8. ஸூரத்துல் அன்ஃபால்(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
மதனீ, வசனங்கள்: 75

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
8:1
8:1 يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ‌ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ‌ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَيْنِكُمْ‌ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْاَنْفَالِ‌ ؕ அன்ஃபால் பற்றி قُلِ கூறுவீராக الْاَنْفَالُ (போரில் கிடைத்த) வெற்றிப் பொருள்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلِ‌ ۚ இன்னும் தூதருக்கு فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَاَصْلِحُوْا இன்னும் சீர்திருத்தம் செய்யுங்கள் ذَاتَ بَيْنِكُمْ‌ உங்களுக்கு மத்தியில் وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَرَسُوْلَهٗۤ இன்னும் அவனுடைய தூதருக்கு اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
8:1. போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
8:1. (நபியே!) ‘அன்ஃபால்' (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘அன்ஃபால்' அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் எதையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள்.
8:1. (நபியே!) அன் ஃபால் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றார்கள். கூறுவீராக: “அன் ஃபால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியனவாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! மேலும், உங்களுக்கிடையே உள்ள உறவுகளைச் சீராக்கிக் கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.”
8:1. (நபியே!) அன்ஃபால் (போர் முனையில் கிடைத்த வெற்றிப் பொருட்களைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறுவீராக! “அன்ஃபால் அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் உரியதாகும், ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (அதில் யாதொன்றையும் மறைத்துக் கொள்ளாது) உங்களுக்கிடையில் (உங்களுடைய) நிலைகளை சீராக்கிக் கொள்ளுங்கள், நீங்கள் உண்மை விசுவாசிகளாயிருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழப்படிந்து நடந்து கொள்ளுங்கள்.
8:2
8:2 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் எல்லாம் الَّذِيْنَ எவர்கள் اِذَا ذُكِرَ நினைவுகூரப்பட்டால் اللّٰهُ அல்லாஹ்வை وَجِلَتْ நடுங்கும் قُلُوْبُهُمْ உள்ளங்கள்/அவர்களுடைய وَاِذَا تُلِيَتْ இன்னும் ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் முன் اٰيٰتُهٗ வசனங்கள்/அவனுடைய زَادَتْهُمْ அவை அதிகப்படுத்தும்/அவர்களுக்கு اِيْمَانًا இறை நம்பிக்கையை وَّعَلٰى رَبِّهِمْ இன்னும் தங்கள் இறைவன் மீதே يَتَوَكَّلُوْنَ ۖ நம்பிக்கை வைப்பார்கள்
8:2. உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
8:2. உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள்.
8:2. உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் யாரெனில், அல்லாஹ்வின் பெயர் கூறப்படும்போது, அவர்களுடைய உள்ளங்கள் அஞ்சி நடுங்கும்! மேலும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை அதிகமாகிவிடும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள்.
8:2. (உண்மையான) விசுவாசிகள் யாரென்றால், அல்லாஹ் (-அவன் பெயர் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இதயங்கள் பயந்து நடுங்கிவிடும், மேலும், (இவ்வேதத்தை இறக்கி வைத்த) அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவை அவர்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும், அவர்கள் தங்கள் இரட்சகனின் மீது (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பார்கள்.
8:3
8:3 الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَؕ‏
الَّذِيْنَ எவர்கள் يُقِيْمُوْنَ நிலைநிறுத்துவார்கள் الصَّلٰوةَ தொழுகையை وَمِمَّا இன்னும் எதிலிருந்து رَزَقْنٰهُمْ கொடுத்தோம்/அவர்களுக்கு يُنْفِقُوْنَؕ‏ தர்மம் புரிவார்கள்
8:3. அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
8:3. அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
8:3. அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நம்முடைய வழியில்) செலவு செய்வார்கள்.
8:3. அவர்கள் எத்தகையோரென்றால், தொழுகையை நிறைவேற்றுவார்கள், நாம் அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து (தானமாகச்) செலவும் செய்வார்கள்.
8:4
8:4 اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‌ۚ‏
اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் حَقًّا ؕ உண்மையில் لَهُمْ அவர்களுக்கு دَرَجٰتٌ பல பதவிகள் عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் وَمَغْفِرَةٌ இன்னும் மன்னிப்பு وَّرِزْقٌ இன்னும் உணவு كَرِيْمٌ‌ۚ‏ கண்ணியமானது
8:4. இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
8:4. இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு.
8:4. இத்தகையோர்தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உயர்ந்த படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், தவறுகளுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.
8:4. இத்தகையோர்தாம் உண்மையாகவே விசுவாசிகள், அவர்களுக்கு அவர்கள் இரட்சகனிடத்தில் பல உயர் பதவிகளும், மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
8:5
8:5 كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَـقِّ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَـكٰرِهُوْنَۙ‏
كَمَاۤ போன்றே اَخْرَجَكَ வெளியேற்றினான்/உம்மை رَبُّكَ உம் இறைவன் مِنْۢ இருந்து بَيْتِكَ உம் இல்லம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக فَرِيْقًا ஒரு பிரிவினர் مِّنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் لَـكٰرِهُوْنَۙ‏ வெறுப்பவர்களே
8:5. (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
8:5. (நபியே!) உமது இறைவன் உமது இல்லத்திலிருந்து சத்தியத்தைக் கொண்டு உம்மை வெளியேற்றிய சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்முடன் வர) விரும்பாதவாறே,
8:5. (இந்தப் போர்ப் பொருட்கள் விவகாரத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற நிலை, முன்பு ஏற்பட்ட நிலையைப் போன்றே உள்ளது. அப்போது) உம் இறைவன் உம்மைச் சத்தியத்துடன் உம் வீட்டிலிருந்து வெளிக் கொணர்ந்தான். இறைநம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினருக்கு அது வெறுப்பாக இருந்தது.
8:5. (நபியே! யுத்தப் பொருட்கள் பங்கீடு விஷயத்தில் அவர்கள் அதிருப்தியுற்றது) உமதிரட்சகன், உம் இல்லத்திலிருந்து உண்மையைக் கொண்டு உம்மை வெளியேற்றியதை (அவர்கள் விரும்பாததை)ப் போன்றிருக்கிறது, நிச்சயமாக விசுவாசிகளில் ஒரு கூட்டத்தினர், (‘பத்ரு’ யுத்தத்தின்போது உம்முடன் வருவதை) வெறுக்கக்கூடியவர்களாக இருக்க,
8:6
8:6 يُجَادِلُوْنَكَ فِى الْحَـقِّ بَعْدَ مَا تَبَيَّنَ كَاَنَّمَا يُسَاقُوْنَ اِلَى الْمَوْتِ وَهُمْ يَنْظُرُوْنَؕ‏
يُجَادِلُوْنَكَ தர்க்கிக்கின்றனர்/உம்முடன் فِى الْحَـقِّ உண்மையில் بَعْدَ பின்னர் مَا تَبَيَّنَ தெளிவானது كَاَنَّمَا போன்று يُسَاقُوْنَ ஓட்டிச் செல்லப்படுகிறார்கள் اِلَى பக்கம் الْمَوْتِ மரணம் وَهُمْ அவர்கள் இருக்க يَنْظُرُوْنَؕ‏ பார்ப்பவர்களாக
8:6. அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
8:6. (போர் செய்வது அவசியம் என) அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பின்னரும் இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் தர்க்கிக்கின்றனர். தங்கள் கண்களால் காணும் மரணத்தின் பக்கமே அவர்கள் ஓட்டிச் செல்லப்படுகின்றனர் போலும்!
8:6. அவர்கள் சத்தியம் தெளிவாகி விட்ட பின்னரும் அது குறித்து உம்மிடம் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுடைய நிலைமை, கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மரணத்தின் பக்கமாக இழுத்துச் செல்லப்படுவது போன்று இருந்தது.
8:6. (யுத்தம் செய்வது அவசியம் என அவர்களுக்குத்) தெளிவான பின்னர்), தாங்கள் (கண்ணால் மரணத்தைப்)பார்த்துக் கொண்டிருக்க (யாரோ ஒருவரால்) மரணத்தின்பால் அவர்கள் இழுத்துச் செல்லப்படுபவர்களைப் போன்று இவ்வுண்மை விஷயத்திலும் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்.
8:7
8:7 وَاِذْ يَعِدُكُمُ اللّٰهُ اِحْدَى الطَّآٮِٕفَتَيْنِ اَنَّهَا لَـكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَـكُمْ وَيُرِيْدُ اللّٰهُ اَنْ يُّحِقَّ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَيَقْطَعَ دَابِرَ الْـكٰفِرِيْنَۙ‏
وَاِذْ சமயம் يَعِدُكُمُ வாக்களித்தான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் اِحْدَى ஒன்றை الطَّآٮِٕفَتَيْنِ இரு கூட்டங்களில் اَنَّهَا நிச்சயம் அது لَـكُمْ உங்களுக்கு وَتَوَدُّوْنَ விரும்பினீர்கள் اَنَّ நிச்சயமாக غَيْرَ அல்லாதது ذَاتِ உடையது الشَّوْكَةِ ஆயுதம் (பலம்) تَكُوْنُ ஆகவேண்டும் لَـكُمْ உங்களுக்கு وَيُرِيْدُ இன்னும் நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّحِقَّ உண்மைப்படுத்த الْحَـقَّ உண்மையை بِكَلِمٰتِهٖ தன் வாக்குகளைக் கொண்டு وَيَقْطَعَ இன்னும் துண்டித்துவிட دَابِرَ வேரை الْـكٰفِرِيْنَۙ‏ நிராகரிப்பவர்கள்
8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
8:7. (எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்று, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்து விடுமென்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தில் நீங்கள் (அவ்விரண்டில்) பலமில்லாத (வர்த்தகக்) கூட்டத்தை (அடைய) விரும்பினீர்கள். எனினும், அல்லாஹ்வோ தன் வாக்கின்படி உண்மையை நிலைநாட்டி நிராகரிப்பவர்களின் வேரை அறுத்து விடவே நாடினான்.
8:7. மேலும், இதனையும் நினைத்துப் பாருங்கள்; “இரு கூட்டத்தாரில் ஒரு கூட்டம் நிச்சயம் உங்கள் கைக்குக் கிடைத்து விடுவர்” என்று அல்லாஹ் உங்களிடம் வாக்குறுதி அளித்தான். ஆனால், நிராயுதபாணிகளான கூட்டத்தினர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் வாக்குகளால் சத்தியத்தை சத்தியம் என்று காட்டவும், நிராகரிப்பாளர்களை வேரறுக்கவுமே நாடியிருந்தான்.
8:7. மேலும், (விரோதிகளின் இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒன்றை- நிச்சயமாக அது உங்களுக்குத்தான் என அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை-(நினைவு கூருங்கள், அவ்விரண்டில்) நிச்சயமாக ஆயுதமில்லாத (வர்த்தகக் கூட்டமான)து உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள், இன்னும் அல்லாஹ்வோ, தன் வாக்குகளின் மூலம் உண்மையை நிலைநாட்டவும், நிராகரிப்போரை வேரறுத்துவிடவும் நாடுகிறான்.
8:8
8:8 لِيُحِقَّ الْحَـقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ‌ۚ‏
لِيُحِقَّ அவன் உண்மைப்படுத்த الْحَـقَّ உண்மையை وَيُبْطِلَ இன்னும் அழித்துவிட, பெய்ப்பித்து விட الْبَاطِلَ பொய்யை وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் الْمُجْرِمُوْنَ‌ۚ‏ பாவிகள், குற்றவாளிகள்
8:8. மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
8:8. பாவிகள் வெறுத்தபோதிலும் இறுதியில் பொய்யை அழித்து உண்மையை நிலை நாட்(டவே நா)டினான்.
8:8. ஏனெனில், சத்தியம் சத்தியம்தான் என்றும், அசத்தியம் அசத்தியம்தான் என்றும் தெளிவாக்கிட வேண்டும் என்பதற்காக! குற்றவாளிகள் (இதனை எவ்வளவு) வெறுத்தாலும் சரியே!
8:8. குற்றவாளிகள் வெறுத்த போதிலும் அவன் உண்மையை நிலைநாட்டி விட மற்றும் பொய்யை அவன் அழித்துவிடவுமே (நாடுகிறான்.)
8:9
8:9 اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏
اِذْ சமயம் تَسْتَغِيْثُوْنَ நீங்கள் பாதுகாப்புத் தேடுகிறீர்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனிடம் فَاسْتَجَابَ பதிலளித்தான் لَـكُمْ உங்களுக்கு اَنِّىْ நிச்சயமாக நான் مُمِدُّ உதவுவேன் كُمْ உங்களுக்கு بِاَلْفٍ ஆயிரத்தைக்கொண்டு مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களில் مُرْدِفِيْنَ‏ தொடர்ந்து வரக்கூடியவர்கள்
8:9. (நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
8:9. (உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள் இறைவனிடம் கோரியபோது ‘‘அணியணியாக உங்களைப் பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்'' என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.
8:9. உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள்; அப்போது அவன் பதிலளித்தான்; “ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, திண்ணமாக உங்களுக்கு நான் உதவி செய்வேன்.”
8:9. நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடியபோது “(அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக் கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
8:10
8:10 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى وَلِتَطْمَٮِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ‌ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
وَمَا இல்லை جَعَلَهُ அதை ஆக்க اللّٰهُ அல்லாஹ் اِلَّا தவிர بُشْرٰى ஒரு நற்செய்தியாக وَلِتَطْمَٮِٕنَّ இன்னும் நிம்மதி பெறுவதற்காக بِهٖ அதன் மூலம் قُلُوْبُكُمْ‌ۚ உங்கள் உள்ளங்கள் وَمَا இல்லை النَّصْرُ உதவி اِلَّا தவிர مِنْ இருந்தே عِنْدِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:10. உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  
8:10. உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் திருப்தியடைவதற்காக ஒரு நற்செய்தியாகவே இதை அல்லாஹ் (உங்களுக்கு) ஆக்கி வைத்தான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) இவ்வுதவி கிடைத்து விடவில்லை. நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன் ஞானமுடையவன் ஆவான்.
8:10. அல்லாஹ் இதனை அறிவித்தது, உங்களுக்கு ஒரு நற் செய்தியாகவும், இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதியடைவதற்காகவுமே! தவிர, வெற்றி என்றைக்கும் அல்லாஹ்விடமிருந்துதான் ஏற்படுகிறது! நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவாளனுமாவான்.
8:10. (உங்களுக்கு) நன்மாராயமாகவும், அதனால் உங்கள் இதயங்கள் அமைதி பெறுவதற்காகவுமே தவிர அதை அல்லாஹ் ஆக்கவில்லை, இன்னும், உதவி அல்லாஹ்விடமிருந்தே தவிர இல்லை, நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
8:11
8:11 اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَؕ‏
اِذْ சமயம் يُغَشِّيْكُمُ சூழவைக்கிறான்/உங்கள் மீது النُّعَاسَ சிறு தூக்கத்தை اَمَنَةً அச்சமற்றிருப்பதற்காக مِّنْهُ தன் புறத்திலிருந்து وَيُنَزِّلُ இன்னும் இறக்குகிறான் عَلَيْكُمْ உங்கள் மீது مِّنَ இருந்து السَّمَآءِ வானம்,மேகம் مَآءً நீரை, மழையை لِّيُطَهِّرَ அவன் சுத்தப்படுத்துவற்காக كُمْ உங்களை بِهٖ அதன் மூலம் وَيُذْهِبَ இன்னும் அவன் போக்குவதற்காக عَنْكُمْ உங்களை விட்டு رِجْزَ அசுத்தத்தை الشَّيْطٰنِ ஷைத்தானுடைய وَلِيَرْبِطَ இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக عَلٰى قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களை وَيُثَبِّتَ இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக بِهِ அதன் மூலம் الْاَقْدَامَؕ‏ பாதங்களை
8:11. (நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
8:11. (நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந்தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களை சூழ்ந்து கொள்ளும்படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான்.
8:11. இதையும் நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான்.
8:11. (விசுவாசிகளே! உங்கள் மனம் மிகக் கூடுதலான எதிரிகளைக் கண்டு பயப்படாது) அபயம் பெறுவதற்காக அவனிடமிருந்து உங்களுக்கு சிறிய தூக்கத்தை அவன் போட்டான் என்பதை-(நினைத்துப் பார்ப்பீர்களாக! அது சமயம்) உங்களை அதைக்கொண்டு தூய்மைப் படுத்துவதற்காகவும் உங்களைவிட்டு ஷைத்தானுடைய அச்சத்தை தீய ஊசாட்டத்தை)ப் போக்கிவிடுவதற்காகவும், உங்கள் இதயங்களைப் பலப்படுத்தி, அதைக்கொண்டு உங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவதற்காகவும், அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான்.
8:12
8:12 اِذْ يُوْحِىْ رَبُّكَ اِلَى الْمَلٰۤٮِٕكَةِ اَنِّىْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِيْنَ اٰمَنُوْا‌ ؕ سَاُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍؕ‏
اِذْ சமயம் يُوْحِىْ வஹீ அறிவிக்கிறான் رَبُّكَ உம் இறைவன் اِلَى الْمَلٰۤٮِٕكَةِ வானவர்களுக்கு اَنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் فَثَبِّتُوا ஆகவே உறுதிப்படுத்துங்கள் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا‌ ؕ நம்பிக்கை கொண்டார்கள் سَاُلْقِىْ போடுவேன் فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوا நிராகரித்தனர் الرُّعْبَ திகிலை فَاضْرِبُوْا ஆகவே நீங்கள் வெட்டுங்கள் فَوْقَ மேல் الْاَعْنَاقِ கழுத்துகள் وَاضْرِبُوْا இன்னும் வெட்டுங்கள் مِنْهُمْ அவர்களின் كُلَّ بَنَانٍؕ‏ எல்லா கணுக்களை
8:12. (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
8:12. (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே, நீங்கள் நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; (என்று கட்டளையிட்டு) நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் நான் திகிலை உண்டு பண்ணுவேன் (என்று கூறி, நம்பிக்கையாளர்களை நோக்கி) நீங்கள் அவர்களுடைய பிடரிகளின் மேல் வெட்டுங்கள். அவர்களை கணுக்கணுவாகத் துண்டித்து விடுங்கள்'' என்று அறிவித்ததை நினைத்துப் பாருங்கள்.
8:12. இதனையும் நினைவுகூருங்கள்: உம் இறைவன் வானவர்களிடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: “நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள்! இதோ! நிராகரிப் பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள்; அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்!”
8:12. (நபியே!) உமதிரட்சகன் மலக்குகளின்பால், “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன், ஆகவே, நீங்கள் விசுவாசங்கொண்டோரை உறுதிப்படுத்துங்கள் (என்று கட்டளையிட்டு) நிராகரிப்போருடைய இதயங்களில் திகிலை நான் போட்டு விடுவேன், ஆகவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள், அவர்களின் (உடலில் உள்ள உறுப்புக்களின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள்” என்று (விசுவாசிகளுக்குக் கூறுமாறு வஹீமூலம்) அறிவித்ததை நினைத்துப் பார்ப்பீராக!
8:13
8:13 ذٰ لِكَ بِاَنَّهُمْ شَآ قُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ۚ وَمَنْ يُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
ذٰ لِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் شَآ قُّوا பிளவுபட்டனர், முரண்பட்டனர் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ‌ ۚ இன்னும் அவனுடைய தூதருக்கு وَمَنْ எவர் يُّشَاقِقِ பிளவுபடுகிறார் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:13. இதற்கு காரணம்: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
8:13. இதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். ஆகவே, எவரேனும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மிகக் கடுமையாகவே வேதனை செய்வான்.
8:13. இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்ததுதான்! மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கின்றார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான்.
8:13. அது நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர் என்ற காரணத்தினாலாகும், இன்னும், எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முரண்படுகிறாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) தண்டனை செய்வதில் மிகக் கடினமானவன்.
8:14
8:14 ذٰ لِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِيْنَ عَذَابَ النَّارِ‏
ذٰ لِكُمْ அது فَذُوْقُوْهُ அதை சுவையுங்கள் وَاَنَّ நிச்சயமாக لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு عَذَابَ வேதனை النَّارِ‏ நரகம்
8:14. “இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு” என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
8:14. (நிராகரிப்பவர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். அன்றி (உங்களைப் போன்ற) நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையும் உண்டு.
8:14. “இதுதான் உங்களுக்குரிய தண்டனை. இப்பொழுது இதனைச் சுவையுங்கள்!” மேலும், சத்தியத்தை நிராகரிப்பவர்களுக்குத் திண்ணமாக நரக வேதனை இருக்கிறது (என்பதனை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்).
8:14. (“நிராகரிப்போர்களே! நீங்கள் அடையப்போகும் வேதனை) இதோ! இதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள், (உங்களைப் போன்ற) நிராகரிப்போர்க்கு (மறுமையில்) நிச்சயமாக நரக வேதனையுமுண்டு” (என்று கூறப்படும்).
8:15
8:15 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ‌ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا لَقِيْتُمُ நீங்கள் சந்தித்தால் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் زَحْفًا பெரும் படையாக فَلَا تُوَلُّوْ திருப்பாதீர்கள் هُمُ அவர்களுக்கு الْاَدْبَارَ‌ۚ‏ பின்புறங்களை
8:15. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
8:15. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களின் படையைச் சந்தித்தால் அவர்களுக்குப் புறங்காட்(டி ஓடிவி)டாதீர்கள்.
8:15. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறைநிராகரிப்பாளர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்!
8:15. விசுவாசங்கொண்டோரே! போர்முனையில் போரிட இரு அணியும் நெருங்கி நிற்கும்போது காஃபிர்களை நீங்கள் சந்தித்தால், நீங்கள் அவர்களுக்குப் புறமுதுகுகளைக் காட்டி ஓடி விடாதீர்கள்.
8:16
8:16 وَمَنْ يُّوَلِّهِمْ يَوْمَٮِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَيِّزًا اِلٰى فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰٮهُ جَهَـنَّمُ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
وَمَنْ எவர் يُّوَلِّهِمْ திருப்புவார்/அவர்களுக்கு يَوْمَٮِٕذٍ அந்நாளில் دُبُرَهٗۤ தன் பின் புறத்தை اِلَّا அல்லாமல் مُتَحَرِّفًا ஒதுங்கக்கூடியவராக لِّقِتَالٍ சண்டையிடுவதற்கு اَوْ அல்லது مُتَحَيِّزًا சேர்ந்து கொள்பவராக اِلٰى فِئَةٍ ஒரு கூட்டத்துடன் فَقَدْ بَآءَ சார்ந்துவிட்டார் بِغَضَبٍ கோபத்தில் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَمَاْوٰٮهُ இன்னும் அவருடைய தங்குமிடம் جَهَـنَّمُ‌ؕ நரகம் وَبِئْسَ இன்னும் கெட்டு விட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடத்தால்
8:16. (எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
8:16. (எதிரியை) வெட்டுவதற்காகவோ அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அதுசமயம் புறங்காட்(டி ஓ)டினால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுடைய கோபத்திற்குள்ளாகி விடுவான். அவன் தங்குமிடம் நரகம்தான்; அது மிகக்கெட்ட தங்குமிடம்.
8:16. அந்நாளில் யாரேனும் புறமுதுகு காட்டி ஓடினால் போர்த் தந்திரத்திற்காகவோ, வேறொரு படையுடன் சேர்ந்து கொள்வதற்காகவோ செல்பவரைத் தவிர மற்றவர்கள் திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவர். மேலும், அவர்களுடைய புகலிடம் நரகமாகும். அது மோசமான இருப்பிடமாகும்.
8:16. போருக்காக(ப் பின்சென்று தாக்குவதன் நிமித்தம்) ஒதுங்கக் கூடியவரையும், அல்லது (தன்) கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளக்கூடியவரையும் அன்றி, எவரேனும் அது சமயம் புறமுதுகிட்டுச் சென்றால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வுடைய கோபத்தைக் கொண்டு மீண்டு விட்டார், அவர் ஒதுங்குமிடமும் நரகமாகும், இன்னும் சென்றடையும் இடத்தில் அது மிகக் கெட்டது.
8:17
8:17 فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى‌ ۚ وَلِيُبْلِىَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏
فَلَمْ تَقْتُلُوْ நீங்கள் கொல்லவில்லை هُمْ அவர்களை وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَتَلَهُمْ கொன்றான்/அவர்களை وَمَا رَمَيْتَ நீர் எறியவில்லை اِذْ போது رَمَيْتَ எறிந்தீர் وَ لٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ رَمٰى‌ ۚ அல்லாஹ்/எறிந்தான் وَلِيُبْلِىَ இன்னும் அவன் சோதிப்பதற்காக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை مِنْهُ அதன் மூலம் بَلَاۤءً சோதனையாக حَسَنًا‌ ؕ அழகிய اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
8:17. (பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:17. (நம்பிக்கையாளர்களே! போர் புரிந்த சமயம்) நீங்கள் அவர்களைக் கொன்று விடவில்லை; அல்லாஹ்தான் அவர்களை கொன்றான். (நபியே! எதிரிகளின் மீது) நீங்கள் (மண்ணை) எறிந்தபோது (அதை) நீங்கள் எறியவில்லை; அல்லாஹ்தான் (அதை) எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்.
8:17. உண்மை யாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்! மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது உண்மையில் எறிந்தது நீரல்லர். மாறாக, அல்லாஹ்தான் எறிந்தான். மேலும், (இறை நம்பிக்கையாளர்களை இதில் பங்கேற்கச் செய்தது எதற்காகவெனில், அல்லாஹ் நம்பிக்கையாளர்களை நன்மை தரக்கூடிய சோதனையில் ஆழ்த்தி வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:17. (விசுவாசிகளே!) பத்ருப் போரில் எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொல்லவில்லை, எனினும், அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான், (நபியே! விரோதிகளின் மீது) நீர் (மண்ணை) எறிந்தபோது (அதனை) நீர் எறியவில்லை, எனினும், அல்லாஹ்தான் (உம்மூலம் அதனை) எறிந்தான், (அதன்மூலம்) அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக (இவ்வாறு அல்லாஹ் செய்தான்) நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
8:18
8:18 ذٰ لِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَيْدِ الْـكٰفِرِيْنَ‏
ذٰ لِكُمْ அவை وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مُوْهِنُ பலவீனப்படுத்துபவன் كَيْدِ சூழ்ச்சியை الْـكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களின்
8:18. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
8:18. நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை (இழிவுபடுத்தி) பலவீனப்படுத்துவதற்காகவே நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு செய்தான்.
8:18. இது உங்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையாகும். ஆனால் நிராகரிப்பாளர் (களின் நிலை யாதெனில் அவர்)களின் சதித்திட்டங்களைத் திண்ணமாக, அல்லாஹ் பலவீனப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றான்.
8:18. (இணை வைப்பவர்கள் கொல்லப்பட்டு முஸ்லிம்கள் வெற்றியடைந்த) அது (அல்லாஹ்விடமிருந்தாகும்.) இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை பலவீனப்படுத்தக்கூடியவன்.
8:19
8:19 اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ‌ۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَيْرٌ لَّـكُمْ‌ۚ وَ اِنْ تَعُوْدُوْا نَـعُدْ‌ۚ وَلَنْ تُغْنِىَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْـٴًـــا وَّلَوْ كَثُرَتْۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِيْنَ‏
اِنْ تَسْتَفْتِحُوْا நீங்கள் தீர்ப்புத் தேடினால் فَقَدْ جَآءَ வந்துவிட்டது كُمُ உங்களுக்கு الْفَتْحُ‌ۚ தீர்ப்பு وَاِنْ تَنْتَهُوْا நீங்கள் விலகினால் فَهُوَ خَيْرٌ அது சிறந்தது لَّـكُمْ‌ۚ உங்களுக்கு وَ اِنْ تَعُوْدُوْا நீங்கள் திரும்பினால் نَـعُدْ‌ۚ திரும்புவோம் وَلَنْ تُغْنِىَ பலனளிக்காது عَنْكُمْ உங்களுக்கு فِئَتُكُمْ உங்கள் கூட்டம் شَيْـٴًـــا எதையும் وَّلَوْ كَثُرَتْۙ அது அதிகமாக இருந்தாலும் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَعَ உடன் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
8:19. (நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).  
8:19. (நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
8:19. (இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறுவீராக) “நீங்கள் ஒரு முடிவை விரும்புகின்றீர்கள் என்றால், இதோ! அந்த முடிவு உங்கள் முன் வந்துவிட்டது. இனி நீங்கள் தவறான போக்கைத் தவிர்த்துக் கொண்டால், அது உங்களுக்கு நல்லதாகும். (அறிவற்ற இதே செயலின் பக்கம்) நீங்கள் மீண்டும் திரும்பினால், நாமும் மீண்டும் தண்டிப்போம். உங்களுடைய கூட்டம் எவ்வளவு அதிகமாயினும் சரியே, அது உங்களுக்கு யாதொரு பலனையும் அளிக்காது. திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கின்றான்.”
8:19. நீங்கள் தீர்ப்பைத் தேடக் கூடியவர்களாக இருந்தால் (இதோ அது பற்றிய) தீர்ப்பு உங்களிடம் திட்டமாக வந்துவிட்டது, இன்னும் நீங்கள் போர் செய்வதை விட்டும்) விலகிக்கொண்டால், அது உங்களுக்கே நன்று, இன்னும் நீங்கள் (போர் செய்யத்) திரும்பினால் (உதவியை நல்க) நாமும் திரும்புவோம், உங்களுடைய கூட்டம் (படை) அது எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் (அது) உங்களுக்கு யாதொரு பலனையும் ஒருபோதும் அளிக்காது, மேலும், நிச்சயமாக அல்லாஹ், விசுவாசிகளுடன் இருக்கின்றான்.
8:20
8:20 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْـتُمْ تَسْمَعُوْنَ‌ ۖ‌ ۚ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு وَلَا تَوَلَّوْا விலகாதீர்கள் عَنْهُ அவரை விட்டு وَاَنْـتُمْ நீங்கள் இருக்க تَسْمَعُوْنَ‌ ۚ‏ செவிமடுப்பவர்களாக
8:20. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.
8:20. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்.
8:20. இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! மேலும் (கட்டளையைச்) செவியேற்ற பின் அதைப் புறக்கணிக்காதீர்கள்;
8:20. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள், நீங்கள் (அவருடைய போதனைகளைச் செவியுற்றுக் கொண்டிருக்கும் பொழுது) அவருடைய கட்டளைக்கு மாறு செய்து அவரைவிட்டும் திரும்பிவிடாதீர்கள்.
8:21
8:21 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُوْنَ‌‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்களைப் போல் قَالُوْا கூறினர் سَمِعْنَا செவியுற்றோம் وَهُمْ அவர்கள் இருக்க لَا يَسْمَعُوْنَ‌‏ செவியேற்காதவர்களாக
8:21. (மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
8:21. (நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது ‘‘செவியுற்றோம்'' என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
8:21. மேலும், செவியேற்காமல் இருந்து கொண்டு “நாங்கள் செவியேற்றோம்” என்று கூறியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்!
8:21. “நாங்கள் செவியுற்றோம்” என்று (வாயால் மட்டும்) கூறி (உண்மையாகச்), செவியேற்காமல் இருந்தவர்களைப்போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்.
8:22
8:22 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏
اِنَّ நிச்சயமாக شَرَّ மிகக் கொடூரமானவர்(கள்) الدَّوَآبِّ ஊர்வனவற்றில் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الصُّمُّ செவிடர்கள் الْبُكْمُ ஊமைகளான الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏ எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்
8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான்.
8:22. திண்ணமாக சிந்தித்து உணராத செவிடர்களும், ஊமையர்களும்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் இழிவான விலங்குகளாவர்.
8:22. அல்லாஹ்விடம் நிச்சயமாக (பூமியில்) ஊர்ந்து திரிபவைகளில் மிகக்கெட்டவை (உண்மையை) விளங்கிக் கொள்ளாதவர்களான செவிடர்களும் ஊமையர்களுமேயாவர்.
8:23
8:23 وَلَوْ عَلِمَ اللّٰهُ فِيْهِمْ خَيْرًا لَّاَسْمَعَهُمْ‌ؕ وَلَوْ اَسْمَعَهُمْ لَـتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ‏
وَلَوْ عَلِمَ அறிந்திருந்தால் اللّٰهُ அல்லாஹ் فِيْهِمْ அவர்களிடம் خَيْرًا ஒரு நன்மையை لَّاَسْمَعَهُمْ‌ؕ செவியுறச் செய்திருப்பான்/அவர்களை وَلَوْ اَسْمَعَهُمْ அவன் அவர்களை செவியுறச் செய்தாலும் لَـتَوَلَّوْا விலகி இருப்பார்கள் وَّهُمْ அவர்கள் இருக்க مُّعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்களாக
8:23. அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
8:23. அவர்களிடம் ஒரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் ஒரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள்.
8:23. அவர்களிடம் கொஞ்சமேனும் நல்லியல்பு இருப்பதாக அல்லாஹ் அறிந்திருந்தால், நிச்சயம் அவர்களுக்குச் செவியுறும் பேற்றினை அருளியிருப்பான். ஆனால் (நல்லியல்பற்றவர்களாய் இருந்தும்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்திருந்தால் புறக்கணித்தவர்களாய் முகம் திருப்பிக் கொண்டு போயிருப்பார்கள்!
8:23. அவர்களிடம் ஏதேனும் நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவிமடுக்கச் செய்திருப்பான், (அவர்களிடம் யாதொரு நன்மையும் இல்லாதனால்) அவன் அவர்களைச் செவிமடுக்கச் செய்திருந்தபோதிலும் (அதனைப்)புறக்கணித்தவர்களாகவே அவர்கள் திரும்பிவிடுவார்கள்.
8:24
8:24 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْ‌ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கையாளர்களே اسْتَجِيْبُوْا பதிலளியுங்கள் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு وَلِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு اِذَا دَعَا அழைத்தால் كُمْ உங்களை لِمَا எதற்கு يُحْيِيْكُمْ‌ۚ வாழவைக்கும்/உங்களை وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَحُوْلُ தடையாகிறான் بَيْنَ நடுவில் الْمَرْءِ மனிதனுக்கு وَقَلْبِهٖ இன்னும் அவனுடைய உள்ளத்திற்கு وَاَنَّهٗۤ இன்னும் நிச்சயமாக நீங்கள் اِلَيْهِ அவனிடமே تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
8:24. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
8:24. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
8:24. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு வாழ்வு அளிக்கக்கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்! அல்லாஹ், மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான் என்பதையும், திண்ணமாக அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
8:24. விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் - உங்களை வாழ வைப்பதன்பால் (அல்லாஹ்வின் தூதராகிய) அவர் உங்களை அழைத்தால் பதில் அளியுங்கள், நிச்சயமாக அல்லாஹ், மனிதனுக்கும், அவனுடைய இதயத்திற்கும் மத்தியில் சூழ்ந்து (செயலாற்றிக் கொண்டு) இருக்கிறான், (ஆகவே, மனிதன் எதையும் அல்லாஹ்வின் அருளின்றி செய்யும் ஆற்றல் பெறமாட்டான்) என்பதையும், நிச்சயமாக அவனின் பாலே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
8:25
8:25 وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً‌ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
وَاتَّقُوْا அஞ்சுங்கள் فِتْنَةً ஒரு வேதனையை لَّا تُصِيْبَنَّ அடையாது الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களை مِنْكُمْ உங்களில் خَآصَّةً‌ ۚ மட்டுமே وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:25. நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
8:25. நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
8:25. மேலும் எந்த ஃபித்னாவின் குழப்பத்தின் தீய விளைவு உங்களில் பாவம் புரிந்தவர்களைத் தாக்குவதுடன் மட்டும் நின்றுவிடாதோ அந்தக் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! மேலும், திண்ணமாக அல்லாஹ் கடுமையாக தண்டனை அளிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
8:25. மேலும், உங்களில் அநியாயம் செய்தோரை மட்டுமே குறிப்பாகப் பிடிக்காத வேதனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அதனால் ஏற்படும் விளைவு உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
8:26
8:26 وَاذْكُرُوْۤا اِذْ اَنْـتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰٮكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ (இருந்த) சமயத்தை اَنْـتُمْ நீங்கள் قَلِيْلٌ குறைவானவர்களாக مُّسْتَضْعَفُوْنَ பலவீனர்களாக فِى الْاَرْضِ பூமியில் تَخَافُوْنَ பயந்தவர்களாக اَنْ உங்களை يَّتَخَطَّفَكُمُ தாக்கிவிடுவதை النَّاسُ மக்கள் فَاٰوٰٮكُمْ அவன் இடமளித்தான்/உங்களுக்கு وَاَيَّدَكُمْ பலப்படுத்தினான்/உங்களை بِنَصْرِهٖ தன் உதவியைக் கொண்டு وَرَزَقَكُمْ உணவளித்தான்/உங்களுக்கு مِّنَ الطَّيِّبٰتِ நல்ல உணவுகளில் لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
8:26. “நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”
8:26. நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
8:26. மேலும், இந்த சந்தர்ப்பத்தை நினைத்துப் பாருங்கள்: நீங்கள் சிறுபான்மையோராய் இருந்தீர்கள்; பூமியில் வலிமையற்றவர்களாய்க் கருதப்பட்டீர்கள்; பிற மக்கள் உங்களை இறாஞ்சிச் சென்று விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சிக் கொண்டிருந்தீர்கள். அப்போது, அல்லாஹ் உங்களுக்கு தஞ்சம் அளித்தான். தனது உதவியின் மூலம் உங்களுடைய கைகளை வலுப்படுத்தினான். மேலும், அவன் நல்ல பொருள்களிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான்; நீங்கள் நன்றி செலுத்தக் கூடும் என்பதற்காக!
8:26. நீங்கள் (மக்காவெனும்) பூமியில் பலவீனமான மிகச் சிறுபான்மையினராக இருந்து உங்களை எம்மனிதரும், (எந்நேரத்திலும் பலவந்தமாக) இறாய்ஞ்சிக்கொண்டு சென்று விடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்தது தன் உதவியைக் கொண்டும் உங்களைப் பலப்படுத்தி பரிசுத்தமான ஆகாரங்களை அவன் உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக (இவ்வாறு செய்தான்).
8:27
8:27 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَخُوْنُوا மோசம்செய்யாதீர்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு وَتَخُوْنُوْۤا இன்னும் மோசம் செய்யாதீர்கள் اَمٰنٰتِكُمْ அமானிதங்களுக்கு/உங்கள் وَاَنْـتُمْ நீங்கள் இருக்க تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
8:27. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.
8:27. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்து கொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள்.
8:27. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (அறிந்தும் புரிந்தும்) வஞ்சனை செய்யாதீர்கள்; அறிந்து கொண்டே உங்களுடைய அமானிதங்களில் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.
8:27. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள், மேலும், நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்துகொண்டே உங்களிடம் உள்ள அமானிதங்களுக்கும் மோசம் செய்யாதீர்கள்.
8:28
8:28 وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ  ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِيْمٌ‏
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَاۤ எல்லாம் اَمْوَالُكُمْ செல்வங்கள்/உங்கள் وَاَوْلَادُكُمْ இன்னும் சந்ததிகள்/உங்கள் فِتْنَةٌ  ۙ ஒரு சோதனை وَّاَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عِنْدَهٗۤ அவனிடம்தான் اَجْرٌ கூலி عَظِيْمٌ‏ மகத்தானது
8:28. “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
8:28. மேலும், உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
8:28. உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உண்மையில் சோதனைப் பொருள்களே என்பதையும், திண்ணமாக அல்லாஹ்விடம் மகத்தான கூலி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
8:28. “நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும், (உங்களுக்குச்) சோதனையாயிருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்-அவனிடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான (வெகுமதி) நற்கூலி உண்டு என்பதையும் நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
8:29
8:29 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّـكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تَتَّقُوا அஞ்சினால் اللّٰهَ அல்லாஹ்வை يَجْعَلْ ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு فُرْقَانًا ஒரு வித்தியாசத்தை وَّيُكَفِّرْ இன்னும் அகற்றி விடுவான் عَنْكُمْ உங்களை விட்டு سَيِّاٰتِكُمْ உங்கள் பாவங்களை وَيَغْفِرْ இன்னும் மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَ اللّٰهُ அல்லாஹ் ذُو الْفَضْلِ அருளுடையவன் الْعَظِيْمِ‏ மகத்தானது
8:29. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
8:29. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன் ஆவான்.
8:29. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தீர்களாயின் உங்களுக்கு (சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய) “உரைகல்லை” வழங்குவான். மேலும், உங்களுடைய தீமைகளை உங்களை விட்டு நீக்கி விடுவான். மேலும், உங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாக இருக்கின்றான்.
8:29. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்கு (பத்ரில் நடத்தியது போன்று தீர்க்கமான) முடிவை ஆக்குவான், உங்களை விட்டும் பாவங்களைப் போக்கி உங்களை மன்னித்தும் விடுவான், இன்னும் அல்லாஹ் மிக்க மகத்தான பேரருளுடையவன்.
8:30
8:30 وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ؕ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏
وَاِذْ சமயம் يَمْكُرُ சூழ்ச்சி செய்வார்(கள்) بِكَ உமக்கு الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لِيُثْبِتُوْكَ அவர்கள் சிறைப்படுத்த/உம்மை اَوْ அல்லது يَقْتُلُوْكَ உம்மை அவர்கள் கொல்ல اَوْ அல்லது يُخْرِجُوْكَ‌ؕ அவர்கள் வெளியேற்ற/உம்மை وَيَمْكُرُوْنَ இன்னும் சூழ்ச்சி செய்கின்றனர் وَيَمْكُرُ இன்னும் சூழ்ச்சி செய்கிறான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் وَاللّٰهُ அல்லாஹ் خَيْرُ மிகச் சிறந்தவன் الْمٰكِرِيْنَ‏ சூழ்ச்சி செய்பவர்களில்
8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
8:30. (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன்.
8:30. மேலும், இந்த நேரத்தையும் நினைவுகூருங்கள்: சத்தியத்தை நிராகரித்தவர்கள் உமக்கு எதிராக சதித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்; உம்மைக் கைது செய்ய வேண்டும் அல்லது உம்மைக் கொலை செய்ய வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும் என்பதற்காக! (இவ்வாறாக) அவர்கள் தங்களுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தார்கள்; மேலும், அல்லாஹ் தன்னுடைய சூழ்ச்சியைச் செய்துகொண்டிருந்தான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்வோரில் அனைவரையும்விடச் சிறந்தவனாய் இருக்கின்றான்.
8:30. மேலும், (நபியே!) நிராகரித்துக்கொண்டிருப்போர் உம்மை அவர்கள் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மை அவர்கள் கொலை செய்யவோ, அல்லது உம்மை அவர்கள் (ஊரை விட்டு) வெளியேற்றி விடவோ, உமக்கு விரோதமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்த (நேரத்)தை (நினைத்துப் பார்ப்பீராக!) அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர், (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான், இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன்.
8:31
8:31 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَـقُلْنَا مِثْلَ هٰذَٓا‌ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُنَا நம் வசனங்கள் قَالُوْا கூறுகின்றனர் قَدْ سَمِعْنَا செவியேற்று விட்டோம் لَوْ نَشَآءُ நாம் நாடியிருந்தால் لَـقُلْنَا கூறியிருப்போம் مِثْلَ هٰذَٓا‌ ۙ இது போன்று اِنْ هٰذَاۤ اِلَّاۤ இவை இல்லை/தவிர اَسَاطِيْرُ கட்டுக் கதைகளே الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
8:31. அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று சொல்கிறார்கள்.
8:31. நம் வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால் அதற்கவர்கள், ‘‘நிச்சயமாக நாம் (இதை முன்னரே) செவியுற்றுள்ளோம்; நாம் விரும்பினால் இம்மாதிரியான வசனங்களை நாமும் கூறுவோம். இவை முன்னோரின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' என்று கூறுகின்றனர்.
8:31. மேலும், நம் வசனங்கள் அவர்கள் முன் ஓதிக் காண்பிக்கப்படும்போது கூறுவார்கள்: “நாங்கள் கேட்டுக் கொண்டோம்; நாங்கள் நினைத்தால் இதைப் போன்று நாங்களும் உருவாக்கிக் கூறமுடியும்! இவையெல்லாம் முன்னோர்கள் கூறிவரும் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை.”
8:31. “நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுமானால், அ(தற்க)வர்கள், “திட்டமாக நாம், (இதனை முன்னரே) செவியுற்றுள்ளோம், நாங்கள் நாடினால், இதைப்போன்று நாங்களும் கூறிவிடுவோம், இவை முன்னோரின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகின்றனர்.
8:32
8:32 وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَـقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَ لِيْمٍ‏
وَاِذْ சமயம் قَالُوا கூறினர் اللّٰهُمَّ அல்லாஹ்வே اِنْ كَانَ இருக்குமேயானால் هٰذَا هُوَ இதுதான் الْحَـقَّ உண்மையாக مِنْ عِنْدِكَ உன்னிடமிருந்து فَاَمْطِرْ பொழி عَلَيْنَا எங்கள் மீது حِجَارَةً கல்லை مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து اَوِ அல்லது ائْتِنَا எங்களிடம் வா بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَ لِيْمٍ‏ துன்புறுத்தும்
8:32. (இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
8:32. மேலும், (அந்நிராகரிப்பவர்கள்) ''எங்கள் அல்லாஹ்வே! இவ்வேதம் உன்னிடமிருந்து வந்தது உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் ஒரு வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!'' என்று அவர்கள் கூறியதையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக.
8:32. மேலும், அவர்கள் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும்: “இறைவனே! இது உன்னிடமிருந்து அருளப்பட்ட சத்தியம் என்பது உண்மையாயின், எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழிந்து விடு; அல்லது துன்புறுத்தும் வேதனையை எங்களுக்குக் கொண்டுவா!”
8:32. இன்னும் (நிராகரிப்போர்) “அல்லாஹ்வே! உன்னிடமிருந்து வந்த இதுவே உண்மையானால் எங்கள்மீது வானத்திலிருந்து கல் மாரியைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வருவாயாக” என்று அவர்கள் கூறியதை-(நபியே! நீர் நினைத்துப் பார்ப்பீராக!)
8:33
8:33 وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏
وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيُعَذِّبَهُمْ அவர்களை வேதனை செய்பவனாக وَاَنْتَ நீர் இருக்க فِيْهِمْ‌ؕ அவர்களுடன் وَمَا كَانَ இல்லை اللّٰهُ அல்லாஹ் مُعَذِّبَهُمْ வேதனை செய்பவனாக/அவர்களை وَهُمْ அவர்கள் இருக்க يَسْتَغْفِرُوْنَ‏ மன்னிப்புத் தேடுபவர்களாக
8:33. ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
8:33. ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் வரை அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான். மேலும், அவர்கள் மன்னிப்பைக் கோரிக்கொண்டிருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்.
8:33. ஆனால் நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்கள்மீது வேதனையை இறக்குபவனாக இல்லை. மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் மீது வேதனையை இறக்கிவிடுவது அல்லாஹ்வின் நியதியல்ல.
8:33. நீர் அவர்களுக்கு மத்தியிலிருக்கும் நிலையில், அல்லாஹ் அவர்களை (ஒரு போதும்) வேதனை செய்பவனாக இல்லை, இன்னும் அவர்கள் பாவமன்னிப்பைக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
8:34
8:34 وَمَا لَهُمْ اَلَّا يُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ يَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِيَآءَهٗ‌ ؕ اِنْ اَوْلِيَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
وَمَا என்ன? لَهُمْ அவர்களுக்கு اَلَّا يُعَذِّبَهُمُ (அவன்) வேதனை செய்யாமலிருக்க / அவர்களை اللّٰهُ அல்லாஹ் وَهُمْ அவர்களோ يَصُدُّوْنَ தடுக்கின்றனர் عَنِ الْمَسْجِدِ மஸ்ஜிதை விட்டு الْحَـرَامِ புனிதமானது وَمَا كَانُوْۤا அவர்கள் இல்லை اَوْلِيَآءَهٗ‌ ؕ அதன் பொறுப்பாளர்களாக اِنْ இல்லை اَوْلِيَآؤُهٗۤ அதன் பொறுப்பாளர்கள் اِلَّا தவிர الْمُتَّقُوْنَ இறை அச்சமுள்ளவர்கள் وَلٰـكِنَّ எனினும் நிச்சயமாக اَكْثَرَ அதிகமானோர் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
8:34. (இக்காரணங்கள் இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
8:34. (இவ்விரு காரணங்களும் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு என்ன (தடை) இருக்கிறது? ஏனென்றால், அவர்களோ சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு (மக்கள்) செல்வதைத் தடுக்கின்றனர். அவர்கள் அதற்கு பொறுப்பாளர்களல்ல. இறையச்சமுடையவர்களைத் தவிர வேறு எவரும் அதன் பொறுப்பாளர்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
8:34. அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்குச் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்கு உள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுள்ளவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாய் ஆக முடியும்! எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்.
8:34. அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருப்பதற்கு அவர்களுக்கு வேறு (காரணம்) என்ன இருக்கிறது? அவர்களோ (புனிதப் பள்ளியான) மஸ்ஜிதுல் ஹராமை விட்டு (முஸ்லீம்களை)த் தடுக்கின்றனர், அவர்கள் அதற்குரிய காரியஸ்தர்களாகவும் இருக்கவில்லை, அதற்குரிய காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இல்லை, எனினும் அவர்களில் பெரும்பாலோர் (அதனை) அறியமாட்டார்கள்.
8:35
8:35 وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً‌  ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை صَلَاتُهُمْ வழிபாடு/அவர்களுடைய عِنْدَ அருகில் الْبَيْتِ இறை ஆலயம் اِلَّا தவிர مُكَآءً சீட்டியடிப்பது وَّتَصْدِيَةً‌  ؕ இன்னும் கை தட்டுவது فَذُوْقُوا சுவையுங்கள் الْعَذَابَ வேதனையை بِمَا எதன் காரணமாக كُنْتُمْ இருந்தீர்கள் تَكْفُرُوْنَ‏ நிராகரிக்கிறீர்கள்
8:35. அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
8:35. அந்த அல்லாஹ்வின் வீட்டில் அவர்கள் புரியும் வணக்கமெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதும் தவிர வேறில்லை! (ஆகவே, மறுமையில்) ‘‘உங்கள் நிராகரிப்பின் காரணமாக (இன்றைய தினம்) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' (என்றே கூறப்படும்.)
8:35. கஅபா ஆலயத்தில் அவர்களுடைய தொழுகை, சீட்டி அடிப்பதும் கை தட்டுவதுமே அன்றி வேறில்லை! எனவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்!”
8:35. மேலும், (அல்லாஹ்வின்) இல்லத்தில் அவர்களின் தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர வேறு (எதுவுமாக) இருக்கவில்லை, ஆகவே, “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இன்றையத்தினம்) வேதனையைச் சுவையுங்கள். (என்று மறுமையில் கூறப்படும்.)
8:36
8:36 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِيَـصُدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى جَهَـنَّمَ يُحْشَرُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் يُنْفِقُوْنَ செலவு செய்கின்றனர் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை لِيَـصُدُّوْا அவர்கள் தடுப்பதற்கு عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் فَسَيُنْفِقُوْنَهَا செலவு செய்வார்கள்/அவற்றை ثُمَّ பிறகு تَكُوْنُ அவை ஆகும் عَلَيْهِمْ அவர்கள் மீது حَسْرَةً துக்கமாக ثُمَّ பிறகு يُغْلَبُوْنَ ؕ வெற்றி கொள்ளப்படுவார்கள் وَالَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اِلٰى جَهَـنَّمَ நரகத்தின் பக்கமே يُحْشَرُوْنَۙ‏ ஒன்று திரட்டப்படுவார்கள்
8:36. நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
8:36. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்ய செலவு செய்கின்றனர். அவர்கள் மேலும், இவ்வாறே செலவு செய்வார்கள், முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு வெற்றி கொள்ளப்படுவார்கள். (இப்படிப்பட்ட) நிராகரிப்பவர்கள் (மறுமையில்) நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்.
8:36. சத்தியத்தை மறுத்தவர்கள், அல்லாஹ்வின் வழியில் செல்ல விடாமல் (மக்களைத்) தடுப்பதற்காகத் தங்களுடைய பொருள்களைச் செலவழிக்கின்றார்கள். மென்மேலும் செலவழித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆனால் இறுதியில், இந்தச் செயல்களே அவர்கள் வருந்துவதற்குக் காரணமாய் அமைந்துவிடும். பிறகு அவர்கள் தோல்வி அடைவார்கள். மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகின் பக்கமே ஒன்று சேர்க்கப்படுவார்கள்;
8:36. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள், தங்கள் செல்வங்களை (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையி(ல் செல்வதி)லிருந்து தடை செய்வதற்காக செலவு செய்கின்றனர், இனியும் அவர்கள் அதை (இவ்வாறே) செலவு செய்வர், பின்னர் (முடிவில்) அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும், பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள், மேலும், (இத்ததைகய) நிராகரித்துக் கொண்டிருப்போர் – (மறுமையில்) நரகத்தின்பால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
8:37
8:37 لِيَمِيْزَ اللّٰهُ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ وَ يَجْعَلَ الْخَبِيْثَ بَعْضَهٗ عَلٰى بَعْضٍ فَيَرْكُمَهٗ جَمِيْعًا فَيَجْعَلَهٗ فِىْ جَهَـنَّمَ‌ؕ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
لِيَمِيْزَ பிரிப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் الْخَبِيْثَ கெட்டவர்களை مِنَ இருந்து الطَّيِّبِ நல்லவர்கள் وَ يَجْعَلَ இன்னும் ஆக்குவதற்கு الْخَبِيْثَ கெட்டவர்களை بَعْضَهٗ அவர்களில் சிலரை عَلٰى بَعْضٍ சிலர் மீது فَيَرْكُمَهٗ அவன் ஒன்றிணைத்து/அவர்கள் جَمِيْعًا அனைவரையும் فَيَجْعَلَهٗ அவர்களை ஆக்குவதற்காகவும் فِىْ جَهَـنَّمَ‌ؕ நரகத்தில் اُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
8:37. அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.  
8:37. அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவும்; கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பட்டு ஒன்றாகக் குவிக்கப்பட்ட பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்.) இவர்கள்தான் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்.
8:37. எதற்காகவெனில், அல்லாஹ் தூய்மையானதிலிருந்து தூய்மையற்றதைப் பிரித்தெடுத்து, தூய்மையற்ற ஒவ்வொன்றையும் ஒன்று சேர்த்து, பிறகு அந்தக் குவியலை நரகத்தில் வீசி எறிவதற்காக! இத்தகையோர் தாம் முற்றிலும் இழப்புக்குரியவர்களாவர்.
8:37. அல்லாஹ் நல்லவரிலிருந்து கெட்டவரை பிரிப்பதற்காகவும், கெட்டவரை-அவர்களில் சிலரைச் சிலரின் மீது ஆக்கி அவர்கள் அனைவரையும் குவியலாக்கிப் பின்னர், அ(க்குவியலான)தை அவன் நரகத்தில் ஆக்கி விடுவதற்காகவே-(இவ்வாறு செய்தான்.) அவர்கள்தான் நஷ்டம் அடைந்தவர்கள்.
8:38
8:38 قُلْ لِّـلَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ يَّنْتَهُوْا يُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَۚ وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ‏
قُلْ கூறுவீராக لِّـلَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பவர்களுக்கு اِنْ يَّنْتَهُوْا அவர்கள் விலகிக் கொண்டால் يُغْفَرْ மன்னிக்கப்படும் لَهُمْ அவர்களுக்கு مَّا قَدْ سَلَفَۚ எவை/முன் சென்றன وَاِنْ يَّعُوْدُوْا அவர்கள் திரும்பினால் فَقَدْ مَضَتْ சென்றுவிட்டது سُنَّتُ வழிமுறை الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
8:38. நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
8:38. (நபியே!) நிராகரிப்பவர்களுக்கு நீர் கூறுவீராக: இனியேனும் அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுடைய) முந்திய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். (அவ்வாறில்லாமல் விஷமம் செய்யவே) முன் வருவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றவர்களின் வழி ஏற்பட்டே இருக்கிறது. (அவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.)
8:38. (நபியே!) இந்நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறும்: “(இப்போதேனும் அசத்தியப் போக்கிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், முன்பு செய்த குற்றங்கள் யாவும் மன்னிக்கப்படும். ஆனால், (பழைய போக்கிற்கு) அவர்கள் மீண்டும் திரும்புவார்களாயின் முற்கால மக்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே!”
8:38. (நபியே!) நிராகரிப்போருக்கு நீர் கூறுவீராக: (இனியேனும்) அவர்கள் (விஷமம் செய்யாது) விலகிக்கொண்டால், திட்டமாக சென்றுவிட்ட (முந்திய) குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், (அவ்வாறின்றி விஷமம் செய்யவே) மீண்டும் அவர்கள் திரும்புவார்களாயின் முன் சென்(ற இவர்கள் போன்)றோரின் வழி திட்டமாக சென்றேயிருக்கின்றது, (அவர்களுக்கு ஏற்பட்ட கதி தான் இவர்களுக்கும் ஏற்படும்).
8:39
8:39 وَقَاتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ كُلُّهٗ لِلّٰهِ‌ۚ فَاِنِ انْـتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
وَقَاتِلُوْ போரிடுங்கள் هُمْ இவர்களிடம் حَتّٰ வரை لَا تَكُوْنَ இல்லாமல் ஆகும் فِتْنَةٌ குழப்பம் وَّيَكُوْنَ இன்னும் ஆகும் الدِّيْنُ வழிபாடு كُلُّهٗ எல்லாம் لِلّٰهِ‌ۚ அல்லாஹ்வுக்கு فَاِنِ انْـتَهَوْا அவர்கள் விலகிக் கொண்டால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِمَا எதை يَعْمَلُوْنَ அவர்கள் செய்கிறார்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
8:39. (முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
8:39. (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) விஷமத்தனம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான்.
8:39. (இறைநம்பிக்கை கொண்டவர்களே!) குழப்பம் இல்லாதொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள்! பிறகு, அவர்கள் (அதிலிருந்து) விலகிக்கொண்டால் அவர்களுடைய செயல்களைத் திண்ணமாக அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.
8:39. (விசுவாசிகளே! இந்நிராகரிப்போரின் துன்புறுத்தலெனும்) குழப்பம் ஏற்படாமல் (இருக்கவும்,) மார்க்கம் அது முற்றிலும் அல்லாஹ்விற்கு (நிலைபெற்றதாக) ஆகும் வரையிலும் (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும் அவர்களுடன் யுத்தம் புரியுங்கள், (விஷமம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதைப் பார்க்கிறான்.
8:40
8:40 وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰٮكُمْ‌ؕ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ‏
وَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் مَوْلٰٮكُمْ‌ؕ உங்கள் எஜமானன் نِعْمَ சிறந்தவன் الْمَوْلٰى எஜமானன் وَنِعْمَ சிறந்தவன் النَّصِيْرُ‏ உதவியாளன்
8:40. அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.
8:40. (இதற்கு) அவர்கள் மாறு செய்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் பாதுகாவலன் (பொறுப்பாளன்) என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன்.
8:40. மேலும், அவர்கள் (ஏற்றுக் கொள்ளாமல்) புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அவன் சிறந்த பாதுகாவலனும், சிறந்த முறையில் உதவி புரிபவனும் ஆவான்.
8:40. அவர்கள் புறக்கணித்துவிட்டாலோ, நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள், பாதுகாவலனில் அவன் மிக நல்லவன், இன்னும் உதவி செய்கிறவனிலும் அவன் மிக நல்லவன்.
8:41
8:41 وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக எது غَنِمْتُمْ வென்றீர்கள் مِّنْ شَىْءٍ ஒரு பொருள் فَاَنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்வுக்கு خُمُسَهٗ அதில் ஐந்தில் ஒன்று وَ لِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு وَلِذِى الْقُرْبٰى இன்னும் உறவினர்களுக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகளுக்கு وَالْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகளுக்கு وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணிகளுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اَنْزَلْنَا இன்னும் எதை இறக்கினோம் عَلٰى عَبْدِنَا நம் அடியார் மீது يَوْمَ நாளில் الْفُرْقَانِ பிரித்தறிவித்த يَوْمَ நாளில் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِ‌ ؕ இரு கூட்டங்கள், இரு படைகள் وَاللّٰهُ நிச்சயமாகஅல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
8:41. (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு போரில் கிடைத்த எந்தப் பொருளிலும் ஐந்தில் ஒருபாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரித்தானது. உண்மையாகவே நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பதுடன், இரு படைகளும் சந்தித்து (முடிவான) தீர்ப்பளித்த (பத்ரு) நாளில் நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை அவன்தான் இறக்கி வைத்தான் என்பதையும் நீங்கள் நம்புபவர்களாக இருந்தால், உறுதியாக இதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
8:41. மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! போரில் ஏதேனும் பொருள்களை நீங்கள் பெற்றால் அவற்றில் ஐந்திலொரு பாகம், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும் பயணிகளுக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில், அதாவது (பத்ரு போரின்போது) இரு படைகளும் மோதிக் கொண்ட நாளில் நம் அடியாருக்கு நாம் இறக்கியருளியதன் மீதும் நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால் (இந்தப் பாகத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி விடுங்கள்!) அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாய் இருக்கின்றான்.
8:41. மேலும், (விசுவாசிகளே!) நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக நீங்கள் (போர் செய்து) வெற்றிப் பொருளாக அடைந்தது, எப்பொருளாயினும், அப்பொழுது நிச்சயமாக அதனுடைய ஐந்திலொரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும், அல்லாஹ்வையும் இரு படைகளையும் (பத்ரு யுத்தத்தில்) சந்தித்த தீர்ப்பு நாளில், நாம் நம் அடியார்மீது இறக்கி வைத்த (உதவியை அவன்தான் இறக்கிவைத்தான் என்ப))தையும் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்- (மேற்கூறிய அல்லாஹ்வின் கட்டளை பற்றி உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.) மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
8:42
8:42 اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَ الرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ‌ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِ‌ۙ وَلٰـكِنْ لِّيَقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ‏
اِذْ சமயம் اَنْتُمْ நீங்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الدُّنْيَا சமீபமானது وَهُمْ அவர்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الْقُصْوٰى தூரமானது وَ الرَّكْبُ வாகனக்காரர்கள் اَسْفَلَ கீழே مِنْكُمْ‌ؕ உங்களுக்கு وَلَوْ تَوَاعَدْتُّمْ நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் لَاخْتَلَفْتُمْ தவறிழைத்திருப்பீர்கள் فِى الْمِيْعٰدِ‌ۙ குறிப்பிட்ட நேரத்தில் وَلٰـكِنْ எனினும் لِّيَقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ۙ முடிவுசெய்யப்பட்டதாக لِّيَهْلِكَ அழிவதற்காக مَنْ எவன் هَلَكَ அழிந்தான் عَنْۢ بَيِّنَةٍ ஆதாரத்துடன் وَّيَحْيٰى இன்னும் வாழ்வதற்காக مَنْ எவன் حَىَّ வாழ்ந்தான் عَنْۢ بَيِّنَةٍ‌ ؕ ஆதாரத்துடன் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் لَسَمِيْعٌ நன்குசெவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
8:42. (பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
8:42. நீங்கள் (‘பத்ரு' போர்க்களத்தில் மதீனாவுக்குச்) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கிலும், அவர்கள் (உங்களுக்கு எதிர்புறமுள்ள) தூரமான கோடியிலும், (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும் இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் (நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் அங்கு வந்து சேர்ந்து) அவ்வாக்குறுதியை நிறைவேற்றி வைப்பதில் நீங்கள் (ஏதும்) தவறிழைத்தே இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் முடிவு செய்துவிட்ட காரியம் நடந்தேறுவதற்காக (உங்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க ஆதாரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க ஆதாரத்தைக் கொண்டே தப்புவதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
8:42. நீங்கள் (பள்ளத்தாக்கிலிருந்து) மிக நெருங்கிய பகுதியிலும் அவர்கள் மிகத் தொலைவான பகுதியிலும் (தளம் அமைத்து) இருந்ததையும், மேலும் பயணக் கூட்டம் உங்களுக்குக் கீழே (கடற்கரை ஓரமாக) இருந்ததையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்! (முன்னரே) நீங்களும் அவர்களும் (எங்காவது குறிப்பிட்ட இடத்தில் போர் செய்வதென) முடிவு செய்திருப்பீர்களாயின் அப்போது அந்த முடிவிலிருந்து நிச்சயம் நீங்கள் நழுவிச் சென்றிருப்பீர்கள். ஆயினும், தீர்மானிக்கப்பட்டிருந்த விஷயத்தை அல்லாஹ் நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக (இவ்வாறெல்லாம் நிகழ்ந்தன). ஏனெனில், அழிய வேண்டியவன் தக்க காரணத்துடன் அழிய வேண்டும்; மேலும், உயிர்வாழ வேண்டியவன் தக்க காரணத்துடன் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக! மேலும், திண்ணமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.
8:42. (“பத்ரு யுத்த களத்தில் உங்களுக்கு) சமீபமாக உள்ள பள்ளத்தாக்கில் நீங்களும், (உங்களுக்கு எதிர்ப்புறமுள்ள) தூரமான பள்ளத்தாக்கில் அவர்களும் (அபூசுஃப்யானும் அவருடன் இருந்த வர்த்தகக் கூட்டத்தினராகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்த நேரத்தை (நீங்கள் நினைத்துப் பாருங்கள்), நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலத்தையும், இடத்தையும் குறிப்பிட்டு) வாக்குறுதி செய்து கொண்டுமிருந்தால் (நீங்கள் மாறுபட்டு இருந்திருப்பீர்கள், எனினும், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், (உங்கள் யாவரையும் ஒரே நேரத்தில் அங்கு ஒன்று சேர்த்தான்). அழிந்தவர்கள் தக்க முகாந்திரத்துடன் அழிவதற்காகவும், (தப்பிப்) பிழைத்தவர்கள் தக்க முகாந்திரத்தைக் கொண்டே (தப்பிப்) பிழைப்பதற்காகவும் (அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
8:43
8:43 اِذْ يُرِيْكَهُمُ اللّٰهُ فِىْ مَنَامِكَ قَلِيْلًا ؕ وَّلَوْ اَرٰٮكَهُمْ كَثِيْرًا لَّـفَشِلْـتُمْ وَلَـتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَلٰـكِنَّ اللّٰهَ سَلَّمَ‌ؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اِذْ يُرِيْكَهُمُ சமயம்/காண்பிக்கிறான்/உமக்கு/அவர்களை اللّٰهُ அல்லாஹ் فِىْ مَنَامِكَ உமது கனவில் قَلِيْلًا ؕ குறைவாக وَّلَوْ اَرٰٮكَهُمْ அவன் காண்பித்திருந்தால் உமக்கு / அவர்களை كَثِيْرًا அதிகமானவர்களாக لَّـفَشِلْـتُمْ நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள் وَلَـتَـنَازَعْتُمْ இன்னும் தர்க்கித்திருப்பீர்கள் فِى الْاَمْرِ காரியத்தில் وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَلَّمَ‌ؕ காப்பாற்றினான் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
8:43. (நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
8:43. (நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால் நீரும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
8:43. (நபியே!) அல்லாஹ் உம்முடைய கனவில் அவர்களின் எண்ணிக்கையை குறைவாய்க் காண்பித்ததை நீர் நினைத்துப் பாரும். அவன் உமக்கு அவர்களுடைய எண்ணிக்கையை அதிகமாய்க் காண்பித்திருந்தால், நிச்சயம் நீங்கள் ஊக்கம் குன்றியிருப்பீர்கள்; மேலும், போர் விஷயத்தில் ஒருவருக்கொருவர் பிணங்கியிருப்பீர்கள். எனினும், அல்லாஹ்தான் (உங்களை இதிலிருந்து) காத்தருளினான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றைக்கூட நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
8:43. (நபியே!) உம்முடைய கனவில் அல்லாஹ் (எண்ணிக்கையில்) அவர்களைக் குறைத்துக் காண்பித்ததையும், (நினைவு கூர்வீராக!) அவர்களை (எண்ணிக்கையில்) அதிகப்படுத்தி உமக்கு காண்பித்திருந்தால், நீங்கள் தைரியமிழந்து யுத்தம் செய்வதைப் பற்றி உங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிணங்கிக்கொண்டு இருந்திருப்பீர்கள்; எனினும், அல்லாஹ் (உங்களைப்) பாதுகாத்துவிட்டான்; நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறிகிறவன்.
8:44
8:44 وَ اِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِىْۤ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِىْۤ اَعْيُنِهِمْ لِيَـقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
وَ اِذْ போது يُرِيْكُمُوْ காட்டுகிறான்/உங்களுக்கு هُمْ அவர்களை اِذِ போது الْتَقَيْتُمْ நீங்கள் சந்தித்தீர்கள் فِىْۤ اَعْيُنِكُمْ உங்கள் கண்களில் قَلِيْلًا குறைவாக وَّيُقَلِّلُكُمْ இன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களை فِىْۤ اَعْيُنِهِمْ அவர்களுடைய கண்களில் لِيَـقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ؕ முடிவு செய்யப்பட்டதாக وَاِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கமே تُرْجَعُ திருப்பப்படும் الْاُمُوْرُ‏ காரியங்கள்
8:44. நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.  
8:44. அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன.
8:44. மேலும், இதனையும் நினைத்துப்பாருங்கள்: நீங்கள் போரிட்டபோது அவன், உங்களுடைய கண்களுக்கு அவர்களின் எண்ணிக்கையைக் குறைவாகவும், அவர்களுடைய கண்களுக்கு உங்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகவும் காண்பித்தான்; எதற்காகவெனில், நிகழ வேண்டிய செயலை அல்லாஹ் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக! (இறுதியில்) விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே திரும்பக்கொண்டு வரப்பட இருக்கின்றன.
8:44. நீங்கள் (இரு படையினரும்) சந்தித்த சமயத்தில் அவர்க(ளுடைய எண்ணிக்கை)களை, உங்கள் கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், உங்க(ளுடைய எண்ணிக்கை)களை அவர்களுடைய கண்களுக்குக் குறைவாக அவன் காட்டியதையும், (நினைவு கூருங்கள்.) நடந்தேறப்பட வேண்டிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக (அல்லாஹ் அவ்வாறு செய்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்). மேலும், அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் திரும்பக் கொண்டு வரப்படும்.
8:45
8:45 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِيْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا لَقِيْتُمْ நீங்கள் சந்தித்தால் فِئَةً ஒரு கூட்டத்தை فَاثْبُتُوْا உறுதியாக இருங்கள் وَاذْكُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை كَثِيْرًا அதிகமாக لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
8:45. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
8:45. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (போரின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால் (கலக்கமுறாது) உறுதியாக (எதிர்த்து) நின்று, அல்லாஹ்வின் திருப்பெயரை நீங்கள் அதிகமாக (உரக்க) சப்தமிட்டுக் கூறுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
8:45. இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஏதேனும் ஒரு குழுவினரோடு நீங்கள் போரிடும்போது நிலைகுலையாமல் இருங்கள்! மேலும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருங்கள்! நீங்கள் வெற்றி அடையலாம்.
8:45. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (யுத்தத்தின்போது எதிரியின்) கூட்டத்தைச் சந்தித்தால், (கலக்கமுறாது) உறுதியாக இருங்கள், அல்லாஹ்வை நீங்கள் அதிகமாக நினைவும் கூருங்கள், (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
8:46
8:46 وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ‌ وَاصْبِرُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‌ۚ‏
وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கும் وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கும் وَلَا تَنَازَعُوْا இன்னும் தர்க்கிக்காதீர்கள் فَتَفْشَلُوْا அவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள் وَتَذْهَبَ சென்றுவிடும் رِيْحُكُمْ‌ உங்கள் ஆற்றல் وَاصْبِرُوْا‌ ؕ பொறுத்திருங்கள் اِنَّ اللّٰهَ مَعَ நிச்சயமாக அல்லாஹ்/உடன் الصّٰبِرِيْنَ‌ۚ‏ பொறுமையாளர்கள்
8:46. இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
8:46. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
8:46. மேலும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறு செய்தால் உங்களிடையே பலவீனம் தோன்றிவிடும். மேலும், உங்கள் மதிப்பும் வலிமையும் அழிந்து போய்விடும். ஆகவே பொறுமையை மேற்கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
8:46. அன்றியும் நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள், மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள், அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள், மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும், ஆகவே, நீங்கள் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான்.
8:47
8:47 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏
وَلَا تَكُوْنُوْا ஆகிவிடாதீர்கள் كَالَّذِيْنَ எவர்களைப் போல் خَرَجُوْا புறப்பட்டனர் مِنْ இருந்து دِيَارِهِمْ தங்கள் இல்லங்கள் بَطَرًا பெருமைக்காக وَّرِئَآءَ இன்னும் காண்பிப்பதற்காக النَّاسِ மக்களுக்கு وَ يَصُدُّوْنَ இன்னும் தடுப்பார்கள் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எவற்றை يَعْمَلُوْنَ செய்வார்கள் مُحِيْطٌ‏ சூழ்ந்திருப்பவன்
8:47. பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
8:47. பெருமைக்காகவும் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து (முஸ்லிம்களை எதிர்க்க ‘பத்ரு' போருக்குப்) புறப்பட்டும், மக்களை அல்லாஹ்வுடைய பாதையில் செல்வதைத் தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அவர்களுடைய செயல்களைச் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
8:47. மேலும், இறுமாப்புடனும் (தன் மதிப்பை) பிற மக்களுக்குக் காட்டும் வகையிலும் தங்களுடைய இல்லங்களிலிருந்து எவர்கள் வெளியேறினார்களோ, மேலும் அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாமல் (மக்களைத்) தடுக்கின்றார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்! அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் சூழ்ந்தறிபவனாய் இருக்கின்றான்.
8:47. பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்தும் (முஸ்லீம்களை எதிர்க்க “பத்ரு” யுத்தத்திற்குப்) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (அதில் மனிதர்கள் செல்வதைத்) தடை செய்து கொண்டும் இருந்தவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், மேலும், அல்லாஹ், அவர்கள் செய்கின்றவற்றை சூழ்ந்து அறிந்துகொண்டிருக்கின்றான்.
8:48
8:48 وَاِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَـكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّىْ جَارٌ لَّـكُمْ‌ۚ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰى عَقِبَيْهِ وَقَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكُمْ اِنِّىْۤ اَرٰى مَا لَا تَرَوْنَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ‌ؕ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ‏
وَاِذْ சமயம் زَيَّنَ அலங்கரித்தான் لَهُمُ அவர்களுக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களை وَقَالَ இன்னும் கூறினான் لَا அறவே இல்லை غَالِبَ வெல்பவர் لَـكُمُ உங்களை الْيَوْمَ இன்று مِنَ النَّاسِ மக்களில் وَاِنِّىْ நிச்சயமாக நான் جَارٌ துணை لَّـكُمْ‌ۚ உங்களுக்கு فَلَمَّا போது تَرَآءَتِ பார்த்தன ஒன்றுக்கொன்று الْفِئَتٰنِ இரு கூட்டங்கள் نَكَصَ திரும்பினான் عَلٰى عَقِبَيْهِ தன் இரு குதிங்கால்கள் மீது وَقَالَ இன்னும் கூறினான் اِنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّنْكُمْ உங்களை விட்டு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰى பார்க்கிறேன் مَا لَا تَرَوْنَ எதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اللّٰهَ‌ؕ அல்லாஹ்வை وَاللّٰهُ அல்லாஹ் شَدِيْدُ الْعِقَابِ‏ தண்டிப்பதில் கடுமையானவன்
8:48. ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “ மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.  
8:48. ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து ‘‘எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கிறேன்'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்குநேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று ‘‘நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்'' என்று கூறினான்.
8:48. மேலும், இதையும் நினைத்துப்பாருங்கள்: ஷைத்தான் அவர்களுடைய (தீய) செயல்களை அவர்களின் பார்வையில் அழகாக்கிக் காட்டினான். மேலும், “இன்று மக்களில் எவரும் உங்களை வென்றிட முடியாது. நான் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கின்றேன்” என்றும் அவர்களிடம் கூறினான். ஆயினும் இரு படைகளும் மோதிக்கொண்டபோது அவன் புறங்காட்டித் திரும்பிச் சென்றுவிட்டான். மேலும், அவன் கூறினான்: “நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். நான் அல்லாஹ்வைக் குறித்து அஞ்சுகின்றேன். மேலும், அல்லாஹ் தண்டனை அளிப்பதில் மிகக் கடுமையானவன்.”
8:48. ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, நிச்சயமாக நானும் உங்களுக்கு (ப்பக்க)த் துணையாக நிற்கின்றேன்” என்று கூறிக் கொண்டிருந்ததையும் (நபியே! நினைவு கூர்வீராக! இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன் இரு படைகளும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டபொழுது புறமுதுகிட்டுச் சென்று, “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நிச்சயமாக நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்க்கின்றேன், நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன், தண்டிப்பதில் அல்லாஹ் மிக்க கடுமையானவன்” என்றும் கூறினான்.
8:49
8:49 اِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰٓؤُلَاۤءِ دِيْنُهُمْؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
اِذْ போது يَقُوْلُ கூறினார்(கள்) الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்கள் وَالَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் غَرَّ மயக்கி விட்டது هٰٓؤُلَاۤءِ இவர்களை دِيْنُهُمْؕ இவர்களுடைய மார்க்கம் وَمَنْ எவர் يَّتَوَكَّلْ நம்பிக்கை வைப்பார் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:49. நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது” என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).
8:49. (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்களும், உள்ளங்களில் (நிராகரிப்பு என்னும்) நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது'' என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீர் நினைத்துப் பார்ப்பீராக. எவர் அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுகிறாரோ (அவரே வெற்றி அடைந்தவர். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
8:49. இதனையும் நினைத்துப் பாருங்கள்: நயவஞ்சகர்களும், எவர்கள் உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும் “இவர்களுடைய மார்க்கம் இவர்களை மயக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்று கூறினார்கள். உண்மை யாதெனில், எவரேனும் அல்லாஹ்வை முழுதும் சார்ந்து வாழ்வாரானால் (அல்லாஹ் அவருக்குப் போதுமானவன் ஆவான்.) திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்!
8:49. (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளும், இதயங்களில் நோயுள்ளவர்களும் (விசுவாசிகளைச் சுட்டிக் காண்பித்து) இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது” என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) இன்னும், எவர் (தன் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ, (அவரே வெற்றியடைந்தவர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
8:50
8:50 وَ لَوْ تَرٰٓى اِذْ يَتَوَفَّى الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
وَ لَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ போது يَتَوَفَّى உயிர் கைப்பற்றுவார்(கள்) الَّذِيْنَ كَفَرُوا‌ ۙ நிராகரித்தவர்களை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يَضْرِبُوْنَ அடித்தவர்களாக وُجُوْهَهُمْ அவர்களுடைய முகங்களில் وَاَدْبَارَهُمْۚ இன்னும் அவர்களுடைய முதுகுகளில் وَذُوْقُوْا இன்னும் சுவையுங்கள் عَذَابَ வேதனையை الْحَرِيْقِ‏ எரிக்கக்கூடியது
8:50. மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.
8:50. வானவர்கள் நிராகரிப்பவ(ரின் உயி)ர்களைக் கைப்பற்றும் சமயத்தில், அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு ஓட்டிச் சென்று) ‘‘எரிக்கும் (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறுவதை (நபியே!) நீர் பார்க்க வேண்டாமா?
8:50. (வீழ்த்தப்பட்ட) நிராகரிப்பாளர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்ததை நீர் கண்டிருக்க வேண்டுமே! அந்த வானவர்கள் அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும், (அவர்களிடம்) கூறிக் கொண்டிருந்தார்கள்: “இதோ, சுட்டுப் பொசுக்குகின்ற தண்டனையைச் சுவையுங்கள்!
8:50. நிராகரிப்போ(ரின் உயி)ர்களை மலக்குகள் கைப்பற்றும் சமயத்தில் (நபியே!) நீர் பார்ப்பீராயின், (பயங்கர நிலையையே நீர் பார்ப்பீர், மலக்குகளான) அவர்கள், அவர்களின் முகங்களிலும், அவர்களின் பின்புறங்களிலும் அடிப்பார்கள், மேலும், “எரிக்கும் (நரக) வேதனையைச் சுவையுங்கள்” (என்றும் கூறுவார்கள்).
8:51
8:51 ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَـيْسَ بِظَلَّامٍ لِّـلْعَبِيْدِۙ‏
ذٰلِكَ بِمَا அதற்குக் காரணம் قَدَّمَتْ முற்படுத்தின اَيْدِيْكُمْ உங்கள் கரங்கள் وَاَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَـيْسَ இல்லை بِظَلَّامٍ அநீதியிழைப்பவன் لِّـلْعَبِيْدِۙ‏ அடியார்களுக்கு
8:51. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.
8:51. (மேலும், வானவர்கள் அவர்களை நோக்கி) ‘‘முன்னர் உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டவற்றின் காரணமாகவே இது (இவ்வேதனை உங்களுக்கு) ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களில் எவரையும் ஒரு சிறிதும் அநியாயம் செய்வதேயில்லை'' (என்றும் கூறுவார்கள்.)
8:51. உங்கள் கைகள் முன்பே சம்பாதித்த செயல்களினால் விளைந்த தண்டனைதான் இது! திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகளுக்கு அநீதி இழைப்பவன் அல்லன்.”
8:51. (அன்றி மலக்குகள் அவர்களிடம்) அவ்வேதனையான)து உங்கள் கைகள் (தேடி) முற்படுத்தியவைகளின் காரணத்தினாலாகும், நிச்சயமாக, அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனாக இல்லை (என்றும் கூறுவார்கள்.)
8:52
8:52 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ‌ۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ‏
كَدَاْبِ நிலைமையைப் போன்று اٰلِ சமுதாயம் فِرْعَوْنَ‌ۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَفَرُوْا நிராகரித்தனர் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَاَخَذَهُمُ ஆகவே அவர்களைத் தண்டித்தான் اللّٰهُ அல்லாஹ் بِذُنُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய பாவங்களினால் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் قَوِىٌّ மிக வலிமையானவன் شَدِيْدُ கடுமையானவன் الْعِقَابِ‏ தண்டிப்பதில்
8:52. (இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையதாகும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
8:52. ஃபிர்அவ்னுடைய மக்களின் நிலைமை, இன்னும் அவர்களுக்கு முன்னிருந்த வர்களின் நிலைமை போலவே (இவர்களுடைய நிலைமையும் இருக்கிறது.) அவர்களும் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தனர். ஆதலால், அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவனும், வேதனை செய்வதில் மிகக் கடினமானவனும் ஆவான்.
8:52. இவர்களுக்கு நேர்ந்த கதி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் நேர்ந்தது போன்றதாகும். அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆகையால், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். திண்ணமாக, அல்லாஹ் மிக்க வலிமையுடையவனாகவும் கடும் தண்டனை அளிப்பவனாகவும் இருக்கின்றான்.
8:52. (நாம் தண்டிப்பதில்) “ஃபிர் அவ்னுடைய கூட்டத்தார், இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையும் போலவே (இவர்களுடைய நிலைமையும்) இருக்கிறது, அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்தனர், ஆதலால், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான், நிச்சயமாக, அல்லாஹ் வல்லமை மிக்கவன், தண்டிப்பதில் மிகக் கடினமானவன்.
8:53
8:53 ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِّـعْمَةً اَنْعَمَهَا عَلٰى قَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ۙ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
ذٰلِكَ அதற்கு بِاَنَّ காரணம், நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَمْ يَكُ இருக்கவில்லை مُغَيِّرًا மாற்றுபவனாக نِّـعْمَةً ஓர் அருட்கொடையை اَنْعَمَهَا அருள்புரிந்தான்/அதை عَلٰى மீது قَوْمٍ ஒரு சமுதாயம் حَتّٰى வரை يُغَيِّرُوْا மாற்றுவார்கள் مَا எதை بِاَنْفُسِهِمْ‌ۙ தங்களிடம் وَاَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌۙ‏ நன்கறிந்தவன்
8:53. “ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:53. எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை. (அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதனால்தான் அவர்களுக்கு இவ்வேதனை ஏற்பட்டது.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக்க அறிந்தவன் ஆவான்.
8:53. ‘எந்தச் சமுதாயத்தாரும் தங்களின் நடை முறையை மாற்றிக் கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ்வும் அவர்களுக்குப் புரிந்த எந்த ஓர் அருட் கொடையையும் மாற்றுவதில்லை’ எனும் அல்லாஹ்வின் நியதிக்கேற்பவே இது நடைபெற்றது. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:53. அவ்வாறு தண்டிப்பது நிச்சயமாக அல்லாஹ் எந்த ஒரு அருட்கொடையையும்-ஒரு சமூகத்தார் மீது அவன் அருட் செய்தானே அதை (அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல், அவனுக்குக் கீழ்படிந்து நடத்தல், போன்ற) தங்களுக்குள்ள நிலைகளை அ(ச்சமூகத்த)வர்கள் மாற்றிக்கொள்ளாத வரையில் அவன் மாற்றுபவனாக இல்லை என்ற காரணத்தினாலாகும், நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
8:54
8:54 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ‌ۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ‌ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِيْنَ‏
كَدَاْبِ நிலைமையைப் போன்று اٰلِ சமுதாயம் فِرْعَوْنَ‌ۙ ஃபிர்அவ்னுடைய وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னர் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِ வசனங்களை رَبِّهِمْ தங்கள் இறைவனின் فَاَهْلَكْنٰهُمْ அழித்தோம்/அவர்களை بِذُنُوْبِهِمْ அவர்களுடைய பாவங்களினால் وَاَغْرَقْنَاۤ இன்னும் மூழ்கடித்தோம் اٰلَ சமுதாயம் فِرْعَوْنَ‌ۚ ஃபிர்அவ்னுடைய وَكُلٌّ எல்லோரும் كَانُوْا இருந்தனர் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
8:54. ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
8:54. (ஆகவே, இவர்களின் நிலைமை நாம் முன்பு கூறியபடி) ஃபிர்அவ்னின் மக்களின் நிலைமையைப் போலும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலுமே இருக்கிறது. (அவர்களும் இவர்களைப் போலவே) தங்கள் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர்அவ்னுக்கு முன்னிருந்த) அவர்களை அழித்துவிட்டதுடன் ஃபிர்அவ்னுடைய மக்களையும் நாம் மூழ்கடித்துவிட்டோம். (இவர்கள்) அனைவரும் அநியாயக்காரர்களாகவே இருந்தனர்.
8:54. ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அவர்களுக்கு முன் சென்றவர்களுக்கும் நேர்ந்த கதி இந்த நியதியின்படியே ஏற்பட்டது. தங்களுடைய இறைவனின் சான்றுகளை அவர்கள் பொய்யெனக் கூறினார்கள். அப்போது, அவர்கள் செய்த பாவச் செயல்களின் காரணமாக அவர்களை நாம் அழித்தோம். இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் கொடுமை இழைப்பவர்களாய் இருந்தார்கள்.
8:54. “ஃபிர் அவ்னுடைய கூட்டத்தார், இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமையைப் போலவே (இவர்களின் நிலைமையும் இருக்கின்றது, அவர்களும், (இவர்களைப்போலவே) தங்கள் இரட்சகனின் அத்தாட்சிகளைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர், ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக நாம் (பலவகை வேதனைகளைக் கொண்டு ஃபிர் அவ்னுக்கு முன்னிருந்த அவர்களை) அழித்துவிட்டோம், மேலும், ஃபிர் அவ்னுடைய கூட்டத்தினரை நாம் (தண்ணீரில்) மூழ்கடித்து விட்டோம், இவர்கள் ஒவ்வொருவருமே அநியாயக்காரர்களாக இருந்தனர்.
8:55
8:55 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِيْنَ كَفَرُوْا فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‌ ۖ‌ ۚ‏
اِنَّ شَرَّ நிச்சயமாக கொடியவர்கள் الدَّوَآبِّ மிருகங்களில் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‌ ۖ‌ ۚ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
8:55. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களிலெல்லாம் மிகக் கெட்ட மிருகங்கள் (எவையென்றால்) நிராகரிப்பாளர்கள்தான். ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
8:55. திண்ணமாக, எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ, பிறகு (எவ்விதத்திலும்) அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லையோ அவர்கள்தாம் பூமியில் நடமாடும் படைப்புகளிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் மோசமானவர்கள்.
8:55. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக (பூமியில்) ஊர்ந்து திரிபவைகளில் மிகக் கெட்டவை நிராகரித்தார்களே அவர்கள்தாம், ஆகவே, அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
8:56
8:56 اَلَّذِيْنَ عَاهَدْتَّ مِنْهُمْ ثُمَّ يَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِىْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا يَـتَّـقُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் عَاهَدْتَّ ஒப்பந்தம் செய்தீர் مِنْهُمْ அவர்களிடம் ثُمَّ பிறகு يَنْقُضُوْنَ முறிக்கின்றனர் عَهْدَ ஒப்பந்தத்தை هُمْ தங்கள் فِىْ كُلِّ ஒவ்வொரு مَرَّةٍ முறையிலும் وَّهُمْ அவர்கள் لَا يَـتَّـقُوْنَ‏ அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை
8:56. (நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
8:56. (இவர்களில்) எவர்களுடன் நீர் உடன்படிக்கை செய்தபோதிலும் பின்னர், அந்த உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறித்தே வருகின்றனர். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதேயில்லை.
8:56. (குறிப்பாக) உம்மோடு ஒப்பந்தம் செய்து கொண்டு பின்னர் ஒவ்வொரு முறையும் தங்களுடைய ஒப்பந்தத்தை எவர்கள் முறிக்கின்றார்களோ, மேலும் கொஞ்சமும் இறையச்சம் கொள்ளாதிருக்கின்றார்களோ அவர்கள்தாம் இவர்களில் மிகவும் கெட்டவர்களாவர்.
8:56. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களில் (உள்ளோருடன்) நீர் உடன்படிக்கை செய்து கொண்டீர்; (அத்தகையோர் அல்லாஹ்விடத்தில் மிகக் கெட்டவர்களாவர்) பின்னர், அவர்களின் உடன்படிக்கையை ஒவ்வொரு தடவையும் அவர்கள் முறித்து விடுகின்றனர், அவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுவதுமில்லை.
8:57
8:57 فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِى الْحَـرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ நீர் பெற்றுக் கொண்டால் / அவர்களை فِى الْحَـرْبِ போரில் فَشَرِّدْ விரட்டியடிப்பீராக بِهِمْ அவர்களைக்கொண்டு مَّنْ எவர்கள் خَلْفَهُمْ அவர்களுக்குப் பின் لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏ அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
8:57. எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
8:57. போரில் நீர் அவர்களைச் சந்தித்தால் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களும் (திடுக்கிட்டு) பயந்தோடும்படி அவர்களைச் சிதறடித்து விடுவீராக. (இதனால்) அவர்கள் நல்லறிவு பெறலாம்.
8:57. எனவே, போரில் அவர்களை நீர் சந்தித்தால் அவர்களைச் சின்னாபின்னமாய்ச் சிதற அடித்து அவர்களுக்குப் பின்வருவோரைத் திகிலடையச் செய்திட வேண்டும். (உடன்படிக்கையை மீறுவதால் ஏற்படும் தீய கதியினைக் கண்டு) அவர்கள் படிப்பினை பெறக்கூடும்.
8:57. ஆகவே, யுத்தத்தில் நீங்கள் அவர்களை(த்தாக்கும் வாய்ப்பை)ப் பெற்றுவிட்டால், அவர்களைக் கொலை செய்வது கொண்டு, சிறை பிடிப்பது கொண்டு பின்னிருப்பவர்களை (பயந்தோடுமாறு) சிதறடித்து விடுவீராக! (இதனால்) அவர்கள் படிப்பினை பெறலாம்.
8:58
8:58 وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْۢبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَآءٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَآٮِٕنِيْنَ‏
وَاِمَّا تَخَافَنَّ நீர் பயந்தால் مِنْ இருந்து قَوْمٍ ஒரு சமுதாயம் خِيَانَةً மோசடியை فَانْۢبِذْ எறிவீராக اِلَيْهِمْ அவர்களிடம் عَلٰى سَوَآءٍ‌ ؕ சமமாக اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْخَآٮِٕنِيْنَ‏ மோசடிக்காரர்களை
8:58. (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
8:58. (உங்களுடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்த வகுப்பினரும் துரோகம் செய்வார்களென நீர் பயந்தால், அதற்குச் சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடுவீராக. நிச்சயமாக அல்லாஹ், துரோகிகளை நேசிப்பதேயில்லை.
8:58. (உடன்படிக்கை செய்து கொண்டு) ஏதாவது ஒரு கூட்டத்தினர் உம்மிடம் நம்பிக்கைத் துரோகமாக நடந்து கொள்வார்களோ என்று நீர் அஞ்சினால் (அவர்களின் உடன்படிக்கையை) வெளிப்படையாக அவர்களிடமே எறிந்து விடும்! திண்ணமாக, அல்லாஹ் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
8:58. மேலும், ஏதாவது ஒரு கூட்டத்தினரிடமிருந்து துரோகத்தை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக(வே அவ்வுடன்படிக்கையை) அவர்கள்பால் எறிந்துவிடும், நிச்சயமாக அல்லாஹ் துரோகம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
8:59
8:59 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَبَقُوْا‌ ؕ اِنَّهُمْ لَا يُعْجِزُوْنَ‏
وَلَا يَحْسَبَنَّ நிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் سَبَقُوْا‌ ؕ முந்திவிட்டனர் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يُعْجِزُوْنَ‏ அவர்கள் பலவீனப்படுத்த முடியாது
8:59. நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.
8:59. நிராகரிப்பவர்கள் தாங்கள் தப்பித்துக் கொண்டதாக ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்க முடியாது.
8:59. மேலும், இறைமறுப்பாளர்கள், தாம் தப்பித்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். திண்ணமாக, அவர்கள் நம்மை இயலாமையில் ஆழ்த்திட முடியாது.
8:59. நிராகரித்துக் கொண்டிருப்போர் (நம் தண்டனையிலிருந்து) தாங்கள் தப்பித்துவிட்டதாக அவர்கள் எண்ணவும் வேண்டாம், நிச்சயமாக அவர்கள் (நம்மை எதிலும்) இயலாமையில் ஆக்கிவிட மாட்டார்கள்.
8:60
8:60 وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَـيْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِيْنَ مِنْ دُوْنِهِمْ‌ ۚ لَا تَعْلَمُوْنَهُمُ‌ ۚ اَللّٰهُ يَعْلَمُهُمْ‌ؕ وَمَا تُـنْفِقُوْا مِنْ شَىْءٍ فِىْ سَبِيْلِ اللّٰهِ يُوَفَّ اِلَيْكُمْ وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ‏
وَاَعِدُّوْا ஏற்பாடு செய்யுங்கள் لَهُمْ அவர்களுக்கு مَّا اسْتَطَعْتُمْ உங்களுக்கு முடிந்ததை مِّنْ இருந்து قُوَّةٍ பலம் وَّمِنْ இன்னும் இருந்து رِّبَاطِ الْخَـيْلِ போர்க் குதிரைகள் تُرْهِبُوْنَ நீங்கள் அச்சுறுத்த வேண்டும் بِهٖ அதன் மூலம் عَدُوَّ எதிரிகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَعَدُوَّ இன்னும் எதிரிகளை كُمْ உங்கள் وَاٰخَرِيْنَ இன்னும் மற்றவர்களை مِنْ دُوْنِهِمْ‌ ۚ அவர்கள் அன்றி لَا تَعْلَمُوْنَهُمُ‌ ۚ நீங்கள் அறியமாட்டீர்கள்/அவர்களை اَللّٰهُ அல்லாஹ் يَعْلَمُهُمْ‌ؕ அறிவான்/அவர்களை وَمَا تُـنْفِقُوْا நீங்கள் எதை தர்மம் செய்தாலும் مِنْ شَىْءٍ பொருள்களில் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் يُوَفَّ முழுமையாக வழங்கப்படும் اِلَيْكُمْ உங்களுக்கு وَاَنْـتُمْ நீங்கள் لَا تُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
8:60. அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
8:60. அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
8:60. மேலும், அவர்களை எதிர்ப்பதற்கென உங்களால் முடிந்த அளவு அதிகமான வலிமையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படையையும் திரட்டி வையுங்கள்! இவற்றின் மூலம் அல்லாஹ்வுக்கும், உங்களுக்கும் பகைவர்களாய் உள்ளவர்களையும் இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் நீங்கள் திகிலடையச் செய்திட வேண்டும். அந்தப் பகைவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆனால் அல்லாஹ் அவர்களை அறிவான். மேலும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதனைச் செலவு செய்தாலும் அதற்குரிய முழுமையான கூலி உங்களுக்கு வழங்கப்படும். மேலும், நீங்கள் ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.
8:60. மேலும், அவர்களுக்காக (அவர்களோடு போர் செய்வதற்காக) உங்களுக்கு பலத்தால் சாத்தியமானதையும், (திறமையான) போர்க் குதிரைகளைக் கட்டி வைப்பதையும் நீங்கள் (எந்நேரமும் தயார் செய்து வையுங்கள், இதனால், அல்லாஹ்வுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் இவர்களல்லாத மற்றவர்களையும் பயப்படச் செய்வீர்கள், அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள், அல்லாலாஹ்தான் அவர்களை அறிவான், (இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் அதன் கூலியை உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும், (அதில் ஒரு சிறிதும்) நீங்கள் அநீதி இழைக்கப்படவுமாட்டீர்கள்.
8:61
8:61 وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَاِنْ جَنَحُوْا அவர்கள் இணங்கினால் لِلسَّلْمِ சமாதானத்திற்கு فَاجْنَحْ நீர் இணங்குவீராக لَهَا அதற்கு وَتَوَكَّلْ நம்பிக்கை வைப்பீராக عَلَى மீது اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
8:61. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:61. (நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன்.
8:61. (நபியே!) பகைவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீரும் அதற்குத் தயாராகிவிடும். இன்னும், அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
8:61. அன்றியும் அவர்கள் சமாதானத்தின்பக்கம் சாய்ந்தால் அப்பொழுது நபியே! நீரும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே (காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கையும் வைப்பீராக! நிச்சயமாக அவனே செவியுறுவோன், (யாவற்றையும்) நன்கறிந்தோன்.
8:62
8:62 وَاِنْ يُّرِيْدُوْۤا اَنْ يَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ‌ؕ هُوَ الَّذِىْۤ اَيَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِيْنَۙ‏
وَاِنْ يُّرِيْدُوْۤا அவர்கள் நாடினால் اَنْ يَّخْدَعُوْ அவர்கள் வஞ்சிக்க كَ உம்மை فَاِنَّ நிச்சயமாக حَسْبَكَ உமக்குப் போதுமானவன் اللّٰهُ‌ؕ அல்லாஹ்தான் هُوَ அவன் الَّذِىْۤ எவன் اَيَّدَ பலப்படுத்தினான் كَ உம்மை بِنَصْرِهٖ தன் உதவியைக் கொண்டு وَبِالْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களைக் கொண்டு
8:62. அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
8:62. (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
8:62. அவர்கள் உம்மை ஏமாற்ற முனைந்தால் அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கின்றான். தன்னுடைய உதவியினாலும் இறைநம்பிக்கையாளர் மூலமாகவும் உமக்கு வலுவூட்டியவனும் அவனே.
8:62. மேலும், (நபியே!) அவர்கள் ஏமாற்றி உமக்குச் சதி செய்யக் கருதினால் அப்பொழுது (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக, அல்லாஹ் உமக்குப் போதுமானவன், அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், விசுவாசிகளைக் கொண்டும் பலப்படுத்தினான்.
8:63
8:63 وَاَلَّفَ بَيْنَ قُلُوْبِهِمْ‌ؕ لَوْ اَنْفَقْتَ مَا فِى الْاَرْضِ جَمِيْعًا مَّاۤ اَلَّفْتَ بَيْنَ قُلُوْبِهِمْ وَلٰـكِنَّ اللّٰهَ اَلَّفَ بَيْنَهُمْ‌ؕ اِنَّهٗ عَزِيْزٌ حَكِيْمٌ‏
وَاَلَّفَ ஒன்றிணைத்தான் بَيْنَ இடையில் قُلُوْبِهِمْ‌ؕ அவர்களுடைய உள்ளங்கள் لَوْ اَنْفَقْتَ நீர் செலவு செய்தால் مَا فِى الْاَرْضِ பூமியிலுள்ளவை جَمِيْعًا அனைத்தையும் مَّاۤ اَلَّفْتَ بَيْنَ ஒன்றிணைத்திருக்க மாட்டீர்/மத்தியில் قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்கள் وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اَلَّفَ ஒன்றிணைத்தான் بَيْنَهُمْ‌ؕ அவர்களுக்கு மத்தியில் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:63. மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
8:63. அந்த நம்பிக்கையாளர்களுடைய உள்ளங்களில் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி (சிதறிக்கிடந்த அவர்களை) ஒன்று சேர்த்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய உள்ளங்களில் அன்பையூட்ட உம்மால் முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை (அன்பின் மூலம்) ஒன்று சேர்த்தான். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன்.
8:63. அவர்களுக்கிடையே உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியவனும் அவனே! உலகத்திலுள்ள பொருள்கள் அனைத்தையும் நீர் செலவழித்தாலும் அவர்களிடையே உளப்பூர்வமான இணைப்பை உம்மால் ஏற்படுத்தியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைப் பிணைத்தான். திண்ணமாக, அவன் வலிமைமிக்கவனும் நுண்ணறிவாளனுமாவான்.
8:63. மேலும், (விசுவாசிகளாகிய) அவர்களுடைய இதயங்களுக்கிடையில் (சிதறிக்கிடந்த அவர்களை இஸ்லாத்தின் மூலம்) அன்பையூட்டினான், பூமியிலுள்ள யாவையும் நீர் செலவு செய்தபோதிலும் அவர்களுடைய இதயங்களில் அன்பையூட்ட உம்மால் முடிந்திருக்காது, எனினும், அல்லாஹ்தான் அவர்களுக்கிடையில் அன்பை உண்டாக்கினான், நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
8:64
8:64 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَسْبُكَ اللّٰهُ وَ مَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! حَسْبُكَ உமக்குப் போதுமானவன் اللّٰهُ அல்லாஹ்தான் وَ مَنِ இன்னும் எவருக்கு اتَّبَعَكَ உம்மைப் பின்பற்றினார் مِنَ இருந்து مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
8:64. நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
8:64. நபியே! உமக்கும், நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின்பற்றியவர்களுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
8:64. நபியே! உமக்கும், உம்மைப் பின்பற்றுகின்ற இறைநம்பிக்கையாளர்களுக்கும் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
8:64. நபியே! உமக்கும் உம்மைப் பின்பற்றிய விசுவாசிகளுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
8:65
8:65 يٰۤـاَيُّهَا النَّبِىُّ حَرِّضِ الْمُؤْمِنِيْنَ عَلَى الْقِتَالِ‌ ؕ اِنْ يَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صَابِرُوْنَ يَغْلِبُوْا مِائَتَيْنِ‌ ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ يَّغْلِبُوْۤا اَ لْفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! حَرِّضِ தூண்டுவீராக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை عَلَى الْقِتَالِ‌ ؕ போருக்கு اِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் عِشْرُوْنَ இருபது (நபர்கள்) صَابِرُوْنَ பொறுமையாளர்கள் يَغْلِبُوْا வெல்வார்கள் مِائَتَيْنِ‌ ۚ இரு நூறு(நபர்களை) وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ இருந்தால்/உங்களில் مِّائَةٌ நூறு (நபர்கள்) يَّغْلِبُوْۤا வெல்வார்கள் اَ لْفًا ஆயிரம் (நபர்களை) مِّنَ இருந்து الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் قَوْمٌ மக்கள் لَّا يَفْقَهُوْنَ‏ சிந்தித்து விளங்க மாட்டார்கள்
8:65. நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
8:65. நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் (தயாராகும்படித்) தூண்டுவீராக. உங்களில் பொறுமையும், சகிப்புத்தன்மையும் உடைய இருபது பேர்கள் இருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு பேர்கள் இருந்தால் நிராகரிப்பவர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள். (நீங்கள் மிகக் குறைவாக இருந்தும் அவர்களை துணிவுடன் எதிர்க்கலாம் என்று கூறியது, உங்களுக்கு அல்லாஹ் புரியும் உதவியை). நிச்சயமாக அவர்கள் அறியாத மக்களாக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
8:65. நபியே! போர்புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக! உங்களில் நிலைகுலையாத இருபது பேர் இருப்பின் (இறைமறுப்பாளர்களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும், இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால், இறை மறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கின்றார்கள்.
8:65. நபியே! நீர், விசுவாசிகளை யுத்தத்திற்குத் (தயாராகும்படி) தூண்டுவீராக! உங்களில் (சகிப்புத்,தன்மையும், உறுதியும் கொண்ட) பொறுமையாளர்களான இருபது பேர்களிருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள், உங்களில் (அத்தகைய) நூறு பேர்களிருந்தால், நிராகரிப்போரில் ஆயிரம்பேரை வெற்றிக்கொண்டு விடுவார்கள், நிச்சயமாக இவர்கள், விளங்கிக் கொள்ளாத கூட்டத்தினராக இருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
8:66
8:66 اَلْـٰٔـنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِيْكُمْ ضَعْفًا‌ؕ فَاِنْ يَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ يَّغْلِبُوْا مِائَتَيْنِ‌ۚ وَاِنْ يَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ يَّغْلِبُوْۤا اَلْفَيْنِ بِاِذْنِ اللّٰهِؕ وَ اللّٰهُ مَعَ الصّٰبِرِيْنَ‏
اَلْـٰٔـنَ இப்போது خَفَّفَ இலகுவாக்கினான் اللّٰهُ அல்லாஹ் عَنْكُمْ உங்களுக்கு وَعَلِمَ இன்னும் அறிந்தான் اَنَّ நிச்சயமாக فِيْكُمْ உங்களில் ضَعْفًا‌ؕ பலவீனம் فَاِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் مِّائَةٌ நூறு (நபர்கள்) صَابِرَةٌ பொறுமையாளர்கள் يَّغْلِبُوْا வெல்வார்கள் مِائَتَيْنِ‌ۚ இரு நூறு(நபர்களை) وَاِنْ يَّكُنْ இருந்தால் مِّنْكُمْ உங்களில் اَلْفٌ ஆயிரம் (நபர்கள்) يَّغْلِبُوْۤا வெல்வார்கள் اَلْفَيْنِ இரண்டாயிரம் (நபர்களை) بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِؕ அல்லாஹ்வின் وَ اللّٰهُ அல்லாஹ் مَعَ உடன் الصّٰبِرِيْنَ‏ பொறுமையாளர்கள்
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
8:66. எனினும், நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு தற்சமயம் (அதை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். ஆகவே, உங்களில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் உடைய நூறு பேர்களிருந்தால் (மற்ற) இருநூறு பேர்களை வென்றுவிடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை வென்று விடுவார்கள். அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
8:66. இப்போது அல்லாஹ் உங்கள் சுமையைக் குறைத்துவிட்டான். இப்பொழுதும் உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே, உங்களில் நூறு பேர் உறுதி குலையாதவர்களாய் இருந்தால், இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். அத்தகையோர் உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் பேரை அவர்கள் வென்று விடுவார்கள். மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
8:66. நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்து கொண்டு - இப்பொழுது (அதனை) உங்களுக்கு இலேசாக்கி விட்டான், ஆகவே – உங்களில் (சகிப்புத் தன்மையும்- உறுதியும் கொண்ட) பொறுமையுடைய நூறு பேர்களிருந்தால், (மற்ற) இரு நூறு பேர்களை அவர்கள் வெற்றி கொண்டு விடுவார்கள், (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களில் இருந்தால் அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு (மற்ற) இரண்டாயிரம் பேர்களை அவர்கள் வெற்றி கொண்டு விடுவார்கள். அல்லாஹ்வோ பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
8:67
8:67 مَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّكُوْنَ لَهٗۤ اَسْرٰى حَتّٰى يُثْخِنَ فِى الْاَرْضِ‌ؕ تُرِيْدُوْنَ عَرَضَ الدُّنْيَا ۖ  وَاللّٰهُ يُرِيْدُ الْاٰخِرَةَ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ‏
مَا كَانَ ஆகுமானதல்ல لِنَبِىٍّ ஒரு நபிக்கு اَنْ يَّكُوْنَ இருப்பது لَهٗۤ அவருக்கு اَسْرٰى கைதிகள் حَتّٰى வரை يُثْخِنَ கொன்று குவிப்பார் فِى الْاَرْضِ‌ؕ பூமியில் تُرِيْدُوْنَ நாடுகிறீர்கள் عَرَضَ பொருளை الدُّنْيَا உலகத்தின் ۖ  وَاللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் الْاٰخِرَةَ‌ ؕ மறுமையை وَاللّٰهُ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:67. (விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
8:67. (இஸ்லாமையும் முஸ்லிம்களையும் அழித்தொழிக்க வந்த) எதிரிகளை கொன்று குவிக்கும் வரை அவர்களை கைதியாக்குவது இறைத்தூதருக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
8:67. பூமியில் பகைவர்களை முற்றிலும் முறியடிக்காத வரையில் அவர்களைச் சிறைப்பிடிப்ப(தில் ஈடுபடுவ)து எந்த நபிக்கும் உகந்ததல்ல. நீங்கள் உலக ஆதாயங்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமை நலன்களை விரும்புகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
8:67. எந்த நபிக்கும் இரத்தத்தைப் பூமியில் ஓட்டாத வரையில் போர்க்கைதிகள் அவருக்கு இருப்பது தகுமானதல்ல; நீங்கள் இவ்வுலகப் பொருளை நாடுகின்றீர்கள், அல்லாஹ்வோ (உங்களுடைய) மறுமை (வாழ்க்கை)யை நாடுகின்றான், இன்னும் அல்லாஹ் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
8:68
8:68 لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِيْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
لَوْلَا كِتٰبٌ விதி இல்லையெனில் مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் سَبَقَ முந்தியது لَمَسَّكُمْ பிடித்தே இருக்கும்/உங்களை فِيْمَاۤ எதில் اَخَذْتُمْ வாங்கினீர்கள் عَذَابٌ عَظِيْمٌ‏ மகத்தான வேதனை
8:68. அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
8:68. அல்லாஹ்விடம் (உங்களுக்கு மன்னிப்பு) ஏற்கனவே உறுதி செய்யப் படாமலிருப்பின் நீங்கள் (பத்ரு போரில் கைதிகளிடமிருந்து பிணைத் தொகையை) வாங்கியதில் பெரியதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
8:68. அல்லாஹ்வின் தீர்ப்பு முன்னரே எழுதப்படாமல் இருந்தால், நீங்கள் (கைதிகளிடமிருந்து) பெற்றுக் கொண்டவற்றுக்குப் பகரமாக உங்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.
8:68. அல்லாஹ்விடமிருந்து ஓர் எழுத்து முந்தி விடாதிருப்பின், நீங்கள், (பத்ருப்போரின் போது ஈட்டுப் பணத்தை) எடுத்துக்கொண்டதில் மகத்தானதொரு வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
8:69
8:69 فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلاً طَيِّبًا ۖ  وَّاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
فَكُلُوْا ஆகவே, புசியுங்கள் مِمَّا எதில் غَنِمْتُمْ வென்றீர்கள் حَلٰلاً ஆகுமானதை طَيِّبًا ۖ  நல்ல وَّاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ‌ ؕ அல்லாஹ்வை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
8:69. ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  
8:69. ஆகவே, (எதிரிகளிடமிருந்து) உங்களுக்குக் கிடைத்தவற்றை, நல்ல ஆகுமான பொருள்களாகவே (கருதிப்) புசியுங்கள். (இனி இத்தகைய விஷயங்களில்) அல்லாஹ் வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
8:69. எனவே, நீங்கள் போரில் கைப்பற்றிய பொருள்களை உண்ணுங்கள்; அவை அனுமதிக்கப்பட்டவையும் தூய்மையானவையுமாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்து வாருங்கள்! திண்ணமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
8:69. ஆகவே, போரில் நீங்கள் அடைந்த வெற்றிப்பொருளிலிருந்து (அதை) ஆகுமானதாக, நல்லதாக(ப்) புசியுங்கள், மேலும், அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக்க நன்கறிகிறவன், மிகக் கிருபையுடையவன்.
8:70
8:70 يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّمَنْ فِىْۤ اَيْدِيْكُمْ مِّنَ الْاَسْرٰٓىۙ اِنْ يَّعْلَمِ اللّٰهُ فِىْ قُلُوْبِكُمْ خَيْرًا يُّؤْتِكُمْ خَيْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَيَغْفِرْ لَـكُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤـاَيُّهَا النَّبِىُّ நபியே! قُلْ கூறுவீராக لِّمَنْ எவருக்கு فِىْۤ اَيْدِيْكُمْ உங்கள் கரங்களில் مِّنَ الْاَسْرٰٓىۙ கைதிகளில் اِنْ يَّعْلَمِ அறிந்தால் اللّٰهُ அல்லாஹ் فِىْ قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களில் خَيْرًا நல்லதை يُّؤْتِكُمْ கொடுப்பான்/உங்களுக்கு خَيْرًا சிறந்ததை مِّمَّاۤ எதைவிட اُخِذَ எடுக்கப்பட்டது مِنْكُمْ உங்களிடமிருந்து وَيَغْفِرْ மன்னிப்பான் لَـكُمْ‌ؕ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
8:70. நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக: “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
8:70. நபியே! உங்களிடம் சிறைப்பட்டிருப்பவர்களை நோக்கிக் கூறும்: ‘‘உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றைவிட மிக்க மேலானவற்றை உங்களுக்குக் கொடுத்து உங்கள் குற்றங்களை (அவன்) மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையாளன் ஆவான்.
8:70. நபியே! உங்கள் கைவசத்திலுள்ள கைதிகளிடம் நீர் கூறும்: “உங்கள் உள்ளங்களில் (சிறிதளவாவது) நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிவானாகில், உங்களிட மிருந்து வாங்கப்பட்டதை விடவும் சிறப்பானதை அவன் உங்களுக்கு வழங்குவான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.”
8:70. நபியே! உங்கள் கைகளின் வசத்தில் இருக்கும் கைதிகளிடம் கூறுவீராக! “உங்களுடைய உள்ளங்களில் ஏதேனும் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுக்கப்பட்டதைவிட மிக சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பான், இன்னும் அல்லாஹ், மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
8:71
8:71 وَاِنْ يُّرِيْدُوْا خِيَانَـتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَاِنْ يُّرِيْدُوْا அவர்கள் நாடினால் خِيَانَـتَكَ உமக்கு மோசடி செய்ய فَقَدْ خَانُوا மோசடிசெய்துள்ளனர் اللّٰهَ அல்லாஹ்வுக்கு مِنْ قَبْلُ முன்னர் فَاَمْكَنَ ஆகவே ஆதிக்கமளித்தான் مِنْهُمْ ؕ அவர்கள் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
8:71. (நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
8:71. (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீர் கவலைப்படாதீர்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.
8:71. ஆயினும், அவர்கள் உமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய நினைத்தால் - இதற்கு முன் அவர்கள் அல்லாஹ்வுக்கே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் உம்மைக் கொண்டு அவர்களைக் கைது செய்ய வைத்தான் அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
8:71. (நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) இதற்கு முன்னரும் அவர்கள், அல்லாஹ்வுக்கு மோசம் செய்திருக்கிறார்கள், ஆதலால்தான், அவர்களிலிருந்து(ச் சிறைப்படுத்த உமக்கு) அவன் சக்தி அளித்தான், அல்லாஹ் (அனைத்தையும்) மிக்க அறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
8:72
8:72 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يُهَاجِرُوْا مَا لَـكُمْ مِّنْ وَّلَايَتِهِمْ مِّنْ شَىْءٍ حَتّٰى يُهَاجِرُوْا‌ ۚ وَاِنِ اسْتَـنْصَرُوْكُمْ فِى الدِّيْنِ فَعَلَيْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் بِاَمْوَالِهِمْ தங்கள் பொருள்களாலும் وَاَنْفُسِهِمْ இன்னும் தங்கள் உயிர்களாலும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰوَوْا அரவணைத்தனர் وَّنَصَرُوْۤا இன்னும் உதவினர் اُولٰۤٮِٕكَ இவர்கள் بَعْضُهُمْ இவர்களில் சிலர் اَوْلِيَآءُ பொறுப்பாளர்கள் بَعْضٍ‌ؕ சிலருக்கு وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَلَمْ يُهَاجِرُوْا ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லை مَا لَـكُمْ உங்களுக்கு ஆகுமானதல்ல مِّنْ இருந்து وَّلَايَتِهِمْ அவர்களுக்கு பொறுப்பு مِّنْ شَىْءٍ எந்த ஒன்றுக்கும் حَتّٰى வரை يُهَاجِرُوْا‌ ۚ ஹிஜ்ரா செல்வார்கள் وَاِنِ اسْتَـنْصَرُوْ அவர்கள் உதவி தேடினால் كُمْ உங்களிடம் فِى الدِّيْنِ மார்க்கத்தில் فَعَلَيْكُمُ உங்கள் மீது கடமை النَّصْرُ உதவுவது اِلَّا தவிர عَلٰى எதிராக قَوْمٍۢ ஒரு சமுதாயம் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ ؕ உடன்படிக்கை وَاللّٰهُ அல்லாஹ் بِمَا எவற்றை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
8:72. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
8:72. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரை நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.
8:72. எவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் ஹிஜ்ரத் செய்து (நாட்டைத் துறந்து சென்று) அல்லாஹ்வின் வழியில் தங்களின் உயிர்களாலும் உடைமைகளாலும் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு) தஞ்சம் அளித்து உதவியும் புரிந்தார்களோ அவர்களும் உண்மையில் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் (தாருல் இஸ்லாமிற்கு) ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விஷயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில்! ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவிகோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவிகூட) உங்களோடு உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
8:72. நிச்சயமாக விசுவாசங் கொண்டு (தங்கள்) ஊரைவிட்டும் வெளியேறி அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தார்களே அத்தகையோரும், அவர்களுக்கு(த் தங்கள் வீடுகளில் இடமளித்து (வைத்துக் கொண்டு) உதவியும் புரிந்தார்களே அத்தகையோருமாகிய இவர்கள்-இவர்களில் சிலர் சிலருக்கு உற்ற நண்பர்களாவார்கள், இன்னும் விசுவாசங்கொண்டு (தங்கள்) ஊரைவிட்டு ஹிஜ்ரத்துச் செய்து புறப்படாமலிருக்கின்றனரே அத்தகையவர்கள்-அவர்கள், (தங்களுடைய) ஊரைவிட்டு புறப்படும் (ஹிஜ்ரத்துச் செய்யும்) வரையில் அவர்களுடைய நட்பில் உங்களுக்கு எதுவும் இல்லை, (எனினும்) அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும், (ஆயினும் வேறொரு சமூகத்தாராகிய) அவர்களுக்கும், உங்களுக்குமிடையில் உடன்படிக்கை உள்ள(தோ அந்த) சமூகத்தாரைத் தவிர, (அவர்களுக்கு விரோதமாக உதவி செய்வது கூடாது.) மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை பார்க்கிறவன்.
8:73
8:73 وَالَّذِيْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِى الْاَرْضِ وَفَسَادٌ كَبِيْرٌؕ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلِيَآءُ பொறுப்பாளர்கள் بَعْضٍ‌ؕ சிலருக்கு اِلَّا تَفْعَلُوْهُ நீங்கள் செய்யவில்லையென்றால் / அதை تَكُنْ ஆகிவிடும் فِتْنَةٌ குழப்பம் فِى الْاَرْضِ பூமியில் وَفَسَادٌ இன்னும் கலகம் كَبِيْرٌؕ‏ பெரியது
8:73. நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
8:73. நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே, அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்திரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும்.
8:73. சத்தியத்தை நிராகரித்துக் கொண்டிருப்போர் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாய் இருக்கின்றார்கள். எனவே, நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் பூமியில் குழப்பமும் பெரும் சீர்குலைவும் ஏற்பட்டுவிடும்.
8:73. மேலும், நிராகரித்துக் கொண்டிருப்பவர்கள்-அவர்களில் சிலர், சிலருக்கு பாதுகாவலர்களாவர், (இணை வைப்பவர்களைத் தவிர்த்து விசுவாசிகளை நீங்கள் உங்களின் காரியஸ்தர்களாக ஆக்கிக் கொள்ளும்) இதை நீங்கள் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டுவிடும்.
8:74
8:74 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالَّذِيْنَ اَاوَوْا وَّنَصَرُوْۤا اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا‌ ؕ لَّهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجٰهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اَاوَوْا அரவணைத்தனர் وَّنَصَرُوْۤا இன்னும் உதவினர் اُولٰۤٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் حَقًّا‌ ؕ உண்மையில் لَّهُمْ இவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு وَّرِزْقٌ இன்னும் உணவு كَرِيْمٌ‏ கண்ணியமானது
8:74. எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
8:74. எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர்புரிகிறார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும், பல) உதவியும் செய்கிறார்களோ அவர்களும்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.
8:74. மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும்தாம் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்குப் பாவமன்னிப்பு இருக்கிறது. மேலும் நற்பேறுகளும் இருக்கின்றன.
8:74. விசுவாசங்கொண்டு (தங்களுடைய) ஊரை விட்டும் வெளியேறி (ஹிஜ்ரத்தும் செய்து) அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிகின்றார்களே அத்தகையோரும் இன்னும், இவர்களுக்கு இடமளித்து(த் தங்களுடைய வீடுகளில்) வைத்துக் கொண்டு இவர்களுக்கு உதவியும் செய்கின்றார்களே அத்தகையோருமாகிய இவர்கள் தாம் உண்மையான விசுவாசிகள், அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான ஆகாரமும் உண்டு.
8:75
8:75 وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْۢ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ فَاُولٰۤٮِٕكَ مِنْكُمْ‌ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் مِنْۢ بَعْدُ பின்னர் وَهَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் مَعَكُمْ உங்களுடன் فَاُولٰۤٮِٕكَ அவர்கள் مِنْكُمْ‌ؕ உங்களைச் சேர்ந்தவர்கள்தான் وَاُولُوا الْاَرْحَامِ இரத்த பந்தங்கள் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اَوْلٰى நெருக்கமானவர் بِبَعْضٍ சிலருக்கு فِىْ كِتٰبِ வேதத்தில் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
8:75. இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
8:75. (இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர் புரிகிறார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
8:75. மேலும் அவர்களுக்குப் பின்னர் எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து, மேலும் உங்களுடன் சேர்ந்து போராடினார்களோ, அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்கள்தாம். ஆயினும், அல்லாஹ்வின் வேதப்படி, இரத்தபந்தமுடையவர்கள்தாம் ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதில் அதிக உரிமையுடையவர்களாவர். திண்ணமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
8:75. இதன் பின்னரும் விசுவாசங்கொண்டு (தங்களுடைய) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து விரோதியை எதிர்த்து யுத்தம் புரிகின்றார்களே அத்தகையோர் - அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள்; (இன்னும்) இரத்தக்கலப்புடைய பந்துக்கள் அல்லாஹ்வுடைய வேதத்தில் உள்ளபடி அவர்களில் சிலர் சிலருக்கு (வாரிசு உரிமை பெற) மிக உரியவர்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.