தேடல்


2:51
2:51 وَاِذْ وٰعَدْنَا مُوْسٰٓى اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் وٰعَدْنَا வாக்களித்தோம் مُوْسٰٓى மூஸாவிற்கு اَرْبَعِيْنَ நாற்பது لَيْلَةً இரவுகளை ثُمَّ பிறகு اتَّخَذْتُمُ எடுத்துக்கொண்டீர்கள் الْعِجْلَ காளைக் கன்றை مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் وَاَنْـتُمْ நீங்கள் ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
2:51. மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
2:53
2:53 وَاِذْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை وَالْفُرْقَانَ இன்னும் பகுத்தறிவிக்கக் கூடியதை لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
2:53. இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).
2:54
2:54 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَکُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْآ اِلٰى بَارِٮِٕكُمْ فَاقْتُلُوْٓا اَنْفُسَكُمْؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ عِنْدَ بَارِٮِٕكُمْؕ فَتَابَ عَلَيْكُمْ‌ؕ اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ‏
وَاِذْ இன்னும் சமயம் قَالَ கூறினார் مُوْسٰى மூசா لِقَوْمِهٖ சமுதாயத்திற்கு/தன் يٰقَوْمِ என் சமுதாயமே اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் ظَلَمْتُمْ அநியாயம்செய்தீர்கள் اَنْفُسَکُمْ ஆன்மாக்களுக்கு/உங்கள் بِاتِّخَاذِكُمُ நீங்கள் எடுத்துக் கொண்டதினால் الْعِجْلَ காளைக் கன்றை فَتُوْبُوْآ எனவே பாவத்தை விட்டுத் திரும்புங்கள் اِلٰى பக்கம் بَارِٮِٕكُمْ படைத்தவன்/உங்களை فَاقْتُلُوْٓا ஆகவேகொல்லுங்கள் اَنْفُسَكُمْؕ உயிர்களை/உங்கள் ذٰلِكُمْ அது خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு عِنْدَ இடம் بَارِٮِٕكُمْؕ படைத்தவன்/உங்களை فَتَابَ எனவே மன்னித்தான் عَلَيْكُمْ‌ؕ உங்களை اِنَّهٗ நிச்சயமாக அவன் هُوَ அவன் التَّوَّابُ தவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
2:55
2:55 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نُّؤْمِنَ لَـكَ حَتّٰى نَرَى اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் قُلْتُمْ கூறினீர்கள் يٰمُوْسٰى மூஸாவே! لَنْ نُّؤْمِنَ நம்பிக்கை கொள்ளவே மாட்டோம் لَـكَ உம்மை حَتّٰى வரை نَرَى நாம் காணும் اللّٰهَ அல்லாஹ்வை جَهْرَةً கண்கூடாக فَاَخَذَتْكُمُ எனவே பிடித்தது/உங்களை الصّٰعِقَةُ பெரும் சப்தம் وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏ நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க
2:55. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், “மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்” என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.
2:60
2:60 وَاِذِ اسْتَسْقَىٰ مُوْسٰى لِقَوْمِهٖ فَقُلْنَا اضْرِبْ بِّعَصَاكَ الْحَجَرَ‌ؕ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا‌ؕ قَدْ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشْرَبَهُمْ‌ؕ کُلُوْا وَاشْرَبُوْا مِنْ رِّزْقِ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِىْ الْاَرْضِ مُفْسِدِيْنَ‏
وَاِذِ இன்னும் சமயம் اسْتَسْقَىٰ தண்ணீர் தேடினார் مُوْسٰى மூசா لِقَوْمِهٖ தனது சமுதாயத்திற்கு فَقُلْنَا ஆகவே, கூறினோம் اضْرِبْ அடிப்பீராக بِّعَصَاكَ உம் தடியால் الْحَجَرَ‌ؕ கல்லை فَانْفَجَرَتْ பீறிட்டன مِنْهُ அதிலிருந்து اثْنَتَا عَشْرَةَ பன்னிரெண்டு عَيْنًا‌ؕ ஊற்று(கள்) قَدْ திட்டமாக عَلِمَ அறிந்தார்(கள்) کُلُّ எல்லாம் اُنَاسٍ மக்கள் مَّشْرَبَهُمْ‌ؕ குடிக்குமிடத்தை/தங்கள் کُلُوْا புசியுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் مِنْ இருந்து رِّزْقِ உணவு اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا تَعْثَوْا இன்னும் வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள் فِىْ الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ‏ விஷமிகளாக
2:60. மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
2:61
2:61 وَاِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نَّصْبِرَ عَلٰى طَعَامٍ وَّاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ مِنْۢ بَقْلِهَا وَقِثَّـآٮِٕهَا وَفُوْمِهَا وَعَدَسِهَا وَ بَصَلِهَا‌ؕ قَالَ اَتَسْتَبْدِلُوْنَ الَّذِىْ هُوَ اَدْنٰى بِالَّذِىْ هُوَ خَيْرٌ‌ؕ اِهْبِطُوْا مِصْرًا فَاِنَّ لَـکُمْ مَّا سَاَلْتُمْ‌ؕ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْکَنَةُ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ‌ؕ ذٰلِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ الْحَـقِّ‌ؕ ذٰلِكَ بِمَا عَصَوْا وَّڪَانُوْا يَعْتَدُوْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் قُلْتُمْ கூறினீர்கள் يٰمُوْسٰى மூஸாவே! لَنْ نَّصْبِرَ சகிக்கவே மாட்டோம் عَلٰى மீது طَعَامٍ ஓர் உணவு وَّاحِدٍ ஒரே (ஒன்று) فَادْعُ ஆகவே பிரார்த்திப்பீராக لَنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் يُخْرِجْ உற்பத்திசெய்வான் لَنَا எங்களுக்காக مِمَّا எதிலிருந்து تُنْۢبِتُ விளைவிக்கிறது الْاَرْضُ பூமி مِنْۢ இருந்து بَقْلِهَا அதன் கீரை وَقِثَّـآٮِٕهَا இன்னும் வெள்ளரிக்காய்/அதன் وَفُوْمِهَا இன்னும் கோதுமை/அதன் وَعَدَسِهَا இன்னும் பருப்பு/அதன் بَصَلِهَا‌ؕ இன்னும் வெங்காயம் / அதன் قَالَ கூறினார் اَتَسْتَبْدِلُوْنَ மாற்றிக் கொள்கிறீர்களா? الَّذِىْ எது هُوَ அது اَدْنٰى மிகத் தாழ்ந்தது بِالَّذِىْ எதற்குப் பகரமாக هُوَ خَيْرٌ‌ؕ அது சிறந்தது اِهْبِطُوْا இறங்குங்கள் مِصْرًا ஒரு நகரத்தில் فَاِنَّ நிச்சயமாக لَـکُمْ உங்களுக்கு مَّا எது سَاَلْتُمْ‌ؕ கேட்டீர்கள் وَضُرِبَتْ இன்னும் விதிக்கப்பட்டன عَلَيْهِمُ அவர்கள் மீது الذِّلَّةُ இழிவு وَالْمَسْکَنَةُ இன்னும் வீழ்ச்சி وَبَآءُوْ இன்னும் சார்ந்து விட்டார்கள் بِغَضَبٍ கோபத்தில் مِّنَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் ذٰلِكَ அது بِاَنَّهُمْ காரணம்/நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வுடைய وَيَقْتُلُوْنَ இன்னும் கொலை செய்கிறார்கள் النَّبِيّٖنَ நபிமார்களை بِغَيْرِ الْحَـقِّ‌ؕ நியாயமின்றி ذٰلِكَ அது بِمَا காரணமாக عَصَوْا பாவம் செய்தனர் وَّڪَانُوْا இன்னும் இருந்தனர் يَعْتَدُوْنَ‏ வரம்பு மீறுவார்கள்
2:61. இன்னும், “மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்” என்று நீங்கள் கூற, “நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.
2:67
2:67 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖۤ اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تَذْبَحُوْا بَقَرَةً ‌ ؕ قَالُوْآ اَتَتَّخِذُنَا هُزُوًْا ‌ؕ قَالَ اَعُوْذُ بِاللّٰهِ اَنْ اَكُوْنَ مِنَ الْجٰـهِلِيْنَ‏
وَاِذْ இன்னும் சமயம் قَالَ கூறினார் مُوْسٰى மூசா لِقَوْمِهٖۤ சமுதாயத்திற்கு/தன் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَاْمُرُكُمْ ஏவுகிறான்/உங்களை اَنْ تَذْبَحُوْا நீங்கள் அறுப்பதற்கு بَقَرَةً  ؕ ஒரு பசுவை قَالُوْآ கூறினார்கள் اَتَتَّخِذُنَا எடுத்துக் கொள்கிறீரா?/எங்களை هُزُوًْا ؕ பரிகாசமாக قَالَ கூறினார் اَعُوْذُ பாதுகாப்புத் தேடுகிறேன் بِاللّٰهِ அல்லாஹ்விடம் اَنْ اَكُوْنَ நான் ஆகுவதை விட்டு مِنَ الْجٰـهِلِيْنَ‏ அறிவிலிகளில்
2:67. இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், “நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்” என்று சொன்னபோது, அவர்கள் “(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?” என்று கூறினர்; (அப்பொழுது) அவர், “(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினார்.
2:68
2:68 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا هِىَ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَّلَا بِكْرٌؕ عَوَانٌۢ بَيْنَ ذٰلِكَ‌ؕ فَافْعَلُوْا مَا تُؤْمَرُوْنَ‏
قَالُوا கூறினார்கள் ادْعُ பிரார்த்திப்பீராக لَنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் يُبَيِّنْ விவரிப்பான் لَّنَا எங்களுக்கு مَا என்ன? هِىَ‌ؕ அது قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக அவன் يَقُوْلُ கூறுகிறான் اِنَّهَا நிச்சயமாக அது بَقَرَةٌ பசு لَّا அல்ல فَارِضٌ கிழடு وَّلَا இன்னும் அல்ல بِكْرٌؕ இளங்கன்று عَوَانٌۢ நடுத்தரமானது بَيْنَ மத்தியில் ذٰلِكَ‌ؕ அதற்கு فَافْعَلُوْا எனவே செய்யுங்கள் مَا எதை تُؤْمَرُوْنَ‏ ஏவப்படுகிறீர்கள்
2:68. “அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.
2:69
2:69 قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَّنَا مَا لَوْنُهَا ‌ؕ قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُۙ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ النّٰظِرِيْنَ‏
قَالُوا கூறினார்கள் ادْعُ பிரார்த்திப்பீராக لَنَا எங்களுக்காக رَبَّكَ உம் இறைவனிடம் يُبَيِّنْ விவரிப்பான் لَّنَا எங்களுக்கு مَا என்ன? لَوْنُهَا ؕ அதன் நிறம் قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக அவன் يَقُوْلُ கூறுகிறான் اِنَّهَا நிச்சயமாக அது بَقَرَةٌ பசு صَفْرَآءُۙ மஞ்சள் நிறமானது فَاقِعٌ தூய்மையானது لَّوْنُهَا நிறம்/அதன் تَسُرُّ அது மகிழ்விக்கும் النّٰظِرِيْنَ‏ பார்ப்பவர்களை
2:69. “அதன் நிறம் யாது!” என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார்.
2:71
2:71 قَالَ اِنَّهٗ يَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِيْرُ الْاَرْضَ وَلَا تَسْقِى الْحَـرْثَ ‌ۚ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيْهَا ‌ؕ قَالُوا الْـٰٔـنَ جِئْتَ بِالْحَـقِّ‌ؕ فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا يَفْعَلُوْنَ‏
قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக அவன் يَقُوْلُ கூறுகிறான் اِنَّهَا நிச்சயமாக அது بَقَرَةٌ பசு لَّا ذَلُوْلٌ பயன்படுத்தப்படாதது تُثِيْرُ உழுவதற்கு الْاَرْضَ நிலத்தை وَلَا تَسْقِى நீர் இறைக்காது الْحَـرْثَ ۚ விளை நிலத்திற்கு مُسَلَّمَةٌ குறையற்றது لَّا அறவே இல்லை شِيَةَ வடு فِيْهَا ؕ அதில் قَالُوا கூறினார்கள் الْـٰٔـنَ இப்போது جِئْتَ வந்தீர் بِالْحَـقِّ‌ؕ உண்மையைக் கொண்டு فَذَبَحُوْهَا அறுத்தார்கள்/அதை وَمَا كَادُوْا அவர்கள் நெருங்கவில்லை يَفْعَلُوْنَ‏ செய்வார்கள்
2:71. அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.