தேடல்


1:1
1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
بِسْمِ பெயரால் اللهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِ பேரன்பாளன்
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:3
1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ‏ பேரன்பாளன்
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
2:104
2:104 يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقُوْلُوْا رَاعِنَا وَ قُوْلُوا انْظُرْنَا وَاسْمَعُوْا ‌ؕ وَلِلْڪٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ‏
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَقُوْلُوْا கூறாதீர்கள் رَاعِنَا ராஇனா وَ قُوْلُوا இன்னும் கூறுங்கள் انْظُرْنَا உன்ளுர்னா (பாருங்கள்/எங்களை) وَاسْمَعُوْا ؕ இன்னும் செவிமடுங்கள் وَلِلْڪٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ வேதனை اَلِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) “ராயினா” என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) “உன்ளுர்னா” என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.
2:128
2:128 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَـكَ وَ مِنْ ذُرِّيَّتِنَآ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
رَبَّنَا இறைவா/எங்கள் وَاجْعَلْنَا ஆக்கு/இன்னும் எங்களை مُسْلِمَيْنِ பணிபவர்களாக لَكَ உனக்கு وَ مِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِنَآ சந்ததி/எங்கள் اُمَّةً சமுதாயம் مُّسْلِمَةً பணியக்கூடிய لَّكَ உனக்கு وَاَرِنَا இன்னும் காண்பித்துக் கொடு / எங்களுக்கு مَنَاسِكَنَا எங்கள் ஹஜ்ஜு கிரியைகளை وَتُبْ இன்னும் மன்னித்திடு عَلَيْنَا ۚ எங்களை اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் التَّوَّابُ தவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:128. “எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:143
2:143 وَكَذٰلِكَ جَعَلْنٰكُمْ اُمَّةً وَّسَطًا لِّتَکُوْنُوْا شُهَدَآءَ عَلَى النَّاسِ وَيَكُوْنَ الرَّسُوْلُ عَلَيْكُمْ شَهِيْدًا ؕ وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِىْ كُنْتَ عَلَيْهَآ اِلَّا لِنَعْلَمَ مَنْ يَّتَّبِعُ الرَّسُوْلَ مِمَّنْ يَّنْقَلِبُ عَلٰى عَقِبَيْهِ ‌ؕ وَاِنْ كَانَتْ لَكَبِيْرَةً اِلَّا عَلَى الَّذِيْنَ هَدَى اللّٰهُ ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُضِيْعَ اِيْمَانَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ بِالنَّاسِ لَرَءُوْفٌ رَّحِيْمٌ‏
وَكَذٰلِكَ இன்னும் அவ்வாறுதான் جَعَلْنٰكُمْ ஆக்கினோம்/உங்களை اُمَّةً சமுதாயமாக وَّسَطًا நடுநிலையான لِّتَکُوْنُوْا நீங்கள் இருப்பதற்காக شُهَدَآءَ சாட்சிகளாக عَلَى النَّاسِ மக்களுக்கு وَيَكُوْنَ இன்னும் இருப்பார் الرَّسُوْلُ தூதர் عَلَيْكُمْ உங்களுக்கு شَهِيْدًا ؕ சாட்சியாக وَمَا جَعَلْنَا இன்னும் நாம்ஆக்கவில்லை الْقِبْلَةَ கிப்லாவை الَّتِىْ எது كُنْتَ நீர் இருந்தீர் عَلَيْهَآ அதன் மீது اِلَّا தவிர لِنَعْلَمَ நாம் அறிவதற்காக مَنْ எவர் يَّتَّبِعُ பின்பற்றுவார் الرَّسُوْلَ தூதரை مِمَّنْ எவரிலிருந்து يَّنْقَلِبُ திரும்பி விடுகிறார் عَلٰى மீது عَقِبَيْهِ ؕ அவருடைய (இரு) குதிங்கால்கள் وَاِنْ كَانَتْ இன்னும் நிச்சயமாக அது இருந்தது لَكَبِيْرَةً பெரிதாக اِلَّا தவிர عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் هَدَى நேர்வழி நடத்தினான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَمَا كَانَ இன்னும் இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيُضِيْعَ அவன் வீணாக்குபவனாக اِيْمَانَكُمْ‌ ؕ உங்கள் நம்பிக்கையை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بِالنَّاسِ மக்கள் மீது لَرَءُوْفٌ மிக இரக்கமுடையவன்தான் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
2:163
2:163 وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏
وَاِلٰهُكُمْ இன்னும் உங்கள்இறைவன் اِلٰهٌ ஓர் இறைவன் وَّاحِدٌ  ۚ ஒரே لَآ அறவே இல்லை اِلٰهَ இறைவன் اِلَّا தவிர هُوَ அவனைத் الرَّحْمٰنُ பேரருளாளன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
2:182
2:182 فَمَنْ خَافَ مِنْ مُّوْصٍ جَنَفًا اَوْ اِثْمًا فَاَصْلَحَ بَيْنَهُمْ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
فَمَنْ எவர் خَافَ பயந்தார் مِنْ مُّوْصٍ மரணசாசனம் கூறுபவரிடத்தில் جَنَفًا அநீதியை اَوْ அல்லது اِثْمًا தவறை فَاَصْلَحَ சீர்திருத்தம் செய்தார் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் فَلَاۤ اِثْمَ அறவே குற்றமில்லை عَلَيْهِؕ அவர் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
2:182. ஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை) சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.
2:207
2:207 وَمِنَ النَّاسِ مَنْ يَّشْرِىْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ‌ؕ وَ اللّٰهُ رَءُوْفٌ ۢ بِالْعِبَادِ‏
وَمِنَ النَّاسِ இன்னும் மக்களில் مَنْ எவர் يَّشْرِىْ விற்கிறார் نَفْسَهُ தன் உயிரை ابْتِغَآءَ தேடுதல் مَرْضَاتِ பொருத்தம் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَ اللّٰهُ அல்லாஹ் رَءُوْفٌ ۢ மிக இரக்கமுடையவன் بِالْعِبَادِ‏ அடியார்கள் மீது
2:207. இன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்; அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.
4:36
4:36 وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏
وَاعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُشْرِكُوْا இன்னும் இணையாக்காதீர்கள் بِهٖ அவனுக்கு شَيْــٴًـــا‌ ؕ எதையும் وَّبِالْوَالِدَيْنِ இன்னும் தாய் தந்தைக்கு اِحْسَانًا நன்மை செய்யுங்கள் وَّبِذِى الْقُرْبٰى இன்னும் உறவினருக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகள் وَ الْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகள் وَالْجَـارِ இன்னும் அண்டைவீட்டார் ذِى الْقُرْبٰى உறவினர் وَالْجَـارِ இன்னும் அண்டைவீட்டார் الْجُـنُبِ அந்நியர் وَالصَّاحِبِ இன்னும் நண்பர் بِالْجَـنْۢبِ அருகில் இருக்கும் وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணி(கள்) وَمَا இன்னும் எவர் مَلَـكَتْ சொந்தமாக்கின اَيْمَانُكُمْ‌ ؕ உங்கள் வலக்கரங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் مَنْ எவன் كَانَ இருக்கிறான் مُخْتَالًا கர்வமுடையவனாக فَخُوْرَا ۙ‏ பெருமையுடையவனாக
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
15:49
15:49 نَبِّئْ عِبَادِىْۤ اَنِّىْۤ اَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُۙ‏
نَبِّئْ அறிவிப்பீராக عِبَادِىْۤ என் அடியார்களுக்கு اَنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُۙ‏ மகா கருணையாளன்
15:49. (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக: “நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்.”