தேடல்


11:71
11:71 وَامْرَاَ تُهٗ قَآٮِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ يَعْقُوْبَ‏
وَامْرَاَ تُهٗ அவருடைய மனைவி قَآٮِٕمَةٌ நின்று கொண்டிருந்தாள் فَضَحِكَتْ சிரித்தாள் فَبَشَّرْنٰهَا நற்செய்தி கூறினோம்/அவளுக்கு بِاِسْحٰقَ ۙ இஸ்ஹாக்கைக் கொண்டு وَمِنْ وَّرَآءِ இன்னும் பின்னால் اِسْحٰقَ இஸ்ஹாக்கிற்கு يَعْقُوْبَ‏ யஃகூப்
11:71. அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
12:6
12:6 وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰٓى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ‌ ؕ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَكَذٰلِكَ இவ்வாறே يَجْتَبِيْكَ தேர்ந்தெடுப்பான்/உன்னை رَبُّكَ உன் இறைவன் وَيُعَلِّمُكَ இன்னும் கற்பிப்பான்/ உனக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்திலிருந்து الْاَحَادِيْثِ பேச்சுகளின் وَيُتِمُّ இன்னும் முழுமையாக்குவான் نِعْمَتَهٗ அவன் தன் அருளை عَلَيْكَ உம்மீது وَعَلٰٓى இன்னும் மீது اٰلِ கிளையார் يَعْقُوْبَ யஃகூபின் كَمَاۤ போன்று اَتَمَّهَا عَلٰٓى முழுமைப்படுத்தினான்/அதை/மீது اَبَوَيْكَ உன்இருபாட்டன்கள் مِنْ قَبْلُ முன்னர் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْحٰقَ‌ ؕ இன்னும் இஸ்ஹாக் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உன் இறைவன் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
12:6. இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
12:13
12:13 قَالَ اِنِّىْ لَيَحْزُنُنِىْ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْـتُمْ عَنْهُ غٰفِلُوْنَ‏
قَالَ கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் لَيَحْزُنُنِىْ கவலையளிக்கும்/ எனக்கு اَنْ تَذْهَبُوْا بِهٖ நீங்கள்அவரை அழைத்துச் செல்வது وَاَخَافُ இன்னும் பயப்படுகின்றேன் يَّاْكُلَهُ அவரை الذِّئْبُ ஓநாய் وَاَنْـتُمْ நீங்கள் عَنْهُ அவரை விட்டு غٰفِلُوْنَ‏ கவனமற்றவர்கள்
12:13. (அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
12:38
12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِىْۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَىْءٍ‌ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ‏
وَاتَّبَعْتُ இன்னும் பின்பற்றினேன் مِلَّةَ மார்க்கத்தை اٰبَآءِىْۤ என் மூதாதைகளாகிய اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ‌ؕ யஃகூப் مَا كَانَ தகுமானதல்ல لَنَاۤ எங்களுக்கு اَنْ نُّشْرِكَ நாங்கள் இணைவைப்பது بِاللّٰهِ அல்லாஹ்வின் مِنْ شَىْءٍ‌ؕ எதையும் ذٰلِكَ இது مِنْ இருந்து فَضْلِ அருள் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْنَا எங்கள் மீது وَعَلَى இன்னும் மீது النَّاسِ மக்கள் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَشْكُرُوْنَ‏ நன்றி செலுத்த மாட்டார்கள்
12:38. “நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
12:64
12:64 قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَيْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰٓى اَخِيْهِ مِنْ قَبْلُ‌ؕ فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا‌ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏
قَالَ கூறினார் اٰمَنُكُمْ உங்களை عَلَيْهِ இவர் விசயத்தில் اِلَّا தவிர كَمَاۤ போல் اَمِنْتُكُمْ நம்பினேன்/உங்களை عَلٰٓى اَخِيْهِ இவருடைய சகோதரர் விஷயத்தில் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் فَاللّٰهُ அல்லாஹ் خَيْرٌ மிக மேலானவன் حٰفِظًا‌ பாதுகாவலன் وَّهُوَ அவன் اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ‏ அருள் புரிபவர்களில்
12:64. அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
12:66
12:66 قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰى تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَــتَاْتُنَّنِىْ بِهٖۤ اِلَّاۤ اَنْ يُّحَاطَ بِكُمْ‌ۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ‏
قَالَ கூறினார் لَنْ அனுப்பவே மாட்டேன் اُرْسِلَهٗ அவரை مَعَكُمْ உங்களுடன் حَتّٰى வரை تُؤْتُوْنِ கொடுப்பீர்கள்/எனக்கு مَوْثِقًا ஓர் உறுதிமானத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் لَــتَاْتُنَّنِىْ நிச்சயமாக வருவீர்கள்/என்னிடம் بِهٖۤ அவரைக் கொண்டு اِلَّاۤ தவிர اَنْ يُّحَاطَ அழிவு ஏற்பட்டால் بِكُمْ‌ۚ உங்களுக்கு فَلَمَّاۤ போது اٰتَوْ அவர்கள்கொடுத்தனர் هُ அவருக்கு مَوْثِقَهُمْ தங்கள் உறுதிமானத்தை قَالَ கூறினார் اللّٰهُ அல்லாஹ்வே عَلٰى مَا نَقُوْلُ நாம் கூறுவதற்கு وَكِيْلٌ‏ பொறுப்பாளன்/சாட்சியாளன்
12:66. அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:68
12:68 وَلَمَّا دَخَلُوْا مِنْ حَيْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕمَا كَانَ يُغْنِىْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَىْءٍ اِلَّا حَاجَةً فِىْ نَفْسِ يَعْقُوْبَ قَضٰٮهَا‌ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
وَلَمَّا போது دَخَلُوْا நுழைந்தனர் مِنْ حَيْثُ முறையில் اَمَرَ கட்டளையிட்டார் هُمْ அவர்களுக்கு اَبُوْهُمْ தந்தை/தங்கள் ؕمَا كَانَ يُغْنِىْ தடுப்பதாக இல்லை عَنْهُمْ அவர்களைவிட்டு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ شَىْءٍ எதையும் اِلَّا ஒரு தேவை حَاجَةً தவிர فِىْ نَفْسِ மனதில் يَعْقُوْبَ யஃகூபுடைய قَضٰٮهَا‌ؕ நிறைவேற்றினார்/அதை وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَذُوْ عِلْمٍ அறிவுடையவர் لِّمَا நாம் கற்பித்த காரணத்தால் عَلَّمْنٰهُ அவருக்கு وَلٰكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
12:68. (மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
19:6
19:6 يَّرِثُنِىْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ ۖ ‌ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا‏
يَّرِثُنِىْ அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார் وَيَرِثُ இன்னும் வாரிசாக ஆகுவார் مِنْ اٰلِ கிளையினருக்கு يَعْقُوْبَ ۖ  யஃகூபுடைய وَاجْعَلْهُ இன்னும் அவரை ஆக்கு رَبِّ என் இறைவா! رَضِيًّا‏ பொருந்திக் கொள்ளப்பட்டவராக
19:6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
19:49
19:49 فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا‏
فَلَمَّا اعْتَزَلَهُمْ அவர் அவர்களை விட்டு விலகியபோது وَمَا يَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்கியதை مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ ۙ அல்லாஹ்வை وَهَبْنَا வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ ؕ இன்னும் யஃகூபை وَكُلًّا இன்னும் ஒவ்வொருவரையும் جَعَلْنَا ஆக்கினோம் نَبِيًّا‏ நபியாக
19:49. (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
19:58
19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا‌ ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
اُولٰٓٮِٕكَ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ இவர்கள் மீது مِّنَ النَّبِيّٖنَ நபிமார்களில் مِنْ ذُرِّيَّةِ சந்ததிகளில் اٰدَمَ ஆதமுடைய وَمِمَّنْ حَمَلْنَا இன்னும் நாம் ஏற்றியவர்களிலும் مَعَ نُوْحٍ நூஹூடன் وَّمِنْ ذُرِّيَّةِ சந்ததிகளிலும் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْرَآءِيْلَ இன்னும் இஸ்ராயீல் وَمِمَّنْ هَدَيْنَا நாம் நேர்வழிகாட்டி وَاجْتَبَيْنَا‌ ؕ தேர்ந்தெடுத்தவர்கள் اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُ வசனங்கள் الرَّحْمٰنِ பேரருளாளனுடைய خَرُّوْا விழுந்து விடுவார்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக وَّبُكِيًّا ۩‏ அழுதவர்களாக
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.