78. ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)
மக்கீ, வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
78:1
78:1 عَمَّ يَتَسَآءَلُوْنَ‌ۚ‏
عَمَّ எதைப் பற்றி يَتَسَآءَلُوْنَ‌ۚ‏ விசாரித்துக் கொள்கிறார்கள்
78:1. எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:1. (நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?
78:1. இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்?
78:1. (நபியே!) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:2
78:2 عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ‏
عَنِ النَّبَاِ செய்தியைப் பற்றி الْعَظِيْمِۙ‏ மகத்தான(து)
78:2. மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:2. மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!
78:2. அந்த மாபெரும் செய்தியைக் குறித்தா?
78:2. மகத்தான அச்செய்தியைப்பற்றி.
78:3
78:3 الَّذِىْ هُمْ فِيْهِ مُخْتَلِفُوْنَؕ‏
الَّذِىْ எது هُمْ அவர்கள் فِيْهِ அதில் مُخْتَلِفُوْنَؕ‏ முரண்பட்டவர்கள்
78:3. எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
78:3. அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
78:3. அதைப்பற்றி இவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
78:3. அ(ம்மகத்தான செய்தியான)து எத்தகையதென்றால் அவர்கள் அதில்(தான்) கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
78:4
78:4 كَلَّا سَيَعْلَمُوْنَۙ‏
كَلَّا அவ்வாறல்ல سَيَعْلَمُوْنَۙ‏ (விரைவில்) அறிவார்கள்
78:4. அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:4. (தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
78:4. ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்து விடும்.
78:4. அவ்வாறல்ல! (அல்லாஹ் - காஃபிர்களை என்ன செய்வான் என்பதை) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
78:5
78:5 ثُمَّ كَلَّا سَيَعْلَمُوْنَ‏
ثُمَّ பிறகு كَلَّا அவ்வாறல்ல سَيَعْلَمُوْنَ‏ (விரைவில்) அறிவார்கள்
78:5. பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:5. பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.
78:5. ஆம்; ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
78:5. பின்னர், அவ்வாறல்ல! (விசுவாசிகள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டதன் பலனை) அறிந்து கொள்வார்கள.
78:6
78:6 اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏
اَلَمْ نَجْعَلِ நாம் ஆக்கவில்லையா الْاَرْضَ பூமியை مِهٰدًا ۙ‏ விரிப்பாக
78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:6. (இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?
78:6. நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா?
78:6. பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7
78:7 وَّالْجِبَالَ اَوْتَادًا ۙ‏
وَّالْجِبَالَ இன்னும் மலைகளை اَوْتَادًا ۙ‏ முளைக்கோல்களாக
78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:7. இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
78:7. மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?
78:7. மலைகளையும் முளைகளாக (நாம் அமைக்கவில்லையா?)
78:8
78:8 وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۙ‏
وَّخَلَقْنٰكُمْ இன்னும் உங்களைப் படைத்தோம் اَزْوَاجًا ۙ‏ ஜோடிகளாக
78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:8. ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
78:8. மேலும், உங்களை (ஆண்பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா?
78:8. இன்னும் உங்களை (ஆண், பெண் கொண்ட) ஜோடிகளாக நாம் படைத்தோம்.
78:9
78:9 وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏
وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் نَوْمَكُمْ உங்கள் நித்திரையை سُبَاتًا ۙ‏ ஓய்வாக
78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:9. நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
78:9. மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா?
78:9. நாம் உங்களுடைய தூக்கத்தை (உங்களுக்கு) இளைப்பாறுதலாகவும் ஆக்கினோம்.
78:10
78:10 وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًا ۙ‏
وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் الَّيْلَ இரவை لِبَاسًا ۙ‏ ஆடையாக
78:10. அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:10. நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
78:10. மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா?
78:10. நாம் இரவை (உங்களுக்கு) ஆடையாகவும் ஆக்கினோம்.
78:11
78:11 وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا‏
وَّجَعَلْنَا இன்னும் ஆக்கினோம் النَّهَارَ பகலை مَعَاشًا‏ வாழ்வாக
78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
78:11. நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.
78:11. மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா?
78:11. நாம் பகலை வாழ்க்கைக்குரிய(வற்றைத் தேடிக்கொள்ளும்) நேரமாக ஆக்கினோம்.
78:12
78:12 وَّبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۙ‏
وَّبَنَيْنَا இன்னும் அமைத்தோம் فَوْقَكُمْ உங்களுக்கு மேல் سَبْعًا ஏழு வானங்களை شِدَادًا ۙ‏ பலமான
78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:12. உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
78:12. மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா?
78:12. உங்களுக்கு மேல் உறுதியான (வானங்கள்) ஏழினை நாமே உண்டாக்கினோம்.
78:13
78:13 وَّ جَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۙ‏
وَّ جَعَلْنَا இன்னும் ஆக்கினோம் سِرَاجًا விளக்கை وَّهَّاجًا ۙ‏ பிரகாசிக்கக்கூடிய
78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:13. அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
78:13. மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா?
78:13. (வெப்பமும் ஒளியும் கலந்த) பிரகாசிக்கும் ஒரு விளக்கையும் (சூரியனை) ஆக்கினோம்.
78:14
78:14 وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۙ‏
وَّاَنْزَلْنَا இன்னும் இறக்கினோம் مِنَ الْمُعْصِرٰتِ கார் மேகங்களிலிருந்து مَآءً (மழை) நீரை ثَجَّاجًا ۙ‏ தொடர்ச்சியாக பொழியக்கூடிய
78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
78:14. கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.
78:14. மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா?
78:14. கார் மேகங்களிலிருந்து அதிகமாகப் பொழியும் (மழை) நீரையும் இறக்கி வைத்தோம்.
78:15
78:15 لِّـنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ‏
لِّـنُخْرِجَ நாம் உற்பத்தி செய்வதற்காக بِهٖ அதன் மூலம் حَبًّا தானியத்தை وَّنَبَاتًا ۙ‏ இன்னும் தாவரத்தை
78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:15. அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.
78:15. தானியங்களையும் தாவரங்களையும் மற்றும்
78:15. அதனைக் கொண்டு தானியத்தையும், தாவரத்தையும் நாம் வெளிப்படுத்துவதற்காக-
78:16
78:16 وَّجَنّٰتٍ اَلْفَافًا ؕ‏
وَّجَنّٰتٍ இன்னும் தோட்டங்களை اَلْفَافًا ؕ‏ அடர்த்தியான
78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
78:16. இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).
78:16. அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக!
78:16. அடர்ந்த மரங்களுள்ள சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக)-
78:17
78:17 اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًا ۙ‏
اِنَّ நிச்சயமாக يَوْمَ الْفَصْلِ தீர்ப்பு நாள் كَانَ இருக்கிறது مِيْقَاتًا ۙ‏ (நேரம்) குறிப்பிடப்பட்ட காலமாக
78:17. நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:17. நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
78:17. திண்ணமாக, தீர்ப்புநாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாய் இருக்கின்றது;
78:17. நிச்சயமாக, தீர்ப்புநாள் நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.
78:18
78:18 يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۙ‏
يَّوْمَ يُنْفَخُ ஊதப் படுகின்ற நாளில் فِى الصُّوْرِ ‘சூர்’ல் فَتَاْتُوْنَ ஆகவே வருவீர்கள் اَفْوَاجًا ۙ‏ கூட்டங்களாக
78:18. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
78:18. (அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
78:18. (சூர்) எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக(க் கிளம்பி) வருவீர்கள்.
78:18. ஸூர் (குழல்) ஊதப்படும் நாளன்று நீங்கள் கூட்டம் கூட்டமாக (கேள்வி கணக்கு நடக்கும் திறந்த வெளிக்கு) வருவீர்கள்.
78:19
78:19 وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۙ‏
وَّفُتِحَتِ இன்னும் திறக்கப்படும் السَّمَآءُ வானம் فَكَانَتْ அது மாறிவிடும் اَبْوَابًا ۙ‏ வழிகளாக
78:19. இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
78:19. வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
78:19. மேலும், வானம் திறந்துவிடப்படும்; இறுதியில் அது வாயில்கள் மயமாகி விடும்!
78:19. வானமும் திறக்கப்பட்டு, பின்னர் பல வாசல்களாக அது ஆகிவிடும்.
78:20
78:20 وَّ سُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ؕ‏
وَّ سُيِّرَتِ இன்னும் அகற்றப்பட்டுவிடும் الْجِبَالُ மலைகள் فَكَانَتْ அது மாறிவிடும் سَرَابًا ؕ‏ கானல் நீராக
78:20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:20. மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.
78:20. மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும். அப்பொழுது அவை கானலாய்ப் போய்விடும்.
78:20. மலைகளும் (இடம்) பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:21
78:21 اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۙ‏
اِنَّ جَهَنَّمَ நிச்சயமாக நரகம் كَانَتْ இருக்கிறது مِرْصَادًا ۙ‏ எதிர் பார்க்கக்கூடியதாக
78:21. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
78:21. நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
78:21. திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது.
78:21. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடமாக உள்ளது-
78:22
78:22 لِّلطّٰغِيْنَ مَاٰبًا ۙ‏
لِّلطّٰغِيْنَ வரம்பு மீறியவர்களை مَاٰبًا ۙ‏ தங்குமிடமாக
78:22. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.
78:22. (பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
78:22. வரம்பு மீறியவர்களுக்கான இருப்பிடமாக உள்ளது.
78:22. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக (ஆவதற்காக)-
78:23
78:23 لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا‌ ۚ‏
لّٰبِثِيْنَ தங்கக்கூடியவர்களாக فِيْهَاۤ அதில் اَحْقَابًا‌ ۚ‏ நீண்ட காலங்கள்
78:23. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
78:23. அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
78:23. அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள்.
78:23. அதில் அவர்கள் பல யுகங்கள் தங்குபவர்களாக இருக்கும் நிலையில்-
78:24
78:24 لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۙ‏
لَا يَذُوْقُوْنَ சுவைக்க மாட்டார்கள் فِيْهَا அதில் بَرْدًا குளிர்ச்சியை وَّلَا இன்னும் இல்லை شَرَابًا ۙ‏ ஒரு பானத்தை
78:24. அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
78:24,25,24. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
78:24. அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள்.
78:24. அதில் அவர்கள் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள்.
78:25
78:25 اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًا ۙ‏
اِلَّا தவிர حَمِيْمًا கொதி நீரை وَّغَسَّاقًا ۙ‏ இன்னும் சீழ் சலத்தை
78:25. கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
78:24,25,25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
78:25. கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர!
78:25. முடிவுறக் காய்ச்சப்பட்ட (கொதி) நீரையும் (நரகவாசிகளின் உடலிலிருந்து வடிந்து கொண்டிருக்கும்) சீழையும் தவிர,
78:26
78:26 جَزَآءً وِّفَاقًا ؕ‏
جَزَآءً கூலியாக وِّفَاقًا ؕ‏ தகுந்த
78:26. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
78:26. இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
78:26. (இவை அவர்களின் இழிசெயல்களுக்கு) ஏற்ற கூலிதான்!
78:26. (இது அவர்கள் செயலுக்கு) ஒத்த கூலியாக
78:27
78:27 اِنَّهُمْ كَانُوْا لَا يَرْجُوْنَ حِسَابًا ۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்காதவர்களாக حِسَابًا ۙ‏ விசாரிக்கப்படுவதை
78:27. நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
78:27. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
78:27. அவர்கள் கேள்விக் கணக்கு கேட்கப்படும் என்பதை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை.
78:27. நிச்சயமாக அவர்கள் (மறுமையின் கேள்வி) கணக்கை நம்பாதவர்களாக இருந்தனர்.
78:28
78:28 وَّكَذَّبُوْا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ‏
وَّكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை كِذَّابًا ؕ‏ அதிகமாகப் பொய்ப்பித்தல்
78:28. அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:28. அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.
78:28. மேலும், அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென முற்றிலும் மறுத்து விட்டிருந்தார்கள்.
78:28. மேலும், நம்முடைய வசனங்களை மிக்க அதிகமாக (முற்றாக) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
78:29
78:29 وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ كِتٰبًا ۙ‏
وَكُلَّ شَىْءٍ இன்னும் எல்லாவற்றையும் اَحْصَيْنٰهُ அவற்றைப் பதிவு செய்தோம் كِتٰبًا ۙ‏ எழுதி
78:29. நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
78:29. எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
78:29. அதே நேரத்தில் நாமோ அவர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி எழுதி வைத்திருந்தோம்.
78:29. ஓவ்வொரு பொருளையும், (அது பற்றி நன்கறிந்து) அதை நாம் பதிவுப் புத்தகத்தில் கணக்கிட்டு) எழுதி வைத்திருக்கிறோம்.
78:30
78:30 فَذُوْقُوْا فَلَنْ نَّزِيْدَكُمْ اِلَّا عَذَابًا‏
فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் فَلَنْ نَّزِيْدَ அதிகப்படுத்தவே மாட்டோம் كُمْ உங்களுக்கு اِلَّا தவிர عَذَابًا‏ வேதனையை
78:30. “ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
78:30. ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).
78:30. “இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.”
78:30. “ஆகவே சுவையுங்கள், வேதனையைத் தவிர (வேறெதனையும்) உங்களுக்கு நாம் அதிகப்படுத்தவே மாட்டோம்” (என்று கூறப்படும்).
78:31
78:31 اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًا ۙ‏
اِنَّ நிச்சயமாக لِلْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு مَفَازًا ۙ‏ வெற்றி
78:31. நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:31. (ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.
78:31. திண்ணமாக, இறையச்சமுள்ளவர்களுக்கு வெற்றியளிக்கும் ஓர் இடம் இருக்கின்றது.
78:31. நிச்சயமாக பயபக்தியுடையோருக்கு (நரகிலிருந்து விடுபட்டு சுவனம் செல்லும்) வெற்றி உண்டு.
78:32
78:32 حَدَآٮِٕقَ وَاَعْنَابًا ۙ‏
حَدَآٮِٕقَ தோட்டங்கள் وَاَعْنَابًا ۙ‏ இன்னும் திராட்சைகள்
78:32. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:32. (அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
78:32. “தோட்டங்களும் திராட்சைகளும்
78:32. தோட்டங்களும், திராட்சைகளும் (உண்டு)
78:33
78:33 وَّكَوَاعِبَ اَتْرَابًا ۙ‏
وَّكَوَاعِبَ இன்னும் மார்பு நிமிர்ந்த கன்னிகள் اَتْرَابًا ۙ‏ சம வயதுடைய(வர்கள்)
78:33. ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:33. (மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
78:33. சமவயதுடைய கன்னிப்பெண்களும்,
78:33. (மனைவிகளாக) மார்பகங்கள் உயர்ந்த சம வயதுடைய கன்னிகைகளும் (இருப்பர்)
78:34
78:34 وَّكَاْسًا دِهَاقًا ؕ‏
وَّكَاْسًا இன்னும் கிண்ணம் دِهَاقًا ؕ‏ நிரம்பிய
78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:34. (பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
78:34. நிறைந்த கிண்ணமும் உள்ளன.
78:34. (மது) பானங்கள் நிறைந்த கிண்ணங்களும் (உண்டு)
78:35
78:35 لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا وَّلَا كِذّٰبًا‌ ۚ‏
لَا يَسْمَعُوْنَ செவியுறமாட்டார்கள் فِيْهَا அதில் لَـغْوًا வீண் பேச்சை وَّلَا كِذّٰبًا‌ ۚ‏ இன்னும் பொய்ப்பிப்பதை
78:35. அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:35. அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
78:35. அங்கு வீணான பேச்சையோ, பொய்யுரையையோ அவர்கள் கேட்க மாட்டார்கள்.
78:35. அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும், (ஒருவரையொருவர்) பொய்யாக்குவதையும் செவியுறமாட்டார்கள்.
78:36
78:36 جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۙ‏
جَزَآءً கூலியாக مِّنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து عَطَآءً கொடையாக حِسَابًا ۙ‏ கணக்கிடப்பட்ட
78:36. (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
78:36. (இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
78:36. இது உம்முடைய அதிபதியிடமிருந்து கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்.
78:36. (இவை) உமது இரட்சகனிடமிருந்து நற்கூலியாக, கணக்கான அன்பளிப்பாக (கொடுக்கப்பட்டுள்ளது)
78:37
78:37 رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ‌ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا‌ ۚ‏
رَّبِّ அதிபதியாகிய السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் الرَّحْمٰنِ‌ பேரருளாளனாகிய لَا மாட்டார்கள் يَمْلِكُوْنَ சக்தி பெற مِنْهُ அவனிடம் خِطَابًا‌ ۚ‏ பேசுவதற்கு
78:37. (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:37. அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.
78:37. வானங்கள் மற்றும் பூமிக்கும் அவற்றிற்கிடைப்பட்ட ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அந்தக் கருணை மிக்க இறைவனிடமிருந்து (கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்). அவனுக்கு முன்னால் பேசுவதற்கு யாருக்கும் திராணி இல்லை.”
78:37. (அவனே) வானங்கள் மற்றும் பூமி இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கும் இரட்சகன்; (அவனே) அளவற்ற அருளாளன்; அவன்முன் அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
78:38
78:38 يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا‌‏
يَوْمَ நாளில் يَقُوْمُ நிற்கின்ற الرُّوْحُ ஜிப்ரீல் وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் صَفًّا ؕۙ வரிசையாக لَّا يَتَكَلَّمُوْنَ பேசமாட்டார்கள் اِلَّا தவிர مَنْ எவர் اَذِنَ அனுமதித்தான் لَهُ அவருக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் وَقَالَ இன்னும் கூறுவார் صَوَابًا‌‏ சரியானதையே
78:38. ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
78:38. ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
78:38. ரூஹும்* வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில் எவரும் பேசமாட்டார்; ஆனால், கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதி கொடுப்பானோ அவரையும், நேர்மையைச் சொல்பவரையும் தவிர!
78:38. (ஜிப்ரீலாகிய) ரூஹும், மலக்குகளும் அணிவகுத்து நிற்கும் நாளில் (மிகக் கிருபையுடையவனாகிய) அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து - இன்னும் சரியானதைக் கூறியிருந்தாரோ அவரைத்தவிர (மற்றெவரும் அவன் முன்) பேசமாட்டார்கள்.
78:39
78:39 ذٰلِكَ الْيَوْمُ الْحَـقُّ‌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا‏
ذٰلِكَ அதுதான் الْيَوْمُ நாள் الْحَـقُّ‌ ۚ உண்மையான فَمَنْ ஆகவே யார் شَآءَ நாடுவாரோ اتَّخَذَ ஆக்கிக்கொள்வார் اِلٰى رَبِّهٖ தம் இறைவனருகில் مَاٰبًا‏ தங்குமிடத்தை
78:39. அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
78:39. இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.
78:39. அந்நாள் (வருவது) உண்மையாகும். எனவே, நாடியவர் தம்முடைய இறைவனின் பக்கம் மீளும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
78:39. (அந்நிகழ்ச்சிகள் நடந்தேறும்) அது சத்தியமான நாளாகும், எனவே எவர் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகனிடம் மீளும் பாதையை எடுத்துக் கொள்வாராக.
78:40
78:40 اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ  يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْذَرْنٰـكُمْ உங்களை எச்சரித்தோம் عَذَابًا ஒரு வேதனையைப் பற்றி قَرِيْبًا ۖۚ  சமீபமான يَّوْمَ நாளில் يَنْظُرُ பார்க்கின்ற الْمَرْءُ மனிதன் مَا قَدَّمَتْ முற்படுத்தியவற்றை يَدٰهُ தனது இரு கரங்கள் وَيَقُوْلُ இன்னும் கூறுவான் الْـكٰفِرُ நிராகரிப்பாளன் يٰلَيْتَنِىْ كُنْتُ நான் ஆகவேண்டுமே تُرٰبًا‏ மண்ணாக
78:40. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
78:40. சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!
78:40. நெருங்கிவிட்டிருக்கும் வேதனை குறித்துத் திண்ணமாக நாம் உங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டோம். அந்நாளில் மனிதன் தன்னுடைய கைகளால் முன்னர் செய்தனுப்பிய அனைத்தையும் காண்பான். நிராகரித்தவனோ புலம்புவான்: “அந்தோ! நான் மண்ணாய் இருந்திருக்கக்கூடாதா?”
78:40. நிச்சயமாக, சமீபித்துவரும் வேதனையைப் பற்றி நாம் உங்களுக்கு எச்சரிக்கிறோம்; (விசுவாசியான) மனிதர் தன் இருகரங்கள் முற்படுத்தியதைக் (கண்கூடாகக்) காணும் நாள்; இன்னும் நிராகரித்தவனோ (அந்நாளில் “நான் மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே” என்று கூறுவான்.