தேடல்


27:27
27:27 قَالَ سَنَـنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ‏
قَالَ அவர் கூறினார் سَنَـنْظُرُ ஆராய்ந்துபார்ப்போம் اَصَدَقْتَ நீ உண்மை கூறினாயா? اَمْ அல்லது كُنْتَ ஆகிவிட்டாயா? مِنَ الْكٰذِبِيْنَ‏ பொய்யர்களில்
27:27. (அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
27:30
27:30 اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
اِنَّهٗ நிச்சயமாக அது مِنْ سُلَيْمٰنَ சுலைமானிடமிருந்து وَاِنَّهٗ நிச்சயமாக செய்தியாவது بِسْمِ பெயரால் اللّٰهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ‏ பேரன்பாளன்
27:30. நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
27:36
27:36 فَلَمَّا جَآءَ سُلَيْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ فَمَاۤ اٰتٰٮنَِۧ اللّٰهُ خَيْرٌ مِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚ بَلْ اَنْـتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُوْنَ‏
فَلَمَّا جَآءَ அவர் வந்தபோது سُلَيْمٰنَ சுலைமானிடம் قَالَ அவர் கூறினார் اَتُمِدُّوْنَنِ நீங்கள் எனக்கு தருகிறீர்களா? بِمَالٍ செல்வத்தை فَمَاۤ اٰتٰٮنَِۧ எனக்கு தந்திருப்பது اللّٰهُ அல்லாஹ் خَيْرٌ மிகச் சிறந்தது مِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚ அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட بَلْ மாறாக اَنْـتُمْ நீங்கள் بِهَدِيَّتِكُمْ உங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு تَفْرَحُوْنَ‏ பெருமிதம் அடைவீர்கள்
27:36. அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
27:37
27:37 اِرْجِعْ اِلَيْهِمْ فَلَنَاْتِيَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَـنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ‏
اِرْجِعْ நீ திரும்பிப் போ! اِلَيْهِمْ அவர்களிடம் فَلَنَاْتِيَنَّهُمْ நாம் அவர்களிடம் கொண்டு வருவோம் بِجُنُوْدٍ இராணுவங்களை لَّا قِبَلَ அறவே வலிமை இருக்காது لَهُمْ அவர்களுக்கு بِهَا அவர்களை எதிர்க்க وَلَـنُخْرِجَنَّهُمْ நிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம் مِّنْهَاۤ அதிலிருந்து اَذِلَّةً இழிவானவர்களாக وَّهُمْ அவர்கள் صٰغِرُوْنَ‏ சிறுமைப்படுவார்கள்
27:37. “அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
27:38
27:38 قَالَ يٰۤاَيُّهَا الْمَلَؤُا اَيُّكُمْ يَاْتِيْنِىْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ يَّاْتُوْنِىْ مُسْلِمِيْنَ‏
قَالَ அவர் கூறினார் يٰۤاَيُّهَا الْمَلَؤُا பிரமுகர்களே! اَيُّكُمْ உங்களில் யார் يَاْتِيْنِىْ என்னிடம் கொண்டு வருவார் بِعَرْشِهَا அவளுடைய அரச கட்டிலை قَبْلَ முன்னர் اَنْ يَّاْتُوْنِىْ அவர்கள் என்னிடம் வருவதற்கு مُسْلِمِيْنَ‏ பணிந்தவர்களாக
27:38. “பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
27:40
27:40 قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ۖ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏
قَالَ ஒருவர் கூறினார் الَّذِىْ எவர் عِنْدَهٗ தன்னிடம் عِلْمٌ ஞானம் مِّنَ الْـكِتٰبِ வேதத்தின் اَنَا நான் اٰتِيْكَ உம்மிடம் கொண்டு வருவேன் بِهٖ அதை قَبْلَ முன்னர் اَنْ يَّرْتَدَّ திரும்புவதற்கு اِلَيْكَ உன் பக்கம் طَرْفُكَ‌ؕ உமது பார்வை فَلَمَّا رَاٰهُ அவர் பார்த்த போது مُسْتَقِرًّا நிலையாகி விட்டதாக عِنْدَهٗ தன்னிடம் قَالَ கூறினார் هٰذَا مِنْ فَضْلِ இது/அருளாகும் رَبِّىْ‌ۖ என் இறைவனின் لِيَبْلُوَنِىْٓ அவன் என்னை சோதிப்பதற்காக ءَاَشْكُرُ நான் நன்றி செலுத்துகிறேனா? اَمْ அல்லது اَكْفُرُ‌ؕ நன்றி கெடுகிறேனா? وَمَنْ யார் شَكَرَ நன்றிசெலுத்துகிறாரோ فَاِنَّمَا يَشْكُرُ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் لِنَفْسِهٖ‌ۚ அவருக்குத்தான் وَمَنْ யார் كَفَرَ நிராகரிப்பாரோ فَاِنَّ ஏனெனில் رَبِّىْ என் இறைவன் غَنِىٌّ முற்றிலும் தேவை அற்றவன் كَرِيْمٌ‏ பெரும் தயாளன்
27:40. இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
27:42
27:42 فَلَمَّا جَآءَتْ قِيْلَ اَهٰكَذَا عَرْشُكِ‌ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ‌ۚ وَاُوْتِيْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَ كُنَّا مُسْلِمِيْنَ‏
فَلَمَّا جَآءَتْ அவள் வந்தபோது, قِيْلَ கேட்கப்பட்டது اَهٰكَذَا இது போன்றா عَرْشُكِ‌ؕ உனது அரச கட்டில் قَالَتْ அவள் கூறினாள் كَاَنَّهٗ அதைப் போன்றுதான் هُوَ‌ۚ இது وَاُوْتِيْنَا நாம் கொடுக்கப்பட்டோம் الْعِلْمَ அறிவு مِنْ قَبْلِهَا இவளுக்கு முன்னரே وَ كُنَّا இன்னும் இருக்கிறோம் مُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களாக
27:42. ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
27:44
27:44 قِيْلَ لَهَا ادْخُلِى الصَّرْحَ‌ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَـتْهُ لُـجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَيْهَا ‌ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِيْرَ ۙ‌قَالَتْ رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَـفْسِىْ وَ اَسْلَمْتُ مَعَ سُلَيْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
قِيْلَ கூறப்பட்டது لَهَا அவளுக்கு ادْخُلِى நீ நுழை! الصَّرْحَ‌ ۚ மாளிகையில் فَلَمَّا رَاَتْهُ அவள் அதைப் பார்த்த போது حَسِبَـتْهُ அவள் அதை கருதினாள் لُـجَّةً அலை அடிக்கும் நீராக وَّكَشَفَتْ அகற்றினாள் عَنْ سَاقَيْهَا ؕ தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக இது صَرْحٌ மாளிகை مُّمَرَّدٌ சமப்படுத்தப்பட்டது مِّنْ قَوَارِيْرَ ۙ கண்ணாடிகளால் ‌قَالَتْ அவள் கூறினாள் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் ظَلَمْتُ அநீதி செய்து கொண்டேன் نَـفْسِىْ எனக்கே وَ اَسْلَمْتُ நானும் முஸ்லிமாகி விட்டேன் مَعَ سُلَيْمٰنَ சுலைமானுடன் لِلّٰهِ அல்லாஹ்விற்கு رَبِّ இறைவனான الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
27:44. அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
34:12
34:12 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌۚ وَ اَسَلْنَا لَهٗ عَيْنَ الْقِطْرِؕ وَمِنَ الْجِنِّ مَنْ يَّعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِاِذْنِ رَبِّهِؕ وَمَنْ يَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيْرِ‏
وَلِسُلَيْمٰنَ இன்னும் சுலைமானுக்கு الرِّيْحَ காற்றை(யும்) غُدُوُّهَا அதன் காலைப்பொழுது(ம்) شَهْرٌ ஒரு மாதமாகும் وَّرَوَاحُهَا இன்னும் அதன் மாலைப்பொழுதும் شَهْرٌۚ ஒரு மாதமாகும் وَ اَسَلْنَا இன்னும் ஓட வைத்தோம் لَهٗ அவருக்கு عَيْنَ சுரங்கத்தை الْقِطْرِؕ செம்பினுடைய وَمِنَ الْجِنِّ இன்னும் ஜின்களிலிருந்து مَنْ يَّعْمَلُ வேலை செய்கின்றவர்களை بَيْنَ يَدَيْهِ அவருக்கு முன்னால் بِاِذْنِ உத்தரவின் படி رَبِّهِؕ அவரது இறைவனின் وَمَنْ யார் يَّزِغْ விலகுவாரோ مِنْهُمْ அவர்களில் عَنْ اَمْرِنَا நமது கட்டளையை விட்டு نُذِقْهُ அவருக்கு நாம் சுவைக்க வைப்போம் مِنْ عَذَابِ தண்டனையை السَّعِيْرِ‏ கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
34:12. (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
34:13
34:13 يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ‏
يَعْمَلُوْنَ அவை செய்கின்றன لَهٗ அவருக்கு مَا يَشَآءُ அவர் நாடுகின்ற(தை) مِنْ مَّحَارِيْبَ தொழுமிடங்களை(யும்) وَتَمَاثِيْلَ சிலைகளையும் وَجِفَانٍ பாத்திரங்களையும் كَالْجَـوَابِ நீர் தொட்டிகளைப் போன்ற وَقُدُوْرٍ சட்டிகளையும் رّٰسِيٰتٍ ؕ உறுதியான اِعْمَلُوْۤا செய்யுங்கள் اٰلَ குடும்பத்தார்களே! دَاوٗدَ தாவூதின் شُكْرًا ؕ நன்றி செலுத்துவதற்காக وَقَلِيْلٌ குறைவானவர்களே مِّنْ عِبَادِىَ என் அடியார்களில் الشَّكُوْرُ‏ நன்றி செலுத்துபவர்கள்
34:13. அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).