82. ஸூரத்துல் இன்ஃபிதார்(வெடித்துப் போதல்)
மக்கீ, வசனங்கள்: 19

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
82:1
82:1 اِذَا السَّمَآءُ انْفَطَرَتْۙ‏
اِذَا போது السَّمَآءُ வானம் انْفَطَرَتْۙ‏ பிளந்துவிடும்
82:1. வானம் பிளந்து விடும்போது-
82:1. (உலக முடிவில்) வானம் வெடித்துவிட்டால்,
82:1. வானம் வெடித்து விடும்போது
82:1. வானம் வெடித்துவிடும்போது-
82:2
82:2 وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْكَوَاكِبُ நட்சத்திரங்கள் انْتَثَرَتْۙ‏ விழுந்து சிதறும்
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:2. நட்சத்திரங்கள் சிதறிவிட்டால்,
82:2. மேலும், தாரகைகள் உதிர்ந்துவிடும்போது
82:2. நட்சத்திரங்ளும் உதிர்ந்து (சிதறி) விடும்போது-
82:3
82:3 وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْبِحَارُ கடல்கள் فُجِّرَتْۙ‏ பிளக்கப்பட்டு
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:3. கடல்கள் பிளக்கப்பட்டுவிட்டால்,
82:3. மேலும், கடல்கள் பிளக்கப்படும்போது
82:3. கடல்களும் பொங்க வைக்கப்பட்டு (அவைகளுக்கு மத்தியிலுள்ள திரைகள் அகற்றப்பட்டு ஒன்றாகி)விடும்போது-
82:4
82:4 وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْقُبُوْرُ சமாதிகள் بُعْثِرَتْۙ‏ புரட்டப்படும்
82:4. மண்ணறைகள் திறக்கப்படும் போது,
82:4. சமாதிகளும் திறக்கப்பட்டால் (மரணித்தவர்கள் உயிர் பெற்றெழுந்து,)
82:4. மேலும், அடக்கத்தலங்கள் திறந்துவிடப்படும்போது
82:4. மண்ணறைகளும் மேலும் கீழுமாக புரட்டப்பட்டு (அவற்றிலுள்ள இறப்பெய்தியோரை வெளியேற்றப்பட்டுவிடும்போது-
82:5
82:5 عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْؕ‏
عَلِمَتْ அறியும் نَفْسٌ ஓர் ஆன்மா مَّا எதை قَدَّمَتْ முற்படுத்தியது وَاَخَّرَتْؕ‏ இன்னும் பிற்படுத்தியது
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
82:5. ஒவ்வோர் ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றையும், (உலகத்தில்) தான் விட்டு வந்தவற்றையும் நன்கறிந்துகொள்ளும்.
82:5. ஒவ்வொரு மனிதனும் தான் முன்பும் பின்பும் செய்த செயல்கள் அனைத்தையும் அப்போது நன்கு அறிந்துகொள்வான்.
82:5. ஓவ்வோர் ஆத்மாவும், (மறுமைக்காக) தான் முற்படுத்தியதையும் பிற்படுத்தியதையும் நன்கறிந்து கொள்ளும்.
82:6
82:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ மனிதனே! مَا எது? غَرَّكَ உன்னை ஏமாற்றியது بِرَبِّكَ உன் இறைவனைப் பற்றி الْكَرِيْمِۙ‏ கண்ணியவான்
82:6. மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
82:6. மனிதனே! மிக கண்ணியம் உள்ள உனது இறைவனைப் பற்றி உன்னை மயக்கிவிட்டது எது?
82:6. மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது?
82:6. மனிதனே! கொடையாளனாகிய உமதிரட்சகனுக்கு மாறு செய்ய உன்னை ஏமாற்றியது எது?
82:7
82:7 الَّذِىْ خَلَقَكَ فَسَوّٰٮكَ فَعَدَلَـكَۙ‏
الَّذِىْ எப்படிப்பட்டவன் خَلَقَكَ உன்னைப் படைத்தான் فَسَوّٰٮكَ இன்னும் உன்னை சீர்செய்தான் فَعَدَلَـكَۙ‏ இன்னும் உன்னைத் திருப்பினான்
82:7. அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
82:7. அவன்தான் (ஒன்றுமில்லாதிருந்த) உன்னைப் படைத்து மேலான விதத்தில் மிக ஒழுங்காக உன்னை அமைத்தான்.
82:7. அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.
82:7. (உமதிரட்சகனாகிய) அவன் எத்தகையவனென்றால், உன்னை (ஒரு துளி விந்திலிருந்து)ப் படைத்து பின்னர் உன்னை ஒழுங்காக அமைத்து (உன் தோற்றத்தை) சரியாக ஆக்கினான்.
82:8
82:8 فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَؕ‏
فِىْۤ اَىِّ صُوْرَةٍ مَّا எந்த உருவத்தில் شَآءَ நாடினானோ رَكَّبَكَؕ‏ உன்னைப் பொறுத்தினான்
82:8. எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
82:8. அவன் விரும்பிய (மிக்க அழகான) கோலத்தில் உன் அவயங்களைப் பொறுத்தினான்.
82:8. மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.
82:8. எந்த வடிவத்தில் அவன் நாடினானோ (அதில்) உன்னைப் பொருத்தினான்.
82:9
82:9 كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّيْنِۙ‏
كَلَّا அவ்வாறல்ல بَلْ மாறாக تُكَذِّبُوْنَ பொய்ப்பிக்கிறீர்கள் بِالدِّيْنِۙ‏ கூலி கொடுக்கப்படுவதை
82:9. இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
82:9. எனினும், (மனிதர்களே!) நீங்கள் கூலி கொடுக்கும் (தீர்ப்பு) நாளைப் பொய்யாக்குகிறீர்கள்.
82:9. ஒருபோதும் அவ்வாறில்லை! மாறாக, (உண்மை யாதெனில்) கூலி கொடுக்கப்படுவதை நீங்கள் பொய்யெனத் தூற்றுகின்றீர்கள்.
82:9. அன்று! எனினும் கூலிகொடுக்கப்படும் (மறுமை) நாளை நீங்கள் பொய்யாக்குகின்றீர்கள்.
82:10
82:10 وَاِنَّ عَلَيْكُمْ لَحٰـفِظِيْنَۙ‏
وَاِنَّ عَلَيْكُمْ இன்னும் நிச்சயமாக உங்கள் மீது لَحٰـفِظِيْنَۙ‏ காவலர்கள்
82:10. நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
82:10. நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
82:10. நிச்சயமாக உங்கள் மீது கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
82:10. நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்களும் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
82:11
82:11 كِرَامًا كَاتِبِيْنَۙ‏
كِرَامًا கண்ணியமானவர்கள் كَاتِبِيْنَۙ‏ எழுத்தாளர்கள்
82:11. (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:11. அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
82:11. அவர்களோ கண்ணியமிக்க எழுத்தர்களாவர்;
82:11. அவர்கள் (மலக்குகளிலுள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள்.
82:12
82:12 يَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ‏
يَعْلَمُوْنَ அவர்கள் அறிகிறார்கள் مَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்வதை
82:12. நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:12. நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
82:12. உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அறிகின்றார்கள்.
82:12. நீங்கள் செய்பவற்றை அவர்கள் அறிந்து (எழுதிக்) கொள்வார்கள்.
82:13
82:13 اِنَّ الْاَبْرَارَ لَفِىْ نَعِيْمٍۚ‏
اِنَّ நிச்சயமாக الْاَبْرَارَ நல்லோர் لَفِىْ نَعِيْمٍۚ‏ நயீம் என்ற சொர்க்கத்தில்தான்
82:13. நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
82:13. ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள்.
82:13. திண்ணமாக, நல்லவர்கள் இன்பத்தில் திளைத்திருப் பார்கள்.
82:13. நிச்சயமாக நல்லோர் சுகபோகத்தில் இருப்பார்கள்.
82:14
82:14 وَاِنَّ الْفُجَّارَ لَفِىْ جَحِيْمٍ ۚۖ‏
وَاِنَّ இன்னும் நிச்சயமாக الْفُجَّارَ தீயோர் لَفِىْ جَحِيْمٍ ۚۖ‏ ஜஹீம் என்ற நரகத்தில்தான்
82:14. இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
82:14. நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள்.
82:14. மேலும், சந்தேகமின்றி, தீயவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள்.
82:14. இன்னும், நிச்சயமாக தீயோர் நரகத்தில் இருப்பார்கள்.
82:15
82:15 يَّصْلَوْنَهَا يَوْمَ الدِّيْنِ‏
يَّصْلَوْنَهَا அதில் எரிவார்கள் يَوْمَ நாளில் الدِّيْنِ‏ கூலி
82:15. நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
82:15. கூலி கொடுக்கும் நாளில் அதையே அவர்கள் அடைவார்கள்.
82:15. கூலி கொடுக்கப்படும் நாளில், அதில் அவர்கள் நுழைவார்கள்.
82:15. கூலி கொடுக்கப்படும் நாளில் அதில் அவர்கள் நுழைவார்கள்.
82:16
82:16 وَمَا هُمْ عَنْهَا بِغَآٮِٕبِيْنَؕ‏
وَمَا இன்னும் இல்லை هُمْ அவர்கள் عَنْهَا அதிலிருந்து بِغَآٮِٕبِيْنَؕ‏ மறைபவர்களாக
82:16. மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
82:16. அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி ஓடி) விட முடியாது.
82:16. மேலும், அதிலிருந்து அவர்கள் காணாமல் போய்விட முடியாது.
82:16. அவர்கள் அதிலிருந்து மறைந்து (தப்பி) விடக்கூடியவர்களுமல்லர்.
82:17
82:17 وَمَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الدِّيْنِۙ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) يَوْمُ الدِّيْنِۙ‏ கூலி நாள்
82:17. நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
82:17. (நபியே!) கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று நீர் அறிவீரா?
82:17. மேலும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று நீர் அறிவீரா?
82:17. (நபியே!) கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
82:18
82:18 ثُمَّ مَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الدِّيْنِؕ‏
ثُمَّ பிறகு مَاۤ எது? اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) يَوْمُ الدِّيْنِؕ‏ கூலி நாள்
82:18. பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
82:18. பிறகு, கூலி கொடுக்கும் அந்நாள் என்னவென்று உமக்கு எவரேனும் அறிவித்தனரா?
82:18. ஆம்! கூலி கொடுக்கப்படும் அந்நாள் எத்தகையது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
82:18. பின்னும், கூலி கொடுக்கப்படும் நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
82:19
82:19 يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا‌ ؕ وَالْاَمْرُ يَوْمَٮِٕذٍ لِّلّٰهِ‏
يَوْمَ நாள் لَا تَمْلِكُ உரிமை பெறாது نَفْسٌ ஓர் ஆன்மா لِّنَفْسٍ ஓர் ஆத்மாவிற்கு شَيْئًا‌ ؕ எதையும் وَالْاَمْرُ இன்னும் அதிகாரம் يَوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلّٰهِ‏ அல்லாஹ்விற்கே
82:19. அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
82:19. அந்நாளில் ஓர் ஆத்மா, மற்றோர் ஆத்மாவுக்கு ஒரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும்.
82:19. அந்நாளில் எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தியிராது. தீர்ப்பு வழங்குவது, அந்நாளில் முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கும்.
82:19. (அந்நாள் தான்) எந்த ஆத்மாவும் (பிறிதோர்) ஆத்மாவுக்கு எதையும் செய்ய சக்தி பெறாத நாள்; இன்னும் அதிகாரம் (முழுவதும்) அன்றையத் தினத்தில் அல்லாஹ்வுக்கே உரியது.