தேடல்


2:258
2:258 اَلَمْ تَرَ اِلَى الَّذِىْ حَآجَّ اِبْرٰهٖمَ فِىْ رَبِّهٖۤ اَنْ اٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ‌ۘ اِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّىَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُۙ قَالَ اَنَا اُحْىٖ وَاُمِيْتُ‌ؕ قَالَ اِبْرٰهٖمُ فَاِنَّ اللّٰهَ يَاْتِىْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَاْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِىْ كَفَرَ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‌ۚ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِىْ எவனை حَآجَّ தர்க்கித்தான் اِبْرٰهٖمَ இப்ராஹீமிடம் فِىْ رَبِّهٖۤ அவருடைய இறைவன் விசயத்தில் اَنْ اٰتٰٮهُ اللّٰهُ அல்லாஹ் அவனுக்குக் கொடுத்தால் الْمُلْكَ‌ۘ ஆட்சியை اِذْ قَالَ கூறியபோது اِبْرٰهٖمُ இப்றாஹீம் رَبِّىَ என் இறைவன் الَّذِىْ எவன் يُحْىٖ உயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُۙ இன்னும் மரணிக்கச் செய்கிறான் قَالَ கூறினான் اَنَا நான் اُحْىٖ உயிர்ப்பிப்பேன் وَاُمِيْتُ‌ؕ இன்னும் மரணிக்கச் செய்வேன் قَالَ கூறினார் اِبْرٰهٖمُ இப்றாஹீம் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَاْتِىْ வருகிறான் بِالشَّمْسِ சூரியனைக் கொண்டு مِنَ الْمَشْرِقِ கிழக்கிலிருந்து فَاْتِ எனவே நீ வா بِهَا அதைக் கொண்டு مِنَ الْمَغْرِبِ மேற்கிலிருந்து فَبُهِتَ ஆகவே வாயடைக்கப்பட்டான் الَّذِىْ எவன் كَفَرَ‌ؕ நிராகரித்தான் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‌ۚ‏ அநியாயக்காரர்கள்
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
2:260
2:260 وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى ؕ قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ؕ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ؕ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை اِبْرٰهٖمُ இப்றாஹீம் رَبِّ என் இறைவா! اَرِنِىْ எனக்குக் காட்டு كَيْفَ எப்படி تُحْىِ உயிர்ப்பிக்கிறாய் الْمَوْتٰى ؕ இறந்தவர்களை قَالَ கூறினான் اَوَلَمْ تُؤْمِنْ‌ؕ நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா? قَالَ கூறினார் بَلٰى அவ்வாறில்லை وَلٰـكِنْ எனினும் لِّيَطْمَٮِٕنَّ நிம்மதி பெறுவதற்காக قَلْبِىْ‌ؕ என் உள்ளம் قَالَ கூறினான் فَخُذْ எனவே பிடிப்பீராக اَرْبَعَةً நான்கை مِّنَ இல் الطَّيْرِ பறவைகள் فَصُرْهُنَّ அவற்றைப் பழக்குவீராக اِلَيْكَ உம் பக்கம் ثُمَّ பிறகு اجْعَلْ ஆக்குவீராக عَلٰى மீது كُلِّ எல்லா جَبَلٍ மலை مِّنْهُنَّ அவற்றிலிருந்து جُزْءًا ஒரு பாகத்தை ثُمَّ பிறகு ادْعُهُنَّ அவற்றை கூப்பிடுவீராக يَاْتِيْنَكَ அவை உம்மிடம் வரும் سَعْيًا ؕ விரைந்து وَاعْلَمْ இன்னும் அறிந்துகொள்வீராக اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
2:260. இன்னும், இப்ராஹீம்: “என் இறைவா! இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக!” எனக் கோரியபோது, அவன்,“நீர் (இதை) நம்ப வில்லையா?” எனக் கேட்டான்; “மெய்(யாக நம்புகிறேன்!) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)” என்று கூறினார் “(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்; பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்” என்று (அல்லாஹ்) கூறினான்.
3:33
3:33 اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰۤى தேர்ந்தெடுத்தான் اٰدَمَ ஆதமை وَنُوْحًا இன்னும் நூஹை وَّاٰلَ இன்னும் குடும்பத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் وَاٰلَ عِمْرٰنَ இன்னும் இம்ரானின் குடும்பத்தை عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:65
3:65 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِىْۤ اِبْرٰهِيْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰٮةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لِمَ ஏன் تُحَآجُّوْنَ தர்க்கம்செய்கிறீர்கள் فِىْۤ اِبْرٰهِيْمَ இப்றாஹீம் விஷயத்தில் وَمَاۤ اُنْزِلَتِ இறக்கப்படவில்லை التَّوْرٰٮةُ தவ்றாத்து وَالْاِنْجِيْلُ இன்னும் இன்ஜீல் اِلَّا தவிர مِنْۢ بَعْدِهٖؕ அவருக்கு பின்னரே اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
3:67
3:67 مَا كَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّ لٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
مَا كَانَ இருக்கவில்லை اِبْرٰهِيْمُ இப்றாஹீம் يَهُوْدِيًّا யூதராக وَّلَا இன்னும் இல்லை نَصْرَانِيًّا கிறித்தவராக وَّ لٰكِنْ كَانَ எனினும் இருந்தார் حَنِيْفًا அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றுபவராக مُّسْلِمًا ؕ முஸ்லிமாக وَمَا كَانَ அவர்இருக்கவில்லை مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
3:67. இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
3:68
3:68 اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ؕ وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ‏
اِنَّ நிச்சயமாக اَوْلَى மிக நெருங்கியவர் النَّاسِ மக்களில் بِاِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு لَـلَّذِيْنَ உறுதியாக எவர்கள் اتَّبَعُوْهُ அவரைப் பின்பற்றினார்கள் وَهٰذَا النَّبِىُّ இன்னும் இந்த நபி وَالَّذِيْنَ اٰمَنُوْا ؕ இன்னும் நம்பிக்கையாளர்கள் وَاللّٰهُ இன்னும் அல்லாஹ் وَلِىُّ பாதுகாவலன் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களின்
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
3:84
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ‏ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:95
3:95 قُلْ صَدَقَ اللّٰهُ‌ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக صَدَقَ உண்மை கூறி விட்டான் اللّٰهُ‌ அல்லாஹ் فَاتَّبِعُوْا ஆகவே பின்பற்றுங்கள் مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் حَنِيْفًا ؕ இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவர் وَمَا كَانَ இன்னும் அவர் இருக்கவில்லை. مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
3:95. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
3:97
3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
فِيْهِ அதில் اٰيٰتٌ ۢ அத்தாட்சிகள் بَيِّنٰتٌ தெளிவானவை مَّقَامُ நின்ற இடம் اِبْرٰهِيْمَۚ இப்றாஹீம் وَمَنْ இன்னும் எவர் دَخَلَهٗ நுழைகிறார்/அதில் كَانَ ஆகி விட்டார் اٰمِنًا ؕ அச்சமற்றவராக وَلِلّٰهِ அல்லாஹ்வுக்காக عَلَى மீது النَّاسِ மக்கள் حِجُّ ஹஜ் செய்வது الْبَيْتِ இல்லத்தை مَنِ எவர் اسْتَطَاعَ சக்தி பெற்றார் اِلَيْهِ அதன் பக்கம் سَبِيْلًا ؕ பாதையால் وَمَنْ இன்னும் எவர் كَفَرَ நிராகரித்தார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّ தேவையற்றவன் عَنِ விட்டு الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களை
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
4:54
4:54 اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏
اَمْ அல்லது يَحْسُدُوْنَ பொறாமைப்படுகி றார்கள் النَّاسَ மக்களை عَلٰى மீது مَاۤ اٰتٰٮهُمُ எது/கொடுத்தான்/ அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ۚ தன் அருளிலிருந்து فَقَدْ திட்டமாக اٰتَيْنَاۤ கொடுத்தோம் اٰلَ குடும்பத்தாருக்கு اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய الْـكِتٰبَ வேதத்தை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَاٰتَيْنٰهُمْ இன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்கு مُّلْكًا ஆட்சியை عَظِيْمًا‏ பெரிய
4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.