96. ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி)  
மக்கீ, வசனங்கள்: 19

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
96:1
96:1 اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏
اِقْرَاْ படிப்பீராக بِاسْمِ பெயரால் رَبِّكَ உம் இறைவனின் الَّذِىْ எவன் خَلَقَ‌ۚ‏ படைத்தான்
96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:1. (நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!
96:1. ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!
96:1. உம்முடைய இரட்சகனின் (சங்கையான) பெயரைக்கொண்டு நீர் ஓதுவீராக! அவன் எத்தகையவனென்றால் (படைப்பினங்கள் அனைத்தையும்) படைத்தான்.
96:2
96:2 خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏
خَلَقَ அவன் படைத்தான் الْاِنْسَانَ மனிதனை مِنْ عَلَقٍ‌ۚ‏ கருவிலிருந்து
96:2. “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:2. அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.
96:2. (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக!
96:2. மனிதனை (அட்டைப்பூச்சி போன்று) ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து அவன் படைத்தான்.
96:3
96:3 اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏
اِقْرَاْ படிப்பீராக وَرَبُّكَ இன்னும் உம் இறைவன் الْاَكْرَمُۙ‏ பெரும் கண்ணியவான்
96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:3. (நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!
96:3. மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,
96:3. நீர் ஓதுவீராக! மேலும், உமதிரட்சகன் மிக்க சங்கையானவன்.
96:4
96:4 الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏
الَّذِىْ எவன் عَلَّمَ கற்பித்தான் بِالْقَلَمِۙ‏ எழுதுகோல் மூலம்
96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:4. அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.
96:4. அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;
96:4. அவன் எத்தகையவனென்றால், எழுதுகோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான்.
96:5
96:5 عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْؕ‏
عَلَّمَ கற்பித்தான் الْاِنْسَانَ மனிதனுக்கு مَا لَمْ يَعْلَمْؕ‏ அவன் அறியாததை
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:5. (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.
96:5. மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் கற்றுக்கொடுத்தான்.
96:6
96:6 كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰٓىۙ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் لَيَطْغٰٓىۙ‏ வரம்பு மீறுகிறான்
96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:6,7,6. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
96:6. அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கின்றான்;
96:6. (இவ்வாறு படைக்கப்பட்ட) மனிதன் அவனைப்படைத்த அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செய்கிறானா? (இல்லை. நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.)
96:7
96:7 اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىؕ‏
اَنْ رَّاٰهُ தன்னை அவன் எண்ணியதால் اسْتَغْنٰىؕ‏ தேவையற்றவனாக
96:7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:6,7,7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.
96:7. அவன் தன்னைத் தன்னிறைவுடையவன் என்று கருதிக் கொண்டதால்!
96:7. அவன் தன்னை (இரட்சகனிடமிருந்து) தேவையற்றவன் எனக் காணும்பொழுது,
96:8
96:8 اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىؕ‏
اِنَّ நிச்சயமாக اِلٰى பக்கம்தான் رَبِّكَ உம் இறைவன் الرُّجْعٰىؕ‏ மீட்சி
96:8. நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:8. நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.
96:8. ஆனால், திரும்பிச் செல்வது திண்ணமாக, உம் இறைவனின் பக்கமே ஆகும்.
96:8. நிச்சயமாக உமதிரட்சகனின் பக்கமே (அவன்) மீள வேண்டியதிருக்கின்றது.
96:9
96:9 اَرَءَيْتَ الَّذِىْ يَنْهٰىؕ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? الَّذِىْ يَنْهٰىؕ‏ தடுப்பவனை
96:9. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:9,10,9. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
96:9. தடுப்பவனை நீர் பார்த்தீரா?
96:9. தடுக்கின்றானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா,
96:10
96:10 عَبْدًا اِذَا صَلّٰىؕ‏
عَبْدًا ஓர் அடியாரை اِذَا صَلّٰىؕ‏ அவர் தொழும் போது
96:10. ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:9,10,10. (நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
96:10. அடியார் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் அவரைத் தடுப்பவனை நீர் பார்த்தீரா?
96:10. ஓர் அடியாரை அவர் தொழுது கொண்டிருக்கும்பொழுது,
96:11
96:11 اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰٓىۙ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? اِنْ كَانَ அவர் இருந்தாலுமா عَلَى இல் الْهُدٰٓىۙ‏ நேர்வழி
96:11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:11,12,11. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
96:11. நீர் என்ன நினைக்கிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா?
96:11. அவர் நேர்வழியின் மீதிருந்து(ம் அவரைத் தொழவிடாமல் தடுத்தவனை) நீர் பார்த்தீரா?
96:12
96:12 اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۙ‏
اَوْ அல்லது اَمَرَ அவர் ஏவினாலுமா بِالتَّقْوٰىۙ‏ நன்மையை
96:12. அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:11,12,12. அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
96:12. அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி ஏவினாலுமா?
96:12. அல்லது பயபக்தியைக் கொண்டு ஏவுகிறவராக அவர் இருந்தும்,
96:13
96:13 اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? اِنْ كَذَّبَ அவன் பொய்ப்பித்தால் وَتَوَلّٰىؕ‏ இன்னும் புறக்கணித்தால்
96:13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
96:13. (அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?
96:13. (தடுக்கக்கூடிய இந்த மனிதன் சத்தியத்தைப்) பொய்யென்று தூற்றினால் மேலும், புறக்கணிக்கவும் செய்தால் (அவனைப் பற்றி) நீர் என்ன கருதுகின்றீர்?
96:13. அவன் (அவரைப்) பொய்யாக்கி, முகத்தையும் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?
96:14
96:14 اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ‏
اَلَمْ يَعْلَمْ அவன் அறியவில்லையா? بِاَنَّ என்பதை/நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَرٰىؕ‏ பார்க்கிறான்
96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:14. (அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
96:14. அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குத் தெரியாதா?
96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்)பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
96:15
96:15 كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ‏
كَلَّا அவ்வாறல்ல لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙ அவன் விலகவில்லையெனில் لَنَسْفَعًۢا கடுமையாகப் பிடிப்போம் بِالنَّاصِيَةِۙ‏ நெற்றி முடியை
96:15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:15,16,15. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
96:15. அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்,
96:15. (முஹம்மது தொழுதால் நான் அவர் கழுத்தின் மீது மிதிப்பேன் என அபூஜஹல் கூறியவாறு) அல்ல! இத்தீய செயலிலிருந்து (அவன் விலகிக் கொள்ளாவிடில், நிச்சயமாக அவனது முன்னெற்றி உரோமத்தைப் பிடித்து நாம் இழுப்போம்.
96:16
96:16 نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌ ۚ‏
نَاصِيَةٍ நெற்றி முடி كَاذِبَةٍ பொய் கூறுகின்ற خَاطِئَةٍ‌ ۚ‏ குற்றம் புரிகின்ற
96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:15,16,16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
96:16. கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!
96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை.
96:17
96:17 فَلْيَدْعُ نَادِيَهٗ ۙ‏
فَلْيَدْعُ ஆகவே அவன் அழைக்கட்டும் نَادِيَهٗ ۙ‏ தன் சபையோரை
96:17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:17. ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.
96:17. அவன் தன் (ஆதரவாளர்களின்) கூட்டத்தை அழைத்துக் கொள்ளட்டும்;
96:17. ஆகவே, (தன் உதவிக்காக) தனது சபையோரை அவன் அழைக்கட்டும்.
96:18
96:18 سَنَدْعُ الزَّبَانِيَةَ ۙ‏
سَنَدْعُ நாம் அழைப்போம் الزَّبَانِيَةَ ۙ‏ நரகத்தின் காவலாளிகளை
96:18. நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:18. நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.
96:18. தண்டனை தரும் வானவர்களை நாமும் அழைத்துக் கொள்வோம்.
96:18. நாம் (அவனுக்கு தண்டனை தரும்) காவலர்களை அழைப்போம்.
96:19
96:19 كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩‏
كَلَّا ؕ அவ்வாறல்ல لَا تُطِعْهُ அவனுக்குக் கீழ்ப்படியாதீர் وَاسْجُدْ இன்னும் சிரம் பணிவீராக وَاقْتَرِبْ۩‏ இன்னும் நெருங்குவீராக
96:19. (அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
96:19. (நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!
96:19. ஒருபோதும் அவ்வாறில்லை! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். மேலும், சிரம் பணிவீராக! மேலும் (உம் இறைவனின்) நெருக்கத்தைப் பெறுவீராக!
96:19. (நீர் தொழுவதை விட்டும் தடுத்துவிட முயன்றானே அவ்வாறு) அல்ல! நபியே! நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர், (உமதிரட்சகனுக்குச்) சிரம் பணிவீராக! இன்னும், (அவனை வணக்கத்தின் மூலம்) நெருங்குவீராக!