தேடல்


11:89
11:89 وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىْۤ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ‌ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ‏
وَيٰقَوْمِ என் மக்களே يَجْرِمَنَّكُمْ உங்களை شِقَاقِىْۤ என்மீதுள்ளவிரோதம் يُّصِيْبَكُمْ உங்களை مِّثْلُ போன்ற مَاۤ எது اَصَابَ அடைந்தது قَوْمَ மக்களை نُوْحٍ நூஹூடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை هُوْدٍ ஹூதுடைய اَوْ அல்லது قَوْمَ மக்களை صٰلِحٍ‌ؕ ஸாலிஹ்வுடைய وَمَا இல்லை قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய مِّنْكُمْ உங்களுக்கு بِبَعِيْدٍ‏ தூரமாக
11:89. “என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
15:59
15:59 اِلَّاۤ اٰلَ لُوْطٍؕ اِنَّا لَمُنَجُّوْهُمْ اَجْمَعِيْنَۙ‏
اِلَّاۤ தவிர اٰلَ குடும்பத்தார் لُوْطٍؕ லூத்துடைய اِنَّا நிச்சயமாக நாங்கள் لَمُنَجُّوْ பாதுகாப்பவர்கள்தான் هُمْ அவர்களை اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
15:59. லூத்தின் கிளையாரைத் தவிர, அவர்களனைவரையும் நிச்சயமாக நாம் காப்பாற்றுவோம்.
15:60
15:60 اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَاۤ ۙ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ‏
اِلَّا தவிர امْرَاَتَهٗ அவருடைய மனைவி قَدَّرْنَاۤ ۙ முடிவு செய்தோம் اِنَّهَا நிச்சயமாக அவள் لَمِنَ الْغٰبِرِيْنَ‏ தங்கிவிடுபவர்களில்தான்
15:60. ஆனால் அவர் (லூத்) உடைய மனைவியைத் தவிர - நிச்சயமாக அவள் (காஃபிர்களின் கூட்டத்தாரோடு) பின்தங்கியிருப்பாள் என்று நாம் நிர்ணயித்து விட்டோம்” என்று (வானவர்கள்) கூறினார்கள்.  
15:61
15:61 فَلَمَّا جَآءَ اٰلَ لُوْطِ ۨالْمُرْسَلُوْنَۙ‏
فَلَمَّا جَآءَ வந்த போது اٰلَ குடும்பத்தார் لُوْطِ லூத்துடைய ۨالْمُرْسَلُوْنَۙ‏ தூதர்கள்
15:61. (இறுதியில்) அத்தூதர்கள் லூத்துடைய கிளையாரிடம் வந்த போது.
15:62
15:62 قَالَ اِنَّـكُمْ قَوْمٌ مُّنْكَرُوْنَ‏
قَالَ கூறினார் اِنَّـكُمْ நிச்சயமாக நீங்கள் قَوْمٌ கூட்டம் مُّنْكَرُوْنَ‏ அறியப்படாதவர்கள்
15:62. (அவர்களை நோக்கி எனக்கு) அறிமுகமில்லாத மக்களாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று (லூத்) சொன்னார்,
15:67
15:67 وَجَآءَ اَهْلُ الْمَدِيْنَةِ يَسْتَـبْشِرُوْنَ‏
وَجَآءَ வந்தார்(கள்) اَهْلُ الْمَدِيْنَةِ அந்நகரவாசிகள் يَسْتَـبْشِرُوْنَ‏ மகிழ்ச்சியடைந்தவர்களாக
15:67. (லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள்.
15:68
15:68 قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِىْ فَلَا تَفْضَحُوْنِۙ‏
قَالَ கூறினார் اِنَّ هٰٓؤُلَاۤءِ நிச்சயமாக இவர்கள் ضَيْفِىْ என் விருந்தினர் تَفْضَحُوْنِۙ‏ என்னை
15:68. (லூத் வந்தவர்களை நோக்கி:) “நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;”
21:71
21:71 وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ‏
وَنَجَّيْنٰهُ இன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரை وَلُوْطًا லூத்தையும் اِلَى பக்கம் الْاَرْضِ பூமியின் الَّتِىْ بٰرَكْنَا அருள்வளம் புரிந்த فِيْهَا அதில் لِلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
21:71. இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
21:74
21:74 وَلُوْطًا اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّيْنٰهُ مِنَ الْقَرْيَةِ الَّتِىْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓٮِٕثَ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِيْنَۙ‏
وَلُوْطًا இன்னும் லூத்தை நினைவு கூர்வீராக! اٰتَيْنٰهُ அவருக்கு நாம் கொடுத்தோம் حُكْمًا தீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்) وَّعِلْمًا கல்வி ஞானத்தையும் وَّنَجَّيْنٰهُ நாம் அவரை பாதுகாத்தோம் مِنَ الْقَرْيَةِ ஊரிலிருந்து الَّتِىْ كَانَتْ இருந்தார்கள் تَّعْمَلُ செய்துகொண்டு الْخَبٰٓٮِٕثَ‌ؕ அசிங்கங்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் قَوْمَ மக்களாக سَوْءٍ கெட்ட فٰسِقِيْنَۙ‏ பாவிகளாக
21:74. இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
22:43
22:43 وَقَوْمُ اِبْرٰهِيْمَ وَقَوْمُ لُوْطٍ ۙ‏
وَقَوْمُ மக்களும் اِبْرٰهِيْمَ இப்றாஹீமுடைய وَقَوْمُ மக்களும் لُوْطٍ ۙ‏ லூத்துடைய
22:43. (இவ்வாறே) இப்ராஹீமுடைய சமூகத்தினரும் லூத்துடைய சமூகத்தினரும் (பொய்ப்பிக்கவே முற்பட்டார்கள்).