தேடல்


2:23
2:23 وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَاِنْ کُنْتُمْ நீங்கள் இருந்தால் فِىْ رَيْبٍ சந்தேகத்தில் مِّمَّا எதில் نَزَّلْنَا இறக்கினோம் عَلٰى மீது عَبْدِنَا நம் அடிமை فَاْتُوْا எனவே, வாருங்கள் بِسُوْرَةٍ ஓர் அத்தியாயத்தைக் கொண்டு مِّنْ مِّثْلِهٖ அது போன்ற وَادْعُوْا இன்னும் அழையுங்கள் شُهَدَآءَكُمْ உங்கள் ஆதரவாளர்களை مِّنْ دُوْنِ அல்லாத اللّٰهِ அல்லாஹ் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
3:144
3:144 وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌ ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏
وَمَا இல்லை مُحَمَّدٌ முஹம்மது اِلَّا தவிர رَسُوْلٌ  ۚ ஒரு தூதரே قَدْ خَلَتْ சென்று விட்டனர் مِنْ قَبْلِهِ அவருக்கு முன்னர் الرُّسُلُ‌ؕ தூதர்கள் افَا۟ٮِٕنْ مَّاتَ அவர் இறந்தால் اَوْ அல்லது قُتِلَ கொல்லப்பட்டால் انْقَلَبْتُمْ புரண்டு விடுவீர்கள் عَلٰٓى மீது اَعْقَابِكُمْ‌ؕ உங்கள் குதிங்கால்கள் وَمَنْ இன்னும் எவர் يَّنْقَلِبْ புரண்டு விடுவாரோ عَلٰى மீது عَقِبَيْهِ தன் குதிங்கால்கள் فَلَنْ يَّضُرَّ அறவே தீங்கு செய்யமுடியாது اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا‌ ؕ எதையும் وَسَيَجْزِى கூலி வழங்குவான் اللّٰهُ அல்லாஹ் الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்களுக்கு
3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
33:40
33:40 مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
مَا كَانَ இருக்கவில்லை مُحَمَّدٌ முஹம்மது اَبَآ தந்தையாக اَحَدٍ ஒருவருக்கும் مِّنْ رِّجَالِكُمْ உங்கள் ஆண்களில் وَلٰـكِنْ என்றாலும் رَّسُوْلَ தூதராகவும் اللّٰهِ அல்லாஹ்வின் وَخَاتَمَ இறுதி முத்திரையாகவும் النَّبِيّٖنَ ؕ நபிமார்களின் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  
47:2
47:2 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ‌ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا الصّٰلِحٰتِ இன்னும் நன்மைகளை செய்தனர் وَاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் بِمَا نُزِّلَ இறக்கப்பட்டதை(யும்) عَلٰى مُحَمَّدٍ முஹம்மது நபியின் மீது وَّهُوَ அதுதான் الْحَقُّ உண்மையாகும் مِنْ رَّبِّهِمْ‌ۙ அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த كَفَّرَ போக்கிவிடுவான் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ அவர்களின் பாவங்களை وَاَصْلَحَ இன்னும் சீர் செய்துவிடுவான் بَالَهُمْ‏ அவர்களின் காரியத்தை
47:2. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
48:29
48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏
مُحَمَّدٌ முஹம்மது رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் தூதர் وَالَّذِيْنَ مَعَهٗۤ அவருடன் இருக்கின்றவர்கள் اَشِدَّآءُ கடினமானவர்கள் عَلَى الْكُفَّارِ நிராகரிப்பாளர்கள்மீது رُحَمَآءُ கருணையாளர்கள் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் تَرٰٮهُمْ நீர் அவர்களைக்காண்பீர் رُكَّعًا ருகூஃசெய்தவர்களாக سُجَّدًا சுஜூது செய்தவர்களாக يَّبْتَغُوْنَ அவர்கள் விரும்புகிறார்கள் فَضْلًا அருளை(யும்) مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَرِضْوَانًا‌ பொருத்தத்தையும் سِيْمَاهُمْ அவர்களின் தோற்றம் فِىْ وُجُوْهِهِمْ அவர்களின் முகங்களில் مِّنْ اَثَرِ அடையாளமாக السُّجُوْدِ‌ ؕ சுஜூதின் ذٰ لِكَ இது مَثَلُهُمْ அவர்களின் தன்மையாகும் فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ தவ்றாத்தில் கூறப்பட்ட وَمَثَلُهُمْ இன்னும் அவர்களின் தன்மையாவது فِى الْاِنْجِيْلِ ۛۚ இன்ஜீலில் கூறப்பட்ட كَزَرْعٍ ஒரு விளைச்சலைப் போலாகும் اَخْرَجَ வெளியாக்கியது شَطْئَـهٗ தனது காம்பை فَاٰزَرَهٗ இன்னும் அதை பலப்படுத்தியது فَاسْتَغْلَظَ பிறகு அது தடிப்பமாக ஆனது فَاسْتَوٰى அது உயர்ந்து நின்று عَلٰى سُوْقِهٖ தனது தண்டின் மீது يُعْجِبُ கவர்கிறது الزُّرَّاعَ விவசாயிகளை لِيَـغِيْظَ அவன் ரோஷமூட்டுவதற்காக بِهِمُ அவர்கள் மூலமாக الْكُفَّارَ‌ ؕ நிராகரிப்பாளர்களை وَعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கு وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை مِنْهُمْ அவர்களில் مَّغْفِرَةً மன்னிப்பை(யும்) وَّاَجْرًا عَظِيْمًا‏ மகத்தானகூலியையும்
48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.