தேடல்


34:13
34:13 يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ‏
يَعْمَلُوْنَ அவை செய்கின்றன لَهٗ அவருக்கு مَا يَشَآءُ அவர் நாடுகின்ற(தை) مِنْ مَّحَارِيْبَ தொழுமிடங்களை(யும்) وَتَمَاثِيْلَ சிலைகளையும் وَجِفَانٍ பாத்திரங்களையும் كَالْجَـوَابِ நீர் தொட்டிகளைப் போன்ற وَقُدُوْرٍ சட்டிகளையும் رّٰسِيٰتٍ ؕ உறுதியான اِعْمَلُوْۤا செய்யுங்கள் اٰلَ குடும்பத்தார்களே! دَاوٗدَ தாவூதின் شُكْرًا ؕ நன்றி செலுத்துவதற்காக وَقَلِيْلٌ குறைவானவர்களே مِّنْ عِبَادِىَ என் அடியார்களில் الشَّكُوْرُ‏ நன்றி செலுத்துபவர்கள்
34:13. அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
38:17
38:17 اِصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَيْدِ‌ۚ اِنَّـهٗۤ اَوَّابٌ‏
اِصْبِرْ சகிப்பீராக! عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவதை وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக عَبْدَنَا நமது அடியார் دَاوٗدَ தாவூதை ذَا الْاَيْدِ‌ۚ மிக வலிமை, உறுதி உடைய اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ‏ முற்றிலும் திரும்பக்கூடியவர்
38:17. இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
38:21
38:21 وَهَلْ اَتٰٮكَ نَبَؤُا الْخَصْمِ‌ۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَۙ‏
وَهَلْ اَتٰٮكَ உம்மிடம் வந்ததா? نَبَؤُا செய்தி الْخَصْمِ‌ۘ வழக்காளிகளுடைய اِذْ تَسَوَّرُوا அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! الْمِحْرَابَۙ‏ வீட்டின் முன்பக்கமாக
38:21. அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
38:22
38:22 اِذْ دَخَلُوْا عَلٰى دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ‌ قَالُوْا لَا تَخَفْ‌ۚ خَصْمٰنِ بَغٰى بَعْضُنَا عَلٰى بَعْضٍ فَاحْكُمْ بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰى سَوَآءِ الصِّرَاطِ‏
اِذْ دَخَلُوْا அவர்கள் நுழைந்த போது عَلٰى دَاوٗدَ தாவூத் (நபி) இடம் فَفَزِعَ அவர் திடுக்கிற்றார் مِنْهُمْ‌ அவர்களைப் பார்த்து قَالُوْا அவர்கள் கூறினர் لَا تَخَفْ‌ۚ பயப்படாதீர் خَصْمٰنِ நாங்கள் இரு வழக்காளிகள் بَغٰى அநியாயம் செய்தார் بَعْضُنَا எங்களில் ஒருவர் عَلٰى بَعْضٍ ஒருவர் மீது فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَنَا எங்களுக்கு மத்தியில் بِالْحَقِّ நீதமாக وَلَا تُشْطِطْ அநீதி இழைத்து விடாதீர் وَاهْدِنَاۤ எங்களுக்கு வழிகாட்டுவீராக! اِلٰى سَوَآءِ பாதையின் பக்கம் الصِّرَاطِ‏ நேரான
38:22. தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
38:24
38:24 قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰى نِعَاجِهٖ‌ ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ الْخُلَـطَآءِ لَيَبْغِىْ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِيْلٌ مَّا هُمْ‌ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۩
قَالَ கூறினார் لَقَدْ ظَلَمَكَ அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார் بِسُؤَالِ (அவர்) கேட்டதினால் نَعْجَتِكَ உனது ஆட்டை اِلٰى نِعَاجِهٖ‌ ؕ தனது ஆடுகளுடன் சேர்க்க وَاِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர்கள் مِّنَ الْخُلَـطَآءِ பங்காளிகளில் لَيَبْغِىْ அநீதிஇழைக்கின்றனர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலர் மீது اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை وَقَلِيْلٌ مَّا மிகக் குறைவானவர்களே! هُمْ‌ ؕ அவர்கள் وَظَنَّ அறிந்தார் دَاوٗدُ தாவூத் اَنَّمَا فَتَنّٰهُ நாம் அவரை சோதித்தோம் என்பதை فَاسْتَغْفَرَ ஆகவே, அவர் மன்னிப்புக் கேட்டார் رَبَّهٗ தன் இறைவனிடம் وَخَرَّ இன்னும் விழுந்தார் رَاكِعًا சிரம் பணிந்தவராக وَّاَنَابَ ۩‏ இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்
38:24. (அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
38:26
38:26 يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ‏
يٰدَاوٗدُ தாவூதே! اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنٰكَ உம்மை ஆக்கினோம் خَلِيْفَةً அதிபராக فِى الْاَرْضِ இந்த பூமியில் فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَ மத்தியில் النَّاسِ மக்களுக்கு بِالْحَقِّ சத்தியத்தைக் கொண்டு وَلَا تَتَّبِعِ பின்பற்றிவிடாதீர் الْهَوٰى ஆசையை فَيُضِلَّكَ அது உம்மை வழிகெடுத்து விடும் عَنْ سَبِيْلِ மார்க்கத்தில் இருந்து اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يَضِلُّوْنَ வழிகெடுபவர்கள் عَنْ سَبِيْلِ மார்க்கத்தில் இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை شَدِيْدٌۢ கடுமையான(து) بِمَا نَسُوْا அவர்கள் மறந்ததால் يَوْمَ நாளை الْحِسَابِ‏ விசாரணை
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  
38:30
38:30 وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ ؕ ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لِدَاوٗدَ தாவூதுக்கு سُلَيْمٰنَ‌ ؕ சுலைமானை نِعْمَ الْعَبْدُ‌ ؕ அவர் சிறந்த அடியார் اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ ؕ அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
38:30. இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.