தேடல்


2:253
2:253 تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ۘ مِنْهُمْ مَّنْ كَلَّمَ اللّٰهُ‌ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجٰتٍ‌ؕ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ مِّنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏
تِلْكَ அந்த الرُّسُلُ தூதர்கள் فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ۘ சிலரை مِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் كَلَّمَ பேசினான் اللّٰهُ‌ அல்லாஹ் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَهُمْ அவர்களில் சிலரை دَرَجٰتٍ‌ؕ பதவிகளால் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் عِيْسَى ஈஸாவிற்கு ابْنَ مَرْيَمَ மர்யமுடைய மகன் الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை وَاَيَّدْنٰهُ இன்னும் அவருக்கு உதவினோம் بِرُوْحِ ஆத்மாவைக்கொண்டு الْقُدُسِ‌ؕ பரிசுத்த(மான) وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلَ சண்டையிட்டிருக்க மாட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின் مِّنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்தது الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் وَلٰـكِنِ என்றாலும் اخْتَلَفُوْا வேறுபட்டார்கள் فَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் كَفَرَ‌ؕ நிராகரித்தார் وَلَوْ شَآءَ இன்னும் நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا اقْتَتَلُوْا அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள் وَلٰـكِنَّ என்றாலும் اللّٰهَ அல்லாஹ் يَفْعَلُ செய்தே ஆவான் مَا எதை يُرِيْدُ‏ நாடுவான்
2:253. அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; மேலும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், 'ரூஹுல் குதுஸ்' (எனும் பரிசுத்த ஆன்மாவான ஜிப்ரீல்) மூலம் அவரை பலப்படுத்தினோம்; அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், (தங்களுக்குள்) சண்டையிட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள்; ஆனால், அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொண்டனர்; அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால், அவர்கள் (இவ்வாறு) சண்டையிட்டுக் கொண்டிருக்கமாட்டார்கள்; ஆனால், அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
4:96
4:96 دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
دَرَجٰتٍ (பல) பதவிகளை مِّنْهُ தன்னிடமிருந்து وَمَغْفِرَةً இன்னும் மன்னிப்பை وَّرَحْمَةً‌ ؕ இன்னும் கருணையை وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:96. (இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும் அருளையும் (அவர்களுக்கு அருள்கின்றான்); ஏனென்றால், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
6:83
6:83 وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنٰهَاۤ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖ‌ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ ‌ؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ‏
وَتِلْكَ இவை حُجَّتُنَاۤ நம் சான்று اٰتَيْنٰهَاۤ கொடுத்தோம்/அவற்றை اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு عَلٰى எதிராக قَوْمِهٖ‌ؕ அவருடைய சமுதாயம் نَرْفَعُ உயர்த்துகிறோம் دَرَجٰتٍ பதவிகளால் مَّنْ எவரை نَّشَآءُ ؕ நாடுகிறோம் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் حَكِيْمٌ ஞானவான் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
6:83. இவை நம்முடைய ஆதாரமாகும்; நாம் இதனை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்குப் பதவிகளை உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் ஞானமுள்ளவன்; நன்கறிகிறவன்.
6:165
6:165 وَهُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ‌ؕ اِنَّ رَبَّكَ سَرِيْعُ الْعِقَابِ  ۖ وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَهُوَ அவன் الَّذِىْ எவன் جَعَلَـكُمْ ஆக்கினான்/உங்களை خَلٰٓٮِٕفَ வழித்தோன்றல்களாக الْاَرْضِ பூமியில் وَرَفَعَ இன்னும் உயர்த்தினான் بَعْضَكُمْ உங்களில் சிலரை فَوْقَ بَعْضٍ சிலருக்கு மேல் دَرَجٰتٍ பதவிகளில் لِّيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக فِىْ مَاۤ  எவற்றில் اٰتٰٮكُمْ‌ؕ உங்களுக்கு கொடுத்தான் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் سَرِيْعُ தீவிரமானவன் الْعِقَابِ  தண்டிப்பதில் ۖ وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன்தான் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
6:165. அவன்தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான்; நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்; மேலும், நிச்சயமாக அவன் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்.
8:4
8:4 اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‌ۚ‏
اُولٰۤٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் حَقًّا ؕ உண்மையில் لَهُمْ அவர்களுக்கு دَرَجٰتٌ பல பதவிகள் عِنْدَ رَبِّهِمْ அவர்களின் இறைவனிடம் وَمَغْفِرَةٌ இன்னும் மன்னிப்பு وَّرِزْقٌ இன்னும் உணவு كَرِيْمٌ‌ۚ‏ கண்ணியமானது
8:4. இத்தகையவர்கள் தாம் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவார்கள்: அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர்பதவிகளும், பாவமன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
9:20
9:20 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَ هَاجَرُوْا وَجَاهَدُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْۙ اَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللّٰهِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
اَلَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ هَاجَرُوْا இன்னும் ஹிஜ்ரா சென்றனர் وَجَاهَدُوْا இன்னும் போர் புரிந்தனர் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் بِاَمْوَالِهِمْ தங்கள்செல்வங்களால் وَاَنْفُسِهِمْۙ இன்னும் தங்கள் உயிர்களால் اَعْظَمُ மகத்தானவர்(கள்) دَرَجَةً பதவியால் عِنْدَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் وَاُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْفَآٮِٕزُوْنَ‏ வெற்றியாளர்கள்
9:20. எவர்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து, தங்களுடைய செல்வங்களாலும், தங்களுடைய உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள்; மேலும், அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
10:2
10:2 اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَيْنَاۤ اِلٰى رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْؔ‌ؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِيْنٌ‏
اَكَانَ இருக்கிறதா? لِلنَّاسِ மனிதர்களுக்கு عَجَبًا ஆச்சரியமாக اَنْ اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தது اِلٰى رَجُلٍ ஒரு மனிதருக்கு مِّنْهُمْ அவர்களில் اَنْ என்று اَنْذِرِ எச்சரிப்பீராக النَّاسَ மனிதர்களை وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்களுக்கு اَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு قَدَمَ صِدْقٍ நற்கூலி عِنْدَ இடத்தில் رَبِّهِمْؔ‌ؕ தங்கள் இறைவன் قَالَ கூறினார்(கள்) الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் اِنَّ நிச்சயமாக هٰذَا இவர் لَسٰحِرٌ சூனியக்காரர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
10:2. மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பீராக (என்றும்)! நம்பிக்கை கொண்டவர்களுக்கு - அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாக அவர்களுக்கு பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவீராக! என்றும் அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு 'வஹீ' அறிவித்தது மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிராகரிப்பவர்கள், "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.
12:76
12:76 فَبَدَاَ بِاَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِيْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِيْهِ‌ؕ كَذٰلِكَ كِدْنَا لِيُوْسُفَ‌ؕ مَا كَانَ لِيَاْخُذَ اَخَاهُ فِىْ دِيْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ‌ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ‌ؕ وَفَوْقَ كُلِّ ذِىْ عِلْمٍ عَلِيْمٌ‏
فَبَدَاَ ஆரம்பித்தார் بِاَوْعِيَتِهِمْ மூட்டைகளில்/அவர்களின் قَبْلَ முன்பாக وِعَآءِ மூட்டைக்கு اَخِيْهِ தன் சகோதரனின் ثُمَّ اسْتَخْرَجَهَا பிறகு/வெளிப்படுத்தினார்/அதை مِنْ وِّعَآءِ மூட்டையிலிருந்து اَخِيْهِ‌ؕ தன் சகோதரனின் كَذٰلِكَ இப்படித்தான் كِدْنَا காரணம் செய்தோம் لِيُوْسُفَ‌ؕ யூஸுஃபுக்கு مَا كَانَ அவர் இல்லை لِيَاْخُذَ எடுப்பவராக اَخَاهُ தன் சகோதரனை فِىْ دِيْنِ சட்டப்படி الْمَلِكِ அரசரின் اِلَّاۤ اَنْ يَّشَآءَ தவிர/நாடினால் اللّٰهُ‌ؕ அல்லாஹ் نَرْفَعُ உயர்த்துகின்றோம் دَرَجٰتٍ பதவிகளால் مَّنْ எவரை نَّشَآءُ‌ؕ விரும்புகின்றோம் وَفَوْقَ இன்னும் மேல் كُلِّ ஒவ்வொரு ذِىْ عِلْمٍ கல்வியுடையவர் عَلِيْمٌ‏ ஒரு கல்விமான்
12:76. ஆகவே, அவர் தம் சகோதரன் பின்யாமீனின் பொதியைச் சோதிக்கு முன்னே, அவர்களுடைய பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார்; பின்பு, அதனைத் தம் சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக, யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார்; நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்.
17:21
17:21 اُنْظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ وَلَـلْاٰخِرَةُ اَكْبَرُ دَرَجٰتٍ وَّاَكْبَرُ تَفْضِيْلًا‏
اُنْظُرْ கவனிப்பீராக كَيْفَ எப்படி فَضَّلْنَا மேன்மையாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ ؕ சிலரை وَلَـلْاٰخِرَةُ மறுமைதான் اَكْبَرُ மிகப் பெரியது دَرَجٰتٍ பதவிகளால் وَّاَكْبَرُ இன்னும் மிகப் பெரியது تَفْضِيْلًا‏ மேன்மையால்
17:21. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும், மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது; மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.
20:75
20:75 وَمَنْ يَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓٮِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰىۙ‏
وَمَنْ இன்னும் யார் يَّاْتِهٖ அவனிடம்வருவாரோ مُؤْمِنًا நம்பிக்கையாளராக قَدْ عَمِلَ திட்டமாக செய்தார் الصّٰلِحٰتِ நன்மைகளை فَاُولٰٓٮِٕكَ لَهُمُ அவர்களுக்குத்தான் الدَّرَجٰتُ தகுதிகள் உண்டு الْعُلٰىۙ‏ மிக உயர்ந்த
20:75. ஆனால், எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்த நிலையில் அவனிடம் வருகிறாரோ, அத்தகையோருக்கு மேலான பதவிகள் உண்டு.