தேடல்


12:19
12:19 وَجَآءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ‌ ؕ قَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ‌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً  ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَعْمَلُوْنَ‏
وَجَآءَتْ வந்தது سَيَّارَةٌ ஒரு பயணக் கூட்டம் فَاَرْسَلُوْا அனுப்பினார்கள் وَارِدَهُمْ தங்களில் நீர் கொண்டு வருபவரை فَاَدْلٰى இறக்கினார் دَلْوَهٗ‌ ؕ அவர் வாளியை قَالَ கூறினார் يٰبُشْرٰى ஆ... நற்செய்தி! هٰذَا இதோ غُلٰمٌ‌ ؕ ஒரு சிறுவர் وَاَسَرُّوْهُ மறைத்தார்கள்/அவரை بِضَاعَةً  ؕ வர்த்தகப் பொருளாக وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிபவன் بِمَا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்வதை
12:19. பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
12:21
12:21 وَقَالَ الَّذِى اشْتَرٰٮهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِىْ مَثْوٰٮهُ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا‌ ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِوَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌ؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰٓى اَمْرِهٖ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
وَقَالَ கூறினார் الَّذِى எவர் اشْتَرٰٮهُ விலைக்கு வாங்கினார்/அவரை مِنْ مِّصْرَ எகிப்தில் لِامْرَاَتِهٖۤ தன் மனைவிக்கு اَكْرِمِىْ நீ கண்ணியப்படுத்து مَثْوٰٮهُ தங்குமிடத்தை/இவரின் عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ அவர் பலனளிக்கலாம்/நமக்கு اَوْ نَـتَّخِذَهٗ அல்லது/ஆக்கிக்கொள்ளலாம்/அவரை وَلَدًا‌ ؕ ஒரு பிள்ளையாக وَكَذٰلِكَ இவ்வாறுதான் مَكَّنَّا ஆதிக்கமளித்தோம் لِيُوْسُفَ யூஸுஃபுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَلِنُعَلِّمَهٗ இன்னும் கற்பிப்பதற்காக/அவருக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்திலிருந்து الْاَحَادِيْثِ‌ؕ செய்திகளின் وَاللّٰهُ அல்லாஹ் غَالِبٌ மிகைத்தவன் عَلٰٓى اَمْرِهٖ தன் காரியத்தில் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
12:21. (யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
12:25
12:25 وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَيَا سَيِّدَهَا لَدَا الْبَابِ‌ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْۤءًا اِلَّاۤ اَنْ يُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِيْمٌ‏
وَاسْتَبَقَا இருவரும் முந்தினர் الْبَابَ வாசலிற்கு وَقَدَّتْ அவள் கிழித்தால் قَمِيْصَهٗ அவருடைய சட்டையை مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து وَّاَلْفَيَا இருவரும் பெற்றனர் سَيِّدَ கணவரை هَا அவளுடைய لَدَا الْبَابِ‌ؕ வாசலில் قَالَتْ கூறினாள் مَا இல்லை جَزَآءُ தண்டனை مَنْ எவர் اَرَادَ நாடினார் بِاَهْلِكَ உம் மனைவிக்கு سُوْۤءًا ஒரு கெட்டதை اِلَّاۤ தவிர வேறில்லை اَنْ يُّسْجَنَ அவன் சிறையிடப்படுவது اَوْ அல்லது عَذَابٌ ஒரு வேதனை اَلِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
12:25. (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
12:26
12:26 قَالَ هِىَ رَاوَدَتْنِىْ عَنْ نَّـفْسِىْ‌ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا‌ۚ اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ‏
قَالَ கூறினார் هِىَ அவள்தான் رَاوَدَتْنِىْ தன் விருப்பத்திற்கு அழைத்தாள்/என்னை عَنْ نَّـفْسِىْ‌ என்னைபலவந்தமாக وَشَهِدَ இன்னும் சாட்சி கூறினார் شَاهِدٌ ஒரு சாட்சியாளர் مِّنْ இருந்து اَهْلِهَا‌ۚ அவளுடைய குடும்பம் اِنْ كَانَ இருந்தால் قَمِيْصُهٗ அவருடைய சட்டை قُدَّ கிழிக்கப்பட்டது مِنْ قُبُلٍ முன் புறத்திலிருந்து فَصَدَقَتْ உண்மை கூறினாள் وَهُوَ அவர் مِنَ الْكٰذِبِيْنَ‏ பொய்யர்களில்
12:26. (இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
12:28
12:28 فَلَمَّا رَاٰ قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّ‌ؕ اِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ‏
فَلَمَّا رَاٰ அவர் பார்த்தபோது قَمِيْصَهٗ அவருடைய சட்டையை قُدَّ கிழிக்கப்பட்டதாக مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக இது مِنْ كَيْدِ சதியிலிருந்து كُنَّ‌ؕ உங்கள் اِنَّ நிச்சயமாக كَيْدَكُنَّ உங்கள் சதி عَظِيْمٌ‏ மகத்தானது
12:28. (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
12:29
12:29 يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِىْ لِذَنْۢبِكِ ۖ ‌ۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ‏
يُوْسُفُ யூஸுஃபே اَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْ هٰذَا ٚ இதை விட்டு وَاسْتَغْفِرِىْ இன்னும் மன்னிப்புத் தேடு لِذَنْۢبِكِ ۖ ۚ நீ உன் பாவத்திற்கு اِنَّكِ நிச்சயமாக நீ كُنْتِ இருக்கிறாய் مِنَ الْخٰطِٮـِٕيْنَ‏ தவறிழைத்தவர்களில்
12:29. (என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.  
12:31
12:31 فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَيْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّيْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ ‌ۚ فَلَمَّا رَاَيْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِيْمٌ‏
فَلَمَّا سَمِعَتْ அவள் செவியுற்றபோது بِمَكْرِهِنَّ அவர்களின் சூழ்ச்சியை اَرْسَلَتْ அனுப்பினாள் اِلَيْهِنَّ அவர்களிடம் وَاَعْتَدَتْ இன்னும் ஏற்பாடுசெய்தாள் لَهُنَّ அவர்களுக்கு مُتَّكَـاً ஒரு விருந்தை وَّاٰتَتْ இன்னும் கொடுத்தாள் كُلَّ وَاحِدَةٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُنَّ அவர்களில் سِكِّيْنًا ஒரு கத்தியை وَّقَالَتِ இன்னும் கூறினாள் اخْرُجْ வெளியேறுவீராக عَلَيْهِنَّ ۚ அவர்கள் முன் فَلَمَّا போது رَاَيْنَهٗۤ பார்த்தனர்/அவரை اَكْبَرْنَهٗ மிக உயர்வாக எண்ணினர்/அவரை وَقَطَّعْنَ இன்னும் அறுத்தனர் اَيْدِيَهُنَّ தங்கள் கைகளை وَقُلْنَ இன்னும் கூறினர் حَاشَ பாதுகாப்பானாக لِلّٰهِ அல்லாஹ் مَا هٰذَا بَشَرًا ؕ இல்லை /இவர்/மனிதராக اِنْ இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர مَلَكٌ ஒரு வானவரே كَرِيْمٌ‏ கண்ணியமான
12:31. அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
12:35
12:35 ثُمَّ بَدَا لَهُمْ مِّنْۢ بَعْدِ مَا رَاَوُا الْاٰيٰتِ لَيَسْجُنُـنَّهٗ حَتّٰى حِيْنٍ‏
ثُمَّ பிறகு بَدَا தோன்றியது لَهُمْ அவர்களுக்கு مِّنْۢ بَعْدِ பின்னரும் مَا رَاَوُا அவர்கள் பார்த்த الْاٰيٰتِ அத்தாட்சிகளை لَيَسْجُنُـنَّهٗ நிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரை حَتّٰى வரை حِيْنٍ‏ ஒரு காலம்
12:35. (யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
12:36
12:36 وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيٰنِ‌ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَعْصِرُ خَمْرًا‌ ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِىْ خُبْزًا تَاْكُلُ الطَّيْرُ مِنْهُ‌ ؕ نَبِّئْنَا بِتَاْوِيْلِهٖ ۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ‏
وَدَخَلَ நுழைந்தார்(கள்) مَعَهُ அவருடன் السِّجْنَ சிறையில் فَتَيٰنِ‌ؕ இரு வாலிபர்கள் قَالَ கூறினான் اَحَدُهُمَاۤ அவ்விருவரில் ஒருவன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮنِىْۤ கனவு கண்டேன்/என்னை اَعْصِرُ خَمْرًا‌ ۚ பிழிகிறேன்/மதுவை وَقَالَ இன்னும் கூறினான் الْاٰخَرُ மற்றவன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮنِىْۤ கனவு கண்டேன்/என்னை اَحْمِلُ சுமக்கிறேன் فَوْقَ மேல் رَاْسِىْ என் தலை خُبْزًا ரொட்டியை تَاْكُلُ புசிப்பதாக الطَّيْرُ பறவைகள் مِنْهُ‌ ؕ அதிலிருந்து نَبِّئْنَا அறிவிப்பீராக/எங்களுக்கு بِتَاْوِيْلِهٖ ۚ இதன் விளக்கத்தை اِنَّا நிச்சயமாக நாங்கள் نَرٰٮكَ காண்கிறோம்/உம்மை مِنَ الْمُحْسِنِيْنَ‏ நல்லறம்புரிபவர்களில்
12:36. அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
12:41
12:41 يٰصَاحِبَىِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًا‌ۚ وَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖ‌ؕ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ فِيْهِ تَسْتَفْتِيٰنِؕ‏
يٰصَاحِبَىِ என் இரு தோழர்களே السِّجْنِ சிறை اَمَّاۤ ஆக اَحَدُكُمَا உங்களிருவரில் ஒருவன் فَيَسْقِىْ புகட்டுவான் رَبَّهٗ தன் எஜமானனுக்கு خَمْرًا‌ۚ மது وَاَمَّا ஆக الْاٰخَرُ மற்றவன் فَيُصْلَبُ கழுமரத்தில் அறையப்படுவான் فَتَاْكُلُ தின்னும் الطَّيْرُ பறவைகள் مِنْ رَّاْسِهٖ‌ؕ அவனுடையதலையில் قُضِىَ விதிக்கப்பட்டது الْاَمْرُ காரியம் الَّذِىْ எது فِيْهِ அதில் تَسْتَفْتِيٰنِؕ‏ விளக்கம் கேட்கிறீர்கள்
12:41. “சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).