னரும் பல சமூகத்தாரிடம் நாம் தூதர்களை அனுப்பியிருந்தோம். மேலும், அச்சமூகத்தார் நமக்குப் பணிந்திட வேண்டும் என்பதற்காக அவர்களைத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாக்கினோம்.
6:42. இன்னும் (நபியே!) உமக்கு முன்னர் பல சமூகத்தார்க்கும் நாம் (நம்முடைய) தூதர்களை நிச்சயமாக அனுப்பி வைத்தோம், (எனினும், அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர், ஆகவே) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும் நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்.
6:43
6:43 فَلَوْلَاۤ اِذْ جَآءَهُمْ بَاْسُنَا تَضَرَّعُوْا وَلٰـكِنْ قَسَتْ قُلُوْبُهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
فَلَوْلَاۤ வேண்டாமா? اِذْ போது جَآءَهُمْ வந்தது/அவர்களுக்கு بَاْسُنَا நம் வேதனை تَضَرَّعُوْا பணிந்தனர் وَلٰـكِنْ எனினும் قَسَتْ இறுகின قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய وَزَيَّنَ இன்னும் அலங்கரித்தான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் مَا எதை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்கின்றனர்
6:43. நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.
6:43. நம் வேதனை அவர்களிடம் வருவதற்குள் அவர்கள் பணிந்துவிட வேண்டாமா? ஆனால், அவர்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவர்கள் செய்து கொண்டிருந் ததையே (-பாவங்களையே) ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டான்.
6:43. ஆனால் நம்மிடமிருந்து இவர்களுக்குத் துன்பங்கள் வந்தபோது இவர்கள் ஏன் பணியவில்லை? உண்மை யாதெனில் இவர்களுடைய உள்ளங்கள் அதிகம் இறுகிவிட்டன. மேலும், இவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்துக் கொண்டிருந்தான்.
6:43. நம் வேதனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் (அதிலிருந்து காத்துக் கொள்ள பிரார்த்தனைகள் செய்து) பணிந்திருக்க வேண்டாமா? ஆனால், அவர்களுடைய இதயங்கள் கல்நெஞ்சாகிவிட்டன, இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளை, ஷைத்தான் அவர்களுக்கு அலங்காரமாகக் காண்பித்துவிட்டான்.
6:44
6:44 فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ ؕ حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏
فَلَمَّا போது نَسُوْا மறந்தனர் مَا எதை ذُكِّرُوْا உபதேசிக்கப் பட்டனர் بِهٖ அதைக் கொண்டு فَتَحْنَا திறந்தோம் عَلَيْهِمْ அவர்களுக்கு اَبْوَابَ வாசல்களை كُلِّ شَىْءٍ ؕ எல்லாவற்றின் حَتّٰٓى முடிவாக اِذَا فَرِحُوْا மகிழ்ச்சியடைந்த போது بِمَاۤ எதைக் கொண்டு اُوْتُوْۤا கொடுக்கப்பட்டனர் اَخَذْنٰهُمْ பிடித்தோம்/அவர்களை بَغْتَةً திடீரென فَاِذَا هُمْ அப்போது அவர்கள் مُّبْلِسُوْنَ‏ நம்பிக்கை இழந்து விடுகிறார்கள்
6:44. அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
6:44. அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
6:44. பின்னர், அவர்களுக்கு போதிக்கப்பட்ட நல்லுரைகளை அவர்கள் மறந்துவிட்டபோது, அருள்வளங்களின் அனைத்து வாயில்களையும் அவர்களுக்காக நாம் திறந்து விட்டோம். எதுவரையெனில், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இன்ப நலன்களில் அவர்கள் திளைத்திருந்தபோது திடீரென்று அவர்களை நாம் பிடித்தோம். அப்போது அவர்கள் முற்றிலும் நிராசை கொண்டோராய் ஆகிவிட்டனர்!
6:44. அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட (நல்லுபதேசத்)தை அவர்கள் மறந்து விடவே, (அவர்களைச் சோதிக்கும் பொருட்டு) ஒவ்வொரு பொருளின் வாயில்களையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம், (அவர்களுக்கு தேவையானவை அனைத்தும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தன) முடிவாக அவர்களுக்குக் கொடுக்கப் பட்டவைகளைக் கொண்டு அவர்கள் ஆனந்தமடைந்துக் கொண்டிருந்த சமயத்தில் (நம் வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரெனப் பிடித்துவிட்டோம், அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாகி விட்டனர்.
6:45
6:45 فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْا‌ ؕ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
فَقُطِعَ ஆகவே அறுக்கப்பட்டது دَابِرُ வேர் الْقَوْمِ கூட்டம் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا‌ ؕ அநியாயமிழைத்தனர் وَالْحَمْدُ புகழ் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
6:45. எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”
6:45. ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த (அந்த) மக்களின் வேர் அறுபட்டுவிட்டது. எல்லாப் புகழும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே!
6:45. இவ்வாறு, அக்கிரமம் செய்த அச்சமுதாயத்தினர் அடியோடு வேரறுக்கப்பட்டார்கள். அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரியதாகும். (அவனே அக்கிரமக்காரர்களை வேரறுத்தான்!)
6:45. ஆகவே, அநியாயம் செய்துகொண்டிருந்த அச்சமூகத்தாரின் வேர் துண்டிக்கப்பட்டுவிட்டது, (அவர்கள் அடியோடு அழிக்கப்பட்டனர்) இன்னும், எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
6:46
6:46 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَخَذَ اللّٰهُ سَمْعَكُمْ وَ اَبْصَارَكُمْ وَخَتَمَ عَلٰى قُلُوْبِكُمْ مَّنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِهؕ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ اَخَذَ எடுத்தால் اللّٰهُ அல்லாஹ் سَمْعَكُمْ கேள்விப்புலனை/உங்கள் وَ اَبْصَارَكُمْ இன்னும் பார்வைகள் / உங்கள் وَخَتَمَ இன்னும் முத்திரையிட்டால் عَلٰى மீது قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்கள் مَّنْ யார்? اِلٰـهٌ வணங்கப்படும்கடவுள் غَيْرُ அல்லாத اللّٰهِ அல்லாஹ் يَاْتِيْكُمْ வருவார்/உங்களுக்கு بِهؕ அதைக் கொண்டு اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை ثُمَّ பிறகு هُمْ அவர்கள் يَصْدِفُوْنَ‏ புறக்கணிக்கின்றனர்
6:46. “அல்லாஹ் உங்களுடைய செவிப்புலனையும், பார்க்கும் சக்தியையும் எடுத்துவிட்டு, உங்கள் இருதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவானானால் - அதை உங்களுக்கு அல்லாஹ்வையன்றி வேறு எந்த இறைவன் கொடுப்பான்? என்று நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; (நம்) அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக; (இவ்வாறு இருந்தும்) பின்னரும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
6:46. ‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
6:46. (நபியே!) நீர் அவர்களிடம் கேளும்: “அல்லாஹ் உங்களின் செவிப்புலனையும் பார்வைப் புலனையும் பறித்து உங்கள் இதயங்களிலும் முத்திரையிட்டுவிட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளால் இவ்வாற்றல்களை உங்களுக்குத் திரும்பத் தர முடியும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?” நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எப்படி வைக்கிறோம் என்பதையும், பிறகு அவர்கள் எவ்வாறெல்லாம் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டே செல்கின்றார்கள் என்பதையும் பாருங்கள்.
6:46. அல்லாஹ் உங்களுடைய செவிப் புலனையும், பார்வைகளையும் பறித்துவிட்டு உங்கள் இதயங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வையன்றி எந்த நாயன் அவைகளை உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பான், என்பதை நீங்கள் (எனக்குத்) தெரிவியுங்கள்” என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக! நம்முடைய ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) நாம் விவரிக்கின்றோம் என்பதையும் நீர் கவனிப்பீராக! (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.
6:47
6:47 قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰٮكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتَكُمْ அறிவியுங்கள் اِنْ اَتٰٮكُمْ வந்தால் / உங்களிடம் عَذَابُ வேதனை اللّٰهِ அல்லாஹ்வின் بَغْتَةً திடீரென اَوْ அல்லது جَهْرَةً வெளிப்படையாக هَلْ يُهْلَكُ அழிக்கப்படுவார்களா? اِلَّا தவிர الْقَوْمُ மக்களை الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
6:47. “திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.
6:47. (நபியே! அவர்களை நோக்கி) கேட்பீராக: ‘‘திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக் கையுடனோ அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா?''
6:47. “திடீரென்றோ முன்னறிவிப்புடனோ அல்லாஹ்வின் தண்டனை உங்களிடம் வந்துவிடுமாயின் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு எவரேனும் அழிக்கப்படுவார்களா? இதனை நீங்கள் எப்பொழுதேனும் சிந்தித்ததுண்டா?” என்று நீர் கேளும்.
6:47. (நபியே! அவர்களை) நீர் கேட்பீராக! “திடீரெனவோ, அல்லது வெளிப்படையாக கண்ணுக்கெதிரிலோ அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்துவிட்டால், (என்னவாகும் என்பதை) நீங்கள் எனக்குக் கூறுங்கள், (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார சமூகத்தாரைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லை, இவர்கள்தான் அழிக்கப்படுவார்கள்).
6:48
6:48 وَمَا نُرْسِلُ الْمُرْسَلِيْنَ اِلَّا مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ‌ۚ فَمَنْ اٰمَنَ وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
وَمَا نُرْسِلُ நாம் அனுப்புவதில்லை الْمُرْسَلِيْنَ தூதர்களை اِلَّا தவிர مُبَشِّرِيْنَ நற்செய்தியாளர்களாக وَمُنْذِرِيْنَ‌ۚ இன்னும் எச்சரிப்பவர்களாக فَمَنْ ஆகவே, எவர்(கள்) اٰمَنَ நம்பிக்கை கொண்டார்(கள்) وَاَصْلَحَ சீர்திருத்தினார்(கள்) فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا இல்லை هُمْ அவர்கள் يَحْزَنُوْنَ‏ கவலைப்படுவார்கள்
6:48. (நன்மையைக் கொண்டு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீமையை விட்டு) எச்சரிக்கை செய்வோராகவுமேயன்றி நாம் தூதர்களை அனுப்பவில்லை; எனவே எவர் நம்பி, சீர்திருந்தி நடந்தார்களோ, அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
6:48. (நன்மையைக் கொண்டு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீமையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவுமே தவிர, (நம்) தூதர்களை நாம் அனுப்பவில்லை. ஆகவே, எவர்கள் (இந்நபியை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
6:48. (நல்லவர்களுக்கு) நற்செய்தி கூறுபவர்களாகவும், (தீயவர்களை) எச்சரிப்பவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தூதர்களை அனுப்புகின்றோம். பிறகு எவர்கள் அத்தூதர்கள் கூறுவனவற்றை ஏற்றுக்கொண்டு, மேலும் தமது நடத்தையைத் திருத்திக்கொள்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
6:48. இன்னும், நன்மாராயம் கூறுகிறவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்களாகவுமே தவிர தூதர்களை நாம் அனுப்பவில்லை, ஆகவே, எவர்கள் (இந்நபியை) விசுவாசித்து, (தங்களைச்) சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் (அது பற்றி) கவலையும் அடைய மாட்டார்கள்.
6:49
6:49 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை يَمَسُّهُمُ பிடிக்கும்/அவர்களை الْعَذَابُ வேதனை بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَفْسُقُوْنَ‏ பாவம் செய்கிறார்கள்
6:49. ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.
6:49. ஆனால், (உங்களில்) எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்)பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக் கொள்ளும்.
6:49. மேலும், நமது திருவசனங்களைப் பொய்யென்று வாதிட்டவர்கள் நமக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்து கொண்டிருந்ததன் காரணமாக தண்டனையை அனுபவித்தே தீருவார்கள்.
6:49. இன்னும், (உங்களில்) நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கினார்களே அத்தகையோர்-அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்காது) பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை வேதனை பிடித்துக் கொள்ளும்.
6:50
6:50 قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ‌ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ‌ ؕ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ‌ ؕ اَفَلَا تَتَفَكَّرُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّاۤ اَقُوْلُ கூறமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு عِنْدِىْ என்னிடம் خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَاۤ اَعْلَمُ இன்னும் அறியமாட்டேன் الْغَيْبَ மறைவானவற்றை وَلَاۤ اَقُوْلُ இன்னும் கூறமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு اِنِّىْ நிச்சயமாக நான் مَلَكٌ‌ ۚ ஒரு வானவர் اِنْ اَتَّبِعُ நான் பின்பற்ற மாட்டேன் اِلَّا தவிர مَا எது يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ‌ ؕ எனக்கு قُلْ கூறுவீராக هَلْ يَسْتَوِى சமமாவார்களா? الْاَعْمٰى குருடர் وَالْبَصِيْرُ‌ ؕ இன்னும் பார்வையுடையவர் اَفَلَا تَتَفَكَّرُوْنَ‏ நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
6:50. (நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?”
6:50. (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கிறதென்று நான் உங்களுக்குக் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியவும் மாட்டேன். உண்மையாகவே நான் ஒரு வானவர் என்று நான் உங்களிடம் கூறவில்லை. எனினும், எனக்கு வஹ்யின் மூலம் அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர (வேறொன்றையும்) நான் பின்பற்றுவது இல்லை'' என்று கூறி, ‘‘குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? (இவ்வளவு கூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'' என்றும் கேட்பீராக.
6:50. (நபியே!) இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், மறைவானவற்றை நான் அறிகிறேன் என்றும் உங்களிடம் நான் கூறவில்லை; மேலும் நான் ஒரு வானவர் என்றும் கூறவில்லை; என் மீது இறக்கியருளப்படுகின்ற வஹியை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன்.” மேலும் நீர் அவர்களிடம் கேளும்: “பார்வையுள்ளவனும் பார்வையற்றவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்கவே மாட்டீர்களா?”
6:50. (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களுக்குக் கூறவில்லை, மறைவானவற்றை நான் அறியவுமாட்டேன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்று நான் உங்களிடம் கூறவுமில்லை, எனக்கு வஹீயின் மூலம் அறிவிக்கப் பட்டவைகளையன்றி (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை” குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா?” என (நபியே) நீர் கேட்பீராக! ஆகவே, நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
6:51
6:51 وَاَنْذِرْ بِهِ الَّذِيْنَ يَخَافُوْنَ اَنْ يُّحْشَرُوْۤا اِلٰى رَبِّهِمْ‌ لَـيْسَ لَهُمْ مِّنْ دُوْنِهٖ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
وَاَنْذِرْ இன்னும் எச்சரிப்பீராக بِهِ இதன் மூலம் الَّذِيْنَ எவர்கள் يَخَافُوْنَ பயப்படுவார்கள் اَنْ يُّحْشَرُوْۤا அவர்கள் ஒன்று திரட்டப்படுவதை اِلٰى رَبِّهِمْ‌ தங்கள் இறைவனிடம் لَـيْسَ இல்லை لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِهٖ அவனைத் தவிர وَلِىٌّ பாதுகாவலர் وَّلَا இன்னும் இல்லை شَفِيْعٌ பரிந்துரைப்பவர் لَّعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
6:51. இன்னும் எவர் தங்கள் இறைவன் முன் (மறுமையில்) கொண்டு வரப்படுவது பற்றி பயப்படுகிறார்களோ அவர்களுக்கு (இவ்வேதத்தைக் கொண்டு) எச்சரிக்கை செய்யும் - (பாவத்திலிருந்து நீங்கி) அவர்கள் பயபக்தியுடையோராகும் பொருட்டு; அவனைத் தவிர அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவரோ, பரிந்து பேசுபவரோ வேறு யாரும் இல்லை.
6:51. (நபியே!) எவர்கள், ‘‘(மறுமையில்) தங்கள் இறைவனிடம் (விசாரணைக்காகக்) கொண்டு போகப்படுவோம், அங்கு அவனைத் தவிர தங்களுக்கு பாதுகாவலரோ பரிந்துரை செய்பவரோ இருக்கமாட்டார்'' என்று பயப்படுகிறார்களோ அவர்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பீராக. அவர்கள் (பாவத்திலிருந்து விலகி) இறைவனை அஞ்சிக்கொள்வார்கள்.
6:51. மேலும், (நபியே!) தங்கள் இறைவன் முன்னிலையில் தாம் கொண்டு வந்து நிறுத்தப்படுவோம் என்றும், அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குப் பாதுகாப்பு அளித்து உதவிபுரிபவரோ, பரிந்துரை செய்பவரோ வேறு யாருமில்லை என்றும் அஞ்சக்கூடிய மக்களுக்கு நீர் இந்த வஹி மூலம் அறிவுரை கூறுவீராக! (இந்த அறிவுரையால் உணர்வு பெற்று) அவர்கள் இறையச்சமுள்ள நடத்தையை மேற்கொள்ளக் கூடும்.
6:51. இன்னும், (நபியே! மறுமையில்) தங்கள் இரட்சகனிடம் ஒன்று திரட்டப்படுவதை பயப்படுகின்றார்களே அத்தகையோரை, (குர் ஆனாகிய) அதனைக் கொண்டு அவர்கள் பயபக்தியுடையோராவதற்காக நீர் எச்சரிக்கை செய்வீராக! அவர்களுக்கு (அந்நாளில்) பாதுகாப்பளிப்பவரோ பரிந்து பேசுபவரோ அவனையன்றி (வேறெவரும்) இல்லை.
6:52
6:52 وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِىِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ‌ ؕ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَىْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ‏
وَلَا تَطْرُدِ விரட்டாதீர் الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ பிரார்த்திப்பார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَدٰوةِ காலையில் وَالْعَشِىِّ இன்னும் மாலையில் يُرِيْدُوْنَ நாடியவர்களாக وَجْهَهٗ‌ ؕ அவனின் முகத்தை مَا عَلَيْكَ உம் மீதில்லையே مِنْ இருந்து حِسَابِهِمْ அவர்களுடைய கணக்கு مِّنْ شَىْءٍ எதுவும் وَّمَا இன்னும் இல்லை مِنْ حِسَابِكَ உம் கணக்கிலிருந்து عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنْ شَىْءٍ எதுவும் فَتَطْرُدَهُمْ நீர் விரட்டுவதற்கு/அவர்களை فَتَكُوْنَ ஆகிவிடுவீர் مِنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில்
6:52. (நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.
6:52. (நபியே!) தங்கள் இறைவனின் திருமுகத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உமது பொறுப்பாகாது. உமது கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீர் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகிவிடுவீர்!
6:52. மேலும், எவர்கள் காலையிலும் மாலையிலும் தங்களுடைய இறைவனைப் பிரார்த்தித்த வண்ணம் இருக்கின்றார்களோ, இன்னும் அவனுடைய உவப்பைத் தேடிய வண்ணம் இருக்கின்றார்களோ அவர்களை நீர் (உம்மை விட்டு) விரட்டி விடாதீர்! அவர்களுடைய கேள்வி கணக்குகளிலிருந்து எந்தச் சுமையும் உங்கள் மீதில்லை; உம்முடைய கேள்வி கணக்கிலிருந்து எந்தச் சுமையும் அவர்கள் மீதில்லை. இதன் பின்னரும் நீர் அவர்களை விரட்டி விட்டால் அக்கிரமக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.
6:52. மேலும், (நபியே!) காலையிலும் - மாலையிலும் தங்களுடைய இரட்சகனை, அவன் திருமுகத்தை நாடிக்கொண்டு அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருப்போரை நீர் விரட்டிவிட வேண்டாம், அவர்களுடைய கணக்கிலிருந்து யாதொன்றும் உம்மீது (பொறுப்பாக) இல்லை, உம்முடைய கணக்கிலிருந்து யாதொன்றும் அவர்கள் மீது (பொறுப்பாக) இல்லை, ஆகவே, நீர் அவர்களை விரட்டினால், அநியாயக்காரர்களில் (ஒருவராக) நீர் ஆகிவிடுவீர்.
6:53
6:53 وَكَذٰلِكَ فَتَـنَّا بَعْضَهُمْ بِبَـعْضٍ لِّيَـقُوْلُـوْۤا اَهٰٓؤُلَآءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَا ؕ اَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே فَتَـنَّا சோதித்தோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை بِبَـعْضٍ சிலரைக் கொண்டு لِّيَـقُوْلُـوْۤا இறுதியில் அவர்கள் கூறுவார்கள் اَهٰٓؤُلَآءِ இவர்களா? مَنَّ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ இவர்கள் மீது مِّنْۢ இருந்து بَيْنِنَا ؕ எங்களுக்கு மத்தியில் اَلَـيْسَ இல்லையா? اللّٰهُ அல்லாஹ் بِاَعْلَمَ மிக அறிந்தவனாக بِالشّٰكِرِيْنَ‏ நன்றியுள்ளவர்களை
6:53. நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
6:53. (நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ‘‘எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்து விட்டான்?'' என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
6:53. உண்மையில், இவ்வாறு நாம் அவர்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கியுள்ளோம். இதன் விளைவாக அவர்கள் இவர்களைப் பார்த்து, “நம்மிடையே அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பெற்றவர்கள் இவர்கள் தாமா?” என்று கூறுகின்றனர் ஆம்; தனக்கு நன்றி செலுத்துவோரை (இவர்களைவிட) அல்லாஹ் அதிகம் அறிந்தவனல்லவா?
6:53. “நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் பேரருள்புரிந்து விட்டான்?” என்று (பணக்காரர்கள்) கூறுவதற்காக இவ்வாறே அவர்களில் சிலரை, சிலரைக் கொண்டு நாம் சோதித்தோம், நன்றி செலுத்துவோரை அல்லாஹ் மிக்க அறிந்தவனில்லையா?
6:54
6:54 وَاِذَا جَآءَكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاٰيٰتِنَا فَقُلْ سَلٰمٌ عَلَيْكُمْ‌ كَتَبَ رَبُّكُمْ عَلٰى نَفْسِهِ الرَّحْمَةَ‌ ۙ اَنَّهٗ مَنْ عَمِلَ مِنْكُمْ سُوْٓءًۢا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْۢ بَعْدِهٖ وَاَصْلَحَۙ فَاَنَّهٗ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَاِذَا جَآءَ வந்தால் كَ உம்மிடம் الَّذِيْنَ எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை فَقُلْ கூறுவீராக سَلٰمٌ ஈடேற்றம் عَلَيْكُمْ‌ உங்களுக்கு كَتَبَ கடமையாக்கினான் رَبُّكُمْ உங்கள் இறைவன் عَلٰى மீது نَفْسِهِ தன் الرَّحْمَةَ‌ ۙ கருணையை اَنَّهٗ நிச்சயமாக مَنْ எவர் عَمِلَ செய்தார் مِنْكُمْ உங்களில் سُوْٓءًۢا ஒரு தீமையை بِجَهَالَةٍ அறியாமையினால் ثُمَّ பிறகு تَابَ (திருந்தி) திரும்பினார் مِنْۢ بَعْدِهٖ அதன் பின்னர் وَاَصْلَحَۙ இன்னும் சீர்திருத்தினார் فَاَنَّهٗ நிச்சயமாக அவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
6:54. நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
6:54. (நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் (நீர் அவர்களை நோக்கி, ‘‘ஸலாமுன் அலைக்கும்) உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக! உங்கள் இறைவன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். நிச்சயமாக உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக (ஒரு) பாவத்தைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக கைசேதப்பட்டு (அதில் இருந்து விலகி) நற்செயல்களைச் செய்தால் (அவருடைய குற்றங்களை இறைவன் மன்னித்து விடுவான். ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன்'' என்று கூறுவீராக.
6:54. நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடம் நீர் கூறும்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளான். (மேலும் அவனுடைய கருணையின் வெளிப்பாடு இது:) உங்களில் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச் செய்துவிட்டு, பின்னர் அதற்காக மன்னிப்புக் கோரி, மேலும் தன்னைத் திருத்திக் கொண்டால் திண்ணமாக அல்லாஹ் (அவரை) மன்னித்துவிடுகிறான்; மேலும், அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கின்றான்.
6:54. மேலும், நம்முடைய வசனங்களை விசுவாசிப்போர் (நபியே!) உம்மிடம் வந்தால் (நீர் அவர்களுக்கு “ஸலாமுன் அலைக்கும்) – உங்கள் மீது சாந்தி உண்டாவதாக” உங்களுடைய இரட்சகன் (உங்களுக்கு) அருள் புரிவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான், நிச்சயமாக உங்களில் எவரேனும், அறியாமையின் காரணமாக (யாதொரு) தீமையைச் செய்துவிட்டு பிறகு அதன் பின்னர் அதற்காகப் பச்சாதாபப்பட்டு (அதிலிருந்து விலகி) சீர்திருத்திக் கொண்டாரோ (அவருடைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவான், ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடையவன்.
6:55
6:55 وَكَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ وَلِتَسْتَبِيْنَ سَبِيْلُ الْمُجْرِمِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் نُفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை وَلِتَسْتَبِيْنَ இன்னும் தெளிவாகுவதற்கு سَبِيْلُ வழி الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளின்
6:55. குற்றவாளிகளின் வழி (இன்னதென்று சந்தேகமின்றித்) தெளிவாகுவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்.
6:55. குற்றவாளிகள் செல்லும் வழி (இன்னதென சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காக (நம்) வசனங்களை இவ்வாறு விவரித்திருக்கிறோம்.
6:55. மேலும், குற்றவாளிகளின் வழி இதுதான் என்று ஐயமறத் தெளிவாகிவிட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நாம் நம்முடைய சான்றுகளைத் தெள்ளத்தெளிவாய் விவரிக்கின்றோம்.”
6:55. அன்றியும் வசனங்களை இவ்வாறே நாம் விவரிக்கின்றோம், குற்றவாளிகளின் வழி (இன்னதெனச் சந்தேகமறத்) தெளிவாகி விடுவதற்காகவும் (இவ்வாறு விவரிக்கின்றோம்.)
6:56
6:56 قُلْ اِنِّىْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ قُلْ لَّاۤ اَ تَّبِعُ اَهْوَآءَكُمْ‌ۙ قَدْ ضَلَلْتُ اِذًا وَّمَاۤ اَنَا مِنَ الْمُهْتَدِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் نُهِيْتُ தடுக்கப்பட்டுள்ளேன் اَنْ اَعْبُدَ நான் வணங்குவதற்கு الَّذِيْنَ எவற்றை تَدْعُوْنَ பிரார்த்திக்கிறீர்கள் مِنْ دُوْنِ தவிர اللّٰهِ‌ؕ அல்லாஹ்வை قُلْ கூறுவீராக لَّاۤ اَ تَّبِعُ பின்பற்றமாட்டேன் اَهْوَآءَكُمْ‌ۙ உங்கள் ஆசைகளை قَدْ ضَلَلْتُ வழி தவறிவிடுவேன் اِذًا அவ்வாறாயின் وَّمَاۤ اَنَا நான் இருக்க மாட்டேன் مِنَ الْمُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களில்
6:56. “நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்” (என்று நபியே!) நீர் கூறுவீராக: “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
6:56. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி எவற்றை நீங்கள் (கடவுள்களென) அழைக்கிறீர்களோ அவற்றை வணங்கக்கூடாதென்று நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன். ஆகவே, உங்கள் மன விருப்பங்களை நான் பின்பற்ற மாட்டேன். அவ்வாறாயின், நிச்சயமாக நானும் வழி தவறிவிடுவேன்; நேரான வழியை அடைந்தவனாகமாட்டேன்.''
6:56. (நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வேறு யார் யாரையெல்லாம் அழைத்துப் பிரார்த்திக்கின்றீர்களோ அவர்களுக்கு அடிபணியக்கூடாது என்று நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” நீர் கூறும்: “நான் உங்களின் விருப்பங்களைப் பின்பற்ற மாட்டேன். அவ்வாறு பின்பற்றினால் நான் வழிதவறியவனாகி விடுவேன்; இன்னும் நேர்வழி அடைந்தவர்களிலும் நான் சேர முடியாது.”
6:56. (அவர்களிடம்) “அல்லாஹ்வையன்றி நீங்கள் (வணங்கி) அழைக்கின்றீர்களே அவர்களை நான் வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்” என்று (நபியே! நீர்) கூறுவீராக! “உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்றமாட்டேன், அப்போது திட்டமாக நானும் வழி தவறி விடுவேன், நான் நேரான வழியை அடைந்தவர்களிலும் இருக்கமாட்டேன்” என்று(ம்) கூறும்.
6:57
6:57 قُلْ اِنِّىْ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَكَذَّبْتُمْ بِهٖ‌ؕ مَا عِنْدِىْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ؕ يَقُصُّ الْحَـقَّ‌ وَهُوَ خَيْرُ الْفٰصِلِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் عَلٰى மீது بَيِّنَةٍ ஓர் அத்தாட்சி مِّنْ رَّبِّىْ என் இறைவனின் وَكَذَّبْتُمْ இன்னும் பொய்ப்பித்தீர்கள் بِهٖ‌ؕ அவனை مَا இல்லை عِنْدِىْ என்னிடம் مَا எது تَسْتَعْجِلُوْنَ அவசரப்படுகிறீர்கள் بِهٖؕ அதற்கு اِنِ இல்லை الْحُكْمُ அதிகாரம் اِلَّا தவிர لِلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்கே يَقُصُّ விவரிக்கிறான் الْحَـقَّ‌ உண்மையை وَهُوَ அவன் خَيْرُ மிக மேலானவன் الْفٰصِلِيْنَ‏ தீர்ப்பாளர்களில்
6:57. பின்னும் நீர் கூறும்: “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.
6:57. (நபியே! மேலும்,) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நான் என் இறைவனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கிறேன். எனினும், அதை நீங்கள் பொய்யாக்கினீர்கள். எதற்கு நீங்கள் அவசரப்படுகிறீர்களோ அ(ந்த வேதனையான)து என்னிடம் இல்லை. (அதன்) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு) எவருக்குமில்லை. அவன் உண்மையையே கூறுகிறான். அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்.
6:57. நீர் கூறும்: “திண்ணமாக, நான் என்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றின் மீதே நிலைத்துள்ளேன். நீங்களோ அதனைப் பொய் எனக் கூறிவிட்டீர்கள். எது சீக்கிரம் வரவேண்டும் என்று நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைக் கொண்டு வரும் ஆற்றல் என்னிடத்தில் இல்லை. தீர்ப்பின் அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்வுக்குத்தான் உரியன. அவன்தான் சத்தியத்தைத் தெளிவாய் விவரிக்கின்றான். மேலும், அவன்தான் தீர்ப்பு வழங்குவோரில் மிகச் சிறந்தவன்.”
6:57. “நிச்சயமாக நான், என் இரட்சகனின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன், அதனையும் நீங்கள் பொய்யாக்கினீர்கள், எதற்கு நீங்கள் அவசரப்படுகின்றீர்களோ (அவ்வேதனையானது) என்னிடம் இல்லை, அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை விவரிக்கின்றான், இன்னும் - தீர்ப்பளிப்போரில் அவன் மிக்க மேலானவன் - என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:58
6:58 قُلْ لَّوْ اَنَّ عِنْدِىْ مَا تَسْتَعْجِلُوْنَ بِهٖ لَقُضِىَ الْاَمْرُ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِالظّٰلِمِيْنَ‏
قُلْ கூறுவீராக لَّوْ ஆல் اَنَّ அது عِنْدِىْ என்னிடம் இருந்திருந்து مَا எது تَسْتَعْجِلُوْنَ அவசரப்படுகிறீர்கள் بِهٖ அதற்கு لَقُضِىَ முடிக்கப்பட்டிருக்கும் الْاَمْرُ காரியம் بَيْنِىْ எனக்கு மத்தியில் وَبَيْنَكُمْ‌ؕ இன்னும் உங்களுக்கு மத்தியில் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
6:58. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
6:58. ‘‘நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும் எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரை) தீர்க்கப்பட்டே இருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை நன்கறிந்தே இருக்கிறான்'' என்றும் கூறுவீராக.
6:58. மேலும், நீர் கூறும்: “நீங்கள் எது சீக்கிரம் வரவேண்டுமென்று அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ அதைக் கொண்டுவரும் ஆற்றல் என்னிடத்தில் இருந்திருக்குமேயானால், எனக்கும் உங்களுக்குமிடையே உள்ள விவகாரம் எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.” ஆயினும் இத்தகைய அக்கிரமக்காரர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.
6:58. “எ(வ்வேதனையான)தை நீங்கள் அவசரப் படுகிறீர்களோ அது நிச்சயமாக என்னிடம் இருந்திருந்தால், உங்களுக்கும், எனக்குமிடையிலுள்ள விவகாரம் (இதுவரையில்) தீர்க்கப்பட்டிருக்கும், மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை மிக்க அறிந்தவன்” என்று கூறுவீராக!
6:59
6:59 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ؕ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
وَعِنْدَهٗ அவனிடமே مَفَاتِحُ சாவிகள் الْغَيْبِ மறைவானவற்றின் لَا மாட்டார் يَعْلَمُهَاۤ அவற்றை அறிய اِلَّا هُوَ‌ؕ அவனைத் தவிர وَيَعْلَمُ இன்னும் நன்கறிவான் مَا எவை فِى الْبَرِّ நிலத்தில் وَالْبَحْرِ‌ؕ இன்னும் நீரில் وَمَا تَسْقُطُ விழுவதில்லை مِنْ وَّرَقَةٍ ஓர் இலை اِلَّا தவிர يَعْلَمُهَا அறிவான்/அதை وَلَا இன்னும் இல்லை حَبَّةٍ வித்து فِىْ ظُلُمٰتِ இருள்களில் الْاَرْضِ பூமியின் وَلَا رَطْبٍ இன்னும் இல்லை பசுமையானது وَّلَا இன்னும் இல்லை يَابِسٍ உலர்ந்தது اِلَّا தவிர فِىْ كِتٰبٍ புத்தகத்தில் مُّبِيْنٍ‏ தெளிவானது
6:59. அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
6:59. மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும் (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
6:59. மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை. கடலிலும், தரையிலும் இருப்பவை அனைத்தையும் அவன் அறிந்திருக்கின்றான். மரத்திலிருந்து எந்த இலையும் அவன் அறியாமல் உதிர்வதில்லை. பூமியின் இருள்களினுள் மறைந்திருக்கும் எந்த விதையையும் அவன் அறியாமல் இல்லை. பசுமையான மற்றும் உலர்ந்த அனைத்துமே தெளிவான ஓர் ஏட்டில் பதிக்கப்பட்டிருக்கின்றன.
6:59. இன்னும், அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன, அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார், மேலும், கரையிலும், கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான், அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை, பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கும் வித்தும் பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை.
6:60
6:60 وَهُوَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ بِالَّيْلِ وَ يَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ ثُمَّ يَـبْعَثُكُمْ فِيْهِ لِيُقْضٰٓى اَجَلٌ مُّسَمًّى‌ۚ ثُمَّ اِلَيْهِ مَرْجِعُكُمْ ثُمَّ يُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْ எவன் يَتَوَفّٰٮكُمْ கைப்பற்றுகிறான்/உங்களை بِالَّيْلِ இரவில் وَ يَعْلَمُ அறிவான் مَا எதை جَرَحْتُمْ செய்தீர்கள் بِالنَّهَارِ பகலில் ثُمَّ பிறகு يَـبْعَثُكُمْ எழுப்புகிறான்/உங்களை فِيْهِ அதில் لِيُقْضٰٓى முடிக்கப்படுவதற்காக اَجَلٌ ஒரு தவணை مُّسَمًّى‌ۚ குறிப்பிட்ட ثُمَّ பிறகு اِلَيْهِ அவன் பக்கமே مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் ثُمَّ பிறகு يُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
6:60. அவன் தான் இரவில் உங்களை மரணிக்கச் செய்கிறான்; இன்னும் நீங்கள் பகலில் செய்தவற்றையெல்லாம் அறிகிறான்; மீண்டும் உங்களைக் குறிப்பிட்டதவணை முடிப்பதற்காக பகலில் எழுப்புகிறான்; பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது; அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
6:60. (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் பொழுது) அவன்தான் (உங்கள் உணர்ச்சியை நீக்கி) உங்களை இறந்தவர்களுக்குச் சமமாக்குகிறான். நீங்கள் பகலில் செய்பவற்றையும் அவன் நன்கறிகிறான். (உங்களுக்குக்) குறிப்பிட்ட காலம் பூர்த்தி ஆவதற்காக இதற்குப் பின்னர் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான். பின்னர், நீங்கள் அவனிடம்தான் திரும்பப்போவீர்கள். நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவற்றை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
6:60. அவனே இரவில் உங்கள் உயிர்களைக் கைப்பற்றுகின்றான். இன்னும் நீங்கள் பகலில் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் அறிகின்றான். பிறகு மறுநாள் இந்த வாழ்க்கை எனும் செயற்களத்தில் மீண்டும் உங்களை எழுப்புகின்றான்; நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைத் தவணையை நிறைவு செய்யும் பொருட்டு! இறுதியில் நீங்கள் அவனிடமே செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது பற்றி உங்களுக்கு அவன் அறிவித்துவிடுவான்.
6:60. அன்றியும், அவன் எத்தகையவனென்றால், (மனிதர்களே!) இரவில் நீங்கள் நித்திரை செய்யும்பொழுது) அவன்தான் உங்க(ளின் உயிர்க)ளை கைப்பற்றிக் கொள்கிறான், மேலும், நீங்கள் பகலில் சம்பாதிக்கின்றவற்றையும் அவன் அறிகின்றான், பின்னர் (உங்களுக்குக்) குறிப்பிடப்பட்ட தவணை பூர்த்தி செய்யப்படுவதற்காக அ(ப்பகலான)தில் அவன் (உணர்ச்சியை உண்டு பண்ணி) உங்களை எழுப்புகிறான், பின்னர், உங்களுடைய (இறுதி) மீட்சி அவனின் பக்கமே இருக்கிறது, பின்னர், நீங்கள் (இங்கு) செய்து கொண்டிருந்தவைகளை (அங்கு) உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
6:61
6:61 وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً  ؕ حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ‏
وَهُوَ அவன்தான் الْقَاهِرُ ஆதிக்கமுள்ளவன் فَوْقَ மேல் عِبَادِهٖ‌ தன் அடியார்கள் وَيُرْسِلُ இன்னும் அனுப்புகிறான் عَلَيْكُمْ உங்கள் மீது حَفَظَةً  ؕ காவலர்களை حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءَ வந்தால் اَحَدَكُمُ உங்களில் ஒருவருக்கு الْمَوْتُ மரணம் تَوَفَّتْهُ கைப்பற்றுகின்றனர்/ அவரை رُسُلُـنَا நம் தூதர்கள் وَهُمْ அவர்கள் لَا يُفَرِّطُوْنَ‏ குறைவு செய்யமாட்டார்கள்
6:61. அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.
6:61. அவன் தன் அடியார்களை அடக்கி ஆளுகிறான்; மேலும், உங்களுக்குப் பாதுகாவலர்களையும் ஏற்படுத்துகிறான். (மரண நேரம் வரும்வரை அவர்கள் உங்களை பாதுகாக்கின்றனர்,) பின்னர், உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் நமது (வானவத்) தூதர்கள் அவரை உயிர் வாங்குகின்றனர். அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை.
6:61. அவன் தன்னுடைய அடிமைகள் மீது பேரதிகாரம் கொண்டவனாக இருக்கின்றான். மேலும், உங்களைக் கண்காணிப்பவர்களை நியமித்து அனுப்புகின்றான். எதுவரையெனில் உங்களில் ஒருவருக்கு மரண(நேர)ம் வந்துவிட்டால் அவன் அனுப்பிய வானவர்கள் அவருடைய உயிரைக் கைப்பற்றுகின்றார்கள். மேலும், அவர்கள் (தமது கடமையினை நிறைவேற்றுவதில்) எவ்விதக் குறையும் வைப்பதில்லை.
6:61. மேலும், அவனே தன் அடியார்களுக்கு மேலிருந்து அடக்கி ஆளுகின்றவன், இன்னும், உங்களுக்குப் பாதுகாப்பாளர்க(ளான மலக்குக)ளையும் அவன் அனுப்புகிறான், முடிவாக உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், அவரை நம்முடைய தூதர்கள் இறக்கச் செய்கின்றனர், அவர்கள் (கைப்பற்றிய) உயிரை எங்கு சேர்த்து வைக்க வேண்டுமோ அங்கு சேர்த்து வைப்பதில் எக்குறையும் செய்ய மாட்டார்கள்.
6:62
6:62 ثُمَّ رُدُّوْۤا اِلَى اللّٰهِ مَوْلٰٮهُمُ الْحَـقِّ‌ؕ اَلَا لَهُ الْحُكْمُ وَهُوَ اَسْرَعُ الْحَاسِبِيْنَ‏
ثُمَّ பிறகு رُدُّوْۤا திருப்பப்படுவார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்விடம் مَوْلٰٮهُمُ அவர்களின் எஜமான் الْحَـقِّ‌ؕ உண்மையானவன் اَلَا அறிந்துகொள்ளுங்கள்! لَهُ அவனுக்கே الْحُكْمُ அதிகாரம் وَهُوَ அவன் اَسْرَعُ மிகத் தீவிரமானவன் الْحَاسِبِيْنَ‏ கணக்கிடுபவர்களில்
6:62. பின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன்.
6:62. (இதன்) பின்னர், அவர்கள் தங்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடமே கொண்டு வரப்படுவார்கள். (அந்நேரத்தில்) தீர்ப்பு கூறும் அதிகாரம் அவனுக்கே உரியது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும். மேலும், கணக்கைத் தீர்ப்பதிலும் அவன் மிகத் தீவிரமானவன்.
6:62. பிறகு அனைவரும் தங்களின் உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! தீர்ப்பு வழங்கும் அனைத்து அதிகாரங்களும் அவனுக்கே உரியனவாகும். மேலும் அவன் கணக்கு வாங்குவோரில் மிக விரைவானவன்.
6:62. (இதன்) பின்னர், அவர்கள் தங்களின் உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்விடமே திருப்பிக் கொண்டுவரப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள், (அந்நேரத்தில்) தீர்ப்புக் கூறும் அதிகாரம் அவனுக்கே உரித்தானது, அன்றியும் அவன் கணக்கெடுப்போரில் மிகத் தீவிரமானவன்.
6:63
6:63 قُلْ مَنْ يُّنَجِّيْكُمْ مِّنْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُوْنَهٗ تَضَرُّعًا وَّخُفْيَةً ۚ لَٮِٕنْ اَنْجٰٮنَا مِنْ هٰذِهٖ لَـنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் يُّنَجِّيْكُمْ பாதுகாப்பவன்/உங்களை مِّنْ ظُلُمٰتِ இருள்களில் الْبَرِّ தரை وَالْبَحْرِ இன்னும் கடல் تَدْعُوْنَهٗ பிரார்த்திக்கிறீர்கள்/அவனிடம் تَضَرُّعًا பணிவாக وَّخُفْيَةً ۚ இன்னும் மறைவாக لَٮِٕنْ اَنْجٰٮنَا பாதுகாத்தால்/எங்களை مِنْ இருந்து هٰذِهٖ இதில் لَـنَكُوْنَنَّ நிச்சயம் ஆகிவிடுவோம் مِنَ الشّٰكِرِيْنَ‏ நன்றியாளர்களில்
6:63. (நபியே!) நீர் கூறும்: நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) “எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?”
6:63. நீங்கள் ‘‘தரையிலும், கடலிலும் இருள்களில் சிக்கி (மிக சிரமத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களைப் பாதுகாப்பவன் யார்?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்டு,
6:63. (நபியே! நீர் இவர்களிடம்) கேளும்: “தரை மற்றும் கடலின் இருள்(களின் அபாயங்)களிலிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் யார்? (துன்பம் வரும்போது) நடுங்கியவாறும் மெதுவாகவும் யாரிடம் நீங்கள் இறைஞ்சுகின்றீர்கள்? ‘இத்துன்பங்களிலிருந்து அவன் எங்களைக் காப்பாற்றி விட்டால் நாங்கள் நிச்சயம் நன்றி செலுத்துவோராயிருப்போம்’ என்று யாரிடம் கூறுகின்றீர்கள்?”
6:63. “கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் சிக்கித்தவிக்கும்போது அவற்றிலிருந்து உங்களை ஈடேற்றுபவன் யார்?” (அவ்வேளை) பணிவாகவும், மறைவாகவும் எங்களை அவன் இதைவிட்டும் ஈடேற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோர்களில் ஆகிவிடுவோம்” என்று நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:64
6:64 قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْـتُمْ تُشْرِكُوْنَ‏
قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ்தான் يُنَجِّيْكُمْ பாதுகாக்கிறான்/உங்களை مِّنْهَا இதிலிருந்து وَمِنْ இன்னும் இருந்து كُلِّ எல்லா كَرْبٍ கஷ்டம் ثُمَّ பிறகு اَنْـتُمْ நீங்கள் تُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறீர்கள்
6:64. “இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.
6:64. ‘‘இதிலிருந்தும் மற்ற எல்லா துன்பங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ் தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கிறீர்களே!'' என்று நீர் கூறுவீராக.
6:64. நீர் கூறும்: “இத்துன்பங்களில் இருந்தும் மற்றும் எல்லாவிதமான இடர்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்தான். இதற்குப் பின்னரும் நீங்கள் அவனுக்கு இணை வைக்கின்றீர்களே!”
6:64. “இதிலிருந்தும் , மற்றெல்லாக் கஷ்டத்திலிருந்தும் உங்களை ஈடேற்றுபவன் அல்லாஹ்தான், (அதிலிருந்து உங்களை ஈடேற்றிய) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:65
6:65 قُلْ هُوَ الْقَادِرُ عَلٰٓى اَنْ يَّبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِّنْ فَوْقِكُمْ اَوْ مِنْ تَحْتِ اَرْجُلِكُمْ اَوْ يَلْبِسَكُمْ شِيَـعًا وَّيُذِيْقَ بَعْضَكُمْ بَاْسَ بَعْضٍ‌ؕ اُنْظُرْ كَيْفَ نُصَرِّفُ الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ‏
قُلْ கூறுவீராக هُوَ அவன்தான் الْقَادِرُ சக்தியுள்ளவன் عَلٰٓى மீது اَنْ يَّبْعَثَ அனுப்புவதற்கு عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابًا வேதனையை مِّنْ இருந்து فَوْقِكُمْ உங்களுக்கு மேல் اَوْ அல்லது مِنْ இருந்து تَحْتِ கீழ் اَرْجُلِكُمْ உங்கள் கால்கள் اَوْ அல்லது يَلْبِسَكُمْ கலந்து/உங்களை شِيَـعًا (பல) பிரிவுகளாக وَّيُذِيْقَ இன்னும் சுவைக்க வைப்பதற்கும் بَعْضَكُمْ உங்களில் சிலருக்கு بَاْسَ ஆற்றலை بَعْضٍ‌ؕ சிலருடைய اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لَعَلَّهُمْ يَفْقَهُوْنَ‏ அவர்கள் விளங்குவதற்காக
6:65. (நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
6:65. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்க(ள் தலைக)ளுக்கு மேலிருந்தோ அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு வேதனை ஒன்றை உண்டுபண்ணவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, உங்களுக்குள் சிலர் சிலருடன் போர் புரியும்படிச் (செய்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீங்கள் அனுபவிக்கும்படிச்) செய்யவும் அவன் சக்தி உடையவனாகவே இருக்கிறான்.'' அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் (நம்) வசனங்களை, எவ்வாறு பல வகைகளில் (தெளிவுபடுத்திக்) கூறுகிறோம் என்று நீர் கவனிப்பீராக.
6:65. (நபியே!) நீர் கூறும்: “உங்களுக்கு மேலிருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்.” பாருங்கள்! அவர்கள் உண்மையை உணரும் பொருட்டு நம் சான்றுகளை எவ்வாறெல்லாம் மீண்டும் மீண்டும் அவர்கள் முன் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.
6:65. (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “உங்கள் தலைகளுக்கு மேலிருந்தோ, அல்லது உங்கள் பாதங்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்கு (யாதொரு) வேதனையை அவன் அனுப்புவதற்கும், அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி, (உங்களுக்கு மத்தியில் நீங்கள் போர், சிறைச் சேதம் ஆகியவற்றைச் செய்து (உங்கள் சிலரின் கொடுமையை)க் கொண்டு மற்ற சிலரைச் சுவைக்கச் செய்வதற்கும் அவன் சக்தியுடையவன்” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் நம்முடைய வசனங்களை எவ்வாறு பல வகைகளில் திருப்பித் திருப்பி கூறுகின்றோம் என்று நீர் கவனிப்பீராக!
6:66
6:66 وَكَذَّبَ بِهٖ قَوْمُكَ وَهُوَ الْحَـقُّ‌ ؕ قُلْ لَّسْتُ عَلَيْكُمْ بِوَكِيْلٍؕ‏
وَكَذَّبَ பொய்ப்பித்தனர் بِهٖ இதை قَوْمُكَ உம் சமுதாயம் وَهُوَ இதுதான் الْحَـقُّ‌ ؕ உண்மை قُلْ கூறுவீராக لَّسْتُ நானில்லை عَلَيْكُمْ உங்கள் மீது بِوَكِيْلٍؕ‏ பொறுப்பாளனாக
6:66. (நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, “நான் உங்கள் மீது பொறுப்பளான் அல்ல” என்று (நபியே!) நீர் கூறிவிடும்.
6:66. (நபியே! திரு குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உமது மக்கள் இதையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே, (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு பொறுப்பாளராக இல்லை.''
6:66. (நபியே!) உம்முடைய சமுதாயத்தினர் இதனைப் பொய்யென்று வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் இதுதான் உண்மை! “நான் உங்களுக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்படவில்லை” என்பதை அவர்களிடம் நீர் கூறிவிடும்.
6:66. (நபியே! குர் ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும் உம்முடைய சமூகத்தார் இதனையும் பொய்யாக்குகின்றனர், (ஆகவே, அவர்களிடம்) “நான் உங்கள் மீது பொறுப்பாளனல்ல” என்று நீர் கூறுவீராக!
6:67
6:67 لِّـكُلِّ نَبَاٍ مُّسْتَقَرٌّ‌ وَّسَوْفَ تَعْلَمُوْنَ‏
لِّـكُلِّ ஒவ்வொரு نَبَاٍ செய்தி مُّسْتَقَرٌّ‌ நிகழும் நேரமுண்டு وَّسَوْفَ تَعْلَمُوْنَ‏ அறியத்தான் போகிறீர்கள்
6:67. ஒவ்வொரு காரியத்திலும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
6:67. ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
6:67. ஒவ்வொரு செய்திக்கும் (அது வெளிப்படுவதற்கென) குறிப்பிட்ட காலம் இருக்கிறது. (இறுதி முடிவு என்னவென்று) விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்.
6:67. “ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயமுண்டு, (அதனைப் பற்றி விரைவில்) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்”
6:68
6:68 وَاِذَا رَاَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِىْۤ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖ‌ ؕ وَاِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطٰنُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرٰى مَعَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
وَاِذَا رَاَيْتَ நீர் கண்டால் الَّذِيْنَ எவர்களை يَخُوْضُوْنَ மூழ்குகிறார்கள் فِىْۤ اٰيٰتِنَا நம் வசனங்களில் فَاَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْهُمْ அவர்களை حَتّٰى வரை يَخُوْضُوْا மூழ்குவார்கள் فِىْ حَدِيْثٍ பேச்சில் غَيْرِهٖ‌ ؕ அது அல்லாத وَاِمَّا يُنْسِيَنَّكَ மறக்கடித்தால் / உம்மை الشَّيْطٰنُ ஷைத்தான் فَلَا تَقْعُدْ அமராதீர் بَعْدَ பின்னர் الذِّكْرٰى நினைவு مَعَ உடன் الْقَوْمِ கூட்டம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீண்) விவாதங்களில் மூழ்குபவர்களை நீர் கண்டால், அவர்கள் அதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் பிரவேசிக்கும் வரை நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (இக்கட்டளையை) ஷைத்தான் உமக்கு மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து) விட்டால், அது நினைவுக்கு வந்ததன் பின்னர் அந்த அநியாயக்கார மக்களுடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.
6:68. மேலும், (நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களைவிட்டு ஒதுங்கிவிடும்! மேலும், எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்திவிட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர்!
6:68. மேலும், (நபியே!) நம் வசனங்களைப் பற்றி (வீணாக வாதிப்பதில்) மூழ்கி இருக்கிறார்களே – அத்தகையோர் நீர் கண்டால் அதல்லாத வேறு செய்தியில் அவர்கள் மூழ்கும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (இக்கட்டளையை விட்டும்) திட்டமாக ஷைத்தான் உம்மை மறக்கடித்து (அவர்களுடன் நீரும் இருந்து)ம் விட்டால், அது நினைவுக்கு வந்த பின்னர், அந்த அநியாயக்கார சமூகத்தாருடன் நீர் உட்கார்ந்திருக்க வேண்டாம்.
6:69
6:69 وَمَا عَلَى الَّذِيْنَ يَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَىْءٍ وَّلٰـكِنْ ذِكْرٰى لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏
وَمَا இல்லை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் يَتَّقُوْنَ அஞ்சுகிறார்கள் مِنْ இருந்து حِسَابِهِمْ அவர்களுடைய கணக்கு مِّنْ شَىْءٍ எதுவும் وَّلٰـكِنْ எனினும் ذِكْرٰى உபதேசித்தல் لَعَلَّهُمْ يَتَّقُوْنَ‏ அவர்கள் தவிர்ந்து கொள்வதற்காக
6:69. (வீண் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்) அவர்களுடைய (செய்கைகளின்) கணக்கில் பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்பும் இல்லை; எனினும் அவர்கள் பயபக்தியுடையவர்களாகும் பொருட்டு, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது பொறுப்பாகும்.
6:69. (வீண் விவாதத்தில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து எதுவும் இறையச்சமுடையவர்களின் பொறுப்பாகாது. எனினும், அவர்கள் (இதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்.
6:69. அவர்களுடைய கேள்வி கணக்குகளில் எதற்கும் இறையச்சமுடையோர் பொறுப்பாளிகள் அல்லர். ஆயினும் அறிவுரை கூறுவது அவர்கள் மீது கடமையாகும். இதனால் அவர்கள் (அந்த மக்கள்) தவறான போக்கிலிருந்து விலகிக் கொள்ளக்கூடும்.
6:69. இன்னும், (வீணாக வாதிப்பதில் மூழ்கிக் கிடக்கும்) அவர்களுடைய (செய்கையின்) கணக்கிலிருந்து பயபக்தியுடையவர்களுக்கு யாதொரு பொறுப்புமில்லை, எனினும், அவர்கள் பயபக்தியுடையவர்களாவதற்காக, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வது (இவர்கள் மீது) கடமையாகும்.
6:70
6:70 وَذَرِ الَّذِيْنَ اتَّخَذُوْا دِيْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا‌ وَ ذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ ۢ بِمَا كَسَبَتْ‌ۖ لَـيْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِىٌّ وَّلَا شَفِيْعٌ‌ ۚ وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا‌ ؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا‌ ۚ لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَ لِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ‏
وَذَرِ விடுவீராக الَّذِيْنَ எவர்களை اتَّخَذُوْا எடுத்துக் கொண்டனர் دِيْنَهُمْ தங்கள் மார்க்கத்தை لَعِبًا விளையாட்டாக وَّلَهْوًا இன்னும் கேளிக்கையாக وَّغَرَّتْهُمُ இன்னும் மயக்கியது/அவர்களை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَا‌ உலகம் وَ ذَكِّرْ இன்னும் நினைவூட்டுவீராக بِهٖۤ இதன் மூலம் اَنْ تُبْسَلَ ஆபத்திற்குள்ளாகும் نَفْسٌ ۢ ஓர் ஆன்மா بِمَا எதன் காரணமாக كَسَبَتْ‌ۖ செய்தது لَـيْسَ இருக்க மாட்டார் لَهَا அதற்கு مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர وَلِىٌّ பாதுகாவலர் وَّلَا இன்னும் இல்லை شَفِيْعٌ‌ ۚ பரிந்துரையாளர் وَاِنْ تَعْدِلْ அது ஈடுகொடுத்தால் كُلَّ عَدْلٍ எவ்வளவு ஈடு لَّا يُؤْخَذْ ஏற்கப்படாது مِنْهَا‌ ؕ அதனிடமிருந்து اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் اُبْسِلُوْا ஆபத்திற்குள்ளாக்கப் பட்டனர் بِمَا كَسَبُوْا‌ ۚ எதன் காரணமாக/செய்தனர் لَهُمْ இவர்களுக்கு شَرَابٌ குடிபானமும் مِّنْ இருந்து حَمِيْمٍ கொதி நீர் وَّعَذَابٌ வேதனை اَ لِيْمٌۢ துன்புறுத்தக்கூடியது بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறார்கள்
6:70. (நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
6:70. (நபியே!) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுவீராக. எனினும், ஒவ்வோர் ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில்) ஆபத்திற்குள்ளாகும் என்ற உண்மையை நீர் (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக. (அந்நாளில்) அதற்குப் பரிந்து பேசுபவர்களோ, உதவி செய்பவர்களோ அல்லாஹ்வையன்றி ஒருவரும் இருக்கமாட்டார். (சாத்தியமான) அனைத்தையும் (பாவிகள் தங்கள் வேதனைக்குப்) பிரதியாகக் கொடுத்தபோதிலும் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள் தங்கள் (தீய) செயல்களின் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்களின் நிராகரிப்பின் காரணமாக மிக்க துன்புறுத்தும் வேதனையுடன் (குடிப்பதற்கு) கொதிக்கும் பானமே இவர்களுக்குக் கிடைக்கும்.
6:70. யார் தங்களுடைய தீன் எனும் வாழ்க்கை நெறியை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை நீர் விட்டுவிடும்! உலக வாழ்க்கை அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது! ஆனால் எந்த மனிதனும் தான் செய்த தீய செயல்களின் காரணமாக துன்பத்தால் பீடிக்கப்படாமலிருக்க (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுரை கூறி (எச்சரித்து)க் கொண்டேயிருப்பீராக! அப்படி பீடிக்கப்பட்டால், அல்லாஹ்விடமிருந்து அவனுக்குப் பாதுகாப்பளித்து உதவி புரிபவரோ பரிந்துரை செய்பவரோ எவரும் இருக்க மாட்டார்கள். மேலும், (தன் கைவசத்திலுள்ள) எல்லாப் பொருள்களையும் ஈடாகச் செலுத்தி அதிலிருந்து விடுபட நாடினாலும் அதுவும் அவனிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் அவர்கள், தாம் சம்பாதித்த தீவினைகளின் காரணமாக பீடிக்கப்பட்டிருந்தார்கள். சத்தியத்தை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால், நன்கு கொதிக்கும் நீரும், துன்புறுத்தும் வேதனையும்தான் அவர்களுக்குக் கிடைக்கும்.
6:70. (நபியே!) தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களே, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை (மயக்கி) ஏமாற்றிவிட்டதோ, அத்தகையவர்களை, (அவர்கள் போக்கில்) நீர் விட்டுவிடுவீராக! இன்னும் ஒவ்வோர் ஆத்மாவும், தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமை நாளில் நரகில்) தடுத்து வைக்கப்படாதிருப்பதற்காக, நீர் (அவர்களுக்குக் குர் ஆனாகிய) இதனைக்கொண்டு ஞாபகமூட்டுவீராக!. (அந்நாளில்) அ(ந்)த (ஆத்மாவி)ற்குப் பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ அல்லாஹ்வையன்றி ஒருவருமிரார், இன்னும் (தங்கள் வேதனைக்குப்) பிரதியாக(ச் சாத்தியமான) யாவற்றையும் அது (-ஆத்மா) கொடுத்தபோதிலும் அதிலிருந்து (எதையும் எடுக்கப்படமாட்டாது, அத்தகையோர் – அவர்கள் சம்பாதித்தவற்றைக் கொண்டு (நரகத்தினுள்) தடுக்கப்பட்டோராவர், இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இவர்களுக்கு (குடிப்பதற்கு) எல்லைமீறி கொதித்ததிலிருந்து பானமும் மிகத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
6:71
6:71 قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُنَا وَلَا يَضُرُّنَا وَنُرَدُّ عَلٰٓى اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰٮنَا اللّٰهُ كَالَّذِى اسْتَهْوَتْهُ الشَّيٰطِيْنُ فِى الْاَرْضِ حَيْرَانَ لَـهٗۤ اَصْحٰبٌ يَّدْعُوْنَهٗۤ اِلَى الْهُدَى ائْتِنَا ‌ؕ قُلْ اِنَّ هُدَى اللّٰهِ هُوَ الْهُدٰى‌ؕ وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَۙ‏
قُلْ கூறுவீராக اَنَدْعُوْا அழைப்போமா? مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வைத் தவிர مَا எவற்றை لَا அளிக்காது يَنْفَعُنَا நமக்கு பலன் وَلَا இன்னும் இயலாத يَضُرُّنَا நமக்கு தீங்கு செய்ய وَنُرَدُّ இன்னும் திருப்பப்படுவோம் عَلٰٓى மேல் اَعْقَابِنَا எங்கள் குதிங்கால்கள் بَعْدَ பின்னர் اِذْ போது هَدٰٮنَا நேர்வழிப்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் كَالَّذِى ஒருவனைப்போன்று اسْتَهْوَتْهُ வழிதவறச் செய்தன/ அவனை الشَّيٰطِيْنُ ஷைத்தான்கள் فِى الْاَرْضِ பூமியில் حَيْرَانَ திகைத்தவனாக لَـهٗۤ அவனுக்கு اَصْحٰبٌ நண்பர்கள் يَّدْعُوْنَهٗۤ அழைக்கிறார்கள்/அவனை اِلَى பக்கம் الْهُدَى நேர்வழி ائْتِنَا ؕ எங்களிடம் வா قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக هُدَى நேர்வழி اللّٰهِ அல்லாஹ்வின் هُوَ அதுதான் الْهُدٰى‌ؕ நேர்வழி وَاُمِرْنَا கட்டளையிடப்பட்டோம் لِنُسْلِمَ நாங்கள் பணிந்துவிட لِرَبِّ இறைவனுக்கே الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களின்
6:71. (நபியே!) நீர் கூறும்: “நமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நமக்கு நேர் வழி காட்டிய பின்னரும் (நாம் வழிதவறி) நம் பின்புறமே திருப்பப்பட்டுவிடுவோமா? அவ்வாறாயின் ஒருவனுக்கு நண்பர்கள் இருந்து அவனை, அவர்கள் “எங்கள் இடம் வந்து விடு” என நேர்வழி காட்டி அழைத்துக் கொண்டிருக்கும் போது ஷைத்தான் அவனை வழிதவறச் செய்தால் பூமியிலே தட்டழிந்து திரிகிறானே அவனைப் போன்று ஆகிவிடுவோம்.” இன்னும் கூறும்: “நிச்சயமாக அல்லாஹ் காட்டும் நேர்வழியே நேர் வழியாகும்; அகிலங்களின் இறைவனுக்கே வழிபடுமாறு நாங்கள் ஏவப்பட்டுள்ளோம்.”
6:71. (நபியே!) நீர் கேட்பீராக: ‘‘அல்லாஹ்வை விட்டு விட்டு நமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தி அற்றவற்றையா நாம் அழைப்போம்? அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்திய பின்னரும் (நாம்) நம் பின்புறமே திரும்பி விடுவோமா? (அவ்வாறாயின்,) ஒருவனுக்கு நேரான வழியில் அழைக்கக்கூடிய நண்பர்கள் இருந்து அவனை அவர்கள் ‘தம்மிடம் வா' என அழைத்துக் கொண்டிருக்க, அவன் (அவ்வழியில் செல்லாது) ஷைத்தானுடைய ஏமாற்றத்தில் சிக்கி, பூமியில் தட்டழிந்து திரிபவனாக ஆகிவிட்டானோ அவனுக்கு ஒப்பானவர்களாகி விடுவோம்.'' (மேலும்,) நீர் கூறுவீராக: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வின் வழிதான் நேரான வழி. உலகத்தார் அனைவரின் இறைவனாகிய அவனுக்கே முற்றிலும் தலைசாய்க்க வேண்டும் என நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.''
6:71. (நபியே!) அவர்களிடம் நீர் கேளும்: “அல்லாஹ்வை விடுத்து எங்களுக்கு நன்மையோ தீமையோ அளித்திட முடியாதவற்றிடமா நாங்கள் பிரார்த்திப்போம்? அல்லாஹ் எங்களை நேரான வழியில் செலுத்திய பிறகு முந்தைய (நிராகரிப்பு) நிலைக்கு நாங்கள் திரும்பி விடுவோமா? ஒருவருக்கு அவருடைய நண்பர்கள் நேர்வழிகாட்டி ‘எங்களிடம் வந்துவிடு!’ என அழைத்துக் கொண்டிருக்கும் போது, ஷைத்தான்கள் அவரை வழிகெடுத்து, அதன் காரணமாக பூமியில் அவர் தட்டழிந்து திரிவதைப் போன்று நாங்கள் ஆகிவிடுவோமா என்ன?” (நபியே!) நீர் கூறும்: “உண்மையில் அல்லாஹ் காட்டும் வழியே நேர்வழியாகும். அகிலமனைத்திற்கும் அதிபதியான இறைவனுக்கு நாங்கள் முற்றிலும் அடிபணிந்து வாழ வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளோம்.
6:71. (நபியே!) நீர் கூறுவீராக! “அல்லாஹ்வையன்றி நமக்கு யாதொரு பலனைத்தராத, நமக்கு இடரும் செய்யாதவற்றை நாம் அழைப்போமா? இன்னும், அல்லாஹ் நம்மை நேர் வழியில் செலுத்திய பின்னரும், (நாம்) நம் பின்புறமே திருப்பப்பட்டு விடுவோமா? (அவ்வாறாயின்) “எங்களிடம் நேர்வழியின்பால் வந்துவிடு என அவனை அழைக்கும் நண்பர்கள் அவனுக்கு இருக்க, ஷைத்தான்கள் யாரை வழி தவறச்செய்து, பூமியில் தட்டழிந்து திரிவோனாகி விட்டானோ அத்தகையவனைப்போல்- (நாங்களும் ஆகி விடுவோம்) “நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழியாகிறது – அதுதான் நேர்வழியாகும், மேலும், அகிலத்தாரின் இரட்சகனாகிய அவனுக்கே எங்களை நாங்கள் முற்றிலும் ஒப்படைத்து (தலை சாய்த்து)விட வேண்டும்” என நாங்கள் கட்டளையிடப் பட்டுள்ளோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:72
6:72 وَاَنْ اَقِيْمُوا الصَّلٰوةَ وَ اتَّقُوْهُ‌ ؕ وَهُوَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
وَاَنْ اَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَ اتَّقُوْهُ‌ ؕ இன்னும் அவனைஅஞ்சுங்கள் وَهُوَ அவன் الَّذِىْۤ எவன் اِلَيْهِ அவன் பக்கம் தான் تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
6:72. தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
6:72. தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட் டுள்ளோம்). அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்'' (என்றும் கூறுவீராக).
6:72. மேலும், தொழுகையை நிலைநிறுத்துங்கள்! அவனுக்கு மாறு செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்! ஏனெனில் நீங்கள் அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்றும் நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.”
6:72. “இன்னும், தொழுகையை நீங்கள் நிறைவேற்றி அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள் (என்றும் கட்டளையிடப்பட்டுள்ளோம்), இன்னும், அவன் எத்தகையவனென்றால் அவன்பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
6:73
6:73 وَهُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ‌ؕ وَيَوْمَ يَقُوْلُ كُنْ فَيَكُوْنُؕ  قَوْلُهُ الْحَـقُّ‌ ؕ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ‌ ؕ عٰلِمُ الْغَيْبِ وَ الشَّهَادَةِ‌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ‏
وَهُوَ அவன்தான் الَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை بِالْحَـقِّ‌ؕ உண்மையில் وَيَوْمَ இன்னும் நாள் يَقُوْلُ கூறுவான் كُنْ ஆகுக! فَيَكُوْنُؕ உடனே ஆகிவிடும் قَوْلُهُ அவனுடைய சொல்தான் الْحَـقُّ‌ ؕ உண்மை وَلَهُ இன்னும் அவனுக்கே الْمُلْكُ ஆட்சி يَوْمَ நாளில் يُنْفَخُ ஊதப்படும் فِى الصُّوْرِ‌ ؕ சூரில் عٰلِمُ அறிந்தவன் الْغَيْبِ மறைவானதை وَ الشَّهَادَةِ‌ ؕ வெளிப்படையானதை وَهُوَ அவன்தான் الْحَكِيْمُ ஞானவான் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிபவன்
6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
6:73. வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
6:73. வானங்களையும் பூமியையும் சத்தியத்தின் அடிப்படையில் படைத்தவன் அவனே! மேலும், எந்நாளில் அவன் ‘ஆகுக’ என்று கூறுவானோ அந்நாளில் அது (மறுமை) ஆகிவிடும். அவனுடைய கூற்றுதான் முற்றிலும் உண்மையானது. மேலும், எந் நாளில் ‘ஸூர்’ (எக்காளம்) ஊதப்படுமோ அந்நாளில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியதாயிருக்கும். அவன் மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாக இருக்கின்றான். மேலும், அவனே நுண்ணறிவாளனாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
6:73. மேலும், அவன் எத்தகையவனென்றால், வானங்களை மற்றும் பூமியை உண்மையாகவே அவன்தான் படைத்தான்; மேலும், (அவன் யாதொன்றைப் படைக்கக் கருதி) “ஆகுக” என அவன் கூறும் நாளில், அது ஆகிவிடும், அவனுடைய சொல்தான் உண்மையானது; சூர்(குழல்) ஊதப்படும் நாளில் ஆட்சி (அதிகாரம்) அவ(ன் ஒருவ)னுடையதாகவே இருக்கும்; (அவனே) மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் அறிகிறவன், அவனே தீர்க்கமான அறிவுடையவன்; (யாவையும்) நன்கு உணர்பவன்.
6:74
6:74 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصْنَامًا اٰلِهَةً ‌ ۚ اِنِّىْۤ اَرٰٮكَ وَقَوْمَكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை اِبْرٰهِيْمُ இப்றாஹீம் لِاَبِيْهِ தன் தந்தைக்கு اٰزَرَ ஆஸர் اَتَتَّخِذُ எடுத்துக்கொள்கிறீரா? اَصْنَامًا சிலைகளை اٰلِهَةً ۚ வணங்கப்படும் தெய்வங்களாக اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮكَ காண்கிறேன்/உம்மை وَقَوْمَكَ இன்னும் உம் சமுதாயம் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவானது
6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழி கேட்டில் இருப்பதை நிச்சயமாக பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.
6:74. இப்றாஹீம் தன் தந்தையாகிய ஆஜரை நோக்கி, ‘‘நீர் சிலைகளைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா?'' என்று கேட்டு, ‘‘நிச்சயமாக நீரும் உமது மக்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றன்'' என்று கூறினார்.
6:74. மேலும், இப்ராஹீம் தம் தந்தை ஆஜரை நோக்கி, “சிலைகளையா நீங்கள் கடவுளராக்குகின்றீர்கள்? நிச்சயமாக நீங்களும், உங்களுடைய சமூகத்தாரும் வெளிப்படையான வழிகேட்டில் இருப்பதை நான் காண்கின்றேன்” என்று கூறிய சந்தர்ப்பத்தை நீர் நினைவுகூரும்.
6:74. இன்னும், இப்ராஹீம் தன் தந்தையாகிய ஆஜரிடம், “விக்கிரகங்களைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டீரா? உம்மையும் உம்முடைய சமூகத்தாரையும் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நிச்சயமாக நான் காண்கின்றேன்” என்று கூறியதை, (நபியே! நினைவு கூர்வீராக!)
6:75
6:75 وَكَذٰلِكَ نُرِىْۤ اِبْرٰهِيْمَ مَلَـكُوْتَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلِيَكُوْنَ مِنَ الْمُوْقِـنِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் نُرِىْۤ காண்பித்தோம் اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு مَلَـكُوْتَ பேராட்சியை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் وَلِيَكُوْنَ இன்னும் அவர்ஆவதற்காக مِنَ الْمُوْقِـنِيْنَ‏ உறுதியான நம்பிக்கை உடையவர்களில்
6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.
6:75. இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.
6:75. இவ்வாறே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியமைப்பை நாம் இப்ராஹீமுக்குக் காண்பித்துக் கொடுத்தோம்; உறுதியான நம்பிக்கையுடையோரில் ஒருவராய் அவர் திகழ வேண்டும் என்பதற்காக!
6:75. மேலும், வானங்களுடைய இன்னும் பூமியுடைய (நம்முடைய) ஆட்சியை (அதில் நடந்தேறும் பிரமாண்டமான அத்தாட்சிகளை) நாம் இப்ராஹீமுக்கு இவ்வாறே காண்பித்தோம், அவர் உறுதி கொண்டவர்களில் ஆவதற்காகவும் (இவ்வாறு செய்தோம்)
6:76
6:76 فَلَمَّا جَنَّ عَلَيْهِ الَّيْلُ رَاٰ كَوْكَبًا ‌ۚ قَالَ هٰذَا رَبِّىْ‌ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الْاٰفِلِيْنَ‏
فَلَمَّا போது جَنَّ சூழ்ந்தது عَلَيْهِ அவர் மீது الَّيْلُ இரவு رَاٰ கண்டார் كَوْكَبًا ۚ ஒரு நட்சத்திரத்தை قَالَ கூறினார் هٰذَا இது رَبِّىْ‌ ۚ என் இறைவன் فَلَمَّاۤ போது اَفَلَ மறைந்தது قَالَ கூறினார் لَاۤ اُحِبُّ விரும்ப மாட்டேன் الْاٰفِلِيْنَ‏ மறையக் கூடியவற்றை
6:76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்.
6:76. (ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' என (தம் மக்களைக்) கேட்டு, அது மறையவே, ‘‘மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக் கொள்ள) நான் விரும்பமாட்டேன்'' எனக் கூறிவிட்டார்.
6:76. எனவே, இரவு அவரைச் சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுதான் என்னுடைய இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்துவிட்டபோது, “மறைந்து போகின்றவற்றை நான் நேசிப்பவனல்லன்” என்று உரைத்தார்.
6:76. ஆகவே, அவரை இரவு மூடிக்கொண்டபோது (பிரகாசித்துக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தை அவர் கண்டுவிட்டு “இது(தான்) என்னுடைய இரட்சகன்” எனக் கூறினார், ஆனால், அது மறைந்தபோது “மறையக் கூடியவற்றை நான் விரும்பமாட்டேன்” எனக் கூறிவிட்டார்.
6:77
6:77 فَلَمَّا رَاَالْقَمَرَ بَازِغًا قَالَ هٰذَا رَبِّىْ ‌ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَٮِٕنْ لَّمْ يَهْدِنِىْ رَبِّىْ لَاَ كُوْنَنَّ مِنَ الْقَوْمِ الضَّآ لِّيْنَ‏
فَلَمَّا போது رَاَ கண்டார் الْقَمَرَ சந்திரனை بَازِغًا உதயமாகிய قَالَ கூறினார் هٰذَا இது رَبِّىْ ‌ۚ என் இறைவன் فَلَمَّاۤ போது اَفَلَ மறைந்தது قَالَ கூறினார் لَٮِٕنْ لَّمْ يَهْدِنِىْ நேர் வழிபடுத்தாவிட்டால்/என்னை رَبِّىْ என் இறைவன் لَاَ كُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடுவேன் مِنَ الْقَوْمِ சமுதாயத்தில் الضَّآ لِّيْنَ‏ வழிகெட்டவர்கள்
6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
6:77. பின்னர், உதயமான சந்திரனைக் காணவே ‘‘இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே (அதையும் நிராகரித்துவிட்டு), ‘‘எனது இறைவன் எனக்கு நேரான வழியை அறிவிக்காவிட்டால் வழி தவறிய மக்களில் நிச்சயமாக நானும் ஒருவனாகிவிடுவேன்'' என்று கூறினார்.
6:77. பின்னர் ஒளிரும் சந்திரனைக் கண்ட அவர் “இதுதான் என்னுடைய இறைவன்” என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்தபோது “என்னுடைய இறைவன் எனக்கு வழிகாட்டவில்லையெனில் வழிதவறிய கூட்டத்தாருள் நிச்சயமாக நானும் சேர்ந்திருப்பேன்” என்று கூறினார்.
6:77. பின்னர் சந்திரன் (பிரகாசமாக) உதயமாவதைக் கண்டபோது “இதுவே என்னுடைய இரட்சகன்” எனக் கூறினார், அதுவும் மறையவே (அதனையும் நிராகரித்துவிட்டு) “என் இரட்சகன் என்னை நேரான வழியில் செலுத்தாவிடில், வழி தவறிய சமூகத்தாரில் (ஒருவனாக) நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
6:78
6:78 فَلَمَّا رَاٰ الشَّمْسَ بَازِغَةً قَالَ هٰذَا رَبِّىْ هٰذَاۤ اَكْبَرُ‌ۚ فَلَمَّاۤ اَفَلَتْ قَالَ يٰقَوْمِ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ‏
فَلَمَّا போது رَاٰ கண்டார் الشَّمْسَ சூரியனை بَازِغَةً உதயமாகிய قَالَ கூறினார் هٰذَا இது رَبِّىْ என் இறைவன் هٰذَاۤ இது اَكْبَرُ‌ۚ மிகப் பெரியது فَلَمَّاۤ போது اَفَلَتْ மறைந்தது قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا எவற்றிலிருந்து تُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறீர்கள்
6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது : “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.
6:78. பின்னர், உதயமான (பளிச்சென்று நன்கு ஒளிரும்) சூரியனைக் கண்டபொழுது ‘‘இது மிகப்பெரியதாயிருக்கிறது. இது என் இறைவன் (ஆகுமா?)'' எனக் கேட்டு, அதுவும் அஸ்தமித்து மறையவே, அவர் (தம் மக்களை நோக்கி), ‘‘என் மக்களே! நீங்கள் (இறைவனுக்கு) இணையாக்கும் (இவை) ஒவ்வொன்றிலிருந்தும் நிச்சயமாக நான் வெறுத்து விலகிக்கொண்டேன்'' என்று கூறிவிட்டு,
6:78. பின்னர் ஒளிரும் சூரியனைக் கண்டபோது “இதுதான் என்னுடைய இறைவன்; இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது” என்று கூறினார். ஆனால் அதுவும் மறைந்து போகவே, “என் சமூகத்தவரே! நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் அனைத்தை விட்டும் திண்ணமாக நான் விலகி விட்டேன்.
6:78. பின்னர் சூரியன் உதயமாவதைக் கண்டபோது “இது என்னுடைய இரட்சகன், இது மிகப் பெரியதாகும்” எனக் கூறினார், பின்னர் அதுவும் மறையவே, அவர் (தம் சமூகத்தாரிடம்) என் சமூகத்தாரே! நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குபவைகளிலிருந்து நிச்சயமாக நான் (விலகி) நீங்கியவன்” என்று கூறினார்.
6:79
6:79 اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا‌ وَّمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏
اِنِّىْ நிச்சயமாக நான் وَجَّهْتُ முன்னோக்க வைத்தேன் وَجْهِىَ என் முகத்தை لِلَّذِىْ எவன் பக்கம் فَطَرَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை حَنِيْفًا‌ உறுதியுடையவனாக وَّمَاۤ இல்லை اَنَا நான் مِنَ الْمُشْرِكِيْنَ‌ۚ‏ இணைவைப்பவர்களில்
6:79. “வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக - (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).
6:79. ‘‘வானங்களையும் பூமியையும் எவன் படைத்தானோ அ(ந்த ஒரு)வனின் பக்கமே நிச்சயமாக நான் முற்றிலும் நோக்குகின்றன். நான் (அவனுக்கு எதையும்) இணைவைப்பவன் அல்ல'' (என்று கூறினார்.)
6:79. வானங்களையும், பூமியையும் படைத்தவனின் பக்கம் ஒருமனத்துடன் என் முகத்தை நான் திருப்பிவிட்டேன்; மேலும், ஒருபோதும் நான் இணைவைப்பவர்களில் உள்ளவனல்லன்” என்று கூறினார்.
6:79. “வானங்களை மற்றும் பூமியை எவன் படைத்தானோ அந்த ஒருவனின் பக்கமே (அசத்தியமானவற்றைவிட்டு சத்தியத்தின்பால் நான்) சாய்ந்தவனாக, நிச்சயமாக நான் என் முகத்தைத் திருப்பி விட்டேன், (அவனுக்கு எதனையும்) இணை வைப்போர்களிலும் (ஒருவனாக) நான் இல்லை: (என்று கூறினார்)
6:80
6:80 وَحَآجَّهٗ قَوْمُهٗ ‌ؕ قَالَ اَتُحَآجُّٓونِّىْ فِى اللّٰهِ وَقَدْ هَدٰٮنِ‌ؕ وَلَاۤ اَخَافُ مَا تُشْرِكُوْنَ بِهٖۤ اِلَّاۤ اَنْ يَّشَآءَ رَبِّىْ شَيْـٴًـــا ‌ؕ وَسِعَ رَبِّىْ كُلَّ شَىْءٍ عِلْمًا‌ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ‏
وَحَآجَّهٗ தர்க்கித்தனர்/அவருடன் قَوْمُهٗ ؕ சமுதாயத்தினர் قَالَ கூறினார் اَتُحَآجُّٓونِّىْ தர்க்கிக்கிறீர்கள்/என்னுடன் فِى اللّٰهِ அல்லாஹ்வை பற்றி وَقَدْ திட்டமாக هَدٰٮنِ‌ؕ நேர்வழி காட்டிவிட்டான் وَلَاۤ اَخَافُ இன்னும் பயப்பட மாட்டேன் مَا எதை تُشْرِكُوْنَ இணைவைக்கிறீர்கள் بِهٖۤ அவனுக்கு اِلَّاۤ اَنْ يَّشَآءَ தவிர/நாடினால் رَبِّىْ என் இறைவன் شَيْـٴًـــا ؕ எதையும் وَسِعَ விசாலமானது رَبِّىْ என் இறைவ(னி)ன் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் عِلْمًا‌ؕ அறிவு اَفَلَا تَتَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?
6:80. அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டிவிட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்படமாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினார்.
6:80. (இதைப் பற்றி) அவருடன் அவருடைய மக்கள் தர்க்கித்தார்கள். அதற்கு (அம்மக்களை நோக்கி) அவர் கூறினார்: ‘‘நீங்கள், (படைப்பவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேரான வழியை அறிவித்துவிட்டான். என் இறைவன் எதையும் விரும்பினாலன்றி நீங்கள் இணைவைத்து வணங்குபவை(கள் எனக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. ஆகவே, அவை)களுக்கு நான் பயப்படமாட்டேன். என் இறைவன் அனைவரையும்விட கல்வியில் மிக்க விசாலமானவன். (இவ்வளவுகூட) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
6:80. மேலும், அவருடைய சமூகத்தார் அவரிடம் தர்க்கம் செய்தபோது அவர் (தம் சமூகத்தாரை நோக்கி) கூறினார்: “திண்ணமாக அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருக்க, அவனைப் பற்றியா என்னிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்கள்? மேலும், எவற்றை நீங்கள் இறைவனுக்கு இணைவைக்கின்றீர்களோ அவற்றுக்கு நான் அஞ்சமாட்டேன். என் இறைவன் நாடினால்தான் எது ஒன்றும் நிகழ முடியும். என் இறைவனின் ஞானம் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
6:80. மேலும், (இதைப்பற்றி) அவருடன், அவருடைய சமூகத்தார்கள் விவாதித்தார்கள், அ(தற்க)வர் (அவர்களிடம்) கூறினார்: நீங்கள், (படைத்தவனாகிய) அல்லாஹ்வைப் பற்றியா என்னுடன் வாதம் செய்கின்றீர்கள்? நிச்சயமாக அவன் எனக்கு நேர் வழியைக் காட்டி விட்டான், என் இரட்சகன் யாதொன்றை நாடினாலன்றி, நீங்கள் எதை அவனுக்கு இணை வைக்கின்றீர்களோ அதை நான் பயப்படவுமாட்டேன், என் இரட்சகன் ஒவ்வொன்றையும் (தன்) அறிவால் சூழந்தறிகிறான், (ஆகவே நீங்கள் வணங்கும் தெய்வங்கள் அசத்தியமானவை என்பதை) நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
6:81
6:81 وَكَيْفَ اَخَافُ مَاۤ اَشْرَكْتُمْ وَلَا تَخَافُوْنَ اَنَّكُمْ اَشْرَكْتُمْ بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ عَلَيْكُمْ سُلْطٰنًا ‌ؕ فَاَىُّ الْفَرِيْقَيْنِ اَحَقُّ بِالْاَمْنِ‌ۚ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‌ۘ‏
وَكَيْفَ எவ்வாறு اَخَافُ பயப்படுவேன் مَاۤ எதை اَشْرَكْتُمْ இணைவைத்தீர்கள் وَلَا تَخَافُوْنَ நீங்கள் பயப்படுவதில்லை اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اَشْرَكْتُمْ இணைவைத்தீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு مَا لَمْ يُنَزِّلْ எதை/அவன் இறக்கவில்லை بِهٖ அதற்கு عَلَيْكُمْ உங்கள் மீது سُلْطٰنًا ؕ ஓர் ஆதாரத்தை فَاَىُّ ஆகவே யார்? الْفَرِيْقَيْنِ இரு பிரிவினரில் اَحَقُّ மிகத்தகுதியுடையவர் بِالْاَمْنِ‌ۚ பாதுகாப்புப்பெற اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‌ۘ‏ அறிகிறீர்கள்
6:81. உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை - அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்)
6:81. உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்).
6:81. எவற்றைக் குறித்து (இவை இறைமையில் கூட்டானவைதாம் என்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்திடவில்லையோ அவற்றை அவனுக்கு இணையாக்க நீங்கள் அஞ்சாதபோது நீங்களாகவே ஏற்படுத்திக்கொண்ட கடவுளருக்கு நான் எப்படி அஞ்சுவேன்? எனவே, நம் இரு கூட்டத்தாரில் அச்சமற்று வாழ்வதற்கு அதிகம் தகுதியுடையோர் யார்? நீங்கள் அறிவுடையோராயின் இதற்குப் பதில் தாருங்கள்!
6:81. மேலும், “உங்களுக்கு யாதோர் அத்தாட்சியும் அவன் இறக்கி வைக்காமலிருந்தும் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருப்பதைப்பற்றி (ஒரு சிறிதும்) நீங்கள் பயப்படாதவர்களாக இருக்க, நீங்கள் இணை வைத்தவைகளுக்கு நான் எவ்வாறு பயப்படுவேன்? (நம்) இருபிரிவினரில் அச்சமற்றிருக்க மிகத் தகுதியுடையோர் யார் என்பதை நீங்கள் அறிந்தவர்களாயிருந்தால்” (கூறுங்கள் என்றும் கூறினார்.)
6:82
6:82 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَلَمْ يَلْبِسُوْۤا அவர்கள் கலக்கவில்லை اِيْمَانَهُمْ தங்கள் நம்பிக்கையில் بِظُلْمٍ அநியாயத்தை اُولٰۤٮِٕكَ لَهُمُ அவர்களுக்கே الْاَمْنُ பாதுகாப்பு உண்டு وَهُمْ அவர்கள் مُّهْتَدُوْنَ‏ நேர்வழி பெற்றவர்கள்
6:82. எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.
6:82. எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள் (என்று கூறினார்).
6:82. எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையை இணை வைப்பு எனும் அநீதியால் மாசுபடுத்தவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவார்கள்.”
6:82. விசுவாசங்கொண்டு, பின்னர் தங்களுடைய ஈமானை இணை வைத்தல் எனும்) அநீதத்தைக்கொண்டு கலந்து விடவில்லையே அத்தகையோர் - அவர்களுக்கே அபயமுண்டு, அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.
6:83
6:83 وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنٰهَاۤ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖ‌ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ‌ؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَتِلْكَ இவை حُجَّتُنَاۤ நம் சான்று اٰتَيْنٰهَاۤ கொடுத்தோம்/அவற்றை اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு عَلٰى எதிராக قَوْمِهٖ‌ؕ அவருடைய சமுதாயம் نَرْفَعُ உயர்த்துகிறோம் دَرَجٰتٍ பதவிகளால் مَّنْ எவரை نَّشَآءُ ؕ நாடுகிறோம் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
6:83. (மேற்கூறப்பட்ட) இவை நமது உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்றாஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவற்றை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவிகளை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகிறோம். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் மிக ஞானமுடையவன், மிகுந்த அறிவுடையவன் ஆவான்.
6:83. மேலும், இப்ராஹீம் தம்முடைய சமூகத்தாருக்கு எதிராக வாதம் புரிய நாம் அவருக்கு வழங்கிய ஆதாரங்கள் இவைதாம்! நாம் நாடுகின்றவர்களுக்கு உயர்ந்த படித்தரங்களை வழங்குகின்றோம். நிச்சயமாக உம்முடைய இறைவன் நுண்ணறிவாளனும், பேரறிவாளனும் ஆவான்.
6:83. இன்னும், (மேற் கூறப்பட்ட) அவை நம்முடைய அத்தாட்சிகளாகும், இப்ராஹீம் தன் சமூகத்தார்க்கெதிராக (வெற்றி கொள்வதற்காக) நாம் அவைகளை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம், நாம் நாடுவோரின் பதவிகளை நாம் உயர்த்துவோம், (நபியே!) நிச்சயமாக உம்முடைய இரட்சகன் மிக தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிகிறவன்.
6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
6:84. நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், ஐயூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி அளிக்கிறோம்.
6:84. பிறகு நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக், யஃகூப் போன்ற வழித்தோன்றல்களையும் வழங்கினோம். மேலும், ஒவ்வொருவருக்கும் நேர்வழி காட்டினோம். (எத்தகைய வழி எனில்) அதற்கு முன்பு நூஹுக்கும் (அந்த) நேர்வழியினைக் காட்டியிருந்தோம். மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றலைச் சேர்ந்த தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறு நாம் நல்லவர்களுக்கு (அவர்களுடைய நற்செயல்களுக்காக) கூலி வழங்குகின்றோம்.
6:84. இன்னும், நாம் (இப்றாஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும், (அவருடைய குமாரர்) யஃகூபையும் வெகுமதியாக வழங்கினோம், இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம், (இதற்கு) முன்னர் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூதையும், ஸூலைமானையும், அய்யூபையும், யூஸூபையும் மூஸாவையும், ஹாருனையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம், நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி வழங்குகின்றோம்.
6:85
6:85 وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ‏
وَزَكَرِيَّا இன்னும் ஸகரிய்யாவை وَيَحْيٰى இன்னும் யஹ்யாவை وَعِيْسٰى இன்னும் ஈஸாவை وَاِلْيَاسَ‌ؕ இன்னும் இல்யாûஸ كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰلِحِيْنَۙ‏ நல்லோரில்
6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
6:85. ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் (ஆகியோரையும் நேரான வழியில் செலுத்தினோம்). இவர்கள் அனைவரும் நன்னடத்தை உடையவர்கள்.
6:85. மேலும் (அவருடைய வழித்தோன்றலைச் சேர்ந்த) ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் ஆகியோருக்கும் (நாம் நேர்வழி காட்டினோம்.) அவர்கள் ஒவ்வொருவரும் உத்தமர்களாய் இருந்தார்கள்.
6:85. ஜகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் (நேரான வழியில் செலுத்தினோம்) இவர்களில் ஒவ்வொருவரும் நல்லவர்களில் உள்ளவராவர்.
6:86
6:86 وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا‌ ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை وَالْيَسَعَ இன்னும் அல்யஸஉவை وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَلُوْطًا‌ ؕ இன்னும் லூத்தை وَكُلًّا எல்லோரையும் فَضَّلْنَا மேன்மைப்படுத்தினோம் عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
6:86. இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
6:86. இஸ்மாயீல், அல்யஸஉ (எலிஸே,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம்.
6:86. (அவருடைய பாரம்பரியத்தில்) இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அகிலத்தார் அனைவரையும்விட மேலான சிறப்பினை வழங்கினோம்.
6:86. இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் (நேர் வழியில் செலுத்தி இவர்களில்) ஒவ்வொருவரையும் அகிலத்தாரை விட மேன்மையாக்கியும் வைத்தோம்.
6:87
6:87 وَمِنْ اٰبَآٮِٕهِمْ وَذُرِّيّٰتِهِمْ وَاِخْوَانِهِمْ‌ۚ وَاجْتَبَيْنٰهُمْ وَهَدَيْنٰهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَمِنْ اٰبَآٮِٕهِمْ இன்னும் இவர்களுடைய மூதாதைகளிலும் وَذُرِّيّٰتِهِمْ இன்னும் இவர்களுடைய சந்ததிகளிலும் وَاِخْوَانِهِمْ‌ۚ இன்னும் இவர்களுடைய சகோதரர்களிலும் وَاجْتَبَيْنٰهُمْ இன்னும் அவர்களை தேர்ந்தெடுத்தோம் وَهَدَيْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நேர்வழி காட்டினோம் اِلٰى பக்கம் صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ நேரான பாதை
6:87. இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.
6:87. இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்.
6:87. மேலும், அவர்களின் மூதாதையர், வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களின் சகோதரர்கள் ஆகியோரில் எத்தனையோ பேருக்கு நாம் (நற்பேற்றினை) வழங்கினோம்! நமது பணிகளுக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நேரிய வழியில் செலுத்தினோம்.
6:87. இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சகோதரர்களிலிருந்தும் (பலரை மேன்மையாக்கி வைத்ததுடன்) அவர்களை நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியின்பாலும் அவர்களை நாம் செலுத்தினோம்.
6:88
6:88 ذٰ لِكَ هُدَى اللّٰهِ يَهْدِىْ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ؕ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
ذٰ لِكَ இதுவே هُدَى நேர்வழி اللّٰهِ அல்லாஹ்வுடைய يَهْدِىْ நேர்வழி செலுத்துகிறான் بِهٖ அதன் மூலம் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் مِنْ عِبَادِ அடியார்களில் هٖ‌ؕ தன் وَلَوْ اَشْرَكُوْا அவர்கள் இணைவைத்தால் لَحَبِطَ அழிந்து விடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ‏ செய்கிறார்கள்
6:88. இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.
6:88. (இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகிறான். அவர்கள் (இதைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
6:88. இது அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலாகும். தன்னுடைய அடியார்களில் தான் நாடுவோர்க்கு இதன் மூலம் அவன் வழிகாட்டுகின்றான். ஆனால், அவர்கள் இறைவனுக்கு இணை வைத்திருப்பார்களாயின் அவர்கள் செய்தவை யாவும் வீணாகிப் போயிருக்கும்.
6:88. (இவர்கள் யாவரும் சென்ற) அதுவே அல்லாஹ்வடைய நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் நாடுகிறவருக்கு இதன் மூலம் நேர் வழிகாட்டுகிறான், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்கு இணை வைத்திருந்தால் அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்), அவர்களை விட்டு அழிந்துவிடும்.
6:89
6:89 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ‌ ؕ فَاِنْ يَّكْفُرْ بِهَا هٰٓؤُلَۤاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوْا بِهَا بِكٰفِرِيْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் اٰتَيْنٰهُمُ கொடுத்தோம்/அவர்களுக்கு الْـكِتٰبَ வேதத்தை وَالْحُكْمَ இன்னும் ஞானத்தை وَالنُّبُوَّةَ‌ ؕ இன்னும் நபித்துவத்தை فَاِنْ يَّكْفُرْ ஆகவே நிராகரித்தால் بِهَا அவற்றை هٰٓؤُلَۤاءِ இவர்கள் فَقَدْ وَكَّلْنَا பொறுப்பாக்கி விடுவோம் بِهَا அவற்றுக்கு قَوْمًا ஒரு சமுதாயத்தை لَّيْسُوْا அவர்கள் இல்லை بِهَا அவற்றை بِكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களாக
6:89. இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
6:89. இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம்.
6:89. இவர்களுக்குத்தாம் நாம் வேதத்தையும், ஞானத்தையும், தூதுத்துவத்தையும் வழங்கியிருந்தோம். இனி (மக்காவாசிகளான) இம்மக்கள் இந்த அருட்கொடையை ஏற்க மறுப்பார்களாயின் (மறுத்துவிட்டுப் போகட்டும்!) நாம் இந்த அருட்கொடையை வேறு மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர்களோ அதனை மறுப்பவர்களாக இல்லை.
6:89. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுக்கு, வேதத்தையும் (மார்க்க) சட்டத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம், ஆகவே, அவைகளை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விடுவார்களாயின் (இவர்களுக்குப் பதிலாக) அவைகளை நிராகரிக்காதவர்களான (அல்லாஹ்வுக்குக் கீழப்படிந்து நடக்கும் முஸ்லீம்களாகிய) ஒரு கூட்டத்தினரை, திட்டமாக நாம் அதற்கு பொறுப்பாக்கி (ஏற்படுத்தி விடுவோம்.)
6:90
6:90 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ‌ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ ‌ؕ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌ ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் هَدَى நேர்வழி செலுத்தினான் اللّٰهُ‌ அல்லாஹ் فَبِهُدٰٮهُمُ ஆகவே அவர்களுடைய நேர்வழியைக் கொண்டே اقْتَدِهْ ؕ பின்பற்றுவீராக / அதை قُلْ கூறுவீராக لَّاۤ மாட்டேன் اَسْـٴَــلُكُمْ நான் உங்களிடம் கேட்க عَلَيْهِ இதற்காக اَجْرًا‌ ؕ ஒரு கூலியை اِنْ இல்லை هُوَ இது اِلَّا தவிர ذِكْرٰى நல்லுபதேசம் لِلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
6:90. இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.
6:90. (நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீரும் பின்பற்றுவீராக. மேலும், ‘‘இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்'' என்று கூறுவீராக.
6:90. (நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே (நபியே, நீரும்) பின்பற்றிச் செல்வீராக! “நான் இந்த (அழைப்புப்) பணிக்காக எந்தவிதக் கூலியையும் உங்களிடம் கோரவில்லை” என்று கூறுவீராக! இது அகிலத்தார் அனைவர்க்கும் உரிய ஓர் அறிவுரையே ஆகும்.
6:90. (பொறுப்பாக்கப்பட்ட) அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ் (அவர்களை) நேர் வழியில் செலுத்தினான், ஆகவே, அவர்களுடைய நேர்வழியை நீரும் பின்பற்றுவீராக! இந்தக் குர் ஆனை உங்களுக்(கு அறிவிப்பதற்)காக, நான் உங்களிடம் யாதொரு கூலியைப் (பிரதிபலனை)யும் கேட்கவில்லை, (குர் ஆனாகிய) இது அகிலத்தார்க்கு நல்லுபதேசமே தவிர (வேறு இல்லை) என (நபியே) நீர் கூறுவீராக!
6:91
6:91 وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ اِذْ قَالُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ عَلٰى بَشَرٍ مِّنْ شَىْءٍ ؕ قُلْ مَنْ اَنْزَلَ الْـكِتٰبَ الَّذِىْ جَآءَ بِهٖ مُوْسٰى نُوْرًا وَّ هُدًى لِّلنَّاسِ‌ تَجْعَلُوْنَهٗ قَرَاطِيْسَ تُبْدُوْنَهَا وَتُخْفُوْنَ كَثِيْرًا‌ ۚ وَعُلِّمْتُمْ مَّا لَمْ تَعْلَمُوْۤا اَنْتُمْ وَلَاۤ اٰبَآؤُكُمْ‌ؕ قُلِ اللّٰهُ‌ۙ ثُمَّ ذَرْهُمْ فِىْ خَوْضِهِمْ يَلْعَبُوْنَ‏
وَمَا قَدَرُوا அவர்கள் அறியவில்லை اللّٰهَ அல்லாஹ்வை حَقَّ தகுந்தாற்போல் قَدْرِهٖۤ அவனுடைய தகுதி اِذْ போது قَالُوْا கூறினர் مَاۤ اَنْزَلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது بَشَرٍ மனிதர்கள் مِّنْ شَىْءٍ ؕ எதையும் قُلْ கூறுவீராக مَنْ யார்? اَنْزَلَ இறக்கினான் الْـكِتٰبَ வேதத்தை الَّذِىْ எது جَآءَ வந்தார் بِهٖ அதைக் கொண்டு مُوْسٰى மூஸா نُوْرًا ஒளியாக وَّ هُدًى இன்னும் நேர்வழியாக لِّلنَّاسِ‌ மக்களுக்கு تَجْعَلُوْنَهٗ ஆக்குகிறீர்கள்/அதை قَرَاطِيْسَ பல ஏடுகளாக تُبْدُوْنَهَا வெளிப்படுத்தினீர்கள்/அவற்றை وَتُخْفُوْنَ இன்னும் மறைத்து விடுகிறீர்கள் كَثِيْرًا‌ ۚ அதிகமானதை وَعُلِّمْتُمْ இன்னும் கற்பிக்கப்பட்டீர்கள் مَّا لَم تَعْلَمُوْۤا எதை/நீங்கள்அறியவில்லை اَنْتُمْ நீங்கள் وَلَاۤ இன்னும் இல்லை اٰبَآؤُكُمْ‌ؕ மூதாதைகள்/உங்கள் قُلِ கூறுவீராக اللّٰهُ‌ۙ அல்லாஹ் ثُمَّ பிறகு ذَرْهُمْ விடுவீராக/அவர்களை فِىْ خَوْضِهِمْ அவர்கள் மூழ்குவதில் يَلْعَبُوْنَ‏ விளையாடியவர்களாக
6:91. இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; ஏனெனில் அவர்கள், “அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை” என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்: “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்.” (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)” பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.
6:91. அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. ஏனென்றால், ‘‘மனிதர்களில் எவருக்கும் (வேதத்தில்) எதையும் அல்லாஹ் அருளவே இல்லை'' என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கேட்பீராக: ‘‘மனிதர்களுக்கு ஒளியையும் நேர்வழியையும் தரக்கூடிய (‘‘தவ்றாத்' என்னும்) வேதத்தை நபி மூஸாவுக்கு அருளியது யார்? நீங்கள் அவ்வேதத்தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில்) சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள். (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்து விடுகிறீர்கள். (அதன் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாமல் இருந்தவை உங்களுக்கு கற்பிக்கப்பட்டன. (இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்?'' இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன! நீரே அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் (இறக்கி வைத்தான்)'' என்று கூறி அவர்கள் (தங்கள்) வீண் தர்க்கத்திலேயே விளையாடிக் கொண்டிருக்கும்படியும் விட்டுவிடுவீராக.
6:91. அல்லாஹ்வை எவ்வாறு மதிப்பிட வேண்டுமோ அவ்வாறு அவர்கள் மதிப்பிடவில்லை. அதனால்தான் “அல்லாஹ் எந்த மனிதன் மீதும் எதனையும் இறக்கிடவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். “மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்?” என்று அவர்களிடத்தில் நீர் கேளும்! அதுவோ மனிதர்களுக்கு ஒளியாகவும், நேர்வழியாகவும் திகழ்ந்தது. அதனை நீங்கள் பகுதி பகுதிகளாய்ப் பிரித்து அதில் சிலவற்றை வெளிப்படுத்துகின்றீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்து விடுகின்றீர்கள். மேலும், நீங்களும் உங்களுடைய மூதாதையர்களும் அறிந்திராதவையெல்லாம் எதன் மூலம் உங்களுக்குப் புகட்டப்பட்டதோ அதனை இறக்கியவன் யார்? “அல்லாஹ்தான்” என்று கூறுவீராக! அவர்களைத் தங்களின் வீண் விவாதங்களிலேயே விளையாடிக் கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக!
6:91. மேலும், அல்லாஹ் எந்த மனிதனின் மீதும் எதையும் இறக்கி வைக்கவில்லை என்று அவர்கள் கூறிய பொழுது அல்லாஹ்வை அவனுக்குரிய தகுதிக்குத் தக்கவாறு அவர்கள் மதிக்கவில்லை, (ஆகவே, நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக! “பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு நேர் வழி காட்டக்கூடியதாகவும் (உள்ள) மூஸா கொண்டு வந்த (‘தவ்றாத்’ என்னும் வேதத்தை இறக்கியவன் யார்? நீங்கள் அ(வ்வேதத்)தைத் தனித்தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில் சிலவற்றை) வெளிப்படுத்துகிறீர்கள், உங்கள் நோக்கத்திற்கு மாறான பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்தும் விடுகிறீர்கள், (அதன் மூலமாகவே) நீங்களும், உங்கள் மூதாதையர்களும் அறியாமலிருந்தவைகளை நீங்கள் கற்பிக்கப்பட்டீர்கள், (ஆகவே, இத்தகைய வேதத்தை உங்களுக்கு அருளியது யார்? என நீரே அவர்களிடம் கேட்டுவிட்டு) அல்லாஹ்தான் (அதை இறக்கி வைத்தான்)” என்று கூறுவீராக! பின்னர் (வீண் விவாதத்தில்) அவர்கள் மூழ்கிக்கொண்டிருப்பதிலேயே அவர்கள் விளையாடிக் கொண்டிருக்குமாறு அவர்களை விட்டுவிடுவீராக!
6:92
6:92 وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ مُّصَدِّقُ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَلِتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا‌ ؕ وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ يُؤْمِنُوْنَ بِهٖ‌ وَهُمْ عَلٰى صَلَاتِهِمْ يُحَافِظُوْنَ‏
وَهٰذَا இது كِتٰبٌ ஒரு வேதம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் مُبٰرَكٌ அருள் வளமிக்கது مُّصَدِّقُ உண்மைப்படுத்தக் கூடியது الَّذِىْ எதை بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னால் وَلِتُنْذِرَ இன்னும் நீர் எச்சரிப்பதற்காக اُمَّ الْقُرٰى மக்காவை وَمَنْ حَوْلَهَا‌ ؕ இன்னும் அதைச் சுற்றி உள்ளவர்களை وَالَّذِيْنَ எவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்பவர்கள் بِهٖ‌ இதை وَهُمْ அவர்கள் عَلٰى صَلَاتِهِمْ தங்கள் தொழுகையை يُحَافِظُوْنَ‏ பேணுவார்கள்
6:92. இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
6:92. (நபியே!) இது நாம் உம் மீது இறக்கிய மிக்க பாக்கியமுடைய ஒரு வேதமாகும்.இது தனக்கு முன்னுள்ள (அவர்களுடைய வேதத்)தையும் உண்மைப் படுத்துகிறது. ஆகவே,நீர் (இதைக் கொண்டு தாய்நாட்டினராகிய) மக்காவாசிகளுக்கும், அதைச் சுற்றி உள்ளவர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் (அவசியம்) நம்புவார்கள். அவர்கள் தவறாது தொழுதும் வருவார்கள்.
6:92. (அந்த வேதத்தைப் போன்றே) இதுவும் ஒரு வேதமாகும். இதனை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம். இது அருள்வள மிக்கதாகவும், தனக்கு முன்னால் வந்த வேதத்தை மெய்ப்படுத்துவதாகவும் இருக்கின்றது. மேலும், இத்தலைநகரத்திலும் (மக்காவிலும்) அதன் சுற்றுப்புறங்களிலும் வசிப்பவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் இது அருளப்பட்டுள்ளது. மேலும், எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இவ்வேதத்தையும் நம்புவார்கள்; தமது தொழுகையிலும் பேணுதலாக இருப்பார்கள்.
6:92. மேலும், (நபியே!) இது ஒரு வேதமாகும், இதனை நாம் (உம்மீது இறக்கிவைத்தோம், (இதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக) பரகத்துச் செய்யப்பட்டதாகும், தனக்கு முன் உள்ள (வேதத்)தை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகும், (ஆகவே) நீர் (இதனைக் கொண்டு) உம்முல்குரா (-நகரங்களின் தாயாகிய மக்கா)வில் உள்ளவர்களையும், அதைச் சுற்றிலுமுள்ளவர்களையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் (இவ்வேதத்தை உம்மீது இறக்கி வைத்தோம்), மேலும், மறுமையை நம்புகின்றார்களே அத்தகையோர்- அவர்கள் இவ்வேதத்தை (அவசியம்), விசுவாசிப்பார்கள், இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
6:93
6:93 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ قَالَ اُوْحِىَ اِلَىَّ وَلَمْ يُوْحَ اِلَيْهِ شَىْءٌ وَّمَنْ قَالَ سَاُنْزِلُ مِثْلَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ‌ؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ۚ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ؕ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ‏
وَمَنْ யார்? اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَوْ அல்லது قَالَ கூறினான் اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ எனக்கு وَلَمْ يُوْحَ அறிவிக்கப்படவில்லை اِلَيْهِ அவனுக்கு شَىْءٌ எதுவும் وَّمَنْ இன்னும் எவன் قَالَ கூறினான் سَاُنْزِلُ இறக்குவேன் مِثْلَ போல் مَاۤ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذِ போது الظّٰلِمُوْنَ அக்கிரமக்காரர்கள் فِىْ غَمَرٰتِ வேதனைகளில் الْمَوْتِ மரணம் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் بَاسِطُوْۤا நீட்டுகிறார்கள் اَيْدِيْهِمْ‌ۚ தங்கள் கைகளை اَخْرِجُوْۤا வெளியேற்றுங்கள் اَنْفُسَكُمُ‌ؕ உங்கள் உயிர்களை اَلْيَوْمَ இன்று تُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவீர்கள் عَذَابَ வேதனையை الْهُوْنِ இழிவான بِمَا كُنْتُمْ இருந்த காரணத்தால் تَقُوْلُوْنَ கூறுவீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது غَيْرَ الْحَـقِّ உண்மை அல்லாத وَكُنْتُمْ இன்னும் இருந்தீர்கள் عَنْ اٰيٰتِهٖ அவனுடைய வசனங்களை விட்டு تَسْتَكْبِرُوْنَ‏ பெருமையடிக்கிறீர்கள்
6:93. அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, “எனக்கு வஹீ வந்தது” என்று கூறுபவன்; அல்லது “அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்” என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்).
6:93. (நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனைவிட அல்லது வஹ்யி மூலம் அவனுக்கு எதுவும் அறிவிக்கப்படாமலிருக்க ‘‘தனக்கும் வஹ்யி வந்தது'' என்று கூறுபவனைவிட அல்லது ‘‘அல்லாஹ் இறக்கிய இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்'' என்று கூறுபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்).
6:93. அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தனக்கு வஹி வராத நிலையில் தனக்கு வஹி வருவதாகச் சொல்பவனைவிட மேலும், அல்லாஹ் இறக்கி வைத்தது போன்று (அதற்குப் போட்டியாக) நானும் இறக்கிக் காண்பிப்பேன் என்று பிதற்றுபவனைவிடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? அந்தோ! இந்த அக்கிரமக்காரர்கள் மரண வேதனைகளில் சிக்கியிருக்கும்போது நீர் பார்க்க வேண்டும்! மேலும், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டியவாறு “உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள்; அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பானவற்றை நீங்கள் கூறிக் கொண்டிருந்ததாலும், அவனுடைய வசனங்களைப் புறக்கணித்து நீங்கள் ஆணவங் கொண்டிருந்ததாலும் இன்று உங்களுக்கு இழிவு மிக்க வேதனை கூலியாகத் தரப்படுகின்றது” (என்று கூறுவார்கள்).
6:93. அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறுபவனைவிட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க “எனக்கும் வஹீ அறிவிக்கப்பட்டது” என்று கூறுபவனை விட அல்லது “அல்லாஹ் இறக்கிய இவ்வேதத்)தைப் போல் நானும் இறக்குவேன்” என்று கூறுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரான் யார்? இன்னும், இவ்வநியாயக்காரர்கள் மரண வேதனையிலிருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின்மீது (பொய்யாகக்) கூறிக் கொண்டிருந்ததாலும், இன்னும் அவனது வசனங்களை விட்டும் (அவற்றை ஏற்க மறுத்து) நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும் (அதற்குப் பகரமாக) இன்றையத்தினம் இழிவான வேதனையை நீங்கள் கொடுக்கப்படுகிறீர்கள் (என்று கூறுவதை நீர் காண்பீர்.)
6:94
6:94 وَلَقَدْ جِئْتُمُوْنَا فُرَادٰى كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّتَرَكْتُمْ مَّا خَوَّلْنٰكُمْ وَرَآءَ ظُهُوْرِكُمْ‌ۚ وَمَا نَرٰى مَعَكُمْ شُفَعَآءَكُمُ الَّذِيْنَ زَعَمْتُمْ اَنَّهُمْ فِيْكُمْ شُرَكٰٓؤُا‌ ؕ لَقَدْ تَّقَطَّعَ بَيْنَكُمْ وَضَلَّ عَنْكُمْ مَّا كُنْتُمْ تَزْعُمُوْنَ‏
وَلَقَدْ நிச்சயமாக جِئْتُمُوْنَا நம்மிடம் வந்து விட்டீர்கள் فُرَادٰى தனி நபர்களாக كَمَا போல் خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் اَوَّلَ முதல் مَرَّةٍ முறை وَّتَرَكْتُمْ விட்டுவிட்டீர்கள் مَّا خَوَّلْنٰكُمْ எதை/கொடுத்தோம்/உங்களுக்கு وَرَآءَ பின்னால் ظُهُوْرِكُمْ‌ۚ முதுகுகள்/உங்கள் وَمَا نَرٰى நாம் காணவில்லை مَعَكُمْ உங்களுடன் شُفَعَآءَكُمُ பரிந்துரையாளர்களை/உங்கள் الَّذِيْنَ எவர்கள் زَعَمْتُمْ எண்ணினீர்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِيْكُمْ உங்களுக்கு شُرَكٰٓؤُا‌ ؕ துணைகள் لَقَدْ تَّقَطَّعَ அறுந்து விட்டது بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் وَضَلَّ தவறிவிட்டன عَنْكُمْ உங்களை விட்டு مَّا எவை كُنْتُمْ இருந்தீர்கள் تَزْعُمُوْنَ‏ எண்ணுகிறீர்கள்
6:94. அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), “நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள்; இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்; எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன” (என்று கூறுவான்).  
6:94. (இறைவன் மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் நாம் உங்களைப் படைத்தவாறே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தனியாகவே நம்மிடம் வந்து சேர்ந்தீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்திருந்தவற்றையும் உங்கள் முதுகுப்புறமாகவே விட்டுவிட்டீர்கள். (உங்களைப் படைப்பதிலும் வளர்ப்பதிலும் இறைவனுக்குத்) துணையானவர்களென நீங்கள் எவர்களை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுக்குப் பரிந்து பேச இவ்விடத்தில் இருக்கவில்லையே! (அவர்களுக்கும்) உங்களுக்கு(ம்) இடையில் இருந்த சம்பந்தங்கள் எல்லாம் நீங்கி, உங்கள் நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன'' (என்று கூறுவான்).
6:94. மேலும், (அல்லாஹ் கூறுவான்:) நாம் முதன் முதலில் உங்களைப் படைத்தது போன்று நீங்கள் இப்போது தன்னந்தனியாக எம்மிடம் வந்துவிட்டீர்கள். நாம் உலகில் உங்களுக்கு வழங்கியவை அனைத்தையும் உங்களுக்குப் பின்னால் விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய செயல்களை நிறைவேற்றுவதில் அல்லாஹ்வுக்கு இணையாக யார் யாரையெல்லாம் நீங்கள் கருதி வந்தீர்களோ அத்தகைய உங்கள் பரிந்துரையாளர்களையும் இப்போது உங்களுடன் காணவில்லையே! உங்களுக்கிடையில் இருந்த அனைத்துத் தொடர்புகளும் முறிந்துவிட்டன! மேலும் (உங்களுக்கு உதவுவார்கள் என்று) நீங்கள் கருதி வந்த அனைவரும் உங்களை விட்டுக் காணாமல் போய்விட்டார்கள்.
6:94. அன்றியும் (அல்லாஹ் மறுமையில் அவர்களிடம்) “முதன் முறையாக நாம் உங்களைப் படைத்த பிரகாமே (உங்களுடன் ஒன்றுமில்லாது) நிச்சயமாக நீங்கள் தன்னந்தனியாக நம்மிடம் வந்து சேர்ந்து விட்டீர்கள், இன்னும், நிச்சயமாக அவர்கள் உங்களில் இணையாளர்கள் என எண்ணிக் கொண்டிருந்தீர்களே, அத்தகைய உங்களுடைய பரிந்துரையாளர்களை உங்களுடன் நாம் காணவில்லை, உங்களுக்கிடையிலுள்ள (தொடர்புகளான)து திட்டமாக அறுந்தும் விட்டது, (உங்களுக்கு உதவியும் பரிந்துரையும் செய்வார்களென்று நீங்கள் கற்பனை செய்து கொண்டிருந்தீர்களே அவைகள் உங்களை விட்டு மறைந்தும் விட்டன” (என்று கூறுவான்.)
6:95
6:95 اِنَّ اللّٰهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوٰى‌ؕ يُخْرِجُ الْحَىَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَىِّ ‌ؕ ذٰ لِكُمُ اللّٰهُ‌ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் فَالِقُ பிளப்பவன் الْحَبِّ வித்தை وَالنَّوٰى‌ؕ இன்னும் கொட்டையை يُخْرِجُ வெளியாக்குகிறான் الْحَىَّ உயிருள்ளதை مِنَ இருந்து الْمَيِّتِ இறந்தது وَمُخْرِجُ இன்னும் வெளியாக்குபவன் الْمَيِّتِ இறந்ததை مِنَ இருந்து الْحَىِّ ؕ உயிருள்ளது ذٰ لِكُمُ அவன்தான் اللّٰهُ‌ அல்லாஹ் فَاَنّٰى எங்கு? تُؤْفَكُوْنَ‏ திருப்பப்படுகிறீர்கள்
6:95. நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான்; இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ் - எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?
6:95. வித்துக்களையும், கொட்டைகளையும் நிச்சயமாக அல்லாஹ்தான் வெடி(த்து முளை)க்கச்செய்கிறான். இறந்தவற்றில் இருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளியாக்குகிறான். (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் உங்கள் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எங்கு வெருண்டோடுகிறீர்கள்?
6:95. திண்ணமாக, விதையையும், கொட்டையையும் வெடிக்கச் செய்பவன் அல்லாஹ்தான்! உயிரில்லாததிலிருந்து உயிருள்ளதையும் அவனே வெளிக்கொணர்கிறான். மேலும், உயிருள்ளதிலிருந்து உயிரில்லாததை வெளிப்படுத்துபவனும் அவனே! இப்பணிகள் அனைத்தையும் செய்கின்றவன் அல்லாஹ்தான்! இதற்குப் பிறகும் நீங்கள் எங்கே வழிமாறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள்?
6:95. நிச்சயமாக அல்லாஹ்தான் வித்துக்களையும் விதைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கின்றவன், இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகின்றான், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் அவனே வெளிப்படுத்துகின்றவன், (இவ்வாறு செய்கின்ற) அவன்தான் (உங்கள்) அல்லாஹ், ஆகவே, நீங்கள் (அவனுக்கு வணக்க வழிபாடுகளைச் செய்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்.
6:96
6:96 فَالِقُ الْاِصْبَاحِ‌ۚ وَ جَعَلَ الَّيْلَ سَكَنًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا‌ ؕ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏
فَالِقُ பிளப்பவன் الْاِصْبَاحِ‌ۚ ஒளியை وَ جَعَلَ இன்னும் ஆக்கினான் الَّيْلَ இரவை سَكَنًا அமைதி பெறுவதற்காக وَّالشَّمْسَ இன்னும் சூரியனை وَالْقَمَرَ இன்னும் சந்திரனை حُسْبَانًا‌ ؕ கணக்கிற்காக ذٰلِكَ இவை تَقْدِيْرُ ஏற்பாடு الْعَزِيْزِ மிகைத்தவன் الْعَلِيْمِ‏ நன்கறிந்தவன்
6:96. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.
6:96. அவனே (பொழுதை) விடியச் செய்பவன். அவனே (நித்திரை செய்து நீங்கள்) சுகமடைவதற்காக இரவை ஆக்கினான். (நீங்கள் காலத்தின்) கணக்கை அறிவதற்காக சந்திரனையும் சூரியனையும் ஆக்கினான். இவை அனைத்தும் மிகைத்தவன், மிக்க அறிந்தவன் (ஆகிய அல்லாஹ்) உடைய ஏற்பாடாகும்.
6:96. (இரவை அகற்றி) வைகறைப் பொழுதை வெளிப்படுத்துபவனும் அவனே! இரவை அமைதி பெறும் நேரமாக அமைத்தவனும் அவனே! சூரியன், சந்திரனுடைய (உதயம், மறைவு ஆகியவற்றின்) கணக்கினை வரையறுத்தவனும் அவனே! இது பேரறிவு கொண்டவனும், வல்லமை மிக்கவனுமான இறைவனால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
6:96. அவனே அதிகாலை நேர(வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்கிறவன், அவனே (படைப்பினங்கள் அனைத்தும் களைப்பாறுவதற்காக) இரவை அமைதியானதாகவும் காலக்கணக்கிற்காகச் சூரியனையும் சந்திரனையும் ஆக்கினான், இவை யாவும் (யாவரையும்) மிகைத்தோனாகிய மிக்க அறிந்தோனாகியவனின் ஏற்பாடாகும்.
6:97
6:97 وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ النُّجُوْمَ لِتَهْتَدُوْا بِهَا فِىْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْ எவன் جَعَلَ அமைத்தான் لَـكُمُ உங்களுக்கு النُّجُوْمَ நட்சத்திரங்களை لِتَهْتَدُوْا நீங்கள் நேர்வழி பெறுவதற்காக بِهَا அவற்றின் மூலம் فِىْ ظُلُمٰتِ இருள்களில் الْبَرِّ தரையின் وَالْبَحْرِ‌ؕ இன்னும் கடல் قَدْ فَصَّلْنَا விவரித்து விட்டோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لِقَوْمٍ ஒரு சமுதாயத்திற்கு يَّعْلَمُوْنَ‏ அறிவார்கள்
6:97. அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான்; அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள் - அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக (நம்) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
6:97. உங்களுக்காக நட்சத்திரங்களை அமைத்தவனும் அவனே. தரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் அவற்றைக் கொண்டு நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். (உண்மையை) அறியக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக (இவ்வாறு) விவரிக்கிறோம்.
6:97. அவனே உங்களுக்காக நட்சத்திரங்களைப் படைத்தான்; அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழி தெரிந்து கொள்வதற்காக! திண்ணமாக, அறிவாற்றல் கொண்ட சமுதாயத்தினர்க்கு நாம் சான்றுகளை விவரித்துக் கூறிவிட்டோம்.
6:97. மேலும், அவன் எத்தகையவனென்றால் உங்களுக்காக நட்சத்திரங்களை அவற்றைக்கொண்டு கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் (நேர்) வழியறிந்து செல்வதற்காக-உண்டாக்கினான், (அசத்தியத்தைத் தவிர்த்து உண்மையை) அறியக்கூடிய கூட்டத்தினருக்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக இவ்வாறு (நாம்) விவரிக்கின்றோம்.
6:98
6:98 وَ هُوَ الَّذِىْۤ اَنْشَاَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ فَمُسْتَقَرٌّ وَّمُسْتَوْدَعٌ‌ ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّفْقَهُوْنَ‏
وَ هُوَ الَّذِىْۤ அவன்/எவன் اَنْشَاَكُمْ உங்களை உருவாக்கினான் مِّنْ இருந்து نَّفْسٍ ஓர் ஆத்மா وَّاحِدَةٍ ஒரே فَمُسْتَقَرٌّ ஆகவே ஒரு தங்குமிடமும் وَّمُسْتَوْدَعٌ‌ ؕ இன்னும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் قَدْ فَصَّلْنَا விவரித்துவிட்டோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لِقَوْمٍ ஒரு சமுதாயத்திற்கு يَّفْقَهُوْنَ‏ விளங்கிக் கொள்வார்கள்
6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
6:98. (மனிதர்களே!) உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்து பின்னர் (உங்கள் தந்தையிடம்) தரித்திருக்கச் செய்து (உங்கள் தாயின் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே! சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்தோம்.
6:98. மேலும் அவனே ஓருயிரில் இருந்து உங்களைப் படைத்தான். பிறகு ஒவ்வொருவருக்கும் ஒரு தங்குமிடமும் இருக்கிறது; ஒப்படைக்கப்படும் இடமும் இருக்கிறது. புரிந்து கொள்ளும் சமூகத்தினர்க்கு இத்தகைய சான்றுகளையெல்லாம் நாம் விளக்கிக் கூறிவிட்டோம்.
6:98. இன்னும் அவன் எத்தகையவனென்றால், அவனே உங்களை ஓர் ஆத்மாவிலிருந்து உண்டாக்கினான், பின்னர், (மனிதர்களே! ஓவ்வொருவருக்கும் தாயின் வயிற்றில்) தங்குமிடமும் (கப்ரில்) ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு, விளங்கிக் கொள்கிற சமூகத்தினர்க்கு, (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக விவரிக்கின்றோம்.
6:99
6:99 وَهُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً‌ ۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَىْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًا‌ ۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ‌ ؕ اُنْظُرُوْۤا اِلٰى ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَيَنْعِهٖ ؕ اِنَّ فِىْ ذٰ لِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْۤ எவன் اَنْزَلَ இறக்கினான் مِنَ இருந்து السَّمَآءِ மேகம் مَآءً‌ ۚ மழையை فَاَخْرَجْنَا வெளியாக்கினோம் بِهٖ அதன் மூலம் نَبَاتَ தாவரத்தை كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் فَاَخْرَجْنَا வெளியாக்கினோம் مِنْهُ அதி லிருந்து خَضِرًا பசுமையானதை نُّخْرِجُ வெளியாக்குகிறோம் مِنْهُ அதிலிருந்து حَبًّا வித்துக்களை مُّتَرَاكِبًا‌ ۚ அடர்ந்தது وَمِنَ النَّخْلِ இன்னும் பேரீச்ச மரத்தில் مِنْ இருந்து طَلْعِهَا அதன் பாளை قِنْوَانٌ பழக்குலைகள் دَانِيَةٌ நெருக்கமான وَّجَنّٰتٍ இன்னும் தோட்டங்களை مِّنْ اَعْنَابٍ திராட்சைகளின் وَّالزَّيْتُوْنَ இன்னும் ஜைதூதூனை وَالرُّمَّانَ இன்னும் மாதுளையை مُشْتَبِهًا ஒப்பானது وَّغَيْرَ مُتَشَابِهٍ‌ ؕ இன்னும் ஒப்பாகாதது اُنْظُرُوْۤا பாருங்கள் اِلٰى ثَمَرِهٖۤ அதன் கனிகளை اِذَاۤ اَثْمَرَ அவை காய்க்கும்போது وَيَنْعِهٖ ؕ இன்னும் அவை பழமாகுவதையும் اِنَّ فِىْ ذٰ لِكُمْ நிச்சயமாக இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கிறார்கள்
6:99. அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
6:99. அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கிவைக்கிறான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை(யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகிறோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகிறோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
6:99. மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தவன் அவனே! அதன் வாயிலாக எல்லாவிதமான தாவரங்களையும் வெளியாக்கினோம். பின்னர் அதிலிருந்து பசுமையான பயிர்களை உருவாக்கி, அவற்றிலிருந்து அடர்த்தியான தானியமணிகளை வெளிப்படுத்தினோம். மேலும், பேரீச்ச மரத்தின் பாளையிலிருந்து சுமை தாளாமல் தொங்கிக் கொண்டிருக்கும் பழக்குலைகளையும் வெளிப்படுத்தினோம். ஒன்றோடொன்று ஒப்பானவையாகவும் (அதே நேரத்தில்) தனித்தன்மைகளும் கொண்ட திராட்சை, ஜைத்தூன் (ஒலிவம்), மாதுளை ஆகியவற்றின் தோட்டங்களையும் அமைத்திருக்கின்றோம். இவை பருவகாலத்தில் எவ்வாறு கனிகின்றன என்பதனைச் சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்! இறைநம்பிக்கை கொண்ட மக்களுக்குத் திண்ணமாக இவற்றில் பல சான்றுகள் உள்ளன.
6:99. மேலும், அவன் எத்தகையவனென்றால், வானத்திலிருந்து மழையை அவன் இறக்கி வைக்கின்றான், பின்னர் அதைக் கொண்டு ஒவ்வொரு பொருளின் புற்பூண்டுகளையும் நாம் (முளைக்க வைத்து) வெளிப்படுத்தினோம், பின்னர் அதிலிருந்து பசுமையான (பயிர்கள் உள்ள)தை நாம் வெளிப்படுத்தினோம், பின்னர், அதிலிருந்து ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்துள்ள (கதிர்களைப் போன்று) வித்துக்களை வெளிப்படுத்துகிறோம், பேரீச்ச மரத்திலிருந்து-அதன் பாளையிலிருந்து (பறிப்பவர்களுக்கு வளைந்து) அருகில் தொங்கும் பழக்குலைகளுமிருக்கின்றன, (அவற்றையும் நாமே வெளிப்படுத்துகின்றோம்) திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலும் ரசனையில் வெவ்வேறாகவும் உள்ள ஜைய்த்தூன் (-ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் நாமே (வெளிப்படுத்துகின்றோம்.) அவற்றின் கனிகளை – அவை (பூத்துக்) காய்க்கும்போதும், பின்னர், அது கனிந்து பழமாகும் விதத்தையும் நோக்குவீர்களாக! விசுவாசங்கொள்ளும் சமூகத்தினர்க்கு நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
6:100
6:100 وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ الْجِنَّ وَخَلَقَهُمْ‌ وَخَرَقُوْا لَهٗ بَنِيْنَ وَبَنٰتٍۢ بِغَيْرِ عِلْمٍ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَصِفُوْنَ‏
وَجَعَلُوْا ஆக்கினர் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு شُرَكَآءَ இணையாளர்களாக الْجِنَّ ஜின்களை وَخَلَقَهُمْ‌ அவன் அவர்களைப் படைத்திருக்க وَخَرَقُوْا இன்னும் கற்பனைசெய்தனர் لَهٗ அவனுக்கு بَنِيْنَ மகன்களை وَبَنٰتٍۢ இன்னும் மகள்களை بِغَيْرِ عِلْمٍ‌ؕ அறிவின்றி سُبْحٰنَهٗ அவன் மகாத்தூயவன் وَتَعٰلٰى அவன் மிக உயர்ந்தவன் عَمَّا எதைவிட்டு يَصِفُوْنَ‏ வருணிக்கிறார்கள்
6:100. இவ்வாறிருந்தும் அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள்; அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான்; இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான்.
6:100. (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் ஜின்களில் பலரை அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர். எனினும், அந்த ஜின்களையும் அவனே படைத்திருக்கிறான். இவர்கள் (தங்கள்) அறிவீனத்தால் அல்லாஹ்வுக்கு ஆண், பெண் சந்ததிகளையும் கற்பிக்கின்றனர். அவனோ, இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவற்றில் இருந்து மிக்க பரிசுத்தமானவனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான்.
6:100. இருந்தும் மக்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கி விட்டார்கள். உண்மை யாதெனில், அவன்தான் அந்த ஜின்களைப் படைத்தவன். மேலும், அவர்கள் அறியாமையினால் அல்லாஹ்வுக்கு ஆண்மக்களும், பெண்மக்களும் இருப்பதாகப் புனைந்து கூறுகிறார்கள். ஆனால் அவனோ தூய்மையானவன்; மேலும், இவ்வாறு அவர்கள் புனைந்து கூறுபவற்றிலிருந்து அல்லாஹ் உயர்ந்தவனாவான்.
6:100. இன்னும், அவர்கள், ஜின்களில் (பலரை) அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்குகின்றனர், (ஜின்களான) அவர்களையும் அவனே சிருஷ்டித்திருக்கின்றான், இன்னும் (அவர்கள் எவ்வித அறிவுமின்றி ஆண்மக்களையும் பெண் மக்களையும் அவனுக்கு (இணையாளர்களாகக்)கற்பனை செய்துவிட்டார்கள், அவன் (மகா) தூயவன், அவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பவைகளை விட்டும் அவன் பரிசுத்தமடைந்து விட்டான்.
6:101
6:101 بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ‌ ؕ وَخَلَقَ كُلَّ شَىْءٍ‌ ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
بَدِيْعُ நூதன படைப்பாளன் السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் اَنّٰى எவ்வாறு? يَكُوْنُ இருக்கும் لَهٗ அவனுக்கு وَلَدٌ சந்ததி وَّلَمْ تَكُنْ இல்லையே لَّهٗ அவனுக்கு صَاحِبَةٌ‌ ؕ மனைவி وَخَلَقَ இன்னும் படைத்தான் كُلَّ شَىْءٍ‌ ۚ எல்லாவற்றையும் وَهُوَ அவன் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
6:101. முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான் அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவி கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கிறான். மேலும், அவன் அனைத்தையும் நன்கறிந்தவன்.
6:101. வானங்களையும் பூமியையும், முன்மாதிரியின்றிப் படைத்தவன் அவனே! அவனுக்கு மனைவியே இல்லாதபோது குழந்தை எப்படி இருக்க முடியும்? அவனே ஒவ்வொன்றையும் படைத்திருக்கின்றான். மேலும், ஒவ்வொன்றைப் பற்றியும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
6:101. முன் மாதிரியின்றியே வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன், அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளையிருக்க முடியும்? இன்னும், ஒவ்வொரு பொருளையும் அவனே படைத்திருக்கின்றான், அன்றியும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்
6:102
6:102 ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ خَالِقُ كُلِّ شَىْءٍ فَاعْبُدُوْهُ‌ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏
ذٰ لِكُمُ அவன் اللّٰهُ அல்லாஹ் رَبُّكُمْ‌ۚ உங்கள் இறைவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ‌ۚ அவனைத் தவிர خَالِقُ படைப்பாளன் كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் فَاعْبُدُوْهُ‌ۚ வணங்குங்கள்/அவனை وَهُوَ அவன் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் وَّكِيْلٌ‏ கண்காணிப்பவன், பொறுப்பாளன்
6:102. அவன்தான் அல்லாஹ் - உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் - இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
6:102. இத்தகைய அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் இறைவன். வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு ஒருவருமில்லை. அவனே அனைத்தின் படைப்பாளன். ஆகவே, அ(வன் ஒருவ)னையே நீங்கள் (அனைவரும்) வணங்குங்கள். எல்லா காரியங்களையும் கண்காணிப்பவனும் அவனே.
6:102. அவன்தான் உங்களைப் படைத்து, பரிபாலிப்பவனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அவனே! எனவே நீங்கள் அவனுக்கே அடிபணியுங்கள்! அவன் எல்லாவற்றிற்கும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
6:102. (இத்தகைய தகுதிகளையுடைய) அவன்தான் அல்லாஹ், உங்களின் இரட்சகன் வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர (வேறு ஒருவரும்) இல்லை, அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தவன், ஆகவே, அவ(ன் ஒருவ)னையே நீங்கள் (யாவரும்) வணங்குங்கள், அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளன்.
6:103
6:103 لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ۚ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏
لَا அடையாது تُدْرِكُهُ அவனை الْاَبْصَارُ பார்வைகள் وَهُوَ அவன்தான் يُدْرِكُ அடைகிறான் الْاَبْصَارَ‌ۚ பார்வைகளை وَهُوَ அவன் اللَّطِيْفُ மிக நுட்பமானவன் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிந்தவன்
6:103. பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
6:103. பார்வைகள் அவனை அடையமுடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன்.
6:103. பார்வைகளால் அவனைப் பார்த்திட முடியாது. அவனோ எல்லாப் பார்வைகளையும் அறிந்து கொள்கின்றான். அவன் நுட்பமானவனும், எல்லாம் தெரிந்தவனுமாயிருக்கின்றான்.
6:103. பார்வைகள் அவனை அடையாது, அவனோ பார்வைகளை அடைகிறான், அவனே (எவரின் பார்வைக்கும் அகப்படாத) நுட்பமானவன், நன்கு உணர்பவன்.
6:104
6:104 قَدْ جَآءَكُمْ بَصَآٮِٕرُ مِنْ رَّبِّكُمْ‌ۚ فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖ‌ ۚ وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا‌ ؕ وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِحَفِيْظٍ‏
قَدْ جَآءَ வந்துவிட்டன كُمْ உங்களுக்கு بَصَآٮِٕرُ ஆதாரங்கள் مِنْ இருந்து رَّبِّكُمْ‌ۚ உங்கள் இறைவன் فَمَنْ எனவே எவர் اَبْصَرَ பார்த்தாரோ فَلِنَفْسِهٖ‌ ۚ அவருக்குத்தான் நன்மை وَمَنْ இன்னும் எவர் عَمِىَ குருடாகி விட்டாரோ فَعَلَيْهَا‌ ؕ அவருக்குத்தான் கேடாகும் وَمَاۤ اَنَا நான் இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது بِحَفِيْظٍ‏ காவலனாக
6:104. நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன; எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும், எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும் “நான் உங்களைக் காப்பவன் அல்ல” (என்று நபியே! நீர் கூறும்).
6:104. உங்கள் இறைவனிடமிருந்து (சத்தியத்திற்குரிய பல) ஆதாரங்கள் உங்களிடம் வந்திருக்கின்றன. எவன் (அவற்றைக் கவனித்து) பார்க்கிறானோ (அது) அவனுக்கே நன்று. எவன் (அவற்றைப் பார்க்காது) கண்ணை மூடிக்கொள்கிறானோ (அது) அவனுக்கே கேடாகும். (நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நான் உங்களைக் காப்பவன் அல்ல'' (என்று கூறிவிடுவீராக).
6:104. (பாருங்கள்:) உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்திருக்கின்றன. இனி, எவர் கண்ணை விழித்துப் பார்த்து செயல்படுகின்றாரோ அவர் தமக்கே நன்மை செய்து கொண்டவராவார். மேலும், எவர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகின்றாரோ அவர் தமக்கே இழப்பை ஏற்படுத்திக் கொண்டவராவார். மேலும், நான் உங்களைப் பாதுகாப்பவனல்லன்.
6:104. உங்கள் இரட்சகனிடமிருந்து (நமது சத்தியத்திற்குரிய) அநேக சான்றுகள் உங்களிடம் திட்டமாக வந்துவிட்டன, ஆகவே, எவர் (அவற்றைக் கவனித்துப்) பார்க்கிறாரோ அப்பொழுது அது) அவருக்கே (நன்று!), மேலும் எவர் (அவற்றைப் பார்க்காது கண்ணை மூடிக்கொண்டு) குருடராகிவிடுகிறாரோ (அது) தமக்கே கேடாகும், இன்னும் (நபியே! நீர் அவர்களிடம்) “நான் உங்களைக் காப்போன் அல்ல” (அல்லாஹ்வின் தூதை எத்திவைப்பவன் மாத்திரமே) என்று கூறுவீராக!
6:105
6:105 وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ وَلِيَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَيِّنَهٗ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறு نُصَرِّفُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை وَلِيَقُوْلُوْا இன்னும் அவர்கள்சொல்வதற்கு دَرَسْتَ படித்தீர் وَلِنُبَيِّنَهٗ இன்னும் நாம் தெளிவுபடுத்துவதற்காக/அதை لِقَوْمٍ மக்களுக்கு يَّعْلَمُوْنَ‏ அறிவார்கள்
6:105. நீர் (பல வேதங்களிலிருந்து) பாடம் படித்து வந்தீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும், இன்னும், அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறு விளக்குகிறோம்.
6:105. (இதை) நீர் (எங்களுக்கு) நன்கு ஓதிக் காண்பித்(து அறிவித்)தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறியக்கூடிய மக்களுக்கு நாம் இதைத் தெளிவாக்குவதற்காகவும், (நம்) வசனங்களை இவ்வாறு பலவாறாக (அடிக்கடி) விவரிக்கிறோம்.
6:105. இவ்வாறு நாம் நம்முடைய சான்றுகளை மீண்டும் மீண்டும் (பல்வேறு முறைகளில்) விவரிக்கின்றோம். மேலும், “நீர் யாரிடமிருந்தோ கற்றுக்கொண்டு வந்திருக்கிறீர்!” என்று அவர்கள் கூறிவிடுவார்கள் என்பதற்காகவும், அறிவுடைய மக்களுக்கு நாம் உண்மையினைத் தெளிவுபடுத்துவதற்காகவும்தான் (இவ்வாறு விவரிக்கின்றோம்.)
6:105. (நபியே! நீர் வேதக்காரர்களிடமிருந்து கற்றுக்கொண்டு இதை) பாடம் படித்து வந்தீர் என அவர்கள் கூறுவதற்காகவும், இன்னும் அறியக்கூடிய சமூகத்தார்க்கு நாம் அதைத் தெளிவு செய்வதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறு (விதவிதமாக) திரும்பத் திரும்ப நாம் தெளிவு செய்கிறோம்.
6:106
6:106 اِتَّبِعْ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ‌‌ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ‏
اِتَّبِعْ பின்பற்றுவீராக مَاۤ எதை اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு مِنْ இருந்து رَّبِّكَ‌ۚ உம் இறைவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குறியவன் اِلَّا هُوَ‌ۚ அவனைத் தவிர وَاَعْرِضْ இன்னும் புறக்கணிப்பீராக عَنِ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களை
6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
6:106. (நபியே!) உமது இறைவனால் உமக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாரும் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக.
6:106. (நபியே!) உம்முடைய அதிபதியிடமிருந்து உமக்கு அருளப்படுகின்ற வஹியைப் பின்பற்றி நடப்பீராக! அந்த அதிபதியைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும், இறைவனுக்கு இணை வைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக!
6:106. (நபியே!) உம் இரட்சகனால் உமக்கு வஹீமுலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லவேயில்லை, இன்னும் (அவனுக்கு) இணை வைப்போரை விட்டும் நீர் புறக்கணித்து விடுவீராக!
6:107
6:107 وَلَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكُوْا ‌ؕ وَمَا جَعَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا‌ ۚ وَمَاۤ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ‏
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَاۤ اَشْرَكُوْا ؕ இணைவைத்திருக்க மாட்டார்கள் وَمَا இல்லை جَعَلْنٰكَ நாம் உம்மை ஆக்க عَلَيْهِمْ அவர்கள் மீது حَفِيْظًا‌ ۚ காவலராக وَمَاۤ اَنْتَ இன்னும் நீர் இல்லை عَلَيْهِمْ அவர்கள் மீது بِوَكِيْلٍ‏ பொறுப்பாளராக
6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.
6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணைவைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உம்மை ஏற்படுத்தவில்லை. நீர் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல.
6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அவனுக்கு இணை வைத்திருக்கமாட்டார்கள். (அத்தகைய ஏற்பாட்டை அவனே செய்திருப்பான்.) நாம் உம்மை அவர்களின் பாதுகாவலராக நியமிக்கவில்லை. மேலும், நீர் அவர்களின் பொறுப்பாளருமல்லர்.
6:107. மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கமாட்டார்கள், அவர்கள் மீது காப்பாளராகவும் உம்மை நாம் ஏற்படுத்தவுமில்லை, இன்னும் நீர் அவர்களின் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளருமல்லர்.
6:108
6:108 وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ ‌ؕ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَلَا تَسُبُّوا திட்டாதீர்கள் الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ வணங்குகிறார்கள் مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை فَيَسُبُّوا அதனால் திட்டுவார்கள் اللّٰهَ அல்லாஹ்வை عَدْوًاۢ வரம்பு மீறி بِغَيْرِ عِلْمٍ ؕ அறிவின்றி كَذٰلِكَ இவ்வாறே زَيَّنَّا அலங்கரித்தோம் لِكُلِّ ஒவ்வொரு اُمَّةٍ வகுப்பினர் عَمَلَهُمْ அவர்களுடைய செயல்களை ثُمَّ اِلٰى رَبِّهِمْ அவர்களுடைய இறைவனிடமே مَّرْجِعُهُمْ மீட்சி/அவர்களுடைய فَيُنَبِّئُهُمْ ஆகவே அறிவிப்பான்/அவர்களுக்கு بِمَا எதை كَانُوْا இருந்தார்கள் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
6:108. அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான்.
6:108. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (தெய்வம் என) அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கிறோம். பின்னர், அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.
6:108. மேலும் (முஸ்லிம்களே!) அவர்கள் அல்லாஹ்வை விடுத்து யாரிடம் பிரார்த்தனை புரிகின்றார்களோ அவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! பிறகு அவர்கள் அறியாமையினால், எல்லைமீறி அல்லாஹ்வையே திட்ட ஆரம்பித்து விடுவார்கள். நாம் இவ்வாறே ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவருடைய செயலை அழகாக்கியிருக்கின்றோம். பிறகு அவர்கள் தம் இறைவனிடமே திரும்பி வரவேண்டியதிருக்கிறது. அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதனை அவர்களுக்கு அவன் அறிவித்துவிடுவான்.
6:108. (விசுவாசிகளே) அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள், அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக விரோதத்தால் அல்லாஹ்வைத் திட்டுவார்கள், இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அலங்காரமாக்கி வைத்திருக்கின்றோம், பின்னர் அவர்களின் மீட்சி அவர்களின் இரட்சகனின் பாலே உள்ளது, பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.
6:109
6:109 وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ جَآءَتْهُمْ اٰيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَا‌ ؕ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ‌ وَمَا يُشْعِرُكُمْۙ اَنَّهَاۤ اِذَا جَآءَتْ لَا يُؤْمِنُوْنَ‏
وَاَقْسَمُوْا சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு جَهْدَ உறுதியாக اَيْمَانِهِمْ அவர்களின் சத்தியம் لَٮِٕنْ جَآءَتْهُمْ வந்தால் / அவர்களிடம் اٰيَةٌ ஓர் அத்தாட்சி لَّيُؤْمِنُنَّ நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள் بِهَا‌ ؕ அதை قُلْ கூறுவீராக اِنَّمَا எல்லாம் الْاٰيٰتُ அத்தாட்சிகள் عِنْدَ اللّٰهِ‌ அல்லாஹ்விடமே وَمَا يُشْعِرُكُمْۙ நீங்கள் அறிவீர்களா? اَنَّهَاۤ நிச்சயமாக அவை اِذَا جَآءَتْ வந்தால் لَا يُؤْمِنُوْنَ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:109. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்: அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?
6:109. (அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி எங்களுக்காக வரும் சமயத்தில், ‘‘நிச்சயமாக நாங்கள் அதை நம்புவோம்'' என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுவீராக. (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) அத்தாட்சி வந்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?
6:109. அவர்கள் அல்லாஹ்வின் மீது அழுத்தமான சத்தியங்கள் செய்து “எங்களிடம் ஏதேனும் சான்று (முஃஜிஸா) வந்துவிட்டால் நிச்சயம் அதன்மீது நம்பிக்கை கொள்வோம்” என்று கூறுகின்றார்கள். (நபியே!) அவர்களிடம் கூறும்: சான்றுகள் அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளன! மேலும், சான்றுகள் வந்துவிட்டாலும்கூட அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது?
6:109. மேலும், (அவர்கள் விரும்பியவாறு) யாதோர் அத்தாட்சி அவர்களுக்கு வந்தால், நிச்சயமாக அவர்கள் அதனை நம்புவார்கள் என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியமாக சத்தியம் செய்(து கூறு)கின்றனர், “நிச்சயமாக அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமேயிருக்கின்றன, (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான்)” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அவ்வாறு) அவர்களிடம் நிச்சயமாக அது வரும்பட்சத்தில், அதனை அவர்கள் விசுவாசிப்பார்கள் என்பதை (விசுவாசிகளே) உங்களுக்கு அறிவித்தது எது?
6:110
6:110 وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ புரட்டுகிறோம்/உள்ளங்களை/அவர்களுடைய وَاَبْصَارَهُمْ இன்னும் பார்வைகளை/அவர்களுடைய كَمَا போன்று لَمْ يُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை بِهٖۤ இதை اَوَّلَ முதல் مَرَّةٍ முறையாக وَّنَذَرُهُمْ விடுகிறோம்/அவர்களை فِىْ طُغْيَانِهِمْ அட்டூழியத்தில் / அவர்களுடைய يَعْمَهُوْنَ‏ கடுமையாக அட்டூழியம் செய்வார்கள்
6:110. மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் - அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே; இன்னும் அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.
6:110. முன்னர் அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இருந்தபடியே (இப்பொழுதும் நம்பிக்கை கொள்ளாது இருப்பதற்காக) நாம் அவர்களுடைய உள்ளங்களையும் பார்வைகளையும் புரட்டி அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களை தட்டழிந்து திரியும்படி விட்டிருக்கிறோம்.
6:110. ஆரம்பத்தில் அவர்கள் இவ்வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது போன்று (இப்போதும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்காக) அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் நாம் திருப்புகின்றோம். மேலும், அவர்களை வரம்பு மீறிய போக்கிலேயே உழன்று கொண்டிருக்குமாறு நாம் விட்டு விடுகின்றோம்.
6:110. மேலும், முதல் தடவை அவர்கள் இவ்வேதத்தை விசுவாசிக்காது இருந்த பிரகாரமே நாம் அவர்களுடைய இதயங்களையும், பார்வைகளையும் புரட்டிவிடுவோம், அவர்களுடைய வழிகேட்டிலேயே அவர்களைத் தட்டழிந்து திரியுமாறு விட்டுவிடுவோம்.
6:111
6:111 وَلَوْ اَنَّـنَا نَزَّلْنَاۤ اِلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةَ وَكَلَّمَهُمُ الْمَوْتٰى وَ حَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَىْءٍ قُبُلًا مَّا كَانُوْا لِيُؤْمِنُوْۤا اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ يَجْهَلُوْنَ‏
وَلَوْ اَنَّـنَا نَزَّلْنَاۤ நிச்சயமாக நாம் இறக்கினாலும் اِلَيْهِمُ அவர்களிடம் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை وَكَلَّمَهُمُ இன்னும் பேசினாலும்/அவர்களிடம் الْمَوْتٰى இறந்தவர்கள் وَ حَشَرْنَا இன்னும் ஒன்று திரட்டினாலும் عَلَيْهِمْ அவர்களுக்கு முன்னால் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் قُبُلًا கண்ணெதிரே مَّا كَانُوْا அவர்கள் இல்லை لِيُؤْمِنُوْۤا அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக اِلَّاۤ اَنْ يَّشَآءَ தவிர/நாடுவது اللّٰهُ அல்லாஹ் وَلٰـكِنَّ எனினும் நிச்சயமாக اَكْثَرَهُمْ அவர்களில் அதிகமானோர் يَجْهَلُوْنَ‏ அறியமாட்டார்கள்
6:111. நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.
6:111. (அவர்கள் விரும்புகின்றவாறு) மெய்யாகவே நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை (எழுப்பி) அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், (மறைவாயிருக்கும்) அனைத்தையும் அவர்கள் (கண்) முன் கொண்டு வந்து சேர்த்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர. அவர்களில் பெரும்பான்மையினர் (அறிவில்லாத) மூடர்களாகவே இருக்கின்றனர்.
6:111. நாம் வானவர்களை அவர்களிடம் இறக்கி வைத்தாலும், இறந்து போனவர்கள் வந்து அவர்களிடம் பேசினாலும் (உலகிலுள்ள) அனைத்தையும் அவர்களின் கண்ணெதிரே கொண்டு வந்து குவித்தாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ஆனால் (அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று) அல்லாஹ் நாடினாலே தவிர! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறிவற்ற பேச்சுகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
6:111. இன்னும், (அவர்கள் கேட்டவாறு) நிச்சயமாக மலக்குகளை அவர்களிடம் நாம் இறக்கி வைத்ததாலும், இறந்தோர் அவர்களிடம் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்கள் (கண்) முன் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்கள் விசுவாசங் கொள்பவர்களாக இல்லை, அவர்களின் பெரும்பாலோர் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.
6:112
6:112 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِىْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا‌ ؕ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ‌ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே جَعَلْنَا ஆக்கினோம் لِكُلِّ نَبِىٍّ ஒவ்வொரு நபிக்கும் عَدُوًّا எதிரிகளாக شَيٰطِيْنَ ஷைத்தான்களை الْاِنْسِ மனிதர்களில் وَالْجِنِّ இன்னும் ஜின்களில் يُوْحِىْ அறிவிக்கிறார் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اِلٰى بَعْضٍ சிலருக்கு زُخْرُفَ الْقَوْلِ அலங்காரமான சொல்லாக غُرُوْرًا‌ ؕ ஏமாற்றுவதற்காக وَلَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّكَ உம் இறைவன் مَا மாட்டார்கள் فَعَلُوْهُ‌ அதை அவர்கள் செய்திருக்க فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! وَمَا இன்னும் எதை يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
6:112. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
6:112. இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதரிலும், ஜின்னிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக்கி இருந்தோம். அவர்களில் சிலர் சிலரை ஏமாற்றுவதற்காக அழகான வார்த்தைகளை (காதில்) இரகசியமாகக் கூறிக் (கலைத்துக்) கொண்டிருந்தார்கள். உமது இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டுவிடுவீராக.
6:112. இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள ஷைத்தான்களைப் பகைவர்களாக்கினோம். அவர்களில் சிலர், வேறு சிலரிடம் ஏமாற்றும் நோக்குடன் அலங்காரமான சொற்களைக் கூறிக் கொண்டேயிருக்கின்றனர். உம்முடைய இறைவன் நாடியிருந்தால் அவர்கள் ஒருபோதும் இச்செயலைச் செய்திருக்க மாட்டார்கள்.
6:112. மேலும், இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதியாக நாம் ஆக்கியிருந்தோம், அவர்களில் சிலர் சிலருக்கு அலங்காரமான (பொய்க்) கூற்றுக்களை ஏமாற்றுவதற்காக இரகசியமாக அறிவிக்கின்றனர், மேலும், உம்முடைய இரட்சகன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள், ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்கள் கற்பனை செய்து கொண்டிருப்பவைகளையும் விட்டுவிடுவீராக!
6:113
6:113 وَلِتَصْغٰٓى اِلَيْهِ اَفْـِٕدَةُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ‏
وَلِتَصْغٰٓى இன்னும் செவிசாய்ப்பதற்காக اِلَيْهِ அதன் பக்கம் اَفْـِٕدَةُ உள்ளங்கள் الَّذِيْنَ எவர்களுடைய لَا يُؤْمِنُوْنَ நம்ப மாட்டார்கள் بِالْاٰخِرَةِ மறுமையை وَلِيَرْضَوْهُ இன்னும் அவர்கள் திருப்தி கொள்வதற்காக/அதை وَلِيَقْتَرِفُوْا இன்னும் அவர்கள் செய்வதற்காக مَا எவற்றை هُمْ அவர்கள் مُّقْتَرِفُوْنَ‏ செய்பவர்கள்
6:113. (ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).
6:113. மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் (ஷைத்தானாகிய) அவர்களுக்கு செவிசாய்த்து அதை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் செய்யும் தீய செயல்களை இவர்களும் செய்வதற்காகவும் (இவ்வாறு இவர்களை அவர்கள் மயக்கி வந்தனர்).
6:113. எனவே நீர் அவர்களை விட்டுவிடும்! அவர்கள் புனைந்து கூறிக்கொண்டிருக்கட்டும்! மேலும் (இச்செயல்களைச் செய்யுமாறு அவர்களை நாம் ஏன் விட்டு வைத்திருக்கின்றோம் என்றால்) மறுமையை நம்பாதவர்களின் மனம் இந்த அலங்காரமான (ஏமாற்று)ப் பேச்சின் பக்கம் சாய்ந்து அதனை அவர்கள் மனநிறைவு கொள்வதற்காகவும், மேலும் அவர்கள் சம்பாதிக்க விரும்பும் தீவினைகளை அவர்கள் சம்பாதிப்பதற்காகவும்தான்!
6:113. மறுமையை நம்பாதோரின் இதயங்கள் (ஷைத்தானின் அலங்காரமான பொய்க்கூற்றுக்களாகிய) அதற்குச் செவி சாய்ப்பதற்காகவும், அதனை அவர்கள் பொருந்திக் கொள்வதற்காகவும், அவர்கள் எதைச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்களோ அதனை அவர்கள் செய்வதற்காகவுமே (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கி வந்தனர்)
6:114
6:114 اَفَغَيْرَ اللّٰهِ اَبْتَغِىْ حَكَمًا وَّهُوَ الَّذِىْۤ اَنْزَلَ اِلَيْكُمُ الْـكِتٰبَ مُفَصَّلاً‌ ؕ وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ يَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَـقِّ‌ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَ‏
اَفَغَيْرَ அல்லாதவரையா? اللّٰهِ அல்லாஹ் اَبْتَغِىْ தேடுவேன் حَكَمًا தீர்ப்பாளனாக وَّهُوَ அவன்தான் الَّذِىْۤ எவன் اَنْزَلَ இறக்கினான் اِلَيْكُمُ உங்களுக்கு الْـكِتٰبَ வேதத்தை مُفَصَّلاً‌ ؕ நன்கு விவரிக்கப்பட்டதாக وَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு الْـكِتٰبَ வேதத்தை يَعْلَمُوْنَ அறிவார்கள் اَنَّهٗ நிச்சயமாக இது مُنَزَّلٌ இறக்கப்பட்டது مِّنْ உம் இறைவனிடமிருந்து رَّبِّكَ بِالْحَـقِّ‌ உண்மையைக் கொண்டே فَلَا تَكُوْنَنَّ ஆகவே நிச்சயம் ஆகிவிடாதீர் مِنَ الْمُمْتَرِيْنَ‏ சந்தேகிப்பவர்களில்
6:114. (நபியே! கூறும்:) “அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.
6:114. ‘‘அல்லாஹ்வைத் தவிர மற்றவரையா (எங்களுக்கும் உங்களுக்கும் இடையில்) தீர்ப்பளிக்கும் அதிபதியாக நான் எடுத்துக்கொள்வேன்? அவன்தான் எல்லா விபரங்களுமுள்ள இவ்வேதத்தை உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்'' (என்று நபியே! நீர் கூறுவீராக. இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள், இது மெய்யாகவே உமது இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டே அருளப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிவார்கள். ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீரும் ஒருவராக ஒருபோதும் ஆகிவிடவேண்டாம்.
6:114. இவ்வாறிருக்க, அல்லாஹ்வை விடுத்து வேறொரு தீர்ப்பாளனையா நான் தேடுவேன்? அவனோ முழு விளக்கத்துடன் உங்களுக்கு வேதத்தை இறக்கியுள்ளான். மேலும் (உங்களுக்கு முன்னால்) எவர்களுக்கு நாம் வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இவ்வேதம் உம்முடைய இறைவனிடமிருந்து சத்தியத்துடன் இறங்கியிருக்கின்றது என்பதை நன்கறிவார்கள். எனவே சந்தேகம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்.
6:114. “அல்லாஹ் அல்லாதவனையா தீர்ப்பாளனாக நான் தேடுவேன்” அவனே இவ்வேதத்தை விவரிக்கப்பட்டதாக உங்களுக்கு இறக்கி (அருளி)யிருக்கிறான்” (என்று நபியே! நீர் கூறுவீராக! இதற்கு முன்னர்) எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கின்றோமோ அத்தகையவர்கள் இது நிச்சயமாகவே உம் இரட்சகனிடமிருந்து உண்மையைக் கொண்டே இறக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாக அவர்கள் அறிவார்கள், ஆகவே, சந்தேகப்படுவோரில் நிச்சயமாக நீர் (ஒருவராக) ஆகிவிடாதீர்.
6:115
6:115 وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ صِدْقًا وَّعَدْلاً  ؕ لَا مُبَدِّلَ لِكَلِمٰتِهٖ‌ ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَتَمَّتْ முழுமையாகியது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் صِدْقًا உண்மையால் وَّعَدْلاً  ؕ இன்னும் நீதத்தால் لَا அறவே இல்லை مُبَدِّلَ மாற்றுபவன் لِكَلِمٰتِهٖ‌ ۚ அவனுடைய வாக்குகளை وَهُوَ அவன் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
6:115. மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
6:115. (நபியே!) உமது இறைவனின் வாக்கு உண்மையாகவும் நீதமாகவும் முழுமையாகி விட்டது. அவனுடைய வாக்குகளை மாற்றுபவன் யாருமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன்.
6:115. உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் முழுமையாக உள்ளன! அவனுடைய கட்டளைகளை மாற்றக்கூடியவர் எவருமிலர். மேலும், அவன் அனைத்தையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
6:115. மேலும், (நபியே!) உமதிரட்சகனின் வார்த்தைகள் (அவன் கூற்றுக்களில்) உண்மையாலும் (அவன் செயல்களில்) நீதத்தாலும், பூர்த்தியாகிவிட்டன, அவனுடைய வாக்குகளை மாற்றுவோர் எவருமில்லை, அவனே (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
6:116
6:116 وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ‏
وَاِنْ تُطِعْ நீர் கீழ்ப்படிந்தால் اَكْثَرَ அதிகமானோருக்கு مَنْ فِى الْاَرْضِ இப்பூமியில் உள்ளவர்களில் يُضِلُّوْكَ வழிகெடுப்பார்கள்/ உம்மை عَنْ سَبِيْلِ பாதையிலிருந்து اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய اِنْ يَّتَّبِعُوْنَ பின்பற்ற மாட்டார்கள் اِلَّا தவிர الظَّنَّ யூகம் وَاِنْ இல்லை هُمْ அவர்கள் اِلَّا தவிர يَخْرُصُوْنَ‏ கற்பனை செய்பவர்களாக
6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.
6:116. இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர். நீர் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்.
6:116. மேலும் (நபியே,) உலகில் வாழும் மக்களில் பெரும்பான்மை(யினரின் கூற்று)க்கு நீர் கீழ்ப்படிவீராயின் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் வழியிலிருந்து பிறழச் செய்து விடுவார்கள்! அவர்களோ வெறும் யூகங்களையே பின்பற்றுகின்றார்கள். மேலும், கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
6:116. மேலும், இப்புவியிலிருப்போரில் பெரும்பாலோருக்கு (அவர்களின் கூற்றை ஏற்று) நீர் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள், வெறும் யூகத்தைத் தவிர (வேறெதையும்) அவர்கள் பின் பற்றுவதில்லை, மேலும், அவர்கள் அனுமானம் செய்பவர்களே தவிர (வேறு) இல்லை.
6:117
6:117 اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ يَّضِلُّ عَنْ سَبِيْلِهٖ‌ۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் اَعْلَمُ மிக அறிந்தவன் مَنْ எவரை يَّضِلُّ வழிகெடுவார் عَنْ இருந்து سَبِيْلِهٖ‌ۚ அவனுடைய பாதையில் وَهُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களை
6:117. நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.
6:117. (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான்.
6:117. நிச்சயமாக உம் இறைவன் தன் வழியிலிருந்து தவறியிருப்பவர் யார்; இன்னும் நேர்வழியில் செல்பவர்கள் யார் என்பதை நன்கறிபவனாக இருக்கின்றான்.
6:117. (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் தன் வழியை விட்டும் தவறியவன் யார் என்பதை அவன் மிக்க அறிந்தவன், மேலும், நேர் வழியைப் பெற்றுவிட்டவர்களையும் அவன் மிக்க அறிந்தவன்.
6:118
6:118 فَـكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ‏
فَـكُلُوْا ஆகவே புசியுங்கள் مِمَّا ذُكِرَ கூறப்பட்டதிலிருந்து اسْمُ பெயர் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْهِ அதன் மீது اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் بِاٰيٰتِهٖ அவனுடைய வசனங்களை مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
6:118. (முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.
6:118. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றையே புசியுங்கள்.
6:118. நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்கள் மீது நம்பிக்கை உடையோராயின் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தைப் புசியுங்கள்!
6:118. ஆகவே, (விசுவாசிகளே!) நீங்கள் அவனுடைய வசனங்களை விசுவாசித்தவர்களாயிருந்தால், (அறுக்கும் பொழுது) எதன்மீது அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதோ அவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள்.
6:119
6:119 وَمَا لَـكُمْ اَلَّا تَاْكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَـكُمْ مَّا حَرَّمَ عَلَيْكُمْ اِلَّا مَا اضْطُرِرْتُمْ اِلَيْهِؕ وَاِنَّ كَثِيْرًا لَّيُضِلُّوْنَ بِاَهْوَآٮِٕهِمْ بِغَيْرِ عِلْمٍ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِالْمُعْتَدِيْنَ‏
وَمَا لَـكُمْ உங்களுக்கு என்ன اَلَّا تَاْكُلُوْا நீங்கள் புசிக்காதிருக்க مِمَّا ذُكِرَ கூறப்பட்டதிலிருந்து اسْمُ பெயர் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْهِ அதன் மீது وَقَدْ فَصَّلَ விவரித்து விட்டான் لَـكُمْ உங்களுக்கு مَّا எவற்றை حَرَّمَ தடுத்தான் عَلَيْكُمْ உங்களுக்கு اِلَّا தவிர مَا எது اضْطُرِرْتُمْ நிர்பந்திக்கப்பட்டீர்கள் اِلَيْهِؕ அதன் பக்கம் وَاِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானோர் لَّيُضِلُّوْنَ வழி கெடுக்கின்றனர் بِاَهْوَآٮِٕهِمْ தங்கள் ஆசைகளைக் கொண்டு بِغَيْرِ عِلْمٍ‌ؕ கல்வியின்றி اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிபவன் بِالْمُعْتَدِيْنَ‏ வரம்பு மீறிகளை
6:119. அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.
6:119. (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை அறுக்கும் பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவற்றை நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன (தடை)? நீங்கள் நிர்பந்திக்கப்பட்டாலன்றி (புசிக்க) உங்களுக்குத் தடுக்கப்பட்டவை எவையென அவன் உங்களுக்கு விவரித்துக் கூறியே இருக்கிறான். (அவற்றைத் தவிர உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட அனைத்தையும் நீங்கள் புசிக்கலாம்.) எனினும், பெரும்பான்மையினர் அறியாமையின் காரணமாக தங்கள் இஷ்டப்படியெல்லாம் (மக்களை) வழி கெடுக்கின்றனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் வரம்பு மீறுபவர்களை நன்கறிவான்.
6:119. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணியை நீங்கள் புசிக்காமல் இருக்க என்ன காரணம்? கட்டாயச் சூழ்நிலைகளைத் தவிர மற்ற சமயங்களில் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளவை பற்றி ஏற்கனவே உங்களுக்கு விளக்கியிருக்கின்றானே...! ஆனால், பெரும்பான்மையினரின் நிலை என்னவெனில், அறிவில்லாமல் தம் மன இச்சைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மக்களை வழி பிறழச் செய்கின்றார்கள். திண்ணமாக, உம் இறைவன் வரம்பு மீறி நடப்போரை நன்கறிவான்.
6:119. எதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்தப்பட்டவர்களாகி விட்டீர்களோ அதைத் தவிர, எதை உங்களின் மீது அவன் தடுத்து (ஹராமாக்கி உ)ள்ளானோ அதை அவன் உங்களுக்குத் திட்டமாக தெளிவு செய்திருக்க எவற்றின் மீது (அறுக்கும்பொழுது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதோ அவற்றிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? மேலும், நிச்சயமாக (மனிதர்களில்) பெரும்பாலோர் அறிவின்றியே தங்கள் மன இச்சைகளின்படியெல்லாம் (மக்களை) உறுதியாகவே வழிகெடுத்து விடுகிறார்கள், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் - அவனே வரம்பு மீறியவர்களை மிக்க அறிந்தவன்.
6:120
6:120 وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ‌ؕ اِنَّ الَّذِيْنَ یَکْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ‏
وَذَرُوْا விடுங்கள் ظَاهِرَ வெளிப்படையானதை الْاِثْمِ பாவத்தில் وَبَاطِنَهٗ‌ؕ இன்னும் அதில் மறைவானதை اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் یَکْسِبُوْنَ சம்பாதிக்கிறார்கள் الْاِثْمَ பாவத்தை سَيُجْزَوْنَ கூ லி கொடுக்கப்படுவார்கள் بِمَا எதற்கு كَانُوْا இருந்தனர் يَقْتَرِفُوْنَ‏ செய்வார்கள்
6:120. (முஃமின்களே!) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.
6:120. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை அடைந்தே தீருவார்கள்.
6:120. வெளிப்படையான, மறைவான பாவங்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்! எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்தவற்றின் கூலி அதிவிரைவில் வழங்கப்படும்.
6:120. (விசுவாசிகளே!) நீங்கள் பாவத்தில் வெளிப்படையானதையும், அதில் இரகிசயமானதையும் விட்டு விடுங்கள். (ஏனென்றால்) நிச்சயமாக பாவத்தைச் சம்பாதிக்கின்றனரே அத்தகையோர் - தாங்கள் சம்பாதித்தவற்றுக்கு (மறுமையில்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.
6:121
6:121 وَلَا تَاْكُلُوْا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللّٰهِ عَلَيْهِ وَاِنَّهٗ لَفِسْقٌ ؕ وَاِنَّ الشَّيٰطِيْنَ لَيُوْحُوْنَ اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ لِيُجَادِلُوْكُمْ‌ ۚ وَاِنْ اَطَعْتُمُوْهُمْ اِنَّكُمْ لَمُشْرِكُوْنَ‏
وَلَا تَاْكُلُوْا புசிக்காதீர்கள் مِمَّا எதிலிருந்து لَمْ يُذْكَرِ கூறப்படவில்லை اسْمُ பெயர் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْهِ அதன் மீது وَاِنَّهٗ நிச்சயமாக அது لَفِسْقٌ ؕ பாவம்தான் وَاِنَّ நிச்சயமாக الشَّيٰطِيْنَ ஷைத்தான்கள் لَيُوْحُوْنَ அறிவிக்கின்றனர் اِلٰٓى اَوْلِيٰٓـٮِٕـهِمْ தங்கள் நண்பர்களுக்கு لِيُجَادِلُوْكُمْ‌ ۚ அவர்கள் தர்க்கிப்பதற்காக / உங்களுடன் وَاِنْ اَطَعْتُمُوْهُمْ நீங்கள் கீழ்ப்படிந்தால் / அவர்களுக்கு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَمُشْرِكُوْنَ‏ இணைவைப்பவர்கள்தான்
6:121. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.
6:121. (நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாத வற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்!
6:121. மேலும், அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் மாமிசத்தை நீங்கள் புசிக்காதீர்கள்! நிச்சயமாக, இவ்வாறு செய்வது பாவமாகும். திண்ணமாக, ஷைத்தான்கள் தம் நண்பர்களின் உள்ளங்களில் ஐயப்பாடுகளையும் ஆட்சேபணைகளையும் விதைக்கின்றார்கள்; அவர்கள் உங்களோடு தர்க்கம் புரிய வேண்டும் என்பதற்காக! ஆனால், நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீர்களாயின் நிச்சயமாக நீங்களும் இணைவைப்பவர்கள்தாம்!
6:121. மேலும், (விசுவாசிகளே! அறுக்கும்பொழுது) எதன்மீது அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படவில்லையோ அதிலிருந்து நீங்கள் புசிக்காதீர்கள், இன்னும் நிச்சயமாக அது பாவமாகும், (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு, நிச்சயமாக ஷைத்தான்கள் தங்களுடைய நண்பர்களைத் தூண்டுகின்றனர், நீங்கள் அவர்களுக்குக் கீழப்படிந்தும் விட்டால், நிச்சயமாக நீங்கள் (அவர்களைப்போல்) இணைவைப்பவர்கள் (ஆவீர்கள்.)
6:122
6:122 اَوَمَنْ كَانَ مَيْتًا فَاَحْيَيْنٰهُ وَجَعَلْنَا لَهٗ نُوْرًا يَّمْشِىْ بِهٖ فِى النَّاسِ كَمَنْ مَّثَلُهٗ فِى الظُّلُمٰتِ لَـيْسَ بِخَارِجٍ مِّنْهَا‌ ؕ كَذٰلِكَ زُيِّنَ لِلْكٰفِرِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اَوَمَنْ ஒருவர் كَانَ இருந்தார் مَيْتًا மரணித்தவராக فَاَحْيَيْنٰهُ உயிர்ப்பித்தோம்/அவரை وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَهٗ அவருக்கு نُوْرًا ஓர் ஒளியை يَّمْشِىْ நடமாடுவதற்கு بِهٖ அதைக் கொண்டு فِى النَّاسِ மக்களுக்கு மத்தியில் كَمَنْ எவரைப்போல் مَّثَلُهٗ அவருடைய உதாரணம் فِى الظُّلُمٰتِ இருள்களில் لَـيْسَ بِخَارِجٍ வெறியேறாதவர் مِّنْهَا‌ ؕ அவற்றிலிருந்து كَذٰلِكَ இவ்வாறே زُيِّنَ அழகாக்கப்பட்டன لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு مَا எவை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
6:122. மரணம் அடைந்த ஒருவனை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம் - இன்னும் அவனுக்கு ஓர் ஒளியையும் கொடுத்தோம். அதைக்கொண்டு அவன் மனிதர்களிடையே நடமாடுகிறான். மற்றொருவன் இருள்களில் சிக்கிக்கிடக்கிறான்; அதைவிட்டு அவன் வெளியேறவே முடியாது - இவ்விருவரும் சமமாவாரா? இவ்வாறு காஃபிர்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய (பாவச்)செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
6:122. (வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய)செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன.
6:122. இறந்துவிட்டிருந்த ஒருவனுக்கு நாம் உயிர் கொடுத்தோம். பின்னர் அவனுக்கு ஓர் ஒளியையும் வழங்கினோம். அதன் உதவியால் அவன் மக்களிடையே நடமாடுகின்றான். இப்படிப்பட்டவனும் இருள்களில் சிக்கி, எவ்விதத்திலும் அவற்றிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனும் சமம் ஆவார்களா? நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செயல்கள் அழகாக்கப்பட்டுள்ளன.
6:122. மரணித்தவனாக இருந்த ஒருவன், பின்னர் நாம் அவனை உயிர்ப்பித்து அவனுக்கு பிரகாசத்தையும் நாம் ஆக்கினோம், அதன் மூலம் மனிதர்களிடையே நடக்கின்ற அவன் (குப்ர் எனும்) இருள்களில் (சிக்கி) அதிலிருந்து வெளியேற முடியாதிருக்கிறவனைப் போன்ற)வனுக்குச் சமமானவனா? (ஒருபோதும் இல்லை) இவ்வாறே நிராகரிப்போருக்கு அவர்கள் செய்துவந்த (தீய) செயல்கள் அலங்காரமாக்கப்பட்டுவிட்டன.
6:123
6:123 وَكَذٰلِكَ جَعَلْنَا فِىْ كُلِّ قَرْيَةٍ اَكٰبِرَ مُجْرِمِيْهَا لِيَمْكُرُوْا فِيْهَا‌ ؕ وَمَا يَمْكُرُوْنَ اِلَّا بِاَنْفُسِهِمْ وَمَا يَشْعُرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே جَعَلْنَا ஏற்படுத்தினோம் فِىْ كُلِّ قَرْيَةٍ எல்லா ஊர்களிலும் اَكٰبِرَ மிகப் பெரிய مُجْرِمِيْهَا குற்றவாளிகளை/அவற்றில் உள்ள لِيَمْكُرُوْا அவர்கள் சதிசெய்வதற்காக فِيْهَا‌ ؕ அவற்றில் وَمَا يَمْكُرُوْنَ அவர்கள் சதி செய்ய முடியாது اِلَّا بِاَنْفُسِهِمْ தங்களுக்கே தவிர وَمَا يَشْعُرُوْنَ‏ உணர மாட்டார்கள்
6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.
6:123. இவ்வாறே, ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பாவிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கிறோம். அங்கு அவர்கள் விஷமம் (செய்ய சதி) செய்து கொண்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கே தவிர, (மற்றெவருக்கும்) சதி செய்துவிட முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
6:123. மேலும் இதேபோன்று ஒவ்வோர் ஊரிலும் அங்குள்ள பெரும் பெரும் குற்றவாளிகளை நாம் விட்டு வைத்திருக்கின்றோம்; தங்களுடைய ஏமாற்று வலையை அங்கு அவர்கள் விரித்து வைக்கட்டும் என்பதற்காக! உண்மையில் அவர்களே தங்களின் ஏமாற்று வலையில் சிக்கிக் கொள்கின்றார்கள். ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை.
6:123. இன்னும், இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும், அதில் (உள்ள) குற்றச் செயல்களைப் புரிந்து வருபவர்களில் தலைவர்களை அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக நாம் ஆக்கியிருந்தோம், மேலும், அவர்கள் தங்களுக்கே தவிர (மற்றெவருக்கும்) சதி செய்வதில்லை, (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்வதுமில்லை.
6:124
6:124 وَاِذَا جَآءَتْهُمْ اٰيَةٌ قَالُوْا لَنْ نُّـؤْمِنَ حَتّٰى نُؤْتٰى مِثْلَ مَاۤ اُوْتِىَ رُسُلُ اللّٰهِؔ‌ۘؕ اَللّٰهُ اَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسٰلَـتَهٗ‌ ؕ سَيُصِيْبُ الَّذِيْنَ اَجْرَمُوْا صَغَارٌ عِنْدَ اللّٰهِ وَعَذَابٌ شَدِيْدٌۢ بِمَا كَانُوْا يَمْكُرُوْنَ‏
وَاِذَا جَآءَتْهُمْ வந்தால் / அவர்களிடம் اٰيَةٌ ஒரு வசனம் قَالُوْا கூறுகின்றனர் لَنْ نُّـؤْمِنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டோம் حَتّٰى வரை نُؤْتٰى கொடுக்கப்படுவோம் مِثْلَ போன்று مَاۤ எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்கள் رُسُلُ தூதர்கள் اللّٰهِؔ‌ۘؕ அல்லாஹ்வுடைய اَللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் حَيْثُ எங்கு يَجْعَلُ ஏற்படுத்துவான் رِسٰلَـتَهٗ‌ ؕ தன் தூதுத்துவத்தை سَيُصِيْبُ அடையும் الَّذِيْنَ اَجْرَمُوْا குற்றம் புரிந்தவர்களை صَغَارٌ கேவலம், சிறுமை عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَعَذَابٌ இன்னும் வேதனை شَدِيْدٌۢ கடுமையானது بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَمْكُرُوْنَ‏ சூழ்ச்சி செய்வார்கள்
6:124. அவர்களுக்கு ஏதாவது ஓர் அத்தாட்சி வந்தால், அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் எங்களுக்கும் கொடுக்கப்படாத வரையில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள்; அல்லாஹ் தனது தூதை எங்கு, அமைக்க வேண்டுமென்பதை நன்கு அறிவான்; குற்றம் செய்து கொண்டிருப்போருக்கு அவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடம் சிறுமையும், கொடிய வேதனையும் உண்டு.
6:124. அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் ‘‘அல்லாஹ்வுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்ற (நபித்துவத்)தை எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் (அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். நபித்துவத்தை எங்கு (எவருக்கு) அளிப்பது என்பதை அல்லாஹ்தான் நன்கறிவான். குற்றம் செய்யும் இவர்களை இவர்கள் செய்யும் சதியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கொடிய வேதனையும் அதிசீக்கிரத்தில் வந்தடையும்.
6:124. அவர்களிடம் ஏதேனுமொரு சான்று வந்தால் “இறைத்தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எங்களுக்கும் கொடுக்கப்படாத வரை நாங்கள் அதை ஏற்கமாட்டோம்” என்று கூறுகின்றார்கள். தூதுத்துவப் பணியை யாரிடம் வாங்க வேண்டும், எவ்வாறு வாங்க வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இத்தகைய குற்றவாளிகள் அதிவிரைவில் தாங்கள் செய்துகொண்டிருக்கும் சூழ்ச்சிகளுக்குப் பகரமாக அல்லாஹ்விடம் இழிவையும் கடுமையான வேதனையையும் அடைவார்கள்.
6:124. இன்னும், அவர்களிடம் ஏதாவதொரு வசனம் வந்தால் “அல்லாஹ்வினுடைய தூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்றதை நாங்கள் கொடுக்கப்படாத வரை, நாங்கள் (அதனை) விசுவாசங்கொள்ள மாட்டோம்” என்று கூறுகின்றனர், அல்லாஹ் தன்னுடைய தூதுத்துவத்தை எங்கு (எவருக்கு) ஆக்குவது என்பதை மிக்க அறிந்தவன், குற்றம் செய்து கொண்டிருந்தோரை-அவர்கள் சதி செய்து கொண்டிருந்த காரணத்தால் - அல்லாஹ்விடமிருந்து சிறுமையும் கொடிய வேதனையும் வந்தடையும்.
6:125
6:125 فَمَنْ يُّرِدِ اللّٰهُ اَنْ يَّهْدِيَهٗ يَشْرَحْ صَدْرَهٗ لِلْاِسْلَامِ‌ۚ وَمَنْ يُّرِدْ اَنْ يُّضِلَّهٗ يَجْعَلْ صَدْرَهٗ ضَيِّقًا حَرَجًا كَاَنَّمَا يَصَّعَّدُ فِى السَّمَآءِ‌ؕ كَذٰلِكَ يَجْعَلُ اللّٰهُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏
فَمَنْ எவர் يُّرِدِ நாடுவான் اللّٰهُ அல்லாஹ் اَنْ அவரை يَّهْدِيَهٗ நேர்வழி செலுத்த يَشْرَحْ விரிவாக்குகிறான் صَدْرَهٗ நெஞ்சை/அவருடைய لِلْاِسْلَامِ‌ۚ இஸ்லாமிற்கு وَمَنْ எவர் يُّرِدْ நாடுவான் اَنْ அவரை يُّضِلَّهٗ வழிகெடுக்க يَجْعَلْ ஆக்குவான் صَدْرَهٗ நெஞ்சை/அவருடைய ضَيِّقًا இருக்கமானதாக حَرَجًا சிரமமானதாக كَاَنَّمَا போல் يَصَّعَّدُ ஏறுவான் فِى السَّمَآءِ‌ؕ வானத்தில் كَذٰلِكَ இவ்வாறே يَجْعَلُ ஆக்குவான் اللّٰهُ அல்லாஹ் الرِّجْسَ தண்டனை عَلَى மீது الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏ எவர்கள்/நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
6:125. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
6:125. அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கிறான்.
6:125. எனவே எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாடுகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவாக்கிவிடுகின்றான். எவனை வழிகேட்டிலாழ்த்த நாடுகின்றானோ அவனது நெஞ்சத்தை இறுக்கமாக்கி விடுகின்றான்; எந்த அளவுக்கெனில் (இஸ்லாத்தைப் பற்றி நினைத்ததுமே) அவனுடைய உயிர் வானத்தை நோக்கி ஏறுவதைப் போல் உணர்கின்றான். இவ்வாறாக, இறைநம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது (சத்தியத்தை விட்டு விரண்டோடுவது, அதன் மீது வெறுப்புக் கொள்வது போன்ற) தூய்மையற்ற நிலையைத் திணித்துவிடுகின்றான்.
6:125. ஆகவே, அல்லாஹ் எவருக்கு நேர்வழிகாட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை, இஸ்லாத்திற்காக (அதை ஏற்றுக் கொள்ள) அவன் விரிவாக்குகின்றான், இன்னும் எவரை (அவருடைய) வழிகேட்டிலேயே விட்டுவிட அவன் நாடுகிறானோ அவருடைய நெஞ்சத்தை – அவர் வானத்தில் ஏறுபவரைப்போன்று நெருக்கடியானதாக, மிகக் கஷ்டமடைந்ததாக ஆக்கி விடுகிறான், இவ்வாறே விசுவாசங்கொள்ளாதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஆக்குகிறான்.
6:126
6:126 وَهٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيْمًا‌ ؕ قَدْ فَصَّلْنَا الْاٰيٰتِ لِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ‏
وَهٰذَا இது صِرَاطُ பாதை رَبِّكَ உம் இறைவனின் مُسْتَقِيْمًا‌ ؕ நேரானது قَدْ فَصَّلْنَا விவரித்துவிட்டோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّذَّكَّرُوْنَ‏ நல்லுபதேசம் பெறுவார்கள்
6:126. (நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.
6:126. (நபியே!) இதுவே உமது இறைவனின் நேரான வழியாகும். நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கிறோம்.
6:126. ஆயினும், இவ்வழி உம் இறைவனின் நேர்வழியாகும். திண்ணமாக, நல்லுரையினை ஏற்கும் மக்களுக்கு அதன் சான்றுகளை நாம் தெளிவுபடுத்திவிட்டோம்.
6:126. மேலும், (நபியே!) நேரானதாக இருக்க இதுவே உமதிரட்சகனின் வழியாகும், (அத்தாட்சிகளை சிந்தித்து) நினைவு கூரும் கூட்டத்தார்க்கு (நம்முடைய) வசனங்களை நிச்சயமாக நாம் விவரித்திருக்கின்றோம்.
6:127
6:127 لَهُمْ دَارُ السَّلٰمِ عِنْدَ رَبِّهِمْ‌ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
لَهُمْ அவர்களுக்கு دَارُ இல்லம் السَّلٰمِ ஈடேற்றம் عِنْدَ இடம் رَبِّهِمْ‌ அவர்களுடைய இறைவன் وَهُوَ இன்னும் அவன் وَلِيُّهُمْ அவர்களுடைய நேசன் بِمَا எவற்றின் காரணமாக كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
6:127. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.
6:127. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சாந்தியும் சமாதானமும் உள்ள சொர்க்கமுண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக அவன் அவர்களுடைய நேசன் ஆவான்.
6:127. அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குச் சாந்தி அளிக்கும் இல்லம் உண்டு. மேலும், அவர்கள் மேற்கொண்ட நேரிய செயல்முறையின் காரணமாக அவனே அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பவனாக இருக்கின்றான்.
6:127. அவர்களுக்காக அவர்கள் இரட்சகனிடத்தில் (சொர்க்கமாகிய) சாந்தி இல்லம் உண்டு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவனே அவர்களுக்குப் பாதுகாவலன்.
6:128
6:128 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا‌ ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ‌ۚ وَقَالَ اَوْلِيٰٓـئُهُمْ مِّنَ الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَـنَا الَّذِىْۤ اَجَّلْتَ لَـنَا‌‌ ؕ قَالَ النَّارُ مَثْوٰٮكُمْ خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَيَوْمَ நாள் يَحْشُرُ ஒன்று சேர்ப்பான் هُمْ அவர்கள் جَمِيْعًا‌ ۚ அனைவரையும் يٰمَعْشَرَ கூட்டமே الْجِنِّ ஜின்களின் قَدِ اسْتَكْثَرْتُمْ அதிகப்படுத்தி விட்டீர்கள் مِّنَ الْاِنْسِ‌ۚ மனிதர்களில் وَقَالَ இன்னும் கூறுவார்(கள்) اَوْلِيٰٓـئُهُمْ அவர்களின் நண்பர்கள் مِّنَ الْاِنْسِ மனிதர்களில் رَبَّنَا எங்கள் இறைவா اسْتَمْتَعَ பயனடைந்தனர் بَعْضُنَا எங்களில் சிலர் بِبَعْضٍ சிலரைக்கொண்டு وَّبَلَغْنَاۤ இன்னும் அடைந்தோம் اَجَلَـنَا தவணை/எங்கள் الَّذِىْۤ எதை اَجَّلْتَ நீ தவணையளித்த لَـنَا‌ ؕ எங்களுக்கு قَالَ கூறுவான் النَّارُ நரகம்தான் مَثْوٰٮكُمْ தங்குமிடம்/உங்கள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَاۤ அதில் اِلَّا தவிர مَا شَآءَ اللّٰهُؕ அல்லாஹ் நாடினால் اِنَّ رَبَّكَ நிச்சயமாக உம் இறைவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:128. அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
6:128. (இறைவன்) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், (ஜின் இனத்தாரை நோக்கி) ‘‘ஜின் இனத்தோரே! நீங்கள் மனிதர்களில் பலரை(க் கெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் (அல்லவா)'' என்(று கேட்)பான். அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களில் சிலர் (மாறு செய்த) சிலரைக்கொண்டு பயனடைந்து இருக்கின்றனர். எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்து விட்டோம். (எங்களுக்கு என்ன கட்டளை?)'' என்று கேட்பார்கள். (அதற்கு இறைவன்) ‘‘நரகம்தான் உங்கள் தங்குமிடம். (உங்களில்) அல்லாஹ் (மன்னிக்க) நாடியவர்களைத் தவிர (மற்ற அனைவரும் என்றென்றுமே) அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன், மிக்க ஞானமுடையவன் நன்கறிந்தவன் ஆவான்.
6:128. மேலும், எந்நாளில் அவர்கள் எல்லோரையும் அல்லாஹ் ஒன்று திரட்டுவானோ அந்நாளில் ஜின்களை (ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தான்களை) நோக்கி அவன் கூறுவான்: “ஜின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் பெரும்பாலோரை உங்கள் பக்கம் நன்கு கவர்ந்திழுத்துக் கொண்டீர்களே!” மேலும், மனிதர்களில் யார் யார் அவர்களுக்கு நண்பர்களாக இருந்தார்களோ அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு பயன்படுத்திக் கொண்டோம். எந்த நேரத்தை எங்களுக்காக நீ விதித்திருந்தாயோ அந்த நேரத்தை இப்பொழுது நாங்கள் அடைந்திருக்கின்றோம்.” அப்போது அல்லாஹ் கூறுவான்: “இனி நரகம்தான் உங்களின் தங்குமிடமாகும். அதில் நீங்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பீர்கள்!” அதிலிருந்து அல்லாஹ் யாரைக் காப்பாற்ற நாடுகின்றானோ அவர்கள் மட்டுமே அதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். நிச்சயமாக, உம் இறைவன் நுண்ணறிவாளனும், பேரறிவு கொண்டவனுமாவான்.
6:128. மேலும், அவர்கள் யாவரையும் அவன் ஒன்று திரட்டும் (மறுமை) நாளில் (ஜின் கூட்டத்தாரிடம்) “ஜின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களிலிருந்து (அநேகரைக் கெடுத்து உங்கள் வழி நடப்போரை) நீங்கள் அதிகப்படுத்திக் கொண்டீர்கள் (அல்லவா?” என்று கேட்பான், அதற்கு) அம்மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள், “எங்கள் இரட்சகனே! எங்களில் சிலர் (மாறு செய்த)சிலரைக் கொண்டு பயனடைந்திருக்கின்றனர், எங்களுக்கு நீ ஏற்படுத்திய காலத்தை நாங்கள் அடைந்தும் விட்டோம்” என்று கூறுவார்கள், (அதற்கு அல்லாஹ்) நரகந்தான் உங்கள் தங்குமிடம், அல்லாஹ் நாடியனாலன்றி அதில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறுவான், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் தீர்க்கமான அறிவுடையவன், நன்கறிகிறவன்.
6:129
6:129 وَكَذٰلِكَ نُوَلِّىْ بَعْضَ الظّٰلِمِيْنَ بَعْضًاۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறு نُوَلِّىْ நண்பர்களாக ஆக்குவோம் بَعْضَ சிலரை الظّٰلِمِيْنَ அக்கிரமக்காரர்களில் بَعْضًاۢ சிலருக்கு بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْسِبُوْنَ‏ செய்வார்கள்
6:129. இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் - அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் - நெருங்கியவர்களாக ஆக்குகிறோம்.
6:129. இவ்வாறு இவ்வக்கிரமக்காரர்கள் செய்த (தீய) செயலின் காரணமாக அவர்களில் ஒவ்வொருவரையும் (அநியாயக்காரர்களாகிய) மற்றவர்களுடன் (நரகத்தில்) ஒன்று சேர்த்துவிடுவோம்.
6:129. (பாருங்கள்!) இவ்வாறே அக்கிரமக்காரர்கள் (உலகில் ஒன்றிணைந்து) சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றின் காரணத்தால், (மறுமையில்) அவர்களில் சிலரை வேறு சிலருக்கு நண்பர்கள் ஆக்குவோம்.
6:129. இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருக்கு – அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய) செயல்களின் காரணமாக நாம் சேர்த்து (நண்பர்களாக்கியு)ம் விடுவோம்.
6:130
6:130 يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اَلَمْ يَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَقُصُّوْنَ عَلَيْكُمْ اٰيٰتِىْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ؕ قَالُوْا شَهِدْنَا عَلٰٓى اَنْفُسِنَا‌ وَغَرَّتْهُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏
يٰمَعْشَرَ கூட்டமே الْجِنِّ ஜின்களின் وَالْاِنْسِ மற்றும் மனிதர்கள் اَلَمْ يَاْتِكُمْ உங்களிடம் வரவில்லையா? رُسُلٌ தூதர்கள் مِّنْكُمْ உங்களிலிருந்து يَقُصُّوْنَ விவரிப்பவர்களாக عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِىْ என் வசனங்களை وَيُنْذِرُوْنَكُمْ இன்னும் எச்சரிப்பவர்களாக/உங்களுக்கு لِقَآءَ சந்திப்பை يَوْمِكُمْ உங்கள் நாள் هٰذَا‌ ؕ இது قَالُوْا கூறுவார்கள் شَهِدْنَا சாட்சியளித்தோம் عَلٰٓى எதிராக اَنْفُسِنَا‌ எங்களுக்கு وَغَرَّتْهُمُ மயக்கி விட்டது/அவர்களை الْحَيٰوةُ வாழ்வு الدُّنْيَا உலகம் وَشَهِدُوْا இன்னும் சாட்சி கூறுவார்கள் عَلٰٓى எதிராக اَنْفُسِهِمْ அவர்களுக்கு اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் كٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களாக
6:130. (மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?” (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், “நாங்கள் எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.
6:130. (இறைவன் மறுமையில் மனிதர்களையும் ஜின்களையும் நோக்கி) ‘‘மனித, ஜின் கூட்டத்தார்களே! உங்களில் தோன்றிய (நம்) தூதர்கள் உங்களிடம் வந்து நம் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்து நீங்கள் நம்மைச் சந்திக்கும் இந்நாளைப் பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?'' என்(று கேட்)பான். அதற்கவர்கள் ‘‘(எங்கள் இறைவனே! உண்மைதான்) இவ்வுலக வாழ்க்கை எங்களை மயக்கிவிட்டது'' என்று தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறுவதுடன், நிச்சயமாக தாங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததாகவும் தங்களுக்குத் தாமே எதிராக அவர்கள் சாட்சியம் கூறுவார்கள்.
6:130. (அச்சமயத்தில் அல்லாஹ் அவர்களிடம் இப்படி வினவுவான்:) “ஜின் மற்றும் மனிதக் கூட்டத்தார்களே! உங்களுக்கு என் வசனங்களை ஓதிக் காட்டி நீங்கள் சந்திக்கப்போகும் இந்நாளின் விளைவு குறித்து எச்சரிக்கை செய்கின்ற தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கு அவர்கள் “ஆம் (வந்தார்கள்); எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகின்றோம்” என்று கூறுவார்கள். இந்த உலக வாழ்க்கை இன்று அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. ஆனால் அவர்கள் நிராகரிப்பாளர்களாய் வாழ்ந்ததாக அன்று தங்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள்.
6:130. “ஜின் இன, மனித இன வர்க்கத்தாரே! என்னுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பித்தது உங்களுடைய இந்நாளின் சந்திப்பைப்பற்றியும் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா?” (என்று கேட்பான்.) அ(தற்க)வர்கள், “எங்கள் இரட்சகனே “நாங்களே எங்களுக்கு எதிராக சாட்சி கூறுகிறோம்” என்று கூறுவார்கள், உலக வாழ்க்கை அவர்களை மயக்கி (ஏமாற்றி)யும் விட்டது, நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என தங்களுக்கு பாதகமாக அவர்கள் சாட்சியும் கூறுவர்.
6:131
6:131 ذٰ لِكَ اَنْ لَّمْ يَكُنْ رَّبُّكَ مُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا غٰفِلُوْنَ‏
ذٰ لِكَ அதற்குக் காரணம் اَنْ لَّمْ يَكُنْ என்பதாகும்/இல்லை رَّبُّكَ உமது இறைவன் مُهْلِكَ அழிப்பவனாக الْقُرٰى நகரங்களை بِظُلْمٍ அநியாயத்தினால் وَّاَهْلُهَا இருக்க /அங்கு வசிப்பவர்கள் غٰفِلُوْنَ‏ கவனமற்றவர்கள்
6:131. (இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.
6:131. (நபியே!) இ(வ்வாறு நபிமார்களை அனுப்புவ)தன் காரணமெல்லாம் அநியாயம் செய்த எவ்வூராரையும் அவர்கள் அஜாக்கிரதையாக இருக்கும் சமயத்தில் (எச்சரிக்கை செய்யாமல்) அவர்களை அழிப்பவனாக உமது இறைவன் இருக்கவில்லை என்பதுதான்.
6:131. (இவ்வாறு அவர்களிடம் சாட்சியம் பெறுவது) எதற்காகவெனில், உம் இறைவன் எந்த ஊரையும் அங்கு வாழ்வோர் உண்மையை அறியாதிருக்கும் நிலையில் அநியாயமாய் அழிப்பதில்லை (எனும் உண்மை நிரூபணமாவதற்காகத்தான்!)
6:131. (நபியே!) இவ்வாறு நபிமார்களை அனுப்புவ)து எவ்வூராரையும் அவர்கள் பாராமுகமானவர்களாக இருக்கும் சமயத்தில் (அவர்களுக்கு எச்சரிக்கை செய்யாமல்) அநியாயமாக அவர்களை அழிப்பவனாக உமதிரட்சகன் இருக்கவில்லை என்பதால்தான்.
6:132
6:132 وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا‌ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ‏
وَلِكُلٍّ எல்லோருக்கும் دَرَجٰتٌ பதவிகள் உண்டு مِّمَّا عَمِلُوْا‌ ؕ எதிலிருந்து/செய்தார்கள் وَمَا இல்லை رَبُّكَ உம் இறைவன் بِغَافِلٍ கவனிக்காதவனாக عَمَّا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்வதை
6:132. ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை.
6:132. (நபியே! அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத்தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செய்கின்ற செயல்களைப் பற்றி உமது இறைவன் பராமுகமாயில்லை.
6:132. ஒவ்வொருவருக்கும் அவரவரின் செயல்களைப் பொறுத்து சில படித்தரங்கள் உள்ளன. உம் இறைவன் அவர்கள் செய்கின்ற செயல்களைப் பற்றி கவனமற்றவனாய் இல்லை.
6:132. (நபியே!) அவர்கள்) ஒவ்வொருவருக்கும், அவர்களின் செயல்களுக்குத் தக்க பதில்களும் உண்டு, அவர்கள் செயல்களைப்பற்றி உம்முடைய இரட்சகன் பாராமுகமானவனாகவும் இல்லை.
6:133
6:133 وَرَبُّكَ الْغَنِىُّ ذُو الرَّحْمَةِ ‌ؕ اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْۢ بَعْدِكُمْ مَّا يَشَآءُ كَمَاۤ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ ؕ‏
وَرَبُّكَ உம் இறைவன் الْغَنِىُّ நிறைவானவன் ذُو الرَّحْمَةِ ؕ கருணையுடையவன் اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ போக்கி விடுவான்/உங்களை وَيَسْتَخْلِفْ இன்னும் தோன்றச் செய்வான் مِنْۢ بَعْدِ பின்னர் كُمْ உங்களுக்கு مَّا எவர்களை يَشَآءُ நாடுகிறான் كَمَاۤ போன்று اَنْشَاَ உருவாக்கினான் كُمْ உங்களை مِّنْ ذُرِّيَّةِ சந்ததியிலிருந்து قَوْمٍ சமுதாயத்தின் اٰخَرِيْنَ ؕ‏ மற்றவர்கள்
6:133. உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.
6:133. (நபியே!) உமது இறைவன் தேவையற்றவன், அன்புடையவன். (மனிதர்களே!) அவன் விரும்பினால் உங்களைப் போக்கி, தான் நாடிய எவரையும் உங்கள் இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான்.
6:133. மேலும், உம்முடைய இறைவன் தன்னிறைவானவனும், இரக்கம் உடையவனுமாய் இருக்கின்றான். அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு, இதற்கு முன்பு இதர மக்களின் சந்ததியிலிருந்து உங்களைக் கொண்டு வந்தது போல், உங்களுடைய இடத்தில் தான் நாடுகின்ற மற்றவர்களைக் கொண்டுவந்து விடுவான்.
6:133. மேலும், (நபியே!) உமதிரட்சகன் (படைப்புகளைவிட்டும்) தேவையற்றவன், நிகரற்ற அருளுடையவன், (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களை அவன் போக்கிவிடுவான், மேலும், வேறு சமூகத்தவர்களின் சந்ததியிலிருந்து உங்களை அவன் உற்பத்தி செய்தது போன்று தான் நாடியவரை (உங்களுடைய இடத்தில்) உங்களுக்குப் பிறகு அவன் பகரமாக்கி விடுவான்.
6:134
6:134 اِنَّ مَا تُوْعَدُوْنَ لَاٰتٍ‌ ۙوَّمَاۤ اَنْـتُمْ بِمُعْجِزِيْنَ‏
اِنَّ நிச்சயமாக مَا எது تُوْعَدُوْنَ வாக்களிக்கப்படுகிறீர்கள் لَاٰتٍ‌ வரக்கூடியதே ۙوَّمَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை بِمُعْجِزِيْنَ‏ பலவீனப்படுத்துபவர்களாக
6:134. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட(கியாமத்)து வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.
6:134. உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (அந்த இறுதி) நாள் நிச்சயமாக வந்தே தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது.
6:134. உங்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயம் திண்ணமாக வந்தே தீரும். (இறைவனை) இயலாமைக்குள்ளாக்கும் வலிமை உங்களுக்கில்லை!
6:134. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவது (-மறுமை நாளானது) உறுதியாக வந்தே தீரும், நீங்கள் (அதைத்தடுத்து) அல்லாஹ்வை இயலாமையிலாக்கி (மிகைத்து) விடக்கூடியவர்களும் அல்லர்.
6:135
6:135 قُلْ يٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّىْ عَامِلٌ‌ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ تَكُوْنُ لَهٗ عَاقِبَةُ الدَّارِ‌ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக يٰقَوْمِ என் சமுதாயமே اعْمَلُوْا செய்யுங்கள் عَلٰى مَكَانَتِكُمْ உங்கள் போக்கில் اِنِّىْ நிச்சயமாக நான் عَامِلٌ‌ۚ செய்கிறேன் فَسَوْفَ تَعْلَمُوْنَۙ அறிவீர்கள் مَنْ எவர் تَكُوْنُ இருக்கும் لَهٗ அவருக்கு عَاقِبَةُ முடிவு الدَّارِ‌ؕ மறுமையின் اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
6:135. (நபியே!) நீர் கூறும்: “என்னுடைய கூட்டத்தாரே! நீங்கள் உங்கள் நிலைமைக் கொப்ப காரியங்களைச் செய்து கொண்டிருங்கள்; நானும் (காரியங்கள்) செய்து கொண்டிருப்பவனே; அப்பால், இவ்வுலகத்தின் இறுதி முடிவு யாருக்கு நலமாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் - நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”
6:135. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள்) காரியங்களைச் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக நானும் (என் போக்கில் என்) காரியங்களைச் செய்து கொண்டிருப்பேன். இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாக இருக்கிறது என்பதை பின்னர் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.''
6:135. (நபியே!) கூறுவீராக: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நானும் எனது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இவ்வுலக வாழ்வின் இறுதி விளைவு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள். அக்கிரமக்காரர்கள் வெற்றியடைய மாட்டார்கள் என்பது எந்நிலையிலும் எதார்த்த உண்மையாகும்.”
6:135. (நபியே!) அவர்களிடம்) நீர் கூறுவீராக! என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் உங்கள் வழி வகையின்படி (உங்கள்) காரியங்களைச் செய்து கொண்டே இருங்கள், நிச்சயமாக நானும் (என் வழி வகையின்படி என் காரியங்களைச்) செய்து கொண்டிருப்பேன், இம்மையின் முடிவு எவருக்குச் சாதகமாயிருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள், நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
6:136
6:136 وَجَعَلُوْا لِلّٰهِ مِمَّا ذَرَاَ مِنَ الْحَـرْثِ وَالْاَنْعَامِ نَصِيْبًا فَقَالُوْا هٰذَا لِلّٰهِ بِزَعْمِهِمْ وَهٰذَا لِشُرَكَآٮِٕنَا‌ ۚ فَمَا كَانَ لِشُرَكَآٮِٕهِمْ فَلَا يَصِلُ اِلَى اللّٰهِ‌ ۚ وَمَا كَانَ لِلّٰهِ فَهُوَ يَصِلُ اِلٰى شُرَكَآٮِٕهِمْ‌ ؕ سَآءَ مَا يَحْكُمُوْنَ‏
وَجَعَلُوْا ஆக்கினார்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு مِمَّا எதிலிருந்து ذَرَاَ படைத்தான் مِنَ இருந்து الْحَـرْثِ விவசாயம் وَالْاَنْعَامِ இன்னும் கால்நடைகள் نَصِيْبًا ஒரு பாகத்தை فَقَالُوْا கூறினர் هٰذَا இது لِلّٰهِ அல்லாஹ்விற்கு بِزَعْمِهِمْ தங்கள் எண்ணப்படி وَهٰذَا இது لِشُرَكَآٮِٕنَا‌ ۚ எங்கள் தெய்வங்களுக்கு فَمَا எது كَانَ ஆகிவிட்டது لِشُرَكَآٮِٕهِمْ அவர்களுடைய தெய்வங்களுக்கு فَلَا يَصِلُ சேராது اِلَى اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் பக்கம் وَمَا எது كَانَ ஆகிவிட்டது لِلّٰهِ அல்லாஹ்விற்கு فَهُوَ அது يَصِلُ சேரும் اِلٰى شُرَكَآٮِٕهِمْ‌ ؕ அவர்களுடைய தெய்வங்களின் பக்கம் سَآءَ கெட்டு விட்டது مَا எது يَحْكُمُوْنَ‏ தீர்ப்பு செய்கிறார்கள்
6:136. அல்லாஹ் உண்டாக்கிய விளைச்சலிலிருந்தும், கால்நடைகளிலிருந்தும் அல்லாஹ்வுக்கென ஒரு பாகத்தை ஏற்படுத்தினார்கள்; இன்னும் அவர்களின் எண்ணப்படி இது அல்லாஹ்வுக்கு என்றும், இது எங்களுடைய இணை தெய்வங்களுக்கு என்றும் சொல்கிறார்கள் - அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேர்வதில்லை; அல்லாஹ்வுக்கு ஆகியிருப்பது அவர்கள் தெய்வங்களுக்குச் சேரும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் செய்யும் இம்முடிவு மிகவும் கெட்டதாகும்.
6:136. விவசாயம், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற அல்லாஹ் உற்பத்தி செய்பவற்றில் ஒரு பாகத்தை தங்கள் விருப்பப்படி குறிப்பிட்டு, ‘‘இது அல்லாஹ்வுக்கு என்றும் (மற்றொரு பாகத்தை) இது எங்கள் தெய்வங்களுக்கு'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்கென குறிப்பிட்ட பாகத்தில் எதுவும் அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. எனினும், அல்லாஹ்வுக்கென குறிப்பிட்டவை (நல்லவையாக இருந்தால்) அவர்களுடைய தெய்வங்களுக்கே சேர்ந்து விடுகின்றன! அவர்கள் செய்யும் இத்தீர்மானம் மிகக் கெட்டது.
6:136. இந்த மக்கள் அல்லாஹ்வுக்காக, அவனே உற்பத்தி செய்த வேளாண்மை, கால்நடைகள் ஆகியவற்றிலிருந்து ஒரு பாகத்தை ஒதுக்கி, இது அல்லாஹ்வுக்குரியது என்றும், (மற்றொரு பாகத்தை ஒதுக்கி) இது நாங்கள் ஏற்படுத்திய இணைத்தெய்வங்களுக்கு உரியது என்றும் (எந்த அடிப்படையுமில்லாமல்) கூறுகின்றார்கள். எப்பாகம் அவர்களுடைய இணைத்தெய்வங்களுக்கு உரியதோ அது அல்லாஹ்வுக்குச் சேருவதில்லை. ஆனால் எது அல்லாஹ்வுக்கு உரியதோ அது அவர்களின் இணைத்தெய்வங்களுக்குச் சேருகின்றது! அவர்கள் எடுக்கும் முடிவு எவ்வளவு மோசமானது!
6:136. மேலும், விளைச்சல் இன்னும் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள் ஆகியவற்றில் அவன் உற்பத்தி செய்தவற்றிலிருந்து ஒரு பாகத்தை அல்லாஹ்வுக்கென ஆக்கிவிட்டுப் பிறகு அவர்கள் எண்ணப்படி இது அல்லாஹ்விற்குரியது (என்றும், மற்றொரு பாகத்தை) இது எங்களுடைய இணையாளர்களுக்குரியது என்றும் கூறுகிறார்கள், அவர்களின் இணையாளர்களுக்கு என இருந்த (பாகத்திலிருந்து) எதுவும் அல்லாஹ்வின்பால் சேருவதில்லை, அல்லாஹ்வுக்காக உரிய (பங்கான)து தங்களது இணையாளர்கள்பால் சேரும் என்ற அவர்கள் (வணக்க வழிபாடுகளை இவ்வாறு அல்லாஹ்விற்கும் அவனுடன் மற்றவர்களுக்கும் கூட்டாக்கிக் கூறிவந்த) தீர்ப்பு கெட்டது.
6:137
6:137 وَكَذٰلِكَ زَيَّنَ لِكَثِيْرٍ مِّنَ الْمُشْرِكِيْنَ قَـتْلَ اَوْلَادِهِمْ شُرَكَآؤُهُمْ لِيُرْدُوْهُمْ وَلِيَلْبِسُوْا عَلَيْهِمْ دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا فَعَلُوْهُ ‌ؕ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே زَيَّنَ அலங்கரித்தன لِكَثِيْرٍ அதிகமானோருக்கு مِّنَ الْمُشْرِكِيْنَ இணைவைப்பவர்களில் قَـتْلَ கொல்வதை اَوْلَادِهِمْ தங்கள்குழந்தைகளை شُرَكَآؤُهُمْ அவர்களுடைய ஷைத்தான்கள் لِيُرْدُوْهُمْ அழிப்பதற்காக/அவர்களை وَلِيَلْبِسُوْا குழப்புவதற்காக عَلَيْهِمْ அவர்கள் மீது دِيْنَهُمْ‌ ۚ وَلَوْ شَآءَ அவர்களுடைய வழிபாட்டை/நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا فَعَلُوْهُ ؕ அவர்கள் செய்யவில்லை/அதை فَذَرْهُمْ விடுங்கள்/அவர்களை وَمَا يَفْتَرُوْنَ‏ உடன்/எது/இட்டுக் கட்டுகிறார்கள்
6:137. இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.
6:137. இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுகளையும் விட்டு விடுவீராக.
6:137. இவ்வாறே இணைவைப்பாளர்களில் பலருக்குத் தங்கள் குழந்தைகளைத் (தாங்களே) கொலை செய்வதை அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அழகாக்கினார்கள். எதற்காகவெனில், அவர்களை அழிவுக்குள்ளாக்க வேண்டும்; அவர்களின் தீனை நெறியை அவர்களுக்கு குழப்பமாக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். எனவே புனைந்து கூறிக் கொண்டிருக்கும் நிலையிலேயே நீர் அவர்களை விட்டுவிடும்.
6:137. (விளைச்சல் மற்றும் கால்நடைகளிலிருந்து, ஒரு பாகத்தை தங்களது இணையாளர்களான ஷைத்தான்களுக்கு ஆக்கிவிடுவதை அழகாகக் காட்டியது போன்ற) அவ்வாறே இணைவைப்போரில் அதிகமானவர்களுக்கு அவர்களின் குழந்தைகளைக் கொன்று விடுவதை அவர்களின் இணையாளர்(களான ஷைத்தான்)கள், அவர்களை அழித்து விடுவதற்காகவும், அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்பிவிடுவதற்காகவும் அழகாக்கி வைத்துள்ளனர், இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள், ஆகவே, (நபியே) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க் கூற்றுக்களையும் விட்டுவிடுவீராக!
6:138
6:138 وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ‌ۖ لَّا يَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَآءً عَلَيْهِ ‌ؕ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ‏
وَقَالُوْا கூறினர் هٰذِهٖۤ இவை اَنْعَامٌ கால்நடைகள் وَّحَرْثٌ இன்னும் விவசாயம் حِجْرٌ ۖ தடுக்கப்பட்டவை لَّا மாட்டார் يَطْعَمُهَاۤ அவற்றை புசிக்க اِلَّا தவிர مَنْ எவர் نَّشَآءُ நாடுகிறோம் بِزَعْمِهِمْ தங்கள் எண்ணப்படி وَاَنْعَامٌ இன்னும் கால்நடைகள் حُرِّمَتْ தடுக்கப்பட்டன ظُهُوْرُهَا அவற்றின் முதுகுகள் وَاَنْعَامٌ இன்னும் கால்நடைகள் لَّا يَذْكُرُوْنَ கூறமாட்டார்கள் اسْمَ اللّٰهِ அல்லாஹ்வின் பெயரை عَلَيْهَا அவற்றின் மீது افْتِرَآءً இட்டுக்கட்டுகின்றனர் عَلَيْهِ ؕ அவன் மீது سَيَجْزِيْهِمْ கூலி கொடுப்பான்/அவர்களுக்கு بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
6:138. இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.
6:138. (மேலும், அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர், துறவி ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதைப் புசிக்கக்கூடாது'' என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருப்பெயரைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத்தக்க கூலியை (தண்டனையை, இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான்.
6:138. “இந்தக் கால்நடைகளும், வேளாண்மையும் (நேர்ச்சைக்காக) விடப்பட்டவையாகும். நாங்கள் யாரை விரும்பி அனுமதிக்கின்றோமோ அவர்கள் மட்டுமே இவற்றை உண்ணலாம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். எனினும் இது அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடாகும்! வேறு சில கால்நடைகள் உண்டு; அவற்றின் மீது சவாரி செய்வதும் சுமை ஏற்றிச் செல்வதும் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், சில கால்நடைகளுண்டு; அவற்றை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரை அவர்கள் உச்சரிப்பதில்லை. இவை அனைத்தையும் அல்லாஹ்வின் பெயரில் புனைந்து கூறியுள்ளார்கள். அவர்கள் புனைந்து கூறிக் கொண்டிருந்தமைக்காக அதிவிரைவில் அல்லாஹ் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.
6:138. மேலும், இது (நேர்ச்சைக்காக) தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமுமாகும், நாங்கள் விரும்புகின்ற (புரோகிதர் முதலிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக் கூடாது என்று தங்கள் தவறான எண்ணப்படி) அவர்கள் கூறுகின்றனர், இன்னும், (அவ்வாறே வேறு சில கால்நடைகள் - அவற்றின் முதுகுகள் (அவற்றின் மீது சவாரி செய்தல், சுமை ஏற்றுதல்) தடுக்கப்பட்டிருக்கின்றன, என்றும், இன்னும், சில கால்நடைகள் (அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும் அவற்றின்மீது கற்பனையாகக் கூறுகின்றனர், அவர்கள் கற்பனையாகக் கூறியதன் காரணமாக நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுக்குக் கூலிகொடுப்பான்.
6:139
6:139 وَقَالُوْا مَا فِىْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰٓى اَزْوَاجِنَا ‌ۚ وَاِنْ يَّكُنْ مَّيْتَةً فَهُمْ فِيْهِ شُرَكَآءُ ‌ؕ سَيَجْزِيْهِمْ وَصْفَهُمْ‌ ؕ اِنَّهٗ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَقَالُوْا இன்னும் கூறினர் مَا فِىْ بُطُوْنِ எவை/வயிறுகளில் هٰذِهِ الْاَنْعَامِ இந்த கால்நடைகளின் خَالِصَةٌ தூயது, மட்டும் لِّذُكُوْرِنَا எங்கள் ஆண்களுக்கு உரியது وَمُحَرَّمٌ இன்னும் தடுக்கப்பட்டது عَلٰٓى اَزْوَاجِنَا ۚ எங்கள்பெண்களுக்கு وَاِنْ يَّكُنْ அது இருந்தால் مَّيْتَةً செத்ததாக فَهُمْ அவர்களும் فِيْهِ அதில் شُرَكَآءُ ؕ பங்காளிகள் سَيَجْزِيْهِمْ கூலி கொடுப்பான்/அவர்களுக்கு وَصْفَهُمْ‌ ؕ அவர்களுடைய வர்ணிப்பிற்கு اِنَّهٗ நிச்சயமாக அவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:139. மேலும் அவர்கள், “இந்தக் கால் நடைகளின் வயிற்றில் இருக்கும் குட்டிகள் எங்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம். அவை எங்கள் பெண்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளன - அவை செத்துப் பிறந்தால், அவற்றில் அவர்களுக்கும் பங்கு உண்டு” என்றும் கூறுகிறார்கள்; அவர்களுடைய (இந்தப் பொய்யான) கூற்றுக்கு அவன் தக்க கூலி கொடுப்பான் - நிச்சயமாக அவன் பூரண ஞானமுடையோனும், (யாவற்றையும்) அறிந்தவனுமாக இருக்கின்றான்.
6:139. மேலும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) ‘‘இந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் வயிற்றிலிருப்பவை எங்கள் ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவை. எங்கள் பெண்களுக்கு அவை தடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை செத்துப் பிறந்தால் அவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு'' (அப்போது பெண்களும் புசிக்கலாம்) என்றும் கூறுகின்றனர். ஆகவே, அவர்களுடைய இக்கூற்றிற்குரிய தண்டனையை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்தே தீருவான். நிச்சயமாக அவன் மிக்க ஞானமுடையவன், (அனைவரையும்) நன்கறிந்தவன்.
6:139. இன்னும் “இக்கால்நடைகளின் வயிற்றிலுள்ள குட்டிகள் எங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டுமே உரித்தானவையாகவும், எங்களைச் சேர்ந்த பெண்களுக்குத் தடுக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. ஆனால் அவை செத்துப் போயிருந்தால், அவற்றைப் புசிப்பதில் இரு பாலாருக்கும் பங்கு உண்டு” என்று கூறுகின்றார்கள். அவர்களே புனைந்து கூறிய பொய்க்கூற்றுக்கான தண்டனையை அல்லாஹ் அவர்களுக்கு அளித்தே தீருவான். நிச்சயமாக அவன் நுண்ணறிவாளனும் யாவற்றையும் அறிந்தவனுமாயிருக்கின்றான்.
6:139. இன்னும், அவர்கள் (வேறு சிலவற்றைக் குறிப்பிட்டு) “இக் கால்நடைகளின் வயிறுகளிலிருப்பவை, எங்களுடைய ஆண்களுக்கு (மட்டும்) சொந்தமானவையாகும், எங்களுடைய மனைவியரின் மீது (அவையோ) தடுக்கப்பட்டுமிருக்கின்றன, மேலும், அவை செத்துப் பிறந்து இருந்தால் அதில் அவர்கள் கூட்டுக்காரர்களாவர்”, என்றும் கூறுகின்றனர், ஆகவே, அவர்களுடைய பொய்யான) வர்ணனைக்காக, (அல்லாஹ்வாகிய) அவன் அவர்களுக்குக் கூலி கொடுப்பான், நிச்சயமாக அவன் தீர்க்கமான அறிவுடையவன், (யாவற்றையும்) நன்கறிகிறவன்.
6:140
6:140 قَدْ خَسِرَ الَّذِيْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًۢا بِغَيْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَى اللّٰهِ‌ؕ قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
قَدْ خَسِرَ நஷ்டமடைந்து விட்டனர் الَّذِيْنَ எவர்கள் قَتَلُوْۤا கொன்றார்கள் اَوْلَادَهُمْ தங்கள் பிள்ளைகளை سَفَهًۢا மூடத்தனமாக بِغَيْرِ عِلْمٍ அறிவின்றி وَّحَرَّمُوْا இன்னும் தடுத்தார்கள் مَا رَزَقَهُمُ எதை/கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் افْتِرَآءً இட்டுக்கட்டுகின்றனர் عَلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் மீது قَدْ ضَلُّوْا வழிகெட்டனர் وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏ அவர்கள் இருக்கவில்லை/நேர்வழி பெற்றவர்களாக
6:140. எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.
6:140. எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித் தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்று விட்டனர்.
6:140. எவர்கள் தம் குழந்தைகளை அறியாமையினாலும் மூடத்தனத்தினாலும் கொன்றுவிட்டார்களோ மேலும், அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடைசெய்து கொண்டார்களோ, அவர்கள் நிச்சயமாக பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். திண்ணமாக, அவர்கள் வழிதவறிப் போய் விட்டார்கள். அவர்கள் ஒருபோதும் நேர்வழி பெற்றவர்களாய் இருக்கவில்லை.
6:140. அறிவின்றி மடமையினால் தங்கள் (பெண்) மக்களைக் கொலை செய்தார்களே அவர்களும், அல்லாஹ் தங்களுக்கு(ப் புசிக்க)க் கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது கற்பனையாகக்கூறி விலக்கிக் கொண்டார்களே, அவர்களும், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள், (ஆகவே) திட்டமாக அவர்கள் வழி கெட்டு விட்டனர், அவர்கள் நேர் வழி பெற்றவர்களாக இருக்கவுமில்லை.
6:141
6:141 وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍ ‌ؕ كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ‌ ‌ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ‏
وَهُوَ அவன் الَّذِىْۤ எவன் اَنْشَاَ உற்பத்தி செய்தான் جَنّٰتٍ தோட்டங்களை مَّعْرُوْشٰتٍ கொடிகள் நிறைந்தவை وَّغَيْرَ مَعْرُوْشٰتٍ கொடிகளற்றவை وَّالنَّخْلَ இன்னும் பேரீத்த மரங்களை وَالزَّرْعَ இன்னும் விளைச்சலை مُخْتَلِفًا மாறுபட்டதாக اُكُلُهٗ அதன் கனிகள் وَالزَّيْتُوْنَ இன்னும் ஒலிவத்தை وَالرُّمَّانَ இன்னும் மாதுளையை مُتَشَابِهًا ஒன்றுக்கொன்று ஒப்பானதாக وَّغَيْرَ مُتَشَابِهٍ ؕ இன்னும் ஒன்றுக்கொன்று ஒப்பாகாததாக كُلُوْا புசியுங்கள் مِنْ ثَمَرِهٖۤ அதன்கனிகளிலிருந்து اِذَاۤ اَثْمَرَ அவை காய்த்தால் وَاٰتُوْا இன்னும் கொடுங்கள் حَقَّهٗ அதனுடைய கடமையை يَوْمَ நாளில் حَصَادِهٖ‌ அவற்றின் அறுவடை ۖ وَلَا تُسْرِفُوْا‌ ؕ விரயம் செய்யாதீர்கள் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْمُسْرِفِيْنَ‏ விரயம் செய்பவர்களை
6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
6:141. (பந்தலில்) படர்ந்த கொடிகளும், படராத செடிகளும், பேரீத்த மரங்கள் உள்ள சோலைகளையும், புசிக்கக்கூடிய விதவிதமான (பயிர்களையும்) தானியங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோன்றக்கூடிய ஒலிவம், மாதுளை (மற்றும் பலவகை கனிவர்க்கங்கள்) ஆகியவற்றையும் அவனே படைத்திருக்கிறான். ஆகவே, அவை காய்த்துப் பழுத்தால் அவற்றை (தாராளமாகப்) புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும்போது (இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அவனுடைய பாகத்தையும் (ஜகாத்தை) கொடுத்து விடுங்கள். அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
6:141. மேலும் (பந்தல்களில்) படரும் கொடிகள், படராத செடிகள் ஆகியவற்றைக் கொண்ட (விதவிதமான) தோட்டங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் பலவகைப்பட்ட உண்பொருள்களை அளிக்கக்கூடிய தாவரங்களையும் மற்றும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவும் (சுவையில்) வேறுபட்டும் இருக்கும் ஒலிவம், மாதுளை ஆகியவற்றையும் படைத்தவன் அந்த அல்லாஹ்தான்! அவை காய்க்கும்போது அவற்றின் பலன்களை புசியுங்கள்! அவற்றின் அறுவடை நாளில் அல்லாஹ்வுக்குரிய பங்கினைக் கொடுத்து விடுங்கள். மேலும் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை திண்ணமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
6:141. மேலும், (திராட்சை போன்ற பந்தலின் மீது) படரவிடப்பட்ட தோட்டங்களையும் இன்னும் படரவிடப்படாதவைகளையும், இன்னும் பேரீத்த மரங்களையும், புசிக்க விதவிதமான (காய்கறி, தானியங்கள் போன்றவை உருவாகும்) விவசாயத்தையும் (அதன் தோற்றத்தில்) ஒன்று போலும், (சுவையில்) ஒன்றுபோல் இல்லாததுமான (ஒலிவம்) ஜைத்தூனையும், மாதுளையையும் அவனே படைத்திருக்கிறான், ஆகவே, அவை (பருவகாலத்தில்) பலன் தந்தால், அவற்றின் கனியிலிருந்து (தாராளமாக)ப் புசியுங்கள், அவற்றை அறுவடை செய்யும் நாளில் (ஏழைகளுக்கு, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக) அதில் அதனுடைய பாகத்தையும் கொடுத்து விடுங்கள், இன்னும், (வீண்)விரயம் செய்யாதீர்கள், வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
6:142
6:142 وَ مِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا‌ ؕ كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَ لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ اِنَّهٗ لَـكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ۙ‏
وَ مِنَ الْاَنْعَامِ இன்னும் கால்நடைகளில் حَمُوْلَةً சுமக்கத் தகுதியானதை وَّفَرْشًا‌ ؕ இன்னும் சுமக்கத் தகுதியற்றதை كُلُوْا புசியுங்கள் مِمَّا எவற்றிலிருந்து رَزَقَكُمُ உணவளித்தான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَ لَا تَتَّبِعُوْا இன்னும் பின்பற்றாதீர்கள் خُطُوٰتِ அடிச்சுவடுகளை الشَّيْطٰنِ‌ ؕ ஷைத்தானின் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ ۙ‏ வெளிப்படையான
6:142. இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.
6:142. (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பெரிய) கால்நடைகளில், சுமை சுமக்கக்கூடிய வற்றையும், (சுமை சுமக்க முடியாத) சிறிய கால்நடைகளையும் (அவனே படைத்திருக்கிறான். ஆகவே,) அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் இவற்றில் (புசிக்கக் கூடியவற்றை) நீங்கள் புசியுங்கள். (இதில்) ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
6:142. சுமை சுமப்பதற்கு பயன்படக் கூடிய சில பிராணிகளையும் (உணவுக்கும் விரிப்புக்கும் பயன்படக்கூடிய) சில பிராணிகளையும் அவன்தான் படைத்தான். எனவே அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றைப் புசியுங்கள். மேலும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! திண்ணமாக, அவன் உங்களுக்கு வெளிப்படையான விரோதியாவான்.
6:142. இன்னும், கால்நடைகளில் சிலவற்றை சுமை சுமப்பதற்காகவும், (மற்ற சிலவற்றை) உணவுக்காகவும் (அவனே படைத்திருக்கிறான், ஆகவே) அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து நீங்கள் புசியுங்கள், (இதில் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளையும் பின்பற்றாதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாவான்.
6:143
6:143 ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ۚ مِنَ الضَّاْنِ اثْنَيْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَيْنِ‌ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ‌ ؕ نَـبِّـــٴُـــوْنِىْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ۙ‏
ثَمٰنِيَةَ اَزْوَاجٍ‌ ۚ எட்டு ஜோடிகளை مِنَ الضَّاْنِ செம்மறி ஆட்டில் اثْنَيْنِ இரண்டை وَمِنَ الْمَعْزِ இன்னும் வெள்ளாட்டில் اثْنَيْنِ‌ ؕ இரண்டை قُلْ கூறுவீராக ءٰٓالذَّكَرَيْنِ இரு ஆண்களையா? حَرَّمَ தடைசெய்தான் اَمِ அல்லது الْاُنْثَيَيْنِ இரு பெண்களையா اَمَّا அல்லது/எவை اشْتَمَلَتْ சுமந்தன عَلَيْهِ அவற்றை اَرْحَامُ கர்ப்பங்கள் الْاُنْثَيَيْنِ‌ ؕ இரு பெண்கள் نَـبِّـــٴُـــوْنِىْ அறிவியுங்கள்/எனக்கு بِعِلْمٍ கல்வியுடன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ ۙ‏ உண்மையாளர்களாக
6:143. (நபியே! அம்மக்களிடம்) “கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்பீராக.
6:143. (நபியே! அந்த மூடர்களை நோக்கி நீர் கேட்பீராக: ‘‘புசிக்கக்கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில்) எட்டு வகைகள் இருக்கின்றன. (அவையாவன:) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இருவகை; வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை (உண்டு). இவ்விரு வகை ஆண்களையா அல்லது பெண்களையா அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் ஆதாரத்துடன் இதை நீங்கள் எனக்கு அறிவியுங்கள்.
6:143. இவை எட்டு வகை (ஆண், பெண் பிராணி)கள் ஆகும். செம்மறி ஆட்டு வகையில் இரண்டும், வெள்ளாட்டு வகையில் இரண்டுமாகும். (நபியே!) அவர்களிடம் நீர் கேளும்: “அல்லாஹ் இவற்றில் எதனைத் தடுத்திருக்கிறான்? ஆணையா? பெண்ணையா? அல்லது அந்த இருவகை ஆடுகளின் கருவறைகளில் இருக்கும் குட்டிகளையா? நீங்கள் உண்மையாளர்களாயின் அறிவின் அடிப்படையில் துல்லியமாக விளக்குங்கள்.”
6:143. .(நபியே! புசிக்கக் கூடிய ஆடு, மாடு, ஒட்டகம் முதலியவற்றில்) எட்டு ஜோடிகளை (அல்லாஹ் படைத்துள்ளான், அவையாவன,) செம்மறியாட்டில் (ஆண், பெண்) இரண்டு மற்றும் வெள்ளாட்டின் (ஆண் பெண்) இரண்டு. (ஆகேவ இவற்றில்) இரு இன ஆண்களையா, அல்லது இரு இனப்பெண்களையா, அல்லது இரு பெண்ணிணங்களுடைய கர்ப்பங்கள் எதனை உள்ளடக்கி வைத்திருக்கின்றனவோ அவற்றையா (அல்லாஹ்வாகிய) அவன் தடுத்திருக்கின்றான்? நீங்கள் உண்மை சொல்பவர்களாயின் அறிவுடன் (இதனை) நீங்கள் எனக்கு அறிவியுங்கள்” என நீர் கேட்பீராக!
6:144
6:144 وَمِنَ الْاِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ‌ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ‌ ؕ اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ وَصّٰٮكُمُ اللّٰهُ بِهٰذَا‌ ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
وَمِنَ الْاِبِلِ இன்னும் ஒட்டகையிலும் اثْنَيْنِ இரண்டை وَمِنَ الْبَقَرِ இன்னும் மாட்டிலும் اثْنَيْنِ‌ ؕ இரண்டை قُلْ கூறுவீராக ءٰٓالذَّكَرَيْنِ இரு ஆண்களையா? حَرَّمَ தடை செய்தான் اَمِ அல்லது الْاُنْثَيَيْنِ இரு பெண்களையா اَمَّا அல்லது/எவை اشْتَمَلَتْ சுமந்தன عَلَيْهِ அவற்றை اَرْحَامُ கர்ப்பங்கள் الْاُنْثَيَيْنِ‌ ؕ இரு பெண்களின் اَمْ كُنْتُمْ இருந்தீர்களா? شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ وَصّٰٮكُمُ போது/கட்டளையிட்டான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِهٰذَا‌ ۚ فَمَنْ இதை/யார் اَظْلَمُ மிகப் பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் كَذِبًا பொய்யை لِّيُضِلَّ வழி கெடுப்பதற்காக النَّاسَ மக்களை بِغَيْرِ عِلْمٍ‌ ؕ கல்வி இன்றி اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
6:144. இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
6:144. ஒட்டகையிலும் (ஆண், பெண்) இருவகை, பசுவிலும் இருவகை (உண்டு. இவ்விருவகைகளிலுள்ள) ஆண்களையா? (அல்லது இவ்விரு வகைகளிலுள்ள) பெண்களையா? அல்லது இவ்விரு வகைகளிலுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடை செய்திருக்கிறான்? இவ்வாறு (தடுத்து) அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்டபோது நீங்களும் முன்னால் இருந்தீர்களா?'' என்றும் நபியே! நீர் அவர்களைக் கேட்பீராக. கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறி, ஆதாரமின்றியே (அறிவில்லாத) மக்களை வழி கெடுப்பவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
6:144. மேலும், இதே போன்று ஒட்டகத்தில் இருவகையும், மாட்டில் இருவகையும் உள்ளன. கேளுங்கள்: இவற்றில் எதனை அல்லாஹ் தடுத்திருக்கின்றான்? ஆணையா? பெண்ணையா? அந்த இருவகைப் பெண் பிராணிகளின் கருவறைகளில் உள்ள குட்டிகளையா? அல்லது இவை கூடாது என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபோது (அங்கு) நீங்கள் இருந்தீர்களா? எவ்வித அறிவுமின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக இத்தகைய அக்கிரமக்காரர்களை அல்லாஹ் ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
6:144. இன்னும், ஒட்டகையில் (ஆண் பெண்) இரண்டு, மற்றும் மாட்டில் (ஆண், பெண்) இரண்டு (ஆகிய இவற்றையும் அல்லாஹ்வாகிய அவன்தான் படைத்தான்) இரு இன ஆண்களையா அல்லது இரு இனபெண்களையா அல்லது இரு பெண்ணினங்களுடைய கர்ப்பங்கள் எதனை உள்ளடக்கி வைத்திருக்கின்றனவோ அவற்றையா (அல்லாஹ்வாகிய) அவன் தடுத்திருக்கின்றான்?” என்று (நபியே!) நீர் கேட்பீராக! இவ்வாறு தடுத்து அல்லாஹ் உங்களுக்கு (கட்டளையிட்டதாகக் கூறுகின்றீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட சமயம் நீங்களும் பிரசன்னமாகி இருந்தீர்களா? என்றும் நபியே! நீர் அவர்களைக் கேட்பீராக! அறிவின்றி மனிதர்களை வழி கெடுப்பதற்காக அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்பவனைவிட மிகுந்த அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்காரச் சமூகத்தவருக்கு நேர் வழி காட்ட மாட்டான்.
6:145
6:145 ‌قُل لَّاۤ اَجِدُ فِىْ مَاۤ اُوْحِىَ اِلَىَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗۤ اِلَّاۤ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖ‌‌ۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
قُل கூறுவீராக لَّاۤ اَجِدُ நான் காணவில்லை فِىْ مَاۤ اُوْحِىَ எதில்/வஹீ அறிவிக்கப்பட்டது اِلَىَّ என் பக்கம் مُحَرَّمًا தடுக்கப்பட்டதாக عَلٰى طَاعِمٍ புசிப்பவர் மீது يَّطْعَمُهٗۤ அதை புசிப்பார் اِلَّاۤ தவிர اَنْ يَّكُوْنَ இருப்பது مَيْتَةً செத்ததாக اَوْ அல்லது دَمًا இரத்தமாக مَّسْفُوْحًا ஓடக்கூடியது اَوْ அல்லது لَحْمَ மாமிசமாக خِنْزِيْرٍ பன்றியின் فَاِنَّهٗ ஏனெனில் நிச்சயமாக அது رِجْسٌ அசுத்தம் اَوْ அல்லது فِسْقًا பாவமாக اُهِلَّ பெயர் கூறப்பட்டது لِغَيْرِ அல்லாதவருக்கு اللّٰهِ அல்லாஹ் بِهٖ‌ۚ அதைக் கொண்டு فَمَنِ எவர் اضْطُرَّ நிர்ப்பந்திக்கப்பட்டார் غَيْرَ بَاغٍ நாடாதவராக وَّلَا عَادٍ வரம்பு மீறாதவராக فَاِنَّ رَبَّكَ நிச்சயமாக உம் இறைவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
6:145. (நபியே!) நீர் கூறும்: “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
6:145. (நபியே!) கூறுவீராக: ‘‘மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹ்யில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடை செய்யப்பட்டுள்ளன.)'' தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவற்றை புசித்து) விட்டால், (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன். (ஆகவே, மன்னித்து விடுவான்.)
6:145. (நபியே! இவர்களிடம்) கூறும்: எனக்கு அருளப்பட்ட வஹியில், உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; ஆனால் செத்த பிராணியையும், ஓடும் இரத்தத்தையும், பன்றி இறைச்சியையும் தவிர! திண்ணமாக இவை அசுத்தங்களாகும். மேலும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டபாவமானவற்றைத் தவிர! பின்னர் யாரேனும் ஒருவர் மாறு செய்யும் நோக்கம் இன்றியும், வரம்பு மீறாமலும் இப்பொருள்களில் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டால் திண்ணமாக, உம் இறைவன் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.
6:145. செத்தவையாக அல்லது ஓடும் இரத்தமாக அல்லது பன்றியின் மாமிசமாக இருந்தாலல்லாது உண்ணுபவருக்கு அதை உண்ணத் தடை செய்யப்பட்டதாக எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவற்றில் நான் காணவில்லை, காரணம் நிச்சயமாக அவை அசுத்தமானவையாகும் – அல்லது அதை அல்லாஹ் அல்லாதவருக்காக பெயர் கூறப்பட்ட பாவமானதையும் தவிர (வேறு ஏதும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டவற்றில் நான் காணவில்லை) ஆகவே, வரம்பை மீறாதவராகவும், பாவம் செய்யாதவராகவும், எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (புசித்து)விட்டால் அப்போது (அது அவர்மீது குற்றமல்ல காரணம்) நிச்சயமாக உம்முடைய இரட்சகன் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுடையவன்.
6:146
6:146 وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِىْ ظُفُرٍ‌‌ ۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَـنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَـوَايَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ‌ ؕ ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِبَـغْيِهِمْ‌‌ ۖ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
وَعَلَى மீது الَّذِيْنَ هَادُوْا யூதர்கள் حَرَّمْنَا தடை செய்தோம் كُلَّ எல்லாவற்றையும் ذِىْ ظُفُرٍ‌ ۚ நகமுடையது وَمِنَ الْبَقَرِ இன்னும் மாட்டில் وَالْغَـنَمِ இன்னும் ஆட்டில் حَرَّمْنَا தடைசெய்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது شُحُوْمَهُمَاۤ இரண்டின் கொழுப்புகளை اِلَّا தவிர مَا எதை حَمَلَتْ சுமந்தன ظُهُوْرُهُمَاۤ அவை இரண்டின் முதுகுகள் اَوِ அல்லது الْحَـوَايَاۤ சிறு குடல்கள் اَوْ அல்லது مَا எது اخْتَلَطَ கலந்துவிட்டது بِعَظْمٍ‌ ؕ எலும்புடன் ذٰ لِكَ அது جَزَيْنٰهُمْ கூலி கொடுத்தோம்/அவர்களுக்கு بِبَـغْيِهِمْ‌ ۖ அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் وَاِنَّا நிச்சயமாக நாம் لَصٰدِقُوْنَ‏ உண்மையாளர்களே
6:146. நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.
6:146. (நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். மேலும், ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவற்றைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக்களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகிறோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே!)
6:146. மேலும், யூதர்களுக்கு நகமுடைய பிராணிகள் எல்லாவற்றையும் நாம் தடை செய்திருந்தோம். ஆடு, மாடுகளின் கொழுப்பையும் (நாம் தடை செய்திருந்தோம்). ஆனால் அவற்றின் முதுகுகளில் அல்லது குடல்களில் அல்லது எலும்போடு கலந்திருக்கின்ற கொழுப்பைத் தவிர! அவர்கள் வரம்பு மீறிச் செயல்பட்டதன் காரணமாக, இவ்வாறு அவர்களுக்கு நாம் தண்டனை அளித்தோம். திண்ணமாக நாம் முற்றிலும் உண்மை கூறுபவர்களாய் இருக்கின்றோம்.
6:146. (நபியே!) விரல்கள் பிளந்த நகத்தையுடைய அனைத்தையும் (புசிக்கக் கூடாதென்று) யூதர்களாக இருந்தவர்கள் மீது தடுத்திருந்தோம், இன்னும், மாடு, ஆடு ஆகியவற்றில் இருந்து அவ்விரண்டின் கொழுப்புகளையும் அவர்கள் மீது தடுத்திருந்தோம் – அவை இரண்டின் முதுகுகள் சுமந்து கொண்டிருப்பதையும் அல்லது அவ்விரண்டின் (வயிற்றினுள்) சிறு குடல்கள் (மீது சுற்றப்பட்டு) சுமந்து கொண்டிருப்பதையும் அல்லது எலும்போடு கலந்திருப்பதையும் தவிர (மற்றவைகளை அவர்கள் உண்ணலாகாது) அது (ஏனெனில்) அவர்கள் (நமக்கு) மாறு செய்ததன் காரணமாக அவர்களுக்கு நாம் கூலி கொடுத்(து தண்டித்)தோம், இன்னும் நிச்சயமாக நாம் (அவற்றை அவர்களுக்கு தடுத்து விட்டது பற்றிய விஷயத்தில்) உண்மையாளராவோம்.
6:147
6:147 فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍ‌ ۚ وَلَا يُرَدُّ بَاْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏
فَاِنْ كَذَّبُوْكَ அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقُلْ கூறுவீராக رَّبُّكُمْ உங்கள் இறைவன் ذُوْ رَحْمَةٍ கருணையுடையவன் وَّاسِعَةٍ‌ ۚ விசாலமானது وَلَا يُرَدُّ திருப்பப்படாது بَاْسُهٗ அவனது தண்டனை عَنِ الْقَوْمِ மக்களை விட்டு الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகள்
6:147. (நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், “உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.
6:147. (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி), ‘‘உங்கள் இறைவன் மிக விசாலமான அன்புடையவன்தான். எனினும் அவனது தண்டனை, குற்றவாளிகளை விட்டும் ஒருக்காலும் அகற்றப்பட மாட்டாது'' என்று கூறிவிடுவீராக.
6:147. இனி அவர்கள் உம்மைப் பொய்யர் என்று கூறினால், “உங்கள் இறைவன் விசாலமான கருணையாளன்; எனினும், அவனுடைய தண்டனை குற்றவாளிகளை விட்டு நீக்கப்படமாட்டாது” என்று அவர்களிடம் நீர் கூறுவீராக!
6:147. ஆகவே, (நபியே! இதற்குப் பின்னரும்) அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அவர்களிடம்) “உங்களுடைய இரட்சகன் மிக்க விசாலமான அருளுடையவன் (தான், எனினும்) குற்றம் செய்தவர்களான கூட்டத்தாரைவிட்டு அவனது தண்டனை தடுக்கப்படவுமாட்டாது என்று கூறுவீராக!
6:148
6:148 سَيَـقُوْلُ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰى ذَاقُوْا بَاْسَنَا‌ ؕ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَـنَا ؕ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْـتُمْ اِلَّا تَخْرُصُوْنَ‏
سَيَـقُوْلُ கூறுகிறார்(கள்) الَّذِيْنَ اَشْرَكُوْا இணைவைப்பவர்கள் لَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَاۤ اَشْرَكْنَا இணைவைத்திருக்க மாட்டோம் وَلَاۤ اٰبَآؤُنَا இன்னும் எங்கள் மூதாதைகள் وَلَا حَرَّمْنَا இன்னும் தடை செய்திருக்க மாட்டோம் مِنْ شَىْءٍ‌ ؕ எதையும் كَذٰلِكَ இவ்வாறே كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் حَتّٰى இறுதியாக ذَاقُوْا சுவைத்தனர் بَاْسَنَا‌ ؕ நம் தண்டனையை قُلْ கூறுவீராக هَلْ عِنْدَكُمْ உங்களிடம் உண்டா? مِّنْ عِلْمٍ கல்வியில் ஏதும் فَتُخْرِجُوْ வெளிப்படுத்துங்கள் هُ அதை لَـنَا ؕ நமக்கு اِنْ تَتَّبِعُوْنَ நீங்கள் பின்பற்றுவதில்லை اِلَّا தவிர الظَّنَّ சந்தேகம் وَاِنْ இல்லை اَنْـتُمْ நீங்கள் اِلَّا தவிர تَخْرُصُوْنَ‏ கற்பனை செய்கிறீர்கள்
6:148. (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் - இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
6:148. ‘‘அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும், (அல்லாஹ்வுக்கு எதையும்) இணை வைத்திருக்க மாட்டோம்; (புசிக்கக் கூடிய) எதையும் (ஆகாதென) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்'' என்று இணைவைத்து வணங்கும் இவர்கள் கூறக்கூடும். (நபியே! இவர்கள் பரிகசிக்கும்) இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம் வேதனையைச் சுவைக்கும் வரை (நபிமார்களைப்) பொய்யாக்கியே வந்தனர். ஆகவே, (நீர் அவர்களை நோக்கி ‘‘இதற்கு) உங்களிடம் ஏதும் ஆதாரமுண்டா? (இருந்தால்) அதை நம்மிடம் கொண்டு வாருங்கள். நீங்கள் சுயமாகவே கற்பனை செய்துகொண்ட (உங்கள்) வீண் எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பவர்களே தவிர, வேறில்லை'' என்று கூறுவீராக.
6:148. (உமது இக்கூற்றுக்கு மறுமொழியாக) இணைவைப்பாளர்கள் திண்ணமாக கூறுவார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்கள் இணைவைத்திருக்க மாட்டோம்; எங்கள் மூதாதையர்களும் இணைவைத்திருக்க மாட்டார்கள். மேலும் நாங்கள் எப்பொருளையும் தடை செய்திருக்கவும் மாட்டோம்.” இவர்களுக்கு முன்சென்றவர்களும் இவ்வாறு கூறித்தான் சத்தியத்தைப் பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் நம்முடைய வேதனையின் சுவையை அவர்கள் அனுபவித்தார்கள். இவர்களிடம் நீர் கூறும்: “அறிவார்ந்த ஆதாரம் ஏதேனும் உங்களிடம் உண்டா? இருந்தால் அதனை எங்கள் முன் எடுத்து வையுங்கள்! நீங்கள் வெறும் யூகத்தைத்தான் பின்பற்றிச் செல்கின்றீர்கள். மேலும், நீங்கள் கற்பனையின் அடிப்படையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.”
6:148. “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் (அல்லாஹ்வுக்கு எதனையும்) இணைவைத்திருக்க மாட்டோம், (உண்ணக்கூடிய) யாதொன்றையும் (ஆகாதென்று) நாங்கள் விலக்கியிருக்கவுமாட்டோம்” என்று இணைவைத்துக் கொண்டிருப்போர் கூறுவார்கள், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் இவ்வாறே (தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர், ஆகவே, நீர் “உங்கள் கூற்றுக்கு உங்களிடம் ஏதும் அறிவார்த்த (மான ஆதார)முண்டா? (அவ்வாறு இருந்தால்,) அதனை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுங்கள், (உங்களது அர்த்தமற்ற வீணான) எண்ணத்தையல்லாது வேறு எதையும் நீங்கள் பின்பற்றவில்லை, இன்னும் நீங்கள் அனுமானம் கொள்கிறவர்களேயன்றி வேறில்லை-என்று கூறுவீராக!
6:149
6:149 قُلْ فَلِلّٰهِ الْحُجَّةُ الْبَالِغَةُ‌ ۚ فَلَوْ شَآءَ لَهَدٰٮكُمْ اَجْمَعِيْنَ‏
قُلْ கூறுவீராக فَلِلّٰهِ அல்லாஹ்விற்கே الْحُجَّةُ ஆதாரம் الْبَالِغَةُ‌ ۚ முழுமையானது فَلَوْ شَآءَ நாடியிருந்தால் لَهَدٰٮكُمْ நேர்வழி படுத்தியிருப்பான்/உங்கள் اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
6:149. “நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்” என்று நீர் கூறும்.
6:149. நபியே!) கூறுவீராக: ‘‘(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்வுடையதே! (அவர்களுடைய ஆதாரம் முற்றிலும் தவறானது.) அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்தியிருப்பான்.''
6:149. மேலும், நீர் கூறுவீராக: “(உங்களுடைய வாதத்திற்கு எதிராக) எதார்த்தத்தைக் கொண்டுள்ள முழுமையான வாதம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் நாடியிருந்தால் நிச்சயமாக உங்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்தியிருப்பான்.”
6:149. (யாருக்கு அவன் நேர்வழிகாட்டி விட்டானோ இன்னும் யாரை வழிதவறச் செய்து விட்டானோ, அதுபற்றிய மறுக்க முடியாத) பூரணமான ஆதாரம் அல்லாஹ்விற்கே இருக்கிறது, ஆகவே, அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் நிச்சயம் நேர்வழியில் செலுத்தியிருப்பான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!!
6:150
6:150 قُلْ هَلُمَّ شُهَدَآءَكُمُ الَّذِيْنَ يَشْهَدُوْنَ اَنَّ اللّٰهَ حَرَّمَ هٰذَا ‌ۚ فَاِنْ شَهِدُوْا فَلَا تَشْهَدْ مَعَهُمْ‌‌ ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَهُمْ بِرَبِّهِمْ يَعْدِلُوْنَ‏
قُلْ கூறுவீராக هَلُمَّ அழைத்து வாருங்கள் شُهَدَآءَكُمُ உங்கள் சாட்சிகளை الَّذِيْنَ எவர்கள் يَشْهَدُوْنَ சாட்சியளிப்பார்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் حَرَّمَ தடைசெய்தான் هٰذَا ۚ இதை فَاِنْ شَهِدُوْا அவர்கள் சாட்சிஅளித்தால் فَلَا تَشْهَدْ சாட்சியளிக்காதீர் مَعَهُمْ‌ ۚ அவர்களுடன் وَلَا تَتَّبِعْ இன்னும் பின்பற்றாதீர் اَهْوَآءَ ஆசைகளை الَّذِيْنَ எவர்களின் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நம் வசனங்களை وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِالْاٰخِرَةِ இறுதிநாளை وَهُمْ இன்னும் அவர்கள் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு يَعْدِلُوْنَ‏ இணைவைக்கின்றனர்
6:150. “நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்” என்று கூறும்; அவர்கள் சாட்சி கூறினால், (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் - நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள், மறுமையை நம்பாதவர்கள் ஆகியோரின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் - ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.
6:150. (மேலும், அவர்களை நோக்கி) நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று நீங்கள் உறுதிப்படுத்துவதற்காக உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்'' என்று நீர் கூறுவீராக. (அவ்வாறு அவர்களை அழைத்து வந்து) அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறியபோதிலும் (அதற்காக) நீரும் அவர்களுடன் சேர்ந்து (அவ்வாறு) சாட்சி கூறவேண்டாம். மேலும், நம் வசனங்கள் பொய்யெனக் கூறியவர்கள் மற்றும் இறுதி நாளை நம்பிக்கை கொள்ளாதவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர். அவர்கள்தான் தங்கள் இறைவனுக்கு (பலவற்றை) இணையாக்குகின்றனர்.
6:150. “அல்லாஹ்தான் இப்பொருள்களைத் தடை செய்திருக்கின்றான் என்று சாட்சி கூறக்கூடிய உங்களின் சாட்சியாளர்களை அழைத்து வாருங்கள்” என அவர்களிடம் கூறுவீராக! பிறகு அவர்கள் சாட்சியம் அளித்துவிட்டால் நீர் அவர்களுடன் சேர்ந்து சாட்சியம் அளிக்க வேண்டாம். நம்முடைய வசனங்களைப் பொய்யென வாதிடுபவர்கள், மற்றும் மறுமையை மறுப்பவர்கள், மேலும், தங்களின் இறைவனோடு மற்றவர்களைச் சமம் ஆக்குகின்றவர்கள் ஆகியோரின் விருப்பங்களை நீர் பின் தொடராதீர்!
6:150. (மேலும், அவர்களிடம் நீங்களாக உங்கள் மீது புசிக்க ஆகுமாக்கப் பட்டவற்றை தடுத்துக் கொண்டு) ”நிச்சயமாக அல்லாஹ்தான் இதனைத் தடுத்திருக்கிறான் என்று சாட்சி கூறுகிறார்களே அத்தகைய உங்களது சாட்சியாளர்களை நீங்கள் கொண்டு வாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்களும் (அவ்வாறே பொய்) சாட்சி கூறுவார்களேயானால் (அதற்காக) நீரும் அவர்களுடன் (சேர்ந்து) சாட்சி கூற வேண்டாம், மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்கள், இன்னும், மறுமையை விசுவாசங் கொள்ளாதவர்கள் ஆகியோரின் மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம், அவர்களோ தங்கள் இரட்சகனுக்கு (வழிபாட்டில் மற்றவர்களை) சமமாக்குகின்றனர்
6:151
6:151 قُلْ تَعَالَوْا اَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ‌ اَلَّا تُشْرِكُوْا بِهٖ شَيْـٴًـــــا وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ ۚ وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ مِّنْ اِمْلَاقٍ‌ؕ نَحْنُ نَرْزُقُكُمْ وَاِيَّاهُمْ‌ ۚ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ‌ ۚ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِىْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَـقِّ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
قُلْ கூறுவீராக تَعَالَوْا வாருங்கள் اَتْلُ ஓதுகிறேன் مَا எதை حَرَّمَ தடை செய்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் عَلَيْكُمْ‌ உங்கள் மீது اَلَّا تُشْرِكُوْا இணையாக்காதீர்கள் بِهٖ அவனுக்கு شَيْـٴًـــــا எதையும் وَّبِالْوَالِدَيْنِ இன்னும் தாய் தந்தையுடன் اِحْسَانًا‌ ۚ அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள் وَلَا تَقْتُلُوْۤا இன்னும் கொல்லாதீர்கள் اَوْلَادَكُمْ உங்கள் பிள்ளைகளை مِّنْ اِمْلَاقٍ‌ؕ வறுமையினால் نَحْنُ நாம் نَرْزُقُكُمْ உணவளிக்கிறோம்/உங்களுக்கு وَاِيَّاهُمْ‌ ۚ இன்னும் அவர்களுக்கு وَلَا تَقْرَبُوا இன்னும் நெருங்காதீர்கள் الْفَوَاحِشَ மானக்கேடானவற்றை مَا எது ظَهَرَ வெளிப்படையானது مِنْهَا அவற்றில் وَمَا بَطَنَ‌ ۚ இன்னும் மறைந்தது وَلَا تَقْتُلُوا இன்னும் கொல்லாதீர்கள் النَّفْسَ உயிரை الَّتِىْ எது حَرَّمَ தடை செய்தான் اللّٰهُ அல்லாஹ் اِلَّا بِالْحَـقِّ‌ ؕ நியாயமின்றி ذٰ لِكُمْ அது وَصّٰٮكُمْ உபதேசிக்கிறான்/உங்களுக்கு بِهٖ இவற்றை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.
6:151. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடை செய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான்.
6:151. (நபியே! இவர்களிடம்) கூறும்: “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது சுமத்தியுள்ள நிபந்தனைகள் எவை என்பதை நான் கூறுகின்றேன். (அதாவது) அவனோடு யாரையும் எதையும் இணை வைக்காதீர்கள். மேலும், பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். மேலும், வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாமே உங்களுக்கும் உணவளிக்கின்றோம்; அவர்களுக்கும் அளிப்போம். மேலும், மானக்கேடான செயல்களின் அருகேகூடச் செல்லாதீர்கள்! அவை வெளிப்படையானவையாயினும் மறைவானவையாயினும் சரியே! மேலும் அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! நீங்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான்.
6:151. (நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக! “வாருங்கள்! உங்கள் இரட்சகன் உங்களுக்கு விலக்கியிருப்பவற்றையும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன், (அவை யாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள், இன்னும் (உங்கள்) பெற்றோருக்கு (அன்புடன்) உபகாரம் செய்யுங்கள், (அவர்களோடு நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள்) வறுமைக்காக (அதைப்பயந்து) உங்கள் குழந்தைகளை நீங்கள் கொலை செய்துவிடாதீர்கள், உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம், மேலும், மானக்கேடான காரியங்களை – அதில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும் (செய்ய) நீங்கள் நெருங்காதீர்கள், இன்னும் (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஆத்மாவையும் (நியாயமான) உரிமையின்றிக் கொலை செய்யாதீர்கள், (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் (அவனுடைய ஏவல் விலக்கல் பற்றிய கட்டளைகளை அறிந்து) விளங்கிக் கொள்வதறகாக அவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு ஏவுகிறான்.
6:152
6:152 وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ ۚ وَاَوْفُوْا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌ ۚ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ ۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰى‌‌ ۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏
وَلَا تَقْرَبُوْا நெருங்காதீர்கள் مَالَ செல்வத்தை الْيَتِيْمِ அநாதையின் اِلَّا தவிர بِالَّتِىْ எதைக்கொண்டு هِىَ அது اَحْسَنُ மிக அழகிய வழி حَتّٰى வரை يَبْلُغَ அவர் அடைவார் اَشُدَّهٗ‌ ۚ அவருடைய பருவத்தை وَاَوْفُوْا இன்னும் முழுமைப்படுத்துங்கள் الْكَيْلَ அளவையை وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையை بِالْقِسْطِ‌ ۚ நீதமாக لَا نُـكَلِّفُ நாம் சிரமம் (சட்டம்) கொடுப்பதேயில்லை نَفْسًا ஓர் ஆன்மாவிற்கு اِلَّا وُسْعَهَا‌ ۚ தவிர/அதன் சக்திக்கு உட்பட்டே தவிர وَاِذَا قُلْتُمْ இன்னும் நீங்கள் கூறினால் فَاعْدِلُوْا நீதமாக கூறுங்கள் وَلَوْ كَانَ அவர் இருந்தாலும் ذَا قُرْبٰى‌ ۚ உறவினராக وَبِعَهْدِ இன்னும் வாக்குறுதியை اللّٰهِ அல்லாஹ்வின் اَوْفُوْا‌ ؕ நிறைவேற்றுங்கள் ذٰ لِكُمْ இவை وَصّٰٮكُمْ உங்களுக்கு உபதேசித்தான் بِهٖ இவற்றைக் கொண்டு لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
6:152. அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
6:152. ‘‘அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரை நியாயமான முறையில் தவிர நெருங்காதீர்கள். அளவை (சரியான அளவு கொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுங்கள். ஓர் ஆத்மாவை அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை (உங்கள் இறைவன்) உங்களுக்கு உபதேசிக்கிறான்.
6:152. மேலும், அநாதைகளின் செல்வத்தை அவர்கள் பருவ வயதினை அடையும்வரை நியாயமான முறையில் அன்றி நெருங்காதீர்கள்! மேலும், அளவையிலும், நிறுவையிலும் நீதியைக் கடைப்பிடியுங்கள். எந்த மனிதன் மீதும் அவனது சக்திக்கு ஏற்பவே தவிர நாம் பொறுப்பு சுமத்துவதில்லை. இன்னும் பேசும்போது நீதியுடன் பேசுங்கள்! உங்கள் நெருங்கிய உறவினர் பற்றிய விவகாரமாயினும் சரியே! மேலும் அல்லாஹ்வின் உடன்படிக்கையை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள்! நீங்கள் அறிவுரை பெற வேண்டும் என்பதற்காக இவற்றைக் கொண்டு அவன் உங்களுக்கு நல்லுரை கூறுகின்றான்.
6:152. “அநாதையின் பொருளை – அவர் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள், அளவையும், நிறுவையையும் நீதமாக நிறைவு செய்யுங்கள், எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்குட்பட்டதைத்தவிர நாம் கஷ்டப்படுத்துவதில்லை, நீங்கள் பேசினால் (பாதிக்கப்படுபவர் நெருங்கிய) உறவினராயினும் (சரியே) நீதத்தையே கூறுங்கள், நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியையும் பூரணமாக நிறைவேற்றுங்கள், (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் நினைவு கூர்வதற்காக அவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு ஏவுகிறான்.
6:153
6:153 وَاَنَّ هٰذَا صِرَاطِىْ مُسْتَقِيْمًا فَاتَّبِعُوْهُ‌ ۚ وَلَا تَتَّبِعُوْا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيْلِهٖ‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏
وَاَنَّ நிச்சயமாக هٰذَا இது صِرَاطِىْ என் பாதை مُسْتَقِيْمًا நேரானது فَاتَّبِعُوْهُ‌ ۚ அதைப்பின்பற்றுங்கள் وَلَا تَتَّبِعُوْا பின்பற்றாதீர்கள் السُّبُلَ வழிகளை فَتَفَرَّقَ அவை பிரித்துவிடும் بِكُمْ உங்களை عَنْ سَبِيْلِهٖ‌ ؕ அவனுடைய வழியிலிருந்து ذٰ لِكُمْ இவை وَصّٰٮكُمْ بِهٖ உபதேசிக்கிறான் /உங்களுக்கு/இவற்றைக் கொண்டு لَعَلَّكُمْ تَتَّقُوْنَ‏ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக
6:153. நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
6:153. ‘‘நிச்சயமாக இதுதான் என் நேரான வழியாகும். அதையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக (உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுங்கள்).
6:153. மேலும், அவன் அறிவுறுத்துகின்றான்: நிச்சயமாக இதுதான் என்னுடைய நேரான வழியாகும். எனவே, நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். வேறு வழிகளைப் பின்பற்றாதீர்கள்! ஏனெனில் அவை நேரான வழியிலிருந்து உங்களைச் சிதறடித்துவிடும். உங்களுடைய இறைவன் உங்களுக்கு நல்கியுள்ள அறிவுரைகள் இவைதாம். இவற்றின் மூலம் நீங்கள் தவறான வழியைத் தவிர்த்து வாழக்கூடும்.
6:153. இன்னும், “நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும், ஆகவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள், இன்னும், மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள், அவை அவனுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும், (மேற்கூறப்பட்ட உபதேசங்களடங்கிய) அவை நீங்கள் பயபக்தியுடையவர்களாவதற்காக இவற்றை (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு ஏவுகிறான்” (என்று கூறுவீவராக!)
6:154
6:154 ثُمَّ اٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ تَمَامًا عَلَى الَّذِىْۤ اَحْسَنَ وَتَفْصِیْلًالِّكُلِّ شَىْءٍ وَّهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُمْ بِلِقَآءِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ‏
ثُمَّ பிறகு اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْـكِتٰبَ வேதத்தை تَمَامًا நிறைவாக عَلَى மீது الَّذِىْۤ எவர் اَحْسَنَ நல்லறம் புரிந்தார் وَتَفْصِیْلًا இன்னும் விவரிப்பதற்காக لِّـكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் وَّهُدًى இன்னும் நேர்வழியாக وَرَحْمَةً இன்னும் கருணையாக لَّعَلَّهُمْ ஆவதற்காக/அவர்கள் بِلِقَآءِ சந்திப்பை رَبِّهِمْ தங்கள் இறைவனின் يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்வார்கள்
6:154. நன்மை செய்பவர்களின் மீது (நமது அருளைப்) பூர்த்தியாக்கும் பொருட்டு பின்னர் மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம் - அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது; அது நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போம் என்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).  
6:154. (தங்களின் செயல்களையும் பண்புகளையும்) அழகுபடுத்திக் கொண்டவர் மீது (நம் அருட்கொடையை) முழுமைப்படுத்தி வைப்பதற்காக இதற்கு பிறகும் நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அதில் ஒவ்வொரு விஷயமும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. (அது) நேரான வழியாகவும் (இறைவனின்) அருளாகவும் இருக்கிறது. அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்போமென்று உறுதி கொள்ளும் பொருட்டே (அதைக் கொடுத்தோம்).
6:154. பிறகு நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவ்வேதம் நன்னடத்தையை மேற்கொண்டோருக்கு அருட் கொடையை நிறைவு செய்யத்தக்கதாகவும் அவசியமான ஒவ்வொன்றையும் விளக்கக் கூடியதாகவும் நேர்வழி காட்டக்கூடியதாகவும் அருள் மிக்கதாகவும் அமைந்திருந்தது. மக்கள் தம் இறைவனைச் சந்திப்போம் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே (இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவ்வேதத்தை நாம் வழங்கினோம்)!
6:154. பின்னர், நன்மை செய்தோரின் மீது (நமது அருட்கொடையை) நிறைவு செய்வதற்காகவும் ஒவ்வொரு விஷயத்திற்கும் தெளிவாகவும், நேர்வழியாகவும் அருளாகவும் மூஸாவுக்கு வேதத்தை நாம் கொடுத்தோம், தங்கள் இரட்சகனின் சந்திப்பை அவர்கள் விசுவாசம் கொள்வதற்காக வேண்டி (இதனை நாம் இறக்கி வைத்தோம்.)
6:155
6:155 وَهٰذَا كِتٰبٌ اَنْزَلْنٰهُ مُبٰرَكٌ فَاتَّبِعُوْهُ وَاتَّقُوْا لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ‏
وَهٰذَا இது كِتٰبٌ வேதம் اَنْزَلْنٰهُ நாமே இறக்கினோம்/இதை مُبٰرَكٌ அருள்வளமிக்கது فَاتَّبِعُوْهُ ஆகவே, பின்பற்றுங்கள்/இதை وَاتَّقُوْا இன்னும் அஞ்சுங்கள் لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۙ‏ நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக
6:155. (மனிதர்களே!) இதுவும் வேதமாகும்; இதனை நாமே இறக்கிவைத்துள்ளோம் - (இது) மிக்க பாக்கியம் வாய்ந்தது; ஆகவே இதனைப் பின்பற்றுங்கள் - இன்னும் (அவனை) அஞ்சி (பாவத்தை விட்டு விலகி)க் கொள்ளுங்கள். நீங்கள் (இறைவனால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
6:155. (மனிதர்களே!) இதுவும் வேத நூலாகும். இதை நாமே இறக்கிவைத்தோம். (இது) மிக்க பாக்கியமுடையது. ஆகவே, இதையே நீங்கள் பின்பற்றுங்கள். (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். அதனால் அவனது அருளுக்குள்ளாவீர்கள்.
6:155. மேலும் (இதே போன்று) இவ்வேதத்தையும் நாம்தான் இறக்கினோம். இது மிக்க அருள்வளமுடையது. எனவே நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். மேலும், இறையச்சமுள்ள போக்கினை மேற்கொள்ளுங்கள்! உங்கள் மீது இரக்கம் காட்டப்படலாம்.
6:155. (மனிதர்களே) இதுவும் வேத நூலாகும், இதனை நாம் இறக்கி வைத்துள்ளோம், (இதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக) பரக்கத்துச் செய்யப்பட்டதாகும், ஆகவே, இதனை நீங்கள் பின்பற்றுங்கள், மேலும், நீங்கள் (அல்லாஹ்வினால்) அருள் செய்யப்படுவதற்காக (அவனுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து விலகிக்) கொள்ளுங்கள்.
6:156
6:156 اَنْ تَقُوْلُـوْۤا اِنَّمَاۤ اُنْزِلَ الْـكِتٰبُ عَلٰى طَآٮِٕفَتَيْنِ مِنْ قَبْلِنَا وَاِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغٰفِلِيْنَۙ‏
اَنْ تَقُوْلُـوْۤا நீங்கள் கூறாதிருப்பதற்காக اِنَّمَاۤ اُنْزِلَ இறக்கப்பட்டதெல்லாம் الْـكِتٰبُ வேதம் عَلٰى மீது طَآٮِٕفَتَيْنِ இரு கூட்டங்கள் مِنْ قَبْلِنَا நமக்கு முன்னர் وَاِنْ كُنَّا நிச்சயம் இருந்தோம் عَنْ دِرَاسَتِهِمْ அவர்களின் படிப்பை விட்டு لَغٰفِلِيْنَۙ‏ கவனமற்றவர்களாகவே
6:156. நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம் என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
6:156. (இணைவைத்து வணங்கும் அரபிகளே!) ‘‘நமக்கு முன்னர் (யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய) இரு கூட்டத்தினர் மீது (மட்டுமே) வேதம் அருளப்பட்டது. ஆகவே, (அவர்களுடைய மொழி எங்களுக்குத் தெரியாததால்) நாங்கள் அவர்களிடம் அதைப் படிக்கவும், படித்துக் கேட்கவும் முடியாமல் பராமுகமாகி விட்டோம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும்.
6:156. “எங்களுக்கு முன்சென்ற இருகூட்டத்தாருக்குத்தான் வேதம் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் எதனைப் படித்தார்கள்; கற்பித்தார்கள் என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று இனி நீங்கள் கூற முடியாது.
6:156. (இணை வைப்போரே) “இரு கூட்டத்தினர்(களாகிய யூத கிறிஸ்தவர்கள்) மீதுதான் நமக்கு முன்னர் வேதம் இறக்கப்பட்டது, ஆகவே, நாங்கள் அதனைப் படிக்கவும் படித்துக் கேட்கவும்) முடியாமல் பாராமுகமானவர்களாகி விட்டோம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும்,
6:157
6:157 اَوْ تَقُوْلُوْا لَوْ اَنَّاۤ اُنْزِلَ عَلَيْنَا الْـكِتٰبُ لَـكُنَّاۤ اَهْدٰى مِنْهُمْ‌ ۚ فَقَدْ جَآءَكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ‌  ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَّبَ بِاٰيٰتِ اللّٰهِ وَصَدَفَ عَنْهَا‌ ؕ سَنَجْزِى الَّذِيْنَ يَصْدِفُوْنَ عَنْ اٰيٰتِنَا سُوْٓءَ الْعَذَابِ بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ‏
اَوْ அல்லது تَقُوْلُوْا நீங்கள் கூறாதிருப்பதற்காக لَوْ اَنَّاۤ இருந்தால் / நிச்சயமாக நாம் اُنْزِلَ இறக்கப்பட்டது عَلَيْنَا நம்மீது الْـكِتٰبُ வேதம் لَـكُنَّاۤ இருந்திருப்போம் اَهْدٰى அதிகம் நேர்வழிபெற்றவர்(கள்) مِنْهُمْ‌ ۚ அவர்களை விட فَقَدْ நிச்சயமாக جَآءَكُمْ உங்களிடம் வந்துவிட்டது بَيِّنَةٌ மிகத் தெளிவான சான்று مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து وَهُدًى இன்னும் நேர்வழி وَرَحْمَةٌ‌  ۚ இன்னும் கருணை فَمَنْ ஆகவே யார் اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنْ எவனைவிட كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَصَدَفَ இன்னும் விலகினான் عَنْهَا‌ ؕ அவற்றை விட்டு سَنَجْزِى கூலி கொடுப்போம் الَّذِيْنَ எவர்கள் يَصْدِفُوْنَ விலகுவார்கள் عَنْ اٰيٰتِنَا நம் வசனங்களை விட்டு سُوْٓءَ கெட்ட الْعَذَابِ வேதனை بِمَا كَانُوْا يَصْدِفُوْنَ‏ அவர்கள் விலகிக்கொண்டிருந்ததன் காரணமாக
6:157. அல்லது மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
6:157. அல்லது ‘‘நிச்சயமாக நமக்காக ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால் நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்'' என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை அருளினோம். ஆகவே,) உங்கள் இறைவனிடம் இருந்து, மிகத் தெளிவான (வசனங்களையுடைய) வேதம் உங்களிடம் வந்துவிட்டது. (அது) நேரான வழியாகவும் (இறைவனுடைய) அருளாகவும் இருக்கிறது. ஆகவே, எவன் அல்லாஹ்வுடைய (இத்தகைய) வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? நம் வசனங்களிலிருந்து (இவ்வாறு) விலகிக் கொண்டவர்களுக்கு அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
6:157. அல்லது எங்கள் மீது வேதம் இறக்கியருளப் பட்டிருந்தால் அவர்களைவிட நல்ல முறையில் நேர்வழி நடப்பவர்களாக விளங்கியிருப்போம் என்றும் இனி நீங்கள் சாக்குப்போக்குக் கூறிட முடியாது. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றும் நேர்வழியும் அருட்கொடையும் உங்களிடம் வந்துள்ளன. இனி எவன் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யானவை என வாதிட்டு, அவற்றைப் புறக்கணித்தானோ அவனைவிட அக்கிரமக்காரன் யார்? எவர்கள் நம்முடைய வசனங்களைப் புறக்கணிக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இழிவான தண்டனையை நாம் அளித்தே தீருவோம்.
6:157. அல்லது நிச்சயமாக நாங்கள் - எங்கள் மீது ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால், அவர்களைவிட மிக்க நேர்வழியில் நாங்கள் இருந்திருப்போம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் இப்பொழுது உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான ஆதாரமும், நேர்வழியும் பெருங்கிருபையும் (கொண்டதுமான வேதம்) வந்துவிட்டது, ஆகவே, எவர் அல்லாஹ்வுடைய இத்தகைய வசனங்களைப் பொய்யாக்கி அவற்றிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவரைவிட மிகுந்த அநியாயக்காரர் யார்? நம்முடைய வசனங்களிலிருந்து இவ்வாறு விலகிக் கொள்கின்றவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்டதன் காரணமாக – நாம் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
6:158
6:158 هَلْ يَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمُ الْمَلٰۤٮِٕكَةُ اَوْ يَاْتِىَ رَبُّكَ اَوْ يَاْتِىَ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ ؕ يَوْمَ يَاْتِىْ بَعْضُ اٰيٰتِ رَبِّكَ لَا يَنْفَعُ نَفْسًا اِيْمَانُهَا لَمْ تَكُنْ اٰمَنَتْ مِنْ قَبْلُ اَوْ كَسَبَتْ فِىْۤ اِيْمَانِهَا خَيْرًا‌ ؕ قُلِ انْتَظِرُوْۤا اِنَّا مُنْتَظِرُوْنَ‏
هَلْ يَنْظُرُوْنَ அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمُ தவிர/அவர்களிடம் வருவதை الْمَلٰۤٮِٕكَةُ வானவர்கள் اَوْ அல்லது يَاْتِىَ வருவதை رَبُّكَ உம் இறைவன் اَوْ அல்லது يَاْتِىَ வருவதை بَعْضُ சில اٰيٰتِ அத்தாட்சிகளில் رَبِّكَ ؕ உம் இறைவனின் يَوْمَ நாளில் يَاْتِىْ வரும் بَعْضُ சில اٰيٰتِ அத்தாட்சிகளில் رَبِّكَ உம் இறைவனின் لَا يَنْفَعُ பலனளிக்காது نَفْسًا ஓர் ஆன்மாவிற்கு اِيْمَانُهَا அதன் நம்பிக்கை لَمْ تَكُنْ اٰمَنَتْ நம்பிக்கை கொண்டிருக்கவில்லை مِنْ قَبْلُ (அதற்கு) முன்னர் اَوْ அல்லது كَسَبَتْ செய்தது فِىْۤ اِيْمَانِهَا தன் நம்பிக்கையில் خَيْرًا‌ ؕ ஒரு நன்மையை قُلِ கூறுவீராக انْتَظِرُوْۤا எதிர்பாருங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مُنْتَظِرُوْنَ‏ எதிர்பார்க்கிறோம்
6:158. மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்.
6:158. வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி வருவதையோ தவிர, (வேறெதனையும்) அவர்கள் எதிர் பார்க்கின்றனரா? உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி(யாகிய இறுதி நாள்) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் ஒரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை ஒரு பலனையும் அளிக்காது. ஆகவே, (அவர்களை நோக்கி ‘‘அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாமும் எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று (நபியே!) கூறுவீராக.
6:158. என்ன, இப்போது இவர்கள் தங்கள் முன்னால் வானவர்கள் வந்து நிற்க வேண்டும்; அல்லது உம் இறைவனே வரவேண்டும்; அல்லது உம் இறைவனின் தெளிவான சான்றுகள் சில வெளிப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? உம் இறைவனின் சான்றுகளில் சில வெளிப்படும் நாளில் முன்னரே நம்பிக்கை கொள்ளாதவர்க்கும் அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதனுடன் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காதவர்க்கும் அவருடைய நம்பிக்கை எவ்வித பயனையும் அளிக்காது. எனவே (நபியே! இவர்களிடம்) கூறும்: “சரி, நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் எதிர்பார்த்திருக்கிறோம்.”
6:158. மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இரட்சகன் வருவதையோ, அல்லது உம்முடைய இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இரட்சகனின் சில அத்தாட்சிகள் வரும் அந்நாளில் அதற்கு முன்னர் விசுவாசங்கொள்ளாதிருந்து அல்லது (விசுவாசங்கொண்டிருந்தும்) அதன் ஈமானில் எந்த ஒரு நன்மையையும் சம்பாதிக்காதிருந்த எந்த ஆத்மாவிற்கும் அது (அந்நாளில்) கொள்ளும் விசுவாசம் யாதொரு பலனையும் அளிக்காது, ஆகவே, (அவர்களிடம், “அப்பெரிய அத்தாட்சிகளை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நாம் எதிர்பார்த்திருப்பவர்களாவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
6:159
6:159 اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ‌ ؕ اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் فَرَّقُوْا பிரித்து விட்டார்கள் دِيْنَهُمْ தங்கள் மார்க்கத்தை وَكَانُوْا இன்னும் ஆகிவிட்டார்கள் شِيَـعًا பிரிவினர்களாக لَّسْتَ நீர் இல்லை مِنْهُمْ அவர்களுடன் فِىْ شَىْءٍ‌ ؕ ஒரு விஷயத்திலும் اِنَّمَاۤ எல்லாம் اَمْرُ காரியம் هُمْ அவர்களுடைய اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம்தான் ثُمَّ பிறகு يُنَـبِّـئُـهُمْ அறிவிப்பான்/அவர்களுக்கு بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை
6:159. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.
6:159. எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ்டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உங்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்.
6:159. எவர்கள் தங்களுடைய தீனை நெறியை துண்டு துண்டாக்கி, பல்வேறு குழுக்களாய் பிரிந்து விட்டார்களோ அவர்களோடு நிச்சயமாக உமக்கு எவ்விதத் தொடர்புமில்லை. அவர்களுடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவனே அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான்.
6:159. நிச்சயமாக தங்கள் மார்க்கத்தை(ப் பலவாறாக)ப் பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டனரே அத்தகையோர் - அவர்களின் எக்காரியத்திலும் நீர் இல்லை, அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்.
6:160
6:160 مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
مَنْ எவர் جَآءَ செய்தார் (வந்தார்) بِالْحَسَنَةِ நன்மையை(க் கொண்டு) فَلَهٗ அவருக்கு عَشْرُ பத்து اَمْثَالِهَا‌ ۚ அது போன்ற(வை) وَمَنْ எவர் جَآءَ செய்தார் (வந்தார்) بِالسَّيِّئَةِ ஒரு தீமையை(க் கொண்டு) فَلَا يُجْزٰٓى கூலி கொடுக்கப்பட மாட்டார் اِلَّا தவிர مِثْلَهَا அது போன்றே وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
6:160. எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
6:160. எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே அன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
6:160. எவர் இறைவனின் திருமுன் நன்மையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அதைப்போல் பத்து மடங்கு நற்கூலி உண்டு. எவர் தீமையைக் கொண்டு வருவாரோ அவருக்கு அவர் செய்த தீமை அளவுக்குத்தான் தண்டனை கொடுக்கப்படும். மேலும், யாருக்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
6:160. எவர் ஒருவர் நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு (நன்மைகளில்)அதைப் போன்றவை பத்து (பங்கு) உண்டு, எவர் ஒருவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அதைப் போன்றதைத் தவிர (அதிகமாக) அவருக்குக் கூலியாக கொடுக்கப்பட மாட்டாது, அவர்களோ அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
6:161
6:161 قُلْ اِنَّنِىْ هَدٰٮنِىْ رَبِّىْۤ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۚ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக اِنَّنِىْ நிச்சயமாக நான் هَدٰٮنِىْ நேர்வழி காட்டினான் எனக்கு رَبِّىْۤ என் இறைவன் اِلٰى صِرَاطٍ பாதையின் பக்கம் مُّسْتَقِيْمٍۚ நேரானது دِيْنًا மார்க்கமாகும் قِيَمًا நிலையான مِّلَّةَ கொள்கை اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய حَنِيْفًا‌ ۚ உறுதியுடையவர் وَمَا كَانَ அவர் இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
6:161. (நபியே!) நீர் கூறும்: “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
6:161. ‘‘நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீமுடைய நேரான மார்க்கமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை'' என்று (நபியே!) கூறுவீராக.
6:161. (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் சரியான கோணல் இல்லாத தீன் (நெறி) ஆகும்; மன ஓர்மையுடன் இப்ராஹீம் கடைப்பிடித்து வந்த வழிமுறையும் ஆகும்; மேலும், அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராய் இருக்கவில்லை.”
6:161. “நிச்சயமாக நான் - என்னை என்னுடைய இரட்சகன் நேர் வழியில் செலுத்திவிட்டான், (அது)மிக்க உறுதியான நிலையான மார்க்கமாகும், இன்னும் (அது அசத்தியமான எல்லா வழிகளை விட்டு நீங்கி) சத்தியத்தின்பால் சார்ந்தவரான இப்றாஹீமுடைய மார்க்கமுமாகும், அவர் இணைவைத்து வணங்குவோரில் இருந்ததுமில்லை என்று நபியே நீர் கூறுவீராக!
6:162
6:162 قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக صَلَاتِىْ என் தொழுகை وَنُسُكِىْ இன்னும் என் பலி وَ مَحْيَاىَ இன்னும் என் வாழ்வு وَمَمَاتِىْ இன்னும் என் மரணம் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரின்
6:162. நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
6:162. நீங்கள் கூறுங்கள்: ‘‘நிச்சயமாக என் தொழுகையும், என் (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.
6:162. கூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.”
6:162. நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக!
6:163
6:163 لَا شَرِيْكَ لَهٗ‌ۚ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِيْنَ‏
لَا அறவே இல்லை شَرِيْكَ இணை لَهٗ‌ۚ அவனுக்கு وَبِذٰلِكَ இதைக்கொண்டே اُمِرْتُ ஏவப்பட்டுள்ளேன் وَاَنَا நான் اَوَّلُ முதலாமவன் الْمُسْلِمِيْنَ‏ அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்
6:163. “அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).
6:163. அவனுக்கு ஒரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே, நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்'' (என்றும் கூறுவீராக.)
6:163. அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்குக் கீழ்ப்படிவோரில் (முஸ்லிம்களில்) முதன்மையானவனாக உள்ளேன்.”
6:163. “அவனுக்கு யாதோர் இணையுமில்லை (துணையுமில்லை), இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன், இன்னும், (அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களில் (இந்த உம்மத்தில்) நான் முதன்மையானவன்” (என்றும் கூறுவீராக!)
6:164
6:164 قُلْ اَغَيْرَ اللّٰهِ اَبْغِىْ رَبًّا وَّهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ‌ ؕ وَلَا تَكْسِبُ كُلُّ نَـفْسٍ اِلَّا عَلَيْهَا‌ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى‌ ۚ ثُمَّ اِلٰى رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْـتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
قُلْ கூறுவீராக اَغَيْرَ அல்லாதவனையா? اللّٰهِ அல்லாஹ் اَبْغِىْ தேடுவேன் رَبًّا இறைவனாக وَّهُوَ அவன் இருக்க رَبُّ இறைவன் كُلِّ شَىْءٍ‌ ؕ எல்லாவற்றின் وَلَا تَكْسِبُ செய்வதில்லை كُلُّ نَـفْسٍ ஒவ்வொரு ஆன்மா اِلَّا தவிர عَلَيْهَا‌ۚ தனக்கெதிராக وَلَا تَزِرُ சுமக்காது وَازِرَةٌ பாவம் செய்யக்கூடிய ஆன்மா وِّزْرَ பாவத்தை اُخْرٰى‌ ۚ மற்றொன்றின் ثُمَّ பிறகு اِلٰى பக்கம்தான் رَبِّكُمْ உங்கள் இறைவன் مَّرْجِعُكُمْ உங்கள் மீட்சி فَيُنَبِّئُكُمْ அறிவிப்பான்/உங்களுக்கு بِمَا எதை كُنْـتُمْ இருந்தீர்கள் فِيْهِ அதில் تَخْتَلِفُوْنَ‏ முரண்படுகிறீர்கள்
6:164. “அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது; அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
6:164. ‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
6:164. மேலும் கூறுவீராக: “அல்லாஹ்வே அனைத்திற்கும் அதிபதியாக இருக்க, அவனை விடுத்து வேறொரு அதிபதியை நான் தேடுவேனா? மேலும், எவரெவர் எதைச் சம்பாதிக்கின்றார்களோ அதற்கு அவரவரே பொறுப்பாளிகளாவர். மேலும், ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் அதிபதியிடமே திரும்ப வேண்டியுள்ளது. அச்சமயம் நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதன் உண்மை நிலையை அவன் உங்களுக்கு வெளிப்படுத்திவிடுவான்.
6:164. “அல்லாஹ் அல்லாதவனையா எனக்கு இரட்சகனாக நான் தேடுவேன்? அவனோ ஒவ்வொரு பொருளுக்கும், இரட்சகனுமாவான்” என்று (நபியே! நீர் கூறுவீராக! பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்குப் பாதகமாகவே அல்லாது பாவத்தை) சம்பாதிப்பதில்லை, இன்னும் (பாவத்தைச்) சுமக்கக்கூடிய (ஓர் ஆத்மாவான)து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது, (இறந்த) பின்னர் நீங்கள் யாவரும் உங்கள் இரட்சகனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது, அப்போது நீங்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தீர்களோ அது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
6:165
6:165 وَهُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ‌ؕ اِنَّ رَبَّكَ سَرِيْعُ الْعِقَابِ  ۖ وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَهُوَ அவன் الَّذِىْ எவன் جَعَلَـكُمْ ஆக்கினான்/உங்களை خَلٰٓٮِٕفَ வழித்தோன்றல்களாக الْاَرْضِ பூமியில் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَكُمْ உங்களில் சிலரை فَوْقَ بَعْضٍ சிலருக்கு மேல் دَرَجٰتٍ பதவிகளில் لِّيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக فِىْ مَاۤ  எவற்றில் اٰتٰٮكُمْ‌ؕ உங்களுக்கு கொடுத்தான் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் سَرِيْعُ தீவிரமானவன் الْعِقَابِ  தண்டிப்பதில் ۖ وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன்தான் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.
6:165. அவன்தான் உங்களை பூமியில் முன் சென்றவர்களின் இடத்தில் வைத்தான். உங்களில் சிலரை மற்றவர்களைவிட அந்தஸ்தில் உயர்த்தியும் இருக்கிறான். (இதன் மூலம்) உங்களுக்குக் கொடுத்தவற்றில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று) உங்களைச் சோதிக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். ஆயினும், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான்.
6:165. உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கியவனும் அவனே! உங்களில் சிலருக்கு வேறு சிலரைவிட உயர்ந்த படித்தரங்களை அவன் வழங்கியிருக்கின்றான்; அவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக! நிச்சயமாக உம் அதிபதி தண்டனை வழங்குவதில் விரைவானவன்; மேலும் நிச்சயமாக அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
6:165. அவன்தான் உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு) பிரதிநிதிகளாகப் பூமியில் உங்களை ஆக்கியுள்ளான், அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை மற்ற சிலரை விடப் பதவிகளில் உயர்த்தியுமிருக்கின்றான், (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன், நிச்சயமாக அவன் மிக்க பிழை பொறுப்பவன், பேரன்புடையவன்.