99. ஸூரத்துஜ் ஜில்ஜால்(அதிர்ச்சி)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
99:1 اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ‏
99:1. பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
99:1. (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
99:1. பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது
99:1. பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அசைக்கப்பட்டுவிடும்போது-
99:2 وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ‏
99:2. இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:2. அது, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
99:2. மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது,
99:2. இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது,
99:3 وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ ۚ‏
99:3. “அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
99:3. மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது, (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
99:3. மேலும், “அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று மனிதன் கேட்கும்போது
99:3. இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது,
99:4 يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ‏
99:4. அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:4. -
99:4. அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்.
99:4. அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்-
99:5 بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ‏
99:5. (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
99:4,5. அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவைகளை எல்லாம் அறிவித்து (இவ்வாறே) உங்களது இறைவன் வஹீ மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கின்றான் என்று கூறும்.
99:5. ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான்.
99:5. நிச்சயமாக உமதிரட்சகன் (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்கு (க்கட்டளையிட்டு) வஹீமூலம் அறிவித்ததன் காரணமாக!
99:6 يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا  ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏
99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:6. அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
99:6. அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக!
99:6. (அவ்வாறு பூமி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்) அந்நாளில் மனிதர்கள்,அவர்களின் செயல்கள் (அவர்களுக்குக்) காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக(மண்ணறைகளிலிருந்து) புறப்பட்டு வருவார்கள்.
99:7 فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ‏
99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:7. ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.
99:7. பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான்.
99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன்பய)னைக் கண்டு கொள்வார்.
99:8 وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏
99:8. அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
99:8. (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான்.
99:8. மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.
99:8. இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் கேடி)னைக் கண்டு கொள்வார்.