73. ஸூரத்துல் முஸ்ஸம்மில் (போர்வை போர்த்தியவர்)
மக்கீ, வசனங்கள்: 20

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
73:1
73:1 يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏
يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏ போர்வை போர்த்தியவரே!
73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
73:1. போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே!
73:1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
73:2
73:2 قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا ۙ‏
قُمِ الَّيْلَ இரவில் எழுவீராக! اِلَّا தவிர قَلِيْلًا ۙ‏ குறைந்த நேரத்தை
73:2. இரவில் - சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;
73:2. (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)
73:2. இரவில் எழுந்து தொழுவீராக; ஆனால் கொஞ்ச நேரம்!
73:2. இரவில் (தொழுவதற்காக) எழுவீராக! சொற்ப (நேர)ம் தவிர-
73:3
73:3 نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ۙ‏
نِّصْفَهٗۤ அதன் பாதியில் اَوِ انْقُصْ அல்லது குறைப்பீராக! مِنْهُ அதில் قَلِيْلًا ۙ‏ கொஞ்சம்
73:3. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
73:3. அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்;
73:3. அதாவது, பாதி இரவு அல்லது அதைவிடச் சற்று குறைவாகவோ
73:3. அதில் பாதி, (நேரத்தில் தொழுவீராக!) அல்லது அதிலிருந்து சொற்ப (நேர)த்தைக் குறைத்துக் கொள்வீராக!
73:4
73:4 اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ‏
اَوْ அல்லது زِدْ அதிகப்படுத்துவீராக! عَلَيْهِ அதற்கு மேல் وَرَتِّلِ இன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! الْقُرْاٰنَ குர்ஆனை تَرْتِيْلًا ؕ‏ நிறுத்தி நிதானமாக ஓதுதல்
73:4. அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
73:4. அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக.
73:4. அல்லது கூடுதலாகவோ (தொழுவீராக!) மேலும், குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!
73:4. அல்லது அதை விட (ச்சற்று நேரத்தை) அதிகப்படுத்திக் கொள்வீராக! (இரவுத் தொழுகையான) அதில் குர் ஆனை (நன்கு திருத்தமாக) நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக!
73:5
73:5 اِنَّا سَنُلْقِىْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا‏
اِنَّا நிச்சயமாக நாம் سَنُلْقِىْ இறக்குவோம் عَلَيْكَ உம்மீது قَوْلًا வேதத்தை ثَقِيْلًا‏ மிக கனமான
73:5. நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான - ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.
73:5. நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உம் மீது இறக்கிவைப்போம்.
73:5. திண்ணமாக, நாம் உம் மீது கன மானதொரு வாக்கை இறக்கப் போகின்றோம்.
73:5. நிச்சயமாக, நாம் அடுத்து பளுவான வாக்கை உம்மீது போடுவோம். (வஹீயின் மூலம் அறிவிப்போம்.)
73:6
73:6 اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ‏
اِنَّ நிச்சயமாக نَاشِئَةَ வணக்கம் الَّيْلِ இரவு هِىَ அதுதான் اَشَدُّ மிகவும் வலுவான وَطْـاً தாக்கமுடையது(ம்) وَّاَقْوَمُ மிகத் தெளிவானதும் قِيْلًا ؕ‏ அறிவுரையால்
73:6. நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.
73:6. நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது.
73:6. உண்மையில், இரவில் எழுந்திருப்பது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் (குர்ஆனை) நேர்த்தியாக ஓதுவதற்கு மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.
73:6. நிச்சயமாக இரவில் (வணக்கத்தை நிறைவேற்ற) எழுவதானது_ அதுவே (மனமும் நாவும்) ஒன்றிணைந்திருக்க மிக்க உறுதியானதும், மேலும் கூற்றால் மிக்க உறுதியானதுமாகும்.
73:7
73:7 اِنَّ لَـكَ فِى النَّهَارِ سَبْحًا طَوِيْلًا ؕ‏
اِنَّ நிச்சயமாக لَـكَ உமக்கு فِى النَّهَارِ பகலில் سَبْحًا طَوِيْلًا ؕ‏ நீண்ட பணிகள்
73:7. நிச்சயமாகப் பகலில் உமக்கு நெடிய (கடினமான) வேலைகள் இருக்கின்றன.
73:7. நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன.
73:7. பகல் நேரங்களிலோ உமக்கு நிறையப் பணிகள் உள்ளன.
73:7. நிச்சயமாக உமக்குப் பகலில் நீண்ட வேலை இருக்கின்றது.
73:8
73:8 وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ اِلَيْهِ تَبْتِيْلًا ؕ‏
وَاذْكُرِ இன்னும் நினைவு கூறுவீராக اسْمَ பெயரை رَبِّكَ உமது இறைவனின் وَتَبَتَّلْ இன்னும் ஒதுங்கிவிடுவீராக! اِلَيْهِ அவன் பக்கம் تَبْتِيْلًا ؕ‏ முற்றிலும் ஒதுங்குதல்
73:8. எனினும் (இரவிலும், பகலிலும்) உம்முடைய இறைவனின் பெயரை தியானிப்பீராக! இன்னும் அவனளவிலேயே முற்றிலும் திரும்பியவராக இருப்பீராக.
73:8. நீர் (அவற்றில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீராக!
73:8. உம் இறைவனின் பெயரை நினைவுகூர்ந்து கொண்டிருப்பீராக! மேலும், அனைத்தையும் விட்டு அவனுக்காகவே ஆகிவிடுவீராக!
73:8. மேலும், உமதிரட்சகனின் பெயரை நினைவு கூர்வீராக! (அவனுக்கே வணக்கத்தையும், பிரார்த்தனையையும் ஆக்கி) அவன்பால் முற்றிலும் ஆகிவிடுவீராக!
73:9
73:9 رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيْلًا‏
رَبُّ இறைவன் الْمَشْرِقِ கிழக்கு وَالْمَغْرِبِ இன்னும் மேற்கின் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ அவனைத் தவிர فَاتَّخِذْهُ ஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக! وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
73:9. (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இறைவன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை; ஆகவே அவனையே நீர் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்வீராக.
73:9. அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீர் (உமது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக.
73:9. அவன் கிழக்கு மேற்குத் திசைகளின் அதிபதி ஆவான். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, அவனையே உமக்குப் பொறுப்பேற்பவனாக (வகீல்) ஆக்கிக் கொள்வீராக!
73:9. (அவனே) கிழக்கிற்கும், மேற்கிற்கும் இரட்சகன; அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. ஆகவே, அவனையே நீர் (உமது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்வீராக.
73:10
73:10 وَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيْلًا‏
وَاصْبِرْ இன்னும் சகிப்பீராக! عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் பேசுவதை وَاهْجُرْ இன்னும் விட்டு விடுவீராக! هُمْ அவர்களை هَجْرًا விட்டு விடுதல் جَمِيْلًا‏ அழகிய விதத்தில்
73:10. அன்றியும், அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான - முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.
73:10. (நபியே!) அவர்கள் (உம்மைப்பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக் கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருப்பீராக.
73:10. மேலும், இம்மக்கள் எவற்றையெல்லாம் புனைந்துரைக்கின்றார்களோ அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகிவிடுவீராக!
73:10. அன்றியும், (நபியே!) அவர்கள் (உமக்கெதிராகச்) சொல்வதின் மீது நீர் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், அழகான வெறுப்பாக அவர்களை (அல்லாஹ்வுக்காக) நீர் வெறுத்து விடுவிராக!
73:11
73:11 وَذَرْنِىْ وَالْمُكَذِّبِيْنَ اُولِى النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيْلًا‏
وَذَرْنِىْ என்னையும் விட்டு விடுவீராக! وَالْمُكَذِّبِيْنَ பொய்ப்பித்தவர்களையும் اُولِى النَّعْمَةِ சுகவாசிகளான وَمَهِّلْهُمْ இன்னும் அவர்களுக்கு அவகாசம் தருவீராக ! قَلِيْلًا‏ கொஞ்சம்
73:11. என்னையும், பொய்ப்பிப்வர்களாகிய அந்தச் சுக வாசிகளையும் விட்டுவிடும்; அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
73:11. (நபியே! நீர் அவர்களுக்குச் சிபாரிசு செய்யாது) என்னையும், என்னைப் பொய்யாக்கி வைக்கும் அந்தச் சுகவாசிகளையும் விட்டுவிடுவீராக! அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக.
73:11. பொய்யென வாதிடுபவர்களான இந்த சுகவாசிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவீராக! மேலும், சிறிது காலத்திற்கு இவர்களை இப்படியே விட்டு வைப்பீராக.
73:11. என்னையும், சுகத்தையுடையவர்களான பொய்ப்பிக்கக் கூடியவர்களையும், நீர் விட்டுவிடுவீராக! (நான் ஏற்படுத்திய தவணையை அவர்கள் அடையும்வரை) அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக!
73:12
73:12 اِنَّ لَدَيْنَاۤ اَنْـكَالًا وَّجَحِيْمًا ۙ‏
اِنَّ நிச்சயமாக لَدَيْنَاۤ நம்மிடம் اَنْـكَالًا கை, கால் விலங்குகளும் وَّجَحِيْمًا ۙ‏ சுட்டெரிக்கும்நரகமும்
73:12. நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
73:12. நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்கு கை கால்களில் போடப்படும்) விலங்குகளும் இருக்கின்றன; நரகமும் இருக்கிறது.
73:12. நம்மிடம் (இவர்களுக்காகக்) கனத்த விலங்குகளும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பும்,
73:12. நிச்சயமாக நம்மிடத்தில் (அவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.
73:13
73:13 وَّطَعَامًا ذَا غُصَّةٍ وَّعَذَابًا اَلِيْمًا‏
وَّطَعَامًا ذَا غُصَّةٍ உணவும்/தொண்டையில் சிக்கிக் கொள்ளும் وَّعَذَابًا வேதனையும் اَلِيْمًا‏ வலி தரக்கூடிய
73:13. (தொண்டையில்) விக்கிக் கொள்ளும் உணவும், நோவினை செய்யும் வேதனையும் இருக்கின்றன.
73:13. விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் (அவர்களுக்காக) இருக்கிறது; துன்புறுத்தும் வேதனையும் இருக்கிறது.
73:13. தொண்டையில் சிக்கிக் கொள்ளும் உணவும், துன்புறுத்தும் வேதனையும் உள்ளன.
73:13. இன்னும், (அவர்களுக்குத் தொண்டையில்) விக்கிக் கொள்ளக்கூடிய உணவும் துன்புறுத்தும் வேதனையும் (இருக்கின்றன).
73:14
73:14 يَوْمَ تَرْجُفُ الْاَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيْبًا مَّهِيْلًا‏
يَوْمَ நாளில் تَرْجُفُ குலுங்குகின்ற الْاَرْضُ பூமி(யும்) وَالْجِبَالُ மலைகளும் وَكَانَتِ ஆகிவிடும் الْجِبَالُ மலைகள் كَثِيْبًا மணலாக مَّهِيْلًا‏ தூவப்படுகின்ற
73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
73:14. அந்நாளில், பூமியும் மலைகளும் ஆட்டம் கொடுத்து (ஒன்றோடொன்று மோதி) மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகி விடும்.
73:14. இது நடைபெறும் அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும். மேலும், மலைகள் சரிந்து போகும்; மணற்குவியலைப் போன்றாகிவிடும்.
73:14. பூமியும், மலைகளும் ஆட்டம்கண்டு (அதிலிருப்போரை உலுக்கி,) இன்னும், மலைகள் சிதறுண்ட மண் குவியல்களாகிவிடும் நாளில்-(அவர்களுக்கு நடந்தேறும் வேதனை உண்டு.)
73:15
73:15 اِنَّاۤ اَرْسَلْنَاۤ اِلَيْكُمْ رَسُوْلًا ۙ شَاهِدًا عَلَيْكُمْ كَمَاۤ اَرْسَلْنَاۤ اِلٰى فِرْعَوْنَ رَسُوْلًا ؕ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَاۤ அனுப்பினோம் اِلَيْكُمْ உங்களிடம் رَسُوْلًا ۙ ஒரு தூதரை شَاهِدًا சாட்சி கூறுகின்ற عَلَيْكُمْ உங்களைப் பற்றி كَمَاۤ اَرْسَلْنَاۤ நாம் அனுப்பியது போன்று اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கு رَسُوْلًا ؕ‏ ஒரு தூதரை
73:15. நிச்சயமாக ஃபிர்அவ்னிடம் தூதரை நாம் அனுப்பியது போல், உங்களிடமும், உங்கள் மீது சாட்சி சொல்பவராகிய தூதரை நாம் அனுப்பி வைத்தோம்.
73:15. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் (நமது) தூதர் ஒருவரை அனுப்பி வைத்தோம். (மறுமையில்) அவர் உங்களுக்குச் சாட்சியாக வருவார். இவ்வாறே ஃபிர்அவ்னிடமும் முன்னர் ஒரு தூதரை நாம் அனுப்பிவைத்தோம்.
73:15. திண்ணமாக, நாம் ஒரு தூதரை, உங்களின் மீது சான்று பகரக்கூடியவராக ஆக்கி உங்களிடம் அனுப்பினோம்; ஃபிர்அவ்னிடம் நாம் ஒரு தூதரை அனுப்பியது போன்று!
73:15. ஃபிர் அவ்னின்பால் நாம் ஒரு தூதரை அனுப்பி வைத்தது போன்று, உங்கள் மீது சாட்சியாளராக ஒரு தூதரை உங்களிடம் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.
73:16
73:16 فَعَصٰى فِرْعَوْنُ الرَّسُوْلَ فَاَخَذْنٰهُ اَخْذًا وَّبِيْلًا‏
فَعَصٰى மாறுசெய்தான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் الرَّسُوْلَ அந்த தூதருக்கு فَاَخَذْنٰهُ ஆகவே, நாம் அவனை பிடித்தோம் اَخْذًا பிடியால் وَّبِيْلًا‏ தாங்கிக் கொள்ள முடியாத
73:16. எனினும் ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; எனவே, அவனைக் கடினமான பிடியாக, நாம் பிடித்துக் கொண்டோம்.
73:16. எனினும், ஃபிர்அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான். ஆகவே, நாம் அவனைப் பலமாகப் பிடித்துக் கொண்டோம்.
73:16. (பிறகு, பார்த்துக் கொள்ளுங்கள்:) ஃபிர்அவ்ன் அந்தத் தூதரின் பேச்சை ஏற்காதபோது, நாம் அவனை மிகவும் கடுமையாகப் பிடித்தோம்.
73:16. பின்னர், ஃபிர் அவ்ன் அத்தூதருக்கு மாறு செய்தான்; ஆகவே, கடினமான பிடியாக அவனை நாம் பிடித்துக்கொண்டோம்.
73:17
73:17 فَكَيْفَ تَتَّقُوْنَ اِنْ كَفَرْتُمْ يَوْمًا يَّجْعَلُ الْوِلْدَانَ شِيْبَا  ۖ‏
فَكَيْفَ எப்படி? تَتَّقُوْنَ காத்துக் கொள்வீர்கள் اِنْ كَفَرْتُمْ நீங்கள் நிராகரித்தால் يَوْمًا ஒரு நாளை يَّجْعَلُ ஆக்கிவிடுகின்ற الْوِلْدَانَ பிள்ளைகளை شِيْبَا  ۖ‏ வயோதிகர்களாக
73:17. எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
73:17. நீங்கள் (இதை) நிராகரித்துவிட்டால், எவ்வாறு நீங்கள் (நம் பிடியிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்? (நாம் பிடிக்கின்ற) அந்நாளில் (திடுக்கம்) சிறு குழந்தைகளையும் நரைத்தவர்களாக ஆக்கிவிடும்.
73:17. நீங்கள் நிராகரித்து விட்டால் அந்த நாளில் எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? அதுவோ, குழந்தைகளை நரைக்கச் செய்துவிடும்;
73:17. நீங்கள் நிராகரித்துவிட்டீர்களானால், குழந்தைகளை நரைத்த கிழவர்களாக ஆக்கிவிடும் நாளில், (நம்முடைய பிடியிலிருந்து தப்பித்து உங்களை) நீங்கள் எவ்வாறு காத்துக் கொள்வீர்கள்?
73:18
73:18 اۨلسَّمَآءُ مُنْفَطِرٌ ۢ بِهٖ‌ؕ كَانَ وَعْدُهٗ مَفْعُوْلًا‏
اۨلسَّمَآءُ வானம் مُنْفَطِرٌ ۢ வெடித்து பிளந்து விடும் بِهٖ‌ؕ அதில் كَانَ ஆகும் وَعْدُهٗ அவனுடைய வாக்கு مَفْعُوْلًا‏ நிறைவேறியே
73:18. அதில் வானம் பிளந்து விடும்; அவனுடைய வாக்குறுதி செயல்படுத்தப்படும்.
73:18. (அந்நாளில்) வானம் பிளந்துவிடும்; இது நடந்தே தீரவேண்டிய அவனுடைய வாக்குறுதியாகும்.
73:18. அதன் கடினத்தால் வானம் வெடித் துத் தகர்ந்து போய்விடும். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீர வேண்டியுள்ளது.
73:18. அ(ந்நாளில் நிகழும் பெரும் அமளியான)தன் காரணமாக வானம் வெடித்துப் போய்விடும், அவனுடைய வாக்கு (சந்தேகமின்றி) செயல்படுத்தப்பட்டதாகிவிடும்.
73:19
73:19 اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ‌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا‏
اِنَّ நிச்சயமாக هٰذِهٖ இது تَذْكِرَةٌ ۚ ஓர் அறிவுரையாகும் فَمَنْ ஆகவே, யார் شَآءَ நாடுகின்றாரோ اتَّخَذَ ஏற்படுத்திக் கொள்ளட்டும் اِلٰى رَبِّهٖ தன் இறைவன் பக்கம் سَبِيْلًا‏ ஒரு பாதையை
73:19. நிச்சயமாக இது நினைவூட்டும் நல்லுபதேசமாகும்; ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும் இவ்)வழியை எடுத்துக் கொள்வாராக.  
73:19. நிச்சயமாக இது மிக்க நல்லுபதேசமாகும். ஆகவே, விரும்பியவர் தன் இறைவனிடம் செல்லக்கூடிய (இவ்)வழியை எடுத்துக்கொள்ளவும்.
73:19. திண்ணமாக, இது ஓர் அறிவுரையாகும். எனவே, இனி விரும்புகிறவர் தன்னுடைய இறைவனின் பக்கம் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
73:19. நிச்சயமாக இது ஒரு உபதேசமாகும், ஆகவே, எவர் நாடுகிறாரோ அவர் தன் இரட்சகனின்பால் (செல்லக்கூடிய) வழியை எடுத்துக் கொள்வார்.
73:20
73:20 اِنَّ رَبَّكَ يَعْلَمُ اَنَّكَ تَقُوْمُ اَدْنٰى مِنْ ثُلُثَىِ الَّيْلِ وَ نِصْفَهٗ وَثُلُثَهٗ وَطَآٮِٕفَةٌ مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕ وَاللّٰهُ يُقَدِّرُ الَّيْلَ وَالنَّهَارَ‌ؕ عَلِمَ اَنْ لَّنْ تُحْصُوْهُ فَتَابَ عَلَيْكُمْ‌ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ‌ؕ عَلِمَ اَنْ سَيَكُوْنُ مِنْكُمْ مَّرْضٰى‌ۙ وَاٰخَرُوْنَ يَضْرِبُوْنَ فِى الْاَرْضِ يَبْتَغُوْنَ مِنْ فَضْلِ اللّٰهِ‌ۙ وَاٰخَرُوْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ۖ فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنْهُ‌ ۙ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا‌ ؕ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ هُوَ خَيْرًا وَّاَعْظَمَ اَجْرًا‌ ؕ وَاسْتَغْفِرُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உமது இறைவன் يَعْلَمُ அறிவான் اَنَّكَ நிச்சயமாக நீர் تَقُوْمُ நின்று வணங்குகிறீர் اَدْنٰى குறைவாக مِنْ ثُلُثَىِ மூன்றில் இரண்டு பகுதிகளைவிட الَّيْلِ இரவின் وَ نِصْفَهٗ இன்னும் அதன் பாதி وَثُلُثَهٗ இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி وَطَآٮِٕفَةٌ ஒரு கூட்டமும் مِّنَ الَّذِيْنَ مَعَكَ‌ؕ உம்முடன் இருப்பவர்களில் وَاللّٰهُ அல்லாஹ்தான் يُقَدِّرُ நிர்ணயிக்கின்றான் الَّيْلَ இரவை(யும்) وَالنَّهَارَ‌ؕ பகலையும் عَلِمَ நன்கறிவான் اَنْ لَّنْ تُحْصُوْهُ அதற்கு சக்திபெறவே மாட்டீர்கள் فَتَابَ ஆகவே மன்னித்தான் عَلَيْكُمْ‌ உங்களை فَاقْرَءُوْا ஓதுங்கள்! مَا تَيَسَّرَ இலகுவானதை مِنَ الْقُرْاٰنِ‌ؕ குர்ஆனில் عَلِمَ அறிவான் اَنْ سَيَكُوْنُ இருப்பார்(கள்) مِنْكُمْ உங்களில் مَّرْضٰى‌ۙ நோயாளிகள் وَاٰخَرُوْنَ இன்னும் மற்றும் சிலர் يَضْرِبُوْنَ பயணம் செய்வார்கள் فِى الْاَرْضِ பூமியில் يَبْتَغُوْنَ தேடியவர்களாக مِنْ فَضْلِ அருளை اللّٰهِ‌ۙ அல்லாஹ்வின் وَاٰخَرُوْنَ இன்னும் மற்றும் சிலர் يُقَاتِلُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ ۖ அல்லாஹ்வின் فَاقْرَءُوْا ஆகவே, ஓதுங்கள்! مَا تَيَسَّرَ இலகுவானதை مِنْهُ‌ ۙ அதிலிருந்து وَاَقِيْمُوا இன்னும் நிலை நிறுத்துங்கள்! الصَّلٰوةَ தொழுகையை وَاٰتُوا இன்னும் கொடுங்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَاَقْرِضُوا இன்னும் கடன் கொடுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கு قَرْضًا கடனாக حَسَنًا‌ ؕ அழகிய وَمَا تُقَدِّمُوْا நீங்கள் எதை முற்படுத்துகிறீர்களோ لِاَنْفُسِكُمْ உங்களுக்காக مِّنْ خَيْرٍ நன்மையில் تَجِدُوْهُ அதை பெறுவீர்கள் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் هُوَ அது خَيْرًا மிகச் சிறப்பாகவும் وَّاَعْظَمَ மிகப் பெரியதாகவும் اَجْرًا‌ ؕ கூலியால் وَاسْتَغْفِرُوا இன்னும் பாவமன்னிப்புத் தேடுங்கள் اللّٰهَ ؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
73:20. நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
73:20. (நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்பவர்களில் ஒரு கூட்டத்தினரும், சற்றேறக்குறைய இரவில் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அல்லது மூன்றில் ஒரு பாக நேரம் (தொழுகையில்) நின்று வருகிறீர்கள் என்பதை நிச்சயமாக உமது இறைவன் அறிவான். இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான், இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான். ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள். ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான். ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள். (ஆயினும்) தொழுகையை (தவறவிடாது) சரியாக நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். (ஏழைகளுக்கு உதவுவதன் மூலம்) அல்லாஹ்வுக்கு அழகான முறையில் கடனும் கொடுங்கள். நன்மையான காரியங்களில் எவற்றை நீங்கள் உங்களுக்காக, (உங்கள் மரணத்திற்கு முன்னதாகவே) செய்து வைத்துக் கொண்டீர்களோ அவற்றையே, மேலான நன்மைகளாகவும் மகத்தான கூலியாகவும் நீங்கள் அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
73:20. (நபியே!) உம் இறைவன் அறிந்திருக்கின்றான் ஏறத்தாழ இரவின் மூன்றில் இரண்டு பகுதி வரை, சில சமயம் பாதி இரவு வரை, சிலசமயம் அதன் மூன்றில் ஒரு பகுதி வரை, நீர் இறைவழிபாட்டில் கழிக்கின்றீர் என்பதையும், உம்முடைய தோழர்களிலும் ஒரு குழுவினர் இவ்வாறு செய்து வருகின்றார்கள் என்பதையும்! அல்லாஹ்தான் இரவையும் பகலையும் கணக்கிட்டு வைத்துள்ளான். அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட உங்களால் முடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால், அவன் உங்கள் மீது கருணை புரிந்தான். உங்களுக்கு குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள். உங்களில் சிலர் நோயாளிகளாய் இருப்பார்கள் என்பதும், வேறு சிலர் அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்கின்றார்கள் என்பதும், இன்னும் சிலர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிகின்றார்கள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். எனவே, குர்ஆனிலிருந்து சுலபமாக எந்த அளவுக்கு ஓத முடியுமோ அந்த அளவுக்கு ஓதிக் கொள்ளுங்கள்; தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்தும் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு அழகிய கடனை அளித்து வாருங்கள். நீங்கள் உங்களுக்காக முன்கூட்டியே செய்து அனுப்பும் நன்மைகள் எவையோ அவற்றை அல்லாஹ்விடத்தில் காண்பீர்கள். அதுவே மிகச் சிறந்ததாகும். அதன் கூலியும் மகத்தானதாகும். அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
73:20. (நபியே!) நிச்சயமாக நீரும், உம்மோடு இருப்போரில் ஒரு கூட்டத்தினரும், இரவில் மூன்றில் இரு பாகங்களைவிட மிகக் குறைவாக, இன்னும், அதில் பாதியில், இன்னும், அதில் மூன்றில் ஒருபாக (நேர)த்தில் (இரவுத் தொழுகைக்காக) நிற்கிறீர்கள் என்பதை நிச்சயமாக உமதிரட்சகன் அறிவான்; இன்னும் இரவையும், பகலையும் அல்லாஹ்தான் நிர்ணயம் செய்து (அதன் நேரங்களை அளவாக அமைத்து)ள்ளான்; நீங்கள் அதனை சரிவரக் கணக்கிடவே முடியாதென்பதை அவன் அறிந்துள்ளான்; ஆகவே, உங்களை அவன் மன்னித்துவிட்டான்; எனவே குர் ஆனிலிருந்து (உங்களுக்கு) இயன்றதை ஓதுங்கள்; (ஏனெனில்,) உங்களில் இரவு வணக்கத்தை விட்டும், அனுமதி பெறும் நோயாளிகளும், அல்லாஹ்வின் பேரருளைத் தேடியவர்களாக பூமியில் பிரயாணம் செய்யும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் வேறு சிலரும், இருப்பார்கள் என்பதை அவன் அறிந்துளளான்; ஆகவே, அதிலிருந்து இயன்றதை ஓதுங்கள்; மேலும், தொழுகையை முறையாக நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்; அல்லாஹ்விற்கு அழகான கடனாக கடனும் கொடுங்கள்; மேலும், நன்மையிலிருந்து உங்களுக்காக எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ, அது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததாகவும், (நற்)கூலியில் மிக மகத்தானதாகவும் அதனை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்; அல்லாஹ்விடம் மன்னிப்பும் தேடுங்கள்; நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.