தேடல்


7:85
7:85 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ‌ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ ۚ‏
وَاِلٰى مَدْيَنَ ‘மத்யன்’க்கு اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய شُعَيْبًا‌ ؕ ஷுஐப்’ஐ قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுள் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி قَدْ جَآءَتْكُمْ வந்துவிட்டது/உங்களுக்கு بَيِّنَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ‌ உங்கள் இறைவன் فَاَوْفُوا ஆகவே முழுமையாக்குங்கள் الْكَيْلَ அளவை وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையை وَلَا تَبْخَسُوا குறைக்காதீர்கள் النَّاسَ மக்களுக்கு اَشْيَآءَ பொருள்களில் هُمْ அவர்களுடைய وَلَا تُفْسِدُوْا கலகம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் بَعْدَ பின்னர் اِصْلَاحِهَا‌ ؕ அது சீர்திருத்தப்பட்ட ذٰ لِكُمْ இவை خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‌ ۚ‏ நம்பிக்கை கொள்பவர்களாக
7:85. மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
7:88
7:88 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لَـنُخْرِجَنَّكَ يٰشُعَيْبُ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَكَ مِنْ قَرْيَتِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌ ؕ قَالَ اَوَلَوْ كُنَّا كَارِهِيْنَ ۚ‏
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْا பெருமையடித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لَـنُخْرِجَنَّكَ நிச்சயம் வெளியேற்றுவோம்/உம்மை يٰشُعَيْبُ ஷுஐப وَالَّذِيْنَ اٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டவர்களை مَعَكَ مِنْ உம்முடன்/இருந்து قَرْيَتِنَاۤ எங்கள் ஊர் اَوْ لَـتَعُوْدُنَّ அல்லது/நிச்சயமாக நீங்கள் திரும்பிவிட வேண்டும் فِىْ مِلَّتِنَا‌ ؕ எங்கள் கொள்கைக்கு قَالَ கூறினார் اَوَلَوْ كُنَّا நாங்கள் இருந்தாலுமா? كَارِهِيْنَ ۚ‏ வெறுப்பவர்களாக
7:88. அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), “ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள் - அதற்கவர், “நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று கேட்டார்.
7:90
7:90 وَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ لَٮِٕنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَ‏
وَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لَٮِٕنِ اتَّبَعْتُمْ நீங்கள் பின்பற்றினால் شُعَيْبًا ஷுஐப اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذًا لَّخٰسِرُوْنَ‏ அப்போது/நஷ்டவாளிகள்தான்
7:90. அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் ஷுஐபை பின் பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்” என்று கூறினார்.
7:92
7:92 الَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا‌‌ ۛۚ اَ لَّذِيْنَ كَذَّبُوْا شُعَيْبًا كَانُوْا هُمُ الْخٰسِرِيْنَ‌‌‏
الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் شُعَيْبًا ஷுஐப كَاَنْ لَّمْ يَغْنَوْا வசிக்காதவர்கள் போல் فِيْهَا‌ ۛۚ அதில் اَ لَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் شُعَيْبًا ஷுஐப كَانُوْا ஆகிவிட்டார்கள் هُمُ الْخٰسِرِيْنَ‌‏ அவர்கள்தான்/நஷ்டவாளிகளாக
7:92. ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
7:93
7:93 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسٰلٰتِ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ‌ۚ فَكَيْفَ اٰسٰی عَلٰى قَوْمٍ كٰفِرِيْنَ‏
فَتَوَلّٰى ஆகவே விலகினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ اَبْلَغْتُكُمْ திட்டமாக எடுத்துரைத்தேன்/உங்களுக்கு رِسٰلٰتِ தூதுகளை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ இன்னும் உபதேசித்தேன் لَـكُمْ‌ۚ உங்களுக்கு فَكَيْفَ ஆகவே எவ்வாறு اٰسٰی துயர்கொள்வேன் عَلٰى மீது قَوْمٍ சமுதாயத்தின் كٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களான
7:93. இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், “என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்” என்று அவர் கூறினார்.
11:84
11:84 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ‌ؕ وَلَا تَـنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ‌ اِنِّىْۤ اَرٰٮكُمْ بِخَيْرٍ وَّاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ‏
وَاِلٰى مَدْيَنَ ‘மத்யன்’க்கு اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய شُعَيْبًا‌ ؕ ஷுஐப قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ ؕ அவனையன்றி وَلَا تَـنْقُصُوا குறைக்காதீர்கள் الْمِكْيَالَ அளவையில் وَالْمِيْزَانَ‌ இன்னும் நிறுவையில் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮكُمْ காண்கிறேன்/ உங்களை بِخَيْرٍ நல்லதொரு வசதியில் وَّاِنِّىْۤ இன்னும் நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் مُّحِيْطٍ‏ சூழக்கூடியது
11:84. மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
11:87
11:87 قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا‌ ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ‏
قَالُوْا கூறினார்கள் يٰشُعَيْبُ ஷுஐப اَصَلٰوتُكَ உம் தொழுகையா? تَاْمُرُكَ தூண்டுகிறது/உம்மை اَنْ نَّتْرُكَ நாங்கள் விடுவதற்கு مَا எவற்றை يَعْبُدُ வணங்கினார்கள் اٰبَآؤُنَاۤ மூதாதைகள்/எங்கள் اَوْ அல்லது اَنْ نَّـفْعَلَ நாங்கள் செய்வதை فِىْۤ اَمْوَالِنَا செல்வங்களில்/எங்கள் مَا نَشٰٓؤُا‌ ؕ நாங்கள் நாடுகின்றபடி اِنَّكَ لَاَنْتَ நிச்சயமாக நீர்தான் الْحَـلِيْمُ மகா சகிப்பாளர் الرَّشِيْدُ‏ நல்லறிவாளர்
11:87. (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
11:91
11:91 قَالُوْا يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَـنَرٰٮكَ فِيْنَا ضَعِيْفًا‌ ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ‌ وَمَاۤ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ‏
قَالُوْا கூறினார்கள் يٰشُعَيْبُ ஷுஐப مَا نَفْقَهُ நாம் விளங்கவில்லை كَثِيْرًا பலவற்றை مِّمَّا تَقُوْلُ நீர் கூறுவதில் وَاِنَّا நிச்சயமாக நாம் لَـنَرٰٮكَ உம்மை காண்கிறோம் فِيْنَا எங்களில் ضَعِيْفًا‌ ۚ பலவீனராக وَلَوْلَا இல்லாவிடில் رَهْطُكَ உம் இனத்தார் لَرَجَمْنٰكَ‌ கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மை وَمَاۤ اَنْتَ عَلَيْنَا இல்லை/நீர்/நம்மிடம் بِعَزِيْزٍ‏ மதிப்புடையவராக
11:91. (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
11:94
11:94 وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏
وَلَمَّا جَآءَ வந்த போது اَمْرُنَا நம் கட்டளை نَجَّيْنَا பாதுகாத்தோம் شُعَيْبًا ஷுஐப وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ அருளைக் கொண்டு مِّنَّا ۚ நமது وَاَخَذَتِ இன்னும் பிடித்தது الَّذِيْنَ எவர்களை ظَلَمُوا அநியாயம்செய்தார்கள் الصَّيْحَةُ فَاَصْبَحُوْا சப்தம்/காலையில் ஆகிவிட்டனர் فِىْ دِيَارِهِمْ தங்கள் இல்லங்களில் جٰثِمِيْنَۙ‏ இறந்தவர்களாக
11:94. (தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
15:78
15:78 وَاِنْ كَانَ اَصْحٰبُ الْاَيْكَةِ لَظٰلِمِيْنَۙ‏
وَاِنْ كَانَ நிச்சயமாக இருந்தார்(கள்) اَصْحٰبُ الْاَيْكَةِ தோப்புடையவர்கள் لَظٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்களாகவே
15:78. இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.