தேடல்


3:37
3:37 فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
فَتَقَبَّلَهَا ஆகவே அவளை ஏற்றான் رَبُّهَا அவளுடைய இறைவன் بِقَبُوْلٍ ஏற்பாக حَسَنٍ அழகியது وَّاَنْۢبَتَهَا இன்னும் அவளை வளர்த்தான் نَبَاتًا வளர்ப்பாக حَسَنًا ۙ அழகியது وَّكَفَّلَهَا இன்னும் அவளுக்கு பொறுப்பாளராக்கினான் زَكَرِيَّا ؕ ஸகரிய்யாவை كُلَّمَا دَخَلَ நுழையும் போதெல்லாம் عَلَيْهَا அவளிடம் زَكَرِيَّا ஸகரிய்யா الْمِحْرَابَۙ மாடத்தில் وَجَدَ பெற்றார் عِنْدَهَا அவளிடம் رِزْقًا ۚ‌ ஓர் உணவை قَالَ கூறினார் يٰمَرْيَمُ மர்யமே! اَنّٰى எங்கிருந்து? لَـكِ உனக்கு هٰذَا ؕ‌ இது قَالَتْ கூறினாள் هُوَ இது مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடமிருந்து اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَرْزُقُ வழங்குவான் مَنْ எவர் يَّشَآءُ நாடுகிறான் بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
3:38
3:38 هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏
هُنَالِكَ அவ்விடத்தில் دَعَا பிரார்த்தித்தார் زَكَرِيَّا ஸகரிய்யா رَبَّهٗ‌ ۚ அவரின் இறைவனை قَالَ கூறினார் رَبِّ என் இறைவா هَبْ لِىْ எனக்கு தா! مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து ذُرِّيَّةً ஒரு சந்ததியை طَيِّبَةً‌  ۚ اِنَّكَ நல்லது/நிச்சயமாக நீ سَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனை
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
3:41
3:41 قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ‌ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ؕ‌ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ‏
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اجْعَلْ ஆக்கு لِّىْۤ எனக்கு اٰيَةً ؕ ஓர் அத்தாட்சியை قَالَ கூறினான் اٰيَتُكَ உம் அத்தாட்சி اَلَّا تُكَلِّمَ நீர் பேசமால் இருப்பது النَّاسَ மக்களிடம் ثَلٰثَةَ اَيَّامٍ மூன்று நாட்கள் اِلَّا தவிர رَمْزًا ؕ‌ சாடையாக وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக رَّبَّكَ உம் இறைவனை كَثِيْرًا அதிகம் وَّسَبِّحْ இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக بِالْعَشِىِّ மாலையில் وَالْاِبْكَارِ‏ இன்னும் காலையில்
3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
6:85
6:85 وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ‏
وَزَكَرِيَّا இன்னும் ஸகரிய்யாவை وَيَحْيٰى இன்னும் யஹ்யாவை وَعِيْسٰى இன்னும் ஈஸாவை وَاِلْيَاسَ‌ؕ இன்னும் இல்யாûஸ كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰلِحِيْنَۙ‏ நல்லோரில்
6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
19:2
19:2 ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا ‌ ۖ ‌ۚ‏
ذِكْرُ நினைவு கூர்வது رَحْمَتِ அருள் செய்ததை رَبِّكَ உமது இறைவன் عَـبْدَهٗ தன் அடியார் زَكَرِيَّا ۖ ۚ‏ ஸகரிய்யாவுக்கு
19:2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
19:7
19:7 يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ اۨسْمُهٗ يَحْيٰى ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا‏
يٰزَكَرِيَّاۤ ஸகரிய்யாவே! اِنَّا நிச்சயமாக நாம் نُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி தருகிறோம் بِغُلٰمِ ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு اۨسْمُهٗ அதன் பெயர் يَحْيٰى ۙ யஹ்யா لَمْ نَجْعَلْ நாம் படைக்கவில்லை لَّهٗ அதற்கு مِنْ قَبْلُ இதற்கு முன் سَمِيًّا‏ ஒப்பானவரை
19:7. ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
21:89
21:89 وَزَكَرِيَّاۤ اِذْ نَادٰى رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏
وَزَكَرِيَّاۤ இன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராக اِذْ نَادٰى அவர் அழைத்தபோது رَبَّهٗ தன் இறைவனை رَبِّ என் இறைவா لَا تَذَرْنِىْ என்னை விட்டுவிடாதே فَرْدًا ஒருத்தனாக وَّاَنْتَ நீதான் خَيْرُ மிகச் சிறந்தவன் الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏ வாரிசுகளில்
21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது: