3:13 قَدْ كَانَ لَـكُمْ اٰيَةٌ فِىْ فِئَتَيْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَاْىَ الْعَيْنِؕ وَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَآءُ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ
قَدْ كَانَ திட்டமாக இருந்தது لَـكُمْ உங்களுக்கு اٰيَةٌ ஓர் அத்தாட்சி فِىْ فِئَتَيْنِ இரு கூட்டங்களில் الْتَقَتَا ؕ சந்தித்தன فِئَةٌ ஒரு கூட்டம் تُقَاتِلُ போர் புரிகிறது فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَاُخْرٰى இன்னும் மற்றொன்று كَافِرَةٌ நிராகரிக்கக் கூடியது يَّرَوْنَهُمْ இவர்களை காண்கின்றனர் مِّثْلَيْهِمْ தங்களைப் போன்று இரு மடங்குகளாக رَاْىَ பார்ப்பது الْعَيْنِؕ கண் وَاللّٰهُ அல்லாஹ் يُؤَيِّدُ பலப்படுத்துகிறான் بِنَصْرِهٖ தன் உதவியால் مَنْ எவர்களை يَّشَآءُ ؕ நாடுகிறான் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَعِبْرَةً திட்டமாக ஒரு படிப்பினை لِّاُولِى الْاَبْصَارِ பார்வை உடையோருக்கு
3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று நிராகரிக்கக்கூடியதாக இருந்தது; (நிராகரிப்போர்) தம்மைப்போல், (முஸ்லிம்களான) அவர்களை இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக்கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திட்டமாக ஒரு படிப்பினை இருக்கிறது. 3:140 اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ
اِنْ يَّمْسَسْكُمْ உங்களைஅடைந்தால் قَرْحٌ காயம் فَقَدْ مَسَّ அடைந்துள்ளது الْقَوْمَ (அக்)கூட்டத்திற்கு قَرْحٌ காயம் مِّثْلُهٗ ؕ அது போன்ற وَتِلْكَ அந்த الْاَيَّامُ நாள்கள் نُدَاوِلُهَا அவற்றை சுழற்றுகிறோம் بَيْنَ மத்தியில் النَّاسِۚ மக்கள் وَلِيَـعْلَمَ இன்னும் அறிவதற்காக اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَيَتَّخِذَ இன்னும் எடுப்பதற்காக مِنْكُمْ உங்களில் شُهَدَآءَؕ தியாகிகளை وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الظّٰلِمِيْنَۙ அநியாயக்காரர்களை
3:140. (உஹுதுப் போரில்) உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதேபோன்று அக்கூட்டத்தினருக்கும் (பத்ருப் போரில்) காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறிமாறி வரச்செய்கின்றோம்; இதற்குக் காரணம், நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த்தியாகம் செய்வோரை உருவாக்குவதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை. 3:173 اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا ۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
اَلَّذِيْنَ எவர்கள் قَالَ கூறினார்(கள்) لَهُمُ அவர்களுக்கு النَّاسُ மக்கள் اِنَّ நிச்சயமாக النَّاسَ மக்கள் قَدْ جَمَعُوْا உறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர் لَـكُمْ உங்களுக்கு فَاخْشَوْهُمْ ஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப் فَزَادَهُمْ அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு اِيْمَانًا ۖ நம்பிக்கையை وَّقَالُوْا இன்னும் கூறினார்கள் حَسْبُنَا போதுமானவன்/ எங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் وَنِعْمَ இன்னும் சிறந்து விட்டான் الْوَكِيْلُ பொறுப்பாளன்
3:173. அவர்களிடம் சில மனிதர்கள், "உங்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) நிச்சயமாக மனிதர்கள் ஒன்று திரண்டுவிட்டார்கள்; எனவே, அவர்களை அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால், அது அவர்களுக்கு நம்பிக்கையையே அதிகப்படுத்தியது; "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன்; அவனே (எங்களுக்குச்) சிறந்த பாதுகாவலன்!" என்று அவர்கள் கூறினார்கள். 8:5 كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْۢ بَيْتِكَ بِالْحَـقِّ وَاِنَّ فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ لَـكٰرِهُوْنَۙ
كَمَاۤ போன்றே اَخْرَجَكَ வெளியேற்றினான்/உம்மை رَبُّكَ உம் இறைவன் مِنْۢ இருந்து بَيْتِكَ உம் இல்லம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக فَرِيْقًا ஒரு பிரிவினர் مِّنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் لَـكٰرِهُوْنَۙ வெறுப்பவர்களே
8:5. (நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டை விட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ருக்களம் நோக்கி) வெளியேற்றியபோது, நம்பிக்கையாளர்களிலிருந்து ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல்- 8:17 فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰـكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ اِذْ رَمَيْتَ وَ لٰـكِنَّ اللّٰهَ رَمٰى ۚ وَلِيُبْلِىَ الْمُؤْمِنِيْنَ مِنْهُ بَلَاۤءً حَسَنًا ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ
فَلَمْ تَقْتُلُوْ நீங்கள் கொல்லவில்லை هُمْ அவர்களை وَلٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَتَلَهُمْ கொன்றான்/அவர்களை وَمَا رَمَيْتَ நீர் எறியவில்லை اِذْ போது رَمَيْتَ எறிந்தீர் وَ لٰـكِنَّ என்றாலும் நிச்சயமாக اللّٰهَ رَمٰى ۚ அல்லாஹ்/எறிந்தான் وَلِيُبْلِىَ இன்னும் அவன் சோதிப்பதற்காக الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை مِنْهُ அதன் மூலம் بَلَاۤءً சோதனையாக حَسَنًا ؕ அழகிய اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ நன்கறிந்தவன்
8:17. (பத்ருப் போரில்) எதிரிகளாகிய அவர்களை நீங்கள் கொல்லவில்லை; அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான்; (நபியே! பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; நம்பிக்கையாளர்களை தன்புறத்திலிருந்து அழகான முறையில் அவன் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்); நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 8:41 وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
وَاعْلَمُوْۤا அறிந்து கொள்ளுங்கள் اَنَّمَا நிச்சயமாக எது غَنِمْتُمْ வென்றீர்கள் مِّنْ شَىْءٍ ஒரு பொருள் فَاَنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்வுக்கு خُمُسَهٗ அதில் ஐந்தில் ஒன்று وَ لِلرَّسُوْلِ இன்னும் தூதருக்கு وَلِذِى الْقُرْبٰى இன்னும் உறவினர்களுக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகளுக்கு وَالْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகளுக்கு وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணிகளுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اَنْزَلْنَا இன்னும் எதை இறக்கினோம் عَلٰى عَبْدِنَا நம் அடியார் மீது يَوْمَ நாளில் الْفُرْقَانِ பிரித்தறிவித்த يَوْمَ நாளில் الْتَقَى சந்தித்தார்(கள்) الْجَمْعٰنِ ؕ இரு கூட்டங்கள், இரு படைகள் وَاللّٰهُ நிச்சயமாகஅல்லாஹ் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் قَدِيْرٌ பேராற்றலுடையவன்
8:41. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் (போரில்) பெற்ற வெற்றிப் பொருட்களிலிருந்து நிச்சயமாக ஐந்தில் ஒருபங்கு அல்லாஹ்வுக்கும், (அவனது) தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். நீங்கள் அல்லாஹ்வின் மீதும், (சத்தியத்துக்கும், அசத்தியத்துக்குமிடையே) தீர்ப்பளித்த (பத்ருப் போரின்) நாளில் - இரு படையினர் சந்தித்துக்கொண்ட நாளில், நம் அடியாரின் மீது நாம் இறக்கிவைத்த (உதவி முதலிய)வற்றின் மீதும் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், (மேற்கூறியது பற்றி) உறுதியாக அறிந்துகொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். 8:42 اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْيَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰى وَ الرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِى الْمِيْعٰدِۙ وَلٰـكِنْ لِّيَقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنْۢ بَيِّنَةٍ وَّيَحْيٰى مَنْ حَىَّ عَنْۢ بَيِّنَةٍ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِيْعٌ عَلِيْمٌۙ
اِذْ சமயம் اَنْتُمْ நீங்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الدُّنْيَا சமீபமானது وَهُمْ அவர்கள் بِالْعُدْوَةِ பள்ளத்தாக்கில் الْقُصْوٰى தூரமானது وَ الرَّكْبُ வாகனக்காரர்கள் اَسْفَلَ கீழே مِنْكُمْؕ உங்களுக்கு وَلَوْ تَوَاعَدْتُّمْ நீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால் لَاخْتَلَفْتُمْ தவறிழைத்திருப்பீர்கள் فِى الْمِيْعٰدِۙ குறிப்பிட்ட நேரத்தில் وَلٰـكِنْ எனினும் لِّيَقْضِىَ நிறைவேற்றுவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَمْرًا ஒரு காரியத்தை كَانَ இருக்கின்றது مَفْعُوْلًا ۙ முடிவுசெய்யப்பட்டதாக لِّيَهْلِكَ அழிவதற்காக مَنْ எவன் هَلَكَ அழிந்தான் عَنْۢ بَيِّنَةٍ ஆதாரத்துடன் وَّيَحْيٰى இன்னும் வாழ்வதற்காக مَنْ எவன் حَىَّ வாழ்ந்தான் عَنْۢ بَيِّنَةٍ ؕ ஆதாரத்துடன் وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் لَسَمِيْعٌ நன்குசெவியுறுபவன் عَلِيْمٌۙ நன்கறிந்தவன்
8:42. (பத்ருப் போர்க்களத்தில் மதீனாவுக்கு) சமீபத்திலுள்ள பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகளான) அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும், இருந்த (நேரத்தை நினைத்துப்பாருங்கள்); நீங்கள் ஒருவருக்கொருவர் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்தால் அவ்வாக்குறுதியில் நிச்சயமாக கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர் தக்க காரணத்துடன் அழிவதற்காகவும், வாழ்பவர் தக்க காரணத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு அவன் செய்தான்); நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 48:16 قُلْ لِّلْمُخَلَّفِيْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰى قَوْمٍ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ يُسْلِمُوْنَ ۚ فَاِنْ تُطِيْـعُوْا يُـؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا ۚ وَاِنْ تَتَـوَلَّوْا كَمَا تَوَلَّيْـتُمْ مِّنْ قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا اَ لِيْمًا
قُلْ கூறுவீராக! لِّلْمُخَلَّفِيْنَ பின்தங்கியவர்களை நோக்கி مِنَ الْاَعْرَابِ கிராமவாசிகளில் سَتُدْعَوْنَ அழைக்கப்படுவீர்கள் اِلٰى قَوْمٍ கூட்டத்தின் பக்கம் اُولِىْ بَاْسٍ பலமுடைய(வர்கள்) شَدِيْدٍ கடுமையான(து) تُقَاتِلُوْنَهُمْ அவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காக اَوْ يُسْلِمُوْنَ ۚ அல்லது/அவர்கள் பணிந்து விடுவதற்காக فَاِنْ تُطِيْـعُوْا நீங்கள் கீழ்ப்படிந்தால் يُـؤْتِكُمُ உங்களுக்கு கொடுப்பான் اللّٰهُ அல்லாஹ் اَجْرًا கூலியை حَسَنًا ۚ அழகிய(து) وَاِنْ تَتَـوَلَّوْا நீங்கள் விலகினால் كَمَا تَوَلَّيْـتُمْ நீங்கள் விலகியதை போன்று مِّنْ قَبْلُ இதற்கு முன்பு يُعَذِّبْكُمْ உங்களை தண்டிப்பான் عَذَابًا தண்டனையால் اَ لِيْمًا வலி தரக்கூடிய(து)
48:16. பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்: "நீங்கள் சீக்கிரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள்; அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது, அவர்கள் (யுத்தம் செய்யாது) இஸ்லாத்திற்கு வந்து விடுவார்கள்; அப்போது நீங்கள் கீழ்ப்படிவீர்களானால், அல்லாஹ் உங்களுக்கு அழகிய (நற்)கூலியைக் கொடுப்பான்; ஆனால், இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினைதரும் வேதனையாக வேதனை செய்வான்" என்று (நபியே!) நீர் கூறும். Showing results 1 to 8 of 8